Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    15
    Points
    46969
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3118
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8975
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15827
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/23/24 in all areas

  1. உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் .
  2. ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢
  3. சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....
  4. 2009 என்பது இராணுவ ரீதியிலான வெற்றி மட்டும்தான். கோட்பாடு ரீதியிலான வெற்றி இல்லை. எனவே, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமாகின் பலம் மிக்க தமிழ்த் தரப்புக்களுடன் பேசித்தான் ஆக வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். வட அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
  5. பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)
  6. சாப்பிடுவதற்கும் IMF வேணும் என்றதை விட்டு விட்டீர்கள்.
  7. அவரது நாட்டுக்குள் தான் இனி போர். அதைத் தான் சொல்லி இருக்கிறார். நாம் தான் விளங்காத்தனமா புட்டின் இன்றி ரசியாவில் புல்லும் அசையாது என்றபடி... உலகமே அவர் கை விரலில் என்று படம் காட்டுகிறோம்.
  8. இதை தான் மூன்று உலகப்போர் என்றாரே??,........இதனை யார் செய்தார்கள் என்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை உக்ரேனை சாட்டி. கண்டவன் நின்றவன். எல்லாம் ரஷ்யாவை தாக்குவது கவலையளிக்கிறது
  9. ச‌ரியான‌ பார்வை🙏👍ந‌ன்றி..................... கால‌ நீர் ஓட்ட‌த்தில் திராவிட‌ம் அழிந்து போகும் திமுக்கா தான் திராவிட‌த்தை தூக்கி பிடிக்கின‌ம் இன்னொரு திராவிட‌ க‌ட்சியான‌ ஆதிமுக்கா திராவிட‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை..........................................................
  10. உங்கள் இணைப்பிற்கு மிக்க நன்றி.🙏🏼 எனக்கு என்றுமே மனதிற்குள் எழும் ஒருவித நெருடல்கள் என்னவென்றால்...... இந்த திராவிடம் எனும் போர்வை.... சாதியை ஒழித்ததா? இல்லை மக்களை சம தர்மாக வாழ வைத்ததா? இல்லையேல் ஆன்மீகத்தை புறம் தள்ளிவைத்த பெருமை ஏதாவது உண்டா? திராவிடம் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் ஏதாவது சாதித்திருந்தால் சொல்லுங்கள். தலைவணங்குகின்றேன். 👈🏽
  11. நாங்கள் புலம் பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊரில் வாழ்ந்த காலத்தை விட, வெளியில் வாழ்ந்த காலமே அதிகம் என்றாகிவிட்டது. தெரிந்தவர்கள் பலர் வாழ்க்கை முடிந்து போகவும் ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் வெளிநாடுகளில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், மனங்கள் என்றும் ஊரையும், அந்த நினைவுகளையுமே அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் என்றும் புலம் பெயரவே இல்லை என்னும் அளவிற்கு ஊர் நினைவுகள் அப்படியே ஒட்டியிருக்கின்றன. சில வேளைகளில் பார்த்தால், உண்மையில் கடைசிப் புகை மட்டும் தான் புலம் பெயர்ந்தது, அந்தந்த நாடுகளில் கலந்து விடுகிறதோ என்று தோன்றுகின்றது. ******************** புலம் பெயர்ந்த புகை ---------------------------------- இங்கு வந்த நாங்கள் இப்பொழுது இறக்க தொடங்கி விட்டோம் கடைசியில் ஒரு இடு வீட்டில் ஒரு வாரம் விறைப்பாக கிடந்து அங்கிருக்கும் புகை போக்கியால் எரிந்த மெய் புகையாக போகின்றது நாளை வாழ்வோம் நாளை வாழ்வோம் இன்று ஓடுவோம் இன்றே தேடுவோம் என்றிருக்க வாழ்க்கை ஓடியே போக காலம் முடிந்து விடுகின்றது இன்றே ஏன் வாழக்கூடாது எவருக்கும் சொல்லத் தெரியவில்லை இன்று அவர் ஓடுகின்றார் ஆகவே இவரும் ஓடுகின்றார் இன்று அவர் வாங்குகின்றார் ஆகவே இவரும் வாங்குகின்றார் பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை திடீரென பெய்த மழையில் கொத்தாக குருவிகள் ஒதுங்கின வீட்டுக் கூரைக்குள் கிச் கிச் கீச்சென்று ஒன்றையொன்று தள்ளி இடம் பிடித்தன துளி விழுந்து துள்ளி ஓடி வந்தது வெளியே போன குஞ்சு ஒன்று அகமும் விழியும் இருந்தால் இந்த வாழ்க்கை சமமே இங்கும் அங்கும்.
  12. இளைய சமுதாயம் போதைவஸ்த்து, மது போன்ற இன்னொரென்ன கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டிருக்க, வரலாறு தெரியாது ஆக்கிரமிப்பாளனின் போர்க்கருவிகளில் வியந்துபோயிருக்க இன்னொரு பகுதி மாணவர்கள் அரசியலைச் சரியான முறையில் பேசுவது நம்பிக்கை தருகிறது. புலம்பெயர் தமிழர்களின் குழுபேதங்களும், பிரிவினைகளும், பணத்திற்காக இனம் விற்கும் துரோகங்களும், ஆக்கிரமிப்பாளனிற்கு விலைபோகும் கைங்கரியங்கள் தவறானவையே. அவை நிச்சயம் சுட்டிக்காட்டப்பட்டுத் தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் தமிழனின் அபிலாஷைகள் குறித்து பேசுவதற்கு எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள் என்பது சரியானதே. மேலும், சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதென்று சேடமிழுக்கும் அப்புக்காத்துமாரின் இணக்க அரசியலால் உந்தப்பட்டு விஷம் கக்கும் நாகங்களைக் கடந்து இளைய சமுதாயம் விளிப்புணர்வு பெற எடுக்கப்படும் எந்த முயற்சியும் பாராட்டிற்குரியதே. சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருபடி. நடக்கட்டும், வாழ்த்துக்கள் !
  13. படு முட்டாள்தனமான தட்டத் திருத்தம் இது. 14 வயது கொண்ட ஒரு சிறுமி என்னதான் ஒத்துக் கொண்டாலும் அவர் மீது இடம்பெறும் பாலியல் உறவு என்பது பாலியல் வல்லுறவே. ஏனெனில் அந்த சிறுமியால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் அளவிலும் பாலியல் உறவுக்கு தயாராக இருப்பாரோ என்பதும் சந்தேகத்துக்குரியவை. இலங்கை அரசு இனி பாலியல் வல்லுறவையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போல் உள்ளது.
  14. நம்மட அழகிகளையும் அவர்களுடைய அலங்காரங்களையும் பார்த்து இரசியுங்கள்.
  15. (குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.
  16. இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் பாணியில் இதுவும் ஒரு தாக்குதல் தான்.பின்னணிகள் வேறு வெவ்வேறுகளாக இருக்கலாம் என வேலை இடத்தில் நிறைய பேசிக்கொண்டார்கள்.😂 தாக்குதல் நடக்கப்போகின்றது என தெரிந்த அமெரிக்காவுக்கு தாக்குதலை நிறுத்த தெரியவில்லையாம்....🤣
  17. ரஷ்யா, சீனா, கியூபா , வடகொரியா எல்லாம் வெறும் வெத்து வேட்டுக்கள். சிறந்தது எது என்பதை ஈழத்தமிழர்கள் குடியேறிய தமது புத்திசாலிதனத்தை எமக்கு காட்டியுள்ளார்கள் என்று சிங்கல மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றார்.
  18. ரஷ்சியா இப்படியான பெரும் மனிதப் படுகொலைகளை காண்பது இது முதற்தடவை அல்ல. எகிப்துக்கு மேல் வைச்சு ரஷ்சிய விமானம் குண்டு வைச்சு தகர்க்கப்பட்டு 200 மேல் மக்கள் கொல்லப்பட்ட பின் நடக்கும் பெரும் சம்பவம் இது. இது இஸ்லாமிய தீவிரவாதம் என்றால்.. இது மேற்குலகை அடைய அதிக காலம் எடுக்காது. இப்படித்தான் கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்காவால் பயிற்சி அளித்தவன் தான்.. இங்கிலாந்தில் மாஜ்சட்டரில்.. இதே மாதிரியான நிகழ்வில் குண்டு தாக்குதல் நடத்தி 22 பேரைக் கொன்றான். இஸ்லாமிய பயங்கரவாத்தை விலைக்கு வாங்கி உக்ரைன் ஆயுதமும் ஒத்துழைப்பும் ஊடுருவலும் வழங்கி இதனை நடத்தி இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது உக்ரைனே நடத்தி விட்டு இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது பழிபோட்டும் இருக்கலாம். இதனால் ரஷ்சிய - இஸ்லாமிய உலக உறவை சிதைப்பதுவும் நோக்கமாக இருக்கலாம். எதுஎப்படியோ.. உயிரிழந்த அப்பாவி ரஷ்சிய மக்களுக்கு அஞ்சலிகள்.
  19. உஷ் உஷ் ...இதெல்லாம் சிங்களவர்களின் அரசியல் சாணாக்கியம் .....என மார்பு தட்டி அரசியல் பாடம் எடுக்கும்கோஸ்டிகளும் உண்டு
  20. இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நான் Ander Russell சொன்னேன் அவ‌ங்க‌ட‌ பெய‌ர்க‌ளை த‌மிழில் எழுதுவ‌து மிக‌ சிர‌ம‌ம்😁😜........................
  21. ‘கடைசிக் கட்டில்’ (நூல் அறிமுகம்) — அகரன் — அவன், அவளது கண்களை தின்றுகொண்டிருந்தபோது, அவள் அவன் இதயத்தை சுவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது நான் அந்த உணவகத்தின் தலமைச் சமையலாளனாக இருந்தேன். அவர்களின் உணவை என் கையாலேயே பெறவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். இருவரும் மேற்படிப்பிற்கான இடைக்காலத்தில் அந்த உணவகத்திற்கு காசு சம்பாதிக்க வந்தவர்கள். தமக்கு உணவு தருபவன் என்று என்மீது நேசம்கொண்டவர்கள். அந்த இளம் காதலர்களை பார்த்தே என் இளமையை கடத்திக்கொட்டிருந்தேன். அந்த ஆண்டு கடந்து போக இருந்தபோதுதான் அவளுக்கு மூளையில் புற்றுநோய் என்று அறிந்துகொண்டார்கள். பின்பு ஓர் ஆண்டு‌க்குள் அவள் இறந்து போனாள்‌. அவளின் இறப்பு வரை எங்கும் நகராமல் தன் கல்வியை பிற்போட்டுவிட்டு, தான்‌ நேசித்தவளுக்காக வாழ்ந்த அந்தப்பிரெஞ்சு நண்பனை எனக்கு தெரியும். அவனது அன்பும், அறனும் உலகுடன் பெறினும் கொள்ளமுடியாது. நீலக்கண்களையும் சிவந்த புன்னகையையும், மாசறு அன்பும்கொண்ட‌ அந்த இருபத்திமூன்று வயதான மார்க்கோ என்றதோழி வன்சோன் என்ற என் நண்பனின் நினைவில் மட்டுமல்ல என் நினைவில் இருந்தும் அழிக்க முடியாத உயிர். குணா கவியழகனின் ‘கடைசிக்கட்டில்’ என்ற அவரது ஆறாவது நாவலை ஐந்து ஆண்டுகளின் பின்னர் எழுதியிருக்கிறார். “எதிர்” வெளியீடாக இந்த ஆண்டு சனவரியில் வந்திருந்தது. தூக்கம் முறிந்துபோன ஓர் அதிகாலை நான்கு மணிக்கு நாவலை படிக்க ஆரம்பித்தேன். புத்தக முக அட்டையின் உருவம் என்னை யுத்தம் பற்றிய ஓர் கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும் முன்முடிவைத் தந்திருந்தது. என் மன ஏற்பாடும் அப்படித்தான் இருந்தது. 2009 க்கு பின்னர் யுத்தச்சிறையில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து எழுத்தின் மூலம் காலத்தை பதிவு செய்பவர்கள் அரிதிலும் அரிது. அவர் எழுதிய முதல் இரண்டு நாவல்களும் போரியல் நாவல்வகைக்குள் அடக்கலாம். மீதி மூன்று நாவல்களும் போர்க்கால நாவல்கள். கடைசிக்கட்டில், முழுமையாக மின்சக்தியில் இயங்கும் “ரெஸ்லா” வண்டியைப்போல் சத்தம் இல்லாமல் ஆரம்பித்து வேகமாக நகர்ந்தது. யாழ்ப்பாண வைத்திய சாலையின் பத்தாம் இலக்க விடுதியே கதைக்களம். அவ்விடுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் விடுதி. அங்கு மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் மார்க் அன்ரனி என்பவரது காதல் கதைதான் கடைசிக்கட்டில்‌. ஐந்தாம் கட்டில் மாணிக்கவாசகம் ; அவரைப் பார்க்க வரும் மகள் வஞ்சி, அவள் அம்மா. ஆறாம் கட்டில் பரமசோதியார், கடைசிக் கட்டில் ஒற்றக்கை நாகையா, தாதி மேனகா, முதலாம் கட்டில் மூக்கன் என்ற முகிலன், வைத்தியர் வண்ணன், அதிகாரத்தை விரும்பும் கனகாம்பிகை தாதி, உடல் நோயோடு கரவுநோயும் கொண்ட இராமதாசன். இவர்களை, இந்த மனிதச்சித்திரங்களால் அரசியல்முகபாடங்களற்ற எளிய மக்களின் கதையை குணா எழுதி இருக்கிறார். வஞ்சியின் குடும்பம் யுத்தத்தில் இருந்து மீண்டு ‌வன்னியில் வாழ்கிறது. வஞ்சியின் அண்ணா யுத்தச்சிறையில் இருக்கிறார். வஞ்சியின் வருமானத்தில் நகரும் குடும்பம். மார்க் யாழ்ப்பாணதத்தில் உள்ள சிற்றூரில் இருந்து அரசாங்க வேலைக்குச் செல்லும் முதல் மகன். வஞ்சியின் தந்தை புற்றுநோயால் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரைப் பார்க்க வரும் வஞ்சிக்காக அவள் தந்தையில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வது எவ்வளவு உண்மையோ அதேயளவு எல்லோருக்கும் உதவுவதுமாக, பணிபுரியும் இனிய இதயத்தை மார்க் வைத்திருக்கிறான். இங்கு வருபவர்கள் படிப்படியாக இறக்கும் விதி அவர்கள் கட்டிலில் இருக்கிறது. அங்கு இருப்பவர் ஒவ்வொருவருக்கும் தனிக்கதை இருக்கிறது. பிள்ளைகள் எல்லோரும்‌ வெளிநாடுகளில் இருந்தும் யாரும்வந்து பார்க்காத ஏக்கத்திலேயே பரமசோதி இறந்தபோது அவர் தலைமாட்டில் ஒர் கடிதம் கண்டெடுக்கப்பட்டுகிறது. அக்கடிதம் புலம்பெயர்ந்து வாழும் எல்லோரும் படிக்கவேண்டியது. மனிதர்கள் எவ்வளவு இயந்திரமாகவும் பகட்டோடும்‌ இருக்கிறார்கள்‌ என்பதை பரமசோதியின் கதைகூறும். நாகையா இறந்தபோது மூக்கனும், மார்க்கும் அழும்காட்சிகள் இந்த மனிதர்கள் எத்தனை அன்பு தோய்ந்தவர்கள் என்று ஏங்க வைக்கும். வஞ்சியின்‌ அப்பாவை வீட்டில் வைத்து பார்க்குமாறு கண்ணன் வைத்தியர் அனுப்புவதற்கும் நஞ்சு கலந்தகாரணம் உண்டு. காதலின் அத்தனை வண்ணங்களையும் காட்டிய வஞ்சி, வீடு தேடிப்போனவனை வீட்டுக்குள் இருந்தபடி அவனைப் பார்க்காது… அவள் தாயார் மொழியில் ‘தம்பி என்னதான் இருந்தாலும் ….நீங்கள் பிழையா நினைச்சிட்டீங்கபோல.. உங்களுக்கு எல்லாந் தெரியும்..’ என்ற வார்த்தைகளுக்குள் நாவலின் சொல்லப்படாத நாவல் உள்ளது. அது அத்தனை கொடியவிஷத்தை வீசக்கூடிய மரம். அதை மனங்களிடம் வீசுவதை முறையாக குணா கவியழகன் செய்துள்ளார். நாகையா மூலம் அன்பு பற்றிய தத்துவ விசாரனை, மூக்கன் என்ற முகிலன் என்ற இனிய இளைஞனின் பாத்திரங்கள் நாவலின் உயிரை கொண்டோடுகின்றன. அழகியலான சொல்லாடல்களை பல இடங்களில் எழுதியுள்ளார். • ‘ஒவ்வொரு நாளும் குளிக்கும் மனிதர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்’ • ஈவதால் மேலுலகம் இல்லை எனினும் ஈபவன் வள்ளல். • அவளின் சப்பாத்து ஒலி ஒவ்வொருவர்இதயத்துடிப்புப்போல ஆகிவிட்டிருந்தது. • வண்ணங்கள் பூத்த வாழ்வெனும் கனாக்காடு. • பணத்துக்காகவும் புகழுக்காகவும் உழைத்தவர்கள் கடைசிக் கட்டிலுக்கு வரும்போது அதை இன்னும்‌ அனுபவிக்காமல் போக விரும்பாத மனதோடு அவஸ்தையுற்றார்கள் ; உறவைச் சம்பாதித்தவர்கள் வாழ்வை அனுபவித்து முடித்த பாங்கில் பதட்டமின்றி மரணத்தை எதிர் கொண்டார்கள். • இருட்டு எங்களை பார்த்தபடி இருந்தது. தன் வாழ்நாளில் அதிகம் யுத்தகாலங்களில் வாழ்ந்தாலும் அதற்கு மாற்றாக ஒரு கதையை எழுதியதில் குணா கவியழகன் தன் எழுத்தை வலுவாக்குகிறார். தமிழில் மிகச்சிறந்த போரியல் நாவல் இன்னும் எழுதப்படவில்லை. அதற்கான காலம் கரைந்துகொண்டு‌ இருக்கிறது. அழகி மார்க்கோவிற்கு மரணம் புற்று நோய் என்ற பெயரில் இருபத்தி நான்கு வயதில் வந்தது. அவள் உருகி.. உருகி உருமாறி மறைந்ததை இரண்டு கண்களிலும் வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட மனிதர்களின் கடைசிக்கட்டிலை வேகமாக உள்வாங்கிக்கொண்டேன். மதியம் உணவருந்தும் முன்னர் நாவலின் 232 பக்கங்களையும் படித்து முடித்தேன். என் மனதில் மார்க்கோ, வன்சோனின் கன்னங்களை வருடிமுத்தமிடும் காட்சி அப்படியே இருக்கிறது. அது காலத்தால் கரைக்க முடியாத காட்சி. https://arangamnews.com/?p=10559
  22. இது நம் பிறப்பில் இருந்து வருகிறது என்று நினைக்கிறேன். தன்னை அதிகம் நம்புபவர்களைத்தான் சாமி கூட அதிகம் சோதிக்குமாம் இல்லை??
  23. புரியாமல் இல்லை எங்களில் பல திறமை சாலிகள் உண்டு துரதிஷ்ட வசமாக ஒற்றுமை என்றால் என்ன ? சரியான விளக்கமின்றி எமது படிப்பு முறை தான் காரணம் .எனது தமிழுக்காக குரல் கொடுப்பவர் யார் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக பேச வராது எனக்கு அவரை பிடிக்க வில்லை இல்லை என்றால் அமைதியாக இருப்பது மேல் .
  24. பொன்கொடு தீவு-புங்குடுதீவு-புங்கை மண்-தங்க மண்- பிறந்த மண் ❤️❤️
  25. ரொம்ப சரியானது,ஆனால் கருத்துகள் காரணத்துடனும் கருத்துடனும். சம்பத்தப்பட்ட தலைப்புகளிலும். தான் கவனமாக எழுதுகிறேன் சிலசமயம். பிழை விட்டீருக்கலாம்....நீங்கள் அதனை சுட்டி காட்டி திருத்த முடியும் மற்றது நாங்கள் இப்போது கதைப்பது எழுதுவது ரஷ்யா பற்றி இதில் விசுகருக்கு என்ன பொறுப்பு உண்டு புட்டினின். அரசாங்கத்தில். முக்கிய பதவியில் இருக்கிறார?? அல்லது புட்டினின். படையணிக்கு தலைமை தங்கியிருக்கிறாரா?? விளங்கவில்லை 😀
  26. தற்போது வரை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவும் கூகிள் போன்ற இணைய தேடல் மூலம் தரவுகளை தாமாக சேகரிப்பதில்லை. இந்த செயற்கை நுண்ணறிவிற்கான தரவுகள் ஊட்டப்படுகிறது. பெரும்பாலும் இந்த தரவூட்டலில் பிழைகள் இல்லாவிட்டாலும் அது தெரிவு செய்யும் மாதிரிகள் மற்றும் அல்கோரிதங்கள் தவறாக இருப்பதாலும் இந்த பிரச்சினைகள் உருவாகிறது. தரவுகளுக்கான மாதிரிகளை curve fitting அடிப்படையில் தீர்மானிக்கின்றன இதில் பெரும்பாலும் over & under fitting, தவறுகள் ஏற்பட காரணமாகின்றன. மற்றது தரவுகளை பிரிப்பதிலும்(splitting data) தவறு ஏற்படலாம், ஆனாலும் இறுதியாக Training data, validate and test இல் இதன் குறைபாடுகலை கண்டுபிடிக்கமுடியும், இது நாளாந்த நடைமுறையில் பாவிக்கும் back test, optimization and forward test போன்ற நடைமுறையே, இந்த செயற்பாடு முழுமையாக பின்பற்ற படவில்லை என்பது தெளிவாகிறது, கூகிள் போன்ற மிக பெரிய கட்டுமானத்தினை கொண்ட ஒரு நிறுவனத்தின் செயற்கைநுண்ணறிவு இவ்வாறான குறைபாடுகளுடன் இருப்பது இந்த திட்டம் அவ்வளவு இலகு அல்ல என்பதை உணரகூடியதாக உள்ளது.
  27. கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ் ஏதாவது கழண்டும் விழலாம்.. பலமான அடிவாங்கிய ஆள் தம்பி.. மூணாவது பி .எம் டபிள் யு.. தளுக்கி மினுக்கி சும்மா தகதக வென்று .. மினுங்குவார்… இவர் ..சுக நலம் நானறியேன்… வந்து மூன்று நாள்தான். என்னைக்கேட்டால் எதுவும் தெரியாது.. ஏனெனில் அது நிலக்கீழ் வீட்டுகாரனுடையது…. கராச்சுக்குள் .. இரண்டுபேர் நிக்கினம்.. இரண்டு பேரும் புது இறக்குமதி… தொட்டால் சுள்ளிடும்.. கிட்டப் போனாலே குய்யோ முறையோ என்று சத்தமும் போடுவினம்… அதைவிட … இந்தக் கார்களில் நீ கைவைத்தால் நான்தான்…வாங்கிக் கட்ட வேணும்.. அதாலை நான் நைற் வாச்சர். யாராவது ..கண்டால் வரச்சொல்லுங்க கனடா கார் கள்ளனை கண்டவுடன்… நான் இதில் சொன்னதையும் சொல்லிவிடுங்க….அவனை கண்டால் வரச்சொல்லுங்க.. காண ஆசையாய் ..இருக்கென்று.. வேண்டாமிந்த விபரீத ஆசை (யாவும் கற்பனையே)
  28. ஒரே நாளாளில் சகல மாநிலங்களிலும் நடக்கும்.
  29. Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை. அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல். ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார். அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை. மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது. நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர். பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது. திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன. ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார். இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார். திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல். தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம். சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது? ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது. ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ? அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை! தமிழன் தமிழனே!
  30. புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.
  31. ஆம், அவரே ஒரு சிங்களக் காணொளியில் ஒப்புக்கொண்டிருக்கிறார் https://www.youtube.com/watch?v=2I2sTQvZVAI
  32. பியூட்டிபுல் மார்வெலஸ் எக்ஸலண்ட் வெறி வெறி எக்ஸலண்ட் நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலண்ட் .....! 😍
  33. இது திரியை விட்டு விலகும் கருத்தாடல். 🙂 சமணர்களும் பௌத்தர்களும் களப்பிரர்களும் தமிழை வளர்த்தனர். இவர்களை அழித்து சைவம் தமிழின் வளர்ச்சியைப் பற்றிக் கொண்டு தன்னை வளர்த்தது.
  34. தெரிந்ததை தெளிவாக உரக்க சொல்லியுள்ளார்கள். பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.
  35. அரசியல் கற்றுக்குட்டியான ரஜீவை தமது வலைக்குள் வீழ்த்திய ஜெயவர்த்தனவும் லலித் அதுலத் முதலியும் ரஜீவ் காந்திக்கும் லலித் அதுலத் முதலிக்குமிடையிலான சந்திப்பு நடைபெறவிருந்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி புலிகள் நடத்திய கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் அவர்கள் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியளிக்கவில்லை. தாக்கிவிட்டு மறையும் உத்தியை அதுவரை காலமும் கடைப்பிடித்துவந்த போராளிகள், பலப்படுத்தப்பட்ட முகாம் ஒன்றினை நேரடியாகத் தாக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதை ஜெயார் உணர்ந்துகொண்டபோதிலும், இத்தாக்குதல் பிரபாகரன் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இத்தாக்குதலின் மூலம் அவர் அடைய எதிர்ப்பார்த்த இலக்கினை அவர்களால் அடைய முடியவில்லை. இத்தாக்குதலின் மூலம் கொக்கிளாய் முகாமினை முற்றாக அழித்துவிட பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். ஆகவே இத்தாக்குதலினால் ஏற்பட்ட சரிவைச் சரிசெய்ய அடுத்த தாக்குதல் வெற்றிகரமாக அமையவேண்டும் என்று அவர் உறுதிபூண்டார். அடுத்த தாக்குதலுக்கான திட்டத்தினை வகுத்த அவர், அதற்காக தனது போராளிகளை பயிற்றுவிக்க ஆரம்பித்தார். பிரபாகரனுடன் கிட்டு பண்டிதரின் மறைவிற்குப் பின்னர் கிட்டுவே டயாழ்ப்பாணத்தின் தளபதியாக பிரபாகரனால் நியமிக்கப்பட்டிருந்தார். கிட்டுவே யாழ்ப்பாணத் தாக்குதலை நடத்துவார் என்றும் பிரபாகரன் முடிவெடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பொலீஸ் தலைமைக் காரியாலயமான யாழ்ப்பாண பொலீஸ் நிலையமே புலிகளின் இலக்காக இருந்தது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்றினையே யாழ் பொலீஸ் நிலையத் தாக்குதலுக்கும் பிரபாகரன் தேர்வுசெய்தார். சித்திரை 10 ஆம் திகதியான அன்றே இங்கிலாந்தின் பிரதமர் மாக்கிரெட் தட்சர் கொழும்பிற்கு விஜயம் செய்யவிருந்தார். இராணுவத்தினருடனும், பொலீஸாருடனும் நேரடியாக மோதும் நிலைக்குத் தமிழ்ப் போராளிகள் வந்துவிட்டார்கள் எனும் செய்தியை சர்வதேசத்திற்குச் சொல்ல இத்தாக்குதலைப் பயன்படுத்த பிரபாகரன் எண்ணினார். 70 களில் தாக்கிவிட்டு மறையும் கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்ட போராளிகள், பின்னர் 1984 வரை, நின்று சண்டையிடும் கெரில்லாக்கள் எனும் நிலைக்கு உயர்ந்து, அதன் பின்னரான காலத்தில் இராணுவ முகாம்கள் மீதும் பொலீஸ் நிலையங்கள் மீதும் நேரடியான தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு முன்னேறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரனின் திட்டங்கள் குறித்து எந்தவித தகவலும் அறிந்திராத லலித் அதுலத் முதலி, ரஜீவ் காந்தியை எவ்வாறு ஜெயாரின் வலைக்குள் வீழ்த்தலாம் என்பது குறித்துக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். சிறந்த திட்டமிடலாளரும், ராணுவ விடயங்கள் குறித்து அறிந்து வைத்திருந்தவருமான ஜெயவர்த்தன, ஆரம்பம் முதலே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் நலன்களும் ஒரே திசையில் பயணிக்கப்போவதில்லை என்பதை நன்கு அறிந்தே இருந்தார். இந்தியாவின் தேசிய நலன்கள் என்று வருகையில், தனது நலன்களை உறுதிப்படுத்திக்கொள்வதில், இலங்கை தன்னிடம் முற்றான சரணாகதியினை அடையவேண்டும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆகவேதான் தனது வெளியுறவுக் கொள்கையின் வழியே இலங்கையை வீழ்த்துவதற்கு தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் கருவியாகப் பாவிக்க இந்தியா விரும்பியது. இதனால் இலங்கையிலிருந்து தமக்கான தனிநாட்டினை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு போரிட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களின் அவாவும் இந்தியாவின் தேசிய நலன்களும் நேர் எதிரானவையாக மாறிப்போயின‌. தமது திட்டத்தின்படி, தாம் முன்வைக்கவிருக்கும் கோரிக்கைகளுக்கு ரஜீவ் காந்தியை இணங்கப்பண்ணுவதனூடாக தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தலாம் என்று லலித் திட்டமிட்டார். அவையாவன, 1. இலங்கையை இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிக்காது எனும் உத்தரவாதம். 2. சமரசப் பேச்சுவார்த்தைகளை மீள புதிதாக ஆரம்பிப்பது. 3. தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கான ஆயுத உதவிகளை இந்தியா நிறுத்திக்கொள்வது. 4. பார்த்தசாரதியைப் பேச்சுவார்த்தைகளிலிருந்து முற்றாக விலக்குவது. 5. தமிழ் நாட்டிலிருந்து மத்திய அரசாங்கத்தின் மேல் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருப்பது. 6. பாக்கு நீரிணையில் இந்திய ‍- இலங்கைக் கடற்படைகளின் கூட்டு ரோந்துகளை ஆரம்பிப்பது. சுமார் இரண்டு மணித்தியாலங்களாக தனது உதவியாளர் ஒருவர் உடனிருக்க, ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபட்ட லலித் அதுலத் முதலி, தனது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றிற்கு ரஜீவின் சம்மதத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார். தில்லியிலிருந்து ஜெயவத்தனவைத் தொடர்புகொண்ட லலித், "ரஜீவுடனான பேச்சுக்கள் சிநேகபூர்வமாகவும், மிகுந்த பலனளிப்பவையாகவும் இருந்தன" என்று அறிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது ரஜீவ் "பாக்கிஸ்த்தான் உள்ளடங்கலாக, தென்னாசியாவின் அனைத்து நாடுகளுடனும் நட்பான தொடர்பாடல்களை ஆரம்பிக்க மிகுந்த விருப்பம் கொண்டுள்ளேன்" என்கிற தலைப்புடனேயே ஆரம்பித்தார். மேலும், "ஜெயவர்த்தனவின் தில்லி வருகையினை மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்திருக்கிறேன்" என்றும் லலித்திடம் அவர் கூறினார்.
  36. உத்தேச பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே தனது பக்க நிலைப்பாட்டினை இந்தியாவுக்கு தெரிவித்த ஜெயார் கோபாலசாமி பார்த்தசாரதி இந்தியாவின் கொள்கை மாற்றம் குறித்து பிரபாகரன் அனுமானித்திருந்தார் என்று எழுதும் பாலசிங்கம், அதனாலேயே பாரத்தசாரதி தன்னிடம் கூறிய விடயங்களை பிரபாகரனிடம் தான் விபரித்தபோது அவர் அதிர்ச்சியடையவில்லை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், யுத்தநிறுத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்த பிரபாகரன், புதிய தாக்குதல்கள் குறித்துச் சிந்தித்து வந்தார். இவ்வாறு பிரபாகரனால் திட்டமிடப்பட்ட தாக்குதல்களில் முதலாவது கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலாகும். இது குறித்து மேலே பார்த்தாயிற்று. அடுத்த தாக்குதல் யாழ்ப்பாணத்தின் பிரதான பொலீஸ் நிலையம் மீதானது. இது குறித்து இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். அமிர்தலிங்கத்துடனான தனது சந்திப்பு நிறைவடைந்து நான்கு நாட்களின் பின்னர், தை மாதம் 18 ஆம் திகதி (1985), இந்தியாவிற்கான இலங்கையின் தூதுவர் பேர்ணாட் திலகரத்னவை தனது அலுவலகத்திற்கு அழைத்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க இந்தியா விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறினார். ஆகவே, ஜெயவர்த்தனவுடன் இதுகுறித்து பேசுவதற்கு சந்திப்பொன்றினை ஒழுங்குசெய்யுமாறு அவர் திலகரத்னவைக் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்புக் குறித்து ஜெயவர்த்தன அறிந்துகொண்டபோது அதனைத் தவிர்க்க முடிவுசெய்தார். ஆகவே, லலித் அதுலத் முதலியை இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுவர் என்கிற பெயரில் இச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுப்புவதென்று முடிவெடுத்தார். இச்சந்திப்பு 1985 ஆம் ஆண்டு மாசி மாதம் 13 ஆம் திகதி தில்லியில் நடைபெற்றது. அந்த நாளினை இராணுவம் மீது பாரிய தாக்குதல் ஒன்றிற்கான நாளாக பிரபாகரன் குறித்துக்கொண்டார். ரஜீவுடன் சந்திப்பொன்றிற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட நாளான தை மாதம் 18 ஆம் திகதியிலிருந்து லலித்தை ரஜீவ் சந்தித்த நாளான மாசி மாதம் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இந்தியாவின் சமாதானத் தூதுவர் பார்த்தசாரதியை விமர்சிக்கவும், மாகாணசபை முறைமையினைக் கோரிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலமிழக்கப் பண்ணும் கைங்கரியங்களிலும் ஜெயவர்த்தன ஈடுபடலானார். பார்த்தசாரதி மீதான விமர்சனத்தை முன்வைத்த அரச ஊடகங்கள், அவர் ஒரு தமிழர் என்பதால், தமிழர்களுக்குச் சார்பாக நடக்கிறார் என்றும், அவரது மத்தியஸ்த்தத்தினை சிங்களவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறத் தொடங்கின. மேலும், மாவட்ட சபைகளுக்கு மேலதிகமான எந்தத் தீர்வையும் தமிழர்களுக்கு வழங்கச் சிங்களவர்கள் தயாரில்லை என்று அவை எழுதிவந்தன. பிரதமர் பிரேமதாசா, "மாவட்ட சபைகளே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என்கிற பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் தமது பக்க கோரிக்கையாகவும், தீர்வாகவும் இவற்றை இந்தியாவுக்கு மறைமுகமாகத் தெரிவிக்க இதனை இலங்கையரசு செய்திருந்தது.
  37. 'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே. ****************** அம்பானியின் வறுமை சமஸ் 20 Mar 2024 ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்பவன். சென்னை நான் பிறந்த ஊரைக் காட்டிலும் எனக்கு எண்ணற்ற சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு நான் சென்னைக்கு அன்றாடம் செய்ய வேண்டியதும், இந்த ஊரோடு கரைந்துபோவதுமே கைம்மாறு. அப்படி இருக்க ஏன் கல்யாணச் சாப்பாட்டை ஓர் இழப்பாக நான் கருத வேண்டும்? இங்கு எனக்குச் சொந்தங்கள் இல்லையா, நண்பர்கள் இல்லையா அல்லது யாரும் விசேஷங்களுக்கு அழைக்கவில்லையா அல்லது சாப்பாட்டில்தான் ஏதும் குறைச்சலா? குறைச்சல் எல்லாம் இல்லை, அதீதம்தான் சென்னையின் பிரச்சினை. இன்று அநேகமாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுமே இப்படி மாறிவருகின்றன என்று சொல்லலாம். ஊர்ப் பக்கத்தில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் மாலை அல்லது கல்யாணத்தன்று காலை டிபன் மெனு பெரும்பாலும் இப்படி இருக்கும்: அசோகா அல்லது கேசரி, மெதுவடை அல்லது போண்டா, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம் அல்லது பூரி, கூடவே இட்லி, சட்னி, சாம்பார். சாப்பிட்டு முடித்ததும் காபி. மதிய விருந்து: சோறு, சாம்பார், ரசம், வத்தல் குழம்பு அல்லது மோர்க் குழம்பு, ஒரு வறுவல், ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு பச்சடி, தயிர், கூடவே அப்பளம் – வடை – பாயசம். அவரவர் விரும்புவதை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கி சாப்பிடலாம்; வேண்டாததை முற்றிலுமாகத் தவிர்க்கலாம். கேட்டுப் பரிமாறுவார்கள். ஆஹா! எவ்வளவு எளிமையான மெனு என்று சொல்பவர்கள், நான் கூறியிருப்பதே கொஞ்சம் அதிகம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சின்ன வயதில் என் தாத்தாவுடன் வெளியூருக்கு ஒரு விசேஷத்துக்குப் போயிருந்தேன். தாத்தாவின் நண்பர் விருந்தில் பண்டங்களை அதகளப்படுத்தி இருந்தார். எனக்கு அந்த வயதில் அது விசேஷமானதாகப் பட்டது. தாத்தா முகம் சரியில்லை. ஊர் திரும்புகையில் கேட்டேன், “தாத்தாவுக்குச் சாப்பாடு பிடிக்கலையோ?” கவனம் களைந்தவராகச் சொன்னார், “அப்படி இல்லப்பா, எலையில பத்து வகை, பதினைஞ்சு வகையினு உணவை வெக்கிறது ஆடம்பரத்தின் பெயரிலான அநாகரிகம். விருந்தாளிகளுக்கு அன்பை உணவா பறிமாறினா சாப்பிடலாம், அவனவன் அகங்காரத்தை ஏன் பரிமாறணும்? விசேஷங்கிறது பல தரப்பு ஆளுங்களும் வர்றது; யாரையும் நம்ம வசதியால சிறுமைப்படுத்திடக் கூடாது!” வயது மெல்ல நகர்ந்தபோது தாத்தா சொன்னது புரியலானது. அன்றாட உணவுக்கே அல்லாடுபவர்கள் கோடிக் கணக்கானோர் வாழும் நாட்டில் வசதி படைத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தவற்றைச் செலவிடுவதில் மிக்க பொறுப்புணர்வு வேண்டும். தம்முடைய விருந்தினர்களுக்கு இலையில் ஒருவர் இருபது பதார்த்தங்களை வைக்கிறார் என்றால், அது தன்னகங்காரத்தின் வெளிப்பாடுதான். விருந்தினரின் உணவு விருப்பம், ரசனை, உடல்நிலை என எல்லாமே அங்கு அடிபட்டுவிடுகிறது. விருந்துக்கு அழைத்தவர் எங்கோ தன்னுடைய தாழ்வுணர்வை இதன் மூலம் பூர்த்தியாக்கிக்கொள்ள முற்படுகிறார். சென்னையில் மாதத்துக்குப் பத்துப் பதினைந்து விசேஷங்களுக்கு எனக்கு அழைப்பு வரும். பெருநகர வாழ்வில் வேலை நெருக்கடி காரணமாகக் காலை நிகழ்ச்சிக்குச் செல்வது இன்று பெரும்பாலானோருக்குச் சாத்தியமற்றுவிடுவதால், நெருங்கிய உறவினர்களே அதில் பங்கேற்கிறார்கள்; முந்தைய நாள் அல்லது பிந்தைய நாட்களின் மாலையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளே ஊருக்கானதாக அமைகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு நானும் அப்படித்தான் செல்கிறேன். எந்த விருந்துப் பந்தியிலும் குறைந்தது இருபது இருபத்தைந்து பண்டங்கள் இருக்கும். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், தயிர் சாதம், பாயசம், ஐஸ்க்ரீம், காபி, பீடா… என்ன எழவுடா இது; யாரெல்லாம் வீட்டில் இப்படி டிபன் சோறு எல்லாவற்றையும் வகைதொகை இல்லாமல் கலந்து கட்டிச் சாப்பிடுகிறார்கள்; ஏன் வருகிற விருந்தினர்களை இப்படி வாட்டி எடுக்கிறார்கள் என்று தோன்றும். எல்லோருமே எல்லாவற்றையும் பெரிய செலவில்லாமல் எளிமையாகத்தான் செய்தாக வேண்டும் என்று இல்லை. விசேஷ வீட்டுக்காரர்கள் வசதிக்கேற்ப செலவிடுவது அவர் சுற்றத்தாருக்கும் நல்லது, நாட்டுப் பொருளாதாரத்துக்கும் நல்லது. பயனுள்ள வகையில் அதைச் செலவிடலாம். லட்ச ரூபாயில் நூறு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு பதில், சுற்றத்தார் தவிர ஐந்நூறு பேரை அழைத்து அன்னதானம் செய்யலாமே! வசதி இருக்கிறதோ, இல்லையோ; கடன் வாங்கியேனும் பெருஞ்செலவு செய் என்பது இன்று இந்தியாவில் ஒரு மோசமான பண்பாடாக வளர்ந்துவருகிறது. அதிலும் விருந்துகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதும், உயர் செலவில் இப்படித் தயாரிக்கப்படும் உணவில் கணிசமான பகுதி வீணடிக்கப்படுவதும் பாவக் கேடு. பல்லாயிரம் கோடிகள் ஒவ்வோர் ஆண்டும் இப்படி பாழாகின்றன. காந்தியைப் பிற்காலகத்தில் ஆழ ஊன்றி வாசித்தபோது வேறொரு விஷயம் பிடிபட்டது. தன்னுடைய ஆகிருதியை வெளிக்காட்டிக்கொள்ள உணவு, உடை, வாகனம் என்று ஒவ்வோர் அம்சத்திலும் தேவையைத் தாண்டி செலவிடுவோர் அகங்காரத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அவர்களிடம் உள்ள மோசமான வறுமையையும் வெளிக்காட்டுகின்றனர். காந்தியின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அது ‘ஆன்ம வறுமை’. ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் முதல்நிலைச் செல்வந்தருமான ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியினுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண தடபுடல்களைக் கண்டபோது திகைப்பு ஏற்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் தொடங்கி இந்தியாவின் முக்கியமான நட்சத்திரங்கள் அவ்வளவு பேரையும் அள்ளிக்கொண்டுவந்து நடத்தப்பட்ட இந்த மூன்று நாள் திருவிழாவில் மணமக்கள் நடனம் ஆடுகையில் துணை நடிகர்கள் போன்று பாலிவுட் பாட்ஷாக்கள் ஷாரூக்கானும், சல்மான் கானும் உடன் ஆடவைக்கப்பட்டது ஒன்று போதாதா இந்நிகழ்வின் பின்னுள்ள மனநிலையை நாம் புரிந்துகொள்ள? இதற்கெல்லாம் செலவு ரூ.1250 கோடி செலவு என்கிறார்கள். மூன்று நாட்களில் பறிமாறப்பட்ட உணவு வகைகளின் எண்ணிக்கை மட்டும் 2,500 என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட ஆடம்பரம் என்று சிலர் பிரமிக்கலாம்; எவ்வளவு அருவருப்பு என்று சிலர் முகம் சுளிக்கலாம். எனக்கு அம்பானியைப் பார்க்க பாவமாகவும் பரிதாபமுமாகத்தான் இருந்தது. சுற்றிலும் எவ்வளவு செல்வம் குவிந்திருந்தாலும் சில மனிதர்களிடம் எவ்வளவு பெரிய வறுமை! மனிதர்களின் ஆன்ம வறுமையைச் செல்வத்தைக் கொண்டு போக்கிவிட முடிவதில்லை! https://www.arunchol.com/samas-article-on-anant-ambani-radhika-merchant-marriage
  38. https://www.facebook.com/share/p/WdsMHGsMDxqxmV9S/?mibextid=oFDknk
  39. சாதி வேரோடு அறுத்தெறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வேள்ளாளர் மட்டும் தான் சாதி பாக்கினமோ எண்டு நான் கேட்டால் நீங்கள் என்னை முழுசி பாக்கக்கூடாது. இனவாதம்,மதவாதம்,மொழிவாதம்,பிரதேசவாதம்,ஊர்வாதம் என்பது போல் சாதிவாதமும் ஒரு வகையானது.
  40. உண்மை. ஆசாரவாதிகள் அவர்கள் நாட்டில் இருந்து புறப்பட்ட காலத்திலேயே உறைந்துவிட்டவர்கள். சமூக முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் மிகவும் குறுகிக்கொண்டுதான் போகின்றனர். காலம் அவர்களைக் காணாமல் போகச் செய்யும். இரண்டாவது காணொளியில் பவனீசனை உற்சாகமாகப் பேசவைக்கும் அளவிற்குத் தமிழர்களில் முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.
  41. ஆழ்ந்த அனுதாபங்கள். இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம். வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும். போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது. விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  42. "Garbage in, Garbage out" 😂 உயிரியல் மருத்துவ ஆய்வுலகில் நவீன அணுகுமுறைகளும் உபகரணங்களும் வந்து விட்டன. ஆனால் ஆய்வு முடிவுகளின் தரத்தை , தனி மனிதனின் சிந்தனையும் படைப்பாற்றலும் அதிகரிப்பது போல இந்த நவீன கருவிகள் பெரிதாக அதிகரிப்பதில்லை. இதன் காரணம், ஒரு உபகரணம் என்ன தான் நவீனமாக இருந்தாலும் "குப்பையைப் போட்டால் குப்பை தான் விளைவாக வரும்- garbage in, garbage out" கூகிள் உட்பட்ட இணையத் தரவுத் தளங்களில் கொட்டிக் கிடக்கும் போலித்தரவுகளைச் சுத்தம் செய்யாமல், அந்தப் போலித் தரவுகளின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை இயங்க வைத்தால் அது போலியாகத் தான் இருக்கும். இதை Artificial Intelligence என்பதை விட Artificial Ignorance என அழைக்கலாம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.