Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    34973
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1569
    Posts
  4. uthayakumar

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    616
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/21/21 in Posts

  1. புரட்டாதி 2020 ஐரொப்பா எங்கும் கொரோனா பயங்கரமாக தலைவிரித்தாடிய மாதம் ஐரொப்பிய நாடுகள் தம்மிடையேயும் பிற நாடுகளுக்கிடையேயும் எல்லைகளை மூடியும் விமானப்பறப்புக்களை புறக்கணிக்கவும் தொடங்கிய நேரம். பிள்ளைகளுடன் ஆவணி மாத விடுமுறை முடியும் வேளை நான் 10 நாள் வேறு ஒரு பயணம் போகப்போறேன் என்றேன் அதிசயமாகப்பார்த்தார்கள் (ஆனால் ஆவணி மாதமே வழமையாக பூட்டப்படும் எனது தொழில் புரட்டாதி மத்திவரை பூட்டப்பட்டது அவர்களுக்கு ஏற்கனவே கேள்விக்குறி ஒன்றை தந்திருந்தது) விமானம் ஓடாது என்றார்கள் விமான ரிக்கற் ஏற்கனவே எடுத்தாச்சு என்றேன். விமானம் ஓடாவிட்டால் என்றார்கள் காரில் போவேன் என்றேன் (அப்பா 1400 கிலோமீற்றரை 9 மணித்தியாலத்தில் போவார் என்பதால் எதிர்ப்பில்லை) அப்போ அங்க நீங்கள் சந்திக்கப்போறவரின் வயது கருதி உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யணும் என்றார்கள். அதற்கென்ன செய்தாப்போச்சு என்றவுடன் மலைப்பகுதியிலேயே பரிசோதனைக்கு நேரம் எடுத்து தந்தார்கள் கொரோனா தொற்று இல்லை என்று வைத்தியர் தந்த அந்த பத்திரத்தை கவனமாக என்னுடன் வைத்துக்கொண்டேன் (விமான நிலையத்தில் உதவலாம் என்பதற்காக) ஓய்வு முடித்து வந்த அடுத்த நாள் விமானநிலையத்தில் விட்டு விட்டு சென்றார்கள் (அவர்களுக்கு நம்பிக்கையில்லை நான் பறப்பேன் என்று) விமான நிலையத்தில் எந்த எதிர்ப்புமில்லை. தொடர்ந்து ஒவ்வொரு வாசலாக முன்னேறிக்கொண்டிருக்கின்றேன். விமானம் ஏறும் கடைசி வாசலைப்பார்க்கின்றேன் நீண்ட வரிசையில் நிற்க வைத்து துப்பாக்கி போல் எதையே நெற்றியில் வைக்கிறார்கள். ஏற்கனவே Mask போட்டிருப்பதால் மூச்சு சூடாக இருக்கு அது வேற நெற்றியை சூடாக்கிக்கொண்டிருக்கு அதைவிட வெய்யில் வேற??? நெற்றியை தொட்டுப்பார்க்கிறேன் சூடாகத்தான் இருக்கு அடப்பாவிகளா அவ்வளவு தானா??? ஆனால் அடிக்கடி பிரெஞ்சு அரசாங்கம் சொன்னபடியே உள்ளது வயதானவர்களை இந்த நேரத்தில் அரவணையுங்கள் சென்று பாருங்கள் அவர்களை தனிமையில் விட்டு விடாதீர்கள்... அது ஒன்று மட்டுமே எனது மனதில் ஓடியபடி???? தொடர்வோம்
  2. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  3. முழுப்பெயர் - முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் ... அண்மையில் பிள்ளைகளுடன் எனது பெயர் பற்றிய உரையாடல் வந்தது. அவர்களுக்கு எனது முதற்பெயர் என்ன என்பதில் குழப்பம். ஆனால் அதை தெளிவாக்க முயன்று இன்னும் குழப்பிவிட்டேன் என்று நினைக்கின்றேன்.🥴 இந்தப் பெயர்ச் சிக்கல் தமிழர்களுக்கு நிறையவே உண்டு. புலம்பெயர்ந்து வரும்வரை பிரச்சினை தராத பெயர், இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் வந்து இறங்கியதும் பிரச்சினையாகி விட்டது. சகாரா பாலைவனத்தின் வெம்மையை பல்லாயிரம் அடிகளுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த விமானத்தில் உணர்ந்தபோதே விமானத்தின் ரொய்லட்டில் பாஸ்போர்ட்டை, அதை வெட்டிக்கிழிக்க என்று முன்னேற்பாடாக எடுத்துச்சென்ற சின்னக்கத்தரிக்கோலால் வெட்டி ஃபிளஷ் பண்ணிவிட்டேன்! ஆனால் எங்கிருந்து விமானம் வந்தது, பாஸ்போர்ட் கிழித்தது எல்லாம் “ரூட்” அடிபடக்கூடாது என்று குடிவரவு அதிகாரிகளுக்குச் சொல்லவில்லை. ஆவணங்கள் இல்லாமல் வந்து இறங்கியவர்களை விசாரித்து அனுபவப்பட்டவர்கள். வழமையான முதலாவது கேள்வியாக பெயரைக் கேட்டபோது எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அது போதாது இரண்டு பெயர்களையும் சரியாகச் சொல்லுங்கள் என்றபோது, எனக்கு “திக்” என்றது. எனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை (பெயர் இடையில் மாற்றப்பட்டது தனிக்கதை) என்னுடன் கூட வந்தவர்களே அறியாதபோது எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள் என்று ஆடிப்போய் முழியைப் பிதுக்கினேன். இரண்டு பெயர்கள் வந்த கதையைச் சொல்லும் அளவுக்கு ஆங்கில அறிவும் இல்லை, தவிர அதைச் சொல்லும் நோக்கமும் துளியும் இல்லை என்பதால் திரும்பவும் எனக்கு ஒரு பெயர்தான் என்று எனது ஒற்றைப்பெயரைச் சொன்னேன். அவர்களின் பார்வை அப்பன் பெயர் தெரியாத அனாதைப்பயலைப் பார்க்கிற மாதிரித் தெரிந்தது. தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கொஞ்சம் மிரட்டுவதுபோல எனது முழுப்பெயரை எழுதச் சொன்னார்கள். குடும்பப்பெயரையும் அடிக்கோடிடவேண்டும் என்றார்கள். முழுப்பெயர் விளங்கியது. அது என்ன குடும்பப்பெயர்? இப்படி ஒன்றும் எங்கள் குடும்பத்தில் இல்லையே! தமிழர்களின் முழுப்பெயர்கள் இன்னாரின் பிள்ளை இவன்/இவள் என்று இருக்கும் அல்லது இன்னாரின் மனைவி இவள் என்று இருக்கும். தந்தை அல்லது கட்டிய கணவன் பெயர் முன்னுக்கும் பிள்ளைகளினதும் மனைவியினதும் பெயர் பின்னுக்கும் எழுதுவதுதான் மரபு. உதாரணமாக செல்லையாவின் செல்லமகள் சிவகாமி என்றால் முழுப்பெயர் “செல்லையா சிவகாமி” என்று இருக்கும். அதுவே சிவகாமி செந்தூரனைத் திருமணம் செய்தால் “செந்தூரன் சிவகாமி” என்று மாறிவிடும். இப்படி முழுப்பெயர் எழுதும்முறை தெரிந்திருந்தாலும், எனது பெயரை எண்சோதிடப்படி பாட்டனார், தந்தையாரின் முதலெழுத்துக்களுடன் பாவிக்கவேண்டும் என்று பெயர் மாறியபோது வீட்டில் சொல்லியிருந்ததால் பாட்டனார், தந்தையார் பெயர்களுடன் எனது பெயரையும் எழுதினேன். இடமிருந்து வலமாக மூன்றாவதாக இருந்த எனது தனிப்பெயருக்கு அடிக்கோடிட்டேன். இப்படியாக, எனது தனிப்பெயர் குடும்பப்பெயராகியது! அப்படியே வங்கி, கல்லூரி, பல்கலைக்கழகம், வேலை என்று எல்லா ஆவணங்களிலும் முழுப்பெயர் மூன்றாகவும், எனது பெயர் குடும்பப்பெயராகவும் வருமாறு பார்த்துக்கொண்டேன். எனினும் விமானப் பயணச் சீட்டுக்கள் பதிவு செய்யும்போதும், விசா எடுக்கப் போகும்போதும் படிவங்கள் நிரப்புவதில் குழப்பங்கள் வரும். நான் மூன்று பெயர்களை வேறு வைத்திருப்பதால் படிவங்களில் உள்ள கட்டங்கள் கூட போதாமல் இருக்கும். எனது முழுப்பெயரை ஆங்கிலத்தில் எழுத இரண்டு இடைவெளிகளுடன் 31 கட்டங்கள் வேண்டும்! நண்பன் ஒருவனின் பாட்டன் தனது தமிழ் மீதான பற்றைக்காட்ட நச்சினார்க்கினியனார், பரிமேலழகனார் என்று அதி நீளமான பெயர்களை வைத்ததுபோல, எனது பாட்டனார் செய்யவில்லை. என்றாலும் தனது முப்பாட்டன் முருகன் மேல் கொண்ட பக்தியால் முருகனின் பெயர்களையே மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் வைத்திருந்ததால் கடைக்குட்டியான தந்தையாருக்கு ஒரு முருகனின் பெயர்! அது எனது முழுப்பெயரின் நடுவில் உள்ளது. சிங்களவர்களில் சில பிரபலங்களின் பெயர்கள் இன்னும் நீளமாக இருப்பதால், உதாரணமாக வர்ணகுலசூரிய பத்தபெந்திகே உஷாந்த ஜோசேஃப் சமிந்த வாஸ், அவர்களுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சமாதானம் அடைந்துவிடுவேன். பிச்சைக்காரன் தன்னைவிட வசதிகுறைந்த பிச்சைக்காரனைப் பார்த்துத்தானே திருப்தியடைய முடியும். அதிலும் இவர்கள் சிங்களவர்கள் வேறு!😊 முன்னைய காலங்களில் தமிழின் மீதான பற்றினால் பொதுவாக நீளமான பெயர்களைத் தமிழர்கள் விரும்பி வைப்பதுண்டு. எனினும் பெயர்களின் நீளங்கள் சமூகக்கட்டமைப்பின் பிரமிட் நிலையையும் காட்டும் குறிகாட்டிகளாகவும் கருதப்பட்டதுண்டு. சமூகப்படிநிலையில் கீழே இருப்பவர்கள் நீளமான பெயர்களை வைக்க விரும்பி விண்ணப்பித்தவேளைகளில், பதிவாளர்களாக இருந்த உயர்குடியினர் கந்தன், செல்லன் என்று சுருக்கிவிட்ட வரலாறும் தமிழ் சமூகத்தில் உண்டுதானே. இப்படியாக நீளமான பெயர் ஒருபக்கம் பிரச்சினையாக இருந்தாலும் முக்கியமாக குடும்பப்பெயர் என்று ஒன்றில்லாதது பொதுவாக தமிழர்களுக்கான பிரச்சினையாக இருக்கின்றது போலுள்ளது. இணையத்தில் தேடினால் தமிழர்களைப் போலவே வேறு இனங்களிலும் குடும்பப்பெயர் எழுதுவது ஒரு சிக்கலாக இருப்பதாகத் தெரிகின்றது. சிங்களவர்களும், வட இந்தியர்களும், ஐரோப்பியர்களின் கொலனியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு சேவகம் செய்தவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் குடும்பப் பெயர்களைப் பாவித்து வருகின்றார்கள். தமிழர்களுக்குத்தான் இந்த Last name/Surname/Family name என்று ஒன்றில்லை. அதனால் தமிழருக்கு இந்த குடும்பப்பெயர் விடயம் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கும் சிக்கலாக இருக்கின்றது! எனக்குத் தெரிந்து தமிழ் மக்கள் எல்லோருக்குமே ஒரேயொரு பெயர்தான். சுருக்கியபெயர், செல்லப்பெயர், பட்டப்பெயர், புனைபெயர், இயக்கப்பெயர் இதெல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் பிறந்திருந்தால் சட்டபூர்வமாக பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கும் Given name என்பதுதான் எங்களைக் குறிக்கும் தனிப்பெயர். ஆறுமுகம், கந்தசாமி என்று எதுவானாலும் ஒரே ஒரு பெயர்தான். நாங்கள் பெயர் எழுதும் முறையில் எங்கள் தனிப்பெயர் குடும்பப்பெயராக வருவதும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. மேற்கத்தையரின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் குடும்பப்பெயர் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் எங்கள் தனிப்பெயரை தமிழ் மரபுப்படி பின்னுக்கு எழுதி குடும்பப்பெயராகப் பாவிக்கும்போது கணவன், மனைவி பிள்ளைகளுக்கு வேறு வேறு குடும்பப்பெயர்கள் வந்துசேர்கின்றது. மேற்கத்தையர் ஒரு மாதிரி மேலேயும் கீழேயும் எங்களைப் பார்க்கவைக்கின்றது. சகோதரர்களுக்கு ஸ்பொன்சர் கடிதம் எழுதும்போது அவர்கள் தங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராகப் பாவித்தால், குடும்பப்பெயர் ஏன் வேறாக இருக்கின்றது என்பதற்கு கூடுதலாக விளக்கம் வேறு கொடுக்கவேண்டும். இதை நான் கவனமாகச் செய்ததுண்டு. அதிலும் சகோதரர்கள் என்னைப்போல மூன்று பெயர்களைப் பாவிக்காமல் தந்தை, தமது பெயர் என்று இரண்டுடன் உள்ளதால் (எதை குடும்பப்பெயராகப் பாவிக்கின்றார்கள் என்பதே இன்னமும் குழப்பம்தான்) விலாவாரியான விளக்கங்கள் கொடுத்திருக்கின்றேன்! புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ஒருவர் தனது தந்தையின் பெயரை குடும்பப்பெயராக வைத்திருந்தால், அவர் இலங்கைசென்று திருமணம் முடித்து வரும்போது, கட்டிய மனைவி தனது மாமானாரின் பெயரைத் தனது குடும்பப்பெயராக வைத்திருக்க சங்கடப்படுவதும் உண்டு. உதாரணமாக கந்தசாமி மகன் கேதீஸ்வரன் குடும்பப்பெயராக கந்தசாமி என்று பாவித்தால் அவர் சுப்பிரமணியம் மகள் வதனாவை திருமணம் செய்த பின்னர், வதனா குடும்பப்பெயரை மாற்றினால் “வதனா கந்தசாமி” என்று வரும். இதில் கேதீஸ்வரன் பெயரே காணாமல் போய்விடும்! வதனா மாமனாரின் பெயரை தனது குடும்பப்பெயராக எழுதுவதை விரும்பாமலும் இருக்கலாம்! அதே போல பிள்ளைகள் பிறக்கும்போது பிள்ளைக்கு வைக்கும் பெயரை முதற்பெயராகப் பாவிப்பதா அல்லது குடும்பப்பெயராகப் பாவிப்பதா என்பதிலும் குழப்பங்கள் உண்டு. தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக வைத்தால் ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்பப்பெயர் மாறிக்கொண்டிருக்கும். இது குடும்பப்பெயரின் நோக்கமாகிய பரம்பரையை இலகுவாக அறிவதையே இல்லாமல் ஆக்கிவிடும். மறுவளமாக எங்கள் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றியதுபோல, பிள்ளைகளின் தனிப்பெயரை குடும்பப்பெயராக மாற்றினாலும் நிலைத்த குடும்பப்பெயர் உருவாகாது. அதுவே பெண்பிள்ளையாக இருந்தால் அவரின் தனிப்பெயரை குடும்பப்பெயராகவும் வைப்பதும் சிக்கல்தான். ஏனெனில் பெண்பிள்ளைகளின் பெயரை குடும்பப்பெயராகப் பாவிக்கும் நடைமுறை இல்லை. உதாரணத்திற்கு ஞானவேல் மகன் எழில்வேந்தன் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராகக் கொண்டிருக்கின்றார் என்று வைப்போம். அவருக்கு மூத்த பிள்ளையாக பிறந்த மகனுக்கு அர்ஜுன் என்று பெயர்சூட்டி, பிள்ளையின் தனிப்பெயரையே குடும்பபெயராகவும் பதிந்துவிட்டார். பின்னர் பெண்பிள்ளை பிறந்தபோது சஹானா என்று பெயரைவைத்து பெண்பிள்ளை என்பதால் தனது பெயராகிய எழில்வேந்தனை குடும்பப்பெயராக வைத்தால் பிள்ளைகள் இருவருக்கும் வேறு வேறு குடும்பப்பெயராகிவிடும். இவ்வாறு பல வேறுபட்ட குழப்பங்கள் நம்மவரிடையே உண்டு. கணணிமயமாக்கப்பட்ட இக்காலத்தில் பெயர்களில் குடும்பப்பெயர்தான் தரவுத்தளங்களில் முதன்மைத் திறவியாக (primary key) உள்ளது. எனவே, குடும்பப்பெயர்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதில் கவனம் தேவை. முழுப்பெயர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முழுப்பெயர் மூன்று பகுதிகளாக எழுதும்போது இப்படி வரும்: [முதற்பெயர்] [நடுப்பெயர்] [குடும்பப்பெயர்] முழுப்பெயர் இரண்டு பகுதிகளாக எழுதும்போது நடுப்பெயர் இல்லாது வரும்: [முதற்பெயர்] [குடும்பப்பெயர்] ஆங்கிலத்தில் First name, Forename, Given name, Christian name என்று விதம்விதமாகச் சொல்லப்படுபவை எல்லாம் ஒருவரை அழைக்கும் முதற்பெயரைத்தான் குறிக்கின்றன. அதேபோல Last name, Second name, Surname, Family name என்று சொல்லபடுபவை எல்லாம் குடும்பப்பெயரைத்தான் குறிக்கின்றன. Middle name கிறீஸ்த்த மதத்தினர் ஞானஸ்நானத்தின்போது பெற்றுக்கொள்ளும் பெயர். எனினும் வேறு வகைகளிலும் இதனைப் பாவிக்கலாம். அவை பற்றியும் பின்னர் சுருக்கமாகப் பார்க்கலாம். அத்துடன் குடும்பப்பெயரைத் தவிர மற்றைய பெயர்கள் அனைத்தையும் முதற்பெயர் என்றும் கொள்ளலாம்! இப்படி பெயர் என்பதே ஒரே குழப்பம் நிறைந்து இருக்கின்றது! இந்த முழுப்பெயர் எழுதும் முறை வந்த வரலாற்றைப் பார்ப்போம். ரோமானிய ஆண்கள் மூன்று பெயர்களைக் கொண்டிருந்தார்களாம். ஒருவரை அடையாளப்படுத்தும் தனிப்பெயர் (praenomen); அவரது குடும்பப்பெயர் (nomen); அவரது குடும்பக்கிளைப் பெயர் (cognomen). அதிகமான குடும்பக்கிளைப் பெயர்களைக் கொண்டு ஒருவரின் பெயர் மிக நீளமாக அமைந்திருந்தால் அவரின் சமூக மதிப்பு கூடியிருக்கும். ஏனெனில் நீளமான பெயர் வம்ச விருட்சத்தை (family tree) இலகுவாக அடையாளம் காண உதவும். ஆனால் பெண்களுக்கு அவர்களது தனிப்பெயரும் குடும்பப்பெயரும் மட்டும்தான் இருந்தன. அடிமைகளுக்கோ வெறும் தனிப்பெயர்தான்! இப்படிப் பெயரானது பல பெயர்களின் தொடராக குறிப்பிடப்படும் மரபு 17-18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளுக்கும் பரவியது. அதிகாரம் மிக்க பிரபுத்துவ வம்சத்தினர் தமது குழந்தைகளுக்கு மிக நீளமான பெயர்களைச் சூட்டி சமூகத்தில் தமது உயர்நிலையை உறுதிப்படுத்தினர். அது இன்றளவும் தொடர்கின்றது. பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் மகன் இளவரசர் ஜோர்ஜின் முழுப்பெயர் George Alexander Louis Mountbatten-Windsor என்றுள்ளது. ஸ்பானியர்களும், அரேபியர்களும் தமது குழந்தைகளின் பெயர்களில் தந்தைவழியோடு, தாய்வழி பரம்பரைப் பெயர்களையும் சூட்டி வம்ச விருட்சங்களை பெயர்களிலேயே நிலைநிறுத்தினர். எனினும் ஐரோப்பியர்கள் இடைப்பெயராக (Middle name) எதைச் சூட்டுவது என்பதில் ஆரம்பத்தில் சற்றுக் குழம்பியதாகத் தெரிகின்றது. குடும்பக் கிளைப்பெயரையா அல்லது புனிதர்களின் (saint) பெயரையா சூட்டுவது என்று தீர்மானிக்க முடியாமல், பின்னர் ஞானஸ்நானப் பெயரை இடைப்பெயராகச் சூட்டினர். இவ்வாறு முதற்பெயர், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று பெயர் வைக்கும் மரபு அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளுக்கும், ஐரோப்பியர்களின் கொலனிகளுக்கும் பரவியது. எனினும் இக்காலத்தில் பலர் இடைப்பெயரை சுத்தமாகப் பாவிப்பது இல்லை. அத்தோடு பலர் மதம் சார்ந்த இடைப்பெயரைத் தவிர்த்து வேறு புதுமையான முறைகளில் இடைப்பெயர்களைச் சூட்டிக்கொள்கின்றார்கள். பொதுவாக தாயின் கன்னிப்பெயரை (Maiden name) இடைப்பெயராக பாவிக்கும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப்பெயரை ஏற்றுக்கொள்வது வழமை. ஆனாலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாத தற்காலத்தில் கன்னிப்பெயரை தொடர்ந்தும் குடும்பப்பெயராக பாவிப்பதும், அல்லது கன்னிப்பெயரை இடைப்பெயராகப் பாவிப்பதும் உண்டு. உதாரணமாக முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதியின் முழுப்பெயர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்றுள்ளது. இதில் அவரின் கன்னிப்பெயர் இடைப்பெயராக அமைந்துள்ளது. பெயர் வைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்திருக்கவில்லை போலிருக்கின்றது. ஏற்கனவே வேறு எவருக்குமில்லாத பெயராக இருக்கவேண்டும், பிறந்த நேரத்துக்கான நட்சத்திரப்படி பஞ்சாங்கத்தில்/சாதகத்தில் உள்ள எழுத்துக்கள் வரத்தக்கதாக பெயர் இருக்கவேண்டும், ஆங்கிலத்தில் எழுதும்போது எண்சாத்திரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று ஒருவரைச் சுட்டும் தனிப்பெயரான முதற்பெயருக்கே மூளையைக் கசக்குகின்றவர்கள், இடைப்பெயர், குடும்பப்பெயர் என்று இன்னும் பலவற்றை ஆராயவெளிக்கிட்டால் கதிகலங்கித்தான் போயிருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி இந்தப் பெயர்ச்சிக்கலைக் கையாளுகின்றார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் தந்தையாரின் பெயர் அல்லது கணவனின் குடும்பப்பெயராக விளங்கும் கணவனின் தந்தையின் பெயரைக் குடும்பப்பெயராக்க கட்டாயப்படுத்துகின்றார்கள். இதுவே இப்போது தமிழர்களிடையே பொதுவான நடைமுறையாக உள்ளது. எனினும் பிரித்தானியாவில் எதுவிதமான கட்டாயப்படுத்தல்களோ, வழிமுறைகளோ இருப்பதாகத் தெரியவில்லை. நான் எனது தனிப்பெயரை குடும்பப்பெயர் (Surname) ஆகவும், எனது தந்தையின் பெயரை இடைப்பெயராகவும் (Middle name) ஆகவும், பாட்டனாரின் பெயரை முதற்பெயர் (First name) ஆகவும் ஆரம்பத்தில் பாவித்தேன். இது ஒன்றும் திட்டம்போட்டுச் செய்ததில்லை. தமிழர்கள் வலமிருந்து இடமாக தந்தை பெயர், எம்மைச் சுட்டும் தனிப்பெயர் என்று எழுதும் பழக்கத்தால் வந்தது. கூடுதலாக பாட்டனாரின் பெயரும் இருப்பதால் அது முதலாவதாக வந்துவிட்டது! ஆனாலும் இடைப்பெயர் குழப்பமாக இருந்ததால், இடைப்பெயரைக் கைவிட்டு பாட்டனாரினதும் தந்தையாரினதும் பெயர்களையே முதற்பெயராக இப்போது எழுதுகின்றேன். இந்த மூன்றையும் சேர்த்து எழுத நீளமாக வரும் என்பது வேறு ஒரு பிரச்சினை! ஐரோப்பிய நாட்டில் இருப்பதாலும், எனது பெயர் நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கவேண்டும் என்ற சிறிய ஆசை உள்ளதாலும் எனக்கு இடையில் வைத்த பெயரையே எனது குடும்பப்பெயராக்கி உள்ளேன். அதற்காக குடும்பப்பெயரை சுருக்கி/வெட்டி, ஆங்கிலப் பெயர் மாதிரி உச்சரிப்பு வரும்மாதிரிச் செய்ய எல்லாம் விருப்பமில்லை. பிறநாட்டவரின் நாக்கு சுளுக்கிக் கொண்டாலும் இதுவே தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கட்டும்! ஆயினும் முழுப்பெயர் கட்டாயமாகக் கொடுக்கவேண்டி ஏற்படாத இடங்களில் எல்லாம் முதற்பெயராக இருக்கும் பாட்டனாரின் பெயரை பாதியாகக் கத்தரித்து பாவிக்கின்றேன்!. தந்தையாரின் பெயர் எனது சுருக்கிய முதற்பெயரில் இருந்து சுத்தமாக நீங்கிவிட்டது! மேற்கத்தேயரின் வழக்கப்படி பொதுவாக மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் கட்டாயம் சொல்லி மரியாதை செய்யவேண்டும். முதற்பெயரை மிக நெருங்கியவர்கள்தான் அழைப்பதற்குப் பாவிப்பார்கள். நமது முதற்பெயரை (அதையும் நாம் சுருக்கி ஓரசை, ஈரசை என வைத்திருந்தாலும்) சொல்லவே பிறநாட்டவருக்கு நாக்கு சுளுக்கிவிடுகின்றது. இதற்குள் பல அசைகள் (syllables) உள்ள எங்கள் குடும்பப்பெயரை சொல்ல அவர்கள் முயலும்போது நமக்கே கேட்கச் சிரமமாக இருக்கும். எனது ஆஸ்திரிய நண்பர் ஒருவர் என்னுடைய நீண்ட குடும்பப்பெயரை மிகவும் எளிதாகச் சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி கற்றுக்கொண்டாய் எனக்கேட்டபோது, எனது நண்பர் சொன்னபதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர் எனது குடும்பப்பெயரை எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இன்றி எழுதுவதற்கும், சொல்லுவதற்கும் அரைமணி நேரத்துக்கும் மேலாக பயிற்சியில் செலவளித்தாராம். முதற்பெயரையும், குடும்பப்பெயரையும் மரியாதையுடன் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஐரோப்பியர் இப்படியும் கஸ்டப்படுகின்றார்கள். தமிழர்கள் மத்தியில் பெயர் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் வைப்பது அரிதிலும் அரிது. இதனால் அடுத்து வரும் தலைமுறைகளை சேர்ந்த தமிழர்களுக்கு தமது பூர்வீகமே மறந்து போகலாம். பிறகு மரபணுச் சோதனை செய்து தான் அவர்களது வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எனினும், சரியான பெயர் எழுதும் முறை எதுவென்று இலகுவாகச் சொல்லமுடியாது. தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பரம்பரையை அடையாளம் காணும் வகையிலும் ஒரு பெயர் வைக்கும் பொறிமுறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஆகவே, பெயர்க் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும். குறிப்பு: எனது பெயர் மாறிய கதையை எழுதவேண்டுமென்றால் பெயர்களை வெளிப்படுத்தாமல் எழுதுவது இலகு அல்ல! ——
  4. இப்படிக்கு தேங்காய் கடை உரிமையாளர்..!
  5. நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன். "மாஸ்க் எடுத்தாச்சே" அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி "போட்டாச்சு" என்றேன் "வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ" ரொம்ப முக்கியம் என்ற படி "சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்" "என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே" "முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்" "என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர் மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்" "பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும் தெரியாது" "வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை" "கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்" "அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே" "உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது" கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் . கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின் வாசல்படியில் வரிசையாக‌ மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு "முபத்தாறோ,முப்பதேழே என்றேன் " "35 நல்ல கூலா இருக்கிறீயள் போல " "முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே" மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் "கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?" "டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர் எல்லாம் போட்டு கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?" "எல்லாம் உன் மீது கொண்ட அன்பு " " அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்" " முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்" " பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்" முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே? எப்ப பிளைட் ஓடும் எப்ப கொமிட்டி கூடும் எப்ப தேர் கட்டலாம் எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா? oh my dad lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்
  6. பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்" ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும் உண்டு. 💗 வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை. ☹️ தனது வருமானத்தால், தன் குடும்பத்திற்கு, சொந்தமாக... ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று, கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம். 🎰 நல்ல மனிதர்களுக்கு... 🙏"கூரையை... பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏 என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை கைவிட வில்லை என்று.... ஆனந்தப் பட்டு, தன்னிடம் அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த, முதலாளிக்கு... "நடு விரலை காட்டி", 🖕 போய்யா... நீயும், உன் சம்பளமும்... நானும், உன்னை மாதிரி... முதலாளி ஆகி காட்டுறேன் என்று... "சணல் பறக்க" பேசி விட்டு... வந்து விட்டான். 😎 மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள், தொடரும்... யாழ். களத்தின், சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி. 🤣
  7. இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான‌ பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க‌ சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக‌ மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...😄
  8. ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........
  9. நாட்டுப்புற பாடல் & ஆட்டம்.....! 😂
  10. குடும்பப் பெயரை வைத்து ஐபோப்பியர்கள் பல நூற்றாண்டு பின்னோக்கி தமது பரம்பரையைத் தேட முடியும். ஐரோப்பியர்களின் சரித்திரத்தைத் துல்லியமாக எழுத அவர்களின் குடும்பப் பெயர் உதவுகிறது. எனது நண்பன் ஒருவன் 200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு தேவாலையத்தின் உள் முகட்டில் உள்ள ஓவியத்தைக் காட்டி, அது தனது முப்பாட்டன் வரைந்தது என்று கூறினான்.
  11. பரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!
  12. அருகில் கண்ட சொந்தமெல்லாம் ஆரத் தழுவிய காலம் போச்சு மிக அருமையான கவிதை பாராட்டுக்கள் உதயகுமார்
  13. வேலை வெட்டி ஒன்றும் இல்லை விடியல் மட்டும் தெரிய வில்லை......! சூப்பர் கவிதை உதயகுமார்......! 👍
  14. கை குலுக்கும் கலாச்சாரம் போச்சு எமது கலாச்சாரம் எட்டி பார்க்குது.
  15. "அம்மா அவித்த குரக்கன் மா புட்டும்,நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்காய் பொரியலும், அதோடு முட்டை பொரியலும் சேர்த்து சட்டிக்குள்ள பிசைந்து சாப்பிட வேண்டும்".......! வைரமாளிகை........! 😂
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, ஆனி 2013 தமிழர்களின் விவசாயத்திற்கான நீரை நிறுத்தி தமது உல்லாச விடுதிகளுக்கு வழங்கும் பிள்ளையானும் மகிந்தவும் தமிழர்களின் விவசாயத்திற்கும், வாழைச்சேனை காகித ஆலைக்கும் வழங்கப்பட்டுவரும் நீரினை நிறுத்தி, தமது உல்லாசப் பயணிகள் விடுதிக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரான பிள்ளையானும் அவரது எஜமானர்களில் ஒருவருமான மகிந்தவும் வழங்கிவருவதாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசாங்கத்தின் நிதியமைச்சினை தன்னகத்தே வைத்திருக்கும் மகிந்த வாகனேரிக்குளத்திலிருந்து பெறப்படும் நீரினை அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்குவதனை முற்றாகத் தடுத்திருப்பதாகவும் தெரிகிறது. நிதியமைச்சினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் பணிப்புரையின்படி கல்க்குடா மற்றும் பாசிக்குடா ஆகிய பகுதிகளில் பிள்ளையானினாலும், மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினாலும் நடத்தப்படும் உல்லாசப் பயணிகள் விடுதிகளுக்கே இந்த நீர் வழங்கப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், வாழைச்சேனை காகித ஆலைக்கு காவத்த முனைப் பகுதியிலிருந்து வழங்கப்படும் நீரினை முற்றாகத் தடுக்குமாறும் நிதியமைச்சு நீர்ப்பாசனத் திணைக்களத்தினைப் பணித்திருக்கிறது. வாகனேரிக் குளத்திலிருந்து பெறப்படும் நீரினால் சுமார் 8,156 ஏக்கர்கள் நிலத்தில் விவசாயம் செய்வது ஏதுவாக்கப்பட்டிருந்ததோடு, குறைந்தது 6700 குடும்பங்கள் பயனடைந்துவந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் இதே நீர்ப்பாசனத் திட்டத்திலிருந்து காகித ஆலைக்கும் நீர் வழங்கப்பட்டு வந்ததனால் குறைந்தது 700 தமிழ் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். தற்போது மகிந்த அரசினாலும், பிள்ளையானினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் தடையின்மூலம் குறைந்தது 7500 தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த காலத்தில் 1994 இலிருந்து விவசாயத்திற்கும் காகித ஆலைக்கும் தங்குதடையின்றி நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
  17. சின்ன சின்ன ஆசைகள் முடிவில்??? திருடராகப்பார்த்து திருந்தாவிட்டால்?? நன்றி அக்கா ஆக்கத்துக்கும் எச்சரிக்கைக்கும்.
  18. போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்! ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக் கிழித்து எறிவார்! இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே வாங்குவதில்லை..!😄
  19. இயற்கை எழில் கொண்ட மண்ணித்தலை...... தெரிந்து கொள்ள வேண்டிய கிராமம்.......! 👍
  20. அளவோடு பணத்தைத்தேடி ,மகிழ்வோடு , நிம்மதியோடு வாழலாம். ஆனால் அளவின்றி பணம் கிடைத்தால் எல்லாம் தொலைந்து போகும். மகிழ்ச்சி ,நிம்மதி ,உண்மையான உறவு , பாதுகாக்க வேண்டுமென்ற பயம் ,நிம்மதியற்ற உறக்கம்.
  21. "தொலைவும் வாழ்வும் "அழகான தலையங்கம். வெளி நாட்டில் எல்லோரும் தொலைத்து விட்டுத் தான் தேடுகிறார்கள். அன்பை , நேசத்தை ,,உறவை ஆதரவை இழந்து விடட சுதந்திரத்தை . தாய் நாட்டுக்கான ஏக்கத்தை. . பாராட்டுக்கள் .
  22. தொடருங்கள் தொடர்கின்றோம்......! 👍
  23. தொடருங்கள், வைச்சுச் செயய்யவோம்🤣
  24. ஒரு மார்க்கமாகத்தான் இருக்கு!😃 தொடருங்கள். அப்பத்தான் வைச்சுச் செய்யலாம்😂
  25. அவ்வளவுதான்....... சிறித்தம்பி மிஷேலின்ரை வாழ்க்கை அவ்வளவுதான்.. நடு விரலை எங்கையும் யூஸ் பண்ணக்கூடாது சிறித்தம்பி.... சரி தொடருங்கோ வாசிப்பம். 😁
  26. என்னவாயிறுக்கும்???.⁉️ தொடருங்கள் தனி.
  27. தொடருங்கோ தொடருங்கோ மிச்சம் என்ன நடக்குதெண்டு பாப்பம்.😁
  28. இனவாதம்....பிக்கு மாருக்கு வயிறு வளர்க்க உதவுகின்றது! அதை விடுவம்...! மாணிக்க வாசகர் இன்ரென்ஸிவ் வாட்டில எண்டு கேள்வி..! அப்படி என்ன தான் அந்த மெஸ்ஸேஜில இருந்திருக்கும்?😮
  29. சுமே, ஒருவரது மொழி என்பது அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உருவாகின்றது. வெப்ப வலையத்தில் வாழும் எமது மொழியின் முதல் எழுத்தே ‘அ’ வில் தொடங்குகின்ரது. குளிர் காலனிலையில் வாழும் வெள்ளையன் பெரிதாக வாயைத் திறந்து மொழியைப் பேச முடியாது. அதிக வெப்பத்தை அவன் இழக்க வேண்டியிருக்கும். வாயிலுள்ள சுருட்டை வெளியே எடுக்காமலே வின்ஸ்டன் சேர் சிலால் ஒரு பிரசங்கமே நடத்த முடியும். நமது மொழியில் அது கடினமானது. ஒரு கிளி பேசப் பழகுவது போலத் தான், எமது பெயர்களை அவர்கல் பரிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள்...!
  30. தமிழர்கள் நாங்களும் கட்டாயம் குடும்பப் பெயர் ஒன்றைப் பின்பற்றி வந்திருந்தோமாலால் எம் மூதாதையர் பற்றிய தெளிவும் எமக்கு இருந்திருக்கும். எப்படி நாம் எம் வரலாறுகளை எழுதிய மறந்தோமோ அதுபோலவே குடும்பப் பெயர் இல்லாது பரம்பரையை அறிய முடியாதவர்கள் ஆகிவிட்டோம். என் மகள் இதைப் பெரும் குறையாகக் கூறுவாள். நான் என தந்தையின் பெயரை முதற்பெயராகவும் கணவனின் பெயரைக் குடும்பப்பெயராகவும் பயன்படுத்துகிறேன். ஆனால் நீக்கல் எல்லாம் சொல்வதுபோல் பெயர்களை உச்சரிக்க மேலை நாட்டவர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எம்மவர்கள் மற்றவர்களுக்காகவே எதையும் மாற்றிப் பழக்கிவிட்டனர். இது எம்மவரிடையே உள்ள ஒருவித தாளவுச் சிக்கல் என்றே நான் எண்ணுகிறேன்.
  31. இலங்கையை விட்டு வெளிக்கிட்ட நாள் முதலாய்.....எனது முதல் பெயர் அப்பாவின் பெயர் தான்...! அப்பாவின் பெயர் என்னுடன் இருக்க வேண்டும் என்று தானே அவர் ஆசைப்பட்டிருப்பார்? அவர் பெயரையே என் பெயர் ஆக்கி விட்டதால்....எனக்குக் குற்ற உணர்வு எள்ளளவும் வரவேயில்லை! இப்போது ஒரு குடும்பப் பெயர் உண்டு..! அதனால் பிரச்சனைகள் இல்லை! ஆனால் உண்மையான பிரச்சனை....நீளமான எங்களது பெயர்கள் தான்! உதாரணத்துக்கு.....கைலாயபதிவாசன் அல்லது சிவஞானசுந்தரம்..! பாவம்...வெள்ளைக்காரன் என்ன பாடு படுவான்..! உங்கள் பதிவு பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டது! த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன! பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர், சாதீயம் தென்னிந்தியாவில் புகுத்தப் பட்ட பின்னர் தான் இந்தக் குடும்பப் பெயர்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்! ஆதித் தமிழர்கள் குடும்பப் பெயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்! தாழிகளில் புதைப்பதும்,நடுகல் நடுவதும் அவர்களது வழக்கமாக இருந்திருக்க வேண்டும்! பிராமணர்கள் தான்...எரிப்பது, உடன் கட்டையேறுவது போன்ற முறைகளை அறிமுகப் படுத்தினார்கள்! இதன் முக்கிய நோக்கம் தமிழர்களின் வரலாற்றுத் தடையங்களை இல்லாமல் செய்வதேயாகும்..! தங்களுக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றினார்கள்! ஒரு பிராமணப் பெண் உடன் கட்டையேறத் தேவயில்லை! அவள் தலைமயிரை வழித்துக் கொண்டால், அது உடன் கட்டையேறியதற்குச் சமனாகும்! தமிழரின் சில நல்ல வழக்கங்களை நாம் பாராட்டவே வேண்டும்! பிராமணர்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்! எனது தந்தையாரின் தந்தையார் அவர் சின்னக் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து விட்டார்! அவரின் தாயாருக்கு...மறுமணம் அந்தக் காலத்திலேயே செய்து வைக்கப் பட்டது! அதுவும் சமூகப் பெரியவர்களால் முன்னின்று நடத்தி வைக்கப் பட்டது! இதை நான் இங்கே எழுதுவதன் நோக்கமானது, இப்போதய சமூக வழக்கங்களை வைத்து..எமது கலாச்சாரத்தை,நாம் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்! அவை எம்மீது திணிக்கப் பட்டு. இப்போது எமது கலாச்சாரம் என அடையாளப் படுத்தப் படுகின்றன! இதே போலத் தான் எமது மதமான சைவமானது இப்போது இந்து மதமாகத் திணிக்கப் படுகின்றது! இணுவிலில் அனுமாருக்குக் கோயில் என்ற போது என்னால் முதலில் நம்ப முடியவில்லை! அனுமாரை...எப்பவாவது கடவுளாகக் கும்பிட்டநினைவு எனக்கு இல்லை! வெறும் இராம தூதுவனாகத் தான் எனக்குத் தெரியும்..!
  32. நாசா அனுப்பிய "ரோவர்" செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்தது.
  33. இறைவனே இறைவனே God is great
  34. இந்த அனுபவம் யாருக்கும் உண்டா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.