Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    31987
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7053
    Posts
  4. வாதவூரான்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    2508
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/24/24 in all areas

  1. இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும். 2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா?) ஒரு பேட்டியின் போது "சுமந்திரனுக்கு விழும் வாக்குகள் தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிரான வாக்குகளாக இருக்கும்" என்ற தொனியில் பேசியிருந்தார். சுமந்திரனுக்கு வெல்லப் போதுமான வாக்குகள் விழுந்தன, அவர் இப்போதும் பா.உ ஆக இருக்கிறார். எனவே "தமிழ் தேசியம்/புலிகளின் தியாகம் ஆகியவற்றிற்கெதிராக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள்" என்று தமிழரின் எதிரிகளான எவரும் நிறுவவில்லை - தமிழ் தேசியரான காக்கா அண்ணாவே தன் கருத்து மூலம் நிறுவினார். (அதே தேர்தலில் சுமந்திரனை விட அதிக வாக்குகள் தமிழ் தேசியமே பேசாத மகிந்தவின் அணியின் அங்கஜனுக்கு கிடைத்தன என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய தகவல்!). மேல் தகவலை நான் நினைவூட்டுவதன் காரணம்: தீவிரமான கண்ணாடியூடாக சாதாரண விடயங்களை பெரிதாக்கிப் பார்த்து, அதனாலேயே மக்களின் மன நிலையை தவறாகப் புரிந்து கொள்வதும், அவர்களை வையப் போய், பின்னர் அவர்கள் "இந்த தீவிரப் பார்வை எமக்கு வேண்டாம்" என்று விலகி நடப்பதும் எங்களுக்கு நன்மை செய்யாது. தமிழ் தேசிய உணர்விற்கும், வெசாக் கூடு பார்க்க ஒரு இரவு மக்கள் உலவுவதற்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு பொழுது போக்கு, அவ்வளவு தான். இதே மக்களிடமிருந்து தான், நியாயமான கோரிக்கைகளான அரசியல் கைதிகள் விடுதலை, காணி ஆக்கிரமிப்பு நீக்கம், போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட வேண்டியும் இருக்கும் என்பதை மக்களைத் திட்டும் போது நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்படி நினைக்காமல், சகட்டு மேனிக்கு எல்லாரையும் போட்டுத் தாக்கினால், அடுத்த தலைமுறையில் "தமிழ் தேசியம்" என்று வாய் திறந்தாலே ஊரில் அடி தான் விழும்.
  2. அந்திப்பொழுதில் ஓர் அவசர தொலைபேசி அவசர சிகிச்சைப்பிரிவில் நீங்களும் அனுமதியாம் தொலைபேசியும் அனுமதியில்லை தொடர்புகொள்ளவும் முடியவில்லை மீள்வீர்கள் என நினைத்திருந்தேன் மீளாத்துயில் கொண்டதேனோ! சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடியதும் இரவினில் பயத்திலே நான் கட்டிப்பிடித்து உறங்கியதும் பசுமை நினைவுகளாய் இன்றும் என் மனதினிலே! இடப்பெயர்வால் எந்தன் ஈராண்டுக் கல்வியது இல்லாமல் சென்றதனால் திகைத்து நிற்கையிலே! ஆறு மாதத்திற்குள் அனைத்தையும் கற்பித்து சாதாரண தரமதிலே சிறப்பு சித்தி பெற வைத்தீர் கணக்கு முதற்கொண்டு சங்கீதம் வரையிலே தெரியாத பாடம் என்று உமக்கில்லைக் கண்டீரோ தெரிந்ததால் தானோ இறைவன் விடவில்லை உமையிங்கு இருபத்தொரு அகவையிலே ஆசிரியனாய் நீங்களும் படிப்பு செலவு முதல் உடுப்பு வரைக்கும் நான் கேட்க்காமலேயே செய்தீர்கள் அன்பால் எனை என்றும் அரவணைத்தே சென்றீர்கள் அலறித்துடிக்கின்றேன் ஆறுதல் சொல்ல வருவீரோ! பிள்ளையின் பரீட்சசைக்காய் உங்கள் உடல் நலனை மறந்தீரோ பிள்ளைகள் கல்வியே உங்கள் கனவென்று சொல்வீர்கள் பாதிக்கனவினிலே பரலோகம் சென்றீரோ! உங்களிடம் கற்றவரும் உற்றாரும் உறவினரும் உங்கள் பாசமுகம் காண ஏங்கியே தவிக்கின்றார் உறக்கம் கலைந்திங்கு ஓடித்தான் வருவீரோ! பரபரக்கும் இப்புவியில் உங்கள் கடமை முடிந்ததென்று பாதியில் ஓய்வெடுக்க பரமனிடம் சென்றீரோ! உங்கள் கனவனைத்தும் உறுதியாய் நிறைவேறும் பாசமாய் உங்கள் சகோதரர் நாமுள்ளோம் கவலை ஏதுமின்றி சென்று வாருங்கள் அண்ணா!
  3. கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் தான். உடனே இணக்க அரசியல் எழுதுவோர் ஓடிவாருங்கள், "அதெப்படிச் சொல்வீர்கள், கொழும்பில் கோயில் இல்லையா? ஆடித்தேர் இழுக்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே. எல்லாம் இருக்கிறது, ஆனால், தமிழினம் சிங்கள இனத்தை ஆக்கிரமித்து கொழும்பில் நிற்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, வடக்குக் கிழக்கில் எந்தவிடத்திலுமோ நடப்பது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புத்தான். இந்த ஆக்கிரமிப்பினை எம்மால் வேடிக்கை வினோதமாகத்தான் பார்க்க முடிகின்றதென்றால் பிழை ஆக்கிரமிப்பாளனில் இல்லை. சுமந்திரனுக்கோ அங்கஜனுக்கோ யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளுக்கும், 2010 இல் சரத் பொன்சேகாவிற்கு விழுந்த வாக்குகளுக்கும் இடையே எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் தாம் வாக்களிக்கவேண்டும் என்கிற கேள்வியோ, வாக்களிப்பதால் உருவாகப்போகும் விளைவுகள் குறித்தோ யாழ்ப்பாணச் சமூகம் அக்கறைப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. தம்மை இன்றைவரை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்தின் எந்த வாக்காள‌ருக்கு நாம் வாக்களிக்கலாம், எவருக்கு வாக்களிக்காது விட்டால் நாம் விரும்பும் ஒரு சிங்கள வேட்பாளருக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கவலைப்படும் நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்துவிட்டிருப்பதும் சிங்களவர்களின் பிழையில்லை. தையிட்டியில் (இன்றும் நடக்கிறது) அடாத்தாக தமிழர் நிலங்களில் விகாரை கட்டும்போதும், குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்து அப்பகுதியை பெளத்த பூமியென்று நிறுவும்போதும், நாவற்குழியில் இனக்கொலையாளியொருவனால் விகாரை திறந்துவைக்கப்பட்டபோதும், திருகோணமலையில் தமிழர் தாயகப்பகுதியில் புதிதாக விகாரை கட்டி எழுப்பும்போதும் வெறுமனே ஓரிரு மக்களும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே அங்கு நின்று ஆர்ப்பரிப்பதும் யாருடைய பிழை? ஏன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஓரிருவரைத் தவிர, மொத்தத் தமிழர்களுக்கும் இது பிரச்சினையாகத் தெரியாது போனதெப்படி? இதை எழுதவேண்டியிருப்பதே யாழ்ப்பாணத்து தமிழர்களின் இன்றைய அரசியல்க் கையறு நிலையினைச் சுட்டிக்காட்டத்தான். தமிழர்களின் இருப்பைத் தக்கவைப்பத‌ற்கான தேவை யாழ்த்தமிழர்களுக்கு இல்லாமற்போனதெப்படி? காணி விடுவிப்புப் போராட்டம், அரசியற்கைதிகளின் விடுதலைப் போராட்டம் என்பவற்றிற்கு வந்து "குவியும்" ஆயிரமாயிரம் தமிழர்கள் இனிமேல் வராது போய்விடுவார்கள் என்கிற நியாயமான கவலை சிலருக்கு !!! நான்கைந்து பாதிக்கப்பட்ட மக்களும், இன்றுவரை தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெற்றோரையும் தவிர எத்தனை "ஆயிரம்" தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் வந்து குவிகிறார்கள்? இந்தத் தேவையற்ற எச்சரிக்கை ஏன்? நீங்கள் போராடுவதற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அம்மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மீதிப்பேர் வேடிக்கை நிகழ்வுகள் உட்பட தமது நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கச் செல்லவில்லையா? இல்லாத‌ ஒன்றை இருப்பதாகக் காட்டி எச்சரிக்கை வேறு விடுக்கிறீர்கள்? அரசியல்மயப்படுத்தப்படாத, அல்லது அரசியலில் தேசிய நீக்கம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து இதனைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கமுடியாது. சில தினங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் வந்து இணைந்துகொண்ட தமிழ் மக்களுக்கும் நேற்று நாகவிகாரையைச் சுற்றி ஓடியோடி "வேடிக்கை" பார்த்த தமிழர்களுக்கும் இடையே வித்தியாசம் நிச்சயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். "தமிழ்த்தேசியம் என்று ஊரில் வாய்திறந்தால் அடிதான் விழும்" ‍ இந்த நிலை வரக் காரணம் என்ன? ஐம்பதினாயிரம் போராளிகளும், ஒன்றரை இலட்சம் மக்களும் ஏன் மடிந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தான் கூறுவது போல எமக்கேன் தேவையற்ற பிரச்சினை, அது பிரச்சினை உடையவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் அனைவரும் இருந்திருக்கலாமே? அவர்கள் தம்மை தேசியத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்வதற்கான தேவை ஒன்று இருந்ததுதானே? அது இன்றும் இருக்கிறதுதானே? பிறகேன் தேசியம் கதைத்தால் அடிவிழும் என்கிற பயம்? அப்படி நிலை ஏற்பட யார் காரணம்? புலிநீக்கம் செய்கிறோம், தேசிய நீக்கம் செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம், அடையாளம் துறக்கிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம், தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்று பேசிப்பேசியே ஒரு சமூகத்தை அரசியல் கோமா நிலைக்குக் கூட்டிச் சென்றது யார்? இதைக்கேட்டால் "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால் அடிதான் விழும் " என்கிறீர்கள். முதலில், யாழ்ச் சமூகம் உட்பட, மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுங்கள். உங்களின் நடுநிலை, இணக்க, தேசிய நீக்க அரசியலால் பிரிந்துபோய், நமக்கேன் தேவையில்லாத வேலை என்று இருக்கும் சமூகத்தை தூக்கியெழுப்புங்கள். ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் எதிர்கொண்ட‌ பிரச்சினைகளைக் காட்டிலும் பலமடங்கு பிரச்சினைகள் அவர்களின் முன்னால் இன்றைக்கு இருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பினை சிங்களம் கட்டுப்பாடின்றி, தட்டிக் கேட்போர் இன்றி மிகச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகிறது. கண்ணாடி ஏதுமின்றி குருடர்களாக, அரசியலில் அநாதைகளாக, திக்கற்றவர்களாக, செல்லும் வழிதெரியாது நடுவீதியில் நிற்பவர்களாக தமிழர்களை வெகுவிரைவில் நீங்கள் கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள். இப்படிப் போனதன் விளைவே முள்ளிவாய்க்காலுக்கும், கார்த்திகை 27 இற்கும் செல்லும் மக்களுக்கும், நாகவிகாரையில் வெசாக் பார்த்து இன்புற்று, தம்மைக் கொன்றொழித்த மிருகங்களுடன் "சகஜமாகக் கூடிக் குலவும்" இன்னொரு மக்கள் கூட்டத்திற்கும் இடையே நிரந்தரமான இடைவெளி ஒன்று உருவாவதற்குக் காரணம் .
  4. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND PAK CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) IND PAk 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG AUS NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ENG AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ WI AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) WI NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA SL BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) SA SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 PAK SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 ENG WI 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 IND NZ 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 AUS SA 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 ENG SA 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 PAK NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 IND SL 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 WI AUS 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 PAK ENG 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 NZ SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 AUS IND 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 WI SA சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 IND AUS 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 ENG SA 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) SA ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) NZ 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CAN 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Yashasvi jaiswal 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Phil Salt 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? ENG 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jos Buttler 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? ENG
  5. நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம் May 23, 2024 — கருணாகரன் — யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. ஈழத் தமிழரின் அரசியல் இன்னும் மூக்குச் சிந்தும் (அழுது புலம்பும்) நிலையிலிருந்து மீளவில்லை. மட்டுமல்ல, அது உடைந்தும் நலிந்தும் சீர்குலைந்த நிலைக்குள்ளாகி, அதைத் தூக்கி வளர்த்தவர்களையே இன்று துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. “பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள்….” என இந்தத் துக்கத்தை பத்தியாளர் நிலாந்தனும் வெளிப்படுத்தியிருக்கிறார். நிலாந்தனுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மக்களுடைய கூட்டுத் துக்கமும் இதுவேதான். இந்தப் பலவீனமான – பரிதாபமான – பாதகமான நிலைமைக்குரிய கூட்டுப் பொறுப்பை, தமிழரின் தீவிர அரசியலைக் கேள்விக்கும் விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் இடமின்றித் தொடரும் ஊடகர்கள், புத்திஜீவிகள், பத்தியாளர்கள், அரசியற் தரப்பினர், பல்கலைக்கழக சமூகத்தினர், தமிழ்ச் சிவில் சமூகத்தினர் உட்பட சில மதப் பிரமுகர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அவர்களுடைய கூட்டுத் தவறே இந்த நிலைக்குக் காரணமாகும். காரணம் எளியதே. யுத்தத்திற்குப் பிறகான சூழல் (Post – War period) என்பது முற்றிலும் வேறானது. அது தமிழ்ச் சமூகத்தையும் அதனுடைய அரசியலையும் புத்தாக்கம் செய்ய வேண்டியது. 1. அரசியற் சிந்தனை மாற்றத்தின் அடிப்படையில். துரோகி – தியாகி என்று கறுப்பு – வெள்ளையாக அரசியலைச் சுருக்கிப் பார்க்காமல், முடிந்த அளவுக்கு அனைத்துத் தரப்புகளோடும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைத்துத் திரட்டி, அரசியல், பொருளாதார, அறிவியல் ரீதியாகப் பெரும் அணியாக்கியிருக்க வேண்டும். இதில் புலம்பெயர் மக்களையும் உள்வாங்கிருக்க முடியும். இதில் உள்ள சிக்கலான அக – புற நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு அவற்றைக் கையாளக் கூடிய எந்தத் தலைமையும் மேலெழவில்லை. அதனால் இவை எல்லாம் அப்படி நிகழவில்லை. அரசாங்கத்தோடு இணைந்து நிற்கின்ற தரப்புகளும் தமிழ்த்தேசியத் தரப்புகளும் எப்படி ஒருங்கிணைந்து செயற்பட முடியும்? என்ற கேள்வி எழலாம். இதற்குச் சிறந்த பதில், இந்த இரண்டு தரப்புகளும் இவை இரண்டுக்கும் அப்பாலான சமூக விடுதலையுடன் கூடிய இனவிடுதலையை முன்னிறுத்தும் தரப்புகளைக் கூட தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கவில்லை என்பதாகும். காரணம், இந்த இரண்டு தரப்பும் தேர்தல் அரசியலில் மட்டும் மையங் கொண்டிருந்ததேயாகும். அதற்கு அப்பால், விடுதலை அரசியலை இவை முன்னிறுத்திச் சிந்தித்திருந்தால், அதைப் பலப்படுத்தும் மூலோபாயம், தந்திரோபாயம், வேலைத்திட்டம் என்ற அடிப்படையிலேயே செயற்பட முயன்றிருக்கும். ஆகவே இதில் பெரும் தவறு நிகழ்ந்தது. இதைச் சுட்டிக்காட்டி, புத்தாக்க அரசியலை மேற்கொள்வதற்குரிய அழுத்தத்தைக் கொடுப்பதில் தமிழ்ச் சிவில் அமைப்புகளும் புத்திஜீவிகளும் பத்தியாளர்களும் பல்கலைக்கழக சமூகத்தினரும் தவறி விட்டனர். பதிலாக இதைச் சுட்டிக்காட்டிய தரப்பினரை விலக்கம் செய்வதிலேயே இந்தத் தரப்பினர் குறியாக இருந்தனர். இன்னும் அப்படித்தான் உள்ளனர். கெட்டாலும் பரவாயில்லை, எந்தப் புத்திமதியையும் கேட்க மாட்டோம் என்ற பிடிவாதமும் அறியாமையும் இவர்களைச் சூழ்ந்துள்ளது. 2. தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியேற்றத்தையும் புனரமைப்பையும் அரசாங்கமே தனித்து மேற்கொண்டது. அதற்கான செயலணியைக் கூட யுத்தப் பாதிப்பு நடந்த வடக்குக் கிழக்கில் செயற்படுத்தவில்லை. யாரும் இதில் இடையீட்டைச் செய்யவில்லை. இதில் தமிழ்ப் புத்திஜீவிகளும் துறைசார் வல்லுனர்களும் பெரும் தவறிழைத்தனர். இதைப்பற்றி இந்தக் கட்டுரையாளர் மட்டுமே பல தடவை சுட்டிக்காட்டியிருந்தார் மேலும் சிலரும் பேசியுள்ளனர். தமிழ் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் (அரச ஆதரவு – எதிர்ப்பு இருதரப்பும்தான்) எவையும் இதைப்பற்றிச் சிந்தித்ததில்லை. இதனால் தமிழ்ச்சமூகம் பொருளாதார ரீதியாகம் சமூக நிலையிலும் நலிவடைந்து கொண்டே செல்கிறது. குறிப்பிடத்தக்க அளவுக்குப் புதிய தொழில்துறைகள் எதுவும் 15 ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் உருவாக்கப்படவில்லை. இப்போது இந்தப் பிராந்தியத்திலுள்ள தமிழர்களுக்கான ஒரே தெரிவு நாட்டை விட்டு வெளியேறுதல். அல்லது அரச தொழில் வாய்ப்புகளில் சரணடைதல் மட்டுமே. 3. தமிழ்ச்சமூகத்தின் அக – புற முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதில் நேர்மையான வழிமுறைகளை தமிழ்த்தேசியச் சக்திகள் எவையும் உரிய முறையில் கவனப்படுத்திச் செயற்படவில்லை. இதனால் இதை வேறு தரப்புகள் தமக்கிசைவாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதைக்குறித்த சமூகவியல், பொருளியல் ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் குறைந்த பட்சம் தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களாவது பங்களித்திருக்க முடியும். சற்று முயற்சித்திருந்தால், இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதைக்குறித்த ஒரு கவனத்தை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளைச் செய்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால், கள நிலையை பொதுவெளியில் சரியாக முன்வைத்திருக்க முடியும். அது செய்யப்படவே இல்லை. 4. வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் பலமான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. ஏன், சம்பிரதாயமாகக் கூட அது நிகழவில்லை. இன்னும் கடந்த காலத் தவறுகள், பிரச்சினைகளுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் பகைமை நிலையே நீடிக்கிறது. அத்துடன் இன்னொரு தமிழ் பேசும் சமூகத்தினரான மலையக மக்களுடனான அரசியல் உறவையும் வளர்க்கவில்லை. இதனால்தான் தற்போது தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டைத் தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்துக்குள் மட்டும் மட்டுறுத்திப் பார்க்கும் அவலம் நேர்ந்திருக்காது. இதிற்கூட இன்னும் நெருக்கடியே உண்டு. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மட்டுமல்ல, எத்தகைய அரசியல் நிலைப்பாட்டையும் ஒரு முகப்பட்டு எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்தில் கூட ஒருங்கிணைவும் புரிந்துணர்வும் இல்லை. இந்தப் பலவீனத்தைப் புரிந்து கொள்வதில் கூட இன்னும் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைமைகள் உள்ளிட்ட தமிழ்ச்சக்திகள் எவையும் உருப்படவில்லை. 5. எதிர்ப்பு அரசியல் – இணக்க அரசியல் இரண்டுக்கும் இடையிலான அர்த்தப்பாடுகளில் உள்ள குழப்பமாகும். உண்மையில் தமிழ்த் தரப்பு இவை இரண்டையும் அதன் சரியான பொருளில் இங்கே மேற்கொள்ளவில்லை. இங்கே எதிர்ப்பு அரசியல் என்பது, செயற்தன்மையற்ற தனியே வாய்ச் சவாடல் அரசியலாகவும் இணக்க அரசியலானது, சரணடைவு அரசியலாகவுமே சுருங்கிப்போயுள்ளது. இவை இரண்டினாலும் எந்தப் பெரும்பயன்களும் மக்களுக்குக் கிடையாது. மட்டுமல்ல, இவை எந்த வகையிலும் ஒடுக்கப்படும் மக்களுடைய விடுதலைக்குரியவை இல்லை. இதனால்தான் தமிழ்ச் சமூகம் தமிழ் அரசியற் சக்திகளிடத்திலும் அதை வலியுறுத்துவோரிடத்திலும் நம்பிக்கையற்றிருக்கிறது. எவரிடத்திலும் நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பையும் இந்தச் சக்திகளே ஏற்க வேண்டும். வெறுமனே புலம்புவதால் பயனில்லை. கூடவே பகையை மறப்பதற்கான களமும் காலமும் இதுவாகும். எந்த வகையிலும் இலங்கையில் இனிமேல் முரண்பாடுகளை மீளுருவாக்கம் செய்ய முடியாது. அப்படி மீள வளர்த்தால் அதனால் பாதிப்புக்குள்ளானோரே தொடர்ந்தும் பாதிப்பைச் சந்திக்க நேரும். அரசுக்கும் ஆட்சித் தரப்பினருக்கும் அதனால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படாது. அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு நான்கு காரணங்கள் உண்டு. 1. பிராந்திய சக்தியான இந்தியா தொடக்கம் அவுஸ்திரேலியா, யப்பான் மற்றும் மேற்கு நாடுகள் அனைத்தும் இலங்கையின் முரண்பாட்டைத் தணிவு நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றே வலியுறுத்தின – இன்னும் அப்படித்தான் சொல்கின்றன. நல்லிணக்கம், பகை மறப்பு, கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தீர்வை எட்டுங்கள் என்றே எல்லா நாடுகளும் வலியுறுத்துகின்றன. இதைச் செய்ய வேண்டியது அரசாங்கம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பும்தான். முக்கியமாகத் தமிழ்த்தரப்புமாகும். ஆனால், இது நிகழவில்லை. இதனால் இந்த நாடுகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினையில் தமது கவனக்குவிப்பை மட்டுப்படுத்தியுள்ளன. அதாவது இது தொடர்பாக அவை சீரியஸாக இல்லை. எனவே இலங்கை அரசை விடச் சர்வதேச சமூகத்தை நம்பிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கே பாதிப்பும் ஏமாற்றமும் ஏற்படும். 2. செயற்பாட்டு அரசியல் இல்லாதொழிந்து விட்டது. இதனால் அரசின் ஒடுக்குமுறையையும் இனவாத நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் பலமற்றுப் போனது. ஆகவே அரசின் இனவாதச் செயற்பாடுகளை எந்த வகையிலும் மட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அரகலய போன்றதொரு மக்கள் போராட்டத்தை (சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு) மேற்கொள்வற்கு தமிழ்ச்சமூகத்தினால் முடியுமா? முடியாது என்பதே வெளிப்படையான பதில். காரணம், அப்படியான அரசியற் கூருணர்வும் அர்ப்பணிப்பு மனப்பாங்கும் இன்று தமிழர்களிடத்தில் இல்லாதொழிந்துள்ளது. 3. பாதிக்கப்பட்ட மக்களையும் பிரதேசங்களையும் மீள்நிலைப்படுத்துவதற்கான பணிகளைச் செய்வதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றொரு புலுடா தொடர்ந்து விடப்படுகிறது. ஆனால், இதைக் கடந்து பலர் தனியாகவும் கூட்டாகவும் பல விதமான பணிகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். எந்த அரசியற் கட்சியையும் விடத் தனியாட்களாகவும் அமைப்புகளாகவும் செய்து வரும் பணி பெரிது. இதைச் சிவில் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர் சமூகமும் அரசியற் கட்சிகளும் செய்யாது ஒதுங்கின. இதனால் தாம் கையறு நிலைக்குள்ளாகியுள்ளதாகத் தமிழர்களிற் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். இதை எதிர்கொண்டு எழுவதற்குப் பதிலாக தாம் தப்பித்தால் போதும் என்று விலகிச் செல்கின்றனர். 4. தமிழ் மக்கள் சமாதானத்திலும் அமைதித் தீர்விலும் பற்றுக் கொண்டவர்கள். அதையே அவர்கள் நாடுகிறார்கள் என்ற நம்பிக்கை பிற சமூகங்களிடம் வலுப்பெறவில்லை. தாம் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சத்தியம் செய்தாலும் அதை நம்பக்கூடிய சூழல் இன்னும் பிற சமூகங்களிடம் உருவாகவில்லை. இதைப்பற்றிய மீளாய்வும் கள ஆய்வும் மிக அவசியமானது. சமாதானத்திலும் தீர்விலும் மெய்யாகவே எமக்குப் பற்றிருக்குமானால் இந்த ஆய்வைச் செய்து, அதற்கான பரிகாரமும் காணப்பட வேண்டும். இல்லையெனால் இந்த மாதிரி அணிகள், குழுக்கள், பிரிவுகள் என்றே நிலைமை நீடிக்கும். https://arangamnews.com/?p=10777
  6. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்பது - யானைக்கு தீனி ------------------------------------------------------------------------------------------------ கடைசியாக 90ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் சில தடவைகள் தலதா மாளிகைக்கு போயிருக்கின்றேன். பின்னர் ஒரு இருபத்தி சொச்ச வருடங்களின் பின் ஒரு தடவை கண்டி போயிருந்தாலும் மாளிகைக்குள் போகவில்லை. இந்த தடவை குடும்பமே உடன் வந்ததால், உள்ளே போக வேண்டும் என்று முன்னரேயே தீர்மானித்திருந்தோம். 'இலங்கையில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஒரு சின்ன அறிமுக உரையையும் பிள்ளைகளுக்கு ஆற்றியிருந்தேன். இனிமேல் எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் எங்களுடன் சேர்ந்து எங்கேயும் வரா விட்டால், அதற்கான ஒரு பிரதான காரணம் இந்த பயணத்தில் நான் ஆற்றிய சின்ன சின்ன உரைகளாகவும் இருக்கக்கூடும். தலதா மாளிகையின் ஒரு பக்கம் இருந்தது உள்ளே போகும் வழி. முன்னர் நடுவில் இருக்கும் பாதையே உட் செல்லும் வழியாக இருந்தது. நடுவில் இருக்கும் பாதை போய் வருவதற்கென்றே ஒரு தலைவாசலுடன் கட்டப்பட்டும் இருந்தது. பாதுகாப்பு கருதி அதை தடை செய்து வைத்துள்ளார்கள் போல. நாங்கள் உள்ளே போக, அங்கு சோதனையில் நின்ற போலீஸ்காரர்கள் படபடவென்று சிங்களத்தில் சொன்னார்கள். அவர்கள் என்ன சொல்கின்றனர் என்று எனக்கு விளங்கியது. நல்ல நெற்றிப் பொட்டுடன் மனைவி முழித்துக் கொண்டு நின்றார். எது இடம் என்ற அவர்களின் ஒரு கேள்விக்கு மட்டும் நான் யாழ்ப்பாணம் என்று நல்ல தமிழில் பதில் சொன்னேன். மனைவி என்னவாம் என்று கேட்டார். நீங்களும், மகளும் உள்ளே போக முடியாதாம், நீங்கள் இருவரும் கை இல்லாத சட்டைகள் போட்டிருக்கின்றீர்களாம் என்றேன். கை உள்ள சட்டையைத் தேடி ஓடினோம். கண்டி நன்றாகத் தெரிந்த நகரம். எங்கே எந்தக் கடைகள் இருக்கின்றன என்று இன்னும் ஞாபகம் இருக்கின்றது. கடைக்காரர் இதற்கென்றே தயாராக இருந்தார், தலதாவின் உள்ளே போகும் முன் பலர் இந்தக் கடைக்குள்ளே முதல் ஓடிப் போவார்கள் ஆக்கும். எடுத்துப் பரப்பினார் கை உள்ள மேல் சட்டைகளை. இரண்டு வாங்கினோம். எட்டி என்னையும், மகனையும் கீழே பார்த்தார். அன்று அரைக் காற்சட்டை போடாமல், நாங்கள் இருவரும் நீட்டுக் காற்சட்டை போட்டிருந்ததால், கடைக்காரருக்கு அன்றைய வியாபாரம் கொஞ்சம் மந்தம் தான். அன்று மாளிகையின் உள்ளே சரியான கூட்டம். இப்பொழுது தினமும் இப்படித்தானா என்று தெரியவில்லை. பல வெளிநாட்டுப் பயணிகள் மேலேயும், கீழேயும் கலர் கலர் துணிகளை, துண்டுகளைச் சுற்றிக் கொண்டு வரிசைகளில் நின்றனர். உள்ளே ஒரு வரிசை இல்லை, பல வரிசைகள், ஆனால் எந்த வரிசையிலும் நில்லாமல், வெட்டி வெட்டி இலாவகமாக போய்க் கொண்டிருந்தனர் உள்ளூர் வாசிகள். அப்படி படம் எடுக்கக் கூடாது, இப்படி எடுக்கக் கூடாது, பின்பக்கத்தை காட்டக் கூடாது என்ற கட்டுப்பாடுகளால் யூடியூப்பர்கள் அங்கு இல்லை. வரிசையில் நின்று போனதால் அதிக நேரம் எடுத்தது. எல்லாம் பார்த்து முடித்த பின், என்ன பார்த்தோம் என்று பிள்ளைகள் கேட்டனர். ஓரளவு நியாயமான கேள்வியே. பேராதனை பல்கலைக் கழகம் ஒரு அழகிய இடம். பல்கலையின் ஊடே மகாவலி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆற்றின் ஒரு பக்கம் பிரதான பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. மறு கரையில் பொறியியல் பீடம் மட்டும் அமைந்துள்ளது. பொறியியல் பீடத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும் 'வறண்டவர்கள்/காய்ந்தவர்கள்' என்பதால், அவர்களை ஒதுக்கி ஒரு கரையில் தனியே விட்டு விட்டதாக மற்றைய பீட மாணவர்கள் பகிடி செய்வார்கள். இப்பொழுது பல்கலைக் கழகத்தின் உள்ளே பல இடங்களில் வெளியார்கள் அனுமதி இன்றி உள்ளே போக முடியாத வண்ணம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் நண்பன் முன்னரேயே பொறியியல் பீட வாசலில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களையும், வாகனத்தையும் உள்ளே விட்டார். ஜனரஞ்சகமான துறைகள் அல்லாமல் வேறு துறைகளில் பெரும் மதிப்புடன் இருந்த, இருக்கும் ஒருவரை அந்த துறை சார்ந்தோர் அன்றி மற்றவர்கள் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. ஆனால் பேராசிரியர் துரைராஜா அவர்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு. அவர் வாழ்ந்த காலத்திலும், இன்றும் பலரும் அவரையும், அவரது சேவைகளையும் அறிந்திருக்கின்றனர். நான் அவரிடம் நேரடியாக படிக்கவில்லை. அவர் அப்போது யாழ் பல்கலைக் கழகத்திற்கு போய் விட்டார். ஆனாலும் அவர் போட்டிருந்த பாதையிலேயே என் பயணமும், என் போன்ற பல மாணவர்களின் பயணமும் அமைந்தது. அவரின் நினைவாக அவரின் பெயரில் ஒரு செமினார்/மீட்டிங் இடம் ஒன்றை இப்பொழுது பேராதனையில் உருவாக்கியிருக்கின்றனர். அவரின் பெயரில் ஏற்கனவே பல்கலையில் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில், பேராசிரியர் துரைராஜா அவர்கள் இலங்கையின் 'Father of Geotechnical Engineering' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரின் பல படங்களும், விபரங்களும் அங்கே இருந்தன. மிகையில்லாத கூற்றுகள் இவை. பல்கலையின் பல பரிசோதனை, செய்முறை கூடங்களுக்கு நண்பன் கூட்டிச் சென்றான். அப்படியே இருந்தன. எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லாம் முடிந்த பின், எப்படியிருக்குது என்று பிள்ளைகளிடம் கேட்டேன். எல்லாமே மிகப் பெரிதாக இருக்கின்றன, ஆனால் மிகப் பழையவை என்றனர். வெளியில் பல்கலை முழுவதும் நிலத்துடன் உரசும் மரங்கள், தொங்கி விழும் கொடி போன்ற கிளைகள் உள்ள மரங்கள், மஞ்சள் பூக்களை கொட்டும் மரங்கள், பச்சை, மஞ்சள் மூங்கில்கள், வரிசையாக நிற்கும் கற்றாழைகள் என்று இன்றும் அதே அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கிருந்து அடுத்ததாக பின்னவல யானைகள் சரணாலயம் நோக்கிப் புறப்பட்டோம். இங்கு தான் ஆயுர்வேத தோட்டங்களும் இருக்கின்றன. பிரதான வீதியிலிருந்து பின்னவல சரணாலயத்திற்கு போகும் பாதையெங்கும் யானையில் ஏறுங்கள், யானையில் உலாவுங்கள், யானைக்கு உண்ணக் கொடுங்கள் என்ற அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சாரதியும் எங்களிடம் இதைப் பற்றி முன்னரேயே கேட்டு, நாங்களும் அதற்கு சம்மதித்திருந்தோம். அவர் இப்படியான ஒரு இடத்தில் நிற்பாட்டினார். இறங்கி ஓடினார். பின்னர் வந்தவர், இங்கு யானைகளில் ஏறலாம் என்றார். அவரை நாங்கள் ஓட விட்டிருக்கக் கூடாது. நானே இறங்கிப் போய் கதைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாய்கள் என்றனர். நான்கு யானைகள் அங்கிருந்த சிறிய கட்டிடத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடையில் படுத்திருந்தன. நான்கிற்கும் நாலு பெயர்கள் சொன்னார்கள். குமாரி என்ற ஒரு பெயர் மட்டும் தான் நினைவில் இருக்கின்றது. பிள்ளைகளும், அவர்களும் சேர்ந்து ஒரு யானையை ஒரு மாதிரியாக நித்திரையிலிருந்து எழுப்பினார்கள். 'இது என்ன தொல்லை......' என்பது போல அது அசைந்தது. யானை எப்படி ஆட்களை அடிக்கும், யானை தூக்கி எறிந்தால் எப்படி எங்கள் எலும்புகள் முறியும் என்று முல்லைத்தீவில் பெரிய தோட்டங்கள் செய்யும் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு விளங்கப்படுத்தியிருந்தார். யானை துரத்தினால் ஓடித் தப்ப முடியுமா என்று அவரிடம் கேட்டும் இருந்தேன். கஷ்டம் என்று ஒரு சொல்லில் பதில் சொல்லியிருந்தார். யானை முதுகில் ஏற்றி வைத்து, அந்த ஓடையில் ஓடிக் கொண்டிருந்த சுத்த அழுக்கு நீரை தன் தும்பிக்கையால் அள்ளி, சோவென்று வாரி எங்கள் மீது இறைத்தது. யானைப் பாகன் போதும், போதும் என்று சொன்ன பின்பும், யானைகள் நிற்பாட்டவில்லை. 'இனிமேல் எங்கள் மேல ஏறுவீர்களா..........' என்று அவை கேட்டன போல. பின்னர் அந்த ஓடையில் யானைகள் நடந்தன. பின்னர் யானைக்கு நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். இரண்டு யானைப் பாகர்களும் தங்களுக்கும் ஏதாவது தரும்படி கேட்டார்கள். அதையும் கொடுத்தோம். முழுவதும் நனைந்து, களைத்தும் விட்டோம். அங்கேயே உடுப்புகளை மாற்றிக் கொண்டோம். சாரதி அடுத்தது ஆயுர்வேத தோட்டம் என்றார். தோட்டமும் வேண்டாம், மருந்தும் வேண்டாம், நேரே கொழும்புக்கு போங்கள் என்றோம். தோட்டத்திற்கு போவது இலவசம் என்றார். நீங்களே எங்களுக்கு காசு கொடுத்தாலும், எங்களால் இதுக்கு மேல் முடியாது என்றோம். 'அப்ப பின்னவல சரணாலயம்.......' என்று இழுத்தார் சாரதி. பின்னல் திரும்பிப் பார்த்தேன். யாராவது தங்களைக் காப்பாற்ற மாட்டார்களோ என்பது போல இரு பிள்ளைகளும் பின்னால் ஒரு இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் வேண்டாம், கொழும்பிற்கே போவம் என்று அங்கிருந்து கிளம்பினோம். (தொடரும்...........)
  7. இன்றைய மூன்றாவது Play-off Qualifier 2 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் மெதுவான ஆடுதளத்தில் சுழல்பந்துக்கு அடித்தாடமுடியாமல் திணறி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 36 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்லும் என சரியாக கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்கள் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 65 2 நுணாவிலான் 65 3 நிலாமதி 61 4 அஹஸ்தியன் 59 5 கந்தப்பு 59 6 புலவர் 59 7 வீரப் பையன்26 53 8 முதல்வன் 53 9 சுவி 53 10 ஏராளன் 53 11 எப்போதும் தமிழன் 53 12 வாதவூரான் 53 13 கிருபன் 53 14 நீர்வேலியான் 53 15 கறுப்பி 51 16 ஈழப்பிரியன் 49 17 கோஷான் சே 49 @கறுப்பி சுமைதாங்குவதற்கு என்றே போட்டியில் கலந்துகொண்ட @goshan_che யிடம் தனது இடத்தைக் கொடுத்துவிட்டு இரு படிகள் முன்னேறியுள்ளார். பிந்தி போட்டியில் கலந்துகொண்டால் முன்னுக்கு வர சாத்தியம் என நினைத்த @ஈழப்பிரியன் ஐயா இறுதிப் படியை அண்மித்து நிற்கின்றார்!
  8. ஐயோ ஐயோ தின்னாமல் குடிக்காமல் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் வீணா போகுதே.
  9. நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்துதான் அது உன்னை கொத்த வருகிறது. எதிர்த்து நில் ஓடிவிடும்’ என்பேன். அவள் கண்களை விரித்து கேட்பாள். ஆனால் ஒருபோதும் அதை எதிர்க்க மாட்டாள். நான் வேலையை விட்டுவிட்டு அருகே இருந்த கற்குந்தில் இருந்து அவளிடம் பேச ஆரம்பித்தேன். ‘இதோ உன்னை தாக்க வந்தால் நீ அடிக்கலாம். எதற்காக அஞ்சுகிறாய் ?’ என்றேன். ‘அப்பா, சேவலை நான் தொடர்ந்தும் எதிரியாக்க விரும்பவில்லை. நண்பனாக்க விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறினாள். என் சரீரம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. சூரியன் எங்களருகே விழுந்துகொண்டிருந்தது. பிளே வயல்களின் வருடல் காற்று வந்துகொண்டிருந்தது. என் மடியில் தடியோடு மகள் இருந்தாள். என் மூளை காற்றால் பிளக்கப்பட்டு பறப்பது போல இருந்தது. *** தமிழின் நவீன இலக்கியத்தில் போர் பற்றிய பதிவுகள் பலவும் இருக்கின்றன. எண்ணமுடியா நட்சத்திரம் போல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள். போரியல் நாவல் என்றால் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கப்பால்’ அதன் சிறிய பகுதியை ஆரம்பித்து வைத்தது. ஹெமிங்வே யின் படைப்புகளில் விருப்பும் பாதிப்பும் உடைய ப.சிங்காரம் தொடர்ந்து எழுதாமல் விட்டது நமக்கு இழப்பு. அவரைத் தொடர்ந்து ஈழம் 35 ஆண்டுகள் யுத்தத்தில் நனைந்தது. இருந்தும் அங்கிருந்து போரியல் நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகி உள்ளன. அசல் போரை பதிவு செய்யும் நாவல்களாக 1985 வெளியான ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ , 1992 இல் எழுதப்பட்ட ‘போருலா’. , தூயவனின் ‘போரும் மருத்துவமும்’ , குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’ , ‘அப்பால் ஒரு நிலம்’ மற்றும் முதலாம் உலக யுத்தம் பற்றிய ச.பாலமுருகனின் ‘டைகிறிஸ்’ . சுகாஸ் என்ற த. பாலகணேசனால் கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் பற்றிய விடிவுக்கு முந்திய மரணங்கள் முதலாவது போர்பற்றிய பதிவு. இதை எழுதும்போது பாலகணேசனுக்கு வயது 21. 21/11/1992 இல் பலாலி இராணுவமுகாம் தாக்குதலில் 57 பேர் சாவடைந்தனர். அதில் ‘லியோ’ என்ற வீரனும் சாவடைகிறான். அப்போது அவனுக்கு இருபது வயது. அவனது நெஞ்சுப் பையில் ஒரு கையெழுத்துப்பிரதி இருக்கிறது. அதை எடுத்தவர்கள் வாசித்ததும் நெருப்பில் விழுந்த ஈயத்துண்டுபோல் ஆகிவிடுகிறார்கள். மாங்குளத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்குதல் பற்றி தன் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதி பையில் வைத்திருந்தான் லியோ. அந்த நாவலின் முடிவில் ‘மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பு நினைவுகள் இத்தோடு முடிவுறுகிற போதும் அடுத்து சிலாவத்துறை நினைவுகள் என் நெஞ்சில் பாயத்தொடங்குகின்றன..’ என்று முடிக்கின்றான். அவன் சிலாவத்துறை பற்றி எழுத முதல் மரணமடைந்து விட்டான். லியோ எழுத்து உலகுக்கு அவன் தனது பெயரை ‘மலரவன்’ என்று பதிந்திருந்தான். அவனது தந்தை ஒரு மருத்துவர். அத்தோடு மூத்த அண்ணன் வைத்திய கலாநிதி. போரில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு தம்பியின் உடல் சென்றடைகிறது. அதுதான் அண்ணனின் கண்ணீரும் தம்பியின் இரத்தமும் கலந்த இடம். மலரவனின் அழகியலான மொழி, சமூகப்பார்வை, மரங்களுக்காக வடிக்கும் கண்ணீர், காடுகளில் விழி தூங்காதிருந்து வானத்தையும் , நட்சத்திரங்களையும் கண்ணிமைக்குள் அடைத்துப்பார்க்கும் கவிதைப் பார்வை போருலாவை இன்றும் படிக்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அவன் இறந்தாலும் அவனது படைப்பு மனம் ‘போர் உலாவில்’ பேசிக்கொண்டே இருக்கிறது. இந்த சிறிய வயதில் எப்படி இத்தனை அவதாரம் கொள்ள முடிந்தது என்று ஏங்குகிறது மனம். அவனை பார்க்க முடியாது. அவன் எழுதிவிட்டு செத்துப்போனவன். தான் எழுதியது நூலாகும் என்றுகூட அறியாத போராளி. 1990 கார்த்திகை 9ம் திகதி மாங்குளம் இராணுவ முகாமை தாக்குவதற்கு உழவு இயந்திரத்தில் மணலாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். களமுனையை சென்றடைய காடுகளூடாக நீண்ட பயணம். காடுகளுக்குள் மரங்களை வெட்டி குற்றிகளைப்போட்டு அதன் இடைவெளிகளில் மண்ணை நிரப்பி தேவையான இடங்களில் பாதை அமைத்து பயணிக்கிறார்கள். ‘பால்போல தெறித்த வெண்ணிலவை முகில்கள் வெட்டியோடின. விரைவில் அவற்றை கலைத்துவிட்டு நிலவு வெளியே வந்து சிரித்தது’ என்ற வரி மலரவனின் அழகியலுடைய குறியீட்டு மொழியின் வெளிச்சம். ‘எவ்வளவு நல்ல காடு, தாய் மாதிரி இவ்வளவு காலமும் எங்களை காத்தது இதுதானே, இனி எப்ப வரப்போறம் ? ஆவலை அடக்க முடியாமல் கைகளை உயர்த்தி ‘டாட்டா’ காட்டினேன்.’ இரவு வேளையில் போராளிகள் நகர்வை அறிந்து உலங்குவானூர்தி தாக்கத்தொடங்குகிறது. களமுனையை அடைய முதலே போர் வந்து சிவப்புப் பழங்களை அனுப்பி உயிர் கேட்கிறது. அத்தடையை நீக்கிக் கடந்தால் அலம்பில் ஊர் எங்கும் தென்னந்தோப்புகள். ‘பெரிய குடை போன்ற தென்னைகள் சுமக்க முடியாமல் தேங்காய்களைச் சுமந்த வண்ணம் காற்றில் தலைவிரிகோலமாக தள்ளாடுவது பார்க்க பயமாக இருந்தது’ இரவுப் பயணத்தில் தடுமாறிய உழவு இயந்திரம் பிரண்ட போது பெட்டிக்குள் நசிந்து போன வசந்தனின் ஒரு கையும் காலும் மோசமாக பாதிக்கப்படுகிறது. அருகே இருந்த கிராமத்து வீட்டில் அவசர வைத்தியம் நடகக்கிறது அங்கிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ‘ அக்கா நீங்கள் சரியா எங்கட மூத்தக்கா வித்தி மாரி’ என்கிறான். களப்படுக்கையில் குருதியில் தோய்ந்திருக்கும் தோழனைப்பார்த்து ‘தேங்காய்‌ நெய்விளக்கு உருகி உருகி அழுதது.’ என்ற எழுத்தின் நுண்மை மனதின் அறையெங்கும் புகுந்துவிடக் கூடியது. முள்ளியவளை கடந்து முறிப்பு குளக்கட்டில் ஓய்வெடுக்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், ‘நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனிங்கள் ?’ ‘ஏன் சுடவேணும் அவங்கள் பாவமல்லோ?’ ‘அப்ப.. எங்கட மாமாவை பெரியப்பாவை ஏன் சுட்டவங்கள் ?’ களமுனையில் பசியோடும் , தூக்கம் இன்றிய கண்களோடும் இருக்கும் போராளிகளை கண்ட தாய்மார் தங்கள் வீடுகளில் இருந்து உணவுடன் படையெடுத்த போது ‘அருவி பாய்கிறதா ? அன்பு பாய்கிறதா ? தெரியவில்லை’ என்று நெகிழ்ந்த சொல்லில் மலரவன் மொழியை மலர வைக்கிறான். மாங்குளம் இராணுவ முகாமை மறைந்திருந்து பார்வையிடுவதும் , அதன் இராணுவத்திட்டமிடல்களும் எந்த நேரத்திலும் இராணுவச் சூட்டுக்கு ஆளாகும் நிலையில் நடைபெறுகிறது. மயில் ஒன்று தூரத்தே அகவியது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னத்தொடங்கின. மாரி கால மழையில் உப்பிக்கிடந்த வெள்ளைச்சுவர்களில் சிறிது சிறிதாய் பொத்தான்கள் இடப்பட்டிருந்தன. கூரையூடாக வானத்தின் நிர்வாணம் தெளிவாய்த்தெரிந்தது.’ முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் மாங்குளத்தின் படத்தை மலரவனின் எழுத்து மனதில் வரைகிறது. அவர்கள் தாக்குதலுக்கு நேரடி உறுதிப்படுத்தல்களை மேற்கொள்ள 40 மீற்றரை கடக்க 40 மைல் சுற்றிவரவேண்டிஇருந்தது. தோழர்களின் இழப்போடும் கரும்புலி வீரன் போர்க்கின் சக்ககைவண்டித்தாக்குதலோடும் மாங்குளம் போராளிகளிடம் வீழ்கிறது. விமானங்கள் சகடை, புக்காரா, பைற்ரர் போராளிகளை குண்டுகளால் சல்லடை போட்டபோதும் மனதில் இருந்த அவர்களின் பலம் இயந்திரங்களை வென்று நிலத்தை மீட்கிறது. ‘மனிதன் உணவுக்காக மனிதனை கொல்லவில்லை. ஆக்கிரமிப்புக்காக கொல்கிறான்’ என்ற மலரவனின் ஏக்கம் மனித மூளையின் இருட்டான முரண்பாட்டுச்சிக்கலை கேள்வி கேட்கிறது. நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது. வாசகனை தாக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது ? எத்தனை மானுட வலி நிறைந்தது ? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது. ஓர் போராளி இறந்த செய்தியை அவன்வீட்டுக்குச் சென்று தாயிடம் மரணச் செய்தியை சொல்லும் போராளிகளின் மனதையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அடிக்கடி மனம் போர்க் காலங்களில் சிந்திப்பதுண்டு. மலரவனின் வீட்டுக்கு அச்சத்தோடு சென்ற போராளிக்கு வேறு விதமான அனுபவம் கிட்டுகிறது. அழுது கொண்டிருந்த தாய் போராளிகளை கண்டாலும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்துவந்து கொடுக்கிறார். அது வங்கிக்கணக்கு. மலரவன் பிறந்தபோது தந்தை அவன் பெயரில் இட்ட பணம் லச்சங்களாக பெருகி அதில் இருந்தது‌ என்று பின்னுரையில் சு.ப தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார். என்‌ மனம் மலரவனை‌ இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பாரத்தை புன்னகையோடு சுமந்திருக்கிறான் ? அத்தனை மலர்களின் வாழ்வும் அர்த்தமற்றதா ? என்று அங்கலாய்த்தபடி‌இருந்தது. *** மகள்‌ ‘சேவல் வருகிறது’ என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள்‌ என்னிடம்‌ ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது. ‘மகளே, உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்‌ இதை நீ எங்கே‌ கற்றுக்கொண்டாய் என்றேன்?’ தமிழிலும் பிரெஞ்சிலுமாக அவள் இப்படிச்சொன்னாள், ‘அப்பா, என் பள்ளியில் என்னை செயிம் , மக்சிம் , மரியா ஆகியோர் விளையாட்டுக்கு சேர்ப்பதில்லை. நான் போனால் விரும்பமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நான்‌ இருந்தால் எழுந்து சென்றுவிடுவார்கள். ‘ ‘ஓ..என் செல்லமே நீ ஏன் மடம் லுனாவிடம் சொல்லவில்லை ?’ ‘இல்லை அப்பா. அப்படி சொன்னால் மடம் லுனா அவர்களை புனி செய்தால் அவர்கள் மேலும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்’ ‘அப்படி என்றால் உன்னோடு‌ யாரும் விளையாடமாரட்டார்களா ?’ ‘இல்லை. மற்றவர்கள் அவர்களோடு விளையாடுவதால் என்னை சேர்க்க மாட்டார்கள். ஆனால் நான் இப்போது தனியே ‌விளையாடுவேன். ஒருநாள் அவர்கள் எனக்கு அமி ஆவார்கள். அப்போது நான் சேர்ந்து விளையாடுவேன். ‘உனக்கு வருத்தமாக இல்லையா ?’ ‘இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள். ௦௦௦ அகரன் பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். https://akazhonline.com/?p=7333
  10. "பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!" முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம். 1] lowliness of mind, humility, பணிவு 2] inferiority of rank ; கீழ்மை 3] poverty, எளிமை ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம். ‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில் தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். தாழ்மையைப் பற்றி சமயங்கள் என்ன கூறுகின்றது என்று பாருங்கள்: 'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' - இஸ்லாம். 'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' - அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம். 'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' -பகவத் கீதை. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12) 'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்'- சமண மதம். இப்படி எல்லா சமயங்களும் கற்பிக்கும் தாழ்மை, எமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற எல்லா தடைகளையும் குறைகளையும் இலகுவாக வென்று விடலாம் என்பதே உண்மை. “மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய” என்பது தொல்காப்பிய நூற்பா.(தொல். பொருளியல். 31) இல்லறம் நிகழும்போது, மனைவி தலைவனிடத்தில் காரணம் பற்றியோ அல்லது காரணத்தைக் கற்பித்துக் கொண்டோ ஊடுதலும், ஊடலைத் தணிக்க நாயகன், தன்னுடைய தலைமைப் பண்புக்கு மாறாக, அவளடியில் பணிதலும் [தாழ்தலும்], அவன் அவ்வாறு பணிந்த [தாழ்ந்த] போது, நாயகி அச்சமும் நாணமுமின்றி நாயகனின் பணிதலை [தாழ்தலை] ஏற்றுக் கொள்வதும் தலைவன் தலைவி இருவர்க்கும் உரிய என்பது இந்நூற்பாவின் கருத்து. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  12. உங்கள் சந்ததியே ஏறாமாட்டார்கள் என்று நினைக்கிறேன்😛
  13. இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான். அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை. சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!
  14. இரண்டு இனங்கள் தத்தமது கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்து சமமாக மதிப்பளித்து நடக்கும் போது நீங்கள் சொல்வது சரியாகலாம். ஆனால் இன்று இது ஒரு திசை மாற்றாக அல்லது மதத்திணிப்பாக பார்க்கப்படுவது தவிர்க்க முடியாதது. நன்றி.
  15. கோலிய‌ தெரிவு செய்த‌தால் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும் பின‌லில் புள்ளிய‌ இழ‌க்க‌ கூட்டி க‌ழிச்சு பார்த்தா கோஷானுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு மேல‌ நிப்பேன் நிலாம‌தி அக்காட‌ முத‌ல‌மைச்ச‌ர் நாட்காலிய‌ க‌ல்யாணி பிடித்து விட்டா😁...................................... இன்னும் இர‌ண்டு நாளில் ஜ‌பிஎல் திருவிழா முடியுது எப்ப‌வும் இல்லாம‌ ப‌ல‌ போட்டியில் 200ர‌ன்ஸ்ச‌ தான்டின‌து இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான் ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌தும் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான்......................இந்த‌ ஜ‌பிஎல் ம‌ற்ற‌ ஜ‌பிஎல்ல‌ விட‌ முற்றிலும் மாறு ப‌ட்ட‌து............................................................
  16. பிழையை உட‌ன‌ திருத்தி விட்டேன்..............................க‌ட‌சியா ப‌திந்த‌ உற‌வு ஒருவ‌ர் தான் பின்னுக்கு😜..................................... கோஷான் தான் க‌ட‌சி இட‌ம்..........................
  17. பிரான்சிலை பாண் சுட்டவர் இலங்கை போய் ரணிலின் செல்லப்பிள்ளையாய் இருந்திட்டௌ வந்தவர்.. கில்மிசா கண்டால் வரச்சொல்லி மாமனைத்தேடிவிட்டு...கடைசியில் ரணில் அங்கிளிடம் சரணடைந்தார். இப்ப இவர்..எப்ப லங்கா போவாரோ...ரணிலுக்கே ரசம் வைத்துக் கொடுப்பாரோ.. வாழ்க நம்மினம்
  18. யாழ் பெண்ணுக்கு மனித உரிமைகளுக்கான விசேட விருது! தென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டின், மனித உரிமைகளுக்கான குவாங்ஜு விருதினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுகந்தினி மதியமுதன் பெற்றுள்ளதுடன் தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளம் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக சுகந்தினி மதியமுதன் திகழ்வதாக புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிகழ்வு கடந்த 19ஆம் திகதி தென்கொரியாவில் நடைபெற்றது. சுகந்தினியின் செயல்பாடுகள் மே 18 இன் உணர்வோடு நெருக்கமாக இணைந்திருப்பதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும் இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை தென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை முழுமையாக ஆதரிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383914
  19. இதில் அடையும் சந்தோசம் இருக்கிறதே ...அளப்பரியது....முற்றுப்புள்ளி...3 தடவை போடுகின்றேன்..
  20. கடந்த வருடம் இந்தநேரம் யாழ்ப்பாணத்தில் நின்றேன். மனைவியின் தங்கையின் மகன்(15 வயது)லைற்று பார்க்க போவோமா என்று அலுப்பு கொடுக்க சரி வா போவோம் என்று மோட்டார் சைக்கிளில் ஆரியகுளம் போய் சுற்றி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையம் என்று பல இடங்களையும் பார்த்தோம். நிறைய கூட்டமாகவே இருந்தது.ஆச்சரியமாகவே இருந்தது. என்னைப் போலவே பலரும் வந்திருப்பார்கள் என எண்ணினேன். வீடுவந்து படுத்து அடுத்தநாள் ஒருபக்க கன்னம் வீங்கிவிட்டது. அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று ஆளாளுக்கு வீடே ஒரு வைத்தியசாலையாகி எல்லோரும் டாக்ரராகிட்டாங்க. அதிலிருந்து எழுந்துவர 15 நாட்களாகி விட்டது. ரொம்பவும் கஸ்டப்பட்டுப் போனேன். இதுவேற தொற்றும் என்று என்னை ஒதுக்கியும் வைச்சுட்டாங்க. வீட்டுக்கு யாரும் வந்தாலும் கிட்ட வராதைங்கோ தள்ளி நில்லுங்கோ வாற சனத்தையம் பயப்புடுத்தி அட்டகாசம் பண்ணிட்டாங்க.
  21. விடுப்புப் பார்ப்பதற்கும்.. விரும்பிப் போவதற்கும் வித்தியாசம் உள்ளது. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு இராணுவம் விடுப்புக்காட்ட அதை.. வேடிக்கை விடுப்பு பார்க்கப் போகின்றனர் வேலைவெட்டி இல்லாது வெளிநாட்டுக் காசில் வாழும் தமிழர்கள்.
  22. விடுதலைப்புலிகள் சும்மா சிங்களவர்களைக் கொல்லவில்லை. ஒன்றில் ஊர்காவல் படை என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்ற சிங்களவர்களை தாக்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு வந்த சிங்களவர்களை தாக்கினார்கள்.. சிங்கள முப்படை பொலிஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்களை தாக்கினார்கள். தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்கள் வடக்குக் கிழக்கில் சிங்களப் படைகளும் ஊர்காவற்படையும் செய்த படுகொலைகளின் பழிவாங்கல் மட்டுமே. சிங்களப் படைகள் 2 இலட்சம் தமிழர்களைக் கொன்றிருந்தால்.. புலிகள் ஒரு 2000 சிங்களவர்களை தான் கொன்றிருப்பார்கள். அதிலும் பல சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தாக்குதல்களில்.. தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த இழப்புக்கள். இதற்கும் திட்டமிட்டு இன அழிப்பு நோக்கில் சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளும் படைகளும் கொன்ற தமிழர்கள்..ஈடாக மாட்டார்கள்.
  23. கடந்த காலங்களில் சரியாக விளையாடா விட்டாலும் இந்த போட்டியில் வெற்றிகள் அள்ளிக் குவிக்கும் என எண்ணுகிறேன்.
  24. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA OMA 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL USA 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு A: Team Pld W L IND Select IND IND IND 4 3 1 PAK Select PAK PAK PAK 4 4 0 CAN Select CAN Select CAN 4 0 4 IRL Select IRL Select IRL 4 1 3 USA Select USA Select USA 4 2 2 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) A1 <- Choose PAK or enter your preferred Team A1 PAK #A2 - ? (1 புள்ளிகள்) A2 <- Choose IND or enter your preferred Team A2 IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு B: Team Pld W L ENG Select ENG ENG ENG 4 4 0 AUS Select AUS AUS AUS 4 3 1 NAM Select NAM Select NAM 4 0 4 SCOT Select SCOT Select SCOT 4 2 2 OMA Select OMA Select OMA 4 1 3 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) B1 <- Choose ENG or enter your preferred Team B1 ENG #B2 - ? (1 புள்ளிகள்) B2 <- Choose AUS or enter your preferred Team B2 AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு C : Team Pld W L NZ Select NZ NZ NZ 4 3 1 WI Select WI WI WI 4 4 0 AFG Select AFG Select AFG 4 2 2 PNG Select PNG Select PNG 4 0 4 UGA Select UGA Select UGA 4 1 3 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) C1 <- Choose WI or enter your preferred Team C1 WI #C2 - ? (1 புள்ளிகள்) C2 <- Choose NZ or enter your preferred Team C2 NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு D : Team Pld W L SA Select SA SA SA 4 4 0 SL Select SL SL SL 4 3 1 BAN Select BAN Select BAN 4 2 2 NED Select NED Select NED 4 1 3 NEP Select NEP Select NEP 4 0 4 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) D1 <- Choose SA or enter your preferred Team D1 SA #D2 - ? (1 புள்ளிகள்) D2 <- Choose SL or enter your preferred Team D2 SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 D1 A2 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 C2 B1 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 A1 C1 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 D2 B2 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 D1 B1 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 C2 A2 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 D2 A1 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 B2 C1 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 B1 A2 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 D1 C2 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 A1 A1 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 D2 C1 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8 சுற்று குழு 1: Team Pld W L A1 Select A1 A1 A1 3 2 1 B2 Select B2 Select B2 3 1 2 C1 Select C1 C1 C1 3 3 0 D2 Select D2 Select D2 3 0 3 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) 1A <- Choose C1 or enter your preferred Team 1A C1 #அணி 1B - ? (2 புள்ளிகள்) 1B <- Choose A1 or enter your preferred Team 1B A1 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8 சுற்று குழு 2: Team Pld W L A2 Select A2 A2 A2 3 3 0 B1 Select B1 B1 B1 3 2 1 C2 Select C2 Select C2 3 1 2 D1 Select D1 Select D1 3 0 3 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) 2A <- Choose A2 or enter your preferred Team 2A A2 #அணி 2B - ? (1 புள்ளிகள்) 2B <- Choose B1 or enter your preferred Team 2B B1 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) WI - A1 Semi Final 1 1A vs 2B 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) IND - 2A Semi Final 2 1B vs 2A இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி WI - A1 உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) WI 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CAN 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kholi 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jos Buttler 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) END 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shamar Joseph 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Nicholas Pooran 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI
  25. அப்பு! இனித்தான் காட்சிகள் ஆரம்பம்...தனகிற வேலையெல்லாம் வைக்கப்படாது 😎
  26. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது. உருத்திரகுமார் ஏற்கனவே ஒரு கையாளாகாத ஆள் என்று நிரூபித்தவர். இனிமேல், தான் ஒரு பொம்மை என்று நிரூபிப்பார். அம்புட்டுதே. 😏
  27. World Pictures · Suivre · 9 itinéraires de train les plus dangereux au monde.. * lien en 1er commentaire
  28. இயற்கையை சீண்டியது போதும் ச.சேகர் காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியாகியும், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவை தொடர்பில் அக்கறை இல்லையா என்பதைப் பற்றியே கேட்கத் தோன்றுகின்றது. ஆம், அண்மைக் காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறும் இயற்கை அழிவுச் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால், மனிதன் இயற்கையை எந்தளவுக்கு சீண்டியுள்ளான் என்பது தெளிவாகின்றது. சில உதாரணங்களாக டுபாயில் கடந்த மாதம் ஏற்பட்ட கடும் மழை, 1940 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அந்நாட்டில் மழைவீழ்ச்சி பதிவு செய்வது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதிவாகியிருந்த மிகவும் அதிகூடிய மழைவீழ்ச்சி 24 மணி நேரத்தினுள் பெய்திருந்தது. விமான நிலையம் உட்பட, நாட்டின் பிரதான வீதிகள், குடியிருப்புகள் அனைத்துமே வெள்ளத்தில் மூழ்கின. அந்நாட்டில் வடிகான் அமைப்பு முறையாக இன்மை இதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தாலும், ஒரு வருடத்தில் பெறப்பட வேண்டிய மழைவீழ்ச்சி, ஒரே நாளில் பெய்துத் தீர்த்தமை உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, பிரேசிலின் தென்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வார காலப்பகுதிக்கு மேலாக பெய்த அடைமழை காரணமாக அங்கும் பெருமளவு உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு பகுதியை அடை மழை வாட்டி எடுக்க, மறுபுறம், ஆசிய பிராந்திய நாடுகளில் கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இலங்கை உட்பட, வியட்நாம், தாய்லாந்து அடங்கலாக இந்த வெயிலின் கடும் வெப்பத் தாக்கத்தை உணர முடிந்தது. வெப்பநிலை மனித உடலுக்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு 45 பாகை செல்சியசுக்கு அப்பால் பதிவாகியிருந்தது. இலங்கையிலும், வட பிராந்தியத்தில் அகோர வெயில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், தென்பகுதியில் காலி முதல் அம்பலங்கொட வரையான கரையோரப் பகுதியில் கடல்நீர் நிலத்தினுள் ஊடுருவும் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. வருடாந்தம் இந்த காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றமை வழமையாக இருந்தாலும், இம்முறை அதன் தாக்கம் அதிகரித்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வெப்பத்தின் தாக்கம் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் மழை வீழ்ச்சியும், அதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் தாக்கமும், சேதங்களும் அதிகமாக இருக்கும். மலைநாட்டுப்பகுதியில் மண்சரிவுகள் தவிர்க்க முடியாத சம்பவங்களாக இருக்கும். இவ்வாறு தொடர்ந்து அசாதாரணமான முறையில் காலநிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, நீண்ட கால அடிப்படையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஏன் இவ்வாறான அசாதாரண மாற்றம் ஏற்படுகின்றது? எல்-நினோ, லா-நினோ என பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், அவை ஏற்படவும் மனிதனின், இயற்கையை சீண்டும் செயற்பாடுகளே காரணமாகின்றன. நிலக்கரி எரிப்பில் ஆரம்பித்து, காடழிப்பதுடன், நீரோடைகளை மறித்து, அவற்றை நிரப்பி கட்டிடங்களை அமைப்பது முதல், பிளாஸ்ரிக் கழிவுகளை உருவாக்குதல் வரை என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். புவி வெப்படைவது அதிகரிப்பதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகின்றது. புவியின் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகள் உருகி, அவை கடல் நீருடன் கலந்து, கடல் நீர்மட்டம் அதிகரிப்பதும், புவி வெப்பச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதிகாரத்திலுள்ளவர்களும், தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இவ்வாறான இயற்கையுடன் சீண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை காண முடிகின்றது. அண்மைக்காலத்தில் அவ்வாறு நடந்தேறிய ஒரு சம்பவத்துக்கான உதாரணமாக, மரம் வெட்டுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூழல்சார் செயற்பாட்டு அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்ட போது, அமைச்சருக்கு நெருக்கமான நபர் ஒருவர் “ஒட்சிசனை உண்ண முடியுமா?” என கேள்வி கேட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி, பலர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இவ்வாறு உயர் மட்டத்திலிருக்கும் அதிகாரிகள் முதல் இந்த சூழல் மாசு, இயற்கையுடன் சீண்டுதல் போன்ற விடயங்கள் பற்றி போதிய அறிவின்மை தெளிவாகின்றது. சுற்றாடல் அமைச்சர் என ஒருவர் காணப்பட்டாலும், அந்த அமைச்சினால் சூழலை பாதுகாக்க எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. வெறுமனே இங்கு குப்பை கொட்டினால் அபராதம், இது வனாந்தரப் பகுதி, உட்பிரவேசிக்கக் கூடாது, எதிர்கால சந்ததிகளுக்காக இந்த வளங்களை பாதுகாக்க வேண்டும் என ஆங்காங்கே அறிவுறுத்தல் பதாதைகள் மாத்திரம் நிறுவுவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போதுமானதாக இல்லை. ஒவ்வொரு தடவையும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது, மனித உடலினால் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பநிலை நிலவும் போது, உயர்ந்த பகுதிக்கு செல்வது, தற்காலிகமாக தஞ்சமடைவது, வாயு குளிரூட்டிகளை பயன்படுத்துவது, நகரங்களை அண்மித்து வசிப்பவர்களாயின் அருகாமையிலுள்ள வாயு குளிரூட்டப்பட்ட அங்காடிக்கு அல்லது பல்பொருள் விற்பனை நிலையத்துக்கு சென்று குளிர் காற்று வாங்குவது போன்ற பாதிப்புகளிலிருந்து தம்மை உடனடியாக பாதுகாத்துக் கொள்ளும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றனறே தவிர, இவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்பதை உணர்ந்து செயலாற்ற மறுக்கின்றனர். மறுபக்கத்தில் வியாபார நிறுவனங்கள். இலாபமீட்டும் நோக்கில் இயங்குகின்றனவே தவிர, பெயருக்காக தாம் சூழலில் அக்கறை காண்பிக்கின்றோம், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் என தெரிவித்து செயற்பட்டாலும், உண்மையில் உற்பத்திச் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களினால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இல்லை என்பதே உண்மை. இதை எந்த பல்தேசிய நிறுவனமும் பகிரங்கமாக மறுத்ததாக இல்லை. அவ்வாறு வியாபார செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களினால் ஏற்படும் சூழல் பாதிப்பை கண்காணிப்பதற்கு விதிமுறைகள் உறுதியானதாக இல்லை. குறிப்பாக இவ்வாறான நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுகள், வெப்ப வெளியேற்றம், அபிவிருத்தி எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் விஸ்தரிப்புகள் போன்றன நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காலநிலை தாக்கத்துக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. நெருப்பை தீண்டினால் சுடும் என்பது தெரியும். அதனால் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதுபோலத்தான் இயற்கையும், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும், சூழலில் தாக்கம் செலுத்தி, இயற்கையின் சீற்றத்துக்கு வித்திடுகின்றது. தொழில்நுட்ப விருத்தி எனும் பெயரில், மனிதன் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி, இயற்கையுடன் ஒன்றித்துப் போவதாக தெரியவில்லை. இதில் துரிதமாக மாற்றம் ஏற்படாவிடின், எதிர்வரும் காலங்களில் இதை விட மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இயற்கையை-சீண்டியது-போதும்/91-337233
  29. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சிம்பன்சி நடாலியா ஈன்றெடுத்த குட்டி பிறந்து 14 நாட்களில் இறந்து போனது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 23 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடாலியா என்ற பெண் சிம்பன்சி குரங்கு தன் குட்டியை இழப்பது இது இரண்டாவது முறை. ஸ்பெயினில் இருக்கும் வலென்சியா நகரில் உள்ள உயிரியல் பூங்காவான 'பயோபார்க்’-இல் (Bioparc), நடாலியா கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில், ஒரே இரவில், அந்தச் சிம்பன்சிக் குட்டி மிக விரைவாக பலவீனமடைந்து இறந்துபோனது. "சிம்பன்சிக் குட்டி ஏன் இறந்தது என்பதற்கான சரியான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அதன் தாய் நடாலியாவுக்கு போதுமான பால் உற்பத்தி இல்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்று பயோபார்க்கின் இயக்குனர் மிகெல் காசரேஸ் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். 21 வயதான சிம்பன்சி நடாலியா, தன் குட்டி இறந்ததிலிருந்து, அதன் உடலை தன்னுடனேயே வைத்துக் கொண்டது. தன் குட்டியைப் பிரிய விரும்பாததால், கடந்த மூன்று மாதங்களாக எங்கு சென்றாலும், தன் குட்டியின் உயிரற்ற உடலை கூடவே சுமந்து செல்கிறது. "நடாலியா தன் குட்டியின் இறந்த உடலை எப்போதும் கூடவே வைத்துக் கொண்டிருக்கிறது. சிம்பன்சிகள் வாழ்வியலில் இது ஒரு இயல்பான நடத்தை தான். மிருகக்காட்சிசாலை அல்லது காடுகளில் வசிக்கும் பெண் சிம்பன்சிகள் சில சமயங்களில் தங்கள் இறந்த குட்டியைக் கூடவே சுமந்து செல்வது வழக்கம்," என்று கால்நடை மருத்துவ நிபுணர் காசரேஸ் விளக்குகிறார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,உயிரியல் பூங்கா ஊழியர்கள் இயற்கையான உடல் சிதையும் செயல்முறையில் தலையீடு செய்யவில்லை உணர்ச்சிப்பூர்வமான சிம்பன்சிகள் பெண் சிம்பன்சிகள் தங்கள் உயிரற்ற குட்டிகளைப் பிரிய முடியாமல், பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவற்றின் உடலை நான்கு மாதங்கள் வரை சுமந்து செல்லும் என்று கூறப்படுகிறது. "இது எல்லா சமயங்களிலும் நடக்காது. ஆனால் எப்போதாவது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சிம்பன்சிகள் இறந்த குட்டியை சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு கூடவே வைத்துக் கொள்ளும். அல்லது, மிகவும் அரிதாக, நடாலியா போன்ற மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சிம்பன்சிகள் சில மாதங்கள் வரை தங்கள் குட்டியின் உடலைச் சுமந்து கொண்டிருக்கும்," என்று பயோபார்க் இயக்குநர் விவரித்தார். நடாலியா, இறந்த தன் குட்டியைச் சுமந்தபடி சுற்றுவதை மிருகக்காட்சி சாலைக்கு வரும் பார்வையாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், சிலர் இதுகுறித்து விசாரிக்கின்றனர், சிலர் கோபமடைகின்றனர். பார்வையாளர்களின் பல வகையான எதிர்வினைகளை ஊழியர்கள் சந்திக்கிறார்கள். பட மூலாதாரம்,REUTERS "குட்டி இறந்த ஆரம்ப நாட்களில் அது ஒரு பச்சிளம் குட்டி என்பதையும், அது இறந்து விட்டதையும் பார்வையாளர்களால் தெளிவாகக் காண முடிந்தது. நடாலியாவின் செய்கையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். பலர் அனுதாபத்தை வெளிப்படுத்தியதை நாங்கள் கவனித்தோம். சிலர் அதன் மீது மரியாதையையும் வெளிப்படுத்தினர்," என்கிறார் காசரேஸ். சில வாரங்களில் இறந்த சிம்பன்சி குட்டியின் உடலில் இயற்கையான சிதைவு நிலை தொடங்கியது. மேலும் இதனால் நடாலியாவுக்கு எந்த உடல்நல பிரச்னையும் ஏற்படாமல் ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். தன் குட்டியைப் பிரிய நடாலியா தயாராகி, படிப்படியாகப் பிரிந்து செல்ல அனுமதிக்கும் வரையில் மிருகக்காட்சிசாலை அதன் உடல்நலத்தை கவனித்துக் கொள்வதை உறுதி செய்கிறது. 'நடாலியாவிடம் இருந்து குட்டியைப் பிரிக்க மனமில்லை' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பயோபார்க் சிம்பன்சி குழுவில் தற்போது ஆறு பெரிய சிம்பன்சிகளும் இரண்டு குட்டிகளும் உள்ளன "நடாலியாவிடம் இருந்து இறந்த குட்டியின் உடலைப் பிரித்தெடுப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஏனென்றால் நடாலியா ஏற்கனவே 2018-இல் ஒரு குட்டியை இழந்தது. அந்த சமயத்தில் அது சில நாட்களிலேயே அதிலிருந்து மீண்டது. ஆனால், இம்முறை நடாலியா மீண்டு வரவில்லை. இயற்கையான சூழலில் வாழும் பிற விலங்குகளைப் போலவே, வலென்சியா பயோபார்க்கில் உள்ள சிம்பன்சிகளும் மிகவும் நேசமான மற்றும் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறது," என்று காசரேஸ் நடந்ததை விளக்கினார். " நடாலியாவின் குட்டி இறந்து போன ஆரம்ப நாட்களில், அதன் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் நெருக்கமாக அதை சுற்றி அமர்ந்து கொண்டனர். அதன் பின்னர் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டனர் . இந்த செயல் பார்ப்பதற்கு மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது, மனிதர்கள் மத்தியில் நடக்கும் துக்கம் அனுசரிப்பு போலவே இருந்தது. இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலை,” என்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மற்ற சிம்பன்சிகள் தங்கள் வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டன. ஆனால் நடாலியா தன் குட்டியின் உடலை தன்னோடு வைத்து கொள்ள முடிவு செய்தது. மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, நடாலியாவின் முடிவை மதித்து அதன் போக்கில் விட்டனர். ஒருவேளை நடாலியாவிடம் இருந்து குட்டியின் இறந்த உடலைப் பிரித்தால், நடாலியா ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டிருக்கும். "நடாலியா உட்பட சிம்பன்சிகள் அனைத்தும் எப்போதுமே குழுவாக ஒன்றாக இருக்கும். எனவே, இறந்த குட்டியை அப்புறப்படுத்த, தாய்க்கு மயக்க மருந்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டால், நாங்கள் நிச்சயமாக நடாலியாவின் குடும்பத்தின் பல உறுப்பினர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும்," என்கிறார் பயோபார்க் இயக்குநர். "எங்களிடம் இருக்கும் மற்றொரு பெண் சிம்பன்சி, அதாவது நடாலியாவின் சகோதரிக்கு, ஒரு குட்டி உள்ளது. மயக்க மருந்து கொடுப்பது குட்டிக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே நாங்கள் அதைச் செய்ய முடியாது. இதுபோன்ற சம்பவங்களை ஏற்கனவே பார்த்த மிருகக்காட்சி நிபுணர்களின் கருத்து படி இதை நடாலியாவின் போக்கில் விட்டுவிடுவது நல்லது என்று கருதுகின்றனர்,” என்றார். 'மரணமும் வாழ்வின் ஒரு பகுதி' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நடாலியாவின் நிலையை அறிந்த பார்வையாளர்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர் இன்று நடாலியா தனது அன்றாட நடவடிக்கைகளைச் சாதாரணமாகச் செய்கிறது. முன்பை விட அதன் உடல்நிலை தேறி விட்டது. இத்தனை மாதங்களாக இறந்த குட்டியின் உடலைத் தன் அருகில் வைத்திருப்பதால், மற்ற சிம்பன்சிகளைப் போல நடாலியாவுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படவில்லை. "இறந்த குட்டியின் உடல் சிதைந்து வருவதால் அது மற்ற விலங்குகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வயதான விலங்குகளின் உடல்நிலையை நாங்கள் கண்காணித்து வருகிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், குட்டியின் உடல் மிகவும் சிதைந்து விட்டது. இது ஒரு இயற்கையான செயல்முறை. அதிர்ஷ்டவசமாக, சிம்பன்சிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அவை மிகவும் ஆற்றல் வாய்ந்தவை," என்று காசரேஸ் விளக்குகிறார். "தேவைப்பட்டால், மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தலையிட்டு குட்டியை அப்புறப்படுத்தலாம். ஆனால் நடாலியாவின் சொந்த நலன் கருதி இயற்கையான சூழ்நிலையை ஒருங்கிணைக்க முன்னுரிமை அளித்துள்ளனர். இயற்கையான அடர்ந்த காடுகள் போல அல்லாமல் மிருகக்காட்சிசாலையில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இருக்கும், ஆனாலும் இங்கு உள்ள சிம்பன்சிகள் வளர்ப்பு விலங்குகள் அல்லது செல்லப்பிராணிகள் போன்று வளர்க்கப்படாது. அவை இயற்கையான போக்கில் வளரும்,” என்றார். "சிம்பன்சிகள் போலவே மற்ற விலங்குகள் மத்தியிலும் இவ்வாறு இயற்கையாகவே நிகழ்கிறது. மற்ற உணர்வுப்பூர்வமான விலங்குகள், பெரிய குரங்குகள், பபூன்கள், யானைகள், விலங்குகள் ஆகியவற்றிலும் இதுபோன்ற செய்கை காணப்படும். பொதுவாக மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகள், தாய் மற்றும் குட்டிகள் மத்தியில் வலுவான உறவு இருக்கும் விலங்குகள், மேம்பட்ட குடும்ப நடத்தையுடன் இருக்கும் விலங்குகள் ஆகியவை சில சமயங்களில் இறந்த குட்டிகளை கூடவே வைத்திருக்கும் செய்கையில் ஈடுபடும்,” என்று காசரேஸ் சுட்டி காட்டுகிறார். "மிருகக்காட்சிசாலையில் சிறிய விலங்குகள் மற்றும் அழகான குட்டிகள் மட்டும் கொஞ்சி விளையாடுவதில்லை. அங்கு துக்கமும் இருக்கும். மரணமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், விலங்குகளுக்கும் இது பொருந்தும்,” என்றார். இறந்த குட்டியை நடாலியா சுமப்பது பார்வையாளர்களை வியக்க வைத்தாலும் சிலர் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் என்ன நடந்தது என்பதற்கான பொருத்தமான விளக்கங்களை வழங்கி வருகின்றனர். "ஊழியர்கள் சூழலை விளக்கும்போது பெரும்பான்மையானவர்கள் அதைப் புரிந்து கொள்கின்றனர், அவர்கள் அனைவரும் குட்டியை இழந்த துக்கத்தில் இருக்கும் ஒரு தாய்க்கு அனுதாபத்தையும் மரியாதையையும் காட்டுகின்றனர்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cd11d74rp88o
  30. நீண்ட ஒரு காலப்பகுதிக்கு பின்னர் ஒரு முக்கியமான நபர் வந்தது மக்களினதும் போராளிகளினதும் ஆத்மாக்களின் நிறைவேறா ஆசையாகும் .இனியாவது ஒரு முன்னேற்றம் வருமா ?
  31. நல்லா பொடி வச்சு எழுதினபடியால்...பொடியன்தான் என்பதை ஒரு 5 தடவை எனக்குள் கேட்டுக்கொண்டேன்...நம்புங்கோ... நான் ஆராச்சியாளன் இல்லை அய்யா...என்னை விட்டுவிடுங்கோ..
  32. ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்: கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன. https://www.eelammusic.com/popular-tracks https://tamileelamsongs.com/a-z-eelam-songs/ https://telibrary.com/albums/ https://trfswiss.com/alubm.php https://songs.tamilmurasam.com/norway-3/ https://eelasongs.com/
  33. உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . Posted on May 14, 2024 by சமர்வீரன் 68 0 உரிமைக்காக எழு தமிழா- ஐரோப்பிய ஒன்றிய முன்றலில். 24 யூன் 2024. நெதர்லாந்து . – குறியீடு (kuriyeedu.com)
  34. இளையராஜா ஒரு சகாப்தம். அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமிதம் எனக்கு இருக்கின்றது. அவரின் இசைச் சாதனைகள் அளப்பெரியது. வார்த்தைகளும் பாடல் வரிகளும் இல்லாமல் இசை பயணம் செய்த படம். https://www.facebook.com/reel/1092014695210357
  35. அவ‌ங்க‌ள் இன்னும் ப‌ல‌ நாட்டை இணைக்க‌ போகின‌ம் பிரிக்ஸ்சுக்கை அதில் ஈரானும் இணைய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு நெட்டோ அமைப்பை போல‌ இவ‌ர்க‌ளும் த‌ங்க‌ட‌ அமைப்பை பெரிப்பிக்கினம் உற‌வே ஈரான் அதிவ‌ரின் ம‌ர‌ண‌த்துக்கு ர‌ஸ்சியா த‌ன‌து நாட்டின் தேடும் ப‌டைய‌ உட‌ன‌ அனுப்பி வைச்ச‌து ஈரான் அதிவ‌ரின் ம‌ர‌ண‌த்துக்கு இந்தியா த‌ன‌து நாட்டு கொடிய‌ அர க‌ம்ப‌த்தில் ப‌ற‌க்க‌ விட்ட‌வை............................. புட்டினின் அறிக்கையில் தான் த‌ன‌து ச‌கோத‌ர‌னை இழ‌ந்து விட்டேன் என்று க‌ண்ணீர் ம‌ல்க‌ அறிக்கை வெளியிட்டு இருந்தார் ஈரான் அதிப‌ரும் புட்டினும் நேரில் ச‌ந்திச்சு இருக்கின‌ம் உக்கிரேன் போர் ஆர‌ம்பிச்ச‌ கால‌ க‌ட்ட‌த்தில் அல்ல‌து அத‌ற்க்கு முத‌லாக‌ கூட‌ இருக்க‌லாம் உற‌வே............................................
  36. நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி அண்ணா ப‌ஞ்சாப் பின‌லுக்கு வ‌ந்து KKR இட‌ம் தோல்வி அடைஞ்ச‌து இந்த‌ மைச்ச‌ நான் நேர‌டியா பார்த்தேன் ஆனால் ம‌ற‌ந்து விட்டேன் கிரிக்கேட் இணைய‌த‌ள‌த்தில் போய் பார்த்தேன் நீங்க‌ள் சொன்ன‌ ப‌டியே இருக்கு🙏..........................................
  37. மீரா மிகுந்த ஆர்வம் இருந்தும் ஏன் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை? உலகபோட்டியில் கலந்து கொள்ளலாமே?
  38. ஜீ சிரிப்பு செய்திகளில் தலைப்பு செய்தியாக வராத நாளே இல்லை போல........முன்னர் 'மிஸ்டர் எக்ஸ்' என்று ஒரு வகை பகிடிகள் வந்து கொண்டிருக்கும். அது போல இவை 'மிஸ்டர் ஜீ' பகிடிகள்..........
  39. மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் : தனித்திரு சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மாபெரும் மிகப் பெரிய்ய்ய்ய்ய விலையைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைப் பற்றித்தான் கொஞ்சம் கதைக்கலாமெண்டு வந்தனான். இப்பதிவை முறையாக என் பெற்றோரை வசைபாடியபடி இறைவணக்கத்துடன் துவங்குவது சிறப்பாய் அமையும். நமது முதல் உலகம் வீடல்லவோ? என் அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் விநோதமான விதிவிலக்கு அவள். எவ்வித காழ்ப்புணர்வும் இன்றி எப்படி ஒரு மனுஷியை எல்லோர்க்கும் பிடித்துப் போகும்? இந்தப் புதிரின் புரியாத விடை அவள். கோபத்தைக் கூட அமைதியினுள்ளோ புன்னகையினுள்ளோ ஒளித்து வைத்த வருத்தமாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும் அவளுக்கு. இதுவரை ஒருவர் கூட அவளிடமோ அவளைப் பற்றியோ சினந்து பேசியதில்லை. வள்ளுவனைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக அப்பா மட்டும் அவ்வப்போது அவளிடம் சிறு சிறு விஷயங்களுக்குக் கோபம் கொள்வார்கள். அது இயற்கைதானே? எனவே அதுவும் கணக்கில் வராது. அப்பா, தங்கை, நான் – நாங்கள் அனைவரும் நாத்திகர்கள் என்பதில் அவளுக்கு எப்போதும் மனத்தடையோ வருத்தமோ கிடையாது. “நான் உங்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காண்பித்திருக்கலாம். ஆனால் பிற ஆத்திகவாதிகள் போல் அல்லாமல் நீங்கள் பூசிக் கொள்ள விரும்பும் நிறத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை உங்களிடமே வழங்கியதில் எல்லா பெருமையும் அவளையே சாரும்” என்று அப்பாவே சொல்வார்கள். இவள் எந்த கிரகத்திலிருந்து வந்தாள்? முதல் குற்றவாளி இவள்தான். அடுத்த முக்கிய குற்றவாளியான அப்பாவின் crime rate விண்ணை முட்டி ஆக்ஸிஜன் தேடி அலைகிறது. எவ்வளவு தைரியம், பெண் பிள்ளை என்றும் பாராமல் கருப்பின் மீதும் சிவப்பின் மீதும் ஈர்ப்பை உண்டாக்க? பகுத்தறிவு, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட பெரிய பெரிய கருத்தாக்கங்களைத் தெள்ளிய முறையில் எடுத்துரைப்பதென்ன; ‘நறுக்’, ‘சுருக்’ என தம் வாதங்களின் மூலம் வியக்க வைப்பதென்ன; வீட்டிலே ஆகச் சிறந்த சனநாயகச் சூழலை உருவாக்கித் தந்ததென்ன; தோழர்கள் உலகைக் காண்பிப்பதென்ன; நிரம்பிய நூலுடைய கொள்கைச் சான்றோரின் கலந்துரையாடல்களுக்கு அழைத்துச் செல்வதென்ன… என்ன? என்ன? என்ன? போதாக் குறைக்கு இலக்கிய ரசனையை எங்களுக்கே தெரியாமல் எங்களுள் ஏற்றியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்தவர்களுக்குப் புற உலகைப் பற்றிய நிதர்சனத்தையும் கூறி வளர்க்கத் தெரியாதா? சொல்லித்தான் வளர்த்தார்கள்… நான்தான்… நான் பார்த்த உலகில் உள்ளவர்கள் தான் முழு உலகிலும் பெரும்பாலானவர்களாக நிறைந்து இருப்பார்கள் என்னும் கற்பனையை ஆசையாக மாற்றி நம்பத் துவங்கினேன். அதற்காக என்னைத் தவறென்று சொல்லாதீர்கள். எனக்கு இப்போது கோபத்தைக் காட்ட இடம் வேண்டும். ‘பிங்க் ஜிமிக்கி எங்கு கிடைக்கும்?’, ‘தேங்காய் நாரில் மாங்காய் டிசைன் போட்ட மயில் கழுத்து நிற சேலை எப்போது கடைக்கு வரும்?’ போன்ற உருப்படியான(!) கவலைகளை மட்டுமே ஊட்டி வளர்த்திருந்தால் இவ்வுலகில் ‘இருத்தல்’ தொழில் சுலபமாகியிருக்கும். ப்ச்! வளர்ப்பு சரியில்லை…! ஏதோ ‘மாற்றுக் கருத்து’ என்றாலே எனக்கு ஒவ்வாமை என நினைத்துவிட வேண்டாம். ‘இடியாப்பம் பிடிக்கும்; பிடிக்காது’ என்ற அளவில் இருப்பதன் பெயர்தான் மாற்றுக் கருத்து. ‘இடி அமீன் பிடிக்கும்; பிடிக்காது’ என்பதில் வருவதல்ல. ‘இடி அமீன் ஏன் வெறுக்கப்பட வேண்டும்?’ என்பதெற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி சூழல் பணிக்கிறதெனில் சுற்றம் சரியில்லை என்றுதான் பொருள்! எவ்வளவு எடுத்துக் கூறியும் “இல்லையில்லை. நீ எவ்வளவு சொன்னாலும் இடி அமீனை வெறுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. அவன் பக்க நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கூறுவோரையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு செல்ல வைக்கும் வாழ்க்கை மீதுதான் என் மொத்த கோபமே. இடி அமீனுக்குப் பதில் அதிமுக்கியமான வாழ்வியல் விஷயங்களை, ஒரு மனிதனை அடிப்படையாக வரையறுக்கும் பண்புகளை கருத்தாக்கங்களை வைத்து யோசிக்கவும். ‘வாழ்க்கை இப்படியே போயிருமா?’ என ஒரு கடுப்பு வரும் இல்லையா? பொருத்தமான நிகழ்வொன்றை விவரிப்பது ஏதுவாய் அமையும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நேரிட்டது. பந்தியில் உணவருந்த அமர்ந்தோம். முதல் வாய் உள்ளே சென்ற போது அருகில் துன்னுட்டு இருந்த துன்னியார் ஒருவர், “புதுசா நான் கட்டிட்டு இருக்குற வீட்டுல பெருசா ஒரு டைனிங் டேபிள். பக்கத்துல ரொம்ப பெருசா ஒரு ஜன்னல். ஹால்ல 70 இஞ்ச் டிவி,…. சுக்கு காப்பி, மிளகு ரசம்….” என்று அடுக்கிக் கொண்டே சென்றார் பெருமிதம் பொங்க. இதற்குள் எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி இருந்த மாமா ஒருவர் “வீட்டைக் கட்டிப் பாருன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க. எனக்கெல்லாம் விழி பிதுங்கிடுச்சு. அப்போல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒருத்தர் இல்ல தூக்கி விடுறதுக்கு, உன்னையும் சேர்த்துதான். எல்லாத்தையும் மீஈஈஈறி நின்ன்னு காமிச்சேன். உக்காந்து காம்போசிசன் எழுதுனேன்…. நடந்து போய் கமர்கட் வாங்குனேன்” என்று அவர் பங்குக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தார். ஒரு நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தும் ‘பேதைதன் கையொன் றுடமை பெற்ற’தைப் போல் வாழ்ந்து பணி ஓய்வு பெற்று இருந்திருந்து திறவோன் பருவத்தின் மத்திம கால வயதில் முதன்முதலாகத் தாம் கட்டும் வீட்டைப் பற்றி இவ்வளவு சிலாகித்த அந்தச் சுக்குக் காப்பி சித்தப்பாவிடம் ‘பயனில சொல்லாமை’ பற்றி எடுத்துச் சொல்வது வராஹ பகவானின் முன் முத்துகளைச் சிந்துவதாகும். அந்த மாமாவின் பின்னணி தெரியாமல் இதைக் கேட்டால் ஏதோ உத்வேகம் தரும் கதை போல என யாரும் நம்பிவிடுவர். குடும்பத்தில் முதல் ஆளாக வேலைக்குச் சென்றவர். அதுவும் நல்ல வேலை… பின்னர் வணிகக் காந்தமாகும் முயற்சியில் மும்மரமாகக் குதித்துக் கால் இடறியதில் அன்பை முறிக்கும் சுறாக்களின்(!) காந்தவலையில் சிக்கி முக்கி மீண்டு வந்துதான் ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ இப்பேருரை. காதுகள் பாவமில்லையா? தன் ‘அறிவார்ந்த(!)’ சோதனை முயற்சிகளின் மூலம் ‘ஏதங்கொண்டு ஊதியம் போக’ விட்டு இன்மையில் உழன்ற கதையை glorify/romanticize செய்து சொல்லிக் கொண்டிருந்ததில் அனைவரின் தலைமுடி கைமுடி எல்லாம் ‘parade salute!’ என எழுந்து நின்றன. ‘சீரல் லவர்கண் படின்’ ‘முந்திரிமேற் காணி மிகுவேதல் கீழ்தன்னை இந்திரனா எண்ணு’ம் இவர்களின் உளுத்துப் போன அறுவையுரையால் அறை முழுதும் ஊசல் வாடை கமழ்ந்தது. நானும் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவும் சிரித்து வைக்கவும் முடியாத, கடுப்பை வெளிப்படுத்தவும் இயலாத ஒரு கலவையான பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இதில் வேறு அந்த மாமா என் அம்மாவிடம், “நானா கண்டு தாக்குப்பிடிச்சேன். என்னக்கா?” என அவளின் ஆமோதித்தலை எதிர்ப்பார்க்க அவளும் “பின்ன? சும்மாவா?” என்று சொல்லிச் சமாளிக்க, நானோ யாருக்கும் கேட்காதவாறு அவளின் காதில் “கூச்சமே இல்லேல?” என்றேன். சிரித்தாவாறே முகத்தை வைத்துக் கொண்டு “வாய மூடிட்டுச் சாப்பிடு” என்று கடுகடுத்தாள். “அது எப்பிடிம்மா முடியும்?” என்று கொடூரமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்தேன். இதற்குள் பெரியப்பா ஒருவர் “ஏன் காத கடிக்கா எம்மவ?” எனக் கேட்க “மோர் வேணுமாம்” என்று சொல்லி வைத்தாள் அம்மா. ஒரு அரை கிலோமீட்டர் தூரத்து உறவு அண்ணன் ஒருவன் மோர் கொண்டு வந்தான். உடனே அறைக்கு இன்னும் மணம் சேர்க்கும் பொருட்டு அங்கிருந்த அவனது அம்மா, “இவன் பக்குவம் பொறுப்பு அறிவு யாருக்கும் வராது… ஆனை பூனை அல்லே பராக்….” என்று நீட்டி முழக்கிய போது அவ்வார்த்தைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என நிச்சயம் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். கல்லூரியில் வகுப்புகளுக்கு வெளியேதான் அறிவு கிட்டும் என ஆழமாக நம்பும் ஞானி அவன். ஒவ்வொரு தாளையும் குறைந்தது நான்கு முறையாவது எழுதுவதைப் பொறுப்பாகச் சலிக்காமல் ஏற்றுச் செய்து வந்தான். ஒரே நேரத்தில் பல இளைஞிகளுடன் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் நிலக்கடலை வியாபாரம் பார்ப்பதில் வல்லவன். இப்போது சம்பந்தமே இல்லாத துறை எனினும் நன்றாகச் சம்பாதிக்கிறான் என்று அவனுக்காக ஆறுதலடையவோ மகிழவோ கூட அனுமதிக்க மாட்டான். உடனே சுக்கு நூறாக அவனுள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து ஒட்ட மறுக்கும் ஆங்கிலத்தையும் இவனே வலுக்கட்டாயமாக அடித்து உடைத்த தமிழையும் கொண்டு திருவாய் மலர்ந்தருளி ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்ற இருவேறு உலகத்து இயற்கைக்கு வாழும் உதாரணம் தான் என நிரூபிப்பான். அத்தை ஒருத்தி அம்மா காதில், “இவன் இருந்த இருப்புக்கு வேலையா கெடைச்சுருக்கும்? கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில்ல ஒரு தேங்காய் விடலை போட்ட கையோட மரகநெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் துளசித் தண்ணி வாங்கி ஒரு மடக்கு குடிச்சுட்டு கரெக்ட்டா ரெண்டு துளிய உச்சந்தலையில தெளிச்சு விட்டுட்டு நேரே சாயிபாபா கோவிலுக்குப் போய் நாலரை சுத்து சுத்தீட்டு வடமேற்கு பக்கமா திரும்பி நின்னு ஒரு கையை மேலே தூக்கி இன்னொரு கையால் கால் சுண்டு விரலைப் பிடித்தவாறே வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும்னு அவனுக்குப் பரிகாரம் சொன்னேன். அத செஞ்ச பொறவு தான் உடனே ரெண்டு வருசம் கழிச்சு வேலை கெடச்சது. ஒங்களுக்கும் ஏதாவது வேணும்னா கேளுங்க” என்றார். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க” என்று அந்த அத்தையிடம் சொல்லிவிட்டு அம்மாவின் இந்தக் காதில் நான் “ஒவ்வொரு சாமியும் மத்த சாமி பாத்துக்கும்னு விட்டதுல கொஞ்சம் தாமதாமாகிட்டு போல” என்றது அத்தைக்குக் கேட்டுவிட்டது போலும். என்னை முறைத்துக் கொண்டே இஞ்சிப் பச்சடியை வத்தக்குழம்பு என நினைத்து சோற்றில் போட்டுப் பிசைந்துவிட்டார். “எதேச்சையா வந்த இந்த விசேஷ வீட்டோட டைனிங் ஹால்ல தற்செயலா நுழைஞ்சேன் ஃப்ராண்ட்ஸ்… இங்க பாத்தீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க ஃப்ராண்ட்ஸ்… அதுவும் வலது கையால எடுத்து வாயாலயே சாப்பிடுறாங்க ஃப்ராண்ட்ஸ்… இங்க ஒரு ஆன்டி காரத்துல கதறுரததான் பாத்துட்டு இருக்கீங்க….” என்று கி.பி இராண்டாயிரமாம் காலகட்டத்தைச் சார்ந்த குழந்தை ஒன்று கைபேசியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. திடீரென ஒரு அங்கிள் அரசியல் பேசத் துவங்கினார்கள். உலக அரசியல் வழியாக உள்நாட்டு அரசியலுக்குத் தாவி உள்ளூர் அரசியலை அடைந்து… என அங்கும் இங்கும் சுற்றி கடைசியில் காவிக்குக் காவடி எடுத்தார்கள். “அடச்சை! Toilet paper” என அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் என் நினைவிற்கு வந்து சென்றது. அப்பாவும் அருகிலிருந்த தோழரும் அவரைப் பரவச நிலையிலிருந்து நிதானமாக இறக்க முற்பட்டார்கள். அவரோ ‘பவர்ர்ர்ர்ர்’ என இன்னும் இன்னும் உக்கிரத்தை நோக்கிச் செல்ல இருவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அமிழ்தத்தை இங்கு கொட்டக்கூடாது என்றுணர்ந்து கை கழுவ அங்கணத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க’ என்று புளிசேரியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்பாவின் வார்ப்பு நான் என்றறிந்த அங்கிள் “நீ என்ன சொல்லுத?” என்று என் வாயைக் கிண்டினார்கள். “எந்தக் கட்சிக்கும் ஆதரவா நான் பேசல. எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கலாம். ஆனா எதேச்சதிகாரத்தை ஒழிக்குறதுதான் இப்போ முக்கியம். அதனால இந்தக் குறிக்கோளோட மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு வாக்கு அளிக்குறதுதான் சரியா இருக்கும்” என்று பதில் மொழியவும் நான் எந்தக் கட்சியைச் சொல்கிறேன் என்பதை உணர்ந்து என்னை அக்கட்சியின் பரப்புரையாளராகப் பாவித்து என்னைச் சாடத் துவங்கினார். ‘வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொள்’ளும் முயற்சியில் பரிதாபமாகத் தோற்று நின்றேன். இன்னொரு அங்கிள் வந்து “இந்த நாடு குட்டிச்சுவரா போறதுக்கே ஒங்கள மாதிரி ஆட்கள்தான் காரணம்” என்று காவி அங்கிளைப் பார்த்துச் சொல்ல ‘ஒளி தெரிகிறது’ என்று என் மனம் பூரிக்கத் துவங்கவும் படாரென்று ஒரு நடிகரின் நடுநிலைமைக் கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார். ஒளி வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது! மூன்றாவதாக அண்ணாவா அங்கிளா என்று குழப்ப வைத்த ஒரு நபர் வந்து அவ்விருவரையும் பார்த்து “இப்படியே பேசிட்டு இருந்தா விளங்கிரும். ஒங்க ஆளுக்கு ஊர் சுத்தவே நேரம் இல்லை. ஒங்காளு பேச்சுக்கு கோனார் உரை கூட கெடைக்காது…” என்றார். ஆகா! என்னை ஆதரிக்க இவர் திருவுளங்கொண்டு விட்டார் என நான் எண்ணுகையில் என்னை நோக்கித் திரும்பி “இவ ஒரு கருப்பு சிவப்பு சங்கி” என்று அதிர்ச்சியடைய வைத்தார். பிறகு சாந்தமான குரலில் கூறினார் “புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்குற எங்க நடிகருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல”. அவர் தலைவராவது புரிபடாமல் பேசுவதில்தான் வல்லவர்; இவர் தலைவர் வாயையே திறக்காமல் பேசுவதில் வல்லவர். ஹ்ம்ம்ம்!!! பிரமாதம். என்னைச் சொன்னது கூட வலிக்கல மை டியர் அங்கில்ஸ்! அட!அட!அட! இதுக்குப் பேசாம நான் பேசாமலே இருந்துருக்கலாம்! பீற்றல் பேர்வழிகளுக்கும் ‘அறிவுஜீவி’ நோய்க்குறியால் (syndrome – கூகிள் இப்படித்தான் சொல்லுச்சு!) வாடும் வகையறாக்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களையும் ஆழ்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு ‘பாயாசம் சாப்பிடுங்க ஃப்ராண்ட்ஸ்’ என சொல்லச் சொல்லி மனது அரித்துக் கொண்டிருந்ததை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “எனக்குச் சோறே வேண்டாம். ஆள விடுங்கடா” என எழலாம் என்று பார்த்தால் பந்தி முடியவில்லை. என் இரு பக்கமும் ஒருவரும் எழவில்லை. என்னாலும் எழ முடியவில்லை. பாதியிலேயே எழுந்தால் மரியாதைக் குறைவு, இங்கிதமின்மை என்பார்கள், ஏதோ இவ்வளவு நேரமும் அவர்கள் அதைக் கடைபிடித்ததைப் போல. தப்பிக்க இயலாமல் கடைசி வரை இருந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம். ‘என் உலகம் வேறு; இது ஏதோ தற்காலிகச் சூழல்’ என்னும் பட்சத்தில் ஒரு நாழிகை பந்தியில் இதையெல்லாம் சிரித்துக் கடந்து விடலாம். ஆனால் சகிப்புத்தன்மையை அளவற்ற சோதனைக்கு உள்ளாக்கும் இந்த ஒரு நாழிகை பந்தியை முழு வாழ்க்கை காலத்திற்கான குறியீடாகக் கருதிப் பாருங்கள். வாழ்க்கை நம்மை எவ்விடத்தில் எச்சூழலில் இருத்தி வைக்கும் எனத் தெரியாது. அப்போது நமக்கே நமக்கானவர்கள் பந்தியில்/வாழ்க்கையில் சில வரிசை தள்ளி இருக்கும் சூழ்நிலை அமையலாம். பணியினாலோ தொலைவினாலோ அவர்களுடனான ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் போகலாம். அச்சமயத்தில் ‘நாணாமை நாடாமை நாரிமை யாதொன்றும் பேணாமை’ ஆகியவற்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் (ஓட்டை உடைசல் பண்ட) பாத்திரங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிற போது ‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை’ எல்லாம் சுக்கு நூறாகிவிடும். என் உலகை அப்படியே என்னோடு நகர்த்திச் செல்வது சாத்தியமற்றதாகிப் போகும் போது, சூழ்ந்திருப்போரிடம் எனக்கானவர்களைத் தேடித் தோற்கும் வேளைகளில் மனம் ஆங்காரத்தோடு கர்ஜிக்கும் – ‘தனித்திரு!’. தேர்ந்து தெளிந்த கேண்மையே சில சமயம் கழிவிரக்கத்தையோ ஏமாற்றத்தையோ தரும் போது ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதலால்’ வந்தோர் அன்னாருடன் வரும் இலவச இணைப்புகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இரு மனிதர்களுக்கு இடையில் பிணைப்பு என்பது அன்பு, புரிதல், மரியாதை, கருத்து ஒற்றுமை என ஏதோ ‘ஒன்றன்’ அடிப்படையில் உருவாகும். அப்படியான ஒன்று கூட இல்லாமல் திறந்த வீட்டில் நுழைந்த சிங்கங்களாக நம் உலகில் வளைய வருபவர்கள்தாம் இலவச இணைப்புகள். ஒரு மனிதரை நம் வட்டத்தினுள் மனதார வரவேற்கும்போது அவரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட அவரைச் சார்ந்த – அவ்விய நெஞ்சத்தவர்கள், நெஞ்சின் துறவார் துறந்தார்போல் பேசுபவர்கள், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதைகள், கல்லாத மேற்கொண்டொழுகுவோர், ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் பிரிவினர், உலகத்தார் உண்டென்ப தில்லென்போர் ஆகியோரும் மிக இயல்பான நிகழ்வாக உடன் வந்து அமர்வதுதான் வாழ்க்கையின் அசட்டுத்தனமான வடிவமைப்பு! தம்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டிருக்கும் காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லாமல் போகும் கையறுநிலையில் பொறையுடைமை தீர்ந்து போகும் தருணத்தில் மனநலத்தையும் உடல்நலத்தையும் காக்கவேண்டி ‘சிற்றினம் அஞ்சி தனித்திரு என் மனமே!’ மாண்டார்நீ ராடி மறைந்தொழு மாந்தர்களே! பெரியார் துணைகோடலுக்கு வழி விடவும்! சோம. அழகு தழ்https://puthu.thinnai.com/2024/05/20/தனித்திரு/
  40. மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1379132
  41. நீங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள். பல வருடங்களின் முன்னர், ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நல்ல ஒரு எழுத்தாளராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார். உலகில் உள்ள நல்ல சிறுகதைகளில் 500 ஐயும், நல்ல நாவல்களில் 50 ஐயும் முதலில் வாசிக்க வேண்டும் என்று அந்தப் பதிலில் சொல்லியிருந்தார். சிறந்த சிறுகதை, நாவல் வரிசைகள் பலரால், எஸ் ரா, ஜெயமோகன் மற்றும் சில விமர்சகர்களால் (க நா சு போன்றோர்) போன்றவர்களால், வெளியிடப்பட்டும் இருந்தன. அந்த வரிசைகளில் உள்ள சில படைப்புகள் இணையத்திலேயே கிடைத்ததால், வாசிக்க கூடியதாகவும் இருந்தது. ஆனால் பலவற்றை வாசித்த பின் பெரும் பிரமிப்பும், பயமுமே உண்டானது, எவ்வளவு பெரிய படைப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர், இதுவல்லவோ எழுத்து என்று.
  42. @theeya வணக்கம். உங்களுக்கும் துடுப்பாட்டத்தில் ஆர்வம் இருந்தால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்கலாம். நன்றி.
  43. இன்றைய இரண்டாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிடையே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் இறுதியில் ஒரு ஓவர் மீதமிருக்க 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது. முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அடுத்த Qualifier 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது. ஒருவருமே இன்று விளையாடிய அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்காததால் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்! இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை ஆனால் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 64 2 அஹஸ்தியன் 62 3 கல்யாணி 62 4 நுணாவிலான் 62 5 புலவர் 62 6 வீரப் பையன்26 56 7 முதல்வன் 56 8 சுவி 56 9 ஏராளன் 56 10 கந்தப்பு 56 11 எப்போதும் தமிழன் 56 12 வாதவூரான் 56 13 கிருபன் 56 14 நீர்வேலியான் 56 15 ஈழப்பிரியன் 52 16 கோஷான் சே 52 17 கறுப்பி 48
  44. “போர் உலா” இதுவரை படிக்காதவர்களுக்கு: https://noolaham.net/project/729/72885/72885.pdf
  45. சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள். பிளே வயல்களின் = கோதுமை வயல்களின் அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால் எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள் கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.
  46. இன்று புதிது புதிதாக வரும் கம்யூட்டர் processor எல்லாம் முன்னிருந்தவையை விட சின்னதாகவும், ஆனால் வினைத்திறன் அதிகமாக இருப்பவையாகவும் வருகின்றன. அப்படித் தான் மனித மூளைக்கும் நடந்து கொண்டிருக்குதோ என்று நினைத்த படியே கட்டுரையை வாசித்தால்.......... மூளையின் அளவு மட்டும் குறையவில்லை, மூளையின் வினைத்திறனும் குறைந்து கொண்டே வருகின்றது என்றும் சில ஆராய்ச்சிளார்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது..... மூளையின் அளவு சிறிதாவற்கு Climate Change ஒரு காரணமாக இருக்கலாம் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனாலும் எல்லாவற்றுக்கும் அதையே ஒரு காரணமாக சொல்வது சில வேளைகளில் ஒரு பகிடியாகவும் தெரிகின்றது.....😀
  47. இதுவே சிறீ லங்கன் எயார் லைன்ஸ் என்றால் நீங்களே அடித்து துவைத்து கொடியில் காயப்போட்டு இருப்பீர்கள்.
  48. கூடியிருந்து தண்ணியடிச்சு போட்டு...வெறியேறின பிறகு அரசியல் கதைக்க வெளிக்கிட்டு நடந்த சம்பவம் எண்டு தெரியுது. 😂 இதை ஊடகங்கள் ரஷ்ய-உக்ரேன் பிரச்சனைமாதிரி பிரிச்சு மேய்ஞ்சிருக்குதுகள் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.