Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    2954
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7051
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/13/24 in all areas

  1. 27.02.2024, அழைப்பு மணி அடித்தது. கதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள். கிளவ்டியா பெர்னாடி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில் உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் துணையாக இருந்தது அவளதுபெரிய வெள்ளை நிறமான ‘மலைக்கா’ என்ற நாய் மட்டுமே! கிளவ்டியா, எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவாள். புத்தக வாசிப்புகளில் கலந்து கொள்வாள். அவள் நடன வகுப்பும் நடத்திக் கொண்டிருந்தாள். சிறார்களுக்கு படிப்பும் சொல்லித் தந்தாள். யேர்மனியில் மட்டுமல்ல பிறேஸிலில் நடைபெறும் கார்னிவெல், களியாட்ட விழாக்களில் எல்லாம் ஆர்வத்துடன் பங்கேற்பாள். தான் பங்குபற்றும் நிகழ்வுகளின் படங்களை மறக்காமல் முகநூலிலும் பதிந்து நண்பர்கள் தெரிந்தவர்களுடன் மகிழ்ந்திருப்பாள். “எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள்?” “உங்களைக் கைது செய்யிறதுக்கு மட்டுமல்ல, உங்களின்ரை வீட்டைச் சோதனை செய்யிறதுக்கும் எங்களுக்கு அரச சட்டத்தரணி அனுமதி தந்திருக்கிறார்” கிளவ்டியாவின் புருவம் மேல் ஏறி கீழ் இறங்கியது. “நான் நினைக்கிறன், நீங்கள் விலாசம் மாறி வந்திருக்கிறீங்கள் எண்டு” “இல்லையே. செபஸ்ரியான் வீதி, இலக்கம் 73, ஐந்தாம் மாடி, கிளவ்டியா பெர்னாடி எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது” கிளவ்டியாவை, பொலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது, அவளது கையில் விலங்கு மாட்டிய பொலீஸ் அதிகாரி அவளிடம் கேட்டார், “ உங்களுக்கு டேனிலா கிளெட்டைத் தெரியுமோ? முப்பது வருடங்களாக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்று. இடதுசாரித் தீவிரக் கொள்கையைக் கொண்ட செம்படை அமைப்பு (Red Army Faction) யேர்மனிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. மூன்று தசாப்தங்களாக, கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என செம்படையின் செயற்பாடுகள் தொடர்ந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 1977இன் பிற்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தை யேர்மனியின் 'இலையுதிர் காலம்' என்று யேர்மனியில் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். இந்தச் செம்படை அமைப்பில்தான் டேனிலா கிளெட் இருந்தாள். அவளது தாயார் ஒரு பல் வைத்தியர். போதுமான வருமானம். நிறைந்த வாழ்க்கை. டேனிலா கேட்பவை எல்லாம் வீட்டில் கிடைத்தன. ஆனாலும் அவள் விரும்பியது ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை - அது எல்லோருக்குமான ‘சம உரிமை’. அதற்காகத்தான் படிப்பு, குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டு விட்டு அவள் தன்னை செம்படையில் இணைத்துக் கொண்டாள். 20 ஏப்ரல் 1998 அன்று, ஜெர்மனிய மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட எட்டுப் பக்கங்கள் அடங்கிய செய்தி ஒன்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் மூலம் வந்திருந்தது. அதில் செம்படை கலைக்கப்பட்டுவிட்டதாக RAF இன் இலச்சினையுடன் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் பிறகு யேர்மனி, தனது இளவேனிற் காலத்தை அனுபவிக்க ஆரம்பித்தது. ஜூலை 30, 1999இல் ஒரு கோடை காலத்தில் செம்படையின் சில நடவடிக்கைகள், அவர்கள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்டின. அந்த வருடத்தில், டியூஸ்பேர்க் நகரத்தில் நடந்த ஒரு கொள்ளையில் செம்படை உறுப்பினர்களான, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட், ஆகிய மூன்று பேரும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் கொள்ளை இடப்பட்டதாக பொலீஸ் அறிக்கை வெளிவந்தது. யேர்மனியப் பொலீஸாரால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்கவும் முடியவில்லை, அந்த மூன்று பேர்களையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அந்தக் கொள்ளைக்குப் பிறகு, நீண்ட காலமாக எந்தவிதமான சம்பவங்களிலும் RAF அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த எவரும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதாகத் தகவல்களும் வெளிவரவில்லை. 2016, மே மாதம் 25ந்திகதி, மீண்டும் ஒரு பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தைத் தாக்கி 400,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக வாழும் செம்படை உறுப்பினர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இந்த முறையிலான கொள்ளைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவானது. இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதற்காக, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட் ஆகிய மூவரைப் பற்றிய புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட்டு தகவல் தருவோருக்கு 150,000 யூரோக்கள் தருவதாக யேர்மனியப் பொலீஸ் திணைக்களம் அறிவித்தது. பலன் கிடைக்கவில்லை. ஆனால் கொள்ளைகள் தொடர்ந்து இடம்பெறவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. PimEyes, இரண்டு போலந்து நாட்டு அறிவியல் பட்டதாரிகளால், 2017 இல் வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள். PimEyes மென்பொருளில் ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் கூட, சில விநாடிகளிலே அந்தப் படத்தில் உள்ளவரின், கண்ணின் குழிகள், கன்னத்தின் எலும்புகளின் உயரம், வாயின் பக்கங்கள் போன்றவற்றை அளவிட்டு அவரையோ, அல்லது அவரை மிக ஒத்த புகைப்படங்களையோ வெளிக் கொணர்ந்து விடும். இன்று அநேகமானவர்கள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், PimEyes மென்பொருள் இலகுவாக செயற்பட அது வாய்ப்பாக அமைகிறது. தங்களது ஆபாசப் படங்களையும், தேவையில்லாத சில புகைப்படங்களையும் இணையத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த மென்பொருளைப் பலர் பயன்படுத்துகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்னர், ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்ன், தற்செயலாக தேடப்படுபவர் பட்டியலில் இருந்த டேனிலா கிளெட்டின் படத்தைக் கண்டு, PimEyes மென்பொருளில் அதைத் தரவிட, அது முகநூலில் இருந்த டேனிலா கிளெட்டின் பல புகைப்படங்களை வெளிக் கொணர்ந்தது. ஆனால் அவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிளவ்டியா பெர்னாடியின் புகைப்படங்களாக இருந்தன. பொந்துக்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, வெளியே வந்து, தான் எடுத்த படத்தை முகநூலில் போட்டு ஆடப் போய் மாட்டிக் கொண்டது. ‘பதுங்கி வாழ்வார்கள்’ என்று பொலிஸார் நிலத்தடியில் தேடிக் கொண்டிருக்க அவர்கள் வெளி உலகில் சர்வசாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள். கிளவ்டியா பெர்னாடி, “ எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள் ?” என்று கேட்டதற்கு பொலீஸார் பதில் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இப்பொழுது புரிந்திருக்கும். கிளவ்டியா பெர்னாடி வீட்டில் இருந்து கைப்பற்றப் பொருட்களின் பட்டியல், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள், பெருமளவு பணம், 1200 கிராம் தங்கம் என நீண்டு கொண்டிருக்கிறது. நாட்டை, பெயரை மற்றினாலும் கைரேகையை மாற்ற ஒருவரால் முடியாதுதானே. பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு யேர்மனி முழுதும் தேடப்பட்ட ஒருவர், யேர்மனியின் தலை நகரமான பேர்லினில் அதுவும் பலர் வந்து பார்த்துப் போகும் பிரபலமான இடத்தில் மிகச் சாதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக யேர்மனியில், 65 வயதில் ஓய்வூதியம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிளவ்டியா பெர்னாடி என்கின்ற டேனிலா கிளெட்டின், 65 வயதில் சிறைக்குப் போகிறார். பொலீஸ் திணைக்களம் அறிவித்ததன்படி ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்னுக்கு 150,000 யூரோக்கள் கிடைக்கத்தானே வேண்டும். 'எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக் இருவரும் பேர்லினில்தான் இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்' என்று ஒவ்வொரு நாளும் காலையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
  2. இந்தக் கல்வி விடயத்தில் என்னிடமும் ஒரு கருத்து உண்டு. ஒருவரது தாய் மொழிக்கும், தர்க்க ரீதியான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறேன். இதுவே சீனர்களும், தமிழர்களும், ஜப்பானியர்களும் தர்க்க ரீதியான பாடங்களில் அதிகம் பிரகாசிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். மூளை அமைப்பில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. மற்றது ஒரு தேசத்தின் வளமும், மூளை வளர்வதற்கு உந்துதலளிக்கக் கூடும்…!
  3. அன்றுபோல் இன்று இல்லையே! *************************************** அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம் அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும் அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும் ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும் உழைப்போர் வியர்வையில் வளரும் சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும் பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும். வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும் தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும் கடலும் காற்றும் மீன்களும்,இறாலும் இயற்கை மாறாத மாரியும்,கோடையும் இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும் இனிக்க இனிக்க பேசிடும் தமிழும் கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும் குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும். உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும் உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும் பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும் பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும் பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும் பண்பும் அடக்கமும் மரியாதைச் சொற்களும் பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும் நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும். ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும் வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும் தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும் தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும் கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும் கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும் சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம் பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ? -பசுவூர்க்கோபி.
  4. மயிலிறகு ........... 13. வாமன் அந்த சாவிகளைப் பயன்படுத்தி யந்திரத்தை மூடியிருந்த இருபக்கப் பெட்டிகளையும் கழட்டிவிட்டு அழுக்கேறியிருந்த பில்டர், பிளக் எல்லாவற்றையும் சுத்தமாக்கி மீண்டும் பொருத்தி விடுகிறான்.பின் அதில் சாவிபோட்டு பொத்தானை அமுக்க அது இயங்கத் தொடங்கி விட்டது. சிறிது நேரம் அதை அப்படியே ஓடவிட்டு நிப்பாட்டுகிறான். பின் பக்கத்துப் பெட்டிகளை பூட்டும்போது அதில் ஏதோ நெகிழிப் பையில் சுற்றியபடி இருக்க முதலில் அதை வாகனப் புத்தகம் என்று நினைத்தவன் எதுக்கும் பார்ப்பம் என்று எடுத்துக் பார்க்க அதில் வாகனப் பத்திரத்துடன் தனியாக ஒரு கட்டுப் பணமும் இருக்கு.அதைமட்டும் பூட்டாமல் அருகில் வைத்து விட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணிர் எடுத்து வண்டியை நன்றாக கழுவித் துடைத்து விடுகிறான். அப்போது அஞ்சலா ஒரு பையுடன் அங்கு வருகிறாள். அஞ்சலா இங்கு கொஞ்சம் வாங்கோ என்று அழைத்து அந்தப் பணக்கட்டை எடுத்து இது இங்கே இருந்தது என்று சொல்லித் தருகிறான். அதை அவள் வாங்கிப் பார்த்துக் கையில் வைத்துக் கொண்டு அது சரி வண்டிக்கு நீ முன்பணம் தரவேண்டும் என்கிறாள்.அவனும் அதுக்கென்ன என்று சொல்லி இப்பதான் விதானையார் சம்பளப்பணம் தந்தவர் என்று அதில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாவை எண்ணிஎடுத்து மீண்டும் பொக்கட்டில் தேட அவள் என்ன என்று கேட்கிறாள்......அதுவந்து இன்னும் ஒருரூபாய் தேடுகிறேன் என்று சொல்ல அங்கிருந்த ஆச்சி தனது கொட்டப்பெட்டிக்குள் இருந்து ஒரு ரூபா நாணயத்தை எடுத்து அவன் கையில் தர அதை அப்படியே அஞ்சலாவின் கைகளில் தருகிறான். அவளுக்கு அவன் செயல்களைப் பார்க்க சிறுபிள்ளைத்தனமாயும் சிரிப்பாகவும் இருக்கிறது. மேலும், உன்னிடம் யாராவது இந்த சைக்கிள் சம்பந்தமாய் ஏதாவது கேட்டால் நான் அதை திருத்தத் தந்தது என்று சொல்லி அவர்களை என்னிடம் அனுப்பு என்கிறாள். பின் தன் கையில் இருந்த பையை வண்டியின் பக்கப் பெட்டியில் வைத்து விட்டு இதில் கொஞ்சம் வெற்றிலை, தேசிக்காய், மாங்காய் பணியாரம் எல்லாம் இருக்கு கொண்டுபோய் உன் வீட்டுக்கும் மயிலக்கா வீட்டுக்கும் குடு என்கிறாள். அவனும் அவளுக்கு மிகவும் நன்றி சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளை வீதிக்கு உருட்டிக்கொண்டு வந்து சர் என்று சீறிக்கொண்டு பறக்கிறான். வீட்டுக்கு வர அவன் தாய் தம்பி உனக்கு ஒரு தபால் வந்திருக்கு, அப்பாதான் கையெழுத்துப் போட்டு வாங்கினவர் என்று சொல்லிக் குடுக்கிறா. அதோடு கொஞ்ச நேரத்துக்கு முதல் மயூரியும் வந்திருந்தவ. உன்னை அங்காலுபக்கம் காணேல்லயாம் ஏதும் சுகயீனமோ என்று பார்க்க வந்தவ. ஓமன அம்மா இப்ப கொஞ்சம் வேலைகள் கூட அதுதான் அங்காலுபக்கம் போகேல்ல. எனக்குத் தெரிந்த ஆட்கள் இந்த மோட்டார் சைக்கிளை வச்சு பாவிக்கச்சொல்லி தந்திருக்கினம் என்று சொல்லி விட்டு கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான். அது அவன் கிராமசேவகர் நியமனத்துக்கான கடிதம். அந்த நல்ல செய்தியை தாய் தகப்பனிடம் சொல்லிவிட்டு நாளைக்கு அரசு விதானையிடம் சென்று அதற்குரிய சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். இனி நான் கிராமசேவகர் அம்மா என்று சொல்லியபடி பக்கப் பெட்டியைத் திறந்து பையை எடுத்து தாய்க்கு அஞ்சலா தந்த பொருட்களை எடுத்துக் குடுக்கும்போது அங்கு அவன் அஞ்சலாவிடம் குடுத்த பணப்பை இருக்கின்றது. அஞ்சலா நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் என்று கண்களை மூடி சொல்லிக் கொள்கிறான். சரியம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நேராக கடைத்தெருவுக்கு செல்கிறான். அங்கு ஒரு கடைக்குள் சென்று தொலைபேசி வாங்கி சுந்துவுக்கு போன் செய்ய சிறிது நேரத்தில் சுந்துவுக்கு தகவல் போய் அவன் வந்து தொடர்பு கொள்கிறான். அவனிடம் வைத்தி வீட்டில் பணம் வாங்கியதில் இருந்து இன்று தனக்கு வேலை கிடைத்தது வரை சொல்கிறான்.சுந்துவும் தான் கல்யாணத்துக்கு ஒரு கிழமைக்கு முன் வருவதாகச் சொல்கிறான். பின் அங்கு ஒரு புடவைக்கு கடைக்கு சென்று சில பல புடவைகள்,வேட்டிகள், காற்சட்டை சேர்ட்டுகள் என்று எல்லோரையும் நினைத்து தனித்தனியாக பார்சல் பண்ணி எடுத்துக் கொள்கிறான். இப்பொழுது கையில் நிறையப் பணம் இருக்கின்றது அத்துடன் வேலையும் கிடைத்திருக்கு.அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, இன்று யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை. வெளியே வரும்போது அங்குள்ள பொம்மை அணிந்திருந்த சுடிதாரைப் பார்த்ததும் அஞ்சலாவின் நினைவு வர அவளுக்கு இது மிகவும் அழகாய் இருக்கும் என்று நினைத்து அதோடு அவள் தாய் தந்தைக்கும் சேர்த்து ஆடைகள் வாங்கிக் கொள்கிறான். பின் செருப்புக்கு கடைக்கு சென்று நல்ல நல்ல செருப்புகள் மற்றும் பாட்டா செருப்புகள், இனிப்புகள் சொக்கிலேட் எல்லாம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தாயிடம் சேலைகள் வேட்டிகள் இருக்கும் பார்சலைக் குடுத்து விட்டு அஞ்சலா வீட்டுக்கு வருகிறான். அப்போது அஞ்சலா திண்ணையில் இருந்தவள் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் எதோ நினைவில் வைத்தி என்று நினைத்து ஓடிவந்து கேட்டைத் திறக்கிறாள். அங்கு சைக்கிளுடன் வாமனைக் கண்டதும் ஒரு நிமிடம் தனது செயலை நினைத்து வெட்கம் வருகிறது. வாமனும் சைக்கிளை ஸ்ராண்டில் நிப்பாட்டி விட்டு என்ன சிரிக்கிறீங்கள் என்று கேட்டுக்கொண்டே ஒரு பார்சலைக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். அவளும் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு அதை வாங்கி அவன் முன்பே திறந்து பார்க்கிறாள். அதில் வேட்டி சேலைகளுடன் ஒரு அழகான சுடிதாரும் பொன்னிற வாருடன் ஹீல்ஸ் வைத்த செருப்பும் இருக்கிறது. அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. இப்படி ஒரு பரிசு இதுநாள் வரை எனக்கு யாரும் தந்ததில்லை. நீ எனக்குத் தந்தது பெரிதில்லை என் பெற்றோரையும் நினைத்து வாங்கிக் கொண்டு வந்தது என்னை என்னவோ செய்யிறதெடா ......சீ ....போடா....என்னை கொஞ்சம் தனியா விடுடா....நிறைய அழவேனும் போல் இருக்குடா. அந் நிலையிலும் அவள் உன் பெற்றோருக்கும் உடுப்புகள் எடுத்தனியாடா என்று கேட்க ....வாமனும் ஓம் அவைக்கும் எடுத்து அங்கேயும் குடுத்து விட்டுத்தான் வருகிறேன். பின் அவன் அவளை நெருங்கிச் சென்று அவளது கைகளை எடுத்து சிறிது நேரம் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்து விட்டு எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வருகிறான்........! 🦚..........மயில் ஆடும்.......... 13.
  5. இலங்கையின் நீண்ட வரலாறு தெரிந்தும் கல்வியும்பொருளாதாரத்திலும் மேலோங்கிவிட்டால் இலங்கையை ஆள முடியும் தமிழர்கள் சொல்வதை இலங்கை கேட்கும் என்று எப்படித்தான் இவருக்கு பேச மனம் வந்ததோ தெரியவில்லை, அல்லது தனது சிங்கள அரச ராஜாங்க பதவியை நியாயப்படுத்த தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறாரோ தெரியவிலை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து இலங்கையை ஆள முடியாது. ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்! கல்வியில் மேல் நிலையில் உள்ளவனும் பொருளாதாரத்தில் நிலைபெற்றவனுக்கும் இலங்கை பணியும் என்றால் இன்றைய வங்குரோத்துக்கு இலங்கை வந்திருக்காது எப்போதோ ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு ஆகீருக்கும், 2 முக்கால் கோடி சனத்தை வைச்சுக்கொண்டு 140 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து அரிசியும் முட்டையும் கடன் வாங்கிகொண்டிருக்காது. 83 கலவரத்தின் பின்னர் தமிழர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்துடனும் புலம் பெயர்வுடனும் காலத்தை ஓட்டிக்கொள்ள சிங்களவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர், இன்று புலம்பெயர்நாடுகளுக்கு படையெடுக்கும் சிங்கள மாணவர்களின் தொகையில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இனதொகை ஒப்பீட்டளவில் தமிழர்கள் கல்வியறிவில் மேலோங்கியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அதை வைத்து நாங்கள் சிங்கள தேசம் நாம் சொல்வதை கேட்கும் நிலைக்கு கொண்டுவரமுடியாது , அதை செய்ய சிங்கள அரசியல் அனுமதிக்காது அதையும்மீறி அரசியல் அனுமதித்தாலும் தேரர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆட்சியைவிட்டே அகற்ற பார்ப்பார்கள். இலங்கையில் சர்வவல்லமை பொருந்திய பெளத்த சிங்கள இனத்தை சேர்ந்த கல்விமான்கள் , பெரும் பணக்காரர்களே கல்வி பணத்தில் உச்சம் தொட்டும் ஆளைவிடுடா சாமியென்று அப்படியே ஆயிரக்கணக்கில் நாட்டை காலி செய்துவிட்டு ஓட்டம்பிடிக்கும்போது இந்த இரண்டும் இருந்தால் நாங்கள் சொல்வதை நாடு கேட்கும் என்று இயம்புவது இந்த நூற்றாண்டின் அதி பயங்கர நகைச்சுவை. ஒருவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதி பயங்கரமாக முன்னேறிவிட்டால் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் அதை வைத்து எப்படி மேற்குலகத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பதே அடுத்தகட்டமாக சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்.
  6. சாமியர்...இது புண்ணுக்கு புனுகு தடவுவது போன்றதுதான்...இது..
  7. நன்றி. எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்தைவிட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. அதேபோல எந்த மனிதனும் எவனுக்கும் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை. அதுதான் எனது point.
  8. அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நாடெங்கும் மதில்கள் இல்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நடைவெளி இடைவெளி நூறிருந்ததே நாலுமணிப் பூவிருந்ததே நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே நன்றி உடையார்.
  9. மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது. நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார். ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை. அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார். இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது. ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது. கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது. ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.
  10. இது பல ஆண்டுகளாக நடக்கிற "வேஸ்ற் வெற்று" உரையாடல். இதற்கு பதில்கள் சொல்வதை விட கேள்விகள் கேட்டால் கம் மென்று போய் விடுவினம், எங்களுக்கும் நேரம் மிச்சம்! பெருமாள் மேலே சொன்ன சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு சுமந்திரன் போட்டதல்ல, சுமந்திரனின் முறைப்பாட்டினால் பொலிஸ் போட்டதும் அல்ல! பொலிஸ் புலனாய்வுப் பிரிவு போட்ட கிரிமினல் வழக்கு. இதைச் சுமந்திரன் போட்டதாகச் சொன்ன பெருமாளிடம், அதற்குரிய கோர்ட், பொலிஸ் முறைப்பாட்டு ஆதாரத்தைத் தரும்படி 2 ஆண்டுகள் முன்பு கேட்டிருந்தேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன் - ஆள் எதையும் தேடுவதில் கில்லாடி, ஆனால் கண்டு பிடிப்பதில் அவ்வளவு சிறப்பானவர் அல்ல😂!
  11. சீனி தவிர, நெட்டோ போன்ற பானங்களும் மா உணவுகளின் பாவனை (கொத்துரொட்டி, நூடில்ஸ், இடியப்பம்) அதிகரிப்பும் அதிகம் உடலை அசைத்து வேலை செய்யாமையும் முக்கிய காரணங்கள். இவற்றை விட்டு அப்பாவி பால்மாவுக்குக் கெட்ட பெயர். ஊட்டச் சத்துக் குறைந்த நாடுகளில் பால் இல்லாவிட்டால் பால்மாவை மாற்றீடாகப் பாவிப்பதில் பிரச்சனையில்லை (இதற்காகப் பால்மாவை முழுமையாக ஆதரிக்கவில்லை).
  12. கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.
  13. இந்த செய்தி இங்கு இணைக்கப் படும் போதே பெருமாளுடையதைப் போன்ற கருத்துக்கள் வருமென எதிர்பார்த்தேன், அப்படியே நடந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் கொல்லப் பட்ட குழந்தைகளின் பால் கவனத்தைக் காட்டியிருப்பது இன்னும் நாம் இனவாதச் சிங்களவர்களின் தரத்திற்கு இறங்கி விடவில்லையென்று நிரூபிக்கிறது.
  14. எல்லாம் போர் குற்றங்களை விசாரிக்க தவணை கேட்டதின் பலாபலன்கள்...
  15. உங்கள் கணிப்பு சரி. AI மூலமாகவே உருவாக்குகிறேன். நான் வரையும் படங்கள் கையெழுத்துடன் இருக்கும்
  16. அந்த முயலா(ஆ)மை கதை இங்க என்னமா பொருந்திப் போகுது!
  17. இந்தக் கிரிக்கெற் பார்க்கவும், கூட்டத்திற்குப் போகவும் பணம் பெற்றுக் கொண்டது பற்றி ஏதாவது செய்திகள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? அல்லது கடந்த காலத்தில் ஒரு தமிழ் தரப்பு அமைப்பு பணம் பெற்றுக் கொண்டு மகிந்தவை வெல்ல வைத்தார்கள் என்பது போல ஒரு வதந்தியா? அறிந்து கொள்ளத் தான் கேட்கிறேன்😎.
  18. இது பெயர்களை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட சாதாரண குழப்பத்தினால் விளைந்ததென ஊகிக்கிறேன். இறந்த தாயின் முழுப் பெயரைப் பாருங்கள்: Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake சிங்களப் பெயர்கள் பரிச்சயமில்லாத கனேடியர்கள், இது ஒரு பெயர் என்று புரிந்து கொள்ளக் கஷ்டப் படுவர்.
  19. சரி பாஸ், இதையெல்லாம் பெரிதாக எடுத்தால்? விட்டுத்தள்ளுங்கோ. அடுத்த subject க்குப் போவோம்’ 😀 இது நன்னாருக்கே 😀
  20. ”அன்புள்ள சைனுவுக்கு, நான் இங்கு நலம், நீயும் …” கேரளாவின் கிராமம் ஒன்றில் ஆற்றுமணல் அள்ளும்தொழில் செய்பவன் நஜீப். எப்போதும் நீரோடு விளையாடும் தொழில் ஆதலால் அடிக்கடி இருமலும் காய்ச்சலும் அவனை வாட்டுகின்றது. அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க சைனுவை திருமணம் செய்து கொள்கின்றான். சைனு நான்கு மாதக்கர்ப்பிணியாக இருந்தபோதுதான் கருவட்டாவில் இருந்த ஒரு நண்பர், சவூதி அரேபியா செல்வதற்கான ஒரு விசா விலைக்கு இருப்பதாக சொல்கின்றார். இந்தத் தொழிலின் அவஸ்தையும் பட்ட கடன்களும் அவனுக்குள் வேறு ஒரு ஆசையை விதைக்கின்றன. சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தன் ஊர்க்காரர்கள் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அவர்கள் மேனியில் இருந்து கிளம்பும் வாசனைத்திரவியங்களும் கைகளிலும் கழுத்திலும் புரளும் கனத்த தங்கச்சங்கிலிகளும் மனைவி மக்களுக்கு வாங்கி வரும் நகைகள், கடிகாரங்கள், துணிமணிகள், டேப் ரிக்கார்டர், விசிபி ஆகியனவும் இங்கே வந்தபின் வாங்கும் கார், ஏசி போன்ற ஆடம்பர சாதனங்களும் நஜீப்பை தூண்டி விடுகின்றன. அரேபியாவில் சில வருடங்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து ஊர் திரும்பி வாழ்நாளெல்லாம் நிம்மதியாக இருந்துவிடலாம் என்று கனவு காண்கின்றான் நஜீப். சைனுவும் இவனது ஆசையை தூண்டி விடுகின்றாள். ஆற்றுமணல் அள்ளி, பிறக்கப்போகும் நபீலையோ சஃபியாவையோ எப்படிக்கரை சேர்ப்பது என்று அவனைக்கேட்கின்றாள். உம்மாவையும் ஆறு மாதக்கர்ப்பிணியான சைனுவையும் பிரிந்து பம்பாயில் விமானம் ஏறி சவூதி அரேபியாவின் ரியாத்தில் வந்து இறங்குகின்றான். இவனுடன் அதே ஊர்க்காரனான ஹக்கீம் என்ற இருபது வயதுக்கும் குறைவான இளைஞனும் வருகின்றான். பம்பாயில் இரண்டு வாரங்கள் இருந்தபோது ‘ஹக்கீம், நீ இங்கேயே இருந்து ஹிந்தி சினிமாவில் சான்ஸ் தேடு, கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு வரும்!’ என்று நஜீப் அவனிடம் சொல்கின்றான், அந்த அளவுக்கு ஹக்கீம் ஒரு அழகன். விசயம் என்னவெனில் நஜீபை வேலைக்கு அனுப்பியவர் அவன் என்ன வேலைக்காகப் போகின்றான் என்று அவனிடம் சொல்லவும் இல்லை, இவனும் கேட்கவில்லை! ரியாத் விமானநிலையத்தில் தன் முதலாளி வந்து அழைத்துச் செல்வார் என்று பல மணி நேரம் காத்திருந்தபின் இரவு நேரத்தில் அங்கு வந்த ஒரு அரேபியன் இவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு நடக்கின்றான், அவன் ஆடை மிகவும் அழுக்கடைந்து நாற்றம் வீசுகின்றது, அவன் மேனியில் இருந்தும் மிகக்கெட்ட துர்வாடை வீசுகின்றது, அவனது ஆடையும் அப்படியே. இருவரும் அவன் பின்னால் நடக்க, ஒரு துருப்பிடித்த பிக்அப் (சிறிய சரக்கு வாகனம்) வண்டியின் பின்னால் உட்கார்ந்து இரவு முழுக்க பாலைவனத்தின் ஊடாகப்பயணிக்கின்றார்கள். வழியில் ஒரு இடத்தில் வண்டி நிற்க ஹக்கீமை இறக்கிவிடுகின்றான். மீண்டும் பயணித்து மையிருளில் நஜீப் வந்து சேர்ந்த இடம் எது? அங்கே வீசிய சாணம், மூத்திர வாடை ஆகியவற்றை வைத்து கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் என்பதை உணர்ந்து கொள்கின்றான். கட்டிலில் ஒரு கொடூரமான ஒருவம் படுத்துள்ளது. அவன் உடலில் இருந்து வீசும் நாற்றமோ எல்லாவற்றையும் தாண்டியதாக மிகக்கொடூரமாக உள்ளது. சகிக்கமுடியவில்லை. வேறு கட்டில் எதுவும் இல்லாதபடியால் வெற்றுத்தரையில் மணலில் படுத்து உறங்குகின்றான். விடியும்போது அவனைப்பார்க்கின்றான். மிக நீண்டும் சிக்குப்பிடித்தும் தொங்கும் தலைமுடியுடனும் தாடியுடனும் பல வருடங்களாக வெட்டப்படாத நகங்களுடனும் நிறம் மாறி அழுக்கடைந்துபோன உடையுடனும் இருக்கும் அவனிடம் இவன் பேச முயற்சிக்க அவனோ ஒரே ஒரு சொல்லைக்கூட பேசாமல் வெறித்துப்பார்க்கின்றான். வெளிச்சத்தில்தான் தெரிகின்றது, எல்லையற்ற மிக மிக நீண்ட மணலைத்தவிர வேறு எதுவும் அற்ற, புல் பூண்டு செடி கொடி எதுவுமற்ற, கண்ணுக்கு எட்டிய தொடுவானம் வரை ஒரே ஒரு மனிதனும் இல்லாத ஒரு பாலைவனத்தின் நடுவே தான் இருப்பதை பார்க்கின்றான். ஆடுகளையும் ஒட்டகங்களையும் பார்க்கின்றான். தான் இருப்பது அவற்றை மேய்க்கவும் கட்டவும் ஆன மஸாரா என்ற தொழுவம் என்று உணர்கின்றான். சற்றுத்தொலைவில் உள்ள ஒரு கூடாரத்தில் தன்னை அழைத்துவந்த அர்பாப் (முதலாளி) இருப்பது தெரிகின்றது. இவனுக்கு ஒரு விசயம் தெளிவாகப் புரிகின்றது, தான் இனி எப்போதுமே மீள முடியாத நரகத்தில் வந்து விழுந்துவிட்டதை உணர்கின்றான். ஆடுகளுடனும் ஒட்டகங்களுடனும்தான் தன் எதிர்காலம் கழியப்போகின்றது என்ற உண்மை, ஒரே நாளில் தன் வாழ்க்கை பெரும் பாதாளத்தில் வீழ்ந்துவிட்ட உண்மை சுள்ளென உரைக்கும்போது கையாலாகாமல் மனம் குமைந்து அழுகின்றான். வெட்டவெளியில் (தனியாக அதற்கென இடம் இல்லாததால்) மலம் கழித்து வந்தபின் வாளியில் தண்ணீர் எடுத்து கழுவப்போகும் நொடியில் அவன் மீது பெல்ட் அடி விழுகின்றது. புரிந்துகொள்ளும் முன் அர்பாப் அவனை தன் பெல்ட்டால் அடித்துப்புரட்டி துவைத்து விடுகின்றான். தண்ணீர் மிக அரியபொருள், குண்டி கழுவப்பயன்படுத்தும் உன்னை கொன்றுவிடுவேன் என்று கடுமையாக எச்சரிக்கின்றான். ஆற்றுநீரில் விளையாடுவதே வாழ்க்கையென இருந்த நஜீப்புக்கு தண்ணீர் இங்கே கிடைத்தற்கரிய பொருளாகின்றது. குபூஸ் எனப்படும் ரொட்டியும் அதை நனைத்துச்சாப்பிட தண்ணீரும் தருகின்றான். காலை உணவு குபூசும் தண்ணீரும், மதிய உணவு குபூசும் தண்ணீரும், இரவு உணவு குபூசும் தண்ணீரும். தவிர அர்பாப்பின் கையில் எப்போதும் துப்பாக்கியும் பைனாகுலரும் இருப்பதையும் பார்த்து இங்கிருந்து தப்ப எண்ணுவதும் சாவதும் ஒன்றே என்பதை தெரிந்துகொள்கின்றான். பகலில் தீயெனச்சுட்டெரிக்கும், இரவில் மோசமாக குளிர்ந்துவிடும் பாலைவனத்தில் நக நுனியளவும் புல்லும் கூட இல்லை எனில் எதன் பொருட்டு இந்த ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்க்க வேண்டும்? இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் இந்தப் பிராணிகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்காமல் அவற்றுக்கு உடற்பயிற்சி அளிப்பதே இந்த மஸாராவின் நோக்கம். அவ்வளவுதான். அப்படியெனில் நேற்றிரவு ஹக்கீமையும் இப்படியான ஒரு மஸாராவில்தான் இறக்கிவிட்டிருப்பான், அதுவும் இங்கே அருகில்தான் இருக்கக்கூடும். வெயிலிலும் குளிரிலும் பரந்துபட்ட ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்ப்பது மட்டுமே இவன் வேலை. நஜீப் நினைத்ததுபோல அது அப்படி ஒன்றும் எளிதான வேலையாக இல்லை. மிகப்பரந்த எல்லையற்ற மணற்பெருவெளியில் உச்சந்தலையில் தீயை வைத்து எரிப்பதுபோல் அனல் கக்கும் பாலையில், ஆடுகள் திசைக்கொன்றாக ஓடும். காலையில் அவற்றை வெளியேற்றி அவற்றில் ஒன்று கூட தப்பாமல் ஒன்று சேர்த்து இருட்டுவதற்குள் மஸாராவிற்குள் அடைப்பது என்பது உயிர்போகின்ற பெரும் அவஸ்தையாக உள்ளது. சிறிய தவறு நேர்ந்தாலும் அர்பாப் தன் பெல்ட்டால் அடித்து துவைக்கின்றான், கட்டி வைத்து அடிக்கின்றான், பட்டினி போடுகின்றான். வந்து சேர்ந்த தொடக்க நாட்களில் தன் நிலையையும் உம்மாவையும் சைனுவையும் பிறக்கப்போகும் குழந்தையையும் எண்ணி இரவுகளில் கண்ணீர் சிந்தி அழுதுகொண்டு இருந்த நஜீப்பின் நினைவுகளில் இருந்து காலப்போக்கில் அவர்கள் மறைந்து விடுகின்றார்கள், ஆடுகளும் ஒட்டகங்களும் மட்டுமே அவனுக்கு உறவுகளாகி விடுகின்றன. ஆடுகளுக்கு அவன் பெயரும் வைத்து அழைக்கின்றான், அவற்றுடன் பேசுகின்றான், அதன் மூலம் மனிதர்களுடன் தான் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றான். நாளடைவில் அவனது தலைமுடியும் தாடியும் நீண்டு வளர்ந்து சிக்குப்பிடித்து தொங்குகின்றன, நகங்கள் வெட்டப்படாமல் அழுக்கடைந்து நீள்கின்றன, அணிந்திருக்கும் ஒற்றை ஆடையும் அழுக்கடைந்து முடைநாற்றம் வீசுகின்றது. குளிப்பதே இல்லாததால் உடலில் அழுக்கு சேர்ந்து கொப்புளங்கள் தோன்றி துர்நாற்றம் வீசுகின்றது. ஆடுகளிலிருந்தும் ஒட்டகங்களில் இருந்தும் வெளிப்படும் சிறு பூச்சிகளும் பேன்களும் அவனது உடலின் மறைவிடத்தில் வந்து குடியேறுகின்றன. மனிதர்களுடன் பேச மறந்தவனாகின்றான். வந்து சேர்ந்த நாள் முதலாய் தான் பார்க்கும் கொடூர மனிதன் ஏன் தன்னுடன் ஒற்றை வார்த்தையும் பேசாமல் இருக்கின்றான் என்பதற்கான காரணத்தை நஜீப் புரிந்துகொள்கின்றான். ஒருநாள் காலை இந்தக் கொடூரமனிதனும் காணாமல் போகின்றான். எப்படியோ அவன் தப்பித்துவிட்டான், நன்றாக இருக்கட்டும் என்று அல்லாவை பிரார்த்திக்கின்றான். எல்லாம் வல்ல இறைவன் தனக்கும் ஒரு வழிகாட்ட வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகின்றான். தன் மேய்ச்சல் எல்லையையும் தாண்டி கண்ணுக்கு எட்டாத நெடுந்தொலைவுக்கு இவன் சென்று பார்க்கின்றான். பாலைவன மணலில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனிதனின் கை வெளியே தெரிய அதிர்ச்சி அடைகின்றான். கையில் இருக்கும் குச்சியால் மண்ணை தோண்டும்போது ஒரு இடுப்பு பெல்ட் வெளியே தெரிகின்றது. அது அந்தக் கொடூர மனிதன் அணிந்திருந்த பெல்ட் அல்லவா! எனில் தன் வாழ்க்கை? யா அல்லாவே! இதுதான் உன் கருணையா? இதே பாலைவன மண்ணில்தானே நபிமார்களுக்கு காட்சியளித்து வசனங்களையும் அறிவுரைகளையும் வாரி வழங்கினாய் அல்லாவே, நஜீப்பின் வாழ்க்கையை இப்படியே நீ முடித்து விடுவாயா எல்லாம் வல்ல இறைவனே? நரகத்தையும் சொர்க்கத்தையும் குர் ஆனில் வாசித்துள்ளேன், உண்மையான நரகம் இதுதான்! மூன்று வருடங்கள் ஓடியபின் நரகத்தின் படுகுழியில் இருந்து தப்பிக்கும் அந்த ஒரே ஒரு பெருவாய்ப்பு, இனி என்றுமே வராத ஒரே வாய்ப்பு வந்து சேர்கின்றது. மஸாராவில் இருந்து தப்பிக்கின்றான், அடுத்த மஸாராவில் இருக்கும் ஹக்கீமுடன் சோமாலியா தேசத்தவனான இப்ராஹிம் காத்ரி காட்டும் வழியில் இரவோடு இரவாக நரகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள். இந்த நெடிய பாலைவனத்தின் நீள அகலங்களையும் குணத்தையும் நன்கு அறிந்தவனும் வளர்த்தியும் உடல் வலுவும் கொண்டவனும் ஆன காத்ரி அல்லா அனுப்பிய தூதுவனாக நஜீப்புக்கு தெரிகின்றான். ஆனால் அந்த இரவில் அவனுக்கு திறக்கப்பட்டது வேறொரு நரகத்தின் நுழைவாயில் என்பதை பொழுதுவிடியும்போது உணர்கின்றான் நஜீப். “ஆடு மேய்ப்பவனாக வேலை கிடைத்தபோது என் கனவிலிருந்து அது எத்தனை தொலைவில் இருந்தது என்பதை வலியுடன் நினைத்துப்பார்த்தேன். தூரத்தில் இருந்து பார்க்க நன்றாகத் தெரிவனவும் என்னவென்றே தெரியாதனவும் குறித்து நாம் கனவு காண்பது கூடாது. அத்தகைய கனவுகள் நனவாகும்போது அவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன” என்று நொந்து பேசும் நஜீப்பின் குரலில் ஒலிப்பது யாருடையது? நஜீப்பின் குரல் அல்ல. தன் குடும்பத்தின் எதிர்காலத்தின் பொருட்டு பொருளீட்டும் ஒரே ஒரு ஒற்றை ஆசையில், பெற்றோரையும் மனைவி பிள்ளைகளையும் உறவுகளையும், விட்டுவிட்டு பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் அரேபிய பாலைவனங்களில் அடக்குமுறை எனும் நுகத்தடியை சுமந்தவாறே உழைத்து ஓடாகி மனித உணர்வுகள் மரத்துப்போய் வெறும் கூடாக திரியும் பல லட்சம் இந்திய உழைப்பாளிகளின் குரல் அது. உண்டும் உண்ணாமலும் உறங்கியும் உறங்காமலும் எவனோ ஒரு அரேபிய முதலாளியின் நலன்பொருட்டு தமது சொந்த மண்ணில் இருந்து சுமந்து வந்த சொர்க்கபுரிக் கனவுகள் அனைத்தையும் பாலைவன மண்ணில் புதைத்துவிட்டு “நான் இங்கு நலமாக உள்ளேன், நீ நலமா? சாப்பாட்டுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை, எட்டு மணி நேரமே வேலை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுது போகின்றது. ஒரு குறையும் இல்லை. நீங்கள் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளை தேடுகின்றது. … எப்படியிருக்கிறாள்? … எப்படியிருக்கின்றான்? இன்னும் ஆறு மாதத்தில் வந்து விடுவேன் என்று பிள்ளைகளிடம் சொல். நீ எப்படி இருக்கின்றாய்? வரும்போது சின்னவனுக்கு வாட்சும் பெரியவளுக்கு ….” என்று மனைவிக்கு எழுதும் கடிதங்களில் நஜீப் சொல்லும் அப்பட்டமான வெளிறிய பொய்கள் பொங்கி வழிகின்றன. தன்னைப்படைத்த அல்லா ஏதாவது ஒரு உருவத்தில் வழியைத் திறந்துவிடுவான் என்று நஜீப்பும் ஹக்கீமும் இப்ராஹிம் காத்ரியும் தொடர்ந்து மூன்று இரவுகள், மூன்று பகல்கள், ஒரு சொட்டுத்தண்ணீரும் இல்லாமல் புல் பூண்டும் இல்லாத பாலைவனத்தில் ஓடுகின்றார்கள். தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒரு கட்டத்தில் பித்துப்பிடித்து இருவரையும் அடிக்கும் ஹக்கீம், ரத்த வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளி நஜீப்பின் கண் முன்னே பாலைவனமண்ணில் சுருண்டு விழுந்து சாகின்றான். நஜீப் மயக்கமடைகின்றான். நஜீப் சொன்னபடி பாம்பேயில் இருந்திருந்தால் ஒருவேளை அழகிய இளைஞனான ஹக்கீம் ஹிந்திப்படங்களில் நாயகனாக வலம் வந்து இளம்பெண்களின் கனவுகளை தொந்தரவு செய்திருப்பானோ? பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம், வளைகுடா குறித்த பல கற்பனைகளையும் கதைகளையும் கலைத்துப் போடுகின்றது. வாசனை திரவியங்களின் பின்னே வீசும் ரத்தக்கவிச்சி நம் மூக்கை துளைக்கின்றது. ஜொலிக்கும் தங்க நகைகள் கிலுகிலுக்கும் ஒலியின் பின்னால் பாலைவனத்தில் முறிபடும் எலும்புகளின் ஓசை கேட்பதை உணர முடிகின்றது. இறை நம்பிக்கை, வாழ்க்கை, வளைகுடா நாடுகளின் பளபளக்கும் கொழுத்த வசதி வாய்ப்புக்களின் பின்னே ஒளிந்திருக்கும் இருட்டான பொருளாதார அரசியல், உழைப்புச்சுரண்டல் என பல்வேறு அடுக்குகளை தன் எழுத்தில் மறைத்துவைத்துள்ளார் பென்யாமின். இவற்றில் எதையுமே அவர் நேரடியாக நூலில் எங்குமே எழுதவில்லை, ஆனால் வாசிப்பவனை யோசிக்க வைப்பதில் வெற்றி பெறுகின்றார். 2009இன் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு. மலையாள மொழியில் எழுதப்பட்ட நூலை தமிழில் எழுதப்பட்ட நூல் என்று உணரத்தக்க விதத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் விலாசினி, பாராட்ட வேண்டும். ...... ஆடு ஜீவிதம், பென்யாமின், தமிழாக்கம்: விலாசினி, எதிர் வெளியீடு. - மு இக்பால் அகமது https://veligalukkuappaal.blogspot.com/2022/01/blog-post.html?m=1
  21. போதமும் காணாத போதம் – 22 கடலின் முன்னே விரிந்திருக்கும் அடர்ந்த காட்டினுள்ளே குருதி கசிந்துலரா சரீரத்தோடு மூச்சடங்கி கிடந்தாள். அவளது வலதுகரம் திடுமென உயர்ந்து என்னை அழைத்தது. குண்டியிலிருந்து வழியும் காற்சட்டையைப் பிடித்தபடி அவளிடம் ஓடினேன். எனது கையைப் பற்றித் சிரசில் வைத்தாள். அவளது உச்சியில் உலோகத்தின் கொதி. பிடரி பிளவுண்டு மண்ணால் அடைக்கப்பட்டிருந்தது. சரீரத்தை தூக்கியபடி கடலை அடைந்த கணத்தில் மூச்சற்றாள். கடலில் வீசினேன். அலையின் ஒவ்வொரு மடிப்பிலும் உடல் சுருண்டு கடலுக்குள் போவதும் கரையொதுங்குவதுமாயிருந்தது. கழுகுகள் வானத்திலிருந்து கடல் நோக்கிச் சரிந்தன. அவற்றின் கால்களிலிருந்து ராட்சதக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. ஒரு பேரோசை எழுந்தது. அவளின் குரல் எழுந்து மடிந்தது. காலுக்கடியில் கிடந்த சிப்பியையெடுத்து கடல் மீது வீசினேன். கடலில் மிதக்கும் சரீரத்தில் அந்திச் சூரியன் சாய்ந்தது. அவளது கைகள் வான்நோக்கி உயர்ந்து சூரியனை அறைந்தன. ஒளி மங்கியது. இருண்ட பூமியில் மிதந்துகொண்டே இருந்தாள் சித்தி. இக்கனவை அம்மாவிடம் சொன்னேன். “எப்ப பாத்தாலும் உன்ர கனவிலதான் அவள் வாறாள். என்ர கண்ணிலேயே அவளின்ர உருவத்தைக் காட்டமாட்டாள் போல” அம்மா சொன்னாள். “நாளைக்கு கனவில சித்தி வந்தால், அம்மா இப்பிடி சொல்லிக் கவலைப்படுகிறா, அவாவிட்டையும் போங்கோ என்று சொல்லுறன்” என்றேன். “உந்த வாயாடித்தனம் அவளிட்ட இருந்துதான் உனக்கு தொத்தினது. அவளும் இப்பிடிக் கிரந்தங்கள் கதைச்சு கடுமையா பேச்சு வாங்கியிருக்கிறாள்” “ஆரிட்ட?” ஆரிட்ட வாங்கேல்ல சொல்லு. ஒருக்கால் தம்பியின்ர சந்திப்பில தளபதிமாரவே கூடி நிக்கேக்க ஈகை சொல்லியிருக்கிறாள் “ அண்ணை, உந்தக் குடாரப்பு தரையிறக்கச் சண்டை வெற்றியில “லீமா”ன்ர புத்தி எவ்வளவு முக்கியமானதோ, அதுமாதிரி இராணுவத்தின்ர புத்தியின்மையும் முக்கியமானது. ஏனெண்டு சொன்னால் அவங்கள் சண்டை செய்யிறதப் பார்த்தால் எங்களுக்கு பாவமாய் இருந்தது. ஏதோ வேட்டைத் திருவிழாவுக்கு வேஷம் போட்டுக்கொண்டு திரியிறவே மாதிரியெல்லே வந்தவே” என்றிருக்கிறாள். அதில நிண்ட தளபதியொருத்தர் முகம் மாறி, கோபப்பட்டிருக்கிறார். “தலைவர் என்ன சொன்னவராம்?” அண்டைக்குப் பிறகு கனநாளாய் சந்திப்புக்கு ஆளை எடுக்கிறதில்லை. அதுக்குப் பிறகு ஒருநாள் வேறொரு சந்திப்பில ஈகையைக் கூப்பிட்டு “உன்ர பகிடியை விளங்கிச் சிரிக்கிற நேரத்தில, நாங்கள் இன்னொரு சண்டைக்கு வரைபடம் அடிச்சிடுவம். கொஞ்சம் வாயைக் குறை” என்றிருக்கிறார். “அதுக்கு இவள் சொன்ன பிரபலமான பதில கேள்விப்பட்டிருக்க மாட்டாய்” என்ற அம்மா என்னைப் பார்த்தாள். நான் பதிலென்னவென்று கேட்பதற்குள் தொடர்ந்தாள். “அண்ணை, எங்கட தளபதிமாருக்கு பகிடி விடுகிறது, சிரிக்கிறது எல்லாம் தேசத்துரோகம் இல்லையெண்டு உறுதிப்படுத்திச் சொல்லுங்கோ. அதுவும் உங்களுக்கு முன்னால சிரிக்க சிலர் அம்மானிட்ட கடிதம் வாங்கோணுமெண்டு நினைக்கினம்” என்றிருக்கிறாள். சுற்றியிருந்த ஏனைய போராளிகளும் ஈகை சொன்னதைக் கேட்டுச் சிரித்தனராம். ஈகை சமர்க்களத்தில் பகைவர்க்கு கொடியவள். எளிய வியூகங்களால் எதிரியின் முன்னேற்றத்தை முறியடிப்பவள். வேவு அணியிலிருந்த அனுபவம் அவளது படையியல் வலிமை. ஒருமுறை பூநகரியில் நடந்த வன்கவர் படையினருடனான மோதலில் ஈகையின் சிறப்பான முடிவுகள் இயக்கத்துக்கு பாரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஈகை புலியில்லை சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும் சிறுத்தை. ஒருநாளிரவு போராளிகளின் காவலரண்கள் மீது தாக்குதல் தொடங்கியது. நிலை கொண்டிருந்த தனது அணியினரிடம் பதிலுக்கு தாக்காமல் அமைதியாக இருக்குமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறாள் ஈகை. அந்தப் போர்முனையின் தளபதி ஈகையை அழைத்து இப்படி முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே என்று திட்டித் தீர்த்திருக்கிறார். தான் நினைத்தது போலவே எதிரியானவர்கள் தாக்குதலில் மும்முரமாக இருந்த வேளையில், தன்னுடைய சிறப்பு அணியினரை ஈகை முன்னேறச்செய்திருக்கிறாள். ஒரு கள்ளப்பாதை வழியாக உறுமறைக்கப்பட்ட இருபது போராளிகள் காட்டிலுள்ள மரங்களைப் போல நின்றிருந்தனர். பின்னர் ஒரே நேரத்தில் பின்னணிச் சூட்டு ஆதரவோடு பதுங்கியிருந்த அணியினர் தாக்குதலை தொடங்கினர். ஈகைக்கு இந்தச் சமரில் பெரிய பெயர் கிட்டிற்று. கிட்டத்தட்ட நாற்பது சடலங்களையும், ஒரு வன்கவர் வெறிப்படையினனை உயிரோடும் கைப்பற்றினார்கள். அவனை உரிய மரியாதையோடு பின்தளத்துக்கு அனுப்பி வைத்தாள். பிறகொரு நாளில் கைதிப்பரிமாற்றம் செய்யப்பட்ட அந்தப் படையினன் தன்னுடைய சொந்தவூருக்குச் சென்று, இயக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ஈகையாளின் போர் அறத்தைப் பற்றி அவன் நினைவு கூர்ந்தது மறக்க இயலாதது” என்றாள் அம்மா. ஈகையாள் சித்தியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. வன்னியிலிருந்தவர்களே பெரியளவில் அறிந்திருக்கவில்லை. இயக்க உறுப்பினர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக ஈகையாள் சித்தியை முள்ளிவாய்க்காலில் வைத்துச் சந்தித்தோம். “இனி மிச்சமிருக்கப்போவது தாய் நிலமல்ல, ஓர் உன்னதச் சகாப்தத்தின் நிர்மலமான இறந்தகாலம் மட்டுமே. வெறுமென அதற்காகவே காத்திருக்கிறோம்” என்றாள். சிறகாறா பறவையின் சோர்வு சித்தியில் கிளையோடியிருந்தது. அவளுக்கு அனைத்தும் அர்த்தமற்றதாக தோன்றிவிட்டதா? தியாகமென்பது இனி சொல்லின் ஞாபகமா? விடுதலையென்பது இனி கொடுஞ்சூட்டின் சீழா? பலவீனமடைந்த வீரயுகத்தின் நிர்மலம் தேயாதிருக்கட்டும். நம் வாழ்வு புதைக்கப்படுவதற்கும், விதைக்கப்படுவதற்கும் படைக்கப்பட்டது. நிதமும் துக்கத்தில் தத்தளிக்கும் பூர்வீகரோ நாம் என்று யாரோடு நோவது? யார்க்கெடுத்து உரைப்பது! போரின் குமுறல் ஓசை கூவி முழங்கியது. அம்மா கஞ்சி வைத்தாள். சேமிப்பிலிருந்த குத்தரிசியின் கடைசிச் சுண்டு உலையில் கொதித்தது. கொடூரமான ஏவுகணைகள், பீரங்கிகள் சிதறி வீழ்ந்தன. கஞ்சி கலயங்களோடு சித்தியும், நானும், அம்மாவும் பதுங்குகுழிக்குள் இருந்தோம். “இந்த நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலவும் உலர்ந்து போகும் புல்லைப் போலவும் இருக்கின்றன” என்றேன். “ஓமடா தம்பி! எங்கள் பிதாக்கள் யுத்தத்தின் விளைவுகளை அசட்டை செய்தனர். ரத்த தாகத்தோடு வல்லமையோடிருந்த யுத்தமோ தன் புழுதியால் நம்மை அழிவிக்கிறது. சிவந்த சமுத்திரத்தின் ஓரத்திலே பொஸ்பரஸ்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் மிதக்கின்றனர். இவ்வுலகில் எங்களுக்கு நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. அக்கிரமக்காரர் பால்சோற்றைப் பட்சிக்கிக்கிறதைப் போல் சனத்தைப் பட்சிக்கிறார்கள். யுத்தம் எங்களை வெறுத்து தோல்வியை தண்டனையாக அளித்தது. எங்கள் பிதாக்களை அது வெட்கப்படுத்தியது. கரைந்துபோகிற நத்தையைப்போல ஒழிந்துபோகாத பெருங்கனவின் பாதத்தில் சந்ததியைப் பணிய வைத்தார்கள். இன்னும் சில தினங்களில் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு திக்கற்ற யுத்த அநாதைகளாக ஆகுவோம்” என்ற சித்தியை அன்றிரவே கட்டியணைத்து வழியனுப்பினாள் அம்மா. இரண்டு நாட்கள் எங்களோடு இருங்கள், அதன்பிறகு போகலாமென்று சொல்லியும் சித்தி கேட்கவில்லை. கூடாரங்களும் அழுகுரல்களுமாய் பரவியிருந்த நிணவெளியை ஊடறுத்து தனது கைத்துப்பாக்கியோடு நடந்து மறைந்தாள். மானுடத்திற்கு விரோதமான பெலனுடன் யுத்தம் தொடர்ந்தது. மண்ணின் விடுதலைக்காய் நீதிமானாய் களம் புகுந்தவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். சுழல்காற்றின் பழிவாங்கல் போலவே கந்தகத் தீயின் சுவாலைகள் ரத்தத்தில் மூண்டன. நாங்கள் யுத்தத்தின் மீது சிறுசொட்டும் நம்பிக்கையாயிராமல் எதன் மீது நம்பிக்கையாயிருக்க வேண்டுமென தீர்மானிக்கமுடியாத அபயமற்றவர்கள். மெய்யாய் பூமியிலே யுத்தம் அழியட்டுமென சபித்து அழும் மனுஷத் திரளின் பட்டயத்தை எதனாலும் தாக்க இயலாது. ஈகையாள் சித்தியை நினைத்து அழுதபடியிருந்தேன். என்னைத் தூக்கி வளர்த்த வரிப்புலித் தாயவள். ஆய்ந்த விரல்களில் வாசம் வீசும் காட்டுப் பூ அவளது நறுமணம். என் தலையில் பேன் பார்த்து, குளிப்பாட்டி என்னையே மகவென தரித்தவள். அவள் எப்போதும் இறந்து போகமாட்டாள் என்று எண்ணிய என் குழந்தைப் பருவத்தின் ஒரு பெளர்ணமி நாளில் சித்தி சொன்னாள். “மகன், நீ வளர்ந்து வந்ததுக்குப் பிறகு, உனக்கொரு சித்தப்பா வருவார். அவரிட்ட நீதான் என்ர பிள்ளையெண்டு நான் சொல்லுவன்.” “நான், உங்கட பிள்ளைதானே சித்தி “ என்றேன். சமர்க்களத்தில் காயப்பட்டு கருப்பை முற்றாகச் சிதைந்து உயிர் மீண்ட ஈகை சித்தி என்னையே கருவாகச் சுமந்தாள். சித்தி புறப்பட்டு எட்டாவது நாளில் எல்லாமும் அழிந்திற்று. அழிவின் வெறுங்காலில் மிதிபட்டோம். கடலோரம் மண்டியிட்டவர்களை கண்முன்னே கொன்று போட்டனர். நாயகர்களின் பட்டயங்கள் மண்ணில் புரண்டு வீழ்ந்திருந்தன. பெருத்த காயங்களுக்கு உள்ளானவர்கள் தங்களுடைய ஆயுதங்களால் தம்மையே கொன்றனர். பிள்ளைகளை ஒருமிக்கச் சாகக்கொடுத்த தாய்நிலமும் தன்னையே வெடிவைத்து தகர்த்துக் கொண்டது. அம்மா, சித்தியை தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு நெருக்கமான மிகச்சிலரில் ஒருவரை மட்டுமே காணக்கூடியதாய் இருந்தது. ஈகை பற்றி எந்தத் தகவலும் தெரியாதென கை விரித்தார். பிறகு இன்னொருவரின் தகவலின் படி, முக்கியமான இடத்தில் நேற்றுவரை இருந்ததாக அறியமுடிந்தது. அம்மாவும் நானும் கடைசித் தடவையாக ஒரு சுற்றுத் தேடிவிட்டு வன்கவர் வெறிப்படையின் வேலிக்குள் போகலாமென முடிவெடுத்தோம். நந்திக்கடல் கண்டல் காடு வரை நடந்து போகலாமென எண்ணினேன். அம்மா வேறொரு திசையில் நடக்கத் தொடங்கினாள். சனங்களின் அழுகுரல் வெடியோசைகள் எல்லாமும் வெறுமை கப்பிய பதற்றத்தை தந்தது. கும்பி கும்பியாக காயப்பட்ட போராளிகள், உப்புக் களிமண்ணையள்ளி காயத்தில் திணித்தனர். எவ்வளவு காயங்களால் அரண் அமைக்கப்பட்டிருந்த மண். ஒரு காயத்தின் குருதியைக் கட்டுப்படுத்த முடியாமல் வெட்கித்து அழுதது. ஈகை உயிரோடு தானிருக்கிறாள். ஆனால் எங்கேயோ தப்பி போயிருக்கலாமெனத் தோன்றுகிறது என்று அம்மா சொல்லத்தொடங்கினாள். நடந்தவற்றை சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பம். அம்மாவுக்கு ஈகை சித்தி உயிரோடு இருக்க வேண்டுமென ஆசை. எப்பிடியாவது ஒருநாள் ஈகை வந்துவிடுவாள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளவும் செய்கிறாள். ஆனால் இத்தனை வருடங்களாகியும் அம்மாவிடம் சொல்லாத சேதியொன்றை உங்களிடமும் சொல்லவேண்டும். அன்றைக்கு முள்ளிவாய்க்காலில் நானும் அம்மாவும் திசைக்கொன்றாக பிரிந்து தேடினோம் அல்லவா! நான் போன திசையிலிருந்த கண்டல் பற்றைக்குள் ஈகை சித்தியைக் கண்டேன். அவளது வயிற்றை ரத்தம் மூடியிருந்தது. சித்தியின் மூச்சு சீரற்றுத் திணறியது. அவள் என்னை இனங்கண்டு கொண்டாள். தன்னுடைய கழுத்தில் கிடக்கும் சயனைட் குப்பியை எடுத்து வாய்க்குள் திணிக்குமாறு கன்களால் இரந்து கேட்டாள். வீரயுகத்தின் கம்பீர மாண்பையும், எக்கணத்திலும் அஞ்சாத திண்மையையும் தந்தருளிய ஆலம். வாழ்நாள் முழுவதும் சமரில் எதிரிகளையும், துரோகிகளையும் துளி அச்சமுமின்றி நேராய் சந்தித்த அதே கண்களால் சித்தி என்னிடம் கெஞ்சினாள்.என்னால் முடியாது சித்தியென்று கதறியழுதேன். ஊழி பெருத்தோடும் கணம். மீட்சியற்ற பாழ்வெளியில் நாமிருந்தோம். முலையூட்டாத என் தாயின் மகிமைக்கும் மேன்மைக்குமாய்…! ஒரு மகவூட்டும் அமிழ்தமென மண்ணோடு அவளையும் சேர்த்து அள்ளிக்கொண்டேன். முத்தமிட்டேன். அவளது மார்பின் மீது கிடந்த குப்பியை வெளியே எடுத்துக் கொடுத்தேன். கண்களை மூடினேன். உயிர் நொருங்கியது. ஒளிபொருந்திய முகம் திரும்பிய ஈகையாள் சித்தி கண்களை விரித்து என்னையே பார்த்தாள். அசைவற்ற ஒரு இறுமாப்புடன் அவள் மானத்துடன் தப்பித்திருந்தாள். அவளுடைய வயிற்றின் மீதிருந்த குருதியை என் உடலெங்கும் பூசிக்கொண்டு நந்திக்கடலில் இறங்கினேன். காலத்தின் ஊழ், போரின் பலியாடுகளாய் தோற்ற சனங்களை மேய்த்தது. https://akaramuthalvan.com/?p=1902
  22. வந்த காலத்திலிருந்து 2015 வரை தொடர்ந்து வேலை. குடும்பங்களை இலங்கைக்கு அனுப்பிய போதும் நான் வேலைக்கு போனால்த் தான் பணம் வரும் என்பதால் போகவில்லை. வயது 68 ஆகப் போகிறது.இன்னும் எவ்வளவு காலம் பிரயாணங்கள் செய்ய முடியுமோ தெரியாது. இப்போது பிள்ளகள் எங்கு போனாலும் எங்களைக் கேக்காமலே தங்களுடன் சேர்த்து பயண ஒழுங்குகள் செய்து விடுவார்கள்.
  23. 27/02/24 தாயார் மரணம் 01/03/24 இறுதிக் கிரிகைகள் 10/03/24 கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர் சானாதிபதியுடன்
  24. 150,000 யூரோக்கள் கிடைத்ததா .........முதலில் அதைச் சொல்லுங்கள்........! 😂 மற்ற இருவரையும் இன்னும் இருபது வருடங்களுக்குப் பிடித்தாலும் பரவாயில்லை........!
  25. அநீதி இழைக்கப் பட்டவர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் நிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ புர‌ட்சியாள‌னின் வ‌ர‌லாற்றை தெரிந்து வைத்து இருப்பான்..............அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ அநீதியாய் இருந்தாலும் ச‌ரி உல‌கில் எந்த‌ நாடாய் இருந்தாலும் ச‌ரி என் போன்றோர் அவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் தான்...............
  26. கபிதன், இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை. மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.
  27. எங்களைப் போன்று அழுத சிங்களவர்களும் இருக்கின்றனர். மேலும், இராணுவ முகாம்களை வெற்றிகொண்டபோது நாங்கள் குதூகலிக்கவில்லையா? எந்த ஒரு மனிதனும், குழு மனநிலையில் தான் கொண்டாடியவற்றை தனித்திருந்து அசை போடும்போது நிச்சயம் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. மரணத்தை கொண்டாடும் மனநிலை மனச்சாட்சியுள்ள மனிதனால் முடியாது.
  28. உண்மை தான் அன்று போல் இன்று இல்லை. இழந்ததை நினைத்து வருந்துவதை விட இனி என்ன செய்யலாம் என சிந்திப்போம். கடந்துபோன காலமும் பேசிய வார்த்தைகளும் மீள வருவதில்லை.
  29. புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
  30. புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வளம் நலத்துடன் வாழ்க என்றும் 🤝
  31. பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.
  32. மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.
  33. மயிலம்மா. என்ற தலைப்பை பார்த்து நடிகை சிறிதேவியைப் பற்றியது என்று வந்து பார்த்தேன் .....11 பகுதியும் வாசித்து விட்டேன் .....மிகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன் வாமன். நண்பனுடன். பிரச்சனையில்லாமால். இருந்தால் சரி 🤣
  34. ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!
  35. பல்கலைக்கழக முதல் வருடத்தில் இப்படித் தான் நான் நினைத்திருந்தேன். முதல் வருடமும் அப்படியே அமைந்தது. தமிழ் மாணவர்கள், முக்கியமாக யாழ் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், பரீட்சைகளில் கோலோச்சினர். பின்னர், மற்றவர்களும் பாடங்களை விளங்கி, ஒழுங்காக படிக்க ஆரம்பித்தனர். நாங்கள் பழகவும் ஆரம்பித்தோம். எவரும் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று அடுத்தடுத்த வருடங்களில் தெரிய வந்தது. வெவ்வேறு சமூகத்திலிருந்து வந்தவர்களும் மிக நன்றாக செய்தனர். நுவரெலியாவில் இருந்து அடிப்படைப் புள்ளிகளுடன் வந்த ஒரு பெரும்பான்மை இன மாணவன் முதலாவதாக வந்த நிகழ்வும் நடந்தது. எங்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்.
  36. கள்ளி மலர்......யார் பார்த்திருக்கிறீர்கள்......! 😂
  37. மயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.
  38. மயிலம்மாவும் தனிமையிலேதான் இருக்கிறா, அஞ்சலையும் அதேதான். மயில்மட்டுமா ஆடுதா?
  39. மயிலிறகு ......... 06. அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர வாமுவும் சுந்துவும் மெல்லமாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அப்பொழுது அவர்களின் பேச்சில் "வட்டி வைத்தி"யின் பெயர் காதில் விழ வாமுவும் நண்பனை ஜாடையால் மறித்து அவர்களின் பேச்சைக் கவனிக்கச் சொல்கிறான். அவர்களில் ஒருத்தர் எங்கட வட்டி வைத்தி செத்துட்டார் எல்லோ .....மற்றவர் அந்தக் குத்தியன் என்னெண்டு செத்தவன்.....ஆரும் வெட்டி கிட்டி போட்டாங்களோ என்று கேட்க இன்னொருவர் அவனை யார் வெட்டுறது.அந்தத் தைரியம் இங்கு யாருக்கு இருக்கு.....அது நடந்து ஒருமாதத்துக்கு மேல் இருக்கும், அண்டைக்கு நல்ல மழை அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாய் வந்திருக்கிறார் அது சறுக்கி ரோட்டுக் கரைப் பள்ளத்துக்குள் விழுந்திட்டுது அவருக்கு மேல சைக்கிள். அடுத்தநாள் விடியலுக்க வேலைக்குபோனவைதான் கண்டு தகவல் குடுத்தவை. துலைவான் எத்தனை பேரிட்ட அறா வட்டி வாங்கி அந்தக் குடும்பங்களை அழிச்சவன். அவன் செத்தது நல்லதுதான் என்று இப்படிப் போகுது கதை......சுந்து வாமுவிடம் என்னடா விஷயம் என்று கேட்க அவர்தாண்டா மாங்காய்க்கு கல் எறிய வந்து துள்ளினார் அந்த வட்டி வைத்தி கொஞ்ச நாட்களுக்கு முன் செத்துட்டாராம். எண்டாலும் பாவம்டா அந்தப் பெண்.சின்ன வயது என்று வாமு சொல்கிறான். பின் இருவரும் வெளியே வருகினம். அப்போது வாமன் தன் பொக்கட்டில் இருந்து ஒரு கவர் எடுத்து சுந்துவிடம் தந்து இந்தா இதை வைத்துக் கொண்டு எதையும் யோசிக்காமல் பல்கலைக்கழகத்துக்கு சென்று கவனமாய்ப் படி. நான் அடிக்கடி சென்று உன் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன்.ஏதாவது அவசரம் என்றால் விதானையார் வீட்டுக்கு போன் செய்து கதைக்கலாம். ( அங்கு சில இடங்களில் மட்டும்தான் தொலைபேசி வசதி உண்டு). வாமு நீ என்ர நல்ல நண்பன்டா. நீ உனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த காசை எனக்குத் தருகிறாய்.எனக்கும் தற்போது வேறு வழியில்லை.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேனோ தெரியவில்லை. விடுடா அதை....வா நான் உன் வீடுவரை வந்துட்டுப் போகிறேன். திங்கள் கிழமை உன்னை வழியனுப்ப வருகிறேன் என்று சொல்லி இருவரும் சைக்கிள்களில் செல்கிறார்கள். வீட்டுக்கு வந்த சுந்தரேசன் தன் தாயிடம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வாமன் பணம் தந்தவன், இந்தாங்கோ இதை நீங்கள் கவனமாய் வைத்திருந்து நான் போகும்போது தாருங்கோ என்று சொல்லி மயிலம்மாவிடம் கொடுக்கிறான். அவளும் அதை வாங்கிக் கொண்டு அவன் வரேல்லையே என்று வினவ அவன் என்னோடு வீடுவரைக்கும் வந்திட்டு வேறு அலுவலாய்ப் போகிறான் என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அட அவன் வந்திருந்தால் ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சுட்டுப் போயிருப்பான் என்று அவள் சொல்ல கூட இருந்த பூவனம் போம்மா நீயும் உன்ர தேத்தண்ணியும், அவங்கள் நீ குடுத்த காசை வீணாக்காமல் "புல்" அடித்து விட்டு வாறாங்கள்.....சும்மா போடி உனக்கு அவங்களைக் குறை சொல்லாட்டில் செமிக்காது.... ஒரு வழியாக அடுத்து வந்த திங்களில் சுந்தரேசனும் வாமுவுடன் சேர்ந்து சென்று புகையிரதத்தில் கிளம்பி விட்டான். வாமனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுந்துவின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான். இடைக்கிடை விதானையார் வீட்டுப் போனிலும் நண்பனுடன் கதைத்து விட்டு அந்த செய்திகளையும் இவர்களுக்கு சொல்லிவிடுவான்.அப்படித்தான் சுந்து அங்கு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டதையும் "பகிடி வதை"யெல்லாம் பகிடியாய் போய் இப்ப வகுப்புகள் எல்லாம் நல்லபடியாய் போவதாகவும் சொல்லியிருந்தான். ஆனால் தனக்கு தனியாக நடந்த பகிடிவதைகளின் ரகசியங்களை வாமனிடம் மட்டும் பகிர்த்திருந்தான். வாமனும் அவற்றை யாருக்கும் சொல்லவில்லை. வாமனுக்கும் இப்போதெல்லாம் வேலை அதிகமாகிறது.அரசு விதானையும் அவன் கெதியாய் கிராமசேவகர் ஆகிவிடுவான் என்பதால் அவனுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பழக்கி விடுவதில் ஆர்வமாகி அவனைத் தனியாகவும் வேலைகளைக் கவனிக்க அனுப்பி வைப்பதுண்டு.ஆகையால் மயிலம்மாவின் வீட்டுக்கு முன்பு போல் போய்வர நேரம் கிடைப்பதில்லை. அப்படித்தான் அன்று வேலை முடிந்து கிடைத்த நேரத்தில் மயிலம்மா வீட்டுக்கு வந்திருந்தான்.அங்கு மயூரியும் கனகமும் கவலையுடன் திண்ணையில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து என்ன விசயம் நீங்கள் கவலையாய் இருக்கிறதுபோல் தெரியுது. அதொன்றுமில்லையடா வாமு நேற்று பூவனத்தின்ர கலியாணம் சம்பந்தமாய் மாப்பிள்ளையின் தாய் தேப்பன் வந்து கதைத்தவை. அவையின்ர பாட்டி இப்பவெல்லாம் அடிக்கடி சுகயீனமாய் கிடக்கிறாவாம்.தான் சாகமுன் பேரனின் கலியாணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாவாம். அதனால் வாறமாதம் ஒரு பொதுநாளாய்ப் பார்த்து கலியாணத்தை வைத்தால் நல்லது என்று சொல்லி எங்களையும் அதற்கேற்றாற் போல் ஆயத்தப் படுத்தும்படி சொல்லிபோட்டுப் போகினம். நானும் இப்பதான் என்ர மகனும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிருக்கிறான், ஒரு ஆறுமாதம் பொறுத்தால் நல்லது என்று சொல்லவும் அவர்கள் அதை காதில் வாங்கியது மாதிரித் தெரியேல்ல. அதுதான் ஒரே யோசனையாய் கிடக்கு. அதுக்குள்ளே இவள் கனகத்தின்ர புருசனும் நேற்று பின்னேரம் நல்ல வெறியில மதவடி வீதியால் வர எதிரில் ஒரு மாடு வந்திருக்கு, இவர் அதோட சொறியப் போக அது இவரை முட்டி மதகில விழுத்திட்டுப் போயிட்டுது. இவருக்கு முன்வாய் பல்லு ரெண்டு உடைஞ்சிட்டுது. அவர் இப்ப எங்க ஆஸ்பத்திரியிலோ என்று வாமு கேட்க கனகமும் அந்தாள் உந்தப் பரியாரியிட்ட மருந்து வாங்கிப் போட்டுகொண்டு வந்து வீட்டில படுத்திருக்கு என்று சொல்லிப்போட்டு சரி நீங்கள் இருந்து கதையுங்கோ நான் போய் அவர் சாப்பிட ஏதாவது கஞ்சி வைச்சுக் குடுக்கப்போறன்........! 🦚 மயில் ஆடும் ......!
  40. மயிலிறகு ....... 05. எடேய் ....அப்போது நீ கவனிச்சனியே அவன் தன்ர மோட்டர் சைக்கிள் சைட் பெட்டியில் இருந்து ஒரு மஞ்சள் பை எடுத்து அவளிடம் பணம் பத்திரம், கவனமாய் கொண்டுபோய் பெட்டியில் வை என்று கொடுத்ததை. தோராயமாய் பார்த்தாலும் ஐந்தாறு லட்சங்களாவது இருக்கும் இல்லையா.....அதை சொல்லும்போது சுந்துவின் குரலில் ஒரு அவாவும் தடுமாற்றமும் இருக்கு. ஓமடா .....நானும் கவனித்தனான் ஆனாலும் அதடா என்பவனை இடைமறித்து அதுமட்டும் கிடைத்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடுமடா. பூவனத்தின் கல்யாணம்,என்ர படிப்பு,உன்ர மோட்டார் சைக்கிள் மற்றும் ஊருக்குள் ஒரு மளிகைக் கடை என்று எல்லாம் செய்யலாம்டா...... சுந்துவுக்கு கொஞ்சம் வெறி ஏறீட்டுது. டேய் வாமு அவன்ர சேட்டைக்கு எப்படியாவது அதை அடிச்சுக்கொண்டு வரவேணும். குரல் உசாராய் சத்தமாய் வருகிறது. உனக்கென்ன பைத்தியமாடா சுந்து ....அப்படி ஏதாவது நடந்தால் உடனே அவருக்குத் தெரிந்து போயிடும் நாங்கள்தான் செய்திருப்பம் என்று...... பிறகு உன்ர படிப்பு, தங்கச்சியின் கல்யாணம் எல்லாம் பாழாகிடும்.இப்ப நீ ஒன்றுக்கும் யோசிக்காமல் போய்ப்படு.பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான். மயிலம்மா அறைக்குள் தன் அலுமாரியில் எதையோ தேட பூவனம் அங்கு தேநீர் கோப்பைகளுடன் வருகிறாள்.தாயைப் பார்த்து என்னம்மா தேடுகிறாய் .....இல்லையடி இன்று முழுதும் செத்தவீடு, மார்அடிச்சு அழுதது, நடை என்று ஒரே அலுப்பாய் இருக்கு அதுதான் இந்த மருந்துப் போத்தலை இங்கினதான் எங்கேயோ வைத்தனான் காணேல்ல ஓ......அதுவா அதைத்தான் அவங்கள் இரண்டு பேரும் எடுத்து குடிச்சுட்டு அலட்டிக் கொண்டிருக்கிறாங்கள். அப்படியே.....சரி சரி அத விடு, உந்தத் தேத்தண்ணியைத் தா குடிப்பம். நீ அவங்களுக்கு நல்லா இடங் குடுக்கிறாய் சொல்லிப் போட்டன் என்று தாய்க்கும் தேநீரைக் குடுத்துட்டு தனது தேநீரை எடுத்துக் கொண்டு வெளியே போகிறாள் பூவனம். அடுத்தநாள் காலை பத்து மணியளவில் தபால்காரர் சைக்கிளில் மயிலம்மா வீட்டுக்கு முன் வந்து நின்று மணியடிக்க பூவனம் சென்று அவரிடமிருந்து பதிவுத்தபால் ஒன்றை கையெழுத்திட்டு வாங்கி வருகிறாள். வரும்போதே அண்ணா உனக்கொரு கடிதம் வந்திருக்கு வந்து பாரேன் என்று அழைக்கிறாள். அடுக்களையில் இருந்து மயூரியும் சுந்துவும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறார்கள். சுந்து வந்து தங்கையிடம் இருந்து கடிதத்தை வாங்கிக் கவனமாகப் பிரித்துப் படிக்கிறான்.அதில் அவன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாகவும் வரும் திங்கள் கிழமை குறிப்பிட்ட ஆவணங்களுடன் வந்து சேந்து கொள்ளும்படி தெரிவிக்கப் பட்டிருந்தது.அதை அறிந்ததும் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கு. அம்மா நான் இந்த நல்ல செய்தியை வாமனிடம் போய் சொல்லிப்போட்டு வாறன்.இதைக் கேட்டதும் அவன் மிகவும் சந்தோசப்படுவான் என்று சொல்லிவிட்டு தாயைப் பார்க்க அவளும் இருடா வாறன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று கொஞ்ச பணம் எடுத்துவந்து மகனிடம் குடுக்கிறாள். பணத்தை வாங்கியதும் சுந்து சந்தோசத்துடன் சைக்கிளில் சிட்டாய்ப் பறக்கிறான்.இதை பார்த்த பூவனம் அம்மா இவங்கள் குடிக்கப் போறாங்கள், நீ வேற அவங்களுக்கு காசு குடுக்கிறாய்.... நீ சும்மா இருடி அவங்கள் என்னண்டாலும் செய்யட்டும். அங்க படிக்கப்போனால் இனி எப்ப அவனைப் பார்க்கபோறோமோ....நீ போய் அடுப்பில மா அவிய வைத்தனான் என்னெண்டு போய்ப் பார்....நான் ஒருக்கால் கனகத்தைப் பார்த்துட்டு வருகிறேன்.....பக்கத்து வீட்டுக்கு நடந்து செல்கையில் அவளின் மனம் கணக்குப் போடுகிறது. இன்று வெள்ளி அடுத்து சனி,ஞாயிறு பின் திங்கள் வந்துடும்.இதற்குள் பணத்துக்கு என்ன செய்வது. இப்ப ஒரு இரண்டாயிரம் இருந்தால் கூட போதும் பிறகு பார்த்து நிலத்தை ஈடு வைத்து எண்டாலும் பிள்ளையின் படிப்புக்கு உதவ முடியும். அவன் படித்து ஆளாயிட்டான் என்றால் எங்கட பஞ்சம் தீர்ந்திடும்.அதுக்குள் இவளின் சம்பந்தம் வேற நான் முந்தி, நீ முந்தி என்று நிக்குது.எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மயூரிக்கு மண்டை விறைக்குது. அங்கு வீட்டு வாசலில் கனகம் நிற்பதைக் கண்டு விரைவாக நடக்கிறாள். வாமு வீட்டை போன சுந்து அங்கு அவனைக் காணாது அவனின் தாயிடம் விசாரிக்க அவவும் அவன் அரசு விதானையார் கூப்பிட்டு போயிட்டான். இப்ப வரும் நேரம்தான் நீ உந்த வாங்கில இரு தம்பி. நான் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வாமுவும் சைக்கிளில் வந்து இறங்குகின்றன். அவனைக் கண்டதும் ஓடிச்சென்று வாமுவைக் கட்டிப்பிடித்த சுந்து தனக்கு பல்கலைக்கழகத்துக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு சட்டென்று அமைதியாகின்றான்.அவனின் முகவாட்டத்தைப் பார்த்த வாமு என்னடா சொல்லு என்று கேட்க அவனும் வாற திங்கள் போகவேணும் இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு அதற்குள் பணத்துக்கு என்ன செய்யிறதென்றுதான் யோசிக்கிறன். எட மடையா, அதெல்லாம் வெல்லலாம், நீ ஒன்றுக்கும் யோசிக்காத.நீ இருந்து தேத்தண்ணியைக் குடி நான் உடுப்பு மாத்திக்கொண்டு வாறன் என்று உள்ளே போகிறான்.சிறிது நேரத்தில் இருவரும் தாயிடம் சொல்லிக்கொண்டு சைக்கிள்களில் வெளியே போகின்றார்கள். அந்த ஊரில் இருக்கும் ஒரேயொரு பாரில் சுந்து ஒருபோத்தல் சாராயம் வாங்கப் போக வாமு அவனிடம் கணக்க வேண்டாம் அரைப் போத்தல் வாங்கு போதும் என்று சொல்லி அரைபோத்தல் சாராயமும் இரண்டு பிளாஸ்டிக் கப்பும் அத்துடன் குடல் கறியும் வாங்கிக்கொண்டு வருகிறான். இருவரும் அங்கிருந்த சிறு மேசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்தில் ஒரு மேசையில் நாலுபேர் ஊர் உலகத்தில் நடக்கிற பல விஷயங்களையும் கதைத்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். சுந்துவும் போத்தலை எடுத்து உள்ளங்கையில் ரெண்டு குத்து குத்தி மூடியிலும் குத்திவிட்டு மூடியைத்திருக அதுவும் மெல்லிய இழை தளர்ந்து புதுமணப்பெண்போல் முனகிக் கொண்டு திறந்து கொள்கிறது.ஒரு சுகந்தமான வாசனை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படியே அந்தப் பொன்னிறத் திரவத்தை இரண்டு கிளாஸ்களிலும் பாதி பாதியாக ஊற்ற வாமுவும் பக்கத்து மேசையில் இருந்து தண்ணி வாங்கி அதில் கலந்து விடுகிறான்.இருவரும் ஆளுக்கொரு மிடறு குடிக்கிறார்கள்.பின் வாமு பொக்கட்டில் இருந்து சிகரெட் பெட்டியை எடுத்து அவனுக்கும் ஒன்றைக் குடுத்து தானும் ஒன்றை வாயில் வைத்துக் கொண்டு தீப்பெட்டி தேட பக்கத்து கதிரையில் இருந்தவர் இங்காலுப்பக்கம் திரும்பாமல் தன்னிச்சையாய் தனது சிக்ரெட்டை நெருப்புடன் இவனிடம் தருகிறார். வாமனும் அதை வாங்கி தன் வாயில் இருந்த சிக்ரெட்டைப் பற்றவைத்து சுந்துவிடம் குடுத்துட்டு அவனிடமிருந்த சிக்ரெட்டை வாங்கி தான் பத்தவைச்சுக்க கொண்டு அவரிடம் அவருடையதைக் குடுத்து விடுகிறான். 🦚 மயில் ஆடும் ........!
  41. (எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு க‌டையை நடத்துற‌ வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத‌ என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த‌ குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற‌ ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க‌ அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க‌ இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன‌ ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த‌ சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
  42. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.