Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88820
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3125
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1592
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/01/24 in Posts

  1. யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கும். சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன் சென்ற போது நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது. பனைமரத்தில் ஏறிய இந்த நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்." என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள். இது சம்பந்தமான விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், முதல் கட்டமாக நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். Kaathilai puu. Com
  2. இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?
  3. "பால் கடல் கடைதல்" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ] வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் [தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள், யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே. அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள், கீதை என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டு விட்டார்கள். மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் [கள்ளு / மது] அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத் [வேள்வி] தடுப்பார்கள். ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? மேலும் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென அறிந்த மகா விஷ்ணு, தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது, உங்களால் மட்டும் தனியாக பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும் சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள். ஆனால் இது ஒரு தந்திரமே! அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன் படுத்துவார்கள், அவர்களின் பங்ககான "சாவ வரம்" கிடைக்காது, நான் அதை பார்த்துக் கொள்வேன் என மகா விஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு. மேலும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றி கொல்லத் தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும்,சீதையின் தூய்மையை நம்பவில்லை. சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டு கின்றான். இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?" என மேலும் ராமன் கூறுகிறார். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள் நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்" அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான். "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக" "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து" அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா? "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்." என்றல்லவா? சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும் வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை. இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள், இருவருமே கொடூர வீரர்கள். இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள். "வெஸ்ட் பாங்கில்" [மேற்குக் கரை பகுதியில்] ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள். இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள். இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள். என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள். ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம். இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர் தேவர்கள். தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது. சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்கு கிறார்கள். அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ் வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லா வற்றையும் தேவர்களே எடுத்துக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக் கூட முழுதாக தமக்கே வேண்டு மென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டு மென்று தான் கேட்டார்கள். இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள், மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர் வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக் கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றி விட்டர்கள். ஏமாற்றுவது மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை. இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார். ஒரு தனிப்பட்ட உதவியை பெற, எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ? இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை, தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, பறித்து எடுத்தான். இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ? பிராமண இந்து சாதி அமைப்பு, இந்தியாவின் அரசியல் அமைப்பால் ஒழிக்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களின் கொடூரத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது. தை,17,2017 இல், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்து ஆய்வு மாணவர், ரோஹித் வேமுல தற்கொலை, அப்படியான சூத்திரர்களின் கதியின் பிந்திய செய்தியாகும். சாதிக்கொள்கை, தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். எனினும் காலப் போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன் ... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இப்படி, தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பன வற்றினை முலமாக, அடிப்படையாக, கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ, உயரமோ குட்டையோ, பணக்காரனோ ஏழையோ, எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலை பாட்டை உடையதாக இருக்க வேண்டும். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக, ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப் படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “ வெற்றிக்கு விளையாடவாறியா” எண்டு கேக்க அவன் சொன்னான் “ ஓம் ஆனால் குறட்ஸ்க்குத்தான் விளையாடலாம்” எண்டு. வாங்கி குறட்ஸின்டை தரம் பாத்து , சாண் விளையாடக் கூப்பிட்டுக் கொண்டு போனன். முதல் கட்டுக் கட்டினவன்டை மாபிளைஅடிச்சிட்டு சாண் கட்ட அது வெளீல போட்டுது. பிறகு அவன் கட்ட ரெண்டு மாபிளும் முட்டிக்கொண்டு நிக்க பெரு விரலில எச்சிலைத் துப்பி சுட்டு விரலோட சேத்து பிசுக்க மற்ற மாபிள் அசையாமல் நிக்க பிதுக்கினது தள்ளிப் போய் விழ ஒரு மாதிரி அவனை வெண்டு போய் கடைசீல main குறூப்போட சேந்தன். கண்ணாடி மாபிளில உள்ளுக்க மூண்டு நிறங்களில பூப் போல design ல தான் முதலில மாபிள் வந்தது அதில பாத்து விருப்பமான கலரைத் தேடித் தேடி வாங்கிறது. பிறகு அதில ஐஞ்சு கலர் உள்ள மாபிளும் வந்திச்சுது. பிறகு ஒரே கலரில உள்ளுக்க bubbles இருக்கிற மாதிரி வந்திச்சுது. ஆறாம் வகுப்பில ஒருத்தன் தனி வெள்ளைக் கலரில வெளீல கலர்க் கோடு அடிச்ச மாபிள் கொண்டர , அதுக்கு கிக்கிரி போளை எண்டு பேர் வைச்சம். போளை எண்டு பேர் ஏன் வந்தது எண்டு தெரியாது , ஊரில போளையடி எண்டு தான் சொல்லிறது. காற்சட்டையின்ட ஒரு பொக்கற்றுக்க நியூசும் மற்றப் பக்கம் குறட்ஸ்ஸுமாய்த்தான் பள்ளிக்கூடம் போறது. இது அநேமா சோட்ஸ் போட்டவன்டை விளையாட்டாத் தான் இருந்தது. ஊருக்குள்ள விளையாடிற மாதிரி குழி வெட்டிக் குழிக்குள்ள உருட்டி விட்டிட்டு விழுந்ததை எடுக்கிற விளையாட்டு பள்ளிக்கூடத்தில விளையாடிறேல்லை. இந்தக் குழி விளையாட்டுத்தான் இப்பத்தை “ bowling“ விளையாட்டுக்கு முன்னோடியோ தெரியல்லை. பள்ளிக்கூடத்தில புளியமரத்தடீல பப்பா கீறீட்டு யார் முதல் விடிறதெண்ட சண்டை முடிவுக்கு வர ஒவ்வொருத்தரா கட்டத் தொடங்கினாங்கள். விளையாட்டு Expert காரர் விழுந்திருக்கிற புளியமிலையைத் தள்ளிவிட்டிட்டு பப்பா கீறின இடம் மண் எப்பிடி இறுக்கமா எண்டு பாத்து, மேடு பள்ளம் பாத்து, காத்துப் பாத்திட்டு பெருவிரலாலேம் சுண்டு விரலாலேம் பிடிச்ச மாபிளை விரலின்டை கீழ்ப்பக்கமா சுருட்டி விட கோட்டைத்தாண்டிப் போன மாபிள் திரும்பி வந்து பக்கத்தில நிண்டதை தட்டிப் போட்டு கோட்டோட நிண்டிச்சுது. நான் கட்டினது side கோடுக்கு வெளீல போய் கடலுக்க போச்சுது. சரி எண்டு திருப்பிக்கட்டினது கோட்டுக்கு கிட்டப் போனாலும் கடைசி தான் எண்டாங்கள். முதல் round ல ஒருத்தன் அடிச்சது ரெண்டு மாபிளில படக் குட்டி எண்டு சொல்ல பரவாயில்லை அடிச்ச மாபிளையும் கட்டில விடுறன் எண்டு சொல்லீட்டு திருப்பி அடிச்சவனுக்குப் படாமப் போக கடைசீல என்டை turn வந்திச்சுது. கை நீட்டுத் தானே எட்டி அடி எண்டு ஒராள் சொல்ல, இல்லை நீ சுருட்டி spin பண்ணுவாதானே அப்பிடி அடி எண்டு இன்னொருத்தன் சொல்ல , இங்க பார் நேரா அடி, இது தான் கோடு எண்டு கீறி ஒண்டில்லாட்டி மற்றதிலயாவது படும் எண்டு சொல்லி அங்கால நிண்டு காட்டின விரலுக்கு உருட்டி விட்ட மாபிள் ஒண்டிலேம் அடி படாமலே போச்சுது. ரெண்டு ரவுண்டில எல்லா மாபிளும் குறைய , கணக்குக்கு நாலு வேணும் எண்டு போட்டு , இனி அடிச்சு வெல்லேலாது எண்டு போட்டு , வேறொருத்தன் அடிச்ச மாபிளை கால் விரலுக்க அமத்தி வைச்சு நைசா எடுத்துப் பொக்கற்றுக்க கவனமா வைச்சன் நாளைக்கு விளையாட எண்டு . ரெண்டு நேரப் பள்ளிக்கூடக் காலத்தில வீட்டை போகாம நிக்கிறாக்களுக்கு ஏதாவது ஒரு விளையாட்டு set ஆகும். கிரிக்கட் எப்பவுமே இருந்தாலும் மற்றவிளையாட்டும் மாறி மாறி வரும். கொஞ்ச நாள் பறக்கும் தட்டு எண்டு விளையாடினம் , பிறகு கிளிபூர், இல்லாட்டி போளையடி எண்டு ஏதாவது இருக்கும். என்ன மாபிளில spin பண்ணினவன் சிலர் கிரிக்கட்டிலேம் spin bowler ஆக, வழமை போல நாங்கள் கொஞ்சப் பேர் வெளீல நிண்டு பந்து பொறுக்கிக் குடுத்தம் மாபிளைப் போல. ஒரு நாள் விளையாடிக்கொண்டு நிண்ட ஒருத்தனை கூடப் படிச்ச prefects எண்ட உளவுப்படை காட்டிக் குடுக்க , அடி வாங்க முதலே அவன் எல்லார்டை பேரையும் சொல்ல, முழுப்பேரையும் office க்கு கொண்டு போய் வைச்சு சாத்தீட்டூ மாபிள்களையும் பறிச்சு வைச்சார் துரைச்சாமி சேர். பூசை குடுத்திட்டுப் Primary school காரரை மட்டும் நிப்பாட்டி “எங்கால மாபிள் எண்டு” கேட்டிட்டு , “அம்மா/ அப்பாவைக் கூட்டிக் கொண்டா” எண்டு சொல்லி அனுப்பினார். “உதுகும் சூது மாதிரித்தான் சும்மா விளையாடாமல் போட்டி எண்டு விளையாடினால் விட்ட மாபிளைப் பிடிக்க வீட்டை களவெடுக்கிறதில தொடங்கி , மற்றவனை ஏமாத்தி மாபிளைப் புடுங்கிறதெண்டு எல்லாக் கெட்ட பழக்கமும் வரும் எண்டு சொல்லித் துரைச்சாமியரும் சொல்ல “ , வந்த அம்மாவும் இவன் குளப்படி தான் எண்டு என்னை இன்னும் போட்டுக் குடுக்க எனக்கெண்டே ஒரு பிரம்பு வாங்கி வைச்சுது அந்தாள். அதுக்குப் பிறகு காலமை பள்ளிக்கூடத்தில துரைச்சாமியரும் பின்னேரம் வீட்டை வரேக்க அம்மாவும் பொக்கற்றையும் bagஐயும் check பண்ணித் தான் உள்ள விட்டிச்சினம். காச்சட்டை போட்ட பள்ளிக்கூட காலம் எப்பவுமே ஏதாவது ஒண்டு பொக்கற்றுக்க இருக்கும்; ஒண்டு சாப்பிட இல்லாட்டி விளையாட. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  5. "உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை] ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு. நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது. நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும் துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம். துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா. அது மட்டும் அல்ல, ஒருவருக்கு எந்த உதவி தேவை என்றாலும், வேலையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆயினும் யாரும் அவரை இலகுவாக அணுகலாம். கட்டாயம் தன்னலம் பார்க்காமல், நேரகாலம் பார்க்காமல் உடனடியாக உதவ கூடியவர். இன்றும் இன்னும் என்னுடன் நண்பராக இருக்கிறார். ஆனால், எனது மற்ற நண்பரான ராஜரத்னா, இன்று எம்மிடம் இல்லை. அவர் சாக்கடிக்கப் பட்டுவிட்டார். அவர் ஒருமுறை உதவி தொகைப்பெற்று ஜப்பான் சென்று, திரும்பி வரும் பொழுது எனக்கு கொண்டுவந்து தந்த பரிசு மட்டும் இன்னும் என்னிடம் உள்ளது, வடக்கிலும் தெற்கிலும் அரசுக்கு எதிராக, ஆனால் வேறு வேறு இரு குழுக்களால் போராட்டம் நடந்து கொண்டு இருந்த ஒரு காலத்தில், நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் கதைக்கும் பொழுது என்னிடம் கூறினார், தெற்கில் போராடும் சிங்கள இளைஞர்களுக்கு ஆதரவாக, எமது தொழிற்சாலையிலும் சிலர் இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், எம் நாட்டிற்கு அமைதி வேண்டும். அது தொழிற்சாலையில் வளரவிடக் கூடாது என்றும் கூறினார். அவரும் ஒரு சிங்கள சமூகம் என்பதால், நான் கூறினேன், இதில் நீ தலையிடாமல் நடுநிலையாக நிற்பதே நல்லது என்று. அதன் பின் நான் அந்த விடயங்களைப்பற்றி கதைக்காமல் அமைதி காத்தேன். வீண் பிரச்சனைக்குள் ஏன் போவான் என்று, ஏன் என்றால், வடக்கில் நாம் பெற்ற, கண்ட, கடைபிடித்த அனுபவம் தான்! இருள தொடங்கிய ஒரு மாலை பொழுது, நாம் துடுப்பாட்டம் வழமை போல் விளையாடிவிட்டு, இரவு சாப்பாட்டிற்கு முன், நானும் ராஜரத்னாவும், விடுதியில் கரம் பலகை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திடீரென ஒரு பதினைந்து இருப்பது சிங்கள இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் எமது உத்தியோகத்தர் விடுதிகளுக்கு புகுந்து, எம்மை எல்லோரையும் துப்பாக்கி முனையில் ஒரு வரிசையில் நிற்பாட்டினார்கள். அவர்களில் ஒருவர் சிங்களத்தில், நீங்கள் பயப்படவேண்டாம். நாம் சில விசாரணை செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களில் சிலரை கூட்டிக்கொண்டு போகிறோம். விசாரணையின் பின் அவர்களை விடுவோம் என்றனர். சிலரின் பெயர்களை வாசித்து, மூவரை கூட்டி சென்றனர். அதில் ஒருவராக என் நண்பன் ராஜரத்னாவும் இருந்தார். அன்று நாம் விளையாடிய துடுப்பாட்டத்தில், ராஜரத்னா என் குழுவில் இருந்ததுடன், அன்று திறமையாக பந்து வீசி, தவராஜாவை தவிர மற்ற எல்லோரையும் ஆட்டம் இழக்கச் செய்தார். நான் அப்பொழுது தான் யோசித்தேன், அவருக்கு நான் கூறிய அறிவுரைகளை அவர் ஒரு வேளை, செவிசாய்க்கவில்லை என்று. அவருக்கு எப்பவும் ஒரு அமைதியான ஒழுங்கு முறை வேண்டும். அது குழம்பிடுமோ என்ற கவலை கொண்டவர், நாட்டின் மேல் உள்ள பற்றாலும், தனது தன்னலம் அற்ற கொள்கையாலும், எதாவது அரசுக்கு சொல்லி இருக்கலாம் என்று எண்ணினேன். அப்படி இருக்காது, விசாரணையின் பின் அவர் வருவார் என்று என்னையே நான் தேற்றினேன். எமக்கு வடக்கில் இருந்த அனுபவம் அவருக்கு இல்லை. ஏன் என்றால், தெற்கில் ஒரு முறை 1971 இல் ஒரு எழுச்சி வந்து, அந்த ஆண்டே அரசு அதை அடக்கி விட்டது. அதன் பின் அது வெளிப்படையாக இயங்கவில்லை. அது மீண்டும் 1988 /1989 இப்ப தான் வந்துள்ளது. ஒரு பத்து இருப்பது நிமிடத்தின் பின் துப்பாக்கி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்டன, அவரின் மனைவி, அவரின் சில மாதமே கொண்ட குழந்தையுடன் ஓடிவந்து , எம்மில் சிலராவது சத்தம் வந்த திசை பக்கம் போய் பார்க்கும்படி, ஒரே அழுதபடி கேட்டார். எதுக்கும் முன்னுக்கு நிற்பவர் தவராஜா தானே. எனவே நானும் தவராஜாவும் முன்னுக்கு செல்ல மற்றும் சில சிங்கள நண்பர்களும் எம்மை தொடர, இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு புறப்பட்டு சென்றோம். எம் தொழிற்சாலை ஒரு சிறு காட்டு பிரதேசத்தில் இருந்ததால், சுற்றிவர பத்தை பத்தையாகக் இருந்தன. அப்படி ஒரு பத்தைக்கு அருகில் அவரின் உடல் துப்பாக்கி சூடுகளுடன் விழுந்து இருந்தது. அந்த உயர்ந்த மனிதன் தன் கொள்கைக்காக அங்கு இறந்து கிடந்தான். அவருக்கு அண்மையாக ஒரு எச்சரிக்கை தூண்டும் இருந்தது. அது சிங்களத்தால் , 'இவன் ஒரு காட்டி கொடுத்த துரோகி, இவனின் இறுதி சடங்கிலோ மரண ஊர்வலத்திலோ கலந்து கொள்பவர்களும் துரோகிகளே!' என்ற வாசகம் இருந்தது. ஆகவே நாம் எல்லோரும் அதில் தொடர்ந்து நிற்பதோ அல்லது அவரின் உடலை எடுப்பதோ பிரச்னையை ஏற்படுத்தும் என்று, உடனடியாக திரும்ப முற்பட்டோம். ஏன் என்றால், அந்த இளைஞர்கள் அங்கு எங்கேயாவது ஒளிந்து இருந்து எம்மை நோட்டமிடலாம் என்பதால். ஆனால், அங்கு நிலவும் சூழலையும் பொருட் படுத்தாமல், தவராஜா அவரை தொட்டு வணங்கினார் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Comments from S Thavaraja, Former Electrical Engineer, Puttalam cement works: Dear Thillai: You have expressed the memorable heartfelt painful events at PCW. Let' Rajaratna's Soul is BLESSED. I Think we played the CRICKET match just before this event on this match Late Rajaratna got all the wickets except mine. Dear Thillai i am humbled by your Expressions about me I feel your kindness and compassion about merit forced you to over expressing my simple human dealings. Thank you dear. I am very proud to have a friend in you which started very late in our life. Manitham Enpatu Itukkinratu. Om Shanthy Shanthy OM. Rajaratna, Jayaweera etc. we remember and Respect you all dear Late PCW friends who were lost on both side then. Regards
  6. இவ்வுலகில் யாரும் பசியோடு இல்லை உலகில் அமைதி நிலவுகிறது எங்கும் சண்டை இல்லை ஈழத் தமிழரின் இனப்படுகொலையை ஐ நா விசாரிக்கிறது யூதர்களும் பலஸ்தீனர்களும் ஒருவரை மற்ரொருவர் மிகவும் நேசிக்கிறார்கள் சமாதானம் ஒரே தீர்வென்று இரேலியர்கள் விரும்புகிறார்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் நேற்றைய விருந்தொன்றில் ஈஸ்டர் முட்டையை பரிமாறிக் கொண்டார்கள் ஆம் நம்புங்கள் முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் அறிவாளிகள் அனைவரும் கோமாளிகளே! தியா காண்டீபன்
  7. அப்படி ஆரம்பத்தில் பல நாம்தமிழர்கட்சி ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் தேவையற்று மூக்கை நுழைத்து தமிழக மற்றைய கட்சி உறவுகளை ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக பேசவைத்ததுதான் மிச்சம்.. மிக மிகத்தவறான உதாரணங்கள் அவை.. இப்பொழுது திராவிட கட்சிகளை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்த அந்த மூர்க்கம் நாம்தமிழர் ஈழ ஆதர்வாளர்களிடம் இல்லை.. வெகுவாக குறைந்து விட்டது.. பலர் தமிழ்நாட்டு அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மெதுமெதுவாக உணர தொடங்கிவிட்டனர்.. ஆனாலும் நான் உட்பட பலரும் நாம் தமிழரை மனதில் ஆதரிப்பதற்கான காரணம் மேலே விசுகண்ணை கோசானுக்கு சொன்னவைதான்.. நம்ம ஆதரவை மற்ற கட்சிகளை பகைக்காமல் நம்மளவில் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஈழத்தமிழருக்கு நல்லது.. ஒரு வெகு சிலரை தவிர மற்றைய அனேக நாம் தமிழர் ஈழ ஆதர்வாளர்கள் இவற்றை புரிந்து கொண்டுள்ளதை இந்த வருடம் அங்கு நடக்க இருக்கும் தேர்தலில் இணையத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.. ஆனால் மறுவளத்தில் ஈழத்தமிழரில் பலர் நாம் தமிழர் கட்சி ஈழ ஆதர்வாளர்கள் மற்றைய திராவிட கட்சிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் மூர்க்கமாக களமாடி எமக்கு எதிராக அவர்களை திருப்பியதுபோல் நாம் தமிழர் கட்சி தமிழக உறவுகளுக்கு எதிராக மூர்க்கமாக களமாடி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அதே மூர்க்கத்துடனும் வெறியுடனும் செய்கிறார்கள்.. அது எப்படி மிக மிகத்தவறோ அதேபோல் இதுவும் மிகமிகத்தவறே.. இவற்றையும் சேர்த்து நீங்கள் சுட்டிக்காட்டினால்தான் உங்கள் கரிசனை நியாயமானதாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கும்..
  8. தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்.. தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்..
  9. ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கொள்ளைக் கும்பல் மட்டும்தான் நாட்டை தமிழர்களுக்குத் தலைவராக இருக்கணும். மாற்றம் என்று யாரும் வரக் கூடாது.புதிசா யார் வந்தாலும் அவர்கள் விடும் சிறுதவறுகளையும் ஊதிப் பெரிதாக்குவாக்குவார்கள். அதேவேளை எற்கெனவே இருக்கும் கள்ளக் கூட்டங்கள் செய்யும் பெரிய சகூக வீரோத இனவிரோத செயல்களைக் கண்டும் காணமல் இருப்பார்கள்.இது தமிழக அரசியலில் மட்டுமல்ல எமது அரசியலிலும் அப்படித்தான் சம்பந்தரையும்> சுமத்திரனையும் தூக்கிப்பிடிப்பார்கள் அதே வகையறாக்கள்தான் திமுக>அதிமுக>பாஜக வெடகங்கெட்ட கம்மினியூஸ்ட்டுகள்ஈ பாமக விடுதலைசை;சிறுத்தைகள் .மதிமுக .கஎல்லோரையும் தூக்கிச் சுமாங்கிரஸ் எல்லோரையும் தூக்கிச் சுமப்பார்கள். காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் அந்த அந்த மாநிலத்தின் நன்மைகளை நோக்கமாகக் கொண்டிருக்க தமிழக காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் தமிழகத்தை வெறும் பிரதிநிதிகளைப் பெறுவதற்காக மட்டும் பாவிக்கின்றன.
  10. நா.த.கைவையோ, திராவிடக் கட்சிகளையோ பகைக்கத் தேவையில்லை . தலையில் தூக்கி வைக்கவும் தேவையில்லை. (இரு தரப்பும் பாசாங்கில் ஒன்று தான்). இந்த தேவையில்லாத திராவிட தமிழர் ஆணியை யாழ் களம் உட்பட சமூக வலை ஊடகங்களில் தூக்கி வந்து உரையாடலில் புதிய சாக்கடை நிலையை உருவாக்கியது யார் என்று தேடிப் பார்த்தீர்களானால் அது நா.த.க தீவிர விசிறிகள் தான். அதை எப்போவாவது நீங்கள் கண்டித்தீர்களா?
  11. அப்புறம் சீமானுக்கு ஏன் இத்தனை புடுங்கல்?? தமிழ் நாட்டில் பிறக்காமல் அங்கு வாழாமல் எதுக்காக இத்தனை வன்மம் நாம் தமிழர் மேல். என்ன தான் நீங்கள் கிடந்து குலைந்தாலும் நாம் தமிழர் இனி தமிழகத்தில் அலட்சியம் செய்துவிட முடியாதவர்கள் தான்.
  12. காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது: 1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். 4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎) 5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை. அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!
  13. (குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டோஃபர் டேமன் பதவி, தி கான்வர்சேஷன் 45 நிமிடங்களுக்கு முன்னர் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே உணவை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், சுவையை மேம்படுத்தவும் மக்கள் உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். பண்டைய ரோமில், வணிகத்தில் உப்பு மிக முக்கிய இடத்தை வகித்தது. உதாரணத்திற்கு ரோமானிய படை வீரர்களுக்கு சம்பளமாக உப்பு தான் வழங்கப்பட்டது. உணவில் தேவையற்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி, தேவையான நுண்ணுயிரிகளை வளர அனுமதித்து பதப்படுத்தியாக உப்பு இருக்கிறது. பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் இந்த குறிப்பிடத்தக்க திறன் காரணமாகத்தான் ஊறுகாய் முதல் சீஸ் வரை பல உணவுகளில் உப்பு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இன்று, உப்பு நம் உணவெங்கும் நிறைந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு அதிகப்படியான உப்பு வழிவகுக்கிறது. வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மெனியர் நோய், ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் போன்றவற்றை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது. ஒரு காலத்தில் தங்கத்தின் எடைக்கு மதிப்புள்ளதாகக் கருதப்பட்ட ஒரு பொருள், எப்படி நோய்களுக்கான காரணியாக மாறியது? வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் குடலியல் மருத்துவர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ற முறையில், உப்பு எப்படி நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பதற்கான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பட மூலாதாரம்,GETTY IMAGES ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் சோடியத்தின் பங்கு அதிகம். ஏனெனில், சோடியம் ரத்த நாளங்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. எளிமையான சொல்ல வேண்டும் என்றால், ரத்தத்தில் சோடியம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு தண்ணீரை அது ரத்த நாளங்களுக்குள் ஈர்க்கிறது. இது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தொடர்ந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தில் உப்பு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பலர் உணராமல் இருக்கலாம். உப்பு, குடல் நுண்ணுயிரியை மாற்றியமைப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் மற்றும் நார்ச்சத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் முக்கிய வளர்சிதை மாற்றங்களை உப்பு குறைக்கிறது. இந்த வளர்சிதை மாற்றங்கள் ரத்த நாளங்களில் வீக்கத்தைக் குறைத்து, அவற்றைத் தளர்வாக வைத்திருக்கின்றன. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் ஒன்றுக்கு எவ்வளவு உப்பு தேவை? ஹாலோஃபில்ஸ் என்று அழைக்கப்படும் உப்பில் செழித்து வளரும் சில நுண்ணுயிரிகளைத் தவிர, அதிகளவு உப்பு கிட்டத்தட்ட தேவையான எல்லா நுண்ணுயிரிகளையும் நச்சுத்தன்மையடையச் செய்யும். அதனால்தான் உணவைப் பாதுகாக்கவும், தேவையற்ற பாக்டீரியாவைத் தடுக்கவும் மக்கள் நீண்ட காலமாக உப்பைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நவீன உணவுகளில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. உலகளவில் சராசரியாக உட்கொள்ளப்படும் உப்பின் அளவான 4,310 மில்லிகிராம் சோடியம், குடலில் உள்ள உப்பின் அளவை ஆரோக்கியமான அளவை விட உயர்த்தலாம். உடல் பருமன் சோடியம் ரத்த அழுத்தத்தைத் தவிர மற்ற உடல்நல பிரச்னைகளுடனும் தொடர்புடையது. அதிக சோடியம் நிறைந்த உணவுகள் மற்றும் மலத்தில் அதிகளவு சோடியம் ஆகியவை வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் தொடர்புடையவை ஆகும். இதில், ரத்த சர்க்கரை, கல்லீரல் வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை அடங்கும். தினமும் அதிகப்படியாக எடுக்கும் ஒவ்வொரு கிராம் சோடியமும், உடல் பருமன் ஏற்படுவதற்கான அபாயத்தை 15 சதவிகிதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை 500 கலோரிக்கும் அதிகமாக உட்கொண்டவர்களை, குறைவான சோடியம் கொண்ட உணவுகளை உண்பவர்களுடன் ஒப்பிடும்போது 1 கிலோ எடை அதிகமாக இருப்பதாக, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் கூடுதலாக 1.2 கிராம் சோடியத்தை உட்கொண்டனர். கலோரிகள் அதிகரிக்காவிட்டாலும் உப்பை மட்டும் அதிகமாக சேர்ப்பது ஏன் உடல் எடையை அதிகரிக்கிறது? ஏனெனில், சோடியம் ஓர் உணவின் மீதான ஆர்வத்தை (craving) அதிகரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நுண்ணுயிர் வளர்சிதை மாற்றங்கள் எடை இழப்பு மருந்துகளான விகோவி (Wegovy) மற்றும் ஓஸெம்பிக் (Ozempic), குடல் ஹார்மோன் GLP-1 இன் இயற்கையான வெளியீட்டைத் தூண்டுகிறது. GLP-1 மூலம், ஒரு ஆரோக்கியமான நுண்ணுயிர், பசி, ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஆற்றலை எரிக்க அல்லது கொழுப்பாக சேமித்து வைப்பதற்கான உடலின் முடிவை கட்டுப்படுத்த முடியும். அதிகப்படியான உப்பு இந்த விளைவுகளில் தலையிடலாம். வளர்சிதை மாற்ற நோய்களில், குடலில் இருந்து பெறப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகளின் அதிகரிப்பு மற்றும் பிரக்டோஸ் எனப்படும் சர்க்கரை ஆகியவை கொழுப்பு திரட்சிக்கு வழிவகுக்கும். உப்பை குறைக்கும் நாடுகள் பல நாடுகள் உப்பை குறைக்கும் முயற்சிகளை செயல்படுத்தி வரும் நிலையில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் சோடியம் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா உணவில் உப்பைக் குறைப்பதில் தொடர்ந்து பின்தங்கியுள்ளது. அதேநேரத்தில், உணவு பாக்கெட்டுகளில் உப்பு குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உப்பு வரி போன்ற நடவடிக்கைகளால், பல ஐரோப்பிய நாடுகள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் குறைவான இறப்புகள் போன்ற பலன்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளன. நாடுகளுக்கிடையேயான துரித உணவுப் பொருட்களுக்கான ஊட்டச்சத்து தரவுகளின் ஒப்பீடு கணிசமான மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மெக்டொனால்ட் ‘சிக்கன் நக்கெட்ஸ்’, கோகோ-கோலா போன்றவற்றில் அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வளவு அதிகப்படியான உப்பு மற்ற நாடுகளில் இதே உணவுகளில் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உப்பு தொழில் இந்த விஷயத்தில் பங்கு வகிக்கிறது. உப்பு நிறைந்த உணவுகள் அங்கு நன்றாக விற்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த உணவில் உப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டில், அமெரிக்க வேளாண் துறை வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பை தன்னார்வமாக படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறைக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது. சால்ட் இன்ஸ்டிடியூட் 2019 இல் கலைக்கப்பட்டது. சில உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உணவில் உப்பைக் குறைக்க ஒப்புக்கொண்டன. சமச்சீர் உணவுகள் உப்பை அதிகமாக உட்கொள்வதை எப்படி குறைப்பது? இதை மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடங்க வேண்டும்: உப்பு நிறைந்த இறைச்சிகள் (துரித உணவு போன்றவை), உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகள் (சிப்ஸ் போன்றவை), மற்றும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள் (சோடாக்கள் மற்றும் ரொட்டி போன்றவை) ஆகியவற்றை குறைக்க வேண்டும். தற்போது, அமெரிக்க உணவில் உள்ள உப்பில் 70% வரை பாக்கெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து உட்கொள்ளப்படுகிறது. அதற்கு பதிலாக, குறைந்த சோடியம் மற்றும் சர்க்கரை, அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளில் கவனம் செலுத்துங்கள், அதாவது பதப்படுத்தப்படாத தாவர உணவுகளான பீன்ஸ், கொட்டை வகைகள், விதைகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த உணவுகள், பொதுவாக சோடியம் அதிகமாக இருக்கும் போது, அதிக அளவு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பாலிபினால்கள் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியமான மாற்றாக இருக்கும். இறுதியாக, உணவில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் சமநிலையை கருத்தில் கொள்ளுங்கள். சோடியம் ரத்த நாளங்களில் திரவத்தை வைத்திருக்க உதவுகிறது, பொட்டாசியம் செல்களில் திரவத்தை வைக்க உதவுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை சீரான விகிதத்தில் சிறந்த முறையில் உட்கொள்ளப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cxxz5dz460jo
  15. உங்கள் கருத்தோடு பலவற்றில் ஒத்துப்போகும் நான்.... சீமான் விடயத்தில் (பர்னிச்சர் உடைக்கும்போது) நான் நாம் தமிழர் கட்சியில் கணக்கில் எடுக்கும் சிலவற்றை சில நல்லவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று உங்கள் முன் வைக்கிறேன். 1- தமிழ் மொழி சார்ந்த அவர்களது முன் மொழிவுகள் மற்றும் அடுத்த சந்ததிக்கு கடத்தல் (இதில் சீமான் கூட கருத்தில் இல்லை). ஆனால் விதை போடப்பட்டு விட்டது. 2- பெருவாரியான அடுத்த தலைமுறை (படித்த) இளைஞர்களின் கூட்டு 3- சம பங்கு பெறும் பெண்கள் 4- பணம் மற்றும் வசதிகள் செய்து ஓட்டு வாங்காமை கூட்டத்திற்கு ஆட்கள் சேராமை 5- விழாக்கள் மற்றும் பேரணிகளில் நன்னடத்தை மற்றும் ஒழுங்கு,. 6- முடிந்தவரை தமிழர்கள் சார்ந்த சிந்தனை உடையோர்களுடன் பகை தவிர்ப்பு. (திருமால் வளவன், வைகோ, ராமதாஸ் அன்புமணி, விஜயகாந்த்....…) நன்றி
  16. அள்ளு கொள்ளை ----------------------------- பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் செய்வதற்கு இரண்டு வேலைகள் இருந்தன. ஒன்று பந்தடிப்பது, மற்றயது கயங்குண்டு விளையாடுவது. போலை அல்லது மார்பிள் என்று சொல்வதை எங்களூர் பக்கம் கயங்குண்டு என்று சொல்வார்கள். பந்தடிப்பதற்கு ஆட்கள் சேர முன், கயங்குண்டு விளையாடுவோம். பெரும்பாலும் கோஸ் என்று ஒரு விளையாட்டு. அன்று நான் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த இரண்டு விளையாட்டுகளுக்காகவும் அர்ப்பணித்திருந்தேன். பள்ளிக்கூடத்திற்கும் ஒரு பந்தும், கொஞ்ச கயங்குண்டுகளும் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது பள்ளிக்கூடத்தில் ஒரு புதிய விஞ்ஞான கூடம் கட்டியிருந்தனர். அது ஒரு மூலையில் கொஞ்சம் ஒதுக்குப் பக்கமாக இருந்தது. அதற்கும் பழைய கட்டிடங்களுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. சின்ன இடைவேளை அல்லது பந்தடி இல்லாத நாட்களில் அங்கு கயங்குண்டு விளையாடுவோம். வேறு வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக விளையாடுவோம். பெரிய பெட்டி நிறைய கயங்குண்டுகள் சேர்ந்தது. விற்றல், வாங்கல் என்று வியாபாரமும் நன்றாகவே நடந்தது. ஒரு தடவை ஒருவர் அரிதான கயங்குண்டு என்று குட்டி குட்டி கயங்குண்டுகளை எங்களை ஏமாற்றி அதிக விலைக்கு விற்றும் விட்டார். 'சதுரங்க வேட்டை' படத்தில் வருவது போல. பின்னர் தான் தெரிந்தது, அந்த குட்டிக் குண்டுகள் பல கடைகளில், வேறு ஊர்களில், சாதாரணமாக விற்கப்பட்டுக் கொண்டிருந்தன என்று. ஊரில் பண்டிகை நாட்கள், தைப்பொங்கல், சித்திரை வருடம் மற்றும் தீபாவளி வருகிறது என்றவுடன் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே லாஸ் வேகாஸ் வகை விளையாட்டுகளும் ஆரம்பிக்கும். சுத்தமான சூது. முதன் முதலில் லாஸ் வேகாஸ் போன பொழுது, தமிழர்களின் பாரம்பரியத்தை அமெரிக்கர்கள் இன்று பெரும் பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்களே என்று தோன்றியது. இந்த விளையாட்டிற்கு பல வீடுகளில் தடை இருந்தது. அந்த தமிழ் பழமொழி தான், சூதும் வாதும் வேதனை செய்யும், அதற்கு பிரதான காரணம். இந்த விளையாட்டுகளை விளையாடுவது தெரிந்தால், முதுகுத் தோல் நிச்சயமாக உரிக்கப்படும். ஒரு சில வீடுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அந்த சில வீடுகளில் இரவில் படுக்கப் போகும் முன் எல்லா உருப்படிகளும் இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொள்வார்கள். எண்ணிக்கையில் ஒன்று இரண்டு குறைந்தாலும், ஒரு பரபரப்பும் இருக்காது. மூன்று நான்கு நாட்கள் வீட்டுப் பக்கம் போகாமல் இருந்ததும் உண்டு. இந்த விளையாட்டுகளில் எப்போதும் ஒரு விடயம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் முடிவில் வெல்வது ஒரு ஆளாக மட்டுமே இருந்தது. ஒரே ஆள் இல்லை, ஆனால் யாரோ ஒருவர் மட்டுமே கயங்குண்டுகளையோ அல்லது மொத்த காசையோ நாள் முடிவில் வென்று கொண்டிருந்தார். விளையாட்டு கடும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த வழியால் போகும் யாரோ ஒருவர் 'அள்ளு கொள்ளை' என்று பலமாகச் சத்தம் போடுவார். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று, தோற்றுக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் நடுவில் பாய்ந்து, வென்று கொண்டிருப்பவரிடம் பறித்துக் கொண்டு ஓடி விடுவார்கள். பின்னர், நாங்களே ஒன்று கூடி சட்டம் ஒழுங்கை எப்படி நிலைநாட்டுவது என்று முடிவெடுத்து, அதை நடைமுறைப்படுத்தினோம். எல்லோருக்கும் ஆயுதம் வைத்திருக்க அனுமதி கொடுத்தோம். அமெரிக்காவின் மக்கள் எல்லோரும் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை போலவே. கம்பு தடிகள் தான் ஆயுதங்கள். நடுவில் எவராவது பாய்ந்தால், எல்லோரும் கேட்டுக் கேள்விகள் இல்லாமல் பாய்ந்தவரை அடிக்கலாம் என்று ஒரு சட்ட திருத்தமும் கொண்டு வந்தோம். ஆனாலும் அப்பப்ப அள்ளு கொள்ளை நடந்து கொண்டேயிருந்தது.
  17. இந்தக் கால சிறார்கள். கணனியிலும் போனிலும் முன்னேறிவிட்டார்கள்.(தனிமை படுத்தப்பட்டு விடடார்கள் ). விளையாட்டு வேடிக்கை கலகலப்பு பள்ளிச்சிநேகிதம் எல்லாம் தொலைந்து விட்ட்து.வேறொரு உலகில் வாழ்கிறார்கள். நமக்கெல்லாம் அது ஒரு இனிய கனாக்காலம்.
  18. சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்தில், பள்ளிக்கூடத்திற்கு போடும் வெள்ளைச் சேர்ட்டில் மை அடிப்போம், ஏப்ரல் ஒன்றில். பெரிது பெரிதாகவும், சிறிதாகவும் பொய்களை, புழுகுகளை அவிழ்த்து விடுவோம். இப்ப இந்த நாள் அப்படி ஒரு தனியான விஷேமான நாள் இல்லை. எல்லா நாட்களும் ஒன்றே ஆகிவிட்டன.....
  19. நான் அவதூறை அள்ளி கொட்டவில்லை. எல்லாமும் தரவுகளின் அடிப்படையிலான சீமான் பற்றிய எனது கருத்து மட்டுமே. ஆனால் நான் எழுதாத 3 மாதத்தில் இங்கே என்ன நடந்த்தது? நான் தெளிவாக சொல்லி விட்டேன், @விசுகு அண்ணாவுக்காக இன்னொரு தரம் சொல்கிறேன். தமிழக அரசியலில், ஈழத்தமிழர் கட்சி சாராமையயை இரு வகையில் நிலை நிறுவலாம். 1. எந்த கட்சியையும் சாராத நிலை (புலிகளின் நிலைப்பாடு) 2. எல்லா கட்சிகளையும் விமர்சிக்கும் நிலை. பையன், முன்னர் இசை போன்றோர் யாழிலும், ஏனையோர் சமூகவலை உலகிலும், தீவிர நாதக ஆதரவு, திமுக கூட்டணி எதிர் நிலை எடுத்தபடியால் - இனிமேல் 1ம் வழியை பின்பற்ற முடியாது. ஆகவே ஈழத்தமிழர் கட்சி சாராதோர் என காட்ட என்போன்றோருக்கு இருக்கும் ஒரே வழி, ஈழ தமிழராக சீமானை விமர்சிப்பதே. ஆகவேதான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணனின் பர்னிச்சர் உடைக்கப்படுகிறது.
  20. மேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  21. சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட்.
  22. முதலாவது சந்திப்பு நான்கு முக்கியமான போராளித் தலைவர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு சென்னையில் அமைந்திருக்கும் நட்சத்திர விடுதியான Plush Hotel இல் சித்திரை 10 ஆம் திகதி (1985) நடைபெற்றது. புலிகள் இயக்கத்தில் சார்பில் பிரபாகரன், இராசநாயகம், பாலசிங்கம் ஆகியோர் பங்குபற்றினர். டெலோ அமைப்பின் சார்பில் சிறீ சபாரட்ணமும், மதியும் பங்குபற்றினர். ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, குலசேகரன், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் அமைப்புச் சார்பாக பாலகுமாரும் முகிலனும் பங்குபற்றினர். ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் என்கிற ரீதியில் ரமேஷ் இக்கூட்டத்தை நடத்தியதுடன், விருந்தினர்களையும் வரவேற்றார். பிரபாகரன், பாலகுமார், சிறீ சபாரட்ணம் ஆகியோருக்கிடையில் ஏற்கனவே பரீட்சயம் இருந்தது. ஆனால், பிரபாகரனும், பத்மநாபாவும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல்த் தடவை. வழமைபோலவே, சூழ்நிலையின் தீவிரத்தினைத் தணிக்கும் விதமாக நகைச்சுவையாக சில விடயங்களைப் பேசத் தொடங்கினார் பாலசிங்கம். ஆனால், கூட்டம் தீவிரமாகவே நடைபெற்றது. ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கும் முன்னர் இரு விடயங்கள் குறித்துப் பேச்சினை ஆரம்பித்தார் பிரபாகரன். முதலாவது, அக்கூட்டமைப்பின் பெயர். இரண்டாவது , போராளி அமைப்புக்களுக்கிடையே பிணக்குகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடைமுறைகள். "நாங்கள் போராடுவதற்கு எதற்காக?" என்று பிரபாகரன் கேட்டார். "அது தமிழ் ஈழத்திற்காகவா அல்லது ஈழத்திற்காகவா? நாமும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழத்திற்காகவே போராடுகிறோம், ஆனால் உங்கள் அமைப்பின் பெயரில் ஈழம் என்றே இருக்கிறது. முதலில் எமது நோக்கம் குறித்த தெளிவு எமக்கு இருக்க வேண்டும். ஆகவே, ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் பெயர் மாற்றப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். பிரபாகரன் கூறியதில் ஒரு காரணம் இருந்தது. ஈழம் எனும் சொல் புராதன இலக்கியங்களில் முழு இலங்கை நாட்டையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. சங்க கால இலக்கியங்களில் இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவரை ஈழத்து பூத்தந்தேவனார் என்று குறிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுவகைகளை ஈழத்து உணவு என்று சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன. ஆகவேதான், இலங்கையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களை புலிகளும், டெலோ அமைப்பும் தமிழ் ஈழம் என்று அழைக்கின்றன. இவ்விரு போராளி அமைப்புக்களும் தமது போராட்ட இலட்சியத்தை தமிழ் ஈழம் என்றே அழைத்தும் வருகின்றன. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்போ அல்லது ஈரோஸ் அமைப்போ தமிழ் ஈழத்திற்கும், ஈழத்திற்குமான வேறுபாட்டினை நோக்கவில்லை. பாலகுமார் இதுகுறித்துப் பேசும்போது, "நாமும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பும் ஈழம் என்றே பாவித்து வருகிறோம், நாம் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்கிற கூட்டமைப்பினை உருவாக்கும்போது டெலோவும் அதனை ஏற்றுக்கொண்டது" என்று பதிலளித்தார். நிலைமையின் பதற்றத்தைத் தவிர்க்க எத்தனித்த பத்மநாபா, "நாம் பெயர் குறித்து சர்ச்சையில் ஈடுபடலாகாது. எமக்குள் ஒற்றுமையே முக்கியமானது. அவசியமென்றால், பெயர்மாற்றம் குறித்தும் சிந்திக்கலாம்" என்று கூறினார். பதிலுக்குப் பேசிய பாலகுமார், "ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைப் பொறுத்தவரை பெயர் மாற்றம் ஒரு பெரியவிடயமாக இல்லாதிருக்கலாம், ஆனால் நான் எனது அமைப்பில் உள்ளவர்களுடன் பேசித்தான் இதுகுறித்துக் கருத்துக் கூறமுடியும்" என்று கூறினார். பின்னர் போராளிகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் பெயர் குறித்து பின்னர் தீர்மானிக்கலாம் என்று கூறியதுடன், இச்சந்திப்பின் பெயரை "ஈழத் தேசிய விடுதலை முன்னணி - புலிகள் சந்திப்பு" என்று அறிக்கையில் குறிப்பிடலாம் என்று இணங்கினர். இதன்மூலம், கூட்டமைப்பிற்குள் இணைந்தாலும், புலிகளின் தனித்துவத்தை பிரபாகரனால் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையின் முதலாவது வாக்கியம் பின்வருமாறு அமைந்திருந்தது, "ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், புலிகள் இயக்கமும் ஒன்றிணைந்து செயற்பட முடிவெடுத்திருக்கிறோம்" . இக்கூட்டத்தில் பிரபாகரனால் எழுப்பப்பட்ட இரண்டாவது விடயம், ஒரு போராளி அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு போராளிகள் தாவுவது அவ்வமைப்புக்களுக்குள் முரண்பாட்டினை உருவாக்கி வருகிறது என்பது. "எனது அமைப்பிலிருந்து வெளியேறி, இன்னொரு அமைப்பிற்குச் சென்று, அங்கிருந்து எனது அமைப்பைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி, எமது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பாதகம் ஏற்படுத்த எவர் முயன்றாலும், நிச்சயமாக நான் அவர்களைப் பிடிப்பேன். அவ்வாறே, உங்களின் அமைப்புக்களிலிருந்து எவர் வெளியேறி எனது அமைப்பில் இணைந்து, உங்களின் நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்க முயன்றால் நீங்களும் அதைச் செய்யுங்கள். இவ்வாறான இயக்கத் தாவல்களை நாம் முறியடிக்க வேண்டும். ஒரு போராளி தனது அமைப்பிலிருந்து வெளியேற விரும்பினால், அவர் அதனைத் தாராளமாகச் செய்யலாம், ஆனால், அவர் இன்னொரு அமைப்பில் இணைய முடியாது. ஆகவே, நாம் இதுகுறித்து முடிவொன்றிற்கு வரவேண்டும். உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறி எனது அமைப்பில் சேர வருபவர்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, அதுபோலவே எனது அமைப்பிலிருந்து உங்களிடம் வருபவர்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்று பிரபாகரன் தீர்க்கமாகக் கூறினார். பிரபாகரனது கருத்தை பத்மநாபா ஏற்றுக்கொள்ள மறுத்தார். இவ்வாறான் நடவடிக்கைகள் போராளிகளின் சுதந்திரத்தைப் பாதித்து விடும் என்று அவர் கூறினார். அது ஜனநாயகத்திற்கு முரணானது என்று வாதிட்டார். பத்மநாபாவின் கருத்தினை சிறீ சபாரட்ணமும் பாலகுமாரும் ஆதரித்தார்கள். இதனால், இவ்விடயம் அப்போதைக்குக் கிடப்பில் போடப்பட்டது. கூட்டத்தின் முக்கிய விடயம் குறித்து தலைவர்களிடையே இணக்காப்பாடு ஏற்பட்டிருந்தது. அதாவது, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எடுத்திருக்கும் புதிய வெளியுறவுக் கொள்கை. பாலசிங்கம் இத்தீர்மானம் குறித்து தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், இணைந்த செயற்பாடுகளுக்கான திட்டத்தினை வரைதல், பொதுவான அரசியல் நோக்கத்தில் இணக்கப்பாடு : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகத்திற்கு முற்றான சுதந்திரத்தை ஏற்படுத்துவது. இலங்கை இராணுவத்திற்கெதிராக ஒவ்வொரு அமைப்பும் செய்யவேண்டிய பங்கினை ஏற்றுக்கொள்வது. அமைப்புக்களுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின் மூலம் ஒன்றிணைந்த இராணுவ தாக்குதல்களை உருவாக்குவது. இந்தியா முன்னெடுத்துவரும் யுத்த நிறுத்த முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்தாலோசிக்க தலைவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக‌ச் சந்தித்துக்கொள்வது. கூட்டத்தின் முடிவில் தலைவர்கள் அனைவரும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், குழுவாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். பாலசிங்கத்தின் கூற்றுப்படி அக்கூட்டம் சுமூகமாகவும், வினைத்திறன் கொண்டதுமாக அமைந்திருந்தது. தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை, ஈழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்ல ஈழத் தேசிய விடுதலை முன்னணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இணைந்து செயலாற்றுவதென்று முடிவெடுத்திருக்கிறோம். ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் அமைப்பு சித்திரை 1984 இல் உருவாக்கப்பட்டதுடன், இக்கூட்டமைப்பில் மூன்று போராளி அமைப்புக்களான டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இந்த நான்கு போராளி அமைப்புக்களினதும் ஒன்றிணைவின் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆயுத ரீதியான போராட்டமென்பது மிக முக்கிய திருப்பமாக உருமாறியிருக்கிறது. இதன்மூலம் புரட்சிகரப் போராளிகள் ஒன்றிணைந்து தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தைப் பலப்படுத்த முடியும். இராணுவ அடக்குமுறைகளுக்கு நாளாந்தம் முகங்கொடுத்து வரும் தமிழ் மக்கள், எமது இந்த அறிவிப்பின் மூலம் மகிழ்வடைவார்கள் என்றும், இதனால் உற்சாகமடைந்து தமது விடுதலை பாதையில் முன்னோக்கிப் பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஆகிய நாம் பின்வரும் அரசியல் நோக்கங்களை வரிந்து கொண்டிருக்கிறோம், 1. சிங்கள அடக்குமுறை ஆட்சியிலிருந்து எமது தாய்நாட்டின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் நாம் வென்றெடுப்போம். 2. சுய நிர்ணய உரிமையின் அடிப்படியில் உருவாக்கப்படும் சுதந்திரமான தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்விற்கும் நாம் உடன்படப் போவதில்லை. 3. ஒருமித்த மக்கள் ஆயுதப் போராட்டத்தை எமது போராட்ட வடிவமாக வரிந்துகொள்ளுவோம். 4. எமது விடுதலைப் போராட்டத்தினை சோசலிசப் பாதையில் வழிநடத்துவதனூடாக, சோசலிச சமூகத்தை எமது தாயகத்தில் ஏற்படுத்துவோம். 5. உலக ஏகாதிபத்தியங்களில் இருந்தும், நவ காலணித்துவ அடக்குமுறைகளிலிருந்தும் எமது தாயகத்தை விடுவித்து, அணிசேராக் கொள்கையுடன் அதனை வழிநடத்துவோம். அரசியல் ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நாம் இணைந்து செயற்படுவதென்றும், இலங்கை இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைந்து செயற்படுத்துவதென்றும் நாம் முடிவெடுத்திருக்கிறோம். எமது மக்களிடமும், எமது மக்களின் விடுதலையினை ஆதரிக்கும் அன்பர்களிடமும் நாம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் தந்துவரும் ஆதரவினையும் உதவியினையும் மேலும் தொடர்வதன்மூலம், எம்மால் இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைவை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான். அறிக்கையின் இறுதியில் பிரபாகரன், சிறீ சபாரட்ணம், பாலகுமார் மற்றும் பத்மநாபா ஆகியோர் கையொப்பம் இட்டிருந்தனர். போராளி அமைப்புக்களுக்கிடையிலான கூட்டமைப்பு தொடர்பான செய்திகள் வெளிவர ஆரம்பித்த போது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று அனைவருமே மிகுந்த உவகையடைந்து காணப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழான ஈழநாடு இதனை வரவேற்றிருந்தது. பல முக்கியமான தமிழர்களும், அமைப்புக்களும் போராளிகளுக்கிடையிலான ஒற்றுமையினை பாராட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மற்றும் கருநாநிதி ஆகியோரும் இதனை வரவேற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க, போர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான தமது தாக்குதல்களை போராளிகள் தீவிரப்படுத்தியிருந்தனர். பண்டிதரின் வீரச்சாவினையடுத்து புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாக பதவியேற்றுக்கொண்ட கிட்டு, போராளிகளிடையே காணப்பட்ட புதிய உத்வேகத்தை இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு அமைப்பிற்குமென்று பகுதிகளை பொறுப்புக் கொடுத்திருந்தார். தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களின் ஊடாக புலிகள் அமைப்பே இராணுவத் தாக்குதல்களில் முன்னணிக்கு வரத் தொடங்கியிருந்தது. தம்மீதான போராளிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்க தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதை இராணுவமும், பொலீஸாரும் ஒரு நடைமுறையாகவே கடைப்பிடித்து வந்தனர். ஆனால், இப்பழிவாங்கல்த் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் போராளிகள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கின. இவ்வாறான தடுப்புத் தாக்குதல்களை கிட்டுவே முன்னின்று, ஒருங்கிணைத்து நடத்தினார்.
  23. நீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது தியா - காண்டீபன்
  24. தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம். நன்றி
  25. அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை.......! 👍 (அமாவாசை) பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி , சஷ்டி , ஸப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பூரணை அல்லது அமாவாசை .......! 👍
  26. துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....
  27. போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகள் 1984 ஆம் ஆண்டு ஈழ்த் தேசிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டபோது புலிகள் அதில் இணைய ஆர்வம் காட்டவில்லை. மேலும், இவ்வமைப்பினை உருவாக்கிய தலைவர்களுக்கும் புலிகளை இணைத்துக்கொள்வதில் விருப்பம் இருக்கவில்லை. டெலோ அமைப்பினரோடு ஏற்பட்டிருந்த முரண்பாடு ஒன்றின் காரணமாகவே புலிகள் இக்கூட்டமைப்பில் இணைவதைத் தவிர்த்து வந்தனர். இதைவிடவும், இக்கூட்டமைப்பில் புலிகளும் இணைந்துகொண்டால் அவர்களின் ஆதிக்கமே அமைப்பில் காணப்படும் என்று இம்மூன்று தலைவர்களும் அஞ்சினர். புலிகள் - டெலோ ஆரம்ப முரண்பாடு 1984 ஆம் ஆடியில் சிறி சபாரட்ணம் வெளியிட்ட அறிக்கையொன்றில் புலிகள் இயக்கத்திற்கும், டெலோவிற்கும் இடையில் காணப்பட்ட நம்பிக்கையீனம் குறித்தும், முரண்பாடு குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் தன்னைப் படுகொலை செய்ய புலிகள் முயல்வதாக சபாரட்ணம் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது அமைப்பினுள் இருந்த சில அதிருப்தியாளர்களால் இரு முறை தன்மீதான படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இம்முயற்சிகளை புலிகள் வெளியில் இருந்து ஆதரித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் 1982 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறிசபாரட்ணம் டெலோ அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் . அவர் தலைமைப் பொறுப்பினை எடுத்துக்கொண்ட காலத்திலிருந்தே டெலோ அமைப்பிற்குள் உள்வீட்டு முரண்பாடுகள் தோன்றி வளர்ந்து வந்தன. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இம்முரண்பாடுகள் உச்சத்திற்குச் சென்றிருந்தன. சிறி சபாரட்னம் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டுவதில்லையென்றும், இராணுவச் செயற்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், ரோ அமைப்பின் தாளத்திற்கு ஏற்பவே ஆடுவதாகவும், போராளிகளின் நலன் குறித்து அவர் அக்கறை கொள்வதில்லையென்றும் அமைப்பிற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், பயிற்சி முகாம்களில் காணப்படும் குறைபாடுகளை சில போராளிகள் சுட்டிக் காட்டியபோது, அவற்றினை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, அப்போராளிகளைக சிறி சபாரட்ணம் கடுமையாகத் தண்டித்ததாகவும் பல குற்றச்சட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. சிறீ சபாரட்ணம் மேலும் கூறுகையில், 1984 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் கதி அமைப்பிற்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள் தன்னைக் கடத்திச் சென்று கொன்றுவிடத் திட்டம் தீட்டியதாகவும், ஆனால் அதுகுறித்து தான் முன்னமே அறிந்துகொண்டதனால் தனது வதிவிடத்தை அன்றிரவு மாற்றிக்கொண்டு தப்பித்ததாகவும் தெரிவித்தார். இக்கடத்தலைச் செய்வதற்காக தனது அமைப்பிற்குள் இருந்த அதிருப்தியாளர்கள் புலிகளிடமிருந்து ஒரு ரிவோல்வரையும், ஒரு போத்தல் குளோரோபோமையும் வாங்கியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இச்சம்பவம் நடைபெற்று 4 நாட்களுக்குப் பின்னரும் அதே குழுவினர் தன்னைக் கொல்ல எத்தனித்தபோது, தான் சாதுரியமாகச் செயற்பட்டு அதனைத் தடுத்துவிட்டதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னைக் கொல்ல முயன்றவர்களை தனக்கு விசுவாசமான போராளிகள் கைதுசெய்து அடைத்து வைத்திருந்த்தாகவும், ஆனால் புலிகளின் அணியொன்று அவர்களை அடைத்துவைத்த டெலோ போராளிகள் மீது ஆனி 6 ஆம் திகதி தாக்குதல் நடத்தி அவர்களை விடுதலை செய்துவிட்டதாகவும் அவ்வறிக்கை மேலும் கூறியது. ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை பிரபாகரன் முற்றாக மறுத்திருந்தார். புலிகள் - புளொட் முரண்பாடு 1984 ஆம் ஆண்டு கார்த்திகையில் குறும்பசிட்டி பகுதியில் ஆறு புலிகளின் போராளிகளை புளொட் அமைப்பினர் கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் சுட்டுக் கொன்றிருந்தனர். இதனையடுத்து புலிகளுக்கும் புளொட் அமைப்பினருக்கும் இடையே பூசல்கள் உருவாக ஆரம்பித்திருந்தன. குறும்பசிட்டிப் படுகொலைகளை ஈ.பி.ஆர்.எல்.அப் அமைப்பினரின் ஈழச் செய்தி எனும் பத்திரிக்கை விலாவாரியாக விபரித்திருந்தது. இதனையடுத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினருக்கும் புலிகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஒன்று ஏற்பட்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் - புளொட் முரண்பாடு ஈழத் தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பிற்குள் புலிகளைக் கொண்டுவர ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு விரும்பியது. ஆனால் ஈரோஸின் பாலகுமாரோ புளொட் அமைப்பை எப்படியாவது கூட்டமைப்பிற்குள் இழுத்துவரப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால், புளொட் கூட்டமைப்பிற்குள் வருவதை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் எதிர்த்தனர். மட்டக்களப்புச் சிறையுடைப்பின் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரும் புளொட் அமைப்பினரும் முரண்பட்டுப் போயிருந்தனர். சிறையுடைப்பினைத் திட்டமிட்டு செயற்படுத்தியது புளொட் அமைப்பினரே என்று உமா மகேஸ்வரன் உரிமை கோரியிருந்தார். சிறையுடைப்பில் மாணிக்கதாசனின் பங்கினை வெகுவாக உயர்த்திப் பேசிய உமா, டக்கிளஸ் தேவாநந்தாவின் பங்களிப்பினை வேண்டுமென்றே மறைத்துப் பேசிவந்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் இப்பிணக்கினை மறந்து, முன்னோக்கிச் செல்ல விரும்பினார். ஆனால், இரண்டாம் நிலைத் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ரமேஷ் போன்றவர்கள் புளொட் அமைப்பினர் கூட்டமைப்பிற்குள் வருவதை எதிர்த்தே வந்தனர். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றினையடுத்து புளொட் அமைப்பினரை ஈழத் தேசிய முன்னணி எனும் கூட்டமைப்பிற்குள் கொண்டுவர தான் எடுத்து வந்த முயற்சிகளை ஈரோஸின் பாலகுமார் கைவிட்டார். கோடாம்பாக்கம், வேளாளர் வீதியில் அமைந்திருந்த இக்கூட்டமைப்பின் அலுவலகத்தில் பாலகுமார் இருந்தவேளை அவரைச் சந்திக்க உமா மகேஸ்வரன் வந்திருந்தார்.அவரை சிநேகபூர்வமாக வரவேற்ற பாலகுமார், தமது கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் புளொட் அமைப்பும் இணைந்துகொள்ள வேண்டும் என்கிற வேண்டுகோளினை உமாவிடம் முன்வைத்தார். இதனால் மிகுந்த கோபமடைந்த உமா, "இந்த கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் ஈறோஸ் அமைப்பின் இலட்சினைப் போன்ற இலட்சினை அகற்றப்படும்வரை நான் இணைந்துகொள்ள மாட்டேன்" என்று கூறினார். 1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பார்த்தசாரதியுடனும், ரஜீவுடனும் பேசியதன் பின்னர், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முடிவெடுத்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோருடன் பேசிய பார்த்தசாரதி, தமிழ் அமைப்புக்கள் தமக்குள் ஒருமித்த அணியொன்றினை உருவாக்குவதன் மூலம், இலங்கை குறித்து மாறி வரும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழருக்குச் சார்பான நிலையினைத் தோற்றுவிக்கலாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சந்திப்பொன்றிற்கு இணங்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர், புலிகளையும் புளொட் அமைப்பையும் அழைப்பதென்றும் முடிவெடுத்தனர். ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரான ரமேஷுக்கு, யாழ் பல்லைக் கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவரானஇராஜநாயகத்தினூடாக பிரபாகரன் அனுப்பிய செய்தியில், இராணுவத்தினர் மீதான தாக்குதல்களில் ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் தான் ஒருங்கிணைந்து செயற்படத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அக்கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். சென்னை, கோடாம்பாக்கம் ரயில்வே நிலையம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கோடாம்பாக்கம் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், வி.பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களிடம் பார்த்தசாரதியும், ரஜீவும் தன்னுடன் பேசிய இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையான "அயல்நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவது" எனும் விடயம் குறித்து விளங்கப்படுத்தினார் அமிர்தலிங்கம். மேலும், ரஜீவ் காந்தி, ஜெயவர்த்தன மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஜெயவர்த்தனவுடன் பேச வேண்டும் என்று ரஜீவ் கேட்டுள்ளதாகவும் அமிர்தலிங்கம் மேலும் கூறினார். "எமது குரல் உரக்க ஒலிக்க வேண்டுமானால், நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். ஈழத் தேசிய விடுதலை முன்னணி கடந்த 12 மாதங்களாக இயங்கி வருகிறது. ஆகவே, அதனுடன் இணைந்து, அதனை மேலும் பலப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய விரும்புகிறோம்" என்று அமிர்தலிங்கம் கூறினார். மேலும், அங்கு பேசிய அமிர், புலிகளையும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குள் கொண்டுவர ஏனைய அமைப்புக்களின் தலைவர்கள் முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த ரமேஷ், பிரபாகரனிடம் இருந்து தனக்குக் கிடைத்த செய்தியை அங்கு வெளிப்படுத்தியதுடன், "அவர் எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்புகிறார், ஆனால் இணைந்துகொள்ளத் தயங்குகிறார்" என்று கூறினார். அதன் பின்னர், பிரபாகரனையும் கூட்டமைப்பிற்குள் கொண்டுவர முயலுமாறு பத்மநாபாவையும், ரமேஷையும் கேட்டுக்கொண்டதுடன், இன்னொரு நாளைக்கு இச்சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாரத்தசாரதியுடனான பாலசிங்கத்தின் சந்திப்பிற்குப் பிறகு புலிகள் அமைப்பிற்குள்ளும், ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து செயற்படலாம் என்கிற பேச்சுக்கள் இடம்பெற ஆரம்பித்திருந்தன. ஆகவேதான், இராணுவ ரீதியில் இக்கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற பிரபாகரனும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்தியாவால் முன்னெடுக்கப்படவிருக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் தரப்பினைப் பலப்படுத்த இணைந்த முன்னணியொன்று தேவை என்கிற கருத்தினை புலிகள் இயக்கத்திற்குள் பாலசிங்கமே முதலில் முன்வைத்திருந்தார். பிரபாகரனோ யுத்த நிறுத்தத்தினை நிராகரித்து வந்ததுடன், ஜெயவர்த்தனவை நம்பமுடியாது என்கிற நிலைப்பாட்டிலும் இருந்தார். போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் அன்று நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்து பாலசிங்கம் இவ்வாறு குறிப்பிடுகிறார், "வெகு விரைவில் யுத்த நிறுத்தம் ஒன்றினையும், அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளையும் இந்தியா ஆரம்பிக்கும் என்பதை நாம் அனுமானித்தோம் . இழப்பதற்கு எதுவுமே இல்லாததனால், யுத்த நிறுத்தம் ஒன்றினை ஜெயவர்த்தன வரவேற்பார் என்று நாம் கணக்கிட்டோம். முதலாவதாக, தமிழ்ப் போராளி அமைப்புக்களிடமிருந்து இடையறாது தாக்குதல்களை எதிர்நோக்கி வந்த அவரது இராணுவத்தினருக்கு யுத்த நிறுத்தம் என்பது தேவையான ஓய்வினைக் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்க்கலாம்". "இரண்டாவது விடயம், பேச்சுக்களின்போது விடாப்பிடியான நிலையினைக் கடைப்பிடித்து, தமிழரின் அபிலாஷைகளை முழுவதுமாக உதாசீனம் செய்வதென்பது ஜெயாரைப் பொறுத்தவரையில் கடிணமாக இருக்காது. ஆகவே, ரஜீவ் காந்தியின் சமாதானத் திட்டம் ஜெயாரின் சதிகளுக்குத் துணைபோய், தமிழரின் நலன்களுக்கு கேடாக அமையப்போகிறது. இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கைக்கும், தமிழரின் அபிலாஷைகளுக்கும் இடையே பாரிய விரிசல் ஒன்று ஏற்பட்டு வருவதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது". எவருடனும் இணைந்துகொள்ளாது தனியாகவே செயற்படுவதென்று தான் எடுத்த முடிவினால், மாறிவரும் சூழ்நிலைகளில் புலிகள் அமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு பலவீனமாக்கப்படும் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். சிறி சபாரட்ணத்தை தமது யோசனைக்கு ஏற்ப செயற்பட வைப்பதன் மூலமும், தமது முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஊடாகவும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் கூட்டமைப்பினை இந்தியா முற்றுமுழுதாக தனது செல்வாக்கினுள் கொண்டுவந்துவிடும் என்பதை பிரபாகரன் உணர்ந்துகொண்டார். இந்தியா முன்னெடுத்திருக்கும் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கெதிராக தான் எடுக்கும் எந்த முயற்சியும் தோற்கடிக்கப்படும் என்பதையும் பிரபாகரன் கண்டுகொண்டார். ஆகவே, அவர் முன்னால் இருந்த ஒரே தெரிவு, ஈழத் தேசிய விடுதலை முன்னணியினருடன் இணைந்துகொள்வதன் மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதுதான். 1985 ஆம் ஆண்டு பங்குனி இரண்டாம் வாரத்தில் இராஜநாயகத்தின் ஊடாக ரமேஷுக்கு கூட்டமைப்பில் தானும் இணைந்துகொள்ள இணக்கம் தெரிவிப்பதாக செய்தியனுப்பினார் பிரபாகரன். பங்குனி 23 ஆம் திகதி கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்திப்பொன்றினை ரமேஷ் ஒழுங்குசெய்தார். இச்சந்திப்பில் கலந்துகொள்ள பாலசிங்கத்தையும், இராஜநாயகத்தையும் பிரபாகரன் அனுப்பி வைத்தார். இச்சந்திப்பில், ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் இணைந்துகொள்ளும் பிரபாகரனின் விருப்பத்தை பாலசிங்கம் அறிவித்தார். மேலும், இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்தும், அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுத்தப்போகும் பாதகமான தாக்கங்கள் குறித்தும் பார்த்தசாரதி தன்னிடம் தெரிவித்த கருத்துக்களை அங்கே பகிர்ந்துகொண்டார். இந்தியா செய்ய நினைக்கும் யுத்த நிறுத்தம், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்குப் பாதகமானது என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளின் போது விடாப்பிடியான நிலைப்பாட்டினை எடுப்பதன் மூலம், பேச்சுக்களை இழுத்தடித்து, கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் தனது இராணுவத்திற்கு ஓய்வினையும், மீள் ஒருங்கிணைவிற்கான கால அவகாசத்தையும் வழங்க ஜெயவர்த்தன முயல்வார் என்றும் அவர் மேலும் கூறினார். "எமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள எமக்கிருக்கும் ஒரே கவசம் எமக்கிடையிலான ஒற்றுமைதான். எமக்கிடையே பொதுவான அரசியல், இராணுவ செயற்திட்டம் ஒன்று இருப்பது அவசியம்" என்றும் அவர் கூறினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குள் புலிகளையும் இணைத்துக்கொள்வதில் தமது விருப்பத்தினைத் தெரிவித்த அதன் தலைவர்கள், வெகு விரைவில் அமைப்புக்களின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்ய விரும்புவதாகக் கூறினர். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், பிரபாகரனின் பாதுகாப்புக் குறித்து தாம் கவனம் கொள்வதால், முதலாவது கூட்டத்தினை ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்தார். "இக்கூட்டம் ஒரு ஐந்து நட்சத்திர நிகழ்வாகும், ஆகவே ஐந்து நட்சத்திர விடுதியில் இதனை நடத்துவதே சாலப் பொறுத்தம்" என்று தனது வழமையான நகைச்சுவை உணர்வுடன் கூறினார் பாலசிங்கம். பாலசிங்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய கூட்டமைப்பின் செயலாளரான ரமேஷ், "ஜெயாரின் ஐந்து நட்சத்திர ஜனநாயகத்திற்கு பேச்சுவார்த்தைகளில் முகங்கொடுக்கப்போகும் நாங்கள் அவரது பாணியிலேயே இக்கூட்டத்தையும் நடத்தலாம்" என்று என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
  28. https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன். தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும் எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள் இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம் புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார் எண்பட்ட யாவரையும் கவருமிந்த இழிகாலன் செய்கையது என்னே! என்னே! செல்வா என்றோர் வார்த்தை சொன்னால் அங்கோர் சேனையது தலைதாழ்த்திப் பணிந்து நிற்கும் செல்வா என்றே சொன்னாற் தமிழ மங்கை செழு முலையினூடோடி வீரம் சிந்தும் செல்வா என்றழைத்திட்டாற் தமிழர் வாழும் தேசமெலாம் அச்சொல்லின் சிறப்புத் தேங்கும் எல்லாமும் போனதடா ஈழம் சோர்ந்தாள் இழிகாலன் செய்கையது என்னே என்னே (வேறு) தந்தை செல்வாவைத் தானைத் தலைவனாய் ஏற்காதோரும் சிந்தையில் துயரடைந்தார் சிங்களர் கூடச் சோர்ந்தார் மந்திரச் சொல்லால் ஈழ மக்களைத் தன்பால் ஈர்த்து விந்தைகள் புரிந்த செம்மல் விழிகளை மூடிக் கொண்டான் ஓடியே ஒடுங்கிற்றம்மா உயிரினைத் தமிழுக்காக வாடியே கொடுத்த அன்னான் வண்டமிழ்த் தென்றல் மூச்சு பாடியே என்ன கண்டோம் பாடையில் வீழ்ந்த அந்த நீடிய தமிழ் மரத்தின் நிழலினிக் கிடைக்கப் போமோ? (வேறு) கண்ணார் தமிழின் உயர்வுக் குழைத்தே காற்றால் உதிர்ந்த சருகானாய் எண்ணார் உன்னை ஏற்காதோரும் ஏற்றும் தெய்வம் நீயானாய் விண்ணேகினையோ செல்வா தமிழின் விழியே உயிரே ஆரீரோ அண்ணா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ துன்பஞ் செய்த உடல் நோயோடும் தூய தமிழிற் குழைத்ததிலே இன்பங் கண்டாய் செல்வா என்றும் ஈழத் துயர்வே பேச்சானாய் என்புந் தோலும் கொண்டாய் எனினும் எங்கள் தமிழே மூச்சானாய் அன்பே போதும் ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ கைகால் நடுங்கும் உந்தன் உருவைக் கண்டார் இரங்கும் படி வாழ்ந்தாய் மெய்யாய் உணர்விற் தமிழே நினைவாய் மெலிந்தாய் வாடி மிக நொந்தாய் பொய்யாகிய இவ்வுலகின் பதவிப் போரைச் சகியாதுயிர் சோர்ந்தாய் ஐயா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ சீரார் தமிழின் சிறப்பிற்காகச் சிறை சென்றனையே செல்வா நின் பாரா முகம் ஏன் இழிமைத் தமிழர் பதவிப் பித்தால் நொந்தாயோ சோரா மனதிற் துயரச் சுமையாற் தோள் சோர்ந்தனையோ செல்வா எம் ஆராவமுதே போதும் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ
  29. தொல்லை இருந்தால்த் தான் தில்லைக்கு ஒரு கெத்து.
  30. நியாயம் என்று வந்தால் சிறிது பெரிது என்று இல்லை தானே சகோ. அப்படி பார்த்தால் இந்த சிறிய இனத்துக்காக எதுக்காக நாட்டை ஆளும் சிங்களத்தை பகைக்கணும் என்று உலகம் சொல்வது சரியாகிவிடும் அல்லவா?? நீங்கள் சொல்லும் அனைத்து கட்சிகளும் அந்த 8 யை தாண்டி வந்தவை தானே,?
  31. ஒருகாலம் எல்லாம் போட்டு தாக்கியதுதான், எனது அண்ணா ஒருமுறை சாப்பாட்டு விஷயத்தில் என்ன பிரச்சனையெல்லாம் இருக்குனு விளங்கபடுத்திய பின்னரே உணவு மீதான விருப்பம்போய் பயம் வந்தது. பொதி செய்யப்பட்ட எந்த உணவு வகை எடுத்தாலும் முதலில் அதன் பின்னாடி பார்ப்பதே வழக்கம். முதலில் பார்ப்பது சுகர், சோடியம், கலோரிஸ்.கொலஸ்ட்ரோல் வெளிநாடுகளில் பெரும்பாலான நம்மவர்கள் இறப்பது கொலஸ்ட்ரோலினாலும் சுகரினாலும் சோடியத்தினாலும்தான். கொலஸ்ட்ரோல் மாரடைப்பு இதயவியாதி, சோடியம் எனும் உப்பு ரத்த ழுத்தம், சுகர் பிரச்சனை சொல்லவே தேவையில்லை எம்மில் பாதிக்குமேல் சுகர் பிரச்சனையை காவிக்கொண்டு திரிபவர்களே. வெளிநாட்டில் ஆட்டு இறைச்சியினால் போய் சேர்ந்த எம்மவர்கள் ஆயிரம்பேருக்கு மேல வரும், எண்ணெயில் பொரித்த உணவுகளால் எந்த நிமிஷம் வேணுமென்றாலும் போகும் நிலையில் உள்ளவர்களும் பாதிபேர் வரும். சிலரிடம் சொன்னால் நம்புவதில்லை நான் பொரித்த மீன் சாப்பிட்டு 5 வருசம் வரும், ஆட்டு இறைச்சி அது அதுக்கு மேலிருக்கும், வெள்லை அரிசி சோறு என்பது உணவில் பெரும்பாலும் இல்லை, முக்கியமா கொத்துரொட்டி உடல்நல கேடான உணவுகளில் முதன்மையானது .பெரும்பாலும் சமன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியமானது, கோழி இறைச்சியும் கீரையும் அடிக்கடி சாப்பிடலாம் என்பது அபிப்பிராயம். இனிப்பு வைககள் குளிர்பானங்கள் தொடுவதேயில்லை, என்னமோ தெரியவில்லை அதெல்லாம் ஒருவகை ஒவ்வாமைபோலாகிவிட்டது, ஒருகாலம் புகை பழக்கத்துக்கு அடிமையாயிருந்தபோது வைத்தியரிடம் போனதுண்டு, வருடத்தில் ஒரு தடவை உடல் பரிசோதனை உண்டு அதை தவிர்த்து இன்றுவரை எந்த காரணத்துக்காகவும் ஆஸ்பத்திரி பக்கம் எட்டி பார்ப்பதில்லை. எம்மில் சிலர் பொரித்த எண்ணெயை போத்தலில் விட்டு வைத்து மறுபடியும்மறுபடியும் பயன் படுத்துகிறார்கள், பார்க்கவே பயமாயிருக்கும்.அது உயிருக்கே உலை வைக்கும் விசயம். அரிசி விசயத்தில் வடபகுதி மக்கள் 90 மானோர் சிவத்த புழுங்கல் அரிசியும் வன்னி மக்கள் சிவத்த பச்சை அரிசியும் காலம் காலமாக பயன்படுத்துகிறார்கள், இந்த மருத்துவ ஆய்வுகளுக்கு முன்னரே எம் முன்னோர்கள் அறிமுகபடுத்திய உணவு பழக்கம் வியப்பானது. மேலே ஜஸ்டின் சொன்னதுபோல் இதெல்லாம் பண்ணி 100 வருசம் வாழலாம் என்பது அர்த்தமல்ல, வாழும் நாட்களில் வாழ்க்கையில் பாதிநாளை ஆஸ்பத்திரியுடனும் பார்மசியுடனும்,அறுவை சிகிச்சையுடனும்,அரை கிலோ குளிசையுடனும் கழிப்பது மரணத்தைவிட நரகவேதனையானது.
  32. Dangar Island - தனிமை விரும்பிகளுக்கு மட்டும்… கொஞ்ச காலமாகவே ஒன்றிலும் நாட்டம் ஏற்படவில்லை. வேலைகளும் அதிகம், எல்லாவற்றிலும் இருந்து சற்று விலகி அமைதியாக இருக்க மனம் விரும்பியது. இந்த தீவு பற்றி கேள்விப்பட்டு அங்கே போவதற்காக ஓரு அதிகாலையில் வெளிக்கிட்டு இந்த தீவிற்கு வந்தோம். இது ஒரு சிறிய தீவு.. சிட்னியின் ஆரவார இயந்திர வாழ்கையிலிருந்து சற்று விலகி இருக்கும் ஒரு தீவு. Hawkesbury ஆற்றில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள் ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்குள் சுற்றிப் பார்த்துவிட முடியும். Hawkesbury ஆற்றின் அழகு!! இந்த தீவிலும், இந்த தீவிற்கு வரும் வழியிலும் கண்ணில் பட்டதை கருத்தை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் இருக்கும் இடத்திலிருந்து 1 3/4 மணித்தியால கார் ஓட்டத்தில் Brooklyn என்ற இடத்திற்கு வந்து பின் அங்கிருந்து படகில் இந்த தீவிற்கு போகவேண்டும். Brooklynற்கு போகும் வழியில் Mooney Mooney என்ற இடத்தில் காலை உணவிற்காக நின்ற பொழுது.. அங்கே இருந்த Lawn bowling கிளப்பில் சிறிது நேரம் பொழுதை கழித்தோம். வேலையில் இருந்து ஓய்வு எடுத்தபின் இந்த பௌலிங் விளையாட்டு உதவும் என்பதால் அதனை விளையாடிப் பார்த்த பொழுது.. பின் மதிய உணவை முடித்துக்கொண்டு Brooklyn படகுதுறைக்கு மதியம் இரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்தோம்.. படகு வந்ததும் கட்டனத்தை செலுத்திவிட்டுப் படகில் ஏறி, 10 நிமிடங்களில் Danger Island வந்தடைந்தோம்.. இந்த தீவில் வாகன வசதி இல்லை என்பதால் நடந்தே தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அதிகளவு பொருள்கள் என்றால் முன்பே பதிவு செய்து community buggy( சிறிய வண்டி) பயன்படுத்தலாம் மற்றப்படி படகுதுறையில் வைத்திருக்கும் சிறிய தள்ளுவண்டியில்( wheelbarrow) பொருள்களை வைத்து இழுத்துக் கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரவேண்டும்.. இந்த தீவி்ல் முன்பு அதிகளவு அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள் இருந்தனர் ஆனால் பிரித்தானியர்களின் வருகையுடன் பூர்வீக குடிகள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். இப்பொழுது 300லும் குறைவானவர்களே இந்த தீவின் மொத்த சனத்தொகை.. இங்கே ஒரு bowling club, NSW தீயணைப்பு நிலையம் மற்றும் ஒரு உணவகமும் உள்ளது.. சிறுவர் பூங்கா உள்ளது. அதுமட்டுமல்ல பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. அவசரமில்லாமல் ஆறுதலாக இந்த தீவைச் சுற்றினால் நிறைய விடயங்களை காணலாம். தூய்மையான காற்றையும் சுவாசிக்கலாம். மேலும் இந்‌த தீவு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இருந்து எத்தனையோ மடங்கு பின்தள்ளி உள்ளதால் பதின்ம வயதினருக்குப் பிடிக்காது ஏனெனில் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விரும்பி வரக்கூடும் ஏனெனில் எந்தவித தடைகள், வாகனங்கள் இன்றி வீதிகளில் ஓடி விளையாட முடியும். இந்த தீவில் ஒரு சிறிய கடற்கரை உள்ளது. விடுமுறையில் வருவோர் தங்க வசதியாக கடற்கரையைப் பார்த்தபடி ஒன்றிரண்டு தங்குமிடங்களும் உண்டு.. மிகவும் அமைதியான ஒரு தீவு.. தனிமையை விரும்புபவர்கள் இங்கே வந்து அமைதியாக மனிதர்களின் தொந்தரவின்றி நாளை/நேரத்தை கழிக்க முடியும். Berowra Waters வீடு திரும்பும் வழியில் Berowra Waters என்ற இடத்தினூடாக வரும் வழியில் அந்த இடத்தைப் பார்த்து எனக்குள் நினைத்தேன் “ அவுஸ்திரேலிய உண்மையில் அழகான ஒரு தீவு.. இயற்கையாகவே அதிகளவு மலைகளும் அதனால் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும் அதே சமயத்தில் இந்த மலைகளுடாக காரில் பயணிப்பதும் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். அதுமட்டுமல்ல இயற்கையாகவே அழகிய கடற்கரைகளும் உள்ள ஒரு நாடு.. இதைப் போல மற்ற நாடுகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகமே” என்று.. வீடு திரும்பும் பொழுது யாழ் இணையத்தின் 26வது அகவைக்காக நன்றி - பிரபா
  33. [TamilNet, Sunday, 04 February 2024, 15:40 GMT] இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இன அழிப்புப் போரொன்றை ஓர் அரசு நடாத்தினால் அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான 1948 ஆம் ஆண்டுச் சட்டத்தின் (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) ஊடாக அவ்வரசு எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை சியோனிச இஸ்ரேல் மீது தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கைச் சர்வதேச நீதிமன்று நம்பகமான நீதிவரம்புக்குட்படும் (prima facie jurisdiction) குற்றச்சாட்டாக ஏற்றுக்கொண்டமை கனதியாக நிறுவியுள்ளது. இதுவரை காலமும் தமது நலன்களுக்கேற்ப அமெரிக்காவும் அதன் அணிவகுப்பும் சர்வதேசச் சட்டங்களையும் நிறுவனங்களையும் ‘விதிகளின் பாற்பட்ட சர்வதேச ஒழுங்கு’ (Rules-Based International Order) என்று விளித்துக் கட்டமைத்து வந்தன. இதற்கு இன்னொரு பெயர் தாராளவாத சர்வதேச ஒழுங்கு (Liberal International Order). இந்த ஒழுங்கு ஏற்படுத்திய ஆழமான வடுக்களில் ஒன்றே தமிழீழ மெய்நடப்பு அரசு மீதான 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு. ஒரு துருவ உலக ஒழுங்கு (unipolar world order) தனிப்பெரும் உலக ஓட்டமாகக் கோலோச்சிய காலத்தில் (1990-2017) இன அழிப்பு என்ற உச்சக் குற்றத்தை எங்கு அனுமதிப்பது, எங்கு மறுப்பது, எங்கு ஒளிப்பது என்பதை அமெரிக்கா தீர்மானித்து வந்தது. யூதர்கள் மீது நடைபெற்ற பெருங்குற்றத்தோடு ஏனைய இன அழிப்புகளை ஒப்பிட இயலாது என்ற மன நிலையை அரசியல் சியோனிஸ்டுகள் கொண்டுள்ளனர். இதனால் இந்தச் சொல்லை வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் ஒருபுறம் இயங்கிவந்தனர். மறுபுறம், மேற்குலக தாராளவாத மேலாண்மை (Liberal Hegemony) எனும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சார்ந்த அணிவகுப்பானது, தனது தேவைக்கேற்ப, சேர்பியாவுக்கு எதிராக பொஸ்னிய மக்களின் அவலத்திலும், மியான்மாருக்கு எதிராக ரொஹங்கியா மக்களின் அவலத்திலும், சர்வதேச நீதிமன்றில் இன அழிப்பு என்ற பார்வையில் குறித்த குற்றங்கள் எடுத்தாளப்படுவதற்கு ஏதோ ஒரு வகையில் இடமளித்தது. ஆனால், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பைப் பேசாப்பொருளாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. அமெரிக்காவின் இந்த வெளியுறவுக் கொள்கைக்கு பலத்த அடியைத் தற்போது தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது. இஸ்ரேல் மீது இன அழிப்பு என்ற அடிப்படையில் வழக்குத் தொடுத்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது தென்னாபிரிக்காவுக்கு முன்னரே தெரிந்த ஒன்று. இருந்தபோதும், அந்தக் கோபத்தைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை என்ற துணிவை மாறிவரும் உலக ஒழுங்கு அந்த நாட்டுக்கு வழங்கியிருந்தது. இஸ்ரேல் காசாவில் புரிவது இன அழிப்பு அல்ல என்றும், அவ்வாறான பார்வையில் தென்னாபிரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுத் தகுதியற்றது (meritless) என்றும் கருத்து வெளியிட்ட அமெரிக்காவுக்கு அந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை சர்வதேச நீதிமன்று ஏற்றுக்கொண்டுள்ளமை, ‘விதிகள்-சார்ந்த சர்வதேச ஒழுங்கு’ என்ற கட்டுக்குள் இன அழிப்பைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டிய சர்வதேச நீதி இனிமேலும் முடக்கப்பட முடியாதது என்பதை முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லிவைத்துள்ள மகத்தான நகர்வாகும். கனடா நாட்டின் மொன்றியலில் இருந்து பலஸ்தீனிய பகுப்பாய்வாளர் மொயின் ரபானி 2024 ஜனவரி 27 அன்று யூரியூப் ஒளியலை நிலையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்: உலக ஒழுங்கு மாறிவருவதால் ஏற்பட்டுள்ள சூழலில் தனது நலன் சார்ந்த பலப் பரீட்சையாக மட்டும் தென்னாபிரிக்கா இந்த வழக்கை முன்னெடுக்கவில்லை. உண்மையில், இதற்கான நெறியமைக்கும் முன்தீர்ப்பு (precedent setting) மாற்றம் – அதாவது சர்வதேசச் சட்டத்தில் வழமைச் சட்டமாக (customary law) மாறிய நிகழ்வு – கம்பியா என்ற சிறிய ஆபிரிக்க நாடு பதினோராயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் மியன்மார் அரசு மீது ரொஹிங்யா மக்கள் மீது மியன்மார் இராணுவம் புரியும் இன அழிப்புத் தொடர்பாகத் தொடுத்த வழக்கில் அனைத்து அரச தரப்புகளுக்கும் ஒட்டுமொத்தமாக சர்வதேச சட்டம் வழங்கும் Erga Omnes partes என்ற கடப்பாட்டை நிறைவேற்றும் பொறுப்பு என்ற அடிப்படையில், ஒரு முக்கிய மைற்கல் நிகழ்வாக, நான்கு வருடங்களுக்கு முன்னர் 2020 ஜனவரி 23 அன்று நிறுவப்பட்டுவிட்டது. ரொஹிங்யா இன அழிப்பு வழக்குத் தொடர்பான 23 ஜனவரி 2020 அல் ஜஷீரா ஒளிபரப்பு நிகழ்ச்சியிலிருந்து: TamilNet article (23 December 2019): Tamils learning lessons from ICJ-case against Myanmar, ICC-investigation on Israel மியான்மார் மீது கம்பியாவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு அடுத்ததாக பலம் பொருந்திய இஸ்ரேல் மீது ஆபிரிக்கக் கண்டத்தின் முக்கிய நாடான தென்னாபிரிக்கா அதே நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் சர்வதேசச் சட்டம் சார்ந்த இந்தப் படிமை மாற்றம் (paradigm-shift) கெட்டியாகியுள்ளது. அது மட்டுமல்ல, குறித்த நகர்வுக்கான அறம் நெல்சன் மண்டேலாவின் நிலைப்பாட்டோடு தொடர்புபட்ட விடுதலை அரசியலின் நீட்சியுமாகும் என்பது குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. பலஸ்தீனம் விடுதலை பெறாமலும், கிழக்குத் தீமோர், சூடான் உள்ளிட்ட உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெறும் சிக்கல்கள் தீர்த்துவைக்கப்படாமலும், தென்னாபிரிக்க விடுதலை முற்றுப்பெறாது என்று நெல்சன் மண்டேலா 1997 இல் வெளிப்படுத்தியிருந்த நிலைப்பாடு இதற்கான சான்று: “But we know too well that our freedom is incomplete without the freedom of the Palestinians; without the resolution of conflicts in East Timor, the Sudan and other parts of the world.” (மூலம்: 04 டிசம்பர் 1997 - Address by President Nelson Mandela at International Day of Solidarity with Palestinian People, Pretoria) இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையான பின் அமெரிக்காவுக்கு நெல்சன் மண்டேலா சென்றிருந்தபோது, 11 பெப்ரவரி 1990 அன்று மேற்கொண்ட வெளிப்படுத்தலும் இத்தோடு ஒருசேர நினைவுபடுத்தி நோக்கப்படவேண்டியது: ஈழத்தமிழர் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப் போரை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு மனிதாபிமான அவலம் என்றும், இரண்டு தரப்புகள் இழைத்த சர்வதேசக் குற்றங்கள் என்றும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் மட்டுப்படுத்தியது. அதே அமெரிக்கா, பலஸ்தீனத்தின் காசா மீதான இன அழிப்புப் போர் தொடர்பாகவும் ஐ.நா. பாதுகாப்புச்சபையை வீற்றோ மூலம் முடமாக்கிவந்துள்ளது. இந்தப் பின்னணியில் தான், மறைந்த நெல்சன் மண்டேலாவின் வழிவந்த தென்னாபிரிக்கா எந்தவொரு இஸ்லாமியத் தேச அரசும் செய்ய முன்வராத அளப்பரிய துணிவோடும் ஆற்றலோடும் உலக மனச்சாட்சியை ஆழமாகத் தொடும் தனது நகர்வை சர்வதேச நீதிமன்றில் 2023 டிசம்பர் 29 ஆம் நாள் முன்னெடுத்தது. ஆபிரிக்க நோக்கு நிலையில் இருந்து இஸ்லாமிய நாடுகளை நோக்கி முன்வைக்கப்படும் ஒளியலைப் பார்வை ஒன்று வருமாறு: South Africa's application instituting proceedings against Israel at ICJ இதன் விளைவாக, 2024 ஜனவரி 26 அன்று வெளியான இடைக்கால நடவடிக்கைகள் (provisional measures) தொடர்பான சர்வதேச நீதிமன்றின் தீர்ப்போடு தென்னாபிரிக்காவின் வழக்கு இன அழிப்புக் குற்றங்களை அணுகும் உலகளாவிய சட்ட அடிப்படையில் விசாரணைக்குத் தேவையான நம்பத்தக்க இன அழிப்புக் குற்றச்சாட்டாகக் (plausible genocide) கையாளப்பட்டு தொடர்ந்தும் விசாரிக்கப்படும் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ICJ verdict on Provisional Measures இவ்வாறு சர்வதேச சட்டத்தில் இன அழிப்புத் தொடர்பான படிமை மாற்றம் ஏற்படுகையில், சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட வேண்டிய படிமை மாற்றம் தொடர்பான ஈழத்தமிழர் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கைத் தீவில் ‘இரண்டு-அரசுத் தீர்வு’ (Two-State Solution) என்ற விடயத்தை இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா பேசாப்பொருளாக்கியது ஏற்கனவே தெரிந்த உண்மை. ஒரு துருவ உலக ஒழுங்கின் உச்சத்தின் போது “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றால் ஒன்றில் விடுதலைப் புலிகளே தாமாக தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுமாறு நிர்ப்பந்திக்கப்படவேண்டும் அன்றேல் அவர்கள் அழியவேண்டும் என்று பிராந்திய வல்லாதிக்கமும் உலக வல்லாதிக்கமும் ஒத்திசைந்து செயற்பட்டன. பலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யசீர் அரபாத்துடன் இஸ்ரேல் 1993 ஆம் ஆண்டு உடன்படவேண்டியிருந்த ஒஸ்லோ உடன்படிக்கைகளை இஸ்ரேல் தனது நகர்வுகள் மூலம் ஆப்பு வைத்து மடைமாற்றம் செய்தது. அதே போன்ற மடைமாற்றத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சமாதான நடவடிக்கை திணிக்க முயன்றபோது, அதை மிக நுட்பமாக மறுத்து இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (ISGA) என்ற திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். Tigers release proposal for Interim Self Governing Authority (01 November 2003) LTTE issues Communiqué in Oslo (09 June 2006) TamilNet releases LTTE documents of 2006 talks (31 December 2011) ஒஸ்லோ உடன்படிக்கையை எப்படித் தான் அமெரிக்க உதவியுடன் தடுத்துக்கொண்டதாக பந்தய ஓட்டக் குதிரையின் வாயிலிருந்து நேரடியாக வெளிப்பட்ட சாட்சியம் போல பெஞ்சமின் நேத்தன்யாகு 2001 ஆம் ஆண்டு சொல்லியது: இதைப்போலவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தையை மிலிந்த மொராகொட போன்றோர் அமெரிக்க உறவோடு ஒருதலைப் பட்சமாக மடைமாற்றம் செய்தனர். Wikileaks US Cable: Ranil Wickramasinghe tilts towards US, Moragoda's startling proposal to U.S. officials (29 May 2003) ஜோர்ஜ் புஷ் தலைமயிலான அமெரிக்காவினதும், சோனியா காங்கிரஸ் தலைமையில் மன்மோகன் சிங் 2004 ஆம் ஆண்டு பிரதமராகிய போதான தீக்ஷிற் மீள்வருகையுடனான இந்தியாவினதும் ஒன்றித்த ஆசி இதற்கு அடித்தளமிட்டது. இதன் விளைவான முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் பின் 14 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழருக்கான அரசியற்தீர்வு எப்போதோ கிழிந்து உக்கிப்போன 13 ஆம் திருத்தத்தில் மட்டுமே இன்றும் தொங்குவதாக இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் – அவை இணைந்து இயங்கினாலும் சரி தனித்தனியே இயங்கினாலும் சரி – போதித்து வருகின்றன. இதிலே பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தற்போதைய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜய்சங்கர் (தீஷித்தோடு 1987 இல் கடமையாற்றியவர்) ஈழத்தமிழர் தொடர்பாகக் கையாளும் வெளியுறவுக்கொள்கையும் –காங்கிரஸ் விட்ட அதே வழியில் பயணித்து – ஈழத்தமிழர்களுக்குப் பாதகமாகச் செயற்பட்டுவருகிறது. இந்தப் பின்புலத்தில், எவ்வாறு பலஸ்தீன மக்களுக்கான வாக்குறுதியாக ஐ.நா. வில் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு-அரசுக் கொள்கை ஒருதுருவ உலக ஒழுங்கில் வெற்றுப் பேச்சாக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுத், திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் பலஸ்தீனர்களின் தாயகம் சூறையிடப்படுகிறதோ, அதைப் போல, தமிழீழ மெய் நடப்பு அரசு அழிக்கப்பட்ட பின் ஈழத் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படைகள் சிதைக்கப்பட்டுவருகின்றன. பலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சிதைத்து இரண்டு இயக்கங்களை பெரும் பிளவாக்கி மோதவிட்ட சூழ்ச்சியை எவ்வாறு இஸ்ரேல் செய்து முடித்ததோ அதைப்போல தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உச்ச நிலையிலும் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை இஸ்ரேல் வழங்கியது. ஏதோ, முள்ளிவாய்க்கால் தொடர்பாக இஸ்ரேல் இலங்கையிடமிருந்து கற்றுக்கொண்டு காசாவில் இன அழிப்புப் போரை முன்னெடுப்பதாகச் சிலர் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மை அதுவல்ல. மாறாக, முள்ளிவாய்க்காலைத் தனக்குத் தேவையான முன்னோடிப் பரிசோதனைக் களமாக இலங்கையூடாக இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டது என்பதே நடைமுறையில் நடந்தேறிய விடயம். அதுமட்டுமல்ல, இலங்கை அரசு ஆரம்ப காலத்தில் இருந்து இஸ்ரேல் மாதிரியை ஈழத்தமிழர் தொடர்பாக நகலெடுத்துப் பின்பற்றிவருகிறது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஜோன் பில்ஜர் (1939–2023) போன்ற ஒரு சில உலக ஊடகவியலாளர்கள் இதை 2009 ஆம் ஆண்டிலேயே எடுத்துச் சொல்லியிருந்தனர். Tamils need to be heard - John Pilger (17 May 2009) இன்றுவரை மத்திய கிழக்குத் தொடர்பாகப் பேசாப் பொருளாயிருந்த இரண்டு-அரசுத் தீர்வு என்பது தற்போது மீண்டும் உலகளாவிப் பரவலாகப் பேசப்படும் பேசுபொருளாகியுள்ளது. இதைப் போல ஈழத்தமிழர் தேசம் குறித்தும் இரண்டு அரசுத் தீர்வு என்பது மீண்டும் பேசுபொருளாக்கப்படவேண்டும். ஒரு துருவ உலக ஒழுங்கு நலிவடைந்து பல்துருவ ஒழுங்கு உருவாகிவரும் சூழலில் அமிலப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சர்வதேசச் சட்டமும் (International Law) உலக மக்களின் கருத்தை உதறித்தள்ளிவிடமுடியாது கருத்திற்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு திண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ள சர்வதேச அரசியலும் (international politics) படிமை மாற்றத்துக்கு உள்ளாகிவரும் தவிர்க்கப்பட இயலாத நியதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பயமின்றித் தென்னாபிரிக்காவால் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராகவும், எங்கோ தொலைவில் இருக்கும் கம்பியாவால் மியான்மாருக்கு எதிராகவும் ஏற்படுத்த இயலுமாயுள்ள Erga Omnes partes கடப்பாட்டை இலங்கை தவிர்ந்த 152 தேச அரசுகளில் ஒன்றால் ஈழத்தமிழர் தொடர்பாக, இந்தியாவையும் அமெரிக்காவையும் மட்டுமல்ல தேவையானால் சீனாவையும் ரஷ்யாவையும் கூட மீறிச் செய்ய முடியும். 153 State Parties to Genocide Convention as of April 2022 ஜெனீவாவிலிருக்கும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இன அழிப்பு நீதி தொடர்பான கோடிகாட்டல்கள் எதுவும் வெளிவராது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடுத்துவந்துள்ளன. ஆனால், அங்கு சாதிக்க இயலாததை ஐ.நா. உயர் நீதிமன்றம் என்று வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிமன்றில் சாதிக்கச் செய்யத் தேவையான வழி முறைகளை ஈழத்தமிழர் மேற்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனையை பிரபல சர்வதேசச் சட்ட பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் காலம் தவறாமல் அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறிய போதும் தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் மனித உரிமைப் பேரவை அணுகுமுறைக்குள் அல்லது எதுவித பலனும் தர இயலாத வேறு கற்பனைகளுக்குள் தமது வளங்களை, அதுவும் அவற்றைக்கூட மிகவும் மட்டுப்படுத்தி, பயன்படுத்திவந்துள்ளன. Boyle prefers IIIM demand over ICC-referral, says specific reference to genocide essential (07 January 2021) Professor Boyle calls for BSD Campaign against genocidal Sri Lanka (28 October 2018) Stopping Sri Lanka's genocide at ICJ, UN- Prof. Boyle (11 March 2009) இருப்பினும், சாத்தியமில்லை என்பதைச் சாத்தியமாக்குவதே விடுதலைப் போராட்ட அரசியல் என்பதை உணர்ந்து இனியாவது நல்ல ஆலோசைனைகளத் தரம்பிரித்து இனங்கண்டு நம்பிக்கை பெற்றுச் செயலாற்றவேண்டும். பதினான்கு வருடங்களாக அறிந்தோ அறியாமலோ செயற்பாடின்றி இருந்த ஈழத்தமிழர்களும், கண்மூடித்தனமாகச் செயற்பட்டுத் தவறாகப் பயணித்துப் பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களும், மேற்கினதும் இந்தியாவினதும் இணைந்த அல்லது வெவ்வேறான பலதரப்பட்ட சூழ்ச்சிகளுக்குப் பலியாகியுள்ளோரும் தம் தவறுகளை உணர்ந்து தோல்வி நிலையில் இருந்து வெளிப்பட்டு தம்மைத் தாமே தடவழித் திருத்தத்துக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டும். அதேவேளை, ஏற்கனவே காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு அவற்றைப் பலனளிக்கவிடாது தடுத்த உட்காரணிகளால் நலிவடைந்தோர் மீண்டும் உரம்பெற்று இறுதி ஆட்டத்திற்கு எழுந்தாக வேண்டிய வரலாற்றுத் தருணத்துக்குத் தம்மைத் தயார்ப்படுத்தவேண்டிய காலம் இது. மாறும் உலக ஒழுங்கு தானாக ஈழத்தமிழருக்காக எதையும் கொண்டுவந்து தராது. வாளாவிருந்து ஈழத்தமிழர் எதையும் சாதிக்க இயலாது. ஆதலால், உலக ஒழுங்கின் மாற்றத்தில் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளத் தக்கதாக தேசியக் கொள்கை நிலைப்பாட்டை நங்கூரமிட்டு நிலைப்படுத்திக்கொள்வது வரலாற்றுக் கடமையாகிறது. * * * முள்ளிவாய்க்காலின் பின்னான 14 வருடங்களின் பின்னர் தற்போது இந்த தாராளவாத மேலாதிக்கம் தோற்க ஆரம்பித்துள்ளமை மனத் திருப்தியையும் உற்சாகத்தையும் அளிக்கும் நற்செய்தியாகும். அமெரிக்காவின் தாராளவாத மேலாதிக்கத்தின் உலகளாவிய கதை எவ்வாறு முடிவுக்கு வருகிறது என்பதை ஐயந்திரிபற விளங்கிக்கொள்ள ஈழத்தமிழர் செயற்பாட்டாளர்களும் அரசியலாரும் கருத்துருவாக்கிகளும் சமகால உலகின் முதன்மையான நடப்பியல்வாத (Realism) அரசறிவியலாளரும் பேராசிரியருமான ஜோன் மியஸ்ஹைமர் என்ற அமெரிக்கர் வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்த பின்வரும் மூன்று கருத்துரைகளையும் கிரகிப்பது மிகவும் பலனளிப்பதாய் இருக்கும். ஒருவகையில், மியஸ்ஹைமரை விட உலகில் எவராலும் இதை மேலும் தெளிவாகவும் அழகாகவும் விளக்க இயலாது எனலாம். நடப்பியல்வாதியான இவரது விரிவுரைகளும் விளக்கங்களும் – இரண்டு அரசுத் தீர்வு தொடர்பான இவரின் மட்டுப்படுத்தப்பட்ட பார்வைக்கு அப்பால் – சர்வதேச உறவுகள் என்ற துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளங்கிக்கொள்ளப் பெரிதும் உதவும். 1. மூன்று மாதங்களுக்கு முன்னர் (23 ஒக்டோபர் 2023) இஸ்ரேல் - ஹமாஸ், உக்ரைன் - ரஷ்யா, சீனா தொடர்பாக அவுஸ்திரேலிய சுயாதீன ஆய்வுகளுக்கான மையத்தில் (CIS) மீயஸ்ஹைமர் வழங்கிய விரிவுரை: 2. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் (29 ஒக்டோபர் 2007) அமெரிக்க இஸ்ரேல் அணைவுக் குழுவின் (Israel Lobby) ஆபத்தை விளக்கும் நூலின் வெளியீட்டோடு மீயஸ்ஹைமர், ஸ்டீபன் வோல்ற் ஆகியோர் கேம்பிரிஜ் விவாத அரங்கில் வழங்கிய விரிவுரையும் கேள்வி-பதிலும்: 3. ஆறு வருடங்களுக்கு முன்னர் (15 நவம்பர் 2017) அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தில் வழங்கிய தாராண்மைவாத மேலாதிக்கம் பற்றிய 101 விரிவுரை: * * * எதிரிகளை விட இரண்டகர்கள் ஆபத்தானவர்கள் என்பது பல போராட்டங்கள் தரும் பட்டறிவு. ஆனால், இவர்கள் இருதரப்பினரை விடவும் ஈழத்தமிழருக்குள் இருக்கும் "தொடை நடுங்கிகள்" மிகுந்த ஆபத்தை விளைவிப்பவர்கள் என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலம் தரும் முக்கிய படிப்பினை. இன்றைய ஈழத்தமிழர் அரசியல், கருத்துருவாக்கம் உள்ளிட்ட செயற்படுபரப்பு தொடை நடுங்கிகளால் நிரம்பி வழிகின்றது. இரு துருவ உலக ஒழுங்கும் அதைத் தொடர்ந்த ஒரு துருவ உலக ஒழுங்கும் ஈழத்தமிழருக்குள் ஏற்படுத்திய பாதகமான உள்ளிருந்தே முடக்கும் நோய் இதுவாகும். சமகால சர்வதேச அரசியலைக் கூர்மையாகக் கிரகிக்கும்போது தான் இந்த நோயின் ஆபத்தான தார்ப்பரியம் புரியும். குறிப்பாக, தாராளவாத மேலாதிக்கத்துக்கும் (Liberal Hegemony), அணைவுக்குழு மனநிலைக்குள்ளும் (Lobbyist mindset) சிறைப்பட்டுள்ள இந்தத் தொடை நடுங்கித்தனத்தின் பிடியில் இருந்து முதலில் ஈழத் தமிழர் விடுதலை பெற வேண்டும். ஆகவே, இந்த நோயின் மூலம் எது என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. குறிப்பாக இதன் சர்வதேச ஊற்று எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை உய்த்துணர்ந்துகொள்வது மிகவும் பயன் தருவதாகும். இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை எவ்வாறு ஈழத்தமிழர் விடுதலைக்குக் குந்தகமாக இருந்துவந்துள்ளது என்பதை ஒப்பீட்டளவில் ஈழத்தமிழர்கள் நன்கு புரிந்துவைத்துள்ளார்கள். இருந்தும், இந்தியா தொடர்பாகக் கூட அமிர்தலிங்கத்தைத் துரோகியாக்கிய இந்திராகாந்தி பற்றிய பார்வையில் ஈழத்தமிழர்களிடையே இன்றும் கணிசமான தெளிவின்மை நிலவுகிறது. இந்தியாவை எதிர்கொண்டு முன்னேறும் ஆற்றல் மட்டுமல்ல பட்டறிவும் கொண்டதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் விளங்கியது. இந்தியாவால் தனித்து அழிக்கப்பட இயலாத போராட்ட இயக்கமாக அது கூர்ப்படைந்திருந்தது. ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இந்தியாவையும் விஞ்சிய தளத்தில் முள்ளிவாய்க்கால் முடிவை நிருணயித்தது. இந்தப் புவிசார் அரசியல் எவ்வாறு நடைமுறையில் பாரதூரமான வெளியுறவுக்கொள்கையாக இயங்கியது என்பது பற்றிய வரலாற்றுப் புரிதல் பெருமளவு ஈழத்தமிழரிடையே இன்னும் ஏற்படவில்லை. அந்தப் புரிதல் ஏற்படும்போது தான் முள்ளிவாய்க்காலில் சரணாகதியாகாத போராட்டத்தின் கனதியும், அடுத்த கட்டத்துக்கான பொருள்கோடலும் பொருத்தமாக எடுத்தாளப்படும் சூழல் தோன்றும். அமெரிக்காவின் புவிசார் அரசியற் பார்வைகள் பற்றி ஏற்கனவே பலரும் நன்கு அறிந்துள்ளனர். இந்தப் புரிதலுக்கு தமிழீழ விடுதலைப் போரின் உச்சக் காலத்தில் மாமனிதர் சிவராம் பொதுவெளியில் இட்ட அடித்தளம் கணிசமாகப் பங்காற்றியிருந்தது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பின் புவிசார், அரசியல் இராணுவ நகர்வுகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு நகர்த்தவல்ல தலைமை ஈழத்தமிழரிடம் இருப்பதை நன்கு உணர்ந்துகொண்ட சிவராம், அரச, அரச சார்பற்ற சக்திகள் தீர்மானித்துவந்துள்ள ஆபத்தான போக்குகளை எதிர்கொண்டு முன்னேறத்தக்க அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது பற்றிய ஆழமான திட்டமிடலில் ஈடுபட்டிருந்த போது, சந்திரிகா அரசின் காலத்தில் அவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய அரச புலானாய்வுத் துறையால் அரசியற் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார். சிவராமின் படுகொலைக்குப் பின்னர் கணினியில் இருந்து மீட்கப்பட்டு வெளியான கட்டுரை அவரது புரிதல் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. US's strategic interests in Sri Lanka- Taraki (30 July 2005) தாராளவாத மேலாதிக்க அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்குள் அணைவு அரசியல் மூலம் பலியாகாது ஈழத்தமிழர் விடுதலை அரசியலைக் காக்கும் கருத்தியலை உருவாக்குவதிலும், அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் சியோனிசத்தாலும் இன்ன பிற காரணிகளாலும் ஈழத்தமிழர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள தொடை நடுங்கித்தனத்தைப் பிய்த்தெறிவதிலும் இருந்து அடுத்த கட்ட நகர்வு நடைமுறைப்படுத்தப்படவேண்டியது. ***************************************************** தேசியவாதத்துக்கு எதிரான தனது உலகப் பார்வையாற் தூண்டப்பட்டு, இன அழிப்புக்கு எதிரான நேர்மறையான சமய சார்பற்ற முற்போக்குத் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆபத்தாக நோக்கி, தான் பின்னிய சர்வதேச தன்னார்வ வலைப்பின்னல் மூலம் மனித உரிமைக்கும் சன நாயகத்துக்கும் உதவுதல் என்ற போர்வையிற் செயற்பட்டு, பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் புலி-எதிர்ப்புவாதத்துக்கு நிதியூட்டம் புரிந்த நிறுவனங்களிற் பல ஜோர்ஜ் சோரோசிடமிருந்து நிதியுதவி பெற்றவை. The Guardian: The George Soros philosophy – and its fatal flaw (06 July 2018) பின்வரும் ஒளியலை விவரணம் ஓர் அமெரிக்க வலதுசாரிப் பார்வையாய் இருப்பினும், இடதுசாரி போல மாயத் தோற்றமளிக்கும் சோரோசை அறியாதவர்கள், அவரின் ஊட்டத்தில் இயங்கும் வலைப்பின்னலை அறிந்து கொள்ளப் பொருத்தமான வகையில் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதால் இங்கு இணைக்கப்படுகிறது: * * * அமெரிக்காவின் அதிகாரபூர்வ வெளியுறவுக்கொள்கையைக் கணிசமாகத் தீர்மானித்த சியோனிசத்துக்குப் பயன்பட்ட இராஜதந்திரத்தின் சிகரமாயிருந்து அண்மையில் நூறு வயதில் மறைந்த அமெரிக்க யூதரான ஹென்றி கிசிஞ்சரும் அவர் வழி வந்தோரும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பதை அறிந்து தெளிவதன் ஊடாகவும்; சியோனிசத்துக்கு எதிரான அமெரிக்க யூதராயிருந்த போதும் தனது பொருண்மிய வளத்தையும், கருத்தியலையும், தன்னார்வ வலைப்பின்னலையும் அமெரிக்க அரசு போர்களின் ஊடாகச் செய்த உலகளாவிய அரசாங்க மாற்றங்களுக்கு ஈடாகத் தானும் தனது தாராளவாத மேலாதிக்கப் பார்வையூடாக மேற்கொண்டு இன்றும் தொண்ணூறு வயதுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறிதொரு பேர்வழியான ஜோர்ஜ் சோரோஸின் உலகளாவிய திறந்த வலைப்பின்னல் ஈழத்தமிழர்களுக்குள் வளர்த்த புலி எதிர்ப்பு, தேசியக் கோட்பாட்டு எதிர்ப்பு போன்ற போக்குகளை இனங்கண்டுகொள்வதன் ஊடாகவும்; அமெரிக்க சியோனிச அணைவுக்குழு (AIPAC), அதையும் விஞ்சி சியோனிசத்தோடு விவிலேயப் பிணைப்பில் இருக்கும் அமெரிக்கச் சுவிசேசக அணைவுக்குழு ஆகியவற்றையும் அவற்றின் தன்மைகளையும் சரிவரப் புரிந்து கொள்வதன் ஊடாகவும் இந்தத் தொடை நடுங்கித் தன்மையின் மூலங்கள் ஈழத்தமிழர்களுக்குள் எங்கிருந்து புகுந்துகொள்கின்றன என்பதை அடையாளங் கண்டுகொள்ளலாம். ******************************************************************* ஹென்றி கிசிஞ்சர் பற்றிய சில ஒளியலைப் பார்வைகள்: * * *
  34. இந்த கேடு கெட்ட உலகத்திடமிருந்து விடுதலை பெற்றுவிட்டேன் என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்.
  35. முடி திருத்தகம் ஒன்றில் இன்று நான் அவளைச் சந்தித்தேன் அவள் அமெரிக்க நாட்டின் ஆப்கான் அகதி பல்கலை ஒன்றில் பட்டம் பயிலும் அவள் பகுதி நேரம் அங்கே பணி புரிகிறாளாம் இப் புனித மாதத்தில் தன் ஊரில் இல்லாமை பற்றி அதிவருத்தம் கொண்டாள் முன்னொரு நாளின் ரமலான் நோன்பில் தன் சுற்றம் கூடி உண்டது பற்றி அதிகம் அளவளாவினாள் அரை மணி நேரம் தான் முடி வெட்டி மீள்கையில் கூலிக்கும் மேல் ஒரு சிறு தொகை கொடுத்தேன் ஆம்… ஒரு ஈழ அகதியின் பெயரால் அவளின் இன்றைய நோன்பு துறக்கப்படட்டும் தியா - காண்டீபன்
  36. சீமான் மக்களிடம் சென்றடைந்தது சகூக ஊடகங்கள் மூலமாகத்தான். அவை இல்லாவிட்டால் தமிழ்த்தேசியத்தை பேசும் சீமானை காட்டுவதற்கு தமழ்நாட்டில் எந்த ஒரு முதகெலும்புள்ள ஊடகங்களும் இல்லை.தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று கடந்த தேர்தல் மூலம் நிருபித்த நாம்தமிழர் கட்சியை கருத்திணிப்புகளில் அந்தப் பெரில் போடுவதற்கு எலும்புத்துண்டைப் பொறுக்கும் உடகங்களிடம் திராணியில்லை.தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்ந்து திமுக நுட்டணி>அதிமுக கூட்டணி>பாஜக கூட்டணி தவிர நாம்தமிழர் கட்சி ஆகிய 4 பிரதான கட்சிகள் போட்டிpடும் பொழுது கருத்துத்திணிப:புகளில் மற்றவர்கள் திமுக.ஆதிமுக பாஜக நுட்டணிகளை மட்டும் போட்டு விட்டு 4வதாக மற்றவர்கள் என்று போடுகிறார்கள். இந்த மற்றவர்கள் யார்?யார்?இந்த நிலமையில் நமக்குநாமே ஊடகம் என்று நாம்தமிழர் கட்சி சமூக ஊடகங்கபை; பன்படுத்துவதில் என்ன தவறு?
  37. @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான் @புலவர் உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ண‌னியில் இருந்து அழைப்பு கொடுங்கோ...............என்ர‌ கைபேசியில் இருந்து கொடுக்க‌ ச‌ரியா வ‌ருதில்லை.................. சுவைபிரிய‌ன் அண்ணா வாத்தியார் த‌மிழ் சிறி அண்ணா குமார‌சாமி தாத்தா ஏராள‌ன் அண்ணா நீர்வெலிய‌ன் அண்ணா கோஷான் ச‌கோ நுனாவில‌ன் அண்ணா க‌றுப்பி அக்கா
  38. இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂 ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎
  39. வெறும் சுட்ட மரவெள்ளி கிழங்கும் கொஞ்சமே ஆனாலும் கொஞ்ச உப்பும்தான் இந்த போராட்டமே ஆதராம் என்றால் யாரும் நம்புவார்களா ? இன்று சிலருடன் கதைக்கும்போது அந்த பெரிய மனிதனின் ஒருவேளை உணவை பகிர்ந்து கொண்டேன் . ஆனால் இங்கு நாலு நேரமும் வயுறு புடைக்க திண்டு விட்டு ...........................................எழுதி விட பார்கிறார்கள் .
  40. அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள். தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது. 2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக. இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.
  41. தோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது. சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது. ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள். விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது. குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது. ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது. பந்தயங்களின் உலக தலைநகரான லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே. ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.
  42. ரொமேஷ் பண்டாரியின் பிடிவாதமும், யாழ்ப்பாண பொலீஸ் நிலையத் தாக்குதலும் ரஜீவ் காந்தி கடைப்பிடிக்க ஆரம்பித்த "நல்ல அயலான்" கொள்கையின்படி தமிழர்களுக்குச் சார்பாகச் செயற்படுகிறார் என்று சிங்களவர்கள் விமர்சித்த பார்த்தசாரதி ஓரங்கட்டப்பட்டு புதிய வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரி நியமிக்கப்பட்டார். ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்ட ரஜீவ், நேரடிப் பேச்சுக்களுக்கு முன்னர் உயர் அதிகாரியொருவரை கொழும்பிற்கு அனுப்புமாறு ஜெயார் கேட்டுக்கொண்டமையினைத் தான் வர‌வேற்பதாகவும், அதன்படி தனது புதிய வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை இனப்பிரச்சினைக்கான தீர்வுகுறித்த ஆரம்ப கட்டப் பேச்சுக்களை நடாத்த‌ தான் அனுப்பிவைப்பதாகவும் கூறினார். பண்டாரிக்கு வழங்கப்பட்ட பணி இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுதான். கொழும்பிற்கு வந்து ஜெயவர்த்தனவுடனும் அவருடைய அமைச்சர்களுடனும் பேசி, கள நிலவரம் தொடர்பான விடயங்களைத் தெளிவாக புரிந்துகொள்ள அவர் ஒப்புக்கொண்டார். செளமியமூர்த்தி தொண்டைமான் பங்குனி 25 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த பண்டாரி ஜெயவர்த்தன, லலித், காமிணி, ரொனி டி மெல், தொண்டைமான் மற்றும் தேவநாயகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பண்டாரியுடனான சந்திப்பின் பின்னர் தொண்டைமானுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. "இந்த மனிதனுக்கு எதுவுமே புரியவில்லை. நிரந்தரமான தீர்வொன்றிற்கு வடக்கும் கிழக்கும் இணைவது அத்தியாவசியமானது என்று நான் கூறியபோது, இணைப்பு அவசியமில்லை என்று என்னிடமே கூறுகிறார். ஜெயவர்த்தன முன்வைக்கும் மாவட்ட சபைகளைப் போதுமான தீர்வென்று வாதாடிய பண்டாரி, இச்சபைகளுக்குக் கொடுக்கப்படும் அதிகாரங்களூடாக தமிழர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று வாதாடுகிறார். இங்குள்ள பிரச்சினையின் ஆளம் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று அவரது முகத்திற்கு நேரே கூறினேன்" என்று தொண்டைமான் ஆத்திரத்துடன் கூறினார். கொழும்பு விஜயத்தை முடித்துக்கொண்டு தில்லி திரும்பும் வழியில் சென்னையில் தரித்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை பண்டாரி சந்தித்தார். தன்னிடம் பேசிய பண்டாரி "ஜெயவர்த்தன மீது நம்பிக்கை வையுங்கள், புதிய பேச்சுவார்த்தைகளில் திறந்த மனதுடன் பங்குபற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டதாக அமிர்தலிங்கம் என்னிடம் தெரிவித்தார். அமிர்தலிங்கத்திடம் பேசிய பண்டாரி, போராளி அமைப்புக்களுடன் இந்தியா விரைவில் பேசும் என்றும், பேச்சுவார்த்தைகளில் அவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக யுத்த நிறுத்தம் ஒன்றும் இந்தியாவால் கொண்டுவரப்படும் என்றும் கூறினார். "ஜெயவர்த்தனவை நம்பாதீர்கள் என்று நாம் அவரிடம் மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டோம், ஆனால் எமது கோரிக்கைகள் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்" என்று பண்டாரி குறித்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லி திரும்பியதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பண்டாரி, "இலங்கையில் நடக்கும் போர் வெகுவிரையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு பேச்சுவார்த்தைகள் உடனே ஆரம்பிக்கப்படும்" என்று கூறினார். இலங்கையின் இனப்பிரச்சினையினை மிக இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற மாய விம்பத்தை ரஜீவிடம் அவர் அழகாக முன்வைத்தார். பண்டாரி தனக்கு வழங்கிய அறிக்கையினை அடிப்படையாக வைத்து சித்திரை 10 ஆம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தில் பேசிய ரஜீவ், "சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது" என்று உற்சாகமாகக் கூறினார். சில நாட்களுக்குப் பின்னர் கொழும்பிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் தூதர் சத்வாலுக்கு விருந்துபசாரம் ஒன்று நடைபெற்றது. அங்கு பேசிய தொண்டைமான், ரஜீவின் பேச்சிற்குப் பதிலடியாக, "சுரங்கப்பாதையோ முடிவின்றி நீண்டு செல்கிறது, வெளிச்சத்தைக் காண்பதற்குப் பதிலாக, இருளே சூழ்ந்து வருகிறது" என்று கூறினார். பண்டாரியின் கொழும்பு விஜயத்தினையடுத்து உடனடியாக செயலில் இறங்கிய ரஜீவும் அவரது ஆலோசகர்களும் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டதன்படி இரு நாட்டு எல்லைகளுடாகவும் நடைபெற்று வந்த போராளிகளின் போக்குவரத்தினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். தமிழ்நாட்டிலிருந்து யாழ்க்குடா நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற‌ அதிவேகப் படகு ஒன்றை இந்தியக் கரையோர ரோந்துப் படையினர் கைப்பற்றினர். அப்படகில் இயந்திரத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கிர்ணேட்டுக்கள் என்பன காணப்பட்டதுடன், அப்படகில் பயணித்துக்கொண்டிருந்த சீருடை தரித்த இரு ஈ.பி.ஆர்.எப்.எப் போராளிகளும் இந்தியர்களால் கைதுசெய்யப்பட்டனர். இச்செய்தியை தமக்குச் சாதகமாகப் பாவித்த இலங்கையரசும், ஊடகங்களும், இந்தியா போராளிகளை முடக்க ஆரம்பித்து விட்டதாகவும், இதன் மூலம் பயங்கரவாதச் செயல்கள் குறைவடைந்து வருவதாகவும் பேசத் தொடங்கின. போராளிகளை முடக்க இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து லங்கா கார்டியனின் ஆசிரியர் மேர்வின் டி சில்வாவுக்கு ரஜீவ் காந்தி பங்குனி மாதத்தின் இறுதி வாரத்தில் வழங்கிய செவ்வியில், "நாம் அவர்களை முடக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறோம், இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகளைத் தணித்து சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கவே எத்தனிக்கிறோம்" என்று கூறியதன் மூலம் தனது அரசு போராளிகளை முடக்குவதை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். மகாவலி ஆற்றின் விக்டோரியா அணைக்கட்டினைத் திறந்துவைக்கும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சர், காமிணி திசாநாயக்க, ஜெயவர்த்தன மற்றும் லலித் - சித்திரை 11, 1985 பங்குனி மாதத்தின் இறுதிப்பகுதியிலும், சித்திரையின் ஆரம்பத்திலும் போராளிகளின் தாக்குதல்கள்கள் எதுவும் நடைபெறவில்லை. இதற்குக் காரணம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இங்கிலாந்துப் பிரதமர் மாக்கிரெட் தட்சரின் வருகையின்போது யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையம் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தும் ஏற்பாடுகளில் பிரபாகரன் இறங்கியிருந்தமையாகும். இலங்கையின் விசேட பொலீஸ் அதிரடிப்படைக்கான பயிற்சிகளை வழங்க கீனி மீனி கூலிகளை இங்கிலாந்து அரசே இலங்கை அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்திருந்ததுடன், தொடர்புகளையும் ஏற்படுத்தி, பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்திருந்தது. சித்திரை 10 ஆம் திகதி இரவு, தளபதி கிட்டு தலைமையில் 200 புலிப் போராளிகள் நான்கு மினிபஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் ஆகியவற்றின் மூலம் யாழ்நகரிற்குள் பிரவேசித்தார்கள். பொலீஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்திருந்த யாழ்ப்பாணக் கோட்டையின் முற்பகுதியைத் தவிர்த்து, பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகளை அரைவட்ட வடிவில் சூழ்ந்து நிலையெடுத்துக்கொண்டார்கள். அருகில் இருந்த தொலைத்தொடர்பு பரிவர்த்தனை மையத்திற்குச் சென்ற போராளிகள் அங்கிருந்த ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தனர். இன்னொரு குழுவினர் யாழ் வைத்தியசாலைக்கு அருகில் இருந்த இலங்கை மின்சாரச் சபைக்குச் சென்று மின்சாரத்தினைத் துண்டித்தனர். நகர் முழுவதும் இருளில் மூழ்கிக்கொள்ள, இரவு 9:45 மணியாகியிருந்தது. நகரை இருள் சூழ்ந்து கொண்டதே தாக்குதலை ஆரம்பிப்பதற்கான சமிக்ஞையாக இருந்திருக்க வேண்டும். உடனடியாக பொலீஸ் நிலையம் மீதும், அருகிலிருந்த உதவிப் பொலீஸ் மா அதிபரின் அலுவலகம் மீதும் புலிகள் தாக்குதலை ஆரம்பித்தனர். சுமார் 100 பொலீஸார் நிலை கொண்டிருந்த பொலீஸ் நிலையம் மீது மோட்டார்கள், கிர்ணேட் உந்துகணைச் செலுத்திகள் மற்றும் எறிகுண்டுகளைப் பயன்படுத்திப் புலிகள் தாக்கினர். சுமார் 3 மணிநேரம் நடந்த தாக்குதலில் நான்கு பொலீஸார் கொல்லப்பட, இருவர் ஆயுதங்களுடன் புலிகளிடம் சரணடைய, மீதமானோர் அருகிலிருந்த கோட்டை இராணுவ முகாமிற்குள் ஓடிச்சென்று தஞ்சமடைந்தனர். கட்டிடத்திற்குள் நுழைந்த புலிகள் அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியபின், கட்டடத்திற்குக் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த குருநகர் இராணுவ முகாமிற்கு பொலீஸ் நிலையம் தாக்கப்படுவது தெரிந்திருந்தும், தாக்குதலை முறியடிக்க இராணுவத்தினரை அனுப்ப விரும்பவில்லை. தமது முகாமும் தக்கப்பட்டால் திருப்பித் தாக்குவதற்கான நிலையெடுத்து அவர்கள் முகாமிலேயே காத்திருந்தனர். பொலீஸ் நிலையத்தைத் தக்கவைக்க இராணுவம் முயலும் பட்சத்தில் அந்த முயற்சியைத் தோற்கடிக்க புலிகளும் தமது அணிகளை அப்பகுதியில் நிறுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் நோக்கிச் செல்லும் வீதிகளில் அமைந்திருந்த மதகுகளைத் தகர்த்து, வீதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்ததுடன், யாழ்நகர் முழுவதும் புலிகளின் கண்காணிப்பின் கீழ் அன்றிரவு கொண்டுவரப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் 35 உப இயந்திரத் துப்பாக்கிகள் (எஸ்.எம்.ஜி), 80 தானியங்கித் துப்பாக்கிகள் (சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை), ஒரு கிர்ணேட் உந்துகணைச் செலுத்தி, 175 கிர்ணேட்டுக்கள், 100 புகைக்குண்டுகள், 50 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த புலிகளின் அலுவலகம் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது. அவர்கள் விடுத்த அறிக்கையில், "இந்தப் பிரதேசத்தின் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு நவீன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன, இவ்வாறான குண்டுச் சத்தத்தினை இப்பகுதி இதற்கு முன்னர் கேட்டதில்லை" என்று கூறப்பட்டிருந்தது. ஜெயாரினால் எதுவுமே பேச முடியவில்லை. மாக்கிரெட் தட்சரை அவமதிக்கவே புலிகள் இதனைச் செய்தார்கள் என்றும், தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்தச் செய்வதன் மூலம் அவர்களைப் போராளிகளை நோக்கித் தள்ளவே இதனைச் செய்தார்கள் என்றும் அவர் கூறினார். ரஜீவ் காந்தியின் புதிய வெளியுறவுக் கொள்கைக்குப் பதிலாகவும், ஜெயவர்த்தனவின் தமிழ் மக்களின் மீதான படுகொலைகளுக்கு பதிலடியாகவும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய போராளிகள், தமக்குள் ஒருமித்த முன்னணி ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டிலும் இறங்கினார்கள்.
  43. இந்த ஏழு நாட்கள் ----------------------------- ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது. பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன். உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏 நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம். கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍 பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர். இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍 எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣 மிக்க நன்றி கள உறவுகளே....🙏
  44. ஆரோக்கிய நிகேதனம் -------------------------------------- இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில் அதிகமாக முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது, தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது. இங்கு ஒருவரின் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கின்றோம், இப்பத்தான் எங்களின் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று குறைபட்டுக்கொண்டே, டீயா, கோப்பியா என்று கேட்டனர். இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பில், டீ என்று சொல்லிவிட்டேன். நாங்கள் டீ காப்பி குடிப்பதில்லை, அவை உடம்பிற்கு நல்லதில்லை, ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு போட்டுக் கொடுப்போம் என்றபடியே அவர் உள்ளே போனார். ஸ்மால் சைஸ் உடுப்புக்குள் அதைவிட ஸ்மால் சைஸில் அவர் இருந்தார். திரும்பி வந்தார். பிளாக்கா, மில்க்கா என்று கேட்டார். இரண்டில் ஒன்று மீண்டும். மில்க் என்றேன். நாங்கள் ஸ்கிம் மில்க் மட்டும் தான், ஃபுல் மில்க்கில் கொலஸ்ட்ரோல். ஹார்ட்டை அட்டாக் பண்ணி விடும் என்றார். அவர் பெரிய படிப்பாளி, இலக்கண சுத்தமாகவே எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார். திரும்பவும் வந்தார். எத்தனை ஸ்பூன் சுகர் என்று நின்றார். அவரையே பார்த்தேன், அவர் இரண்டு எண்கள் சொன்னால் அதில் ஒன்றைத் தெரிவு செய்வதற்காக. அவரும் அப்படியே நின்றார், அதனால் நான் மூன்று என்று ஒரு எண்ணை சொல்லிவைத்தேன். நோ நோ, மூன்று அதிகம், சுகர் தான் தி வேர்ஸ்ட் என்றார். அப்ப இரண்டு என்று நான் இழுக்க, அவர் இரண்டும் அதிகம், ஒன்று போடுகின்றேன் என்று மீண்டும் உள்ளே போய்விட்டார். ஒரு பெரிய குவளையில் ஸ்கிம் மில்க், ஒரு ஸ்பூன் சுகர், தேயிலைச்சாயம் கலந்து என் முன்னால் இருந்தது. கிளம்பும் போது, அடிக்கடி அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அன்புக்கட்டளை ஒன்றையும் போட்டார். இன்னும் ஒரு இருபது வருடங்கள் கழித்து இருவரும் உயிரோடிருந்தால், என் வீட்டில் டீ போட்டு, கையில் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு மீண்டும் போவதாக உள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.