Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணை நோக்கி விரியும் சிறகுகள்-(பாகம்-7)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Eas,SUNDHAL, Udaiyar,புங்கையூரன்! நன்றிகள் உறவுகளே கருத்துப் பகிர்விற்க்கு.....

நன்றாக எழுதுகிறீர்கள். பெரும்பாலான போராளிகளின் மக்களின் முகவர்களின் பெற்றோர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை தொகுத்து எழுதுகிறீர்கள். தொடருங்கள்..

வீழாமல் வாழ்ந்தோம் என்பது பெருமை இல்லை. வீழ்ந்த போதெல்லாம் எழுந்தோம் என்பது தான் பெருமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபிராம்... உங்கள் எழுத்துக்களை மீண்டும் காணவேண்டும்....விரைவாக வந்துவிடுங்கள்...உங்கள் "ஒரு போராளியின் அம்மா" எனது மட்டுமல்ல இங்குள்ள பலரின் மனங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படைப்பு..அதன் தாக்கம் இப்பொழுதும் என் மனதை விட்டுப் போகவில்லை..சில பல காரணங்களால் அதன் சில பாகங்களை தராமலே விரைவாக முடித்து விட்டீர்கள்..காலமும் நேரமும் சரி வந்தால் அதன் விடுபட்ட பாகம்களை பூரணப்படுத்தி நான் அப்பொழுது கேட்டுக் கொண்டது போல் புத்தகமாக வெளிக்கொணர முயற்ச்சி செய்யுங்கள்..என்னாலான பங்களிப்பை தரத்தாயாரக உள்ளேன்..உங்கள் அந்தப்படைப்பின் பெறுமதி சிலகாலங்களின் பின்னர் இன்னொரு தலை முறையால் நிச்சயமாக இப்பொழுது உள்ளதை விட இன்னும் அதிகமாக உணரப்படும்...

கதை பல நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு அழகாகச் செல்கிறது.

நல்ல எளிமையான எழுத்து நடை. ஒவ்வொரு பாகத்திலும் எழுத்து நடையின் தெளிவும் , சம்பவங்களை கோருக்கும் நேர்த்தியும் அதிகரித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன்.மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் sagevan,thappili கருத்துப் பகிர்விற்க்கு....

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-6

நேவிப்படகு ரோந்து செல்லவேண்டிய எல்லை முடிவடைந்து விட்டதோ இல்லை கட்டளைத்தளத்தில் இருந்து திரும்பும்படி உத்தரவு கிடைத்ததோ அல்லது இவர்கள் இருவரது அதிர்ஷ்டமோ தெரியவில்லை வந்த நேவிப்படகு அப்படியே ஒரு வட்டமடித்து ஆனையிறவுப்பக்கமாக திரும்பிச்சென்றது. இதற்கிடையில் மரியதாஸ் ஊரில் உள்ள பல கோவில்களில் மனத்தால் நேர்த்திவைத்திருந்தான்.

நேவிப்படகு திரும்பிச்சென்றதால் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் மனதில் வந்தது. இன்னமும் வேகத்துடன் நீந்தத் தொடங்கினர். இவர்களின் விடா முயற்சிக்குப் பரிசாக சில மணித்தியாலங்களில் இருவரையும் கடல் கௌதாரி முனைக்கரையில் துப்பி விட்டிருந்தது. வந்த களைப்பில் அப்படியே கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்திருந்தான் மரியதாஸ். வானம் இப்பொழுது இருள் கலைந்து மிகத் தெளிவாக இருந்தது.

நட்ச்சத்திரங்களையும் நிலவையும் மேகங்களையும் தெளிவாகப் பாக்கக் கூடியதாக இருந்தது. இதே வானம் இதே நிலவு இதே நட்ச்சத்திரங்களைத்தான் சில மனித்துளிகளிற்கு முன்னர் அக்கரையில் இருந்த அவனூரில் நிம்மதியாகப் படுத்திருந்து ரசிக்க முடியாமல் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீடு வீடாக வீதி வீதியாக ஓடிக்கொண்டிருந்தான்.

இப்பொழுது என் மண் எங்களவர்கள் இருக்கிறார்கள் காவலுக்கு எவனடா என்னைத்துரத்த முடியும் என்ற இறுமாப்புடன் படுத்துக் கிடக்கிறான். அவனுக்கு அவ்விடத்தை விட்டு எழும்பவே மனமில்லை. அப்படியே கிடந்த படி எதிரிக்கு கேட்கும்படி இனி என்னைப் பிடியடா பாப்பம் என்று உரத்துக் கத்த வேண்டும் போலிருந்தது. ஏதோ வார்த்தைகளால் சொல்ல முடியாத இறுமாப்பு கௌதாரி முனைக்கரையில் கால்வைத்தவுடன் அவனுக்குள் வந்திருந்தது.

நிம்மதியின் பெறுமதியை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான். இந்த நிம்மதியை தங்கள் இனத்திற்கு கொடுக்கத்தான் ஆயிரம் ஆயிரம் போராளிகள் தங்கள் நிம்மதியைத் தொலைத்து விட்டு களமுனைகளில் கண்விழித்துக் காவலிருந்தார்கள்.

பெருங்கீரன் கரையில் இருந்த ஈச்ச மரங்களில் டோச் அடித்து கனிந்த ஈச்சங் குலைகளை பேனாக் கத்தியால் அறுத்துக் கொண்டுவந்திருந்தான். இருவருக்கும் நல்லபசி. ஈச்சம் பழங்களை மென்றபடி கடற்கரயில் இருந்து உள்நோக்கி மிகத் தூரத்தில் ஊர் மனைக்குள் இருந்த யாழ்செல்லும் படையணியின் முகாமை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

தினேசின் தந்தை மிதிவண்டியை தினேசை அழைத்துச் செல்லும் மீனவர் வீட்டிற்கு நேராகக் கொண்டுவந்து சேத்திருந்தார். அந்த வீட்டினுள் நுழைந்த போது சத்தம் போட்டு யாரையும் அலேட்டாக்காமல் அமைதியாக உள்ளே சென்று அமருமாறு சைகை காட்டினார் அந்த மீனவர். இரவு கடலுக்குள் இறங்குவதற்குரிய எல்லா ஆயத்தங்களையும் அவர் செய்து கொண்டிருந்தார்.

தினேசும் தந்தையும் வள்ளியம்மைப் பாட்டி வீட்டிலிருந்து கட்டிவந்த உணவைப்பிரித்து சாப்பிட்டு விட்டு பயணத்திற்கு தயாராக இருந்தனர்.தினேசின் தந்தை மகன் பத்திரமாக போய்ச் சேரவேண்டும் என்று எல்லாக் கடவுள்களையும் மனத்தால் வேண்டிக்கொண்டிருந்தார். தினேசிற்கு பயத்தை விட கடலில் முதன்முதலில் பயணம் செய்கிறான் அதுவும் களவாக என்பதை நினைக்க பயணம் எப்படி இருக்கபோகிறது என்ற ஆவலே மேலிட்டுக் கொண்டிருந்தது.

நேரம் வந்ததும் உடைகளை மாற்றி தினேசும் மீனவனைப்போல் அந்த மீனவருடன் செல்லத்தயாரானான். தந்தையின் கண்களில் இருந்து இப்பொழுதுதான் முதன் முறையாக கண்ணீரை அவன் பார்க்கிறான். தினேசிற் கும் அடக்க முடியாமல் அழுகை வந்துவிட்டது. பத்திரமாகப் போயிட்டு வா அப்பு என்ற வார்த்தைகள் மட்டுமே தினேசின் தந்தையின் வாயிலிருந்து வந்தது. அதற்க்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அழுகை அவரது வார்த்தைகளை விழுங்கி விட்டிருந்தது.

திரும்பிப் பார்த்துப் பார்த்து தினேஷ் அந்த மீனவரை பின்தொடர்ந்து கடற்கரை நோக்கி நடக்கத்தொடங்கினான். மீனவர் வீட்டு வாசலில் நின்று ஏக்கத்துடன் பாத்துக் கொண்டிருந்த தந்தை மெல்ல மெல்ல தூரப்போய் அவன் கண்களில் இருந்து மறையத் தொடங்கினார்.

காலம் அவனை ஓர் படகின் வடிவில் சுமந்து கொண்டு அகதி அத்தியாயத்தை எழுதுவதற்காக விரைந்து கொண்டிருந்தது. இருளைக்கிளித்துக் கொண்டு மீன்பிடிப்படகு அந்த மீனவரின் பலவருட அனுபவத்தால் லாவகமாக காற்றுக்கும் கடலுக்கும் ஆமிக்கும் தண்ணி காட்டிவிட்டு மன்னாரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

பாகம் ஏழிற்கு இங்கே அழுத்தவும்....

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் சுபேஸ் இப்போது எல்லோரும் காமத்தையும்,காதலையும் கருவாக எடுக்கும் போது நீங்களாவது மண்ணை பற்றி எழுத நினைத்தீர்களே அதற்காக எனது நன்றிகளும்,பாராட்டுகளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் சுபேஸ் இப்போது எல்லோரும் காமத்தையும்,காதலையும் கருவாக எடுக்கும் போது நீங்களாவது மண்ணை பற்றி எழுத நினைத்தீர்களே அதற்காக எனது நன்றிகளும்,பாராட்டுகளும்

நன்றி ரதி..

எல்லாமும் இருக்கத்தானே வேண்டும் ரதி வாழ்க்கையில்..

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் அப்பப்ப கிடைப்பதால் வோட்டிங் முடிய  கதையை ஒருக்கா தூசி தட்டுவம் எண்டு பார்க்கிறன் இந்தக் கிழமையிலை இருந்து... :D என்ன நினைக்கிறியள்..?(உன்ர இம்சையை வாசிச்சு நாங்கள் சாகிறதோ எண்டு மனசுக்கை திட்டுற மாதிரிக் கிடக்கு... :icon_mrgreen: )

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதத் தொடங்கினால் இடைவெளி விடாமல் தொடரனும் சரியா :D

  • கருத்துக்கள உறவுகள்

Wow thodarunga subesh.......

இன்று தான் உங்கள் கதையை வாசித்தேன். ஏனென்றால் நான் உறுப்பினராவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை இது என்பதால்.

நல்லதொரு கதை .. இல்லையில்லை யாதார்த்தத்தின் விஸ்தரிப்பு. மண்ணில் கொண்ட பற்று, நட்பு, தந்தைப் பாசம் என கலந்த ஒரு இயல்பான உணர்வு.. ஒரு போராளியின் வாழ்க்கையை சொல்லியிருக்கும் விதம் மிக நன்று.. தொடருங்கள் உங்கள் ஏழாம் அத்தியாயத்தை...

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம்-7

தான் நேசித்த தன் இனத்திற்காக குன்டுச்சந்தக்களுக்குள்ளும்,துப்பாக்கிப் புகைகளுக்கு நடுவிலும் வாழ்க்கையின் எல்லைகளை குறுக்கிக்கொண்டவன் பெருங்கீரன்..தன்னலம் நாடும் குதூகலங்கலங்களுக்குள்ளும்,சந்தோசங்களுக்கு நடுவிலும் மட்டுமே வாழ்ந்து பழகியவன் மரியதாஸ்..இரண்டுபேரினது கால்களும் கெளதாரிமுனையின் கரைகளில் மின்னிய புழுதிகளுக்குள்ளே சரிசமமாக பதிந்துகொண்டிருந்தன..மரணபயத்தில் இருந்து விடுபட்டு நிம்மதியின் பிரதிநிதியாகப் புன்னகைத்துக்கொண்டிருந்த மரியதாஸின் முகத்தைப்போலவே நிலவு அந்த நடுஇரவு வானத்தில் மிகத்தெளிவாக ஒளிர்ந்துகொண்டிருந்தது....வளமான வன்னி மண்ணின் பசுமையான மரங்களைக்கொஞ்சிக் கூத்தாடியபடி நிறைவாக வீசியதென்றலில் இருந்து தொற்றிக்கொண்ட உற்சாகத்துடன் இருவரும் முகாமை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.

முகாமின் வாசலை அடைந்தபோது வாசலில் காவலுக்கு நின்றபோராளி பெருங்கீரனை இனங்கண்டுவிட்டிருந்தான்.நீண்ட நாட்களின் பின்னர் அவர்கள் சந்திக்கின்றனர்.பிரிவின் நீட்சியினால் அடைந்த துயரமும் மீண்டும் சந்திப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியுமாக உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இறுக அணைத்துக்கொண்ட அந்தப்போராளிகள் இருவரும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.உணர்வுகளை அடக்கப் பழகிக்கொண்டவர்கள் அவர்கள்.அதனால் எந்தப்பெரும் உணர்ச்சிகளையும் ஒரு சில நொடிகளில் வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் முடியும் அவர்களால்.உணர்ச்சிகளால் காவலுக்கு நின்ற போராளியிடமிருந்து விடைபெற்றவாறு மரியதாஸையும் அழைத்துக்கொண்டு முகாமிற்குள் நுழைந்தபோது முகாம ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

பெருங்கீரன் நேராக நுழைந்த இடம் முகாமின் சமையல்கூடம்.அங்கு எப்பொழுதுபோனாலும் ஏதாவது சாப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.புட்டும் பாகற்காய் கறியும் தயாராக இருந்தது சமையல்கூடத்தில்.உண்டகளையில்போலும் எங்கிருந்தோ வந்து அந்தமுகம் போராளிகளுடன் ஒட்டிக்கொண்டு அவர்களில் ஒருவனாகிவிட்ட நாய் சமையல்கட்டுக்கு வெளியே நின்ற பலா மரத்தின்கீழ் உடம்பை குறட்டி நிலவொளியில் சுருண்டு படுத்துக்கிடந்தது.உணவைப்போட்டுக்கொண்டு இருவரும் ஆளுக்கொரு கதிரையை எடுத்து பலாமரத்தின் கீழ் போட்டு உடகார்ந்துகொண்டு சாப்பிடத்தொடங்கி இருந்தனர்.

உப்புநீரில் பலமணி நேரமாக ஊறிக்கிடந்தபடி நீந்திக்களைத்திருந்த அவர்களுக்கு அது ஒரு தேவாமிர்தமாக இருந்தது.ஒவ்வொரு கவளமும் தொண்டையைக் கடந்து உணவுக்கால்வாய் வழியாக வயிற்றுக்குள் இறங்கும்போதும் ஒவ்வொரு புதிய பிறப்புக்கள் எடுப்பதுபோல் இருந்தது பசியால் பாதி மயங்கிவிட்டிருந்த மரியதாஸிற்கு.பசிமயக்கத்தில் இருந்து விடுபட்டு சுயநினைவுக்கு வந்துகொண்டிருந்தபொழுது இனி அடுத்தது என்ன என்ற சிந்தனை மரியதாஸின் முகத்தில் ஓடத்தொடங்கியிருந்து.

பெருங்கீரன் முகாம் வந்து இரண்டாவது நாள் மாலைப்பொழுதில் முகாமின் தென்னைமரங்களுக்கு நடுவே இருந்த மேசையின் முன் பொறுப்பாளரை பார்த்தபடி உட்காந்திருந்தான்.கொண்டுவந்திருந்த தகவல்கள் அனைத்தும் பரிமாறப்பட்டு புதியபொறுப்புக்களை சுமந்தபடி மீண்டும் யாழ்மண்ணை நோக்கிய மரண பயணத்தை தொடங்கவேண்டும்.பயணங்கள் மனிதர்களால் விரும்பப்படுபவை.உலகை புதிதாய் அனுபவிக்க,மனதின் மொழியைப் பேச,இயற்கையின் பாடல்களைப்புரிந்துகொள்ள மனிதர்களால் பயணங்கள் விரும்பி அனுபவிக்கப்படுகின்றன.ஆனால் இவர்களின் பயணங்கள் இனத்தின் விடுதலைக்கானவை.மரணங்களின் நடுவில் விடுதலைக் கனவுகளை மட்டுமே சுமந்தபடி மிதந்துகொண்டிருக்கும் மனவுலகம் அவர்களது.இன்னொருமனிதனின் இருத்தலுக்காக தங்கள் இருத்தலை கேள்விக்குள் விரும்பித் திணித்தவர்கள் அவர்கள்.

செந்நிறத்தில் சிவந்திருந்த அந்தமாலையும் பெருங்கீரனுக்கு வழமையான ஒருபயண மாலையாகவே அமைந்திருந்தது.இப்படி பல மாலைப்பொழுதுகளை அந்த மரணபயணத்திற்காக அவன் செலவிட்டிருக்கிறான்.அதனால் அந்தமாலை அவனுக்கு எந்தவிதத்திலும் ஒரு விசேடமாலையாக அமைந்திருக்கவில்லை.ஆனால் அவன்கூட இன்னும் ஜந்துபேர் அந்த வெண்ணிறக் கடற்புழுதியில் நீளமாக விழுந்துகொண்டிருந்த தங்கள் நிழலையே உற்றுப்பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர்.அது அவர்களுக்கு முற்றிலும் புதிய பயணம்.கரைகளில் நடந்த கணங்களை விட கடல் அலைகளுடன் தவழ்ந்த கணங்களே அவர்களின் போராட்ட வாழ்வில் மிக அதிகம்.

உச்சிவெயில் கண்களை நேராகவே ஊடுருவி மூளையின் சூடு உணரும் நரம்பை எரித்துவிடுவதுபோல் எறிக்கும் மதிய நேரங்களில் கடலில் இறங்குபவர்கள் ஆதவன் எரிந்து எரிந்து முடியாமல் செந்நிறமாக சிவந்து களைத்து கடலின் பின்னால் மூழ்கும் மாலைகளிலும் களைக்காமல் கடலில்மிதந்து கொண்டிருப்பார்கள்.ஆனால் அத்தனையும் எதிரி எட்டிக்கூடப் பார்க்க அஞ்சும் போராளிகளின் கடலுக்குள்.இனிமிதக்க இருப்பதோ எதிரியின் கால்களுக்கு இடையில்.பயத்தின் எந்தவித சலனங்களும் தெரியவில்லை அவர்கள் முகத்தில்.முற்றிலும் ஒரு புதிய உலகத்தை தரிசிப்பதற்கான ஆவலே அவர்களின் மனங்களில் பொங்கிக்கொண்டிருந்தது.எதிரியை அவன் குகைக்குள்ளேயே தரிசிக்கும் த்றில்லான அனுபவத்தை அவர்கள் பெருவிருப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இன்னும் சிலகணங்களில் இருளைக் கிழித்துக்கொண்டு அவர்களை சுமந்துசெல்லும் படகு வந்துவிடும்.மீண்டும் ஒருமுறை சுமந்து செல்லவேண்டிய ஆயுதங்களை அவர்கள் சரிபார்த்துக்கொண்டனர்.பெருங்கீரன் பொலித்தீனால் தண்ணீர் புகாதபடி இறுக்கிச் சுற்றியிருந்த தனது தொலைத்தொடர்புக் கருவியை இன்னும் சற்று இறுக்கமாக சுற்றிக் கட்டிக்கொண்டான்.

சற்று நேரத்தில் அவர்கள் அறுவரும் காற்றின் மேலும் கடல் அலைகளின்மேலும் மாறி மாறி மிதந்துகொண்டிருந்த வேகப்படகின் விளிம்புகளை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தனர்.பரந்து விரிந்து கிடந்த அந்தக்கடலின் அக்கரையில் கண்ணுக்கெட்டாத தூரத்தில் மறைந்துகிடந்த யாழ்மண்ணை கற்பனையில் தரிசித்தவாறு புதியவர்கள் ஜவரும் அதுதான் தங்கள் கடைசிப்பயணம் என்பதை உணராதவாறு நின்றுகொண்டிருந்தனர்.கடலின் மடியினுள் படகு அவர்களை சுமந்தபடி நடுக்கடலில் வந்தபொழுது எதிரியின் குண்டுகள் அவர்களை வரவேற்கதொடங்கி இருந்தன.

தூங்காமல் விழித்திருந்த எதிரியின் பீரங்கிகள் நெருப்பை உமிழத்தொடங்கியிருந்தன.தண்ணீருக்குள் இலக்குத்தவறி வீழ்ந்துகொண்டிருந்த பீரங்கிக்குண்டுகளின் வெம்மை தாங்கமுடியாமல் நுரைத்துப் பொங்கி ஆவியாகிக்கொண்டிருந்த வெம்மையான கடல் நீர் தெறித்து படகில் இருந்தவர்களின் முகத்தில் அடித்துக்கொண்டிருந்தது.பல கடற்பயணங்களை அந்த கடல் தடத்தில் முடித்திருந்த பெருங்கீரனுக்கு நிலமையின் தீவிரம் புரிந்திருந்தது.எல்லோரையும் கடலுக்குள் குதிக்குமாறு கூறிவிட்டு பெருங்கீரன் கடலில் குதிக்கவும் பெரும் இரைச்சலுடன் வந்த பீரங்கிக் குண்டொன்று படகினுள் நேராக இறங்கவும் சரியாக இருந்தது.பெருங்கீரன் வெடி அதிர்ச்சியில் மெதுமெதுவாக கடலினுள் மூழ்கத்தொடங்கி இருந்தான்.

தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுபெர்ப் பாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையா வாசித்துவிட்டு எழுதுகின்றேன்.

தொடருங்கள்

தொடருங்கள் சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றாக உள்ளது.தொடருங்கள் சுபேஸ் [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.