Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்17Points38770Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்6Points87990Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்6Points19134Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/01/24 in all areas
-
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
உ.த. பரீட்சையில் சாதித்த மீன் வியாபாரியின் மகள்! (மாதவன்) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ். மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார். க.பொ.த. உயர்தரம் (2023) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி மேலும் தெரிவித்ததாவது, எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3 ஏ சித்திகளை பெற்றேன். நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன். அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும். தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(ப) https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கலைத்துறையில்_சாதித்த_மீன்_வியாபாரியின் மகள்!7 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நன்றி பையா .....நான் இங்கினேக்கதான் திரிகிறன்.........! 23......கோஷான் சே..... இது ஒரு சிறப்பான இலக்கம் 2= மூன் .....3= மாஸ்டர் .....அதனால் இவர் முதல் மூன்றுக்குள் வர இன்றுவரை கிரகநிலை சாதகமாய் இருக்கு ........விதிகளை கடந்து மதிலால் ஏறி விழுந்து பின் கதவால் வந்துள்ளதால் முன் கதவடியில் வழிமேல் விழிவைத்து முழித்துக்கொண்டிருந்த சனியின் பார்வையில் இருந்து தப்பி அதிகாரியின் கிருபையால் வரிசையில் சேர்ந்து விட்டார் ........ஆகையால் ஏனையோர் அண்ணாந்து பார்க்கும் நிலையில் அவர் ஏணிமேல் நிப்பார் .........! 😂6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK USA 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) INDIA #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ ENG 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI INDIA IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SL AUS 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG SA ENG 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 INDIA SL INDIA 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS Aus 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG ENG 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS INDIA Aus 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL SL சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) INDIA Select INDIA INDIA AUS Select AUS Select WI Select WI WI SL Select SL Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) WI #அணி 1B - ? (2 புள்ளிகள்) INDIA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK Select ENG Select ENG ENG NZ Select NZ Select SA Select SA SA 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) SA #அணி 2B - ? (1 புள்ளிகள்) ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) WI 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி Eng உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SL 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) woods 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) INDIA 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) TRAVIS HEAD 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) INd82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JOSH HAZLEWOOD 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Archer 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Aus கடைசி பஸ்சையும் விட்டு விட்டு, ஒரு மணத்தியாலம் பிந்தி, வெங்காய லாரியில் ஏறி வந்துள்ளேன். ஏற்றுகொள்ளவும் ஜி @கிருபன். டெம்பிளேட் உதவி 🙏 @ஈழப்பிரியன் அண்ணா.6 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிந்திவந்த @goshan_che போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்😀 வெற்றிக் கனியைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்! யாழ்கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் பங்குபெற்றும் போட்டியாளர்கள்: 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 நீர்வேலியான் 22 கல்யாணி 23 கோஷான் சே4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன் அழுத அழுது ஒரு மாதிரி கோஷானனையும் பங்'கு பற்ற வைத்து விட்டார். ஒரு வேளை கோஷான் முதலாவதாக வந்தால்வழக்குப் பாயும் என்று நினைக்கிறேன்.கறுப்பிதான் ஏமாற்றி விட்டார். எழுதுங்கள் ..... அவர் இரக்கமில்லாதவர் என்று. பாடுங்கள்... இவர் பைத்தியக்காரனென்று.3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இஞ்சைதான் நிக்கிறன்.....கட்டிக்கொண்டு வந்த வடையை அளவு கணக்கில்லாமல் சாப்பிட்டதால வயிறு இன்னும் நோர்மலுக்கு வரரேல்லை......3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உலகக்கிண்ணப் போட்டிகள் அமெரிக்க நேரப்படி 01 ஜூன் 19:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. இன்று சனி (01 ஜூன்) ஒரு போட்டியும் நாளை ஞாயிறு இன்னொரு போட்டியும் நடைபெறவுள்ளன. கீழே உள்ளவை பிரித்தானிய நேரப்படி உள்ளன! யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 19 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் 04 பேர் கனடா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் நந்தன் நீர்வேலியான் கல்யாணி கோஷான் சே கனடா சுவி புலவர் P.S.பிரபா வாத்தியார் முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG எல்லோருமே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆமாம் இந்த திரி தொடங்கியதிலுருந்து,....அது வந்து நானும் பல பல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன் இந்த பலகாரங்களை எப்படி கடத்த்துவது என்ற தொழில்நுட்பம் தெரியாது தரும் பலகாரங்களைகூட ஒன்றை கடித்துவிட்டு வீட்டில் வந்து சாப்பிடுவதுண்டு 🤣🤣🤣🤣 ஆமா இதற்க்கு ஏதாவது கற்கை நெறிகள் உண்டா ??? அல்லது பயிற்சி3 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
3 points
- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
ஒரு வித்தியாசமான கோணத்தில் விடயங்களை அணுகுகிறீர்கள், இதுவும் ஒரு நல்ல கருத்துதான், ஆனால் நடைமுறையில் இலங்கை அரசு மிக தெளிவாக புலிகளை அழிப்பதில்தான் கடந்தகாலத்தில் அக்கறை காட்டி வந்துள்ளது. புலிகள் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொது இந்திய இராணுவம் வெளியேறிய பின் நல்லூர் கோயிலுக்கு சென்ற புலிகளின் தலைவரது துணைவியாரை பின் தொடர்ந்து புலிகளின் தலைவரின் இடத்தினை அறிந்து அவரை கொல்லும் முயற்சி புலிகளால் முறியடிக்கப்பட்டிருந்தது. இரணில் விகிரமசிங்க அவ்வாறு செய்ய மாட்டாரா என தெரியாது, பிரேமதாச புலிகளுக்கு இந்திய இராணுவத்திற்கெதிராக போராடுவதற்காக அனுப்பிய பார ஊர்திகளில் ஒரு பார ஊர்தி முழுவதுமாக புலிகளின் தலைவரின் பிள்ளைகளுக்கான விளையாட்டு பொருள்களை பிரேமதாசா வழ்ங்கியிருந்தார் என கேள்விப்பட்டிருந்தேன். ஒரு பக்கம் நட்புறவு கொண்டாடிக்கொண்டே மறுபுறம் கொல்ல ஆள் அனுப்புவதில் அவர்கள் கில்லாடிகள்.2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முதலிடம் பெற்ற கல்யாணி, இரண்டாமிடம் பெற்ற நுணாவிலான், மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துகள்.👏💐2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍....... இந்த கூட்டத்தில் நாலு விசயம் தெரிந்த மனிதர்களும் இருக்கின்றார்கள்.............2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம். உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய். கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்பாடா.... ஒரு மாதிரி @goshan_che வந்திட்டார். இனி அவர், கொல்லைப்புறத்தில் நின்று கொண்டு நம்மை பாதுகாப்பார். 😂 நாம் ஜாலியாக.... "பொப் கோர்ன்" சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் பார்க்கலாம். 🤣2 points- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
நன்னடத்தைப் பிணை (தண்டனைக் குறைப்பு) முன்னர் ஒரு போதும் குற்றவாளியாகக் காணப்படாத ஒருவருக்கு மட்டும் தான் சாத்தியம். இந்த வழக்கு நடந்த 6 வாரங்களிலேயே "தம்பு" 9 தடவைகள் நீதிமன்ற கட்டளையை மீறினார் என்று பத்தாயிரம் டொலர்கள் இதே நீதிம்ன்றில் அபராதம் கட்டியிருக்கிறார். எனவே, தம்புவின் "நன்னடத்தையை" முன்னிட்டு தண்டனைக் குறைப்பு வராது. ஆனால், சிறைக்கு அனுப்புவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலால் சிறைத் தண்டனை கிடைக்காமல் போகலாம். சிறை சென்றால் கூட இவர் தேர்தலில் நிற்கலாம், வெல்லலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அரசியலமைப்பில் இதைத் தடை செய்யும் எந்த சரத்துகளும் இல்லை.2 points- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
2 points- வேதத்தில் சாதி இருக்கிறதா?
1 pointஇதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது. ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம். எனக்கு மதங்களைப் பற்றிய அறிவிருக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் யாருக்காவது எழுந்தால் அவர்கள் என்மேலான தீர்ப்பை எழுதுவதற்கு நான் உதவத் தயாராய் இருக்கிறேன். எனது கேள்விகள் உறுத்தாமல் இருக்கவேண்டுமானால் என்னைப் பற்றிய தீர்ப்பை எழுதி, ஒரு அடையாளமிட்டு வைத்துவிடுவது அவர்களுக்கு நல்லது. எனக்கு மதங்களைப்பற்றிய அறிவு எவ்வளவு என்பதை எந்த அளவையிலும் சொல்ல விருப்பமில்லை. அதேபோல் சக மக்களின் மீதான அன்பையும் எந்த அளவையிலும் சொல்லவிருப்பமில்லை. நான் தீவிர வலதுசாரி இந்து வெறியனாக இருந்திருக்கிறேன். கம்யூனிஸ நம்பிக்கைகளை எடுத்துகொண்டு திரிந்திருக்கிறேன். தமிழ் தேசியம் கொஞ்சகாலம் இருந்தது. எல்லாவற்றையும் எனது அவற்றினூடான தீவிரமான ஈடுபாட்டலும், சார்பாலும் தான் கடந்து வந்திருக்கிறேன்; வெறுப்பால் அல்ல. மக்களின் மேல் உள்ள அன்பும், மதங்களின் (நிறுவனங்களின்) மேல் உள்ள விமர்சனமும் எந்த இசத்தின் பாற்பட்டதுமானது அல்ல. எந்த மேலுலகின் கனிகளுக்காகவோ, கடவுளரின் கருணாவிலாசத்துக்காகவோ அல்லது புதியதொரு பொன்னுலகத்தை நிர்மாணிக்க புறப்பட்டோ இதைச் செய்யவில்லை; இரக்கம், மனித நேயம், கருணை இவை போன்ற பெருமிதப்படத்தக்க பதக்கங்களை என் ஆத்துமாவில் நிறைத்துக்கொள்ளவும் விரும்பி இதைச் (மக்களின் மேலுள்ள என் அன்பும், நிறுவனங்களின் மேலமைந்த என் கேள்விகளும்) செய்யவில்லை. மக்களின் மேலான அன்பு என்மேல் உள்ள சுயகாதல்; இந்தக்கேள்விகள் என்னை நிறுவனப்படுத்தி இருக்கும் அமைப்புக்கு எதிரான சுய விடுதலையை முன்னெடுக்கிற கேள்விகள். அவ்வளவே! *** இப்போது விதயத்துக்கு வருவோம். இந்து மதம் என்று இன்று முன்னிருத்தப்படுகிற வேதங்களை ஒத்துக்கொள்ளும் எந்த தத்துவப்பிரிவும் மனிதனுக்கு எதிரானது. பெண்களையும் உள்ளடக்கியே! இதில் யோனி-லிங்க வழிபாடுகள், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் சித்தரிக்கும் வழிபாடுகள் போன்றவை வேத மதங்களுக்கு எதிரானதாக உண்மையில் தோன்றிய தந்திரா வகை தத்துவங்களை சேர்ந்தவை. அதே போன்று வேத மதங்களை எதிர்த்தே 2300 ஆண்டுகளுக்கு முன்னேயே புத்தரும் தோன்றி இந்தத் துணைக்கண்டமெங்கும் மனித விரோத வேத மதங்களை (இன்றைய இந்து மதமாக முன் வைக்கப்படும் உள்ளீட்டை) வீழ்த்தி அப்புறப்படுத்தினார். இதற்காக அவர் மேற்கொண்ட விவாதங்கள், எதிர்கொண்ட சதிகள் போன்றவைகளை பெளத்த- சமண தத்துவங்களில் பரிச்சயம் கொள்ள முனையும் யாவரும் அறியலாம். தென்னிந்தியாவில் தோன்றி இருந்த உலகாயத்தை முன்வைத்த தத்துவப்பிரிவுகள் மிக எளிதாக பெளத்தத்தோடு இணங்கி, பரவிவந்த வேத அடிப்படை கருத்துக்களை எதிர்கொண்டதற்கான குரலை திருக்குறளிலும், மற்ற காப்பியங்களிலும் காணலாம். புத்தரின் இந்த வெற்றியைத் தொடர்ந்தே கர்ம காண்டமாகிய வேதமதங்கள் யாகம் போன்ற சுரண்டல் வழிகளை குறைத்துக்கொண்டன. சாதி என்ற வருண அமைப்பின் மீதான அதன் பிடி தகர்ந்துபோனது. புத்த மத்தின் தாக்கங்களாலேயே ஞானமார்க்கங்கள் தளிர்விடத்துவங்கி உபநிடதங்கள் தோன்ற ஆரம்பித்தன. பெளத்த நெறிகளை வேராகவும் தந்திரா போன்ற வழிபாட்டு முறைகளை தனது உடலாகவும் கொண்ட சன்மதங்களை ‘பிரசன்ன பெளத்தராகிய‘ சங்கரர் ஸ்தாபித்து அவற்றின் மூலம் வேத மேலாண்மையை மீளக்கொண்ர்ந்தார். அதற்காக பிராமணீயம் அவருக்கு தீராத கடன்பட்டிருக்கிறது. வேத தத்துவங்களை அதன் மனித விரோத தன்மைக்காக புத்தர் தொடங்கி (புத்தருக்கு முன்பாகவே செயினர், சார்வாகர்கள், சாக்கியம், லோகாயத்தின் பலபிரிவுகளும் இந்த எதிர்ப்பைச் செய்திருந்தாலும்) பல நூற்றாண்டுகளாக பல ஞானிகளாலும், சித்தர்களாலும் எதிர்க்கப்பட்ட உழைக்கும் சமூக விரோத, ஆணாதிக்கச் சிந்தனைகள் என அடையாளங்காட்டப்பட்ட ஒன்றை அம்பேத்காரும், பெரியாரும் ஒழிக்க நினைத்தது, முயன்றது ஏதோ நேற்று நடந்த சமூக மாற்றமோ, ஒரு சாதிக்கு எதிரானதோ அல்ல. பாரத தேசத்திலே புத்தமதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும் படி செய்தது என்கிறார் பாரதி (பாரதியின் பகவத்கீதை). சாஸ்திரங்கள், இதிகாசங்களை முற்றாகப் புறக்கணித்து உபநிடதங்களின் மேலாக சாதி/ வருண மறுப்பைத் தொடர நினைத்த ஆரியசமாஜம் போன்ற செயல்பாடுகளும் வேதக்கொடுமைகளை ஒழிக்கக் கிளைத்தவையே. இந்த சீர்திருத்தங்களும் ஏனைய வேத மதங்களின் உள்ளேயே நடந்த மற்ற சீர்த்திருத்தங்களை (இராமனுஜர் போன்ற) போல வருணாஸ்ரமத்தையும், மனுவையும் தாங்கி நிற்கும் பகுதியினரால் வெற்றிகொள்ளப்பட்டன. இப்போது இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? 2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு (அதைக்காப்பற்ற முனைகிறவ்ர்களுக்கு) வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா?இவைகளைப் பார்ப்போம். 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன. மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10). இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது. brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: | ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 || (asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:) the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:) Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet (shoodro) were the servants (ajAyata) born. அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழிகளின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் பரிணாமவளர்ச்சியில் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும் புரிந்துகொள்ள முடியும். இதனால் தான் வர்ணாசிரமத்தை இத்தனை ஆழமாகவும், ஆண்டுகளாகவும் இந்திய சமூகத்தில் காப்பாற்ற முடிந்தது. சமயச் சீர்திருத்தக்காரர்களால் (இராமானுஜர் போன்ற) நிலையான எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமும் அவர்கள் வருணாசிரமத்தின் வேராகிய வேதத்தை மறுக்காததுதான்; ஒழிக்காததுதான். சரி, இந்த வேதமும், மனுவும் ஒழியட்டும். பதிலாக இன்று இந்துக்களின் புனித நூலாக காட்டப்படும் பகவத் கீதையாவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் வருணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாயும், சாதிக்கலப்பு நடந்துவிடக்கூடாதென பதைப்பதாகவும் இருக்கிறது. பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலேயே பிறப்பதாக பெண்களைப்பற்றிய கருத்தை விதைக்கிறது. இது தொடர்பான ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், அதைத்தொடர்ந்து நான் எனது பதிவில் எழுதிய கீதையின் பெயரில் சில கட்டுரைகளும் படிக்கத் தக்கன. தவிர வேதமும், மனுவும் சொல்லும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தையும், மற்ற நீச பாசைகளைப்பற்றிய குறிப்புகளையும் அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்: வைணவத்திலும் சரி… சைவத்திலும் சரி… தமிழ் இப்படி தள்ளிவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது. சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள். “தஸ்மாது ப்ராம்மணேன நம்லேச்சித வை நம அபபாஷித வை…” இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை… அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மை யற்ற பாஷை… என்கிறது வேதம். இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “…தயோ ரேவ அந்ததம் கிரியோஹா தேவ நதியோஹா யதந்தரம் தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…” அதாவது… விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத்தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்… இந்த பகுதியை தவிர… மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை….2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா? இந்தகேள்விதான் முதல் கேள்வியைவிட முக்கியமானது. இதற்கான பதிலே இந்துமதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என சொல்லவைக்கிறது. இந்து மதமென்ற இன்றைய நிறுவனம் பலம் பெறும்போது அது வருணாசிரமத்தை, சாதிய படிநிலையை, பெண் அடிமைத்தனத்தை கண்டிப்பாக முன்னெடுக்கும், வலியுறுத்தும். வருணாசிரமத்தை நடைமுறைப்படுத்த அது எந்த வழிமுறையையும் கையாளத் தயங்காது என்பது பலமுறை நிரூபனமான ஒன்று. சமூக வரலாற்றை கூர்ந்து நோக்கும் எவரும் இன்றைய நவீன உலகில் கூட இதைச் செய்யத்தயங்காத இந்துத்துவ சக்திகளின் செய்லபாடுகளை அறியலாம். இது எங்கெங்கே எந்த விதத்தில் நடந்தது? பட்டியல் போட்டுக்காட்டுக என்று நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்கள் அக்கறையின் பேரில் கொஞ்சம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்துக்கு வருணாசிரமத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய கடமையும் இருந்தது, அதற்காக மறைந்த சந்திரசேகர சரஸ்வதியின் தலைமையில் அது இந்திய துணைக்கண்ட (பாகிஸ்தானை உள்ளடக்கிய) அளவில் பாரிய முயற்சியை முன்னெடுத்தது என்பதை இங்கு சொல்லவிரும்புகிறேன். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காரணத்தால் தான் அது நடக்காமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவில் வருணாசிரமம் சட்டபூர்வமாக (இன்று மட்டுமென்ன வாழுகிறது!) ஆக்கப்பட்டு சாதியச் சுரண்டலும் பெண்ணடிமைத்தனமும் செய்யபட்டிருக்கும். இதை வெகு முனைப்போடு செய்ய இந்திய அளவில் தமது திறனனைத்தையும் பயன்படுத்தியதால் தான் அவரை ‘மகா பெரியவர்‘ என்று அழைக்கிறார்கள் போலும். இதை யாரோ திகவில் இருந்தவரோ, பெரியார் அடிப்பொடியோ சொல்லவில்லை. வருணாசிரமத்தை சட்டப்பூர்வமாக்க மகாபெரியவரின் ஆக்ஞையை ஏற்று உழைத்த அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் நக்கீரனில் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற கட்டுரைத் தொடரிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். (அது இப்போது நூலாக வெளிவந்துள்ளது). வருணாசிரத்தை சட்டப்பூர்வமாக்க ஆடுதுறையில் நள்ளிரவில் அந்தணர்களைக் கூட்டி மீட்டிங் போட்டு செயல்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘மகா பெரியவர்‘. தாத்தாச்சாரியார் எழுதுகிறார்… இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம். “ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க… சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர். ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்…`தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார். என்ன ஸ்வாமீ?… என்றேன். “நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும். அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?… நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும். ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும். `பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம். இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்… அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன். தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்… அதை நீர்தான் பண்ணணும்’ என்றார். அப்போது… `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங் களுக்கெல்லாம் விஜயம் செய்து… ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன. அந்த வகையில்… சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது. இதையறிந்த மகாபெரியவர்… உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அப்போது… `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று. டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம். நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். ‘oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்… ‘We meet tonight’ என்றார். அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன். சோரன்சன்: Welcome. What do you want? நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”. சோரன்சன்: Oh… it is very serious matter… give me a memorandam and meet me in Delhi என்றார். நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு… “வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்… மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்துவிட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன். `வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இதன் பிறகு… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம். அவர்களோ “உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள். சரி… என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்… மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு… “சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை. முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்…’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல். நான்… `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்… பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மகாபெரியவரிடம் சொன்னபோது… `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். …………… ஏதோ நேரு உறுதியாக இருந்ததால் பிழைத்தோம். அப்புறமும் இந்து மடங்களின் உரிமைகளைக் காக்க (அதாவது வருணாசிரமத்தை அவை வலியுறுத்த இருக்கும் சுதந்திரத்தை, அதிகாரத்தை காக்க) அவர் நாடளாவிய மடாதிபதிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு விழித்துக்கொள்ளாத வடநாட்டைச் சேர்ந்த மற்ற மடாதிபதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி நிறைவேறாமல் போன வருணாசிரமத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றத்தான் பஜகவும் RSS உயிரைக்கொடுத்து (எடுத்து) உழைக்கின்றன. உயிரைக்கொடுத்துஎடுத்துஉழைக1 point- "என் உயிரோட்டமும் நீதானே"
1 point"என் உயிரோட்டமும் நீதானே" "மின்னல் இடை கண்ணைக் குத்த அன்ன நடை நெஞ்சை வருத்த கன்னி இவள் அருகில் வந்தாள் சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!" "அன்பே ஆருயிரே அழகு தேவதையே இன்பம் கொட்டும் வண்ணக் கிளியே துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே என் உயிரோட்டமும் நீதானே இன்று!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இது எதோ இஸ்ரேலியர்களாலேயே (மொசாட்) மிருகங்கள் என கழித்துவிடப்பட்டவர்களுக்கு சந்தடி சாக்கில் வெள்ளை அடிக்கும் முயற்சி போல் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் 2009 இற்கு பின் பிறந்தவர்களா?1 point- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அட சும்மா போங்க. அமெரிக்காவில் இப்போது ஊழித்தாண்டவம் ஆட இல்லையா. டிரம்ப் வந்தால் அமெரிக்காவை மட்டும் முன்னிலைப்படுத்தி பல திட்டங்களை செயற்படுத்துவார். எனவே உலக நாடுகள் டிரம்ப் வரக்கூடாது என்பதையே பெரும்பாலும் விரும்புவார்கள்.1 point- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
தமிழ், நாடகவியல், புவியியல் இம்மூன்று பாடங்களும் புள்ளிகள் பெறுவதற்கு கடினமானவை. கடினமான பாடங்களை தெரிவு செய்து மாவட்டத்தில் முதலிடத்தையும், நாடளாவிய ரீதியில் முப்பத்து இரண்டாம் இடத்தையும் பெற்றது சிறப்பு. மீன் வியாபாரியின் மகள் என உதயன் எழுதவேண்டிய தேவை என்னவோ.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணா நான் எடுத்த வீரர்களின் விபரம் espncricinfo இந்த இணையத்தில் வருவது தான் உறுதி படுத்த பட்ட கிரிக்கேட் தகவல்கள் . மற்றும் விளையாட்டு இஸ்கோர் நேரடியா போட்டு கொண்டு இருப்பினம்.................................இந்த இணையத்துக்கை போனால் 100வருடத்துக்கு முதல் இங்லாந் அவுஸ்ரேலியா ஆரம்ப காலத்தில் விளையாடின ஸ்கோர்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் அவர்களின் சாதனைகள் எல்லாம் தெரிந்து கொள்ளலாம்........................................................... ஓம் அண்ணா Toronto Raptors & Golden State Warriors 2021களின் வென்றவை கனடியர்கள் போட்ட கூத்து அதிகம் தான் ஆனால் அது அவர்களுக்கு பெரிய இன்பத்தை கொடுத்தது இப்போது அந்த அணியில் கோப்பை வென்ற வீரர்கள் யாரும் இல்லை எல்லாரும் வேறு அணிக்கு தாவி விட்டினம் 🤣😁😂 இந்த முறை படு தோல்வி அடைஞ்சு கீழ் மட்டத்தில் நின்றவை😁...............................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள். கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே..........1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உப்பு விக்க போனால் மழை பெய்யுது மா விக்க போனால் காற்று வீசுது ஏதோ ஒரு விளையாட்டு திரியில் எழுதி இருந்தீங்கள் அதை வாசித்து நல்ல சிரிப்பு அதே நிலை இந்த போட்டியில் உங்களுக்கும் வரலாம் எனக்கும் வரலாம் புலவர் அண்ணா 😁.............................................................1 point- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
"தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]" கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது . அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!. இப்படி ஒன்றையே மாயாக்களுக்கு உதவி செய்யும் அழிவு முதலியவற்றினின்று மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அவ்வாறே யாழிலும் இது அரங்கேறியது. இனப்படுகொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது .ஏன் என்றால் லட்சக்கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு, டியாகோ டி லாண்டா ஆவார். அவ்வாறே யாழ் நூலக எரிப்புக்கு முன்னின்ற இலங்கை அரசின் அரசியல்வாதியும் அல்லது அரசியல்வாதிகளும் ஆகும். அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற ,மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும் . அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ? . அவ்வாறே நான்சி முர்ரே, ஒரு மேற்கத்திய எழுத்தாளர், "சீருடை அணிந்த காவலர்களும் சாதாரண உடையில் இருந்த குண்டர்களும் சில ஒழுங்கமைக்கப்பட்ட அழிவுச் செயல்களை மேற்கொண்டனர்" என்று எழுதினார். "யாழ்ப்பாணம் பொது நூலகம் உட்பட, அதன் 95,000 தொகுதிகள் மற்றும் விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அவர்கள் தரையில் எரித்தனர் ... இது பற்றி தேசிய செய்தித்தாள்களில் எதுவும் இல்லை, தமிழர்களின் கலாச்சார அடையாளமான நூலகத்தை எரித்தது கூட இல்லை. ஜூன் 2 ஆம் தேதி வரை அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவருவதை அரசாங்கம் தாமதப்படுத்தியது, அந்த நேரத்தில் முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன." எரிப்பு இரண்டு இரவுகள் தடையின்றி தொடர்ந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகம் மற்றும் ஈழநாடு நாளிதழின் அலுவலகங்கள் உட்பட யாழ்ப்பாண நகர் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் கடைகளும் கும்பலால் தீவைக்கப்பட்டன. வர்ஜீனியா லியரி, சர்வதேச நீதிபதிகள் ஆணையம் சார்பில் ஜூலை/ஆகஸ்ட் 1981 இல் "யாழ்ப்பாண பொது நூலகத்தை அழித்த சம்பவம் யாழ் மக்களுக்கு மிகவும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும்." என்று கூறினார். இனங்களுக்கிடையிலான நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கம் ஒரு தூதுக்குழுவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய பின்னர் அறிக்கை ஒன்றில் "யாழ்ப்பாண மக்களுக்கு எந்த அழிவுச் செயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று கேட்டால், யாழ்ப்பாண மக்களின் கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் மீதான, இந்த யாழ் பொது நூலகத்தின் மீதான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகத் தான் இருக்கும். இந்த நூலகத்தின், அறிவின், பண்பாட்டின் சின்னத்தின் அழிவு பல ஆண்டுகளுக்கு கசப்பான நினைவுகளை விட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியது. [Nancy Murray, a western author, wrote at the time ''uniformed security men and plainclothes thugs carried out some well organised acts of destruction”. "They burned to the ground certain chosen targets - including the Jaffna Public Library, with its 95,000 volumes and priceless manuscripts…no mention of this appeared in the national newspapers, not even the burning of the library, the symbol of Tamils' cultural identity. The government delayed bringing in emergency rule until 2 June, by which time the key targets had been destroyed." The burning continued unchecked for two nights. Homes and shops across Jaffna town were also set alight by the mob, including the TULF headquarters and the offices of the Eelanadu newspaper. Virginia Leary wrote in Ethnic Conflict and Violence in Sri Lanka - Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists, July/August 1981, that “the destruction of the Jaffna Public Library was the incident, which appeared to cause the most distress to the people of Jaffna." The Movement for Inter-racial Justice and Equality said in a report, after sending a delegation to Jaffna, "If the Delegation were asked which act of destruction had the greatest impact on the people of Jaffna, the answer would be the savage attack on this monument to the learning and culture and the desire for learning and culture of the people of Jaffna... There is no doubt that the destruction of the Library will leave bitter memories behind for many years."]1 point- இனி மூன்றே நாளில் ராக்கெட் ரெடி, 3 மாதம் தேவையில்லை - சென்னை நிறுவனம் சாதித்தது எப்படி?
பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 1 ஜூன் 2024, 04:05 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் முழுக்கமுழுக்க முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் தயாரான என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட்டை விண்ணில் ஏவியிருக்கிறது இந்தியா. சென்னை ஐஐடி-யில் 2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்', இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) உதவியுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. வியாழக்கிழமை (மே 30) காலை 07:15 மணிக்கு அக்னிகுல் தயாரித்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘அக்னிபான்’ என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் ஒரே தனியார் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுதளம் அக்னிபானை உருவாக்கிய அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஒற்றை-நிலை ராக்கெட், 'அக்னிகுல் அக்னிலைட்' என்று பெயரிடப்பட்ட என்ஜினால் ஆற்றல் பெறும். இது முழுக்க முழுக்க முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தில் தயாரான உலகின் முதல் ராக்கெட் என்ஜின் என்று அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ஆலோசகர் சத்யநாராயணன் ஆர். சக்ரவர்த்தி கூறுகிறார். 3டி அச்சு என்ஜின் என்பது ராக்கெட் என்ஜின் தயாரான விதத்தைக் குறிக்கும் தொழில்துறை பயன்பாட்டு குறியீடு ஆகும். அதாவது, கணினி வடிவமைப்பு மற்றும் 3டி ஸ்கேனர் மூலம் ராக்கெட் ஒவ்வொரு கட்டமாக மிக துல்லியமாக தயாரிக்கப்படும். முப்பரிமாண அச்சு என்பதால் இந்த என்ஜினில் பாகங்களை இணைக்க வெல்டிங் செய்ய தேவையில்லை. ஆகவே தான், இது ஒற்றை பாக முப்பரிமாண அச்சு என்ஜின் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி துறையில் 3டி தொழில்நுட்பம் பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS விண்வெளித் துறையில் 3டி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் 3டி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை ஆராய்ந்து வருகின்றன. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ஆலோசகரும் சென்னை ஐஐடி-யில் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறை பேராசிரியருமான சத்யநாராயணன் ஆர். சக்ரவர்த்தி, “வெவ்வேறு நாடுகளில் ராக்கெட் என்ஜினின் பல்வேறு பாகங்களைத் தனித்தனியாக 3டி அச்சுத் தொழில்நுட்பம் மூலம் தயாரித்துள்ளனர். அந்தப் பாகங்களை ஒன்றாக இணைக்க, அவற்றைப் பற்றவைக்க (வெல்டிங் செய்ய) வேண்டும். அந்த இணைப்புகள் உறுதியானதாக இருப்பது முக்கியம். வெல்டிங் செய்வதால் என்ஜினின் எடை கூடும். நாங்கள் தயாரித்துள்ள ஒற்றைப் பாக என்ஜினில் எந்த வெல்டிங்கும் தேவைப்படாது. எனவே என்ஜினின் எடை அதிகரிக்காது,” என்றார். இந்த ராக்கெட் 30 முதல் 300 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோளை ஏந்திச் செல்லக் கூடியது என்று அதை உருவாக்கிய குழுவினர் தெரிவிக்கின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்தி, “நேற்று விண்ணில் ஏவப்படும் போது, ராக்கெட்டில் செயற்கைக்கோள் எதுவும் இல்லை. இது புவியின் துணைச் சுற்றுப்பாதை வரை மட்டுமே ஏவப்பட்டது. ஆனால் இதன் திறன் 300 கிலோ எடையை 700 கி.மீ உயரம் வரை தூக்கிச் செல்லக் கூடியது. அடுத்த சில மாதங்களில் அது சோதித்துப் பார்க்கப்படும்,” என்றார். பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS 3டி அச்சு எப்படி வேலை செய்கிறது? கணினி மூலம் என்ஜினின் தேவையான வடிவத்தைப் பொறியாளர்கள் வடிவமைக்கிறார்கள். என்ஜினில் இருக்கும் சிறிது முதல் பெரிது வரையிலான அனைத்து பாகங்களும் டிஜிட்டலில் வடிவமைக்கப்படும். பிறகு ரொட்டியை வெட்டுவது போல, இந்த வடிவத்தை அடுக்கடுக்காக பிரித்து, 3டி பிரிண்டர் அதை முழுமையாகப் படித்துக் கொள்ளும். பின்னர், எந்தப் பாகத்தை தயாரிக்க விரும்புகிறோமோ, அதற்குத் தேவையான உலோகக் கலவையை நன்கு பொடியான வடிவத்தில் இயந்திரத்தில் உட்செலுத்த வேண்டும். அக்னிகுல் ராக்கெட்டின் என்ஜின் நிக்கல் கலவையில் (Nickel Alloy) தயாரிக்கப்பட்டது. இந்தப் பொடியை உருக்கி, தேவையான வடிவத்தில் பிரிண்டர் பரப்புகிறது. பிறகு ஒரு கேக்கின் மீது கிரீம் தடவுவது போல, பிரிண்டர் ஒவ்வொரு அடுக்காகக் கீழிருந்து மேலாக தயாரிக்கும். ஒவ்வொரு அடுக்கும் தயாரான பிறகு, அடுத்த அடுக்கை சேர்க்கும் முன்பு அதனை குளிரச் செய்து திடப்படுத்த வேண்டும். முழு என்ஜினும் நிறைவடையும் வரை இந்தச் செயல்முறை தொடர்கிறது. அச்சிட்டு முடிந்த பிறகு, அதிகப்படியான பொருளை அகற்றுவது அல்லது மேற்பரப்பை மெருகூட்டுவது போன்ற சில திருத்தங்கள் செய்யப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,3டி பிரிண்டர் (சித்தரிப்புப் படம்) தரையிலேயே நடத்தப்பட்ட சோதனைகள் ராக்கெட்டில் என்ஜின் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அது பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரத்தைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வக சூழலைத் தாண்டி, புவியின் சுற்றுச்சூழலில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க அழுத்தச் சோதனைகள், வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படும். “நாங்கள் என்ஜினின் பல்வேறு பாகங்களை 3டி மூலம் தனித்தனியாகத் தயார் செய்து, தையூரில் உள்ள சென்னை ஐஐடி-யின் ஆய்வு வளாகத்தில் 30-40 முறை தரையிலிருந்தே சோதனை செய்துள்ளோம். என்ஜினைத் தரையில் நிறுத்த எவ்வளவு அழுத்தம் தேவைப்படுகிறது, என்ஜினின் உந்துசக்தி வ்வளவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்,” என்கிறார் பேராசிரியர் சக்ரவர்த்தி. என்ஜின் அனைத்து சோதனைகளையும் கடந்தவுடன், அது ஒரு முழுமையான ராக்கெட்டாக ஒருங்கிணைக்கப்படத் தயாராக உள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பு எரிபொருள் தாங்கிகள், வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் பிற கூறுகளுடன் இணைக்கப்படும். பட மூலாதாரம்,@AGNIKULCOSMOS படக்குறிப்பு,ராக்கெட்டில் என்ஜின் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அது கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது மண்ணெண்ணெயில் இயங்கும் ஒரே ராக்கெட் இந்த என்ஜின் திரவ ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தும் நாட்டின் ஒரே ராக்கெட். “பொதுவாக ராக்கெட்டின் கீழ் நிலையில் உள்ள என்ஜினில் திட எரிபொருள் மற்றும் எரிவாயு பயன்படுத்தப்படும். அவை எரிவாயு தாங்கிகள் தயாரிக்கப்படும் போதே நிரப்பப்பட வேண்டும். இந்த செமி க்ரையோஜெனிக் என்ஜினில் திரவ ஆக்சிஜன் மற்றும் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டுமே மிக எளிதாகக் கிடைக்கக் கூடியவை. ராக்கெட்டை ஏவுதளத்துக்குக் கொண்டு சென்ற பிறகு இதை நிரப்பிக் கொள்ளலாம். எனவே, ராக்கெட்டைக் கையாள்வது எளிமையாக இருக்கும். இந்த என்ஜினை மறு உபயோகம் செய்து கொள்ளலாம்,” என்கிறார் அக்னிகுல் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் கிரிதர். “இந்த முறையில் உருவாக்கப்படும் என்ஜினின் திறன் பிரின்டரின் அளவைப் பொருத்தே அமைகிறது. பெரிய பிரின்டராக இருந்தால், பெரிய என்ஜின் தயாரிக்கலாம். அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லலாம். நாங்கள் பயன்படுத்தியது ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்ட பிரின்டர், இதுதான் இப்போதைக்கு இந்தியாவிலேயே பெரிய 3டி பிரிண்டர்,” என்று விளக்குகிறார் பேராசிரியர் சக்ரவர்த்தி. என்ஜினைத் தயாரிக்கும் செலவும் காலமும், 3டி அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் பன்மடங்கு குறைகிறது. “3டி அச்சு முறையில் தயாரிக்கப்படும் ஒரு என்ஜினை தயார் செய்ய 72 மணிநேரமே ஆகும். ஆனால் வழக்கமான முறையில் தயாரிக்க 2 முதல் 3 மாதங்கள் ஆகும். மேலும் 3டி அச்சு மூலம் தயார்செய்ய வழக்கமான முறையில் ஆகும் செலவில் பத்தில் ஒரு மடங்கே செலவாகும். இந்த ராக்கெட்டுகள் சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சிப் பூங்காவில் 'அக்னிகுல் ராக்கெட் தொழிற்சாலை'யில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு இரண்டு என்ஜின்களை இங்கே தயார் செய்ய முடியும்,” என்கிறார் அக்னிகுல் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் கிரிதர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் விண்வெளித் துறையில் தனியார்மயம் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது 'ஒற்றை நிலை ராக்கெட்' ஆகும். அதில் ஒரு என்ஜின் மட்டுமே இருந்தது. அடுத்ததாக இரட்டை நிலையிலான ராக்கெட்டைச் சோதித்துப் பார்க்கவுள்ளது அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம். மேலும் இந்த ராக்கெட் ஒவ்வொரு முறையும் ஒரே எண்ணிக்கையிலான என்ஜின்களைக் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை என்று அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் எப்படி விரும்புகிறார்களோ, அப்படி அதை வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். "முதல் நிலையில், நான்கு முதல் ஏழு என்ஜின்கள் இருக்கலாம், தேவைப்படும் திட்டங்களுக்கு இரண்டாவது சிறிய நிலை சேர்க்கப்படும். இரண்டு வாரங்களில் தேவையான பொருளை ராக்கெட்டில் பொருத்தித் தரமுடியும் என்று உறுதியளிக்கும் அக்னிகுல் தற்போது பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தும் எதிர்காலத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தும் ராக்கெட்டை விண்ணில் செலுத்தலாம்," என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு 'ஸ்கை ரூட்' என்ற தனியார் நிறுவனம் தனது ராக்கெட்டை விண்ணில் ஏவியது முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அதன்பிறகு, இந்தியாவின் இரண்டாவது தனியார் ராக்கெட்டாக அக்னிபான் விண்ணில் பாய்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் விண்வெளித் துறையை தனியார்மயமாக்குவதற்கும் வணிகமயமாக்குவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் 2020-ஆம் ஆண்டில் விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் மூலம் தனியாருக்கான கதவு திறக்கப்பட்டது. “அக்னிபான் ராக்கெட் வணிக ரீதியாகத் தேவைப்படுபவருக்கு வழங்க வேண்டும் என்பதுதான் திட்டம். புகைப்படங்களைப் பதிவு செய்வது, தொலைதொடர் இணைப்புகளை உருவாக்குவது எனப் பல்வேறு காரணங்களுக்காகச் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்,” என்கிறார் கிரிதர். https://www.bbc.com/tamil/articles/cyxxj919290o1 point- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
தில்லை அண்ணா… நீங்கள் தமிழருக்கு நடந்த பல மாறத வடுக்களை திரட்டி, வருங்கால சந்ததி அறியும் வகையில் மகத்தான பணியை செய்கின்றீர்கள். நன்றியும், பாரட்டுக்களும் உரித்தாட்டும். 🙏1 point- எரித்தும் அழிக்க முடியாத வடு : யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 43 வருடங்கள் நிறைவு.
தொட்டுக் கும்பிடும் புத்தகங்கள் இருந்த இடத்தையே எரிக்கும் மன நிலையில் சிங்களவன் இருந்திருக்கின்றான் எனும் போது… உலகில் இப்படி ஒரு இனம் இருக்க வாய்ப்பே இல்லை.1 point- ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி!
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி! -சாவித்திரி கண்ணன் சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த தனயன் அனாயசியமாக தொட்டுவிட்டார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த ரகுமான் தன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் பள்ளிப் படிப்பை கைவிட நேர்ந்தது. தந்தை வைத்திருந்த இசைக் கருவிகளை வாடகைக்கு விட்ட வகையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, விஜயபாஸ்கர், ஹம்சலேகா..என அப்போதிருந்த இசை அமைப்பாளர்களின் இசை குழுக்களில் ஒரு இசைக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை வானொலி, பொதிகை தொலைகாட்சிக்கும் இசை நிகழ்ச்சி செய்துள்ளார். நிறைய விளம்பரப் படங்களுக்கு அசத்தலாக இவர் இசை அமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் மணிரத்தினத்தின் ரோஜா பட வாய்ப்பு பெற்று இந்திய திரைஇசை உலகையே தன் முதல் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். தமிழ் திரை இசையில் தனிபெரும் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சிய இளையராஜாவின் பாடல்களில் சற்றே ஒரு சலிப்பு ஏற்படத் தொடங்கிய நேரம் அது! 1990 களில் ரகுமானின் கொடி உயர, உயர இளையராஜாவின் வாய்ப்புகள் குறைந்தன! ”சிறு வயதில் வறுமையால் கல்வி கற்க முடியாமல் போனது, வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் பெற்ற அவமானங்கள், தூக்கிவிட ஆளில்லாமல் துவண்டு விழுந்து தனிமைப்பட்ட பொழுதுகள்.. என்னை தற்கொலைக்கு தூண்டியுள்ளன” என்று ஒருமுறை ரகுமான் கூறியுள்ளார். இந்தச் சூழல்களில் இறை நம்பிக்கையே அவரைத் தேற்றியது. திலீப்குமார் என்ற அவரது இயற்பெயரை அல்லா இரக்கா ரகுமான் என மாற்றிக் கொண்ட தருணத்தில் அல்லலுற்ற அவர் மனம் அமைதி அடைந்தது! ஆன்மீக ஒளி உள்ளமெங்கும் நிறைந்தது! இன்று வரை ரகுமான் யாரிடமும் கோபப்பட்டதாகவோ, வெறுப்பை காட்டியதாகவோ ஒரு நிகழ்வைக் கூட சொல்ல முடியாது. பள்ளிப் படிப்பை கூட முடித்திராத ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான அண்ணா பல்கலைக் கழகம், டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், பெர்கிலீ காலேஜ் ஆப் மியூசிக், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் போன்றவை ‘டாக்டரேட்’ பட்டம் தந்து கெளரவித்துள்ளன. 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற இந்திய விருதுகள், ஆஸ்கார், கோல்டன் குளோப், பாப்தா, கிராமி போன்ற சர்வதேச விருதுகள்.. என நீளமான பட்டியல் போடும் அளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் அவருக்கு விருதுகள் தந்துள்ளன. இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ரகுமான் இந்த விருதுகள் யாவும் அவரைத் தேடி வந்தவைகளே! பல விருதுகளை அவரால் சென்று வாங்க முடியாத நிலையில், அதை தன் நண்பர்களை பெற வைத்து, அந்த விருதுகளும் நண்பர்களிடமே தங்கிவிட்டன என்கிறார். நெளஷ்த் அலிகான், மைக்கேல் ஜாக்சன், சாரா பிரிஷ்மென், மைக்கேல் பொல்டர் போன்ற சர்வதேச இசை விற்பன்னர்கள் பலரோடு ஈகோ இல்லாமல் பணியாற்றிவர் ரகுமான். இவ்வளவு பிஸியான நிலையிலும், அவர் ஒரு லட்சியத்தை மனதில் ஏந்தி, அதற்காக தன் நேரத்தையும், உழைப்பையும் கணிசமாக செலவழித்து வருகிறார். பொருளாதார வசதி இல்லாத தான், அனுபவித்த துன்பங்களை மனதில் வைத்து, ‘அன்று தன்னைப் போல தூக்கிவிட ஆளில்லாத வறுமையில் உழலும் இளையோர்களை கண்டெடுத்து ஊக்குவிக்க வேண்டும், உலகத் தரத்திற்கு அவர்களை உயர்த்த வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் கடந்த 16 ஆண்டுகளாக சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவச் செல்வங்களை தேர்ந்தெடுத்து இசைப் பயிற்றுவிக்கிறார். அதுவும், குறிப்பாக அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இசை ஆர்வமுள்ளவர்களை கண்டெடுத்து கட்டணமில்லா இசையைக் கற்பிக்கிறார். எதிர்கால இசைத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே அவர் ஏற்படுதிய கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற பெரிய இசைக் கல்வி நிறுவனத்தில் எளிய சமூக பின்பலமுள்ள மாணவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் தருகிறார். இங்கு உலகத் தரத்திற்கான இசைக் கல்வியை மாணவர்களுக்கு தானே நேரடியாகவும், மிகப் பெரிய இந்திய மற்றும் சர்வதேச இசை ஆசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவிக்கிறார்! இதற்காக அவர் உருவாக்கியதே உலகின் முதல் சிம்பொனி இசைக் குழுவான ‘சன்சைன் ஆர்கெஸ்டிரா’ (Sunshine Orchestra). ரகுமானும் சிம்பொனி இசை தந்து ‘மேஸ்ட்ரோ’ பட்டம் பெற்ற போதிலும், ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ‘மேஸ்ட்ரோ’ எனப் போட்டுக் கொள்ள மாட்டார். போட அனுமதிக்கவும் மாட்டார். ரகுமானின் இசைக் கல்லூரியில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், பாப், ஜாஸ், நாட்டுப்புற இசை என அனைத்து வகை இசையும் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இசை வரலாறு தொடங்கி நவீன ரெக்கார்டிங் தொழில் நுட்பம் வரை கற்பிக்கிறார். கிடார், வயலின், ப்ளுட், பியானோ, மற்றும் பல மேற்கத்திய இசைக் கருவிகளில் பயிற்சி தருகிறார். ஒரு வருட சர்டிபிகேட், இரண்டு வருட டிப்ளமா, நான்கு வருட படிப்பு போன்றவற்றை இங்கு அறிமுகப்படுத்தி அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பிக்கிறார்கள். இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு மாணவர்களும் வந்து, உரிய கட்டணம் செலுத்தி பயின்று செல்கிறார்கள். அவர்களில் இலங்கையில் இருந்து வந்த தினேஷ் சுபாஷினியும், பங்களாதேஷில் இருந்து வந்த இமான்ஷாப் அவர்களும் இன்று அங்கு பிரபல கம்போசர்களாக உள்ளனர். இந்த இசைக் கல்லூரி லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படுகிறது. அந்த வகையில் இலண்டன், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தும் ஆசிரியர்கள் வந்து கற்பிக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் பலர் சர்வதேச இசைக் குழுக்களில் வாய்ப்பு பெற்று இயங்கி வருகின்றனர். தன் வேலைபளுவால் தனக்கு வரும் வாய்ப்புகளை ரகுமான் தன் மாணவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அந்த வகையில் ஹாலிவுட் படங்களின் வாய்ப்புகளைக் கூட தன் மாணவர்களுக்கு தந்துள்ளார் ரகுமான். நம்மிடையே நிலவிய ஏற்றத் தாழ்வுகளால் தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்த அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்கும் கனவுகளுடன் தான் இயங்குவதாக ரகுமான் குறிப்பிடுகிறார். ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஹாலிவுட், சீனா மற்றும் ஐரோப்பிய படங்களுக்கு எல்லாம் பணியாற்றினாலும், தாய் மொழியாம் தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்ட ரகுமான், தான் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அந்த தருணத்தில், அந்த சர்வதேச மேடையில், ”எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசினார். தன் டிவிட்டரில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை அவ்வப்போது பகிர்வதும் ரகுமான் வழக்கம். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழிசை மரபுகளை ஆழமாக ஆய்வு செய்தவரும், அதன் தொன்மை, வரலாறு, பண்கள், சுருதி முறைகள் போன்றவற்றை எடுத்தியம்பும் ‘கருணாமிர்தசாகரம் என்ற நூலை இயற்றியவரும், ‘கர்நாடக இசையின் மூலம் தமிழிசையே’ என பல்வேறு ஆய்வுகள் செய்து நிருபித்தவருமான மாபெரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் குறித்து உரிய ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வைச் செய்து அரிய நூல் ஒன்றையும் வெளிக் கொண்டு வந்தார்! இப்படியாக தான் உருவான தமிழ்ச் சமூகத்திற்கும், ஆதரவற்ற எளியோருக்கும் விளம்பரமில்லாமல் அளப்பரிய நற்காரியங்களைச் செய்யும் ரகுமான், எந்த அதிகார மையத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். ஆன்மீகத்தில் ஆழ்ந்து திளைப்பவரென்றலும், பற்றற்வர் போல பாசங்குதனம் செய்யாதவர்! நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் மாதம் முழுக்க நோன்பு, இறைதூதர்களின் சமாதியான தர்க்காகளுக்கு சென்று வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடும் ரகுமான் இவற்றையுமே கூட மக்களோடு மக்களாக – சராசரி மனிதர்களில் ஒருவராகவே – செய்கிறார். பழங்குடிகள் நிறைந்த நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ள ரஹ்மான், இந்த ஆவணப் படத்தின் பணிகளோடு அங்கு இருக்கும் பழங்குடி குழந்தைகளுக்கான ஆசிரமம் ஒன்றை தத்தெடுத்து, அங்கு இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசைக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். ஒரு தமிழன் சர்வதேச மனிதனாக தன்னை முழுமையாக தகவமைத்து சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளை முற்றிலும் கடந்து, உலகளாவிய முறையில் எப்படி இயங்குவது என்பதற்கு ஏ.ஆர்.ரகுமானே இலக்கணம். எத்தனை உச்சத்திற்கு சென்றாலும், ‘எளியோரை ஏற்றம் பெற வைப்பதே முதன்மை இலக்கு’ என்று இயங்குவது தனிச் சிறப்பாகும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/18004/arrahman-music-college-for-poor/1 point- A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
இதனை 👆 காதில் மாட்டிக் கொண்டு பதில்களை வெளியில் இருந்து பெற்று, சோதனை எழுதி இருக்கின்றார்கள் போலுள்ளது. இவர்கள்.... குறுக்கு வழியில் சோதனை எழுதி சித்தி பெறுவது மற்றைய மாணவர்களை பாதிக்காது என்று இந்த முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சொல்கிறார். அதற்காக முழு முஸ்லீம்களும் ஒன்று பட வேண்டுமாம். செய்யிறது முள்ள மாரித்தனம். அதை கண்டிக்க வக்கில்லை. அதற்குள் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் செயலில் இறங்கி, வெள்ளை அடிக்க முற்படுகின்றார்.1 point- "சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்]
"சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்] உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே? இந்த சோகக் காதல் கதையை குறுந்தொகை 31, அகநானுறு 45, 76, 135, 222, 236, 376, 396 மற்றும் சிலப்பதிகாரம் போன்றவற்றில் பாடியிருக்கிறார்கள். இது ஆட்டக்காரி [ஆடுகளமகள்] "ஆதிமந்தி" யின் காதல் கதை .. இவளை சோழன் கரிகாலனின் (கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.) மகள் எனவும், அது போல ஆட்டனத்தியை (ஆட்டன்+அத்தி) சேர நாட்டரசனாகவும் பலர் கருதுகின்றனர். எது எப்படியாயினும் இவர்களைப் பற்றி பரணர், வெண்வீதியார் [வெள்ளி வீதியார்]போன்ற புலவர்கள் போற்றி யுள்ளதுடன் சிலப்பதிகாரமும் இந் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது. இனி இந்த சங்க கால காதலர்களின், கண்ணகியின் முன்னோடியாக கருதப்படும் ஆதிமந்தியின், காதல் கதையை மேல் கூறப்பட்ட சங்க பாடல்கள் மூலம் பார்ப்போம். மலை நேரம் காவேரி ஆறு இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு காவேரி ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காண வில்லை. தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடு மாறினாள். வாடைக்காற்று கொஞ்சம் குளிராக இன்று வீசுகின்றது. தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள். அதோ .. அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறுத்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள். அந்த காவேரியே அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள். தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை தடவிய படி, ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள். ஓ .. என்ன வென்று சொல்வேன் என தடு மாறினவள், கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஒரு அவாவில், தோழியின் முகத்தை பார்த்த படி சொல்ல தொடங்கினாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்தக் கோனை யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே." [குறுந்தொகை 31] தம் மாண்தக்கோனை (தனக்கேற்றவனாக கருதிய தலைவனை), என் காதலனை, அந்த நீச்சல் - நடன விளையாட்டு வீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர் வீரர்கள் [மள்ளர்] விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காண முடியவில்லை. நானும் ஓர் ஆடுகள மகள் [ஆட்டக்காரி]. அந்த ஆட்டக்கார [ஆடுகளக்] கூட்டத்துக்குக் தலைவனான (குரிசில்) அவனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்டாள். தோழிக்கு சிரிப்பு தான் வந்தது. இதுக்கு ஏன் இந்த கவலை நாளை ஆட்டநத்தி எமது அரசன் முன்னிலையில் ஆடப் போகிறான். நீயும் நானும் முன் வரிசையில் இருந்து பார்க்கப் போகிறோம். பிறகு என்ன வேண்டும்? இன்று அவன் தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் ஒத்திகை பார்க்கிறானோ என்னவோ என சமாதானப் படுத்தினாள். சோழ நாட்டு மக்களுக்கு தாய், தெய்வம் எல்லாம் இந்த காவிரி தான். அவள் கருணையால் தான் சோழ நாட்டு ஆற்றுக் கரையில் முப்போகம் முழுசாக விளைகிறது. ஆமாம் புனலாய்ப் [வெள்ளமாய்] பெருகி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பவள் அவள். அந்த தெய்வத்தின் தரிசனம் காண கரையெல்லாம் காவேரி அன்னைக்குப் பொங்கலிட்டு, நீரில் அகல்விளக்கு ஏற்றி விட்டு, ஆட்டனத்தி - காவேரியின் நீச்சல் நடன விழா காண மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது. ஆதிமந்தியும் தன காதலனின் நடனம் காண சீவி சிங்காரித்து பொன்மகளென, தன் தோழியுடன் புறப்பட்டு வந்திருந்தாள். இவளும் ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகிதானே. நொப்பும் நுரையுமாய் துள்ளிக் குதித்து வரும் காவேரியை பார்த்து அவள் நெஞ்ச மெலாம் கூத்தாடுகிறது. அவனுடன் தான் ஆடுவது போல ஒரு கற்பனையில் மிதந்தாள். தன்னவன் நெஞ்சில் தலை சாய்த்து .. காதலன் கைபிடித்து .. நீரில் நனைந்து எழுந்து தலை கோதி .. அப்பப்பா அத்தனையையும் அனுபவித்து விடவேண்டு மென்று அவள் ஆசை ... நீண்டு கொண்டே போனது. தழைத்த கதிர்களையுடைய வயல்களை கொண்ட கழார் என்னும் ஊரிலுள்ள காவேரியாற்றுத் நீர்த்துறையில், ஆட்டனத்தி என்பவன், காவேரி என்ற ஆட்டக்காரியுடன் [நீச்சல் மகளுடன்] சேர்ந்து இன்று நீச்சல் நடனம் ஆடப்போகிறான். இந்த நீச்சல் நடனம் அதுவும் ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் சோழன் கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ அவன் முன்னிலையில் நடக்கப் போகிறது. அவ்வளவு பெருமை பொருந்திய அந்த நடனத்தை எல்லோரும் எதிர் பார்த்து இருக்க, சோழன் கரிகாலனை வணங்கி விட்டு அந்த ஆட்டனத்தி தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் நீரில் இறங்கினான் எங்கும் ஒரே அமைதி எல்லோர் கண்களும் அந்த ஆட்ட காரர்களிடமே! "ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, காவிரி கொண்டு ஒளித்தாங்கு" (அகநானுறு 376) நான்கு திசையும் இன்னிசை முழங்கிற்று. கரிய கச்சினைக் [அரைக்கச்சை] கட்டிய ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் [சலங்கை] நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டி ஆடி காட்டினான். வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் [பொன்னாலான உருண்டையான] மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டி ஆடி காட்டினான். அப்படி ஆடி மன்னரையும் மக்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கையில் அந்த ஆறே இவர்கள் நடனத்தை கண்டு பூரித்தது போல திடீர் என கொந்தளித்தது. இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிய நீண்ட கரிய கூந்தலை யுடைய காவேரி இவனது அழகில் மயங்கி ஆற்று வெள்ளம் காவேரியை ஈர்த்த போது அவனை வௌவிக் கொண்டும் [பிடித்துக்கொண்டு ], தன் கூந்தலால் மறைத்து கொண்டும் அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். என்றாலும் காவேரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. காவேரி ஆற்று வெள்ளத்தில் மாண்டு போனாள். ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான். அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள். அவனும் மெல்ல மெல்ல தேறினான். மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம் ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று. அவனே தன தலைவன் என முடிவும் எடுத்து விட்டாள். அப்படி இருக்கும் தருவாயில் ......, ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் புலம்பிக் கரை யோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின் சென்று, “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். "கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என ஆதிமந்தி பேதுற்று இனைய ....... [அகநானுறு 76:7-10] "கச்சினையும் [cloth tied around his body] கழலினையும் [war anklets] தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினை உடையவனும், பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் ஆகிய சுருண்ட மயிரினையுடைய அழகிய கூத்தனாகிய (பொருநனாகிய) ஆட்டனத்தியைக் கண்டிரோ?" என்று கண்டவர்கள் எல்லோரிடமும் மயக்கமுற்று வருந்தி வினாவினாள். இதை மருதியும் கேட்டாள். ஆதிமந்தி கூறிய அடையாளங்கள், தான் காப்பற்றிய, தன் மனதை கவர்ந்த, தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்து போவதை கண்டு திடுக்கிட்டாள். "முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதி மந்தி காதலர் காட்டிப் படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்" [அகநானூறு 222, பரணர், குறிஞ்சி திணை] அவனைப் பார்த்ததாக யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆதிமந்தியின் நெஞ்சின் ஏக்கம் அவள் வினாவில் இருந்து நெடு மூச்சாய் வெளிப்படுகிறது .. அந்த நேரத்தில் உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து "இதோ! .." என்று அவள் காட்ட, ஆட்டநந்தியைக் கண்டு சந்தோஷத்தில் அவள் கன்னம் மீண்டும் நனைகிறது; இந்த நனைதல் சூடாய் இல்லை; சுகமாய் இருக்கிறது. அந்த சுகத்தோடு வெட்கமும் சேர்ந்து அவள் கன்னம் சிவக்கின்றன. ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்ட மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள், அப்படி பட்ட சிறந்த சிறப்பினை உடையவள் இந்த கற்பரசி மருதியாகும் என சங்க பாடல் மேலும் கூறுகிறது ! இந்தக் கதையை பாவேந்தர் பாரதிதாசன் சேர தாண்டவம் என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப்பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி “காவேரித்தாயே காவேரித்தாயே” என்று பாடுவார். மேலும் அகநானுறு 45 "காதலர் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போல பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ," - வெள்ளிவீதியார், 135 "பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதல் அம் தோழி!" - பரணர், 236 "தோட்டு இருஞ் சுரியன் மணந்த பித்தை, ஆட்டன் அத்தியை காணீரோ?’ என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித் தன்று எனக் கலுழ்ந்த கண்ணள், காதலர் கெடுத்த ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேது பெரிது உறலே." ,396 "மந்தி பனிவார் கண்ணள் பலபுலந்து உறைய அடுந்திறல் அத்தி ஆடுஅணி றனஇ நெடுநீர்க் காவேரி கொண்டு ஒளித்தாங்கு" - பரணர், ஆகியவற்றிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் குறிப்புகள் காணப்படுகின்றன அது மட்டும் அல்ல "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" என்று இளங்கோ ஆதிமந்தியின் காதல் வலிமையை சிலப்பதிகாரத்தில், வஞ்சின மாலை: 10 to 15 எடுத்துச் சொல்கிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi" Over two thousand years old Tamil Sangam poems had mentioned a true love story of "Athimanthi - Attanathi",which is immortal & parallel with the world most famous lovers such as Romeo and Juliet, Shakuntala & Dushyant, Layla and Majnun, Mumtaz Mahal & Shah Jahan, Cleopatra and Mark Antony, Ambikapathi Amaravathi, Devadas Parvathi & Udayana and Vasavadatta. This is the love story of two sangam period dancers "Athimanthi -Attanathi". However, surprised to note that most of us still doesn't know their love story, which is mentioned in Kurunthogai 31, Akananuru 45, 76, 135, 222, 236, 376, 396 as well as Silappathikaram of Ilango Adikal. There are two different school of thoughts or opinions among scholars. Some say that Athimanthi was the daughter of king Karikalan who also goes by the name Karikal - peru - valattan & called her as princes Athimanthi. Similarly they consider, Attanathi too as a chera king. Others say that both are just dancers as no Sangam poems ever mentioned that she was his daughter. What ever is true, the sangam poets Paranar & Velli Veethiyar had described their true, wonderful, inspiring & romantic love story. Further Silappathikaram too mentioned about the greatness of their love. She can also be seen as a forerunner of Kannaki. Let us now look about Athimanthi's - the great, heart-breaking and romantic love story based on those Sangam poems. Today the Cauvery river is flowing very slowly - clumsily and in awkwardly, Like some one had snatched her. Sun about to plunge into the water for his evening bath, Birds are singing and flying back to the tree branches. We can hear the gentle sound of bees buzzing from flower to flower. Moon just coming out of clouds as welcoming evening romantic lovers. But Athimanthi is not there for her daily routine walk with her friend. Friend confused whether she came to the walk early today. Today the north wind blowing little cold. She wrapped her tightly with upper cloth and searched Athimanthi at Cauvery river bank here & there. There ... Athimanthi Look frustrated, sit on a hillock among the rocks as that the Cauvery river itself flowing from her eyes. Friend could not understand any thing. She went closer to her & looked up at her. She unfasten silk like long hair of Athimanthi, running her fingers through the soft fall, Asked gently "What happened to her" Ohhh ... how can I say -- She confused. After few lapse .. she continued .. Hoping that the friend will tell her good and pleasant answer. Athimanthi started to tell her plight, looking her friend face with eagerly. "I cannot find my esteemed man among warriors at their festival, nor with the thunangai girls who hug and dance. I am a dancer whose love for him has made my shell bangles slip off my wasting hands. My proud lover is a dancer too." [Kurunthokai/குறுந்தொகை 31] I was looking for my lover, the dancer - Attanathi .. Where the warriors are gathered in their festival .. Where Thunangai dances [துணங்கை – Thunangai dance was performed by young women. It was performed during festivities. It was also performed in the battlefield by victorious soldiers. / Kurunthogai [குறுந்தொகை] 364:--women with bright bangles and bamboo like arms dance bending their forearms --] were performed by women during festivals ,.. I can’t find him .. my esteemed man is not there .. I am a dancing girl .. bangles made from cutting conch shells, slipped from my hands now .. My esteemed hero is a dancer too .. Athimanthi complained to her friend very openly, without showing any shyness, Her friend laughed at Athimanthi's complaints. Why are you worrying for this? You know very well .. Attanathi will perform dance front of our king, Chola Karikalan tomorrow. As we already planned, We will sit in front raw & watch Cauvery river dance festival closely. Then what do you want more than that? He may be doing rehearsal today with co-dancer Kaveri. So do not worry any more .. Be happy. Her friend replied to her. For Chola country, This Cauvery river is their Mother, Goddess & every thing. Because of her mercy, they do cultivation three times in a year. This Cauvery water helps thousand & thousand of farmers & make them happy. Today all Chola country people had paid a respect to this great Cauvery goddess, by observing Pongal feast along the river bank as well as lighting lamps in the river water and waiting happily to see the Attanathi - Kaveri water dance about to commence. Athimanthi dressed elegantly, appropriately for this dance occasion & came to this festival with her friend, excited to see her lover's dance. She is also a beautiful & talented dancer. She was so happy to see the flow of the Cauvery water where her lover is going to dance today. She imagine, She was dancing with him instead of Kaveri. In the front port of Kazhar city where groves are dense with marutham trees and fields are heavy with grains, Attanathi with his co dancer Kaveri is going to perform water dance festival Today. This water dance will be held in front of Chozha king Karikalan , who will watch with his happy relatives, As every one is expecting to see this wonderful dance, Attanathi greet [salute] Chola king, Karikalan & went into the Cauvery water with his co dancer Kaveri. He was a very handsome man and a talented dancer. Silent Everywhere ... everyone eyes look only both dancers & nothing else. "In the front port of Kazhar city where fields are heavy with grains, Chozha king Karikalan watched with his happy relatives, Athi dance with desire in the flowing river water donning crafted anklets with bright spots, swirling on his red feet, cloth tied around his beautiful waist, and with jingling, golden round bells. Like Kaveri who took him," [Akananuru/அகநானுறு 376] With beautiful music in all four direction, Attanathi who wore black cloth tied around his body, danced such a way that the bright spots crafted anklets [chalangai] rolling on his red feet & big golden round bells tied around his beautiful stomach make sound along with flowing water. While he dance with desire with co dancer Kaveri, like Cauvery river itself excited by looking his dance, it swell [rise up] suddenly. When Cauvery river seized him & dragged him into the river, the co dancer, who had a long beautiful dark hanging hair, attracted by his handsome, held the hand of beautiful Attanathi, hiding [protecting] him with her long hair. However Kaveri had died in the continuous non-breaking river water swell & Attanathi was unconsciously left at the bank of the river by the rise up of the river. A young lady named Maruthi saved Attanathi. She was a daughter of a headman of fisherman. She treat him with full attention as one of them. Attanathi slowly but steadily recovered. Mean time unknowingly Maruthi fell in love with him and wants to marry him too. She already decided that he is her man, her Lover, her Husband. While her excessive love & affection has made her to think this way ......., Athimanthi is confused and sad and she is searching for her handsome lover in every country, every town and wonders whether the ocean took him or the river took him. She roam around the river flow & are crying, whether any one found my lord, "who has high & flourishing strong shoulders" "Attanathi with tight kachai clothing, war anklets,chest with honey-oozing, splendid, perfect flower garland and curly hair, leaving Athimanthi to be confused and sad, asking, “Did you see my lord?”." [Akananuru/அகநானுறு 76:7-10] He with cloth tied around his body, He with war anklets, His chest with flower garlands with honey, perfectly arranged splendid garland, He with curly hair, He is beautiful & handsome man, did you see my lover? She asked each & every one who come across on her way. Maruthi too heard this. She was shocked to hear the descriptions which Athmanthi told coincide with him, Who she rescued, Whom she lost her heart, Who she decided as her man / lover / husband. "May you achieve esteemed fame like Maruthi who is fit for songs. She showed the searching, confused and baffled Athimanthi where her lover was, the splendid and greatly handsome dancer Attan Athi who danced with desire, with lifted, high and strong shoulders, who was seized by Kavery with dark hanging hair when he danced at Kazhar town’s big port with endless festivities where the mud on the drum eyes don’t dry." [Akananuru/அகநானூறு 222] When Athimanthi confused and baffled , asking, “Did you see my Lover, the handsome dancer, with thick black, curled fragrant hair, bull - like elegant walk ...., with the hope that some one may help her ..., Maruthi instantly understood the truth and reluctantly returned him to his Lover, Athimanthi. Her eyes once again moisten with tears & streaming down her Beautiful and glowing rosy cheeks. But it is not hot ,It gives her pleasure & happiness. . After Maruthi shows Athimanthi where her lover is, she dies [suicide], plunging herself in the ocean as she don't have any other love or affection in life. Because of this, She achieved esteemed fame & consider as she is fit for songs by sangam poets. The greatest modern Tamil Poet Bharathidasan wrote a drama called "CHERA THANDAVAM" [சேர தாண்டவம்] based on this love story. In the year, 1960, based on this story a Tamil move "Mannathi Mannan" [மன்னாதி மன்னன்] was produced, acted by M G R. Further more Akananuru 45:- "I am struggling greatly with dreadful affliction. Will I roam around in confusion like Athimanthi?"-,135:- "My beloved, beautiful friend! I am confused like Athimanthi whose thinking was warped, afflicated by this love disease. My dark skin has pallor, my sprout - like beauty ruined, my forehead is pale, and my painting-like eyes are crying." -,236:- "I escaped without being confused like crying Athimanthi who searched in every country, in every town, and wondered whether the ocean took him or the river took him, her lost lover Attanathi with thick black, curled fragrant hair, bull-like elegant walk and flourishing strong shoulders."-, and 396:- "Like the Cauvery river which fell in love with the beautiful dancer Athi and took him away from his wife Athimanthi," are also describe their [Attanathi-Athimanthi] love story. Not only that even Silappathikaram too mentioned this story in Vanchina maalai /வஞ்சின மாலை: 10 to 15,as below: "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]1 point- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்தி Published By: VISHNU 01 JUN, 2024 | 02:47 AM வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 2ஏ சித்திகளை 30 மாணவர்களும் ஏ2பி சித்திகளை 24 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும் 2ஏபி சித்திகளை 29 மாணவிகளும், 2ஏசி சித்திகளை 08 மாணவிகளும், 2ஏஎஸ் சித்தியை ஒரு மாணவியும், ஏ2பி சித்திகளை 12 மாணவிகளும், ஏபிசி சித்திகளை 16 மாணவிகளும் பெற்றுள்ளனர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/1850111 point- பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்
30 MAY, 2024 | 11:01 AM பொதுவேட்பாளர் குறிப்பிட்ட சில தரப்பினரின் அரசியல் நலன்களை பிரதிபலிப்பவராக விளங்க கூடாது- அவர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.எனவும் தெரிவித்துள்ளது யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது. 1. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல். 2. போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல். 3. வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல். 4. அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல். 5. பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல். 6. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல். 7. அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல். ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் (Civil Societies) தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும். கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டோம். இனியாவது ஏமாற்று கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்றுசேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியற் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம். சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள், 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல். 2. சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதல். சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இருவேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொதுவேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும். பொதுவேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். 1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல. 2. பொதுவேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும். 3. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல. 4. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம். 5. தமிழ்மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது. 6. பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும். மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டினை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம். தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள - பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப்; பலியாக்கப்படாது. தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம். பொது வேட்பாளர் தெரிவை கிழக்கிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ; அவரை தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தவேண்டும் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் | Virakesari.lk1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
# Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NEP 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL CAN 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA NED 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP NEP 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP NEP 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) IND #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL Select BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP NEP 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) NEP #D2 - ? (1 புள்ளிகள்) SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK NEP PAK 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ NZ 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI IND IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SA SA 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG NEP ENG 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ PAK 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 IND SA SA 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS AUS 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG PAK 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ NEP NZ 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS IND IND 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SA SA சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS Select WI Select WI Select SA Select SA SA 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) SA #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK Select ENG Select ENG Select NZ Select NZ Select NEP Select NEP Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) PAK #அணி 2B - ? (1 புள்ளிகள்) NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) NZ 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 1 இரண்டாவது இடம்) PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி NZ உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SA 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UGA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VIRAT KOHLI 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IN 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Matheesha Pathirana 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Yashasvi JAISWAL 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IN 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) DEVON CONWAY 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) MOHAMMAD RIZWAN 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
பூனைகள் இல்லா உலகில் எலிகளுக்கு கொண்டாட்டம்….. தமிழர்களின் விடிவில் உங்களின் வகிபாகம் யாது ??? வெறுமனே யாழில் பொங்கி விட்டு செல்வதால் ஒன்றும் ஆவதற்கில்லை…1 point- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
இந்த "இப்போதிருக்கும் நிலை" என்ன? ட்ரம்ப் இருந்ததை விட, அல்லது ட்ரம்ப் இனி வந்தால் இருக்கப் போவதை விட எவ்வளவு கீழான நிலை அல்லது மேலான நிலை? நான் ஏற்கனவே பல முறை குறிப்பிட்டிருப்பது போல, மனனப் போட்டியில், அல்லது ஒலிம்பிக்கில் ஓடிப் பதக்கம் வாங்கக் கூடிய ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டியதில்லை. அதற்கு தனியாக அமெரிக்காவில் ரீம் இருக்கிறதென நினைக்கிறேன்😂. இது புரியாத வாக்காளர்களுக்கு பைடனை விட ட்ரம்ப் உசத்தியாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆனால், இப்படியான வாக்காளர்களால் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப் படப் போவதுமில்லை!1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இந்தப் பிளவுக்கு என்ன காரணம் என்று எப்பவாவது யோசித்திருக்கிறீர்களா? யாழ் களத்தை மட்டும் ஒரு சாம்பிளாக எடுத்துப் பாருங்கள்: புலிகள் மீதான விமர்சனம், தற்போது இருக்கும் "புலி வால்கள்" என நான் அழைக்கும் தீவிர தேசியர்கள் மீதான விமர்சனம் ஆகியவை சுயம்புவாக யாழில் உருவாகின்றனவா அல்லது ஒரு கருத்திற்குப் பதில் சொல்லும் போது உருவாகின்றனவா? என் அவதானிப்பு, சில தவறுகள், முட்டாள் தனமான knee-jerk முடிவுகள் என்பவற்றை தவிர்த்து விட்டு ஆய்வுகளை (நிலாந்தன் செய்திருப்பது போல) பிரச்சார நோக்கிற்காக முன் வைக்கும் போது, அந்த தவறுகளை மீண்டும் பேச வேண்டியேற்படுகிறது. இதன் பிறகு வந்து, "ஏன் இன்னும் இதையே பேசுகிறீர்கள்?" என்று மூக்கால் அழுவதில் என்ன பயன்? மேலே, ரஞ்சித் எழுதியிருக்கும் உதாரணமே இதைச் சுட்டிக் காட்டுகிறதே? 2005 புலிகளின் ரணில் மீதான கோபத்தின் வெளிப்பாடு, மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டு வந்து மக்களையும் அழித்து, புலிகளையும் அழித்தது. இதில் இருந்து இலங்கையில் கூட elections have consequences என்ற பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல ரணில் மீதான கோபத்தைத் தான் இந்த தேர்தலிலும் காட்ட நிற்கிறார்கள். எனவே, பேச வேண்டியிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டுவோர் "ரணிலை மீட்பராகப் பார்க்கின்றனர்" என்ற அர்த்தம் தொனிக்க எழுதுவதும், "சிங்ஹல தெமிழர்" என்பதும் தமிழர்களை தமிழ் தேசியத்தின் பக்கம் இழுத்து ஒற்றுமையைக் கூட்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்😂? குறுகத் தறித்த தமிழ் தேசியத்தை வைத்துக் கொண்டு புலத்தில் மட்டும் தான் நாம் கொடி கட்டிக் கொண்டாடலாம். நிலத்தில் நிலைமை வேறாக இருக்கும். ஏற்கனவே வேறாகி விட்டது என்பதே என் அவதானிப்பு.1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதனைத்தான் அதிகம் உணர்வதுண்டு. 2009ற்குப் பின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள், புலிகளை வெறுப்பவர்கள், கல்வியாளர்கள் etc etc என பலர் கூறினார்கள். 15 வருடங்களாகவா தவறுகளில் இருந்து பாடம் படிக்கிறார்கள். சரி போகட்டும் ஏதாவது நன்மை நடந்ததா? ..இன்னமும் பிளவுபட்டுக்கொண்டு அல்லவா போகிறோம்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டேனோ தெரியவில்லை. 2009 இன் பின் பிறந்த தலைமுறை மற்றும், அதற்கு 10 வருடங்களுக்கு முன் பிறந்தவர்களை பெற்ற தலைமுறையை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் குறிப்பிடும் இத் தலைமுறையில் இருப்பவர்கள் இன்று 40 தொடக்கம் 55 வயதுக்குள் இருப்பார்கள். அதுவும் எம்மைப் போல் புலம்பெயராமல். அத்தனை அழிவுகளையும் நேரில் சந்தித்த தலைமுறை இவர்கள். இவர்களால் வளர்க்கப்படும் தலைமுறையினர் தான் இன்று பலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், 'கேளிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள்.1 point- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்குமென்று தான் நான் கருதுகிறேன். கார்த்திகைப் பூ, இலங்கையில் மிகவும் பிரபலமான பூ அல்ல என நினைக்கிறேன். அது பொது வெளியில் பேசப்படுவதற்கு பிரதான காரணம் தமிழர்கள் தான். அதை தேர்வு செய்து செருப்பில் அலங்காரமாகப் பதித்தது தற்செயலான செயல் அல்ல. சிறி லங்காவின் தேசிய மலரான நீலோற்பலத்தை (Blue Water-Lily) இப்படி செருப்பில் பதித்திருந்தால், சிங்கள பௌத்தர் யாராவது வழக்குப் போட்டிருப்பர். ஒரு பிரிட்டன் பெண், உல்லாசப் பயணியாக இலங்கைக்கு வந்த போது மாலுமிச் சக்கரத்தை (Sailor's Wheel) தன் உடையில் பதித்திருந்தார். "அசோகச் சக்கரத்தை அவமானப் படுத்தி விட்டார்" என்று பொலிஸ் வழக்குப் போட்டது. பின்னர் "அசோகச் சக்கரம் இப்படி தான் இருக்கும்" என்று நீதி மன்றில் நிரூபிக்க இயலாமையால் வழக்குத் தள்ளுபடியானது. பௌத்த அடையாளங்களை உடலில் ஆடையாகக் கூட அணிய முடியாது என்ற பாரம்பரியம், முன்னுதாரணம் இருக்கும் பின்னணியில் தான் செருப்பில் கார்த்திகைப் பூ பதிக்கப் பட்டதையும் நாம் பார்க்க வேண்டும்.1 point- சாமி சிறீ பாஞ்
1 pointவாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம் போர்களதான் மாறுமா…? சாம்பலில் இருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ்போல எழுந்து வந்திருக்கும் பாஞ் அண்ணா என்றும் இதே வைத்தியர்கள் தந்த மறு ஆரோக்கியத்தை பேணி காக்கவேண்டும்.. நீடுழி நலமுடன் வாழ சந்தோசமாக வாழ்த்துகிறேன்.. யாழில் தொடர்ந்து இணைந்திருங்கள்..1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 74 2 நுணாவிலான் 74 3 கந்தப்பு 58 4 நிலாமதி 56 5 கிருபன் 56 6 சுவி 54 7 முதல்வன் 48 8 அஹஸ்தியன் 48 9 வாதவூரான் 48 10 புலவர் 46 11 வீரப் பையன்26 44 12 ஏராளன் 44 13 ஈழப்பிரியன் 42 14 எப்போதும் தமிழன் 42 15 நீர்வேலியான் 42 16 கறுப்பி 40 17 கோஷான் சே 26 தொடர்ந்தும் பல கேள்விகளில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @kalyani க்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் இரண்டாவது நிலையில் நிற்கும் @nunavilan க்கும் வாழ்த்துக்கள்! இறுதிக் கேள்விகளில் பதில்களைச் சரியாகக் கணித்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபற்றி இறுதிப் படியில் நிற்கும் @goshan_che அடுத்த தடவை மேலெழும்ப வாழ்த்துக்கள்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், உற்சாகமாக பலரைப் பங்குபற்ற அயராது உழைத்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல.1 point- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
சரி, பேசலாம். 2005 இல் வன்னியில் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று இயக்கம் கேட்டது உண்மைதானே? இதனை எவரும் மறுக்கவில்லையே? பிறகேன் இந்த Cherry picking கேலிகள்? ரணிலிலிருந்தே ஆரம்பிக்கலாம், 2002 மாசியில் ரணில் அரசாங்கம் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? தமிழர்களுக்குத் தீர்வொன்றினை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று இங்கு எவராவது உண்மையாகவே நம்புகிறீர்களா? போர்க்களத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகள், கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளுக்குப் போகவேண்டிய தேவை இருந்ததா? சரி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாயிற்று. பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, 2004 இல் பங்குனியில் கருணாவை புலிகள் இயக்கத்திடமிருந்து பிரித்தெடுத்து புலிகளைப் பலவீனமாக்கியது யார்? பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து, நியாயமான தீர்வெதனையும் முன்வைக்காது, சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளைச் சிக்கவைத்து, படிப்படியாக பேச்சுக்களில் புலிகளை வேண்டாத தரப்பாக ஓரங்கட்டியது யார்? ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடை மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகியோர் அக்காலத்தில் வெளிப்படையாகவே கூறிய விடயங்களை எவராவது கவனித்தீர்களா? புலிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காகவே கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குல் வீழ்த்தி அமுக்கினோம், மகிந்த தானே புலிகளை அழித்தேன் என்று மார்தட்டலாம், ஆனால் புலிகளை நாம் பலவீனமாக்கி ஒடுக்கியிருக்கவிட்டால், மகிந்தவால் யுத்தத்தில் வெற்றிகொண்டிருக்க முடியாது என்று கூறினார்களே? ரணில், மிலிந்த மொரகொட, ரொகான் குணரட்ண, பீரிஸ், ரோகித்த போகொல்லாகம என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்தே ஈடுபடவில்லையா? அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், உதவி வழங்கும் நாடுகள் என்று அனைத்துமே புலிகளுக்கெதிராக ஐக்கியதேசியக் கட்சியினால் திருப்பிவிடப்படவில்லையா? அப்படியான நிலையில் 2005 இல் தம்மை வஞ்சித்த ரணிலை தேர்தலில் தோற்கடிக்க புலிகள் எடுத்த முடிவு எந்தவிதத்தில் தவறானதாக இருக்க முடியும்? நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறப்போகின்றன எனும் செய்திகள் முதன்முதலில் வெளிவந்தபோதே 1993 இல் நோர்வே தலைமையில், அமெரிக்காவின் அனுசரணையுடன், பாலஸ்த்தீனத்திற்கும், இஸ்ரேலிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதன் முற்றான தோல்விபற்றியும் பலராலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதே? அவ்வொப்பந்தம் முற்றாகக் கிழித்தெறியப்பட்டு, அரபாத் இஸ்ரேலியர்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, இஸ்ரேல் சார்பாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை பலஸ்த்தீனர்களுக்கு காஸாவிலும், ரபாவிலும் நடப்பது என்ன? இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்குலகு செய்வதன் காரணமே, தமது பிணாமிகளான நோர்வேஜியர்களை இறக்கி போரிடும் மக்களை சோர்வடையச் செய்து, பலவீனப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 2005 தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்ததை இந்தியா உட்பட மேற்குலகு சற்றும் விரும்பியிருக்கவில்லையாயினும், புலிகளை அழிக்க அவனைப் பாவித்தன. பல தருணங்களில் மகிந்தவே "இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்" என்று கூறியிருக்க மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாலேயே நாம் அழிக்கப்பட்டோம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்? ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன, ரணில் இருந்தாலென்ன, முள்ளிவாய்க்கால் நிச்சயம் நடந்தேயிருக்கும். ஏனென்றால், அது மகிந்தவின் போரல்ல, மாறாக மேற்குலகின் முற்றான அனுசரணையோடு இந்தியாவால் நடத்திமுடிக்கப்பட்ட போர். ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவோ அல்லது மேற்குலகோ முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை நிச்சயம் நடத்தியிருக்காது என்று இங்கு எவராலும் உறுதியாகக் கூறமுடியுமா? மகிந்தவைக் காட்டிலும் ரணில் நல்லவனாக எம்மில் பலருக்குத் தெரிவது எப்படி? தீவிர இனவாதியான ஜெயவர்த்தனவினால் பயிற்றுவிக்கப்பட்ட ரணில் எப்படி தமிழர்களைப்பொறுத்தவரை நல்லவனா மாறினான்? 2002 இல் சமாதானப் பேச்சுகளில் அவன் ஈடுபட்டான் என்பதாலா? அதனால் நாம் அடைந்த நண்மையென்ன? 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இனவாதியான ஜெயாரின் அரசில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவன். தமிழர்களுக்கெதிரான பல இனவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவன். யாழ் நூலக எரிப்பில் காமிணி, சிறில் மத்தியூவோடு களமிறங்கியவன். ஜெயாரின் அரசாங்கத்தில் இருந்த தீவிர இனவாதிகளான காமிணி, லலித் போன்றோருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவன். 1988 - 1989 ஆகிய காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தான் என்கிற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் பட்டலந்தை ஆணைக்குழுவால் இவன் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. 1994 இல் சந்திரிக்கா தமிழர்களுக்கு நாடு கொடுக்கப்போகிறாள் என்று பாராளுமன்றத்திலேயே தீர்வுப்பொதியினை எரித்து தனது இனவெறியைக் காட்டியவன். 2015 இல் தமிழர்களின் தயவில் நல்லிணக்க அரசாங்கம் என்று ஒன்றை அமைத்துக்கொண்டு, தமிழர்களுக்கு 100 நாட்களில் தீர்வு தருவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தான், ஆனால் நான்கு வருடகால ஆட்சியில் அவனால் செய்யப்பட்டவை என்று எதுவுமே இல்லை. இன்றும் ஆட்சியில் இருக்கிறான். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் தருவேன் என்று இதுவரை சொல்லவுமில்லை, இனிமேலும் அப்படித்தான். இவனது ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கான பொலீஸ், இராணுவத்தினது அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆக, இவனை 2005 இல் தோற்கடித்தமைக்காகவே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவனிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்துதான் இருக்கும். ஏனென்றால், அதற்கான புறச்சூழலை உருவாக்கி, புலிகளைப் பலவீனப்படுத்தியது இவனே. ரணில் அமைத்துக்கொடுத்த கொலைக்களத்தில் மகிந்த சுதந்திரமாக தமிழர்களைக் கொன்று முடித்தான். இல்லை, ரணில் மிகவும் நல்லவன், அவனிருந்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்றால், 2009 இற்கு முன்னதாக, இவன் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படவே இல்லையா? உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள். ஆகவே, அவர்கள் மீது இலகுவாகப் பழியினைப் போட்டுவிட்டு உங்கள் கடமை முடிந்ததாக நீங்கள் ஆறுதல்ப் பட்டுக்கொள்ளலாம். உங்களுக்காகப் புலிகள் போராடும்வரை அவர்கள் தேவையானவர்கள், இன்று போராட்டம் முற்றுப்பெற்று விட்டதால் அவர்கள் குற்றவாளிகள். நன்றாக இருக்கிறது உங்களின் வாதம்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
குமாரசாமியரைச் சந்திக்க இன்னமும் எத்தனை காலம் தேவையோ தெரியவில்லை. கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விட்டுவிட்டேன். சந்திப்பு பற்றிய விபரங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நான் 4வருடத்துக்கு முதலே படத்தில் பார்த்து விட்டேன் நேரில் இன்னும் பார்க்கல தாத்தா நடிகர் பார்த்திபன் போல் கருப்பும் நல்ல இளமையும் என்ன செய்ய யாழில் இணைந்த காலம் தொட்டு கூப்பிட்டு பழகி போச்சு தாத்தா என்று என்னை விட 24வயதில் தாத்தா மூப்பு....................... போன வருடம் ** இந்த வயது பிறந்த நாளை கொண்டாடினது என்று சொன்னார்😁..................... நான் நினைக்கிறேன் யாழில் வயதில் மூத்தவர்கள் என்றால் பஞ் ஜயாவும் சுவி அண்ணாவும்🙏🥰...........................................1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️1 point - பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.