Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1962
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1836
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/02/24 in all areas

  1. சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம். வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா? தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்? முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர். இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர். அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும். டொட்.
  2. திருமணத்துக்கு வரவில்லை என்பதில் இருந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. பிறகு அவள் அழைத்தாள் என்பதற்காக அவளது வீட்டுக்குப் போயிருக்கிறார். போனவர் அதை அந்தரங்கமாகவே வைச்சிருந்திருக்கலாம். “டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை விளையாடுவோமா உள்ளே வில்லாளா …” பாட்டைப் போட்டிருப்பாளோ? ஆண்களுக்கு சில நேரம் முன் புத்தி வேலை செய்வதில்லைப் போலே.
  3. இது நடப்பது அருமை தான். பொதுவாக எகிறுபவை. அவை நீரில் இருந்து எகிறும் போது, காற்றுப்பை (swim / air bladder) நிரம்பி முழு உடலும் முறுக்கெடுத்து, கிட்டத்தட்ட நீண்ட ஆட்டிலறி ஷெல் போலத்தான் வரும். இந்த குடும்ப மீன்களால் (முரல், sword fish, மயில் மீன் (sail fish), பாய் மீன் (marlin குடும்பம்) இப்படியான இறப்பு அல்லது பலத்த காயம், அங்கங்கள் துண்டிக்கப்படுதல் அவ்வப்போது நடக்கிறது. பெரிய சீலா மீன் கூட தடித்த ஈட்டியாக வரும் தன்மை உள்ளது.
  4. @நிழலி சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில் முடிவெடுக்கும் பொறுப்பு வாய்ந்த தலைவராக உருவேடுத்தது 2009 இன் பின்னரே. 1977 ல் அவர் முதல் முறையாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து 1983 வரையான குறுகிய காலப்பகுதியில் அவர் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே. 1983 ல் ஆயுத போராளிகள் போராட்டத்தை முழுமையாக கையில் எடுத்த பின் 2004 வரை அவர் மற்றைய அரசியல்வாதிகளைப் போல செல்லா காசாகவே இருந்தார். போரட்டதை முழுமையாக வலுக்கட்டாயமாக (byforce) பொறுபெடுத்தவர்களுக்கே போராட்ட தோல்வியில் அதிக பொறுப்பு உண்டு. 2004 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் நிபந்தனையுடன் புலிகள் அவரை அங்கீகரித்திருந்தாலும், சம்பந்தர் புலிகளின் கருத்துகளை சர்வதேசத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். தனது சொந்த கருத்துக்களை பொதுவெளியில் பேசும் உரிமை அற்ற ஒருவராகவே விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தார். திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே இதை தெரிவித்திருந்தார். புலிகள் மட்டும் தான் இங்கு அரசியல் செய்கிறார்கள் . நாம் சொல்வதை செய்வதை மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்ய முடியும். அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியாது என்று திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக் காட்ட விளைகிறேன். அவர் முழுமையான முடிவெடுக்கும் தலைவராக வந்த 2009 இன் பின்னரான காலப்பகுதியில் அவரால் அரசியல் தீர்வை கொண்டு வர முடியவில்லை. அவரின் குறுகிய கால அரசியல் தலைமை வெற்றிகரமாக செயற்படவில்லை என்பது ஏற்று கொள்ள தக்கதே. அதற்கான அரசியல் சூழ்நிலையும் அவரது குறுகிய காலத்தில் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், 2015 ம் ஆண்டுக்கு முன்பு மகிந்த ஆட்சியில் தமிழர் பகுதியில் படுமோசமான இராணுவ ஆட்சியே நேரடியாக நடை பெற்றது. மாவீரர் தினமோ வேறு தமிழர் சார்ந்த எந்த உரிமை அரசியல் நிகழ்வுகளோ நடத்த முடியாத நிலை இருந்தது. மகிந்தவும் கோத்தாவும் நினைத்தபடி மட்டுமே ஆட்சி நடை பெற்றது. 2016 ல் நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் அவரது முடிவு தமிழரில் உரிமை அரசியலை மேற்கொள்ளுவதற்கான ஒரு ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இன்று அவரை திட்டித் தீர்க்கும் புலம் பெயர் அரசியலாளர்கள் கூட தாயகத்துக்கு விசிற் அடித்து தமது குடும்ப உறுபகினர்களுடன் மகிழ்வாக இருக்க சந்தர்ப்பம் 2016 ல் அவரது அரசியல் முடிவினால் உருவான நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏற்பட்டது. 2015 ன் முன்பு. தாயகத்திற்கு செல்ல தொடை நடுங்கிக் கொண்டிருந்து, 2016 ன் பின்னர் இலங்கை சென்ற பல புலம் பெயர் வீராதி வீரர்கள் பலரை நான் அறிவேன். மற்றப்படி ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு உள்ள வியாதியான சாகும்வரை பதவியில் இருத்தல் என்பது அவரையும் தொற்றிக் கொண்டது என்பதும் மறுக்கமுடியாததே. சம்பந்தரின் பல தவறுகள் விமர்சனத்துக்கு உரியவையே என்பதை ஏற்றுக் கொளுகிறேன். ஆனால் முழு பழியையும் அவர் மேல் போட்டு திட்டி தீர்ப்பது இழிவானவர்களின் செயலே. நிழலி, தாங்கள் தளத்தின் உரிமையாளர். எமக்கு இங்கு எழுத இடம் தந்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களுடன் எதிர்வாதம் புரிந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
  5. இனி தேவையே இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டது 😜
  6. நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது. நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார். நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை. 'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. 'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான். இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை. நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான். ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன். தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார். ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
  7. கருணா, பிள்ளையானுடன் ஒப்பிடேக்க ஆள் பரவாயில்லை தான். ஆனால் கருணா, பிள்ளையான் போன்ற கேடுகெட்ட போக்கிலிகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமை என்று கதைத்து அரசியல் செய்யுமளவு வெற்றிடத்தை உருவாக்கி கொடுத்ததில் தாத்தாவுக்கு பெரிய பங்குண்டு. இப்போது கூட ஹரிஸ், ரவுப் ஹக்கிம் போன்ற முசுலிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுதாபங்களுடன் கொண்டாடி தீர்க்க முசுலிம் மக்கள் அழாத குறையாக வழியனுப்பி வைக்க தமிழ் மக்களோ பிணத்தை தோண்டி எடுத்து கிழிக்கும் அளவுக்கு வசவுகளை வாங்கும் அளவுக்கு தனது இனத்திற்கு செய்த கசபோக்கிலி அரசியல் மட்டுமே தாத்தாவின் ஆயுட்கால சாதனை
  8. அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம். அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெளியில் செல்வது போவதென இருப்பர். எப்போதாவது ஒருநாள், டாலர் ஸ்டோர்களில் ரெண்டு டாலர், மூன்று டாலருக்கு பையனுக்கு ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கிப் போவேன். அப்படித்தான் ஒருநாள் “கார்” ஒன்று வாங்கிப் போனேன். அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அடுத்தடுத்த வார ஈறுகள் சென்ற போதெல்லாம் கவனித்தேன். அந்த காரின் பெட்டியை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்பாட்டுக்கு. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தடுத்த வாரங்கள். அந்தப் பெட்டி அடிவாங்கி, அழுக்காகி, நைந்தே போயிருந்தது. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தவாரம். சென்றமுறை சிவப்புவண்ணக்கார். இம்முறை நீலவண்ணம் வாங்கிக்கொள்ளலாமென வாங்கிக் கொண்டோம். பிரித்தெடுத்து, காரை பையில் வைத்துக் கொண்டு, பெட்டியை மட்டும் பிரிக்காதபடிக்கு மீண்டும் ஒட்டி, கொண்டு போய்க் கொடுத்தோம். ஒரே சிரிப்பு. ஓடோடி வந்தான். வாங்கி உள்ளே பார்த்தான். தூக்கிவீசி விட்டு, மீண்டும் பழைய பெட்டியையே ஓட்டலானான். நமக்குப் படு ஏமாற்றம். அண்ணன் பார்த்துச் சிரித்தார். நான் பையைத் திறந்து, புதுக்காரை வெளியில் எடுத்துக் கொடுத்தேன். அவன் கண்டுகொள்ளவே இல்லை. பெட்டிக்குள் வைத்து, புதிதாய்க் கொடுப்பது போலக் கொடுத்தும் பார்த்தேன். கண்டுகொள்ளவே இல்லை. அந்த வாரத்தங்கல் பெருந்துக்கமாகப் போய்விட்டது நமக்கு. அண்ணன் சொன்னார், “மணி, எடுத்துட்டுப் போயி ரிட்டர்ன்பண்ணிட்டு, ரெண்டொரு வாரம் கழிச்சி வேற எதனா வாங்கியாங்க, செரி ஆயிருவான்”. ஒருமாதமே ஆகியிருக்கும். மஞ்சள்வண்ணக்கார், பதினைந்து டாலர்களுக்கு, ரிமோட்டுடன், கனடியன் டைர் எனும் கடைக்குச் சென்று தனிக்கவனத்துடன் வாங்கி வந்தேன். மனசெல்லாம் உலுக்கம். என்ன ஆகுமோ ஏது ஆகுமோவென. “தம்பி, இங்கபாரு, இந்தவாட்டி என்னானு”. அமைதியாகக் கிட்ட வந்தான். கையில் வாங்கி, எடையைக் கணித்தான். உலுக்கினான். உட்கிடை இருப்பதை உணர்ந்து கொண்டான். இந்தப் பெட்டி, பளபளவென உயர்தரத்தில் இருப்பதைக் கவனித்துக் கொண்டான். சமையலறையில் இருக்கும் அவனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சமையலறைக்குள் போனான். வெளியில் வந்தான். பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே, படுக்கையறைக்குள் போனான். “அம்மா, இங்க வாங்க நீங்க”. கொஞ்ச நேரத்தில் முன்னறைக்கு வந்தான், வெறும் பெட்டியோடு. தரையில் ஓட்டுபவன், பக்கவாட்டில் சுவர்களினூடாக ஓட்டினான், ஓட்டினான், ஓட்டிக்கொண்டேவும் இருந்தான். சாப்பிடக் கூப்பிட்டாலும் அவனுக்கு வர விருப்பமில்லாது, ஓயாமல் ஓட்டிக் கொண்டே இருந்தான். “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள பத்திரமா இருக்கு”. புரியவே இல்லை. “இதென்னுங்ணா இது? புதுக்காரு, இதுக்கும் ரிமோட் காரு, இப்படிப் பண்றானே?” “அது மணீ, சந்தோசம்ங்றது கார்ல இல்ல. நம்மகிட்டக் கார் இருக்குங்றதுல இருக்கு சந்தோசம். நீங்க வாங்க சாப்ட்லாம்”. பணிவுடன் பழமைபேசி http://maniyinpakkam.blogspot.com/2024/06/blog-post_28.html
  9. 😟 தலைவர் சொன்னதிற்காக, கட்சி சொன்னதிற்காக மக்கள் வாக்களிக்கும் நிலை இருக்க கூடாது. நான் அப்போதைய நிலையில் சிவாசிலிங்கத்திற்கு தான் வாக்கு அளித்திருப்பேன். ஆனால் இப்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். நீங்கள் இன்னொரு திரியில் சொன்னது போல் ஒரு ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சிங்களவர்கள் முஸ்லிம் மலையக மக்களுக்காக நின்றால் அவரை நான் சுமத்திரன் எதிர்த்தாலும் வாக்கு அளிப்பேன்.
  10. உங்கள் கருத்துடன் முற்றாக உடன்பாடில்லை, எனவே அந்த "டொட்" தாண்டி இதை எழுத அனுமதியுங்கள்: 1. மேலே கள உறவான @நியாயம் தான் சம்பந்தன் பற்றிய துல்லியமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்: "அவர் பாராட்டப் பட வேண்டியவரும் அல்ல, அதே நேரம் இங்கே பலரும் செய்வது போல தூசிக்கப் பட வேண்டியவருமல்ல". ஆனால், விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவரும் அல்ல (ஆனால், புலிகளை விமர்சிப்பது புலிக்காய்ச்சலால் மட்டும் தான் என்பது வேறு விடயம்😎!). 2. ஒவ்வொருவரும் தன் நிலைக்கேற்ப செயல் பட்ட காலத்தில், சம்பந்தன் தன்னால் செய்யக் கூடியதைச் செய்தார். இதற்குப் பயன் இல்லை என்பதால் யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப் பயன் இல்லாத செயல் செய்தார்கள் என்று ஒரு தரப்பைத் திட்டுவதானால் புலிகளையும் திட்ட வேண்டிய நிலை வரும். இதை @island சுட்டிக் காட்டியதில் அர்த்தம் இருக்கிறது. திரிக்குத் தொடர்பும் இருக்கிறது. 3. ஆனால், "பயனற்ற செயல்கள் செய்தார், செயலே செய்யாமல் இருந்தார்" என்று சம்பந்தரை வைதோரை விட , "புலிகளை மானசீகமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்" என்று கருதியோர் தான் அவர் மரணத்தை இங்கே கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு, புலிகளை இழுக்காமல் எப்படி பதில் சொல்வது என நீங்கள் ஏதாவது வழி வைத்திருக்கிறீர்களா? என்னிடம் அப்படியெதுவும் இல்லை. 4. இந்த சம்பந்தன் மீதான வசவையெல்லாம் "எதிர்கால தமிழ் தலைவர்களுக்கு பாடம் கற்பிக்க செய்கிறோம்" என்று நேராகவே ஒருவர் எழுதியிருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்று நினைக்கிறீர்கள்? "2009 இற்கு முன்னர் இருந்த அதே நிலைப்பாட்டோடு, புலிகளின் பாரம்பரியத்தை தலையில் சுமக்காத தலைமையாக இருந்தால், செத்தாலும் திட்டுவோம், உயிரோடிருக்கும் போதும் செருப்பால் அடிப்போம்" என்று என்று தான் எனக்கு விளங்குகிறது. இந்த அணுகுமுறையின் விளைவு என்னவென்று நினைக்கிறீர்கள்? தாயகத்தில், அடுத்த நிலையில் ஒரு தமிழ் அரசியல் தலைமையும் இளையோரிடமிருந்து இப்போது இல்லை. இனியும் அவர்கள் வரப் போவதில்லை. இப்படி வெளிநாட்டில் சொகுசாக இருந்த படி தாயக அரசியல் வாதிகளுக்கு செருப்புக் காட்டும் "மண்ணு லாறி" கூட்டங்கள் இருக்கும் வரை, தாயக தமிழர்களுக்கு அரசியல் தலைமையும் புதிதாக வராது, அரசியல் ரீதியாக முன்னேற்றமும் வராது. இத்தகைய ஒரு பேரிடர் நிலை வராதிருக்க, பேசித்தான் ஆக வேண்டும்.
  11. உண்மையில் போராட்டம் 2009 இன் பின்னர் புலம்பெயர் தமிழ்ப் போராளிகளிடமும் செந்தமிழன் அண்ணாவிடமும் சம்பந்தபட்டவர்களால் கையளிக்கப்பட்டுவிட்டது. மாறாக ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் சத்தியம் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுக்கப்படவில்லை. சும்மா சம்பந்தர், சுமந்திரன், கருணாநிதி போன்றோருக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்காமல் புலம்பெயர் போராளிகள் புலத்தில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். அப்போதுதான் சம்பந்தன் வகையறா இலங்கை பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ் மேற்கு, இந்தியா அல்லது ஏதவது ஒருநாட்டின் உதவியுடன் ஏதாவது ஒரு தீர்வைப் பெற்றுவிடலாம் என்று தாமும் நம்பி மக்களையும் நம்பவைக்கும் அரசியல்வாதிகளை ஒதுக்கமுடியும்!
  12. ஒரு வேளை டக்ளஸ் இறந்தால் இதைவிட மோசமாக திட்டுவார்கள்.. இந்த சோசல்மீடியா இணையம் இதைப்பற்றி எதுவுமே தெரியாத எங்கள் ஊரில் இருக்கும் பல அம்மா அப்பா பாட்டி தாத்தா அப்பத்தாக்கள் எவ்வளவு கேவலமாந்திட்டுவார்களோ அவ்வளவு கேவலமாக திட்டுவார்கள்.. எனக்கு தெரிஞ்சு மட்டும் சமாதான காலத்தின் இறுதிப்பகுதிகளில்(2004-2006) மட்டும் ஒரு முப்பது பேரை ஸ்கூட்டி பெப்பில் வந்து ஈபிடியினர் ராணுவப்புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து சுட்டிருப்பார்கள்.. சீலன் உட்பட எனது நண்பர்கள் மூன்று பேரை சுட்டிருந்தனர்.. என்னைக்கூட ஆள்மாறி தேடி வந்திருந்தனர்.. ஒரு மயிரிழையில் நான் வன்னிக்கு பின் காணியால் வெளிகிட்டு பஸ் ஏறி போனதால் தப்பினன்.. தேத்தண்ணிக்கடை கண்ணன், பலசரக்குக்கடை சின்ராசண்ணை, பிரபாகரன் பிறந்த நாளுக்கு பொங்கல் பொங்கிய எங்கூரு வர்த்த்க சங்கர்தலைவர், கப்பம் குடுக்காததால் சுடப்பட்ட நகைக்கடை அண்ணை, பஸ் ஓனர் பாலா அண்ணை, ஆட்டோ ஓடுற பொடியள் மட்டும் ஒரு பத்து பேர் வரும் எங்கட ஏரியாவில்.. வரலாற்றின் இடியமின் யாழ்ப்பாண மக்களுக்கு இந்த டக்ளஸ் உம் அவன் கூட்டமும்..
  13. https://fb.watch/t3kWkwrr_v/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V பாடலைக் கேழுங்கள்.
  14. சமீபத்தில் நாட்டிற்க்கு போயிருந்தபோது என்னோடு படித்த ஒரு முஸ்லீம் நண்பன் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் பிரச்சார பீரங்கி. படிக்கும் காலத்தில் படு மொக்கு, சாதாரண தரம் கூட குதிரையோடி சித்தியடைந்து முஸ்லீம் மந்திரிகளின் கைகளில் கால்களில் விழுந்து நீதிமன்று இலிகிதராக உள்ளான். எதோ ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறதே என்று சும்மா வாகனத்தை ஒடித்து எதேச்சையாக நோட்டம் விட்டேன் பேச்சைக்கேட்டு ஒரு நிமிடம் விதிவிதிர்த்து போய்விட்டேன். தமிழே எழுதவராத பேசவராத ஒருவனிடம் எப்படி இந்த மொழி ஆளுமை என்று. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது எங்கே, எப்படி எப்போதெல்லாம் கோட்டைவிட்டோம் என்று. அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச சபை முன் வழமை போல தலையில் பட்டியை கட்டிக்கொண்டு "மாரித்தவக்கை" சான்ஸ், கூத்தமைப்பு உபயத்தில் கூட்டமாய் உட்கார்ந்துகொண்டு பதாகை பிடித்துக்கொண்டு இருக்கினம். பிரதேசபை தரமுயர்த்தபடுகுதோ இல்லையோ கனடாவில் அசைலம் அடிக்க எடுக்கும் படங்கள் உதவும் போல. அப்புறம் ஓட்டை விழுந்த கப்பலின் கேப்டன் தத்தா நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறார். அவரால் ஒன்றும் கிழித்திருக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க கடலில் இறங்கி தள்ளுங்கள் அடுத்த பொங்கலுக்கு தீபாவளிக்கு கரைசேர்ப்பேன் என்று வாயால் வடை சுடாமலாவது இருந்திருக்கலாம். தாத்தாவின் இழப்பு ஒருவகையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும், தாத்தா குத்தி குத்தி உடைத்த மேசைகளை இழப்பீடு செய்யப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டி வந்தது. இனி வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பயமில்லாமல் இலங்கை வந்து கூத்தமைப்பானுகளோடு கூத்தடிக்கலாம் மேசையில் குத்தி பயம் காட்ட தாத்தா இல்லை. போய் வாருங்கள் தாத்தா உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமளவுக்கு அப்பாடக்கர் இல்லை நீங்கள்
  15. சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும் சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
  16. இந்த விளையாட்டு திரியில் ஆதியும் அந்தமும் ஆசானும் நீங்கள் தான்... @கிருபன் மூன்று கருத்து எழுதியவுடன் சலித்து போகும் எங்கள் மத்தியில்... இந்த விளையாட்டு திரியை கண்ணியத்துடன் மத்தியஸ்தம் செய்து சரி பிழை பார்த்து நேரம் தவறாமல் மதிப்பெண்களை கொடுத்து மதிப்பெண் பட்டியல்கள் தயாரித்து....... இதெல்லாம் எப்படி? நெஞ்சில் வீரமும் தீரமும் கொண்ட கொள்கையில் தீவிரம் உள்ளவர்களாலேயே இது முடியும்.☘️ உங்களை பாராட்டி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன்.👈🏽 💐🙏
  17. போட்டிகளை சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடத்திய @கிருபன் க்கு நன்றிகளும், வாழ்த்துகளும். வெற்றி பெற்ற @பிரபா, @ஈழப்பிரியன் அண்ணை, @கந்தப்பு மற்றும் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள். போட்டிக்கு என்னை வெருட்டி இழுத்துக் கொண்டு வந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு என் நன்றிகள். சாரே......... @வீரப் பையன்26 சாரே............ நாளைக்கு என்ன செய்யிறது........ எனக்கு கையும், காலும் ஓடாதே....... நீர் ஒரு அதிசயப் பிறவி ஐயா........🙏.....
  18. போட்டியில் வென்ற பிரபாவிற்கும் அடுத்த நிலைகளில் வந்த ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கந்தப்பு அண்ணைக்கும் வாழ்த்துக்கள்🙌 போட்டி முடியும் வரை திரியைக் கலகலப்பாக வைத்திருந்த பையன் , ரசோதரன் மற்றும் ஈழப்பிரியன் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றிகள்❤️👍 போட்டியில் ஒரு தவறு நடந்து விட்டது எனக் கந்தப்பு அண்ணை எழுதிய பொது "கிருபர் ஜீ நீங்களே முடிவெடுத்து புள்ளிகளை வழங்குங்கள் " என எந்தவிதமான எதிர்ப்பையும் வைக்காமல் சகல போட்டியாளர்களும் ஒன்றாக நின்றமை உண்மையிலேயே களத்தில் கிருபர் ஜீ வேறை லெவல் என்பதைக் காட்டுகின்றது. அதற்காக அனைத்துப் போட்டியாளர்களுக்கு நன்றிகள்🙏 தொய்வில்லாமல் புள்ளிகளை உடனுக்குடன் வழங்கி அடுத்து யார் யாரைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் அடுத்து யார் யாருக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது என ஆவலுடன் அடுத்த போட்டியைம் பார்க்க வைக்கும் விதத்தில் போட்டியை நகர்த்திய கிருபர் ஜீ உண்மையிலேயே நீங்க வேறை லெவல் 🙌
  19. ஷாஜன் கவிதா நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே! இது இயற்கைக்கு எதிரானது அல்ல!", "எங்களோட உணர்வுகளை வானவில்ன்னு சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துறாங்க!" என்று தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்கள், மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கள் உணர்வுகளைப் பேரணியில் பகிர்ந்து கொண்டனர். சென்னை மற்றும் கோவையில் நேற்று நடந்த வானவில் பேரணியில் நடைபெற்ற காட்சிகள்தான் இவை. பொதுச் சமூகத்தில் சமீபமாக LGBTQ+ பற்றிய அடிப்படை புரிதல்கள் தெளிவாகிவரும் சூழலில், சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராகக் கேலி கிண்டல்களும் அதிகரித்தே வருகின்றன. உண்மையில் இவர்கள் இயற்கைக்கு எதிரானவர்களா? இந்த வானவில் பேரணியின் தொடக்கம் எங்கிருந்து தொடங்குகிறது? வாருங்கள் பார்க்கலாம். வானவில் பேரணி எங்கிருந்து தொடங்கியது? 1969-ல் ஜூன் மாதம் அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் நடைபெற்ற ஸ்டோன்வால் போராட்டம்தான் இந்த PRIDE மாதக் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளி. அன்று அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்களை மாஃபியாக்களை போலக் கும்பல் கும்பலாகக் கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை எதிர்த்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வீதியில் இறங்கிப் போராடினர். அவர்களின் தொடர் செயல்பாடுகளால் 1979-ம் ஆண்டு, “மற்றவர்கள் போல இவர்களும் சமமானவர்களே, அவர்களை ஒதுக்கக்கூடாது” என்ற சட்டத்தை 39 மாகாணங்களில் செயல்படுத்தியது அமெரிக்க அரசு. ஸ்டோன்வாலுக்குப் பிறகு ஐரோப்பா முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. அதுவே இப்போது சென்னை, கோவை என நாம் வாழும் நகரங்கள் வரை வந்து சேர்ந்திருக்கின்றன. LGBTQ+ என்றால் என்ன? LGBTQ+ என்பது லெஸ்பியன் (Lesbian), கே (Gay), பை செக்ஸுவல் (Bisexual), ட்ரான்ஸ்-ஜெண்டர் (Transgender), குயர் (Queer) என்ற மாற்றுப் பாலின மற்றும் பால்புதுமையினர் மக்களை அடையாளப்படுத்தும் சொற்களின் சுருக்கம். ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது என்ற செய்தியினைப் பார்த்திருப்போம். இப்போது ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதே தம்பதியில் ஒருவர் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் செய்திகளில் காண்கிறோம். சொல்லப்போனால் 'ஓரினச் சேர்க்கை' எனும் வார்த்தையே மரியாதைக் குறைவான வார்த்தையாகப் பார்க்கப்பட்டு அதற்குப் பதிலாக தன்பால் ஈர்ப்பாளர், ஓர்ப்பால் ஈர்ப்பாளர் (Gay, Lesbian) என்னும் வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதே போல திருநர், திருநம்பி, திருநங்கை, பால் புதுமையினர், மாற்றுப்பாலினம் எனக் கண்ணியமான வார்த்தையால் அழைக்கப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் இங்கே நடந்திருக்கின்றன. எப்போதிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்து வருகிறது? "மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்து வருகிறது. மனிதனிடம் மட்டுமின்றி விலங்கிடமும் இதே நிலை இருக்கிறது" என்று தனது சிம்போசியம் எனும் நூலில் எழுதி இருக்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே ரோமாபுரியை ஆண்ட நீரோ கலிகுலா ஓர்பாலின ஈர்ப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் கொடுத்து தனது காதலன் ஸ்போரஸைத் திருமணம் செய்தது வரலாறு. அதன் பிறகு தன்பாலின ஈர்ப்பு, நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்கைக்கு எதிரானது எனக் கிறிஸ்தவ மதம் வழியாக மிகவும் எதிர்மறையாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அகஸ்டின், தாமஸ் என்ற இரு மதபோதகர்கள், "எந்த வகையான உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கிறதோ அதுவே இயற்கையானது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் இயற்கைக்கு எதிரானது" என்று அதற்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பினர். மருத்துவ உலகம் என்ன சொல்கிறது? 1886-ம் ஆண்டு, மனநல மருத்துவர் ரிச்சர்ட் வான் க்ராஃப்ட்-எபிங் தனது 'சைக்கோபதியா செக்சுவாலிஸ்' என்ற புத்தகத்தில், இது ஒரு ஜீன் குறைபாடு. இதன் மூலம் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று எழுதியிருந்தார். இதைச் சிறிது நாள்களிலேயே மருத்துவ உலகம் நிராகரித்தது. அதேபோல கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாற்றினால் ஏற்படுகிறது என்றும் சொல்லப்பட்டது. அதுவும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சைக்கோ அனலடிகல் தியரியின் படி குழந்தை வளரும் சூழ்நிலையில் ஏற்படும் மனப்பாதிப்பின் காரணமாக இவ்வாறு ஆக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் வீட்டுச் சூழல் சிறப்பாக இருந்தாலும் அந்த உணர்வு தொடர்வதால் அந்த தியரியும் நிராகரிக்கப்பட்டது. அடுத்து ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு ஹோமோசெக்ஸ் (ஓர்பாலீர்ப்பு) விருப்பம் ஏற்படும் எனும் இன்ஃப்ளூயன்ஸ் தியரியும் (Influence Theory) முன்வைக்கப்பட்டன. இதுவும் மருத்துவ உலகில் நிராகரிக்கப்பட்டது. இதனால் மருத்துவ உலகம் ஓர்பாலீர்ப்பு இயற்கையானது என்ற முடிவுக்கு வந்தது. சட்டம் என்ன சொல்கிறது? சட்டரீதியாக ஓர்பாலின ஈர்ப்பு சரியா, தவறா என்னும் கருத்தும் அதற்கான சட்டங்களும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 1804ஆம் ஆண்டு உலகை ஆண்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் ஒரே பாலினத்தில் புணர்ச்சியில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் கொண்டு வந்தார். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்பட்டது. புராணக் காலங்களில் கூட ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்படவில்லை. ஆண், பெண் உறவுகளில் அதுவும் ஒருநிலையாக இருந்துள்ளது. காம சாஸ்திரத்தின் படி ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூட இணை சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதினேழாம் - பதினெட்டாம் நூற்றாண்டில் கூட இது ஒரு பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படவில்லை. கஜுராஹோவில் உள்ள கோயில்களில், பெண்கள் மற்ற பெண்களைச் சிற்றின்பத்துடன் அரவணைப்பது மற்றும் ஆண்கள் தங்கள் பிறப்புறுப்புகளை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வது போன்ற படங்கள் உள்ளன . 1837-ம் ஆண்டு மெக்காலேவின் ஐபிசி தயாரிக்கப்பட்டது. இதன்படி IPC 377 section-படி ஹோமோ-செக்ஸ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளில் இந்தச் சட்டம் பின்பற்றப்பட, நெதர்லாந்தில் 1989 சிவில் பார்ட்னர்ஷிப் சட்டப்படி, "ஒரு ஆணும் ஆணும், ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம்" எனும் சட்டம் வந்தது. அதன்பிறகு 2001-ம் ஆண்டு திருமணமும் செய்து வாழலாம் என்று சட்டம் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி, கனடா, பெல்ஜியம், அமெரிக்கா என ஓர்பாலின திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் கூட 150 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஐபிசி சட்டம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி நீக்கப்பட்டது. ‘பாலினம் என்பது ஆண், பெண் என்ற இரண்டு மட்டுமே கிடையாது. காதல் என்பது எதிர் பாலினத்தின் மீதே வர வேண்டும் என்பதும் கிடையாது. பாலினத் தேர்வு என்பது தனி மனித சுதந்திரம்’ என்பதை முன்வைக்கிறது அந்த சட்டம். பாலின ஈர்ப்பை மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்ற முடியும் என்ற கருத்து முற்றலும் தவறானது. உலக அளவில் மருத்துவத் துறைகளில் இதற்கான சிகிச்சைகள் சோதிக்கப்பட்டன. ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. அறிவியல் பூர்வமாக மருத்துவத் துறையில் நோயாகக் கருதாத ஒன்றிற்கு எதற்காகச் சிகிச்சை பெற வேண்டும்? ஆகவே இது நோய் அல்ல. ஆணும் பெண்ணும் இணை சேர்வது போல, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் தனக்கான பாலினத் துணையைத் தேடிக் கொள்ளும் இணை தேடலே என்கிறது அறிவியல். நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே
  20. இது தேவையற்ற செருகலாகவே நான் எடுத்துக் கொள்கின்றேன். அத்துடன் நான் இந்த தளத்தின் உரிமையாளரும் அல்ல. ஒரு போதும் என் கருத்துக்கு வரும் பின்னூட்டங்களை நான் எதிர்வாதமாக எடுத்துக் கொள்வது இல்லை. அவை எதிர்வினைகள் மட்டுமே. நன்றி
  21. "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "மெத்தை மேல் அவள் உறங்க சத்தம் இன்றி முத்தம் இட கொத்து கொத்தாய் மலர் கொடுக்க ஒத்தையடிப் பாதையில் தவம் கிடக்கிறேன்!" "ஒப்பனை செய்து பிரமனும் மயங்க ஒல்லிய இடைக்கு பட்டை சுற்றி ஒற்றைக் கொம்பன் அருள் வேண்டி ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகிறாள்!" "ஒத்தையடிப் பாதையில் ஒதுங்கிய என்னை நத்தை வேகத்தில் மெல்ல வந்து சித்தம் கலங்க கண்ஜாடை காட்டி சத்தம் வராமல் முட்டி போகிறாள்!" "ஒத்தையடிப் பாதையில் ஓரமாய் நிற்கையில் ஒளிரும் தளிர்மேனி அருகில் வந்து ஒதுங்கிய என்னை ஆரத் தழுவ ஒன்றாய் இருவரும் மகிழ்ந்து நின்றோம்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. அட... ஆமா. 😂 ஆர்வக் கோளாறில், பாய்ஞ்சு பாய்ஞ்சு வாசித்ததில் ஏற்பட்ட தப்பு. 🤣
  23. தவறு.. வெட்டினவர் மருத்துவர் வெட்டு வாங்கியவர் கவின்சிலர்.. செய்தியை வாசிக்கும் ஆர்வக்கோளாறில் தப்பு தப்பா வாசிச்சு தள்ளி இருக்கிறியள்.. 😂
  24. அப்படித்தான் அங்கால நடந்து முடிந்த கிறக்கற் உலக கோப்பையிலும் அக்சர்பட்லேைப் பற்றியும் ஒன்று இரன்டு யுரியுப்புகளைத் தவிர மற்றவர்கள் வாய் திறக்க வில்லை.நன்றி கெட்டவர்கள்.
  25. 🤣😂மக்களை அடைத்து வைத்து, எதிர் ஆயுதங்களை அவர்கள் மீது தாக்க விட்டதை விட, அது நடந்த போது ஓடி ஒழிந்தது மோசமான செயலா விசுகர்😎? தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாக, சம்பந்தர், கருணாநிதி, ஒபாமா, ஹிலாரி எல்லாரும் காரணம். காயம் பட்டவனை ஏற்ற வந்த கப்பலில் கூட மக்களை ஏற்ற அனுமதிக்காத சிறைப்படுத்தல் காரணமேயில்லை😎! நல்லா நடத்துங்க விசுகர்! வார்த்தைகள் இல்லையென்பதை விட நீங்கள் வழமையாகப் பதுங்கும் மூலை வந்து விட்டதென்று சொல்லி விடை பெறுங்கள்!
  26. மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல.
  27. போட்டியில் வென்ற பிரபாவிற்கும் இரண்டாம் மூன்றாமிடம் வந்த ஈழப்பிரியன், கந்தப்புவிற்கும் வாழ்த்துக்கள். 💐போட்டியை திறம்பட நடத்திய கிருபன், திரியை கலகலப்பாக வைத்திருந்த பையன், ரசோதரன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.👏
  28. 56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!
  29. அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று தானாக தேடி வந்தது அழிவு....?
  30. சீ அது அவரால் முடியாது என்று தெரியும். ஆனால் வாயாலாவது வடை சுட வருமே? மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது இவர்கள் சரியாக நடப்பதால் என்று நீங்கள் நினைத்தால் என்னிடம் உங்களுக்கு பதில் சொல்ல நல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.
  31. சம்பந்தன்ர செத்த வீட்டோட இலங்கையில உள்ள தமிழின தலைவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் ஒரு கூட்டுக்குள் வர வேண்டும். இது கட்டளை அல்ல. இது தமிழின தலைவர்களினது கூத்தாட்டத்தின் விளைவாக வந்த சிந்தனை.
  32. அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...
  33. முத‌ல் ஜ‌பிஎல் போட்டி அதுக்க‌டுத்து உல‌க‌ கோப்பை போட்டி மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது . இப்ப‌ வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................ப‌ல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இரவு நேரத்தில் ந‌ட‌ந்த‌தால் இத‌ற்க்குள் உட‌னுக்கு உட‌ன் எழுத‌ முடிய‌ வில்லை....................ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை அதிக‌ம் எழுதின‌து என்றால் நீங்க‌ள் . ஈழ‌ப்பிரின் அண்ணா . ம‌ற்றும் நான் . உங்க‌ட‌ ந‌கைச்சுவை எழுத்துக்கு நான் ர‌சிக‌ன் 🥰👏🙏. அப்ப‌ அப்ப‌ சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்க‌ள் . அதாவ‌து நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி தோத்தா அதுக்கு ஏதும் ந‌கைச்சுவை க‌ல‌ந்து அடிச்சு விடுவிங்க‌ள்😁.................. விளையாட்டு திரிக‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சீண்டுவ‌து என்றால் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்......................... 1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கினேன் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்போன்..................................... அமெரிக்கா விளையாடுக‌ள் என்றால் . NBA . NHL . NFL . இந்த‌ மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன் ஜ‌ரோப்பா விளையாட்டுக‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌து . கைப‌ந்து.......................... நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டின‌ம்.......................boston celtics ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிக‌வும் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை இந்த‌ ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கின‌ம்..............................கூடைப‌ந்து அனைத்து ப‌த‌க்க‌ங்க‌ளை அமெரிக்கா ஆண்க‌ள் அணியும் பெண்க‌ள் அணியும் வென்று கொண்டு போக‌ போகின‌ம்😁......................................
  34. யாழ்வரும்போது ஊர்புதினம் மட்டுமே அதிகமாய் பார்க்கும் வழக்கம் கொண்டவன், ஏனோ சம்பந்தர் போன செய்தியை கவனிக்கவேயில்லை, தற்செயலாக ஒரு இணையதளம் பார்த்தபோது அன்னாரின் இறுதி கிரியை ஏற்பாடு என்றிருந்தது , எப்போடா போனார் என்றிருந்தது, வேலை இடத்திலும் எவரும் இதுபற்றி பேசவில்லை சும்மா சொல்லகூடாது அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலில் ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு போயிருக்கிறார் மனிசன். சம்பந்தர் எதுவும் பெற்றுதரவில்லை என்ற மனதாங்கலில் பலர் திட்டினாலும் சிங்களவன் கொடுத்தால்தானே இவர் வாங்க என்ற பரிதாபமும் உண்டு. ஆனாலும் அவன் தரமாட்டான் என்று தெரிந்தும் வாங்கி தருவோம் என்று சொல்லி ஆறு தசாப்தங்களுக்குமேல் ரீல் விட்டுபோட்டு போனதுக்கு திட்டலாம் தவறில்லை. சம்பந்தர் மட்டுமல்ல இன்று ஜனநாயக வழியில் போராடி சிங்களத்திடம் தீர்வு பெற்று தருவோம் என்று பீலாவிடும் அப்பர் , சுந்தரர்,மாணிக்க வாசகர்கள் எல்லாம் காலம் முடியும்வரை சிங்கள பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்படித்தான் கிளம்பி போவார்கள் என்பதில் எந்த குழப்பமும் எப்போதுமே இல்லை.
  35. உலகில் மானிடராய் பிறந்த எல்லோரும் இறப்பது நியதி . தலைமைத்துவ பதவியில் இருந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது .அரசியல் அனுபவமும் கல்வி அறிவும் நிறையவே கொண்டவர், என்ன நோக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்பிவைக்க பட்டாரோ காலம் கடத்த பட்டதே தவிர அது நிறைவேறாத போது இறந்த பின்பும் ஆதங்கத்தை கள உறவுகள் வார்த்தைகளால் வெளிப் படுத்து கிறார்கள் அவ்வளவே . "இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."
  36. நான் மக்களிடம் உங்களுக்குத் தீர்வை வாங்கித் தருவேன் எனக்கு வாக்குப் போடுங்கள் என்று இலங்கையில் எந்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கவில்லை. அரசியலில் இருந்தாவது இன்றுவரை விலகி இருக்கின்றேன். முடிந்தவர்களை.... நீங்கள் முயற்சியுங்கள் என்று அவர்களுக்கு வழி விட்டிருக்கினேறேன். கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் துரோகி என்று சொல்லும் யோக்கியம் இன்னொரு எட்டப்பனுக்கு இருக்காது
  37. 1977 இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு மனுஷனின் அழகோ அழகு. அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில் பெண்கள் குவிந்திருப்பார்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர். ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்----- அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து சிங்கக் கொடி அசைத்து தன் நலமே முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் . இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்
  38. தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  39. போட்டியை அழகாக நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற பிரபா (USA),முன்னிலையில் இருந்த ஈழப்பிரியன், யசோதரன் , குமாரசாமிக்கும் வாழ்த்துகள். கிருபன் நடாத்திய இரண்டு போட்டிகளிலும் எனக்கு 3 இம் இடங்கள் 😄 .
  40. போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. போட்டியில் வெற்றி பெற்ற பிரபா(USA) , ஈழபிரியன் அண்ணா, மற்றும் கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த போட்டியிலும் சளைக்காமல் பங்கு பற்றவும். இத்திரியை தொய்விலாமல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பங்களித்த ஈழப்பிரியன் அண்ணா, ரசோதரன் ஆகியோருக்கும் பையனுக்கு ம் சிறப்பு பாராட்டுக்கள்.
  41. வெற்றி பெற்ற பிரபா USA மற்றும் ஈழப்பிரியன், கந்தப்பு வாழ்துக்கள் போட்டியை நடத்திய கிருபனுக்கும், களத்தை கலகலப்பாக வைத்திருந்த வீரப்பையன், யசோதரன், ஈழப்பிரியன் ஐயாவிற்கும் மற்றும் ஆடுகளம் சிறப்புற பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
  42. முதல் மூவராய் வந்த பிரபா usa , பிரியன்,கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்....... மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் , கருத்துக்களும் நகைசுவைகளுமாய் கலகலப்பாக்கிக் கொண்டிருந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி......! 👍 கிருபன் .....ம் சொல்லி வேலை இல்லை .....சூப்பர்.........! பையனுக்கு கிருபன் குடுத்த பரிசு சிறப்பானது....... அப் பரிசைப் பெறுவதற்கு அவர் தகுதியானவர்தான் .......!
  43. பலவித வேலைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியின் கேள்விக் கொத்தை தயாரித்து, உடனுக்குடன் புள்ளிகளை வழங்கிய @கிருபன் ஜீக்கும், போட்டியில் முன்னிலையில் வந்த @பிரபா, @ஈழப்பிரியன், @கந்தப்பு விற்கும்… போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மற்றைய உறவுகளிற்கும்… போட்டியை கலகலப்பாக வைத்திருந்த @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன், @suvy ஆகியோருக்கும்… 1700 பதிவுகளுக்கு மேல், 70 பக்கம் தாண்டி பார்வையிட்ட 55,000 பார்வையாளர்களுக்கும், யாழ் களத்திற்கும் நன்றிகள். 🙂
  44. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 127 2 ஈழப்பிரியன் 120 3 கந்தப்பு 119 4 குமாரசாமி 114 5 ரசோதரன் 113 6 நீர்வேலியான் 113 7 சுவி 111 8 வீரப் பையன்26 108 9 கோஷான் சே 108 10 தமிழ் சிறி 107 11 கிருபன் 107 12 நிலாமதி 104 13 வாத்தியார் 104 14 எப்போதும் தமிழன் 103 15 வாதவூரான் 100 16 அஹஸ்தியன் 99 17 நந்தன் 99 18 தியா 97 19 P.S.பிரபா 96 20 ஏராளன் 94 21 கல்யாணி 85 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 8 சுற்றில் இருந்து தொடர்ந்தும் முன்னணியில் நின்றும், வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @பிரபா USA க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @ரசோதரன் க்கும், கடைசி நாட்களில் முன்னிலைக்கு வந்த @கந்தப்புக்கும், @குமாரசாமி ஐயாவுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @வீரப் பையன்26, @ரசோதரன், @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கும், அதிலும் @ஈழப்பிரியன் ஐயா பேத்திக்கு நீச்சல் தடாகத்தில் நடந்த விபத்துக்கு மத்தியிலும் திரியில் தொடர்ச்சியாக கருத்துக்கள் வைத்ததற்கும், நன்றி பல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.