Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்13Points33600Posts -
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்10Points12678Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்8Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/09/24 in all areas
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும். தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 34 2 பிரபா USA 32 3 ரசோதரன் 32 4 ஈழப்பிரியன் 30 5 சுவி 30 6 நந்தன் 30 7 வாதவூரான் 28 8 ஏராளன் 28 9 குமாரசாமி 26 10 தமிழ் சிறி 26 11 கிருபன் 26 12 கந்தப்பு 26 13 வாத்தியார் 26 14 எப்போதும் தமிழன் 26 15 நீர்வேலியான் 26 16 வீரப் பையன்26 24 17 நிலாமதி 24 18 தியா 24 19 புலவர் 24 20 P.S.பிரபா 24 21 நுணாவிலான் 24 22 அஹஸ்தியன் 24 23 கல்யாணி 243 points
-
அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெருக்கிறது. இன்றைய இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி ஸாம்பி மகளிர் உதைபந்தாட்ட அணியை எதிர்கொள்கிறது.2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... 13 முட்டைகளை கூடுதலாக பொரிச்சிட்டமோ....🤣 👍... பார்த்தேன்....16 ஓவரிலிருந்து தான் பார்த்தேன்......👍2 points
-
அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
நான் இந்த ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தேன் 1-0 நிலையில் நமது பிளை;ளைகள் நீண்ட நேரம் முன்னிலை வகித்த போதும் பனால்ட்டி உதை மூலம் சமப்படுத்தியிருந்த வேளையில் 84 வது நிமிடத்தில் அவர்கள் அடுத்த கோலையும் போட்டு வெற்றி பெற்றார்கள். கலந்து கொண்ட இறுதிப் போட்டியியேயே இறுதிப் போட்டி வரைக்கும் வந்த நமது பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்.2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் இப்ப எந்த இடத்தில் நிக்கிறேன்........! 😴2 points- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
2 points- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) - 1ம் இடம் வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 69 புள்ளிகள் 2)கிருபன் - 69 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 60 புள்ளிகள் 5)பிரபா - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 56 புள்ளிகள் 7)நுணாவிலான் - 49 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 43 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 39 புள்ளிகள் 11)சுவி - 37 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 34 கேள்விகளுக்கு (79 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, கிருபன் , நிழலி 1)நிழலி - 67 புள்ளிகள் 2)கிருபன் - 67 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 58 புள்ளிகள் 5)பிரபா - 58 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 54 புள்ளிகள் 7)நுணாவிலான் - 47 புள்ளிகள் 8)வாத்தியார் - 43 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 41 புள்ளிகள் 10)கந்தையா57 - 37 புள்ளிகள் 11)சுவி - 35 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 27 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 33 கேள்விகளுக்கு (77 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , நிழலி ,பிரபா 1)நிழலி - 62 புள்ளிகள் 2)கிருபன் - 62 புள்ளிகள் 3)கோஷான் சே - 58 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 56 புள்ளிகள் 5)பிரபா - 55 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 52 புள்ளிகள் 7)வாத்தியார் - 43 புள்ளிகள் 8)நுணாவிலான் - 43 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 33 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 24 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 36, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 32 கேள்விகளுக்கு (72 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points- திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான்.
வாக்காளர்களுக்கு காசு கொடுக்கவில்லை. 50/50 விகிதம் பெண்களுக்கு நியமனம். இறுதி நேரத்தில் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது. எவருடனும் கூட்டணியில்லை. பாரம்பரிய கட்சி எனும் அந்தஸ்து இல்லை. ஊடக ஆதரவு இல்லை பண பலம் இல்லை. அரசியல் பின்புலம் இல்லை. இவை எல்லவற்றையும் தாண்டி மாநிலக் கட்சியாக உறுதிப்படுத்தும் அளவிற்கு 6% ல் இருந்து 8% ஆக வாக்குகளைப் பெற்றிருப்பது வளர்ச்சி இல்லாமல் வேறு என்ன? தமிழக அரசியல் ஆய்வாளர்களால், அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படு, பாரட்டப்படும் ஒரு விடயத்தை யாழ்கள குருவிச் சாத்திரக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மட்டம் தட்டுவதும், கேலிசெய்வதும் ஏன்? இந்த உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ள மறுபதற்குக் காரணம் என்ன? வெறுப்பும் வஞ்சகக் குணமும் மனிதர்களின் கண்களை மறைக்கிறது.2 points- கருத்து படங்கள்
2 points2 points- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள். பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. சுமார் 10 நிமிட இடைவேளையில் 150 ரொக்கெட்டுக்கள் இப்பகுதிமீது ஏவப்பட்டிருக்கின்றன. சன அடர்த்தி அதிகமான இந்த அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 210 பலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் அடக்கம். அப்பகுதியில் இருக்கும் கட்டடங்கள் முற்றாக அழிக்கப்பட்டு, ஒரு நரகம் போல் அப்பகுதி காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குண்டுவீச்சில் சிதறுண்ட மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்வதை மக்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையின்போது ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில் இஸ்ரேலிய இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேலின் இந்த மீட்புநடவடிக்கையினால், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலியர்களின் தவற்றினால் ஏற்பட்ட அவமானத்தை கழுவிவிட முடியாது என்று ஹமாஸ் கூறியிருக்கிறது. மேலும், இந்தத் தாக்குதலின்போது மேலும் சில பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியிருக்கிறது. மீதமிருக்கும் பணயக் கைதிகளின் பாதுகாப்பினை இஸ்ரேலே இல்லாமலாக்கியிருக்கிறது என்றும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலிய கொலையாளிகளின் ஆக்கிரமிப்பிற்கெதிரான எமது மக்களின் போராட்டம் தொடரும், நாம் சரணடையப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல் அக்ஸா பிரிக்கேட் கூறியிருக்கிறது.1 point- "பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்)
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்) பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலம் பொதுவாக கி மு 500 ஆண்டுகளுக்கும் கி பி 200 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். இயற்கையாக நடைபெற்ற மரணத்தைக் கண்டு பயந்த சங்க கால மனிதர்களின் மனித மனம், மரணத்தில் இருந்து, எவருமே விடுபட இயலாது என்பதை உணர்ந்தவுடன், அதனைக் கூற்றுவன், கூற்று, காலன் எனப் பழித்தது அவர்களின் பாடலில் இருந்து தெரிய வருகிறது. அவ்வகையில், யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன். "களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;" [புறநானூறு 4 / மரணத்தின் தமிழ் கடவுளை - கூற்றுவன், காலன், மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்] இந்த பாட்டில் ஒரு பயத்தை, கலக்கத்தை காண்கிறோம். அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] "காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டு வைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை" என்று சொல்லவைத்ததோ? "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று தொடங்கும் புறநானூற்றப் பாடலைப் பாடிய சங்ககாலப் புலவர் பூங்குன்றனார் சாதல் புதியதன்று என்று. புறநானூறு 192, இல் "யாது மூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றாலு மிலமே" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதிதன்று, கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டா லும் [மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்], இமய மலையின் ஓங்கிய சிகரம் போல், நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று ஆலோசனை வழங்குகிறார். "மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே" அதேபோல, புறம்:238 இல் சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன் என "வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்; ", என்று பெருஞ்சித்திரனார் பாடுகிறான். கார் காலத்து இடியைப் போல் சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக, அரிய பல உயிர்களைக் கவர்ந்தும், உன் ஆர்வம் குறையாது மீண்டும் உயிர்களைக் கொள்வதற்குச் சுழலும் கூற்றமே, உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான் என புறநானூறு 361, இல் "கார்எதிர் உருமின் உரறிக் கல்லென ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம், நின்வரவு அஞ்சலன் மாதோ; " என்று கயமனார் பாடுகிறார். அதே போல "மருந்து இல கூற்றத்து அருந்தொழில்" என புறநானூறு 03 சொல்லுகிறது. மேலும் புறநானூறு 363 இல், கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் [Acacia Latronum] இலை அளவு கூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையை விட அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று கள்ளி (Cactus) பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க என அறிவுரை கூறுகிறான். உலகம் தொடங்கிய காலம் தொட்டே, மரணம் மனிதனுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் தீர்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் மறுபிறப்பு உண்டா? உண்டு என்று சமய நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு எதிராக இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!" என அடித்துச் சொல்கிறார். இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான, பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. கூற்றுவன் வந்து கொண்டேயிருக்கிறான். மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை, "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று." என்று பாடுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிரை காக்க முனையேன். ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். சங்க இலக்கியம் நம் முன்னோர்களின் வாழ்வை பிரதிபலிக்கின்றன என்பதற்கு இன்று நம்மிடையில் காணப்படும் பண்புகள் சான்றுபகிர்கின்றன. உதாரணமாக, இறந்தவர்களை பாடையில் கிடத்தி சுடுகாடு எடுத்து செல்லும் முறையும் மாரடித்து புலம்பும் பண்பும் இறந்தவர்களின் மீது கோடித்துணி போர்த்தும் பண்பும் இன்றும் நம்மிடம் உள்ளன. அன்று பாடையை, கால்வழி கட்டில் அல்லது வெள்ளில் என்று அழைத்தனர். உதாரணமாக, புறநானூறு, 286 , மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே என "கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே" என்று புலம்பும் தாயை எடுத்து காட்டுகிறது. மேலும், கணவன் அல்லது தலைவன் இறந்த பொழுது அவனைச் சார்ந்த மகளிர் மார்பினில் தட்டி புலம்பியதையும் புறநானூறு எடுத்துக்காட்டுகின்றது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- விதண்டா வாதம் அல்லது குதர்க்கம்
1 pointவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள்? இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை! அதே நேரம் எனது கட்டுரை, கதை , கவிதைகளுக்கு, -- அதைச் சரியாக படித்து விளங்காமல், அல்லது அதற்கான தனது கருத்தை அறிவுபூர்வமாக பதியாமல், எதோ தானோ என்று ஏதேதோ அலட்டுவதை நானும் எதிர்கொண்டுள்ளேன். கேட்கப்பட்ட கேள்விக்கு அல்லது கொடுக்கப்பட்ட பதிலுக்கு விடையை அல்லது தங்கள் கருத்துக்களை பதியாமல், தேவையற்ற, பொருத்தமற்ற வாதங்களை பதிவதை அண்மையில் கூட அனுபவித்தேன். அதனால் தான் என் மனதில் தோன்றுவதை இங்கு பதிவிடுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன். முதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம். அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர். விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதைச் சொல்லலாம். திருக்குறளில், அதிகாரம்: கல்வி குறள் எண்:m391 இல் "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்று தான், வள்ளுவர் கூறியிருக்கிறார். எனவே எவருக்கும் எதைக் கற்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். உண்மை தான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளு வரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று ! இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப் பாலை 169-171, "பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.] என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் "சைவவாதி"[சைவ சமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக் குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம். என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம். பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth, he that reapeth]. எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish]. ஒருவரின் பேச்சை பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு, வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும். வாதங்களும் அப்படியே . அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும். "வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ" என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்1 point- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
வந்து குடியேறியவர்கள் ஒழுங்காய் இருந்தால் மாற்று கட்சிகளுக்கு வேலையே வந்திருக்காது.1 point- மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!
மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ! by Web EditorJune 9, 20240 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் அமித்ஷா நிதின் கட்காரி ஜே.பி.நட்டா சிவராஜ் சிங் சவுகான் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் மனோகர் லால் கட்டார் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பியூஷ் கோயல் தர்மேந்திர பிரதான் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங் சர்வானந்த சோனாவால் வீரேந்திர குமார் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு பிரகலாத் ஜோசி ஜூவல் ஓரம் கிரி ராஜ் சிங் அஸ்வினி வைஷ்ணவ் ஜோதிராதித்ய சிந்தியா பூபேந்தர் யாதவ் கஜேந்திர சிங் ஷெகாவத் அன்னபூர்ணா தேவி கிரண் ரிஜிஜூ ஹர்தீப் சிங் புரி மன்சுக் மாண்டவியா ஜி.கிஷன் ரெட்டி லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் சி.ஆர்.பாட்டீல் இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு: ராவ் இந்திரஜித் சிங் ஜிதேந்திர சிங் அர்ஜுன்ராம் மேக்வால் சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி இணை அமைச்சர்கள்: ஜித்தன் பிரசாதா சிரிபத் நாயக் பங்கஜ் சவுத்ரி கிருஷ்ணன் பால் குர்ஜால் ராம்தாஸ் அத்வாலே நித்யானந்த் ராய் அப்னா தள கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா படேல் சோமன்னா பெம்மசாணி சந்திரசேகர் எஸ்.பி.சிங் பாகேல் சோபா கரந்லாஜே கீர்த்தி வர்தன் சிங் பி.எல்.வெர்மா சாந்தனு தாகூர் கமலேஷ் பாஸ்வான் பண்டி சஞ்சய்குமார் அஜய் தாம்தா எல்.முருகன் சுரேஷ் கோபி ரன்வீத் சிங் பிட்டு சஞ்சய் சேத் ரக்ஷா கட்சே பாகிராத் சவுத்ரி சதீஷ் சந்திரடூபே துர்கா தாஸ் உய்கி சுகந்தா மஜும்தார் சாவித்ரி தாக்கூர் டோக்கான் சாவ் ராஜ் பூஷன் சவுத்ரி பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஹர்ஸ் மல்ஹோத்ரா நிமுபென் பாம்பனியா முரளிதர் மொஹோல் ஜார்ஜ் குரியன் பபித்ரா மார்கரீட்டா https://news7tamil.live/modi-3-0-who-are-the-union-ministers-full-list-here-it-is.html1 point- "வறுமையிலும் நேர்மை...!"
1 point"வறுமையிலும் நேர்மை...!" இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியில், வறுமை வீதம் 2021 ஆண்டில் இருந்த 13.1% இல் இருந்து 2022 ஆண்டு, 25.6% அடையும் என்று உலக வங்கி கூறியது. இப்படியான ஒரு சூழலில் தான் நானும் மனைவியும், விடுதலையின் பின் யாழ்ப்பாணம் இருந்து கொழும்புக்கு சொகுசு பேரூந்தில் போய்க் கொண்டு இருந்தோம். எமது பேரூந்து வவுனியாவில் சிறு ஓய்விற்காக தரித்து நிற்கும் பொழுது, ஒரு சின்ன பெண், ஒரு கூடையில் மாம்பழத்துடன் ஏறி, அதை விற்கத் தொடங்கினார். அவள் எம் அருகில் வரும் பொழுது இன்னும் அறைக்கூடைக்கு மேல் மாம்பழம் இருந்தது, அதை எடுத்து மணந்து பார்த்த என் மனைவி, அது நல்ல பழம் என்றும், விலையும் மலிவாக இருக்குது என்று என் காதில் மெல்ல சொன்னார். என்னிடம் சில்லரைத் தாள்கள் அப்பொழுது இருக்கவில்லை. என்றாலும் மனைவியின் ஆசையை நிராகரிக்கவும் விருப்பம் இல்லை. அங்கு பேரூந்தில் இருப்பவர்கள் சிலரிடம் நான் சில்லறை பெறலாமா என்று விசாரிக்கும் தருவாயில், மனைவி அந்த சின்ன பெண்ணுடன் அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். அவள் தான் தினம் தன் தங்கையுடன் சேர்ந்து இருவரும் இரு கூடையில் பழங்கள் பேரூந்து நிற்கும் தருவாயில் விற்பதாகவும், தம் பெறோர்கள், கடந்த கால போர் சூழலில் காயப்பட்டு இறந்து விட்டார்கள் என்றும், இப்பொழுது, தாயின் தங்கையுடன் வாழ்வதாகவும், இந்த பழங்கள் விற்பனையால் வரும் கூலியில் தான் தாங்கள் மூவர் வாழ்வதாகவும், தன் சித்தியும் ஒரு கால் இழந்ததால், தம் குடிசை வீட்டில் இருந்து பராமரிப்பதாகவும் கூறினாள். அவளின் கதை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் இன்று பொதுவாக இருந்தாலும், அவள் வளைந்து நெளிந்து சொல்லும் அந்த விதம் உண்மையில் எவரையும் உருகவைக்கும். இது மாரி காலம். மழைத்தூறல் வெளியே கேட்டுக் கொண்டு இருந்தது. என்னால் பேருந்துக்குள் தேவையான சில்லறை பெறமுடியவில்லை. அந்த சின்ன பெண்ணின் முகத்தை பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. எனவே கூடையில் உள்ள முழு பழமும் எவ்வளவு என்று கேட்டேன். அது ஆயிரம் ரூபாய் என்றாள். என்னிடம் ஐயாயிரம் ரூபாய் தாள்கள் தான் இருந்தன. நீங்க இந்த கூடையுடன் பழங்களை வைத்திருங்கள் , நான் கீழே இருக்கும் கடைகளில் ஒன்றில் மாற்றிக் கொண்டு சீக்கிரம் வருவேன் என்று சொன்னார். நான் கொஞ்சம் தயங்கினாலும், மனைவி காசை கொடுங்க ' அவள் ஏழைதான், ஆனால் அவளிடமே நேர்மை இருக்கும்' என்று தான் ஆரம்ப பாடசாலையில் படித்த 'தேவதை ஏழைச் சிறுவனுக்கு அவனின் நேர்மையை மெச்சி வெகுமதி அளித்ததை ஆதாரமாக என்னிடம் சொல்லி, கொடுக்க தூண்டினாள். எனக்கு அவளின் ஆதாரம் சிரிப்புத்தான் வந்தது, என்றாலும் அவளின் அப்பாவித்தனத்தை சீண்ட விருப்பம் இல்லை. எனவே ஐயாயிரம் ரூபாய் தாள் ஒன்றை மனவியினூடாகவே அந்த சின்ன பெண்ணிடம் கொடுத்தேன். என்றாலும் என் மனம் அலைமோதிக் கொண்டு இருந்தது, நாம் அடிக்கடி ஒருநாளும் 'அவர் பணக்காரர், ஆனால் அவர் நேர்மையானவர்' என்று சொல்லுவதில்லை. ஆதரவற்ற மக்கள், பணத்தின் தேவையால் ஒழுக்கமற்ற முறையில் நடக்கலாம் என்று உளவியல் நம்பிக்கை எமக்கு சொன்னாலும், உண்மையில் ஏழை மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், அவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு மிக குறைவு, ஆனால் பணக்கார மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சுதந்திரத்தாலும் சமூகத்தில் இருந்து அதிக தனிமையிலும் இருப்பதாலும் ஒழுக்கக்கேடான நடத்தைகளில் ஈடுபட வாய்ப்புக்கள் அதிகம் என்ற என் எண்ணம் என்னை ஆறுதல் படுத்தியது. ஒரு ஐந்து ஆறு நிமிடத்தில் பேரூந்து வெளிக்கிட ஆயுத்தமானது. இன்னும் அந்த சின்ன பெண் மிச்ச காசுடன் திரும்பி வரவில்லை, அவளின் கூடை இன்னும் என் மடியிலேயே, பேரூந்தில் இருந்த சிலர் , ஓட்டினரிடம் பகிடியாக , அங்கே ஒரு அன்பான மனிதர், மடியில் கூடையுடன் காத்திருக்கிறார் என நினைவூட்டினர். ஓட்டினரும் சிரித்த படி மேலும் இரண்டு மூன்று நிமிடம் இருந்துவிட்டு புறப்பட ஆயத்தமானார், மழை பெய்வதால் கீழே போய் பார்க்கவும் முடியவில்லை. நான் மனைவியின் முகத்தை பார்த்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை . என் தோளில் சாய்ந்துவிட்டார். எல்லோரும் இனி இந்த காசு கிடையாது என்று தாக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், தாம் எதோ ஏமாறாதவர்கள் என்றும் பேசிக் கொண்டும் இருந்தார்கள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது காசு போனது அல்ல, அவர்களின் பேச்சுத்தான்!. நானும் கொஞ்ச நேரத்தால் அயர்ந்து தூங்கிவிட்டேன். மனைவி, அன்பே, கொழும்பு வந்துவிட்டது என்று தட்டி எழுப்பத் தான், கண் முழித்துப் பார்த்தேன். அடுத்தநாள் மாலை , நான் பயணம் செய்த பேரூந்து நிறுவனத்தில் இருந்து ஒரு தொலைப்பேசி எனக்கு வந்தது. நாம் பற்றுச்சீட்டு பதியும் பொழுது, பெயர் , தொடர்பு இலக்கம் கொடுப்பது வழமை. நான் என்ன எதோ என்று கொஞ்சம் பதறி, பதில் அளிக்க சென்ற பொழுது, அவர்கள் உங்கள் மிச்ச காசு, அந்த பெண் காவல் நிலையத்தில், பேரூந்து தரித்த நேரம், போகும் இடம் கூறி, தன் கதையையும் கூறி கொடுத்து உள்ளார். உங்கள் வங்கி இலக்கத்தை, காவல் நிலையத்துக்கு அறிவித்து அதை பெறலாம் என்றனர். அதற்கிடையில், இதைக்கேட்டுக்கொண்டு இருந்த என் மனைவி ஓடி வந்து, என் அபிப்பிராயம் என்றும் பிழைத்ததில்லை என்று நெஞ்சு நிமிர்ந்து பெருமையுடன் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அவளின் சந்தோசம் எனக்கு மகிழ்வு கொடுத்தாலும், அந்த சின்ன பெண்ணுக்கு என்ன நடந்தது என்று அறியவே ஆவல் கூட இருந்தது. எனவே அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்துக்கு அழைப்பு ஏற்படுத்தினேன். அப்ப தான் அவளின் மிகுதி கதை தெரியவந்தது. அவள் முதலில் அங்கே இருந்த ஒரு பெரிய கடைக்கு போனார், ஆனால் அங்கு மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்ததால், பின் பக்கத்தில் இருந்து விடுதி ஒன்றுக்கு போக முயன்றார், ஆனால் அங்கு காவலுக்கு நின்ற உத்தியோகத்தர் அவளின் உடையையும் கோலத்தையும் பார்த்து உள்ளே விடவில்லை, மழையும் ஒரு பக்கம். அதன் பின் , ஒரு வயோதிப மனிதன் கொஞ்சம் தள்ளி பாண் மற்றும் தின்பண்டங்கள் விற்பது அவளுக்கு ஞாபகம் வர, அங்கு, மழையில் நனைந்துகொண்டு போய், காசை மாற்றி , திரும்பி ஓடி வந்துள்ளார், ஆனால் அதற்குள் பேரூந்து போய்விட்டது. அங்கு மற்ற பேருந்துகளில் பழங்கள் விற்றுக்கொண்டு இருந்த தங்கையிடம் இதை சொல்லி உள்ளார். தங்கை சின்ன பிள்ளைதானே, ஏன் அக்கா, அவர் தான் போய்விட்டாரே, நாம் இதை எடுத்து, ஒரு சில நாளாவது, கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடலாமே என்று தன் விருப்பத்தை கூறி உள்ளார். ஆனால், இந்த சின்ன பெண் அவளை வீட்டுக்கு போகும் படி கூறிவிட்டு, பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில், தன் கதையையும் மற்றும் விபரங்களைக் கூறி மிச்ச காசை கொடுத்து, இதை அந்த ஐயாவிடம் கொடுக்கும் படி அழுது கொண்டு கொடுத்துள்ளார் என்று அறிந்தேன் . "பணம் தான் ஏழையின் பிரச்சனையென்றால், அவனது நேர்மையின் மீதும் கலங்கம் கற்பித்து ஏழையின் நிம்மதியைக் கெடுக்கும் கூட்டம் என்று தான் அழியுமோ பராபரமே!." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்களே ஜந்து பத்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க நாங்கள் வில்கேச்சா அல்லது அம்பானி குடும்பமா ஹா ஹா நியூயோக் பிச்சில் 140ரன்ஸ் சிரம பட்டு அடிச்சால் கண்ண முடிட்டு சொல்லுவேன் 140ரன்ஸ் அடிச்ச அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்படி இன்று மழை பெய்ததால் பிச்சின் தன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்றம் இல்லா பிச்................................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மன்னிக்கவும்...இது எனது ஆற்றாமையின் வெளிப்பாடே...இப்போது..எனது ரீம் வென்றதில் அளவிலா சந்தோசம்....ஆமா எனக்கு ஒரு சந்தேகம் ...யாழ்கள போட்டியில் பலர் இந்தியாவை வெல்லும் என்று போட்டாங்களே..பாகிஸ்தானுகு டொலர் அள்ளி வீசிட்டாங்களா...இந்திய வெற்றி எதிர்பாராத அதிசயம்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் திரும்பி போக ஒரே பிளைட்டை புக் செய்யலாம்.......1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் 120 அடிக்க வாய்ப்பு மிக குறைவு பெரியப்பு .........................................1 point- "பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா]
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா] மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால், 1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது, 2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life], 3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும். மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்தை குறைப்பதற்கும் கட்டாயம் வழிசமைக்கும். இதைத்தான், விஞ்ஞானமும், இலக்கியமும் சமயமும் செய்கின்றன. என்றாலும் அவைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்களின் அறிவு, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் ஆகும். நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக, அறிவிற்கு ஒவ்வாததாக இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்காத வரை பிரச்சனை இல்லை. என்றாலும் மரணத்தை பற்றிய அல்லது மரணத்தின் பின் வாழ்வு பற்றிய எல்லா நம்பிக்கைகளும் அப்படி அல்ல. அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வேண்டாத, அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளை, நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றினாலும் தூக்கி எறியவேண்டும். இதைத்தான் அறிஞர்களும் சித்தர்களும் கூறினார்கள். மேலும் பொதுவாக ஆண்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஓரளவு சமரசம் செய்கிறார்கள், ஆனால் பெண்கள் அப்படி இல்லை. மற்றும், மரணம் பற்றிய கவலை, அதிக மத நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் குறைவாக காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம் சில 'சமயங்கள்', இறப்பை இன்னும் ஒரு தொடக்கத்தை குறிப்பதாக கருதுவதாகும் [some religions associate death with another beginning]. இது ஓரளவு பாதிப்பில்லா மூடநம்பிக்கை. அப்படியான, ஆத்மாவின் விடுதலை அடையும் வரை, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் இறையியலில் திருவள்ளுவர் நம்பினார் [theology of cycle of births and deaths till the liberation of soul is attained]. அதன் விளைவுதான் குறள் 339 எனலாம். அதில் அவர்: "உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்று கூறுகிறார். உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள். என்றாலும் தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது. அது தான் இறப்பது. அதாவது தூங்குவது போன்றதே இறப்பு, தூங்கிய பின்னர் விழிப்பது போன்றதாம் [மீண்டும்] பிறத்தல் என்கிறது. இந்த சிந்தனையில், பாவ புண்ணியங்களை பொறுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நம்பிக்கையும், அதை ஒட்டிய கருத்துக்களும் கூட தெரிகிறது. ஒருவர் நன்றாக ஆழ்ந்து தூங்கும் போது, இவ்வுடம்பைப் பற்றிய எண்ணத்தையோ, அது இருக்கும் நிலையைப் பற்றியோ மூளை நினைவு படுத்திக் கொண்டிருப்பதில்லை. அது ஓரளவுக்கு உயிரியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும். தானும் ஓய்வு கொண்டு, உயிர், உடல் இவற்றுக்கும் ஓய்வினைத் தந்து இயங்குகிறது. தூக்கம் என்பது ஏறக்குறைய இறந்த நிலை தான். ஒருவருக்கு. ஒவ்வொரு நாளும் உறங்கி விழிப்பது, பிறப்பது போல என்பது, தூங்குவது இறப்பானால், விழிப்பது பிறப்புதானே என்கிற ஒரு வாதத்தை ஒட்டிய கருத்து ஆகும். நாம் தூங்கி விழிக்கும் போது நமக்கு நேற்று நடந்தது, இன்று நடக்க வேண்டியது, நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றிய அறிவும் நினைவும் இருக்கின்றன. ஆனால் பிறக்கும் ஓர் உயிருக்கு - ஒரு கருத்துக்கு, மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் கூட? - கடந்த பிறவிகளின் நினைவுகள் வருவது இல்லை, ஒரு சிலருக்கு இருப்பதாக நாம் செய்திகள் மூலம் கேள்விப் பட்டாலும் கூட அது இதுவரை அறிவியல் ரீதியாக உறுதிப் படுத்த வில்லை. பொதுவாகப் பார்க்கையில், இறப்பு என்பது நினவுகளை முற்றிலும் மறக்கச் செய்கிற நிகழ்வு. பிறப்பு என்பது எவ்வித நினைவுகளையும் சுமந்து வராத நிகழ்வு. பிறப்பை ஒரு தற்செயலாக தன்னிச்சையான செயலாகச் சொல்லலாம். இறப்பை ஒரு உறுதியான இறுதி செயலாகச் சொல்லலாம். இந்த கருத்தை யொட்டிய பாடல்களை, நாலடியார், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய வற்றிலும் பார்க்கலாம். “விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு” என்கிறது நாலடியார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், “ஓடு புனற்க ரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி” என்கிறது. “பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மை யின்” என்கிறது மணிமேகலை. இந்நிலையாமையை நாம் உணர்வதில்லை என்று சுந்தரர், இன்னும் ஒரு தேவாரத்தில், "நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்" என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் "வறிதே நிலையாத இம்மண் ணுலகில் நரனா கவகுத் தனைநா னிலையேன்" என்று பாடுகிறார். இவை எல்லாம் இறப்பை பற்றிய அன்றைய சிந்தனைகள். அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர், திருநாவுக்கரசர், நாம் யாருக்கும் குடி அல்ல; நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். நரகத்தில் இடர்ப்படோம். அதாவது ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம். அதாவது, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது. என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறார். இங்கும் இறப்பை பற்றிய அன்றைய கருத்து தெளிவாகிறது. "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை." திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மேலும் சில பாடல்களைக் காண்கிறோம். உதாரணமாக “நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படுத்தி, குறள் 334 “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்" என்று சிறப்பாக சொல்கிறது. அதாவது, ஒவ்வொரு நாள் முடிவும் உங்களை வாழ்க்கையின் முடிவான இறப்பிற்கு கிட்ட கிட்ட கொண்டு போகிறது. யமனின் வாள் போன்றது நாள் என்கிறது. இந்த வாளை பாவித்தே உங்களின் வாழ்வு காலம் அளக்கப்படுகிறதாம். அதாவது ஒரு நாள் முடியும் போது, யமன் வாழ்வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விட்டு, இன்னும் இறப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என அளக்கிறான் என்கிறது. இறப்பு மனிதனின் ஒவ்வொரு வாழ்வின் அடியையும் பின் தொடர்கிறது. என்றாலும் மனிதன் இந்த நிலையற்ற பொருட்களையும் தொடர்புகளையும் இன்னும் வைத்திருக்கிறான். வாளின் இறுதி பிரயோகத்தில், அவனது வாழ்வு எந்தவித அறிவிப்பும் இன்றி துடைத்து எறியப்படுகிறது. இறப்பின் பின் மனிதனை தொடர்வது அவன் செய்த நல்ல செயல்களின் சிறப்பு மட்டுமே என்று மேலும் கூறுகிறது. இதை உறுதி படுத்துவது போல பட்டனத்தார், "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று கூறுகிறார். இறக்கும் தருவாயில் படுத்து இருக்கும் போது, கண் ஒன்றையும் பார்க்காது, காது ஒன்றையும் கேட்காது, எல்லா உறுப்புகளும் தளர்ந்து விடும், நா வாய்க்குள் மாட்டிக்கொள்ளும், கடைசி மூச்சு விக்கலாக வரும் - அந்த நேரத்தில் புகழ்த் தகுதியுடைய எந்த காரியமும் செய்ய முடியாது. அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வரும் முன், உடனடியாக நற்பணபுள்ள, நன்மார்க்க செயலை செய்து சிறப்பு பெறுவாயாக. நேரத்தை வீணாக்க வேண்டாம். இறப்பு எந்த நேரமும் கதவை தட்டலாம் என்று திருவள்ளுவர், தனது குறள் 335 இல் "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும்" என ஆலோசனை கூறுகிறார். இந்த ஆலோசனையை உறுதி படுத்துவது போல மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் காணப்படுகிறது. ஒரு பிரமணன் பாண்டவர்களின் அரண்மனை வாசலில் வந்து உதவி கேட்டான். தர்மன் ஒரு முக்கிய வேலை செய்ய வேண்டி இருந்ததால், அடுத்த நாள் வந்து தருமத்தை பெறும்படி கூறுமாறு செய்தி அனுப்பினான். பக்கத்தில் இருந்த பீமன் தனது மூத்த சகோதரனிடம் கேட்டான்: அண்ணா, எனக்கு அதிசயமாக இருக்கிறது, நீங்கள் நாளை உயிருடன் கட்டாயம் இருப்பீர்கள் என்பது உறுதியா? தருமனுக்கு தனது முட்டாள்தனம் விளங்கி விட்டது. உடனடியாக பிராமணனின் தேவையை தருமன் கவனித்தான் என்கிறது அந்த கதை. ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது. ஆயினும், எவரையும் பயம் கொள்ள வைத்த குறள் – ”நேற்று வரை உயிரோடு இருந்தான், ஆனால் இன்று இல்லையே” என்று சொல்லுவதைப் போன்று நிலையற்றை தன்மை உடையது இந்த உலகம் என்று கூறும், குறள் 336 ஆகும். அது, ."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு". எனக் கூறுகிறது. “நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது” எனச்சொன்ன இந்த குறள். எவ்வளவு கொடுமையானது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று கட்டாயம் புலம்பி இருக்கும். நீ விரும்பும் இந்த உலகில் எது மிகவும் பெரியது?. ஒவ்வொரு நாளும் மக்கள் இறக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒருவர் ஒருவரை மரணத்தால் இழக்கிறார். வாழ்வு நிலையற்று இருக்கும் போது, நிலையற்ற பொருட்களை, நல்ல செயல்களை செய்யாமல், வைத்திருப்பதால் என்ன பயன்? இறந்த பின் என்னத்தை கொண்டு போகப்போகிறாய்? மீண்டும் மகாபாரத்தத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம், யக்கர் / யக்ஷகர் ஒருவனின் கேள்வி ஒன்றிற்கு தருமன் இப்படி பதில் அளிக்கிறான். யக்கர்: இந்த உலகில் மிகவும் வியப்படையச் செய்வது எது ? தருமர்: ஒவ்வொரு நாளும் மக்கள் மரிணிக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், உயிருடன் இருக்கும் இந்த மனிதன் தான் சாகப்போவதில்லை என நினைக்கிறான். இது தான் இந்த உலகின் திகைக்கவைத்த ஒன்று என்கிறான். உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன. உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதே போல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான். இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும் என்ற கருத்தை உடையவர். இவர் தனது ஒரு பாடலில் " ... பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்க ளேநீர் கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே என்னபயன் கண்டீர் சுட்டே ... பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச் சம்மதிக்கும் பேய ரேநீர் ... " [திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5609] என்று கேட்கிறார். மேலும் இவர் "இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்?" [திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5600] என்றும் தனது அவாவை வெளிப்படுத்துகிறார். அதாவது உலகத்து நன்மக்களே! செத்தவர்களை அடக்கம் செய்ய எடுக்கும் போது வாய்விட்டுப் புலம்புகின்றீர்களே அன்றிச் சாவாத பெரிய வரத்தை ஏனோ பெறாது ஒழிகின்றீர்கள் என கேட்க்கிறார். அது மட்டும் அல்ல, பறை மேளத்தின் சத்தம் கேட்டு தான் கலங்குவதையும் கூறுகிறார். "மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம் காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்" [திருவருட்பா 3428.] மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே! உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்; உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கை என்கிறார். இறுதியாக திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றை பார்ப்போம்: "நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிரமாணமே கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே." உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர். இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது ஊரார் பிணம் என்று சொல்லி வெறுக்கத்தக்க பொருளாகக் கிடக்கும் என்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யார் கண்பட்டதோ தெரியல்ல அந்த இடமும் போய்விட்டுது..1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயப்படாதீங்கோ உங்களை வீரப்பன் தாங்குகிறார்.. விழவே மாட்டீங்கள் 8 நீர்வேலியான் 20 19 வீரப் பையன்26 18 இப்படியெல்லாம் publicக்காக கேட்டு முதல்வரிட்ட போட்டுக் கொடுக்கிறது சரியா இல்லை😥1 point- தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
இதுதான் பிரச்சனையே.. இவர்கள் தமிழ் மக்களுடன் எத்தகைய தொடர்பினை வைத்திருக்கிறார்கள்? இந்த அரசாங்கத்தில் அவுஸ்ரேலியாவிற்கான பிரதிநிதி யார் என்றாவது தெரியுமா? இவரது அறிக்கையில் கூறும் விடயங்கள் சரியென்றாலும் கூட மக்களோடு சேர்ந்து இயங்காத அல்லது மக்களால் அறியப்படாதவர்களின் கூற்றினை மக்கள் கவனத்தில் எடுப்பார்கள் என நம்புகிறீர்களா?1 point- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
கேள்வி : பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம். பதில்: விபுகள் மக்களை விடுவித்து முள்ளிவாய்க்காலைத் தவிர்த்திருக்கலாம்1 point- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை. புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள். பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான் வந்தவை. இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன. ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உங்களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄1 point- தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு!
தமிழர் இருப்புக்காக செயற்றிட்ட வரைவு! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தயாரிப்பு (ஆதவன்) தமிழ்த் தேசிய இருப்புக்காக, ஐந்து அம்ச யோசனைகளைக் கொண்ட மூலோபாயக் கொள்கை மற்றும் செயற்றிட்ட வரைவைத் தயாரிக்க முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினர் தெரிவித்ததாவது:- * தமிழர் தாயகத்தில் தமிழர் குடிப்பரம்பலை நிலைநிறுத்தலும், பிறப்பு வீதத்தை அதிகரித்தலும், அனைத்துத் தமிழர் கல்வி அடைவுமட்ட உயர்த்தலும் * தாயகக் கிராமங்களில் விஞ்ஞானத்துறை ஆசிரிய வளத்தை அதிகரித்தலும், வளப் பங்கீட்டை உறு திப்படுத்தலும் * தமிழர் பிரதேசங்களில் சுகா தார மருத்துவ சேவைகளை மேம்படுத்தலும் மருத்துவமனைகளில் மனிதவளம் குறிப்பாகத் தமிழ்த் துணை மருத்துவ ஆளணி மேம்பாட்டை அதிகரிக்கும் வேலைத்திட்ட முன்னெடுப்பும் * தமிழர் எதிர்கொள்ளும் விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்புச் சவால்களை வெற்றிகொள்ளலும், ஏழைத்தமிழரின் நீண்டகால வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும் *இளையோர் எதிர்கொள்ளும் போதை, தற்கொலை, விபத்துப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்தலும், தமிழ் மாணவர்களின் அறநெறிக் கல்வியை வலுப்படுத்தலும்ஆகியனவே இந்த ஐந்து அம்சத் திட்ட யோசனைகளாகும். இதேவேளை நிபுணர் குழுவில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் எமக்கு அறியத்தரலாம் என்பதுடன், பொருத்தமானவர்களை முன்மொழியலாம் - என்றுள்ளது.(ஏ) https://newuthayan.com/article/தமிழர்_இருப்புக்காக_செயற்றிட்ட_வரைவு!1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
1 point- அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தமிழீழ மகளிர் அணி
வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை. ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும். -தோழர் பாலன்- இரண்டுக்கு ஒன்று என்று, நிறைவு பெற்றது. தேசியகீதம், தமிழீழ அணி என தமிழில் எழுதப்பட்டவை தேசியக் கொடி இவை நமது நோ்மறையான குறியீடுகள். இலங்கை இந்திய அரசுகளுக்குத்தான் இன்னும் வயிற்றெரிச்சல். -Nagamany Sathasivam- இந்த உலகிற்கு தமிழீழ அணி என்று சொல்ல வைத்து உள்ளோம். இதுவே ஒரு வெற்றிதான் அண்ணா விரைவில் தமிழீழ அணி அங்கிகாரத்துடன் அதன் வெற்றியை உறுதி செய்யும் ... -இராஜேஷ் இராஜேந்திரன்- தோல்வியில்லை. வெற்றி பெறவில்லை. இறுதி சுற்றில் எத்தனயோ பெரிய குழுவெல்லாம் அசால்டா தட்டி வந்ததே மிகப்பெரிய வெற்றி. -Vijayakumar Tharmalingam-1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
பாதுகாப்பான நாடுகளில் சொகுசாக இருந்து தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை. நாம் அங்கே போய் எமது குடும்பத்தை அதற்கு பலி கொடுக்க மாட்டோம் சார். 😂1 point- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
தேர்தல் நடப்பதற்கு முன்பு தான் சமூகவலைத்களங்களில் காட்டபடுகின்ற சீமான் விம்பத்தை 💪 வைத்து சீமான் கட்சி தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் சீமான் முதல்வர் என்று நம்புகிறார்கள் என்று பார்த்தால் தேர்தல் முடிவு வந்த பின்பும் சீமான் கட்சி தான் வெற்றி வாகை சூடியது என்கின்றார்களே🙄1 point- 4 வயதுச் சிறுமி தாக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி கண்டனம்
4 வயது சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த மீது கைதிகள் தாக்குதல் 08 JUN, 2024 | 01:34 PM 4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/1855891 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேற்கிந்தியத் தீவுகள் 144 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் 173/5 உகண்டா 39/101 point- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட பல பலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் விடுவித்திருக்கலாம். மக்களுக்கு உதவ என சென்ற அமெரிக்க உதவி நிறுவனம் தாங்களாகவே மக்களுக்கு உதவுவதாக கூறி மக்களுக்குள் மக்களாக நின்று காட்டிக்கொடுத்ததாக பலஸ்தீனிய செய்திகள் கூறுகின்றன.1 point- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முனை போர்க்களங்கள் பலஸ்தீன பிரச்சனையை முன் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது இஸ்ரேலின் வீர தீரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? ஏனெனில் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் மிக வலுவாக காலூன்றி விட்டார்கள் மத்திய கிழக்கு பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அவலங்கள் நிகழப்போவது ஐரோப்பாவிலும் சேர்த்து தான்.1 point- உண்மை நிகழ்வு
1 point- 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சரியான கணிப்பு. அது போன்றே 34 தொகுதிகளில் அதிமுக பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 20.46 % 40 தொகுதிகளில் சீமான் கட்சி பெற்று கொண்ட வாக்குகள் தமிழ்நாட்டில் பதியபட்ட செல்லுபடியாகும் மொத்தமான வாக்குகளின் 8.10 %1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டது சரி தான்....நல்ல அணி....1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்க பரவாயில்லை. நான் பைனலுக்கு இவங்களைத் தான் தெரிவு செய்திருக்கிறேன். தேவையா? அவுஸ் பாபடோசுக்கு நல்ல பிட்ச்சை கொடுத்திட்டு மற்றைய இடங்களுக்கு அடிக்கவே முடியாத பிட்ச்சைக் கொடுத்து விட்டார்கள். இதைப் பற்றி கதைச்சா கங்காருவை அவிட்டு விடுறாங்க. என்ன கொடுமை சரவணா? @P.S.பிரபா1 point- சிட்னியில் வாங்கிய கத்தி...
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஏனக்கா இவ்வளவு சீரியஸ்? என்னைப் பாருங்க முட்டையை அவிச்சு சாப்பிட்டிட்டு சும்மா இருக்கிறேன்!1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 9 தொகுதிகள் 9 தொகுதிகள் - 3 புள்ளிகள் 8 தொகுதிகள் - 2 புள்ளிகள் 7,6 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலி, நுணாவிலான்,பிரபா 1)நிழலி - 57 புள்ளிகள் 2)கிருபன் - 57 புள்ளிகள் 3)கோஷான் சே - 55 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 50 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 49 புள்ளிகள் 7)நுணாவிலான் - 41 புள்ளிகள் 8)வாத்தியார் - 40 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 30 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 31 கேள்விகளுக்கு (67 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? – கொரியா நடத்தும் சும்மா இருக்கும் போட்டி!
எதற்காக கம்பெனி ரகசியங்களை வெளியிடுகிறீர்கள் ..........! 😴1 point- சாமி சிறீ பாஞ்
1 pointமீண்டு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.🙏 தங்களை நேரில் சந்தித்ததில் பல மடங்கு மகிழ்ச்சி. கடல் கடந்த தேசத்தில் இனிய உறவாக, அண்ணனாக தங்களை கிடைக்க வழி சமைத்த யாழ்களத்திற்கும் நன்றி.😍 தாங்கள் என்றும் நலமுடன் நீடூழி வாழ வேண்டுதல்கள்.🙏1 point- யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
சுமந்திரனோ அல்லது அவரது தலைவர் சம்பந்தனோ தமிழ் பொதுவேட்பாளர் என்பதை முற்றாக நிராகரித்துவிட்டவர்கள். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் உறுதியாக நிற்பவர்கள். ஆகவே, சுமந்திரன் அழைத்திருக்கும் இந்தக் கலந்துரையாடல் என்பது தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கருதுகோள் மீது மக்களுக்கு ஐயத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி, மக்களை அதிலிருந்து விலகிச் செல்ல வைக்கும் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. சுமந்திரனின் இந்தக் கோரிக்கையினை சிவில் அமைப்பினர் நிராகரித்தமை நியாயமானதே. சரியான முடிவு. இங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருக்கவில்லை. சைவம், கத்தோலிக்கம் ஆகிய தமிழர்களின் இரு பிரதான மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் இருக்கிறார்கள். மக்களை வழிநடத்தவேண்டிய அரசியல்த் தலைவர்கள் அடுத்த சிங்கள ஜனாதிபதியை உருவாக்கும் நோக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும்போது, மக்களுக்குத் தலைமை தாங்க மதத் தலைவர்கள் முன்வருவது வரவேற்கப்படவேண்டிய செயலே. பாராட்டுக்கள்.1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
1 point - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.