Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88024
    Posts
  2. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    1962
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5896
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/31/22 in all areas

  1. "கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம் பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன். மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும் யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
  2. முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும் ------------------------- முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும் பாடுகள் ஒன்றானபோதும் கோடுகள் வெவ்வேறானது! முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட அனைத்துலகும் ஒன்றாய் நின்றது நன்றாய் அள்ளியும் கொடுத்தது! உக்கிரேனென்றதும் உலகம் மூன்றாய் நான்காய் முகம் காட்டி நடக்கிறது! எல்லா உயிர்களும் ஒன்றெனச் சொல்கிறோம் பதின்மூன்று ஆண்டுகள் முன் இவர்கள் எங்கே போயினர் பனியாய் உறைந்து போயா கிடந்தனர்! மேற்கின் தெருவெங்கும் கெஞ்சியும் அழுதும் யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க அனைத்துலகின் படிகளில் நின்றோம் ஆனாலும் நடந்தது என்ன வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?) கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர் கொலைக்கான அறிவும் கொடுத்தனர் கொலைக்கான வேவும் சொன்னார்கள் கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே மேற்கின் கூலிகள் வழி காட்டின எல்லாம் எம்மினக் கொலைக்காகவே! பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் ஜீ ஏழு நாடுகள் குழுவும் உக்கிரேனென்றதும் உடனே கூடுது ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே கண்டனம் செய்தே தடைகளை போட்டன! மனித உயிர்கள் ஒன்றெனும் அதனை மதித்து நடத்தல் அரசுகளின் கடனென்றும் அடிக்கடி கூறிடும் ஐநாவே பதின்மூன்றாண்டின் முன் எங்கேபோனது உன் சமன்பாடு! முள்ளிவாய்க்காலில் உன் முகம் இழந்து போனாயே! உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே என்ற உணர்விலே வாழும் தமிழனோ பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன் பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன் இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர் காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால் எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம் எங்கே ஒருமுறை சிந்திப்பீரா எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா? அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
  4. முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால். அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......? தொடருங்கள் ரகு...
  5. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
  6. அருமையான திருவிழா முடிவுற்றது..! 😔 நாளை அதிகாலை 3 மணி வரை கொண்டாட்டம், வாண வேடிக்கைகள் உள்ளன. 😍 Now Recorded version is available in the same link below.
  7. தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான். மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான். இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்". மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான் படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு. "சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான். மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)
  8. அதெல்லாம் முடியாது.. கருத்து எல்லாம் எழுதாம இருக்கமுடியாது.. நாலுபேர் வந்து சொல்லுவினமாம் நாங்கள் கருத்து எழுதாமல் இருக்க யாழ் என்ன அந்த நாலுபேர் வீட்டு அப்பன் ஆத்தா சொத்தா..? நிர்வாகம் அடிச்சுக்கலைக்கும் வரை நாங்கள் கருத்து எழுதிக்கொண்டேதான் இருப்பம்.. கப்பித்தன் அப்படி எல்லாம் அவசரப்பட்டு கருத்து எழுதமாட்டன் எண்டு வார்த்தையை விடாதேங்கோ.. அப்புரம் இவர்கள் உருட்டுற உருட்டை எல்லாம் வாசகர்களுக்கு மறுத்து எழுதுறது ஆராம்.. அதமாரி நாம உருட்டரப்போ மற்றவர்களும் எழுதோனும்.. அப்பதான் கருத்துக்களம் உசிரோட இருக்கும்.. சரியெண்டா சரியெண்டு சொல்லி பாராட்டுவம் தவறு எண்டால் தவறை சுட்டி காட்டி எழுதுவம்.. நாலுபேர் நாலுகருத்து எழுதி விவாதிக்காட்டி ரஞ்சித்தின்ர திரி ஒரே ஆமாப்பாட்டில சப்பெண்டு போயிடும்.. ஒருத்தனும் வாசிக்க வரான்.. இந்த ஆமாம் சாமியளை பக்கத்தில வச்சிருந்தா எப்பவும் வச்சிருக்கிறவருக்கு ஆபத்துதான்.. அதெல்லாம் முடியாது எழுதாமல் இருக்க..
  9. புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம். மச்சான் அமுதன், உன் கடிதமும் நீ அனுப்பிய 50000 இலங்கை ரூபாயும் கிடைத்தது. அதை இங்கே மாற்றி 4999 யூரோவாகஎடுத்து கொண்டேன். உனது காலம் கருதிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ? எப்போசெய்ய முடியுமோ? தெரியவில்லை மச்சான். எங்கட வெசாயில்ஸ் பக்கம் எல்லாம் சண்டைல அழிஞ்சு போச்சு மச்சான். இப்ப இஞ்ச பரிசுக்கு, எங்கடஆக்கள் இருக்கிற லாச்சப்பலுக்கு வந்திருக்கிறன். இஞ்ச ஒவ்வொரு ரோட்டிலும் 90% போல தமிழ் ஆக்கள்கடையள்தான். இப்ப பாதி எரிஞ்சும், ஏரியாமலும் இருக்கிறத பாக்க வயிறு எரியுது மச்சான். மச்சான் உண்ட கடிதத்தோட எங்கட பழைய பள்ளிக்கூட முன் வாங்கு நண்பன் படான்ஸ் எழுதினகடிதத்தையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து வச்சிருந்தாய் மச்சான். இந்த மரண அவஸ்தையிலும் அதைவாசிச்சு வாய் விட்டு சிரிச்சன் மச்சான். அதுவும் “படான்ஸ் இன்னும் மாறவே இல்லை” எண்ட உன்ர கொமெண்டை வாசித்து விழுந்து விழுந்து சிரிச்சன் மச்சான். அவன்ர கதையள் எப்பவும் படான் கதையள் தானே மச்சான். அதானே ஆளுக்கு படான்ஸ் எண்டு பெயர்வச்சனாங்கள். ஆனால் அவன் நல்லவன்ரா. சும்மாவே படுத்திருந்து விட்டத்தை பார்த்து விதம் விதமா வாழ்க்கை தத்துவம்பேசுவான், இப்ப ஆரோ ஒரு பின் லாடன் அவனை பிடிச்சு நல்லா உரு ஏத்தி இருப்பான் போல கிடக்கு. வாயதிறந்தா டெத் டு அமெரிக்கா எண்டு கொண்டு திரியிறான். பாவம். கெதில காரை கொண்டுபோய் வெள்ளையள்மேல ஏத்துற அளவுக்கு மாறிடுவானோ எண்டும் பயமாகிடக்கு. சரி படான்ஸ் சொன்ன விசயங்கள் பற்றி பிறகு விளக்கிறன், அதுக்கு முதல் நீ உக்ரேன் பற்றி அரைகுறைவிளக்கத்தோட சிலதை கேட்டிருந்தாய் அதை ஒருக்காய் பாப்பம். மச்சான் - உக்ரேனில் பெண் படையணி இருக்கெண்டு கேட்டிருந்தாய். உண்மைதான். நான் இல்லை எண்டுசொன்னானே? ஆனால் ஆண்களை போல பெருவாரியாக பெண்கள் சண்டைக்கு போகேல்ல மச்சான். கணிசமான பெண்கள் சண்டைக்கு போக பெரும்பாலன பெண்கள், குழந்தைகள் தப்பித்தான் வந்ததுகள். கனஇடங்கள்ள உக்ரேனிய ஆம்பிளையள் சண்டை எண்டதும் போடர் வரை வந்து பிள்ளை குட்டியை விட்டுட்டுதிரும்பிபோனது உண்மை மச்சான். அதே போலதான் உக்ரேன் டிரைவர் மார் உட்பட பல உக்ரேன் புலம்பெயர்ந்தவர்கள் சண்டை பிடிக்க ஊருக்கு போனதும். பிறகு அங்க எல்லா ஆண்களுக்கும் கட்டாய சேவை அதுதான் வர முடியாது எண்டும் சொல்லி இருந்தாய். ஓம்இதையும் நான் இல்லை எண்டு சொல்லேல்ல மச்சான். ஆனால் தலைவரும்தான் கட்டாயம் ஒராளாவது வீட்டுக்கு வர வேண்டும் எண்டு எங்களிட்ட கேட்டவர்தானே? நாங்கள் நிண்டனாங்களே? நாளைக்கு சாகப்போற கிழடுகளை பாஸ்-பிணை வச்சிட்டு உச்சி எல்லேஓடியந்தனாங்கள். அப்படி உக்ரேன் ஆம்பிளையள் அதிகம் ஓடி வந்திருந்தால் ரஸ்யாவை தடுத்து அடிச்சிருக்க முடியாதுதானேமச்சான். அததான் சொல்லுறண்டா. இனியாவது மேலோட்டமா வாசியாமல் கொஞ்சம் ஊண்டி படி சரியே. நான் உக்ரேனியனிட்ட எதையோ வாங்கி குடிக்க சொன்னதும் உனக்கு ரோசம் வந்திட்டு போல. ஆனால் நான்சொன்னதுதான் உண்மை மச்சான். உந்த ரோசம் எல்லாம் நாங்கள் ஊரில நிண்டு சிறிலங்காவிட்ட காட்டிஇருக்க வேண்டும். சரி இனி படான்ஸ் சொன்னதுக்கு வாறன். மச்சான் எமக்கு அடிச்சது எல்லாரும் சேர்ந்துதான் மச்சான். நேட்டோவிண்ட சட்டிலைட் படத்த பார்த்து, ரஸ்யன் விமானத்தில, உக்ரேன் விமானிகள், இந்தியா சீனாகொடுத்த குண்டை போட்டவங்கள். ஆக எமக்கு அடிக்காதவன், அடிச்சவன் எண்டு இதில் நாம் யார் பக்கமும் எடுக்க முடியாது மச்சான். ஆனால் 2ம் உலக யுத்தத்தில் தன்னை அழித்த அமெரிக்காவையே ஆசியாவில் தனது 1ம் நண்பன் என நம்பும்நிலைக்கு கொண்டு வந்த ஜப்பான் மாரி நாங்கள் இவங்களோட டீல் பண்ணி இருக்க வேண்டும் மச்சான். இப்படி உலக வெடிப்புகள் வரும் போது அதை சாதுரியமாக தமக்கு சார்பா திருப்பிற இனம்தான் வெல்லும்மச்சான். நாங்கள் ஊரில இருந்து ஓடி வந்து கூட்டம் கூட்டமா ரஸ்யாவிலும் பெலரோசிலும் வாழவில்லைதானே மச்சான்? கிழக்கு ஜேர்மனி போன ஆக்கள் கூட மேற்கு ஜேர்மனிக்கு ஓடி வந்ததை அவை மறக்கலாம், நான் மறக்கேல்லமச்சான். ஆகவே ரஸ்யா போல ஊரில் எமது இனத்தின் அழிப்பில் மேற்க்குக்கும் பங்கு இருக்கிறது எண்டாலும், ரஸ்யாவை போல அன்றி புலம் பெயர் தேசம் எங்கும் எமது இனம் தழைக்க, நாம் வாழ்க்கையை கட்டி எழுப்ப, எமது பலத்தை ஒருங்கிணைக்க, உதவியது இந்த நாடுகளும் அவற்றின் ஜனநாயக, பல்லின, சகிப்புத்தன்மைபண்பும்தான் மச்சான். இதற்க்கான பிரதியுபகாரம்தான் மச்சான் நான் சொன்ன விசுவாசம். ஆனால் இது நிபந்தனை அற்ற விசுவாசமாக இருக்க தேவையில்லை மச்சான். எம் இன நலன் சார்ந்து இருக்க வேண்டும். இரெண்டு தரப்பும் எமக்கு கெடுதல் செய்தாலும் ஒரு தரப்பு கெடுதல் மட்டுமே செய்ய மறுதரப்புஇரெண்டையும் கலந்து செய்துள்ளது மச்சான். தவிரவும் உனக்கு ஒண்டு வடிவா விளங்க வேணும் மச்சான். இந்த உலகில் தார்மீகமான வெளியுறவு கொள்கை(ethical foreign policy) எண்டு ஒண்டு இல்லை மச்சான். மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ, ஈரானோ, ஏன் சின்னம் சிறு கிரிபாட்டி தீவோ, எல்லா நாடும்தன்னலமான வெளிநாட்டு கொள்கையைதான் (self interest based foreign policy) கைக்கொள்ளுது மச்சான். இதில் நல்லவன் கெட்டவன் யாருமில்லை மச்சான். மேற்க்கு மீது வைக்கும் எல்லா குற்றத்தையும், ரஸ்யா மீதும்வைக்கலாம். ரஸ்யா மீதுவைக்க்கும் எல்லா குற்றத்தையும் மேற்க்கு மீதும் வைக்கலாம். ஆகவே சும்மா விழலுக்கு நியாயம் பிளக்காமல் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும், ஒட்டு மொத்த உலக தமிழ்இனத்திற்கும் நீண்ட, மத்திய, குறுகிய கால அடிப்படையில் யார் பக்கம் நிற்பதால் இலாபம் என மட்டும்தான்மச்சான் நாங்கள் பார்க்க வேண்டும், பார்க்க முடியும். இலங்கை புலம் பெயர் அழுத்தத்துக்கு பயப்படுகிறது எண்டால் அது ரஸ்யாவில இருக்கிற தமிழ் ஆக்களாலயோமச்சான்? இல்லைத்தானே? இப்ப இந்த உலக யுத்தத்தில ரஸ்யா வெண்டால் - நாங்கள் இனி மொஸ்கோ, விளாடிவொஸ்டொக், சென்பீட்டர்ஸ்பேக் எண்டு போய் (போகவிட்டால்) பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சு, அங்க பரவி, பெற்றோல்செட் வாங்கி, அங்க லோக்கல் எம்பிமார் எங்கட குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அளவுக்கு வளந்து வர எத்தனைபத்தாண்டுகள் பிடிக்கும் மச்சான்? அதுகுள்ள இலங்கையில பிக்குமார் எங்களுக்கு சுண்ணாம்பு தடவிமுடிச்செல்லே இருப்பாங்கள். 2009 க்கு பிறகு புலம் பெயர் தமிழர் இந்த இனத்தின் பெரிய பலம் எண்டால் - அந்த பலம் தங்கி இருப்பதுஉலகில் நேட்டோ/ மேற்கு மேலாண்மை செய்யும் வரைக்கும்தான் மச்சான். இதை விளங்கி கொண்டால் நாம் எந்த பக்கம் நிண்டிருக்க வேண்டும் என்பதை கண்ணை மூடி கொண்டுசொல்லி இருக்கலாம். அடுத்து மனிதாபிமானம் பற்றி. மச்சான் உண்மையை சொல்லுறன். ஒரு ஏதிலி தமிழனா நான் செய்ய கூடியதுஇன்னொரு ஏதிலிக்கு அனுதாபப்படுவது மட்டும்தான் மச்சான். அது உக்ரேனிய ஏதிலியா இருந்தாலும், டொன்பாசில் இருக்கு ரஸ்ய வம்சாவழி ஏதிலியா இருந்தாலும், ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய, கறுப்பின ஏதிலியா இருந்தாலும் அத்தனை பேருக்கும்இரக்கப்படுவதில், தப்பு ஒண்டும் இல்லைத்தானே மச்சான். ஏதோ எங்களில ரஸ்ய, உக்ரேனிய ரத்தம் ஓடுமாப்போல சில தமிழ் ஆக்கள் ஏன் குத்தி முறியினமோ தெரியாதுமச்சான். அரசியலுக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் எங்கே துன்பப்பட்டாலும் அதை வெளிகொணரும், அனுதாபப்படும்குறைந்த பட்ச மனிததன்மை கூட எம்மில் சிலருக்கு இல்லை மச்சான். அதை விசிலடிச்சு ஸ்கோர் கேட்டுகொண்டாடியது எல்லாம் வேற லெவல் மச்சான். வடிவா கவனிச்சு பார் மச்சான், இப்படி கொண்டாடிய தமிழர்கள் பலர் அநேகம் இலங்கை ஆமி கொக்கு சுடுறதுவக்கோட திரிஞ்ச 85 காலத்துக்கு முதல் ஊரை விட்டு கிளம்பின ஆக்கள்தான். அவையள பொறுத்த மட்டில் இது Sony PS 5 இல் அவையளின் பேரப்பிள்ளையள் விளையாடும் Mortal Kombat போல இன்னொரு கேம். பதுங்கு குழிக்குள் படுத்திருந்த, மிக் வீசிய குண்டில் உயிரோடு மணலுக்குள் புதைந்து போன நண்பனைவெறும் கையால் கிளறி எடுக்க முனைந்த, நவாலி தேவாலய, செஞ்சோலை சதைகளை கைகளால் கூட்டிஅள்ளிய எந்த தமிழனுக்கும் அதே கொடுமை இன்னொருவனுக்கு நடக்கும் போது ரசித்து விசிலடிக்க மனம்வராது மச்சான். அது ரஸ்யனோ, உக்ரேனியனோ. கடசியா இவன் படான்ஸ் சொன்ன வெள்ளைகாரனுக்கு சூ (சப்பாத்து) துடைக்கிற விசயம் பற்றி. மச்சான் ஊரில சொந்த துவக்கை துடைச்சு ஆம்பிளையா, வீரமா, கெத்தா வாழ விருப்பம் இல்லாமல்வெள்ளைகாரன்ர சூ துடைச்சாவது உயிரோட வாழ்ந்தால் போதும் எண்டு ஓடி வந்த ஆள்கள்தானே உடான்சும், படான்சும்? இப்ப திடீரெண்டு அது கசக்குதோ? நாங்கள் படிக்க, உழைக்க, கார் வாங்க, வீடு வாங்க, பிள்ளை பெற, நோய் வாய்பட்டால் மருந்து தர, இலவசமாக உலகில் முதலாவாதாக வக்சீன் தர, வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊரில் போய் கும்மிஅடிக்க - இதெல்லாம் செய்யயுறதுக்காக வெள்ளைகாரனின் சூ துடைக்கும் போது எமக்கு உறைக்கவேஇல்லை மச்சான். ஆனால் சண்டை எண்டோனதான் மச்சான் நாங்கள் இதுவரை துடைத்து கொண்டிருந்தது வெள்ளைகாரன் சூஎன்று நியாபகம் வருகுது எங்களுக்கு. அப்ப கூட இன்னொரு வெள்ளைகாரனுக்கு சூ துடைப்பதில்தான் எமக்கு ஆர்வம் மச்சான். இதுதான் மச்சான் எங்கட புலம் பெயர் தமிழ் இனம். தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவைக்கு ஒரு நியாயம். வாய்க்கு வசதியா புரட்டி புரட்டி கதமட்டும் நல்லா வரும். இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான். சரி மச்சான். நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன். நட்புடன், அன்பு நண்பன் உடான்ஸ்
  10. பாலபத்திர ஓணாண்டியாரே... நீங்கள் சொல்வது சரியான கருத்து. ரஞ்சித்.... மற்றவர்களை கருத்து எழுத வேண்டாம் என்று, எல்லோருடைய கைகளையும் கட்டிப் போட்டு, தனிய நின்று.. முள்ளிவாய்க்காலை.... உக்ரேனுடன் உருட்டி, விளையாட பிளான் போட்டிருக்கிறார். அதனை... கண்டு பிடித்த உங்களுக்கு நன்றி. 👍 👏🙏 🙂
  11. கொழும்பான், உங்கள் எழுத்து நடை ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு உரிய எழுத்து நடை. நின்று நிதானமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் அனுபவத்தை போல எத்தனையாயிரம் அனுபவங்கள் எம் மக்களுக்கு. வெள்ளைத் தோலும் நீல நிற கண்களும் எமக்கும் இருந்திருந்தால் எம் துயரத்துக்கான நியாயமாவது கிடைத்து இருக்கும். தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.
  12. மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.
  13. யாழுக்கான ஆக்கம் சரிதான். அதற்காக எல்லா ஆக்கங்களுக்கும் தொடருங்கள் அல்லது வாழ்த்துக்கள் என்று சும்மா போய் விட முடியாது. ஜேர்மனியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் உக்ரேனின் உண்மை முகமும் அவர்களின் கள்ளத்தன அரசியலும் இந்தியாவை விட ஊழல்களும் நிறைந்த நாடு அது. சகல உரிமைகளுடனும் வாழும் மக்கள் உள்ள நாடு அது. ஆனால் ரஷ்ய மொழி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கவும் அவர்கள் பின்னிற்பதில்லை. எந்தவொரு உரிமையுமில்லாத ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் அழிவையும் சகல உரிமைகளுடன் வாழும் உக்ரேனின் அழிவையும் ஒப்பிடுவது முழுமையான விசமத்தனம்.
  14. நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும். ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன். அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர். “உனது ஐடியைத் தருகிறாயா?” “என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்” “யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே” “ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?” எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன். “ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள் கறுவினாலும் வெளியே சொல்லவில்லை. அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி. கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான். “நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன். அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான். அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான். நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது. அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள். அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன். அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான். ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன். அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். ... ........
  15. உண்மை சகோ அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இவ்வுலகில் முள்ளிவாய்க்கால் மீண்டும் வரவேண்டி இருக்கிறது அந்த அவலத்தையும் நாம் மனமொத்தன்றியும் இணைத்து குழைத்து செல்லவேண்டியும் இருக்கிறது. இது தான் நிஜம்.
  16. நன்றி, இதுதான் உண்மையிலேயே நமக்கு தேவை, வெறுமனவே உக்கிரைனுக்கு விழும் அடியையும் அதன் அழிவை ரசிப்பதை விட்டு விட்டு , இதை வைத்து இனி இப்பிடி ஏதாவது எங்களுக்கு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும், நீ முன்பு எங்களுக்கு துரோகம் செய்தாய் என்று குளத்துடன் கோபித்துக்கொண்டு ஒன்றுமே நடக்க போவதில்லை.
  17. சின்ன திருத்தம் பெருமாள். வீடுவளவு கட்டடங்கள் மக்கள் இன்னும் பல இனாமாக .
  18. இதென்ன பேய்/பிசாசு கதையோ? ஏற்கனவே Night Stalker பார்த்துவிட்டு செம கலக்கத்தில இருக்கிறேன்.. இனி இதற்குள் வரவில்லை நன்றி. வணக்கம்
  19. என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!! ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!! நன்றி.
  20. சிகரட் நுனியில்... பஞ்சு, ஏன் உள்ளது?
  21. வைத்தியசாலைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பிலும் புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் மருத்துவமனைகள் இலங்கை ராணுவத்தாலும் விமானப்படியினராலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டும் எம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். வைத்தியசாலைகள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட, ஒருங்கைமைக்கப்பட்ட தாக்குதல்களை குறைந்தது இரு சர்வதேச செய்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக சாட்சிப்படுத்திவருகின்றன.இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரொப்பா சந்தித்திருக்கும் மிக மோசமான அழிவு யுத்தத்தில் இத்தாக்குதல்கள் போர்க்குற்ற்ங்களாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இச்செய்தி நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்ச் சேகரிப்பில், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், சிவிலியன் குடியிருப்புக்கள் மற்றும் சிவிலியன் கட்டுமானங்கள் மீதும் ரஸ்ஸியா வேண்டுமென்றே நடத்திவரும் திட்டமிட்ட அழிப்பும் உள்ளடக்கப்பட்டு வருகிறது. இச்செய்தி நிறுவனங்களின் கருத்துப்படி, உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் அழித்தொழிப்பு யுத்தம் நடக்கும் காலம்வரை இத்தகவல்கள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு வரும் என்று தெரியவருகிறது. இவ்வாறு தகவல் சேகரிப்பதன் நோக்கம் ஒன்றுதான். அதாவது, பக்கச்சார்பற்ற, உண்மையான அழிவுகளையும், மக்கள் இறப்பையும் ஆவணப்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளுக்கெதிரான சாட்சியங்களைத் தொகுப்பதுதான். இச்செய்தி நிறுவனங்களில் ஒன்றான அஷோஷியேட்டட் பிரஸ் அமைப்பு, காணொளிச் சாட்சிகளாகவும், ஒளிப்படங்களாகவும் பல சாட்சியங்களைச் சேகரித்து வைத்திருக்கிறது. அத்துடன், உக்ரேனுக்கு வெளியில் இயங்கும் நிருபர்கள் போரரங்கிலிருந்து தப்பிவரும் மக்களிடமிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும், இழப்புக்கள் பற்றியும் அறிந்து பதிவிடுவதோடு, சமூக வலைத் தளங்களில் பலராலும் தரவேற்றப்பட்டு வரும் ஒளிப்படங்கள் மற்றும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையினையும் உறுதிப்படுத்தி வருகிறார்கள்ர்கள். ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையம் ரஸ்ஸியாவின் தாக்குதல் தொடங்கிய நாளிலிருந்து முதல் நான்கு வாரத்தில் மட்டுமே கொல்லப்பட்ட பொதுமக்களின் இழப்புக்களைப்பற்றிக் குறிப்பிடும்போது, குறைந்தது 1035 சிவிலியன்கள் ரஸ்ஸியாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. இதில் 90 குழந்தைகளும் அடங்குவதாக அது தெரிவிக்கிறது. இதற்கு மேலதிகமாக குறைந்தது 1650 சிவிலியன்கள் இத்தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதே ஐ நா அறிக்கை இத்தாக்குதல்கள் பற்றி மேலும் கூறுகையில், "முற்றாக அழிக்கப்பட்டு, வீழ்ந்து நொறுங்கியிருக்கும் கட்டிடச் சிதைவுகளுக்கடியில் இன்னும் பலநூற்றுக்கணக்கான மக்கள் இறைந்து கிடக்கவும் வாய்ப்பிருக்கின்றது" என்று கூறியிருக்கிறது. மேலும், மிகக்கடுமையான தாக்குதல்களும், மோதல்களும் நடந்த பகுதிகள் தற்போது ரஸ்ஸிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் உண்மையிலேயே கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை என்பது ஐ நா வினால் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிரது. இது, தமிழ் இனவழிப்பின் ஆரம்பகாலத்தில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பல தமிழ்க் கிராமங்களில் இருந்து காணாமலாக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலைக்கு ஒப்பானது என்றால் அது மிகையில்லை. ஆனால், தனது தொடர்ச்சியான கண்மூடித்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்திவரும் ரஸ்ஸியா, பொதுமக்கள் எவருமே இத்தாக்குதலில் கொல்லப்படவில்லையென்றும், கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் அனைவருமே நடிகர்கள் என்றும் விடாப்பிடியாக மறுத்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது 2008 இலிருந்து 2009 வரை வன்னியின் கொலைக்களங்களில் எம்மை அழித்த மகிந்த எனும் போர்க்குற்ரவாளியின் மேற்கோளான, "நாம் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்றினையே அங்கு மேற்கொள்கிறோம். ஒரு தமிழ் மகணுக்கும் இழப்பு ஏற்படாதபடி நாம் யுத்தம் செய்கிறோம். கொல்லப்பட்டதாகக் காட்டப்படும் அனைத்துமே புலிகளின் பிரச்சாரம் தான்" என்று தனது தாக்குதல்களை நியாயப்படுத்தியதை நாம் இத்தருணத்தில் நினைவுபடுத்துவது தற்போதைய உக்ரேன் நிலைமையினை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். தொடரும்
  22. உக்ரேனில் ரஸ்ஸியா நிகழ்த்திவரும் போர்க்குற்றங்கள் கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலான காலப்பகுதியில் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனின் மருத்துவமனைகள், காயப்பட்டோரைப் பராமரிக்கும் நிலையங்கள், நோயாளர் காவு வாகனங்கள், வைத்தியர்கள், காயப்பட்ட பொதுமக்கள், பாலகர்கள் என்று பல சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட இத்தாக்குதல்களில் குறைந்தது 34 வைத்தியசாலைகளும், நோயாளர் பராமரிப்பு நிலையங்களும் ரஸ்ஸியாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் இத்தாக்குதல்களை தொடர்ச்சியாகச் சேகரித்து வருகின்றன. இவ்வாறான ஒவ்வொரு தாக்குதலின்பொழுதும் ரஸ்ஸியாவின் சர்வாதிகாரி புட்டினுக்கும், அவரது ஏவலாளிகளான ரஸ்ஸிய ராணுவ ஜெனரல்களுக்கும், புட்டினின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும் எதிரான பலமான போர்க்குற்ற விசாரணைக்கான கூக்குரல்கள் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டு வருகின்றன. இவர்கள் மீதான போர்க்குற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு இத்தாக்குதல்கள் வெறும் தற்செயலானவை என்றல்லாமல், வேண்டுமென்றே இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் என்பது உறுதிப்படுத்தப்படுதல் அவசியம். ஆனால், தொடர்ச்சியாக நடந்துவரும் இத்தாக்குதல்களைப் பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகவும், மிகக் கடுமையாகவும் நடத்தப்படும் இத்தாக்குதல்கள் உக்ரேனின் பலவீனமான வயோதிபர்கள், சிறுவர்கள், நோயாளிகள், காயப்பட்டவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் வைத்தியசாலைகளும் மருத்துவ நிலையங்களும் வேண்டுமென்றே இலக்குவைத்து தாக்கப்பட்டு வருகிறது என்பது புலனாகிறது. சிவிலியன் கட்டடங்கள் மீது ரஸ்ஸியாவினால் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அப்பகுதிக்கு உடனடியாகச் சென்ற பல சர்வதேச செய்தியாளர்கள் பல குழந்தைகளின் உடல்கள் குண்டுச் சிதறல்களால் சல்லடை போடப்பட்டு, உடல்ப் பாகங்கள் பிடுங்கியெறியப்பட்ட நிலையில் அப்பகுதியெங்கும் சிதறிக் கிடந்ததை சாட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறான உருக்குலைந்து கிடந்த பல அடையாளமற்ற சடலங்களை அத்தாக்குதலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பாரிய புதைகுழிகளுக்குள் போட்டு மூடியதை அவதானித்திருக்கிறார்கள். "இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது , இவை வேண்டுமென்றே சிவிலியன்களை இலக்குவைத்து, பாரிய மனித அழிவை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆகவே இவை போர்க்குற்றங்களாக கருதப்படக் கூடியவைதான்" என்று நியு யோக் பல்கலைக் கழக சட்டத்துறைப் பேராசிரியர் ரையன் குட்மான் கூறுகிறார். "இப்போர்க்குற்றங்களை விசாரிப்பவர்கள், எத்தனை மருத்துவமனைகள் தாக்கப்பட்டன, ஒரே மருத்துவமனை எத்தனை முறை தக்கப்பட்டது, ஒவ்வொரு தாக்குதலுக்கும் இடையில் எவ்வளவு நேர இடைவெளி இருந்தது என்பதையெல்லாம் கணக்கிடுவார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார். தொடரும்
  23. எழுத்து நடை நன்றாக உள்ளது, வாசிக்க ஆவலாக உள்ளோம், தொடருங்கள் கொழும்பான்.
  24. நாங்க யாழில் சாமத்திலயும் நிக்கிறனாங்க அமானிய தொடரில பேய் பிசாசு ஏதாச்சும் கொண்டந்துடாதீங்க..தொடருங்க..✍🤭
  25. நீங்கள் கேட்டது ஒரேஒரு கதை தான். எழுத முடியா கதைகள் எல்லாமே மண்ணோடு மண்ணாக இருக்கிறது.
  26. நீங்கள் உளமார செய்யும் கடமைக்காக உங்களைப் போற்றுகின்றேன் கொழும்பான்.நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.......! அந்த அன்பருக்கு ஏற்பட்டதுபோல் ஒரு அனுபவம் அல்லது அதைவிட அதிகமாக என்றும் சொல்லலாம். எல்லாம் எழுத முடிவதில்லை. அதே இந்தியன் ஆமி காலத்தில் ஒருவருக்கு நடந்தது தெரியும்.....அதுதான் எனக்கு உந்த இராணுவங்களையோ அன்றி அவங்கள் நாட்டில் ஏற்படும் பேரழிவுகளையோ பார்க்கும்போது மனம் மரத்து விடுகிறது.....!
  27. @Kapithan வணக்கம் அண்ணா, அவர் முதலே உங்கள் எல்லோரிடம் கேட்டிருந்தார்.. ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் எழுதியிருந்தார்.. ஆனால் ஒருவரும் கவனிக்கவில்லை???? கவனித்திருந்தால் நேரத்தை வீண் விரயமாக்கியிருந்திருக்க மாட்டீர்கள்.. உண்மையில் உங்கள் எல்லோருக்கும் துரோகத்தின் நாட்காட்டி எழுதும் அவரால் நீங்கள் நினைப்பது போல இருக்கவில்லை என்ற கோபமோ என நினைக்கிறேன். அங்கே கூட அவர் அப்படி எழுதுவதை ஒருபட்ச கட்டுரை என சிலர் கூறினார்கள் பின் அவர் கேட்டுக்கொண்ட படி விலகியே இருந்தார்கள். இங்கே மட்டும் இது தனது சொந்த ஆக்கம் என கூறியபின்பும் எத்தனை இடையூறுகள்.. நன்றி..
  28. நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்னை இட்டுச் சென்றது மீள முடியாத பெரும் சுழி அது தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் சில கணங்களும் பின் விலகி எதிர் துருவங்களில் சில கணங்களுமாக நேர் கோட்டிலும் குறுக்குவாட்டிலும் பின் சிறுத்தும் பரந்தும் சுருங்கியும் விரிந்தும் என்னை இறுக்கி பிழிந்து உயிர் குடிக்கும் பெரும் சுழி அது மூச்சிழந்து கிடந்தேன் உடல் மரத்து வேர்வை ஆறாகி பெருக தப்ப வழியற்று தப்பும் ஆசையும் அற்று அதன் நெடிய கரங்களுக்குள் இன்னும் நெருக்கிக் கொண்டு அலைக்கழிந்தேன் ஈற்றில் முன்னை இட்ட தீ சுழிக்குள் தகித்து எரிய கடலில் சாம்பலாகி அலைகளில் துகள்களாகி கோடிக்கணக்கான அணுக்களாகி கரைந்தே போனேன். நேற்று என் கனவில் கடல் வந்தது இமைகள் திறந்த பொழுது அந்தக் கடல் வற்றிக் கொண்டது வற்றிப் போக முன் என் அறையெங்கும் சேற்று மணத்தை நிரப்பி விட்டுச் சென்றிருந்தது... March 27, 2022
  29. தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது......! 😍
  30. அநியாயத்திற்கு அளக்காதீங்கப்பா..☺️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.