நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் சுவையான, எளிதான வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் செய்வதற்கான செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப் பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2 பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு வினிகர் – 3/4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி செய்முறை சாதத்தை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை 2 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகு…
-
- 0 replies
- 3.8k views
-
-
தேவையான பொருட்கள்: பாதாம் - 25 கிராம் முந்திரி - 25 கிராம் பிஸ்தா - 15 கிராம் பால் - ஒரு லிட்டர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை பனை கற்கண்டு - ஒரு கப் குங்குமப் பூ - 2 சிட்டிகை சாரைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 செய்முறை : 1.பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாமை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். 2.ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி கரைக்கவும். 4.அதை அடுப்பில் வைத்து கலர் பவுடர் போட்டு ந…
-
- 3 replies
- 3.8k views
-
-
தேவையானவை தயிர் 1/2 கப் வெள்ளரிக்காய் 1 வெங்காயம் 1 கரட் 1 மிளகு தூள் 3/4 தே.க உப்பு தேவைக்கேற்ப கொத்தமல்லி செய்ய வேண்டியது: 1. வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக அரிந்தெடுக்கவும். கரட்டை துருவி எடுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகு தூள், உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். (அடிக்க வேண்டாம், தயிர் நீர்ப்பதமாகிவிடும்) 3. அதில் வெட்டிய வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சேர்க்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு அரிந்த கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலக்கினால் தயிர் சலட் ஆயத்தமாகிவிடும். [சலட் என்பதற்கு என்ன தமிழ்?] செய்முறை: சுவையருவி தூயாவின்ட சமையல்கட்டு
-
- 19 replies
- 3.8k views
-
-
[size=6]ஆரோக்கியத்தைத் தரும் பசலைக் கீரை சப்ஜி!!![/size] [size=4][/size] [size=4]கீரை உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் அல்லது வாரத்திற்கு இரு முறையாவது ஒரு கீரை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பசலைக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. மேலும் இந்த கீரை வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். இந்த கீரையை எவ்வாறு சப்ஜி செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]பசலைக்கீரை - 2 கட்டு வெங்காயம் - 2 பட்டாணி - 1/2 கிலோ இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லி - 1/2 கட்டு மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செ…
-
- 4 replies
- 3.8k views
-
-
வணக்கம், நானும் 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு சின்ன கேரள உணவுகளை வளங்கிற உணவகம் ஒன்றயாழ்ப்பாணத்தில தொடங்க போறம், , கேரளாவில இருந்து ஒரு நண்பர் சமையலறை பொறுப்பை எடுக்க வாறார். இப்போ சரியா ஒரு பெயர் கிடைக்குதில்ல உங்களுக்கு ஏதும் நல்ல பெயர் தெரிஞ்சா சொல்லுங்கோவன், கொஞ்சம் நகைச்ச்சுவையாவும் இருக்கணும் அதே நேரம் எங்கட உணவகத்தின்ட special கேரளா & தென் இந்திய உணவு எண்டுறதையும் காட்டனும். நீங்க சொல்லுற பெயர் பிடிச்சு நாங்க வச்சா, என்க உணவகத்தில் ஒரு விருந்து இலவசம் 😅
-
- 47 replies
- 3.8k views
-
-
தேவையான பொருட்கள்: * மீன் - 300 கிராம் ( சீலா, இரால், வாவல், வாளை, பிள்ளைச் சிரா, விரால் போன்றவையாக இருந்தால் நல்லது.) * உருளைக்கிழங்கு - 150 கிராம் * பெரிய வெங்காயம் - 100 கிராம் * தேங்காய் - பாதி * மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி * பட்டை, கிராம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி * முட்டை - 1 * பூண்டு - 7 பல் * ரஸ்க் தூள்- தேவையான அளவு * உப்பு - தேவையான அளவு * இஞ்சி - தேவையான அளவு * மல்லித்தழை - தேவையான அளவு * புதினாத்தழை - தேவையான அளவு * நல்லெண்…
-
- 6 replies
- 3.8k views
-
-
சுவையான செத்தல் மிளகாய் சட்னி செய்வது எப்படி சமையல் குறிப்பு தேவையான பொருட்கள் 4 - 7 செத்தல் மிளகாய் சின்ன வெங்காயமென்றால் 4 - 6, பெரிய வெங்காயமென்றால் பாதி சிறிதளவு கொத்தமல்லி தேங்காய் பாதி உப்பு சிறிதளவு பழப்புளி சிறிதளவு இவற்றை எல்லாம் சேர்த்து அடிக்க மிக்சி குறிப்பு: உங்கள் மிக்சி தேங்காயை சொட்டாக வெட்டி போட்டால் அடிக்கும் அளவிற்கு பவரானதாக இருந்தால் தேங்காயை சொட்டாக வெட்டி போடலாம் அல்லது தேங்காயை திருவி போடவும். மேலும் , பழப்புளியை 1/4 கப் அளவு கொதி தண்ணீரில் ஊறப்போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு பிறகு புழிந்து அந்தப் புளியையும் மேற்குறிப்பிட்ட பொருட்களுடன் மிக்சியில் விடவும். செய்முறை: மேலே குறிப்பிட்ட எல்லாவற்றை…
-
- 6 replies
- 3.8k views
-
-
நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்து வீட்டில் கறி வைப்பது வழமை.பலருக்கும் மரவள்ளி கறி பிடிக்கும்.ஆனால் நிறைய பேருக்கு பூசணிக்காய் கறி பிடிக்கவே பிடிக்காது.ஆனால் இந்த இரண்டையுமே சேர்த்து செய்தால் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. அத்துடன் மிகவும் இலகுவான முறையிலான சுவையான சமையல். மரவள்ளி வாங்கும் போது அடி வேர்ப்பகுதி மெல்லிதாக இருப்பதை வாங்குங்கள்.மேலிருந்து கீழ்வரை நகத்தால் இடைஇடையே சுரண்டிப் பாருங்கள்.(கடைக்காரரும் உங்களை பார்க்கிறார்களா என்பதையும் பாருங்கள்)ஏதாவது கறுப்பாக தெரிந்தால் வாங்காதீர்கள்.பால் போல வெள்ளையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.நுனி கொஞ்சம் கறுத்து பழுதாகி இருந்தால் பரவாயில்லை.சிறிய துண்டு தானே வெட்டி எறியலாம். …
-
- 44 replies
- 3.8k views
- 1 follower
-
-
ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ?
-
- 14 replies
- 3.8k views
-
-
காரக் கறி... ஒயில் என்று தமிழக ஸ்டைலில் சொல்லி இருந்தாலும்.... இது நம்மஊரு.... பருத்தித்துறை ஓடக்கரை ஐட்டம்.. இப்பவே சொல்லியாச்சு... பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?
-
- 41 replies
- 3.7k views
-
-
1 அல்லது 2 பாகற்காய்கள் 1/2 தேக்கரண்டி உப்பு 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 நடுத்தர அளவுள்ள சீனிக்கிழங்கு 1 பெரிய உருளைக்கிழங்கு சிறிதளவு பீன்ஸ் நடுத்தர அளவுள்ள ப்ரோக்களி broccoli 3 மேஜைக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் 1 தேக்கரண்டி கரம்மசாலா 1 தேக்கரண்டி இஇஞ்சிநறுக்கியது 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் நறுக்கியது 1 பிரியாணி இலை 2 தேக்கரண்டி உப்பு ருசிக்கேற்ப 2 தேக்கரண்டி வெல்லம் செய்முறை பாகற்காயை வட்டம் வட்டமாக நறுக்கி அதில் உப்பு மஞ்சள் தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ்களை சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும். பிரோக்களி காம்பை வெட்டி சிறிய துண்டங்களாக வெட்…
-
- 12 replies
- 3.7k views
-
-
தேவையானவை சுறா மீன் –அரை கிலோ வெங்காயம் –கால் கிலோ பூண்டு – 150 கிராம் பச்சை மிளகாய் – 5 இஞ்சி – 1 துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் உப்பு – தேவையான அளவு - செய்முறை வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பொடியாக நறு்க்கி கொள்ளவும். சுறா மீனை மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து முள், தோல், எடுத்து விட்டு உதிரியாக்கி கொள்ளவும். அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும். இதனுடன் சுறா மீனை போட்டு கிளறி பச்சை வாச…
-
- 10 replies
- 3.7k views
-
-
ஈழத்து கேபாப் கொத்து'' தேவையான பொருட்கள்! கோழிச்சதை500கிராம் தக்காளி 1 வெங்காயம்2 குடமிளகாய்2 முட்டை 3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவை…
-
- 8 replies
- 3.7k views
-
-
மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் கறி -1 கிலோ பிரியாணி அரிசி -1 கிலோ வெள்ளைப் பூண்டு -75கி இஞ்ச -75கி பட்டை -5கி ஏலக்காய் -5கி கிராம்பு -5கி பச்சை மிளகாய் -50கி சின்ன வெங்காயம் -1/4 கிலோ பெரிய வெங்காயம் -1/4 கிலோ தக்காளி -1/4 கிலோ நெய் -1/4 லிட்டர் எண்ணெய் -3/4 லிட்டர் தயிர் -3/4 லிட்டர் கொத்தமல்லி,புதினா -சிறிதளவு எலுமிச்சம் பழம் செய்முறை கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும். வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை ,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகள…
-
- 12 replies
- 3.7k views
-
-
தேவையான பொருட்கள் துவரம்பருப்பு - 250 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 4 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 6 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 6 தேக்கரண்டி புளி - எலுமிச்சம் பழ அளவு மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை : பருப்புகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கழுவி தண்ணீரை வடிய வைக்கவும். வடித்ததும் உப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து உசிலிக்கு அரைப்பது போல் அரைக்கவும். புளியைத் தண்ணீர் அதிகம் விட்டுக் கரைத்து உபபு, மஞ்சள் தூள் கலந்து கொதிக்க வைக்கவும். இண்டாலியம் சட்டி அல்லது இருப்புச்சட்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய…
-
- 4 replies
- 3.7k views
-
-
கத்தரிக்காய் சம்பல் . http://thamizhcooking.blogspot.fr/2008/07/1_26.html இது ஒரு ரைப்பான சம்பல் . சாதரணமாய் என்ரை அம்மா சின்னனில மட்டுவில் கத்தரிக்காய் சுட்டு சம்பல் செய்யிறவா . எனக்கு இந்தச் சம்பலில சரியான கெலிப்பு . ஆனால் போனவரியம் என்ரை மாமி பருத்தித்துறையிலை சாம்பல் மொந்தன் வாழக்காயையும் சேத்து மண் அடுப்பில சுட்டு செய்து தந்தா . இங்கை அடுப்பு இல்லாததாலை வெதுப்பியை உங்களுக்கு பரிந்துரை செய்யிறன் . தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 2 வாழைக்காய் 2 சின்னவெங்காயம் 8 - 10 பச்சைமிளகாய் 7 - 8 உப்பு தேவையான அளவு கொத்தமல்லிக் கீரை 4 - 5 கிறாம் ஃபெறெக்ஷ் (créme fresh ) ( Fresh creme ) 3 -4 தேக…
-
- 16 replies
- 3.7k views
-
-
இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…
-
- 6 replies
- 3.7k views
-
-
https://youtu.be/s_mRBmwFsNg
-
- 47 replies
- 3.7k views
-
-
வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
கீரைப் புட்டு தேவையானப் பொருட்கள் வறுத்த சிவப்பரிசிமா - 2 கப் கலந்து வெட்டிய கீரை - 3 - 4 கப் (அரைக்கீரை, புளிக்கீரை, பொன்னாங்கண்ணி,குறிஞ்சா, சண்டி, முருங்கை etc) தேங்காய்ப்பூ - 4 - 5 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 1 மேசைக்கரண்டி உப்பு செய்முறை கீரைக்கு இரு சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும். அரிசிமாவில் உப்பு சேர்த்து கலந்து சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். மாவுக்கலவை கையால் பிடித்தால் நிற்கக் கூடிய பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு பரந்த தட்டில் (உ + ம்:-பேக்கிங் தட்டு) கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும். இதனுடன் தேங்காய்ப்பூ, வெட்டிய கீரைகள், பச்சை மிளகாய் கலந்து ஆவியில் அவித்து எடுத்து ஆறவி…
-
- 6 replies
- 3.7k views
-
-
பணம் / சந்தா கொடுத்து படிக்க வேண்டிய சஞ்சிகைகளை, பதிவுகளை யாழில் இலவசமாக தருவது அவர்களது வருமானத்தை பாதிக்கும் செயல் எனக் கருதுவதால் பொதுவாக நான் அவற்றை அவசியம் இல்லாவிடின் பகிர்வதில்லை. ஆனால் இந்த தொடரின் இந்த கட்டுரை இலங்கையில் இருந்து போன ஒரு தமிழ் பெண்ணின் கடை என்பதால் பகிர்கின்றேன் (இது வெளியாகி இரு வாரம் ஆகிட்டு) --------------------------------------------- மதுரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம். இலங்கையின் பாரம…
-
- 16 replies
- 3.7k views
-
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_27.html#more
-
- 8 replies
- 3.7k views
-
-
பயத்தம் பருப்பு தோசை.. வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிறிது வெங்காயம் - 1 (பெரியது) தேங்காய் - 1 மூடி (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போ…
-
- 4 replies
- 3.7k views
-
-
தேவைப்படும் பொருட்கள்: * கோழி இறைச்சி- ஒரு கிலோ * பிரியாணி அரிசி- ஒரு கிலோ * பெரிய வெங்காயம்- அரை கிலோ * நெய்- கால் கிலோ * ப.மிளகாய்- 100 கிராம் * இஞ்சி- 50 கிராம் * பூண்டு- 50 கிராம் * கசகசா- ஒரு தேக்கரண்டி * தயிர்- ஒரு கப் * முந்திரி பருப்பு-20 கிராம் * உலர் திராட்சை-20 கிராம் * மல்லி இலை- ஒரு கட்டு * புதினா இலை- அரைகட்டு * எலுமிச்சம் பழம்- ஒன்று * பன்னீர்- 2 மேஜைக்கரண்டி * மஞ்சள் நிற உணவுத்தூள்- சிறிதளவு * கறிமசால் தூள்-3 தேக்கரண்டி * தக்காளி- 100 கிராம். * உப்பு- தேவைக்கு செய்முறை: + கோழி இறைச்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். + பெ.வெங்காயத்தை ந…
-
- 7 replies
- 3.7k views
-
-
வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! தேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் - 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி - 350 கிராம் தக்காளி பேஸ்ட் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன் உப்பு - ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் -…
-
- 15 replies
- 3.7k views
-