Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    20359
    Posts
  2. பகிடி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    597
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33825
    Posts
  4. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1594
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/23/24 in all areas

  1. நன்றி 5 பரப்புக் காணி ( அம்மம்மாவின் தாயாரின் காணி ) 20 வருசத்துக்கு முன் வெறும் 30 லட்ஷத்துக்கு வந்தது, நான் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்ததால் அம்மாவால் அதை வாங்க முடியவில்லை. பின்னர் போன வருடம் பரப்பு 27 லட்ஷம் படி கிட்டத்தட்ட மொத்தம் ஒண்டரை கோடி என்று விலைக்கு திடீர் என்று வந்தது. இங்கு எனக்கு படிப்பு, exam வேலை என்று பல நெருக்கடிகளுக்கு இடையில் இருக்கிற காசை எல்லாம் போட்டு அதை வாங்கினேன். வாங்கினதும் அம்மம்மா சந்தோசமாக என்னுடன் அந்தக் காணியில் தான் வாழ்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து மூத்த பேரன் அதை வாங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த கிழமை தனது 94 ம் வயதில் இறந்தும் போனார். அவர் இறந்த அதே நாள் எனக்கு மகனும் பிறந்தான்.
  2. பேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள். வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.
  3. கனடா மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. நான் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தபோது இங்குள்ள சட்டதிட்டங்கள் மிகவும் கடினமானவையாக தெரிந்தது. என்ன செய்தாலும் களவு களவுதான். பிழை பிழைதான். எனது மகனின் பாடசாலை அதிபர்இ மிகவும் பணக்காரி. Best Buy (Opelika) என்னும் கடையில் பெறுமதியான வயரை எடுத்து CCTV இல் பார்த்ததோடு Security Guard உம் பிடித்து விட்டான். உடனே போலீஸ் வந்து கைது விட்டார்கள். பத்திரிகை இணையதளம் எல்லாம் கைது செய்த படத்தை (Mugshot) போட்டுவிட்டார்கள். வேலையும் இல்லாமல் போயிவிட்டது. ஆனால் அவ வெள்ளைக்காரி. அத்துடன் மிகவும் செல்வாக்கு உள்ள குடும்பம். அதனால் எதோ ஒரு விதமாக மன்னிப்பு கிடைத்து இப்ப அதே ஊரில் நான் படித்த யுனிவர்சிட்டியில் இல் வேலை செய்கிறா. அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்றாலும்இ இப்படியான சலுகைகளும் பணக்கார மற்றும் செல்வாக்கு உள்ள ஆக்களுக்கு வேறுவிதமான சலுகைகள் கிடைக்கும். சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் ஒரு தமிழ் போலீஸ் ஒரு கறுப்பின இளைஞன் நேர்முகத்தேர்வுக்கு போவதற்காக உடுப்பு திருடியதை மன்னித்து அதற்கான பணத்தை அவரே செலுத்தி இளைஞனை கைது செய்யாமல் விட்டார். அப்போதுதான் எனக்கு தெரியும் போலீஸ் காரர்களுக்கு இப்படி செய்ய அதிகாரம் இருக்கு என்று.
  4. 1) காணி உங்கள் பெற்றோரின் பெயரில் இருப்பதால் அவர்கள் சார்பாக இலங்கையில் ஒருவருக்கு Power of Attorney கொடுக்கப்பட வேண்டும். (அந்த Power of At. காணியை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக மட்டுமே என கொடுக்கப்பட வேண்டும் என்பது முக்கியம் 😉) 2) உங்கள் சார்பாக அங்கே செயற்படுவதற்கு நீங்களும் அங்கே ஒருவருக்கு Power of Attorney கொடுக்க வேண்டும். (கொடுக்கப்படும் Power of At. எதற்காக என்பதில் அதிக கவனம் எடுக்கவும்)😎 3) அங்கே ஒரு சட்டத்தரணியை தெரிவு செய்து அவரது ஆலோசனையுடன் அவரைக் கொண்டே Power of Attorney ஐ ஆயத்தம் செய்து உங்களிடம் அனுப்பி வைக்க கூறுங்கள். அதில் சரி பிழை பார்த்தபின்னர், இறுதி document ல் அண்மையில் உள்ள ஒரு Lawyer இடம் கொண்டு சென்று அவர் முன்னிலையில் Power of Attorney யில் கையொப்பம் இடவும். (இரு சாட்சிகள் தேவை. அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களைக் கொண்டுசெல்ல வேண்டும் )🥷 4) Scan செய்யப்பட்ட ஒரு பிரதியை email மூலம் உங்கள் பிரதிநிதிக்கு அனுப்பவும்.✈️ 5) Original மூலப்பிரதியை கூரியர் மூலம் அனுப்பவும் . இதையடுத்து, உங்கள் லாயர் 😩 அதைப் காணிக் கந்தோரில் பதிவு செய்வார். அதன் பின்னர் உறுதி உங்கள் பெயருக்கு மாற்றி எழுதும் செயற்பாடு இடம்பெறும். 👏 6) முத்திரை வரி; இலங்கைப் பிரசைக்கு காணியின் பெறுமதியில் 4% 👌 வெளிநாட்டுப் பிரசைக்கு; 100% 🥶 7) எழுத்துக் கூலி ; சராசரியாக காணியின் பெறுமதியில் 1% 😳 குறிப்பு: காணியின் பெறுமதியைக் மிகவும் அதிகமாகக் குறைத்துக் காட்டினால் உங்கள் பிரதேச காணிக் கந்தோரால் உங்கள் காணியின் பெறுமதியை மீண்டும் Appraisal செய்து தண்டனையுடன்(10%) கூடிய வரிவிதிப்பு வரும் சந்தர்பம் அதிகம் உண்டு. 😁 Power of Attorney ஐ கொடுக்கும்போது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் (Limited) கொடுப்பது பாதுகாப்பானது. 🤣 எழுத்து வேலையெல்லாம் செய்து காணியின் புதிய உறுதி வருவதற்கு 1-2 மாதங்கள் வரை ஆகலாம். 😴 காணிக்கந்தோர்களிடையே ஒரு சீரான நடைமுறை இன்னும் கடைப்பிடிக்கப்படவில்லை. இடத்திற்கு இடம் சில வேறுபாடுகள் உண்டு. 🤨 (Power of At. எழுதுவதற்கு Rs. 25000 வரை அறவிடுகிறார்கள். 🤦🏼‍♂️) அம்புட்டுதே. 😁
  5. "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்" 50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது. தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது. முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது. சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள். துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது. இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்? இங்கே தரப்பட்ட துளையிட்ட பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு 2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும். ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது. அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.? 1) 8% - 12% மேல் 2) மூன்றாவது பெரிய கட்சி 3) சின்னத்தை தக்க வைத்தல் 4) 1 கோடி வாக்குகள் - இலக்கு நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம் வேறு அல்லவா.? இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.
  7. முன்பு ஒரு திரியில் எழுதியது, யாழில் சில தமிழ் அரசியல்வதிகள், வாள் வெட்டுக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகிய மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்புடையவை. போதைப்பொருள் பாவனையின் மூல சக்தி பற்றிப் பத்திரிகையில் நேரடியாக எழுத முடியது.
  8. மிக்க நன்றி @Kapithanஅவர்களே. நான் முதலில் இலங்கைப் பிராஜா உரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்று விட்டு அப்பா அம்மாவோடு இலங்கை சென்று வேலையை முடிப்பதே இலக்குவான விடயம் என்று நினைக்கிறன். தகவல்களை தந்ததற்கும் அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட பொன்னான நேரத்துக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி
  9. காணியின் சந்தை மதிப்பின் 100% கட்ட வேண்டும். சந்தை மதிப்பும் நீங்கள் வேண்டிய காணியின் வரி மதிப்பீட்டு விலையும் ஒன்றல்ல. பொதுவாக வரி மதிப்பீட்டு விலை நிர்ணயம் கொள்வனவு விலையைவிட குறைவாகவே இருக்கு. நீங்கள் உங்கள் முதுசம் வேறொருவர் கைக்குள் போகக்கூடாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். அல்லது உங்கள் உறவினர்கள் அதை உங்களுக்கு உறவு என்கிற வகையில் குறைந்த விலையில் கொடுத்திருக்கலாம். ஆனால் (உ+ம்) வட மாகாண சபையின் காணி மதிப்பீடே காணியின் ஊண்மையான (வரி) மதிப்பாகும். அதற்குத்தான் நீங்கள் முத்திரை வரி கட்டுவீர்கள். நீங்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொண்டபின்னர் (அதைப் பெற ஏறக்குறைய 1 வருடமாகும்) காணியை உங்கள் பெயருக்கு மாற்றினால் Dual citizenship இரட்டைக் குடிவைத்திருப்பவர்களுக்கு 4% மட்டுமே . கொசுறு; இரட்டைக் குடியுரிமை $2 000 US Dollars. (பிரதான விண்ணப்பதாரிக்கு, மேலதிக குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு $500(Each person) ஒருவரது விண்ணப்பக் கட்டணம் 40 Canadian dollars. மேலதிக செலவு ஏறக்குறைய $ 500-600 (ஒருவருக்கு ) உங்கள் பரம்பரைக் காணியைப் பெற்றுக்கொண்டதற்கு வாழ்த்துக்கள் 🙏 அதன் மகிழ்ச்சி அழவில்லாதது. 😃
  10. சித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.
  11. 1. இலண்டனிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் காசை கள்ள வழிகளில் உழைத்துவிட்டு, அதை இந்த அடைக்கலம் தந்த நாடுகளில் declare பண்ணாமல், மேலதிகமாக அடைக்கலம் தந்த நாட்டில் முதலிட்டால் அல்லது வைப்பில் இட்டால் வரி கட்ட வேண்டி வரும் என்பதால் - இலங்கையில் வைப்பில் இட்ட வரி ஏய்பாளருக்கு ஆப்பாமா? சந்தோசம் 🤣. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தால் இப்படித்தான் நடக்கும். 2. ஓய்வூதியத்துக்கு, அல்லது ஓய்வூதியகாலத்தில் வரும் வருமானத்துக்கு வரி என்பது அப்படி ஒன்றும் கொடுமையான விடயமோ அல்லது புதிய் விடயமோ அல்ல. எல்லா நாடுகளிலும் வரி கட்ட கீழ் வரம்பு என்று உள்ளது. இதற்கு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது இயல்பானதே. உதாரணமாக யூகேயில் பென்சன்+ஏனைய முதலீடுகள் தரும் ஆண்டு வருமானம் > வரிகட்டும் கீழ் வரம்பு எனில், வரம்புக்கு அதிகமாக வரும் வருமானத்திற்கு வரி அறவிடப்படும். https://www.unbiased.co.uk/discover/pensions-retirement/managing-a-pension/tax-on-pensions#:~:text=Do you pay tax on,tax of 40% kicks in. இலங்கை வங்குரோத்தானதுக்கு இப்படியான வரி ஏய்பும் ஒரு காரணம். இலங்கை இப்போ ஐ எம் எவ் கேட்டு கொண்டதன்படி தனது வரி விதிப்பில் உள்ள குறைகளை நீக்கி, வரி ஏய்ப்புக்கான வழிகளை அடைக்கிறது. வந்த நாள் முதல் கள்ள மட்டை போடுவது, கள்ள பியர் ஏத்துவது, கொவிட் உதவி பணத்தை கொள்ளை அடிப்பது. வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏற்பது என பணம் சேர்த்து, அதை இங்கே போட்டால் கேள்வி வரும் என்பதால் - இலங்கையில் பல மடங்கு கூடிய வட்டிக்கு ஆசைபட்டு - இப்போ குய்யோ, முறையோ என கத்துகிறார்கள் சிலர். # கொள்ளை அடித்ததாம் பெருமாளு, அதை புடிங்கி தின்னுதாம் அனுமாரு🤣
  12. @Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂
  13. முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) மூன்றாம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) நான்காம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) மூன்றாம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) இரண்டாம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) இரண்டாம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) மூன்றாம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி) இரண்டாம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) நான்காம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) மூன்றாம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) இரண்டாம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) மூன்றாம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) இரண்டாம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) இரண்டாம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? பூச்சியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? பூச்சியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? பூச்சியம் 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? பூச்சியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பத்து (புதுச்சேரி அடங்கலாக). தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடுகின்றது. 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம்
  14. சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  15. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்
  16. பொதுவாக கேட்டேன். முந்தைய கம்யூனிச கிழக்கு ஜேர்மனிக்கு இலங்கையில் இருந்து வீசா இல்லாமல் வரலாம். அப்படி கம்யூனிச கிழக்கு ஜேர்மன் வந்த தமிழரில் பெருவாரியானோர், உயிராபத்தை எதிர் கொண்டு, முதாளிதுவ மேற்கு ஜேர்மனுக்கு”போர்டர் பாய்ந்து” வந்தார்கள். சரிதானே நான் சொல்லும் தரவு? ஏன் சமதர்ம நாட்டை விட்டு முதலாளிதுவ நாட்டுக்கு உயிர் ஆபத்தையும் எதிர் கொண்டு வந்தார்கள்?
  17. ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ ந‌ம்பிக்கையை இழ‌ந்தால் அது க‌ட‌சியில் எங்கை போய் முடியும் இந்திய‌ நாட்டை ஆளும் மோடியால் ப‌ஞ்சாப் மானில‌த்துக்குள் போக‌ முடிய‌ வில்லை எத‌ற்காக‌........................ நீங்க‌ள் இப்ப‌டி கேட்க்கிறீங்க‌ள் பொது வெளியில் ஊட‌க‌ங்க‌ள் ம‌க்க‌ள் கேட்டுக்கும் கேள்விக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் ப‌தில் அளிக்குமா சின்ன‌ ஒரு எடுத்து காட்டு விவ‌சாயி சின்ன‌ம் ப‌றிச்சாச்சு மைக் சின்ன‌த்துக்கு ப‌தில் வேறு சின்ன‌ம் கேட்க்க‌ த‌ங்க‌ளுக்கு மேல் இட‌த்தில் இருந்து அழுத்த‌ம் வ‌ருதாம் வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று இது ஜ‌ன‌நாய‌க‌ நாடு தானே நாங்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை வைத்து நீங்க‌ள் எப்ப‌டி இப்ப‌டி சொல்ல‌லாம் என்று அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை பார்த்து கேட்க்க‌ உங்க‌ளின் ஆத‌ங்க‌ம் புரியுது என்று ச‌மாளித்து அனுப்பி விட்டார்க‌ள் தேர்த‌ல் ஆணைய‌ம் இந்திய‌ தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் சுத‌ந்திர‌மாய் இய‌ங்க‌ அவ‌ர்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் உண்டு எந்த‌ க‌ட்சியின் உள் சாய‌ம் இருக்க‌ கூடாது இப்ப‌ இருக்கும் தேர்த‌ல் ஆணைய‌ம் அதை க‌டை பிடிக்குதான்னு கேட்டால் விடை இல்லை என்று தான் வ‌ரும்......................... விவ‌சாயி சின்ன‌த்தில் போட்டியிட்ட‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் எங்கையாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்து இருக்கா அப்ப‌டி செய்து இருந்தால் புகைப‌ட ஆதார‌த்தை காட்டுங்கோ....................இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ முத‌ல் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌டும் என்ற‌து வெறும் வெட்டி பேச்சு எப்ப‌டியாவ‌து அந்த‌ சின்ன‌த்தை ப‌றித்து விட்டால் ஓட்டு ச‌த‌ வீத‌த்தை குறைத்து விட‌லாம் என்ற‌ மாயை உருவாக்க‌ பார்த்தார்க‌ள் ஆனால் மைக் சின்ன்ன‌ம் ஓட்டு போடுவ‌துக்கு முத‌லே விஜேய் மூல‌ம் ப‌ல‌ரை சென்று அடைந்து விட்ட‌து விவ‌சாயி சின்ன‌த்தை விட‌ மைக் சின்ன‌த்துக்கு கிடைச்ச‌ ஓட்டு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்....................யூன்4 ம‌க்க‌ள் தீர்ப்பை தேர்த‌ல் ஆணைய‌ம் குள‌று ப‌டி செய்யாம‌ வெளியிட்டால் ம‌கிழ்ச்சி🙏..................................................................................................................................................................................... நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லையா அல்ல‌து என்னை மாதிரி வேடிக்கை பார்க்க‌ போறிங்க‌ளா😁............................................
  18. சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽 இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎 சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂
  19. கண்ணு பட போகுது சுத்தி போடுங்க அண்ணா .
  20. கூட்டத்திலை குசு விட்டவன் தான் முந்திரிக்கொட்டை மாதிரி ஆரோ விட்டுட்டான் எண்டு கத்துவானாம் 😋
  21. @goshan_che நீங்கள் குறிப்பிட்ட ஆட்கள் corporate வட்டத்திற்குள் போய் கன காலம். சிலர் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு Badminton & Tennis & Golf Club என கனவான்களின் கூட்டில்… இப்போது Universal Credit இல் இருப்பவர்களின் காலந்தான் Top.
  22. மிகச் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👌 அடைக்கலம் தந்த நாடுகளில் வைப்பில் இடாமல் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்து அடைக்கலம் தந்த நாட்டை வரியில் ஏமாற்றுவது. ஒரு வரம்பு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது என்பது எல்லாநாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்வு.
  23. முட்டையில்லை! முட்டைக்கும் கீழே!😩
  24. எல்லோருக்கும் இரு கேள்விகளில் முட்டை என்படியால் கொஞ்சம் நிம்மதி.
  25. தனிமனிதர்களின் முன்னேற்றம் சமூக மாற்றத்தின் முதற்படி. வாழ்த்துகள் ஐயா. உண்மையோ கற்பனையோ வரவேற்கிறேன் இவ் ஊக்கமான ஆக்கத்தை.
  26. 08. என்றே வைத்திருங்கள்........! 😁
  27. ஆம். இதை மறந்து விட்டேன், என்னது முதியவர்களை கேட்டு இருக்க கூடிய வாய்ப்பு இருந்து, எவ்வாறு தெரியும் என்று கேட்டு இருந்தால், அவர்கள் சொல்லி இருக்க கூடிய பதில் என்று நான் எதிர்பார்ப்பது, அவர்களின் (எனது சிறுவயது நேரடி முதியவர்கள்) முதியவர்கள் சொன்னது என்பது தான் அநேகமாக பதிலாக இருந்து இருக்கும். ஆனல், குவேனியை விட, (உறுத்தி) அவர்கள் சொன்னது கதிர்காமதில், வேடுவர் முருக வழிபாட்டுக்கு வந்தது செங்குந்தரால், கைக்கோளரால்). அந்த கதை சுருக்கமாக,, வள்ளியை முருகன் மணந்தது கதிர்காமத்தில், அதன் தூது விளையலட்டை செய்து வள்ளியை முருகனுக்கு விழுத்தியது வீரவாகுவும், அவரின் சகோதரர்களும். அந்த வழிதான். வேடுவர் முருக வழிபாட்டுக்கு வந்தனர். அப்படியே, இங்கே செங்குந்தர் (கைக்கோளர்) என்ற சாதி வேர் விட்டது. வாய்வழி கதை தான். (நான் நம்புவது, முருகன் எனும் அந்த நேர நவீனத்துவம், தீவுக்குள் வந்து, வேடரை மடக்கி இருக்க வேண்டும்; அவர்கள் சொல்லுவது உண்மை என்றால்)
  28. என்னது விஜயத்தை என்னிடம் விடுங்கோவா? கடவுளே கடவுளே இந்தக் கொடுமையைக் கேட்க ஆளே இல்லையா?
  29. Chéri என்ற பிரெஞ்சு சொல்லை பிரபுவுக்கு அவர் பாவித்து இருந்தால் அது மிக மிக சரியானதே. 🤩
  30. 😀 விசயதéதை என்னிடம் விடுங்கோ. என்ரை சொத்து மாதிரி கவனமாக பாக்கிறேள்.😀
  31. மும்பை அணியின் தோல்விக்கு யார் காரணம்? ஹர்திக் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 7 போட்டிகளாக 121 ரன்கள், ஒரு அரைசதம், சதம் கூட இல்லை, அதிகபட்சமாக 39 ரன்கள் என இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஃபார்மின்றி ஜெய்ஸ்வால் திணறிக்கொண்டிருந்தார். திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்திருந்த நம்பிக்கையை நேற்றை ஆட்டத்தில் சதம் அடித்து நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் காயத்தால் பல போட்டிகளாக பந்துவீசாமல் இருந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் காரணமாகினார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை யஜுவேந்திர சஹல் நேற்று பெற்றார். டி20 போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ், சமித் படேலுக்கு அடுத்தார்போல் சஹல் இடம் பெற்றார். இதுபோன்ற பல இனிமையான நினைவுகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை அணியை எளிதாகவே வீழ்த்திவிட்டது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா(1.206) அணியைவிட, ராஜஸ்தான் குறைவாகவே 0.698 என்ற அளவிலேயே இருக்கிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 5 தோல்விகள், 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.227 என்ற அளவில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியைவிட நிகர ரன்ரட்டில் குறைவாக இருந்தாலும், புள்ளிக்கணக்கில் அதிகமாக இருப்பதால் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையைச் சாய்த்த சந்தீப் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது சந்தீப் சர்மா, டிரன்ட் போல்ட் இருவரும்தான். இதில் டிரன்ட் போல்ட் ஏற்கெனவே மும்பை வான்ஹடே மைதானத்தில் உள்ள ரசிகர்களை தனது பந்துவீச்சால் நிசப்தமாக்கி அதிர்ச்சியளித்தார். அதேபோல ஜெய்ப்பூர் மைதானத்திலும் மும்பை அணியின் ரசிகர்களையும் மவுனமாக்கினார். காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசிய சந்தீப் சர்மா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதற்கு முன் டெத் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி வந்த சந்தீப் சர்மா பவர்ப்ளேயில் பந்துவீசினார். ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு வீசிய சந்தீப் சர்மா, பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெத் ஓவரில் மும்பை அணிக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் அடித்தபின், ஜெய்ஸ்வால் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர், பவுண்டரி என பறந்தன, அடுத்த 28 பந்துகளில் 50 ரன்களுடன் சதத்தை நிறைவு செய்து 60 பந்துகளில் 104 ரன்களுடன் (7 சிக்ஸர், 9பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், இந்த சீசனிலும் சதம் அடித்துள்ளார். ஒற்றை பேட்டராக இருந்து ராஜஸ்தான் அணியை ஜெய்ஸ்வால் கரை சேர்த்துள்ளார். கடந்த போட்டியில் ஒற்றை பேட்டராக இருந்து வெற்றி தேடித்தந்த ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் 35 ரன்களில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் பட்லர் கூட்டணி 74 ரன்கள் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜெய்ஸ்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-ஜெய்ஸ்வால் கூட்டணி 109 ரன்கள் சேர்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் தொடக்க வரிசையை உடைத்த போல்ட், சந்தீப் மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கை டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் சேர்ந்து நிலைகுலையச் செய்தனர். ஆடுகளத்தின் தன்மை, பனிப்பொழிவு, காற்று ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்தி, துல்லியமான லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறடித்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் முதுகெலும்பு பேட்டிங் வரிசை சுக்குநூறாக இருவரும் சேர்ந்து உடைத்துவிட்டனர். மூன்று வாரங்களுக்கு முன் மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை அணி ரசிகர்களை தனது பந்துவீச்சால் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி டிரன்ட் போல்ட் அரங்கையே நிசப்தமாக்கினார். அதேபோன்று நேற்றும் தனது பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா(6) விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். ஐபிஎல் தொடரில் டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவது இது 26-வது முறையாகும். இந்த சீசனில் மட்டும் போல்ட் 5-ஆவதுமுறையாக முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். சந்தீப் சர்மா தான் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷனை அவுட் ஸ்விங் மூலம் சாம்ஸனிடம் கேட்ச் கொடுக்கவைத்து டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்துவந்த 360 டிகிரி பேட்டர் சூர்யகுமாரும், தனக்குரிய ரிதம் கிடைக்காமல் பேட்டிங்கில் தடுமாறினார். அவர் தனது இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பவிடாமல், போல்ட், சந்தீப் இருவரும் துல்லியமாகப் பந்துவீசினர். ஒரு கட்டத்தில் சந்தீப் வீசிய ஸ்லோ-பாலோ தூக்கி அடிக்க ரோவ்மன் பாவலிடம் கேட்சானது. சூர்யகுமார் 10 ரன்னில் வெளியேறியது, மும்பையின் பெரிய நம்பிக்கையே உடைந்தது. அடுந்து வந்த முகமது நபி, அதிரடியாக ஆவேஷ் கான் ஓவரில் கேமியோ ஆடி 18 ரன்கள் சேர்த்து, சஹல் வீசிய முதல் ஓவரிலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தும், 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 5-ஆவது விக்கெட்டுக்கு நேஹல் வதேரா, திலக் வர்மா ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாகவும், மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆடிய திலக் வர்மா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். மிகக் குறைந்த வயதில் 21 வயது 166 நாட்களில் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை திலக் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் பங்கேற்ற நேஹல் வதேரா அதிரடியாக பேட் செய்து 24 பந்துகளில் 49 ரன்கள்(4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் சேர்த்ததுதான் அணியில் பெரிய ஸ்கோராகும். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்தால், மும்பை அணி 140 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். அதன்பின் வந்த பேட்டர்களான கேப்டன் ஹர்திக் பாண்டியா(10), டிம் டேவிட்(3), கோட்ஸி(0) எனவரிசையாக ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 18 ஓவர்களில் மும்பை அணி 170 ரன்களை எட்டியநிலையில் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக ஆடி 200 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிலும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா, 2வது பந்தில் கோட்ஸீ, 5வது பந்தில் டிம் டேவிட் என 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதாவது ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. கடைசி 28 ரன்களுக்குள் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. என்ன சொல்கிறார் பாண்டியா? மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிக்கல்களைச் சந்தித்தோம். ஆனால், திலக், வதேரா ஆடியவிதம் அருமை.அதேபோல ஃபினிஷிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட 15 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். அதேபோல பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் எங்களுக்கு சிறந்தநாளாக அமையவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாத பிரச்னை தொடர்கிறது.” “ஒவ்வொரு வீரரும் தங்களுக்குரிய பணியை, பொறுப்பை உணர்வார்கள். தவறுகளை திருத்துவது அவசியம், மீண்டும் தவறுகள் வராமல் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஏற்படும் தவறுகள், பணியையும் ஏற்க வேண்டும். சரியாக விளையாடாத வீரர்களை உடனே நீக்குபவன் நான் அல்ல, வீரர்களுக்கு போதுமான வாய்ப்புத் தருவேன். நல்ல கிரிக்கெட்தான் என்னுடைய நோக்கம், எங்கள் திட்டங்களை நோக்கிச் செல்வோம்”எ னத் தெரிவித்தார்” பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை அணியின் தோல்விக்கான காரணங்கள் மும்பை அணியின் பந்துவீச்சு, பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவை நேற்று சுமாராகவே இருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் நேற்று இரு கேட்சுகளை டிம் டேவிட், வதேரா இருவரும் தவறவிட்டனர். இருவரும் கேட்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும். அதேபோல பவுண்டரிகளை தடுக்கும் பீல்டிங்கிலும் மும்பை வீரர்கள் பெரிதாக முயற்சி எடுக்காமல் பீல்டிங்கில் கோட்டைவிட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் 2 பவுண்டரிகளை விட்டார்.. பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள்வீசி 21 ரன்களை வாரிக் கொடுத்தார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரு பிரிவுகளிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இது நிச்சயமாக உலகக் கோப்பைக்கான அணியில் எதிரொலிக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிறப்பாகப் பந்துவீசக்கூடிய பும்ரா 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை வழங்கினார். முகமது நபி, துஷாரா பந்துவீச்சும் எடுபடவில்லை. ராஜஸ்தான் பேட்டர்கள் குறிப்பாக ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சு நேற்று மும்பையிடம் இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும். பட மூலாதாரம்,SPORTZPICS சஹலின் சாதனைகள் யஜுவேந்திர சஹல் நேற்று முகமது நபி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் தொடரில் 200-வது விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராகவும் சஹல் இடம் பெற்றார். இதற்கு முன் டேனி பிரிக்ஸ்(219), சமித் படேல்(208) வீழ்த்தியுள்ளனர். சஹல் தனது 200 விக்கெட்டுகளில் 158 விக்கெட்டுகளை 125 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 42 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார்(160) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் தொடரில் 7 முறை 4 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தி மலங்காவுக்கு அடுத்தார்போல் இடம்பெ ற்றுள்ளார். 20 முறை 3 அல்லது அதற்கு மேல் அதிகமான விக்கெட்டுகளை சஹல் கைப்பற்றியுள்ளார். இரு அணி நிர்வாகங்களுக்கு 50 விக்கெட்டுகளை4 பந்துவீச்சாளர்கள் இதுவரை வீழ்த்தியுள்ளனர். இதில் சஹல் ஆர்சிபி அணிக்கும், ராஜஸ்தானுக்கும் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திக் கொடுத்துள்ளார். இதில் ஆர்சிபி அணிக்காக மட்டுமே சஹல் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் 61 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக சஹல் கைப்பற்றியுள்ளார். அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் மட்டும் சஹல் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடுப்பகுதி ஓவர்களில் சஹல் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். சஹல் எடுத்த 200 விக்கெட்டுகளில் 152 விக்கெட்டுகள் 7 முதல் 16-வது ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டவையாகும். https://www.bbc.com/tamil/articles/ckr530mxp1ko
  32. மறக்காமல் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சியுங்கள். அது, காலத்தின் கட்டாயம். வரலாறு என்றும் உங்களை நினைவு கூரும்.... நன்றி.
  33. ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் ? பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" என கூறி பரவசப்பட்டனர். ஒரு சிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது? ஒரு பக்கம் காதல் பாட்டுடனும் மறுபக்கம் இப்படியும் தான் நிலா இன்று படாத பாடு படுகிறது?. நானும் ஒரு நிலாவை மறவாமல், அதன் நினைவில் மூழ்கிறேன்! "கண்கள் இரண்டும் மகிழ்ந்து மயங்க வண்ண உடையில் துள்ளி வந்தாய் விண்ணில் உலாவும் மதியும் தோற்று கண்ணீர் சிந்தித் தேய்ந்து மறைந்தது!" "வெண்மை கொண்ட என் உள்ளத்தில் பூண் போல் உன்னை அணிந்துள்ளேன் ஆண்டுகள் போனாலும் உன்னை மறவேன் எண்ணம் எல்லாம் நீயே பெண்ணிலாவே!"
  34. வாழ்த்துகள் பெரியவரே!
  35. உங்கள் குரல் தான் எனது முடிவும் நன்றி நெடுக் .
  36. ஆஹா ....நல்ல செய்தி பிரியன்.........வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்..........! 💐
  37. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 04 ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before]. அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வ தென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கைத் தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்பு தான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாகத் தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? பிராமண குருக்கள் இலங்கையில் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் இருந்தது என்பது உண்மையே, உதாரணமாக, ஒரு வரலாற்று கதையில், ரிஷிகள் என்று அழைக்கப்பட்ட, இரு கல்விமான்கள் வட இந்தியாவில் இருந்து, தென் திசை நோக்கி புறப்பட்டு இலங்கையை வந்து அடைந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அகஸ்தியர் [அகத்தியர்], புலஸ்தியர் ஆகும். புலஸ்தியர் அகத்தியரின் மாணவராகும். இதில் அகத்தியரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது. முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் புராணத்திலும் இதிகாசத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்லவேண்டும், முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேணியும் [குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மேலும் துரத்தப் பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப் பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது தனக்கு பிறந்த பிள்ளை ஒன்றை கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? [Picture 04: மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும்
  38. இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம் பெயர் தமிழர்களின் திடீர் முடிவு #udaruppu
  39. எப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில் முதன்முதல் காலடி வைத்த போது வந்ததே எனக்கு கோபம் எமது கடவுளின் தலையிலா கால் வைத்தீர்களா பாவிகளா.
  40. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4)7%-8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) ( தர்மபுரி, ஆரணி,தேனி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 32 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0
  41. புளியோதரை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ....... இனி வரும் வெய்யில் காலத்துக்கு வாய்க்கு ருசியாகவும் பயணத்துக்கு செமையாகவும் இருக்கும் ......! 😂
  42. ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும் வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
  43. தெய்வமே எங்கிருந்தீர் இதுவரை... 🤪
  44. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம். சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும். பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம். பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது. எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  45. இந்த குஷ்பு என்பவர் குறிப்பிட்டது அவமரியாதையான நோக்கம். கண்டிக்கபட வேண்டியது.. இந்த குஷ்பு மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது பேச்சாளராக இருந்திருந்தால் யாழ்களத்தில் அவர் நிலைமையே வேறு 🤣 ஆளுக்கு ஆள் போட்டி போட்டு கொண்டு அவா எப்போதும் அன்பானவர், அவாஅன்பாக சொன்ன சேரி என்ற வார்த்தையை தவறாக விளங்கி கொள்ளலாமா என்று அவரை நியாயபடுத்த கடுமையாக பாடுபடுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.