Jump to content

அதிர்ந்தது சென்னை மாநகரம். பத்தாயிரம் மக்கள் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரள் போராட்டம் !


Recommended Posts

பதியப்பட்டது

ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்திய பெருந்திரளான போராட்டம் 15. 10. 13 செவ்வாய் இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்ற தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் பண்ருட்டி வேல்முருகன். இலங்கைக்கு எதிரான போராட்டங்களை பொறுத்தவரை இவ்வளவு பெரிய கூட்டத்தை அண்மையில் யாருமே கூட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கு பண்ருட்டி வேல்முருகன் தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் கலைக் குழு சார்பில் தமிழீழ விடுதலை குறித்த எழுச்சிப் பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டது. பறை இசை முழங்க, இளைஞர் பட்டாளம் வீறு கொண்டு எழுந்ததை அங்கு காண முடிந்தது.

சாரை சாரையாக மக்கள் கடலூர், பண்ருட்டி பகுதியில் இருந்து ஊர்திகளில் குவிந்த வண்ணம் இருந்தனர். கூட்டம் நடைபெறுகையில் மேலும் பல கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணமே இருந்தனர். எங்கு திரும்பினும் மக்கள் வெள்ளம் காணப்பட்டது. இளைஞர்கள் பல்லாயிரம் பேர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். பண்ருட்டி வேல்முருகன் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்த காரணத்தால், மற்ற கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டி இது போன்ற மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தால் ஆட்சியாளர்கள் அடிபணிவார்கள் என்பதில் ஐயமில்லை.

கோரிக்கைகள் வருமாறு:

*சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும்

* செங்கல்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடவேண்டியும்,தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும்

*இலங்கை ராணுவத்தால் தினமும் திட்டமிட்டு தமிழக மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு தடுத்திட கோரியும். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்

*இந்திய அரசு இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது எனவும், போர்க்கப்பல்கள் வழங்கக்கூடாது எனவும், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்ககூடாது என வலியுறுத்தியும்

* இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தியும்

 

1384129_730232666991586_811270544_n.jpg

 

1385041_730230566991796_753456035_n.jpg

 

1377412_730230616991791_374486630_n.jpg

 

1391927_730230580325128_1179448548_n.jpg

 

7978_730230683658451_1349811060_n.jpg

 

1378898_730230926991760_1550756167_n.jpg

 

1375026_730230686991784_1646042955_n.jpg

 

1375284_730230786991774_131738972_n.jpg

 

1376348_730230833658436_554528418_n.jpg

 

1395439_730231606991692_1039197738_n.jpg

 

1383612_730231716991681_299934016_n.jpg

 

1378088_730231933658326_1550516214_n.jpg

 

1395278_730231926991660_1582655775_n.jpg

 

988306_730232046991648_129361297_n.jpg

 

1378662_730232163658303_1921978900_n.jpg

 

 

1391484_730232683658251_721052796_n.jpg

 

1377987_730232670324919_1911783333_n.jpg

 

1391936_730232733658246_476764898_n.jpg

 

 

 

Rajkumar Palaniswamy

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதற்கு உந்துதல்  தந்த தியாகு அண்ணாவுக்கு நன்றிகள்

Posted

மேலும் சில படங்கள்.

 

1375042_738073716210090_1366446886_n.jpg

 

1377977_738069942877134_7404024_n.jpg

 

1391445_738070079543787_517308322_n.jpg

 

1393488_738070232877105_887120334_n.jpg

 

1377456_738070492877079_1375931218_n.jpg

 

1378471_738070686210393_954423157_n.jpg

 

564081_738070696210392_1725969789_n.jpg

 

1375153_738071252877003_796764733_n.jpg

 

1376385_738071169543678_1823047964_n.jpg

 

996944_738071389543656_586177835_n.jpg

 

1374872_738071642876964_826714073_n.jpg

 

1381380_738071632876965_2017841297_n.jpg

 

1380322_738071782876950_871056012_n.jpg

 

1376981_738071929543602_842645253_n.jpg

 

1382798_738072156210246_621176956_n.jpg

 

1377081_738072152876913_1661248620_n.jpg

 

995515_738072349543560_1059750950_n.jpg

 

602398_738073006210161_888957694_n.jpg

 

 

 

மே 17 இயக்கம்.

 

(facebook)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியாரை வைத்து தமிழ்நாட்டு அரசியலை ஓட்டிய காலம் போய் இப்போ தலைவரின் படம்

Posted

கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

 

பெரியாரை வைத்து தமிழ்நாட்டு அரசியலை ஓட்டிய காலம் போய் இப்போ தலைவரின் படம்

 

எதில் பார்த்தாலும் குறை கண்டு பிடிக்கிறதை முதலில் விடுங்கள்.

 

தலைவர் படத்தையும், தலைவர் பற்றிய தகவல்களையும் தமிழக மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு உதவியாக இருக்கும். அனைத்து தமிழர்களுக்கும் தலைவர் பிரபாகரனே தேசிய தலைவர் என்ற எண்ணக்கரு இப்பொழுது உருவாகிக்கொண்டிருக்கிறது. அது மேலும் வலிமையாகும்.
 

Posted

போராடும் உறவுகளுக்கு நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

எதில் பார்த்தாலும் குறை கண்டு பிடிக்கிறதை முதலில் விடுங்கள்.

தலைவர் படத்தையும், தலைவர் பற்றிய தகவல்களையும் தமிழக மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு உதவியாக இருக்கும். அனைத்து தமிழர்களுக்கும் தலைவர் பிரபாகரனே தேசிய தலைவர் என்ற எண்ணக்கரு இப்பொழுது உருவாகிக்கொண்டிருக்கிறது. அது மேலும் வலிமையாகும்.

இதிலே நான் என்ன குறை சொன்னேன்.அவர்களின் வங்குரோத்து எங்களுக்கு லாபமாகத்தானே உள்ளது.நான்சொல்ல வந்தது இதுவே,அவசரப்பட்டு அறிக்கை விடாதீங்க
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியாரை வைத்து தமிழ்நாட்டு அரசியலை ஓட்டிய காலம் போய் இப்போ தலைவரின் படம்

 

அதிசயமான கண்டுபிடிப்பு...............
 
மனிதர்களுக்கும்  மிருகங்களுக்கும் இடையேயான மூல வித்தியாசம். "பகுத்தறிவு"
மனிதனுடைய சாதாரன அறிவு ஒன்றை பார்க்கும்போது 
ஏன் 
எப்படி 
யார் 
எங்கே 
 
போன்ற கேள்விகளின் ஊடாகத்தான் ஒன்றை பார்கிறான்.
இதில் நன்மையையும் தீமையும் உண்டு. மிருகங்கள் எது எதுவோ அதை அதுவாகவே பார்கிறார்கள் அதலால் அவர்களிடம் விபரீத ஆசிகள் இல்லை.
மனிதர் களில் ஆண்கள் ஒரு பெண்ணை பார்த்தால்.....
இவள் அழகானவள் 
அருமையானவள் 
என்று எது எதுவோ அதை கடந்து அதற்கு அப்பால் நின்று பார்கிறார்கள். ஒரு நாள் அது அதுவாகவே தெரியும்போது   பிரச்சனைகளை தானாக உருவாக்குகிறார்கள்.
 
பெரியாரின் படத்தை அவர்கள் காட்டிய போது 
சாதாரன மனித மூளை செயட்பட்டிருந்தால்....
இவர் யார் 
ஏன் 
எப்படி 
என்ற கேள்விகள் வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் கருணாநிதியோ  ஜெயலலிதாவோ  முதல் அமைச்சர் ஆகி இருக்க முடியாது. அல்லது போனால் அப்படி கேள்வி உடைய மக்களுக்கு  அமைச்சர்காளாக இருக்க கூடிய தகுதியை நோக்கி நகர்ந்திருப்பார்கள்.
 
பெரியாரை பார்ததபோதுதான் மூளை வேலை செய்யவில்லை ....
பிரபாகரனை பார்த்தாவது.
சாதாரண மனிதாராக இருந்தால். இந்திய மதிய அரசு இந்திய மக்களுக்காக இருக்கும்.
 
மக்கள் மிருக நிலையில் இருப்பதால்தான்............
அவர்களும் சலிப்புற்று அந்த நிலைக்கு வந்து களவு ஊழல் என்று தொடங்குகிறார்களோ என்னமோ ?? 
Posted

இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய ஆர்பாட்டத்தில் தோழர் வேல்முருகனின் ஊடக நேர்காணல்
 

http://www.youtube.com/watch?v=Xfj6TOpHCl0&feature=youtu.be&hd=1

 

 

 

மே 17 இயக்கம்

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போராடும் உறவுகளுக்கு நன்றிகள்..!

 

நீங்கள் இப்படி சிந்திக்கின்றீர்கள்...............
 
இதை முன் நின்று நடத்தியவரின் குடும்ப விடயங்கள் என்ன என்ன என்று யார் யார் ஆராய்ந்து  கொண்டு இருக்கிறானோ?
இவருக்கு முதலிரவு எங்கே நடந்தது. அது சரியா தவறா??
 
என்று வாற வாரம் ஒரு கட்டுரை  வடிக்க வேண்டாமா?? 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் தமிழக உறவுகளுக்கு நன்றிகள்

Posted

இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய ஆர்பாட்டத்தில் முழக்கம்

 

http://www.youtube.com/watch?v=HXyjjiFAcEQ&feature=youtu.be&hd=1

 

 

மே 17 இயக்கம்

 

(facebook)

Posted

நீங்கள் இப்படி சிந்திக்கின்றீர்கள்...............

 

இதை முன் நின்று நடத்தியவரின் குடும்ப விடயங்கள் என்ன என்ன என்று யார் யார் ஆராய்ந்து  கொண்டு இருக்கிறானோ?

இவருக்கு முதலிரவு எங்கே நடந்தது. அது சரியா தவறா??

 

என்று வாற வாரம் ஒரு கட்டுரை  வடிக்க வேண்டாமா??

குற்றம் நடந்தது என்னவா...?? இல்லை சொல்வதெல்லாம் உண்மையா...??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியார்.. தமிழக தமிழ் மக்களின் நாம் தமிழர்  இன எழுச்சியின் முன் இப்போ காலாவதி ஆகிட்டார். தேசிய தலைவரே உலகத் தமிழினத்தினை சாதி மதம் அரசியல் வர்க்கம் கடந்து.. ஒற்றுமைப்படுத்தும் சக்தி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

 

தமிழர்களை ஏமாளிகளாக்கி ஏய்க்க விளையும் ஜனநாயகம் பேசும் போலிச் சக்திகளுக்கு எதிராக.. இந்திய நடுவன் அரசுக்கு எதிராக.. சிங்களப் பேரினவாத பாசிய பயங்கரவாத அரசுக்கு எதிராக.. போராடும் இன உணர்வுள்ள தமிழகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழக உறவுகளுக்கு நன்றிகள் பல‌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே சென்னைதான் 4 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் இனவழிப்பு நடந்து ஒர் இனம் தனது இருப்புக்கக மன்றாடிக்கொண்டிருந்தபோது அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

 

இப்ப மாற்றம் என்னவென்றால் அரசியல்வாதிகளுக்கு இன்று ஈழப்பிரச்சினையை வைத்து அனுதாப அரசியல் செய்யவேண்டியிருக்கிறது. அன்று பெரும்பாலானோருக்கு காங்கிரசும் திமுகவும் நாடாளுமன்றத்தில் வெல்லவேண்டிய நிலை இருந்தது. அதனால் அன்று அன்று அடக்கி வாசித்தார்கள். இன்றும் அவர்களுக்கு அதே கூட்டணியை வெல்லவைக்கவேண்டிய தேவை இருக்கிறது அதனால் இப்ப காட்சி மாறி சென்னை அதிர்கிறது.

 

அதிரவேண்டிய நேரத்தில் அதிரவில்லையாம். இப்ப அதிர்ந்து என்ன அதிராவிட்டால் என்ன?

 

இந்த அதிர்வு இந்தியாவை காமன்வெல்த் மாநாட்டில் இருந்து ஒதுங்கச் செய்யுமாயின் அதனை வரவேற்கின்றேன். நிச்சயமாக அது முடியாது. இந்தியா கட்டாயம் பங்கேற்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அப்படிப் பங்கேற்காமல் போனால் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்தில் இருந்து விலகிவரும் இலங்கை மேலும் கை நழுவிப்போகும் சாத்தியமே உண்டு. கடைசி  மன்மோகன் பங்கேற்காது விட்டால் கூட அமைச்சர் மட்ட இரண்டாம் தரக் குழுவாவது செல்லும். இதனைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியாது!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யோவ் 8 கோடி வாழும் நாட்டில், கேவலம் 10,000 கூடுறதெல்லாம் ஒரு அதிர்வாய்யா?

இதவிட ஊர் திருவிழால ரெக்கார்ட் டான்ஸ் அல்லது நமீதா கடை திறப்பை பார்க்க கூடச்சனம் சேரும்.

இந்த எழுச்சிதானா இந்திய இலங்கை அரசுகளை பணிய வைத்து உங்களுக்கு உதவப் போகுது. செம காமடி.

Posted
இதே சென்னைதான் 4 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் இனவழிப்பு நடந்து ஒர் இனம் தனது இருப்புக்கக மன்றாடிக்கொண்டிருந்தபோது அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

 

முத்துக்குமாரும் மற்ற உறவுகளும் தீக்குளித்தகாலம்.

Posted

இதே சென்னைதான் 4 வருடங்களுக்கு முன்னர் ஈழத்தில் இனவழிப்பு நடந்து ஒர் இனம் தனது இருப்புக்கக மன்றாடிக்கொண்டிருந்தபோது அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

 

இப்ப மாற்றம் என்னவென்றால் அரசியல்வாதிகளுக்கு இன்று ஈழப்பிரச்சினையை வைத்து அனுதாப அரசியல் செய்யவேண்டியிருக்கிறது. அன்று பெரும்பாலானோருக்கு காங்கிரசும் திமுகவும் நாடாளுமன்றத்தில் வெல்லவேண்டிய நிலை இருந்தது. அதனால் அன்று அன்று அடக்கி வாசித்தார்கள். இன்றும் அவர்களுக்கு அதே கூட்டணியை வெல்லவைக்கவேண்டிய தேவை இருக்கிறது அதனால் இப்ப காட்சி மாறி சென்னை அதிர்கிறது.

 

அதிரவேண்டிய நேரத்தில் அதிரவில்லையாம். இப்ப அதிர்ந்து என்ன அதிராவிட்டால் என்ன?

 

இந்த அதிர்வு இந்தியாவை காமன்வெல்த் மாநாட்டில் இருந்து ஒதுங்கச் செய்யுமாயின் அதனை வரவேற்கின்றேன். நிச்சயமாக அது முடியாது. இந்தியா கட்டாயம் பங்கேற்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. அப்படிப் பங்கேற்காமல் போனால் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்தில் இருந்து விலகிவரும் இலங்கை மேலும் கை நழுவிப்போகும் சாத்தியமே உண்டு. கடைசி  மன்மோகன் பங்கேற்காது விட்டால் கூட அமைச்சர் மட்ட இரண்டாம் தரக் குழுவாவது செல்லும். இதனைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியாது!

 

அன்று போராட்டம் நடக்கவில்லை என்பதை விட நடக்கவிருந்த போராட்டங்கள் அடக்கப்பட்டு விட்டன என்பது தான் பொருத்தம். அத்துடன் அனைத்து மக்களுக்கும் சரியான வகையில் தமிழீழம் பற்றியும் அங்கு நடக்கும் போர் பற்றியும் விழிப்புணர்வு உருவாகியிருக்கவில்லை.

ஆனால் அன்று போல் தான் இன்றும் இருக்க வேண்டுமா? அன்று செய்யாமல் விட்டதை இன்றாவது செய்யலாமே. சினிமாவில் மூழ்கி கிடந்த பெரும்பாலான மக்கள் இன்று போராட்டங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று தானே.. பலரும் செய்த பிரச்சாரத்தின் பயனாக இன்று மக்களில் போராட்டம் தொடர்பாக பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தானே..

இந்த போராட்டத்தால் இந்தியா commonwealth மாநாட்டில் கலந்து கொள்ளாது என நான் கூற மாட்டேன். எனக்கும் அந்த நம்பிக்கை இப்போதைக்கு இல்லை. (கலந்து கொள்ளாமல் விட்டால் மகிழ்வேன்) ஆனால் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தமிழீழத்திற்கு ஆதரவு நிலைப்பாடு மக்களிடையே அதிகரிப்பதற்கு இவ்வாறான போராட்டங்கள் உதவும்.

 

தமிழகத்தில் தமிழீழ ஆதரவு நிலைப்பாடு பேணப்படுவது நிச்சயம் ஒரு காலத்தில் எமக்கு உதவியாக இருக்கும்.

இங்கு நான் இணைத்த முதலாவது வீடியோவில் வேல்முருகன் அவர்கள் தெளிவாக கூறுகிறார். மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியது ஒரு நாடகம் என்று. அங்கு கூடிய மக்களும் அந்த உரையை செவிமடுத்திருப்பார்கள். அதை விட மக்கள் பலரும் தி.மு.க விடையத்தில் தெளிவாகவே உள்ளார்கள். எனவே அவர்கள் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் இந்த கடிதத்தினால் ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் ஆதரவை விட புதிதாக ஆதரவு குவிந்து விடாது என்பது என் எண்ணம்.

 

முயற்சி எடுக்காமல் விடுவதை விட முயற்சித்து தோற்பது மேல். என்னால் தான் போராட முடியவில்லை. போராடுபவர்களுக்கு ஆதரவாவது கொடுக்கலாம். நீண்ட கால போராட்டங்களுக்கு என்றாவது ஒருநாள் பலன் கிடைக்கும். :rolleyes:

Posted

யோவ் 8 கோடி வாழும் நாட்டில், கேவலம் 10,000 கூடுறதெல்லாம் ஒரு அதிர்வாய்யா?

இதவிட ஊர் திருவிழால ரெக்கார்ட் டான்ஸ் அல்லது நமீதா கடை திறப்பை பார்க்க கூடச்சனம் சேரும்.

இந்த எழுச்சிதானா இந்திய இலங்கை அரசுகளை பணிய வைத்து உங்களுக்கு உதவப் போகுது. செம காமடி.

 

இன்று இதனால் பயன் கிடைக்குதோ இல்லையோ என்றோ ஒருநாள் கிடைக்கவிருக்கும் பயனுக்கு இன்றே அத்திவாரம் என எடுத்துக்கொள்ளலாம்.

தமிழக மக்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு தேவை.

 

Posted

இங்கே கருத்தாடல் நிகழ்கிறதா அல்லது எவரையாவது கிசுகிசு பாணியில் சாடுதல் இடம்பெறுகிறதா?

Posted

வேல்முருகனுக்கும் ஏதாவது தனிப்பட்ட அல்லது குடும்ப பிரச்சனை இருக்கும் அதுதான் அவர் மறியல் போராட்டம் செய்யுறாரோ என்று  எங்களின் புல நாய் பிரிவிடம்  ஆதாரம் கேளுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பொழுது முன்னாள் புலிகள் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு திரியும் பலர் தான் தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்தியும் கேவலபடுத்தியும் திரிகின்றார்கள் ஏன் மாவீரதினன்களை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் என்ன வருடா வருடம் மாவீரர்தினம் மிக சிறப்பாக நடந்திட்டே தான் இருக்கு இவர்காளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை சும்மா இணையத்தில் வந்து குரைப்பதை தவிர

தியாகு உண்ணாவிரதம் இருந்தா குற்றமாம்

தலைவரின் படத்தை போட்டால் குற்றமாம் சீமான் நடந்தால் குற்றமாம்

நெடுமாறன் ஐயா படுத்தால் குற்றமாம்

வைக்கோ தும்மினால் குற்றம்

ராமதாஸ் இருமினால் குற்றம்

இப்பிடி இவர்களின் காமடி தாங்கவே முடியல்ல

இவர்களின் ஒரே நோக்கம் உளவியல் ரீதியில் புலம் பெயர் தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் உறங்கு நிலையில் வைப்பதே

ஆனாலும் எமது மக்கள் முட்டாள்கள் அல்லவே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உலகத்தில் யாருமே சுயநலம் இல்லாமல் இல்லை எல்லோரிடமும் எதோ ஒரு வகையில் சுயநலம் இருந்திட்டே தான் இருக்கு

எல்லாருக்கும் உணர்சிகளும் இருக்கு உணர்வுகளும் இருக்கு ஆசைகளும் இருக்கு அசிங்கங்களும் இருக்கு எல்லாத்தையும் கிண்டி கிளற போனால் நாங்கள் மாபெரும் தலைவர் என்று போற்று கின்ற நெல்சன் மண்டேலாவும் தான் பல தடவைகள் திருமணம் புரிந்தவர் அதற்காக அவர் ஒரு தலைவர் இல்லாமல் ஆகிடுமா என்ன

மகாத்மா காந்தி செய்யாத விளையாட்டுகளா

ஆனால் இன்று இந்திய தேசத்தின் தேச பிதா அவர்

ஆக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கைகளை பார்க்க போனால் நல்ல தலைவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.