கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான். “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி, “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்…
-
- 1 reply
- 3.9k views
-
-
தாய்லாந்துக் காதல் சிறுகதை: மாத்தளை சோமுஓவியங்கள்: ஸ்யாம் மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை 8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். 'பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், 'பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும் முடிவுரை எழுத, அந்த முடிவுரைக்கே முடிவுரை எழுதியதுபோல் அவன் பிறந்தான். அவனுக்குப் பிறகு எவரும் பிறக்கவில்லை. அவன் ப…
-
- 0 replies
- 2.5k views
-
-
தாய்வாசம் - சிறுகதை யுவகிருஷ்ணா, ஓவியங்கள்: ம.செ., மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ…
-
- 0 replies
- 2.7k views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு புள்ளிகளால் சித்தி எய்த தவறுகிறாள் தாரணி. அந்தக் கவலையின் மத்தியிலும்.. தொடர்ந்து ரீயுசனுக்கு ஓடிஓடிப் படித்தே வந்தாள். பிரபல.. பாடசாலை புகுமுகப் பரீட்சை ஒன்றிற்காக தோற்றுவதற்காகவே அந்தப் படிப்பு. 10 வயதே தாண்டி இருந்தவளின் முதுகிலும் தலையிலும்.. சுமைகள் என்பதே அதிகமாக இருந்தது. அவளால் அந்த வயதை சுமையாக உணர முடிந்ததே தவிர சுகமாக உணர முடியவில்லை. எப்படா இந்த 5ம் ஆண்டு தாண்டிப் போகும் என்பதே அவளின் நினைவாக இருந்தது. 5ம் ஆண்டை தாண்டிய பின் வர இருக்கும் சோதனைச் சுமைகள் பற்றி அவள் அன்று அறிந்திருக்கவில்லை என்பதால்.. 5ம் ஆண்டு தாண்டினாலே போதும் என்பது தான் அவளின் எண்ண ஓட்டமாகவே இருந்தது. ஒருவாறு.. அந்தப் புகுமுகப் பரீட்சைக்கான நாளும் வர…
-
- 4 replies
- 3.5k views
-
-
தாராளம் ‘‘என்ன செல்லம்மா... வீட்டுல இருந்து எண்ெணயை எடுத்துப் போறியா?’’ - தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி கையில் ஒரு பாட்டில் நிறைய எண்ணெயை எடுத்துச் செல்வதைக் கண்ட சுந்தரம், சந்தேகத்தோடு கேட்டான்.அந்நேரம் அங்கே வந்த அவன் மனைவி விமலா, ‘‘அட... நான்தாங்க அதை அவளுக்குக் குடுத்தேன். அவ ஒண்ணும் தூக்கிட்டுப் போகலை!’’ என்றாள்.வேலைக்காரி நகர்ந்தாள். ‘எப்படி நம் மனைவி இவ்வளவு தாராளப் பிரபு ஆனாள்’ என்று மலைத்த சுந்தரம், மனைவியிடம் கேட்டான்... ‘‘நீ சாதாரணமா எதையும் யாருக்கும் தூக்கிக் கொடுத்துட மாட்டியே... இன்னைக்கு என்ன ஆச்சு?’’‘‘டி.வியில சொன்னாங்க... திரும்பத் திரும்ப எண்ணெயைக் காய்ச்சி சமையலுக்குப் பயன் படுத்தினா புற்றுநோய் வருமாம். அதனாலதான் நான் யூஸ் பண்ணுன பழைய எண்ணெயை…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெட்டிசம் பாலசிங்கம் யாழ்பாணத்தில சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும். பெட்டிசம் அதை …
-
- 7 replies
- 2.6k views
-
-
தாலி ஆலையடி பிள்ளையார் கோவில், கோவில் வீதி உட்பட எங்கும் சனங்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றனர் ஒரு சிலரைத்தவிர. சுமார் ஒரு ஐந்தயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் அந்த ஆலையடி பிள்ளியாரிலும் அதை சுற்றியும் தங்கியிருக்கின்றனர். எல்லோரும் தங்களை மறந்து தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிறு மணல் கூட விழமுடியாத அளவிற்க்கு ஒருவரையொருவர் உரசிக்கொண்டு தூங்குகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மா ஏதோ நினைப்பு வந்தவளாக கண்ணை முழிக்கின்றாள். மங்கிய நிலவு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றது. தலைக்கு வைத்திருந்த கைபையிற்க்குள் தன் கையை வைத்து துளவி தனது மூக்குக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு குந்தியிருக்கின்றாள். குந்தியிருந்து செல்வியை பார்க்கிறாள் அவள…
-
- 6 replies
- 1.9k views
-
-
கி-பி 17ஆம் நூற்றாண்டு - தமிழ்நாட்டில் ஒரு கிராமம் அந்த மூன்று பெண்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் சிலர் குதிரைகளில் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களின் முகங்களில் தாடி வளர்ந்திருந்தது. தமிழ் மண்ணிற்கு அந்நியமான ஆடைகளையும் மொழியையும் கொண்டிருந்தார்கள். கைகளில் வாளோடும் கண்களில் காமவெறியோடும் அவர்கள் அந்தப் பெண்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். குதிரைகளின் வேகத்திற்கு அந்தப் பெண்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் அந்தப் பெண்களை பிடித்து விட்டார்கள். ஒரு பெண் அழுது கொண்டு ஏதோ சொல்ல அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் தூக்கிக் கொண்டு போனார்கள். இதை எல்லாம் தொலைவில் இருந்து இரண்டு அழகான விழிகள் மிரட்ச…
-
- 50 replies
- 8.3k views
-
-
வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு நடக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் …
-
- 3 replies
- 912 views
-
-
தாழ்ப்பாள்களின் அவசியம் அ.முத்துலிங்கம் அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வர…
-
- 1 reply
- 985 views
-
-
தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் “தி கிரேட் கோஸ்ட்” கப்பல் மூலம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்துகொண்டிருந்த ராபர்ட்ஸன், உடன் வந்த எந்த ஒரு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியுடனும் உரையாடுவதையோ, மது அருந்துவதையோ தவிர்த்து தன் அறைக்குள் நாள் எல்லாம் நிலவியல் வரை படத்தை ஆராய்ந்தவாறே, பதினோரு நாள்கள் பயணம் செய்த போது இந்திய மலைச் சரிவுகளிலும், குறிப்பிட்ட குடும்பங்களாலும் வளர்க்கப்பட்டு வரும் விசித்திரத் தாவரங்கள் பற்றியும் சங்கேதச் சித்திரங்களால் உருவான தாவர வளர்முறை பற்றிய குறிப்புகளையும், கிரகண தினத்தன்று தாவரங்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலை அறியும் சூட்சும சமிக்ஞைகள் குறித்தும் வியப்பும் பயமுமாக அறிந்தபோது, மீட்பரின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பிறந்து கம…
-
- 1 reply
- 913 views
-
-
"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவ…
-
- 9 replies
- 4.5k views
-
-
திசை மாறிய பறவை! அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?' 'வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர். தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை. பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை. குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஊருக்கு போக வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் வருவது போல் எனக்கும் வந்தது .அதுவும் இருப்பதைந்து வருசங்களுக்கு பிறகு பிறந்த நாட்டுக்கு செல்ல முடிவெடுத்த நாளிருந்து மனம் தன்னுள்ளே துள்ளி குதித்து சந்தோசம் கொண்டாடியது. நான் செல்லும் விமானம் முக்கி முனகி ஏறும் முன்பே நாட்டுக்கு சென்று விட்டேன் மனத்தளவில்.ஊரிலிருக்கும் வரை ஊரின் அருமை தெரியாமால் தான் இருந்தது .அதன் அருமை புலத்தில் நினைவு மீட்டல்களாக அங்கென்றுமாக இங்கொன்றுமாக வந்து ரீங்காரம் இடத்தான் அதை இழந்த வலி தெரிந்தது.நான் இப்போழுது அந்த நானாக இல்லை அது போல் ஊரும் அதே ஊராக இருக்காது மனத்தின் ஒரு பகுதி வந்து அலாரம் அடித்தாலும்.மனதின் மறு பகுதி அவற்றுக்கெல்லாம் மறுத்தான் போட்டு கொண்டு காலத்தால் அழிந்த அவைகளை நினைவுகளால் அலங்க…
-
- 43 replies
- 5.3k views
-
-
திசைமாறிய காதல் அவளுக்கும் அவனுக்கும் இடையில் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லைத்தான்.. அதுவும் இப்படி ஒரு கோலத்தில் .... பல காரணங்கள் சொல்லி என்னை தூக்கி எறிந்து விட்டு போனாலும் அவள் எண்ணியபடி எங்கோ வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றுதான் அவன் எண்ணியிருந்தான் .அனால் இன்று ..... ஒட்டிய உடலும் காய்ந்த முகமும் ஆளுக்கு படிந்த ஒரு பழைய புடைவையும் ஒழுங்காக வாரப்படாத தலையும் திலகமில்லா நெற்றியும் ....... அவளை அடையாளம் காண்பதே குமாருக்கு கடினமானதாக இருந்தது . மஞ்சள் நிறமும் குழிவிழும் அழகிய கன்னமும் நீண்ட விழிகளும் நேர்த்தியான உடையும் அளவான ஒப்பனையும் ஒருங்கே இணைய ஒரு தேவதைபோல் துள்ளித்திரிந்த கௌரியா இது ..…
-
- 14 replies
- 3k views
-
-
திட்டம் ‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி. கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது. ‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்…
-
- 3 replies
- 1.3k views
-
-
திண்ணை வீட்டுப் பிச்சாயி பாட்டி - ஒரு தலைமுறையின் அடையாளம்! - சிறுகதை #MyVikatan விகடன் வாசகர் பாட்டி ( Representational Image | Pixabay ) வைக்கோலில் வேய்ந்த இந்தத் திண்ணை வீடுதான் இக்கிராமத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இன்னும் இருக்கிறது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! பிச்சாயி பாட்டி வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள். சுகமாய் காற்று அடித்துக்கொண்டிருந்தது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
-------------------------------------------------------------------------------- தினச்செய்தி (சிறுகதை)[/b] தினச்செய்தி தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலே மிகவும் பிரபலமான தமிழ் நாளிதழ். நகரம், கிராமம்,குக்கிராமம், மலைகிராமம், சந்து,இண்டு,இடுக்கு என்று அனைத்து இடங்களிளும் தினச்செய்தி நாளிதழ் தான். எந்த டீக்கடையாக இருந்தாலும் பால், பாய்லர், டீ மாஸ்டர் இருப்பதுப் போல கண்டிப்பாக தினச்செய்தி நாளிதழும் இருக்கும். மழையாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, தினச்செய்தி கண்டிப்பாக மக்களை சேரும். மக்களும் தினச்செய்தியை காலையில் படித்தால் தான் அன்றைய தினம் அவங்களுக்கு தொடங்கும். அந்த அளவிற்க்கு தினச்செய்தி மக்களுடன் பல வருடங்களாக ஒன்றி விட்டது. …
-
- 1 reply
- 1.2k views
-
-
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
தினம் - (சிறுகதை) - முருகபூபதி . " கழுத்தில் சயனைற் குப்பி, கரத்தில் ஏ.கே. 47 கொண்டு திரிந்தவன், இப்போது எதுவுமே இல்லாமல் காற்றுப்போல் அலைகிறான்." சில நிமிடங்களில் எனது உடலை - இதற்குத்தானா 'பூதவுடல்' என்கிறார்கள் - எடுத்துச்சென்றுவிடுவார்கள். என்னுடல் இறுதியாத்திரைக்குத் தயாராகிறது. இறுதி அஞ்சலி செலுத்த வந்தவர்களும் மலர்வளையங்களுடன் வந்தவர்களும் மகள் - மருமகனிடம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள வந்தவர்களும் நான் பயணிக்கவிருக்கும் நீண்ட அழகிய காருக்குப்பின்னால் தத்தம் கார்களில் அணிவகுத்து வருவார்கள். மயானத்திற்குச்சென்றபின…
-
- 3 replies
- 663 views
-
-
-
பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான். திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர். திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையால் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நில…
-
- 2 replies
- 2.1k views
-
-
திரு. முடுலிங்க April 30, 2006 ஷோபாசக்தி சென்ற புதன் கிழமை Le Monde பத்திரிகை இணைப்பாக ஆப்பிரிக்க இலக்கியச்சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த இலக்கியச்சிறப்பிதழின் நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்த ‘Monsier Mudulinka’ என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி எழுதியிருந்தார் ஹெளஸ மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதையை ஹீரன் வில்பன் பிரஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தக் கதையின் தலைப்புப்பாத்திரமாக வருபவர் ஒரு இலங்கையர் என்பதைக் கதையின் போக்கில் நான் அறிந்து கொண்டதும் மிதமிஞ்சிய ஆர்வத்துடன் கதை யைப் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடனேயே அந்தக் கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். கதை எளிய பிரஞ்சு மொழியில் இருந்ததால் தமிழில் மொழிபெயர்ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
திருக்கார்த்தியல் - சிறுகதை இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்கக் கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள் விற்பனைக்குக் குவியும். சொக்கப்பனை கொளுத்துவதுபோல முள்கள் நிறைந்த ஒடைமரத்தைக் கொளுத்துவார்கள். செந்தமிழ் தங்கியிருந்த ஹாஸ்டல், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளத்துக்கும் மும்மூர்த்திபுரத்துக்கும் இடையில் இருக்கும் மன்னத்தேவன் கோயிலின் பின்புறம் இருந்தது. செந்தமிழுக்கு ஐந்து வயதாகும்போது, அவன் அம்மா ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாள். மும்மூர்த்திபுரம் தொடக்கப் பள்ளியில் படித்துவிட்டு, சாலையூர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க வந்தான். மெலிந்த தேகம்,…
-
- 0 replies
- 2.9k views
-
-
திருடன் காலையில் வழக்கம்போல வாக்கிங் புறப்பட்டேன். எப்போதுமே டிராக் சூட், ஷூ எல்லாம் அணிந்த பிறகு பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொள்வேன். ஒருவேளை வழியில் கிறுகிறுப்பு வந்துவிட்டால் ஒரு சோடா வாங்கவாவது பணம் வேண்டுமே? இதுவரை அப்படியொரு சூழல் வந்ததில்லை என்பதால் பத்து ரூபாய்க்கு சோடா கிடைக்குமா என்பது பற்றிக்கூட யோசித்ததில்லை. டிராக் சூட் போல, ஷூ போல பத்து ரூபாய் என்பதும் வாக்கிங் வஸ்துக்களில் ஒன்றாகிவிட்டது. அந்தவகையில் பத்து ரூபாயை எடுக்கலாம் என்று ஃப்ரிட்ஜின் மேல் இருந்த பர்ஸை எடுத்தபோது கொஞ்சம் உள்வாங்கி இருந்தது. முந்தைய தினம்தான் ஏடிஎம்மில் இருந்து மூவாயிரம் ரூபாய் எடுத்திருந்தேன். மகனுக்கு செருப்பு வாங்க முந்நூறு ரூபாய் எடுக்கப் போனபோத…
-
- 1 reply
- 3.1k views
-