Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

Featured Replies

Thursday, October 19, 2006

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர்.

இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள்.

ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழினத் தலைவர் என்று போற்றுபவர்களின் முகங்களில் கலைஞரே கரியைப் பூசி விட்டார். ஈழத்தில் நடக்கின்ற தமிழினப் படுகொலை குறித்து முறையிட சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கலைஞர் சந்திக்க மறுத்தது மாத்திரம் அன்றி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பதையும் மறைமுகமாக தடுத்து விட்டார். ஆனால் இதற்குப் பிறகும் சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் கலைஞரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கும்படி மிகவும் பணிவாகவும் நயமாகவும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருக்கின்றன. இப்பொழுதும் இவர்கள் கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

ஆனால் இவர்கள் நம்புகின்ற தமிழினத் தலைவரும், தமிழ் தேசியவாதியும் ஆன கலைஞர் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை. தனித் தமிழ்நாடும், பின்பு திராவிட நாடும் கேட்ட கழகத்தில், கட்சியில் இருந்த கலைஞர் இன்று முற்று முழுதாக இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார். இன்றைக்கு கலைஞர் தமிழ்நாட்டிற்கு சுயாட்சி வழங்குவது குறித்துக் கூட பேசத் தயார் இல்லை. இந்தக் கலைஞர் தமிழீழம் குறித்து பேசுவார் என்பது வெறும் கனவாகவே இருக்க முடியும்.

இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட கலைஞர் இந்திய வெளியுறவுத்துறைக்கோ, அல்லது புலனாய்வுத்துறைக்கோ எதிராக ஒரு போதும் நடக்க மாட்டார்.

இதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும்.

90 ஆம் ஆண்டில் பத்மநாபா, ராஜீவ்காந்தி அழிப்புக்கு முன்பு தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகள் பற்றிய கண்காட்சி அது. அப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மீது தடை எதுவும் இருக்கவில்லை. கண்காட்சியும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகள் பற்றியதுதான். ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி அக் கண்காட்சியை தடை செய்தார். பழ.நெடுமாறன், சுபவீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகைப்படங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக் கண்காட்சி இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு விரோதமானது என்று கலைஞர் இதற்கு விளக்கம் வேறு சொன்னார்.

பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் வேட்டை ஆடப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்தும் கச்சதீவை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் பல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் கலைஞர் கச்சதீவு குறித்து ஜெயலலிதா அளவிற்கு கூட குரல் கொடுப்பது இல்லை. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்ற விவகாரமும், கச்சதீவு விவகாரமும் இந்திய வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்பதால் கலைஞரின் குரல் இவ் விடயங்களில் மிகவும் ஈனமாக ஒலிக்கின்றது.

அதே போன்று தற்பொழுது தமிழ்நாட்டில் சில ஒட்டுக்குழுக்கள் செயற்படுவது கலைஞருக்கு தெரியாத விடயம் அல்ல. ஈழத்திலிருந்து அகதிகளாக ஓடி வருபவர்களில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்களா என்று கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தால் கூட மற்றவர்களிடம் இருந்து பிரித்து சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இப்படி கடுமையாக நடக்கின்ற கலைஞர் அரசு இந்த ஒட்டுக்குழுக்கள் விடயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் அவ் ஒட்டுக்குழுக்கள் விவகாரம் இந்திய புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்டது. தற்போதைய சிறிலங்கா மீதான இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு அங்கம் இந்த ஒட்டுக் குழுக்கள்.

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் கொள்கைதான் மாநில அரசின் கொள்கையும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லி வருவதும் இதன் ஒரு வெளிப்பாடே. இன்னொரு நாட்டில் நடக்கின்ற ஒரு விடுதலைப் போராட்டம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையே தனது கொள்கைகளை வகுத்துக் கொள்ளும். இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு மாநில அரசு இக் கொள்கைகளுக்கு மாறாக தனிக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாது. இதையே கலைஞரும் சொல்கிறார்.

இவ்வாறு இந்திய தேசியத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற கலைஞர் ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

இவைகளை விட கலைஞர் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பாராமுகமாக நடப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது அவருடைய பதவி சம்பந்தப்பட்டது. முதல்வர் ஆவதற்கும், தொடர்ந்து முதல்வராக இருப்பதற்கும், தனக்குப்பின் தனது மகன் ஸ்டாலின் முதல்வராக வருவதற்கும் அனைத்து விதமான "ராஜதந்திர" வழிகளையும் கையாளக் கூடியவர் கலைஞர்.

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் அறிஞர் அண்ணாவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியனே முதல்வராக வருவார் என்றே அப்பொழுது பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அறிஞர் அண்ணாவிற்கு அடுத்த தலைவராகவும் நாவலர் நெடுஞ்செழியனே இருந்தார். அறிஞர் அண்ணா மறைந்ததும் அப்பொழுது இடைக்கால அரசின் முதல்வராக நெடுஞ்செழியன் பதவியேற்றார். ஆனால் சில நாட்களில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று கலைஞர் முதல்வரானார். இந்த சில நாட்களுக்குள் நடந்த மாற்றங்கள் குறித்து பலரும் பலவிதமாக சொல்வார்கள். நாவலர் நெடுஞ்செழியன் பெரிதும் வருத்தமுற்று கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டார். இரு வருடங்கள் அமைச்சரவையில் சேராதும் இருந்தார். அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று அனைவரிடமும் இருந்த நாவலர் நெடுஞ்செழியனால் சாகும் வரை இரண்டாம் இடத்திலேயே இருக்க முடிந்தது.

எம்ஜிஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று கலைஞருக்கு போட்டியாக வளர்ச்சி கண்ட பொழுது, எம்ஜிஆரை கட்சியில் இருந்தும் மக்கள் மத்தியில் இருந்தும் ஓரங்கட்டுவதற்கு கலைஞர் பல வழிகளில் முயன்றார். எம்ஜிஆருக்கு மறைமுகமாக பல தொல்லைகளை கொடுக்கத் தொடங்கினார். இதை உணர்ந்து கொண்ட எம்ஜிஆரும் ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது போன்று பேசி திமுகவில் இருந்து தன்னை வெளியேற்றச் செய்தார். அதன் பிறகு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக இருந்தார். இறக்கும் வரை தோற்கடிக்கப்படாது முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

எம்ஜிஆருக்குப் பிறகு திமுகவில் கலைஞருக்கு போட்டியாக வந்தவர் வைகோ. கலைஞருக்கு மட்டும் அல்ல. கலைஞருடைய வாரிசான ஸ்டாலினுக்கும் போட்டியாக வைகோ உருவெடுத்தார். கடைசியில் கொலைப் பழி சுமத்தப்பட்டு வைகோவும் வெளியேற்றப்பட்டார்.

திமுகவில் இருந்து சிவாஜிகணேசன் வெளியேறிதும் கலைஞரின் கைங்கர்யமே என்ற ஒரு கருத்தும் சிலர் மத்தியில் உண்டு.

இப்படி தனது கட்சியிலும் வெளியிலும் தன்னை மீறி யாரும் வரக் கூடாது என்பதில் கலைஞர் மிகவும் கவனமாக இருப்பார். 1969ஆம் ஆண்டில் கலைஞர் முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியதில் இருந்து இன்று வரை தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதிலும், ஆட்சி கவிழாமல் காப்பதிலும், கட்சிக்குள் எதிரிகளை வளரவிடாது தடுப்பதிலுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்கையில் உறுதியும் துடிப்பும் கொண்ட கலைஞர் அதிகாரத்துக்கு வந்தவுடன் காணாமல் போய்விட்டார்.

கலைஞர் முதன் முறையாக முதல்வரான பொழுது புதுடெல்லியில் பதட்டம் சூழ்ந்து கொண்டது. ஒரு தீவிரவாதியான கலைஞரை எப்படி சமாளிப்பது என்று புதுடெல்லியில் உள்ளவர்கள் கலவரம் அடைந்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இருக்கவில்லை. கலைஞரோடு, அவரது குடும்பம், கட்சி என்று அனைவரையும் மிசா சட்டத்தில் சிறையில் அடைத்து கொடுமை செய்த இந்திராகாந்தியை சில ஆண்டுகள் கழித்து "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" என்று கூட்டணி அமைத்துக் கொண்ட பொழுது, போராளி கருணாநிதி மறைந்து அரசியல்வாதி கருணாநிதி மட்டுமே எஞ்சியிருப்பது புலனாகியது.

இவ்வாறு அதிகாரத்தைக் காப்பதற்கு அனைத்தையும் செய்கின்ற கலைஞரின் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. ஒரு முறை ஊழல் என்றும், மறுமுறை விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்றும் காரணம் காட்டி கலைக்கப்பட்டது. இரண்டாம் முறை ஆட்சி கலைக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை கலைஞர் நன்கு அறிந்திருந்த போதும், அதிகாரத்தின் மீது வைத்திருக்கும் ஆசை காரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து கலைஞர் தள்ளி நிற்கவே விரும்புகிறார்.

முதல்வர் பதவி எந்த நேரத்திலும் பறி போகக்கூடியது என்பது கலைஞருக்கு தெரியும். ஆனால் அவர் நிரந்தரம் என்று நம்பிய, மிகவும் விரும்பிய பதவி ஒன்று உண்டு. கலைஞருடைய தமிழாற்றலாலும், தமிழ் மொழியைக் காக்க ஆரம்ப காலங்களில் அவர் நடத்திய போராட்டிங்களினாலும் "உலகத் தமிழினத் தலைவர்" என்று அவரை அவரது தொண்டர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். கலைஞரை வாழ்த்துகின்ற யாரும் இப் பட்டத்தைக் குறிப்பிடாமல் வாழ்த்துவதில்லை. கலைஞர் தன்னை இப்படிக் குறிப்பிடுவதை மிகவும் ரசிக்கிறார் என்பதை வாழ்த்துபவர்கள் உணர்ந்து கொண்டதாலேயே, அவர்களும் அவ்வாறு வாழ்த்துவார்கள். ஆனால் இன்று "உலகத் தமிழினத் தலைவர்" என்ற பதவி அவரிடம் இல்லை. முன்பு கூட அதற்கான தகுதி அவரிடம் இருந்ததில்லை. "தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்" என்று கலைஞரிடம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிலையில் கலைஞர் இருக்கிறார் என்பது, அவர் தலைவரும், அல்ல தமிழரும் அல்ல என்று சொல்லத் தூண்டுகிறது. " தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைப்பதற்கு தொடர்ந்து போராடி வரும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களே "உலகத் தமிழினத் தலைவர்" என்று அழைக்கப்படுவதற்கு முற்று முழுதாக தகுதியானவர் என்பதை இன்று உலகத் தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைப்புலிகள் எம்ஜிஆருக்கு முன்னுரிமை கொடுத்தது குறித்த கோபம் கலைஞருக்கு உண்டு. தற்பொழுது பட்டம் பறி போய்விட்ட கடுப்பும் சேர்ந்து விட்டது. கலைஞருடை குணவியல்புகளை ஆராய்கின்ற பொழுது, அவர் தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் வெற்றி குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவாரா என்பது கூட கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி விதைத்த நச்சு விதைகளை அவரது பிள்ளைகள் அறுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி விதைத்த நச்சு விதைகளை அவரது பிள்ளைகள் அறுப்பார்கள்.

கலைஞரின் மறைவிற்கு பின் நிச்சயமாக அது நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, October 19, 2006

கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்க, மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர்.

இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள்.

.

இதை இன்று இணைக்கவேண்டிய தேவை என்ன சபேசன் அண்ணா? :( :( :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா இது உங்கள் சொந்த ஆக்கமா?

உண்மையில் நிதானமாகத்தான் எழுதுகிறீர்களா?

இதற்கும் முன்னர் எழுதிய கருத்துக்கும் எவ்வளவு முரண்பாடுகள்???? :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106534&st=0

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா இது உங்கள் சொந்த ஆக்கமா?

உண்மையில் நிதானமாகத்தான் எழுதுகிறீர்களா?

இதற்கும் முன்னர் எழுதிய கருத்துக்கும் எவ்வளவு முரண்பாடுகள்???? :(

http://www.yarl.com/...pic=106534&st=0

அதுதான் நானும் பார்த்திட்டு கம்முன்னு இருக்கன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்ணா இது உங்கள் சொந்த ஆக்கமா?

உண்மையில் நிதானமாகத்தான் எழுதுகிறீர்களா?

இதற்கும் முன்னர் எழுதிய கருத்துக்கும் எவ்வளவு முரண்பாடுகள்???? :(

http://www.yarl.com/...pic=106534&st=0

இது த.அ. முதல் எழுதினது அது த .அ . பிறகு எழுதினது :D:)

எமது போராட்டத்தை விட்டு விட்டு பார்த்தால் கூட அடிப்படையில் கருணாநிதி ஒரு கேவலமான அரசியல் வாதிதான் .

அண்ணாவின் மறைவிற்கு பிறகு அடுத்து முதலமைச்சர் என்று எல்லோராலும் கருதப்பட்ட நெடுங்செழியனை தனது குள்ள நரிக்குணத்தால் பின் தள்ளி எம்.ஜி.ஆர் உதவியுடன் முதலமைச்சர் ஆனவர்..நெடுங்செழியனுக்கு அடுத்து மதியழகன் என்றொருவர் இருந்தார் அவர் பின்னர் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டார் .

பின்னர் தமிழ் நாட்டில் நடைபெற்ற முதல் மாபெரும் ஊழல் வீராணம் தண்ணீர் திட்டம் .இதனால் இந்திரா காந்தியால் பதவி வேறு இழந்தார் .அதை விசாரித்தது சர்க்காரியா கொமிசன் .பின்னர் அந்த கொமிசனால் குற்றமற்றவராக காணப்பட்டார் .அன்றே அவர் மத்திய அரசிற்கு விலை போய்த்தான் தப்பித்தார் ,பணமிருந்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை முற்றாக நம்பி ஊழலே அவர் ஆட்சிக்காலங்களில் முதல் இடத்தில் நின்றது ,பின்னர் அதனாலேயே பிரிந்து போன எம்.ஜி.ஆர் ஆல் கூட தமிழ் நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை நடாத்த முடியவில்லை .

மிக கேவலமான ஊழல் ஆட்சி கருணாநிதி நடாத்தினாலும் ஆள் மிக சிறந்த நிர்வாக திறன் உடையவர் ,எம்.ஜி.ஆர் எமக்கு உதவினார் ஒழிய அவர் நிர்வாகம் மிக சீரற்றது.தமிழ் நாட்டை இந்தியாவில் ஒரு பின் தங்கிய மாநிலம் ஆக்கியது எம்.ஜி.ஆர் தான் .

இனி சபேசன் விடயத்தை எடுத்தால் ,ஆதரவற்று இருக்கும் நாங்கள் எவன் ஆதரவு கொடுத்தாலும் அதை அவன் நல்லவன் கெட்டவன் என பார்க்காமல் ஏற்றுகொள்வதே எமக்கு ஒரு தீர்வு வரும்வரை நல்லது என நம்புவது தெரிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகைக்காரர் என்டால் அப்படியும்,இப்படியும் தான் எழுதுவார்கள் அதையெல்லாம் நாங்கள் கண்டு கொண்டு நேரத்தை வீணாக்காமல் போய் வேலையைப் பார்ப்போம்

சூடு சுரணை கொஞ்ச்சமும் இல்லை சொல்லடா தமிழா

நீதான் தமிழனின் பிள்ளை............... இந்தப்பாட்டு இன்றுவரை நாளை வரை எமக்குப்பொருந்தும் வகையில் எம் செயற்பாடுகள் இருக்க கூடாது என்பதே என் அன்பான வேண்டுதல்...........

இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

இதை எழுதும் போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக உங்களை கற்பனை பண்ணச் செய்த விடயம் என்ன? தமிழர்களின் பெரும்பான்மை பகுதியினர் இன்ன முடிவைத்தான் எடுக்கின்றனர் என்று எழுத தமிழர்களின் எண்ணப் போக்கை அறிந்து கொள்ள என்ன என்ன முயற்சிகளை எடுத்தீர்கள்?

தன்னை தானே மக்களின் ஏகப்பிரதிநிதியாக கற்பனை செய்வது ஒரு மனநோய் என்று நூறு வீதம் நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

வணக்கம்,

இது 6 ஆண்டுகளுக்கு முன்பு 2006இல் நான் ஒரு பேப்பருக்காக எழுதிய கட்டுரை. இணையத்தளங்களிலும் வெளிவந்தது.

நிழலி ! அன்றைய நிலையில் கலைஞர் பற்றிய ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அன்றைக்கு பெரும்பான்மையானவர்கள் கலைஞர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதே என்னுடைய கணிப்பு. இதை சொல்வதற்கு நான் ஒன்றும் ஏகபிரதிநிதியாக இருக்கத் தேவையில்லை.

இன்றைக்கு பெரும்பான்மையான தமிழர்கள் கலைஞரை நம்பவில்லை என்று யாராவது எழுதினால், அதை சொல்வதற்கும் ஏகபிரதிநதியாக இருக்க வேண்டுமா? அப்படி எழுதுபவர்கள் எல்லோரும் மனநோயாளிகளா?

  • தொடங்கியவர்

ஏனோ தெரியவில்லை, அண்மைக் காலமாக நீங்கள் என்னுடைய எழுத்திற்கு வைக்கின்ற கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன

நண்பர்களே!

இது 2006இல் எழுதிய கட்டுரை. கலைஞரை நான் என்றைக்கும் நம்பவில்லை. அதனால் ஏமாறவும் இல்லை.

என்னைப் போன்ற பத்தி எழுத்தாளர்கள் பலர் கால காலமாக "கலைஞரை நம்பாதீர்கள், அவர் இந்திய அரசுக்கு எதிராக நடக்கமட்டார், விடுதலைப் புலிகள் பற்றிய வெறுப்பு அவருக்குள் இருக்கிறது" என்று பல முறை தலையிலடித்துக் கூறியும், அவரை நம்பிவிட்டு இன்றைக்கு அவரை துரோகி என்று தூற்றித் திரிவது யார் குற்றம்?

வணக்கம்,

இது 6 ஆண்டுகளுக்கு முன்பு 2006இல் நான் ஒரு பேப்பருக்காக எழுதிய கட்டுரை. இணையத்தளங்களிலும் வெளிவந்தது.

இதை முதலில் சொல்லியிருந்தால் பின்னூட்டங்கள் வேறுபட்டு இருக்கும்

இன்றைக்கு பெரும்பான்மையான தமிழர்கள் கலைஞரை நம்பவில்லை என்று யாராவது எழுதினால், அதை சொல்வதற்கும் ஏகபிரதிநதியாக இருக்க வேண்டுமா? அப்படி எழுதுபவர்கள் எல்லோரும் மனநோயாளிகளா?

பசுப்பால் வெள்ளை என்று சொல்பவர்களை ஏக பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்று யாரும் கேள்வி கேட்பது அல்லது பதில் சொல்லி மினக்கெடுவதோ இல்லை

ஆனால் பசுப்பால் கறுப்பு என்று நிறுவ முற்படும்போது தான் பிரச்சனை

  • தொடங்கியவர்

கலைஞர் எப்பொழுதும் ஒரே மாதிரித்தான். அவருக்கு அவருடைய நலன்கள்தான் முக்கியம். எப்படி உலகில் ஒவ்வொரு நாடுகளுக்கும், ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், அவரவருடைய நலன் முக்கியமோ, அப்படித்தான் கலைஞருக்கும்.

இதை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு அவருக்கு தமிழ் நாட்டு மக்களினதும், திமுக தொண்டர்களினதும் அழுத்தம் காரணமாக அவரை ஈழம் பற்றி பேச வைத்திருக்கிறது.

இதை நாம் எப்படி சாதகமாக பயன்படுத்தலாம் என்றுதான் சிந்திக்க வேண்டும். அதிக எதிர்பார்ப்பை வைக்கவும் கூடாது, ஒரேயடியாக உதறித் தள்ளவும் கூடாது. அவர் நாளை மீண்டும் முதல்வர் ஆகலாம். அன்றைய நிலையில் அவர் எமக்கு ஏதாவது வகையில் பயன்படலாம். அவரை நெருங்கவும் வெண்டாம். விலகவும் வேண்டாம். சரியான தூரத்தில் வைத்திருப்போம்.

கலைஞர் எப்பொழுதும் ஒரே மாதிரித்தான். அவருக்கு அவருடைய நலன்கள்தான் முக்கியம். எப்படி உலகில் ஒவ்வொரு நாடுகளுக்கும், ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், அவரவருடைய நலன் முக்கியமோ, அப்படித்தான் கலைஞருக்கும்.

இதை நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு அவருக்கு தமிழ் நாட்டு மக்களினதும், திமுக தொண்டர்களினதும் அழுத்தம் காரணமாக அவரை ஈழம் பற்றி பேச வைத்திருக்கிறது.

இதை நாம் எப்படி சாதகமாக பயன்படுத்தலாம் என்றுதான் சிந்திக்க வேண்டும். அதிக எதிர்பார்ப்பை வைக்கவும் கூடாது, ஒரேயடியாக உதறித் தள்ளவும் கூடாது. அவர் நாளை மீண்டும் முதல்வர் ஆகலாம். அன்றைய நிலையில் அவர் எமக்கு ஏதாவது வகையில் பயன்படலாம். அவரை நெருங்கவும் வெண்டாம். விலகவும் வேண்டாம். சரியான தூரத்தில் வைத்திருப்போம்.

சபேசன், நீங்கள் இந்த திரியில் ஆரம்பத்தில் எழுதியதும், இப்ப எழுதிய பதிலும் இரு வேறு துருவமயப்பட்ட விடயங்கள். இப்ப எழுதியதை முதலிலேயே எழுதி இருப்பின் அதற்கான என் பதில் வேறாகவே இருந்து இருக்கும்.

புலிகள் இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதியவர்களில் பல நூற்றுக்கணக்கானோர் இன்று தடம் புரண்ட சூழ்நிலையின் தராசில்தான் உங்களின் எழுத்துகளும் பார்க்கப்படுகின்றன என்ற யதார்த்தத்தை உணர முடியாத மொக்கு அல்ல நீங்கள் என்று எம் எல்லாருக்கும் தெரியும்.

இப்பவும், சாட்டுச் சொல்லி தப்பித்து கொள்வது போலத்தான் இருக்கு உங்கள் விளக்கம்

  • தொடங்கியவர்

கட்டுரையின் தலைப்பிலேயே திகதி இருக்கிறது. யாரும் கவனிக்கவில்லையா?

Thursday, October 19, 2006கலைஞர் பற்றிய ஒரு பார்வை!

இன்றைக்கும் அவரை நம்பி, அவர் தமிழீழத்திற்காக பேசுகின்ற பேச்சுக்களில் மனம் உருகி, அவருக்காக பரிந்து பேசவில்லை.

அவரை ராஜதந்திரரீதியில் எமக்கு என்றைக்குமே கையாளத் தெரியவில்லை. இன்றைக்கு நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. அவர் மீது வெறுப்பு வளர்த்து தேவையான நேரத்தில் அவருக்கு கரம் நீட்ட முடியாமல் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் படுவேகமாக நடைபெறுகின்றன.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.</p>

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா ஊனான்னா.. எல்லோரும் இராஜதந்திரம் இராஜதந்திரம் என்றாங்க. நரிகளிடம் என்ன இராஜதந்திரத்தைப் பாவிக்கிறது என்றதை மட்டும் சொல்லுறாங்களே இல்லை.

எடுத்தா கண்ணாபின்னான்னு ஆதரவு.. இல்லைன்னா எதிர்ப்பு.. இதுதானா பயன்படுத்திற இராஜதந்திரம்.

கருணாநிதி பயப்படுற ஒரே சீவன்.. சீமான் மட்டுமே..! அவரைக் கூட யாழ் களத்தில் பக்கம் பக்கமாக அண்மையில் போட்டுக் கிழித்தார்கள் சிலர்.. இதில.. இராஜதந்திரம்.... நமக்கும் அதுக்கும் வெகு தூரம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு அவருக்கு தமிழ் நாட்டு மக்களினதும், திமுக தொண்டர்களினதும் அழுத்தம் காரணமாக அவரை ஈழம் பற்றி பேச வைத்திருக்கிறது.

தொண்டர்கள் சொன்னா தலைவர் கேட்பார்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......இது எந்த அரசியல்வாதிக்கும் சரிப்படாது ...சபேசன் அழுத்தத்திற்கு பயந்தவர் அல்ல கருணாநிதி பதவிக்கும் பணத்திற்க்கும் பயந்தவர்

  • தொடங்கியவர்

ஆம் புத்தன், அவருக்கு பதவியும் பணமும்தான் முக்கியம். அதற்கு அவருக்கு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்களிடமும் மக்களிடமும் மீண்டும் நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களின் மீது அனுதாபத்தை காட்டுவதன் ஊடாக அவர் மீண்டும் நல்ல பெயர் எடுக்க முனைகிறார். இதில் கருணாநிதியோ ஜெயலலிதாவோ வேறு வேறு இல்லை.

தமிழ்நாட்டின் தொகுதிரீதியான தேர்தல் முறையால் திமுக எதிர்க்கட்சியாக வர முடியாமல் போயிருக்கலாம். ஏற்கனவே இந்த அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. ராஜீவ்காந்தி கொலையை அடுத்து அதிமுக ஆட்சியைப் பிடிக்க, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக வந்தது.

ஆனால் என்றைக்கும் இரண்டு பலமான கட்சிகளில் ஒன்றாக திமுகவே திகழ்கிறது. அதிமுக இல்லாவிட்டால் திமுகவே ஆட்சியை அமைக்கும். ஆகவே நாம் இந்த இரண்டு கட்சிகளோடும் பகைமை பாராட்டாது நடக்க வேண்டும். இந்தக் கட்சிகளின் நலன்களோடு எமது நலன்கள் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன என்று பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் என்றைக்கும் இரண்டு பலமான கட்சிகளில் ஒன்றாக திமுகவே திகழ்கிறது. அதிமுக இல்லாவிட்டால் திமுகவே ஆட்சியை அமைக்கும். ஆகவே நாம் இந்த இரண்டு கட்சிகளோடும் பகைமை பாராட்டாது நடக்க வேண்டும். இந்தக் கட்சிகளின் நலன்களோடு எமது நலன்கள் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன என்று பார்க்க வேண்டும்.

இல்லை என்பது எனது கருத்து. முள்ளிவாய்க்காளுக்கு முன்பு எதிர்கட்சி அந்தஸ்து இருந்திருக்க கூடும் ஆனால் முள்ளிவாய்காளுக்கு பின்பு அந்த நிலை இல்லை.....முள்ளிவாய்காள் நிகழ்வு கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் நடந்த மரண அடி என்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொந்த இனத்தையே ஏமாற்றுபவரிடம் இருந்து தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்த்தால் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள் என்ற சாத்தியக்கூறே அதிகம் உள்ளது.

அண்மைய டெசோ மாநாடும் தமிழ் நாட்டில் தனது கட்சியின் படுதோல்வியை மீளமைக்க ஈழத்தமிழர்களுக்காக தான் பாடுபடுவதாக காட்டும் நாடகமாடலே தவிர வேறொன்றும் இல்லை.

http://youtu.be/GdLtcDUtyvU

ஈழத் தமிழர்களின் மீது அனுதாபத்தை காட்டுவதன் ஊடாக அவர் மீண்டும் நல்ல பெயர் எடுக்க முனைகிறார். இதில் கருணாநிதியோ ஜெயலலிதாவோ வேறு வேறு இல்லை.

[size=4]ஜெயலலிதா அண்மைகாலமாக செய்தவற்றை பார்க்கும்பொழுது இதை ஏற்க முடியவில்லை. [/size]

ஆனால் என்றைக்கும் இரண்டு பலமான கட்சிகளில் ஒன்றாக திமுகவே திகழ்கிறது. அதிமுக இல்லாவிட்டால் திமுகவே ஆட்சியை அமைக்கும். ஆகவே நாம் இந்த இரண்டு கட்சிகளோடும் பகைமை பாராட்டாது நடக்க வேண்டும். இந்தக் கட்சிகளின் நலன்களோடு எமது நலன்கள் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன என்று பார்க்க வேண்டும்.

[size=4]கருணாநிதி என்ற மனிதனின் இறப்பு நிச்சயம். அதன் பின்னரான அரசியலை நாம் ஆராயவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/dUHoXqw3pb0

டெசோ மீதான சீமான் பேச்சு 17-08-2012

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கருணாநிதியை நாம் நம்பி ஏமாந்து விட்டோம். இவ்வளவு காலமும் உதவி செய்யாத கருணாநிதி, தற்போது நடத்துவது நாடகமே. ஈழ தமிழர் அரசியலில் தமது குடும்ப நலனை காக்கிறார்".

http://www.youtube.com/watch?v=BJ0jcKMzC0c&feature=BFa&list=ULdUHoXqw3pb0

சீமான் பேட்டி : கேள்விகென்ன பதில் NDTV-HINDU

2016 இல் சீமான் தேர்தலில் நிற்கிறார்! தி மு க , அதிமுக எல்லாம் விழ போகிறது

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.