நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
செய்முறை. (1) நன்கு கொழுத்த எலிகள் சிலவற்றை வீட்டில் பொறி வைத்துப் பிடியுங்கள்.
-
- 77 replies
- 13.5k views
-
-
முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொறித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நி…
-
- 34 replies
- 13.4k views
-
-
முட்டையில்லாத கேக் தேவையான பொருட்கள் 400 கிராம் றவை 100 கிராம் மா 500 கிராம் பேரிச்சம் பழம் 1 கப் கடும் தேயிலை சாயம் 2 ரின் மில்க் 500 கிராம் பட்டர் 1 பேக்கிங் பவுடர் கருவா தூள் அல்லது ஏலக்காய் தூள் (தேவைக்கு ஏற்ப) செய்முறை பேரிச்சம் பழத்தை சிறிய தூளாக வெட்டி தேயிலை சாயத்தில் பேக்கிங் பவுடரையும் கலந்து முதல் நாளே ஊறப்போட்டு வைக்கோணும். பட்டர் சீனி இரண்டையும் நன்றாக அடித்து கலந்து அதனுடன் மா றவை இவைகளை போட்டு கலந்து பழக் கலவை ரின் மில்க் சிம்ற் பவுடர் இவைகளையும் கலந்து முன்பே சூடாக்க பட்ட பேக் ஓவனில் பட்டர் தடவிய கேக் தட்டில் ஊற்றி பேக் பண்ணவும்.
-
- 14 replies
- 13.4k views
-
-
. யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல் மா - 100 கிராம் கழுவின இறால் - 100 கிராம் கழுவின பாதி நண்டு - 8 மீன்தலை - 1 புழுங்கல் அரிசி - ஒரு கைப்பிடி பயிற்றங்காய் - 10 புளி - ஒரு சின்ன உருண்டை பாலாக்கொட்டை - 100 கிராம் சிறிதாக வெட்டிய மரவள்ளிக்கிழங்கு - 250 கிராம் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவ…
-
- 29 replies
- 13k views
-
-
அசத்தலான ஆட்டு ரத்த பொரியல் அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - 2 மேசைகரண்டி பொரியல் செய்முறை ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலி…
-
- 18 replies
- 12.9k views
-
-
தேவையானப் பொருட்கள் இறால் - அரை கிலோ சி. வெங்காயம் - ஐம்பது கிராம் பூண்டு - மூன்று பல் தக்காளி - மூன்று மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன் உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - மூன்று கொத்து தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன் சீரகம் - கால் டீ ஸ்பூன் செய்முறை * இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும். * வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும். * தேங்காய் & சீரகத்தை அரைக்கவும். * சோம்ப…
-
- 36 replies
- 12.7k views
-
-
அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு சொல்லிச்சீனம். சரி எண்டு அத வாங்கினன். பிறகு என்ன எண்டால்.. வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்ட…
-
- 52 replies
- 12.5k views
-
-
. கருவாட்டுக் குழம்பு. தேவையான பொருட்கள்: சதையுள்ள கருவாடு 700 கிராம், கத்தரிக்காய் 300 கிராம், பச்சை மிளகாய் 6, வெங்காயம் 2, கடுகு 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் 2 - 3 மேசைக்கரண்டி, தாழிக்க எண்ணை, பழப்புளி கொஞ்சம், விரும்பினால் தக்காளிப் பழம் போடலாம். செய்முறை: கருவாட்டை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு சுடு தண்ணீர் ஊற்றி, ஒரு மணித்தியாலம் ஊற விடவும். பின் அதன் தோலை நீக்கி வடிவாக இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவினால் அதில் உள்ள உப்பு போய் விடும். கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். இனி.... நீளமாக அரிந்த வெங்காயத்தை பாத்திரத்தில்…
-
- 58 replies
- 12.5k views
-
-
https://youtu.be/rpLuCD1KVq4
-
- 115 replies
- 12.3k views
- 1 follower
-
-
லுனு மிரிஸ் - மிளகாய், வெங்காய சம்பல் தேவையானவை: மிளகாய் தூள் - 2 மே.க வெங்காயம் - 1/2 மாலை தீவு மீன் - 1 மே.க தேசிக்காய் - 1/2 உப்பு - தேவைக்கேற்ப போடுங்க..போடமா விடுங்க..அது உங்க இஸ்டம் ;) செய்முறை: 1. மேலே கூறியவற்றில் தேசிக்காயை தவிர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும். 2. புளி சேர்த்து நன்றாக கலக்குங்க. 3. ரொட்டியுடன் அல்லது பால் சோற்றுடன் (நசி லமக்/ கிரி பத்) உடன் சாப்பிடலாம். அளவா சாப்பிட்டு..நல்லா இருங்க... 8)
-
- 72 replies
- 12.2k views
-
-
பிரியாணி... தென் இந்தியாவில் பல வீடுகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் கமகம ரெஸிபி. குழம்பு, பொரியல் செய்வதைவிட, பிரியாணியை சீக்கிரம் டேஸ்டியா செய்ய முடியும். பிரஷர்பேன், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், மைக்ரோவேவ் ஓவன், எதுல வேண்டுமானாலும் பிரியாணி செய்யலாம். ஆனால் அது பிரியாணியாக இருக்கணும்கிறதுதான் முக்கிய பாயிண்ட். "பிரியாணி பாஸ்மதி அரிசியில்தான் சூப்பரா வரும். எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவி மாதிரி, பிரியாணிக்கு பாஸ்மதி அரிசிதான் பெஸ்ட் காம்பினேஷன். ஆனால், பாஸ்மதியில் சமைக்கும்போது, கவுண்ட்டிங் ரொம்ப முக்கியம். சாதா அரிசி மாதிரி பாஸ்மதியை ஹேண்டில் பண்ண முடியாது. 'சாதம் குழைஞ்சிடுது, ரொம்ப வெரவெரன்னு வருது. 'இதெல்லாம் கவுண்ட்டிங் தவறும்போது ஏற்படும் …
-
- 9 replies
- 12.2k views
-
-
இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்.. முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P
-
- 99 replies
- 12.1k views
-
-
பற்றீஸ் தேவையான பொருள்கள். கோதுமை மா..250கிராம் அவித்த கோதுமைமா..150 கிராம் உப்பு தேவையான அளவு மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை உருழைக்கிழங்கு 500 கிராம் வெங்காயம் 2 பெரியது பச்சை மிளகாய் 4 தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி கறிவேப்பிலை தேவையான அளவு கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் செய் முறை. இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும். அடுத்தபடியாக. உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட…
-
- 41 replies
- 12.1k views
-
-
எப்படி மில்க் ரொவ்வி(milk toffee) செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்? மிக்க நன்றி.
-
- 13 replies
- 12.1k views
-
-
உடாங் சம்பல் உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள். தேவையான பொருட்கள்: 300 இறால் (பெரியது) 3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய் அரைக்க: 5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க) 2 சிகப்பு மிளகாய் 4 வெங்காய தடல் 2 உள்ளி பல்லு 2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை) 1/2 தேசிக்காய் தூவ: 1/2 மேசைகரண்டி சீனி உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க 1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள் செய்முறை: 1. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும். 2. அரை…
-
- 52 replies
- 12k views
-
-
தேவையானப் பொருட்கள் கறி - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் ) தண்ணீர் - 7 கப் நெய் - 100 கிராம் எண்ணெய் - 200 கிராம் பட்டை - 2 ஏலக்காய் - 4 கிராம்பு - 3 ரம்பயிலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் பல்லாரி - 1/2 கிலோ தக்காளி - 1/4கிலோ கொ.மல்லி - 1 பெரிய கட்டு புதினா - 1 கட்டு உப்பு - தேவைக்கு கேசரி கலர் - கொஞ்சம் எலுமிச்சை - 1 செய்முறை பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும். கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும். தாளிக்க: குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம…
-
- 69 replies
- 11.9k views
-
-
"பலூடா சர்பத்" தயாரிப்பது எப்படி???? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 4 replies
- 11.8k views
-
-
செய்ய தேவையான பொருட்கள்; 1)அவித்த கோதுமை மா[அரிசி மா விரும்புவர்கள் அரிசி மா சேர்க்கலாம்] நான் வெள்ளை மாவில் தான் செய்யுறனான் அப்பத் தான் சுவை அதிகமாய் இருக்கும் 2)தண்ணீர் 3)ஸ்பினாச் கீரை[லண்டனில் கழுவி பைக்கற்றினுள் இருக்கும்] இந்த கீரை தான் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து. 4)சின்ன வெங்காயம் அல்லது காரமான சிவப்பு வெங்காயம் 5)பச்சைமிளகாய் செய்முறை; வெங்காயம்,ப.மிளகாய்,கீரை ஆகியவற்றை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். புட்டுக்கு மாவை குழைக்கவும்[தண்ணீர் அளவாக விட்டுக் குழைக்கவும் தண்ணீர் கூடினால் களியாகப் போய் விடும் ஏனென்டால் கீரையிலும் தண்ணீர் உண்டு] புட்டு மா பதமாக குழைத்த பின் வெங்காயம்,ப.மிளகாய்,கீரை போன்றவற்றை போட்டு குழைக்…
-
- 44 replies
- 11.8k views
-
-
சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும். நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் உங்களில் யாருக்கேனும் பின்வரும் உணவை யாழ்பாண முறையில் தயாரிக்கும் முறை தெரிந்தால் தரவும்....வீட்டில் வார இறுதி நாட்களில் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கின்றேன் 1. மீன் பொரியல் (மிக இலகுவானது …
-
- 25 replies
- 11.7k views
-
-
யாழ்ப்பாண முறையில் செய்யும் மென்மையான கோதுமை மா றொட்டி செய்முறை யாராவது தருவீர்களா??
-
- 29 replies
- 11.6k views
-
-
* இறாலை சுத்தப்படுத்தி அதனை கூட்டோ, குழம்போ வைப்பதற்கு முன்னால் அதில் தயிரும் உப்பும் கலந்து அரை மணிநேரம் வைத்திருங்கள். அதன் பின்பு கூட்டு வைத்தால் புதிய சுவை கிடைக்கும். * மீன் குழம்பு வைப்பதற்கு அரைக்கும் மசாலை ரொம்ப மாவு போல் ஆக்கிவிட வேண்டாம். ஓரளவு துறுதுறுப்பாக இருப்பது நல்லது. * மீன் வறுப்பதற்கு மசால் தயாரிக்கும் போது அதில் சிறிதளவு புதினா, மல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் போன்றவைகளை அரைத்து சேருங்கள். அவைகளை மீனில் பூசி, ஒரு மணிநேரம் வைத்திருந்து விட்டு பின்பு வறுத்தால் மீனுக்கு அதிக சுவை கிடைக்கும். * சூடான எண்ணையில் ஒரு தேக்க ரண்டி மைதா சேர்த்து கிளறிவிட்டு பின்பு மீனைவறுங்கள். அவ்வாறு செய்தால் மீன் வாணலியில் ஒட்டிப்பிடிக்கா…
-
- 13 replies
- 11.6k views
-
-
இங்கு Spice land கடையில் நல்ல கோழி வாங்கி வருவம் என்று முந்த நாள் போன போது அங்கு மான் இறைச்சி விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். கோழி, ஆடு, மாடு, பன்றி, காடை, வாத்து, ஒட்டகம், மரை, முயல், ஆமை, எருமை, வான்கோழி என்று நிறைய இறைச்சி வகைகளை ஒரு கை பார்த்தாச்சு, மான் இறைச்சியையும் ஏன் விடுவான் என்று நினைச்சு வாங்கி வந்தேன். வாங்கி வந்த பிறகு தான் மனிசி சொன்னார், இதை சமைக்க தனக்கு தெரியாது என்று. இணையம் இருக்க பயமேன் என்று சொல்லிவிட்டு கூகிள் ஆண்டவரிடம் மான் இறைச்சி கறி பற்றி வரம் கேட்டேன். உடனே ஆண்டவர் வீடியோ சகிதம் என் முன் தோன்றி விடை தந்தார், கீழே இருக்கும் வீடியோவில் மான் இறைச்சி எப்படி செய்வது என்று இருக்குது. அதுவும் இலங்கையில் சமைக்கும் முறையில், அதை அச்சொட்டாக…
-
- 20 replies
- 11.6k views
-
-
உணவு என்பது மனிதனின் வாழ்வியல் பெரும் பங்கு வகிக்கிறது .சுவையாக உணவு தயாரிப்பது என்பது ஒரு கலை .அதை ரசித்து ருசித்து உண்பது என்பதும் ஒரு கலை .இங்கே நான் செய்த சில உணவுகளை உங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன் .நீங்களும் இந்த வீடியோக்களை பார்த்து சுவையான உணவுகளை செய்யலாம் சுவைக்கலாம் .உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .நீங்களும் வீட்டில் செய்யலாம் CRISPY FRENCH FRIES
-
- 64 replies
- 11.5k views
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு தேவையானவை: துவரம் பருப்பு.........................1 ஸ்பூன் கடலை பருப்பு..........................1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு......................1 ஸ்பூன் மிளகு ........................................1 ஸ்பூன் சீரகம்...........................................1 ஸ்பூன் வெந்தயம் ..................................1 /2 ஸ்பூன் சுண்டவத்தல் ............................4 ஸ்பூன் நல்லெண்ணெய்........................4 ஸ்பூன் கடுகு.............................................1 /2 ஸ்பூன் துவரம்பருப்பு, கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு................1 1 /2 ஸ்பூன் ..(தாளிக்க) புளி.................................................…
-
- 0 replies
- 11.5k views
-
-
சிக்கன் - 65 தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் இஞ்சி - 25 கிராம் பூண்டு -4 பல் மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய்- தேவையான அளவு. மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி மசாலா பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு (மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்). செய்முறை: 1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும். 2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும். 3. மிளகுத்தூள், மிளகாய்த்…
-
- 26 replies
- 11.5k views
-