கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சிறிலங்காவில் யானைக் கணக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கண்டி தலதா மாளிகையில் தலையாரி யானையாக பல வருடங்கள் இருந்த ராஜா எனும் கொம்பன் யானை எழுபது வயதில் மூப்புக் காரணமாக மரணமடைந்தது. இந்த இரு செய்திகளும் சில யானைக் கதைகளையும் சிறி லங்காவில் சம்பிரதாயம் என்ற பெயரில் இந்த அரிய விலங்குகளுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் பற்றி என் நினைவுகளைக் கிளறி விட்டது. யானை, அனேகமான பல காட்டு விலங்குகள் போல, முழுவதுமாக அடர் காட்டில் வாழப் பிறந்த ஒரு விலங்கு. தனியனாகத் திரியும் யானைகள் அரிது-அப்படித் தனியனாக அலையும் யானை அனேகமாக மூர்க்கமான ஆட்கொல்லியாகவே இருக்கும் (செங்கை ஆழியானின் "யானை" நாவல் ஒரு தனியன் யானையைப் பற்றியது). கூட்டமாக இந்த ராட்சத விலங்குகள் வாழ, சில நூற…
-
- 31 replies
- 6.2k views
-
-
பாகம்-1 அதிகாலை 4.30 ற்கு அலாரம் அடிக்கிறது, பெரும் பிரயாசைப்பட்டுக் கண்களைத்திறக்க முயல்கிறான் தினேஸ். பிரிய மறுக்கும் காதலர்கள் போல் இமைகள் இன்னமும் அவனுடன் சண்டையிடுகின்றன. பிரித்தே ஆகவேண்டும் என்ற அவசியத்தை அலாரத்தின் அலறல் நினைவுபடுத்துகிறது. இனி அவனது நாள்ச்சக்கரம் சுற்றத்தொடங்கும்.மணித்தியாலங்கள் அவன் வியர்வையில் கரையத்தொடங்கும். சிறைப்பட்டிருக்கும் பற்பசையில் சிறு துளிக்கு விடுதலை கொடுத்து குளியலறைக்கு விரைகையில் மனம் அவனை முந்திக்கொண்டு வேலையிடத்திற்க்கு விரைகிறது. புலம்பெயர்ந்ததால் கண்டங்கள் மட்டுமா மாறிவிட்டன..? எங்கள் வாழ்க்கை முறையுமல்லவா மாறிவிட்டது. தொலைத்த எங்கள் தனித்துவங்களின் நினைவுகளை மட்டும் பத்திரமாக ஞாபகக்குழிகளில் சேமித்து வைத்திர…
-
- 43 replies
- 6.2k views
-
-
சின்னச் சின்ன கதைகள் "எப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிப்பார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிப்பார்ம் எடுங்கப்பா." தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வோன" கடுப்பானான் மாரி. "ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை. வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான். 'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்ட…
-
- 15 replies
- 6.2k views
-
-
வணக்கம் உறவுகளே. நான் யாழிலே சுய ஆக்கங்கள் எதையுமே படைத்ததில்லை ஆனால் எனது முகநூலிலும், வலைப் பூவிலும் சில காலங்களாக எழுதிக்கொண்டிருந்தேன். எனது முக நூலிலே இருந்த சில ஆக்கங்களை பகுதி பகுதியாக இணைக்கலாம் என யோசித்திருக்கிறேன். இவற்றில் பல ஆக்கங்கள் எழுதி இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து போய் விட்டது. தற்போது எழுதுவதற்கான நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. இவற்றில் பல எனது பதின்ம வயதுகள், ஹாட்லியில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்புக்கள். முதலாவதாக [size=5]நினைவுகளே......[/size] Sunday, 13 June 2010 at 14:36 குளிர்காலம் ஆரம்பமாகி, வாகங்களின் மேல் வெண்பனி படரத் தொடங்கி விட்டது. வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து எல்லாரும் வீடுகளிலும் ஷாப்பிங் சென்டர்களிலும் முடங்…
-
- 59 replies
- 6.1k views
-
-
மனைவியின் நண்பன்! இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று நினைத்தபடி, 'மெசேஜை' பார்த்தாள். 'ஹாய்... துாங்கிட்டயா; பேசலாமா...' என்று அனுப்பியிருந்தான். துபாயிலிருந்து பேசுகிறான்; இங்கு இரவு, 10:30 மணி என்றால், அங்கு, இரவு, ௯:00 தான். 'ஓகே...' என்று பதில் அனுப்பினாள். உடனே, 'வாட்ஸ் - அப்' கால் வந்தது. ''ஹாய் நீரஜா... ஹவ் ஆர் யு?'' என்றான…
-
- 1 reply
- 6.1k views
-
-
தொலைபேசி தொல்லைபேசியான கதை டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன். அம்மாதான் போனில். அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி …
-
- 24 replies
- 6.1k views
-
-
வயலும் வைரவரும். இந்தவார ஒரு பேப்பரில் வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரே…
-
- 31 replies
- 6.1k views
-
-
வீடே நிறைந்திருந்து.. எல்லாரும் கலகலப்பாய் பேசி சிரித்து கொண்டார்கள்.. ராகவனுக்கு பெண் பார்த்து விட்டு வந்து இருந்தார்கள் சுந்தரம் பிள்ளையின் குடும்பம்.. ராகவன் எத்தினை நாள் நிக்க போகுறாய்.. அப்பா நான் போகணும் கல்யாணம் முடிந்த உடன் பெண்ணை கூட்டி கொண்டு.. ஏன் ராகவன் இந்த அம்மாவோட ஒரு மாதம் நிக்க கூடாதா? இல்லை அம்மா வேலைக்கு போகணும் அம்மா அதுதான்.. அடுத்த முறை வரும் போது நான் நிக்குறன் அம்மா.. அப்ப மாதவியய் ஒரு மாதம் எங்க கூட விடன் ராகவன்.. நீ எங்களுக்கு ஒரே பிள்ளை எவ்வளவு காலம்தான் நாங்கள் உன்னை விட்டு பிரிந்து இருக்குறது... என்னம்மா நாடு சரி வந்தால் நான் உங்கள் கூடதான் அம்மா வந்து இருப்பன்..அதுதான் சொல்லுறன் நீ…
-
- 14 replies
- 6.1k views
-
-
பழுத்த கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் மஞ்சள் நிறத்தில் அவள் மேனி..! அழகிய வதனம்.. ஒல்லியான உடல்.. எல்லாமே என் விருப்புக்குரிய அம்சங்களுடன் அவள். வீதியால்.. துவிச்சக்கர வண்டியை உருட்டிக் கொண்டு வந்தவள் மீது என் பார்வை...யன்னலால் அவளைக் காண்கிறேன். முதல் பார்வையிலேயே என் கண்களுக்கு அவளைப் பிடித்து விடுகிறது. அத்தனை அழகு அவள். என் கண்களோ அவளை விடுவதாக இல்லை..மேலும்.. ஆளை நோட்டமிடுகின்றன..! கழுத்தில்... ஒரு கயிறு. அது தாலிக் கயிறா இருக்குமோ.... என்ற சந்தேசகம் எழ.. கண்கள் அவளிடம் இருந்து விலக்கிக் கொள்கின்றன.. மனம் ரசிப்பதை நிறுத்தி.. இயல்புக்குத் திரும்புகிறது..! கால்கள் யன்னலை விட்டு அப்பால் நடையைக் கட்டுகின்றன. சற்று நேரத்தின் பின்.. மனதை அடக்க முடியாமல்.. கால்…
-
- 58 replies
- 6.1k views
-
-
அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாத…
-
- 43 replies
- 6.1k views
-
-
இரண்டாம் திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.."உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"இதைகேட்ட தகப்பன் கேட்டான்."அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ....."நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்.ஆனால்.."இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்…
-
- 1 reply
- 6k views
-
-
வாசியுங்கள் பொறுமை இருந்தால், கதைதான் ஆனால் இது நிஐம் எல்லா இனத்தினரிடமும் (பல நாடுகள் & Office வேலை ல் செய்த அனுபவத்தால்). எங்கட ஆட்கள் எல்லாம் பேச்சில் எழுத்தில் வீரர் செயலில் ZERO. தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை ப…
-
- 13 replies
- 6k views
-
-
நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன். ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால…
-
- 35 replies
- 6k views
-
-
விலை மதிக்க முடியாத நினைவுப் பரிசு வேண்டுமா? இன்னும் சிறிது நேரத்தில் மணிவாசகன் (அட நான் தான்) இப்பகுதியில் ஒரு சிறுகதையைப் பிரசுரிக்க இருக்கிறார். அது சற்றுச் சர்ச்சைக்குரிய கருத்தான். இதன் முடிவு சரியானதா தவறானதா என்று எனக்குமே சரியான தெளிவில்லை. எனவே இந்தக் கதை தொடர்பான உங்களுடைய கருத்துக்கள் , விமர்சனங்கள் என்பவற்றைக் கட்டாயமாய் எதிர்பாhக்கிறேன். மிகச் சிறந்த விமர்சனத்திற்கு வெகுவிரைவில் அறுபட இருக்கும் ஆதிவாசியின் வால் நினைவுப்பரிசாக அளிக்கப்படும். பேனையும் கையுமாக சீச்சீ விசைப்பலகையும் விரலுமாகத் தயாராயிருங்கள். அன்புடன் மணிவாசகன்.
-
- 28 replies
- 6k views
-
-
நட்பும் காதலும் அது ஓர் அழகிய காலைப்பொழுது. படுக்கையை விட்டெழுந்த நிஷா நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டாள். "8 மணி ஆகிவிட்டதே 9 மணிக்கு வகுப்பு ஆரம்பம். அதுவும் புதிய விரிவுரையாளர் வருவதாக சொன்னார்களே" என முணுமுணுத்தபடி குளியலறை நோக்கி விரைகின்றாள். இதமான குளியலை முடித்து தன்னை தயார்ப்படுத்தி தெருமுனைக்கு வந்தபோது 8 40 ஆகிவிட்டது. வீதியில் ஒரு முச்சக்கரவண்டியும் இல்லாதிருப்பதைக் கண்ட நிஷாவோ சினம்கொண்ட முகத்தோடு விரைந்து நடந்தே சென்றாள். எவ்வளவோ வேகமாக நடந்தும் அவளால் 9 10 க்கு தான் கல்லூரியை அடைய முடிந்தது.. பெருமூச்சு விட்டு அழகிய பிறைபோன்ற நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகளை அற்புதமான திருக்கரங்களால் ஒற்றி துடைத்துவிட்டு விரிவுரையாளர்கள்; தங்கும் அற…
-
- 27 replies
- 6k views
-
-
சில வித்தியாசங்கள் – சுஜாதா வாங்குகிற முந்நூற்றுச் சொச்சம் 25 தேதிக்குள் செலவழிந்துவிடுவது சத்தியம். இன்றைய தேதிக்கு என் சொத்து – ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிட்டவள் என் மனைவி. இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்! ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் கணவன் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது…
-
- 10 replies
- 6k views
-
-
Thanks for the 2000 people who have red my novel. Thanks for the 4 people who have sent 10$ each (amoung them 2 are Indian Tamils). I made myself fool again. Its OK. My short novels will be available at Chennai Bookfair 2010.
-
- 43 replies
- 6k views
-
-
இனியாவின் தவிப்பு ...... (பாகம் 12) ஏன் அண்ணாவையும் புகழையும் கடத்தி வைத்திருக்கினம், என்ன பிரச்சனை? எனக்கு ஒன்றையும் மறைக்காமல் சொல்லுங்கோ.... இதுவரைக்கும் எவ்வளவோ பிரச்சனைகளையும் இன்னல்களையும் தாண்டி வந்துவிட்டோம் இனிமேலும் எங்களுக்கு பிரச்சனை என்றால் அதை தாங்கும் மன வலிமையையும் உண்டு .... சொல்லுங்கோ மச்சாள். வழமைபோல் காடையர்கள் அட்டூழியமும் அவர்களின் பணம் என்கின்ற பிணம் தின்னும் ஆசையும்தான் காரணம், ஒரு கோடிரூபா கேட்க்கின்றாங்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாம் அவங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது !அவங்களிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு. ஆனால் எங்களுக்கு மச்சாள் அண்ணாவையும் புகழையும் முதலில் காப்பாற்ற ஏதாவது முயற்சி செய்யவேண்டும்,…
-
- 40 replies
- 6k views
-
-
தாயின் கணச்சூடு ----------------------------- பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை ) ஆதவன் அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி என் கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......! என் குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும் காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோ…
-
- 8 replies
- 5.9k views
-
-
காட்சி 2 : மணி 5.30. கடற்கரையில் அனிதா தன் காதலனுக்காக காத்திருக்கிறாள்.... இருவரும் 7 வருடங்களாக காதலிக்கிறார்கள்.... பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி விட்ட காதல்... கிருஷ்ணா +2 படித்துக் கொண்டிருந்தான்.... அனிதா +1 படித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது அரும்பிய காதல் 7 வருடமாக நீக்கிறது.... கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் அனிதா என்றாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயல்பாக அவர்கள் மணமுடிக்கத் தடையாக இருந்தது.... கிருஷ்ணாவும் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.... இனி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் கூட குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை..... "சரியா 5.15 மணிக்கெல்லாம் வந்துடுவ…
-
- 25 replies
- 5.9k views
-
-
எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்…… “நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன வெரட்டீரலாம்” என்றார். அந்த ஒற்றை நம்பிக்கைக் கீற்றைப் பற்றிக் கொண்டிருந்தோம் அனைவரும். “எங்க …
-
- 4 replies
- 5.9k views
- 1 follower
-
-
அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1 “அக்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர். நுகர்வு கலாசாரம் "ரெ…
-
- 25 replies
- 5.9k views
-
-
1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலை கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும…
-
- 1 reply
- 5.9k views
-
-
தொ(ல்)லைபேசி ஒரு பேப்பருக்காக விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமி…
-
- 33 replies
- 5.9k views
-
-
குறிஞ்சி மலர்கள் பாடசாலை என்பது ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு எப்படி நற் பிறஜையாக கொடுக்க வேண்டும் என்பது இப்போதுள்ள மக்கள் யாவரும் அறிந்ததே அப்படிபட்ட பாடசாலையில் ஆசிரியராக பணி புரிபவர்தான் நான் சந்திரன் மாஸ்டர் இது வரையில் பல பாடசாலைகள் மாறிவிட்டேன் எதிலும் நிரந்தரமில்லை அது என் தொழிலுக்கு கிடைக்கும் உயர்வு என்பதைவிட எனக்கு கிடைக்கும் அரச பரிசுதான் அது அதிபர் ஊடாக முறைப்பாடு வலயத்திற்கு சென்று வலயம் என்னை இடம்மாற்றி விடுகிறது என்பதையும் விட தூக்கியெறிந்து விடுகிறது .சக ஆசிரியர்கள் அதிபருக்கு விஸ்வாசமான ஆசிரியர்களுடன் முரண்படும் போது அதாவது அவர்கள் பாடவேளைக்கு போகவில்லை என்றால் அதை நான் கேட்கும் போது பிரச்சினையாகிவிடும் எனக்கு நேர்மையாக வேலை செய்யவேண்டும் எடுக்கும்…
-
- 28 replies
- 5.9k views
-