Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3061Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20018Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்8Points2954Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்7Points8557Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/26/24 in Posts
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.6 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
5 points
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.4 points- என் இந்தியப் பயணம்
4 pointsநாம் இலங்கை திரும்ப இன்னும் நான்கு நாட்கள் இருக்க தாஜ்மகாலை இன்னும் நாம் பார்க்கவில்லை. போய் பார்க்கலாம் என்கிறேன். யாரிடம் அங்கு போவது பற்றி விசாரித்தாலும் காரைப் பிடித்துக்கொண்டு போங்கள் என்கின்றனர் எமக்குத் தெரிந்த எம்மவர்கள். விலையை விசாரித்தால் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்களைத் தாண்டி விலை சொல்ல, இன்னொருவர் தனக்குத் தெரிந்த டிராவல் ஏஜெண்ட் இருக்கிறார். அவர்கள் எல்லா வசதியும் செய்து தருவார்கள் என்கிறார். அவர்கள் வெளிநாட்டினர் என்றதும் இன்னும் அதிக விலை சொல்ல, வேண்டாம் என்றுவிட்டு போனில் ஒன்லைனில் புக் செய்ய முயன்றால் அதிலும் விலை அதிகமாகக் காட்ட, உது சரிவாராது என்று எண்ணி நாமே நேரில் T நகரில் உள்ள ஐந்து டிராவல் ஏஜெண்ட்டிடம் போய் விசாரித்ததில் ஐந்தாவதாகப் போனவர் நியாய விலை சொல்கிறார். வெளிநாட்டு என்று கூட்டிப் போடாதீர்கள் என்றதற்கு நீங்கள் பக்கத்தில் வந்து இருந்தே பாருங்கள் என்கிறார். சென்னையில் இருந்து மூன்று நாட்கள் தொடருந்தில் போகலாம். அது சீப். ஆனால் உடனே ரிக்கற் எடுக்க முடியாது என்கிறார். எமக்கு மூன்று நாட்கள் போவது சரிவாராது. விமானத்தையே பாருங்கள் என்கிறேன். ஆக்ராவுக்கு நேரே விமானச் சேவை இல்லை. நீங்கள் டெல்லி போய் அங்கிருந்து தொடருந்தில் தான் போக வேண்டும் என்கிறார். விமான மற்றும் தொடருந்து இரண்டுக்குமான விலை 36 ஆயிரம் முடிய மகிழ்வோடு ரிக்கற்களை வாங்கிக்கொண்டு வருகிறோம். சென்னையில் இருந்து அடுத்தநாள் அதிகாலை விமானம். ஹோட்டலில் இருந்து ஊபர் போட 565 ரூபாய்களுக்கு வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பயணம். விமானத்தில் தண்ணீர் மட்டும் இலவசம். இந்திராகாந்தி விமான நிலையம் நன்றாகத்தான் இருக்கிறது. அங்கிருந்து வெளியேவந்து தொடருந்தைப் பிடிக்க அரை மணிநேரம் டாக்ஸியில் பயணம் செய்து நிசாமுதீன் என்னும் தொடருந்து நிலையத்தை அடைந்தால், அது சேரியைப் போன்று காட்சியளிக்கிறது. சேறும் சகதியும் நாற்றமும் சனக் கூட்டமும்...........அப்படி ஒரு இடத்தை இதுவரை நான் காணவே இல்லை. அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவும் உண்ணவில்லை. எனக்கோ பசி. இன்னும் எமக்கு ஒன்றரை மணி நேரம் இருக்கு. வடிவா உணவகம் ஒன்றில் உந்துவிட்டுப் போவோம் என்று இருவரும் முடிவெடுத்து எமது கைப்பொதியை நிலத்தில் வைத்து உருட்டாது கையில் தூக்கியபடி நல்ல உணவகத்தைத் தேடினால் ஒன்றுகூடச் சொல்லும்படியாக இல்லை. ஓட்டோக்காரர் வேண்டுமா வேண்டுமா என்று கரைச்சல் வேறு. அவர்களைப் பார்க்கவே காட்டுமிராண்டிகள் போன்ற தோற்றம். படங்களில் வரும் வில்லன்கள் கூட அப்படி இருக்க மாட்டார்கள். ஓட்டோவில் ஏறி வேறு இடம் சென்று உணவகம் தேடி உண்ணவே பயமாக இருக்க அங்கேயே ஒரு ஓட்டலில் அமர்ந்தால் நெருக்கமான மேசை கதிரை. ரொட்டி வகைகளே அதிகமிருக்க பூரியைத் தெரிவு செய்கிறோம். அப்படி ஒரு உணவை என் வாழ்நாளில் உண்டதே இல்லை. எண்ணெயில் குளித்த பூரிக்கு சாம்பார் போல ஒன்று. அதைவிட இரு நிறங்களில் சட்னி போல ஒன்று. அதைவிட ஊறுகாய். என்னடா கறுமம். பூரிக்கு யாராவது ஊறுகாய்தொட்டு உண்பார்களா என எண்ணியவுடன் சென்னை உணவகங்களின் சுத்தமும் சுவையுமே கண்முன் வந்தது. வேண்டா வெறுப்பாக பூரியை உண்டுவிட்டு கோப்பியும் குடித்துவிட்டு வெளியே வர, இன்னும் நேரம் இருக்கு. வா அந்தப் பக்கம் இருக்கும் கடைத் தெருவைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார் மனிசன். கடைகளில் உடைகளும் சரி உணவுப் பொருட்கள் சரி மிகச் சொற்பமகவே இருக்கின்றன. பழங்கள் வாங்குவோம் என்று பழத்தைத் தொட்டுப் பார்த்தால் குளிரூட்டியில் இருந்து எடுத்தவை போல் குளிர்கின்றன. சரி கச்சான் வாங்குவோம் என்று எண்ணி ஒரு பையை எடுத்துக்கொண்டு பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றபின் தொடருந்து நிலையத்துள் நுளைகிறோம். எக்கச்சக்கச் சனம் போவதும் வருவதுமாக இருக்க பயணிகள் இருப்பதற்கான அறை ஒன்று தெரிகிறது. அங்கு சென்று வெறுமையாக இருந்த இருக்கையில் அமர்கிறோம். கணவர் சென்று எத்தனையாவது இலக்க நடைமேடை என்று பார்த்துவிட்டு வருகிறார். இன்னும் முக்கால் மணி நேரமிருக்க ஆண்கள் பலரும் பலவிதமான குளிராடைகளையும் தொப்பிகளையும் அணிந்திருக்க, இவர்கள் ஏன் இதை அணிகிறார்கள் என்று எண்ணினேனே தவிர யாரையும் கேட்கவில்லை. பெண்களும் தடிப்பான சால்வைகளையும் ஒன்றுக்கு இரண்டு ஆடைகளையும் அணிந்திருக்க பான் காத்து இதுகளுக்குக் குளிருதுபோல. றெயினுக்குள்ளும் ஏசி வேலைசெய்யும்போல என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் இருக்க நாம் எழுந்து எமது தொடருந்து நடைமேடைக்குப் போய்ப் பார்க்கிறோம். பெரும்பாலான தொடருந்துகள் மிக மிக நீளமானவையாக இருக்கின்றன. எமது விரைவுத் தொடருந்து. ஆனாலும் ஆக்ரா செல்ல கிட்டத்தட்ட நான்கு மணிநேரம். தொடருந்தில் ஏறி அமர்ந்ததும் அதன் வசதியைப் பார்த்து மகிழ்வு ஏற்பட்டது. இடைஞ்சல் இல்லாமல் வசதியான சாய்ந்து தூங்கக்கூடியதாயக இருக்க மனதில் நிம்மதி ஏற்பட்டது. இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் விவசாய நிலங்களில் பல பயிர்கள் நடப்பட்டிருக்க எங்கும் பச்சைப் பசேல். ஆனால் தொடருந்துத் தடத்துக்கு அண்மையில் சேரிகள் போன்று வடிவமற்ற வீடுகளும் ஆட்களும். நீர்கள் தேங்கி இருந்த இடங்களில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்க தமிழ் நாட்டின் செழிப்பும் மக்களும் தான் மனக்கண்ணில் வருகிறார்கள். தொடருந்து கிளம்பி ஒரு மணி நேரம் போக உணவுகள் வருகின்றன. எம்மை முதலே பயண முகவர் உணவும் ஓடர் செயவா என்று கேட்க சுத்தமாக இருக்காது என்று வேண்டாம் என்றுவிட்டோம். ஆனால் அவர்கள் பரிமாறிய உணவு மற்றும் முறைகளைப் பார்த்தபின் அதுவும் அக்கம்பக்கம் உணவு வாசனை எம் பசியைக் கிளற, நாமும் உணவை வாங்கி உண்கிறோம். முன்னரே ஊடர் செய்திருந்தால் 200 ரூபாய்கள். இப்ப செய்வதால் 250. ஆனால் நினைத்ததுபோல் இல்லாமல் உணவு நன்றாக இருக்க, சிறிது நேரம் செல்லத் தேனீர்,தண்ணீர் போத்தல் எல்லாம் தருகின்றனர். சிறிது நேரம் தூங்கி வெளியே பார்த்து ஆக்ரா வரும்வரை நேரம் போவதே தெரியவில்லை. வரும்4 points- சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆசிரியர்
சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆந்திராவின் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர். மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்காக ஹரிதா விகாஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். வரி குச்சுலு எனும் உணவுக் கூடுகளை தயாரிப்பதும் அதை செய்வது எப்படி என மக்களுக்கு கற்றுக்கொடுப்பதும் இந்த அறக்கட்டளையின் முக்கியப் பணி. சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்களைக் கொண்டு பறவைகளுக்காக இந்த உணவுக்கூடுகள் உருவாக்கப்படுகின்றன. இது குறித்து பேசிய அவர், “எங்கள் முக்கிய நோக்கம் பறவை உணவுக்கூடுகளைத் தயாரிப்பது. அதை செய்வது எப்படி என்பதை கிராமத்தில் பலரும் மறந்துவிட்டனர். நான் ஆசிரியராக வேலை செய்த போது, சுப்பா ராவ் என்பவர் கோவில்களில் நெல் உணவுக்கூடுகளை தொங்கவிடுவார். அதைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும். அவரிடமிருந்து தான் இதை எப்படிச் செய்வது என் கற்றுக்கொண்டேன். இதை விதவிதமாக செய்து, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க எண்ணினேன். பலரும் தீவனக்கூடுகளை செய்து, வீட்டில் வைத்தால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கூடும். அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால், மைனாக்கள், கிளிகள், போன்ற பல பறவைகள் மற்றும் அணில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த உயிர்கள் நமது வாழ்வாதாரங்களை உயர்த்தும். இதுவே எனது நோக்கம்” என்கிறார். பணி ஓய்வுக்குப் பிறகு கிராமங்களுக்குச் சென்று, சிட்டுக்குருவிகளுக்கான உணவுக்கூடுகளை வீடுகளில் தொங்க விடுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவரது முயற்சியால், பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் வீடுகளில், ஊர் கோவில்களில், சுற்றுப்புறங்களில் தீவனக்கூடுகளை வைக்கத் தொடங்கியுள்ளனர். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார் தலிநாயுடு. இதிலிருந்து கிடைக்கும் நெல்லை தீவனக்கூடுகளைத் தயாரிக்க மட்டுமே பயன்படுத்துவதாக கூறுகிறார். பறவை கூடுகளை உருவாக்குபவர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது என்கிறார் தலிநாயுடு. சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற இவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2012 முதல், பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்கான இவரது முயற்சிகளைப் பாராட்டி பல விருதுகளை அளித்துள்ளது அரசு. 2019 முதல் ஹரிதா விகாஸ் அறக்கட்டளை மூலமாக சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் தலிநாயுடு. செய்தியாளர்: வி.சங்கர் ஒளிப்பதிவு: ரவி பெடாபொலு https://www.bbc.com/tamil/articles/crg388x463lo2 points- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
சுமத்திரன் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அதற்காக உழைப்பவர் அல்ல என தமிழ் மக்கள் புரிந்து வைத்துள்ளனர்... ஜெ.வி.பி ஏதாவது புதிதாக சொல்லுகின்றார் என அறிய வந்திருப்பார்கள்2 points- என் இந்தியப் பயணம்
2 pointsதொடருந்து நின்றதும் நான் முன்னால் இறங்கி நடக்கிறேன். குளிர்வதுபோல் இருக்க அப்போதுதான் ஏன் எல்லோரும் குளிராயடைகளை அணிந்திருந்தனர் என்று புரிகிறது. எல்லாம் பார்த்த நாங்கள் வெதரையும் பாத்திருக்கவேணும் என்கிறார் கணவர். முன் வாசலுக்கு வந்து சேரந்தவுடன் கம் வித் மீ மடம் என்று என்னருகில் ஒரு குரல் கேட்கிறது. நான் திரும்பி அவனை ஒருவாறு பார்த்துவிட்டு இல்லை நாம் டாக்ஸியில் தான் போகப் போகிறோம் என்கிறேன். என்னிடம் டாக்ஸி இருக்கு என்றுகூற, இல்லை நான் ஸ்டாண்டில் போய் பிடிக்கிறேன் என்கிறேன். கணவர் அருகில் வந்து உவன் நீ இறங்கின நேரம் தொடக்கம் உன்னை மற்றவர் அண்டாமல் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு வந்தவன் என்கிறார் சிரித்தபடி. மடம் அங்க தான் டாக்ஸி ஆபீஸ் இருக்கு. என்கூட வாங்க என்றுவிட்டு அங்கு போய் ஏதோ இந்தியில் கதைத்துவிட்டு இந்தாங்க மடம் றிசீற். 200 ரூபா முதல் கட்டணும் என்று கூறக் கணவர் 200 ரூபாய்களை எடுத்துக் கொடுக்கிறார். பின் எம்மை அழைத்துக்கொண்டு சென்றால் நடப்பதற்கு இடமின்றி அடுக்கியபடி டாக்ஸிகள். நாம் ஏறி அமர்ந்து எவ்வளவு நேரம் இங்கிருந்து தாஜ்மகால் போக என்கிறேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் போய்விடலாம் என்கிறான். தாஜ்மகாலுக்குப் பக்கமாக ஒரு நல்ல ஹோட்டலுக்கு எம்மைக் கூட்டிப் போகும்படி கேட்க, பக்கத்திலே எந்த கோட்டலும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நல்ல கோட்டல் எல்லாம் இருக்கு மடம் என்கிறான். அவன் காட்டியதில் அருகருகே இரண்டு கோட்டல்கள் இருக்க ஒன்றைத்தெரிவு செய்கிறோம். கீற்றர் இருக்கா, சுடுதண்ணீர் வருகிறதா என்று கேட்டதற்கு ஓம் ஓம் என்றார்கள். 3200 ரூபாய்களுக்கு அறை நன்றாகத்தான் இருக்க வந்த பயணக் களைப்புப்போகக் குளிப்போம் என்றால் தண்ணீர் கடுங்க குளிர். பைப்பில் சுடுநீரே வரவில்லை. அவர்களுக்குப் போன் செய்தால் பார்ப்பதற்கு ஒருவர் வருகிறார். ஒரு பதினைந்து நிமிடமாவது உள்ளே நின்று ஏதோ செய்து சுடுநீரை வரச் செய்துவிட்டுப் போக குளித்து வெளியே வந்தால் குளிர். கீற்றர் வேலை செய்யவே இல்லை. மணி ஏளாகி இருட்டி விட்டதால் வெளியே செல்லவும் மனமின்றி பசியும் இன்றி கட்டிலுக்குப் போனால் போர்வை குளிருக்கு ஏற்றதாக இல்லை. மீண்டும் போனடித்தால் அவர்கள் எடுக்கிறார்களே இல்லை. இரவு முழுவதும் தூங்காது புரண்டு படுத்து காலை ஆறு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு ஏழுமணிவரை நடுங்கிக்கொண்டு இருந்துவிட்டு காலை ஏழுக்குத்தான் தங்கள் உணவகம் திறப்பார்கள் என்று கூறியதால் உணவகத்தைத் தேடிச் செல்கிறோம். அங்கு சென்றால் யாரையுமே காணவில்லை. பழைய காலத்துத் தளபாடங்களுடன் தூசிகள் நிறைந்ததுபோல் காணப்படுகிறது அந்த உணவகம். இன்னும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வெளியே செல்வோம் என்று எண்ண ஒரு முப்பது மதிக்கத்தக்க ஒருவன் வருகிறான். காலை உணவு உண்ண வேண்டும் என்றதற்கு ஒரு மெனு காட்டைத் தருகிறான். அதில் சான்விச் ஒன்றுதான் தெரிந்த பெயராக இருக்க முட்டை ஒம் லெற்றும் ரோஸ்ற் உம் உண்டு கோப்பியும் குடித்துவிட்டு அறைக்கு வந்து அந்த டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து கடைக்குப் போகவேண்டும் என்கிறோம். கடைகள் ஒன்பதுக்குத்தான் திறக்கும் என்று கூற மீண்டும் கட்டிலில் அமர்கிறோம். சாதாரணமாக இருக்க முடியாதவாறு குளிர். நிலத்தில் வெறுங் காலை வைக்கவே முடியவில்லை. டாக்ஸி ஓட்டுனர் 8.45 இக்கு வர அவருடன் சென்றால் நாம் நினைத்ததுபோல் ஒரு கடைக்கூடத் தென்படவில்லை. வீதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர யாரையும் காணவில்லை. முக்கியமாகப் பெண்களை. கடையின் உள்ளே சென்றால் பழங்கடை போன்ற தோற்றம். வேறு பெரிய கடைகள் இல்லையா என்று கேட்க இதை விட்டால் 20 கிலோ மீற்றர் போகவேண்டும் என்கிறான். வேறு வழியின்றி எனக்கும் கணவருக்கும் யம்பர் மற்றும் சொக்ஸ், சோல் என்பவற்றை வாங்கி வந்து அணிந்துகொண்டு எமது பயணப் பொதியையும் எடுத்துக்கொண்டு கோட்டலை விட்டுப் போகிறோம் என்று சொல்லித் திறப்பைக் கொடுத்துவிட்டு வந்து டாக்ஸியில் ஏற, ஏன் மடம் வக்கேட் செய்திடீங்களா என்கிறார். கடுங் குளிர் என்கிறேன். மடம் வேறு கோட்டல் காட்டவா என்று கூற நாமே பார்த்துவிட்டோம் என்று கூறி தாஜ்மகாலுக்கு நடந்து போகும் தூரத்தில் இருக்கிறது என்கிறேன். அவனுக்கு போனைக் காட்ட இந்த இடத்துக்கு கார் போகாது மடம் என்கிறான். சரி நீ இறக்கிவிடும் தூரத்தில் இருந்து ஓட்டோ பிடிக்கிறோம் என்று கூற கார் பத்து நிமிட ஓட்டத்தில் ஒரு பெரிய வீதியில் நிற்க, பக்கத்தில் நின்ற சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி வந்து வாருங்கள் என்கிறான். நாம் டாக்ஸி ஓட்டுனரைப் பார்க்க, பயப்பிடாமல் போங்க என்கிறார். அதில் இருந்து ஒரு ஐந்து நிமிடத்தில் நாம் சொன்ன கோட்டல் சித்தார்த்தா வருகிறது. பார்க்க நல்லதாக இருக்க அங்கும் போய் அறையைப் பார்த்தபின் வரவேற்புக்குச் சென்று விபரங்களைக் கொடுத்துவிட்டு எமது கடவுச் சீட்டுகளை வாங்கிப் படம் எடுத்துவிட்டு அறைக்குப் போக எமது பயணப் பொதிகளைத் தூக்குகிறான் ஒருவன். பே பண்ணவேண்டும் என்று சொல்ல கணவர் வங்கி அட்டையை எடுக்க, காட் பேமெண்ட் நாம் எடுப்பதில்லை என்கிறான். உடனே நான் எனது கைப்பையில் இருந்து 3000 ரூபாய்களை எடுத்துக் கொடுத்துவிட்டு அறைக்குச் செல்கிறோம். அறையில் பயணப் பொதிகளை வைத்துவிட்டு அதிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் தாஜ்மகாலைப் பார்க்கக் கிளம்புகிறோம். பெண்களும் ஆண்களுமாய் அந்தக் காலையிலேயே நிறையப் பேர் வந்தவண்ணம் இருக்க நிறையப்பேர் காலையில் வெள்ளனவே வந்து சூரிய உதயம் பார்த்துவிட்டுக் கிளம்புகின்றனர். நான் ஏற்கனவே எத்தனையோ இடங்களில் சூரிய உதயம் பார்த்ததனாலும் குளிராடைகள் வாங்காததனாலும் அதிகாலை செல்ல முடியவில்லை. இந்தியர்களுக்கு 200 ரூபாய்கள். எமக்கு 1250 ரூபாய்கள். உள்ளே செல்ல சனம் கும்பல் கும்பலாக நின்று படம் எடுப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். எம்மிடமும் ஒருவர் வந்து படம் எடுக்கக் கேட்கிறார். 15 படங்கள் எடுக்க 1500 ரூபாய்கள். அவர்களே எம்மை ஆங்காங்கே நிற்கவைத்துப் படம் எடுக்கிறார். நாம் எனக்கு தங்கி இருக்கிறோம் என்று கேட்டு அதற்குப் பக்கத்தில் தான் தனது ஸ்டூடியோ. தான் மகன் படங்களைக் கொண்டுவந்து தருவான். அப்போது பணத்தைக் கொடுங்கள் என்கிறார். எப்பிடி ஒரு காசும் வாங்காமல் விட்டார் என்கிறேன் கணவரிடம். எங்கட படத்தை விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும் என்கிறார். படங்களில் டிவி இல் பார்த்த சுற்றுப்புறம் நேரில் பார்த்ததிலும் அழகாய் இருந்ததாக எனக்குத் தெரிகிறது. படிகளில் ஏறி மேலே செல்ல அங்கு ஒரு பாதுகாப்புப் பிரிவு. எம்மை ஸ்கான் செய்தே விடுகின்றனர். போதாததற்கு காலில் அணிந்து செல்வதற்கு பொலிதீனும் 20 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று அருகில் செல்கிறோம். காவலுக்கு துப்பாக்கியுடனும் ஆட்கள் நிற்கின்றனர். அழகாய்த்தான் இருக்கிறது பளிங்குக் கட்டடம். பின் பக்கம் சென்று யமுனா நதியைப் பார்த்தால் அது தன் பாட்டுக்கு வெட்டவெளியில் ஓடிக்கொண்டிருக்கு. பெரு மரங்களோ அல்லது செழிப்போ இல்லாத ஆறும் கரையும் என்னை எந்தவிதத்திலும் கவரவே இல்லை. சுற்றி வந்து உள்ளே செல்கிறோம். நான் வேறுவிதமாகக் கற்பனைசெய்து வைத்ததனாலோ என்னவோ என்னை எதுவும் பெரிதாக ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. உள்ளே இரு சமாதிக்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிக நேரம் நிற்க அவர்கள் விடவில்லை. படம் எடுப்பதும் தடை என்று, போட்டிருக்க சுற்றிவரப் பார்க்கிறேன். மேலே கமரா ஒன்று எம்மைப் பார்த்துக்கொண்டிருக்க படம் ஒன்றும் எடுக்காது வெளியே வருகிறோம். பகல் 11 மணிக்கே வெயில் கொழுத்துகிறது. ஒரு இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அவதானித்தபின் கீழே இறங்கி வர மரங்கள் இருப்பதனால் சிறிது ஆறுதலாக இருக்க மர நிழலில் நடக்கிறோம். பின் மீண்டும் திரும்பி தாஜ்மகாலை வடிவாகப் பார்த்துவிட்டு வெளியே வர இவ்வளவுதானா என்னும் எண்ணம் மனதில் எழாமல்இல்லை. வரும்2 points- ஒரு கொய்யா மரத்தின் விவரம்
2 pointsஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
2 points- முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் - கருணா அம்மான்
கருணாவுக்கு மஹிந்த 'வினதும் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளினடமும் இருந்த அரசியல் செல்வாக்குக்கு கிழக்கு மாகாணத்தின் நிரந்தர முதல்வர் ஆகியிருக்கலாம், எந்த பிரதேச வாதத்தை கையில் எடுத்தானோ அதே பிரதேசத்தை மக்கள் ஆதரவுடன் மட்டுவின் ஏக போக ராஜாவாக கோலோச்சி இருக்கலாம், ஆனால் இன்றுவரை அது முடியவில்லை. காரணம் ஒன்றேதான் ஆயிரம் ஆயிரம் போராளிகளை விடுதலைக்காக ஈந்த அந்த மண் கருணாவை ஒரு முன்னாள் புலிகளின் போராளியாகவோ தளபதியாகவோ ஏற்கவில்லை, ஒட்டுமொத்த இலங்கையையுமே நடுங்க வைத்த ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அது எச்சகலகளுக்கு கெளரவம் கொடுக்காது, பிறந்த மண்ணே இவரை போராளியாய் ஏற்று கொள்ளாதபோது வடபகுதி வந்து முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் இணைக்க போகிறாரா? குடை வேணும் எண்டால் ஒரு ஓரமாய் உக்கார்ந்து விக்கலாம்2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
தலைவருக்கு பின் தலையில் குட்டி வழுக்கை போட்டதை கண்டிக்கிறேன் 😄2 points- டொனால்ட் ட்ரம்பின் சட்ட முன்னேற்றங்களின் காட்டு நாளிலிருந்து எடுக்கப்பட்டவை
கூகிளிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.2 points- காந்தி கணக்கு
2 pointsகாந்தி கணக்கு ------------------------- 'ஓஷோவைத் தெரியுமா?' அந்தப் பெயரில் ஒரு ஆள் இந்தச் சுற்று வட்டாரத்தில், இந்தக் கூட்டத்தில், என்னுடைய இருபதுக்கும் மேலான வருட பழக்கத்தில் இருந்ததாக ஞாபகம் இல்லை. கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் இப்படி எந்த விளையாட்டிலும் இந்தப் பெயரில் எவரையும் நினைவில் இல்லை. 'ஓஷோ என்ன விளையாடுகிறவர்?' 'இல்லை, இல்லை, ஓஷோ விளையாடுகிறவர் இல்லை. ஓஷோ ஆசிரமம் வைத்திருந்தார். தாடி வைத்திருந்தார். தத்துவப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.....' அந்த ஓஷோவா, அந்த தாடி வைத்த ஓஷோ இங்கே இப்பொழுது எதற்காக வருகின்றார் என்று முன்னுக்கு நின்ற புதிய பஞ்சாபி நண்பரை உற்றுப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் ட்ரக் ஓடுவார்கள், பெரிய தோட்டங்கள் செய்வார்கள், எல்லா விளையாட்டுகளிலும் அசத்துவார்கள். இரவில் நித்திரைக்குப் போகும் முன் தவறாமல் ஒரு கலன் பால் குடிப்பார்கள். இதைவிட மகாத்மா காந்தியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டுவார்கள். இல்லையப்பா, அவர் அது செய்யவில்லை என்று நான் காந்திக்காக ஒவ்வொரு முறையும் ஆஜராகி, அந்த வழக்கு இன்னும் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. ஓஷோவைப் பற்றிய விசாரணை இதுவே முதல் தடவை. ஜலியான்வாலா பாக் படுகொலை, பகத்சிங் அவர்களின் தூக்கு தண்டனை மற்றும் இன்னும் சில விடயங்களால் காந்திக்கும் சீக்கியர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. காந்தி காலனிய ஆட்சியாளர்களை கண்டிக்காதது மட்டும் இல்லாமல், வெள்ளை இன ஆட்சியாளர்களுக்கு இந்த விடயங்களில் ஆதரவாக இருந்தார் என்ற கோபம் சீக்கிய மக்களிடையே சாம்பல் மூடிய தணலாக இன்றும் தகித்துக் கொண்டிருக்கின்றது. 'ஆ, தெரியும் ஓஷோவை. சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன்.......' ஓஷோவைப் பற்றித் தொடர்ந்தார் புதிய நண்பர். ஓஷோ வாழ்க்கையை அனுபவிக்க சொல்லியிருக்கின்றார், அழகை ரசிக்க சொல்லியிருக்கின்றார், சிரிக்கச் சொல்லியிருக்கின்றார், சிந்திக்கத் தேவையில்லை என்றிருக்கின்றார், இப்படியே வரிசை நீண்டது. நண்பருக்குத் தெளிவான ஆங்கிலம், மன்மோகன்சிங் குடும்பமாக இருப்பாரோ என்றும் ஒரு நினைப்பு வந்தது. 'எங்கேயும் எப்போதும் எப்படி இருந்தாலும், ஆனந்தமாய் இருங்கள்' என்று ஓஷோ சொல்லியிருக்கின்றார் என்றார் புதிய நண்பர். 'மகனே, இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் உங்கள் அணி தோற்றால், நீங்கள் நடுவரை படுத்தப் போகும் பாடு இருக்குதே, அது தான் உங்களின் ஆனந்தம்' என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன். விளையாட்டில், போட்டியில் தோற்பவர்கள் முதலில் நடுவரைத்தான் குற்றம் சொல்வார்கள், அது கிட்டத்தட்ட ஒரு பொதுவான உலக வழக்காக ஆகிவிட்டது. 'அங்கே பார்' என்றார். அவர் காட்டின திசையில் ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தார். கோடைகால இரவு, இன்னும் வெக்கை குறையாத நேரம், அந்தப் பெண் மிகக்குறைந்த, கண்டிப்பாகத் தேவையான உடைத் துண்டுகள் மட்டுமே அணிந்திருந்தார். நண்பர் பார்த்துக் கொண்டேயிருந்தார். தன்னையும் மறந்து, என்னையும் மறந்து விட்டார். நண்பரை மெதுவாகத் தட்டினேன். 'என்ன......' என்று திரும்பினார். 'மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?' என்று கேட்டேன்........ ஓஷோவாலும் காந்தியை காப்பாற்ற முடியவில்லை. சில ரணங்கள் தலைமுறைகள் தாண்டியும், தத்துவங்கள் தாண்டியும் காயாமல் காயமாகவே நீடிக்கும் போல.2 points- இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
20,000 பேரை 8 முதல் 17 வருடங்கள் வரை பின் தொடர்ந்த ஆய்வு, பெரும்பாலும் பலமான ஒரு ஆய்வு தான். ஆய்வின் ஒரு குறைபாடு, பங்கு பற்றியோர் சுயமாக வெளியிட்ட (self-reported) தங்கள் உணவுப் பழக்கங்களை வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள். இது போன்ற ஆய்வுகளைச் செய்ய வேறு வழிகள் இல்லையென்பதால், self-reporting ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு வழி தான். மேலதிக ஆய்வுகளை, இதய நலனைக் குறிகாட்டும் இரத்தக் கொழுப்பு வகைகளின் அளவுகளை அறிதல், இடையிட்ட விரதத்தினால் ஏதாவது வேறு நோய் நிலைகள் ஏற்படுகின்றனவா என்ற தேடல், என்பன மூலம் தொடர்வார்கள் என நினைக்கிறேன்.2 points- கடவுள் இருக்கிறாரா.............?
2 pointsஉண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் .... அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா? அறிவுறுத்துவீர்களா?1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
அந்தக் கஸ்ரம் எல்லாம் உங்களுக்கெதற்கு? அதற்குத்தானே பெருமாள், அல்வாயன், விசுகர் ......இருக்கிறார்கள். போற வாற வழியெல்லாம் அப்படியே,...சும்மா,.... எடுத்து விசிறிக்கொண்டே இருப்பார்கள். 🤣1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
1 point- ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து
1 pointஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ? நன்றாகத்தான் இருக்கிறது. ஒருமுறை கேட்டு பாருங்களேன். கலைப்பீட மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் https://www.facebook.com/share/v/5uw4U39n6WN1XeqS/1 point- ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து
1 pointஅருமை அருமை மிகவும் நன்றாக இருக்கின்றது........! 👍 நன்றி விசுகர்......!1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃 ..... இஸ்லாமிய உலகை உருவாக்க வேணும் என்ற கருத்து இஸ்லாமிய மக்களிடையே பலமாக பதிந்துள்ளது ..எப்பொழுது "அல்லாஹு அக்கபர் "என்ற குரல் உலகம் பூராவும் ஒலிக்கின்றதோ அன்றுதான் சாந்தி சமாதனம் உலகில் இருக்கும் என்பது இஸ்லாமியர்களின் எண்ணம்...இந்த கருத்தை தீவிரமாக இளம்வயதில் கடப்பிடிக்கும் இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து சில இஸ்லாமிய நாடுகள் தங்களது அரசியல் மற்றும் பொருளாதர தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் .ஐ.எஸ்.ஐ...சுன்னி இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் சிரியா ,பாகிஸ்தான் ,ஈராக்கில் சில பகுதிகளில் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை சவுதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள் மறைமுகமாக கொடுக்கின்றனர்.வல்லாதிக்க சக்திகளின் புலோக அரசியலின் செயல்பாட்டுக்கு இந்த தீவிரவாத குழுக்களை உபயோகப்படுத்துகின்றனர் . ரஸ்யாவில் அண்மையில் நடந்த தாக்குதல் வல்லாதிக்க சக்திகளின் "தியட்டர் ஒவ் ஒபெரேசன்" யை மாற்றுவதற்கான ஒர் திட்டம் .மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தான் இனிவரும் காலங்களில் ஒர் யுத்த களமாக மாறலாம்..... ஏற்கனவே கருங்கடலில் ரஸ்யா தனது கப்பல்களை இழந்து வருகிறது ...சீனாவின் எல்லையை தஜிகிஸ்தான் பகிர்ந்து கொள்கின்றது ....இந்தியா பாகிஸ்தானிடம் இழந்த ஜம்மு கஸ்மீரை மீடக போவதாக சொல்கின்றனர் ...பார்ப்போம்....என்ன நடக்கப்போகின்றது என....ஆப்காணிஸ்தானிடம் விட்டு போன அமேரிக்கா ஆயுதங்கள் மீண்டும் தஜிகிஸ்தானில் பயன்படுத்த படுமா?1 point- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
எதிரியை விட துரோகி ஆபத்தானவன் என்பதை 2௦௦9 பிறகு தமிழர்கள் நன்கு புரிந்து வைத்து உள்ளார்கள் . சுமத்திரன் எனும் துரோகியால் தமிழர்களின் தீர்வு பலதல முறை தாண்டி சென்று விட்டது என்பதை தமிழர்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டுள்ளார்கள் .1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இலங்கை ஏழை நாடாகியதன் காரணம் என்ன ? சிங்களம் தான் மட்டுமே இந்த நாட்டில் வாழனும் மற்றைய பூர்வீக குடி தமிழரை அழிக்கனும் எனும் இனவாத மமதையே இவ்வளவு பிச்சை கார தனத்துக்கு காரணம் முதலில் உங்களை போன்றவர்களின் எண்ணத்தை மாற்றனும் அதன் பின் அந்த மதன முத்தாகூட்டம் திருந்தும் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கு எடுபிடியாய் இருக்கும்மட்டும் அந்த மொக்கு கூட்டம் இன்னும் அழிவையே நோக்கி போகும் இனிமேலாவது அவங்களுக்கு நல்ல அறிவுரையை சொல்லுங்க .1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பாம்பின் கால் பாம்பறியுமோ இல்லையோ அமெரிக்காவை பற்றி நன் கு அறிந்த ஸ்கொட் றிட்டர் என்ன சொல்கிறார்?1 point- சனாதன வருத்தம்
1 pointசனாதனம் என்றால் தொன்மையானது என்று ஒரு பொருள் உள்ளது. மனிதர்களின் சில இயல்புகளும் மிகத் தொன்மையானதே. இந்த சில இயல்புகள் இன்னமும் மாறாமல் அப்படியே வந்து கொண்டிருக்கின்றது. ************************************* சனாதன வருத்தம் ---------------------------- புது மனிதர் ஒருவரை இன்று சந்தித்தேன் தான் ஒரு பெரியவன் என்று அவரே சொன்னார் அடிக்கடி சொன்னார் பெரிய வேலை என்றார் பெரும் பொறுப்பு என்றார் பெரிய சந்திப்புகள் என்றார் மற்ற எவரும் உருப்படி இல்லை நானும் உருப்படி இல்லை என்றார் என்னைத் தெரியாமலேயே எனக்கு எதுவும் தெரியாது என்றார் மேலே கீழே எவருக்கும் எதுவும் தெரியாது என்றார் இப்படியே நிற்காமல் இது போய்க் கொண்டிருந்தது இதற்கு மருந்து இன்னுமா இல்லை என்று நான் எப்பவோ யோசிக்கத் தொடங்கியிருந்தேன் பாவம் அந்த வீட்டில் பெரியவருடன் சேர்ந்து குடியிருப்பவர்கள்.1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
@விளங்க நினைப்பவன் இங்கு $15 V $50 இதுதான்1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சோதனையின் உச்சம். ராமநாதபுரத்தில் 5 "ஓபிஎஸ்"கள் போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவருக்கு போட்டியாக அதே பெயரில் அதே இனிஷியலில் இதுவரை 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாமக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் என 400- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது போல் அன்றைய தினமே உசிலம்பட்டி தாலுக்கா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மகன் பன்னீர் செல்வம் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளரும் சுயேச்சை என்பதால் சின்னங்கள் ஒதுக்கீடு என்பது வேட்புமனு ஏற்கும் நாளன்றுதான் தெரியவரும். இருவரும் சுயேச்சைகள் என்பதால் சின்னத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஓபிஎஸ்.இந்த நிலையில் ஓபிஎஸ் என்ற ஒரே பெயர் இனிஷியலில் மேலும் 3 பேர் இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனராம். இன்று மட்டும் மதுரையை சேர்ந்த 3 பேர் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் வேட்புமனு செய்துள்ளனராம். அதில் ஒருவர் தெற்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வம். எனவே தற்போது களத்தில் 5 ஓபிஎஸ்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றார் ஓபிஎஸ், அப்போது அவர்களிடம் இரு தொகுதிகளை கேட்ட நிலையில் தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு மறுத்தார். 2 தொகுதிகள் வேண்டுமானால் தாமரை சின்னம், சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியென்றால் ஒரு தொகுதிதான் என பாஜக கூறிவிட்டதாம். இதனால் ஓபிஎஸ் தனி சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளராம். இதற்காக ராமநாதபுரத்தை அவர் தேர்வு செய்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அதிமுக இந்த தேர்தலில் வெல்லாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என ஓபிஎஸ் போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு சோதனையாக மேலும் 4 பேர் அதே பெயர் இனிஷியல் கொண்டவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கெனவே பதவி போய், கட்சி போய், பல முறை நீதிமன்றங்களுக்கு சென்றும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் இது போன்ற ஒரு சிக்கலால் ஓபிஎஸ் வேதனையில் இருக்கிறாராம். ஒரு வேளை ஓபிஎஸ்ஸை எப்படியாவது தோற்கடிக்க அதிமுகவினர் யாராவது ஓபிஎஸ் என்ற பெயர் கொண்டவர்களை தேடி தேடி பிடித்து அனுப்புகிறார்களா, இல்லை இது பாஜக வேலையா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்குள் இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ தெரியவில்லை. Read more at: https://tamil.oneindia.com/news/ramanathapuram/there-are-5-members-who-have-same-name-and-initials-o-paneer-selvam-files-nomination-in-ramanathapur-593821.html1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
1 point- இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
உங்கள் வீட்டில் பறவைகளை தொந்தரவு செய்ய ஒருவரும் இல்லை என்றவுடன், சுகுமாரனின் இந்தக் கவிதை ஞாபகத்திற்கு வந்தது. அப்படியான வீடுகளுக்கும், இடங்களிற்கும் கடவுளும் சேர்ந்து வந்து போகின்றார் என்ற ஒரு அர்த்தத்தில் இதை கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கின்றார் என்று நான் விளங்கிக்கொண்டேன். ************ செவ்வாய்க்கு அடுத்த நாள், ஆனால் புதன்கிழமை அல்ல --------------------------------------------------------- வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ உதவி கோரியோ நன்கொடை திரட்டவோ எப்போதாவது யாராவது வருவார்கள் என்பதைத் தவிர்த்தால் வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர வருகையாளர் அதிகமில்லை வீட்டுக்கு அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும் அபூர்வமாக நுழைவதுண்டு விடிந்ததும் காற்றின் வெளிச்சம் வீட்டைப் பிரியாத பூனையின் காதலன் காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று விசாரனை செய்ய வரும் நீல வால் குருவி தொட்டிப் பூவை பறித்தது ஏன் என்று பிராது சொல்லும் தேன்சிட்டு மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை அறைக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக் கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு இவையெல்லாம் தற்செயல் வருகைகள் இன்று வெய்யிலின் இளநீர் வாசனையோடு கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும் நட்டநடுப் பகலில் மூடிய கதவைக் கடந்து யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன் கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன் யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை எனினும் யாரோ வந்து வீடு முழுவதும் ஊன்றி நடந்து திரும்பிய அடையாளாமாய் தாழிட்ட கதவுக்கு இப்பால் வாசல் நிலையருகில் தரையில் ஒரு ஜோடிக் காற்சுவடுகள் ஆரஞ்சு ஒளியுடன் விடுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன் அப்போது முதல்தான் இதயத் துடிப்பின் நிமிடக்கணக்கில் ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன் அன்று செவ்வாய்க்கு மறு நாள், ஆனால் புதன்கிழமை அல்ல. - சுகுமாரன்1 point- சிட்டுக் குருவிகளை காக்கப் போராடும் ஆசிரியர்
காலையிலேயே மகிழ்ச்சியை கொடுத்த செய்தி.....👍 ஆந்திராவில் ஒரு கணவனும், மனைவியுமாக ஒரு பெரும் வறண்ட நிலப்பரப்பாலான ஊர்களில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஆல மரங்களை வளர்த்தெடுத்திருக்கின்றார்கள் என்ற ஒரு கட்டுரையை சில மாதங்களின் முன் வாசித்திருந்தேன். 'இப்பொழுது அங்கு குருவிச் சத்தங்கள் கேட்கின்றன...' என்றும் அந்தக் கட்டுரையில் இருந்தது........1 point- முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
வெளியே உள்ள போராளிகள் எவரும் இன்னமும் சுதந்திரமாக இல்லை. புலனாய்வுப் பிரிவுகளின்(இலங்கை இந்திய) கெடுபிடிகளுக்குள்த் தான் வாழ்கிறார்கள். இவர்கள் வேறு நாடுகளுக்கு போக முடியுமானால் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும்.1 point- முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
இந்தியாவில் அனைத்து வழக்குகளும் முடிந்த நிலையிலேயே நாடு திரும்புகிறார்கள், இலங்கையில் அவர்கள்மீது எந்த வழக்குகளும் இருப்பதாக தெரியவில்லை, உயிருடன் திரும்பினால் உடனடியாக சட்ட உதவியை நாடலாம் அதற்கு தமிழ்கட்சிகள் உதவுவார்களா அல்லது இந்திய/இலங்கை எஜமான விசுவாசம் காண்பிப்பார்களா என்பது எவருக்குமே தெரியல.1 point- கருத்து படங்கள்
1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சரி போகட்டும் விடுங்கோ. இப்ப ஏதாவது சொல்லி விடுங்கோவன். வரக்கை கொண்டு வருவார்1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
அண்ணை, நீங்கள் இங்கே ஒரு பிஸ்தாவாகத்தான் இருக்கிறீர்கள், இங்கு மோட்டார் சைக்கிள் ஓடுவது ஆபத்தானது1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நான் மோட்டார் சைக்கிளுக்கு தனியாக சோதனை எடுத்து ஓடியும் காட்டி எடுத்து வைத்துள்ளேன். ஒவ்வொரு தடவை இலங்கை போகும் போதும் AAA அலுவலகத்துக்கு போய் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு தான் போய்வருகிறேன்.1 point- இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
😀... நீங்கள் சொல்லும் இந்தக் கதை இன்றைய கணினி தொழில்நுட்ப துறைக்கு சரியாக பொருந்தும். யாரோ இரவு பகலாக வேலை செய்வார்கள், யாரோ பெயர் எடுப்பார்கள்....1 point- இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமா? இதன் பக்கவிளைவுகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு புதிய 'டயட்' திட்டங்கள் அவ்வப்போது டிரெண்டாகும். பெரும்பாலானோர் அந்த 'டயட்' திட்டங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். அப்படி, பேலியோ, கீட்டோ என பல்வேறு 'டயட்டுகள்' உள்ளன. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பு முயற்சியில் பெரும்பாலானோர் பின்பற்றும் டயட் திட்டமாக இருக்கிறது 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும் 'இடைநிலை உண்ணாவிரதம்'. இதுவொரு வகை விரத முறையே. பொதுவாக நாம் ஒருநாள் முழுதும் காலையிலிருந்து இரவு வரை 3-4 முறை உணவு எடுத்துக்கொள்வது வழக்கம். இதில், குறைவான கால இடைவெளியில் உணவை உட்கொண்டுவிட்டு, அதைத்தொடர்ந்து அதிகமான நேரம் விரதமிருப்பதே இந்த 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்'. 8 மணிநேரம் உணவு - 16 மணிநேரம் விரதம் (16:8) என்ற முறையை பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். தங்களின் வசதிக்கேற்ப இந்த நேரம் 14:10, 12:12, 18:6 என நேர இடைவெளிகளை மாற்றிக்கொள்கின்றனர். இப்படி அதிக நேரம் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லதா? இதனால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? இந்த விரதமுறையை யாரெல்லாம் கடைபிடிக்கக் கூடாது? இதுகுறித்த கேள்விகளுக்கு பிபிசியிடம் பதிலளித்தார் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் யூடியூபில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருபவருமான அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் எடையை குறைப்பதில் 'இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்' உதவுமா? உடல் எடையை குறைக்க சமவிகித உணவை மூன்று வேளையும் உண்கிறோம் என எடுத்துக்கொண்டால், அப்போது இன்சுலின் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நாம் குறைவாக சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் உணவு மீதான ‘கிரேவிங்’ இருந்துகொண்டே இருக்கும். ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் கணக்கிட்டு உண்ணலாம் என நினைத்தாலும் அதில் தோல்வியடைவதற்கான காரணம் இதுதான். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டும். உடல் எடை அதிகமாவதற்கு முக்கியமான ஹார்மோன் இன்சுலின். எவையெல்லாம் இன்சுலினை அதிகரிக்கிறதோ, அவை உடல் எடையையும் அதிகரிக்கும். இன்சுலினை எவையெல்லாம் குறைக்கிறதோ, அவை உடல் எடையை குறைக்கும். இதனால் நாம் இன்சுலினுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதுதான் அடிப்படை. இதற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும். மாறாக, புரோட்டீன், கொழுப்பு, காய்கறியை அதிகமாக எடுத்தால் இன்சுலின் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடை குறையும். ‘கிரேவிங்’ குறையும். இந்த அடிப்படையில்தான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்கும் வேலை செய்கிறது. ஒருநாளைக்கு மூன்று வேளை உணவு, நான்கு வேளை 'ஸ்நாக்ஸ்' எடுக்கும்போது இன்சுலின் அதிகரிப்பதால், விரதத்தில் இருக்கும்போது இன்சுலின் கட்டுப்படும். எட்டு அல்லது பத்து மணிநேரம் மட்டுமே நீங்கள் உணவு எடுத்துக்கொண்டு, 14 அல்லது 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கும்போது, அந்த 16 மணிநேரம் உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்காமல் இருக்கிறது. அப்போது உடலில் கொழுப்பு சேராது. உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்திலும் ஆரோக்கியமான உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள், காய்கறிகளை எடுத்துக்கொண்டால் பசியை நன்றாக கட்டுப்படுத்த முடியும். இன்சுலின் கட்டுக்குள் கொண்டு வரும்போது உடல் எடை குறையும், என்கிறார் மருத்துவர் அருண்குமார். இந்த முறையை கடைபிடிக்கும் முன் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடல் எடையைக் குறைப்பதற்காக எந்தவொரு உணவுத்திட்டத்தையும் எடுப்பதற்கு முன் ஒவ்வொருவரின் உடல் வளர்சிதை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சில அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். ரத்தப் பரிசோதனை எடுத்துப் பார்த்தால்தான் நீரிழிவு நோய் இருக்கிறதா, யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறதா என்பது தெரியவரும். அதற்கேற்றவாறு நாம் டயட்டை எடுத்துக்கொள்வது அவசியம், என்கிறார் மருத்துவர் அருண்குமார். 18 மணிநேரம் விரதம் இருந்தால் உடல் எடை வேகமாக குறையுமா? 16:8, 14:10, 12:12 என எந்த நேர இடைவெளியை எடுத்துக்கொண்டாலும் முடிவுகள் ஒன்றாகத்தான் இருக்கும். இந்த விரத முறையில் சாப்பிடும் நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம். நீங்கள் ஆறு மணிநேரம் மட்டுமே சாப்பிட்டாலும், அதில், நொறுக்குத் தீனிகள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட கெடுதல் விளைவிக்கும் உணவுகளை சாப்பிட்டால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனை பின்பற்ற நினைப்பவர்கள், தங்களின் சௌகரியங்களுக்கு ஏற்ப கால இடைவெளியில் ஆரம்பிக்கலாம். எடுத்ததும் 16:8 இடைவெளியை பின்பற்ற முடிந்தாலும் அதனை கடைபிடிக்கலாம். ஒன்றும் பிரச்னை வராது, என்கிறார் மருத்துவர் அருண்குமார். யாரெல்லாம் இதனை தவிர்க்க வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையைப் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இதை அவர்களின் உடல் ஏற்காவிட்டால், பிரச்னைகள் அதிகரிக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஏற்கனவே அவர்களின் உடல் பல மாற்றங்களுக்குள் சென்றிருக்கும். அதனுடன் இதையும் சேர்க்க வேண்டாம் என நினைக்கிறோம். குழந்தைகளால் விரதத்தைத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களும் இம்முறையை தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம். நீரிழிவு அதிகமாக உள்ளவர்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயம் விரத முறையை கடைபிடித்தால், சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதேபோன்று பல்வேறு பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும், என்கிறார் மருத்துவர் அருண்குமார். நீரிழிவு நோயை இந்த முறையால் கட்டுப்படுத்த முடியுமா? கார்போஹைட்ரேட்டை குறைப்பதனால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும். இந்த விரத முறை நீரிழிவு நோயின் ஆரம்பத்தில் உள்ளவர்கள் அதனை அந்நோயிலிருந்து விடுபடுவதில் உதவிபுரியும். ஆனால் நாள்பட்ட நீரிழிவு நோயை இதனால் குணப்படுத்த முடியாது, என்கிறார் மருத்துவர் அருண்குமார். இந்த முறையால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா? ஓரிரண்டு வாரங்கள் சில விளைவுகள் இருக்கும். சிலருக்கு மயக்கம் ஏற்படலாம், நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். சிலரால் விரதம் இருக்க முடியாது. அவர்கள் 1-2 வாரங்கள் கடந்தும் பிரச்னை தொடர்ந்தால், இதிலிருந்து வெளியேறலாம், அல்லது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது பெரிய விஷயமல்ல. விரத நேரத்தில் தண்ணீரோ, சூப்போ அருந்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம், என்கிறார் மருத்துவர் அருண்குமார். ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் கேள்விக்கு பதிலளித்தார், ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். சில வழிமுறைகளைப் பின்பற்றி இம்முறையில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையோ, தசை இழப்பையோ தவிர்க்கலாம் என்றார் அவர். காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை முதல் மாலை வரைதான் இம்முறையை பின்பற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்த்துவிட்டு எடுத்ததும் மதிய உணவுக்குள் செல்லக் கூடாது. உணவைத் தவிர்க்க வேண்டும் என்றே, பலர் அதிக நேரம் தூங்கிவிட்டு, மதியம் எழுந்து உண்கின்றனர். இது தவறு. இரண்டு வேளை முழு உணவு, ஒரு வேளை ஸ்நாக்ஸ் எடுக்க வேண்டும். இருவேளை உணவிலும் நிச்சயம் புரோட்டீன் இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். சிறிதளவு கார்போஹைட்ரோட் எடுக்கலாம். ஒரு கப் சாதம் அல்லது சப்பாத்தி அல்லது தோசை எடுக்கலாம். இன்னொரு கப்பில் பருப்பு, முட்டை, மீன், இறைச்சி எடுக்க வேண்டும். அதற்கு இரு மடங்கு காய்கறிகள் எடுக்க வேண்டும். காபி அல்லது டீ, சுண்டல் ஆகியவற்றை ஸ்நாக்ஸ் ஆக எடுக்கலாம். உடற்பயிற்சி செய்து தசை இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தோல் தளர்ந்து வயதானவர் போன்ற தோற்றம் ஏற்படும். இந்த முறையை தவறாக பின்பற்றினாலோ என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டாலோ எதிர்பார்க்கும் விளைவுகள் இருக்காது, ஆபத்தில்தான் முடியும். நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் இதனை பின்பற்றக் கூடாது. சிஜிஎம் மூலம் சர்க்கரை அளவை கண்காணித்துதான் பின்பற்ற வேண்டும். சர்க்கரை அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் சத்துணவு நிபுணர் இருவரையும் ஆலோசித்துத்தான் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிகவும் வயதானவர்களுக்கு செரிமான பிரச்னைகள் ஏற்கனவே இருக்கும். அவர்களும் இதனை எடுக்கக் கூடாது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தரணி கிருஷ்ணன். https://www.bbc.com/tamil/articles/c9945q5w5p8o1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நீங்க இல்லாதது றோ வுக்கே பயம் விட்டுப்போச்சுன்னா பாருங்களேன்.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நோ ரென்சன். ரிலாக்ஸ் பிளீஸ் 😀 airport ல் வைத்து பயணிகளுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தல் நன்மையானதா தீமையானதா? இதுதான் விவாதிக்கப்பட வேண்டியது. பயணிகள் அனைவரும் வெளிநாட்டினர் என்பதையும் கவனிக்க வேண்டும். இத விடுத்து வேறு எதைக் கதைத்தாலும் அது வெறுப்பில் இருந்து வருவதுதான்.1 point- இலங்கையில் ஏழுமலையான் கோவில் !
1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் மூன்று குல மக்கள் சேர்ந்தது முக்குலத்தோர். இவர்களை தேவர்கள் என்றும் சொல்கின்றனர். ஒரு காலத்தில் போர் வீரர்களாக இருந்த குடிகள். இன்றும் இவர்களில் பலர் இந்தப் பெருமையுடன் வாழ்கின்றனர். மதுரை, தேனீ, இன்னும் சில தென் மாவட்டங்களில் இவர்கள் செறிவாக வாழ்கின்றனர். நடிகர் சிவாஜி கணேசன் கள்ளர் என்னும் குலத்தை சேர்ந்தவர் என்று தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக வின் கோட்டை இவர்கள். ஆனால் இன்று அதிமுக கொங்கு நாட்டவரான (கவுண்டர்கள்) ஈபிஎஸ் வசம் போன பின், இவர்கள் அதிமுக விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே பொதுவான ஊகம்.1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?1 point- யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ISIS அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைப்பு.. சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிராக என்பதை சாதாரண பள்ளிக் குழந்தைகள் கூட அறியும். யாழ் கள புட்டின் எதிர்ப்பாளர்கள் அறியாதது போல இருப்பது அவர்களின் பலவீனம். ஐ எஸ் ஐ எஸின் பிற்காலப் போக்கறிந்து.. அதற்குப் போட்டியாக அமெரிக்கா இதர குழுக்களை ஊக்குவிக்க முயன்றமையால் வெடித்தது ஐ எஸ் ஐ எஸ் - அமெரிக்க + மேற்குலக அடிபாடு. இப்போ.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கடும் இஸ்லாமிய மதவாதப் பயங்கரவாத நிலைப்பாட்டு தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில்..சிரிய அரசுக்கு ஆதரவான ரஷ்சியாவின் தாக்குதலாலும்.. ஈரானின் தாக்குதலாலும் கூட.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் எஞ்சியுள்ள அமெரிக்க சி ஐ ஏ விசுவாசிகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உக்ரைனும் ரஷ்சியாவுக்குள் ஊடுருவித் தாக்க பயன்படுத்தி இருக்கலாம். அதற்கான சாத்தியம் 100 க்கு 200% சதவீதம் உண்டு. ஏலவே... ரஷ்சிய எல்லைகளில் பல ஊடுருவிகளை செய்து தோற்றுப் போனது அமெரிக்க உக்ரைன் கும்பல். ரஷ்சிய சகபாடி.. ஆயுதக் குழுவையும் புட்டினுக்கு எதிராக திசை திருப்ப முனைந்து அந்த அமைப்பின் தலைவரும் வலது கையும் விமான விபத்தில் போய் சேர்ந்துவிட்ட பின்னர்.. அமெரிக்காவுக்கு.. சி ஐ ஏ யின் நம்பகத்தன்மைக்கு.. இப்போ... ஐ எஸ் ஐ எஸ் பயன்பட்டிருக்கலாம். இதன் பின்னணியில்.. இஸ்ரேலும் கூட்டிணைந்து இயக்கி இருக்க வாய்ப்புள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு ரஷ்சியாவுக்குள் ஊடுருவது அவ்வளவு கடினமல்ல. ஏலவே அவர்கள் ரஷ்சியாவின் பரந்த எல்லைகளின் ஊடாக ஊடுருவி மேற்கு நாடுகளில் இருந்து துருக்கி வழியாக.. சிரியா .. இஸ்ரேலை கடந்தவர்கள் தான். இப்போ.. சி ஐ ஏ... மொசாட்.. உக்ரைன் உளவு அமைப்பு கூட்டினைந்து மேற்குலக ஆதரவோடு இத்தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கவே சாத்தியமுள்ளது. மேலும்.. இதனை திசை திருப்பும் நோக்கில் அமெரிக்கா சில எச்சரிக்கைகளை ரஷ்சியாவுக்கு வழங்கி இருந்தாலும்.. உக்ரைன்.. பெலருஸ் வழியாக தாக்குதலாளிகளை வழிநடத்தி மொஸ்கோ வரை நகர்த்துவது உக்ரைனுக்கோ.. அமெரிக்காவுக்கோ கடினமல்ல. எதுஎப்படியோ.. பலமான எதிரிகள் பல மார்க்கங்களையும் கையாண்டு ரஷ்சியாவை தாக்குவார்கள் என்பதை ரஷ்சிய உளவு அமைப்புகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் புட்டினின் ஆலோசர்களும்.. அறியாமல் இருந்தது.. அல்லது அமெரிக்க மேற்கு நாட்டு சவால்களை எளிதாக எடுத்துக் கொண்டது.. இத்தாக்குதல் மூலம் ரஷ்சியாவுக்கு நல்ல பாடத்தைப் புகட்டி இருக்கும். ரஷ்சியாவின் பல இழப்புக்கள்.. அதன் உளவுத்துறை.. செயற்பாட்டுத் துறையின் வினைத்திறனற்ற தன்மையால் நிகழ்வதோடு.. அந்த அமைப்பு.. இலகுவில்.. விலைக்கு வாங்கக் கூடிய அமைப்பாக இருப்பது புட்டினுக்கு சவாலாகவே இருக்கும். புட்டின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும். உக்ரைனின் ரஷ்சியாவுக்குள் அமையும் எல்லாத் தாக்குதல்களுக்கும்.. ரஷ்சிய உளவு அமைப்புக்களும்.. பாதுகாப்பு அமைப்புக்களும்.. புட்டின் ஆலோசர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே. ஏனெனில்.. அவர்களின் செயற்பாட்டுத் தோல்வி அல்லது பலவீனமே இப்படியான நிகழ்வுகள்.. ரஷ்சிய எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல்.. மற்றும் ரோன் தாக்குதல்கள் தொடர முக்கிய காரணமாகும். புட்டின் இது விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தாவிடில்.. ரஷ்சியா மேலும் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக.. அமெரிக்க.. இஸ்ரேல்.. மேற்குலக பின்புலத்தில் இயங்கும் மத அடிப்படைவாதக் குழுக்கள் குறித்து ரஷ்சியா மிகுந்த அக்கறை கொள்வது அவசியம். உக்ரைன் இவர்களை தனது தேவைக்கு பயன்படுத்தும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதை எதிர்பார்க்காதது ரஷ்சியாவின் தவறே ஆகும்.1 point- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) இதுவரை பதியப்பட்ட 30 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் ரசோதரன் 12 ஆக்கங்களை பதிந்துள்ளார். உற்சாகமாக சுய ஆக்கங்களை பதியும் உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள உறுப்பினர்கள் பலர் இன்னும் பதியாமல் பார்வையாளார்களாக உள்ளனர். யாழ் அகவை 26 க்கு இன்னும் 15 நாட்களே உள்ளன என்பதால் விரைவில் ஆக்கங்களைப் பதியுங்கள். குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி1 point- நடனங்கள்.
1 pointஎண்ணமே ஏன் உன்னால… உள்ள புகுந்தது தன்னால… கண்ணமே என் கண்ணால… வெந்து செவந்து புண்ணாக…1 point - வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
Important Information
By using this site, you agree to our Terms of Use.