Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. கள்ள வீசா – ஒரு கனவு May 10, 2022 — அகரன் — பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை. கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்ல…

  2. பாகீரதி... பாகீரதி... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இந்திரா சௌந்தர்ராஜன், ஓவியங்கள்: அரஸ் 'சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. 'அடுத்த இஷ்யூ... முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று 'மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்…

    • 1 reply
    • 2.4k views
  3. Started by putthan,

    நான் சிறுவனாக இருக்கும் பொழுதும் சரி,இளைஞனாக இருந்த காலங்களிலும் சரி கோயில் மணியகாரர்(தர்மகர்த்தா) என்றால் அவர்கள்தான் கோயிலை கட்டியவர்கள் என்று எண்ணியிருந்தேன்.அதாவது அந்த கோயிலுக்கு சொந்தகாரர்கள் அவர்கள் தான் என நினைத்திருந்தேன்.அவர்களின் செயற்பாடும் அப்படித்தான் இருக்கும் .ஜயரைவிட அவர்கள்தான் பெரியமனிதர்கள் என்றிருந்தேன்.பெற்றோரும் சொல்லிச்சினம் பரம்பரைபரம்பரையாக அவர்கள்தான் கோயில் சொந்தக்காரர்கள் அதுதான் அவர்களுக்கு முதல்மரியாதை செய்யிறவர்கள் என்று. தேர் திருவிழா போன்ற விசேட நாட்களில் இவர்களுக்குதான் முதல்மரியாதை கொடுக்கப்படும்,அதாவது தெப்பை அணிவித்து மேளதாளத்துடன் கோயிலை சுற்றிவருவார்கள்.அவர்களின் முழுக் குடும்பம்மும் அதில் பங்குபற்றும் ,அடுத்த வாரிசு யார் என்பத…

  4. பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட் நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும். முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தக…

  5. அம்மா என்னும் தெய்வம் கஜன் எண்பது வயதாகியும் ,இருபது வயது குமரி போல் ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கும் எனது அம்மா , பாத்ரூமில் சறுக்கி விழுந்ததிலிருந்து ,கடந்த இரண்டு மாதகாலமாக படுத்த படுக்கையாய் மட்டுமே இருக்கின்றார்.விழுந்த வலியை விட இயங்காமல் இருப்பதே அந்தக்கிழவிக்கு மேலும்மேலும் வலியைக் கொடுத்தது, அந்தக் கால கிழவி அல்லவா , சோம்பல் என்றாலே என்னவென்று அறியாத கிழவி அவள். திடீரென்று மூச்சு வாங்கியது கிழவிக்கு , பயந்து போன நான் இன்றுதான் வைத்திய சாலைக்கு கொண்டு வந்தேன்.அம்மா என்னை விட்டுபோய் விடுவாளோ என்ற ஏக்கம் திடீரென்று என்னைப்பற்றிக்கொண்டது என்றுமில்லாதவாறு இன்றைக்கு. கணவன் என்னை விட்டு பிரிந்து வேறோத்தியுடன் சென்ற பின், இருந்த ஒரு மகளும் தான் பாய் பிரண்டுடன் சென…

  6. ஈழத்தில் உருவகக்கதையின் மூலவர் நாவற்குழியூர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப்பகிர்வுநிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகரில் இடம் பெற்றது. பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின் (சு.வே) இழப்பு தமிழ்ச் சமூகத்திற்குமான ஒரு வெற்றிடம் “சிறுகதை எழுத்தாளனைவிட ஒரு உருவகக் கதை எழுதுபவன் ஆழமான சிந்தனையாளனாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டதொரு ஆழமான பார்வை பண்டிதர் சு.வேயிடம் காணப்பட்டதினால்; அவரை உருவகக் கதையின் பிதாமகராக ஈழத்து இலக்கிய உலகம் இன்றும் மதிக்கின்றது. அத்தோடு ஆசிரியராக, வகுப்பறை கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாமல் கல்வி வெளியீட்டு திணைக்களத்தினூடாக முழுத் தமிழ் தேசியத்திற்கும் கல்வி கற்பித்த பெருமை உடையவர…

  7. ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம் அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா. அன்புடன் **** இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது. இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒர…

    • 80 replies
    • 9.4k views
  8. சிப்பாயும் போராளியும் அ. முத்துலிங்கம் ஓவியங்கள்: மணிவண்ணன் ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான். துப்பாக்கி சுடாதபோது தலையை உயர்த்தி சிப்பாயைச் சினத்துடன் பார்த்தான். அவன் பார்வையில் ஏளனம் இருந்தது. ‘என்ன, மறுபடியும் உன் துப்பாக்கி வேலை செய்யவில்லையா? உன்னுடைய ராணுவ அதிகாரிகள் உடைந்துபோன துப்பாக்கிகளையா சிப்பாய்களுக்குக் கொடுப்பார்கள்? அல்லது உன்னைப்போல உதவாக்கரைகளுக்குப் பழுதான துப்பாக்கிகள் போதுமென்று நினைத்தார்களா?’ சிப்பாய்க்குக் கோபம் வந்தது. ‘உன்னுடைய புத்தி க…

  9. (1976ம் ஆண்டு 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து... வன்னி மாணவன் ஒருவனின் பார்வையினூடாக... வன்னி மண்ணின் வாழ்வும் மன வளமும்... பதிவுக்கு சற்று நீளமாக இருக்கலாம், எனினும்,.. இருநூறு மீற்றர் - சிறு கதை - "நாளைக்குப் பின்னேரம் வரதனுக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா?" "இல்லை ஐயா" "நாளைக்குப் பின்னேரம் என்னோடு வவுனியாவுக்கு வர வேண்டும், வசதியோ?" "ஓம்" " பாடசாலை விட்டதும் நாங்கள் வவுனியாவுக்குப் போவோம்.வீட்டில் அவ்வாறு சொல்லி வரவும்" "ஓம் ஐயா" "இப்பொழுது வீட்டுக்குப் போகலாம்" எனக்கெண்டாக் காத்திக பறக்கிறது போல.புது வாத்தியார் வந்தபிறகு பள்ளியும் நல்ல திருத்தம்.பிள்ளையள் விருப்பமாய் பள்ளிக்கு வருகினம்.போன தவணை பள்ளியில விளையா…

    • 7 replies
    • 1.1k views
  10. என்னுடன் வேலை செய்யும் ஒருவர் என்னுடன் கதைத்த விடயம் ஒன்றை இணைக்கிறேன் இதனது தொடர்ச்சியினை எழுதுவது கள உறவுகளின் பொறுப்பு.. அவர்:-தம்பி உவங்கள் சரி வரமாட்டாங்கள் தமிழ்ச்செல்வம்,பால்ராஜ் எண்டு பெரிய தலை எல்லாம் போகுது.. உவங்களால ஏலாது போல கிடக்கு... ஒன்றில் அடிக்கிறதென்டா அடிக்கவேணும் அல்லது சும்மா இருக்க வேணும்.. நான்:- சரி அண்ணா போன மாவீரர் தினத்திட்கு வந்தனீங்களோ அவர்:- இல்லைத்தம்பி மனிசிக்கு வேலை.. மகளை கூட்டிக்கொண்டுவர பள்ளிக்கூடம் போக வேண்டி இருந்ததெடாஅப்பு நான்:-வாற பொங்கு தமிழ் 12 ஆம் திகதி நடக்க இருக்கு..இங்கு இருந்து மகிழூந்து என்றால் 30 நிமிடம் தானே அதுக்கு வருவீங்களோ அண்ணா... அவர்:- அதுதான் அப்பு நானும் யோசிக்கிறேன் எத்தின நாளைக்குத்தான் இப்ப…

  11. [size=5]ஹரியால் எப்பொழுதோ எழுதப்பட்ட கட்டுரை..இப்பொழுதும் நிலைமைகளில் எவ்வித மாற்றமும் இன்றி எமது சமூகக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் இன்றி,எங்கள் அடிமை நிலையில் மாற்றம் இன்றி,சிங்கள மேலாதிக்கதனத்தில் மாற்றமின்றி,எம்மவர்களின் மனங்களில் நிலவும் சாதிய மேலாதிக்க எண்ணங்களில் மாற்றமின்றி..எதுவுமே மாறாமல்..எதையும் மாற்றாமல் எங்கள் போராட்டம்.... [/size][size=5]நங்கள் மாறாததால் எங்கள் போராட்டத்தால் எதையும் மாற்றமுடியவில்லையா..?[/size] [size=5]-முரண்வெளி கூட்டுக்கட்டுரை-நன்றி ஹரி இராசலெட்ச்சுமி... ‘எமனைக் கருவேந்தி மருளும் காற்றோடும் எங்கள் அன்னையர் வயிற்று அக்கினி பெருக்கும் தணலோடும் கோடை வந்திறங்கிற்றெம் மண்மீது மறுபடியும் -தவ.சஜிதரன்- ‘Corpses …

  12. [size=6]புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்[/size] அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள். அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் …

  13. Started by akootha,

    [size=4] [/size] [size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size] [size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் ச…

  14. யார் பெரியவன் ......? ஒரு இனிய மாலை பொழுதிலே சில சலசலப்பு .....உள்ளங்க்கையார் வீட்டில் ..அது தான் என்ன என்று பார்ப்போமா ? பெரு விரல் : நான் தான் இந்த வீடின் பெரியவன் என்று அழைக்க படுக்கிறேன். என் சொல்லி தான் எல்லோரும் கேட்க வேண்டும் ....... சுட்டு விரல் : நான் தான் பெரியவன் குற்றங் குறைகளை சுட்டி சொல்ல்கிறேன். நான் தான் பெரியவன் . நடு விரல் : நான் தான்பெரியவன் அளவிலும் , உயரத்திலும் நடுநிலயாக தீர்ப்பு சொல்வதிலும் நான் தான் பெரியவன் ........ மோதிரவிரல் : ஆஹா .....என் என் பெருமை எனக்கு தான் விழி உயர் மோதிரம்போடு பார்க்கிறார்கள். திருமணத்தில் எனக்கு முதல் உரிமை நான் தான் பெரியவன். கடை விரல் ... நானும் இருக்கிறேன். ...துள்ளியது . என்ன நினைத்…

    • 6 replies
    • 2.2k views
  15. வடலி பதிப்பகமும் இலங்கையின் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து சர்வதேச ரீதியில் இளம்படைப்பாளிகளிற்கான சிறுகதை போட்டியொன்றை நடத்துகின்றது. இது குறித்த அறிவித்தல் இன்று வடலி இணையத்தளத்திலும் தினக்குரல் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. ஈழத்தின் வாழ்வையும், மனிதர்களையும், அவர்களது பாடுகளையும் எந்த அரசியல் மற்றும் இலாப நோக்கங்களுமற்று வடலி பதிப்பகம் நூலாக்கி வருகின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிற்கும் எதிரான குரல்களிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பதிப்பகம். சர்வதேச ரீதியிலான போட்டியாக இது இருந்தாலும், இலங்கையிலேயே அதிக கவனம் கொள்கிறது. இலங்கையிலள்ள தமிழ்பேசும் சிறுபான்மையினங்கள் அடிப்படையில் ஒரேவிதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற போதும், மதம் மற்றும் வாழ்விட மாற்றங்க…

  16. வரகு மான்மியம் ஆசி கந்தராஜா 1 கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்! 'வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்..., கோயில் விஷயமப்பா..., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ...' மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்...? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு! கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவ…

  17. கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’ அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும். இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி கிழக்கின் சிலிக்கா வெண்மணலுக்கும் புல்மோட்டை இல்மனைற் கருமணலுக்கும் எவ்வாறு ஒத்த இயல்புகள் எவையும் இல்லையோ அது…

  18. Started by நவீனன்,

    குசலா எங்கே? உ மாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்! ஆபீஸ், வீடு, பிள…

    • 1 reply
    • 1.2k views
  19. வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்கமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான். …

  20. Started by Jil,

    அன்று பாடசலை விடுமுறை நானும் நண்பர்களும் "கள்ளன் பொலிஸ் " விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.எனது அம்மாவும் நண்பர்களின் அம்மாக்களும் திடிரேனே ஒடிவந்தனர்"தம்பிமார் ஒடி போய் கூப்பன் கடையில் அரிசியும்,பருப்பும்,சீனியும் வாங்கி கொண்டு ஒடிவாங்கோ நாங்கள் பின்னுக்கு வாறோம்"என்றனர்.நாங்களும் ஒடிப்போய் கடையில் நின்றோம்.அங்கே ஒரே சனக்கூட்டம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.வானொலி எல்லாம் பெரிதாக அந்த ஊரில் இல்லைஒரு சில வீட்டிலும் கடைகளிலும்தான் வானொலி இருந்தது.அதுவும்" வால்வ் ரேடியோ"அதற்க்கு பக்கத்தில் பெரிய பற்றரி ஒன்றும் வைத்திருப்பார்கள்.வானோலி வைத்திருந்தவர்கள்தான் அந்த சனக்கூட்டத்தில் அன்றைய கதாநாயகர்கள்,"நான் இப்ப ரேடியோ கேட்டுப்போட்டுத்தான் வாரன் .நாடு பூராவும் ஊரடங்குசட்ட…

    • 24 replies
    • 3.1k views
  21. பொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். …

    • 4 replies
    • 1.3k views
  22. எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது... குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது. இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந…

  23. Started by கிருபன்,

    கிழவர்கள் கடல்புத்திரன் - நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருச‌த்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் . அவன் தரப்பில் ,மனைவி... தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிற…

  24. வேலி - கோமகன் அதிகாலை மூன்று மணிக்கு வேலையால் வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த தொலைபேசி அழைப்பு, வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு போறாய் தானே அதுதான் உனக்கு ஞாபகப்படுத்த எடுத்தனான்” என்றான் நரேன் .நித்திரை கலைந்த கோபத்தில் தூசணத்தால் நரேனை பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு இன்னும் கோபம் அடங்கியபாடாகத் தெரியவில்லை .நட்பு என்ற போர்வையில் நாகரீகம் தெரியாத மனிதர்களாக இருக்கின்றார்களே என்று மீண்டும் தலையணையைக் கட்டிப்பிடித்தேன் .…

  25. Started by putthan,

    சுரேஷ் தனது மீசையை தடவிய படியே தனது சிந்தனையை ஓட விட்டான் இந்த மீசை அரும்ப தொடங்கிய காலத்தில் இருந்து அது படும்பாட்டை பத்தி தான் இந்த மீசை வளர்வதிற்கே இத்தனை தடைகள் கட்டுபாடுகள் சூழ உள்ளோர்களாள் உண்டாக்கபடும் போது குழந்தை வளர்ந்து பெரிதாக வளரும் வரை எவ்வளவு கஷ்டங்களை அது எதிர்நோக்க வேண்டிய வரும் என்று அவனால் எண்ணி பார்க்கவே முடியவில்லை. க.போ சாதாரணம் படிக்கும் போது சுரேஷ்ஷின் மீசை அதிகமாகவே வளர்ந்திருந்தது.ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் படிபிக்கும் போது சிரித்து விட்டான் ஆசியருக்கு கோபமாய் திட்ட தொடங்கிவிட்டார்,வில்லன்கள் மாதிரி மீசையை வளர்த்து கொண்டு படிக்க வந்திட்டான்கள் நாளைக்கு வகுப்பிற்கு வரும் போது உந்த மீசையை எடுத்து போட்டு தான் வரவேண்டும் என்று கட்டளை இட்டா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.