ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இலங்கையில்... அவசரகாலச் சட்டம் அமுல்! பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1291408
-
- 8 replies
- 495 views
- 1 follower
-
-
May 6, 2011 / பகுதி: செய்தி / வெளிநாட்டு வாழ் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ் வெளிநாடுகளில் நிரந்தரமாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்று வாழும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் கடவுச்சீட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகின்றனர். எதுவித முன் அறிவிப்பும் இன்றித் திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் ப…
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை, தலைமன்னார் மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் உட்பட பல்வேறு மூலோபாய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டடது. இதன்போது கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளை முன்…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-
-
மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்! In இலங்கை June 18, 2019 9:33 am GMT 0 Comments 1247 by : Dhackshala மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கையில், “கடந்த 30 வருட காலமாக இடம்பெ…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் ஒருவரே தேசியத் தலைவர்! இனியொருவர் உருவாகப் போவதில்லை! தேசியத் தலைவர் ஒருவரே, அவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே. இவருக்கு முன்பும் ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை. இவருக்குப் பின்னர் இனியொரு தேசிய தலைவர் உருவாகப் போவதில்லை இவ்வாறு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையில் தலைவராக ஆரம்பத்தில் தந்தை செல்வா இருந்தார். அவர…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
[ திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 01:02.08 PM GMT ] பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார அமர்வு ஒன்றில் பங்கேற்கும் நோக்கில் பிளயர் இலங்கை வந்துள்ளார் இந்தநிலையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பிளயர் முக்கிய சமாதான ஏற்படுத்துனராக செயற்படுவார் என்ற தக…
-
- 8 replies
- 747 views
-
-
புனித இஸ்லாம் மதத்தினையும் எம் பெருமானார் (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு சிறுவர், அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ) தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இக்கண்டனம் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சரின் ஊடகச் செயலாளர் ஏ.எம்.ஜெசீம் இலங்கை மற்றும் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவ் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மேற்கத்திய நாடுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இது போன்ற தொடர்ச்சியான காழ்புணர்ச்சிகளை இஸ்லாத்திற்கு விரோதமான விஷமிகள் மேற்கொண்டு வருவதை முஸ்லிம்களாகிய நாம்இனியும் பொறுத்திருக்க முடியாது. இத்தகைய இழ…
-
- 8 replies
- 633 views
-
-
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்டுள்ள பேரீச்சம் பழ மரங்களை பார்வையிட்டதுடன் மரமொன்றில் ஏறி பேரீச்சம் பழங்களையும் பறித்துள்ளார். இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடக்கிலும் இது போன்ற பேரீச்சம் பழங்களை தனது அமைச்சினால் நடுவதற்கு ஆலோசனைகளை வழங்குமாறு காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது கேட்டுக்கொண்டார். பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே பேரீச்ச மரங்கள் கடந்த மூன்ற…
-
- 8 replies
- 756 views
-
-
வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகத்துக்கு மங்கள குழுவினர் இன்று அடிக்கல் நட்டனர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் அமைக்கப்படவுள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத்துக்கான அடிக்கல் இன்று முற்பகல் நடப்பட்டது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எம்.எம்.ஹரிஸ், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கல்வி அமைச்சர் த.குரகுலராசா உள்ளிட்ட விருந்தினர்கள் அடிக்கல் நட்டனர். http://uthayandaily.com/story/4152.html
-
- 8 replies
- 841 views
-
-
கால் நடக்க இயலாத பல்கலைக்கழக மாணவனுக்கு கால் கொடுங்கள் அவலம் அகதி வாழ்வென அலைக்கழிந்த பொழுதொன்றில் எறிகணையில் காயடமைகிறான் ஜெகன். ஒற்றைக்கால் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது. சரியான மருத்துவம் கவனிப்பின்றி கால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலியும் வேதனையும் அவனைத் தொடர்ந்தே வந்தது. 2009 மேமாதம் தமிழரின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத துயரைத் தந்தபோக அகதி முகாம்களுக்குள் அடைபட்ட லட்சக்கணக்கானவர்களில் ஜெகனும் ஜெகனின் குடும்பமும் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்குள் அடைந்துபோனது. இன்றும் இவனது குடும்பம் அகதி முகாமில்தான் வாழ்கிறது. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு மீளவும் கற்பதற்கு யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ள இந்த இளைஞனால் நடக்க முடியாது. வீல்செயாரில்தான் இவன…
-
- 8 replies
- 1.5k views
-
-
மைத்திரி இன்று சீனா பயணம்! சீனாவுக்கான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளார். அத்தோடு, வர்த்தக ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதனிடையே, சீன அரசினால் இலங்கையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இருநாட்டின் தலைவர்களும் கூடிய கவனம் செலுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது. http://4tamilmedia.com/newses/srilanka/29834-2015-03-25-05-05-39
-
- 8 replies
- 912 views
-
-
06.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....c05f3d8ab658c55
-
- 8 replies
- 1.7k views
-
-
கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்…
-
-
- 8 replies
- 738 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் பிரித்தானியப் பிரதமர் வியாழன், 14 ஏப்ரல் 2011 05:41 புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரித்தானியா பிரதமரும், கொன்சவேர்டிவ் கட்சியின் தலைவருமான டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டையிட்டு நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கும் முக்கியமான பங்களிப்பை இந்தத் தருணத்தில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். அர்ப்பணிப்பு, சமூக மற்றும் குடும்பம்சார் பொறுப்புணர்வு முதலான அம்சங்களின் மீதாகவே தமிழ்ச்சமூகத்தின் இந்தப் பங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
வடக்கு கிழக்கிற்கே இலங்கை அதிக கடனைப் பெற்றது : அமைச்சர் பந்துல! இலங்கையின் வெளிநாட்டு கடனில், பெருமளவான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “கடந்த சில தசாப்தங்களாக நடந்த யுத்தம் காரணமாக ஏனைய பகுதிகளை விடவும் …
-
- 8 replies
- 778 views
- 1 follower
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் நடந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் குறித்து அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிங்க படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் படை அணி ஒன்றை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் அது போர் சம்பந்தப்பட்ட பயணம் அல்ல எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அணியில் சென்ற சிப்பாய் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சுகவீனமுற்ற நேரத்தில், அந்த சிப்பாயை தரையில் இழுத்துச் செல்லுமாறு கோத்தபாய ஏனைய சிப்பாய்களுக்கு கட்டளையிட்டதாகவும் அவ்வா…
-
- 8 replies
- 997 views
-
-
பிளவடைகின்றது கூட்டமைப்பு ; மூன்று மேதினக் கூட்டங்கள் நடைபெற வாய்ப்பு [ Wednesday,6 April 2016, 03:54:25 ] கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினத்தை தனித்தே நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் பங்கேற்பார்கள் என அமைச்சரும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர நேற்றைய தினம் கூறியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்காமல் வேறுகூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள…
-
- 8 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழுமையான கடப்பாடு இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்துக்கும் இருப்பதாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காப் படைகளின் பரந்துபட்ட மூலோபாய அறிவு, அனுபவம், ஒழுக்கம் மற்றும் திறமை ஆகியவற்றை பாராட்டிய இந்திய இராணுவத் தளபதி, இவை இருநாட்டுப் படைகளுக்கும் கற்றுக் கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில், விடுதலைப் புலிகளுக்கு எ…
-
- 8 replies
- 1k views
-
-
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா, பூரசங்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவன் என்ற வகையில் அத்தனை அழிவுகளுக்குமான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக நெரிவித்த அமைச்சர் அவர்கள், மக்கள் தன்னோடு கைகோர்த்து வருவார்களாயின், எதிர்கொள்கின்ற ப…
-
- 8 replies
- 1.4k views
-
-
அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம்: விழிப்பூட்டல் - இனங்காணுதல் - பதிவிடல் - ஆவணப்படுத்தல் [Monday 2014-08-25 21:00] சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டி தமிழர்களுக்கான பரிகார நீதியினை கோரும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசின் சாட்சியமில்லா இனஅழிப்பின் சாட்சியங்களும், ஆதாரங்களும் சான்றுகளாக வெளியுலகில் அம்பமாகி வரும் நிலையில், ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினால் சிறிலங்கா தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஅழிப்புத் தடுப்பும், விசாரணை முயற்சிகளுக்கான மையம் மேற்கொண்டு வருகின்றது. …
-
- 8 replies
- 715 views
-
-
யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம்! இலங்கையில் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயங்களை யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேசங்களில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாம்பழ உற்பத்தி வலயங்கள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன், நடைமுறைப்படுத்தப்படும் நவீன விவசாய திட்டத்தின் கீழ் இந்த மாம்பழ உற்பத்தி வலயம் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஒரு இலட்சம் சிறந்த ரக மாங்கன்றுகள் செய்கை பண்ணப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-ம…
-
- 8 replies
- 1.9k views
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 03:40 PM இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமில்லை, அதன் அண்டை நாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதித்துக் கொண்டிருந்த வேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவ முன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் இயல்பான நன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்…
-
- 8 replies
- 895 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இறந்த பின்னர் அவரின் உடல் பதப்படுத்தப்பட்ட வேண்டும் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, 30 ஆண்டுகால போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒரு கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என அஜித் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். பதப்படுத்துவதற்கான தேவை எனவே, எதிர்கால சந்ததியினர் மகிந்தவின் உடலை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர், இறந்த ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்னாமின் புரட்சிப் போராளி ஹோ சின் மின்ஹ் ஆகியோரின் பதப்படுத்த உடல்களை உதாரணமாக தெரிவித்துள்ளார். மகிந்தவின் உடல் பதப்படுத…
-
-
- 8 replies
- 17.8k views
- 1 follower
-
-
மடு மாதா திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்திற்கு எடுத்து வரவேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ஹேமந்த வர்ணக்குலசூரிய, இது தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இத்தாலி நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய அவர,; இந்த கோரிக்கையை பாப்பரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பரிடம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டாh.;; நேற்றைய தினம் மன்னாரிலும் சர்வமதங்களையும் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மடு தேவாலையப் பகுதி சமாதான வலையமாகப் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் எனவும், நாட்டிற்கு சாந்தி சமாதானம் ஏற்படவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டு இருந்தது. ஏற்கனவே மடு தேவலையப் பகுதி குறித்த மஜர் ஒன்று விடுதலைப்புலிகளிடமும், அரசாங்கத…
-
- 8 replies
- 1.8k views
-
-
திருமாவளவனை கைது செய்யாதது ஏன்? ஜெ. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீதும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை சேதப்படுத்தியவர்கள் மீதும், அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லையே என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்பது கருணாநிதியின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்! தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தனது கைக்கருவி …
-
- 8 replies
- 1.6k views
-