Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    18
    Points
    46808
    Posts
  2. shanthy

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    4644
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/27/21 in all areas

  1. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்
  2. அன்புள்ள அம்மா அறிவது! நான் நல்ல சுகம். அது போல் நீங்களும் நீங்கள் விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம். அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது. அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா. உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும் விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா. அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா. என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா. இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......
  3. 😡 கொலைவெறி என்று சொல்லுவாங்களே.... அது இப்ப எனக்கு வந்திருக்கு. இலையான் கில்லர் மாட்டினா அவ்வளவுதான்
  4. சுதந்திரம் எம் சுவாசம். "சுதந்திரம் விரும்பி சுவாசத்தை நிறுத்திய அத்தனை வீரர்களுக்கும் வந்தனம்". மரத்தினின்று வீழ்ந்த பழுத்த சருகுகள் வேருக்கு உரமாகின்றன மரணித்த வீரனின் பாச நினைவுகள் மனதில் தடுமாறுகின்றன சுதந்திரம் ஒரு பசுஞ்சுனைதான் அதை நோக்கி நாம் கொடும் பாலையில் அல்லவா நடக்கின்றோம் கண்தொடும் தூரம் கானல் நீர் நாம் எதைத் தொலைத்தோம் எங்கே தொலைந்து போனோம் எம் மூதாதையர் வாழ்ந்தார்களே நிறைவாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தார்களே சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா ஓ ....வீரனே ...... திறந்திருக்கும் உன் விழிகளில் இலட்சிய ஒளி மட்டுமல்ல --- களமாடி விழுந்து கிடக்கும் உன் உடல்கூட முட்களையும், கற்களையும் ஓநாய்களையும், நரிகளையும் --- எமக்கு இனம் காட்டி விட்டல்லவா விதையாகியது.......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.........!
  5. (உண்மையில் நான் எடுத்துக்கொண்ட கருவின் கதை முடிவடைந்து விட்டது ஆனால் பயணம் என்று பெயர் வைத்ததால் அந்தப்பயணம் முடிவடையவில்லை தொடர்கின்றேன்) சார்ல் து கோல் விமான நிலையத்தை விமானம் வந்தடைந்துள்ளதாக விமானி அறிவிக்கவும் எனது தொலைபேசியை மீள இயக்குகின்றேன் எனது பெரிய மகளிடமிருந்து குறும் செய்தி ஒன்று வந்திருக்கிறது உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று. அவள் ஐந்து மாத கர்ப்பிணி அவசரமாக அவளை தொலைபேசியில் அழைக்கின்றேன் அப்பா எனக்கு கொரோனா என உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கை தற்போது தான் கிடைத்தது நான் உங்கள் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போனதால் வீட்டில் எல்லோருக்கும் பரிசோதனை செய்யணும் தனிமைப்படுத்தணும் ஆனால் நீங்கள் 10 நாட்களாக எம்முடன் இல்லாததால் உங்களுக்கு தேவையில்லை ஆனால் எங்களுக்கு கொரோனா வந்தாலும் பிரச்சினையில்லை உங்களுக்கு வந்தால்தான் ஆபத்து எனவே வீட்டுக்கு வரவேண்டாம் அப்பா மீண்டும் வேறு எங்காவது செல்லுங்கள் என்கிறாள் அடிப்பாவி ஒரு 2 மணித்தியாலத்துக்கு முன் தெரிந்திருந்தால் அக்காவுடனேயே நின்றிருப்பேனே என்றபடி சரி யேர்மனிக்கு ரிக்கற் பாருங்கள். அந்தக்காவும் அத்தாரும் லீவில் வீட்டில தான் நிற்கிறார்களாம். கடுகதி ரயில் ரிக்கற் எடுத்தபடி அடுத்த பயணம் புறப்படுகின்றேன். அங்கும் எங்கும் செல்லமுடியாத நிலை. வீட்டில் இருந்தபடியே ஒரே சமையலும் சாப்பாடும் பல நாட்கள் கதைக்க கிடைக்காத விடயங்களை பேசியபடியும் நாட்கள் போகின்றன. அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்) அங்கு நின்றபோது வீட்டில் இருந்த எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை மகளுக்கும் 3 அல்லது 4 நாட்கள் உடல் நோ மற்றும் சிறு உபாதைகளுடன் கொரோனா முடிவுக்கு வந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்ந்தது ஏழாவது நாள் எனது மச்சாள் ஒருவர் (அப்பாவின் மூத்த தமைக்கையின் மகள்) பிரான்சில் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் அனைவரது வேண்டுகோளையும் புறந்தள்ளி பிரான்சுக்கு வரவேண்டியதாயிற்று. 5எனக்கு இதுவரை கொரோனா தொற்று இல்லை) முற்றும்
  6. நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும். நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.
  7. இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  8. குசும்பு கூடிப்போச்சு .......வளர்ப்புப் பிராணிகள்.....! 😂
  9. இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄
  10. மனைவி மீது அளவில்லாத பாசம்.. பிள்ளைகள் மீது அதை விட பாசம்... பேரப்பிள்ளைகள் மீது நிகரில்லா பாசம்... ஆனால் முதிர்ந்த வயதிலும் காலில் கல்லடி பட்டால் அம்மா என்றுதானே அலறுகின்றோம்.
  11. அன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.
  12. வீட்டுக்கு போய் செத்தான் நாய்ச்சேகர்.🤣
  13. இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. உண்மை உண்மை
  14. கிளி குருவி எல்லாம்கூட கேர்ள் பிரண்டுடன் சுத்துது.......ம்......! 😁
  15. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2014 கருணாவின் உதவியுடன் சிங்களமயமாகும் கஞ்சிகுடிச்சியாறும் தங்கவேலாயுதபுறமும் புலிகளுடனான யுத்தத்தில் 2007 இன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் இரு புராதன தமிழ்க் கிராமங்களான கஞ்சிகுடிச்சியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளை சிங்கள ராணுவம் முற்றாக ஆக்கிரமித்திருக்கிறது. தற்போது இவ்விரு கிராமங்களையும் படிப்படியாக சிங்களமயமாக்கும் கைங்கரியத்தில் அரசும் ராணுவமும் ஈடுபட்டுவருகின்றன என்று தெரியவருகிறது. கடந்து 3 நாட்களுக்கு முன்னர் இப்பகுதிக்கும் விஜயம் செய்த பெளத்த பிக்கு ஒருவரும் இரு கருணா குழு முக்கியஸ்த்தர்களும் இவ்விரு கிராமங்களுக்கிடையேயும் விகாரை ஒன்றைக் கட்டுவதற்கான பணிகளை இன்னும் ஒரு மாதத்தில் ஆரம்பிக்கப்போவதாகவும், அப்பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விரு கிராமங்களினது இடையில் வரும் சந்தியொன்றில் மகிந்த ராஜபக்ஷவின் பாரிய உருவப் படம் ஒன்றினை கட்டிய கருணா குழு முக்கியஸ்த்தரும் பிக்குவும், "மகிந்தவின் சிந்தனையையும், செயற்பாடுகளையும் இக்கிராமம் மக்கள் வரவேற்கின்றனர்" என்றும் பதாதைகளையும் தொங்கவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. கட்டப்பட்டுவரும் கஞ்சிக்குடியாறு பெளத்த விகாரையின் அமைவிடம் கூகிள் வரைபடத்தின்படி. https://www.google.com/maps/@7.0447405,81.7732417,196m/data=!3m1!1e3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மகிந்தவின் கட்சிக்குத் தாவிய பொடியப்பு பியசேன எனும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் இக்கிராமங்களில் மகிந்தவுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு தமிழர்கள் சிலரை பணத்திற்காக வாங்கியிருப்பதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். தங்கவேலாயுதபுரம் கிராம அபிவிருத்திச் சபையின் தலைவரை அகற்றி மகிந்தவின் விசுவாசி ஒருவரை பதவியில் அமர்த்தும் கைங்கரியத்தில் பியசேன மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவருகிறது. இவ்விரு கிராமங்களிலும் சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்துவரும்போதும்கூட, சுமார் 200 இற்கும் குறைவான குடும்பங்களே மீள்குடியேற்றப்பட்டு வாழ்வதாகத் தெரிகிறது. மீதிக்குடும்பங்கள் அடிப்படை வசதிகளேதும் அற்று அநாதரவாக அரசாலும், அரசுசாரா நிறுவனங்களாலும் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் தீவிரவாத தடுப்புப் பிரிவான விசேட அதிரடிப்படை இக்கிராமங்களில் ஆடிய நரவேட்டையினயடுத்து தங்கவேலாயுதபுரத்திலிருந்து 435 குடும்பங்களும், கஞ்சிகுடிச்சியாறு பகுதியில் இருந்து 332 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு உயிர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
  16. இலங்கையின் சுவையான சுசீயம் | சுசியம் செய்வது எப்படி ?
  17. வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂
  18. இலங்கையின் சுவையான மட்டன் மிதிவெடி......! 👍 இலங்கையின் சுவையான மீன் மிதிவெடி......! 👍
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 "இனிமேல் எந்த விதமான கிளர்ச்சிகள் நடந்தாலும் நீங்கள் கொல்லப்படுவீர்கள்" முன்னாள்ப் போராளிகளை எச்சரித்த ராணுவப் புல்நாய்வுத்துறையும் கருணா குழுவும் கடந்த 5 நாட்களாக கருணா குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலவிடங்களிலும் முன்னாள்ப் போராளிகளைத் தேடி கைதுசெய்தல் மற்றும் விசாரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இனக்கொலையின் நினைவுநாட்கள் இன்னும் ஒருசில தினங்களில் அனுஷ்ட்டிக்கப்படவிருக்கும் நிலையில் முன்னாள்ப் போராளிகளையும் தென் தமிழீழ மக்களையும் அச்சமூட்டும் நடவடிக்கைகளை ராணுவப் புலநாய்வுத்துறை கருணா குழுவின் உதவியோடு ஆரம்பித்திருக்கிறது. ராணுவமும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களால் வழிநடத்தப்படும் கருணா துணைக் கொலைப்படையினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையில் படுவான்கரையிலும், அதனைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் வாழ்ந்துவரும் முன்னாளப் போராளிகள் அனைவரும் அருகிலுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் முகாம்களுக்கு வருமாறு பணிக்கப்பட்டிருந்தனர். முகாம்களுக்கு இழுத்துவரப்பட்ட முன்னாள்ப் போராளிகளை மிரட்டிய புலநாய்வுத்துறை "இனிமேல் ஏதாவது கிளர்ச்சி நடவடிக்கைகள் அல்லது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் கொல்லப்படுவீர்கள்" என்று மிரட்டியதோடு ராணுவ முகாம்களில் துப்புரவாக்கும் பணி போன்றவற்றிற்கு கட்டாயமாக வரவேண்டும் என்று விண்ணப்பப் படிவங்களைத் திணித்து பலவந்தமாக அவர்களின் ஒப்புதலையும் பெற்றுக்கொண்டதாகத் தெரியவருகிறது. இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின்பொழுது ராணுவத்துடன் பவனிவந்த கருணா குழு, போராளிகளின் வீடுகளுக்குள் நுழைந்து ராணுவத்தில் சேருமாறும் அப்படியில்லையென்றால் உங்களைக் கவனிப்போம் என்று கூறியும் மிரட்டியதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை மற்றும் படுவான்கரைப் பகுதிகளிலேயே இந்தக் கடுமையான அச்சமூட்டும் சுற்றிவளைப்புத் தேடுதல்களை கருணா குழுவினருடன் சேர்ந்து ராணுவப் புலநாய்வுத்துறை செய்துவருகிறது. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, வைகாசி 2014 குடும்பிமலை (சிங்களத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்டபின் தொப்பிகல), பூலாக்காடு, கூழாவடி, திகிலவெட்டை, பெண்டுகல்ச்சேனை, கோரளைப்பற்று தெற்கு, கதிரவெளி, வாகரை, பால்ச்சேனை, வம்மிவெட்டுவான், பனிச்சங்கேணி, வாகரை மத்தி மற்றும் கோரளைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளிலேயே இந்தத் தேடுதலும் சுற்றிவளைப்பும் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. கோரளைப்பற்று தெற்கின் பகுதிகளுக்குள் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட ராணுவத்தினரும், துணைக்குழுவினரும் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்று சிங்களத்தில் அச்சிடப்பட்டிருந்த படிவங்களில் போராளிகளின் கையொப்பங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. வீட்டு உறுப்பினர்கள், தற்போது செய்யும் வேலை, போய்வரும் இடங்கள், வழமையான பயணப் பாதை ஆகிய விடயங்களை அவர்கள் பதிந்துகொண்டு சென்றதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை பிரதேசத்திலிருக்கும் முன்னாள்ப் போராளிகளில் குறைந்தது 250 பேரின் வீடுகளுக்குச் சென்று அவர்களை தமது முகாம்களுக்கு வருமாறு ராணுவமும் துணைக்குழுவும் பணித்தபோதும்கூட பனிச்சங்கேணி முகாமிற்கு வெறும் 26 முன்னாள்ப் போராளிகளே சமூகமளித்திருந்ததாகத் தெரியவருகிறது. சுற்றிவளைப்புகளின் பொழுது அனைத்து முன்னாள்ப் போராளிகளையும் கைதுசெய்த ராணுவம், ஒரேவிதமான கேள்விகளை அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. கிராமப்புறத் தலைவர்கள் ராணுவத்தின் புதிய பதியும் நடவடிக்கை பற்றிக் கேட்டபோது, முன்னாள்ப் போராளிகளுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவே விபரங்களைச் சேகரிப்பதாகக் கூறியிருக்கிறது.
  20. கவலைப்படாதீர்கள் சகோதரி......எல்லாம் கடந்து போகும்..... பொறுப்பான பிள்ளைகள் பாசமுள்ள தாய் வேறென்ன வேண்டும்.....மனசைத் தளர விடாதீர்கள்......! 👍
  21. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 12, சித்திரை 2014 துணைராணுவக் குழுவினராலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுவரும் முன்னாள்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள். ராணுவப் புலநாய்வுத்துறையினரும், அவர்களின் எடுபிடிகளான துணைராணுவக் குழுவினரும் மட்டக்களப்பில் முன்னாள்ப் போராளிகளையும் சாதாரண பொதுமக்களையும் தொடர்ச்சியாக அச்சுருத்திவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மையில்க் கூட வவுனியாவில் வசித்துவரும் முன்னாள்ப் போராளிகள் குடும்பம் ஒன்றினை கைதுசெய்து அழைத்துச் சென்ற துணைராணுவக் குழுவினரும், புலநாய்வுத்துறையினரும் விசாரணைகளின் பின்னர் பூசா தடைமுகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளனர். கருணாவின் பிரதேசவாதப் பிரிவிற்கு முன்னரே இயக்கத்தைவிட்டு விலகிய இவர்கள் இருவரும் திருமணம் முடித்து பொதுவாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. வவுனியாவில் சாதாரண தொழில்களை செய்து தமது வாழ்க்கையினை ஓட்டிக்கொண்டிருந்த இந்த முன்னாள்ப் போராளித் தம்பதிகளே பிள்ளைகளுடன் கருணா துணைராணுவக் குழுவினராலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினராலும் கைதுசெய்யப்பட்டு பூசாவில் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். அடைத்துவைக்கப்பட்டிருக்கும் இவர்களின் மூன்று குழந்தைகளும் மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இருக்கும் அவர்களின் பேத்தியாரின் வீட்டில் விடப்பட்டிருக்கிறார்கள். வவுனியாவில் கைதுசெய்யப்பட்டு பூசாவில் அடைக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகளின் விபரங்கள் : லோகனாதன் வீரக்குட்டி, 41, ஆயித்தியமலை, மட்டக்களப்பு. மகேஸ்வரி கிருஷ்ணபிள்ளை 30, சந்திவெளி, மட்டக்களப்பு. இவர்களுடன் கைதுசெய்யப்பட்ட இன்னொரு முன்னாள்ப் போராளியின் விபரம் : ரவிச்சந்திரன் கிருஷ்ணபிள்ளை 36, சந்திவெளி, மட்டக்களப்பு. இவர் 2001 இல் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் 2004 இல் விடுதலையாகியிருந்தவர் என்பதும், தற்போது சந்திவெளியில் வாழ்ந்துகொண்டிருந்தவேளை கருணா குழுவினராலும் புலநாய்வுத்துறையினராலும் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தென் தமிழீழத்தின் கொக்கட்டிச்சோலைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அனைவரையும் கூட்டம் ஒன்றிற்கு வருமாறு கருணா துணைராணுவக் கொலைக் குழுவும், ராணுவப் புலநாய்வுத்துறையினரும் அண்மையில் பணித்திருந்தனர். இம்மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், "புலம்பெயர் தமிழரின் கதைகளையோ, அவர்களது கருத்துக்களையோ நீங்கள் கேட்கவோ ஏற்றுக்கொள்ளவோ கூடாது. மேற்குலகத்தினர் புலம்பெயர் தமிழர்கள் மூலம் உங்களுக்கு ஆயுதங்களை வழங்கி மீண்டும் ஒரு போருக்குள் இழுத்துவிடப் பார்க்கிறார்கள். அவர்களின் திட்டத்திற்காக வீணே பலியாகாதீர்கள்" என்று கருணாவினாலும், ராணுவப் புலநாய்வுத்துறையினராலும் தமக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டது என்று இக்கூட்டத்திற்கு வலிந்து கொண்டுவரப்பட்ட முன்னாள்ப் போராளிகள் தெரிவித்தனர்.
  22. வாழ்க்கை என்பதே ஒரு தொடர் போராட்டம்தான். அதிலும் குடும்பத்தில் மாறி மாறி ஓயாமல் வரும் சவால்களுக்கிடையில் கொரோனாவும் வந்து ஆட்டிப்படைக்கும்போது சோர்வும் பயமும் வரத்தான் செய்யும். ஆனால் எத்தகைய இடர்களையும் தாண்டி எதிர்நீச்சல் போடும் மன தைரியத்தை மட்டும் இழக்கக்கூடாது.
  23. யாரோ தெரிந்தவருக்கு கொரோனா என்றாலே துடித்துப் போகிறோம். அதே எமது வீட்டுக்குள் அதுவும் பிள்ளைகளுக்கென்றால் எப்படி தாங்குவது.
  24. காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் எல்லாம் தீரும் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.
  25. கனமான பதிவு, கவலைப்படாதீர்கள் இதுவும் கடந்து போய் விரைவில் ஒன்றாக இருப்பீர்கள், கொரோணாவால் எத்தனை பல பாதிப்புக்கள்.
  26. டேய் குமாரசாமி இனித்தான்ரா நீ வெரி கெயார் புல்லாய் இருக்க வேணும்..😎
  27. வெள்ளிக்கிழமையானபடியால் அடிச்சிட்டு குப்புற படுக்கிறதோ தெரியாது.
  28. கனத்த மனத்துடன் படித்து முடித்தேன். என்ன சொல்லி தேற்றுவது? தாயின் ஏக்கத்தை மனஉணர்வுகளை வலிகளை எவராலும் ஆற்ற முடியாது. இருந்தும் திடமாக இருங்கள் எம்மால் தாங்கக் கூடிய துன்பங்களைத்தான் இறைவன் எமக்குத் தருவாா் என்ற இறை நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் பிள்ளைகள் இருவரும் உங்கள் இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். துணிவுடன் இருங்கள். இறைவன் என்றும் உங்கள் பக்கமிருந்து பாதுகாப்பார்.
  29. இடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.
  30. மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன், அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்.... அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்... வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐 நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது, எழுதப் படாத, சட்டம் என்றாலும்... மிஷேல் வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘 அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது... தனது பழைய முதலாளிக்கு, "தினாவெட்டாக"... சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்... 🤨 தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... தன்னுடைய, நான்கு நண்பர்களை சேர்த்து... சிறிய 🛠️ தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜 இடைவேளை... !!! ??? இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில், மீண்டும் தொடரும்.... 🤣
  31. நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்
  32. மாஸ்க் எடுத்தாச்சு புத்தன் அண்ணா
  33. அவர் நிறைய நல்லவர்,நல்ல கவிதை உதயகுமார்
  34. எனக்கு இன்னுமொரு பெயர் இருக்கு ஆனால் சொல்ல மாட்டன். இது பெரிய பிரச்சினை தான். ஆனால் தமிழர் மட்டும் வித்தியாசமாக இருந்திட்டு போகட்டுமன்
  35. போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வலி மிகுந்த கவிதை
  36. வான்கோழிக்கும் வானளாவிய கோவம் வரும்.......! 😂
  37. எனது மனதை மிகவும் பாதித்த கவிதைகளில் இதுவும் ஒன்று...! சுதந்திரம் என்பது இயற்கையானது! கூட்டிலிருக்கும் குருவி...இறக்கைகள் முளைத்ததும்....ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருப்பதில்லை..! முட்டையிலிருந்து வெளி வந்த முதலைக் குட்டிகளும், ஆமைக் குஞ்சுகளும்....உடனேயே நீரை நோக்கியே ஓடுகின்றன! ஒரு நாயைக் கட்டி விட்டுப் பாருங்கள்...! தன்னை யாராவது அவிழ்த்து விடும் வரை...அது பாடிக்கொண்டேயிருக்கும்! அதே போலத் தான்...எமது போராட்டமும்...! ஏதோ ஒரு வடிவத்தில்...தொடர்ந்து கொண்டேயிருக்கும்...! இறுதி முடிவு......அதன் மரணமாக இருந்தாலும் கூட..!
  38. மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....! பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப் பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..! எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..! இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...! உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!
  39. மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது.
  40. அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்
  41. எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.
  42. எனது முறை வந்ததும் நெற்றியில் காய்ச்சல் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் பயணத்தை தொடரலாம் ஆனால் பயணம் முடியும்வரை எந்த காரணத்துக்காகவும் Mask யை களட்டக்கூடாது என்கிறார்கள் விமானத்துக்குள் வந்ததும் எனது இருப்பிடத்தை தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கவில்லை காரணம் எனது சீற்றுக்கு பக்கத்திலோ முன்னுக்கோ பின்னுக்கோ எவருமில்லை (ஒன்று விட்டு ஒரு சீற்றே ஒதுக்கப்பட்டிருந்தது.) விமானம் பறக்கத்தொடங்க சாப்பாடும் தேனீரும் தருகிறார்கள் எல்லோரும் Mask யை களட்டியதால் நானும் சாப்பிட்டு தேனீர் குடிக்க ஒரு மணித்தியாலப்பயணம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கவும் சரியாக இருக்கிறது. அடுத்த பரிசோதனைகளை சந்திக்கணுமே என மனம் சொல்கிறது 14 நாள் உள்ளே போட்டாலும் பின் வாங்குவதில்லை என பாசம் தள்ளுகிறது விமானத்தால் வெளியில் வந்து வெளியே செல்லும் பாதையில் நடக்கத்தொடங்குகின்றேன் வெளியே வரும்வரை எந்த பரிசோதனையும் இல்லை. மூத்த மருமகன் சொன்னது போல் வந்து நிற்கிறார் (அதிசயமாக பார்க்கிறார்) நான் முடிவெடுத்திட்டா அப்புறம் நானே எனது சொல்லை கேட்பதில்லை என பஞ்ச் டயலாக்கை விட்டு விட்டு அம்மாட்ட போ என்கிறேன். நான் வருவதாக அக்காவிடம் (அவரின் அம்மா) சொல்லவேண்டாம் ஆனால் நீ மத்தியானம் சாப்பிட வருவதாய் சொல்லி சமைக்கச்சொல் என்று சொல்லியிருந்தேன்) போய்க்கொண்டிருக்கும்போதே அக்காவிடமிருந்து தொலைபேசி வருகிறது என்ன மகன் நேரம் பின்னேரம் 3 ஆகுது இன்னும் சாப்பிடவரவில்லையே என? இதோ 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்றபடி சில நிமிடங்களில் கதவை தட்டுகிறோம். மருமகன் விலத்தி என்னை தெரியுமாப்போல் விட தம்பி என ஆசையாக ஓடிவந்து முத்தம் தந்து வரவேற்கிறார் அவர் எதிர்பார்க்கவே இல்லை அதிலும் இன்றைய சூழ்நிலையில் எப்படி சாத்தியம் என ??? குளித்து சாப்பிட்டு முடிய மருமகன் கடை திறக்க புறப்படுகிறார். நாங்கள் பேசத்தொடங்குகுின்றோம் ஏனப்பு இத்தனை சிரமத்திலும் வரணுமா? ஆமாக்கா இப்பத்தான் வரணும் சாப்பிட என்ன வேணும் எங்க எங்க போகணும்? இது அக்கா இன்றிலிருந்து நீங்க சமைக்கவேண்டாம் முடிந்தவரை வெளியில் உணவகங்களில் சாப்பிடலாம் மற்றும்படி உங்களுக்கு எங்கெல்லாம் போகணுமோ சொல்லுங்க அங்கெல்லாம் போகலாம் எனக்கு எந்த உறவினர் வீட்டுக்கோ பார்க்கவேண்டிய இடமோ என்று ஏதும் இல்லை என்னை யாரும் பார்க்க விரும்பினால் நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் அவர்கள் இங்கு வந்து என்னை சந்திக்கட்டும். அதன்படி காலையில் எழும்பி தேனீர் காலைச்சாப்பாடு முடிய கால் போனபோக்கில் நடந்தோம் மதியம் முடிந்தவரை வெளியில் சாப்பிட்டோம் (அக்கா கோயில் விரதம் என்ற படியால் அதிகம் வெளியில் சாப்பிட முடியவில்லை) வேறு எவரிடமும் கார் திறப்பு கொடுக்காதவர் நான் போனதிலிருந்து திரும்பும்வரை என்னிடமே காரை தந்தார். அவருக்கு போக விரும்பிய அவருக்கு பிடித்தவர்கள் வீடுகளுக்கெல்லாம் போனோம். தம்பி வந்திருக்கிறார் தம்பி வந்திருக்கிறார் என்று அறிமுகப்படுத்தும் போதே என் அக்காவின் முகத்தில் பேரானந்தத்தை கண்டேன். அவரது நண்பர்களும் இன்றைய நிலையிலும் உங்களை தேடி வரும் தம்பி. அக்கா தம்பி பாசத்துக்கு எடுத்துக்காட்டு என்று சந்தோசப்பட்டார்கள். பின்னேரம் என்றதும் நாலைந்து பந்துகளுடன் அக்கா மைதானத்துக்கு வந்து விடுவார் இருவரும் சேர்ந்து பந்தை காலால் அடித்து மேலே போட்டு பிடித்து என 2 மணித்தியாலங்கள் விளையாடுவோம் அப்பொழுதும் நான் களைப்பதை பார்த்தே அவர் இன்றைக்கு காணும் என நிறுத்துவார் இன்னொன்றையும் அடிக்கடி சொல்வார் தம்பி நீ சின்னனாக இருக்கும்போது உன்னுடன் விளையாடி இருக்கமாட்டன் அது தான் காலம் எம்மை மீண்டும் ஒன்றாக விளையாட வைத்திருக்கு என்பார் (அவருக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம்) விளையாடி முடிய யோகா செய்வார் ( அவர் யோகா ஆசிரியர்) எனக்கும் சில பயிற்சிகள் சொல்லித்தருவார். பொழுது பட வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டு விட்டு இரவிரவாக நித்திரை கொள்ளும்வரை அந்தக்கால கதைகள் உட்பட பேசிக்கொண்டே தூங்கிவிடுவோம் தம்பி கதைத்துக்கொண்டிருக்கும்போதே நீ தூங்கி விடுவாய் எனக்கு அந்த தூக்கம் தானே பிரச்சினை என்பார் அது தான் எனது சொத்து அதில் கொஞ்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன் இப்படியே 10 நாட்கள் ஓடி விட்டன புறப்படும் நாளும் வந்தது. புறப்படும் போது கட்டி அணைத்து நன்றி தம்பி என்றார் எதுக்கு தம்பிக்கு நன்றி அக்கா என்றேன் இந்த 10 நாட்களும் என்னுள் ஒரு அபாரபலம் இருந்ததை உணர்ந்தேன் என்றார் எனக்கும் போக விருப்பமில்லை அக்கா எங்கள் பெற்றோர் இவ்வளவு இடைவெளி விடாது எம்மை பெற்றிருந்தால் நானும் பென்சனில் இன்னும் கொஞ்ச நாள் உங்களுடன் நின்றிருக்கலாம் வேலை அழைக்கிறது போய்த்தானே ஆகணும் என்றபடி புறப்படத்தொடங்கினோம். அப்பொழுதும் மனம் சொல்கிறது என்னை .இங்கே விமானம் ஏற விடக்கூடாது. ஒரு மாதம் யாரும் எங்கேயும் நகரமுடியாது என்று என்னை திருப்பி விடணும் மீண்டு.ம் வந்து அக்காவுடன் நிற்கணும் என. காரில் போய்க்கொண்டிருக்கும்போது மருமகன் கேட்கிறான் இன்றைய சூழ்நிலையில் இங்க வரப்போகும் முடிவு பற்றி கனக்க யோசித்திருப்பீர்கள் ஆனாலும் வந்திருக்கிறீர்கள் இந்த முடிவை நீங்க எடுப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்குமென்று எனது உள் மனசு சொல்லுது மாமா தெரிஞ்சு கொள்ளலாமா என்று கேட்டான் கோவிட் 19 தொடங்கி அது மெல்ல மெல்ல ஆட்களை தனிமைப்படுத்த தொடங்கிய போது தனிமை அக்காவை வாட்டி இருக்கணும் ஒரு நாள் தொலைபேசியில் சொன்னார் தம்பி இதென்ன வாழ்க்கை செத்திடலாம் போலிருக்கடா என்று. அன்றைக்கு ரிக்கற் போட்டேன் ஏனெனில் செத்த பின்னர் வந்து ஓலமிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. அதற்காகத்தான் வந்தேன் என்றேன் அவனது கண்கள் கலங்கியிருந்தன. விமான நிலையத்தில் எந்த பிரச்சினையுமில்லை. பயணம் தொடர்கிறது....
  43. இது பலருக்கு உள்ள பிரச்சனை, கண்டி சிங்களவர்கள் தங்கள் பெயரை பரம்பரையுடன் இணைத்துதான் பதிவார்கள், எங்களுக்கு சொந்த இடமே இல்லாமல் போய்விட்டது இனி பெயரை வைத்து என்ன செய்ய, இந்த பரம்பரை பெயரும் ஒரு சாதி முறையைதான் இந்தியா & சிங்களவர்களில் உருவாக்கியுள்ளது
  44. பாத்தியளோ கவிதையை நீங்கள் கேட்கேல்ல எண்டது உண்மையாகப் போயிட்டு.😀
  45. காலமாற்றத்திற்கு ஏற்ற கதை. முருகனுடன் சேர்த்து நீங்கள் புலம்புவது இரசிக்கக்கூடியதாய் இருக்கின்றது.
  46. புத்தா முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.எங்க ஆளைத் காணேல்லயெண்டு நினைச்சேன். முருகனை மறக்காமல் திரும்ப வந்திட்டீங்கள். யேர்மனியில் நிறம் பொருந்த மாஸ்க் போடேலாது. 😷
  47. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 13, மார்ச் 2004 தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா கையாடினார், தண்டனைக்குப் பயந்தே இயக்கத்திலிருந்து பிரியும் நிலைப்பாட்டினை எடுத்தார் - கரிகாலன் கிழக்குமாகாண அரசியல்த்துறைப் பிரமுகரும், கருணாவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியிருந்த கரிகாலன் வன்னியிலிருந்து அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தினார் என்றும், இந்த நிதிமுறைகேடுகள் பற்றி தலைவர் அறிந்தபோது, அதுபற்றிப் பேசுவதற்கு வன்னிக்குக் கருணாவை அழைத்தபோது தனக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்றஞ்சிய கருணா தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே தாந்தோன்றித்தனமாக பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்தார் என்று தெரிவித்தார். கரிகாலன் மேலும் கூறுகையில் தனது ராணுவ செயற்பாட்டினால் தமிழ்மக்கள் மத்தியிலும், தலைவரின் மனதிலும் இடம்பிடித்த கருணா, சிறிது சிறிதாக தனது சொந்த நலன்கள்பற்றியும், தனது ஆசைகள் பற்றியும் அதிகம் அக்கறை காட்டத்தொடங்கினார். இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக இயக்கத்தின் நிதியினை தனது சொந்த விருப்புகளுக்காகக் கருணா கையாடியபோது தேசியத் தலைமையுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அவர் வந்தார். கருணா தலைவரினால் பெரிதும் நம்பப்பட்டார் என்றும், அவரை மிக உயரிய ஸ்த்தானத்தில் தலைவர் வைத்திருந்தார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். "மிக அண்மைய நாட்களிலேயே கருணா தேசியத் தலைமை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகப் பேசி வந்தார். இயக்கத்திற்கு எதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட ஆரம்பித்த போதே அவர் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்". " எங்களை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, கிழக்கின் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களைக் கருணா செய்யத் தொடங்கினார். நிதித்துறை, உணவுத்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளை தன்னிடம் எடுத்துக்கொண்ட கருணா, தனக்கு விசுவாசமானவர்களை முக்கிய ராணுவப் பொறுப்புக்களில் அமர்த்திக்கொண்டார்". "இந்தக் காலகட்டத்தில் கருணா பெருமளவு நிதியினைக் கையாடுவதை போராளியொருவர் அறிந்துகொண்டார். தனது நிதிக்கையாடல்பற்றி அறிந்துகொண்ட போராளியை கருணா கொல்லமுயன்றபோது, அப்போராளி சமயோசிதமாகத் தப்பி வன்னியை வந்தடைந்து கருணாவின் அனைத்து நிதிக் கையாடல்களையும் தேசியத் தலைமையிடம் அறியத் தந்தார். கருணாவின் நிதிக்கையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்ட அவரது பிரத்தியேக வாகனச் சாரதியும் ஒரு வாரத்திலேயே அவரால் கொல்லப்பட்டார். தனது சாரதி காய்ச்சலால் இறந்துவிட்டதாகக் கருணா கூறியபோதும், அவர் கருணாவினால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதை தளபதிகள் அறிந்துகொண்டார்கள். தனது நிதிக்கையாடல்கள்பற்றி தமிழ்மக்கள் அறிந்துகொண்டபோது கருணா வெட்கித்துப்போனார். ". "கருணாவின் நிதிக்கையாடல்கள், கொலைகள் பற்றி தேசியத் தலைவர் அறிந்துகொண்டபோது, இதுபற்றிப் பேசுவதற்காக அவரை வன்னிக்கு அழைத்தார். தனது முறைகேடுகளுக்காகவும், கொலைகளுக்காகவும் தான் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா, வன்னிக்குச் செல்ல மறுத்ததோடு, தன் சார்பாக ஒரு பிரதிநிதியை வன்னிக்கு அனுப்பிவைத்தார்". "இதே காலத்தில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு அனுப்பிவைத்த கருணா, இந்தவிடயம் தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றதாக மற்றைய தளபதிகளை நம்பவைத்தார். ஆனால், இந்த வழியனுப்பலின் பின்புலத்தில் கருணா மிகவும் திட்டமிட்ட வகையிலேயே தனது பிரிந்துசேலும் துரோகத்தனத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகிறது". "கிழக்கு மாகாண மக்களுக்கிருந்த ஒரே கேள்வியென்னவென்றால், தலைவருக்கு மிக நெருங்கிய தளபதியாகவிருந்த கருணாவினால், அவர் இன்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை ஏன் நேரடியாக தலைவருடன் பேசமுடியாமற்போனது என்பதுதான்". "தனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படக் காத்திருந்த சக்திகளுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கருணாவின் தொடர்பின் மூலம் இயக்கத்தில், கருணாவின் கீழிருந்த ராணுவப் பலம்பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும், இயக்கத்தில் கருணாவின் பங்குபற்றியும் இச்சக்திகள் அறிந்துகொண்டன. கருணாவின் சுயநலத்தையும், அவரது இச்சைகளையும் மூலதனமாகக் கொண்டு, இயக்கத்திலிருந்து இவரைப் பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் இச்சக்திகள் இறங்கின". "பெருமளவு போராளிகளையும் ஆயுதங்களையும் பராமரிப்பதற்கு பெருமளவு பணமும் வளங்களும் தேவை. ஆகவே கருணா தலைமைக்கெதிராக களம் இறங்குவதற்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கக் காத்திருக்கும் சக்திகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. கிழக்கில் கருணாவோடு ராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு சிறிதுநேரத்திலேயே நகர்த்திச் செல்வதற்கு இலங்கை ராணுவம் உதவிவருகிறது" என்றும் அவர் தொடர்ந்து விவரித்தார். .
  48. துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 11, மார்ச் 2004 புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையில் நோர்வே தலையிடப்போவதில்லை - எரிக் சொஹெயிம் கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளரிடம் பேசிய சமாதானத் தூதுவர் சொல்ஹெயிம், புலிகளின் உள்வீட்டு விவகாரத்தில் நோர்வே தலையிடாது என்று கூறினார். "பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பிணக்கில் நாம் தலையிடாது இருந்தது போன்றே, புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையிலான பிரச்சினையிலும் நாம் தலையிட விரும்பவில்லை. முதலாவது விடயம் தெற்கின் உள்வீட்டுப் பிரச்சினைபோல, இரண்டாவது விடயம் வடகிழக்கின் உள்வீட்டுப் பிரச்சினை" என்று அவர் கூறினார். தமிழ்ச்செல்வனையும், தளபதி ரமேஷ், கரிகாலன், கெளசல்யன் ஆகியோரையும் சந்தித்துப் பேசிய சொல்ஹெயிம், " நாம் மூன்று விடயங்கள் பற்றிப் பேசினோம். முதலாவது கருணா பிரச்சினை, இரண்டாவது வடக்குக் கிழக்கு மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான சர்வதேச உதவி, மூன்றாவது தேர்தல்கள்" என்று அவர் மேலும் கூறினார். நீங்கள் கருணாவைச் சந்திப்பீர்களா என்று கேட்டபோது, "அவர்களின் உள்வீட்டு விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்று சொல்ஹெயிம் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.