Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் இல்லாத உலகத்தில் song to listen.

Featured Replies

பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே

பாட்டு இன்றே கேட்கலாம் வாங்க:rolleyes:

http://vaseeharan.blogspot.com/ please click on here...

பாட்டைக் கேளுங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி வழங்குங்கள்:lol:

அன்புடன்

தமிழ்வானம்

யாழ்கள உறவுகளுக்காக மட்டும்:D

பெண் குரலில் பாடியவரும் ஆண் குரலில் பாடியவரும் சூப்பராக அசத்திட்டாங்கா. இசையும் சூப்பர். மீண்டும் மீண்டும் கேட்கலாம் போல இருக்கு. நன்றி தமிழ்வாணம் இணைப்புக்கு.

எல்லாம் நன்றாக இருக்கு!!!!

வாழ்த்துக்கள்

பெண்கள் இல்லாத உலகத்தில்

வாழ பேயும் விரும்பாதே

பெ:- ஆண்கள் இல்லாத உலகத்தில்

வாழ நாங்களும் விரும்பவில்லை

ஆ;- பெண்கள் இல்லாத உலகத்தில்

வாழ நாங்களும் விரும்பவில்லை

நன்றி முதலி எங்களுக்கு இணைப்பை தந்ததிற்கு...........மிகவும் அருமையா பாடுகிறார்கள்............பாடல் வரிகளும் எனக்கு நன்றாகவெ பிடித்திருந்தது.....பிண்ணணி இசையும் நன்கு அமைந்திருகிறது.........நல்லதொரு படைப்பு வாழ்த்துகள் நண்பரே..............

ஆங்கில சொற்களையும் கலந்து வித்தியாமான உச்சரிப்பில் பாடியிருந்தாலும் எனக்கு பாடலும் இசையும் மிஅவும் பிடித்தது.

இந்த பாடல் இசைத்தட்டாக வெளிவந்திருக்கின்றதா? இசைத்தட்டின் பெயர் என்ன?

  • தொடங்கியவர்

வெண்ணிலா, இனியவள், ஐமுனா, மதன் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்த இசைத்தொகுப்பு வெளிவந்து ஒரு வருடமாகின்றது. இதற்கு கனாடாவில் பாரிய வரவேற்பு. பார்ப்போம் ஐரோப்பாவில் சூடு பிடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த இசைத்தொகுப்பை வாங்க விரும்புவோர் பிரித்தாணியா,பிரான்ஸ், கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கிழ்காணும் விடியோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=3

மீண்டும் இதயபூர்வமான நன்றிகள்.

அன்புடன்

தமிழ்வானம்.

Edited by Tamizhvaanam

ம்ம்ம் சூப்பர் பாட்டு! ஒரு 8 தரம் கேட்டுட்டன்...... :) பெண்குரல் , ஆண்குரல் மற்றும் பாடல் வரிகளும் சூப்பர்....!

  • கருத்துக்கள உறவுகள்

இனிமையான வரிகள், ததும்பாத உச்சரிப்பு, காதுக்கினிய இசைக்கோர்ப்பு...ஆகா பிரமாதம்..பாராட்டுக்கள்...

நம்மவர் படைப்பின் வெற்றியில் நானும்

இணைந்து கொள்வதில் பெருமிதமடைகின்றேன்..

பாராட்டுக்கள்.....

Edited by Valvai Mainthan

நல்லாயிருக்கு...நல்ல குரல் இருவருக்கும்....நைனிடால் மற்றும் அகிலா கிரேன் என்றால் என்ன? இதே வரிகளுக்குக் கொஞ்சம் fast beat போட்டா எப்பிடி இருக்கும்?

நீங்கள் தான் கவிஞர் வசீகரனா? நான் முன்பு அந்த பனங்காய்பனியாரம் பாடலையும் முன்பு பார்த்து இருந்தேன். தமிழ் சினிமா பாட்டு தரத்தில் மிக நன்றாக இருந்தது. இந்தப்பாட்டு தமிழ் படங்களில் வரும் பாடல் போல இருக்கு. நான் தமிழ்பாட்டுக்களை நிறைய கேட்பதில்லை. இதை தமிழ் படத்தில் வந்த ஒரு பாட்டு என்று கூறியிருந்தால் கூட நம்பி இருப்பேன்.

சினேகிதிக்கு நைனிடால் மற்றும் அகிலா கிரேன் என்றால் என்ன தெரியாதா? ஐயோ பாவம்! ஆனால், நான் சொல்லமாட்டேன்! ஏனென்றால்...

எனக்கும் அது என்ன என்று தெரியாது.. :)

இந்த வரிகளுக்கு ஏன் fast beat போடவேணும்? ஏற்கனவே fast beat இலதானே இருக்கு?

சிலவேளைகளில் நைனிடால் என்பது ஒரு Lake ஆக இருக்கலாம். அல்லது உடம்பில் உள்ள சுரக்கின்ற ஒரு ஓமோனாய் இருக்கலாம்.

அகிலா என்பது என்பது ஒரு தயாரிப்பு பெயராய் இருக்கலாம். அல்லது எழுதியவரின் காதலி உட்கார்ந்த ஒரு கிரேனாகவும் இருக்கலாம்.

ஹி ஹி :):(

நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

இரசிக்கும் படி உள்ளது. பாராட்டுக்கள்.

இணைப்பிற்கு நன்றி.

ஆமா இதை டவுன்லோட் செய்ய முடியாதா?

  • தொடங்கியவர்

ஆமா இதை டவுன்லோட் செய்ய முடியாதா?

காதல் மொழி

எனது (vnmusicdreams)நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக காதல் கடிதம்- எனும் இறுவட்டு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் நாங்கள் நிறைந்திருக்கின்றோம்.

நானும், இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்கிறீர்கள். அந்த வகையில் எங்களுடைய சிறகடிப்பு காதல் கடிதம் இசைத் தொகுப்போடு மட்டும் நின்றுவிடவில்லை.

இதோ இரண்டாவது படைபோடு நதியாக நாங்கள் உங்கள் முன் மீண்டும் ஓடிவருகின்றோம். எங்களை அணைப்பதும், உணர்வால் தீண்டுவதும் உங்கள் பொறுப்பு. காதல் மொழி இறுவட்டுக்காக ஒரு வருடத்திற்குமேலாக நாங்கள்உழைத்திருக்கிறோம்.

இதில் விசேஷமாக வி.ஸ்.உதயா அண்ணன் அவர்களின் அதிஉன்னதமான இசையமைப்புக்கு வெறும் வார்த்தைகளால் என்னால் நன்றி சொல்லிவிட முடியாது. எனது ஓவ்வொரு பாடலின் வரிகளுக்கும் என் இதயத்தை இசையால் நனைக்கும் அளவுக்கு மிகவும் அழகாக இசைகோர்த்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருந்த இரு ஒலிப்பதிவாளர்கள் கிருபாகரன் அண்ணா மற்றும் சாமிநாதன் இருவரையும் என் அன்பால் வணங்குகிறேன்.

இந்த இறுவட்டு உங்களை இசையால் ஆட்சி; செய்யப்போகின்றது என்பதை மட்டும் உறுதியோடு சொல்லிக்கொள்கிறேன். ஓவ்வொரு இசைக்கலைஞர்களையும் நன்றியோடு வாழ்த்துகின்றேன்

எங்கள் முதல் முயற்சிப் படியில் ஆணித்தரமாக நின்றுகொண்டு, இரண்டாவது படியில் எங்கள் காலத்தடத்தைப் இங்கே பதிவுசெய்யத்திருக்கிறோம். இந்த முறை புதிதாக நான்கு பாடகர்களை, காதல் மொழி இறுவட்டின் மூலம் அறிமுகம் செய்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். இலண்டன் மாநகரில் இருந்து எங்கள் மேல் நம்பிக்கை வைத்து சென்னைக்குச் சென்று தன் இனிய குரலை பதிவு செய்த Jackson Boscoவிற்கும் அவர் குடும்பத்திற்கும் எமது நன்றிகள். Jackson Bosco அவர்களின் திறமையை ஐ.பி.சி தமிழ் வானொலி நடாத்திய ஐரோப்பிய இன்னிசைக்குரல் 2003 இன் மூலம் அறிந்துகொண்டேன். ஐ.பி.சி தமிழ் வானொலிக்கு நன்றிகள். நாங்கள் விளம்பரப்படுத்தயிருந்த புதிய பாடகர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துவிட்டு அவர் குடும்பத்தினரும் என்னைத் தொடர்புகொண்டது எனக்குப் பெருமகிழ்வைத் தந்தது.

இதேபோன்று நான் வாழ்ந்து வருகின்ற நோர்வேயில் இருந்து rap இசையில் சிறந்து விளங்குகின்ற, எங்கள் தமிழ் இளைஞன் சுதாஸ் அவர்களையும் இந்த இறுவட்டில் அறிமுகப்படுத்தியிருக்கின்ற?ம். தனது ஒலிப்பதிவுகூடத்திலேயே அவர் பாடிய பாடலை பதிவுசெய்து தந்தமைக்காக எமது இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழகத்தில் இருந்து காற்றலைகளைக்கூட கட்டிப்போடக்கூடிய காந்தக்குரல் காஷ்மீரா எனும் புதிய பாடகியையும், பாவநாசம் சிவன் அவர்களுடைய பேத்தி மேற்கத்தையே குரல்வளத்தில் பாடக்கூடிய இனியகுரல் மேகா அவர்களையும் எமது நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஏற்கனவே உங்களுக்கு நன்கு அறிமுகமான மதுரக்குரலோன் மதுபாலகிருஷ்ணன், யாழ்தேவியை தன் இனிய குரலால் செலுத்தி உங்கள் இதயங்களில் நுழைந்த சாம்.பி.கீhத்தன் இந்த இறுவட்டில் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். பனங்காய்ப் பணியாரமே பாடல் மூலம் உங்களை நாவூற வாயூற வைத்த எங்கள் மதிப்பிற்குரிய கிருஷ்ணராஐ; அவர்களும் தனது உயிர்வழியும் குரலால், இம்முறை இரு பாடல்களில் உங்களை உருக வைக்கப்போகிறார். நீங்கள் கண்ணீரில் மூழ்கலாம் கைக்குட்டையை கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த இறுவட்டில் உங்களுக்கெல்லாம் ஓர் இன்பச்செய்தியும் காத்திருக்கிறது. எத்தனையோ இனிய பாடல்களுக்கு மெட்டுப் போட்டு உங்களை பிரமிக்க வைத்த இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களை பாடகராகவும் முதன் முதலி;ல் அறிமுகப்படுத்தி வைப்பதில் நான்

இதயபூர்வமான மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறேன். அவர் பாடலைக் கேளுங்கள் உங்களைத் தேடுங்கள், பிறகு கொஞ்சம் எழுந்து ஆடுங்கள்.

இந்தப் பாடல் எந்தவொரு ஏஐன்சிக்காரர்களையும் காயப்படுத்துவதற்காக அல்ல ஒரு சிலரால் காயப்பட்டு வெளிநாடு போகமுடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும? எமது தமிழ் உறவுகளுக்காக நகைச்சுவைப்பாடலாக மலர்கிறது.

எம் மக்களுக்கு நேர்ந்த பாரிய அனர்த்தம் சுனாமி. அது ஏற்படுத்திய பேரழிவுகள், நாம் முப்பது நிமிடங்களில் இழந்தது ஒன்றல்ல, இரண்டல்ல முப்பதுநாயிரத்திற்கு மேற்பட்ட இனிய தமிழ் உறவுகள். அந்த இனிய உறவுகளில் எத்தனை எத்தனையோ காதல் பறவைகள் தாங்கள் கால்நனைத்து விளையாடிய அலைகளோடு கரைந்து போயிருப்பார்கள். அவர்களுக்காக இங்கே சுனாமிப் பாடல் ஒன்றும் அர்ப்பணமாகிறது. இந்தச் சுனாமிப் பாடலில் தங்கள் இனிய குரல்களைப் பதிவுசெய்த காஞ்சனா, பிரியங்கா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இதில் விசேஷமாக எங்களுடைய பாடல்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து என்னையும் உதயா அண்ணன் அவர்களையும் உலகறியச்செய்த ஊடகங்கள் முறையே நோர்வேயில் இருந்து தமிழ்முரசம் வானொலி, இலங்கையில் உள்ள சக்தி எப்.எம் வானொலி எங்கள் குடும்பவானொலி போலவே முழுமனதோடு எங்கள் பாடல்களை காற்றலைகளில் ஏத்தி பிரபல்யப் படுத்தினார்கள். இதே போலவே இலங்கையில் உள்ள சூரியன்.எப்.எம் வானொலி, தென்றல் வானொலி எனப் பட்டியல் நீள்கிறது. இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஐபிசி தமிழ் வானொhலி, அன்றைய சங்கமம் வானொலி, கனேடியத்தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, கீதவானி வானொலி, ஒலிஎப்.எம் வானொலி என அனைத்து வானொலிகளுமே எங்கள் பாடல்களை இங்கு பிரபல்யப்படுத்தின. எமக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தனர். அதற்காக எனது நிறுவனமும், இசையமைப்பாளர் திரு. வி.எஸ்.உதயா அண்ணா அவர்களும் என்றுமே நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.

இதே போன்றுதான் தமிழ்ஒளி தொலைக்காட்சி, TVI தொலைக்காட்சி, தீபம் தொலைக்காட்சி, இலங்கையில் உள்ள சக்திதொலைக்காட்சி, அவுஸ்ரேலியாவில் சிகரம் தொலைக்காட்சியென பாரிய ஒத்துழைப்பை வழங்கி எம்மைக் கௌவுரவப் படுத்தினார்கள். பத்திரிகை நண்பர்களைக் குறிப்பிட்டுகூற பக்கங்கள் போதாது ஆகவே உலகம் முழுவதும் விரவிக்கிடக்கின்ற அனைத்துலக தமிழ்ப் பத்திரிகைகளையும் , சஞ்சிகைகளையும், இணையத்தளமான தமிழ்நாதம், தமிழமுதம், அப்பால்தமிழ், தமிழ்ஓசை, யாழ், எனப் பல ஊடகங்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். அனைத்து ஊடகங்களையும் என்னால் இயன்றவரை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகோருகின்றேன். யாரையாவது தவறவிட்டிருந்தால் பெரிய மனதோடு மன்னித்துவிடுங்கள் இளம் கலைஞன் நான்.

புலம்பெயர் வாழ்வில் உங்களைப் போலவே எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் கலையாகப் படைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

அகரமுதல் எழுத்து உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொரு வீடுகளிலும் உங்கள் காதல் கதைகள், கனவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், சுகங்கள், துக்கங்கள், கண்ணீர் கலந்த கோபங்கள், தாபங்களை, போராடும் வாழ்வை சொல்லப்போகும் இனிய படைப்பாக காதல் மொழி அமையும்.

எங்கள் படைப்பின் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் கைகளில் எங்கள் இரண்டாவது இசைக் குழந்தையாக தவழவேண்டும் என்பது எமது விருப்பம்.

இந்த இறுவட்டுக் குழந்தையை நீங்கள் தூக்கி வைத்துக் கொஞ்சலாம், கெஞ்சலாம், அழகுபார்கலாம், அணைக்கலாம். உங்கள் தலைமாட்டில் வைத்துக்கொண்டு நித்திரைகூட செய்யலாம், கிள்ளிக்கூட விளையாடலாம், ஆக்கபூர்வமாக உங்கள் வார்த்தைகளால் வசப்படுத்தலாம். இசையால் வசமாக இதயங்கள் ஏது. ஒரே ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து இந்த இறுவட்டைப் பிரதியெடுத்தோ அல்லது இணையத்தளங்களில் ஏற்றியோ எங்கள் மனதைப் புண்படுத்தாதீர்கள். எங்களது அடுத்த முயற்சிக்கு உங்கள் பேராதரவு என்றுமே தேவை. ஒரு வீட்டுக்கு ஒரு இறுவட்டு என வாங்கிக் கேளுங்கள். இது தமிழகத்தை தந்தையாக நேசிக்கும் எங்கள் இசையமைப்பாளரினதும், தமிழீழத்தை தாயாக சுவாசிக்கும் எனதும் கலைப்படைப்பு. முத்தமிழ் உலகிற்குமான இசைமொழிதான் இந்தக் காதல் மொழி!. எங்கே உங்கள் காதுகளைத் திறந்து வையுங்கள் காற்றினிலே வரும் எம் கீதமே.

என் மனைவி, எமது குடும்பத்தினர், இனிய உறவுகள்,

எம்மேல் பாசங்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்,

சென்னையில் வாழ்கின்ற உதயா அண்ணா குடும்பத்தினர்,

நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

உங்கள் குரலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்:rolleyes:

இதயமுடன்

பாடலாசிரியர், தயாரிப்பாளர்

எஸ்.வசீகரன்

இசைவார்ப்புடன்

இசையமைப்பாளர்

வி.எஸ்.உதயா

14.05.2006

Edited by Tamizhvaanam

ஆமா இதை டவுன்லோட் செய்ய முடியாதா?

இயன்ற அளவு... எமது ஈழகலைப்படைப்பாளிகளுக்கு அவர்கள் படைப்புக்களை காசுக்கு வாங்கி ஊக்கம் கொடுக்கவேண்டும்....

அது நாம் அவர்களுக்கு செய்யும் பேருதவியாக.... ஓரளவாவது..... அவர்களுக்கு அமையும்.... :unsure::rolleyes:

  • தொடங்கியவர்

இயன்ற அளவு... எமது ஈழகலைப்படைப்பாளிகளுக்கு அவர்கள் படைப்புக்களை காசுக்கு வாங்கி ஊக்கம் கொடுக்கவேண்டும்....

அது நாம் அவர்களுக்கு செய்யும் பேருதவியாக.... ஓரளவாவது..... அவர்களுக்கு அமையும்.... :unsure::rolleyes:

That's my Real Netfriend!:) thanks lot for the answer..:)

with love

Tamizhvaanam

.................... ஒரே ஒரு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து இந்த இறுவட்டைப் பிரதியெடுத்தோ அல்லது இணையத்தளங்களில் ஏற்றியோ எங்கள் மனதைப் புண்படுத்தாதீர்கள். எங்களது அடுத்த முயற்சிக்கு உங்கள் பேராதரவு என்றுமே தேவை. ஒரு வீட்டுக்கு ஒரு இறுவட்டு என வாங்கிக் கேளுங்கள். ..............

இதற்கு பயந்து (விளம்பரம் செய்யபயந்து).... எத்தனையோ ஈழஇளம் கலைஞர்களின் வெளியீடுகள்.... அங்காங்கே அப்படியே உலகதமிழ் வர்தகநிலய(ங்களில்) காட்சிபொருளாகவே தூசிகூடதட்டாமல் கிடக்கிறது... அவர்கள் தம் திறமைகள்... முயற்சிகள் வெளிவராமல். :rolleyes::unsure::)

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாட்டு ரொம்ப அழகு. நல்ல இசை.அடிக்கடி கேட்காலும் அலுப்புத்தட்டாமல் இருக்கு.

பாராட்டுகள்.

இயன்ற அளவு... எமது ஈழகலைப்படைப்பாளிகளுக்கு அவர்கள் படைப்புக்களை காசுக்கு வாங்கி ஊக்கம் கொடுக்கவேண்டும்....

அது நாம் அவர்களுக்கு செய்யும் பேருதவியாக.... ஓரளவாவது..... அவர்களுக்கு அமையும்.... :unsure::rolleyes:

இப்பாடலை பலதடவைகள் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருந்திச்சு. நித்தா கொள்ளும் போதும் கேட்டுக்கிட்டே உறங்கணும் போல இருந்திச்சு. அதனால் தான் இறக்க முடியுமா னு கேட்டேன். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகின்ரேன். ஆனால் நான் இன்றே இவ்விறுவெட்டை வாங்கிட்டேன். :P

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் இல்லாத உலகம்.. பொறாமை.. கோபம்.. சண்டை சச்சரவு.. ஜொள்ளு வழிதல்.. காதல் செய்தல் கடலை போடுதல்.. காதல் கவிபாடுதல்.. திருமண அழைப்பு விடுதல்.. விவாகரத்து செய்தல்.. குழந்தை குட்டி பெற்றுத்தள்ளுதல்.. இப்படி இன்னோரென்ன.. பூமிப் பந்தை நாசம் பண்ணுற செயல்கள் இன்றி.. அமைதியா இருக்கும்..! பழைய காலத்தில் முனிவர்கள் கூட நாட்டில் இல்லாமல் காட்டில் போய் ஆச்சிரமமைத்தது.. இந்தத் தொல்லைகளால் தான் இருக்குமோ..??! :unsure::rolleyes:

உங்களுக்காக மட்டும் அல்ல... அந்த கருத்து. :rolleyes: ஏன் மன்னிப்பு.... நன்றி வெண்ணிலா :unsure:

பழைய காலத்தில் முனிவர்கள் கூட நாட்டில் இல்லாமல் காட்டில் போய் ஆச்சிரமமைத்தது.. இந்தத் தொல்லைகளால் தான் இருக்குமோ..??! :):)
நெடுக் அண்ணா அப்படி போய் காட்டில் தவம் செய்தாலும் காட்டிற்கு கூட போய் முனிவர்களின் தவத்தை கலைத்து பரதம் ஆடி அம்முனிவர்களையே மயக்கிய மங்கையர்களும் இருந்தார்களாமே. உண்மையா அண்ணா/? :unsure::)
உங்களுக்காக மட்டும் அல்ல... அந்த கருத்து. :rolleyes: ஏன் மன்னிப்பு.... நன்றி வெண்ணிலா :)
இல்லை பிரண்ட். நான் தானே தரவிறக்க முடியுமா னு கேட்டிருந்தேன். அதனால் தான் இம்மன்னிப்பு. ம்ம்ம் :P
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்வானம்.பாட்டு இசை எல்லாம் நன்றாக உள்ளது.எனக்கு பனங்காய் பணியாரம் நன்றாக பிடித்தது.இப்படி இடை இடையே உங்கள் தாயாரிப்புகளை வெளியில் விட்டால்த் தான் பெறுமதி கூடும்.தொடருங்கள் உங்கள் கலையை.

தமிழகத்தின் திரைப்பட பாடல்களுக்கு நிகரான தரத்தில் பனங்காய் பணியாரம் பாடல்காட்சிகளும் இசையும் நடனமும் அமைந்திருப்பது ஒரு நிறைவு என்றதை தாண்டி படைப்புகள் செல்ல வேண்டும். எமக்கென்று ஒரு தனித்துவம் பேணப்பட வேண்டும். தமிழீழத்தில் வெளிவரும் குறும்படங்கள் இவற்றை பேணுகின்றது. கனமான யதார்த்ங்களை உணர வைக்கின்றது. இவைகள் ஆரோக்கியமாக நகர்கின்றது. அது போல் உங்கள் படைப்புகளும் தனித்தன்மையுடன் எதிர்காலத்தில் வரவேண்டும்.

பனங்காய் பணியாரம் பாடல் நிச்சயமாக நிறைய மக்களை கவர்ந்துள்ளது என்பது உண்மை. ரசனைமிக்கதாக உள்ளது. ஆனால் கழுத்துறை கருவாடும் கீரிமலை பனங்கள்ளும், கண்டி குளிர்லதான் கைகால் வலிக்குதடி கொஞ்சம் சூடேத்த நெஞ்சு துடிக்குதடி முல்லைத்தீவு போவோம் முயலு இரண்டு பிடிப்போம் என்று நீங்கள் போகும் வேகத்தில் எங்கள் யதார்த்த வாழ்வு எங்கோ காணமல் போய் விடுகின்றது. கண்டியின் கனத்த சிங்கள வெறியும் அதன் நிமிர்த்தம் முல்லைத்தீவில் வீசப்படும் குண்டுகளும் யதார்தத்தை நிதர்சனமாக்கும் போது இந்த வரிகளின் ஒருங்கிணைந்த பார்வை பாடலின் ரசனைக்கும் யதார்த வாழ்விற்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றது. இந்த வரிகளுக்கு பதிலாக எமது தாயத்திலிருந்தே உவமைகளை எடுத்திருந்தால் என்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு வளர்ந்து வரும் கலைஞனில் குற்றம் காணுவது எனது நோக்கமல்ல எனது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதால் எதிர்காலத்தில் அவர் படைப்பு என்னும் தனித்துவத்துடன் எமது மண்வாசத்துடன்மேலும் சிறப்பாக வெளிவர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுதினேன்.

அன்புடன்

சுகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.