கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
சிப்பமாய் கட்டின புகையிலை எல்லாம் லொறில ஏத்தியாச்சோ.. விடிய 6 மணிக்கெல்லாம் சரக்கு கிளிநொச்சிக்கு போக ரெடியாக இருக்க வேணும்... எல்லாரும் எழும்புங்கோடாப்பா.. முதலாளி வந்து சத்தம் போடப் போறார்.. கந்தர் அண்ணை புறுபுறுத்துக் கொண்டே படுக்கையை சுருட்டி ஒரு ஓரமா போட்டிட்டு.. கை கால் முகம் கழுவ குழாயடிக்குப் போனவர்.. கால்ல ஏதோ தடக்குப்பட.. குனிஞ்சு பார்த்திட்டு..என்ன இழவடாப்பா இது..இவன் குறுக்கால இதுக்க கிடக்கிறான்.. கும்பகர்ணன் போல..! எழும்படா எருமை.. எழும்பி முகத்தைக் கழுவு.. நேரம் ஆகுது.. என்று திட்டிக்கொண்டே.. அந்த தெருவோர தண்ணீர் குழாயடியில் வழிந்து கொண்டிருந்த தண்ணியை கையில தேக்கி வாங்கி.. கை கால்.. முகம் கழுவ ஆயத்தமானார். யாழ் ஆரியகுளம் பக்கமா.. சிங்கள ஆமிக்காரன்…
-
- 2 replies
- 646 views
-
-
யாழ்ப்பாண சமையல்: பல வருடங்களின் பின் இம்முறை தான் அம்மாவின் சமையலை சாப்பிட்டது போலிருந்தது……... பொதுவாக எல்லா உணவுகளுமே ருசியாகத்தான் இருந்தது……..காலையில் உப்புகஞ்சி, அவல், பயறு, களி, கடலை, பால்பிட்டு, இடியப்பம்…….சிலநேரம் ரோஸ்ட்பாணுக்கு Anchor பட்டர் பூசி சாப்பிடுவேன் நன்றாக இருக்கும் ... சிறுவயதில் காலை சாப்பாடு எப்பவுமே பாண்தான் அதற்கு Australian பட்டர் பூசி, அதன் மேல் சீனி தூவி அம்மா தருவது வழக்கம், அதை பால்டீயுடன் சாப்பிட்டால் அப்படியே பட்டருடன் சீனியும் கடிபட…...அந்த ருசி இன்னமும் என்நாக்கில் இருக்கிறது. எனக்கு…..பட்டர் என்றால் கெலி அதுமட்டுமல்ல Nespray யும் கூட…….கள்ளத்தனமாக கைவிரலால் கிள்ளி சாப்பிடுவேன்,…….மேலும் மத்தியானம்….குத்தரிசி, சம்பா அரிசி சோறு…..…
-
- 2 replies
- 2.4k views
-
-
ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது. எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..! பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் …! கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !அந்த பெண் நீதிபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!” …
-
- 2 replies
- 746 views
-
-
முன்னொரு பொங்கல் நாளில் யோ.கர்ணன் இன்றைய பொங்கலைப் போலவே மூன்று வருடங்களின் முன்னரும் ஒரு பொங்கல் நாள் வந்தது. அன்று நாங்கள் யாரும் பொங்கி, சூரியனிற்குப் படைக்கவில்லை. அன்று விடிந்ததன் பின், அது ஒரு பொங்கல் நாளென்றே நினைக்க முடியவில்லை. அது பற்றிய சிந்தனையெதுவுமிருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றுதான் நான் அகதியானேன். ஒரு அகதிக்குரிய முழுமையான அர்த்தங்களையுணர்ந்து அகதியானேன். மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை அன்றுதான் எடுத்து வைத்தேன். இதுவரையான யுத்த இயல்புகளிற்கு மாறாகவே இறுதியுத்தமிருந்ததினால், யுத்தத்தின் வழமையான அறிகுறிகளெதுவுமின்றியே மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சத்தமின்றி மெதுமெதுவாக நுழைந்து கொண்…
-
- 2 replies
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை: பயணம் “கோகுலுக்கும் ஹரிணிக்கும் போரடிக்குது. நாளைக்கு மகா பலிபுரம் போயிட்டு வரலாம்பா. போக வர மூணு மணி நேரம்தான். நம்ம கார்லயே போயிட்டு வந்துடலாம். நீங்களும் வாங்க!” - அப்பா ராகவனிடம் சொன்னான் பிரபாகர். “போகலாம். ஆனா பஸ்ல போனா நானும் வர்றேன். கார்ல போறதா இருந்தா நான் வரலைப்பா” - அப்பா சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது பிரபாகருக்கு. “பஸ்லயா? இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, அங்கேயிருந்து மகாபலிபுரம் பஸ் பிடிக்கணும். அங்கேயும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க ஆட்டோவோ டாக்ஸியோ பிடிக்கணும். கார்ல ஈஸியா போயிட்டு வர்றதை விட்டுட்டு என்னப்பா சொல…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவளை மறக்க முடியவில்லை!… ஏலையா க.முருகதாசன். நானும் தயாநிதியும் கோப்பிக் கடையைத் தேடி நடந்து கொண்டிருந்தோம்.வீதிகளில் ஆளரவத்தைக் காண முடியவில்லை.நத்தைகள் உடலை ஓட்டுக்குள் இழுப்பது போல குளிரின் தாக்கத்தால் குடியானவர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்களோ என நினைத்தேன். குளிர் வாட்டியது .குளிர்காற்று மூக்கு வழியாக சுவாசப்பைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது.காதுகள் சிவந்தது.மூக்கிலிருந்து நீர் வழிந்தது. தயாநிதி மாதகலைச் சேர்ந்தவர். நான் தெல்லிப்பழையைச் சேர்ந்தவன்.இங்கு அறிமுகமாகி முப்பத்திமூன்று வருடங்களாகிவிட்டன.இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.அவர் ஒரு குடும்பஸ்தர். தயாநிதி, தான் கப்பலில் வேலை செய்ததாக எனக்குப் பலமுறை சொல்லியிருக்கிறார்.கப்பல் வாழ்க்கையைப் ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன் ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோjayakanthan_185_1_050408 ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது. ”சாமி கைரேகை பார்க்கறீங்க?” கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம். “அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை” “சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி” “ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்” “என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி” “ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி …
-
- 2 replies
- 18.8k views
-
-
லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்) பருத்திதுறை(குட்டலை) இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார். அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி. …
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயிலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், தெரிய வந்தது. யாரும் வந்து பார்க்கவுமில்லை: மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடன் - தமிழ்நதி ஓவியங்கள் : ரமணன் சுவரில் கல்லோடுகள் பதிக்கப்பட்ட ‘பேப்’ புகையிரத நிலையத்தை சத்தியன் ஏற்கெனவே தெரிவுசெய்துவிட்டான். அதுதான் இருப்பவற்றுள் அழகியது. அங்கு இறங்கி நின்று, அடுத்து வரும் இரும்பு வேதாளத்தின் முன்னால் பாய்ந்து சிதறத் திட்டமிட்டிருந்தான். விரைந்தோடி வரும் ரயிலின் முன் உடலை வீசியெறியும்போது எப்படி இருக்கும்? ஒருகணம் கூசி சிலிர்த்தன மயிர்க்கால்கள். இரத்தக்கூழாக அவன் தன்னைக் கண்டான். கூட்டம் கூடுகிறது; பிறகு கலைகிறது. ஆகக்கூடி ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் புகையிரதம் ஓடும். மனிதர்கள் அதனைப் பிடிக்க ஓடுவார்கள். குளியலறைக் கண்ணாடியில் தெரிந்த விழிகள், பித்தின் சாயல்கொண்டு மினுங்கின. ஒடுங்கிய கன்னங்களை மறைத்து வளர்ந்திருந்தது …
-
- 2 replies
- 2.8k views
-
-
தேர்பலி - சிறுகதை என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம் முதல் சாமம் கடந்த அகாலம். இருட்டு கட்டிய வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. கல்தீப விளக்குகள் அணைந்துபோயிருந்தன. பின்வீதியில் எங்கோ குருட்டு ஆந்தைகள் சத்தமாகக் குடுகின. நெட்டையாண்டி, எட்டுவைத்து நடந்தான். வீட்டின் வெளி மதில் கதவு திறந்தே கிடந்தது. விளக்குமாடத்து அகல் ஒளி, கீழ்திசைக் காற்றுக்கு நடுங்கியவண்ணம் இருந்தது. கல்நிலவு வாசற்படியில் தலை வைத்துப் படுத்திருந்த கனகா, காலடி அரவம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தாள். நெட்டையாண்டிக்கு முன்னே ஓடி, சமையல்கட்டுக்குள் கோரைப் பாயை விரித்துப் போட்டாள். பித்தளைச் சொம்பு நீரை நீட்டினாள். கை அலம்பிவிட்டு வந்த நெட்டையாண்டி, பாயில் சம்மணமிட்டு அமர்ந்தான். அகல் …
-
- 2 replies
- 3.7k views
-
-
தேவகிருபை இந்தியில் சரத் உபாத்யாய் தமிழில் நாணற்காடன் நகரத்தைத் தாண்டி நதிக்கரையில் அந்தச சிறிய கோயில் இருந்தது. பிரகாரச் சுவர்கள் நாலாப்புறமும் உயரவுயரமாக இருந்தன. வலது சுவரையொட்டிச் செல்கிற அந்தச் சாலை மரங்களடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொள்கிறது. சாலையின் மறுபக்கம் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்தி மசங்கும் நேரத்தில் கோயிலுக்கு வரும் மக்கள் பெஞ்சுகளை நிரப்பிவிடுவார்கள். பெஞ்சுகளையொட்டி இரண்டு மரங்கள் இருந்தன. அதற்கும் சற்றுத் தள்ளி கருவேலம் புதர். அந்த மரங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டு அடர்ந்திருக்கவில்லை. இருவர் மட்டுமே உட்கார்ந்துகொள்ளும் அளவிற்கு சிக்கனமாக நிழல் தந்தன அவை. அந்த மரத்தடியில் தான் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் தம்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாயும் நானும்: க.கலாமோகன் இது எனது நாய். என்னுடன்தான் இருக்கும். ஒருபோதுமே என்னை விட்டு ஓடாது. நாயின் பெயர்? தெரியாது. 20 வருடங்களுக்கு மேலாக என்னுடன். ஆம், நாம் வீதியில். நான் அதனை நாய் என அழைப்பதில்லை. எந்தப் பெயர் எனக்கு நினைவில் வருகின்றதோ அந்தப் பெயரால் அழைப்பேன். உண்மையிலேயே எனக்கு எனது பெயரும் தெரியாது. ஆனால் எம் முன் சில சில்லறைகள், சாப்பாடுகள் வைப்போரது பெயர்கள் அவ்வப்போது எனது நினைவுக்கு வரும். நான் எங்கு பிறந்தேன்? நினைவே இல்லை. நீண்ட ஆண்டுகளாகப் பிரான்சில். விசா? நிச்சயமாக இல்லை. பொலிஸார் என்னைப் பிடிப்பார்களா? அதுவும் தெரியாது. அவர்களே என் முன் சிகரெட்டுகளைப் போடுபவர்கள். எனது இடம் ஓர் வீதி. எனக்குத் தொழிலும் இல்லை, சம்பளமும் இல்லை. “வணக்க…
-
- 2 replies
- 806 views
-
-
"மர்ம இரவுகள்" பொதுவாக என் வேலை மாலை மூன்றரை மணிக்கு முடியும். ஆனால் அடுத்த நாள் விடுதலையில் யாழ்ப்பாணம் போக வேண்டி இருந்ததால், தொடங்கிய திட்டச்செயல் வேலையை [project work] ஓரளவு முடித்துவிட்டு போகவேண்டி இருந்தது. அப்பத்தான், எனக்கு மாற்றாக தற்காலிகமாக வருபவரால் அதை தொடர இலகுவாக இருக்கும். அத்துடன் அவருக்கு அதைப்பற்றி கொஞ்சம் தொலைபேசியிலும் மற்றும் குறிப்பேட்டிலும் ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியும் இருந்தது. ஆகவே அன்று என் வேலை முடிய ஆறு மணி தாண்டிவிட்டது. கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும், மற்றும் என்னுட…
-
- 2 replies
- 484 views
- 1 follower
-
-
ஏப்ரல் 1994 இல் இந்தியா டுடேயில் வெளிவந்த ஈழத்து சிறந்த எழுத்தாளர் 'உமா வரதராஜன்' அவர்களால் எழுதப்பட்ட பலரால் வாசிக்கப்பட்டு வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதை. கதையின் பின்புலம் பிரேமதாசா காலத்தை போன்று தோற்றினும் இன்றைய காலத்தையும் வென்ற சிறு கதை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசனின் வருகை உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை …
-
- 2 replies
- 2k views
-
-
எனது பாடசாலை நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் மத்திய கிழக்கில் வேலை செய்தான். இரு பிள்ளைகள், பெண் மணமுடித்து தாயுடன் கொழும்பில்- மகன் மணமுடித்து லண்டனில். பாடசாலை நண்பன் பலவருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் விபத்தொன்றில் அகப்பட்டு நரம்புத் தொகுதி பாதிக்கப் பட்டு தனியே பருத்தித்துறையில் இருக்கிறான். இரண்டு விடயங்களை ஒன்றாக சிந்திக்க முடியாது அவனால். உதாரணமாக மந்திகைக்கு சைக்கிளில் போனேன் என்று அவனால் ஒரேயடியாக சொல்ல முடியாது. மந்திகைக்கு போனதையும் சைக்கிளில் போனதையும் தனித்தனியே தான் அவனால் சொல்ல முடியும். இரண்டையும் சேர்க்க வெளிக்கிட்டால் ஒரேயடியாக குழம்பி விடுவான். அத்துடன் அவனால் எழுத முடியாது, ஆனால் வாசிப்பான்; கதைப்பான். சொல்ல வந்த விடயம் என்னவென்றா…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
எனது மூன்றாம் படிக்கட்டு எல்லோரும் காதல் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் நான் இறங்குகிறேன். என் கதையை என் வருங்கால மனைவிக்குச் சொல்வதுபோல் ஒரு மாறுதலுக்காக அமைத்துள்ளேன் அப்படியே பிரிண்ட் எடுத்து அவரிடம் கொடுத்தால் அவருக்கு நான் என் காதல் கதைகளைச் சொல்லத்தேவயில்லை. இனி என் மூன்றாம் படிக்கட்டு இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஏன் தெரியுமா இன்றுதான் எனக்கு திருமணம் நடந்தது. காலையில் இருந்து மாலை வரை ஹோமப்புகையினாலும் வீடியோக்காரர்களின் 1000 வாட்ஸ் பல்புகளினாலும் அதை விட திருமணம் செய்யும் டென்ஸனினாலும் களைத்துப்போய் கட்டிலில் கொஞ்சம் ரிலாக்சாக அமர்ந்திருந்தேன். அப்படியே என் வாழ்க்கையின் முன்பாதிகளை நினைத்துப்பார்க்கிறேன். என் கல்லூரி நண்பர்கள் நாம் அடித்த லூட்டிகள…
-
- 2 replies
- 1.9k views
-
-
குண்டுமணி மாலை அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது. நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன். எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கி…
-
- 2 replies
- 1.8k views
-
-
கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும் வணக்கம் சொந்தங்களே.! பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது. திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான் இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல…
-
- 2 replies
- 1.2k views
-
-
தர்மினி ‘எழுத்ததிகாரத்திற்குள் சிக்கிக் கொள்ளாத,புனைவுகளற்ற வாய்மொழி வரலாற்றின் அச்சு அசலான கச்சாப்பிரதி இது என்றால் மிகையாகாது’-கருப்புப்பிரதிகள் சாதனை செய்தவர்கள்,சாகசங்கள் புரிந்தவர்கள் சமூகத்துக்காகப் போராடியவர்கள் தங்களின் வெற்றிக்கதைகளை வீரக்கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது இச்சமூகத்தின் கசடுகளிலிருந்தும் புறக்கணிப்புகளிலிருந்தும் விளிம்பு மனிதர்கள் தம் கதைகளைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.இவர்களது எழுத்துகளை, உணர்வுகளை, கதையாடல்களை விலக்கிவிட்டு கலாச்சாரமும் இலக்கியமும் பன்முனைப்புடன் நகர முடியாது. வாழ்வில் வேதனைகளையும் அவமானங்களையுமே கொண்டவர்களாக நம்மிடையில் மக்கள் வாழ்வது பற்றிய சலனஞ் சிறிதுமின்றி பண்பாடு, விழுமியங்கள் என்று கதையளந்து கொண்டிருப்பதைய…
-
- 2 replies
- 3.9k views
-
-
இந்த விடுமுறையில் நாட்டுக்கு சென்ற பொழுது சந்தித்த சிலரில் சில இளைஞர்களுடன் பேசிய பொழுது கேள்வி பட்ட விசயம் இவ்வளவுத்துக்கு இப்படி சற்றும் சத்தமில்லாமால் ஊடுருவிட்டார்கள் சற்று ஆச்சரியமாக இருந்தது .பக்கமாக பக்கமாக ஆய்வு கட்டுரைகள் நடத்தும் இவர்கள் கூட ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை .இதே போல 80 களிலும் 83 இன கலவரத்துக்கு முன்னே சில வியாபர ஏஜன்ட் வடிவத்தில் இருந்த வெறும் சதாரணர்களே இந்த ஆள் பிடித்து தரும் படி கேட்ட சம்பவம் அங்கங்கே நடை பெற்று கொண்டு இருந்தது ..அந்த நேரம் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்று நம்ப மறுத்த விடயம் ..பின்னர் ஆனால் சந்திரகாசன் ஆள் பிடிக்க ஆளாக செய்யபட்ட பின் தான் ஆங்கில ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன. இது புலானாய்வுதுறையினர்.. …
-
- 2 replies
- 1.6k views
-
-
பதினொரு பேய்கள் அ. முத்துலிங்கம் ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்? யாழ்ப்பாணத்தில் மாத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
"சாதனைகள் தூரத்திலில்லை" இன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் தங்கள் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள்…
-
-
- 2 replies
- 667 views
- 1 follower
-