கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அண்மையில் படித்த நல்லதொரு கதை ************************************* காதல் காதல் காதல்..(1) ரிஷபன் சில சினிமாப் பாடல்கள் கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிடும். மனசுக்குள் டேப் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி சில மனிதர்களும். அதிலும் குறிப்பாய் அழகான பெண்கள். இங்கே அழகு என்று சொல்வது மனசைக் கவர்கிற ஏதோ ஒன்று. புற வடிவம் மட்டுமல்ல. அப்படித்தான் வித்யா என்னைக் கவர்ந்தாள். 'ரெண்டாவது மாடிக்குப் போ. கடைசி காபின். உன் புரபோசல் அவகிட்டேதான் இருக்கு. நேத்தே நாம வென்டார்க்கு பதில் போட்டிருக்கணும்' என் பாஸ் அனுப்பியபோது அரைமனதாய்த்தான் விவாதித்து விட்டு கிளம்பினேன். 'ஸார்.. ஃபைனான்ஸ் கேட்ட எல்லா டிடெய்லும் இருக்கு. அவங்க ரைஸ் ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
யார் பெரியவன் ......? ஒரு இனிய மாலை பொழுதிலே சில சலசலப்பு .....உள்ளங்க்கையார் வீட்டில் ..அது தான் என்ன என்று பார்ப்போமா ? பெரு விரல் : நான் தான் இந்த வீடின் பெரியவன் என்று அழைக்க படுக்கிறேன். என் சொல்லி தான் எல்லோரும் கேட்க வேண்டும் ....... சுட்டு விரல் : நான் தான் பெரியவன் குற்றங் குறைகளை சுட்டி சொல்ல்கிறேன். நான் தான் பெரியவன் . நடு விரல் : நான் தான்பெரியவன் அளவிலும் , உயரத்திலும் நடுநிலயாக தீர்ப்பு சொல்வதிலும் நான் தான் பெரியவன் ........ மோதிரவிரல் : ஆஹா .....என் என் பெருமை எனக்கு தான் விழி உயர் மோதிரம்போடு பார்க்கிறார்கள். திருமணத்தில் எனக்கு முதல் உரிமை நான் தான் பெரியவன். கடை விரல் ... நானும் இருக்கிறேன். ...துள்ளியது . என்ன நினைத்…
-
- 6 replies
- 2.2k views
-
-
தாலி ஆலையடி பிள்ளையார் கோவில், கோவில் வீதி உட்பட எங்கும் சனங்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றனர் ஒரு சிலரைத்தவிர. சுமார் ஒரு ஐந்தயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் அந்த ஆலையடி பிள்ளியாரிலும் அதை சுற்றியும் தங்கியிருக்கின்றனர். எல்லோரும் தங்களை மறந்து தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிறு மணல் கூட விழமுடியாத அளவிற்க்கு ஒருவரையொருவர் உரசிக்கொண்டு தூங்குகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மா ஏதோ நினைப்பு வந்தவளாக கண்ணை முழிக்கின்றாள். மங்கிய நிலவு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றது. தலைக்கு வைத்திருந்த கைபையிற்க்குள் தன் கையை வைத்து துளவி தனது மூக்குக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு குந்தியிருக்கின்றாள். குந்தியிருந்து செல்வியை பார்க்கிறாள் அவள…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும் டிசே தமிழன் நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 ) (1) அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல்நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிரு…
-
- 6 replies
- 1.2k views
-
-
சகபயணி இரவி அருணாசலம் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின் ஆறுதல் வார்த்தையும் கடற்கரை வெக்கையை மேவிக் குளிர்வித்தது. “ஓடு ஓடு” என்று மனம் சொன்னது. அப்பாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுவிட்டு எப்…
-
- 5 replies
- 1.2k views
-
-
புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிய வேண்டுமென்று தான். அதனால் நண்பர்களை, எடிட்டர்களை, என் நலனில் அக்கறை கொண்டவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு முதல் முதலில் அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். ஏன் என்றால் அவன்தான் என்னுடைய முதல் எதிரி என்பதால். நாங்கள் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். இலக்கியக் கூட்டங்ளில் சொற்பொழிவு ஆற்றுவோம். அவன் என்னைப் புகழ்ந்து பேசுவான். நான் அவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் உள்ளூர நான் அவனை வெறுத்துக் கொண்டிருந்ததேன். அவனும் என்னை வெறுக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது. பிற்காலம் அநுராதபுரத்தில் இரு…
-
- 5 replies
- 5.3k views
-
-
புகை( ப் )படம் செல்லமாய்ச் சிணுங்கியது இவனது செல்பேசி. மாலைக் குளியலில் சுகங்கொண்டிருந்த விசுவநாதன் உள்ளிருந்தவண்ணம் உரத்துக் குரல் கொடுக்கிறான் : "ஜானகி, ஃபோனை எடும்மா !'' முழு நிலவென மஞ்சள்முகங் காட்டும் உப்பிய பூரியும், கொதித்து மணத்துத் தளதளக்கும் உருளை மசாலாவிலும் கவனங்கொண்டிருந்த ஜானகி , அடுப்புச் சூட்டைக் குறைத்து, வேகமாக வந்து, செல்பேசியை எடுத்துப் பேசுகிறாள். அம்முனைச் செய்தி கேட்டு ஜானகி , ஆனந்தக் குரலில் , " ஓ , அப்படியா ! ரொம்ப மகிழ்ச்சி . அவர் குளிச்சிட்டு வந்ததும் உடனே பேசச் சொல்றேன்'' என்றவள், பேசியவர் பெயர் , எண்ணைப் பாதுகாத்துக் கொள்கிறாள். " மும்பையிலிருந்துத…
-
- 5 replies
- 2.3k views
-
-
உலகச் சந்தியில்… விமானம் யேர்மனியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. எனது மனைவி தலையை என்மேல் சாய்த்தபடி நித்திரையாகி இருந்தாள். எனக்குமட்டும் நித்திரை வரவில்லை. விமானம் எமது நாட்டை விட்டு வெகுதூரம் விலகி, வேகமாக வரவர, என் நினைவு மட்டும், எதிர் திசையில் அதைவிட வேகமாகத் தாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் நித்திரைப் பாயில் எதை எதையோ யோசித்தபடியே கிடப்பன். "அம்மா, வெய்யில் குண்டியில படும்வரைக்கும் படுத்துக்கிட, என்ன பொறுப்பிருக்கு… பகல் பகலா ஊர் சுற்றுறது… இரவிரவாக காவாலியள் கடப்புளியள் மாதிரி சந்தியில நிண்டு வம்பளக்கிறது,,," என்று பேசியபடி என்னைக் கடந்து சென்றுவிடுவார். சிறிது நேரம் செல்ல… "டே... தேத்தண்ணி வைக்கவா…." "ஓமணையம்மா வை…" என்றபடி…
-
- 5 replies
- 1.4k views
-
-
கசங்கிய கடிதம் ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது. படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார். உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில்…
-
- 5 replies
- 2.5k views
-
-
வணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே! எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி! நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
விகடனில் வெளியான இந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது.. ஆறாவது அறிவு கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார். இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என மொய்த்து புகைப்படம் எடுத்துத் தள்…
-
- 5 replies
- 2k views
-
-
இஞ்சாருங்கோ கெதியா வெளிக்கிடுங்கோ கல்யாணத்துக்கு நேரம் போகிறது நான் என்ன சீலையோ உடுக்கிறதோ இல்ல முகத்துக்கு பெயிண்டா அடிக்கிறது உனக்குத்தான் நேரம் போகும் எனக்கு வேட்டிய சுத்தி கட்டினனா ஒரு சேட்டை போட்டனா வேலை முடிஞ்சுது நீ தான் வெளிக்கிட மூணு மணித்தியாலம் எடுக்கும் இந்த பேச்சுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வாரன் புள்ளய பார்த்துக்கங்க சரி நீ கெதியா வா. ம்கும் கெதியா வாரதுகளா என்று ஒரு படத்தை பார்த்து முடிக்கலாம் இவள் வார வரைக்கும் என்று டீவியை தொறந்தால் விஜய் டீவில ஒரு புறோக்கிரம் கோபிநாத் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார் ஒரு புள்ள கெலிகொப்ட்ர கேட்கிறது இன்னொன்று 50 பவுண் கேட்கிறது இன்னொன்று நல்ல வீடு கேட்கிறது இதுகளை ஏன் பெத்து இருக்கு என்று ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்) சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின் ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார். அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள…
-
- 5 replies
- 885 views
-
-
கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும் . நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய். கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் – ஏன் குயுக்திகளும்கூட – எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன. ஒரு கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தால் போதும், ‘ஐசே’ என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனடிய அரசு, கனடிய மக்கள், கல…
-
- 5 replies
- 1k views
-
-
[size=1]மரணம், [/size]இதோ இந்தக்கணத்திலும் என் மூக்கருகில் வந்து சீண்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இப்போது இரவு ஒன்பது மணி. ‘மிக் 27’ விமானங்கள் பேரிரைச்சலோடு குண்டு வீச அலைகின்றன. காதைப்பிளக்கும் இரைச்சல். உயிரைக்கரைக்கும் இரைச்சல். எந்த வீட்டிலும் வெளிச்சம் இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்து விட்டன. எந்த வீட்டிலும் யாருமில்லை. எல்லோரும் பங்கருக்குள். குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன. எல்லோருக்கும் அழுகை வருகிறது. ஆனால் அழமுடியுமா. அழுதால் இந்தப் பயம் நீங்கி விடுமா? இந்த அபாயம் தொலையுமா? பயம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமா? எல்லோருடைய கால்களும்தான் நடுங்குகின்றன. இதயத்தின் நரம்புகளில் மரண நடனம். பிரமாண்டமான பாம்பாக அலைகிறது மரணம். அது எங்கே கொத்தப்போகிறது? யாரைக்…
-
- 5 replies
- 848 views
-
-
உயிர்த்துளியின் ஓரத்தில் கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது. கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு. எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம். அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறு…
-
- 5 replies
- 1.9k views
-
-
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. “மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக…
-
- 5 replies
- 1k views
-
-
நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும் செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை வருமானத்துக்கு மேலக செலவுகளும் பிழைகளுக்கு நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி எங்கள சுயங்களை அவர்களுக்கு விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால…
-
- 5 replies
- 1.5k views
-
-
மூமின் - ஷோபாசக்தி இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு இணைக்கும் சிறு தெருவில் அஸ்லம் நடந்துகொண்டிருந்தபோது, நீண்ட அங்கிக…
-
- 5 replies
- 1.7k views
-
-
கோமா சக்தி - சிறுகதை அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது. கிரேக்க பழமொழி இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத்…
-
- 5 replies
- 1.5k views
-
-
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! (ஆனந்த விகடன் - 13.9.1964) "இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர். ''இந்த வீதிக்குப் பெயர்..?'' ''ஈசுவரன் கோயில் தெரு!'' கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது. ''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!'' கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற …
-
- 5 replies
- 1.1k views
-
-
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள். இவன் ஒருவன் எந்த வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி ..... ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறையிலிருந்து வருகிற கடிதங்களும் கண்ணீர் கதைகளும். இவை வெறும் கடிதங்கள் அல்ல. தன்னின விடுதலைக்காக பெயரை மறைத்து புகழை வெறுத்து இயங்கியவர்களின் கடிதங்கள். ஒவ்வொருவரும் தனது வாழ்நாளை விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று யாருமற்று நோய்களோடும் துயர்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது குடும்பங்களுக்கு வாழ்வைக் கொடுக்குமாறு எம்மிடம் கையேந்தி நிற்கின்றார்கள். நேற்றுவரை 690 கைதிகள் தங்களுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகம் சேர்ந்து செய்ய வேண்டிய காலப்பணியிது. தனித்த ஒருவரால் ஒரு பத்து அல்லது நூறு பேருக்கும்தான் உதவ முடியும். எல்லாரும் இப்பணியில் உங்களை இணைத்து ஒரு கைதியின் குடும்பத்தை உங்கள் உறவாக்குங்கள். கடிதம் 1 பர…
-
- 5 replies
- 1.4k views
-