Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7051
    Posts
  4. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    4042
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/01/24 in all areas

  1. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
  2. புலம் பெயர்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு உயிராபத்தை தவிர்க்க இருக்கும் வசதியை கொண்டோ எவர்கிட்டையாவது கடன் வாங்கியோ மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்கள் என்றால் மீதி முக்கால் பங்கு நிச்சயமாக வசதியான வாழ்வை தேடி புலம்பெயர்ந்தவர்களே அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. இங்கு வேலை செய்துகொண்டு தனிமனிதனாக வாழும்வரை வாகனம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் வாழலாம் மறைக்க ஒன்றுமில்லை. தாயகத்திலும் அதே நிலைதான் தனி ஒருவனாக வாழும்வரை நட்பு வட்டம் வாகனம் ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்குதான் பிரச்சனைகள் ஆரம்பிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்று ஆகும்போதுதான். தாயகத்திலிருப்பவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்குள்ள அடிப்படை வசதிகளே இலங்கையில் மிக பெரும் கோடீஸ்வரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள். அதற்காக அதனை ஆடம்பர வாழ்க்கை என்றோ அல்லது வசதியான வாழ்வென்றோ கருதினால் அவற்றை ஒதுக்கி வாழ முற்பட்டால் ரயில் நிலையங்களிலும் வணிக வளாகங்களின் ஓரங்கள், பாலங்களின் அடியில்தான் குடும்பத்துடன் தூங்கவேண்டும். கார் வைத்திருப்பதினால் இங்கு ஒருத்தன் ஆடம்பர வாழ்வை சுவைப்பவன் என்று ஆகிவிட முடியாது , கார் இல்லையென்றால் இங்கு ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைக்கான பயணங்களின்போது அவன் பாதிநாள் தெருவிலேயே கழிந்துவிடும். ஒருவாரம் வேலைக்கு போகாவிட்டால் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதனால் ஏற்பட்ட பண நெருக்குவாரம் தொடர்கதையாகவே செல்லும், ஏனென்றால் சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிக வருவாயை ஈட்டுவது என்பது சுலபமான காரியமல்ல , அதைவிடுத்து வருத்தின் 60%மான காலம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு காலநிலையுடனும் போராடவேண்டும், இந்த இரண்டுடனும் போராடிக்கொண்டே தாயக போராட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்தில் தம்மால் முடிந்த அளவிற்கு உதவிக்கொண்டும் இருப்பவர்கள் ஏராளம் ஏராளம், எடுத்த எடுப்பில் நாம் ஒரு முடிவாக வார்த்தைகளை வீசினால் நிச்சயம் அது பலரின் உயர்வான எண்ணத்தை உதவும் குணத்தை ஏளனபடுத்தும் செயலாகவே அமையும். இங்கே வணிகம் செய்து வாழ்பவர்கள் அனைவருமே பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களல்ல, பெரும்பாலானோர் பண புரட்டல் வண்டி ஓட்டுகிறவர்கள் அவர்கள் வாழ்வு தனி மனிதரைவிட மிகவும் அபாயமானது எந்த நிமிடம் வேண்டுமானாலும் மீளவே முடியாத அதல பாதாளத்தில் சிக்கி கொள்ளும் நிலை வரலாம் மாணவர்களாயிருப்பவர்களும், கல்வியினால் தொழில் வாய்ப்பு பெற்றவர்களினதும் நிலமை மிகவும் இக்கட்டானது சாதாரண மக்களாவது நிதி நெருக்கடி என்று வரும்போது எந்த கடினமான தொழில் என்றாலும் இறங்கி செய்து வண்டியோட்ட முயற்சிப்பார்கள், ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நெஞ்சுக்குள் இடி இடிக்க யோசித்துக்கொண்டு நிற்பார்கள், இங்கே ஏற்ற குறைவாய் யாரையும் குறிப்பிடவில்லை, அவர்கள் வாழ்வு முறையும் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதையே குறிப்பிட்டேன். இத்தனையும் கடந்தும் சுமந்தும்தான் இங்குள்ளவர்கள் தாயக மக்களையும் மனதில் நினைத்து செயல்படுகிறார்கள், இலங்கைதமிழரின் சூடு சுரணையான போராட்டங்கள் மெளனித்தபோதும் இன்றுவரை இலங்கை அரசு பயப்படும் ஒரேயொரு திசை புலம்பெயர்ந்தவர்கள் நோக்கித்தான், அதற்கு காரணம் அவர்கள் வசதி வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று தூங்கவில்லை தாம் வாழ்ந்துவிட்டு வந்த மண்ணின் நினைப்பாக சர்வதேச மட்டத்தில் தலைவலி தருகிறார்கள் என்பதுஎம்மைவிட சிங்களவனுக்கு நன்கு தெரியும். கொரோனா காலத்தின் பின்னர் உலக அளவில் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் நிலையும் தினமும் போராட்டம்தான், எந்த பொருள் எடுத்தாலும் மூன்று மடங்குவிலை, வீட்டு வாடகை, மின்சாரம், குடிநீர், குடும்ப செலவுகள் என்று அனைத்து கட்டணமும் அதிகரித்து புலம்பெயர் சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது, ஒவ்வொரு யூரோவும் ம் டாலரும் எண்ணி எண்ணியே செலவிடவேண்டியிருக்கிறது, வெளியே சிரிப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் தினமும் பதட்டம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தினமும் ஓட்டம். இத்தனைக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தமது முகம் தெரிந்த தெரியாத உறவுகளுக்கு தம்மால் முடிந்ததை உதவிக்கொண்டுதானிருக்கிறார்கள், இலங்கையின் பிற இனத்தவர்களை எடுத்து பாருங்கள் பக்கத்துவீட்டுக்காரன் செத்து கிடந்தாலும் தமிழர்களைபோல் தெரியாத உறவுகளுக்கு கூட தொடர்ச்சியாக உதவும் குணம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். அப்படி என்றால் இலங்கயில் வந்து வாழலாமே என்று யாரும் கேட்கலாம், இலங்கையில் மட்டும் என்ன வாழ்கிறது? நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை, அந்த ஒன்று இருந்தாலே போதுமே மனிதன் உணவு தன்னீருக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாய் வாழ்து சாகலாம்.
  3. ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்
  4. Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன. குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறது. REECHA என்பது நிறுவனத்தின் பெயர். இங்கு 200 வரையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி, புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் நமது கரன் அண்ணா. அவரிடம் இருக்கும் பணத்துக்கும் வசதிக்கும் இப்படி ஒரு வரண்ட பிரதேசத்தில் போய்நின்று ஆடு, மாடு, பன்றிகள் வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தாய் நாட்டின்மீதான பற்றும் காதலும் அங்கிருக்கும் எமது உறவுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் எனும் உந்துதலுமே இந்த முயற்சியில் அவரை ஈடுபட வைத்திருக்கிறது. Reecha குறித்து நான் இங்கே எழுதியிருப்பது மிகச் சொற்பமே..! கரன் அண்ணாவின் YouTube க்குச் சென்று பாருங்கள். ‘BK in Reecha’ என்று ஒரு நிகழ்ச்சித் தொடர் இருக்கும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. வெளிநாடுகளில் எத்தனையோ ஈழத்தமிழ் மில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயகத்தில் முதலிட தயங்குகிறார்கள். ஆனால் கரன் அண்ணா துணிந்து இறங்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள். Reecha வின் நோக்கமும் குறிக்கோளும் சிறப்பாக ஈடேற வேண்டும். எமது மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற வேண்டும். பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாகும்..! ‘வரப்புயர நீருயரும்..! ReeCha வில் தமிழ் மன்னர்களின் கோட்டைகள்..! ReeCha வில் என்னைக் கவர்ந்த முக்கிய விடயமே தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்தான். இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பையும் எழுதி, அசத்தியிருக்கிறார்கள். எமது பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’ என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும். பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும். வெளிநாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான். பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடுவார்கள். இதே முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய விடயமாகும். தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெள்ளையர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும். காரணம் வரலாற்றை அறிவதிலும் அந்தக்கால ஆட்சிமுறைகளைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கூகுளிடம் போய் ஆனையும் அல்பேர்ட்டையும் தேடிய எமது பிள்ளைகள் இனி சங்கிலியனையும் இராவணனையும் தேடப்போவது நல்லதொரு மாற்றமாகும். ஒரு முகநூல் பதிவு
  5. இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.
  6. நானும் படித்திருந்தேன். இவர் மட்டுமல்ல நேருவும் பயங்கரக் கில்லாடி
  7. எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துபவர்கள் யாராக இருந்தபோதும் அவர்கள் வரவேற்கப் படவேண்டியவர்களே.......! 👍 நன்றி விசுகர்.......!
  8. உண்மையில், இணையத் தளங்களில் தரவுகளின் தரக்கட்டுப்பாட்டைப் பேண வழிகள், முன்மாதிரிகள் இருக்கின்றன. அப்படிப் பேணினால், வருமானம் குறையும் என்ற காரணம் தான், கூகிள் போன்ற தளங்கள் செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம். ஒரு உதாரணம்: விஞ்ஞானத் துறையில், தரவு மூலங்களாக விளங்கும் விஞ்ஞான சஞ்சிகைகளை (scientific journals) தரப்படுத்தியிருக்கிறார்கள். Impact factor, acceptance rate போன்ற குறிகாட்டிகள் மூலம் ஒரு விஞ்ஞானச் சஞ்சிகையின் நம்பகத் தன்மையை கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கண்டறியக் கூடிய நிலை இருக்கிறது. இதே போல கூகிள் தகவல் மூலங்களை தரப்படுத்தலாம், பெரிய கடினமான பணியல்ல. கோவிட் பெருந்தொற்று காலத்தில், தற்காலிகமாக கோவிட்டைப் பற்றிய தேடல் விளவுகளை கூகிள் போன்ற தளங்கள் தரப்படுத்தியது நிகழ்ந்தது. தேடற்பொறியின் algorithm ஏனைய விடயங்களில் இத்தகைய தரப்படுத்தலை செய்தால், பெரும் இலாபமீட்ட முடியாது என்பதால் ஏனைய விடயங்களில் உதாசீனமாக இருக்கிறார்கள். உதாரணமாக மேலே, நாசிப் படைகளில் ஆரியரல்லாத மக்களும் இருந்தனர் என்பது எவ்வளவு பாரதூரமானதெனப் பாருங்கள். இதை விட சிறு சிறு விடயங்கள் கூட கூகிள் போன்ற தளங்களில் தரவுப் பிழைகளாக இருக்கின்றன. என்னுடைய நண்பர்கள் பலர், படித்து பெரிய வேலைகளில் இருப்போர், நாசிகள் "6 மில்லியன் யூதர்களை மட்டும் தான் கொன்றனர்" என இன்னும் நம்புகின்றனர் அப்பாவிகளாக. ஓரினச் சேர்க்கையாளர்கள், நாசி எதிர்ப்பு கிறிஸ்தவர்கள், விசேட தேவையுடைய ஜேர்மனியர்கள், றோமாக்கள் என மேலதிக 4 மில்லியன் பேரையும் நாசிகள் கொன்றார்கள் என்பது பலருக்குத் தெரியாது.
  9. உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். Steven Hawking இறுதியாக எழுதிய நூலில், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றி ஒரு அத்தியாயம் முழுவதும் எழுதியுள்ளார். செயற்கை நுண்ணறிவைப் பற்றி விரிவாக கூறியதுடன் அதனால் மனிதன் எதிர்நோக்கப்போகும் ஆபத்துகளைப் பற்றி எச்சரித்ததுடன், அந்த ஆபத்துகளில் இருந்து மனிதன் தன்னை தற்காத்துக்கொள்ளும் பொறிமுறையின் முன்தயாரிப்பின் அவசியத்தையும் அப் பொறிமுறை செயற்கை நுண்ணறிவை சிறந்த முறையில் கண்காணிக்க கூடிய/ கட்டுப்படுத்தக் கூடிய வகையில் இருத்தல் அவசியம் என விளக்குகிறார். இருப்பினும், செயற்கை நுண்ணறிவின் வருகை என்பது தவிர்க்க முடியாதது அதைத் தடுத்து நிறுத்த முடியாதது என்ற ஜதார்ததத்தை அவர் ஏற்றுக்கொள்வதோடு அதை எவ்வாறு மனிதன் எதிர் கொள்ள வேண்டும் என்பதை விரிவாக விபரிக்கிறார்.
  10. "Garbage in, Garbage out" 😂 உயிரியல் மருத்துவ ஆய்வுலகில் நவீன அணுகுமுறைகளும் உபகரணங்களும் வந்து விட்டன. ஆனால் ஆய்வு முடிவுகளின் தரத்தை , தனி மனிதனின் சிந்தனையும் படைப்பாற்றலும் அதிகரிப்பது போல இந்த நவீன கருவிகள் பெரிதாக அதிகரிப்பதில்லை. இதன் காரணம், ஒரு உபகரணம் என்ன தான் நவீனமாக இருந்தாலும் "குப்பையைப் போட்டால் குப்பை தான் விளைவாக வரும்- garbage in, garbage out" கூகிள் உட்பட்ட இணையத் தரவுத் தளங்களில் கொட்டிக் கிடக்கும் போலித்தரவுகளைச் சுத்தம் செய்யாமல், அந்தப் போலித் தரவுகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை இயங்க வைத்தால் அது போலியாகத் தான் இருக்கும். இதை Artificial Intelligence என்பதை விட Artificial Ignorance என அழைக்கலாம்!
  11. இங்கு இலங்கையில் பாய்கள் இல்லை பாவிப்பது இல்லை எல்லா வீடுகளும். இரண்டு மூன்று மாடிக் கட்டடங்கள் வீட்டு தளபடங்கள். கட்டில் மேசை உடுப்பு தேய்க்கும் மெசின். நவீன சமையல் அறை. குளிக்கும் அறை. குளிர்சாதன பெட்டி ............நன்றாகவே அனுபவிக்கிறார்கள். ஒரு உழைப்பு பிழைப்பு இன்றி பார்க்க தலையை சுற்றுகிறது வெளிநாட்டு தமிழர்கள். பணம் அளவுகணக்குயின்றி கொட்டுவதால். வெளிநாட்டு தமிழர்களை விட சொகுசாக வாழ்கிறார்கள் அப்படி இருந்தும் சில அரைவேக்காடுகள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திட்டியபடி தான் பணம் கொட்ட மகிழ்ச்சியாகவும். பணம் கரைந்து போகும் போது திட்டுவதாகவும். அவரகளின் காலம் போகிறது
  12. பட மூலாதாரம்,AFP 12 நிமிடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையை விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவரே ராஜினாமா செய்வார் என, ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா கருத்து தெரிவித்துள்ளதாக, ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து, சுந்தர் பிச்சை ராஜினாமா குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான 'ஜெமினி ஏஐ'யின் தோல்வியே இதற்கு காரணம் என்று ’எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ள சமீர், சுந்தர் பிச்சையின் பதவிக்காலம் முடிவடைவதாக உணர்கிறேன் என்றார். "அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவார் என்பது எனது யூகம். செயற்கை நுண்ணறிவு தளத்தை வெற்றியடையச் செய்வதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்ததால், வேறு யாராவது அவரது பதவியில் பொறுப்பேற்பார்,” என்று அரோரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து சுந்தர் பிச்சை பதவி விலக நெருக்கடி வந்திருப்பதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்படுகிறது. என்ன பிரச்னை? கூகுள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்-ன் தலைமையகம், கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டன் வியூவில் உள்ளது. மோதி குறித்து ’ஜெமினி ஏஐ’ சொன்னது என்ன? இதுகுறித்து ‘தி எகனாமிக் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பும் என தகவல்கள் வெளியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோதியைப் பற்றி ’ஜெமினி ஏ’யின் பாரபட்சமான பதிலே இதற்குக் காரணம் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. பிரதமர் மோதி பாசிசவாதியாஎன்று ’ஜெமினி ஏஐ’யிடம் நெட்டிசன் ஒருவர் கேட்டதற்கு, மோதி பின்பற்றும் சில கொள்கைகளால் சிலர் மோதியை பாசிசவாதி என்று அழைக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய பதில் அளித்ததாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதே கேள்வியை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி குறித்து கேட்டபோது, 'முற்றிலும், தெளிவாக கூற முடியாது' என அந்த பதில் அளித்ததால், ’ஜெமினி ஏஐ’ கருவி பக்கச்சார்புடையது என நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ’ஜெமினி ஏஐ’ தளத்தின் செயல்பாடுகள் இந்திய தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரானது என்றார். ’தி எகனாமிக் டைம்ஸ்’ கட்டுரையின்படி, இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதி 3 (1)-ஐ மீறுகிறது மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளுக்கு முரணானது. பட மூலாதாரம்,GOOGLE/GEMINI படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் வீரர்கள் குறித்த கேள்விக்கு ஜெமினி ஏஐ காட்டிய படங்கள் விமர்சனங்களும் கூகுள் நிறுவனத்தின் மன்னிப்பும் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள், அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான 'ஜெமினி ஏஐ' க்காக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அக்கருவி, வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கூகுளின் செயற்கை நுண்ணறிவுதொடர்பான பிரச்னை காலம் தாழ்த்தி தீர்க்கப்படும் விஷயமா என, பிபிசி தொழில்நுட்ப ஆசிரியர் ஜோ க்ளின்மேன் கட்டுரையொன்றில் இதுகுறித்து விவாதித்துள்ளார். ஜெமினி ஏஐ கருவி, மற்றொரு செயற்கை நுண்ணறிவு கருவியான சாட் ஜிபிடி-க்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது எழுத்து வடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. மேலும், இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதிலளிக்கும். சில சமயங்களில் கேள்விக்கேற்ப படங்களையும் தரும். இந்த வரிசையில், அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்கள் பற்றிய கேள்விக்கு கருப்பர்களை சுட்டிக்காட்டி பொருத்தமற்ற பதிலை அளித்ததாக சர்ச்சை உள்ளது. மேலும், இரண்டாம் உலகப்போரின் நாஜி வீரர்களை கறுப்பினத்தவராகவும் காட்டும் படங்களை வெளியிட்டது. இதற்கு, கூகுள் உடனடியாக பதிலளித்து மன்னிப்பு கேட்டது. ஆனால், இந்த விவகாரம் இதோடு நிற்கவில்லை. லட்சக்கணக்கானவர்களை ஹிட்லர் கொன்றது விபத்தா அல்லது ஈலோன் மஸ்க் வெளியிட்ட மீம்ஸ்கள் அதிக தீங்கு விளைவிப்பதா அல்லது சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு ஜெமினி ஏஐ உறுதியான பதிலை அளிக்கவில்லை. இதுகுறித்து ஈலோன் எலோன் மஸ்க் பதிலளித்துள்ளார். "லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கூகுள் தயாரிப்புகளில் இந்த கருவி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது தரும் தவறான பதில்கள் 'எச்சரிக்கை மணியாக உள்ளது'," என்று அவர் கூறினார். "ஜெமினி ஏஐ கருவியை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா என்று கூகுளிடம் கேட்டபோது, சிறிது நேரம் கழித்து அந்த நிறுவனத்திடம் எந்தக் கருத்தும் இல்லை என்று பதில் வந்தது. "மக்களை கேலிக்கூத்தாக நினைப்பது சரியல்ல" என்று மஸ்க் கூறினார். இருப்பினும், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஜெமினி ஏஐ செய்யும் தவறுகளை உணர்ந்ததாக, நிறுவனத்தின் உள்குறிப்பில் தெரிவித்துள்ளார். "ஜெமினி வாடிக்கையாளர்களை காயப்படுத்துகிறது, பாரபட்சமாக இருக்கிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை சரிசெய்ய எங்கள் குழு 24 மணிநேரமும் உழைத்து வருகிறது," என்று அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பாரபட்சமான தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான் ஒரு சிக்கலைத் தீர்த்து, மற்றொரு சிக்கலை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், ஏஐ தொழில்நுட்பம், இணையத்தில் கிடைக்கும் வரம்பற்ற தகவல்களின் அடிப்படையில் இயங்குகிறது. இந்த பாரபட்சமான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் அனைவரையும் சென்றடையும். இயற்கையாகவே, இணையத்தில் ஆண்களின் படங்கள் மருத்துவர்களாகக் காணப்படுகின்றன. சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் படங்கள் பெண்களாகக் காட்டப்படுகின்றன. இதுபோன்ற தகவல்களில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் கடந்த காலங்களில் பல தவறுகளை செய்துள்ளன. ஆண்களால் மிக சக்தி வாய்ந்த வேலைகளைச் செய்ய முடியும் என்பதைக் காட்டுவது, கறுப்பின மக்களை மனிதர்களாக அங்கீகரிக்காதது போன்றவையும் இதில் அடங்கும். ஆனால், இதுபோன்ற அனுமானங்களைச் செய்யாமல், இந்த தவறுகளை எல்லாம் சரி செய்ய கூகுள், ஜெமினி ஏஐ-க்கு போதுமான அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ஜெமினி ஏஐ விமர்சனத்திற்கான காரணம் மனித வரலாறு மற்றும் கலாசாரம். இவற்றைப் புரிந்துகொள்வது நாம் நினைப்பது போல் எளிதானது அல்ல. இவற்றில் உள்ள சிறிய வேறுபாடுகளை நாம் உள்ளுணர்வால் புரிந்துகொள்கிறோம், ஆனால் அந்த உணர்திறனை இயந்திரங்கள் புரிந்து கொள்ளவில்லை. படங்களை வெளியிடும்போது ஏற்படும் சிக்கலை சரிசெய்ய சில வாரங்கள் ஆகும் என, `டீப்மைண்ட்` நிறுவனத்தின் இணை நிறுவனர் டெமிஸ் ஹசாபிஸ் தெரிவித்துள்ளார். இந்த `டீப்மைண்ட் ஏஐ` நிறுவனத்தை கூகுள் வாங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் மற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் இதனை அவ்வளவாக நம்பவில்லை. “இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எளிதல்ல. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயம் அல்ல,” என்கிறார் ஹக்கிங்ஃபேஸின் (HuggingFace) ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் சாஷா லுச்சியோனி. "செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் குழுவில் உள்ளவர்கள் இந்த சிக்கலை முடிந்தவரை பல வழிகளில் தீர்க்க முயற்சிக்கின்றனர்," என்று அவர் கூறினார். இல்லை என்றால் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. `படம் எவ்வளவு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்` என்று பயனர்களிடம் கேட்டுக்கொள்வதன் மூலம் இதை ஓரளவுக்குக் குறைக்க முடியும், ஆனால் இந்த தீர்வில் கூட சாத்தியமான சிக்கல்கள் உள்ளன" என தெரிவித்தார். "சில வாரங்களில் பிரச்னையை சரி செய்துவிடுவார்கள் என்று சொல்வது கொஞ்சம் ஆணவத்துடன் இருப்பது போன்று தோன்றுகிறது. இந்த பிரச்னை குறித்து அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும்," என்று அவர் கூறினார். சர்ரே பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானி பேராசிரியர் ஆலன் உட்வார்ட் கூறுகையில், "இது மிகவும் தீவிரமான பிரச்னை போல் தெரிகிறது. தரவைப் பயிற்றுவிப்பதும் அதன் நெறிமுறைகளை (algorithm) சரிசெய்வதும் கடினமான பணியாகும்” என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரச்னைக்கு என்ன காரணம்? கூகுள் இதைத் தீர்க்க மிகவும் சரியான வழியைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரியவில்லை. இது தெரியாமல் புதிய பிரச்னைகளை உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பந்தயத்தில் கூகுள் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு செயலாக்கத்திற்குத் தேவையான ஏ.ஐ ‘சிப்’கள் மற்றும் கிளவுட் நெட்வொர்க் அதனிடம் உள்ளது. அந்நிறுவனம் மிகப்பெரிய பயனர் தளத்தையும் கொண்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு நிபுணர்களை அந்நிறுவனத்தால் பணியமர்த்த முடியும். அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயல்திறன் உலகளவில் பாராட்டப்பட்டது. கூகுளின் போட்டி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், “கூகுளின் தவறான நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, ’கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்றுதான் சொல்ல தோன்றுகிறது” என்றார். https://www.bbc.com/tamil/articles/cv2xgzkm9vmo
  13. 2003 இல் இதே இடத்தில் 15 நாட்கள் கழித்து இருக்கிறேன். அதே இடத்தை இவர் எடுத்திருப்பது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும் இவர் செய்பவை நாம் செய்ய முடியாமல் போனதை செய்வது அல்லது அக்கனவுகளுக்கு ஒரு பலன் தருவதாக உள்ளது.
  14. இந்தக் காணொளியையும் பாருங்க. கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்க அவசர அவசரமாக யார்யாரையோ குற்றவாளிகளாக காட்டி வழக்கை முடிக்கிறார்கள். இந்த விசாரணையை மேற்கொண்டவர்களில் ஒருவரான மோகனதாஸ் இப்படி ஒரு கேவலமான வழக்கை தான் பார்த்ததில்லை என்று மேலே உள்ள காணொளியில் கூறுகிறார். இதே மாதிரி இந்த விசாரணையை மேற்கொண்ட பலர் பின்னர் எப்படியெல்லாம் உண்மையான குற்றவாளிகள தப்பவிடப்பட்டனர் என்பதை சொல்கிறார்கள்.
  15. காந்தி யப்பானுக்கு போயிருந்த போது எடுத்த படம். எதற்கு குளப்பம்? புதிதாக ஒன்றை இணைத்து விடுகிறேன்
  16. 01 MAR, 2024 | 03:49 PM (மெல்றோய்) திருகோணமலை இந்து கல்லூரியின் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார். இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த தன்வந்த் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார். தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரையான 32 கிலோ மீற்றர் தூரத்தை மிகக் குறைவான நேரத்தில் நீந்திக் கடந்து இலங்கையில் சாதனையை நிலைநாட்டியுள்ளார். 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 செக்கன்களில் நீந்திக் கடந்து இலங்கையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/177683
  17. நெஞ்சுக்கு நீதியும் என்னும் பாரதியார் பாடல். மனதுக்குள் புகுந்து இடம் பிடித்து அமர்ந்து விடும் பாடல். சக்தி ஓம் சக்தி ஓம் சொல்லும்போதும் சக்திவேல் சக்திவேல் சொல்லும்போதும் உணர்ச்சி பொங்கும். சிலிர்க்கும். பாரதியார் வரிகளா, ராகமா, எம் எஸ் அம்மா குரலா... எல்லாம் சேர்ந்து செய்யும் மாயம். நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண் பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாம் இவள் பார்வைக்கு நேர்பெருந்தீ. வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம் தஞ்சமென்றே யுரைப் பீர் அவள் பேர் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் [2.நல்லதும் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்; அல்லது நீங்கும்" என்றேயுல கேழும் அறைந்திடு வாய்முரசே சொல்லத்தகுந்த பொருளன்று காண் இங்குச் சொல்லு மவர்தமையே அல்லல் கெடுத்தம ரர்க்கினை யாக்கிடும் ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.] 3.நம்புவதேவழி என்ற மறைதன்னை நாமின்று நம்பிவிட்டோம் கும்பி ட்ட நேரமும் சக்தி யென்றாலுனைக் கும்பிடுவேன் மனமே . அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி . உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். 5. வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாய்! தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன் . எள்ளத் தனைபபொழு தும் பய னின்றி யிராதென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய் சக்திவேல் சக்திவேல் சக்திவேல் சக்தி வேல்!
  18. அண்மையில் கொஞ்சம் அரசியல் பேசுகிறார். இறங்கப் போகிறாரோ?
  19. யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார். எனது வேலையைத் தொடங்கினேன். முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது. நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும். 85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார். தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர். மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால் எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே அன்று அவரிடம் இருந்து தப்பினேன். அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன். அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன். இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும். எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம். அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது. நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது. ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன். இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள். என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது. அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள். அம்முதியவரின் கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன. மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார். மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன். தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார். மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன. அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது, கைகளை மெதுவாய் நீவிவிட்டேன். அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார். மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது. ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு. எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது. நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று. இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா. http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html
  20. கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ ........! 😍
  21. அடேங்கப்பா....எவ்வளவு அக்கறை ....மூட்டை தூக்கி பிழைக்கும் தொழிலாளியின் முதுகு ..... பாடசாலை மாணவர்களுக்கு மடி கணனிகளை அறிமுகபப்டுத்த திட்டமிடுகின்றனர் போலும் ...
  22. இலங்கை தமிழர்களை சிங்கள இனவாதிகள் அன்றே நிம்மதியாக வாழ விட்டிருந்தால் இன்று சிறிலங்கா தேசியம் நன்றாக இருந்திருக்கும் ....தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழ்ந்திருக்க மாட்டார்கள்
  23. ----> பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு மரபுவழியாக தமிழினம் பெண்ணுக்கு வழங்கி நின்ற பெருமையை நிலைநாட்டிய பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிக்கண்ட நாகரிகமும் தமிழர் நாகரீகமென நிறுவவப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் தாய்வழி சமூகமாகவே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. பெண்ணை பெருமைப் படுத்திய குமரிக்கண்ட எஞ்சிய சான்றாக இன்றும் நிலைத்து நிற்பது உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் பாண்டிய மன்னர்களால் (கடைச்சங்ககாலத்தில் ) எழுப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.பாண்டிய மன்னனுக்கு ஒரே மகளாக பிறந்து ஆண்களைப் போன்று போர்க்கலையில் சிறந்து விளக்கிய அங்கயற்கண்ணியான மீனாட்சிக்கு எழுப்பப்பட்டுள்ள இவ்வாலயம் இற்றைக்கு 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்த பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும் பண்டைய தமிழக கல்வெட்டுகளிலும் பரவலாக காணக்கிடக்கின்றன . தமிழீழ விடுதலைப் போராட்டமும் பெண்களும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் பிற்கால சோழப் பேரரசைப் (கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகள் ) போன்று அரசியல், நிர்வாகம், ஆட்சிமுறை, நீதிவழங்கல் , கலை இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்புக்கு இடம் கொடுத்ததோடன்றி சோழப் பேரரசு சாதிக்காத வகையில் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களும் போர்க்களத்தில் போர்புரியவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரும்பனை மனமொத்த கரும்புலிகளாகி எதிரியின் இலக்குகளை தகர்த்து சாதனை படைக்கவும் களமமைத்துக் கொடுத்தது. பொதுவாக ஒரு நாட்டின் இலக்கியத்துறை வளர்ச்சியடைகின்ற காலம் அந்நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையைப் பொறுத்தே இடம்பெறுகின்றது. உதாரணமாக பிற்கால சோழப்பேரசு விரிவடைந்து சோழ நாட்டில் அமைதி சூழ்ந்திருந்த காலப்பகுதியிலேயே இலக்கியத் துறை மிகவும் செழுமையடைந்துள்ளது. அனால் ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே இலக்கியத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளமையானது தமிழ் மொழியின் செவ்வியல் காலமான (classical age ) சங்க காலத்தின் போர் இலக்கியங்கள் போன்று தமிழினத்தின் தற்கால இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளமையை மறுதலிக்க முடியாது . உலகில் உள்ள ஏனைய விடுதலைப்போராட்ட வரலாற்றிலில்லாதவாறு ஈழப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுதே விடுதலைப்புலிகள் தமது அரசியல், போரியல் , பொருளாதார,தொழிநுட்ப, மருத்துவ துறைகளைப் போன்று கலைகளையும் வளர்தெடுத்தனர். கலைகளையும் கலாச்சாரத்தையும் வளர்க்கும் நோக்குடன் கலைபண்பாட்டுக் கழகத்தை நிறுவி அதனூடாக இயல், இசை , நாடகம் போன்ற முத்தமிழின் வளர்ச்சிக்காக ஆவன செய்திருந்தார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் 1991, 1992 ஆம் ஆண்டுகளில் முத்தமிழ் விழாக்களையும் 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கினையும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கினையும் 2003 இல் திருகோணமலையில் இசை, நடன, நாடக விழாவினையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் நாடாத்தியிருந்தமையை குறிப்பிடலாம். போர்க்கால இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ பெண்களின் பங்களிப்பு போர்க்கால இலக்கியதுறைப் பங்களிப்புக்கு தமிழீழ பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. கவிதைகள், சிறுகதைகள் போன்றனவற்றில் மட்டுமன்றி தமிழீழ எழுச்சிப் பாடல்களிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. குறிப்பிடும்படியாக1985ல் சென்னை தமிழியல் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த “அக்கரைக்குப் போன அம்மாவுக்கு” என்ற கவிதைத்தொகுதி 1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் அவல வாழ்வை பதிவு செய்திருக்கின்றது .1991 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமரில் வீர காவியமான கப்டன் வானதி சிறந்த போராளிக் கவிஞர். விடுதலைப்புலிகனின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அவர்கள் சிறந்த கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமாவார். 2004இல் வெளியிடப்பட்ட வன்னி மண்ணின் இரணையூர் பாலசுதர்சினி அவர்களின் “அனுபவ வலிகள்” என்ற கவிதைத் தொகுதி போர்கால அனுபவங்களின் வலிகளை வடித்துள்ளது. புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றிய போராளி கலைஞரான தமிழ்க்கவி அவர்கள் நாடகத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியமையையும் வெற்றிச்செல்வி, கஸ்தூரி , மலைமகள் தமிழவள் , அம்புலி போன்ற போராளிக் கலைஞர்கள் தமிழீழ இலக்கியத துறைக்கு பங்களிப்பு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கவிதைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் போலல்லாது ஈழப்போராட்ட இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு மிகக்கணிசமானது. இப் பாடல்கள் தனியே போராட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், போர்க்கள சாதனைகள், தமிழின வரலாறு , தமிழர்களின் வீரம், பாரம்பரியம், தமிழர் தேசம் , இனவழிப்பு , போர்தந்த வடுக்கள், மாவீரரர்கள் போன்ற பல்வேறு விடையங்களை பாடுபொருட்களாக கொண்டு பாடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் மக்களுக்கு விடுதலை உணர்வினை ஊட்டி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட உந்துசக்தியாக இருந்துள்ளதுடன் சிறந்த போர்க்கால இலக்கியங்களாகவும் திகழ்வதற்கு அவை இசைவடிவில் கேட்போரின் இதயத்தை தொட்டுவிடும் அழகான ஆழமான கருத்துக்களையும் அழகிய மொழி நடையையும் கொண்டுள்ளமையும் காரணிகள் எனலாம். ஆரம்பகாலத்தில் விடுதலைப்புலிகளின் எழுச்சிப் பாடல்கள் தமிழகத்த்திலிருந்து வெளிவந்தன. அரம்பகால தமிழீ கவிஞர்களான புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், வாஞ்சிநாதன் போன்ற கவிஞர்களும், கவிஞர் இன்குலாப் போன்ற தமிழகத்துக் கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். தேனிசை செல்லப்பா , டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா போன்ற பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். 1990 களிலில் தமிழீழத்தில் இருந்தே இப்பாடல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழீழ தேசியக் கவிஞரான புதுவை இரத்தினதுரை, மாமனிதர் கவிஞர் நாவண்ணன் , மேஜர் சிட்டு, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள் போன்ற கவிஞர்களின் உருவாக்கத்திலும் எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு , ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச்சந்திரன், நிரோஜன், திருமதி பார்வதி சிவபாதம், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா, கானகி, தவமலர், மாங்கனி, பிரியதர்சினி போன்ற பாடகர்களின் பங்களிப்புடனும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்ணப்பட்டுக்கழகத்தினர் இப்பாடல்களில் பெரும்பாலானவற்றை இசையமைத்து வெளியிட்டுள்ளனர். இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் பொருட்டு தமிழீழ மகளிர் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ மகளிர் இசைக்க்ழுவினர் என்ற தனியான பிரிவுகளையும் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். பெண்களால்பாடப்பட்டுள்ள பாடல்களில் அக உணர்வு வெளிப்பாடு சங்க கால இலக்கிய பாடல்கள் போன்று தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிப் பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்கள் அகவயமானவை ( “inner field” ) எவை புறவயமானவை (“outer field”) எவை என பிரித்துக் பார்க்கின்ற போது அகவுணர்வுகளை (emotional ) எடுத்துக்காட்டுகின்ற பெரும்பாலான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டுள்ளன. புற (material) நிலை சார்ந்த பெரும்பாலான பாடல்கள் ஆண் பாடகர்களால் பாடப்பட்டுள்ளன. பெண்களால் பாடப்பெற்ற பல பாடல்களில் பாடுபொருள்களாக தாயன்பு, காதல், நட்பு, பிரிவு , பரிவு, கோபம், தனிமை , வீரமரணம் ஒன்றை தாங்கும் பெண்மையின் மனநிலை, கையறு நிலை போன்ற ஆழமான உணர்வுகளை பாடல்களாக பாடுகின்ற பொழுது அவை கேட்போர் மனக்கண்முன் ஈழப்போர்சூழலில் வாழ்ந்த மக்களின் பல்வேறுபட்ட இழப்புக்கள், தியாகங்கள் ஒப்புவிக்கை (அர்ப்பணிப்பு / dedication ) போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன. அகவுணர்வுகளின் ஆழத்தை எடுத்துக்காட்டுகின்ற சில பாடல்களையம் அவற்றின் தன்மையையும் பாப்போமாகில் தமிழீழ எழுச்சிப் பாடல்களில் மிக அரிதாக காதல் உணர்வை வெளிப்டுத்தும் பாடலான “தென்னம் கீற்றில் தென்றல் வந்து வீசும் தமிழ் தேசமெங்கும் குண்டு வந்து வீழும்” என்ற பாடலில் வருகின்ற பெண்குரலில் ஒலிக்கும் வரிகளான “நிலவு வந்து பொழியும் நேரம் நீவரவில்லை நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை ஊர்முழுதும் ஓலம் நான் உறங்கி வெகுகாலம் உறங்கி வெகு காலம் நீ ஒடிவந்தால் போதும்..” என்ற பாடல்வரிகளிலுள்ள கவித்துவமானது பிரிவின் வலியின் ஆழத்தை சொல்கின்றது. இவ்வரிகள் சங்ககால நூலான குறுந்தொகையிலுள்ள 138வது பாடலான “கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-” என்ற பாடலில் தோழி யின் கூற்றாக சங்ககாலத் தலைவியின் பிரிவாற்றாமையை தலைவனுக்கு உணர்த்துகின்ற பாடல் வரிகளை நினைவு படுத்துகின்றது. “கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு பொன் முடி சூடிய பூச்சரமே எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு” என்ற தாலாட்டுப் பாடலில் தன் குழந்தையை உருவகப்படுத்தும் தமிழீழ தாய் ஒருத்தி மணிமகுடம் பூண்டு உறங்குகின்ற ஒரு இளவரசனாக தன்குழந்தையை ஒப்பிட்டு குழந்தை பிறந்தபொழுது தனக்கிருந்த செல்வச் சீர்சிறப்பை தன்பாடலூடாக வெளிப்படுத்துகின்றாள். அப்பாடலின் இரண்டாவது பந்தியில் தனது கையறு நிலைய நினைந்து “செல்வந்த வேளையில் நீ பிறந்தாய் இன்று ஷெல் ( Shell ) வந்து உன்னப்பன் போய்முடிந்தான்” என்று தாலாட்டுவதன் ஊடாக தந்தையின்றிய அவர்களுடைய எதிர்கால வாழ்வில் இழையோடியுள்ள துயரை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இப்பாடலின் இறுதியப் பகுதியிலேயே அத்தாய் “ஆராரோ… ஆரிரரோ” என வழமையான தாலாட்டு பாடல் போல் தாலாட்டாது “ஆரிரரோ…ஆராரோ.”.என பாடுகின்றாள். தாலாட்டு பாடலில் ‘ஆராரோ ஆரிரரோ’ என்பதில் முன்னதைவிடப் பின்னது விரைவாகப் பாடப்படுகின்றதற்கான காரணம் ஏணையை (தூளி) அதன் இயல்பான மையத்திலிருந்து ஆட்டி விடுகின்றபோது, அது விலகிச்செல்லும் வேகத்தைவிட மீண்டுவருகின்ற வேகம் விரைவாக இருக்கும் இவ்வேணையின்ஆட்ட வேகத்திற்கு அமையவே தாலாட்டு மெட்டும் அமைகின்றது. இப்பாடலானது “ஆரிரரோ…ஆராரோ”…என முடிவதற்கான காரணம் அத்தாயின் உள்ளத்தில் தேங்கிக் கிடந்த வலியை அல்லது வெளிப்படுத்திய பொழுது அவள் தனது குழந்தை தூங்கும் ஏணையை விரைவாக ஆட்டியிருப்பாள் அதனாலேயே அது போன வேகத்தை விடவும் வந்த வேகம் குறைவானதாக இருக்கும் என்ப தனை இப்பாடலினை கேட்பவர் மனதில் பதிய வைக்க வேண்டி இப்பாடலின் வரிகளை அமைத்த ஈழகவிஞரது புலமை எத்தகையது என வியக்கத் தோன்றுகின்றது. தமிழீழ கலைபண்பாட்டுக்கழகத்தால் வெளிப்பட்ட நெருப்பு நிலவுகள் என்ற இறுவட்டில் தன்தாயின் நினைவாக இருக்கின்ற பெண்புலி மகள் ஒருத்தி தன்நெஞ்சில் தேங்கியுள்ள தாய்ப்பாசத்தையும் தான் போராடவேண்டிவந்த சூழ்நிலையையும் விபரித்து பாடுகின்ற ஒரு பாடல் “நீரடித்து நீர் இங்கு விலகாது அம்மா நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகாலாது அம்மா” என்கிறது. அப்பாடலில் வருகின்ற ஒரு பந்தியில் “வெற்றி மகளாய் வருவேன் பெருமைப்படு அம்மா வீழ்ந்து விட்டால் குழியினிலே நீரை விடு அம்மா சுற்றி வந்து தீபம் ஒன்று ஏற்றி விடு அம்மா சூழ்ந்திருக்கும் உறவை பார்த்து கவலை விடு அம்மா” என்று தனது தாய்க்கு கூறுவதன் ஊடக தான் போர்க்களத்தில் இருந்து வெற்றி மகளாக திரும்பி உயிருடன் வருவேனாகில் தன்சாதனையை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். தான் களத்தில் வீரமரணம் அடைந்துவிட்டால் தனது புனித விதைகுழியில் நீரை விட்டு தீபமேற்றி செல் என்று கூறுகின்றாள். ( பாடலை கேட்க https://bit.ly/2spp2x5 ) தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களை புதைக்கும் நிகழ்வில் “புதைத்தல்” என்ற சொல்லை பயன்படுத்துவது இல்லை மாறாக “விதைத்தல்” என்ற சொல்லையம் புதைக்கப்படும் உடலுக்கு “வித்துடல் “என்ற சொல்லையும் பயன்படுத்தினார்கள். விதையில் இருந்து மரம் மீண்டும் முளைப்பதைபோன்று மாவீரரர்கள் மீண்டும் எழுவார்கள் இதனாலே விதையை மண்ணில் இட்டபின்னர் நீர் விடுவதைப் போன்று தன்னை விதைத்த பின்னர் நீரை இட்டுச் செல்லுமாறும் தன்னையே நினைத்து வருந்திக் கொண்டிராது ஏனைய சகோதர சகோதரிகள் மற்றும் தந்தையை எண்ணி தான் மறைந்த கவலையை விடுமாறும் கூறுகிறாள் . திருக்குறளில் வரும் பிரிவாற்றாமை கூறுகின்ற பின்வரும் குறள் வரிகள் அத்தாயினுடைய மனநிலையாக இருக்குமென்றெண்ணி அம்மகள் மேற்கண்டவாறு கூறியிருப்பாளோ என இங்கே எண்ணத் தோன்றுகின்றது. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. ( குறள் எண் : 1151 ) பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல் என்று அத்தாய் எண்ணி விபரீதமான முடிவேதும் எடுக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறியிருப்பாளோ என எண்ணத் தோன்றுகின்றது. அதாவது போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் சாதாரணமான ஒருகுடும்பத்தின் உயிர்ப்பாதுகாப்பு அல்லது தற்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் ஆதலால் தனது வீரமரணத்தை தாங்குகின்ற சக்தி அத்தாய்க்கு தனது ஏனைய பிள்ளைகளையும் தந்தையை எண்ணியும் வரவேண்டுமென்பதை இப்பாடல் ஊடக மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது . பெண்புலி போராளிகள் இருவரின் நட்பின் ஆழத்தையும் தோழிகளில் ஒருவரின் வீரமரணம் மற்றய தோழியின் மனதில் ஏற்படுத்திச்சென்றுள்ள தாக்கத்தின் வலியின் வெளிப்பாட்டினையும் சொல்லுகின்ற பாடல் “தோழி என் தோழி என் உயிரில் கலந்த தோழி” என்கின்ற பாடல். இப்பாடலை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீடுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இப் பாடலில் பின்வரும் வரிகள் “மண்ணில் பாசம் கொண்ட வேளை உனது பாசம் தந்தாய் என்னில் தோன்றும் நிழலைப் போல தினமும் ஓரம் நின்றாய்” அதாவது நிழலைபோல என்றென்னறும் பிரியாதவாறு இணைந்த உயிர் நட்பைப் பற்றி சொல்கின்றது. இத்தகைய உவமை பொருந்திய பாடல் ஒன்று அகநாநூறுறில் கபிலர் என்னும் புலவரால் பாடப்பட்டுள்ளது. தோழி ஒருத்தி தனக்கும் தனது தலைவிக்கும் இடையிலான உறவு இருதலைப்புள்ளினைப் (இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை) போன்று பிரியாது என்றும் இணைந்திருப்பது என்று கூறுகின்றாள். “யாமே பிரிவு இன்று இயந்து துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”(பா.12, 4-5) இப் பாடலில் வருகின்ற என்னை பரிவுடன் தழுவிடும் தாயாய் செல்லக் குறும்புகள் புரிந்திடும் சேயாய் துன்பம் தொடர்கின்ற பொழுதினில் தோளாய் எந்தன் இதயத்தை வருடி நீ வாழ்ந்தாய் -இன்று என்னை தனியே தவித்திடச் சொல்லி நீயேன் பிரிந்து போனாய் பாடல் அடிகள் தாய் தந்தை சகோதரர்கள் என்ற உறவுக்கு கூட்டுக்குளே வாழ்ந்த ஈழத்துப் பெண்கள் விடுதலை வேட்கையுடன் போராட செல்கின்ற பொழுது அப்பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினரின் பிரிவினை ஆற்றும் வழியாக அவர்களது தோழிகள்தான் திகழ்கின்றார்கள் என்பதை கூறி நிற்கும் சான்றாக இருக்கிறது. ( தொடரும் ) https://www.samakalam.com/பெண்கள்-பாடிய-தமிழீழ-எழு/
  24. பகுதி II நட்பின் ஆழத்தை கூறுகின்ற இன்னுமொரு பாடல் எந்தன் தோழி உன்னைத் தேடிக் கண்கள் போகுது.. .எங்கே! எங்கே! என்னைப்பாரு இதயம் நோகுது.. இப்பாடலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீரணி அரசியல் துறை பொறுப்பாளரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமாகிய தமிழினி அவர்கள் தனது போர்க்கள அனுபவத்தினையும் உண்மைச்சம்பவங்களையும் மையமாக வைத்து எழுதிய” மழைக்கால இரவு” என்ற சிறுகதையில் வருகின்ற இரு பெண்போராளிகளின் நட்பின் ஆழத்தையும் ஒரே போர்க்களத்திக்கு சென்ற இருவரில் ஒருவர் வீரமரணம் அடைகின்ற பொழுது அதனது தாக்கம் மற்றய தோழியின் மனதில் எத்தகைய பதிவுகளை விட்டுச்செல்கின்றன என்பதையும் நினைவுபடுத்துகின்றது. இப்பாடலில் வருகின்ற பின்வரும் வரிகள் சற்றுமுன்னர் தானே களத்தில் பாய்ந்து பகையைக் கொன்றவள்! வெற்றி எங்கள் கையில் வந்துசேர… வீழ்ந்து போனவள்! போரில் உந்தன் வீரம் பார்த்தேன் போற்ற வழியில்லை வென்ற பின்னோ ஓடிவந்தேன் உயிராய் நீயில்லை ! தமிழினி அவர்களின் மழைக்கால இரவில் வருகிற சங்கவி என்ற கதாபாத்திரத்தின் வீரமரணம் அவளது தோழியின் மனதில் விட்டுச்செல்கின்ற நினைவுகளை மீள்நினைவூட்டுகின்றது. அச் சிறுகதையில் சங்கவியின் மரணத்தை தமிழினி கீழ்வருமாறு பதிவு செய்கின்றார். “சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபடவென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.” இச்சிறுகதையை வாசிப்பவர்களின் மனதில் போர்க்கள அனுபவங்கள் பெண் போராளிகளின் மனதில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை பல்வேறு பரிமாணங்களில் பார்க்க கூடியதாக உள்ளது. பன்னெடுங்கால தமிழர் பண்பாட்டு வரலாற்றை பார்க்கின்ற பொழுது ஒரு பெண்ணின் வாழ்வில் அவளது உற்ற தோழியின் வகிபாகமும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தமிழ் இலக்கியங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சங்க இலக்கிய அகத்திணை நூல்களிலும் சங்க மருவியகால இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மற்றும் மணிமேகலையிலும் தோழி என்ற பாத்திரத்திற்கு முக்கிய பங்குண்டு . சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோழியான தேவந்தி கண்ணகி கோவலனோடு சேரவேண்டும் என்பதற்காக வழிபாடு இயற்றியதை கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டென்று எண்ணிய நெஞ்சத்து இனையளாய், – நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச், சென்று பெறுக கணவனோடு என்றாள். (சிலம்பு : 9: 41) என்று பாடல் கூறுகின்றது. மணிமேகலையில் மணிமேகலை நந்தவனத்தில் உள்ள பளிங்கு மண்டபத்தில் இருக்கின்ற போது அவள் மேல் காதல் கொண்ட சோழ இளவரசனான உதயகுமாரன் அவளை அடைய முயல்கிறான்; முடியவில்லை, மணிமேகலையின் தோழியான சுதமதியிடம் மணிமேகலையை அடைய முடியவில்லையே என வருந்திக் கூறுகின்ற சுதமதியோ அவனிடம், மணிமேகலை ஊழ் தரு தவத்தள், சாப சரத்தி காமன் கடந்த வாய்மையள் ( மணி 05-016) தனது தோழி தவவழிப்பட்டவள் ஆதலால் காமன் செயல்களான காதலையும்காமத்தையும் கடந்த தூயவள் என உரைத்து அவனது மனதை மாற்றி தனது தோழியை பாதுகாக்கின்றாள். ஓர் சிறந்த தோழியின் மரணம் என்பது ஒப்பில்லா வீரமும் ஆளுமையையம் கொண்ட விடுதலைப் புலிகளின் மகளிரணி தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்களின் மனதில் மாறாத வடுவினைப் ஏற்படுத்தியிருந்ததை கலை என்ற போராளி எழுதிய அவரது வீரவரலாறில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. “2006 சமரில் கம்பனியை (Company / படையணியை ) வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்” இத்தகைய ஆழமான வடுக்களை வெளிப்படுத்துகின்ற இன்னுமொரு பாடல் உயிரழும் போது ஓசைகள் ஏது ஆயுத ராகங்கள் ஆழுவதில்லை ஆயினும் சோகம் மறைவதில்லை அதில் வரும் பின்வரும் வரிகள் கூந்தல்பின்னி மடிக்கையிலே உங்கள் ஞாபக முடிச்சுகளே காவல் கடமை இருட்டினிலே உங்கள் நினைவு வெளிச்சங்களே எங்களில் திரிந்த தோழியரே என்றினி காண்போம் தோழியரே உங்களின் கனவை தோழியரே கண்களில் சுமப்போம் தோழியரே பெண் போராளிகளின் வீரமரணங்கள் அவர்களின் தோழிகளை எவ்வாறு பாதித்தன என்பதை கண்முன் நிறுத்துகின்றது. மேலும் தமிழினி அவர்கள் எழுதிய “அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்” என்ற கவிதையில் மீளாப் பயணம் சென்ற தோழி விடைபெறக் கை பற்றி திணித்துச் சென்ற கடதாசி செய்தி சொன்னது.. காலமாவதற்காக காத்திருக்கும் அம்மாவின் ஆத்மா கடைக் குட்டியவளின் கையாலே ஒரு துளி உயிர்த் தண்ணிக்காகத் துடிக்கிறதாம். எவருக்கும் தெரியாமல் என்னிடத்தில் குமுறியவள் விட்டுச் சென்ற கண்ணீர்க் கடலின் நெருப்பலைகளில் நித்தமும் கருகிக் கரைகிறது நெஞ்சம்! 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரில் கடற்கரும்புலியாகச்சென்ற மேஜர் ஆந்திரா அவர்களின் வரலாற்றுப் பதிவில் தந்தையை இழந்த குடும்பமொன்றில் தாயின் ஆதரவில் மட்டுமே வளர்ந்த செல்வி விநாயகமூர்த்தி சுதர்சினி என்ற இயர்பெயருடைய மேஜர் ஆந்திரா இதயத்தில் ஓட்டையினால் தனது தாயார் அவதிப்பட்ட நிலையிலும் நாட்டைக் காக்க புறப்பட்டதை “அம்மா இன்னும் சிறிதுகாலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு சோகம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற பொழுது இவ்வாறான கவிதைகள் மற்றும் போர் இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அகவுணர்வுகள் உண்மைச் சம்பவங்களின் பின்னணியிலேயே எழுந்தன என்பதை புலப்படுத்துகின்றன . ஒருபுறம் வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டமானது மறுபுறம் தனிமனித மனங்களின் ஆழமான காயங்களை இனவிடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக தாங்கி நின்றவாறே பயணித்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிராதல் தகுமே மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந்தனனே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெருநிரை விலக்கி ஆண்டு பட்டனனே இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து உடீஇ பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!” (புறம்: 279) என்ற புறநாநூறு பாடலில் மறக்குடியில் பிறந்த ஒரு பெண் முதல் நாள் நடந்த போரில் தனது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்து போக நேற்று நடந்த போரில் அவளது கணவன் இறந்திருந்தும் இன்று போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு விருப்பம் கொண்டு இருநாளிலும் போர்புரிந்து இறந்துப்பட்ட தந்தையையும் தலைவனையும் நினைத்து வருந்தாது அவள் தயங்காமல் வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போக வேண்டும் என்பதால் எஞ்சி நின்ற தன் சிறிய மகனை அன்போடு அழைத்து வெண்மையான ஆடையை உடுத்தித் தலையைச் சீவிமுடித்து வேலை எடுத்துக் கையிலே கொடுத்து போர்க்களத்தை நோக்கி அனுப்பி வைத்தாள் என்ற செய்திக் குறிப்புள்ளது. அன்று பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்துள்ளதற்கு சான்றுகள் உள்ளன. 06.02. 2006ல் கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த திருமதி தியாகராசா என்ற தாய் தனது தனது மகளான ஜெனிதாவை போராட்டத்தில் இணைத்துவைத்து “தமிழீழ விடுதலைப் போராட்டம் நீடித்துச் செல்லக்கூடாது. விரைவில் தமிழீழ தனியரசை நாங்கள் அடையவேண்டும். அதற்காக எங்கள் தலைவரின் கையை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்து தாய்மாரும் தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் முன்வந்து இணைந்து தலைவரின் கையை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் எனது மகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்வந்து இணைக்கின்றேன்” என வலயப் பொறுப்பாளர் குட்டிமணியிடம் தெரிவித்திருந்தமை அக்காலத்தில் பத்திரிகைகளிலும் இணைய செய்திகளிலும் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது இதேபோல் மன்னார் மாவட்டத்தின் பலாப்பொருமாள் கட்டு வட்டக்கண்டல் எனும் பகுதியில் வசித்து வரும் சண்முகம் காளியம்மா எனும் இத்தாயார் தனது ஆறு பிள்ளைகளில் ஒருவரை தாயக விடுதலைப் போருக்காக தானாகவே முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைத்து வைத்தபோது கூறியதாவது: “எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது கணவர் மன்னார்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி சுகவீனமுற்றிருந்து 1997 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை தேச விடுதலைப் போருக்கு அனுப்பவேண்டும் என்று கூறிவருவார். அவர் இறந்ததன் பின்புதான் எனது பிள்ளைகளுக்கு போராடும் வயது நிரம்பியதால் இப்போது நான் எனது மகனை இயக்கத்தில் இணைக்கிறேன். விடுதலைப் போருக்காக ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளை இணைத்துள்ளார்கள். எனவே ஆறு பிள்ளைகளைப் பெற்ற நான் ஒரு பிள்ளையையேனும் போராட்டத்திற்கு அனுப்பாவிட்டால் தேசம் என்னை மதிக்காது. எனது மகனும் என்னுடைய இலட்சியத்தையும் எனது கணவரின் இலட்சியத்தையும் நிறைவேற்றுவான் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு” என அத் தாயார் தெரிவித்தமையை ஆகஸ்ட் 2006ல் புதினம் பத்திரிகை வெளியிட்டிருந்தது . இந் நிகழ்வானது சங்ககால தாயொருத்தி தனது மகனை பெற்று பாதுகாத்தல் தன் கடமைதான் ஆயினும் மகனின் கடமையானது போர்க்களத்திலே யானையை எதிர்க்கும் ஆற்றலுடன் போரிடுவது என்பதை உணர்ந்து போருக்கு அனுப்புகின்றாள். இப் பாடலை பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவர் பாடியமை ஓர் தாயின் போர்க்கால கடமை என்ன என்பதை உணர்த்தி நிற்கின்றது. ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம் 312) இந் நிகழ்வுகளை எடுத்துக்கூறும் தமிழீழ எழுச்சிப்பாடல் "மகனே மகனே போய்வாடா மண்ணை மீட்கப் போய்வாடா அன்னைதேசம் அயலார் கையில் இருப்பது சரியல்ல புயலென போரிட போய் வாடா பூமி அதிரட்டும் போய்வாடா" என்பதாகும். இவ்வாறு தனது கடமையை உணர்ந்து மகனை போருக்கு அனுப்பிவைத்த தாய்மானம் பின்னர் பிள்ளையை நினைத்து நினைத்து எப்படி தவிக்கின்றது என்பதை பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை என்பதற்கு ஆதாரமாக இப்பாடலில் வருகின்ற பின்வரும் வரிகளை எடுத்துக் காட்டலாம். "அன்னையிடத்தில் பால் குடித்த ஈரம் உதட்டில் காயவில்லை உன்னை போருக்கு அனுப்பிவிட்டு உள்ளம் ஏனோ தாங்கவில்லை" இங்கு நாம் சங்க கால இலக்கியமோ, தமிழீழ போர்க்கால இலக்கியமும் காட்டாத ஒரு மேன்மையான தியாகச் செயலின் உச்சத்தை இறுதிபோரின் சமர்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தில் காணலாம். தமிழீழ விடுதலைப் போராட்ட வலராற்றில் விடுதலைப் புலிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சியையும் காட்டிநின்ற ஆனந்தபுர பெரும் சமருக்கு மகளிர்படையணிகள் சார்பாக தலைமை தாங்கிய மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா , சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்களுடன் போர்க்களத்திற்கு சென்ற மாலதி படையணித் தளபதி கேணல் தமிழ்ச்செல்வி அவர்கள் தனது சிறு குழந்தையை போராளியான தனது கணவர் பூவண்ணனிடம் விட்டுவிடு போர்க்களத்துக்குச் சென்றார். அவரது வீர வலராறு பற்றி ஆனந்தபுர சமர் வரலாற்றுப்பதிவுகள் பின்வருமாறு பதிவிடுகின்றன: “04.04.2009ல் அதிகாலையில் இடம்பெற்ற பெரும் உடைப்புச் சமரில் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்கா உள்ளிட்ட பெரும் தளபதிகள் வீரமரணமடைய அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச் சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச் சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம் இறங்கினாள். எப்படியாவது பெட்டி முற்றுகைக்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது. அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்தி போராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள்.” இவ்வாறாக வீரம்நிறைந்த பெண்கள் தமிழீழத்தில் வாழ்ந்தார்கள் என்பது உலகே கண்டு வியந்த உண்மை என்பதுடன் அவர்கள் தமது அக உணர்வுகளை போர்க்கால இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம் அப்பெண்களுக்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வழங்கிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆழ்ந்த சிந்தனையே ஆகும் . -------> பிறேமலதா பஞ்சாட்சரம் -சமகளம்
  25. அதிக முட்டை இடும் ஆமை இனம் உலகில் அழிந்து கொண்டு வருகிறது ஆனால் ஒரு முட்டை இடும் கோழி இனம் பெருகி கொண்டு வருகிறது தற்பொழுது நானும் இலங்கையில் தான் வாழ்கிறேன் ரொம்ப கஸடம் தான் வாழ்க்கை இருந்தும் வெளிநாட்டு உறவுகளின். பணத்தை பற்றி சிந்திப்பதே இல்லை அப்படி சிந்திப்பது முட்டாள்தனம் என்பது என் கருத்து
  26. குரு செய்தால் தவறில்லை சிசிஷ்யன் செய்தல் தவறு என்பது அவர்கள்கொள்கை. பணக்காரன் செய்தால் பிரச்சினையில்லை. ஏழைகள் அப்படி எல்லாம் இருக்க கூடாது. அங்கு போய் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்கள்.
  27. 2006 ல் போய் வாங்கி கட்டிய இஸ்ரேல் (பின்வாங்கியது உலகம் அறிந்தது) இம்முறை சொல்லவே தேவை இல்லை. பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை எனும் போதே தெரிந்திருக்க வேண்டும் கமாஸ் போன்ற போராட்ட குழுக்களின் ஓர்மத்தை.
  28. கருத்து எழுத முதல் பொது அறிவை வளர்க்க முயலுங்கள். சிறிலங்கா அரசே எவ்வளவு வருமானம், எத்தனை பேர் சிறிலங்காவுக்குள் வந்தார்கள் என்று பட்டியலாக இடுகிறது. நாங்கள் உங்கு வந்து காத்து குடிக்கவில்லை.😁
  29. அந்நிய செலவாணி எப்படித்தான் வருக்கிறது என்ற பொது அறிவாவாது இருக்கா என்று பார்த்தேன். சுத்தம்.🤣
  30. ஆமையாயிரம் முடடையிட்டுவிட்டு சத்தம் போடாமல் போகுமாம். கோழி ஒரு முடடையிட்டு விட்டு கொக்காரிக்குமாம். அதுபோலத்தான் இருக்குது உங்கள் கூப்பாடெல்லாம். எதோ நீங்களே எழுதி நீங்களே பச்சை குத்தி கொள்ளுங்கள். வலது கை செய்வதை இடது கை அறியாதிருப்பதாக. நன்றி உங்கள் உதவிகளுக்கு. இலங்கை தமிழர்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடடால் போதும். விட மாடடாரக்ள். அது இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு பண மழை கொட்டும்.
  31. புலிகளின் ஆரம்பகால பயிற்சியணிகள் எம்.ஜி.ஆர் இன் உதவியை அடுத்து பிரபாகரன் இரு தீர்மானங்களை எடுத்தார். ஒன்று இராணுவ ரீதியிலானது, மற்றைய அரசியல் மயப்பட்டது. இரண்டுமே விடுதலைப் போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையானவை. இராணுவ ரீதியிலான தீர்மானத்தின் அடிப்படைகள் பின்வருமாறு காணப்பட்டன, 1. தமக்கென்று தனியான சுதந்திரமான பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்வது. 2. நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது. 3. நவீன தொலைத் தொடர்பு வலையமைப்பினை உருவாக்குவது. 4. கடற்புலிகள் அமைப்பினை உருவாக்குவது. 5. பெண்கள் படையணியினை உருவாக்குவது. 6. புலநாய்வு அமைப்பினை உருவாக்குவது. அவரது அரசியல்த் தீர்மானத்தின் அடிப்படைகளாக பின்வருபவை அமைந்திருந்தன, 1. அரசியல் பிரிவினைப் பலப்படுத்துவது. 2. பிரச்சார இயந்திரத்திரத்திற்கு புத்துயிர் அளிப்பது. 3. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களையும் மக்களையும் மீட்பது. 4. சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பொறுப்பெடுத்துக்கொள்வது. 5. வரி வசூலிப்பினை நடைமுறைப்படுத்துவது. 6. மக்களை போராட்டத்தினுள் உள்வாங்குவது. ஆகியனவே அவையாகும். பிரபாகரனுடன் குளத்தூர் மணி போராளிகள்க்குத் தேவையான பயிற்சியினை வழங்குவதும், தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதுமே பிர‌பாகரனின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் ஏற்கனவே தனிப்பட்ட ரீதியில் இரு பயிற்சி முகாம்களை அமைத்திருந்தார். முதலாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் அமைந்திருக்கும் சிறுமலை காட்டுப்பகுதியிலும் இரண்டாவது பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணைக்கு அருகில் அமைந்திருக்கும் குளத்தூரிலும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாம் நெடுமாறனின் உதவியுடனும், குளத்தூர் மூகாம் திராவிடர் கழக ஆதரவாளரான குளத்தூர் மணியின் உதவியுடனும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாமுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை நெடுமாறன் ஒழுங்குசெய்ய, குளத்தூர் முகாமிற்கான ஒழுங்குகளை குளத்தூர் மணி செய்திருந்தார். 1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் குளத்தூர் முகாமை பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். இங்கிருந்தே புலிகளின் பயிற்சித் திட்டம் விரிவாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. முதலாவது தொகுதியில் 125 போராளிகள் இம்முகாமிற்கு பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டார்கள். இத்தொகுதியை "மூன்றாவது தொகுதி" (பட்ச்) என்று இயக்கத்திற்குள் அழைத்தார்கள்.இத்தொகுதிப் போராளிகளுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட இரு தொகுதிப் போராளிகளும் முறையே முதலாவது இரண்டாவது பட்ச் என்று அழைக்கப்பட்டார்கள். இப்பயிற்சிகள் ஆறு மாத‌ங்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் இவ்விரு முகாம்களை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு பொன்னாமனிடம் தலைவரால் கொடுக்கப்பட்டது. நாம் இனிப் பார்க்கப்போவது போல, தனது நிர்வாகத்தைப் பரவலாக்கி, மத்தியிலிருந்து உப பிரிவுகளுக்கு விஸ்த்தரித்து வந்திருந்தார். இயக்கத்தின் பொறுப்புக்களை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பரவலாக்கி வழங்கியதுடன் தனக்கு விசுவாசமான மூத்த போராளிகளை அவற்றிற்குப் பொறுப்பாக அவர் நியமித்தார். அந்த வகையிலேயே பொன்னாமான் சிறுமலை மற்றும் குளத்தூர் முகாம்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இம்முகாம்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதேநேரம், முன்னணி பயிற்சியாளராகவும் பொன்னம்மான் பணியாற்றினார். பொன்னம்மானுடன் வேறு சில முக்கிய தளபதிகளும் இம்முகாம்களில் பயிற்சியாளர்களாக இயங்கியிருந்தனர். பிரபாகரனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரபிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மூத்த போராளிகளான குமரப்பா, புலேந்திரன், கிட்டு, லிங்கம் மற்றும் ரகு ஆகியோரே பயிற்சியாளர்களாக அமர்த்தப்பட்ட ஏனைய மூத்த தளபதிகளாகும். பிரபாகரன் அடிக்கடி இம்முகாம்களுக்குட் விஜயம் செய்வது வழமை. தனது விஜயங்களின்பொழுது ஆயுதப்பாவனை மற்றும் ஆயுதங்களைப் பராமரித்தல் தொடர்பாக போராளிகளுடன் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். கைத்துப்பாக்கியை இலாவகமாக இயக்குவதில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்த பிரபாகரனின் திறமையினை போராளிகள் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் என்றும் அறியப்பட்டிருந்தது. முகாம்களின் ஒட்டுமொத்த கண்காணிப்பினை நாயிக் என்கிற இந்திய அதிகாரியொருவரின் பொறுப்பில் பிரபாகரன் கையளித்திருந்தார். எம்.ஜி.ஆர் இடமிருந்து கிடைத்த பணத்தினைக் கொண்டு 1984 ஆம் ஆண்டு ஆடியில் சிறுமலை முகாமினையும் பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். மேலும், அம்முகாமின் இரு துணை முகாம்களாக திருப்பரங்குன்றம் மற்றும் அழகர் மலை ஆகிய பகுதிகளில் சிறிய முகாம்களை உருவாக்கினார். இவ்விரு இடங்களும் தமிழ்க்கடவுளான முருகனின் ஆறு புனிதத் தலங்களில் இரண்டு என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 1984 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் மூன்றாவது பயிற்சி அணி தனது பயிற்சியினை நிறைவுசெய்துகொண்டு யாழ்ப்பாணத்தின் போர்க்களத்தில் அம்மாத இறுதியில் பிரபாகரனால் இறக்கப்பட்டது. மூன்றாவது அணியின் தலைவராக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய கிட்டு, அப்போது யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த பண்டிதரின் உப-தளபதியாகக் கடமையாற்றினார். பண்டிதர், புலிகளின் அச்சுவேலி முகாமிலிருந்தே இயங்கிவந்தார். மூன்றாவது அணியின் யாழ்வரவுடன் இராணுவத்தினர் மீதான புலிகளின் வலிந்த தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டதுடன், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மக்களையும் நிலங்களையும் விடுவிக்கும் பிரபாகரனின் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நான்காவது பயிற்சியணி சிறுமலை முகாமில் 1984 ஆம் ஆண்டு ஆடியில் இருந்து அவ்வருட இறுதிவரை பயிற்றப்பட்டது. அவ்வருடம் மார்கழி மாதத்தில் அவ்வணியும் யாழ்க்களத்தில் ஏனைய அணிகளுடன் இணைந்துகொண்டது. இவ்வணியின் அறிமுகத்தின் மூலம் யாழ்க்குடாநாட்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 500 ஐத் தொட்டிருந்ததுடன், மேம்படுத்தப்பட்ட ஆளணி எண்ணிக்கையூடாக பொலீஸாரை அவர்களின் நிலையங்களுக்குள்ளும், இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள்ளும் முடக்க புலிகளால் முடிந்தது.
  32. கொடிய யுத்தத்தின் தாக்கங்களால் தனது துடிப்பான இளமைக்காலத்தில் இருந்து வாழ்நாள் முழுவதையும் முழுவதையும் வேதனையில் கழித்தவர். அவரின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். சாந்தனின் சகோதரரின் முகநூல் பதிவு இவ்வாறு கூறுகிறது. நீதி என்பது நாதியற்றவர்க்கற்றது. யாரை எதிர்த்தோமோ அவர்களாலும் யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும் என் குடும்பம் அநாதையாக்கப்பட்டது. வேதனையான பதிவு
  33. யாப்பு மீறல் என்று தெரிந்தும் தலைவர் தேர்தலில் வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்களையும் தண்டிக்க வேண்டுமல்லவா? இங்கே சட்டம் எங்கே வருகிறது? கட்சி யாப்பு மீறல் என்றல்லவா வழக்கில் இருக்கிறது?
  34. இந்தியாவால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும், எம்.ஜி.ஆர் செய்த உதவியும் மற்றைய இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் அளவில்ச் சிறியதாக இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் புலிகளின் திறன் தொடர்பான சிறப்பான மதிப்பீட்டினைக் கொண்டிருந்தனர். மேலும், பிரபாகரன் மீதும் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் நாட்டில் இயங்கிவந்த தம்ழிப் போராளி அமைப்புக்களை நான்கு இந்திய உளவு அமைப்புக்கள் கண்காணித்து வந்தன. அவையாவன, 1. இந்திய வெளியக உளவுத்துறையான ரோ 2. இந்திய மத்திய உளவு அமைப்பான சி.பி.ஐ 3. இராணுவ புலநாய்வுத்துறை 4. தமிழ்நாடு உளவுத்துறையான கியூ பிராஞ்ச் இவை அனைத்தினதும் மதிப்பின்படி புலிகள் இயக்கமே அமைப்புக்களில் சிறப்பானது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணமாக புலிகளின் இடையறாத இராணுவச் செயற்பாடுகளும், போராளிகளின் ஒழுக்கமும், கட்டுக்கோப்பும், இலட்சியமான தமிழ் ஈழம் மீதான பற்றும் அமைந்திருந்தன என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு காவல்த்துறையின் புலநாய்வுப் பிரிவிற்கு மலையாளியான மோகன்தாஸ் உதவி ஆணையாளராக அக்காலத்தில் கடமையாற்றி வந்தார். இன்னொரு மலையாளியும், இலங்கையின் கண்டியில் பிறந்தவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான எம்.ஜி.ஆர் உடன் மோகன்தாஸ் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வந்தார். எம் ஜி ஆர் உடன் பேசும்போது புலிகள் குறித்து மிகவும் பெருமையாகவும், உயர்வாகவும் மோகன்தாஸ் பேசிவந்திருந்தார். அமைப்புக்கள் அனைத்திற்குள்ளும் புலிகளே மிகவும் திறமையானவர்கள் என்பதே மோகன்தாஸின் கணிப்பாக இருந்தது. தான் ஓய்வுபெற்றதன் பின்னர் எம்.ஜி.ஆர் குறித்து புத்தகம் ஒன்றினை மோகன் தாஸ் எழுதினார் . அப்புத்தகத்தில் புலிகள் பற்றியும், தலைவர் பிரபாகரன் பற்றியும் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். "புலிகளின் போராளிகள் இலட்சிய உறுதியும், கட்டுக்கோப்பும் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு அமைப்பும் தமக்கென்று புலநாய்வுப் பிரிவுகளை வைத்திருக்கின்றபோதிலும், புலிகளின் புலநாய்வு அமைப்பே மிகவும் திறமை வாய்ந்தது". 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நடைபெற்ற காலத்தில் புலிகள் அமைப்பில் வெறும் 30 போராளிகளே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், புரட்டாதி மாதமளவில் அவ்வெண்ணிக்கை 250 ஐத் தொட்டிருந்தது. அவர்களுள் 200 மூத்த போராளிகளை சிறப்புப் பயிற்சிக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்திற்கு தெரிவுசெய்து அனுப்பிவைத்தார் பிரபாகரன். இந்தியாவினால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டத்தில் புலிகள் அமைப்பே இறுதியாக இணைந்தது. 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் 100 பேர் கொண்ட இரு குழுக்களை பிரபாகரன் அனுப்பிவைத்தார். தொலைநோக்குப் பார்வையுடனேயே இதனை அவர் செய்தார். ரோ சார்பாக புலிகள் இயக்கத்தின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த உயர் அதிகாரி சந்திரசேகரனிடம் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்து பிரபாகரன் வினவினார். மிகுந்த திறமைசாலிகளான இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும், புதிய போர்த் தந்திரங்களை அவர்கள் போராளிகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் சந்திரசேகரன் பதிலளித்தார். மேலும் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களைப் பாவிப்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வரைபடங்களை படித்து அறிந்துகொள்ளல், கண்ணிவெடிகளை பொருத்தும் பயிற்சிகள், வெடிபொருட்களைக் கையாளும் பயிற்சிகள், தாங்கியெதிர்ப்புப் பயிற்சிகள், விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகள் என்பன புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் அடங்கியிருந்தன. புலிகளுக்கு அவசியமானவை என்று தான் கருதிய பயிற்சி விபரங்கள் குறித்து சந்திரசேகரனிடம் பிரபாகரன் கூறினார். தனது உடனடிக் கவலை இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காப்பதுதான் என்று அவர் சந்திரசேகரனிடம் தெரிவித்தார். " இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி முடக்கவேண்டும்" என்று பிரபாகரன் தெரிவித்தார். சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவித்து, சுதந்திரமான தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் வகையில் தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதே பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி தனது 21 ஆவது வயதில் தனது அமைப்பிற்கான யாப்பினை அவர் வரைந்தார். அதன்படி தது அமைப்பின் நோக்கங்களை பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார், முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம் இறைமையுள்ள, சோசலிச ஜனநாயக மக்கள் ஆட்சியை ஏற்படுத்துதல். சாதி வேற்றுமைகள் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் முற்றாகக் களைதல். சோசலிச முறையில் அமையப்பெற்ற உற்பத்திச் செயற்பாடுகளை உருவாக்குதல். விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினை இராணுவப் போராட்டமாக மாற்றுதல். கெரில்லா போர்முறையில் ஆரம்பிக்கப்பட்டு ஈற்றில் மக்கள் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தை மாற்றுதல். என்பனவே அவையாகும். புலிகள் இராணுவச் செயற்பாடுகளை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்தார்.அவையாவன, 1. பொலீஸ் புலநாய்வு வலையமைப்பையும், அவர்களுக்கு உளவுபார்க்கும் துரோகிகளையும் அழித்தல். 2. சிங்கள அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்குதல். 3. இராணுவ முகாம்களை அழிப்பதன் மூலம், இராணுவ‌ ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுப்பதன் ஊடாக அப்பகுதிகளில் புலிகளின் நிர்வாகத்தை ஏற்படுத்தி தமிழீழத்திற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை நிறுவிக் கொள்ளல். இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சிகுறித்து பிரபாகரன் தீர்க்கமான கொள்கையினைக் கொண்டிருந்தார். அதாவது, தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றக்கூடியவகையில் அப்பயிற்சி அமையவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தனது கொள்கையின்படியே இந்தியப் பயிற்சியும் அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, இந்திய அதிகாரிகளிடம் தனது அமைப்பிற்கான பயிற்சித் தேவைகள் குறித்துப் பேசும்போது தனது கொள்கையின்படி அவை அமையவேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். ஏற்கனவே கண்ணிவெடித் தாக்குதல்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த புலிகளின் போராளிகளுக்கு கண்ணிவெடிகளை உருவாக்குவது, வீதிகளிலும், பாலங்களிலும் அவற்றினை சாதுரியமாகப் பொருத்துவது, வெடிபொருட்களைக் கையாள்வது ஆகிய பயிற்சிகளை இந்திய அதிகாரிகள் வழங்கினர். இந்தப் பயிற்சிகளை மிகவும் வெற்றிகரமாகப் பாவித்த பிரபாகரன், 1985 களின் நடுப்பகுதிகளில் இராணுவத்தினரினதும் பொலீஸாரினதும் நடமாட்டங்களை முற்றாக நிறுத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்கிவிடுவதில் வெற்றிகண்டார். புலிகளின் பெண்போராளிகள் புலிகளின் அறிவையும், நுட்பத்தையும் இந்தியப் பயிற்சிகள் மேலும் மெருகூட்டின. அவை புலிகளது இராணுவ வல்லமையினையும், திறனையும் அதிகரித்தன. ஆனாலும், இந்தியாவினால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. புலிகளின் 200 போராளிகளை மட்டுமே இந்தியா பயிற்சியளித்தது. புலிகளுக்கான பயிற்சிகளின்போது பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் அக்காலத்திற்குப் பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன. புலிகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் மிகவும் பழமையானவை. தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தனது அமைப்பின் போராளிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதும், நவீன ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதும் அவசியம் என்று பிரபாகரன் கருதினார். குறைந்தது 1000 போராளிகளும் நவீன ஆயுதங்களும் அவருக்குத் தேவைப்பட்டது. அதற்குப் பெருமளவு பணம் தேவைப்படும். ஆனால், அப்போது அவரிடம் அதற்கான பணம் இருக்கவில்லை. அக்காலத்தில் நாளாந்தச் செலவுகளைப் பராமரிப்பதே அவருக்குக் கடிணமாகத் தெரிந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டு சித்திரையில் பிரபாகரனுக்கு ஒரு தங்கப் புதையல் கிடைத்தது. எம் ஜி ஆர் மூலமாக அவர் எதிர்பார்த்த உதவி வந்து சேர்ந்தது. எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தினைக் கொண்டு புதிய பயிற்சி முகாம்களையும், அமைப்பிற்கான புதிய போராளிகளையும் அவரால் இணைத்துக்கொள்ள முடிந்ததுடன், தனது அரசியல் வலையமைப்பையும் அவரால் விஸ்த்தரிக்க முடிந்தது.
  35. இல்லை மூலையில் தொங்கவில்லை ஊர் வாசிகசாலையில் மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன். வேறு என்ன வேலை ?? நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்?? நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன் ஒரு அறுப்பும் விளங்கவில்லை
  36. நீங்கள் அவருக்கு செய்த சேவையிலும், பரிவிலும் அவர் யேசுவைக்கண்டிருக்கலாம் அல்லது உங்கள் வடிவில் ஏசுவே வந்திருக்கலாம். இருந்தாலும் இந்த வார்த்தை உங்களை ஏசுவைபோல் வாழ உறுதி எடுக்க வைத்திருக்கும். இயேசுவின் நிறம் அழகு எல்லாம்: நாம் நம்மை அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய்வதே!
  37. இது எல்லாம் நன்றாக விளங்கிகொண்ட விடயங்கள் தானே 🤣 தாங்கள் குடியேறிய மேற்கு நாடுகளில் தவறு நடந்தால் தவறு இல்லை அதே தவறை இலங்கை செய்தால் தான் தவறு.
  38. முன்னாள் போராளிகள் பற்றிய பல சோகமான விடயங்கள் நாம் அறிந்தாலும் "வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்" என்பது போல சிலர் பல உதவிகளையும் சிலர் எதுவித உதவியும் இல்லாது இருப்பது வேதனை தான். சமீபத்தில் யாழ் சென்றபோது ஒரு சமூக ஆர்வலர் பெரும்பாலும் பணமற்றவர்களே ஏனையவர்களுக்கு பெரும்பான்மையாக உதவுகின்றார்கள் என்று ஒரு கருத்தையும் வைத்திருந்தார். இக்கதையிலும் அக்கருத்தும் வருகின்றது. ஊறல் என்றால் என்ன? 🤔
  39. போராளிகளின் நிலமைகளை மிகவும் கவலை யளிக்கிறது...பகிர்வுக்கு நன்றி தனி
  40. மிகவும் நெருடலான கதை. கைவிடப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலைதான் அதிகம்.
  41. இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
  42. பெருமூச்சு மட்டும் தான்.
  43. புலனாய்வுப் பிரிவுகளின் கெடுபிடிகளால்த் தான் போராளிகள் தனித்து நிற்கிறார்கள் என எண்ணுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.