ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
கருணா – ஜிகாத் குழு மோதல் புலிகள் அமைப்பில் இருக்கும்போது, அம்பாறைப் பகுதிகளில் முஸ்லீம்களுக் கொதிராகத் தீவிரமாகவும், மோசமாகவும் நடந்துகொண்டவர் கருணா. பிரபாகரன் முஸ்லீம்களைச் சமாளித்துப் போவோம் எனப் பலதடவை கூறி, கேணல் கிட்டு மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்தபோதும் கருணா விடவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லீம்களைத் துரத்தியடித்தவர் கருணாதான். கருணாவின் இந்தச் செயல்களை மீட்டிய முஸ்லீம் தலைவர் ஒருவர், கருணாவுக்குப் புலியில் இருக்கும்போதே சிங்கள அரசு, இராணுவத் தொடர்பு இருந்ததோ? என ஆச்சரியப்பட்டுள்ளார். கருணாவின் இந்தமாதிரியான செற்பாடுகளுக்குப் பின்னரே யாழ்ப்பாண முஸ்லீம்களையும் வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் வந்துள்ளனர் போலுள்ளது எனவும் அவர் கருத்துக் கூறினார்…
-
- 0 replies
- 2.8k views
-
-
மன்னார், மனிப்புள்ளிக் குளம பகுதியின் மீது படையினரால் நேற்று முன்தினம் காலை 'ஆர்.சி.எல்' தாக்குதலோன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 10:40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலானது விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவர்கள் மறைந்திருந்த முகாம்கள் இரண்டை இலக்கு வைத்தே மேற்கோள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது மேலும் : குறித்த தாக்குதல்களின் போது படையினரால் இலக்கு வைக்கபட்ட இரு முகாம்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளின் ஆறு பிரதேச தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும் படையினருக்கு குறித்த இரு முகாம்களும் பாரிய தடையாக விளங்கி வ…
-
- 10 replies
- 2.8k views
-
-
விமானப்படையால் புலிகளுக்கு ஏற்படுத்தக் கூடிய உச்சக் கட்ட இழப்பு எவ்வளவு ? நிலவரத்துக்காக களமுனையிலிருந்து கபிலன் வன்னியில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழு வாங்கி வந்ததே இந்தக் கிளஸ்டர் குண்டுகள். இதற்கு முன்னர் இலங்கை விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் எம்.கே-83 குண்டுகளையும், பதுங்கு குழிகளை அழிக்கின்ற லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளையுமே பயன்படுத்தி வந்தன. இப்போது விமானப்படை ரஷ்யாவிடம் இருந்து இரண்டு புதிய வகைக் குண்டுகளை கொள்வனவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் கிளஸ்டர் குண்ட…
-
- 0 replies
- 2.8k views
-
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு! (ஆதவன்) கடந்த காலங்களில் வாக்களிக்க தவறியமையால் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். கோத்தாபய போன்ற கடந்த கால அரச தலைவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது. -இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அரசதலைவர் ரணில் விக்கிரமங்க பொதுமக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேர்தலில் தோற்றபோதும், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார். இன்று அநுரகுமார திஸாநாயக்க, சஜித் எனப் பலர் தேர்தலில் போட…
-
-
- 36 replies
- 2.8k views
- 2 followers
-
-
சுவிஸ் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முறிந்த நாற்காலி அருகே ஒருவர் தீக்குளித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்குழித்தவர் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் கால்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. தீக்குளித்தவர் எரிகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். http://goldtamil.com/?p=8081
-
- 28 replies
- 2.8k views
-
-
இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நால்வர் வடமராட்சி கலிகைச் சந்தியில் வைத்து இளம் பெண்ணொருவரைக் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த நகை மற்றும் பிற பொருட்களையும் அபகரித்த ராணுவத்தினர் பின்னர், அவரை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. அடுத்த நாளான திங்கட்கிழமை அப்பெண்ணைக் கண்ட அந்த ஊர்க்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இப்பெண் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இருவரைக் கைது செய்த பருத்தித்துறைப் போலீசார் அவர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தற்போது யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைத்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பொல…
-
- 23 replies
- 2.8k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகப்புத்தக நேரலை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://tam…
-
-
- 49 replies
- 2.8k views
- 2 followers
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள சிறிலங்காவின் ஆயுதப் படையினர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்திருக்கின்றது. வன்னிக்கு விஜயம் செய்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள சிறிலங்கா படையினரை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் நான்கு கடற்படையினரும், இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னி சென்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு, மாhச் 7 ஆம் திகதி புலிகளின் காவலிலுள்ள படையினரைச் சந்தித்ததுடன், உறவினர்களால் வழங்கப்பட்ட கடிதங்கள்,…
-
- 1 reply
- 2.8k views
-
-
முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்! பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா? இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும். மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை சிக்கல் குறித்து தமிழ…
-
- 3 replies
- 2.8k views
-
-
அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:31 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்று…
-
- 15 replies
- 2.8k views
-
-
வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் உண்மைகள்: இன்று கனடா நசனல் போஸ்ட் பத்திரிகையில வெளிவந்த கட்டுரை! வணக்கம், கனடா நசனல் போஸ்ட் பத்திரிகையில திருவாளர். மணி அவர்கள் ஒருபக்கச்சார்பாக கட்டுரைகளை முன்பு எழுதிவந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் அண்மைக்காலமாக அவரது கட்டுரைகளில் பலவிதமான மாற்றங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய கட்டுரையில் சிறீ லங்கா அரசின் பல்வேறுவிதமான பயங்கரவாத செயல்களை திரு. மணி அவர்கள் குத்திக்காட்டி இருக்கின்றார். கட்டுரையின் முழு வடிவம்: Families' fears realized Canadians of Sri Lankan origin watch from afar as civil war takes its toll Stewart Bell, National Post Published: Friday, January 09, 2009 Ruki Navarat…
-
- 4 replies
- 2.8k views
-
-
இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது சங்கதியில் இருந்து எடுத்தது. இதைப்பற்றி வேறு எங்காவது செய்தி வந்திருக்கிறதா?
-
- 4 replies
- 2.8k views
-
-
யாழ். குடாவிற்கான பாதைகள் முன்நிபந்தனைகள் இன்றி திறக்கப்பட வேண்டும்: பிரித்தானியா சிறிலங்காவில் தோன்றியுள்ள கொந்தளிப்பான நிலைமைகள் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்ததில் ஜெனீவாவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது தொடர்பாகவும் அது தனது கவலையை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் அணிசேரா நாடுகளின் அமைச்சர் ஹிம் ஹாவல் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவில் மீண்டும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பிரித்…
-
- 14 replies
- 2.8k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு “ஈழம்ஈநியூஸ்” க்கு தந்த பிரத்தியேகமான நேர்காணல் இது. என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்திய…
-
- 23 replies
- 2.8k views
-
-
SLA closing down small camps in Jaffna [TamilNet, August 14, 2006 18:48 GMT] Sri Lanka Army (SLA) soldiers are closing down several small camp-houses in the Jaffna peninsula and withdrawing into stronger camps Monday, sources in the northern peninsula said. Sri Lankan forces are commandeering private vehicles to move troops and equipment from closed down camp-houses where soldiers numbering upto 10 were staying. Several SLA-houses in coastal villages are also being closed. Civilians say the SLA is pulling out of areas vulnerable to attack by LTTE ground forces which broke through the Muhamalai front defence lines (FDLs) on Friday. Meanwhile SLAF …
-
- 5 replies
- 2.8k views
-
-
படை முகாம்கள் உசார் நிலையில். எதிர் வரும்இலங்கையின் சுதந்திர தின விழாவை பெருமெடுப்பில் கொண்டாட மகிந்தா திட்டமிட்டிருக்கும் நிலையில் அவர்களது சதந்திர தின விழாவிற்கு முன்னர் தென்னிலங்கையிலோ அன்றி வேறு பகுதிகளிலோ தம்மை புலிகள் தாக்க கூடும் என்ற அச்சத்தில் அணைத்து படை முகாம்களும் அதியுச்ச உசார் நிலையிலும் கொழும்பில் பலத்த பாதுகாப்புமிடப்பட்டு பல நூற்றுகணக்காண படையினரும் இராணுவத்தினரும் சுற்று காவல் நடவடிக்கைகளில் இறக்கி விடப்பட்டிருக்கின்றனர். விமான நிலையம் கடற்படை தளம் பிரதான இராணுவ முகாம்கள் என்பன அதி ஊச்ச விழிப்பு நிலையில் வைக்கப் பட்டள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்யு மாறும் காவல்துறையினருக்கு உத்திரவிடப்பட்டள்ளதாக அங்க…
-
- 7 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவின் 60 அவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் தாக்குதல்களை மேற்கொள்ளும் சாத்தியங்கள் இருப்பதாக சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 10 replies
- 2.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....93831e3fb400ce8
-
- 2 replies
- 2.8k views
-
-
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் பிரிவான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், மலையக மக்கள் முன்னேற்றக் கழகம், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மலையக பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ். நகர விடுதியொன்றில் இன்று (22) காலை இடம்பெற்றது. இதன்போது, வடக்கு - கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதற்கான தீர்வை பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இ…
-
- 25 replies
- 2.8k views
-
-
யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி; ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் - 3713 மாணவர்களுக்கு 3 ஏ [Thursday January 03 2008 07:41:39 AM GMT] [யாழ் வாணன்] கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ(உயர்தரம்)பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி பெற்றுள்ளனர் என முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியாகியிருந்தன. எனினும் குடாநாட்டுப் பாடசாலைகளுக் கான முடிவுகள் நேற்று மாலை வரை யாழ் பாணத்திற்கு வந்து சேரவில்லை. பாடசாலைகளின் அதிபர்கள் நேற்று இணையத்தளத்தின் மூலம் தாம் பெற்ற பரீட்சை முடிவுகளை உதயனுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த வகையில் நேற்றுமாலை வரை கிடைத்த பெறுபேறுகளின் அ…
-
- 17 replies
- 2.8k views
-
-
சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரக…
-
- 38 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் அவசரம் கூடாது என்கிறார் ஆனந்தசங்கரி கிழக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகுந்த வேகம் காட்டக் கூடாது என்று தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தில், இன்னமும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முழுமையாக களையப்படாத நிலையில், அங்கு மக்கள் சிந்தனை மற்றும் சுதந்திரம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இன்னமும் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். ஆகவே ஆயுதங்கள் அங்கு களையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தகைய நிலையில் அவசரமாக அங்கு தேர்தல்களை நடத்துவது உசிதமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கருத்தைப் சரியாக பிரதி…
-
- 9 replies
- 2.8k views
-
-
இலங்கையர் பாகிஸ்தானில் கும்பலால் அடித்துக்கொலை – உடலையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பாகிஸ்தானில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த நபரை கும்பலொன்று அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தானின் சியால்கோட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியா…
-
- 31 replies
- 2.8k views
- 1 follower
-
-
ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் லியன் பெஸ்கோ கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரஸ்யா அதனை எதிர்க்கும் என அறிவித்துள்ளதாகவும் சற்று முன்ன இன்னசிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் மற்றும் லியன் பெஸ்கோவின் கட்டார் மற்றும் கெய்ரோ விஜயம் ஆகியன தொடர்பாக பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தினால் விபரிக்கப்படவுள்ளது என பாதுகாப்புச் சபையின் இருஅங்கத்தவர்கள் தெரிவித்ததாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை விவகாரம் தொடர்பாக வ…
-
- 8 replies
- 2.8k views
-
-
நமது வாழ்வும், நமது மகிழ்வும், நமது மண்ணின் விடுதலையிலே பிண்ணி பிணைந்திருக்கிறது. நமக்கான வாழ்வு என்பதை நமது மண்ணின் வாசத்திலே, நமது மண்ணின் அழகிலே, நமது மண்ணின் உயிர்மையிலே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது மண்ணை பிரிந்து நமது சுவாசமோ, சிந்தனையோ ஒருபோதும் கிடையாது . நாம் சுற்றிச் சுற்றி எதைக் குறித்து பேசினாலும், இறுதியில் நம் மண்ணின் விடுதலைதான் நமக்கான தீர்வாக இருக்கிறது. நமக்கான மகிழ்வு நமது மண்ணின் தன்மையிலே புதைந்திருக்கிறது. நாம் மகிழ்ச்சியை நமது மண்ணிலிருந்துதான் தோண்டி பருக தீர்மானித்திருக்கிறோம். அதற்கான விலையாக நாம், உலக வரலாற்றிலே யாரும் கொடுக்காத விலையை கொடுத்திருக்கிறோம். எந்த நிலையிலும் கொடுத்த விலைக்கான பொருளை அடையாமல் நமது போர் முடியப் போவதில்ல…
-
- 15 replies
- 2.8k views
-