Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 03/14/24 in all areas
-
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
4 pointsஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.4 points
-
மயிலம்மா.
4 pointsமயிலிறகு........... 14. நேரே மயிலம்மா வீட்டுக்கு வந்தவன் முன்னால் இருந்த அம்மன் கோயிலில் வண்டியை நிப்பாட்டி விட்டு சென்று அம்மனைக் கும்பிட்டு கற்பூரம் ஏற்றி ஒரு சிதறுதேங்காயும் உடைத்து மூன்று பட்டும் ஒரு மஞ்சள் பட்டுச் சேலையும் அவ காலடியில் வைத்து விட்டு, சைக்கிளுடன் வீட்டுக்குள் வருகிறான். அவனைக் கண்டதும் மயிலம்மாவுக்கு முகம் மலர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஏன்டா வாமு இப்பதான் உனக்கு வழி தெரிஞ்சதோ. இத்தனை நாளா உன்னை இங்காலுப் பக்கம் காணேல்ல. சும்மா கோவப்படாதையுங்கோ மயிலம்மா.ஒரு நல்ல செய்தி உங்களிடம் சொல்ல வருகிறன் என்று சொல்ல.......பின்ன எனக்கு கோவம் வராதா கல்யாண வேலைகள் தலைக்கு மேல் கிடக்கு உன்னையும் காணேல்ல நான் என்னெண்டு நினைக்கிறது எதையென்று நினைக்கிறது சொல்லு. முதல்ல எனக்கு கிராமசேவகர் வேலை கிடைத்திருக்கு மயிலம்மா.நீங்கள் அப்போது வீட்டுக்கு வந்ததா அம்மா சொன்னவ. எனக்கு இப்ப விதானையாருடன் வேலை அதிகம். விடிய வெள்ளன அவரோடு போனானான் பின்னேரம்தான் வீட்டை வந்தனான் என்று சொல்லி தான் அஞ்சலாவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியதுவரை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறான். உண்மையா வாமு நான் கொஞ்சம் பயந்திட்டன்டா. சரி ஏதோ பொல்லாத காலம் அதெல்லாவற்ரையும் மறந்திடுவோம். அதென்ன கையில் பார்சல் என்று கேட்கிறாள். இது மயிலம்மா உங்களுக்குத்தான் எடுத்து வந்தனான்.அவளும் அதை அங்கேயே பிரித்துப் பார்க்க அதில் சுந்துவுக்கு ட்ரவுசர் சேர்ட் பனியன், பூவனத்துக்கு மூன்று சுடிதார் ஹீல்ஸ் செருப்பு, மயிலம்மாவுக்கு நாலு சேலைகள் சட்டைகள் பாவாடைகள், உள்ளாடைகள் அத்துடன் பாட்டா உட்பட ரெண்டு சோடி செருப்பு எல்லாவற்றுடனும் இனிப்பு சொக்கிலேட் எல்லாம் இருக்கு. அதெல்லாம் பார்த்த மயிலம்மாவுக்கு மனம் நெகிழ்கின்றது. பின் அதில் இருந்து ஒரு சேலையும் சுடிதாரும் தனியாக எடுத்து வைத்து உள்ளே சென்று ஒரு புது வேட்டியையும் கொண்டு வந்து அதோடு சேர்த்து சொக்கிலேட் மற்றும் இனிப்புகளும் வைத்து அவனிடம் இதை நீ கனகத்திடம் குடு. நாங்கள் ஒன்டுக்க ஒன்டாய் பழகிறானாங்கள். அவர்களும் சந்தோசப் படுவினம். பின் அவள் சிறிது தள்ளிச் சென்று கனகத்தைக் கூப்பிட அவளும் தன் வீட்டில் இருந்து எட்டிப்பார்த்து விட்டு வருகிறாள். கனகத்திடம் தனக்கு வேலை கிடைத்ததை சொல்லிய வாமன் பார்சலை அவளிடமும் தர அவளும் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறாள். அடுத்து செய்யவேண்டுய வேலைகள் பற்றி மயிலம்மாவும் வாமுவும் கலந்துரையாடி ஒரு கொப்பியில் எழுதுகின்றனர்.பின் மயிலம்மா அவனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று அந்த ஒரு லட்சம் ரூபா பணத்தில் இருந்து இருபத்தையாயிரம் ரூபாவை தனியாக எடுத்து அவனிடம் தர அவனும் என்ன மயிலம்மா இது எதுக்கு எனக்கு என்று கேட்கிறான். டேய் இது உனக்கென்று தரவில்லையடா. நான் ஒரு எழுபது எழுபத்தைஞ்சுக்குள் இந்தக் இந்தக் கலியானச் செலவுகளை முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கையில அதிகம் பணம் இருந்தால் கண்டபடி செலவு செய்யத் தோன்றும். மேலும் உனக்கு பூவனத்தைப் பற்றி தெரியும்தானே. என்ர மகள்தான் ஆனால் இந்தப் பணத்தைக் கண்டால் பெரிசாய் சிலவு செய்து கலியாணம் கட்ட நிப்பாள் அல்லது இந்தப் பணத்தை அப்படியே தனது புருஷன் வீட்டுக்கு கொண்டுபோக அடம்பிடிப்பாள். அம்மா படும் கஷ்டத்தைப் கொஞ்சமும் நினைக்க மாட்டாள். என்ர பிள்ளையைப்பற்றி எனக்குதான் தெரியும். இதை நீ கவனமாய் வீட்ட கொண்டுபோய் வைத்துக்கொள். அந்தப்பிள்ளை எவ்வளவு நம்பிக்கையுடன் நகைகளைக் கூட எடுக்காமல் நம்பிப் பணம் தந்தது. அதனால் எப்படியும் ஆறுமாதத்துக்குள் கடன் அடைச்சுப்போட வேணும் என்கிறாள்.அவனுக்கும் அது சரியென்றே தோன்றியது. அன்று அந்தச் சம்பவம் வெய்யிலில் வானவில் தோன்றி மறைவதுபோல் தற்செயல் நிகழ்வாய் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதிலிருந்து மயிலம்மா மது பாவிப்பதை அறவே விட்டிருந்தாள். வாமனும் தனது வேலையின் நிமித்தம் ஆங்காங்கே கொஞ்சமாவது பாவிக்க வேண்டிய அல்லது பாவிப்பதுபோல் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்குது. அவனால் அவளைபோல் அறவே விட முடியவில்லை. பூவனத்தின் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுந்துவும் வந்து விட்டான். அவர்கள் ஒரு வாடகைக்காரில் பெரியகடைக்கு சென்று தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள்.வாமுவும் மற்றவர்களும் சுந்துவோடு அவன் இல்லாத சமயத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.வாமனுக்கு கிராமசேவகர் வேலை கிடைத்தது பற்றி கதை வந்தபோது பூவனம்தான் சொல்கிறாள் அண்ணா அவன் அலுவலகம் திறக்க இடம் பார்க்கிறான் இன்னும் சரியா அமையவில்லை. சுந்துவும் என்னடா இவள் சொல்வது உண்மையா, நீ எனக்கு சொல்லவில்லை. அதெடா சுந்து இடத்தை பிடிச்சுட்டு சொல்லுவம் என்று இருக்கிறன் என்கிறான். கொஞ்ச நேரம் யோசித்த சுந்து ஏண்டா நீ எங்கட முன் அறையைப் பாவிக்கக் கூடாது. தங்கச்சியும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிடுவா, நானும் இங்கில்லை, அம்மாவும் தனியாய் இருக்கிறா.நீ இங்கிருந்தால் அவவுக்கும் துணையாய் இருக்கும். நாங்களும் பயமில்லாமல் இருப்பம். நீ என்னம்மா சொல்கிறாய் என்று தாயாரைக் கேட்கிறான். அவளும் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை, நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யலாம் என்கிறாள். வாமு நீ என்னடா சொல்கிறாய் என்று கேட்க அதில்லடா சுந்து விதானையின் அலுவலகம் எண்டால் நாலுவிதமான ஆட்களும் வந்து போவினம்.அது மயிலம்மாவுக்கு இடைஞ்சலாய் இருக்கும் இல்லையா..... அது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. உனக்கு வேறு நல்ல இடம் கிடைக்கும் வரை கூட நீ இதைப் பாவித்துக் கொள்ளலாம். அப்போது பூவனம் நீ விதானையானால் அலுவலகத்துக்கு தொலைபேசி தருவார்கள் எல்லோ. ஓம் தருவார்கள்....அப்ப நாங்கள் அண்ணனுடன் கதைக்கலாம் என்ன.... பின் எல்லோரும் கலைந்து போகிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்களுடன் பூவனத்தின் கல்யாணம் அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு அரசு விதானையும் அஞ்சலாவும் கூட வந்திருந்து அன்பளிப்புகள் கொடுத்து சிறப்பித்திருந்தார்கள். சுந்துவும் சமயத்தில் அவள் செய்த உதவிக்கு மனதார நன்றியைத் தெரிவித்து கொண்டான்.அடுத்து வந்த இரு நாட்களில் அவன் எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவன் வாமுவுடன் புகையிரத நிலையத்துக்கு செல்லும்போது அடுத்த மாதம் எனக்கு ஒரு மாத விடுமுறை வருகிறது அப்ப சந்திக்கலாம் என்று சொல்லி வந்த வண்டியில் ஏறி கையசைத்து விடை பெற்றுக்கொள்கிறான்........! 🦚 மயில் ஆடும்........! 14.4 points
-
தாயின்றி நாமில்லை.!
3 pointsசர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.3 points
-
மயிலம்மா.
3 pointsமயிலிறகு.......... 15. வாமன் சாதாரணமாய் அஞ்சலா வீட்டுப்பக்கம் போய்வர நேர்ந்தால் அவளோடும் தாயாருடனும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான்.அது அவர்களுக்கும் பிடித்தமானதாயும் பொழுதுபோக்காகவும் இருந்தது. அன்றும் அப்படி ஒருநாள் போனபோது அஞ்சலா மிகவும் சோகமாய் இருந்தாள். என்ன இன்று மிகவும் கவலையுடன் இருக்கிறீர்கள்..... அதொன்றுமில்லையடா வாமு, "மழை விட்டும் தூவானம் போகேல்ல" என்ற மாதிரி என் நிலைமை இருக்கு. என்னெண்டு சொல்லுங்கோ.......இவற்ர இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான் எல்லோ அவன்தான் அன்று இவற்ற செத்தவீட்டில் என்னோடு குழப்பம் செய்தவன். சரி ....அதுக்கென்ன....... இப்ப அவர் என்னை கடத்திக் கொண்டுபோய் அவற்ர நண்பனுக்கு மணமுடித்து விடுகிற பிளானில் இருக்கிறார் என்று அவர் பாரில் தன் நண்பர்களுடன் கதைத்ததை எனக்கு நம்பகமான ஒருத்தர் அங்கிருந்து கேட்டுவிட்டு வந்து சொன்னவர்.அதைக் கேட்டதில் இருந்து மனம் ஒரே குழப்பமாய் இருக்கு. என்ன பணம் சொத்து எல்லாம் இருந்தால் என்ன எல்லாம் அவங்கட கையில் இருக்கிறமாதிரி நடக்கிறாங்கள். வாமனும் ....இல்ல நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ஏன் நீங்கள் அவர் சொல்லுற இடத்தில கலியாணம் செய்யக்கூடாது. அதுக்கில்ல.....எனக்கு அது விருப்பமில்லை....விட்ட படிப்பைத் தொடரலாமா என்றும் ஒரு எண்ணம் எனக்கு வருகுது.....அதுக்குள்ளே இவன் இந்தமாதிரி வேலை பார்க்க நிக்கிறது எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல. இவற்ற சம்சாரமோ மூத்தப்பிள்ளையோ வந்து கதைத்தால் கதைத்துப் பார்க்கலாம்.அதை விட்டிட்டு கடத்திக் கொண்டு போக நினைப்பதெல்லாம் துப்பரவாய் சரியில்லை. ஓம்.......நீங்கள் சொல்லுறதும் சரிதான்..... நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து இரண்டு முறைதான் இந்தப் படலையைத் தாண்டி இருக்கிறன். அவற்ர செத்தவீட்டுக்கும், மயிலம்மா வீட்டுக் கலியாணத்துக்கும்தான். எனக்கென்ன தெரியும் அவங்களை மீறி நான் என்ன செய்ய முடியும். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ......அவன் என்ன செய்யுறான் என்று நானும் பார்க்கிறன். இன்னும் இரண்டு நாளில் சுந்துவும் விடுமுறையில் வருகிறான். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். எதையும் யோசித்து செய்யலாம். அதுக்குள்ள ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறன். அப்படி பிரச்சினை என்றால் உங்கட தொலைபேசியால் அரசு விதானைக்கு அறிவியுங்கோ. அல்லது அங்கு போய் இருங்கோ. அநேகமான நேரங்களில் நானும் அங்குதான் இருப்பேன்.இப்ப போய் நானும் அவரிடம் சொல்லி வைக்கிறன். பின் வாமன் அரசு விதானையிடம் சென்று விஷயத்தை சொல்கிறான். அதற்கு அவர் நீ ஒன்றுக்கும் யோசிக்காத. ஆர் அந்த யோகிபாபுதானே, அவன் ஒரு மொக்கன். அவனைத் தெரியும் எனக்கு. வைத்தி இருக்கேக்க அவரை ரெண்டு கேசில இருந்து காப்பாற்றி விட்டனான். மூத்தவன் விவேக் கொஞ்சம் நல்லமாதிரி சொன்னால் கேட்பான். விடு அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஏன்டா நீ அவளுக்காக இவ்வளவு கரிசனைப் படுகிறாய்...என்ன விசயம் சொல்லு. அப்படி ஒன்றுமில்லை அண்ணா ....அந்தப் பிள்ளை எங்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கு. நல்ல பிள்ளை அதுதான்.... சரி....சரி.....அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லு செய்திடலாம் யோசிக்காத.... ஒன்று சொல்லுறன் கேள், பிறகு விதானைக்கு பொம்பிளை தர மாட்டாங்களாடா.......சும்மா சொல்லுவாங்கள் அரச உத்தியோகம்.....நல்ல வேலை என்று எல்லாம்....... பொம்பிளை கேட்டுப் போனால்தான் தெரியும்.....ஹா .....ஹா என்று வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். அடுத்து வந்த சில நாட்களில் சுந்து விடுமுறையில் வருகிறான். வாமன் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அவன் வீட்டில் விடுகிறான்.அங்கு அவன் தனது தாய் சகோதரங்களுடன் வழமையான குசலங்கள் விசாரித்து விட்டு, அம்மா நான் வாமனுடன் வெளியே போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி அவனின் அலுவலக அறைக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு இருவருமாக மோட்டார் சைக்கிளில் வெளியே போகிறார்கள். அப்போது வாமன் ஏதோ யோசனையில் இருப்பதை சுந்துவும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் வழமையாகப் போகும் "பாரு"க்கு சென்று அரைப்போத்தல் சாராயமும் தண்ணிப் போத்தலும், கணவாய்ப் பிரட்டலும் வாங்கிக் கொண்டு வந்து ஒரு கதிரையில் அமருகிறார்கள். இப்போது வாமன் விதானையாகிய பின் எங்கு சென்றாலும் அவனுக்கு தனி மரியாதை கிடைக்கின்றது. அப்போது அங்கு ஒரு குடிமகன் போதையில் தள்ளாடியபடி வந்தவர் வாமனைப் பார்த்துவிட்டு தம்பி புது விதானையார் எனக்கொரு சந்தேகம்..... கொஞ்சம் விளக்க முடியுமோ..... வாமனும் என்ன அண்னை சொன்னால் தானே தெரியும்......சரி.....நீங்கள் மாளிகைக் கடைக்குப் போனால் என்ன செய்வீங்கள்..... சாமான்கள் வாங்குவோம் .......பிறகு .......பிறகு பணம் குடுப்போம். .... முடி வெட்டப் போனால் ......முடி வெட்டுவோம் ....பிறகு பணம் குடுப்போம் .... உடுப்புகளை சலவைக்குப் போட்டால் ........இதென்ன கேள்வி கொண்டு வந்து தந்தபின் பணம் கொடுப்போம். தேனீர் சாப்பாட்டுக் கடைக்குப் போனால் .......சாப்பிட்டுட்டு பணம் கொடுத்து விட்டு வருவோம்......சரி......சரி......ஆனால் ஒரு பாருக்கு போனாலோ, சினிமாவுக்கு போனாலோ அல்லது விலைமாதிடம் போனாலோ என்ன செய்கிறீர்கள் .......பக்கத்தில் குடித்துக் கொண்டிருந்த ஒரு வண்டிச்சாரதி சொல்கிறார் .....ஹா....ஹா.....இது நல்ல கேள்வி..... முதலில் பணத்தைக் குடுத்து விட்டுத்தான் பொருளை நுகர்கிறோம்....சரியா .....மெத்தச் சரி...... விதானைத் தம்பி நீயே கேள் இவனிட்டை ஒரு கால் போத்தல் தாடா நாளைக்கு காசு தருகிறேன் என்றால் தராமல் விரட்டுறான். அங்கிருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.....வாமனும் சிரித்து விட்டு சரி அண்ணை நான் சொல்லுறன் நீங்கள் போய் வாங்குங்கோ நான் அவரிட்டை சொல்லுறன். அவர் தள்ளாடி கும்பிட்டுக்கொண்டு போகிறார். சுந்து சொல்லுறான், டே வாமு ஆனாலும் விதானை வேலை ரெம்பக் கஷ்டமடா.........! 🦚மயில் ஆடும்............. 15.3 points
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும் காரணங்கள் இருக்கின்றன. ஆனால், உங்களுக்குத் தெரிந்து கொண்டு தான் கேட்டிருக்கிறீர்கள் என அறிவேன். ஆனால், வாசகர்கள் அறிந்து கொள்ள: 1. சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு (ICC) இலங்கையின் குற்றங்கள் இன்னும் முறையாக முன்வைக்கப் படவில்லை. பிரதான காரணம், அப்படி மனு செய்வதற்கான 3 பொறிமுறைகளில் எதுவும் தமிழர்கள் தரப்பின் வசம் இல்லை. வேறொரு அங்கத்துவ நாட்டினூடாக மனு செய்யும் முயற்சி ஓரிரு ஆண்டுகள் முன்பு பிரிட்டனில் ஆரம்பித்தது, நிலை எனவென்று தெரியவில்லை (அந்த முயற்சியைக் கூட, மியன்மாரின் றொஹிங்கியா மக்களின் வழியைப் பின்பற்றித் தான் பிரிட்டன் தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது வரைக்கும் எவரும் அக்கறையாக எப்படி ICC ஐ அணுகுவது என்று யோசித்ததாக நான் அறியவில்லை) 2. அப்படியானால் எங்கே விசாரணை நடக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் (OHCHR) நடக்கிறது. 2014 இல் "..எதிர்கால தீர்ப்பாயமொன்றில் சமர்ப்பிப்பதற்காக ஒரு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்" என்ற வாக்கியத்தோடு முதல் தீர்மானம். தீர்மானத்தின் இணைப்பு கீழே: https://www.ohchr.org/en/hr-bodies/hrc/oisl#:~:text=In its resolution A%2FHRC,violations and abuses of human இடையில், இலங்கை அரசு இந்த தீர்மானத்தின் படி ஒழுக மாட்டேன் என்ற போது, அமெரிக்காவின் அணி, இன்னொரு தீர்மானம் மூலம் இலங்கையை தொடர்ந்து உடன் வைத்திருக்க பணியாற்றியது. அந்த அமெரிக்க நிலைப்பாட்டிற்கு சுமந்திரன் ஆதரவாக இருந்தார். இதையே "தவணை கொடுத்தார்கள்" என்று சுமந்திரன் எதிர்ப்பு அணி குத்தி முறிந்து வியாக்கியானம் செய்தன. தவணை கொடுத்திருக்கா விட்டால், சர்வதேச/ஐ.நா படைகள் வந்திறங்கி தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்று நினைத்தார்களோ தெரியாது😂. தற்போது, 2021 தீர்மானத்தின் படி Sri Lanka Accountability Project (SLAP) என்ற பொறுப்புக் கூறல் திட்டம் மூலம் தகவல் சேகரிப்பு நடந்து வருகிறது. அதன் இணைப்புக் கீழே: https://www.ohchr.org/en/hr-bodies/hrc/sri-lanka-accountability/index#:~:text=In its resolution 46%2F1,Lanka with a view to விசயம் இவ்வளவு தான்! "சுமந்திரன் இதைக் குழப்பினார் , விக்கி ஐயா இதை முன்னேற்றினார்!" என்பதெல்லாம் மேல் தீர்மானங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்கள் போடும் கூச்சல் - white noise!3 points
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சுமந்திரனை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?2 points
-
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
ஆயுதம் இல்லாமல் கை கடிக்கும் நேரத்தில் ரனிலை சந்திக்க முடியும். 🙃மக்ரோனின் "இதோ வருகிறோம் என்பது "புட்டினின் நேர்காணலில் தயார் நிலை பற்றி சொல்லி உள்ளார். ஆபிரிக்க நாடுகளின் எதிர்ப்பு புட்டினினின் பின்னணியில் நடைபெற்றதும் ( மாலி உதாரணமாக) மக்ரோனை கடுப்பாகி உள்ளதை விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு அணுசக்தி நாடுகள் மோத நினைப்பது மில்லியன் காசா ஆகி விடும் என்பதே உலக மக்களின் அச்சம்.2 points
-
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
2 points
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
2 pointsவெளித்தெரியாமல் இருக்கும் இதயக் கோளாறுகள் சிலரில் உடற்பயிற்சி, உடல் உழைப்பின் போது வெளிப்படுவதுண்டு. இந்தக் காரணத்தினால் தான், முதல் எப்பொழுதும் கடின உடற்பயிற்சி செய்யாதோர், ஒரு மருத்துவ பரிசோதனை , இதய பரிசோதனை செய்த பின்னர் கடின உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மருத்துவ ஆலோசனை இருக்கிறது. சாதாரணமாக இதயத்தின் இரத்தக் கலன்களில் இருக்கும் அடைப்புக் (atheroma) கூட, உடற்பயிற்சி கடினமாகும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம். இதற்கு ஒரு வழி, stress test செய்து இதய இயக்கம் சரியாக இருக்கிறதா என்று கண்டறிவது. மேல் செய்தியில் இருப்பது, atrial flutter எனப்படும் பிறப்பிலேயே இருக்கக் கூடிய ஒரு நிலை. இதயப் பரிசோதனையில் கண்டறியலாம். சிகிச்சைகள் இருக்கின்றன.2 points
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்களம் முன்பு போல் வேகமாக வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட நேரம் எடுக்குது கருத்துக்களத்துக்குள் வர...............2 points
-
இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
சீனா இந்தியா ரஷ்யா அமெரிக்கா எண்டு ஹை லெவல் ஆக்களோட தான் சிரிலங்கா டச்சிங்ல இருக்கு 🤣2 points
-
மேய்ப்பன்
2 pointsமேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது. நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார். ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை. அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார். இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது. ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது. கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது. ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.2 points
-
மயிலம்மா.
2 pointsமயிலிறகு ........... 13. வாமன் அந்த சாவிகளைப் பயன்படுத்தி யந்திரத்தை மூடியிருந்த இருபக்கப் பெட்டிகளையும் கழட்டிவிட்டு அழுக்கேறியிருந்த பில்டர், பிளக் எல்லாவற்றையும் சுத்தமாக்கி மீண்டும் பொருத்தி விடுகிறான்.பின் அதில் சாவிபோட்டு பொத்தானை அமுக்க அது இயங்கத் தொடங்கி விட்டது. சிறிது நேரம் அதை அப்படியே ஓடவிட்டு நிப்பாட்டுகிறான். பின் பக்கத்துப் பெட்டிகளை பூட்டும்போது அதில் ஏதோ நெகிழிப் பையில் சுற்றியபடி இருக்க முதலில் அதை வாகனப் புத்தகம் என்று நினைத்தவன் எதுக்கும் பார்ப்பம் என்று எடுத்துக் பார்க்க அதில் வாகனப் பத்திரத்துடன் தனியாக ஒரு கட்டுப் பணமும் இருக்கு.அதைமட்டும் பூட்டாமல் அருகில் வைத்து விட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணிர் எடுத்து வண்டியை நன்றாக கழுவித் துடைத்து விடுகிறான். அப்போது அஞ்சலா ஒரு பையுடன் அங்கு வருகிறாள். அஞ்சலா இங்கு கொஞ்சம் வாங்கோ என்று அழைத்து அந்தப் பணக்கட்டை எடுத்து இது இங்கே இருந்தது என்று சொல்லித் தருகிறான். அதை அவள் வாங்கிப் பார்த்துக் கையில் வைத்துக் கொண்டு அது சரி வண்டிக்கு நீ முன்பணம் தரவேண்டும் என்கிறாள்.அவனும் அதுக்கென்ன என்று சொல்லி இப்பதான் விதானையார் சம்பளப்பணம் தந்தவர் என்று அதில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாவை எண்ணிஎடுத்து மீண்டும் பொக்கட்டில் தேட அவள் என்ன என்று கேட்கிறாள்......அதுவந்து இன்னும் ஒருரூபாய் தேடுகிறேன் என்று சொல்ல அங்கிருந்த ஆச்சி தனது கொட்டப்பெட்டிக்குள் இருந்து ஒரு ரூபா நாணயத்தை எடுத்து அவன் கையில் தர அதை அப்படியே அஞ்சலாவின் கைகளில் தருகிறான். அவளுக்கு அவன் செயல்களைப் பார்க்க சிறுபிள்ளைத்தனமாயும் சிரிப்பாகவும் இருக்கிறது. மேலும், உன்னிடம் யாராவது இந்த சைக்கிள் சம்பந்தமாய் ஏதாவது கேட்டால் நான் அதை திருத்தத் தந்தது என்று சொல்லி அவர்களை என்னிடம் அனுப்பு என்கிறாள். பின் தன் கையில் இருந்த பையை வண்டியின் பக்கப் பெட்டியில் வைத்து விட்டு இதில் கொஞ்சம் வெற்றிலை, தேசிக்காய், மாங்காய் பணியாரம் எல்லாம் இருக்கு கொண்டுபோய் உன் வீட்டுக்கும் மயிலக்கா வீட்டுக்கும் குடு என்கிறாள். அவனும் அவளுக்கு மிகவும் நன்றி சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளை வீதிக்கு உருட்டிக்கொண்டு வந்து சர் என்று சீறிக்கொண்டு பறக்கிறான். வீட்டுக்கு வர அவன் தாய் தம்பி உனக்கு ஒரு தபால் வந்திருக்கு, அப்பாதான் கையெழுத்துப் போட்டு வாங்கினவர் என்று சொல்லிக் குடுக்கிறா. அதோடு கொஞ்ச நேரத்துக்கு முதல் மயூரியும் வந்திருந்தவ. உன்னை அங்காலுபக்கம் காணேல்லயாம் ஏதும் சுகயீனமோ என்று பார்க்க வந்தவ. ஓமன அம்மா இப்ப கொஞ்சம் வேலைகள் கூட அதுதான் அங்காலுபக்கம் போகேல்ல. எனக்குத் தெரிந்த ஆட்கள் இந்த மோட்டார் சைக்கிளை வச்சு பாவிக்கச்சொல்லி தந்திருக்கினம் என்று சொல்லி விட்டு கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான். அது அவன் கிராமசேவகர் நியமனத்துக்கான கடிதம். அந்த நல்ல செய்தியை தாய் தகப்பனிடம் சொல்லிவிட்டு நாளைக்கு அரசு விதானையிடம் சென்று அதற்குரிய சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். இனி நான் கிராமசேவகர் அம்மா என்று சொல்லியபடி பக்கப் பெட்டியைத் திறந்து பையை எடுத்து தாய்க்கு அஞ்சலா தந்த பொருட்களை எடுத்துக் குடுக்கும்போது அங்கு அவன் அஞ்சலாவிடம் குடுத்த பணப்பை இருக்கின்றது. அஞ்சலா நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் என்று கண்களை மூடி சொல்லிக் கொள்கிறான். சரியம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நேராக கடைத்தெருவுக்கு செல்கிறான். அங்கு ஒரு கடைக்குள் சென்று தொலைபேசி வாங்கி சுந்துவுக்கு போன் செய்ய சிறிது நேரத்தில் சுந்துவுக்கு தகவல் போய் அவன் வந்து தொடர்பு கொள்கிறான். அவனிடம் வைத்தி வீட்டில் பணம் வாங்கியதில் இருந்து இன்று தனக்கு வேலை கிடைத்தது வரை சொல்கிறான்.சுந்துவும் தான் கல்யாணத்துக்கு ஒரு கிழமைக்கு முன் வருவதாகச் சொல்கிறான். பின் அங்கு ஒரு புடவைக்கு கடைக்கு சென்று சில பல புடவைகள்,வேட்டிகள், காற்சட்டை சேர்ட்டுகள் என்று எல்லோரையும் நினைத்து தனித்தனியாக பார்சல் பண்ணி எடுத்துக் கொள்கிறான். இப்பொழுது கையில் நிறையப் பணம் இருக்கின்றது அத்துடன் வேலையும் கிடைத்திருக்கு.அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, இன்று யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை. வெளியே வரும்போது அங்குள்ள பொம்மை அணிந்திருந்த சுடிதாரைப் பார்த்ததும் அஞ்சலாவின் நினைவு வர அவளுக்கு இது மிகவும் அழகாய் இருக்கும் என்று நினைத்து அதோடு அவள் தாய் தந்தைக்கும் சேர்த்து ஆடைகள் வாங்கிக் கொள்கிறான். பின் செருப்புக்கு கடைக்கு சென்று நல்ல நல்ல செருப்புகள் மற்றும் பாட்டா செருப்புகள், இனிப்புகள் சொக்கிலேட் எல்லாம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தாயிடம் சேலைகள் வேட்டிகள் இருக்கும் பார்சலைக் குடுத்து விட்டு அஞ்சலா வீட்டுக்கு வருகிறான். அப்போது அஞ்சலா திண்ணையில் இருந்தவள் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் எதோ நினைவில் வைத்தி என்று நினைத்து ஓடிவந்து கேட்டைத் திறக்கிறாள். அங்கு சைக்கிளுடன் வாமனைக் கண்டதும் ஒரு நிமிடம் தனது செயலை நினைத்து வெட்கம் வருகிறது. வாமனும் சைக்கிளை ஸ்ராண்டில் நிப்பாட்டி விட்டு என்ன சிரிக்கிறீங்கள் என்று கேட்டுக்கொண்டே ஒரு பார்சலைக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். அவளும் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு அதை வாங்கி அவன் முன்பே திறந்து பார்க்கிறாள். அதில் வேட்டி சேலைகளுடன் ஒரு அழகான சுடிதாரும் பொன்னிற வாருடன் ஹீல்ஸ் வைத்த செருப்பும் இருக்கிறது. அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. இப்படி ஒரு பரிசு இதுநாள் வரை எனக்கு யாரும் தந்ததில்லை. நீ எனக்குத் தந்தது பெரிதில்லை என் பெற்றோரையும் நினைத்து வாங்கிக் கொண்டு வந்தது என்னை என்னவோ செய்யிறதெடா ......சீ ....போடா....என்னை கொஞ்சம் தனியா விடுடா....நிறைய அழவேனும் போல் இருக்குடா. அந் நிலையிலும் அவள் உன் பெற்றோருக்கும் உடுப்புகள் எடுத்தனியாடா என்று கேட்க ....வாமனும் ஓம் அவைக்கும் எடுத்து அங்கேயும் குடுத்து விட்டுத்தான் வருகிறேன். பின் அவன் அவளை நெருங்கிச் சென்று அவளது கைகளை எடுத்து சிறிது நேரம் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்து விட்டு எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வருகிறான்........! 🦚..........மயில் ஆடும்.......... 13.2 points
-
மயிலம்மா.
2 pointsமயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.2 points
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/1 point
-
திருட்டு வழக்கில் குற்றவாளி : நியூஸிலாந்து முன்னாள் எம்.பி. ஒப்புக்கொண்டார்
Published By: SETHU 13 MAR, 2024 | 01:18 PM நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தான் குற்றவாளி என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 43 வயதான கஹ்ரமான் திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், தான் குற்றவாளி என ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கஹ்ரமான் ஒப்புக்கொண்டார். ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தவர். சட்டத்தரணியான அவர் 2017 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். நியூஸிலாந்துக்கு அகதியாக வந்த பின்னர் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதல் நபர் கோல்ரிஸ் கஹ்ரமான் ஆவார். https://www.virakesari.lk/article/1786171 point
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
அந்த சுமந்திரன் தனது கல்லுரியில் நடந்த விளையாட்டு போட்டியை பழைய மாணவருடன் இருந்து பார்த்ததிற்கே இவ்வளவு பிரச்சனைகள் செய்கிறார்கள் என்றால்... சுமந்திரன் உட்பட எல்லோருமே வெத்து வேட்டுகள் தான் அப்படியிருக்க சுமந்தினை மட்டும் ஏன் ஆதாரம் இல்லாமல் வில்லனாக காட்டுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என்பது தான்.1 point
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
1 point
-
இனித்திடும் இனிய தமிழே....!
1 point1 point
- இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
கேட்ட கேள்விக்கு பதில் வராமல் சுற்றி வளைத்து பதில் சொல்வதை பார்த்திருப்பீர்கள். சொந்த மக்களுக்கே (சிங்கள) இந்த நிலைமை எனில் நாம் எம்மாத்திரம்.1 point- இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
ம்....பிச்சைக்காரனுக்கு தெரிவும் இல்லை, தடுப்பும் இல்லை, வெக்கமும் இல்ல. யார் போட்டாலும் தட்டு நிறைஞ்சா போதும் இப்போ. தட்டோட எடுத்துக் கொண்டு போகும் போதுதான் புரியும், அப்போதும் தட்டிக்கேட்க முடியாது, தமிழரை துணைக்கு கூப்பிடுவார்கள் தம்மைக் காத்துக்கொள்ள.1 point- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
1 point- ஒரு கொய்யா மரத்தின் விவரம்
1 pointஇயற்கையோடு இணைந்திருப்பதனால் சிலவற்றின் அருமைகள் சிலருக்கு விளங்குவதில்லை..✍️1 point- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி.1 point- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
ஏராளன், இன்புழுவன்சா வைரசுக்கெதிராக தடுப்பூசி (flu shot) இருக்கிறது, மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்க முதல் இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புவோருக்கு வழங்குவர். தொற்றிலிருந்து 50% பாதுகாப்புக் கிடைக்கும் இந்த தடுப்பூசியால். மிச்ச 50% பேருக்கு தீவிரம் குறைந்த தொற்று ஏற்படும், எனவே உயிர்காக்கும், நோய்த்தீவிரம் குறைக்கும் தடுப்பூசியாக இன்புழுவன்சா தடுப்பூசி விளங்குகிறது. இலங்கையில் இது பயன்படுத்தப் படுகிறதா எனத் தெரியவில்லை. உங்கள் மருத்துவர் சொன்ன தடுப்பூசி Streptococcus pneumoniae என்ற பக்ரீரியாவின் தொற்றினால் ஏற்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். இதுவா எனக் கேட்டுப் பாருங்கள். https://www.cdc.gov/pneumococcal/index.html1 point- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சரி மறதி நோய் எனக்கு இருக்கு என்று நினைத்துக்கொண்டு நான்கேட்ட இணைப்பை இணைத்து விடுங்கோ.1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன் அதை தடுத்துவிட்டார் அவர் தனி நபர் அல்ல தமிழரின் பிரதிநிதி. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இதுக்கும் ஆதாரங்கள் வேண்டுமா??1 point- தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய மோடி,...... அது என்ன தமிழ்ப் பெண்? ஹிந்திப் பெண்ணைத் தொடமாட்டாரோ? ஆதவா,....😏 பதவி வேண்டும் என்றால் காலைப் பிடிப்பார்கள் என்பது இதுதானோ? 😩1 point- தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
வரலட்சுமிக்கு உளவுத்துறை கேள்விகள் கேட் க வருமாறு கடிதம் அனுப்பி உள்ளதாம். தலைமறைவாகிய ஆதிலிங்கம் வரலட்சுமிக்கு கிழ் வேலை செய்தவராம். புள்ளிகளை இணைத்து பார்க்கவும்.1 point- தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் பாஜக உதயசூரியனை🌞 கண்ட தாமரை🌷 போல் மலர்ந்தே தீரும்.....மலர்ந்தே தீரும் 🤣1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர், அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார். ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள். இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.1 point- தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
தமிழ் நாட்டில் மட்டும் மோதி ஜி காலில் விழுவது ஏன்? இம்முறையும் மண்ணை கவ்வுவோம் என்பதாலா?1 point- அன்றுபோல் இன்று இல்லையே!
1 point- முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை
கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை தூதரகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். அதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணல் இன்று இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதியை பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நேர்காணலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று முருகனை நோகாணல் செய்வதற்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் ரொபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்வதற்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/13732971 point- அன்றுபோல் இன்று இல்லையே!
1 point- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
1 pointகோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா... மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் மண்னை கட் பண்ணுங்கோடா கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல் மண்ணை வெட்டுங் கோடா...1 point- ஆணுக்கு கை கொடுத்த பெண்
1 pointமருத்துவமனையில்,மயக்கத்தில் இருந்து விழித்த ராஜ்குமாருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியாவில் நாங்கோலி(Nangloi) நகரில் வசிக்கும் ராஜ்குமாருடைய இரண்டு கைகளும் அகற்றப்பட்டிருந்தன. மிகவும் மோசமான நிலையில் அவரது இரண்டு கைகளும் சிதைந்த நிலையில் இருந்ததால் அவற்றை அகற்றவேண்டி இருந்ததாக வைத்தியசாலையில் அறிவித்தார்கள். 2020ஆம் ஆண்டு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தே ராஜ்குமாரின் இந்த நிலமைக்குக் காரணம். பெயின்றிங் வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வந்த ராஜ்குமாருக்கு கைகள் போனதால், அவரது வாழ்வே அவருக்குப் பெரிய கேள்விக்குறியாக மாறி இருந்தது. போதாததற்கு அவரது அன்றாடத் தேவைகளுக்கும் அவர் யாரையேனும் எதிர்பார்க்க வேண்டிய சூழலும் சேர்ந்து கொண்டது. அவருக்குச் செயற்கைக் கைகளைப் பொருத்துவதாயின் அதற்கான செலவுகளைத் தர அவரிடம் பணம் இல்லை. வேறு யாருடையதாவது கைகளைப் பொருத்தலாமென்றால், அதைத் தருவதற்கு ம் யாரும் இல்லை. போதாதற்கு அப்படிப் பொருத்துவதற்கு இந்திய ச் சட்டத்தில் அனுமதியும் இல்லை. தனது இரண்டு கைகளையும் இழந்த கவலையோடு அவர் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளையில், 2024இல், மருத்துவமனை ஒன்றிலிருந்து எதிர்பாராத அந்தத் தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது. “உங்களுக்கு இரண்டு கைகளையும் பொருத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்ற இனிப்பான செய்தியை அது சொன்னது. 2024இல் இந்திய மருத்துவச் சட்டங்களில் மாறுதல்கள் வந்தன. அது ராஜ்குமாருக்கு அனுசரணையானது. கல்லூரி ஒன்றின் முன்னாள் பெண் அதிபர் மீனா மேத்தா, தனது இறப்புக்குப் பின்னர் தனது உடல் உறுப்புகளை தானமாக எழுதி வைத்திருந்தார். அவரின் இறப்பு ராஜ்குமாருக்குக் கை கொடுத்தது. இரண்டு கைகளும் பொருத்தப்பட்டால் ராஜ்குமாரால் மீண்டும் பெயின்ற் அடிப்பதற்கு கைகளில் தூரிகைகளை எடுக்க முடியுமா? அது சாத்தியமாகுமா? என்ற கேள்விகளுக்கு அப்பால் சத்திரசிகிச்சை செய்து கைகளைப் பொருத்துவது என்று முடிவாயிற்று. புது டெல்லியில் உள்ள சேர் கங்கா ராம் வைத்தியசாலையில் ஜனவரி 19ந்திகதி நடந்த பன்னிரண்டு மணி நேர சத்திர சிகிச்சையில், மீனா மேத்தாவின் இரண்டு கைகளும் ஜெயக்குமாருக்குப் பொருத்தப்பட்டன. ஜெயக்குமார் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். கைகளை இயக்குவதற்கான பயிற்சிகளை இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கிறார். நரம்புகள், தசைநார்கள், தசைகள் எல்லாம் பொருந்தி மறுபடி ஜெயக்குமார் தனது கைகளில் தூரிகைகளை எடுத்துக் கொள்வாரா?1 point- ஆணுக்கு கை கொடுத்த பெண்
1 pointஅதென்னப்பா ஆணுக்கு கை கொடுத்த பெண். அவரது அதிஷ்டம் ஒரு பெண்ணின் கை கிடைத்தது. " இழந்த கைகளை மீண்டும்பெற்ற அதிசயம்" என போடலாமே . ஒவ்வொரு ஆணுக்கும் பின்னே ஒரு பெண்ணின் ஊக்கம் இருக்கும் .தாயாய் ,சகோதரியாய் ,தாரமாய் ,மகளாய் . 😄1 point- மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
கடற்படை ....கடலில் வாள்வெட்டு நடந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள் ...தரையில் வாள்வெட்டை தடுப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை ...1 point- சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.1 point- சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
உண்மையை ஒரு நாள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.1 point- சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!1 point- சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
மேற்கு நாடுகளின் அரசும் அதன் மக்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் (தற்போது இஸ்ரேலுக்கும் 🤣) எதன் அடிப்படையில் ஆதரவளிக்கிறார்களோ அப்படியே வட கொரியாவுக்கும் ஆதரவளிக்க முன்னிற்பதில் வியப்பில்லையே 😁1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபுலிகளின் ஆரம்பகால பயிற்சியணிகள் எம்.ஜி.ஆர் இன் உதவியை அடுத்து பிரபாகரன் இரு தீர்மானங்களை எடுத்தார். ஒன்று இராணுவ ரீதியிலானது, மற்றைய அரசியல் மயப்பட்டது. இரண்டுமே விடுதலைப் போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையானவை. இராணுவ ரீதியிலான தீர்மானத்தின் அடிப்படைகள் பின்வருமாறு காணப்பட்டன, 1. தமக்கென்று தனியான சுதந்திரமான பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்வது. 2. நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது. 3. நவீன தொலைத் தொடர்பு வலையமைப்பினை உருவாக்குவது. 4. கடற்புலிகள் அமைப்பினை உருவாக்குவது. 5. பெண்கள் படையணியினை உருவாக்குவது. 6. புலநாய்வு அமைப்பினை உருவாக்குவது. அவரது அரசியல்த் தீர்மானத்தின் அடிப்படைகளாக பின்வருபவை அமைந்திருந்தன, 1. அரசியல் பிரிவினைப் பலப்படுத்துவது. 2. பிரச்சார இயந்திரத்திரத்திற்கு புத்துயிர் அளிப்பது. 3. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களையும் மக்களையும் மீட்பது. 4. சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பொறுப்பெடுத்துக்கொள்வது. 5. வரி வசூலிப்பினை நடைமுறைப்படுத்துவது. 6. மக்களை போராட்டத்தினுள் உள்வாங்குவது. ஆகியனவே அவையாகும். பிரபாகரனுடன் குளத்தூர் மணி போராளிகள்க்குத் தேவையான பயிற்சியினை வழங்குவதும், தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதுமே பிரபாகரனின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் ஏற்கனவே தனிப்பட்ட ரீதியில் இரு பயிற்சி முகாம்களை அமைத்திருந்தார். முதலாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் அமைந்திருக்கும் சிறுமலை காட்டுப்பகுதியிலும் இரண்டாவது பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணைக்கு அருகில் அமைந்திருக்கும் குளத்தூரிலும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாம் நெடுமாறனின் உதவியுடனும், குளத்தூர் மூகாம் திராவிடர் கழக ஆதரவாளரான குளத்தூர் மணியின் உதவியுடனும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாமுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை நெடுமாறன் ஒழுங்குசெய்ய, குளத்தூர் முகாமிற்கான ஒழுங்குகளை குளத்தூர் மணி செய்திருந்தார். 1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் குளத்தூர் முகாமை பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். இங்கிருந்தே புலிகளின் பயிற்சித் திட்டம் விரிவாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. முதலாவது தொகுதியில் 125 போராளிகள் இம்முகாமிற்கு பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டார்கள். இத்தொகுதியை "மூன்றாவது தொகுதி" (பட்ச்) என்று இயக்கத்திற்குள் அழைத்தார்கள்.இத்தொகுதிப் போராளிகளுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட இரு தொகுதிப் போராளிகளும் முறையே முதலாவது இரண்டாவது பட்ச் என்று அழைக்கப்பட்டார்கள். இப்பயிற்சிகள் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் இவ்விரு முகாம்களை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு பொன்னாமனிடம் தலைவரால் கொடுக்கப்பட்டது. நாம் இனிப் பார்க்கப்போவது போல, தனது நிர்வாகத்தைப் பரவலாக்கி, மத்தியிலிருந்து உப பிரிவுகளுக்கு விஸ்த்தரித்து வந்திருந்தார். இயக்கத்தின் பொறுப்புக்களை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பரவலாக்கி வழங்கியதுடன் தனக்கு விசுவாசமான மூத்த போராளிகளை அவற்றிற்குப் பொறுப்பாக அவர் நியமித்தார். அந்த வகையிலேயே பொன்னாமான் சிறுமலை மற்றும் குளத்தூர் முகாம்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இம்முகாம்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதேநேரம், முன்னணி பயிற்சியாளராகவும் பொன்னம்மான் பணியாற்றினார். பொன்னம்மானுடன் வேறு சில முக்கிய தளபதிகளும் இம்முகாம்களில் பயிற்சியாளர்களாக இயங்கியிருந்தனர். பிரபாகரனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரபிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மூத்த போராளிகளான குமரப்பா, புலேந்திரன், கிட்டு, லிங்கம் மற்றும் ரகு ஆகியோரே பயிற்சியாளர்களாக அமர்த்தப்பட்ட ஏனைய மூத்த தளபதிகளாகும். பிரபாகரன் அடிக்கடி இம்முகாம்களுக்குட் விஜயம் செய்வது வழமை. தனது விஜயங்களின்பொழுது ஆயுதப்பாவனை மற்றும் ஆயுதங்களைப் பராமரித்தல் தொடர்பாக போராளிகளுடன் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். கைத்துப்பாக்கியை இலாவகமாக இயக்குவதில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்த பிரபாகரனின் திறமையினை போராளிகள் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் என்றும் அறியப்பட்டிருந்தது. முகாம்களின் ஒட்டுமொத்த கண்காணிப்பினை நாயிக் என்கிற இந்திய அதிகாரியொருவரின் பொறுப்பில் பிரபாகரன் கையளித்திருந்தார். எம்.ஜி.ஆர் இடமிருந்து கிடைத்த பணத்தினைக் கொண்டு 1984 ஆம் ஆண்டு ஆடியில் சிறுமலை முகாமினையும் பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். மேலும், அம்முகாமின் இரு துணை முகாம்களாக திருப்பரங்குன்றம் மற்றும் அழகர் மலை ஆகிய பகுதிகளில் சிறிய முகாம்களை உருவாக்கினார். இவ்விரு இடங்களும் தமிழ்க்கடவுளான முருகனின் ஆறு புனிதத் தலங்களில் இரண்டு என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 1984 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் மூன்றாவது பயிற்சி அணி தனது பயிற்சியினை நிறைவுசெய்துகொண்டு யாழ்ப்பாணத்தின் போர்க்களத்தில் அம்மாத இறுதியில் பிரபாகரனால் இறக்கப்பட்டது. மூன்றாவது அணியின் தலைவராக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய கிட்டு, அப்போது யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த பண்டிதரின் உப-தளபதியாகக் கடமையாற்றினார். பண்டிதர், புலிகளின் அச்சுவேலி முகாமிலிருந்தே இயங்கிவந்தார். மூன்றாவது அணியின் யாழ்வரவுடன் இராணுவத்தினர் மீதான புலிகளின் வலிந்த தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டதுடன், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மக்களையும் நிலங்களையும் விடுவிக்கும் பிரபாகரனின் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நான்காவது பயிற்சியணி சிறுமலை முகாமில் 1984 ஆம் ஆண்டு ஆடியில் இருந்து அவ்வருட இறுதிவரை பயிற்றப்பட்டது. அவ்வருடம் மார்கழி மாதத்தில் அவ்வணியும் யாழ்க்களத்தில் ஏனைய அணிகளுடன் இணைந்துகொண்டது. இவ்வணியின் அறிமுகத்தின் மூலம் யாழ்க்குடாநாட்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 500 ஐத் தொட்டிருந்ததுடன், மேம்படுத்தப்பட்ட ஆளணி எண்ணிக்கையூடாக பொலீஸாரை அவர்களின் நிலையங்களுக்குள்ளும், இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள்ளும் முடக்க புலிகளால் முடிந்தது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும், எம்.ஜி.ஆர் செய்த உதவியும் மற்றைய இயக்கங்களுடன் ஒப்பிடுகையில் அளவில்ச் சிறியதாக இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் புலிகளின் திறன் தொடர்பான சிறப்பான மதிப்பீட்டினைக் கொண்டிருந்தனர். மேலும், பிரபாகரன் மீதும் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்து தமிழ் நாட்டில் இயங்கிவந்த தம்ழிப் போராளி அமைப்புக்களை நான்கு இந்திய உளவு அமைப்புக்கள் கண்காணித்து வந்தன. அவையாவன, 1. இந்திய வெளியக உளவுத்துறையான ரோ 2. இந்திய மத்திய உளவு அமைப்பான சி.பி.ஐ 3. இராணுவ புலநாய்வுத்துறை 4. தமிழ்நாடு உளவுத்துறையான கியூ பிராஞ்ச் இவை அனைத்தினதும் மதிப்பின்படி புலிகள் இயக்கமே அமைப்புக்களில் சிறப்பானது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணமாக புலிகளின் இடையறாத இராணுவச் செயற்பாடுகளும், போராளிகளின் ஒழுக்கமும், கட்டுக்கோப்பும், இலட்சியமான தமிழ் ஈழம் மீதான பற்றும் அமைந்திருந்தன என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு காவல்த்துறையின் புலநாய்வுப் பிரிவிற்கு மலையாளியான மோகன்தாஸ் உதவி ஆணையாளராக அக்காலத்தில் கடமையாற்றி வந்தார். இன்னொரு மலையாளியும், இலங்கையின் கண்டியில் பிறந்தவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான எம்.ஜி.ஆர் உடன் மோகன்தாஸ் மிகவும் நெருங்கிச் செயற்பட்டு வந்தார். எம் ஜி ஆர் உடன் பேசும்போது புலிகள் குறித்து மிகவும் பெருமையாகவும், உயர்வாகவும் மோகன்தாஸ் பேசிவந்திருந்தார். அமைப்புக்கள் அனைத்திற்குள்ளும் புலிகளே மிகவும் திறமையானவர்கள் என்பதே மோகன்தாஸின் கணிப்பாக இருந்தது. தான் ஓய்வுபெற்றதன் பின்னர் எம்.ஜி.ஆர் குறித்து புத்தகம் ஒன்றினை மோகன் தாஸ் எழுதினார் . அப்புத்தகத்தில் புலிகள் பற்றியும், தலைவர் பிரபாகரன் பற்றியும் பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். "புலிகளின் போராளிகள் இலட்சிய உறுதியும், கட்டுக்கோப்பும் கொண்டவர்கள். கவர்ச்சிகரமான வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். ஒவ்வொரு அமைப்பும் தமக்கென்று புலநாய்வுப் பிரிவுகளை வைத்திருக்கின்றபோதிலும், புலிகளின் புலநாய்வு அமைப்பே மிகவும் திறமை வாய்ந்தது". 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை நடைபெற்ற காலத்தில் புலிகள் அமைப்பில் வெறும் 30 போராளிகளே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், புரட்டாதி மாதமளவில் அவ்வெண்ணிக்கை 250 ஐத் தொட்டிருந்தது. அவர்களுள் 200 மூத்த போராளிகளை சிறப்புப் பயிற்சிக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்திற்கு தெரிவுசெய்து அனுப்பிவைத்தார் பிரபாகரன். இந்தியாவினால் வழங்கப்பட்ட பயிற்சித் திட்டத்தில் புலிகள் அமைப்பே இறுதியாக இணைந்தது. 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் 100 பேர் கொண்ட இரு குழுக்களை பிரபாகரன் அனுப்பிவைத்தார். தொலைநோக்குப் பார்வையுடனேயே இதனை அவர் செய்தார். ரோ சார்பாக புலிகள் இயக்கத்தின் பயிற்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்த உயர் அதிகாரி சந்திரசேகரனிடம் இந்தியாவின் பயிற்சித் திட்டம் குறித்து பிரபாகரன் வினவினார். மிகுந்த திறமைசாலிகளான இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும், புதிய போர்த் தந்திரங்களை அவர்கள் போராளிகளுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் சந்திரசேகரன் பதிலளித்தார். மேலும் சிறிய மற்றும் கனரக ஆயுதங்களைப் பாவிப்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வரைபடங்களை படித்து அறிந்துகொள்ளல், கண்ணிவெடிகளை பொருத்தும் பயிற்சிகள், வெடிபொருட்களைக் கையாளும் பயிற்சிகள், தாங்கியெதிர்ப்புப் பயிற்சிகள், விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகள் என்பன புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் அடங்கியிருந்தன. புலிகளுக்கு அவசியமானவை என்று தான் கருதிய பயிற்சி விபரங்கள் குறித்து சந்திரசேகரனிடம் பிரபாகரன் கூறினார். தனது உடனடிக் கவலை இராணுவத்தினரின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களைக் காப்பதுதான் என்று அவர் சந்திரசேகரனிடம் தெரிவித்தார். " இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி முடக்கவேண்டும்" என்று பிரபாகரன் தெரிவித்தார். சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவித்து, சுதந்திரமான தனிநாடான தமிழ் ஈழத்தை உருவாக்கும் வகையில் தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதே பிரபாகரனின் நோக்கமாக இருந்தது. 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி தனது 21 ஆவது வயதில் தனது அமைப்பிற்கான யாப்பினை அவர் வரைந்தார். அதன்படி தது அமைப்பின் நோக்கங்களை பின்வருமாறு அவர் குறிப்பிட்டிருந்தார், முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம் இறைமையுள்ள, சோசலிச ஜனநாயக மக்கள் ஆட்சியை ஏற்படுத்துதல். சாதி வேற்றுமைகள் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் முற்றாகக் களைதல். சோசலிச முறையில் அமையப்பெற்ற உற்பத்திச் செயற்பாடுகளை உருவாக்குதல். விடுதலைக்கான அரசியல் போராட்டத்தினை இராணுவப் போராட்டமாக மாற்றுதல். கெரில்லா போர்முறையில் ஆரம்பிக்கப்பட்டு ஈற்றில் மக்கள் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தை மாற்றுதல். என்பனவே அவையாகும். புலிகள் இராணுவச் செயற்பாடுகளை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்தார்.அவையாவன, 1. பொலீஸ் புலநாய்வு வலையமைப்பையும், அவர்களுக்கு உளவுபார்க்கும் துரோகிகளையும் அழித்தல். 2. சிங்கள அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்குதல். 3. இராணுவ முகாம்களை அழிப்பதன் மூலம், இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளை மீட்டெடுப்பதன் ஊடாக அப்பகுதிகளில் புலிகளின் நிர்வாகத்தை ஏற்படுத்தி தமிழீழத்திற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை நிறுவிக் கொள்ளல். இந்தியாவினால் வழங்கப்படும் பயிற்சிகுறித்து பிரபாகரன் தீர்க்கமான கொள்கையினைக் கொண்டிருந்தார். அதாவது, தனது கெரில்லா இராணுவத்தை தேசிய விடுதலை இராணுவமாக மாற்றக்கூடியவகையில் அப்பயிற்சி அமையவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். தனது கொள்கையின்படியே இந்தியப் பயிற்சியும் அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, இந்திய அதிகாரிகளிடம் தனது அமைப்பிற்கான பயிற்சித் தேவைகள் குறித்துப் பேசும்போது தனது கொள்கையின்படி அவை அமையவேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். ஏற்கனவே கண்ணிவெடித் தாக்குதல்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த புலிகளின் போராளிகளுக்கு கண்ணிவெடிகளை உருவாக்குவது, வீதிகளிலும், பாலங்களிலும் அவற்றினை சாதுரியமாகப் பொருத்துவது, வெடிபொருட்களைக் கையாள்வது ஆகிய பயிற்சிகளை இந்திய அதிகாரிகள் வழங்கினர். இந்தப் பயிற்சிகளை மிகவும் வெற்றிகரமாகப் பாவித்த பிரபாகரன், 1985 களின் நடுப்பகுதிகளில் இராணுவத்தினரினதும் பொலீஸாரினதும் நடமாட்டங்களை முற்றாக நிறுத்தி அவர்களை முகாம்களுக்குள் முடக்கிவிடுவதில் வெற்றிகண்டார். புலிகளின் பெண்போராளிகள் புலிகளின் அறிவையும், நுட்பத்தையும் இந்தியப் பயிற்சிகள் மேலும் மெருகூட்டின. அவை புலிகளது இராணுவ வல்லமையினையும், திறனையும் அதிகரித்தன. ஆனாலும், இந்தியாவினால் புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டவை. புலிகளின் 200 போராளிகளை மட்டுமே இந்தியா பயிற்சியளித்தது. புலிகளுக்கான பயிற்சிகளின்போது பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் அக்காலத்திற்குப் பொருத்தமற்றவையாகக் காணப்பட்டன. புலிகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் மிகவும் பழமையானவை. தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தனது அமைப்பின் போராளிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதும், நவீன ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதும் அவசியம் என்று பிரபாகரன் கருதினார். குறைந்தது 1000 போராளிகளும் நவீன ஆயுதங்களும் அவருக்குத் தேவைப்பட்டது. அதற்குப் பெருமளவு பணம் தேவைப்படும். ஆனால், அப்போது அவரிடம் அதற்கான பணம் இருக்கவில்லை. அக்காலத்தில் நாளாந்தச் செலவுகளைப் பராமரிப்பதே அவருக்குக் கடிணமாகத் தெரிந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டு சித்திரையில் பிரபாகரனுக்கு ஒரு தங்கப் புதையல் கிடைத்தது. எம் ஜி ஆர் மூலமாக அவர் எதிர்பார்த்த உதவி வந்து சேர்ந்தது. எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தினைக் கொண்டு புதிய பயிற்சி முகாம்களையும், அமைப்பிற்கான புதிய போராளிகளையும் அவரால் இணைத்துக்கொள்ள முடிந்ததுடன், தனது அரசியல் வலையமைப்பையும் அவரால் விஸ்த்தரிக்க முடிந்தது.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரன் இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி போராளிகளைப்பொறுத்தவரையில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் இதன்மூலம் பெருமளவு இலாபமடைந்தன. தம்முடன் இணைந்துகொள்ள வந்த அனைவரையும் அவர்கள் உள்வாங்கிக்கொண்டனர். இணைந்துகொண்டவர்களின் தரம், இலட்சியத்தின் மீதான உறுதிப்பாடு குறித்து அவர்கள் கவனம் எடுக்கவில்லை. அவர்களுக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் தாமே மிகவும் பெரியதும், செல்வாக்குக் கொண்டதுமான போராளி அமைப்பு என்று இந்தியாவுக்குக் காட்டுவது மட்டும் தான். போராளிகளை அமைப்பில் இணைக்கும்போது அவர்கள் கைக்கொண்ட தேர்வு முறையே அவர்களின் வீழ்ச்சிக்குப் பிரதானமான காரணமாக அமைந்தது. ஒழுக்கச் சீர்கேடுகளும் இயக்க உள்முரண்பாடுகளும், போட்டிகளும் இவ்வமைப்புக்களுக்குள் தலைவிரித்து ஆடத்தொடங்கின. ஆனால் பிரபாகரனோ தனது அமைப்பில் இணைய விரும்பிய இளைஞர்கள் குறித்து மிகுந்த அவதானமும், அவர்கள் குறித்த சரியான கணிப்பீட்டினையும் கொண்டிருந்தார். இணைந்துகொள்ள விரும்பிய போராளிகள் ஒவ்வொருவரையும் தானே தேர்ந்தெடுத்தார். கட்டுப்பாடும், கண்ணியமும், இலட்சிய உறுதியும் ஒவ்வொருவரிடமிருந்தும் கண்டிப்பாக அவரால் எதிர்பார்க்கப்பட்டது. தன்னால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, உணவளிக்கக் கூடிய அளவிலான போராளிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார். 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய அமைப்பாகக் காணப்பட்டது. ஏனைய அமைப்புக்களின் திடீர் எண்ணிக்கைப் பெருக்கம் குறித்து அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு தரமான இராணுவ அமைப்பு திட்டமிட்ட ரீதியிலேயே பரிணாம வளர்ச்சி அடையவேண்டும் என்பதில் பிரபாகரன் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் என்று அன்டன் பாலசிங்கம் போரும் சமாதானமும் என்று தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். "அமைப்புக்களின் அசாதாரணமான எண்ணிக்கை வீக்கம் பல்வேறான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, ஈற்றில் அவ்வமைப்பின் அழ்விற்கும் காரணமாக அமைந்துவிடும் என்று அவர் கருதினார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழ் ஈழத்திற்கான அடிப்படைகளை நிறுவுதல் 1984 ஆம் ஆண்டென்பது பிரபாகரனைப் பொறுத்தவரையிலும், போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்த வருடத்திலேயே தாக்கிவிட்டுத் தப்பியோடும் கெரில்லாப் பாணியிலிருந்து ஒரு இடத்தில் நின்று சண்டைபிடித்து அப்பகுதியைத் தக்கவைக்கும் போர்முறைக்கும் அவர் தனது அமைப்பினை மாற்றியிருந்தார். மேலும், தனது அமைப்பினை தேசிய விடுதலை இராணுவம் எனும் நிலைக்கும் மேம்படுத்தியிருந்தார். அவ்வருடத்திலேயே ஒரு தனிநாட்டிற்கான கட்டமைப்புகளான நிர்வாகம், வரி, சட்டம் ஒழுங்கு உட்பட பல நடைமுறைகளையும் அவர் உருவாக்கத் தொடங்கியிருந்தார். ஒரு தனிநாட்டிற்கான அடிப்படைகளை நிறுவிக்கொள்ளவும், தேசிய விடுதலை இராணுவமாக புலிகளைக் கட்டியெழுப்பவும் பிரபாகரனுக்கு மூன்று விடயங்கள் உதவியிருந்தன. முதலாவதும் மிக முக்கியமானதுமான காரணம் தமிழ் மக்கள் ஒரு இனமாக அவரின் பின்னால் அணிதிரண்டது. ஜெயவர்த்தனவும், போராளிகளின் துணிச்சலான இராணுவச் செயற்பாடுகளும் இவ்விடயத்தில் அவருக்கு உதவியிருந்தன. 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையும், தமிழ் மக்கள் மீது ஜெயாரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட பழிவங்கும் தாக்குதல்களும் தமிழ் மக்களைப் பிரபாகரனை நோக்கித் தள்ளிவிட்டிருந்தன. இராணுவத்தினர் மீதான புலிகளின் திருப்பியடிக்கும் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மனங்களில் பிரபாகரனுக்கு அழியாத இடத்தினை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன. எம்.ஜி.ஆர் உடன் பிரபாகரனும் கேணல் சங்கரும் - 1980 களின் நடுப்பகுதியில் இரண்டாவது மூன்றாவது காரணங்களும்ம் ஏறக்குறைய அதேயளவு முக்கியமானவைதான். அவையாவன, இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் மற்றும் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இனால் பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தின்மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களும். தம்மீதான 83 ஆம் ஆண்டுப் படுகொலைகள் தமிழ் மக்களின் சுய கெளரவத்தினை வெகுவாகப் பாதித்திருந்ததுடன், அவர்களின் உணர்வுகளையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டிருந்தது. பெருமளவு தமிழ் இளைஞர்கள், குறிப்பாக சிங்களப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள், ஐந்து பெரிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்துகொண்டதுடன், சிங்கள தேசத்திற்கும், ஜெயாரின் அரசிற்கும் எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்பி முன்வந்தனர். பெருமளவு இளைஞர்கள் தமது அமைப்புக்களில் இணைந்துகொண்ட போதிலும் ஆரம்பத்தில் இவ்வமைப்புக்களிடம் குறிப்பிடத் தக்களவு ஆயுத தளபாடங்களோ அல்லது தேவையான வசதிகளோ இருக்கவில்லை. "எம்முடன் வந்து இணைவோரைத் தங்கவைப்பதற்கான வசதிகள் கூட எம்மிடம் இருக்கவில்லை. அவர்களுக்கு உணவளிக்கத் தன்னும் எம்மிடம் போதியளவு பணம் இருக்கவில்லை" என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருந்தார். .1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointமுல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினச் சுத்திகரிப்பு கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களும், கொக்கிளாய் நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களும் முல்லைத்தீவு மாவட்டம் மீது அரசினதும் மக்களினதும் கவனத்தை ஈர்ந்திருந்தது. இத்தாக்குதல்களில் 120 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இதற்குப் பழிவாங்கலாக இராணுவமும் சிங்களக் குடியேற்றக்காரர்களும் நடத்திய பழிவாங்கல்த் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு தென்னமரவாடி, அமரவயல் ஆகிய புராதனத் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழ்மக்கள் நிரந்தரமாகவே சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்கள் மீதான பழிவாங்கல்ப் படுகொலைகள் மார்கழி மாதத்திலும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டன. போராளி அமைப்புக்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகி வவுனியா இராணுவ முகாமில் அடைக்கப்பட்டிருந்த 21 தமிழ் இளைஞர்களை மார்கழி 1 ஆம் திகதி வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றது இராணுவம். இராணுவக் காவலில் இருந்து தப்பிச் செல்ல எத்தனித்தபோதே தாம் அவர்களைக் கொன்றதாக இராணுவப் பேச்சாளர் கூறினார். இதற்கு மேலதிகமாக டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளுக்கு அருகில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த 12 இளைஞர்களையும் இராணுவம் சுட்டுக் கொன்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒதியாமலை எனும் புராதனத் தமிழ்க் கிராமத்திற்கு மார்கழி முதாலாம் திகதி இரவு சென்ற 35 இலிருந்து 40 பேர் அடங்கிய பதவிய இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் , மலைக்காடு கோவில்ப் பகுதியில் அன்றிரவைக் கழித்து, பொழுது புலரும் வேளையில் ஒதியாமலைக் கிராமத்தைச் சுற்றிவளைத்துக்கொண்டனர். பின்னர் வீடு வீடாகச் சென்று 15 வயது முதல் 35 வயதுவரையான ஆண்களைக் கைதுசெய்தனர். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டில் இளைஞர்களைக் கைதுசெய்தபோது அவர்களது குடும்பங்களின் முன்னிலையிலேயே அவர்களைக் கடுமையாகத் தாக்கத்தொடங்கியிருக்கின்றனர் இராணுவத்தினர். பின்னர் அவ்விளைஞர்கள், கைகள் பின்னால் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் சிலரை 25 சிறீ 6511 எனும் இலக்கத் தகடு உடைய உழவு இயந்திரத்தில் ஏற்றி கிராமத்தின் சனசமூக நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் இராணுவத்தினர். இவ்விளைஞர்களுடன் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆண்களையும் இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் 27 பேர் மிகக்கடுமையான சித்திரவதைகளை அனுபவித்ததுள்ளதோடு இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகவும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் வரிசையில் நிற்கவைக்கப்பட்டு மிகக் கிட்டத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே உழவு இயந்திரத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களை ஏற்றிய இராணுவத்தினர் கிராமத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று தீமூட்டியிருக்கின்றனர். மீதமாயிருந்த ஐந்து 60 வயது ஆண்களினதும் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் டொலர் பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. பாதி எரிந்த் நிலையிலிருந்த சடலங்களில் காணப்பட்ட ஆடைகளைக் கொண்டே கொல்லப்பட்டவர்கள் ஒதியாமலையில் இருந்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்பது தெரியவந்திருந்தது. இக்கிராமத்திலிருந்து அன்று மட்டும் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்ட குறைந்தது 32 ஆண்களின் விபரங்களை சர்வதேச மன்னிப்புச் சபையிடம் உறவினர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒதியாமலையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய படுகொலைகள் புலிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை. மார்கழி 4 ஆம் திகதி பதவியா பகுதியில் இராணுவத்தினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை புலிகள் நடத்தினர். இத்தாக்குதலில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்ட, பழிவாங்கும் தாக்குதல்களில் இறங்கிய இராணுவத்தினர் அப்பகுதியில் வசித்து வந்த குறைந்தது 90 தமிழர்களை அன்று சுட்டுப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும், சிறுவர்களும் முதியவர்களும் அடங்கும். காமிணி திசாநாயக்க மாதுரு ஓயாவில் தான் நடத்த முயன்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தின் தோல்வியையடுத்து தனது நேரம் வரும்வரை காத்திருந்த காமிணி, தனக்கான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருப்பதாக எண்ணினார். நிவிட்டிகலையில் மார்கழி 3 ஆம் திகதி, பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர் நாட்டின் ஒற்றையாட்சி யாப்பினைக் காத்துக்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் நேரம் வந்துவிட்டதாக அவர் அறைகூவல் விடுத்தார். "நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும், பயங்கரவாதிகளிடமிருந்து இந்த நாட்டைக் காக்க வரும்படி அரசிடம் இருந்து அழைப்பு வந்தால், தமது கைகளில் கிடைக்கும் எந்தவொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு சண்டைக்குச் செல்லத் தயாராக இருக்கவேண்டும் . அந்த ஆயுதம் கத்தியாகவோ, மண்வெட்டியாகவோ அல்லது இரும்புப் பொல்லாகவோ கூட இருக்கலாம். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை பாதுகாக்கப்பட்டாலன்றி இந்த நாட்டையும் மக்களையும் காப்பதென்பது சாத்தியமாகாது" என்று கூறினார். காமிணியின் புதிய அவதாரத்தால் தான் பிந்தள்ளிவிடக்கூடாது என்று அஞ்சிய லலித் அதுலத் முதலி, போராளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். மார்கழி 8 ஆம் திகதி வட மாகாணம் முழுவதையும் 42 மணிநேர ஊரடங்குச் சட்டத்திற்குள் கொண்டுவந்து , அப்பகுதியெங்கும் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையினை அவர் ஆரம்பித்தார். கிராமம் கீராமமாக சுற்றிவளைத்த இராணுவத்தினரும் பொலீஸாரும், வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பல இளைஞர்கள் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகளுக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மொத்தமாக 3,000 இளைஞர்கள் சுற்றிவளைக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டதுடன் இவர்களுள் 800 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். தேடுதல் நடவடிக்கைகளின்போது பத்து இளைஞர்களை இராணுவம் கொன்றிருந்தது என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழுவின் அறிக்கை கூறியது. தமிழர்களுக்கெதிரான உணர்வுகள் சிங்களப் பகுதிகளில் மீண்டும் மூர்க்கமாகத் தூண்டிவிடப்பட்டது. இரத்திணபுரியில் இயங்கிவந்த தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளைச் சிங்களவர்கள் எரித்தனர். ஹட்டன் நகரிலும் இரு தமிழ்க் கடைகள் எரியூட்டப்பட்டன. மலையகத்தின் பல நகரங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், பெருமளவிலானவர்கள் அச்சுருத்தலுக்கு உள்ளாகினர். கறுப்பு நீல நிறங்களில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் திருகோணமலை நகரில் தோன்றியிருந்தன. "தமிழ் ஈழம் கேட்பவர்கள் துரோகிகள்" என்று ஒரு சுவரொட்டி கூறியது. "அனைத்துத் துரோகிகளையும் திருகோணமலையினை விட்டுத் துரத்துவோம்" என்று இன்னொரு சுவரொட்டி கூறியது. "சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வேலைபார்க்க முடியாது என்றால், தமிழர்கள் திருகோணமலையில் வேலை பார்ப்பது எப்படி?" என்று கேள்வியெழுப்பியது இன்னொரு சுவரொட்டி. வலி ஓயாவிலிருந்து தமிழர்களை இனச்சுத்திகரிப்புச் செய்துவந்த அதேவேளை, தமிழர்கள் மீதான படுகொலைகளும் அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. மார்கழி 6 ஆம் திகதி தமிழரின் பூர்வீகக் கிராமமான திரியாயில் 24 மணிநேர ஊரடங்கினை இராணுவம் அமுல்ப்படுத்தியது.அக்கிராமத்தில் வசித்து வந்த 1399 குடும்பங்களையும் விளையாட்டு மைதானம் ஒன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் இராணுவம் அறிவித்தது. இராணுவ அறிவிப்பை ஏற்று மைதானத்தில் கூடிய பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலை இராணுவம் மேற்கொண்டது. கடுங்காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதேவகையான தாக்குதல்கள் வேறு தமிழ்க் கிராமங்களிலும் நடைபெற்றன. பெரியகுளத்தில் 20 இளைஞர்களைக் கைதுசெய்த இராணுவம் அவர்களை வீதியோரத்தில் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. 1984 ஆம் ஆண்டு மார்கழி முதல் 1985 ஆம் ஆண்டு தை வரையான காலப்பகுதியில் பின்வரும் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டனர். கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கணுக்கேணி, உத்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, செம்மலை, தண்ணிமுறிப்பு மற்றும் அளம்பில். போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலும் அரசாங்கம் தொடர்ந்து நடத்தி வந்தது. மார்கழி 12 ஆம் திகதி செய்தியாளருக்கு செவ்வியளித்த அரச பேச்சாளர், யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குச் சற்று வெளியே அமைந்திருந்த கைதடிப் பகுதியில் குறைந்தது 200 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகக் கூறினார். ஆனால், கைதுசெய்யப்பட்ட அனைவரும் தனியார் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்களே என்று யாழ்ப்பாணம் பிரஜைகள் குழு அறிவித்திருந்தது. மன்னாரின் ஜீவோதயம் பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாதிரியார் ஜெயராஜசிங்கத்தின் நினைவுத் தூபி 2003 மறுநாள், மார்கழி 13 ஆம் திகதி மெதடிஸ்த்த திருச்சபையினைச் சேர்ந்த பாதிரியார் என்.ஜெயராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டர் வண்டி மன்னாரின் முருங்கன் பகுதியூடாகச் செல்லும்போது இராணுவச் சோதனைச் சாவடியில் மறிக்கப்பட்டது. பின்னர் பாதிரியார் ஜெயராஜசிங்கம், அவரது சாரதி அப்துள் காதர் சுலைமான் மற்றும் முருங்கன் பொலீஸ் நிலையத்தில் கொன்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்த ஜேசுதாசன் ரோச் ஆகிய மூவரினதும் உடல்கள் பாதி எரிந்த நிலையில் பாதிரியாரின் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. ஐந்து நாட்களுக்குப் பின்னர், மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜீப் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த எட்டுப் பொலீசாரும் அவர்களது சாரதியும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர். மறுநாள், மார்கழி 19 ஆம் திகதி இரு அதிகாரிகளும் இரு சிப்பாய்களுமாக நான்கு இராணுவத்தினர் பதவியாவில் கண்ணிவெடியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டனர். பழிவாங்கும் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவம் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. அதேநாள் புல்மோட்டைப் பகுதியில் இரு இராணுவத்தினர்கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் இன்னும் நான்கு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். மார்கழி 8 இலிருந்து 10 வரையான நாட்களில் தான் வட மாகாணத்தில் முடுக்கிவிட்ட தேடுதல் வேட்டை நடவடிக்கைகள் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களை நிறுத்தப் போதுமானவை அல்ல என்பதை உணர்ந்த லலித் இன்னுமொரு தேடுதல் நடவடிக்கையினை மார்கழி 19 ஆம் திகதி ஆரம்பித்தார். இராணுவத்தினரும் பொலீஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் சுமார் ஆயிரம் இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைத்துக் கைதுசெய்யப்பட்டனர். தனது இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமட்டாங்கள் முடக்கப்பட்டு வருகின்றமையினால், தாம் இனிமேல் ரொக்கெட் தாக்குதலிலும், சிறியரக எறிகணைத் தாக்குதல்களிலும், குண்டுவீச்சிலும் ஈடுபடப்போவதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. சண்டை மேலும் விஸ்த்தரிக்கப்பட்டது. பொதுமக்களின் மரணங்கள் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்தன. கார்த்திகை மாதத்தின் இறுதிப்பகுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 400 ஐத் தாண்டியிருந்தது. இராணுவத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த புதியவகைத் தாக்குதல்கள் போராளிகளையும் அத்தாக்குதல்களில் ஈடுபட உந்தியிருந்தது என்று என்னுடன் தனிப்பட்ட ரீதியில் பேசிய சில அதிகாரிகள் தெரிவித்தனர். லண்டனில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் இயன் ஜக் இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்களுக்குச் சென்றுவந்தார். 1984 ஆம் ஆண்டு மார்கழி 16 ஆம் திகதி அவர் எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. "உண்மையாகச் சொல்வதானால், இலங்கை இராணுவம் தனது சொந்த நாட்டிற்குள்ளேயே முற்றுகைக்கு உள்ளக்கப்பட்டு, மண்மூட்டைகளுக்கும், முட்கம்பிகளுக்கும் பின்னால் மறைந்து நடுங்கிக்கொண்டு நிற்கிறது" என்று எழுதினார்.1 point - இலங்கையை வந்தடைந்த அமெரிக்க உளவு விமானம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.