Leaderboard
-
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்14Points1483Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்13Points20007Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்9Points31931Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87984Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/22/24 in all areas
-
அப்பா உடனே வாங்கோ.
9 pointsசித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.9 points
-
நிலவே நிலவே கதை கேளு!
5 pointsநிலவே! நிலவே..! ********************* உனைக் காட்டி அம்மா எனக்கு சோறூட்டினாள் உன்னுக்குள் -ஒளவை இருப்பதாக உணர்வூட்டினாள் உனைப் பிடித்து தருவதாக அன்பூட்டினாள்-பின்பு உனைத்தேடி போவென்றே! அறிவூட்டினாள்-நீயோ உலகத்தின் பெண்களுக்கு உவமை ஆகினாய்-அதனால் உன்னை வைத்தே பலபேர்கள் கவிஞராகினார். இருள் கடலில் மிதந்து வந்து இளமை காட்டுவாய் இடையிடையே வளர்ந்து ,தேய்ந்து எம்மை வாட்டுவாய். உன்னை வந்து பார்ப்பதற்கு பணக் கோடியுமில்லை-நீ எமை மறந்து போவதர்கு-மனித சுயனலமில்லை-அதுதான் சூரியனின் கோவமதைக் குளிர்மையாக்கிறாய்-இரவு சுதந்திரமாய் நாம் திரிய ஒளியை பாச்சிறாய்-நிலவே கோடியாண்டு உன்னோடு வாழ்ந்தவர் பற்றி-கொஞ்சம் கொட்டுவாயா நாம் மாறி வாழ்வதற்க் காக. அன்புடன் -பசுவூர்க்கோபி-5 points
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
"சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்] [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல" டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். முன்னைய ஆப்பிரிக்க மக்களின் ஆதி இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன், ஆசுத்திராலோ பித்தேக்கசு அஃபெரென்சிசு [Australopitheus Afarensis] க்குப் பிறகே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன், மரபணு அடையாளம் காட்டி அல்லது குறியீடு M168 கொண்ட இவ் மனிதன், இரண்டாவது அலையாக ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது. இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன், இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். இவர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இடம் பெயர்வு நடந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers], ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது!. இன்று இந்த கடற்கரையோர அடையாளம் காட்டி , இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இறுதியாக, இவர்கள் விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். [இலங்கை அன்று பிரிபடாத ஒரு பகுதியாக தென் இந்தியாவுடன் ஒட்டி இருந்தது, கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது.] இந்தியாவில்,குறிப்பாக தென் இந்தியாவில் குடியேறிய முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்களின் வழித்தடம் - M130 (M168-M 130) ஆகும். இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் pre-Dravidian] என அழைக்கலாம். இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9, 40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த இந்து குஷ் (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத் தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று இந்து குஷ்ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோ சோம்மில் [chromosome / மரபணுச் சரம் / மரபணுத் தாங்கி] திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில் கணிசமான அளவு இல்லை-மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத்தட்ட 50 சத வீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-Dravidian] என அழைக்கலாம். [இப்படி இந்த யூரேசிய மரபுக்குழு M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது] அதாவது, 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] [இவரை நான் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் [10 th World Tamil Conference, Chicago / 4 th to 6 th July 2019] ஒரு முறை சந்தித்தேன்] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள். இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது. மேலும் இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பது அறியமுடிகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கைத் துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம். என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம். உதாரணமாக இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். எனவே, மரபுக் காட்டி M 130 யை குறிப்பிட்ட அளவு கொண்ட இலங்கை வேடரும் இந்தியாவின் பழங்குடியினருக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றே! சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று, ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad]. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எனது முன்னைய கட்டுரைகளில் இருந்து தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]5 points
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉) 2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎 3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் )🥷 4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️ 5) Original மூலப்பிரதியை கூரியர் மூலம் அனுப்பவும் . இதையடுத்து, உங்கள் லாயர் 😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். அதன் பின்னர் உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏 6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌 வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶 7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில் 1% 😳 குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும் அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%) கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁 Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited) கொடுப்பது பாதுகாப்பானது. 🤣 எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴 காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨 (Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼♂️) அம்புட்டுதே. 😁4 points
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
உண்மையில் முன்னமே, குறைந்தது 1976 இல் இருந்து - Genetic distance analysis by Dr R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia - மற்றும் பலரால் 'சிங்களவர்கள் பற்றிய மரபணு ஆய்வுகள்' வெளிவந்து விட்டன. ஆனால் இங்கு விவாதிக்கப்பட்டது அல்லது வெளியிடப்பட்டது Sri Lanka's only indigenous population Vedda share genetic link with ethnic populations in India Vedda, the only indigenous population in present-day Sri Lanka, is believed to be the direct descendants of the island’s early inhabitants. [இலங்கையின் ஒரே பழங்குடி மக்கள்தொகையான வேடர் இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களுடன் மரபணு தொடர்பைப் கொண்டுள்ளது. எனவே இன்றைய இலங்கையில் உள்ள இந்த வேடர்கள் , தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்று இதனால் நம்பப்படுகிறது. அவ்வளவுதான்!! . அதாவது இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த, ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும், திரு விருமாண்டிக்கு கிடைத்தது போல அல்லது ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற பழங்குடியினர் போன்றோர் போல எனவே உங்கள் கேள்வி, இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை ஏன் தற்போது எழுகிறது என்பதே. இங்கு தேவையற்ற , பொருத்தமற்ற ஒன்றே என்பது என் தாழ்மையான எண்ணம். மேலும் இதே வலைத்தளத்தில் / யாழ் இணையத்தில் nunavilan என்பவரால் இலங்கையில் சிங்களவர் நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி [இலங்கையில் சிங்களவர் - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி] பதியப்பட்டது October 20, 2021 இல் இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார் என்றும் அதன் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது எனவே அண்மைய நாட்களில், இலங்கையருக்கும் குறிப்பாக சிங்களத்திற்கும் இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்துச் செல்கிறது. என்பது முற்றிலும் பிழை இது எப்பவோ முடிந்த முடிவு. இங்கு குறிப்பாக கூறியது இலங்கை 'வேடர்கள் தான் இலங்கைத்தீவின் தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள்' என்பதே இறுதியாக இலங்கையர் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தியக் கண்டத்திலுள்ளவர்களுடன் மொழிவழி, பண்பாட்டு, கலை கலாச்சார, மரபணு ஒற்றுமை இருப்பது சிறு குழந்தைய் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. சொல்ல இலகுவாக இருக்கும். அங்கு ஆராயும் பொழுது தான் சிக்கல்கள் தெரியும் உதாரணமாக இந்தியாவிலேயே, ஒரே நிலப்பரப்பிலேயே, வட இந்தியர் தென் இந்தியர் - இவர்களுக்கிடையில் வேறு பாடு உண்டு அதேபோல சுமேரியருக்கும், அவர்களை சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்களுக்கும் தொடர்பு இல்லை நன்றி4 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள் 1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்4 points
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
நானறிந்தது, உங்கே சந்திரபானு அரசனின் காலத்தில் சாவகர்கள் வந்திருந்தவர்களாம். அதனால் தான் உதற்கு சாவகச்சேரி என்ற பெயர் வந்தது என்று.3 points
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
கனடாவை மாதிரி இன்னும் சில நாடுகளும் ஏதோ ஒரு வசா கொடுத்தால் இந்த ஆக்கிரமிப்பு என்ற கதையே இருக்காது.வெற்றிடத்தை காற்று நிரப்புமாப்போல எல்லாம் சுபமே நடக்கும்.தாயகத்தில் மக்களின் இருப்பை எப்படி தக்க வைக்கலாம் என்பதை நாம் ஆராய மாட்டோம்.ஏன் என்றால் அது எமது அடி மடி சம்பந்தப்பட்டது.3 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 வீரப் பையன்26 70 2 முதல்வன் 70 3 சுவி 70 4 ஏராளன் 70 5 நிலாமதி 70 6 அஹஸ்தியன் 70 7 ஈழப்பிரியன் 70 8 கல்யாணி 70 9 கந்தப்பு 70 10 கறுப்பி 70 11 எப்போதும் தமிழன் 70 12 வாதவூரான் 70 13 கிருபன் 70 14 நீர்வேலியான் 70 15 கோஷான் சே 70 16 நுணாவிலான் 70 17 புலவர் 70 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் நிறைபெறும் ஞாயிறு 19 மே அன்று புள்ளிகள் வழங்கப்படும். சறுக்குமரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம் 😃3 points
-
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது?
மசாலா: புற்றுநோய் உண்டாக்கும் என எம்டிஎச், எவரெஸ்ட் தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர், ஹாங்காங் தடை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, இந்திய நிறுவனங்களான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் பேக் செய்யப்பட்ட சில மசாலாப் பொருட்களில் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கூறி, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், அதன் கொள்முதல் மற்றும் விற்பனையை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறை, எம்.டி.எச்-இன் மெட்ராஸ் கறிப் பொடி, சாம்பார் மசாலா பொடி, மற்றும் கறிமசாலா பொடி ஆகியவற்றில் 'எத்திலீன் ஆக்சைடு' எனும் பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு மையம், இந்த மசாலா பொருட்களின் விற்பனையை நிறுத்தியதற்கான காரணத்தை விளக்குகையில், “புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் எத்திலீன் ஆக்சைட் வேதிப்பொருளை குரூப் 1 கார்சினோஜென் என்ற பிரிவில் வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. கார்சினோஜென்கள் என்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் பொருட்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள். சிங்கப்பூரில் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவுக்கு தடை ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மையம் மூன்று சிறிய கடைகளில் இருந்து மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஹாங்காங்கில் உணவில் எத்திலீன் ஆக்சைடு போன்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். இதற்கிடையில், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் எத்திலீன் ஆக்சைடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு அந்நாட்டு உணவு நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியாளரான முத்தையா & சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த தயாரிப்பை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என சிங்கப்பூர் உணவு நிறுவனம் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் முடிவுக்கு ஆதரவாக, சிங்கப்பூரின் உணவு நிறுவனம், ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்ட அதே அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எம்டிஎச் நிறுவனத்தின் மூன்று மசாலாக்கள் மற்றும் எவரெஸ்டின் மீன் கறி மசாலா ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் கூறுகளைக் கொண்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் நிறுவனம் சொன்னது என்ன? சிறிய அளவிலான எத்திலீன் ஆக்சைடினால் உடனடி ஆபத்து இல்லை என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் நீண்டகால பயன்பாட்டுடன், இத்தகைய இரசாயனங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். செய்தி இணையதளமான வியானுக்கு (Wion) அளித்த பதிலில், தாங்கள் ஐம்பது வருடங்கள் பழமையான மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்ட் என்று எவரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது. "எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பு தரங்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகிறோம். எங்கள் தயாரிப்புகளுக்கு இந்திய ஸ்பைஸ் போர்டு (Indian Spice Board) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உட்பட அனைத்து ஏஜென்சிகளிடமிருந்தும் ஒப்புதல் முத்திரை உள்ளது. ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முன், எங்கள் தயாரிப்புகள் இந்திய ஸ்பைஸ் போர்டு மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தற்போது அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம். எங்கள் தரக்கட்டுப்பாட்டு குழு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்யும்” என எவரெஸ்ட் நிறுவனம் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன? எத்திலீன் ஆக்சைடு நிறமற்ற மற்றும் எரியக்கூடிய ஒரு வாயு. இது பொதுவாக விவசாயம், சுகாதாரம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்களில் புகைபோக்கிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் கருத்தடை மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு நுண்ணுயிர் மாசுபாட்டை அகற்றவும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மசாலா மற்றும் பிற உலர் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவுகளை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் எத்திலீன் ஆக்சைடு பயன்படுகிறது. இருப்பினும், பல சுகாதார நிறுவனங்கள் இதை புற்றுநோய்க்கான காரணிகளின் (கார்சினோஜென்கள்) பிரிவில் வைத்துள்ளன. கார்சினோஜென்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை. எத்திலீன் ஆக்சைட்டின் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல நாடுகளின் உணவு கட்டுப்பாட்டாளர்கள் உணவுப் பொருட்களில் அதன் பயன்பாடு குறித்து கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளனர். இந்த நாடுகளில் எத்திலீன் ஆக்சைட்டின் அளவைக் கண்டறிய கடுமையான சட்டங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் எழும் மசாலா பற்றிய கேள்விகள் இந்திய மசாலாப் பொருட்கள் வெளிநாட்டு விதிமுறைகளில் சிக்கியதற்கு உதாரணமாக இதற்கு முன்பும் சில வழக்குகள் உள்ளன. 2023ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் எவரெஸ்டின் சாம்பார் மசாலா மற்றும் கரம் மசாலாவை சந்தையில் இருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. இந்த மசாலாக்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டவை என்று கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைச்சுற்றல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும். சமீபத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தை உணவு விற்பனை நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்புகளில் அதிகப்படியான சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்புகளில் உலகின் மிகப்பெரிய குழந்தை தானிய பிராண்டான செரிலாக்கும் (Cerelac) அடங்கும். குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பது நல்லதல்ல. சுவிஸ் நிறுவனமான பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை சர்வதேச குழந்தை உணவு நடவடிக்கை நெட்வொர்க்குடன் இணைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளை ஒரு பெல்ஜிய ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cd1d2gxelglo2 points
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 pointsசெல்லும் வழி எங்கெங்கும் ப ள்ளம் வரலாம் உள்ளம் எதிர் பாராமல் வெள்ளம் வரலாம் நேர்மை அதுமாறாமல் தர்மம் அது மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களைக் காத்திருக்கும் தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண் புக்கும்பூ மாலை காத்திருக்கும் ஒரு ஜோடிக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ......2 points
-
'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?
பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 21 ஏப்ரல் 2024, 03:42 GMT மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி என எங்கு சென்றாலும் அலமாரிகளில் பல பானங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். மக்கள் இந்த பானங்களை பார்த்தவுடனேயே ஆரோக்கியமானது என எண்ணி வாங்கிச் செல்கின்றனர். உண்மையில் அவை ஆரோக்கியமானதா? சமீபத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மின்வணிக நிறுவனங்களுக்கு ஓர் ஆலோசனையை வெளியிட்டது. அதன் அறிவுறுத்தலின்படி, ”மின்வணிக தளங்கள் அல்லது இணையதளங்களில் போர்ன்விட்டா உட்பட சில பானங்கள் `ஆரோக்கிய பானங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தனது விசாரணையில் `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 என்ற சட்டத்தின் படியும் (FSS Act 2006) `மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனியார் நிறுவனம் வழங்கிய விதிகளின்படியும் ஆரோக்கிய பானங்கள் என்பது வரையறுக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. எனவே, வணிக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்கள் உட்பட அனைத்து தளங்களில் இருந்தும் ஆரோக்கிய பானங்கள் என்ற பதாகையின் கீழ் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன” என்றார். இந்த விவகாரம் தற்போது பூதாகரம் ஆனது ஏன்? பட மூலாதாரம்,GETTYIMAGES/DJAVAN RODREQUEZ இதுகுறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ பிபிசியிடம் பேசுகையில், போர்ன்விட்டாவில் உள்ள சர்க்கரை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறினார். ஆனால் "அது ஆரோக்கிய பானமாக விற்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு புகார் வந்தது. இந்த பானம் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது." இந்த விளம்பரம் குழந்தைகளின் நலன் கருதி வெளியிடப்பட்டது அல்ல, பெற்றோர்களைத் தவறாக வழிநடத்துகிறது எனக் கூறும் பிரியங்க் கனுங்கோ, "இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் தெரிவித்தோம், அதே வேளையில் போர்ன்விட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், அவர்கள் தங்களின் தயாரிப்பு ஆரோக்கிய பானம் அல்ல என்று ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். அதன் பிறகுதான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006இல் `ஹெல்த் டிரிங்க்’ என்ற வகைப்பாடு இல்லை என்று தெரிவித்தோம்,’’ என விவரித்தார். அவரது கூற்றுப்படி, கலவை, குளிர்பானம், ஆற்றல் பானம் என எந்த வகையில் இருந்தாலும் எந்தவொரு உணவுப் பொருளையும் ஆரோக்கிய பானம் என்ற பெயரில் விற்க முடியாது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) என்பது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் 2005இன் கீழ் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர். விளம்பர உத்திகளைக் கையாளும் நிறுவனங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இது நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பர உத்தி என்றும், ஆரோக்கிய பானம் என்று எதுவும் இல்லை என்றும் மும்பையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மூத்த மருத்துவர் ராஜீவ் கோவில் கூறுகிறார். ஆரோக்கியம் என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்களை மின்வணிக தளங்களில் காணலாம். இதுபோன்ற பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என மருத்துவர் ராஜீவ் கோவில் தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, தாதுக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட அத்தகைய பானங்களைத்தான் மக்கள் உட்கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால், குறைவான சர்க்கரை அளவு என்பதை நிர்ணயிப்பது எப்படி? இது குறித்து டாக்டர் ராஜீவ் கோவில் விளக்கமளிக்கையில், ‘‘இந்தியாவில் 100 கிராம் அளவை வைத்துத்தான் உணவு லேபிளிங் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு உணவுப் பொருள் 100 கிராம் என்றால் அதில் பத்து கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்க வேண்டும். ஐந்து கிராமுக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த சர்க்கரை அளவு எனப்படும். பட மூலாதாரம்,GETTYIMAGES/JACK ANDERSEN சர்க்கரை அளவு 0.5 ஆக இருந்தால் அதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்லலாம். சர்க்கரையைத் தவிர, இந்த பானங்கள் அனைத்திலும் கார்ன் சிரப் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இணையதளத்திலும் இந்த ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலின்படி, தனியுரிம உணவு உரிமம் பெற்ற உணவுப் பொருட்கள் பால் சார்ந்த பான கலவை, தானியம் சார்ந்த பான கலவை அல்லது மால்ட் சார்ந்த பானங்கள், ஆரோக்கிய பானங்கள், ஆற்றல் பானங்கள் ஆகிய வகைகளின் கீழ் விற்கப்படுவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், எஃப்.எஸ்.எஸ்- இன் கீழ் ஆற்றல் பானங்கள் என உரிமம் பெற்ற தயாரிப்புகளை மட்டுமே விற்க முடியும் மற்றும் எஃப்எஸ்எஸ் சட்டம் 2006இன் கீழ் ஆரோக்கிய பானம் என்பது வரையறுக்கப்படவில்லை. இந்தக் கலவை அல்லது பானங்கள் குழந்தைக்கு அதிக சர்க்கரையை உட்செலுத்துவதாக பிரியங்க் கனுங்கோ கூறுகிறார். மேலும், இந்த பானங்கள் அருந்திய பின்னர் வேறு எந்த சர்க்கரை கொண்ட உணவையும் குழந்தைகள் உட்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதே இல்லை. சராசரியாக எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ``பல ஆண்டுகளாக ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் நம் மக்கள் மீது இந்தப் பொருட்கள் திணிக்கப்பட்டு, விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் தவறாக வழிநடத்தப்படுகின்றன,’’ என்கிறார் டாக்டர் அருண் குப்தா. குழந்தைகள் மருத்துவர் அருண் குப்தா, பொது நலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை (NAPI) என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவர் பேசுகையில், “ஆரோக்கிய பானங்கள் வரையறுக்கப்படவில்லை என்று அரசு கூறுகிறது, ஆனால் இந்த விவகாரத்தில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? ஆரோக்கியமான உணவு, பானம் எது என்பதற்கும் ஆரோக்கியமற்றவை எவை என்பதற்கும் தெளிவான வரையறை இருக்க வேண்டும்," என்றார். `கணிசமான அளவு சர்க்கரை கொண்ட இத்தகைய பானங்கள் சந்தையில் பல ரகங்களில் கிடைக்கின்றன’ என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் ராஜீவ் கோவில் மற்றும் மருத்துவர் அருண் குப்தா ஆகியோர் `புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது போல, மக்கள் குறிப்பாக குழந்தைகள் சர்க்கரைக்கு அடிமையாகக்கூடும். ஏனெனில் இனிப்பு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால் சர்க்கரையைப் பெற இத்தகைய பானங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அவர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படக்கூடும். தொற்றாத நோய் என்பது எந்தவொரு நோய்த்தொற்றாலும் ஏற்படாத, ஆரோக்கியமற்ற நடத்தையால் ஏற்படும் நோய். இதுபோன்ற பல பிரச்னைகளை இந்த பானங்கள் ஏற்படுத்தலாம். உடல் எடை அதிகரிப்பு உடல் பருமன் சர்க்கரை நோய் உதாரணமாக, பிஸ்கெட்டில் சர்க்கரை தவிர உப்பும் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்பானம் அல்லது ஆற்றல் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் கீழ் வருகின்றன. சமீபத்தில், பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழின் (பிஎம்ஜே) ஓர் ஆய்வறிக்கையில், `இது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், “உங்கள் தினசரி உணவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், உடலில் மனச்சோர்வு போன்ற நோய்களை உண்டாக்கும். தொற்றாத நோய்களை அதிகரிக்கும். உணவு அல்லது பானங்களில் எவ்வளவு சதவீதம் சர்க்கரை அல்லது உப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும்,’’ என்கிறார். மேலும் பேசிய அவர், ``குறைந்த சர்க்கரை அளவைக் கொண்ட பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்ட பொருட்கள் பற்றி எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது குறைக்கப்பட வேண்டும். இதனால், அத்தகைய பொருட்களை மக்கள் வாங்குவதைக் குறைக்க முடியும்,’’ என்கிறார். மருத்துவர் அருண் குப்தா மற்றும் மருத்துவர் ராஜீவ் கோவில், உணவுப் பொருள் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்கத் தெரியாததால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற சூழலில், "படிக்காதவர்களை மனதில் வைத்து, போக்குவரத்து வண்ணக் குறியீடு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பொருட்கள் குறித்து பெரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட வேண்டும்." அத்தகைய பொருட்களின் "விலையை அதிகமாக வைத்திருக்க வேண்டும்." மேலும் "வரிகளும் அதிகமாக விதிக்கப்பட வேண்டும். இதனால் அதை வாங்குபவர்கள் மனதில் இதைப் பசிக்குச் சாப்பிட வாங்குகிறோமா அல்லது சுவைக்காக வாங்குகிறோமா என்ற கேள்வி எழும்." https://www.bbc.com/tamil/articles/cjr7594qxrno2 points
-
நிலவே நிலவே கதை கேளு!
2 pointsஎப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில் முதன்முதல் காலடி வைத்த போது வந்ததே எனக்கு கோபம் எமது கடவுளின் தலையிலா கால் வைத்தீர்களா பாவிகளா.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
சுவை அண்ணா அவை கனடாவுக்கு போகட்டும் அந்த காலத்தில் புலம்பெயர் நாட்டுக்கு வந்தவை அவை அவேன்ட ஊரில் போய் வசித்தால் அந்த இடத்த நாங்கள் நிரப்பலாம்............................2 points- இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
2 points- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
அரசுடன் இணைவதால் எதனையும் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. முடிந்தால் கருணாவோ, பிள்ளையானோ, வியாழேந்திரனோ, டக்கிளசோ தமிழ் மக்களின் நலன்காக்க செய்த விடயங்கள் என்னவென்று அவர்களிடம் கேளுங்கள். அவர்களால் இன்று நடக்கும் எந்த அத்துமீறளையும், ஆக்கிரமிப்பையும் தடுக்க முடியாது. அற்ப சலுககைகளைத் தவிர அவர்களால் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை எவையும் இல்லை. அவர்களுக்குக் கொடுக்கும் சில சலுகைகளைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் தான் நடத்தும் பருத்துப் பெருகிவரும் குடியேற்றங்களுக்கான மெளனமான ஆமோதிப்பை அவர்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளும். ஆகவே, அரசுடன் சேர்வதால், அதனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக மாறிவிடுவோம். அரசுடன் இணையாதுவிட்டால் மட்டும் ஆக்கிரமிப்பு நடக்காதோ என்று கேட்கவேண்டாம், குறைந்தது எமது விருப்புடன் தான் நடத்துகிறோம் என்று அவர்கள் எம்மைப் பாவிக்க முடியாதல்லவா? அரசுடன் இணையாது, மாகாணசபைகளையோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களையோ நாம் கைப்பற்றி, அதனூடு கிடைக்கும் பணத்தினூடாக எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம். இதற்காக அரசுடன் சேரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளிலோ அல்லது சுயேட்சையாகவோ இதனைச் செய்யலாம். அரசின் ஆக்கிரமிப்பிற்கெதிரான நிலைப்பாட்டுடன், தமது பிரதேச மக்களுக்கான நலன்களைச் செய்வது சாத்தியமே. ஆனால், இப்போதிருக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் நிலையினைப் பார்க்கும்போது அதற்கான சந்தர்ப்பம் இப்போதைக்கு இல்லையென்றே தெரிகிறது. எமது இருப்பும், நலன்களும் காக்கப்படவேண்டுமானால், பாராளுமன்றத்தைப் பகிஸ்க்கரித்து வெளியில் வரவேண்டும். இதன்மூலம் சர்வதேசத்திற்கு இன்றும் இங்கு நடக்கும் அக்கிரமங்கள் தெரியவரும். தமிழரசுக் கட்சி, பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பலமுறை பாராளுமன்றப் பகிஷ்கரிப்பை முன்னர் நிகழ்த்தியிருந்தன. மக்களின் ஆதரவும் அன்று அவர்களுக்கு இருந்தது. ஒரேவிடயம் என்னவெனில், அனைவரும் ஒரு கட்சியில் அல்லது ஒரு முன்னணியில் இருந்தனர், ஒரு சிலரைத் தவிர. இன்று இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. முடிவு : அரசுடன் இணைந்துபோவதால் தமிழரின் நலன் காக்கப்படாது. மாறாக தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும், தமிழர் நலன்களைப் பலவீனப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கும் நாமும் உடைந்தையாக இருப்போம்.2 points- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
நீங்கள் என்னத்தை நிறுவினாலும், அவங்கள் சம்மதிக்க வேணுமே. 😂 மகா வம்சத்தையே... அடிக்கடி திருத்திக் கொண்டு இருக்கிற ஆட்கள் அல்லவா அவர்கள். 🤣2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வேண்டவே வேண்டாம் தம்பி. எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டேன்2 points- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்1 point- என் இந்தியப் பயணம்
1 pointநான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்1 point- 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 04 ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before]. அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வ தென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கைத் தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்பு தான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாகத் தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? பிராமண குருக்கள் இலங்கையில் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் இருந்தது என்பது உண்மையே, உதாரணமாக, ஒரு வரலாற்று கதையில், ரிஷிகள் என்று அழைக்கப்பட்ட, இரு கல்விமான்கள் வட இந்தியாவில் இருந்து, தென் திசை நோக்கி புறப்பட்டு இலங்கையை வந்து அடைந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அகஸ்தியர் [அகத்தியர்], புலஸ்தியர் ஆகும். புலஸ்தியர் அகத்தியரின் மாணவராகும். இதில் அகத்தியரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது. முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் புராணத்திலும் இதிகாசத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்லவேண்டும், முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேணியும் [குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மேலும் துரத்தப் பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப் பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது தனக்கு பிறந்த பிள்ளை ஒன்றை கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? [Picture 04: மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும்1 point- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
தகவலுக்கு நன்றி. ஜாவாவிற்கு அருகில் உள்ள சுமாத்திரா தீவில் உள்ள மெதான் நகரில் ஐரோப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் குடியிருப்புகளும் கோவில்களும் இருந்தனவாம். இப்போதும் உள்ளன. கடாரம் வரை தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்த தமிழ் பேரரசுகள் இந்த நாடுகளின் முக்கிய நகர்களில் எல்லாம், chamber of commerce போல ஒரு அமைப்பை, தமிழரை கொண்டு நிறுவி அதன் வழி, வரி மட்டும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார்களாம். அதேபோல் கோவில்களும், அதை சுற்றி தமிழ் குடியிருப்புக்களும் அமைத்துள்ளார்கள். வெள்ளையர் வெள்ளயருக்கென இலங்கை காலி கோட்டை, சென்னையில் அமைத்த நகர்கள் போல என நினைக்கிறேன். ஆகவே தமிழர்கள் அங்கே போனது போல ஜாவாகாரர் இங்கேயும் வந்திருப்பர் என்பது அத்தனை நடக்கவியலாத காரியம் அல்ல. https://en.m.wikipedia.org/wiki/Kampung_Madras1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- அப்பா உடனே வாங்கோ.
1 pointபேரப்பிள்ளை சுகமாக பிறந்தது மகிழ்ச்சி. 👍 நீங்களும் குறுகிய நேரத்துக்குள்.. Cardiologist டாக்டரையும் பார்த்து, உங்கள் அலுவல்களையம் சமாந்திரமாக செய்து முடித்து விமானம் ஏறியமைக்கு பாராட்டுக்கள். பேராண்டிக்கு பெயர் வைத்து விட்டீர்களா.1 point- அப்பா உடனே வாங்கோ.
1 pointவாழ்த்துகள் பிரியன் தாத்தா! வாழ்த்துக்கள் (எலிக்)குட்டிப்பையா, வாழ்க வளத்துடன்.1 point- அப்பா உடனே வாங்கோ.
1 point- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
Know the Etymology: 39 Place Name of the Day: Saturday, 03 June 2017 Cāvakac-cēri சாவகச்சேரி Cāvakac-cēri Cāvakar+cēri The Javanese settlement சொல்வது நானல்ல - சாட்சாத் தமிழ்நெற்.கொம் https://www.tamilnet.com/art.html?catid=98&artid=228101 point- 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன்.
34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன். Posted on April 15, 2024 by சமர்வீரன் 847 0 புலம்பெயர்ந்து யேர்மனியில் வேரூன்றிக் கிளைபரப்பியுள்ள தமிழ்க் குமுகாயத்தினரின் பிள்ளைகளுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் எமது இனத்தின் அடையாளங்களான மொழியையும் அதன் பண்பாட்டு மரபுகளையும் தமிழர் கலைகளையும் கற்பிக்க வேண்டியது அகத்தியமானது என்ற காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 34 ஆண்டுகளாக அவ்வுன்னத பணியை யேர்மனியில் செய்து வருகிறது தமிழ்க் கல்விக் கழகம். தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப, வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் தனது அகவை நிறைவு விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் கொண்டாடி வருகிறது. 34ஆவது அகவை நிறைவு விழாவின் முதல் விழாவை மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கில் 06.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் கொண்டாடியதைத் தொடர்ந்து, தனது அடுத்த விழாவை 13.04.2024 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தின் கற்றிங்கன் அரங்கில் கொண்டாடியது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்த என்னெப்பெற்றால் றூர் மாவட்ட நிர்வாகி திரு. ஒலாவ் சாடே, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலச் சிறப்புப் பொறுப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை ஜெயக்குமார், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.சின்னையா நாகேஸ்வரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலம் 1இன்; பொறுப்பாளர் திரு.முத்துவேல் ஜெயவலதாஸ், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் மத்தி மற்றும் வடமத்திய மாநிலப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கிருபாரதி சிவராம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலம் 1இன் துணைப் பொறுப்பாளர் திரு.லதக்குமார் சந்திரன், வாறன்டோர்வ் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. திரு.சதானந்தம் இராஜேந்திரம், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களும் மாநில மட்டத்திலான இளைய செயற்பாட்டாளர்களின் பங்கேற்பும் ஒன்றாக இணைந்து விழாவை வளப்படுத்தின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. டோட்முன்ட் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.வல்லிபுரம் மனோகரன், கேர்ன தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திருமதி சறோஜினிதேவி தங்கரட்ணம், மால் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.செல்லத்துரை சிவராசா, வாறன்டோர்வ் தமிழாலயத்தின் ஆசான் “தமிழ் மாணி” திரு.சதானந்தம் இராஜேந்திரம், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் மாணி” திரு.கந்தையா அம்பலவாணபிள்ளை ஆகியோர் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும்கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் கலைத்திறன் போட்டியில் வாறன்டோர்வ் தமிழாலயம் 1ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் வாறன்டோர்வ், போகும், எசன் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 41 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள மற்றைய மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமத்திய மாநிலம் ,கற்றிங்கன். – குறியீடு (kuriyeedu.com)1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்மூடி கேட்கையில் காதில் தேன் வந்து பாய்வதுபோல் ஒரு உணர்வு.........அருமை....அருமை.....! 🙏 நன்றி கு. சா......!1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointஅந்த 1 வெற்றியும் தினேஸ் கார்த்திக்கால் கிடைச்ச வெற்றி ஆர்சிவி அணியில் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை அண்ணா.....................அடுத்த வருடம் நல்ல திறமையான பந்து வீச்சாளர்களை வேண்டனும் இங்லாந் உள்ளூர் கிலப்பில் நிறைய நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்குனம் அவர்களின் சிலரை வேண்டலாம்.....................இங்லாந் அணியில் இடம் பிடிக்காத பல திறமையான வீரர்கள் 18கிலப்பிலும் விளையாடுகினம்.................................................1 point- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
நன்றி. இந்த மரபணு சுட்டிகளில் ஒன்று மதுரையிலும், அதேபோல் அபர்ஜினிகளிடமும் பரவலாக உள்ளது என 2000 ஆண்டுகளில் ஒரு ஆராய்சியும் நிறுவியுள்ளது. இனத்தூய்மை வாதம் இங்கே எவரும் பேச முடியாதது என்பதை இது காட்டுகிறது. சுத்தி சுத்தி பார்த்தால் எல்லாரும் ஆபிரிக்கரே. அதே போல் ஆபிரிக்காவின் ரிட் வெளியில் இருப்போரை தவிர மிகுதி இடங்களில் உள்ள மிச்சம் எல்லாரும், வந்தேறிகளே. இந்திய தீபகற்பகத்துள் முதலில் வந்த குழுக்கள் இரெண்டை திராவிட குடிகள் என வகைப்படுத்தின், அதன் பின் வந்தோரை ஆரியர் எனலாம் என நினைக்கிறேன். இதில் திராவிட குழுக்கள் கடைசி பனிக்காலம் முடியும் முன் தரை வழியாக இலங்கை வந்து அங்கே யக்கர், நாகர், வேடராக பரவி இருக்கலாம்.1 point- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
நாம் தமிழர் எவ்வளவு வீத வாக்குகளை பெறுவார்கள்??? நீங்கள் செலன்ஸ்கியை ஆதரிப்பது போல எனவும் சொல்லாம்???1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இங்கே குறிப்பிடப்பட்ட ( கள உறவுகளால்) வாசனைத்திரவியங்களுக்கு விசிறி அடிப்பதுடன் ஒப்பிடும் போது தூசி தான். அதேபோல் 8,000/= விற்கு யாழ்ப்பணத்தில் ஜூஸும் குடிப்போம். ஆனால் வீடியோ வெளி வந்தவுடன் சமஸ்தானமே ஆடி உள்ளது வேடிக்கை. அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் இங்கு பலர் உணரவில்லை.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த திரியை கட்சிசார்/எதிர் காணொளிகள் இணைக்கப்பாவிக்காமல் - போட்டி திரியாக மட்டும் பாவித்தால் நல்லம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.1 point- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
அந்த மனிசி சுவிசிலை இருந்தது. டீசன்ரான பொம்பிளை என்று பார்த்தால்... பாராளுமன்றத்தில் நடந்த ஒரு சண்டையில்... "சோடா மூடி" ரேஞ்சிலை நின்று சண்டை பிடிக்குது. 🤣1 point- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
சாவகச்சேரி என்பது முதலில் ஜாவகர் -சேரி எனப்பட்டதாம்? ஆனால் இது இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இருந்து ஒல்லாந்தர் கொண்டு வந்தமர்த்திய ஜாவகர்கள். ஆனால் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதிகுடிகள் இருந்தன என சொல்கிறார்கள். இவர்களுடன் இருளருக்கும், பள்ளருக்கும் தொடர்பு இருக்கிறதாயின், விஜயனுக்கு முந்திய இலங்கையின் ஆதி குடிகள் திராவிட/தொல் தமிழரே என்பதை நிறுவ உதவியாக இருக்க கூடும்.1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இல்லை. இதை false equivalence என்பார்கள். ஒன்று தமிழர் காணியில் அடாத்தாக தமிழரை துரத்தி விட்டு, அல்லது தமிழர் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதிகளை அழித்துவிட்டு அதில் அந்த பகுதியில் உள்ள இனம்பரம்பலுக்கு சரி எதிரான பரம்பலில், அரசே முழு கட்டுமானங்களையும் செய்து, மானியமும், காணியும் வேலையும் கொடுத்து உருவாக்கும் state sponsored colonization. மற்றையது தனி மனிதர்கள் தம் சுய விருப்பு, முயற்சியில் வாய்ப்பை தேடி இடம் பெயர்வது. Individual enterprise. சில சிங்களவர் இப்படி என்னிடம் கேட்டு நான் விளக்கம் கொடுத்ததும் ஏற்று கொண்டுள்ளார்கள். பலர் பதில் இல்லாமல் வாயை மூடியுள்ளார்கள். உங்கள் நண்பர் படித்தவன் என்கிறீர்கள் - இந்த அடிப்படை வேறுபாட்டை கூட விளங்க முடியவில்லையா அவரால்?1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointNischay Koushal · Suivre Zoom sur la roue et l'essieu de la pierre Chariot de Hampi Inde1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நேற்று 72 சதவீம் என்று சொல்லி விட்டு இன்று 69 சதவீதமாம் 3சதவீத வாக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தது பிழையா..................ஈவிம் மிசினில் குளறு படிகள் செய்ய முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று சதவீதம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன அறிவிப்போ தெரியல நேற்று அண்ணாமலை சொன்னார் ஒருலச்சம் ஓட்டை காண வில்லை என்று அண்ணாமலைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்தல் ஆணையம் இப்பவே பொய் சொல்லித் தான் ஆகனும் அப்ப 12லச்ச ஓட்டு குறைந்து இருக்கு நாமெல்லாம் நம்பி தான் ஆகனும் தேர்தல் ஆணையம் சரியாக நடுநிலையா செயல் படுகினம் என்று😏....................................1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தகவலுக்கு நன்றி இந்த ஊர் யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.1 point- 'கொண்டாடினான் ஒடியற் கூழ்'
1 pointசமீபத்தில் எனது மகளின் தோழி காய்ச்சித்தந்த ஒடியற்கூழை இரசித்துச் சுவைக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.1 point- அணுகுண்டால் பேரழிவு கண்ட ஜப்பானில் 9 மாதங்களுக்கு பிறகு 'ஓப்பன்ஹெய்மர்' வெளியீடு - மக்கள் கூறுவது என்ன?
53 நிமிடங்களுக்கு முன்னர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானதல்ல. பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பங்கு என்ன என்பதும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள், அணுகுண்டு தயாரிப்பது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல்கள், அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜப்பானில் ஏன் தாமதம்? ஜூலை 21, 2023 அன்று வெளியான ஓப்பன்ஹெய்மர் உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஆனால், இந்த படத்தின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. ஜப்பானில் இப்படத்தின் திரையிடல் குறித்து கடந்த ஆண்டு பேசியிருந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் , ஜப்பானியன் சூழலுக்கு ஏற்ப "கவனமான அணுகுமுறையை" எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். சினிமா ப்ளன்ட் பப்ளிக்கேஷனின் இயக்குனர் இதுகுறித்து பேசுகையில்,” உலகமே இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறது. எனவே ஜப்பானின் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளவர்களும் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்,”என்று கூறியுள்ளார் . 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தது ஜப்பான் வரலாற்றில் பெரும் சோகமான நிகழ்வாக அமைந்தது. இந்த படத்தை பார்த்த ஜப்பானிய பார்வையாளர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "அவர்கள் கூட்ட அறையில் அமர்ந்து ஹிரோஷிமாவைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர். அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது" என்று கூறினார். வேறு சிலரோ கதை சொல்லும் மேற்கத்திய பாணி தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார்." வெளியீடு என்ன ஆனது? ஓப்பன்ஹெய்மர் படத்தின் தயாரிப்பாளரான யுனிவர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விநியோகஸ்தரான பிட்டர்ஸ் எண்ட் ஆகியோர் டைம்ஸ் இதழிடம், ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவது குறித்து பல மாதங்கள் கருத்து ரீதியான விவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். “இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதை பார்வையாளர்களே பெரிய திரையில் தங்கள் கண்களால் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவுகளின் உண்மையான காட்சிகளை படத்தில் காட்டாதது குறித்து ஏற்கனவே நோலனை சர்வதேச பத்திரிகைகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த நோலன், "சில நேரங்களில் அதிகமான காட்சிகளை வைப்பதை விட, தேவையான சில காட்சிகளை வைப்பது போதுமானது என்று நம்புவதால், படத்தில் உள்ள காட்சிகளே இந்த நிகழ்வு சோகம் நிறைந்தது என்பதை தெளிவுபடுத்துவதாக கருதுகிறேன்" என்றார். ஆசிரியர் நவோகோ வேக் தி கன்வெர்ஷனல் போர்ட்டலில் எழுதிய கட்டுரையில், “கிறிஸ்டோபர் நோலன் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை அலட்சியப்படுத்தவில்லை. ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி(ஓப்பன்ஹைமர்) ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு கொண்டாட்ட உரையில் தனது நண்பர்களுடன் பேசும்போது குண்டுவெடிப்பை கற்பனை செய்வதைப் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார். “ஆனால், அந்த கற்பனை காட்சியில் ஓப்பன்ஹெய்மர் ஒரு இளம் வெள்ளைப் பெண்ணின் (நோலனின் மகள் ஃப்ளோரா நடித்திருந்த பாத்திரம்) முகத்தை மட்டுமே பார்க்கிறார். அவர்கள் யாரும் உண்மையில் தாக்கப்படவில்லை இல்லையா? அங்கு ஜப்பானியர்கள், கொரியர்கள் மற்றும் ஆசிய, அமெரிக்கர்கள் மீது தான் குண்டு வீசப்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, " மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்டபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார். படம் பார்த்த மக்கள் கூறியது என்ன? ஜப்பானில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து பார்வையாளர்கள் சிலர் கலவையான விமர்சனங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர். 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்து சிதறிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் இந்த படத்தை பார்த்த சிலரிடம் பிபிசியின் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல் பேசிக் கொண்டிருந்தார். அவர்களிடம் ஓப்பன்ஹெய்மர் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். " மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்ட போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார். அணுகுண்டு எதிர்ப்பு ஆர்வலரான மயூ செட்டோ, படத்தை பார்த்து விட்டு தான் அதிர்ந்து விட்டதாக தெரிவித்தார். “சில காட்சிகள் என்னை கோபமூட்டியது. அங்கு மீண்டும் மீண்டும் ஹிரோஷிமா குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்தவர்களின் உணர்வுகள் குறித்து அவர்கள் சிந்திக்கவே இல்லை,” என்று அவர் கூறினார். படக்குறிப்பு, ஜப்பானில் படம் பார்த்த பெண் மசாடோ டெய்னாமா என்ற இளைஞர், “இந்த திரைப்படம் ஓப்பன்ஹெய்மரை ஒரு சிறந்த மனிதராக காட்டினாலும், இந்த நிகழ்வு குறித்து அவர் மனதில் இருந்த குற்றவுணர்வை மறைக்க முடியவில்லை என்று காட்டியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். கனேய் குமே என்ற மாணவர் படத்தைப் பார்த்த பிறகு, இந்த சம்பவத்தை வெளி உலகம் எப்படிப் பார்க்கிறது என்று புரிந்துள்ளதாக கூறினார். “இந்த படத்தில் அணுகுண்டுகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் வழியாக அமெரிக்கர்களும், உலக மக்களும் இந்த சம்பவத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது எனக்கு புரிந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c6p41e6g2ego1 point- என் இந்தியப் பயணம்
1 pointசிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்1 point- என் இந்தியப் பயணம்
1 pointஎனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்1 point- என் இந்தியப் பயணம்
1 pointஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.1 point- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
அதாவது நீங்கள் உக்ரேனை ஆதரித்து விட்டு அதே நேரம் இஸ்ரேலையும் ஆதரிப்பது போல.1 point - தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.