Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 03/17/24 in all areas
-
தம்பி நீ கனடாவோ..?
9 pointsதம்பி நீ கனடாவோ? வருடங்கள் உருண்டு விட்டன வயது போகுமுன் வருவேன் ஊருக்கென்று வாக்குக் கொடுத்தேன் வந்து இறங்கியும் விட்டேன்… வடிவான ஊராகிவிட்டது நம்மூரு.. வலம் இடம் தெரியவில்லை… வடிவான வீடும் ஆட்களும் வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு வாய் நிறைந்த சிரிப்புடன் வணக்கமும் சொன்னேன்.. வந்தார் கந்தையா அண்ணர் வயதும் வட்டுக்கை போயிட்டுது வந்தவுடன் கேட்ட கேள்விதான் வயித்தை கலக்கிப் போட்டுது விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன் கனடாவில் நிக்கிறான் கண்டனியோ… போத்தல் தண்ணி குடித்து தவண்டை அடித்த வாய்க்கு… கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக…. கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா.. ஆறுமுகத்தின்ரை மருமோன் விசிட்டர் விசாவிலை வந்தவர்…. வேலை கீலை ..செய்யிறாரோ…. பொட்டுக்கடை பொன்னையர் வீட்டடியால் போகையில் பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான் அண்ணை ..அண்ணை… அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர் வன்கூவரில்தான் ..இருக்கிறார்… அவர் எப்படி அண்ணை இருக்கிறார்.. பந்தடி வெட்டைக்குப் போகவும் பயமாக்கிடக்கு.. படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும் கூச்சமாக் கிடக்கு பள்ளித் தோழரையும் காணப் போகவும் பயமாக்கிடக்கு.. பலகால ஆசை….சொந்தங்கள் பந்தங்கள் ….காணுகின்ற ஆசை கனடா விசிட்டர் விசாவால். பாதியில் முடிந்ததுவே… ஏனென்று…கேட்பியள் முப்பது வருசம் முந்தி வந்த என்னிடம்.. மூத்தவனின் பேரனைத்தெரியுமோ மருமோனைத் தெரியுமோ வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால் நான் என்ன சொல்லமுடியும்… தம்பி நீ கனடாவோ என்ற கேள்வி வருமுன்… பாதியில் பயணத்தை முடித்துவிட்டேன்..9 points
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும் என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது.5 points
-
என் இந்தியப் பயணம்
4 pointsநான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்4 points
-
மயிலம்மா.
4 pointsமயிலிறகை......... 19. மயிலம்மா வீட்டுப் படுக்கை அறை. கல்யாணக் கலாட்டா எல்லாம் முடிந்து வர நேரமும் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. வாமனும் பொடியலுடன் கொஞ்சம் மதுவும் பாவித்து சாப்பிட்டு விட்டு வந்ததால் அறையில் பால்பழங்கள் எதுவும் அங்கில்லை. புது இடமாய் இருந்த போதிலும் அஞ்சலா கட்டிலில் சிறிதும் அச்சமின்றி அமர்ந்திருக்கிறாள். தலையில் வட்டமாய் கொண்டை போட்டு பின்னலில் சடைநாகமும் குஞ்சமும் வைத்து நிறைய பூக்களால் அலங்காரம் செய்து அனுப்பி இருந்தார்கள். அவள் தனக்குள் இவன் ஒரு தொடை நடுங்கி, இவனால் என்ன பெரிதாய் செய்துவிட முடியும் என்னும் எகத்தாளம் கண்களில் தெரிகின்றது. புத்தம் புது வாலிபனான இவனை நான்தான் சாமர்த்தியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். ஒரேயடியாய் பயப்படுத்தக் கூடாது என்று நினைக்க சிரிப்பும் கூடவே வருகின்றது. அப்போது வாமன் அங்கு நாலுமுழம் வேட்டி கட்டி நாஷனல் சேர்ட்டும் போட்டுகொண்டு கழுத்தில் மைனர் செயினும் கைகளில் மோதிரங்களும் மின்ன உள்ளே வருகிறான். அவன் விதானையல்லவா, இதுநாள்வரை எத்தனை எத்தனையோ பேரின் பொய் மெய் களை அவர்களின் கண்களை பார்த்தே கண்டுபிடித்திருக்கிறான். அதுபோல் அஞ்சலாவின் எண்ண ஓட்டங்களும் அவனுக்குப் புரிகின்றது. மெல்லமாய் நடந்து அவளை நெருங்கி அருகில் நிக்கிறான். அவளும் கொஞ்சம் அரக்கி இருந்து கொண்டு உட்காருடா என்கிறாள். அவனும் அருகில் அமர்கின்றான். அவள் தனக்கு சொல்வதுபோல் அவனுக்கும் சேர்த்து சொல்கிறாள். சே எல்லாம் புஷ்வாணமாய் போச்சுது. எனக்கென்ன தெரியும் அவங்கள் மோட்டார் சைக்கிளுக்காத்தான் அப்படி அலைஞ்சு திரிஞ்சவங்கள் என்று சொல்ல அவனும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப் படிக்கிறது என்பார்கள் அது நிஜமோ பொய்யோ தெரியாது ஆனால் எங்களை பொறுத்தவரை யோகிபாபுவால் தான் நிட்சயிக்கப் பட்டிருக்கு. அதென்னமோ உண்மைதான் என்று அதை அவள் ஆமோதிக்கிறாள். பின் அவன் கையை எடுத்து தன் இடுப்பைச் சுற்றி வைத்துக் கொண்டு மெதுவாக அவன் மார்பில் சாய்கிறாள். அவன் சும்மா இருப்பதைப் பார்த்து என்னடா பயமாய் இருக்கா.....என்னிடம் என்னடா பயம் என்கிறாள். அவனும் ....ம்.....கொஞ்சம் என்று சொன்னவன், அப்படியே அவளை சரித்து மடியில் வளர்த்தி கண்களில் காதல் மின்ன உதடுகளில் முத்தமிடுகிறான். அதை அவள் ரசிக்கிறாள்.கண்கள் கிறங்குகின்றன. அவள் சற்றே அசைந்து அவன் கண்களை நோக்க அதில் காதலுடன் காமமும் ஒளிர்கின்றது. கண்களின் வார்த்தைகளை அவள் புரிந்து கொள்ளும் அடுத்த கனத்தில் இருந்து அவன் அவனாக இல்லை. கொதிக்கக் காய்ச்சிய இரும்பு கொல்லனின் அடியில் வளைந்து நெளிந்து வசமாவதுபோல் அவளும் நெகிழ்ந்து மகிழ்ந்து மலர்ந்து நிக்கிறாள்.மேனி துடிதுடித்து மயங்கி முயங்கி நிலைகுலைகிறாள். இதுநாள்வரை கஞ்சனின் பெட்டிக்குள் பணக் கட்டாய் பஞ்சடைத்து இருந்தவள் இப்போது திருவிழாவில் சிறுவனின் கையில் கிடைத்த சில்லறைகள் போல் சிறகடித்துப் பறக்கிறாள். அவள் மேனியில் ஆடைகள் சில இருந்த போதும் அவை தம் கடமையை மறந்து ஒதுங்கி நின்று ஓரங்க நாடகம் பார்க்கின்றன. சென்றி உடைத்து உட்புகுந்த இராணுவத்திடம் பாதுகாவல் அரண்களும் பதுங்கு குழிகளும் சரண்டர் ஆகின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி அணைக்கும் அவனின் வலிமையான கரங்களை அவளின் வளைக்கரங்கள் தடுக்க முயன்று தோற்று மென்மேலும் இறுக்கித் தழுவிக் கொள்கின்றன. செவ்விதழ்கள் செந்தேனாய் சிந்துகின்றன. தேன்துளிகள் தெறிக்கும் இடமெல்லாம் அவன் ஆதரங்களால் மேய்கிறான். கன்னிமலர் காகிதமாய் கசங்கி போகிறது. மதனநீர் ஒழுக மதம் பிடித்து நின்ற பிடி அங்குசத்துக்கு அடங்கிக் கிடக்கின்றது. அன்று அப்படி இருந்த இவன் இன்று எப்படி இப்படி மாறினான். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளை உடலின் இன்பவேதனை மறக்கடிக்க அவளும் அவனுடன் மல்லுக்கட்டிக் களைத்து அவனருகில் அயர்ந்து உறங்கி விடுகிறாள். அடுத்தநாள் பகல் பத்து மணிக்குமேல் எழும்பி கைகளை உயர்த்தி உடம்பு முறித்து கதவு திறந்து வெளியே வருகிறாள். மாருதியின் ஓவியம்போல் தலை நிறைய பூக்களுடன் பொலிவாய் உள்ளே போனவள் இப்பொழுது கன்னங்களும் உதடு முகம் எல்லாம் வீங்கி கண்களும் சுருங்கி அரசியல் கார்ட்டூன் போல் அலங்கோலமாய் இருக்கிறாள்.அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க சந்திரபிம்பமாய் இருந்தவள் சந்திரமுகியாய் வெளியே வருகிறாள்.அந்த அலங்கோலத்திலும் அழகு கொட்டிக் கிடக்கு. மயிலம்மாவும் அவளைக் கண்டு சிநேகமாய்ப் புன்னகைத்து அவளைக் குளக்கரைக்குக் கூட்டிப் போகிறாள்.போகும்போது மறக்காமல் அஞ்சலா மாற்றுவதற்காக்க பூவனத்தின் ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு போகிறாள். பின் சம்பிரதாயமாக என்னம்மா நன்றாகத் தூங்கினாயா என்று கேட்க அவளும் கைகளை உதறி விரல்களை நெட்டி முறித்துக் கொண்டே மயிலம்மாவை நேராகப் பார்க்காமல் எங்கையம்மா உங்களுக்கு பகிடியாய் இருக்கு போல. ஏன் என்ன நடந்தது நேற்றிரவு நடந்த சம்பவத்துக்கு உன்னை கோபித்துக் கொண்டானோ...... அப்படி கோபித்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை என்று தோன்றுகின்றது. அப்போது இருவரும் குளத்தருகில் வந்து விட்டார்கள். இருவரும் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு குறுக்குக் கட்டிக்கொண்டு குளத்துக்குள் இறங்கி முங்கி முங்கி மூழ்கிக் குளித்து மேலே வருகிறார்கள்.அஞ்சலா கல்லில் இருக்க மயிலம்மா ஒரு சவர்காரத்தை எடுத்து அவளுக்கு முதுகு தேய்த்து விட்டு முகத்துக்கு போடுவதற்கு அவளிடம் தருகிறாள். என்ன முதுகெல்லாம் ஒரே கீறலாயிருக்கு. சே....என்ன பையன் அவன் .....அவன் ஒரு மிருகம். பத்து கைகளும் எட்டுக் கால்களுமாய் என்னை எத்தனை இம்சை செய்தான் தெரியுமா. எனக்கென்ன தெரியும், நீ சொன்னால்தான் தெரியும். அன்று என் வீட்டில் தண்ணிப் பம்பு திருத்தும்போது அப்படிப் பயந்தாங் கொள்ளியாய் இருந்தவன்.... மயிலம்மா இடைமறித்து எப்படி "எலிபிடிக்கப் பழகாத பூனை" என்று என்னவோ சொன்னாயே அப்படியா ....ம்....அன்று நான் சொன்னது உங்களுக்கு கேட்டுட்டுது போல......அதேதான் இந்த சில மாதங்களில் இப்படி ஆகியிருக்கிறான்..... என்ன வேகம் ....ஓடுற முயல்களை விரட்டி வேடடையாடும் புலியாய் இருந்தான். அப்போது இல்லாத வெட்கம் இப்போது என்னை ஆட்கொள்ள டேய் வெட்கமாய் இருக்குடா,லைட்டை அணையடா, லைட்டா அணையடா செல்லம் என்று சொல்கிறேன் அவன் கேட்டால்தானே, நீ என் ஸ்வீட் ஹார்ட் அதுதான் ஹார்ட்டை அணைக்கிறேன் ஹார்ட்டாய் அணைகிறேன் என்று இதயத்துக்குள் இதயத்தைப் புகுத்துவது போல் இம்சை செய்தான். இது எப்படி என்று இவர்கள் கதைக்கும் போது தூரத்தே வாமன் வருகிறான். வரும்போது முற்றத்தில் நின்ற பாம்பை கையில் எடுத்து, கையிலும் தோளிலும் ஊரவிட்டுக் கொண்டே அங்கு வருகிறான். ஐயே பாம்போடு வருகிறான் பயமில்லையா என்று அஞ்சலா வினவ... இல்லை அது சின்னனில் இருந்தே அவனோடு நல்ல பழக்கம் ஒன்றும் செய்யாது. சரி இப்ப அவனிடமே கேட்கிறேன் எப்படிடா உனக்குள் இந்த மாற்றம் என்று.....அப்படியே கேட்கவும் செய்கிறாள். வாமன் இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே பாம்பை கீழே விட அது அப்பால் போகின்றது.பின் நாலுமுழ வேட்டியையும் பனியனையும் கழட்டிக் கரையில் வைத்து விட்டு ஜட்டியுடன் குளத்துக்குள் பாய்கிறான். மயிலம்மா நைசாக நழுவி ஆடைகளை அலம்பும் சாக்கில் அப்பால் போகிறாள். நன்றாக முங்கிக் குளித்து மேலே வந்தவனிடம் அஞ்சலாவும் டே நீ இந்த வித்தையெல்லாம் எங்கு கற்றாய் ..... எந்த வித்தை...... தெரியாத மாதிரி கேட்டியென்றால் கல்லெடுத்து அடிச்சுப்போடுவன் சொல்லடா என்கிறாள். இவர்களின் சண்டையை ரசித்தபடியே இவன் என்ன சொல்லித் துலைக்கப் போறானோ என்னும் பதட்டத்தில் மயிலம்மா ஆடைகளை அலம்பிப் பிழிகிறாள்…. ஓ....அதுவா ....சொல்கிறேன் கேள்.....நீ என்னை அன்று அவமதித்தாய் அல்லவா .. சீ ......நான் ஒன்றும் உன்னை அவமதிக்கவில்லை..... இருக்கட்டும், முதலில் நீ என்னைப் பூனையுடன் ஒப்பிட்டதே தவறு..... பெருந்தவறு ..... அதன் பின்தான் நான் கோயில் தேரில் சிலைகளைப் பார்த்தேன்.....கோபுரத்தில் சிற்பங்கள் பார்த்தேன்..... சோலையில் கிளிகளைப் பார்த்தேன்.....மரங்களில் மந்திகளைப் பார்த்தேன்..... பாதையில் நாய்களைப் பார்த்தேன் .......பட்டிகளில் மாடுகள் பார்த்தேன்.... மலர்களில் வண்டுகள் பார்த்தேன்.....சந்து பொந்துகளில் சர்ப்பங்கள் பார்த்தேன்.... இவைகளும் போதாதென்று சரோஜாதேவியைப் பிடித்தேன் படித்தேன் ...... சரோஜாதேவியா ...... என்னடா சொல்கிறாய் , அஞ்சலா கேட்க, மயிலம்மா வியக்கிறாள்..... ஓம்.......சரோஜாதேவியேதான்......கையடக்கமான ஒரு காவியம்.....கலவிக் கலையின் அத்தனை நுணுக்கங்களும் அதில் அடக்கம்..... எல்லாவற்றையும் எனக்குள் ஒத்திகை பார்த்து வைத்துக் கொண்டேன் .....எதிர்காலத்தில் உதவலாம் என்று..... நேற்றிரவு என் பத்தினி நீ எகத்தாளமாய் மெத்தையில் இருந்தாய். புதுப் பெண்ணுக்குரிய வெட்கம் கிஞ்சித்தும் இல்லை உன்னிடம். அது என்னை சூடேற்ற, பார்த்து வைத்திருந்த ஒத்திகை அத்தனையையும் தத்தை உன்னிடம் மெத்தையில் அரங்கேற்றினேன்..... ஓ....அதுவா விசயம் .....நானும் என்னென்னமோ நினைத்துக் கொண்டேன் என்று மயிலம்மாவை ஓரக்கண்ணால் ஒரு நொடி பார்த்து விட்டு சொல்கிறாள்....மயிலம்மாவும் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விடுகிறாள். அது சரி.....நீ எப்படி என்னைப் பத்தினி என்கிறாய். பத்தினிக்கு அர்த்தம் என்னென்று தெரியுமாடா உனக்கு....வட்டிக்காக வட்டிவைத்தி வீட்டில் வெட்டியாய் வாழ்ந்து வந்தவள் நான்.....நான் பத்தினியா..... நீ பத்தினிதான், அதில் என்ன சந்தேகம் உனக்கு.... எப்படி..... இப்படி.....அசோகவனத்தில் ஆண்டு முழுதும் வாழ்ந்த சீதை அக்நியில் குளித்து வந்த பத்தினி..... அக்நியில் பிறந்து ஐவருடன் வாழ்ந்த பாஞ்சாலியும் பத்தினி ..... முனிவன் உருவில் வந்து முயங்கியவனை சாபமிடாமல் சல்லாபித்த அகலிகையும் பத்தினி..... கோவலனை மணந்த கண்ணகியும் பத்தினி..... கணிகையர் குலத்தில் பிறந்தும் அவனோடு மட்டும் வாழ்ந்து பின் தானும் துறவியாகி பெற்ற மகளையும் துறவியாக்கிய மாதவியும் பத்தினி..... படகில் முனிவனுடன் சல்லாபித்து வியாசரைப் பெற்று பின் கன்னியாகி மணமுடித்த சத்யவதியும் பத்தினி.... கணவனின் கருத்துக்கமைய ஆகாயத்தில் சென்ற தேவர்களைக் கூவி அழைத்து குழவிகளைப் பெற்ற குந்திதேவியும் பத்தினி என்றால் என்றால் ..... நீயும் பத்தினியே.....உன்னையும் என்னையும் சேர்த்து மணமுடித்து வைத்து அழகுபார்க்கும் இந்த மயிலம்மாவும் பத்தினிதான். என்றவனைப் கல்லில் இருந்து பாய்ந்து தாவியணைக்கிறாள் அஞ்சலா.... மனதில் இருந்த பாரம் இறங்கிய நிம்மதியில் வாமனின் அறிவை வியந்துகொண்டே பிழிந்த துணிகளை எடுத்துக் கொண்டு பின்னழகு அசைந்து அசைந்து அவனுக்கு நன்றி சொல்ல அன்னம்போல் நடந்து முன்னால் செல்கிறாள் மயிலம்மா.....! சுபம். மது வீட்டுக்கு கேடு.....! யாவும் கற்பனை....! யாழ் அகவை 26 க்காக...... ஆக்கம் சுவி........!4 points
-
என்னோட சாதி..
3 pointsஉண்மை. ஆசாரவாதிகள் அவர்கள் நாட்டில் இருந்து புறப்பட்ட காலத்திலேயே உறைந்துவிட்டவர்கள். சமூக முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் மிகவும் குறுகிக்கொண்டுதான் போகின்றனர். காலம் அவர்களைக் காணாமல் போகச் செய்யும். இரண்டாவது காணொளியில் பவனீசனை உற்சாகமாகப் பேசவைக்கும் அளவிற்குத் தமிழர்களில் முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.3 points
-
என்னோட சாதி..
3 pointsதம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...! நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...! நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..! நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!3 points
-
மணி(யம்)வீடு
2 pointsமணி(யம்)வீடு ——————— வந்து வரைபடம் கீறி வடிவாய்க் கட்டிய வசதியான வீடு ஹோலின் நடுவே குசினி குசினிக்கடுத்து குளியலறை பேசிய படியே பெரியறை எங்கோ சின்னறையானது நீரும் நெருப்பும் மேலும் கீழும் பாரும் இது பழுதாகலாம் யாருமொரு சாத்திரி பார்த்தால் பறவாயில்லை பக்கத்து வீட்டவர் பலமுறை சொன்னார் மூன்று கோடி முழுதாய் முடிந்ததாம் கடைசிமகன் பிரான்சும் கனடா மகளும் கடைமணியத்தார்க்கு கட்டிக்கொடுத்த வீடு குடிபூரல் என்று குடும்பத்தோடு வந்து கூத்தும் கும்மாளம் ஆறறை மேலே ஐந்தறை கீழே வேறறையிரண்டு வெளியில் போறறையெல்லாம் போக்கிடம் தொடுப்பு விளக்குகள் பற்றி விளக்கவே வேண்டாம் ஏறினால் எரியும் இறங்கினால் அணையும் கூறினால் என்ன? குழப்படி வீடு மாதங்கள் மூன்றாய் மகனும் மகளும் கீதங்கள் போட்டு கிடாயையும் போட்டு விருந்துகள் வைத்து மகிழ்ந்தது வீடு கழிந்தன நாட்கள் கடனைக்கட்ட கனடாவும் பிரான்சும் பறந்தன மீண்டும் விளக்குமில்லை விழாவுமில்லை மனையில் மணியம் தனியாய்ப்போனார் கூட்டித்துடைக்க ஆளில்லாமல் கூடைக்கதிரை ஒன்றுக்குள்ளே குசினி லைற்றின் சுவிச்சைத் தேடி களைத்து மனிசன் சோர்ந்து போனார் மூன்று கோடி முடிந்த வீடு முனிவீடாய் மாறிப் போச்சு மணியத்தாரின் தனிமைப்பரப்பு அறைகள் கணக்கில் அகலமாய்ப் போச்சு மணியம் உணர்ந்தார் Money யில் இல்லை மகிழ்ச்சியென்று. வாட்ஸ் அப்பில் வந்தது.2 points
-
மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
அரபு நாடுகளில் அரபுக்காரர்கள் செய்யும் பாலியல் வன்கொடுமைகள் மறைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அப்பாவிகள் தான் மாட்டுப்பட்டு கல்லடி படுகிறார்கள். இதுபற்றி எழுதினால் அது நீட்ட கட்டுரையாகிவிடும்2 points
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
2009 இல் வன்னியில் இவ்வாறு நிவாரணத்தை எதிர்பார்த்துநின்ற வேளை பலநூற்றுக்கணக்கானோரை இலங்கை விமானப்படை குண்டுவீசிக் கொன்றது. இன்று இஸ்ரேல் செய்வது அன்று இலங்கை செய்ததைத்தான். மேற்குக் கரையில் அடாத்தாக இஸ்ரேலியர்களைக் குடியேற்றி அவர்களை இராணுவமயப்படுத்துவது போலவே முல்லைத்தீவில் சிங்களவர்களைக் குடியேற்றி இராணுவமயப்படுத்தி வருகிறோம் என்று 1985 இல் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே கூறியது. இன்று இஸ்ரேலை ஆதரிப்பவர்கள், உண்மையிலேயே தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள். இஸ்ரேலும், இலங்கையும் இனவழிப்பில் இணைந்தே செயற்பட்டு வருகின்றன. புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.2 points
-
அமெரிக்காவில் சாதிக்கும் ஈழத் தமிழன் !!
எனது நீ கொன்ற எதிரி நான் தான் தோழா கவிதைப் புத்தகத்துக்காக, என்னை IBC தமிழ் நிறுவனத்தினர் நேர்காணல் செய்திருந்தனர். சர்மிளா வினோதினி அவர்களின் மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன். நன்றி தியா - காண்டீபன் நன்றி தியா - காண்டீபன்2 points
-
ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு நான் குறிப்பிட்டதுகடந்தகால தமிழர் பற்றிய செய்திகளுக்கு இலங்கைச் செய்தியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றியதே, நான் யாரிடம்? எங்கே? உங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி தெரிவித்தேனென சொல்வது சிவத்தப்பொய் என உங்கள் உரைநடையில் சொல்லலாமா? நான் எழுதியது இலங்கை செய்திகள் பற்றியதே என மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இதில் பச்சைப்பொய் சிவத்தப்பொய் என்று ஒன்றுமில்லை.2 points
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsபுலிகளின் அச்சுவேலி முகாம் சுற்றிவளைப்பும் பண்டிதரின் வீரமரணமும் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் நாள் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது ஜெயார் தனக்கான சந்தர்ப்பம் ஒன்று கனிந்து வந்திருப்பதாக எண்ணினார். ஆகவேதான் அன்றுவரை தான் நடத்துவதாகப் பாசாங்கு செய்து வந்த சர்வ கட்சி மாநாட்டினை முற்றாக மூட்டை கட்டி வைத்துவிட்டு தனது ஒற்றை நோக்கமான இராணுவ ரீதியில் தமிழர்களின் அபிலாஷைகளை அழித்தலை ஆரம்பித்தார். மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாடு ஜெயாரினால் திடீரென்று கலைத்துப் போடப்பட்டது. தனது இராணுவ அதிகாரிகளுடன் பேசிய ஜெயார், உடனடியாக இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு பணித்தார். 1985 ஆம் ஆண்டு தை மாதம் 9 ஆம் திகதி இராணுவம் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது. அச்சுவேலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். காலை புலரும் வேளைக்குச் சற்று முன்னர் அப்பகுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர், முகாமை சுற்றிவளைக்கத் தொடங்கினர்.புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி பண்டிதர், அவரது துணைத் தளபதி கிட்டு மற்றும் இன்னும் சில பிரதான போராளிகள் இம்முகாமில் இருந்தபோதிலும் இராணுவத்தின் ஊடுருவல் குறித்து அறிந்திருக்கவில்லை. லலித் அதுலத் முதலியின் வழிநடத்துதலிலேயே இத்தாக்குதல் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. புலிகளுடன் இருந்து விட்டு பின்னர் இராணுவத்தினரின் உளவாளியாகச் செயற்பட்ட ஒரு நபரை கொழும்பு ஸ்லேவ் ஐலண்ட் பகுதியில் உள்ள தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 7 ஆவது மாடியில் அமைந்திருந்த தனது அலுவலகத்தில் சந்தித்தார் லலித். இந்தச் சந்திப்பிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இந்த உளவாளி விமானத்தில் கொண்டுவரப்பட்டிருந்தார். புலிகளின் முகாம்கள், தலைவர்களின் மறைவிடங்கள், ஆயுதச் சேமிப்புக் கிடங்குகள் குறித்த விடயங்களுடன் நன்கு பரீட்சயமான இந்த முன்னாளப் போராளி அச்சுவேலி முகாம் குறித்த தகவல்களை லலித்திடம் கூறினார். முகாமின் அமைவிடம், பதுங்கு குழிகள், ஆயுதங்கள், அம்முகாமிற்கு அடிக்கடி வந்துபோகும் தளபதிகள் போன்ற விடயங்களை உளவாளியூடாக இராணுவத்தினர் அறிந்துகொண்டனர். இம்முகாமில் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் அடங்கும் என்றும் லலித்திடம் கூறப்பட்டது. ஏ.கே - 47 துப்பாக்கிகள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள், ரைபிள்கள், பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அங்கு சேமிக்கப்பட்டிருந்தன. கிட்டு இராணுவத்தினர் முன்னெடுத்த இத்தாக்குதலின் போது இரு முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய தேவை பண்டிதருக்கு இருந்தது. முகாமிற்கு மிக அருகில் வாழ்ந்துவந்த மூதாட்டி ஒருவர் மற்றும் அவரது இரு புதல்விகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது. இரண்டாவது அங்கிருந்த ஆயுதத் தொகுதியில் ஒரு பகுதியையாவது பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்வது. இப்பணிகளைச் செய்யும் பொறுப்பினை கிட்டுவிடம் கையளித்தார் அவர். இராணுவத்தினரின் தாக்குதலைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் பண்டிதரும் இன்னும் சில முக்கிய போராளிகளும் முகாமின் ஒரு திசையிலிருந்து இராணுவம் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பண்டிதரும் ஏனைய போராளிகளும் தாக்குதல் நடத்திய திசை நோக்கி இராணுவத்தினர் தமது தாக்குதலை ஆரம்பிக்க, கிடைத்த இடைவெளியினைச் சாதகமாகப் பாவித்த கிட்டு அருகிலிருந்த பெண்கள் மூவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியதோடு, ஆயுதங்களில் பெரும்பாலானவற்றையும் வெளியே எடுத்துச் சென்றார். அச்சண்டையில் பண்டிதரும் இன்னும் ஐந்து போராளிகளும் வீரச்சாவை எய்தினர். பண்டிதருடன் இச்சண்டையில் வீரச்சாவடைந்த மற்றைய போராளிகளின் விபரங்கள் : தில்லைச் சந்திரன் (நேரு), நவரட்ணம் (சாமி), தவராஜா (தவம்), சிவேந்திரன் (சிவா) மற்றும் பிரதாபன் (ரவி). பண்டிதர் தனது சிறுபராயத்திலிருந்தே பிரபாகரனின் நெருங்கிய தோழராக இருந்தவர். வல்வெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதரின் இயற்பெயர் ரவீந்திரன் ஆகும். தமிழர்களின் கண்ணியம் குறித்து அவர் அடிக்கடி பேசியும் எழுதியும் வந்ததனால் போராளிகளினால் "பண்டிதர்" என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். ஆங்கிலத்தில் சிறிதளவும் பரீட்சயம் அற்ற பண்டிதர் தனது பேச்சிலும், எழுத்திலும் ஆங்கில வார்த்தைகளைப் பாவிப்பதை முற்றாகத் தவிர்த்து வந்தார். இதனால் பண்டிதர் எனும் செல்லப்பெயரே அவருக்கு இயக்கத்தில் வழங்கப்படலாயிற்று. பண்டிதர், சங்கர் மற்றும் ரகு ஆகிய மூவருமே பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான போராளிகளாக அன்று இருந்தனர். சங்கரும், ரகுவும் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக பணிபுரிய, பண்டிதரோ அரசியற்செயற்ப்பாட்டாளராக பணியாற்றி வந்தார். ஆஸ்த்துமா நோயினால் பெருமளவு அவதிப்பட்டு வந்த பண்டிதர் ஒரு சிறந்த சமையற்காரர். 1981 ஆம் ஆண்டுகளில் வலசரவாக்கம் பகுதியில் அன்டன் பாலசிங்கமும், அடேலும் தங்கியிருந்த வீட்டில் சமையல் வேலைகளை பண்டிதரே கவனித்துக்கொண்டார். விடுதலை வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "மண்ணெண்ணெய் குக்கரில் பண்டிதர் வேர்த்து விறுவிறுக்கச் சமையல் செய்வார்" என்று எழுதுகிறார். பண்டிதரின் கட்டளைக்கேற்ப ரகுவும், சங்கரும் காய்கறிகளை நேர்த்தியாக வெட்டிக் கொடுப்பார்கள் என்றும், அவர்கள் மூவருக்கும் இடையே பண்டிதரே சிறந்த சமையற்காரர் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அவர் கூறுகிறார். தமது இராணுவ நடவடிக்கை வெற்றியளித்ததையிட்டு லலித் அதுலத் முதலியும், இராணுவ உயர் அதிகாரிகளும் பெருத்த உற்சாகத்தில் காணப்பட்டனர். மறுநாளான தை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய லலித், அச்சுவேலியில் அமைந்திருந்த புலிகளின் தலைமைச் செயலகத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அழித்துவிட்டதாக பெருமையுடன் பேசினார். புலிகளுக்கெதிரான போரில் இது ஒரு முக்கிய திருப்பம் என்று கூறிய லலித், இம்முகாமை அழிக்க முன்னாள்ப் போராளி ஒருவரே தகவல் தந்து உதவினார் என்பதையும் சொல்லத் தவறவில்லை. "நான் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டபின்னர் இராணுவத்தினர் நடத்திய மிகப்பெரும் தாக்குதல் இதுதான்" என்று லலித் கூறினார். தீவிரவாதிகளுக்கெதிரான புதிய பாணி ஒன்றினைக் கைக்கொண்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக லலித் கூறினார். பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்கள் தமக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட வழங்கப்படும் தகவல் ஒன்றிற்கு தலா 25000 ரூபாய்களை தான் வழங்கவிருப்பதாகவும் கூறினார். "இராணுவத்தினரின் முன்னகர்வு மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. அப்பகுதியின் புலிகளின் தளபதி உட்பட பல முக்கிய பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதிப்பேர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டனர். பெருமளவு ஆயுதங்களும் அவர்களின் நிலக்கீழ் பதுங்குழியில் இருந்து கைப்பற்றப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார். "தை மாதம் 14 ஆம் திகதி ஒருதலைப் பட்சமாக சுதந்திர ஈழப் பிரகடனம் செய்யக் காத்திருந்த பிரிவினைவாதப் பயங்கரவாதிகளுக்கு இம்முகாம் அழிக்கப்பட்டது பாரிய பின்னடைவினைக் கொடுத்திருக்கிறது" என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால் லலித் குறிப்பிட்ட ஒருதலைப்பட்சமான சுதந்திர ஈழப் பிரகடனத்தைச் செய்யப்போவதாக அறிவித்தது அதிகம் அறியப்படாத சிறிய அமைப்பான பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் நடத்தப்பட்டு வந்த ஈழப் புரட்சிகர கம்மியூனிஸ்ட் கட்சி என்கிற அமைப்பாகும். இக்கட்சியும் தென்னிலங்கையின் ரோகண விஜேவீர தலைமையில் செயற்பட்டு வந்த மக்கள் விடுதலை முன்னணியும் மிக நெருக்கமாக இயங்கி வந்தன. கம்மியூனிஸ்ட் கட்சியின் சண்முகதாசன் பிரிவு எனும் அமைப்பில் இயங்கிய ரோகண விஜேவீர, பின்னர் அதிலிருந்து விலகி மக்கள் விடுதலை முன்னணியினை ஆரம்பித்தார். அதன்போது பாலசுப்ரமணியமும் அவ்வியக்கத்தில் இணைந்துகொண்டார். புலிகளின் முகாம் மீதான இராணுவத்தினரின் வெற்றிகரமான தாக்குதல் தமிழ் மக்களை வருத்தப்படச் செய்திருந்தது. தமிழ் மக்களின் மனநிலையினைப் புரிந்துகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சிவசிதம்பரம் பேசும்போது, "தமிழர்களுக்கு இனிமேல் இந்தியாதான் பாதுகாப்புத் தரவேண்டும்" என்று கோரினார். அச்சுவேலித் தாக்குதலின் வெற்றியினால் களிப்படைந்திருந்த லலித், நாட்டின் 25 மாவட்டங்களினதும் அரச அதிபர்களை வரவழைத்து மாநாடு ஒன்றினை நடத்தினார். தேசிய பாதுகாப்புச் சபை என்று ஒரு அமைப்பினை தான் உருவாக்குவதாக அறிவித்த லலித், இனிமேல் ஒவ்வொரு மாவட்ட அரசாங்க அதிபரும் தமது வழமையான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இராணுவத்தினருடன் இணைந்து தேசியப் பாதுகாப்பில் பங்கெடுப்பதும் அவசியம் என்று அறிவித்தார். மேலும், அரசாங்க அதிபர்கள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் தேசியப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். அரச அதிபர்கள் முன்னிலையில் பேசிய லலித், அச்சுவேலி முகாமிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை இந்தியாவினால் வழங்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் தம்ழிப் பிரிவினைவாதப் போராளிகளுக்கு இந்தியா உதவிவருவது வெட்ட வெளிச்சமாகிறது என்றும் கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த தகவல்களின்படி போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களில் ஈடுபட முயற்சித்து வருகிறார்கள் என்றும் அரச அதிபர்களை எச்சரித்தார். ஆனால், அச்சுவேலிச் சண்டையின் பின்னடைவினால் போராளிகள் சோர்ந்துவிடவில்லை. அவர்கள் பாரிய தாக்குதல்களுக்காக திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். 1985 ஆம் ஆண்டு டெலோ அமைப்பு மிகப்பெரும் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டது. அனறிரவு, தை 19 ஆம் திகதி கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதத்தை டெலோ போராளிகள் முருகண்டியில் வைத்துத் தாக்கினர். இக்குண்டுவெடிப்புத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் இன்னும் 50 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களின் 20 பேரும், காயமடைந்தவர்களில் 25 பேரும் யாழ்ப்பாணத்திலிருந்து விடுமுறைக்காகக் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த இராணுவத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது. இராணுவத்தினர் பயணம் செய்த பெட்டியின் கழிவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நேரம் குறித்து வெடிக்கும் குண்டினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பினால் குடைசாய்ந்த புகையிரதப் பெட்டிகளின் மீது டெலோ போராளிகள் கிர்ணேட்டுக்களை எறிந்தும், துப்பாக்கிகளினாலும் தாக்குதல் நடத்தினார்கள். புகையிரதத் தாக்குதலில் மாட்டிக்கொண்ட இராணுவத்தினரின் உதவிக்கென்று அருகிலிருந்த மாங்குளம் முகாமிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்த இராணுவ அணிமீதும் டெலோ போராளிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. கிளிநொச்சியிலிருந்து முருகண்டி நோக்கி முன்னேற முயன்ற பொலீஸ் அணியும் போராளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. புகையிரதத் தாக்குதலினால் கொதிப்படைந்த அரசாங்கம் வடக்குக் கிழக்கிலும், கொழும்பிலும் சந்தேகத்திற்கிடமான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்யுமாறு இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொழும்பில் மட்டும் 4,000 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஒருநாளில் மட்டும் 200 புலிச் சந்தேக நபர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக பொலீஸார் அறிவித்தனர். இச்சுற்றிவளைப்பு மற்றும் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் இராணுவத்தினரும் பொலீஸாருடன் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.தை 25 ஆம் திகதி நான்கு தமிழ் இளைஞர்களை மட்டக்களப்பில் பொலீஸார் சுட்டுக் கொன்றதுடன், மாசி 4 ஆம் திகதி மேலும் 6 இளைஞர்கள் திருகோணமலையில் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அச்சுவேலிச் சண்டையின் வெற்றியும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டமையும் பயங்கரவாதம் அழிக்கப்படவேண்டும் என்று ஜெயாரைப் பேச வைத்தது. மாசி 4 ஆம் திகதி சுதந்திர தினமன்று நாட்டு மக்களுக்குப் பேசிய ஜெயார், "பயங்கரவாதிகளை நாம் முற்றாக அழித்து அனைத்து இன மக்களும் சமாதானமாகவும், சமமாகவும், ஒற்றுமையாகவும் வாழும் நிலையினை உருவாக்குவோம்" என்று பறைசாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியற் பிரிவு, இந்தியா பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகச் சாடியது. அச்சுவேலி முகாமில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும், இராணுவத்தினரின் மீதான தாக்குதல்களின்போது போராளிகள் பாவிக்கும் ஆயுதங்களும் இந்தியா போராளிகளின் நடவடிக்கைகளின் பின்னால் நிற்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் சாடியிருந்தது.2 points -
தம்பி நீ கனடாவோ..?
1 pointஜேர்மனியில வேலைவாய்ப்பு அது இது எண்டு சகல வசதிகளும் இருந்து ஒருத்தனும் வாறானுகள் இல்ல....ஒரே கனடா புராணம் ஏனெண்டு தெரியேல்லை? 😂 ⫷⫸⫷⫸⫷⫸⫺⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸ தமிழக உறவுகள் மற்றும் தெலுங்கு கன்னட மலையாள மக்கள் யேர்மனியில் இருக்கும் வாய்ப்புகளை நன்றாகவே அறுவடை செய்கின்றார்கள். தமிழ் பாடசாலைகளில் தமிழக உறவுகளின் பிள்ளைகளின் பெரும்பான்மையை பார்க்க பிரமிப்பாக இருக்கின்றது. கோவில்களில் தமிழக உறவுகளின் அன்னதானங்களையும் ஆனந்தங்களையும் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது.1 point
-
தம்பி நீ கனடாவோ..?
1 pointஉங்களுக்குத் தெரியுமோ..அப்ப ஒருகாலத்திலை.வடமராட்சிப் பகுதியிலை..எந்த ஒரு ஒழுங்கையில் நின்று வாத்தியார் என்று கூப்பிட்டாலும்...ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஓம் என்று குரல் கேட்குமாம்...இப்ப ..கனடாத் தம்பி என்றால் .. அதே நிலைதான்....இது வளர்ச்சி அய்யா...நக்கல் அல்ல...ஏனெனில் என்வீட்டிலே 3 வந்தாச்சு...இன்னும் 2 வெயிட்டிங்...😎.. நன்றி வரவுக்கு நூடில்ஸ் ஆவது நோகாமல் இருக்குக் ..இது கொத்துரொட்டி அய்யா... நன்றி வரவுக்கு நன்றி உங்கள் ரசனைக்கும் ...அனுதாபத்திற்கும்1 point
-
மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
இப்படியான காம அகோரம் கொண்டவர்களுக்கு வரும் காலத்தில் பாலியல் உணர்ச்சியே வரக்கூடாத அளவிற்கு நாடி நரம்புகளை அறுத்து விட வேண்டும். இப்படியான தண்டனைகளை 100 பேருக்கு கொடுக்க நாடே திருந்திவிடும்.1 point
-
மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
பலவீனமானவர்களை தங்கள் தேவைக்குப் பாவிக்கும் அயோக்கிய மிருகங்கள் ஒழிக்கப்பட வேண்டும். 😡1 point
-
தம்பி நீ கனடாவோ..?
1 pointபுலத்துக்குப் போன புலம் பெயர்ந்தவரின் நிலையை அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.......! 😁 நன்றி அல்வாயன் ...... நல்ல கவிதை......!1 point
-
என்னோட சாதி..
1 pointபவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு: சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார். சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார். ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி. -------- மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை. முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும் அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள், சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால் நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள் இயங்கவே முடியாது. என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும். வேறெதுவும் சொல்வதற்கில்லை.1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointகொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல் அச்சுவேலியில் அமைந்திருந்த தமது முகாமை இராணுவத்தினர் தாக்கியமைக்குப் பழிவாங்கலாக இராணுவத்தினரின் நன்கு பலப்படுத்தப்பட்டிருந்த முகாம் ஒன்றினைத் தாக்க புலிகள் முடிவெடுத்தனர். மாசி மாதம் 13 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது இராணுவச் சீருடையில் வந்த சுமார் 100 புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைக்கப்பட்டுவந்த சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பதற்கென்று அரசாங்கத்தால் இவ்வருட ஆரம்பத்திலேயே இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. காலை புலரும் முன்னர் மாத்தையா தலைமையில் முகாமைச் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகள் சிறுது சிறிதாக முகாமை அண்மித்து நிலையெடுத்துக்கொண்டனர். முகாமின் காப்பரண் ஒன்றில் கடமையிலிருந்த இராணுவத்தினன் ஒருவன் முகாமிற்கு அருகில் நிலையெடுத்திருந்த புலிகளைக் கண்டவுடன் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். தமது இருப்புத் தெரியவந்ததையடுத்து வேறு வழியின்றி புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள், இயந்திரத் துப்பாக்கிகள் கொண்டு புலிகள் தாக்கினார்கள். தமது இராணுவத்தினன் ஒருவனின் முயற்சியால் சுதாரித்துக்கொண்ட முகாமினுள் இருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக நிலையெடுத்து திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். சுமார் 5 மணிநேரம் கடுமையாக நடைபெற்ற சண்டையினையடுத்து புலிகள் பின்வாங்க முடிவெடுத்தார்கள். இச்சண்டையில் புலிகளில் 14 பேரைத் தாம் கொன்றுவிட்டதாகவும் தம்மில் 4 இராணுவத்தினர் பலியானதாகவும் அரசாங்கம் அறிவித்தது. சென்னையில் இயங்கிவந்த புலிகளின் அரசியற் பணிமனை வெளியிட்ட அறிக்கையில் 106 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 16 போராளிகள் வீரமரணம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. போரில் எதிரிகளின் இழப்பினை அதிகமாகக் காட்டுவதும், தம்பக்க இழப்புக்களை குறைத்துக் காட்டுவதும் காலம் காலமாக போரில் ஈடுபடுபவர்கள் செய்துவரும் ஒரு செயல். இச்செயலுக்கு இலங்கை இராணுவமோ அல்லது தமிழ்ப் போராளிகளோ விதிவிலக்கல்ல. போரில் கொல்லப்படும் தமது போராளிகளின் விபரங்களை அப்படியே வெளியிடுவது என்பது புலிகளின் கொள்கை. கொல்லப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் என்று அனைத்து விடயங்களும் புலிகளால் காலக்கிரமமாக வெளியிடப்பட்டே வந்தன. ஆனால், இராணுவத்தின் இழப்புக்களை அதிகரித்துக் காட்டும் நடைமுறை புலிகளுக்கும் இருந்தது. ஆனால், இராணுவமோ சர்வதேச நடைமுறையான எதிரியின் இழப்புக்களைப் பன்மடங்கு அதிகரித்தும், தன்பக்க இழப்புக்களை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டும் செய்தி வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. புலிகளால் 106 இராணுவத்தினர் கொக்கிளாயில் கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தி தமிழ் மக்களை உற்சாகப்படுத்தியிருந்தது. கொக்கிளாயில் நன்கு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அரசாங்கம், முப்படைகளின் தளபதிகள், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜயவர்த்தன ஆகியோருடன் கொக்கிளாய் இராணுவ முகாம் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தது. ஒவ்வொரு திங்கள் காலையிலும் தேசிய பாதுகாப்புச் சபை கூடுவது வழமை. ஜெயாரே அதற்குத் தலைமை தாங்குவார். இச்சபையின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித், ஜனாதிபதியின் ஆலோசகர் ரவி, முப்படைகளின் தளபதிகள், பொலீஸ் மா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அங்கம் வகித்தனர். கொல்லப்பட்ட புலிகளின் உடல்களையும் அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் ரவி ஜயவர்த்தனவும், முப்படைகளின் தளபதிகளும் பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். கொல்லப்பட்ட போராளிகள் இராணுவச் சீருடையில் காணப்பட்டதோடு அவர்களிடம் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், மருந்துவகைகள் என்பன காணப்பட்டன. இரவு நேரத்தில் பார்க்கும் உபகரணங்கள், ஏ.கே - 47 மற்றும் எம் - 16 ரக நவீன துப்பாக்கிகளும், கிர்ணேட்டுக்களும் அவர்களிடம் இருந்தன. கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகளை பின்வாங்கிய புலிகள் தம்முடன் எடுத்துச் சென்றிருந்தனர். பாதுகாப்புச் சபைக்கு இத்தாக்குதல் தொடர்பாக ரவி ஜயவர்த்தன வழங்கிய அறிக்கையில் கொக்கிளாய்த் தாக்குதலின் மூலம் இனப்பிரச்சினை முழு அளவிலான போராக உருமாறியிருப்பது தெளிவாகிறது என்று குறிப்பிட்டிருந்தார். நவீன ஆயுதங்களுடன் போரிடும் எதிரியை எதிர்கொள்வதற்கு இராணுவமும் தயார்ப்படுத்தப்படுவது அவசியம் என்று அவர் கூறியிருந்தார். சண் பத்திரிக்கை இத்தாக்குதல் குறித்து பின்வருமாறு எழுதியது, இது இன்னொரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. இராணுவத்தினரின் மீது கிர்ணேட்டுக்கள், மோட்டார் எறிகணைகள், ரொக்கெட் உந்துகணைகள், தாக்குதல்த் துப்பாக்கிகள் கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். பாதுகாப்புப் படைகளுடன் நேருக்கு நேராகப் பயங்கரவாதிகள் மோதிக்கொண்டது இதுவே முதல்முறையாகும். இரு நாட்களுக்கு முன்னரும் காரைநகர் கடற்படை முகாம் மீதும், வல்வெட்டித்துறை, குருநகர், நெல்லியடி மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த இராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்போது முதன்முறையாக ஒரு இராணுவ முகாம் மீது நேரடியான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சண் பத்திரிக்கை குறிப்பிட்ட ஏனைய முகாம்கள் மீதான தாக்குதல் என்பது தூரவிருந்து குறிப்பார்துச் சுடும் தாக்குதல்கள். குருநகர் மீதான தாக்குதலை நடத்தியவர் கிட்டு. பலாலிக்கும் குருநகருக்கும் இடையே விமானப்படை உலங்குவானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபடுவதுண்டு. குருநகர் முகாமின் உலங்கு வானூர்தி தரையிறங்கும் பகுதியினை அருகிலிருக்கும் இரண்டுமாடிக் கட்டடம் ஒன்றில் இருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியும். ஒருநாள் குருநகரில் தரையிறங்கிக்கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது அக்கட்டடத்திலிருந்து கிர்ணேட் உந்துகணைச் செலுத்தியினால் கிட்டு சுட்டார். ஆனால், இலக்குத் தவறிவிட்டது. உலங்கு வானூர்தியிலிருந்து சில மீட்டர்கள் தூறத்தில் அது வீழ்ந்து வெடித்தது. விமானப்படையினர் மீது புலிகள் நடத்திய முதலாவது தாக்குதல் அது. கொக்கிளாய் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின் மூலம் தமிழ் ஆயுதப் போராட்டம் புதிய நிலை ஒன்றினை அடைந்திருப்பதை ஜெயவர்த்தன உணர்ந்துகொண்டார். மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய ஜெயார் இதுகுறித்தும் பேசினார். இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓடும் செயற்பாட்டில் இதுவரை ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் தற்போது நன்கு பலப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். தேவையானளவு பயிற்சியினையும், ஆயுதங்களை அவர்கள் பெற்றுக்கொண்டபின்னர் இறுதியானதும், தீர்க்கமானதுமான தாக்குதல் ஒன்றினை நடத்துவதன் மூலம் தமது இலட்சியத்தை அவர்கள் அடைந்துவிடுவார்கள் என்று அவர் எச்சரித்தார். மேலும் இலங்கையின் இதயப்பகுதி என்று தான் அழைத்த பகுதிகள் மீதும் அவர்கள் தாக்கக் கூடும் என்று எச்சரித்த ஜெயார், இவை நடக்கும் கால எல்லை குறித்து எதுவும் கூறவில்லை. அவ்வருடம் புதுவருட நாளுக்கு முன்னர் போராளிகள் தமது இறுதித் தாக்குதலை நடத்தலாம் என்று அதுலத் முதலி எதிர்வுகூறினார். தமிழர் தாயகத்தினை சிறுகச் சிறுக அபகரிக்க தான் ஏற்படுத்திவந்த எல்லையோரச் சிங்களக் கிராமங்களை நியாயபடுத்தவும், தனது ஊர்காவல்ப் படைத் திட்டத்தின் மூலம் இக் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது நோக்கத்தினை முடுக்கிவிடவுமே போராளிகள் இறுதித் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார்கள் எனும் செய்தியை ஜெயார் பரப்பத் தொடங்கியிருந்தார். மாசிமாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது நாட்டின் எப்பகுதியையும் ஒரு குறிப்பிட்ட இனம் தனது பூர்வீகத் தாயகம் எனும் கோருவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு அமைவாக குடியேற்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார் . 1985 ஆம் ஆண்டு மன்னார் முதல் முல்லைத்தீவு வரையான வன்னியின் உலர்வலயப் பகுதிகளில் தெற்கிலிருந்து 30,000 சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் தனது திட்டத்தினை மனதில் வைத்தே இதனை அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறு வன்னியில் குடியேற்றப்படும் ஒவ்வொரு சிங்களக் குடும்பத்திற்கும் தலா அரை ஏக்கர் நிலம் வழங்கப்படுவதோடு வீடு கட்டுவதற்கான பணமும் அரசால் வழங்கப்பட ஏற்பாடாகியிருந்தது. வன்னியில் இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சிங்களக் குடியேற்றத்தினதும் பாதுகாப்பிற்கென்று 25 இயந்திரத் துப்பாக்கிகளும் 200 ரைபிள்களும் இராணுவத்தால் வழங்கப்படவிருந்தன. மேலும், மாசி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவர் தொடர்ந்தும் பேசும்பொழுது "நாம் சிங்களவர்களை எல்லைகளில் குடியேற்றி, அதனை விஸ்த்தரிக்காவிட்டால், அவ்வெல்லை எம்மை நோக்கி நகரத் தொடங்கும்" என்று தான் நடத்திவந்த குடியேற்றங்களை நியாயப்படுத்தினார். Far Eastern Economic Review எனும் பத்திரிகைக்குப் பேட்டியளித்த காமிணி திசாநாயக்க,சிங்களக் குடியேற்றங்கள் இராணுவமயப்படுத்தப்படுவது அவசியமானது என்று வாதிட்டார். இஸ்ரேலின் மேற்குக்கரைக் கொள்கையினை அடிப்படையாக வைத்தே தாம் சிங்களக் குடியேற்றங்களை இராணுவ மயப்படுத்தி வருவதாக அவர் கூறினார். தமிழ் மக்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்கான ஒரே வழி அவர்கள் மீது பாரிய படுகொலைகளைப் புரிவதன் மூலம் அச்சப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைக் கைவிடப்பண்ணுதல் தான் என்று ஜெயவர்த்தனவின் அரசாங்கம் எண்ணியது. அத்திட்டத்தின்படி, கொக்கிளாய் முகாம் மீதான தாக்குதலுக்குப் பழிவாங்கலாக, மாசி 15 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்நாள் தாக்குதலில் மட்டும் 52 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் "தமிழ்ப் பிரிவினைவாதிகள்" என்று லலித் அதுலத் முதலி அறிவித்தார். ஆனால், கொல்லப்பட்ட அனைவரும் அப்பகுதியில் அகதிகள் முகாமிலிருந்து இராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களே என்று உள்ளூர் வாசிகள் உறுதிப்படுத்தினர். தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் திட்டமிட்ட படுகொலைகளும், தமிழர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அவர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டமையும் நிலைமையினை மிகவும் மோசமாக்கியிருந்தது. இவ்வாறு விரட்டப்பட்ட மக்களினால் தமிழர் தாயகம் கடுமையான இடப்பெயர்வுகளையும், தாயகத்திற்குள்ளேயே தமிழ்மக்கள் அகதிகளாகும் நிலைமையினையும் எதிர்கொண்டது. இதன் பக்கவிளைவாக பெருமளவு இளைஞர்கள் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் தம்மை இணைத்துக்கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு இடப்பெயர்வினைச் சந்தித்த பெருமளவு குடும்பங்கள் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல, அக்குடும்பங்களின் இளைஞர் யுவதிகள் ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொண்டனர். தமிழர்கள் அகதிகளாகிவரும் பிரச்சினை சர்வதேசப் பிரச்சினையாக உருமாறத் தொடங்கியது. இப்படுகொலைகளை எதிர்த்து அமிர்தலிங்கம் விமர்சனத்தில் ஈடுபட்டார். இந்தியா உடனடியாக இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார். "1970 முதல் 1971 வரையான காலப்பகுதியில் கிழக்கு வங்கத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலை இலங்கையின் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் நிலவுகிறது. தமிழ் மக்கள் மீதான இனக்கொலையினை நிறுத்துவதற்கு இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும்" என்று அவர் சென்னையிலிருந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பு (TESO) எனும் பெயரில் தமிழ்நாட்டில் இயங்கிவந்த அமைப்பின் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருநாநிதி செயற்பட்டு வந்தார். முல்லைத்தீவில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகளை இவ்வமைப்பு அறிக்கை ஒன்றின்மூலம் கண்டித்திருந்தது. அமிர்தலிங்கத்தின் கோரிக்கையினை ஆதரித்து இந்திய இராணுவத் தலையீட்டினைக் கோரிய இவ்வறிக்கை, இந்தியா தமிழ்மக்கள் தொடர்பில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. மேலும், இப்படுகொலைகளையடுத்து பல படகுகளில் ஈழத் தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் இவ்வறிக்கை கூறியது. வீரமணி - திராவிடர் கழகம் கருநாநிதியினால் அரசியல் இலாபம் கருதி உருவாக்கப்பட்ட டெஸோ அமைப்பு நெடுநாள் நீடித்து நிற்கவில்லை. இவ்வமைப்பில் திராவிடர் கழகத்தின் வீரமணி மற்றும் நெடுமாறன் ஆகியோர் ஒருகாலத்தில் இணைந்து செயற்பட்டு வந்தனர். இவ்வமைப்பு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. 1. தமிழர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா இராணுவத்தை அனுப்ப வேண்டும். 2. இலங்கையுடனான சகல இராஜதந்திரத் தொடர்புகளையும் இந்தியா இரத்துச் செய்ய வேண்டும். 3. தமிழ் ஈழம் பிறப்பெடுக்க இந்தியா உதவிட வேண்டும் ஆகியவையே அம்மூன்று கோரிக்கைகளுமாகும். இலங்கையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கருநாநிதி போராட்டங்களை ஆரம்பித்தார். இப்போராட்டங்களை முடக்கிவிட எத்தனித்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , கருநாநிதியையும் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யுமாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டார். கருநாநிதியும் அவரது 8000 தொண்டர்களும் சிறையிலடைக்கப்பட்டார்கள். இதனையடுத்து ஈழத்தமிழர் மீது எம்.ஜி.ஆர் இற்கு அக்கறையில்லை என்று திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். தான் எதிர்பார்த்த இலக்குகளை அடையாமலேயே டெஸோ அமைப்பு கலைந்து போனது. கருநாநிதி டெலோ அமைப்பினை ஆதரிக்க, வீரமணியும், நெடுமாறனும் புலிகளை ஆதரித்து வந்தனர். டெலோ அமைப்பைத் தவிர அனைத்து தமிழ் ஆயுத அமைப்புக்களும் டெஸோவிடமிருந்து தம்மை விலத்தியே வைத்திருந்தன.1 point -
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
முத்தமிழ் முருகன் மாநாடு.. செம்மொழி மாநாடு.. ஊரார் கொள்கைகளில்.. சவாரி விடுவதை விட.. ஸ்ராலினுக்கு சொந்தச் சரக்கு எதுவும் இல்லை. திராவிடக் கூட்டமே ஒரு மாயைக் கூட்டம் தானே. தமிழர்களுக்குள் இவர்களின் இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.1 point
-
என்னோட சாதி..
1 pointஇது ஒரு சீப்பான விளம்பரத் தேடலாக மாற்றியமைக்கப்படாமல்.. சமூகத் தூசிகளை தட்டி உதறிவிட்டு உங்கள் பணியை கவனியுங்கள். சமூக வெளியில் உள்ள குப்பைகளை.. தூசிகளை தூக்கிப் பிடிக்கப் போனால்.. நம் கவனமும்.. சக்தியும் வீணாகுமே தவிர.. நாம் சாதிக்க வேண்டியதை அடைய முடியாது.1 point
-
மயிலம்மா.
1 pointதிருமணமானால் கணவன் மேல் சந்தேகமும் வந்துவிடும் போல?! உங்கள் தொடருக்கு மிக்க நன்றி சுவி அண்ணா.1 point
-
அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!
1 point
- நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்
இது அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கும் பொருந்துமா சார்? 😎 ஐ மீன் பழிவாங்குவது, வன்முறை...... 😂1 point- ரயில் ஆசன முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!
https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/ அண்ணை தினக்குரல் செய்யாவிட்டாலும் நாங்கள் தேடி எடுத்துப் போடுவோம் எல்லோ...1 point- கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார்
கவிஞர் கந்தவனம் ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்! 💐🙏1 point- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
கனடா தொடங்கி யேர்மனி அஸ்ரேலியா வரை ஏதாவது ஒரு மேற்குலக நாட்டில் புதின் ஆட்சி அங்கே இருந்தால் , நான் அந்த நாட்டில் வாழ்வதற்கு பிரவேசிப்பதை நினைத்து கூட பார்க்க மாட்டேன். ஆகவே அந்த நாட்டில் புதின் ஆட்சியில் இருந்தால் தொடர்ந்து வாழ்வீர்களா அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகின்றது. நான் மட்டுமல்ல மேற்குலகநாடுகளில் குடியேறிய அத்தனை ஈழதமிழர்ககளின் நிலையும் அது தான் என்பது நான் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை. புதின் கனடாவில் ஆட்சியில் இருந்தால் கனடா நாசம் அஸ்ரேலியாவில் அல்லது யேர்மனியில் ஆட்சியில் இருந்தால் அந்த நாடுகள் நாசம்.1 point- Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
தனலட்சுமி முத்துக்குமார் சாதனையாளருக்கு வாழ்த்துக்கள். குருக்களுக்கு இல்லை1 point- என்னோட சாதி..
1 pointஉந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். நீங்கள் தொடர்ந்து உங்கட நல்ல வேலையைப் பாருங்கோ. உங்கள் மூலம் பல விடையங்களை நான் அறிந்துள்ளேன். மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிகரமடைய மனமார வாழ்த்துகிறேன். நன்றி1 point- Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
வாழ்த்துக்கள், தனலட்சுமி....!1 point- Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
குருக்கள் அம்மாவுக்கு என் வாழ்த்துகள்.1 point- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
வெல்லபோவது ஓட்டு மிசின்தான் அதுக்கேன் இவ்வளவு அளப்பரை ?😄1 point- ரயில் ஆசன முன்பதிவில் இன்று முதல் புதிய மாற்றம்!
தினக்குரல் முன்பதிவுகளுக்கான சுட்டியையும்(இணைப்பை)இணைத்திருந்தா யாருக்காவது பிரயோசனமாக இருக்குமே?1 point- கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார்
அஞ்சலிகள், ஓம் சாந்தி.1 point- கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார்
1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐயா...! நான் ஒன்றும் நடக்காததை இட்டு வைச்சு காழ்ப்புணர்வில் சொல்லவில்லை. உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில் கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே, கொழும்பில் பல காரணங்களுக்காக போலீசில் பதிந்து வசித்த தமிழரை சுற்றி வளைத்து பிடித்து தாக்குதல் நடத்த வந்த புலிகள் என செய்திகள் வெளியிட்டு சிங்களம் மகிழவில்லை? மக்களை ஏமாற்றவில்லை இலங்கை செய்திகள்? அப்பாவி இளைஞரை கொன்றுவிட்டு அவர்ளுக்கு அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து, உறவுகளை இவர்கள் புலிகள் என்று கைப்பட எழுதித்தந்தாற்தான் உடலை உங்களிடம் கையளிப்போமென மிரட்டி கையெழுத்து வாங்கி பத்திரிகைகளில் வெளியிடவில்லை? இங்கு இறந்தவர்களை பற்றி நாங்கள் விமர்சிக்கவில்லை, கொலை செய்தவனையும் இலங்கை அரசின் செயற்பாடுகளையுமே விமர்சிக்கிறோம். அது ஏன் பலருக்கு வெறுப்பை உண்டாக்கி வேறு திசையில் கொண்டு போகிறார்கள்? விடுதலைப்புலிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்து பாற்சோறு உண்டு, வெடி கொழுத்தி கொண்டாடி, அந்த வெற்றியை நாடளாவிய ரீதியில் பெரிய அளவில் கொண்டாட முனைப்புகள் செய்யும் போது மழை கொட்டிதீர்த்து தென்பகுதி வெள்ளத்தில் மிதந்தபோது, தம் அழிவிலிருந்து மீண்டெழாத தருணத்திலும் அந்த மக்களுக்கு உணவுகளை திரட்டி வாகனகளில் அனுப்பி வைத்தவர்கள் நாம். மணலாற்றில் போர்முனையில் இறந்த போராளிகளின் உடல்களை அவமானப்படுத்தி மகிழ்ந்து வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியவர்கள் யார்? தங்கள் மாவீரரின் புகழுடலுக்கு தாம் இறுதி மரியாதை செய்வது போல், இறந்த இராணுவ வீரரும் இராணுவ இறுதி மரியாதைக்குரியவர்களே என எண்ணி, அவர்களுக்குரிய உடை அணிவித்து, உரிய மரியாதையுடன் செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்தபோது, அவர்களின் உடலை வாங்க மறுத்து அந்த இடத்திலேயே கொழுத்தி அவமரியாதை செய்தவர்கள் யார்? அதன்பின் விடுதலைப்புலிகள் இறந்த இராணுவத்தினரின் உடலை தகனம் செய்து சாம்பலை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஏதோ நாங்கள் நாகரிகம் அற்றவர்கள் என பாடம் நடத்துபவர்கள், நடந்த உண்மை தெரியாமல் பகட்டுக்கு எழுதித்தள்ளுகிறார்கள்.1 point- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த மருந்து, மாயங்கள், மந்திரங்கள் ரஷ்யாவில் மட்டும்தானா? அல்லது நம் கண்கள் பார்க்க மறுக்கின்றனவா? என்னைப் பொறுத்தவரைக்கும் ஐரோப்பாவில் சில நாடுகளை தவிர உலகில் உள்ள மற்ற நாடுகளில் எல்லாவற்றிலும் பயங்கர சுத்துமாத்து தேர்தல் தான் 😛1 point- கருத்து படங்கள்
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர், அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார். ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள். இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.1 point- தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி
பொதுவாக மோடி மனது தங்கம் ஒரு போட்டி என்று வந்துவிட்டால் பொ•க்கி.1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கபிதன், இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை. மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் யார் எழுதியது என்பதை பார்க்காமல் என்ன எழுதபட்டு உள்ளதென்று கவனியுங்கள் . ஒன்றரை லட்சம் மனிதர்களை குண்டு போட்டு அழித்துவிட்டு அந்த அழிவை பெரும் எடுப்பில் கொண்டாடிய சிங்களவர்கள் போன்றா நாங்கள் நடந்து கொண்டோம் ?1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இல்லையன்று சொல்லவில்லையே....ஆனால் ஒட்டாவா சம்பவம் வித்தியாசமானது...இதற்காக பழைய பத்திரிகை கிளறவேண்டிய அவசரமில்லைய்யே...அதெல்லாம்பபோக இனத்துக்காக ..இனவிடிவுக்காக பாடுபாடுகிறேன் என்றவொரு இமேஜ் உடன் திரியும் நீங்கள்..இங்கு கொட்டுவதெல்லாம் நம்மினத்துக்கு எதிரான கருத்துக்களே...ஏன் அப்படி செய்கின்றீர்கள்.. இதுக்கு உண்மையான பதில் தந்தால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்...நன்றி சாரு.. தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும் - வியாழேந்திரன் இவருபோலத்தான் உங்கடை செயல்பாடும்...கல்வி தவிற்கத்தக்கது1 point- மயிலம்மா.
1 pointமயில் என்றால் ஒயிலாகத்தான் நடக்கும் மேல் வழியாக கழட்டி இருக்களாம் ஆசிரியர் கொஞ்சம் குசும்பு பிடித்தவர் போலே1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு......... 04. அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்து வாமனிடம், எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள். அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான். ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய். ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை. ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன். போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான். பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான். இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்..... என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள். அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்.... அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை. உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து. நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன். அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு. வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........! மயில் ஆடும்.........! 🦚1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚1 point- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
சட்டம் ஒருபோதும் சாமானியர்களுக்காக பிரயோகிக்கப்படவில்லை. சட்டம் எப்போதும் சாமானியர்கள் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகவும், முடியாத பட்சத்தில் அவர்களை அதே சட்டத்தைக் கொண்டே ஒடுக்குவதற்காகவும் அதிகார வர்க்கத்தால் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வரலாறு. இந்தியா என்றால் துரோகம், துரோகம் என்றால் இந்தியா. இதுதான் உண்மை. 😡1 point- இன்றைய வானிலை
1 pointசில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****1 point - நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.