கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கள நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த மாதம் பூராக பிரான்ஸ்சில் இல்லை. ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றிருந்தேன். எனது வாழ்க்கையில் பாதியை தொலைத்த எனது புலப்பெயர்வு கடந்த மே மாதத்தில் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாச்சியது. நான் 25 வருடங்களின் பின்பு தாயகத்தைப் பார்த்தபொழுது எனது மனதின் வலிகளையும், நான் பார்த்த கேட்ட செய்திகளை கற்பனை என்ற கலப்படங்கள் இல்லாது உங்களுடன் பகிரலாம் என ஆவலாக உள்ளேன். இதன் தலைப்பு < நெருடிய நெருஞ்சி> . இதை நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எழுதவில்லை. உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் ஊக்கிகள். நண்பர் சாத்திரி தனது பயணத்தை சொல்லும் பொழுது , நானும் சொல்வது சரியா …
-
- 516 replies
- 65.6k views
- 1 follower
-
-
இணையத்தில், ரசித்த... குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.. வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்…
-
-
- 313 replies
- 62.8k views
- 1 follower
-
-
நாங்கள் தொடர்ந்து ஒரு கதையை உருவாக்குவோமா? சரி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஒருவர் இரு வரிகள் உபயோகிக்கலாம் ஆனால் கதை தொடர்ச்சியாக போக வேண்டும் அத்துடன் நீங்கள் மற்ற இரசிகள் பதில் எழுதும் வரைய்ம் பொறுத்து இருக்க வேண்டும் சரியா? ஆரம்பிப்போமா?
-
- 313 replies
- 32.9k views
-
-
இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழ…
-
- 303 replies
- 61k views
-
-
பயணம் ..................... பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந…
-
- 283 replies
- 41k views
- 2 followers
-
-
யாழ்களத்தில் களேபரம் இந்தப்பகுதியில் வரும் கதாபாத்திரங்கள் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிடுபவை அல்ல. சித்தரிக்கப்படும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.
-
- 282 replies
- 32.6k views
-
-
உங்களின் லண்டன் என்ற கனவுலகத்திற்கு வந்தவுடன் உங்களை எல்லோரும் பவுண் காசு கொடுத்து வரவேற்பார்கள் என்றுதானே நினைத்திருந்தீர்கள். இங்கு வாழ்க்கையை இழுத்து பிடித்து வாழ்வதற்கு பலர் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். லண்டன் உங்களை பாராட்டி, சீராட்டி வளர்க்கும், பணத்தை அள்ளித்தரும் என்று நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.ஹீத்ரோ எயார் போட் உங்களை செங்கம்பளம் போட்டு வரவேற்காது உங்களை குத்தி குடையும். போனகிழமை வெளிநாட்டுக்கு போய்விட்டு ஹீத்ரோ எயார் போட் இமிக்கிறேசன் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து கவுண்டரில் ஒரு நேபாள தேசத்து பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இளம் பெண் ஸ்ருடன்ட் விசாவில் வந்திருக்கிறாள்.இமிக்கிறேசன் ஒபிஸர் கேட்கும் கேள்விக்கு கூட ஆங்க…
-
- 271 replies
- 26.1k views
-
-
வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல? இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன். சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா? இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ?? சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்... புலத்தில் இருந்து ஓர் புலம்பல் ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ…
-
- 244 replies
- 31.3k views
-
-
. யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3 கிரீங்..... கிரீங்...... கிரீங்....... வேலைக்கு செல்ல வைத்த அலார்ம் அடித்ததில்...... சினத்துடன் போர்வையை விலத்திக் கொண்டு வெளியே..... வந்தார் விசைக்கலைஞன். நேரே.... குளிர் சாதனப் பெட்டிக்கு சென்று பாலை ஒரு கப்பில் ஊத்தி...... மிக்ரோ ஓவனுக்குள் வைத்து விட்டு.... பல்லு விளக்கவில்லையே...... என்று யோசித்தவருக்கு..... பாலை குடிச்சிட்டு பல்லை விளக்கினாலும், பல்லை விளக்கி விட்டு பாலை குடிச்சாலும்...... ஒன்று தானே.... என்னும் தத்துவம் ஞாபகம் வந்து கை கொடுத்தது. பழையராஜாவின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு, பல்லு விளக்கிவிட்டு.... நேரத்தை பார்த்த விசை..... பத்து நிமிசம் யாழ் களத்தை பார்ப்போ…
-
- 225 replies
- 21.5k views
-
-
சிறிலங்காவின் இனப்பிரச்சினை மூன்று இனங்களையும் மூன்று துருவங்களாக்கியுள்ளது. ஆனாலும் இந்த மூன்று இன மக்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை தந்த அனுபவங்கள் பல. இவற்றுள் சில மிகவும் கசப்பானவை இன்னும் சில மிகவும் நெகிழ்ச்சியானவை. ஏங்கள் வீட்டில் வேலை செய்து எங்கள் அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டு எங்களில் ஒருவனாகப் பழகிய சிங்கள இனவெறியனே எங்கள் வீட்டைத் தீயிட்ட கசப்பான கடந்த கால நினைவும் என் மனதை விட்டு அகலவில்லை. கொடும் புற்றுநோயினால் எனது தாய்க்கு தினமும் இரத்தம் மாற்ற வேண்டிய தேவையுடன் நான் இருப்பதை அறிந்து எனக்குக் கூடத் தெரியாமல் தன் பெயரைக் கூடச் சொல்லாமல் என் அம்மாவிற்குக் குருதி தந்த எனது அலுவலகத்தில் வேலை செய்த சிங்களச் சகோத…
-
- 205 replies
- 28.7k views
-
-
வணக்கம் வாசகர்களே!!!!! கள உறவுகளே !!!! மீண்டும் " தென்கிழக்குச் சீமையிலே " என்ற ஒரு வரலாற்று தொடர் கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . அண்மையில் நீண்ட காலங்களின் பின்பு பிரான்ஸ்சின் தென் கிழக்குப் பகுதியான ஆல்ப்ஸ் மறைற்ரும் மானிலத்தின் தலைநகராம் நீஸ் மாநகரிற்கு குடும்பமாக விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தேன் . அங்கு நான் கண்ட கேட்ட வரலாற்றுக் கதைகளையும் , நகைச்சுவையான சந்திப்புகளையும் இருவேறு பாணிகளில் பதிகின்றேன் . உங்கள் ஆதரவை நாடும் ................ நேசமுடன் கோமகன் *************************************************************************** நீசில் இருந்து கடந்த பலமாதங்களாக வந்த பலத்த நெருக்குவாரங்களினால் நானும் மனைவியும் நீஸ் புறப்படத் தேவ…
-
- 196 replies
- 18.6k views
-
-
உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது. அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம் தெரியாத பாதை தெளிவானபோது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கி…
-
- 189 replies
- 26k views
-
-
என்ன செய்யலாம் நேசக்கரம் அமைப்பிறகாக பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியில் நிகழ்ச்சியொன்று புதன் வெள்ளி மற்றும் சனிக்கிழைமைகளில் சாந்தி ரமேசும் நானும் செய்வது வழைமை .சில நேரங்களில் நான் நிகழ்ச்சி செய்வதாக அடித்து சத்தியம் செய்து விட்டு நிகழ்ச்சி செய்யாமல் எஸ்கேப்பாகி சாந்தியிடம் திட்டுவாங்குவதும் வழைமையான நிகழ்ச்சிநிரலில் அடங்கும். இதுபோலத்தான் ஒருநாள் வானொலி நிகழ்ச்சி முடிந்து வழைமை போல உதவ விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும் என்று சாந்தியினுடைய தொ.பே மற்றும் என்னுடைய தொ.பே இலக்கங்களை அறிவித்து நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் எனது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது மறு முனையில் ஒரு ஆணின் குரல் அதனை உரையாடல் வடிவிலேயே இங்கு தருகிறேன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான். வண…
-
- 187 replies
- 14.4k views
-
-
வணக்கம், நேற்றையோட பள்ளிக்கூடத்தில ஒரு குழந்தையிண்ட பிரசவம் மாதிரி எனது ஒருகட்ட படிப்பு உத்தியோகபூர்வமா முடிஞ்சிட்டிது. இப்ப கொஞ்ச நாளா யாழுக்க மினக்கட நேரம் கிடைச்சு இருக்கிது. இருந்தாலும்.. எப்ப நான் யாழில இருந்து காணாமல் போவன் என்று எனக்கே தெரியாது. அதனால.. ஒரு முன்னேற்பாடா.. இன்னும் சில நூறுவருசங்களால எங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவலாம் எண்டுற நப்பாசையில இதுவரை காலமும் நான் யாழில பழகின ஆக்கள்பற்றி ஒரு சின்னப்பதிவு ஒண்டை நான் காணாமல் துலைஞ்சு போவதற்கு முன்னம் வச்சுப்போட்டு போகலாம் எண்டு நினைக்கிறன். எழுதுறதற்கு வசதியாக இருப்பதற்காகவும், எனக்கு தெரிந்த, நான் கருத்தாடல் செய்து பழகிய ஒருவரையும் தவறவிடாமல் இருக்கிறதற்காகவும்…
-
- 183 replies
- 29.1k views
- 1 follower
-
-
-
ரத்த மகுடம் பிரமாண்டமான சரித்திரத் தொடர் 1. மீண்டும் சிவகாமியின் சபதம் கே.என்.சிவராமன் இந்த இடம்தான். இங்குதான் தன்னைச் சந்திக்க ஒரு நபர் வருவார் என்றும் அவர் சொற்படி நடக்கும்படியும் புலவர் தண்டி கட்டளையிட்டிருந்தார். அதை ஏற்றே மல்லை கடற்கரைக்கு கரிகாலனும் நடந்து வந்திருந்தான். ஆனால், எப்போதும் மனதை ஆற்றுப்படுத்தும் அந்த இடம் அன்று ஏனோ அலைக்கழித்தது. நிச்சயம் சந்திக்கப்போகும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வியின் அழுத்தத்தால் இந்த உணர்வு விளையவில்லை. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கையே அது. என்னவாக இருக்கும்? மேடான பகுதியில் அழுத்தமாகக் கால்களை ஊன்றியபடி புருவங்கள் முடிச்சிட சுற்றும்முற்றும் அலசத் தொடங்கினான். வைகாசி மாத சுக்கில ப…
-
- 171 replies
- 58.7k views
- 1 follower
-
-
வணக்கம் அனைவருக்கும் மீண்டும் ஒரு தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நெடுக அவலம் எழுதி அடிவாங்கிய காயத்தை இடைக்கிடை இப்படியும் ஏதாவது எழுதிஆற்றி கொள்ளுறன். இதுவும் எனது வழைமைபோல உண்மை சம்பவமே. எனது நண்பனாகிய கதையின் நாயகனும் யாழின் ஒரு உறுப்பினரே எனவே அவனது சம்மதத்துடன் எனது வழைமையான கற்பனை கலந்து ஊத்துறன் எல்லாரும் வாங்கி பருகுங்கோ அதோடை உங்கள் கருத்துக்களையும் கட்டாயம் வையுங்கோ . இந்த கதையை கதையின் நாயகனே சொல்வது போல நகர்த்தி செல்கிறென். இதில் வருகின்ற பெயர்கள் யாவும் கற்பனையே . சரி கதைக்கு போகலாம். ஒரு மணம் பலமனம் அனைவருக்கும் வணக்கம் நான்தான் இந்த கதையின் நாயகன். எனது கதையை கவனமாக கேளுங்கள் கேட்டு விட்டு நான் செய்தவை நான் எடுத்த முடி…
-
- 151 replies
- 22.7k views
-
-
தேவதைகளின் தீட்டுத்துணி காணிக்கை மலரின்ர புருசன்காரன் விட்டுட்டு போய் மூன்றாவது வருசம் பிறந்தவனான றொக்கட் அல்லது போர்ப்புலி என அழைக்கப்படுகின்ற கிறிஸ்துதாசன் ஒரு சிகப்பு கலர் லேலன்ட் பஸ்சில வந்து செட்டிகுளம் முகாமில இறங்கி வரிசையில போய் ஒரு சோத்துப்பாசல் வாங்கி ஒதுக்குப்புறமாக மர நிழலொன்று பார்த்துக் குந்தி சோத்துப் பாசலை விரிச்சு கழுவாத கையை வைக்கிறதோட இந்தக் கதைக்குள்ள என்ரராகிறான். நாலைந்து நாளாக அன்னந் தண்ணியை கண்டிராத பொடியன் அவக் அவக்கென்டு குனிந்த தலை நிமிராமல் பூசணிக்காயயும் சோத்தயும் திண்டு முடிச்சிட்டு அரை வயிறு கால்வயிற்றோட நிமிர்ந்து பார்த்தான். கொஞ்சத் தூரம் தள்ளி ஒரு வாகனத்தைச் சுற்றி சனம் நின்று முண்டியடிக்குது. இவன்ர மூளைக்குள்ள மின்னல் வெட்டி மறையு…
-
- 150 replies
- 17.8k views
-
-
இலவ(ஈழ)ம் காத்தவர்கள் சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என…
-
- 148 replies
- 17k views
-
-
இது முற்று முழுதாக ஒரு அரசியல் தொடர் அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்-1 ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந…
-
- 146 replies
- 19.8k views
-
-
இக்கதையை PDF வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இணைப்பு:- முன்னுரையை PDF இல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். கதையை PDFஇல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். முன்னுரை நான் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சில் 2006ம் ஆண்டு காயமடைந்து இருகால்களையும் இழந்த ஒரு முன்னாள் பெண் போராளி. எனது வயது25. 2009யுத்தம் முடிந்து நான் சரணடைந்து பல இன்னல்கள் நடுவில் இன்று உயிர்வாழ்கிறேன். தடுப்பிலிருந்து வெளி வந்த பின்னர் நான் தனிமைக்குள் உள்வாங்கப்பட்டேன். அப்போது பல நிஐங்களின் நினைவுகள் என்னுள் நிழலாடி என்னைத் துயரங்களால் சுற்றிக் கொண்டது. என்னை நான் அழிக்கும் நிலையிலும் இருந்தேன். எனக்காக அக்கறைப்பட்டு எனது சோகங்களைக் கேட்க யாருமில்லாத அந்த நாட்க…
-
- 142 replies
- 22.8k views
- 1 follower
-
-
ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம் என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார். அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராட…
-
- 137 replies
- 12.1k views
-
-
சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ? இனிய வணக்கங்கள், வாழ்க்கையில நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கிது, ஒவ்வொருவிதமான அவலங்களை சந்திக்கவேண்டி இருக்கிது. நீங்கள் உங்கட தனிப்பட்ட வாழ்க்கையிலபட்ட ஒரு பெரும் அவலத்தை நான் சிலவேளைகளில அனுபவிச்சு இருக்கமாட்டன். இதைமாதிரி நான் சந்திச்ச ஒருபெரும் அவலத்தை நீங்கள் சந்திச்சு இருக்கமாட்டீங்கள். நான் இஞ்ச உண்மைக்கதையாக சொல்லப்போறது எனது தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்ட ஓர் நெருக்கடிபற்றிய சில எண்ணப்பகிர்வுகள். பலவிதமான பயனுள்ள தகவல்களை மற்ற ஆக்களுக்கு சொல்லலாம் எண்டுற காரணத்தாலையும், தாயக மக்கள் படுகின்ற சில கஸ்டங்களை இந்தக்கதைமூலம் சிறிது கற்பனை செய…
-
- 136 replies
- 17.1k views
-
-
வீரயுக நாயகன் வேள் பாரி - 1 புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., முன்னுரை இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புந…
-
- 127 replies
- 525.9k views
-
-
வலி தெரியாக் காயங்கள்.... முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம். அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொ…
-
- 120 replies
- 14.6k views
-