Leaderboard
-
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்7Points15791Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்7Points34974Posts -
புரட்சிகர தமிழ்தேசியன்
கருத்துக்கள உறவுகள்7Points16477Posts -
Kavallur Kanmani
கருத்துக்கள உறவுகள்6Points1061Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/09/21 in Posts
-
சமூகமும் ஓட்டமும்
6 pointsசிறு வயதில் கனக்க கதைகள் படித்திருப்போம் கேட்டிருப்போம் ஏன் கனக்க அனுபவங்களை கதைகளாக நாமே கண்டிருப்போம் அவை சொல்லப்படும் விதமும் எம்மை வந்து சேர்ந்த விதமும் மாறுபடுவது போல கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும் ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின் அனுகூலமும் மாறுவதில்லை அதேநேரம் அதை நாம் கடந்து செல்வதும் கூட அல்லது கண்டும் காணதுபோவதும் போவது போல பாசாங்கு செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்? சின்ன சின்னக்கதைக்குள் திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து கிடக்கின்றன அவரவரது அனுபவங்களுக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுபடுமே அன்றைய சமூக கால நேர நிலைக்கேற்ப மாறுபடுமே தவிர புதிதாக எதையும் கண்டு பிடிப்பதில்லை என்பதைப்போன்றதே கதையும் கருவும் ஏன் இசையும் கூட. இதில் சில விடயங்களை நாம் தவிர்த்தே செல்கின்றோம் தவிர்க்கின்றோம் என்பதற்காக அவை எம்மை விட்டு வைப்பதில்லை நாமுண்டு எம் வாழ்வுண்டு என்று நாம் விலகிச்சென்றாலும் இந்த சமூகமும் அதன் கட்டுமானங்களும் எம்மை தங்களுக்குள் இழுக்காமல் விடுவதில்லை பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலக ஒழுங்கில்..... அப்படியொரு கதையை சொல்ல விளைகின்றேன் (எல்லோரும் தாண்டி வந்த பாதையாதலால் சிலரை குத்தக்கூடும் பலரது மனதை சாந்தப்படுத்தக்கூடும்) ஆமையும் முயலும் இந்த சின்னக்கதைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்?? ஆமை : தளராத முயற்ச்சி தன்னம்பிக்கை அடுத்தவரைப்பார்த்து தன்னை மாற்றாமை கல்லெறிகளின் போது பொறுமை எவருடனும் போட்டி போடாத தன்மை முயல்: ஆணவம் அதீத நம்பிக்கை சோம்பேறித்தனம் வல்லவன் என்ற மமதை அகங்காரம் தனக்கு கீழுள்ளோரை மிதித்தல் முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்..... தொடரும்....6 points
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
4 pointsஊர் வம்பும், கைபேசியும்..! ********************* அந்தக்காலம்.. நல்லதண்ணிக் கிணத்தில நாலுபேர் கூடுமிடத்தில பக்கத்து வீட்டு பழசுகள்-2 பவ்வியமாய் வந்தாலே குலநடுங்கி போகுமாம் குடும்பங்கள் எல்லாம். மூல வீட்டுப் பெட்ட முளங்காலுக்கு மேல போடுது சட்ட ஓல வீட்டுப் பொடியன் ஒருத்தியோட ஓடிட்டான். வேலைக்கு அவன் போக-வீட்ட வேறொருவன் நிக்கிறான் காலக் கொடுமையென கதிராச்சி முடிக்க முன்ன.. குப்பத்தொட்டியில ஒரு குழந்த கிடந்தது-அது பக்கத்து வீட்டு பணக்காரச் சமாச்சாரம். எண்டு தொடங்கி எல்லா வரலாறும் சொண்ட நெளிச்சு சொல்லி முடிக்குமாம் மற்றது.. கடுகளவு உண்மையை மடுவளவு பெரிதாக்கி வதந்திய பரப்பிவிட்டு வாயமூடு நமக்கேன்-ஊர் வம்பு என்று சொல்ல.. வந்த சனமெல்லாம் வாயும் காதும் வைத்து சொந்தங்களுக்குள்ளே சொறிநாயாய் கடிபட்டு வெட்டுக்குத்தில போய்-ஊரே வெடிச்சு பிளந்து உண்மை பொய் தெரியாமல் ஓராயிரம் பிரச்சனைகள். கலியாணக்குளப்பமும் கருமாரியும்-வதந்தி கதை பேச்சால் நடந்த அந்தகாலம். இன்றும் வேறு வடிவில வீட்டுக்குள்ள திரியுதாம் எச்சரிக்கை.. கையில இருக்கிற கை பேசியை நம்பிறதால் பொய் வதந்தியெல்லாம் பொட்டளமாய் கொட்டி குடுப்பத்தை குலைத்து கொடுமை நடக்கிறது. கணவனுக்கு போண் வந்தால் மனைவிக்கு தூக்கமில்லை மனைவிக்கு மெசேச் வந்தால் கணவனுக்கு வாழ்க்கையில்லை. உள்ளத்து தூய்மையில்லா உணர்வு எமக்கிருந்தால் கள்ளப் போண் வருகுதென்று கணவன் மனைவிக்கே கை பேசி மூட்டி விட்டு-பல கலவரங்கள் அது பார்க்கும். பிள்ளைகளை வழி நடத்த முதலில்.. பெற்ரோரே முடிவெடுங்கள் இல்லையேல் ஒவ்வொரு மூலையாய் உங்களைப் போல் பிள்ளைகளும். குரோதம் தவிர்த்து குடும்பத்துக்குள்ளே திறந்த மனதுடன் திறப்பின்றிப் “போணை” அனைவரும் பார்க்க அனுமதித்தாலே வதந்திகள் பயப்படும் வாழ்வே ஒளி பெறும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 07.03.20214 points
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
3 pointsநாமும் நம் பழக்க வழக்கங்களும்.. அனேகமாக நான் ஏதாவது எழுதினால் அது அப்படியே தேடுவார் இல்லாமல் கிடப்பதை பல முறை அவதானித்த படியால் தனித்து எழுத மனம் எழுவதில்லை.. ஆனாலும் சில சங்கடங்களை சந்திக்கும் போது எழுத வேண்டும் போலவும் இருக்கிறது.. எழுதுகிறேன்.. ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் என படைப்பில் அவை அவைக்கு ஏற்ப அவயவங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறார்.அதை நாம் இடம் பொருள் ஏவல் அறியாது நாகரீகமற்ற முறையில் பேபசிக்கொள்வது அவர்கள் மேல் உள்ள மதிப்பை எப்படியும் குறைத்து விடும். அதுவம் நாம் போகும் கடை தெருக்களில் பேசும் போது மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசித்து பேச வேண்டும்.. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் வேண்டும்,மாற வேண்டும்.. நேற்று நான் ஒரு தமிழ் கடைக்கு போயிருந்தேன்.அங்கு மூன்று வாடிக்கையாளர்கள் நின்றோம்.இருவர் பெண்கள் ஒருவர ஆண்.அந்ந ஆண் முக கவசத்தை சரியாக அணியாமல் வநீதிருந்திருந்தார்.எனக்கு சற்று தள்ளி நின்ற பெண் பிள்ளை கவனித்து விட்டார் போலும்.மாஸ்க்கை சரியாக பார்த்து போடுங்கள் என்றார். சொன்னது தான் தாமதம் அந்த ஆண் நீங்கள் விட்டால் கால் சட்டைக்குள் போடடு இருப்பதையும் கழட்டி மாத்தி போடச் சொல்லுவீங்க போலிருக்கே என்று சத்தம் போட்டார்.. கொரோனாவோடு எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.அவ்வப்போது குடுத்தால் தான் அடங்குவார்களாம். அது உங்கள் வீட்டுப் பெண் பிள்ளையாக கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம் கொஞ்சம் அனுசரிப்பு வேண்டாமா.வெளியில் கேட்பவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் புரிகிறதா. கடைக்காரருக்கு எப்படி சமாளிப்பது பேச்சை என்ற மாதிரி நின்றார்.ஏன் தமிழ் மக்களே போகும் இடத்திலுமா நாம் இப்படித் தான் என்பதை காட்ட வேண்டுமா...எப்போ மாறப் போகிறோம்..???3 points
-
காவலூர்க் கனவுகள்
2 pointsகாவலூர்க் கனவுகள் கடலோரம் அலைவந்து கரைமீது மோதும் காதோரம் ஆலய மணி வேதம் ஓதும் இனிதான தென்றலும் இடை வந்து வீசும் எங்கெங்கு நோக்கினும் தெய்வீகம் பேசும் இல்லங்கள் எங்குமே இறை புகழ் பாடும் இயம்பிடும் செபமாலை தினம் சாரல் தூவும் அதிகாலைத் திருப்பலி அரங்கேறும் நேரம் அற்புத கானங்கள் அகமெங்கும் மோதும் நிலவோடு கடல் வந்து நிதம் சங்கமிக்கும் கடலோடு மேகங்கள் தலை கோதிச் செல்லும் செம் பருத்திப் பூக்கள் வேலியில்; ஆடும் செவ்வந்திப் பூக்களும் பொன் அள்ளித் தூவும் அதி காலைச் சேவல்கள் அறை கூவிப் பாடும் அதை மிஞ்சும் திருந்தாதி மணி நாதம் கேட்கும் வான் முட்டும் ஆலய கோபுரம் நான்கும் ஆன்மீக தாகங்கள் தீர்த்திடும் பாங்கும் அறிவூட்டும் அதிசய கலைக்கூடம் எங்கள் அறிவுக்கண் திறந்திடும் அற்புதம் செய்யும் குயிலோசை காதிலே இன்னிசை பாடும் அலையோசை காற்றோடு சுதிதாளம் போடும் வெள்ளிக் கொலுசொலி வீதியில் சிந்தும் துள்ளும் வனிதையர் சிரிப்பொலி மிஞ்சும் காலைச் சந்தையும் களைகட்டிக் கூடும் காவலூர்த் துறைமுகம் கலகலப் பூட்டும் மாலைச் சூரியன் மறைந்திடும் வேளை மஞ்சள் குளித்திடும் கடல் மகள் நாணம் கண்டு களித்திட காளையர் கூடும் கடற்கரை பொன்மணற் பரப்பென மின்னும் பூவரசம் பூக்கள் சாமரம் வீசும் மாமரக் காற்றிலும் தமிழ் மணம் வீசும் காவலூர்க் கனவினைக் கண்களில் சுமக்கும் கண்மணிகள் வாழ்வில் வசந்தமே வீசும் --2 points
-
பெண்மை எனும் நல் மனையாள் .
2 pointsபெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )2 points
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
2 pointsஇரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது. அதன் மூலையில் என் சிறு குடில் . கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவுக்குள் நீண்டு செல்லும் ஒழுங்கையின் முடிவில் இருக்கும் இந்த காட்டு வளவின் மூலைக்குள் இரவில் நான் மட்டும் தனியாக நடந்து என் குடிலுக்குள் வரும் போது ஒரு போதும் நான் ஆவிகளின் சத்தங்களையோ அல்லது அயல் சனங்களால் சொல்லப்படும் எந்த பேய்களையுமோ பார்த்ததில்லை. இலுப்பை மரங்களின் இலைகளை சாப்பிட்டு விட்டு மந்தமாக அதே வளவுக்குள் படுத்து கிடக்கும் சில ஆடுகளை மட்டும் எப்பவாவது சில நாட்கள் பார்த்து இருக்கின்றேன். மற்றப்படி இந்த வளவு என் வாழ்வு. என் பெயர் கோசலை. எனக்கு வயது எத்தனை என்று தெரியாது. எப்ப பிறந்தேன், எங்கு வளர்ந்தேன் என்று நினைவில்லை. மஸ்கெலியாவில் இருந்து ஆத்தையுடன் இந்த ஊருக்குள் வந்த எனக்கு கோசலை என்று பெயர் மட்டுமே சொந்தமாக இருந்தது. பின் 5 பிள்ளைகள் ஒவ்வொருவரால் பிறந்து எனக்கு என்று ஒரு குடும்பம் ஆனது. பின் அந்த ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொரு வீடுகளில் வேலைக்கு வீட்டுக்கார முதலாளிகாளால் கவரப்பட எஞ்சியது இந்த குடிலும் இரவில் சத்தம் போடும் வெளவால்களும் மட்டுமே நான் நல்ல கறுப்பு, என்னை தொட்டு நெற்றியில் வைத்தால் போதும் கருப்பு பொட்டு உன் கலரில் இருந்தே வந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு நான் கருப்பு. ஆனால் நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு வைத்து விட்டால் "அடியே உன்னை அடிக்க இந்த ஊரில் ஒரு அழகியும் இல்லையடி' என்று ஊரில் இருக்கும் பெண்கள் தம் வாயாலேயே சொல்லும் அளவுக்கு என் அழகு கூடிவிடும். இந்த அழகில் விழுந்தவர்கள் எல்லாம் ஒரு சில மணித்தியாலங்களில் தம் பசி தீர்த்த பின் சில சில்லறைகளை வீசி விட்டு விலகிச் சென்று விட மீண்டும் எனக்காக காத்திருப்பது இந்த வளவும் என் குடிலும் தான். சிவனே என்று இரவில் வந்து ஒரு தலையணையை என் குடிலில் இருக்கும் மண் நிலத்தில் போட்டு விட்டு படுத்தால் அப்படி ஒரு நித்திரை வரும். நான் நித்திரை கொண்டால் எவராலுமே எழுப்ப முடியாது. ஆனாலும் இக் குடிலில் இருந்து ஐந்து நூறு அடிகள் எடுத்து வைத்தால் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து வேலைக்காரியாக இருக்கும் என் பத்து வயது மகள் அடி வாங்கி அலறும் சத்தத்தில் மட்டும் எப்படி விளிக்கின்றேனோ தெரியவில்லை. நாளைக்கு காலையில் எழும்பி வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் படுத்து விடியவே எழும்புகின்றேன்.எனக்கென்று மன்றாட ஒன்றும் இல்லையென்றாலும் என் ஐந்து பிள்ளைகளும் இப்படியே அடி வாங்கி சாகாமல் என்றாவது ஒரு நாள் கலியாணம் கட்டி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நேர்த்தி வைக்கவாவது நான் ஒவ்வொரு செவ்வாயும் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு போகின்றவள். ஒரு நாளாவது அம்மன் எண்ட நேர்த்தியை காதால கேட்காமலா விடுவாள். விடியவே எழும்பிட்டன். வளவின் இன்னொரு மூலையில் இருந்து காட்டுக் கிணற்றில் வாளி போட்டு குளித்து விட்டு காலம்பற 6 மணிக்கு போய் கணக்கர் சந்தியில் நிற்கின்றேன். கொஞ்ச நேரத்தில் வான் பஸ் வரும். இந்த காலையில் சைக்கிளில் ரியுசன் கிளாசுக்கு சில பிள்ளைகள் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கின்றனர். அதில் கொஞ்சம் வளர்ந்த பெடியங்களும் போவதால் அந்த பெடியன் எனக்கு அருகில் வரும் மட்டும் அவனை நான் கவனிக்கவில்லை. கிட்ட வருகின்றான். அவனை எங்கோ பார்த்து இருக்கின்றேன் என யோசித்து அவன் யார் என்றதை நினைவுபடுத்த முன் அவன் என்னை நெருங்கிவிட்டான். அவன் யார் என நினைவுக்கு வருகின்றது. இனி ஓட முடியாது. ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம். அம்மாளாச்சி மேல அடிச்சு சத்தியம் செய்தால் என்னை விட்டு விடுவான். அவன் விடவில்லை அருகில் வந்தவன் "நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை" என்று சொல்கின்றான். பிஸ்டலை இடுப்பில் இருந்து எடுக்கின்றான். என் நெற்றியில் வைக்கின்றான். எனக்கு நல்ல வடிவாக இருக்கும் பொட்டில் துப்பாக்கி முனை அழுத்துகின்றது வெடி வைக்கின்றான் என் தலை சிதறுகின்றது பின் மண்டை வழி வெளியே வந்த மூளை சிதறி சின்னஞ்சிறு துண்டுகளாக அருகில் இருக்கும் வேலிக் கதியால் எங்கும் மஞ்சளும் வெளுப்பும் நிறைந்த நிறத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றது. மண்டையில் இருந்து வெளியேறிய இரத்தம் ஒரு சிறு தீவென விரைய, அதில் கிளைத்த இன்னொரு சிறு இரத்த தீவு எதையோ தேடி அலைந்தவாறு நீள்கின்றது. தன்னை கொல்ல சொன்ன அறம் ஏன் தன்னை மட்டும் ஏன் கொல்கின்றது என்று நியாயம் கேட்பதற்காக அது விரைகின்றது போல... என் இறுதி மூச்சு நிற்கும் முன்னர் என்னைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல கிடக்கு. அது எனக்காக அல்ல... நியாயம் தேடி விரைந்து கொண்டு இருக்கும் என் இரத்தத்தின் நீட்சி அமைதியடைய. -தொடரும்2 points
-
அறம் என்பது என்னவென்றால்... - நிழலி
2 pointsபகுதி 2: தேவபிரானும் அம்மாளாச்சியும் பெருஞ்சுழலாக பாலைவனப் புயல் வீசி தணிந்து இருந்தது. ஆயினும் புழுதி இன்னமும் சரியாக அடங்கவில்லை. பொழுது மம்மலாகவும் புழுதி படந்தும் இருந்தது. தேவபிரான் தன் வெள்ளை அங்கி உடல் முழுதும் தவழ நடந்து வருகின்றார்.கண்களில் கருணை ஒளி அந்த மம்மல் வெளிச்சத்தில் இரண்டு வெள்ளிப்பூக்களாக மின்னுகின்றன. பூக்களின் வாசனையை ஒத்த நிறம் பாலை எங்கும் கமழத் தொடங்குகின்றது. கருணை கொண்ட நெஞ்சத்தானின் கூரிய பார்வை நெடிய கோடொன்றை மண்ணில் வரைந்து செல்கின்றது. அவளை அவர்கள் விரட்டி வருகின்றனர். எல்லோரின் கைகளிலும் அவளை கொல்வதற்காக கற்கள். அவளை நோக்கி கற்களை வீசிக் கொண்டே விரட்டுகின்றனர். சிலர் வீசும் கற்கள் அவளுக்கு மிக நெருக்கமாக விழத் தொடங்குகின்றன. அவள் பயத்தில் அலறியபடியே அந்த பாலை எங்கும் அங்குமிங்கும் ஓடுகின்றாள். கால்கள் துவளத்தொடங்குகின்றன. உடல் தளர்கின்றது. அவளுக்கும் விரட்டுகின்றவர்களுக்குமான இடைவெளி குறையத் தொடங்குகின்றது. அவர்கள் எறியும் கற்கள் அவளின் மேல் விழப் போகும் அளவுக்கு அவளுக்கும் அவர்களுக்குமான இடைவெளி மிகவும் சுருங்குகின்றது. இனி ஓடுவதற்கு தெம்பும் இல்லாமல் சரிந்து விழ போனவள் தேவபிரானை காண்கின்றாள். அவர் கால்களில் வீழ்கின்றாள். கண்ணீர் அவர் கால்களை நனைக்கின்றன. அவளை நோக்கி கொல்வதற்காக விரட்டி வந்தவர்கள் தேவபிரானை கண்டவுடன் விரட்டுவதை நிறுத்துகின்றனர். அவர் அவளை வாஞ்சையுடன் கண்களில் இருந்து கருணை பெருக்கெடுக்க தொட்டுத் தூக்கின்றார். விரட்டி வந்தவர்கள் தேவபிரானை நோக்கி "இவள் ஒரு பாவி. பிற ஆடவருக்கு தன் உடலை விற்கின்ற பாவத்தை புரிகின்றவள். மரணதண்டனைக்குரியவள் " என்கின்றனர். தேவபிரான் அவர்களை நோக்கி "நல்லது, அப்படியே அவளுக்கு தண்டனை கொடுங்கள் ஆனால் உங்களில் எவர் எந்தப்பாவமும் செய்யவில்லையோ அவரே முதல் கல்லை அவள் மீது வீசட்டும்" என்கின்றார். விரட்டிவந்தவர்கள் தயங்கி நிற்கின்றனர். தம்மில் பாவங்கள் செய்யாத எவரும் இல்லை என்று உணருகின்றனர். தேவபிரான் அவளின் பாவத்தை மன்னிக்கின்றார். தேவபிரானுடன் சேர்ந்து விரட்டி வந்தவர்களும் அவளை மன்னிக்கின்றனர். அவளை மன்னிப்பதுன் மூலம் தங்கள் பாவங்களையும் கழுவுகின்றனர். அவள் விடுதலை அடைகின்றாள். *********************************** கணக்கர் சந்தியில் இருந்து பாசையூர் கடலை நோக்கி செல்லும் வீதியில் சற்று தூரம் கழிந்த பின் இரண்டு குளங்கள் உள்ளன. தண்ணீர் இருக்கும் காலங்களில் டோபி மார் வந்து உடுப்பு தோய்ப்பினம். குளங்களில் கொண்டு வந்த உடுப்புகளை தோய்த்து குளத்தின் கரைகளில் விரித்துப் போட்டு காயவைப்பினம். குளத்தின் நீரும் காயவைத்த உடுப்புகளின் விதம்விதமான நிறங்களும் அந்த இடத்தை வண்ணமயமாக்கும். வண்ணான் குளம் என்று அழைக்கப்படும் இக் குளங்களில் தண்ணி இல்லா காலங்களில் சின்ன பெடியல் வந்து பட்டம் விடுவினம். பாம்புப் பட்டமும், கழுகுப் பட்டமும் ஒன்றாக பறக்கும். பட்டங்களில் கட்டப்பட்டு இருக்கும் பாட்டு கசட்டில் இருந்து அறுத்து ஒட்டப்பட்டு இருந்த 'விண்' அடுத்தடுத்த ஊர்கள் வரைக்கும் கேட்கும். இக் குளங்களை கடந்து போனால், பெரும் விளையாட்டு மைதானம். அதையும் கடந்து போனால் பாஷையூர் புனித அந்தோணியார் கோயில் இருக்கும். அதன் பின்னால் சற்று தூரத்தில் இருக்கும் பாசையூர் கடலில் இருந்து வீசும் காற்று அந்தோணியாரை கோயில் எங்கும் நிறைந்திருக்கும் மெழுகுவர்த்தி வாசனையுடன் கலந்து ரம்மியமாக வீசும். அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு முறையும் பாதிரியார் தேவபிரான் அந்த பெண்ணை மன்னித்து விட்ட கதையை சொல்லும் போது எனக்குள் கண்ணீர் கசியத் தொடங்கும். என்னை அவர்கள் விரட்டி வருவதை கற்பனை செய்யத் தொடங்குவேன். விரட்டியவர்களில் என்னை தொட்டு பசியாறியவர்களும், பசியாக நான் இருக்கும் போது உணவு கொடுக்காதவர்களும், வீரமாகாளி அம்மன் கோவில் பூசகரும். சின்ராசும், மணியத்தாரும், ஜேக்கப்பும், பாக்கியம் அக்காவும், பரிசுத்த மலரும் நிற்பினம். எல்லாரது கைகளிலும் கற்கள் இருக்கும். செங்கலடி வீட்டில் கட்டிமுடிக்கப்படாத பகுதியில் இருந்து எடுத்த கொங்கிரீட்டும் இருக்கும். அவர்கள் என்னை கொல்ல நெருங்குகையில் தேவபிரான் வருவார். என்னை காப்பாற்றுவார். நான் விடுதலை அடைவேன். அந்தோணியார் கோவில் பிரசங்கத்தின் பின்னரும் இந்தக் கதை என் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். என்னையும் கற்களால் எறிந்து கொல்லுவினமா என்று லேசாக பயம் வரும். ஆனாலும் தேவபிரான் அப்படி செய்ய விடமாட்டார் என எண்ணம் வரும் போது பயம் கலைந்து விடும். நானே வெள்ளை அங்கி அணிந்து சின்ராசுவையும், ஜேக்கப்பையும் மன்னித்து இரட்சிப்பதாக சிலவேளைகளில் இரவின் நடுச்சாமத்தில் கனவு வரும். கடைவாயிலில் மெல்லிய புன்னகை அந்த நித்திரையிலும் ததும்ப நிம்மதியாக உறங்கிப் போவேன். போன இரவும் அப்படி ஒரு கனவும் தேவபிரானும் சின்ராசுவும் கனவில் வந்து போயினர். ஆனால் இது தான் கடைசியாக காணும் கனவு என்று நினைத்து இருக்கவில்லை. கணக்கர் சந்திக்கு பஸ் பிடிக்க அந்த காலையில் நான் வருவேன் என்று அந்த பெடியனுக்கு எப்படி தெரியும் என தெரியவில்லை. ஒவ்வொரு செவ்வாயும் நான் வருவது அவனுக்கு தெரிந்து இருக்கலாம். அவர்கள் அறியாமல் காற்று கூட வீசாது என்று கிளி அக்கா அடிக்கடி சொல்வது உண்டு. மூன்று கிழமைக்கு முன் ரத்வத்தையுடன் சேர்ந்து கொடி ஏற்றினவர்களில் தொக்கையரும் இருந்தவர் என்று அவர்கள் அறிந்து அவர் வீட்டில் இரவு புட்டுச்சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது சுட்டுக் கொன்றனர் என்றும், அவர் இரத்தம் வழிந்த புட்டுக் கோப்பையை மகள் கழுவாமல் அப்படியே வைத்திருக்கின்றாள் என்றும் கிளி அக்கா சொல்லும் போதும், அவர்கள் தொக்கையர் போன்றவர்களை தான் கொல்வார்கள் என்று இருந்து விட்டேன். இன்று அந்த பெடியன் என் நெற்றியில் துப்பாக்கி வைக்கும் போது கூட எப்படியும் என்னை விட்டுவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். அவன் என்னை விடாவிட்டால் கூட, தேவபிரான் வந்து என்னை விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டு நின்றேன். வெள்ளை அங்கியுடன் வந்து என்னை மீட்டு பெடியனை தடுத்துவிடுவார் என்று நம்பிக்கொண்டு நின்றேன். தேவபிரான் வராவிடினும் அம்மாளாச்சியாவது என்னை காப்பாற்றுவார் என்று நினைத்தேன் ஆனால் தேவபிரானும் வரவில்லை அம்மாளாச்சியும் வரவில்லை சாவு மட்டுமே என்னை ஆட்கொள்கின்றது. -தொடரும்2 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2 points
- பெண்மை எனும் நல் மனையாள் .
2 pointsஅன்னையாக அரவணைத்து மனைவியாக உடன் பயணித்து சகோதரியாக அன்பு செய்து மகளாக மடி தவழ்ந்து தோழியாக தோள் கொடுத்து வாழும் பெண்மையை போற்றுவோம் பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி2 points- பாவத்தின் சம்பளம்
2 pointsஇருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை நடத்திக்காட்டியே தீருவது என்ற முடிவில் இருவர்மேலும் வெறிகொண்டு பாய எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு டோர்ச்சின் மின்னொளியுடன் "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை, கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் " என்று சுலக்சன் சொல்ல காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான் பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள் திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன, அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான். "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும் டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...? " .ஐடியா மணி ஐடியா மணிதான் அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு 11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது 1946, கோவா பதினைந்து நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து அழைத்துவந்தது, உடனடியாக முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார் புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்) பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்2 points- அன்புள்ள அம்மா....
2 pointsஅம்மா! ஒரு முற்றத்தில் விளையாடிய உங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்குள் பல பிரிவுகள் வந்து விட்டதம்மா..பாசத்தை விட சொந்த உறவை விட சொத்துக்கள் பெரிதாகி விட்டது. எங்கடை தூரத்து சொந்த தம்பு வாத்தியார் என்ரை பனங்காணி எல்லாத்தையும் தன்ரை காணியோடை சேர்த்து வேலிபோட்டு அடைச்சு போட்டார். நீங்கள் இல்லாதது அவருக்கு பயம் விட்டு போச்சுது.கேட்டால் சண்டித்தனத்துக்கு வாறார். நீ வெளிநாட்டிலை செற்றிலாகிட்டாய் உனக்கு என்னத்துக்கு இஞ்சை காணி பூமி எண்டு கேக்கிறார்? என்ரை பிற்காலத்துக்கு வேணுமெண்டால் வரேக்கை தல்லாமாம். அம்மா நீங்கள் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமோ ? எங்கடை சின்னம்மா குடும்பம் இப்ப சரியான கஷ்டத்திலை இருக்கினம். அவையள் செய்த பாவங்கள் இப்ப சூனியமாய் வந்து சேர்ந்து கொண்டிருக்கு.வட்டிக்கு காசு குடுக்காதேங்கோ எண்டு நீங்கள் சொல்லச்சொல்ல எதையுமே கேக்காமல் நடந்த அவைக்கு நோய் நொடிகள் தான் மிச்சம். அவையளுக்கு இப்ப ஒரே வருத்தம் துன்பங்கள்.சேர்த்து சேர்த்து வைச்சிருக்கிற காசெல்லாம் ஒரு பிரயோசனத்துக்கும் இல்லை. அவையாலை இப்ப விரும்பின சாப்பாட்டை கூட சாப்பிடேலாது.நாலு இடத்தை பார்க்க கூட நடந்து திரியேலாது.அம்மா நீங்கள் அடிக்கடி சொல்லுற மாதிரி மனிசரை மதித்து பாவ புண்ணியங்கள் நினைச்சு வாழப்பழகோணும் எண்டது தெய்வவாக்கு மாதிரி அம்மா. அம்மா! நீங்கள் உங்களுக்கென என்னிடம் எதையுமே கேட்கவில்லை. அதே போல் நானும் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவும் இல்லை. அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை. ஏன் எமது இருவருக்கும் இடையில் அந்த அவசியமும் தேவைப்படவில்லை. இருந்தாலும் இங்கு என்னோடு வாழ்ந்தவர்கள் பலவற்றை தமது தாய் தந்தையர்களுக்கு செய்யும் போது நான் ஏன் அவர்கள் போல் செய்யவில்லை என்ற ஆதங்கம் இன்றும் முள்ளாய் மனதில் குத்துகின்றது.கேட்காமலே தேவையில்லா விட்டாலும் ஊர் பகட்டுக்கு செய்திருக்க வேண்டும் என்ற மனநிலையை எற்படுத்தி விட்டார்கள். அம்மா நாங்கள் இருவரும் செல்வச்சன்னதியில் கந்தசஷ்டி உபவாசம் இருந்தோம் ஞாபகம் இருக்கா...? எம்முடன் சேர்ந்து உபவாசம் இருந்த பாக்கியம் அக்கா ஞாபகம் இருக்கா? அவவை பற்றியும் சொல்லுறன் அம்மா.2 points- பாவத்தின் சம்பளம்
2 pointsபெயரை உன்னிப்புடன் படித்து முடித்து விட்டு திரும்பியவன் சுலக்சனுடன் சேர்த்து இரசாயனவியலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக இருவரும் புத்தகங்களிற்குள் ஒன்றிப்போய்விட்டனர். திடிரென்று அவனுக்குள் இயற்கை உபாதை எட்டிப்பார்க்க புத்தகத்தின் மேலால் சுலக்சனை எட்டிப்பார்த்தான், படிக்கிறேன் என்ற பெயரில் கடைவாயில் எச்சில் வடிய சுலக்சனோ நித்திரையாசனத்தில் உடகார்ந்திருந்தான். "பாரு தொரை படிக்கிற அழகை" என்று மெதுவாக சொல்லிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், நேரமோ 12:49 மண்டபத்தின் முன்னாலிருக்கும் கத்தா மரத்தின் அடியில் ஒதுங்கப்போனானவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்த மரத்திற்கடியில் சிறுநீர் வாடை வருகிறது என்று அநேகமாக இரவில் இருந்து படிக்கும் குழுவின் வேலையாக தான் இருக்கும், இப்படியே நீடித்தால் ஆட்களை மெதுவாக நிறுத்திவிடவேண்டியதுதான் என்று அதிபர் எங்கள் பகுதித்தலைவரிடம் கண்டித்த விடயம். சரி மெதுவாக கூடைப்பந்து மைதானம் தாண்டி இருக்கும் அடர்ந்த புதர்கள் எதற்குள்ளாவது ஒதுங்கினால் பிரச்சினையில்லை என்றுவிட்டு, கையில் தனது பேனா டோர்ச்சினை எடுத்துக்கொண்டு கூடைப்பந்து மைதானம் தாண்டி கண்ணில் பட்ட ஒரு புதரின் மேல் வெள்ளத்தை மடை திறந்து பாயவிட்டான். வெள்ளம் பாய்ந்து முடிந்து நிற்கும் தருவாயில் தான் கவனித்தான், அருகே இருக்கும் வேற்று வளவின் மூலையில் இருக்கும் குடவுனிலிருந்து இயந்திரம் ஒன்று வேலை செய்துகொண்டிருக்கும் சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது,அந்த சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது அது ஒரு ரோனியோ மெஷினின் சத்தம் , மெதுவாக தடுப்பிற்கு மேலே எட்டி பார்த்தான். அங்கே குடவுன் உள்ளே மங்கலான ஒரு ஒளி வெளிச்சத்தில் மின்குமிழ் ஒன்று எரிந்துகொண்டிருந்தது அந்த ஒளியின் நிழலில் ஒரு மனிதன் நிற்பதுபோன்ற நிழல் சுவரில் தெறித்துக்கொண்டிருந்தது, மின்குமிழ் காற்றில் ஆடும்போதெல்லாம் அந்த நிழலும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது, ஒருகணம் விதிர்விதிர்த்து போய்விட்டான் காரணம் இந்த எதுவும் அந்த குடவுனிற்குள் சாத்தியமில்லை, சாதாரணதரம் படிக்கும்போது பலமுறை விவசாய பாடவேளைகளில் விவசாய சிரமதானமென்று இந்த வெற்றுவளவை அவனது முழு வகுப்புமே துப்புரவு செய்திருக்கிறது, அந்த குடவுனுக்கு மின் இணைப்பே கிடையாது, அப்படியிருக்க எப்படி இந்த மின் குமிழ் எரிகிறது, உள்ளே நிற்கும் நபர் யார் பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க மெதுவாக வந்தவழியே திரும்பினான், மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து சுலக்சன் இருந்த பக்கத்தை நோக்கி தலையை திருப்ப, அங்கே...சுலக்சன் இல்லை, 1946, ஆம்ஸ்டர்டாம் அம்மா ...அம்மா அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, இந்தாருங்கள் என்று கத்திகொண்டே சோபியாவிடம் ஓடிவருகிறாள் வில்லியின் அனுப்புத்தங்கை, , கடிதத்தை வாங்கிய சோபியாவும் படிக்க ஆரம்பிக்கிறாள், வழமையான நல விசாரிப்புகளிற்க்கு பின் தான் படிப்பை முடித்து இந்தியாவின் கோவாவிற்கு செல்லும் நான்காவது மிஷனரி பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டுமாத விடுமுறையில் வீட்டிற்கு வரப்போவதாகவும் எழுதியிருந்தார் வில்லி, ஆறு மாதத்தின் பின் காணப்போகும் தன் மகனை வரவேற்க தடல் புடலான ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா (தொடரும்)2 points- செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
1 pointஉலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)1 point- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!1 point- லொக்டவுண்
1 pointலொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?1 point- லொக்டவுண்
1 pointநேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point- காவலூர்க் கனவுகள்
1 pointஅருமையான கவிதை ....50 வருடங்களுக்கு முதல் போன பொழுது இருந்த நயினாதீவுக்கும் இரண்டு வருடங்களுக்கு முதல் போன நயினாதீவுக்கும் ....பல மாற்றங்கள் ...எல்லோரும் கூறுவது போன்று பலவிடயங்களை இழந்து கொண்டு வருகிறோம்....1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 17, மாசி 2016 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளில் நடந்துவரும் வேகமான சிங்களக் குடியேற்றங்களும், கருணாவின் எஜமானர்களின் கைவரிசையும் மைத்திரிபால சிறிசேன அரசின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைகளில் அமைந்திருக்கின்ற தமிழர்களின் புராதனக் கிராமங்கள் வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக உள்ளூராட்சி அபிவிருத்திச் சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இப்பகுதியில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவம் அண்மைக்காலத்தில் பெருமளவு இனவாத பெளத்த துறவிகளை இவ்விடங்களுக்கு அழைத்துவந்து நிரந்தரமாக அவர்களைத் தங்கவைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007 இல் இம்மாவட்டம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டதன் பின்னால் இப்பகுதியெங்கும் பல ராணுவ முகாம்களும், அவற்றுக்கு அருகில் பெளத்த பன்சலக்களும் அமைக்கப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இவ்வகையான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஜனாதிபதி மைத்திரியின் மாவட்டமான பொலொன்னறுவை எல்லையிலும் ராணுவத்தாலும் பெளத்த துறவிகளாலும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொலொன்னறுவை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாதிபதி மைத்திரி தான் அரசியலுக்கு வருமுன்னமே மட்டக்களப்பு மாவட்ட எல்லையோரத்தில் சிங்களவர்களை குடியேற்றி, மட்டக்களப்பு மாவட்டத்தினைத் துண்டாடுவதில் ஆர்வத்துடன் செயற்பட்டவர் என்று தெரியவருகிறது. தனது அரசியல் பிரவேசத்தின் மூலம், மகாவலி அபிவிருத்தி எனும்பெயரில் புணானை, வெலிகந்த ஆகிய பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, மட்டக்களப்பு மாவட்டத்தின் வடபகுதியில் பாரிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரியான கருணாவின் நெருங்கிய தோழரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களின் இணைப்பாளராக மகிந்தவினால் அமர்த்தப்பட்டிருக்கும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரோ எனும் பிக்கு கடந்த மாசி மாதம் 10 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு அனுப்பிய பணிப்புரையில் தான் 50 சிங்களக் குடும்பங்களை இப்பகுதியில் குடியேற்ற அழைத்துவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிரு தமிழ்க் கிராமங்களை கூட அகற்றும் நோக்குடனேயே இந்தக் குடியேற்றம் பிக்குவினால் மேற்கொள்ளப்படுவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். துறைநீலாவணைப் பகுதித் தமிழர்கள் இவ்வாறு பிக்குவினால் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படவிருக்கும் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை கிராம அபிவிருத்திச் சபை ஆதிகாரிகளிடம் கையளித்து இந்தக் குடியேற்றத்திட்டத்தினை தடுத்துவிடுமாறு கோரியிருக்கின்றன்ர். இதே பிக்குவினால் கெவுளியாமடுவிலும் தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி கிராம அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கூறுகையில், கெவுளியாமடுவில் சுமனரத்ன தேரர் கடந்தவாரம் குறைந்தது 4புதிய வீடுகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றையுள்ளதாகத் தெரிவித்தனர். இதேவேளை, இப்பகுதியில் குடியேறிவரும் சிங்களவர்கள் தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்துவருவதுடன், தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக இப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். குடியேறிவரும் சிங்களவர்களின் பாதுகாப்பிற்கென்று சிங்கள ஊர்காவல் படையொன்றினையும் சிங்கள ஆக்கிரமிப்பு அரசு உருவாக்கி இப்பகுதிகளில் நிலைவைத்திருப்பதாக பிரதேச சபை அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றன்ர். இனவாத துவேஷம் மிக்க பெளத்த துறவிகளை தமிழரின் தாயகத்திற்கு அழைத்துவருவதன்மூலம் இப்பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளில் அனைத்துச் சிங்கள அரசுகளும் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டே வந்திருக்கின்றன. தமிழர் தாயகத்தில் பெளத்த சிங்கள காலாசராத் தொன்மை என்கிற பொய்யான கூப்பாடுகளுக்கு ஆதரவாக அரச அமைச்சுக்களையும், ராணுவ - பொலீஸ் இயந்திரத்தையும் தமது சிங்களக் குடியேற்றங்களுக்காக இந்தப் பெளத்த பிக்குகள் பாவித்து வருகின்றனர். அப்படியானவர்களுக்கு கிழக்கில் இனவாத அரசின் ஏஜெண்ட்டுகளாக, ஒருங்கிணைப்பாளர்களாக, துணையமைச்சர்களாக, மாகாணசபை முதலைமைச்சர்களாக, உறுப்பினர்களாக, நிர்வாக அதிகாரிகளாக இருக்கும் துணைராணுவக் கொலைக்குழுக்கள் ஆதரவு நல்கி வருகின்றனர் என்பது வேதனையான விடயம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தமிழர் தாயகத்தில் இருந்து தமிழர்களைக் கிராமம் கிராமமாக விரட்டி, அங்கே சிங்களவர்களைக் குடியேற்றிவரும் பெளத்த பிக்குகளும், அரசும் புதிதாக அமைக்கப்பட்ட "சிங்கள - பெளத்த "நிலங்களுக்கு "யாத்திரை" வருமாறு தெற்குச் சிங்களவர்களை வரவழைப்பதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தொன்மையான பெளத்த கலாசார இடங்கள் எனும் மாயையினையும் சிங்களவர்களிடையே ஏற்படுத்த முனைகின்றனர். உதாரணத்திற்கு, 1990 இல், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருந்த தொன்மையான கச்சிக்கொடி சுவாமி மலை எனும் பழம்பெரும் தமிழ்க் கிராமத்திலிருந்து ராணுவத்தாலும், சிங்களக் குடியேற்றவாசிகளாலும் அங்கிருந்து துரத்தப்பட்ட 385 குடும்பங்களுக்குப் பின்னர், இப்பகுதி தூய சிங்கள பெளத்த தொல்லியல் சிறப்புவாய்ந்த பகுதியென்று அரசால் அறிவிக்கப்பட்டு முற்றான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவிட்டதென்பது குறிப்பிடத் தக்கது. இப்பகுதியிலிருந்து விரட்டப்பட்ட தமிழர்களை மீள இப்பகுதியில் குடியேற்ற பின்னிற்கும் அரசு, இதுவரையில் 62 குடும்பங்களை மட்டும் இப்பகுதியின் எல்லையில் குடியமர அனுமத்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆனாலும், இப்பகுதியில் அமைந்திருந்த சைவ வணக்கஸ்த்தலத்திற்கு மிக அருகாக இரு புத்த கோயில்களை அரசு கட்டியெழுப்பியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. கிராம அபிவிருத்திச் சபை அதிகாரிகளின் கருத்துப்படி பின்வரும் தமிழ்க் கிராமங்கள் உடனடியான முற்றான சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. 1. கச்சக்கொடி சுவாமிமலை 2. தாந்தாமலை 3. அடைச்ச கல் 4. கெவுளியாமடு 5. காண்டியன் ஆறு 6. 35, 36 மற்றும் 37 ஆம் கொலணிகள் 7. மத்திய முகாம் 8. சின்ன வத்தை 9. பலாச்சோலை 10. நெடிய வெட்டை 11. மாலையர் கட்டு 12. யானை கட்டிய வழி தாயகம் கபளீகரம் செய்யப்பட்டாலும் பரவாயில்லை, சலுகைகள் முக்கியம் எனும் சிலருக்கு இது சமர்ப்பணம் !1 point- காவலூர்க் கனவுகள்
1 pointநல்ல கவிதையக்கா, ஊர் நினைவுகளை மீட்டிவிட்டது, ஊர் நினைவுகள் தினம் வந்து போகும், இறக்கும் வரை பசுமையாக இருக்கும்1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointஇப்படியான கூட்டத்துக்கு தான் யாழில் ஒரு சிலர் பந்தம் பிடிக்கிறது நினைக்கவே வெட்கமாக உள்ளது .1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, மாசி 2016 அம்பாறை மாவட்டத்தில் மீதமிருக்கும் தமிழர் நிலங்களை அபகரிக்கும் தெற்குச் சிங்களவர்களும், உறுதுணைபுரியும் கருணா குழுவும் அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் 50 வருடங்கள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் ஆலயத்திற்குச் சொந்தமான 8 ஏக்கர்கள் நிலத்தினை போலியான காணியுரிமைப் பத்திரங்களைக் காண்பித்து அபகரிக்கும் கைங்கரியம் ஒன்றினை தெற்குப்பகுதியான மாத்தறை மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் இரு சிங்களவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆலய நிர்வாகத்தினர் முறையிட்டிருக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினால் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து அதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெற்கிலிருந்து வந்த இரு சிங்களவர்களுக்கும் சார்பாக பொத்துவில் பகுதியில் இயங்கிவரும் துணைராணுவக் குழுவான கருணா கொலைக்குழுவின் முக்கியஸ்த்தர்கள் களம் இறங்கியிருப்பதாகவும், பெருந்தொகைப் பணத்திற்காக இவ்வாலய காணியை சிங்களவர்கள் அபகரிக்க இத்துணைக்குழு உறுப்பினர்கள் உடந்தையாக இருப்பது மாத்திரமல்லாமல், ஆலய நிர்வாகத்தினரை இதுதொடர்பாக மிரட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துணைராணுவக் கொலைக்குழுக்களைப் பாவித்து அம்பாறை மாவட்டத்தில் மீதமிருக்கும் தமிழரின் காணிகளை தென்பகுதிச் சிங்களவர்கள் உரிமைகோரிவருவதாகவும், கருணா கொலைக்குழு உறுப்பினர்களும், மகிந்தவின் இப்பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பாளரும் இதனை பணம்பார்க்கும் தொழிலாகச் செய்துவருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். இந்த ஆலய காணி அபகரிப்புத் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. பொத்துவில் பகுதியில் ஊரணி எனும் இடத்தில் அமைந்திருக்கும் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு வந்த மாத்தறையைச் சேர்ந்த இரு சிங்களவர்கள் போலியான காணி உரிமைப்பத்திரங்களைக் காண்பித்து, "இது எங்களுடைய நிலம், நீங்கள் இங்கே சட்டத்திற்கு முரணான வகையில் ஆலயத்தைக் கட்டியுள்ளீர்கள், ஆகவே உடனடியாக நிலத்தினை எமக்குத் தந்துவிட்டு வெளியேறவேண்டும் "என்று மிரட்டியிருக்கிறார்கள். கூடவே கருணா துணைராணுவக் கொலைக்குழு உறுப்பினர்களும், மகிந்தவின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரும் நிற்பதைக் கண்ட ஆலய நிர்வாகத்தினர் நடக்கவிருக்கும் விபரீதத்தினை அறிந்து, பிரதேச சபை அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்றார்கள். இந்த ஆலய நில அபகரிப்பு விடயத்தில் தம்மை மிரட்டிய இரு ஆயுததாரிகளை அப்பிரதேச மக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். அதன்படி இவர்களுள் ஒருவர் கருணா கொலைக்குழுவின் முக்கியஸ்த்தர் பார்த்தீபன் என்றும், மற்றையவர் இதே துணைராணுவக் குழுவைச் சேர்ந்தவரும் இனக்கொலையாளி மகிந்தவின் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான "சேவா லங்கா" மஜீத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த இருவரும் இப்பகுதியில் நடந்துவரும் சிங்களக் குடியேற்றங்களுக்காக தமிழர்களை அச்சுருத்திப் பணியவைக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருபவர்கள் என்று இப்பிரதேச மக்களால் பலமுறை குற்றஞ்சாட்டப்பட்டு வந்ததும் குறிப்பிடத் தக்கது. இப்பகுதியில் அமைந்திருக்கும் பொத்துவில் நகர், கொட்டுக்கல், இன்ஸ்பெக்டர் ஏற்றம், ஊரணி மற்றும் கனகர் கிராமம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கும் இவ்விருவருக்கும் தொடர்பிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். . சித்திவிநாயகர் ஆலய நிலத்தை துணைராணுவக் கொலைக்குழுவின் துணையுடன் அபகரிக்க சிங்களவர் எடுத்திருக்கும் நடவடிக்கயினை எதிர்த்து ஆலய நிர்வாகத்தினர் பொத்துவில் பொலீஸில் முறையிடச் சென்றபோது, "சிங்களவர்களுக்கு எதிராக முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது, அவர்களின் ஆவணங்கள் உண்மையானவை, ஆகவே முறைப்பாட்டினைத் திரும்பிப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று பொலீஸாரினால் அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர். இக்கிராமத்தில் முன்னர் குறைந்தது 600 தமிழ்க் குடும்பங்களாவது வாழ்ந்துவந்தனர். ஆனால், இப்பகுதியில் அரசாலும், துணைராணுவக் குழுக்களின் துணையுடனும் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் இப்பகுதியின் இனப்பரம்பலினை மிகவும் பாதித்திருப்பதோடு, தமிழரை சிறுபான்மையினராக்கிவருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இக்கிராமத்தில் வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 230 குடும்பங்கள் மட்டும் தான் என்பதோடு, இவர்களில் பலரும் இக்கிராமத்திலிருந்து கருணா குழுவினதும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களினதும் அழுத்தத்தினால் வெளியேறும் முடிவினை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களின் பிரசித்திபெற்ற சித்திவிநாயகர் ஆலயம் அம்பாறை மட்டக்களப்பு வீதியில், பொத்துவில் நகரிலிருந்து 7 கிலோமீட்டர்கள் வடக்கில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. .1 point- பாவத்தின் சம்பளம்
1 pointஅக்னியஷ்த்ரா - இக்கதைசொல்லி ரசிக்கத்தக்க தனியொரு பாணியைக் கையாள்வது சிறப்பு. பெற்றோர் தந்த பெயரோ தாம் இட்ட புனைபெயரோ வடமொழியே தவிர (என் பெயர்கூட அப்படித்தான்), அவர் கையாளும் மொழியில் இயன்றவரை கலப்பில்லாத தமிழ்ச் சொற்களைக் கையாள்வதும் உருவாக்குவதும் கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointஉருகாதோ நெஞ்சம் என் உயிரான உயிரான உயிரான இயேசு 2 என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன் என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point- பெண்மை எனும் நல் மனையாள் .
1 point- பெண்மை எனும் நல் மனையாள் .
1 point- பெண்மை எனும் நல் மனையாள் .
1 point- பெண்மை எனும் நல் மனையாள் .
1 point- பெண்மை எனும் நல் மனையாள் .
1 point- ஊர் வம்பும் கைபேசியும்..!
1 pointவிரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு. "என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின் பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. கவிதைக்கு நன்றி1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointஅவதானம்⚠️: கண்ட இடத்திலை... 🐍 கடிச்சிட போகுது, பார்த்து இருக்கவும். 😂 🤣1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointஎதற்காக சொல்லப்படுகிறது என்பதை புரியாதவர்களுக்கு அவர்களின் பாசையிலேயே பதில் தரவேண்டும். ஆனால் அது எம்மால் முடியாது என அவர்கள் அறிந்தே தாக்குதல் செய்வர். நன்றி யாயினி உங்கள் அனுபவங்களையும் எமக்கு தந்து படிப்பினையை நாமும் அறிய தந்ததற்காக. தொடர்ந்து எழுதுங்கள்1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointபொது இடத்தில் செந்தமிழ் பேசுபவர்களையும் பாத்திருக்கிறேன்.எந்த வயதானாலும் தாங்காளக திருந்தினால் தான் உண்டு.1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முடிவு வரைக்கும் வாசித்த உறவுகளுக்கும், பின்னூட்டங்கள் இட்டும் பச்சைப்புள்ளிகளை வாரி வழங்கியும் உற்சாகப்படுத்திய உறவுகளுக்கும் நன்றி. ராசுக்குட்டி பற்றி இன்னும் நிறைய கதைகள் உள்ளன. அவர் பெண்பார்க்கும் படலத்தில் நடந்த கதை, அவரது அம்மா கந்தசஷ்டி விரதம் பிடிக்கும் நிலை வரைக்கும் அவர் கொண்டு போய் விட்ட கதை, பிஸ்ஸா டிலிவரிக்கு போன காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் கதை என்று நீளமாக ஒரு பட்டியலே இருக்கு. உண்மைக் கதை, கொஞ்சம் புனைவுகள் கலந்து எழுதப்பட்டது. ராசுக்குட்டி ஆஸ்பஸ்திரியில் CT scan எடுக்கப் போயிருந்த போது, அவர் எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத்தின் பிதாமகனுக்கு இப்படி தான் ஸ்கான் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல் அனுப்பி அந்த பிதாமகனையும் கவலைப்பட வைத்த விடயத்தினை இடையில் செருக மறந்து விட்டார் என்று தகவல் வந்திருக்கு1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointஅவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்? முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள். சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்? கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointசிலர் இடம் பொருள் பார்க்காமல் ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி விடுவார்கள். என்ன செய்வது சில விதி விலக்குகளை வைத்து எல்லோரையும் மதிப்பிட முடியாது. இந்த காலக்கட்டத்தில் அநேகர் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன. யாயினி இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் ஆதங்கம் பொருத்தமானதே. சமூக அக்கறையற்றவர்களை அடுத்திருப்போரால் மாற்ற முடியாது.1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
இனி எத்தனை வெள்ளி 🌟🌟தாண்டி எழுதிறாரோ தெரியா..சோ சிறியண்ணா punctuality முக்கியம்..😄 நான் சும்மா பகிடியாக சொல்வது சீரியசா எல்லாம் எடுத்துக் கொள்ள கூடா.🤭1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இறுதிப்பகுதி. சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது. இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது. ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது. முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர். ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார். இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு. மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது. என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு. prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம். சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர். "இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார். "இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு. டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது. பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார். டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார். "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" "நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும் "ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- பாவத்தின் சம்பளம்
1 pointவில்லி தங்களுடன் இருந்த இரண்டுமாதங்களும் போனதே தெரியவில்லை, மிகவும் இயல்பாக எதிலுமே பற்றற்றவனாக , கனிவும் சாந்தியும் எதிலும் நிதானம் கொண்டவனாக ஒரு முற்றுமுழுதான துறவியாக மாறிவிட்டான், நாளை மதியம் ரோட்டர்டாமிலுள்ள (rotterdam ) துறைமுகத்திலிருந்து கோவா துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் 15 நாட்கள் தொடர்ந்து பயணம் , சோபியாவிற்கு இருக்கும் ஒரே பயம் உலகப்போர் இப்போதுதான் முடிந்து ஒரு பிரளயமே ஓய்ந்திருக்கும் சமயத்தில் எங்காவது தனித்து விடப்பட்ட ஜேர்மனிய யு போர்ட் (U-boat) தனது மகன் செல்லப்போகும் கப்பலை குறிவைத்துவிடுமோ எனபதுதான், உலகப்போர்க்காலத்தில் ஏகப்பட்ட பயணிகள் கப்பல்கள் இப்படி யு போட்களால் துவம்சம் செய்யப்பட ஒருகாலத்தில் ஐரோப்பாவிலிருந்தான பயணிகள் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன, பயத்திலிருந்தவள் அதனை மகனிடம் கேட்டும்விட்டாள் ,வில்லியும் சிரித்துக்கொண்டே பயப்படாதீர்கள் அம்மா , ஒரு மாதத்திற்கு முன்னர் தான் என்னுடைய மூன்றாம் பிரிவு துறவிகள் எதுவித இடர்பாடுகளுமின்றி கோவா சென்றடைந்தனர், நீங்கள் பயப்படுமளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் மதியம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எதனையும் வெளிக்காட்டாது துறைமுகத்தின் இறங்குதுறையுடன் தொடுகையிலிருந்த கப்பலின் படிக்கட்டில் தனது உறவுகளை திரும்பிப்பார்த்துக்கொண்டே ஏறினார் வில்லி, தாய் சோபியாவோ அழுகை உச்சத்தில் வாயை பொத்திக்கொண்டு விசும்பிக்கொண்டிருக்க தங்கை அவள் தோளை இருகரத்தால் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தாள், தம்பியின் கையிலிருந்த டியூக் அவரிடம் ஓடிவர திமிறிக்கொண்டிருந்தது, இறுதியாக எல்லோரையும் பார்த்து கையசைத்த வில்லி கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எறும்பு போல தெரிந்தார், கப்பல் புறப்படபோவதற்கு முன்னர் கப்பல் கப்டன் தனது சமிங்ஞ்சையான அந்த காதினை செவிடாக்கும் ஒலியெழுப்பியை இயக்க பாபா.....ங்ங் என்ற சத்தம் முழு துறைமுகம் முழுக்க கேட்டது, மெதுவாக கப்பல் கண்களிருந்து மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தங்களது வாகனம் நோக்கி செல்லத்தொடங்கினர். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் உள்ளே சுலக்சனை காணவில்லை என்றதும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு, எங்கே போயிருப்பான் இவன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுலக்சனின் கை இவன் தோள்மீது விழுந்தது, சற்று பயந்துவிட்டான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் திரும்ப சுலக்சனோ என்ன ...முடிஞ்சுதா ....? ம்...நீ எங்க போனனீ ......? இது அவன் ங்கே ...நீங்க மட்டும்தான் மனுஷன் எங்களுக்கெல்லாம் வராது பாருங்க என்றான் சுலக்சன் சிரித்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்தியே எப்போ எழும்பின நீ ...? இது அவன் நீங்க பூனை நடையென்று யானை நடை நடந்தபோதே எழும்பிட்டன் . அதிருக்கட்டும் எங்க ரிலீஸ் பண்ணநீ ...? நான் குப்பை மேட்டுப்பக்கம் நீ ...? அதைத்தான் மச்சான் சொல்லவந்தனான் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்றும் விடாமல் சுலக்சனிடம் சொல்லிமுடித்தான். சொல்லிமுடிக்கும் தறுவாயில் சுலக்சன் பார்த்த பார்வையே சொல்லியது இவன் சொல்லிய எதையுமே அவன் நம்பவில்லை என்று, சரி ,நீ நம்பேல்ல தானே என்னோட வா உனக்கு என்ன நடக்குது என்று காட்டுறன், தலையை சொறிந்துவிட்டு சரி நட என்றுவிட்டு சுலக்சனும் அவன் பின்னால் நடக்கிறான், இருவரும் புதரை நெருங்கியிருப்பார்கள் சட்டென்று அவர்களை நோக்கி மெதுவான உறுமலுடன் எதுவோ ஒன்று வருவதை போல் தோன்றியது. இருவருமே அவ்விடத்தில் நின்று இருளை உற்று நோக்க வாயை திறந்து தன்னுடைய வேட்டைப்பற்களை காட்டியவாறு உறுமிக்கொண்டே பாயத்தயாராக நாயொன்று அவர்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது , இதுவரை எத்தனையோ நாய்களை பார்த்திருக்கிறான் எவற்றிலும் இந்த நாயின் கண்களை அவன் கண்டதில்லை அப்படியொரு இரத்த சிவப்பில் அந்த இரவு வேளையிலும் மினுமினுத்துக்கொண்டிருந்தது. ம...ச்...சா...ன் சுலக்சன் உடைந்த குரலில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக்கொண்டு இவனுடன் சேர்ந்து ஒவ்வொரு அடியாக பின்னேறிக்கொண்டிருக்க மாட்டினால் வெறும் எலும்புதான் என்பதை வேட்டை தோரணையில் முன்னேறிக்கொண்டிருந்த நாயின் பார்வையும் அதன் வாயிலிருந்து வடிந்த வீணியும் சொல்லாமல் சொல்லியது (தொடரும் )1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 point- பாவத்தின் சம்பளம்
1 point1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, புரட்டாதி 2013 முன்னாள்ப் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கத் தொடங்கியிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளை ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் கைங்கரியத்தில் கருணாவும் பிள்ளையானும் அரசாங்கத்தால் பணிக்கப்பட்டிருப்பதாக முன்னாள்ப் போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆண்கள் மற்றும் பெண் போராளிகளை பலவந்தமாக இணைக்க ஆரம்பித்திருக்கும் இத் துணை ராணுவக் கொலைக்குழுக்கள் அவ்வாறு இணைய மறுக்கும் போராளிகளின் பெற்றோரை அல்லது குடும்பஸ்த்தவர்களைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர் என்று இப்போராளிகள் தெரிவிக்கின்றனர். வாகரை, வெள்ளாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளில் முன்னாள்ப் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் துணைராணுவக் கொலைக் குழுக்கள் போராளிகளை மிரட்டி வருவதுடன் அவர்களைப் பலவந்தமாக ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இறுதிப் போரின்பின்னர் ராணுவத்திடம் சரணடைந்து, புணர்வாழ்வு எனும்பெயரில் கடுமையான உடல், உல சித்திரவதைகளுக்குப் பின்னர் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட பல போராளிகள் இன்னும் மன ரீதியிலான அழுத்தங்களுக்கு உட்பட்டே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பலர் திருமணம் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இப்போராளிகளை மிரட்டி ஆக்கிரமிப்பு ராணுவத்தில் இணைக்கும் கைங்கரியத்தினை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கொலைக்குழுக்களான கருணாவும் பிள்ளையானும் செய்துவருகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையினரால் ஏவப்படும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் எஜமானர்களால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரையில் ஒவ்வொரு துணைப்படை உறுப்பினரும் குறைந்தது இரு போராளிகளையாவது ஒரு மாதத்தில் ராணுவத்தில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படும் என்றும் கட்டளையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே கருணாவும் பிள்ளையானும், திருமணம் முடித்த அல்லது தனியே இருக்கும் ஆண் மற்றும் பெண் போராளிகளைக் கட்டாயப்படுத்தி இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இந்த பலவந்த ஆட்சேர்ப்புப் பற்றி மனிதவுரிமை அமைப்புக்களிடம் தெரிவித்தால் தாக்குதலுக்கு உள்ளகலாம் என்கிற அச்சத்தில் இப்போராளிகள் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ராணுவத்திடம் சரணடைந்து கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் நடைபிணங்களாக சமூகத்தில் உலவ விடப்பட்டிருக்கும் முன்னாள்ப் போராளிகளை ராணுவப் புலநாய்வுத்துறையும், துணைப்படைக் கொலைக் குழுக்களும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தனது வீட்டிற்கு வந்த ராணுவப் புலநாய்வுத்துறையினர் தனது வீட்டிற்கு வந்துபோகும் உறவினர்கள் பற்றிக் கடுமையாக விசாரணை செய்ததாக ஒரு பெண்போராளி கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னாள்ப் போராளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில நிவாரணங்களைக் கூட ராணுவப் புல்நாய்வுத்துறையினரும், துணைப்படைக் கொலைக் குழுவினரும் சந்தேகிப்பதாகவும், இவ்வாறான அரச சார்பற்ற அமைப்புக்கள் போராளிகளைச் சந்தித்த மறு நிமிடமே புலநாய்வுத்துறையினரும், கொலைக்குழுக்களும் போராளிகளை விசாரணைகளுக்கு இழுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் தம்மிடம் காண்பித்து கையொப்பம் இடும்படி தம்மைச் சித்திரவதை செய்யும் ராணுவப் புலநாய்வுத்துறை, ஒவ்வொருமாதமும் தம்மால் இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகப் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து போராளிகளின் ஒப்புதல் கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்வதாகவும், நிவாரணம் என்று இதுவரை அரசால் தமக்கு எதுவுமே வழங்கப்படவில்லையென்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நானும் உந்த லொட்டோ வாங்கிறனான்,வேலையில் 10 பேர் சேர்ந்து வாங்கிறது சிலநேரம் ஒரு ஆளுக்கு 5 டொலர் வரும் அதை அடுத்த முறை போடுவோம் ஒரு சதமும் விலாது ஆனால் நாங்கள் முயற்சியை கை விடவில்லை... நான் மறந்தாலும் பாட்னர்ஸ் மறக்க மாட்டினம் \1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 pointகாலம் ஒருநாள் கண்ணிவயல் கோபுர தீபம் நீங்கள் செங்கரும்பு தேன் மகளே எங்கள் படகுகள்1 point - பெண்மை எனும் நல் மனையாள் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.