Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88816
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20351
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15827
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/08/24 in Posts

  1. 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது சுயநிர்ணய உரிமையினையும், தனிநாட்டையும் வலியுறுத்தியே உருவாக்கப்பட்டது. இலங்கையரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையினை வெகுவாக வரவேற்ற கூட்டமைப்பு, புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டது. இன்னொருவகையில் சொல்லப்போனால் புலிகளின் ஆயுதபோராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயப்படுத்தல்களை செய்யும் அமைப்பாகவும் இயங்கியது. இதனாலேயே 2001 மார்கழி மற்றும் 2004 சித்திரை ஆகிய காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னரை விடவும் அதிகமான வாக்குகளை அக்கட்சியினால் பெற முடிந்தது. அதாவது புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் ஈடுபட்டமையினால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இக்கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிந்தது. சம்பந்தரை ஆறு தடவைகள் தமிழ் மக்கள் தவறாது பாராளுமன்றம் அனுப்பி அழகுபார்த்தார்கள் என்று அகமகிழும் அவரின் ஆதரவாளர்கள் அவர் உண்மையிலேயே 8 - 9 தடவைகள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்குபற்றியிருந்தார் என்பதையும், அவர் 2-3 தடவைகள் தோல்வியடைந்தார் என்பதனையும் சொல்லப்போவதில்லை. இதுகூட "Cherry Picking" என்று கடந்து சென்றுவிடலாம். அவ்வாறு அவர் தோற்ற மூன்று வருடங்களாவன 1989, 1994 மற்றும் 2000 ஆகும். இதில் விசேஷம் என்னவென்றால் 1989 தேர்தல் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆயுதமுனையில் அதன் கூலிகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய ஆயுத அமைப்புக்களுடன் இணைந்து சம்பந்தரின் கூட்டணியும் போட்டியிட்டிருந்தது. சம்பந்தர் இதுவரையில் போட்டியிட்ட தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 1977 இல் 15,144 வாக்குகள்(வெற்றி). 1989 இல் 6,048 வாக்குகள்(தோல்வி). 1994 இல் 19,525 வாக்குகள் (தோல்வி). 2000 தேர்தலில் தெரிவுசெய்யப்படவில்லை. 2001 தேர்தலில் 40,110 வாக்குகள் (வெற்றி). 2004 தேர்தலில் 47,735 வாக்குகள் (வெற்றி). 2010 தேர்தலில் 24,488 வாக்குகள் (வெற்றி). 2015 தேர்தலில் 33,834 வாக்குகள் (வெற்றி). 2020 தேர்தலில் 21,422 வாக்குகள் (வெற்றி). இவற்றுள் குறிப்பிடப்படவேண்டிய விடயம் யாதெனில் புலிகளுக்கு அனுசரணை வழங்கியும், அவர்களை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டும் சம்பந்தர் அரசியல் நடத்திய 2001 (40,110) மற்றும் 2004(47,735) ஆகிய வருடங்களிலேயே அவரது அரசியல் சரித்திரத்தில் அதிகமான வாக்குகளைத் தமிழர்கள் அளித்தார்கள் என்பது. ஆக, பெருந்தலைவர் சம்பந்தனுக்கு புலிகளின் ஆசீர்வாதத்தினாலேயே இந்த அதிகரித்த வாக்குகள் கிடைத்தன. இதனை இல்லையென்றும், சம்பந்தனின் மேல் தமிழ் மக்கள் கொண்ட ஒப்பற்ற அன்பினாலேயே அவ்வருடங்களில் அவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவரது புகழ்பாடிகள் சொல்லக்கூடும். அவர்களைத் தவறென்று நிறுவுவதில் எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் புகழ்பாடி இன்புறுவது அவர்களின் விருப்பம். புலிகளின் அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்த சம்பந்தன், போர் முடிவுற்று பல வருடங்களுக்குப் பின்னர் வழங்கிய அறிக்கையொன்றில் "புலிகளை அழித்துவிட்டு தீர்வு தருவோம் என்று எமக்கு வாக்குறுதியளித்தார்கள். அதனாலேயே அது நடக்கும்வரை பேசாதிருந்தோம்" என்று கூறியிருந்தார். புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு , அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயத்தன்மையினை அதுவரை வழங்கிவந்த சம்பந்தன் இறுதிப்போரின்போது பேசாமல் இருந்தது ஏன்? தமிழ் அரசியல்த் தலைவர்களில் மிகவும் அனுபவமும், முதிர்ச்சியும் வாய்ந்தவராக அன்று காணப்பட்ட அவர், மக்களை இணைத்துக்கொண்டு யுத்தத்தினை நிறுத்து என்று இலங்கையரசையும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் நோக்கிக் கூக்குரல் இட்டிருக்க வேண்டுமா இல்லையா? அவரும் அவரது கட்சியும் செய்யும் அரசியல் மக்களுக்கானதென்றால் 2009 இல் மக்களை இலங்கையரசு பலியிட்டு வருகையில் அதுகுறித்துப் பேசவேண்டியது அம்மக்களின் அரசியல்த் தலைவரின் கடமையல்லவா? தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய மூத்த அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தமிழரின் ஆரம்ப கால அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவரான சம்பந்தனுக்கு இலங்கையரசும், இந்திய அரசும் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருந்தன என்பது தெரியாமல் இருந்திருக்கும் என்பது நம்பக்கூடியதா? அப்படியானால், புலிகளை முற்றாக அழித்துவிட்டு அரசியல்த் தீர்வினை தங்கத் தட்டில் வைத்துத் தருவோம் என்று அவர்கள் கூறியபோது எப்படி நம்பினார்? இறுதிநாட்களில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது அம்மக்களினதும், போராளிகளினதும் அரசியல் முகமாக இருந்த கூட்டமைப்பு செய்தது என்ன? தொலைபேசிகளை அணைத்துவைத்துவிட்டு தமிழ்நாட்டில் சென்று தஞ்சம் புகவேண்டிய தேவையென்ன சம்பந்தனுக்கு? 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நரவேட்டையாடிக்கொண்டிருந்தவேளை அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துகொண்டு இந்திய ஆக்கிரமிப்பை ஆதரித்தமையினை விடவும் சம்பந்தனும் அவரது கட்சியினரும் செய்தது கோழைத்தனமானதா இல்லையா? தனது மக்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, சாகட்டும், புலிகள் அழிந்தால்ச் சரி, மீதமிருப்போருக்குத் தீர்வை வாங்கிக் கொடுக்கலாம் என்று சம்பந்தர் இருந்தமை சரியானதா? 2001 இல் சுயநிர்ணய உரிமை, தனிநாடு, ஏகபிரதிநிதித்துவம் என்று கர்ஜித்த சம்பந்தன் 2009 களில் புலிகள் அழியட்டும், மீதியைப் பின்னர் பார்க்கலாம் என்றும், 2009 இற்குப் பின்னர் ஒன்றுபட்ட இலங்கை, பிரிக்கப்பட முடியாத இலங்கை, இலங்கையர்களாக அடையாளம் காணுவோம், எமக்குள் தமிழர் சிங்களவர் என்று பிரிவு வேண்டாம் என்றும் கூறத் தலைப்பட்டது எங்கணம்? ஆக, தமிழரின் நலன்கள் தொடர்பான சம்பந்தரின் அக்கறையென்பது தன்னெழுச்சியானால் வந்தது அல்லவென்பதும், புலிகளின் இருப்பினாலேயே அவர் செயற்கையாக அதனை வரிந்துகொண்டிருந்தார் என்பதும் நிரூபணமாகிறது அல்லவா? சமத்துவம், சம பங்கு, ஐம்பதிற்கு ஐம்பது என்று ஆரம்பித்து பின்னர் சமரச அரசியலாகவும், இறுதியில் சரணாகதி அரசியலாகவும் சம்பந்தனின் அரசியல் ஆனதேன்? இவர்தான் தமிழர்களின் பெருந்தலைவரா??? நம்பீட்டம்!!! நேரத்திற்கொருமுறை வேஷம் கலைக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் புலிகள் தமிழர்களின் காவலர்களாகவும், பின்னர் தமிழர்களை அழித்தவர்களில் அவர்களே முதன்மையானவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் அப்படிச் செய்யாதுவிட்டால்த்தான் வியக்கவேண்டும், ஆகவே கடந்து சென்றுவிடலாம்.
  2. தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங்கு தரும் கெட்டுப் போன சாப்பாட்டை சாப்பிட முடியாமல் பல நாட்கள் சாப்பிடாமல் தூங்கியிருக்கிறேன். எனவே இந்த இல்லத்திற்கு சில மின் விசிறிகளும் , சாப்பாட்டை கெடாமல் பாதுகாத்து வைத்திருக்க ஒரு குளிர்சாதனப் பெட்டியும் வாங்கிக்கொடுப்பாயா?” என மெல்லிய குரலில் தாய் கேட்டார். மகன் ஆச்சரியப்பட்டான். “பல வருடங்களாக நான் உங்களை பார்க்க வருகிறேன். ஒருநாள் கூட இப்படி ஒரு குறையை சொல்லவில்லை. இப்போது மட்டும் ஏன் இதை கேட்கிறீர்கள்?” என கேட்ட மகனின் முகத்தை மெல்ல ஏறெடுத்துப் பார்த்தார். “மகனே இங்கு மின் விசிறி இல்லாமல் கொசுக்கடியை தாங்கிக் கொண்டு உறங்குவதற்கு நான் பழகிக்கொண்டேன். இங்குள்ள பசியையும், துன்பங்களையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் உனது குழந்தைகள் உன்னை இந்த இல்லத்திற்கு அனுப்பும் போது உன்னால் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து வருந்துகிறேன். அதனால் தான் இப்போது கேட்கிறேன்” என்றார். வாழ்க்கையில் காயப்படுத்தும் விஷயங்களே கற்றுக்கொடுக்கவும் செய்கின்றன. படிக்கும் போதே நெகிழ்ந்து போனேன். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02xtCM2Az9CT8Khim3zHzSLN6UQ9L3XDiBTzhnSBGVk4D3vfB2CxjGE2CJma2MXuiyl&id=100072434235939&mibextid=cr9u03
  3. பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கு வெற்றி கிடைத்திருந்தால் அது ஐரோப்பிய நாடுகளுடையே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கும். இது அவர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட மிகப் பெரிய சாட்டையடி. 240 இடங்களுக்கு மேல் எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் 143 இடங்களே கிடைக்கப்பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டனர். தேர்தல் நெருங்கிவர மக்கள் இவர்களின் உண்மையான முகத்தை உணரத் தொடங்கினர். மக்றோனின் 64 வயது ஓய்வூதிய எல்லையைக் கலைத்து 60 வயது ஆக்குவோம் என்றனர். ஆனால் படிப்பு முடிந்து 23 வயதுக்கு பின் வேலையில் சேர்பவர் 66 வயதுவரை வேலை செய்ய வேண்டும் என்பதை மறைத்தனர். 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருமான வரிக் குறைப்பு செய்வோம் என்றனர். ஆனால் 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவர்கள் அதிக வரி கட்ட வேண்டுமென்பதை வெளிப்படுத்தவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் துன்பத்திலுள்ள எமதருமை பிரெஞ்சு மக்களுக்காக… என்று பதிலளிக்கும் இவர்களின் திட்டங்கள் யாவும் பணக்காரர்களுக்கே மறைமுகமாகச் சார்பானதாக இருந்தன. பெயரளவிலேயே பெண்களுக்கான சமவுரிமை மேம்படுத்தல் திட்டங்கள் இருந்தன. ஊனமுற்றவர்கள் என்ற சொல்லே இவர்களது விஞ்ஞாபனத்தில் இருக்கவில்லை. கக்கூஸ் துப்பரவு செய்ய கருப்பு தோல் வேண்டும். உயர் பதவிகளுக்கு மண்ணின் மைந்தர்களான வெள்ளைத்தோல் வேண்டும் என்பது இவர்களது வெளிப்படையான கொள்கை. இக் கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ள வேட்பாளர்களின் நடத்தை பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 300 வேட்பாளர்களில் 4 அல்லது 5 பேர் தவறு செய்தவர்களாக இருப்பது சகஜம், விசாரிப்போம் என்று கட்சித் தலைவர் தெரிவித்துருந்தார். இன்றைய ஒரு செய்தியின்படி சிறுவர் பாலியல் குற்றவாளி, பணயக் கைதியாக ஒருவரைப் பிடித்து தண்டனை கிடைத்தவர் போன்ற குற்றவாளிகள் முதல் கறுப்பினத்தவர் ஒருவரை மிருகத்துடன் ஒப்பிட்டு படம் போட்டவர், நாசிகளின் சின்னத்துடன் முகப்புத்தகத்தில் படம் போட்டவர் வரை 26 பேர் இக் கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர். இதுதான் தீவிர வலதுசாரிகளின் உண்மையான முகம்.
  4. ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள். காட்லி மாணவந்தானே...எப்படியும் மெதடிஸ்ட் பெண்களுக்கு நூல் வீட்டிருப்பியள்...இதுக்கு இந்த ஆலங்குழைக்கட்டு...இடைஞ்சலா இருந்திருக்குமே...லவ் பேட்ட்ஸ் .. வயது இதைப்பற்றியும் இரண்டு வசனம் சேர்த்திருக்கலாம்..
  5. லவ் பேர்ட்ஸ் -------------------- 'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது. சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........' என்று ஒரு பாடலுக்கு சுற்றி சுற்றி துள்ளிக் குதித்து ஆடுவார். கண்ணை கடகடவென்று வெட்டுவார். அவர் முகத்தை குளோஸ்அப்பில் காட்டுவார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்தது போல மேக்அப் அவருக்கு போடப்பட்டிருக்கும். எலுமிச்சை நிற எம்ஜிஆருக்கு சோடியாக கலர்ப் படத்தில் நடிக்க வைக்க இப்படி ஒரு ஒப்பனையை கன்னடத்து பைங்கிளிக்கு செய்தார்கள் போல. படம் பார்த்த பின், எப்படியாவது லவ் பேர்ட்ஸ் வாங்குகின்றோம், வளர்க்கின்றோம் என்று முடிவெடுத்தோம். வீட்டில் அனுமதியும், காசும் கேட்கும் போது இன்னும் மேலதிகமாகவே சொன்னோம் - வாங்குகின்றோம், வளர்க்கின்றோம், பெருக்குகின்றோம், விற்கின்றோம் என்று. வீட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவர், வழமை போலவே, இதையும் நம்பவில்லை. மற்ற பொறுப்பாளர், அவரும் வழமை போலவே, இதையும் நம்பினார். முதலில் கூடு செய்தோம். தச்சு வேலை தெரிந்தவர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவர் அவருக்கு உதவியாளர்கள். அப்பொழுது கூட்டுக் கோழி வளர்ப்பது சரியான பிரபலம். கோழிக் கூடு செய்தது போக மிகுதியாக 'கோழி வலைகள்' சில தெரிந்தவர்களிடம் இருந்தது. இலவசமாகவே கொடுத்தார்கள். யாழ் கொட்டடியில் இருக்கும் ஒருவர் தான் மிகப் பிரபலமான லவ் பேர்ட்ஸ் விற்பனையாளர் என்று அறிந்து அங்கு போனோம். அவர் வீட்டில் இரண்டு கூடுகள். இரண்டும் பெரியவை. ஒன்றுக்குள் விற்பதற்கென்றே நூற்றுக் கணக்கில் வைத்திருந்தார். இன்னொன்றில் அவரின் ஆசைக் கிளிகள். அவை விற்பனைக்கு இல்லை என்றார். மொத்தமாகவே இரண்டு தான் வாங்கப் போயிருந்தோம். எப்படி ஆண், பெண் பார்ப்பது என்று தெரியவில்லை. கோழி, சேவல் போல தெளிவாக வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை. அவரே சொல்லித் தந்தார். மூக்கின் நிறம் தான் அந்தச் சூத்திரம். நீல மூக்கு ஆண், வெள்ளை மூக்கு பெண். ரோஸ் கலர் மூக்கும் வரும், அதுவும் பெண் தான். ஒரு நீல மூக்கும், ஒரு வெள்ளை மூக்கும் சிமெந்துப் பைக்குள் போட்டுக் கொடுத்தார். இரண்டிலிருந்து நாலாகி, நாலிலிருந்து பதினாறு ஆகி என்று பவளக்கொடி போலவே சிந்தனை ஓடியது. பலர் வந்து பார்த்து போனார்கள். ஊரில் எவரிடமும் லவ் பேர்ட்ஸ் இருக்கவில்லை. கொட்டடியில் ஒரு குவியலாக இவை இருக்கின்றன என்ற விபரமும் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. திணை மட்டும் தான் சாப்பிடும், சாமை சாப்பிடாது என்று நாங்கள் கொடுத்த விளக்கம் கேட்டு அவர்கள் மூக்கில் விரலை வைக்காத குறை. எது திணை, எது சாமை என்று கண்டு பிடிப்பதே ஒரு பெரிய இயற்கை அறிவாகிக் கொண்டிருந்தது. லவ் பேர்ட்ஸ் சோடி மாறாது, அவை ஒன்று போனால் மற்றதும் போய் விடும் என்ற விளக்கமும் நன்றாகவே விலை போனது. ஒரு நாள் கூடு வெறுமாகக் கிடந்தது. குருவி இரண்டும் கோழி வலையின் கண்களுக்குள்ளால் வெளியில் வந்து பறந்து போய்விட்டது. கோழி வளர்த்திருந்தாலும் வீட்டிற்கு ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும் என்று ஒரு பொறுப்பாளர் அடிக்க வந்தார். 'பிள்ளைகள் ஆசைப்பட்டுதுகள்.......' என்று மற்ற பொறுப்பாளர் அன்றும் காப்பாற்றிவிட்டார். அந்தக் குருவிகள் லவ் பேர்ட்ஸ் இல்லை என்று வளர்ந்த பின்னர் தெரிய வந்தது. 'அன்பே வா' படத்தில் அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். அந்தக் குருவிகள் பரகீட். லவ் பேர்ட்ஸ் என்பவை வேறு. ஆனாலும் எங்கள் வீட்டில் எப்போதும் லவ் பேர்ட்ஸ் இருந்தது இப்போது தெரிகின்றது.
  6. நூல் என்ன? ஆசாமி கயிறு விட்டு கடலை போடக்க கூடிய ஆளெண்டு இன்னுமா தெரியேலை. “மச்சான் இதை ஒருக்கால் பிடிடா” எண்டு ஆலங்குழைக்கட்டை பக்கத்திலை இருக்கிறவனிற்றை நைஸா குடுத்திட்டு அண்ணாச்சி சுழட்ட ஆரம்பிச்சிருப்பார். சரோஜாதேவி எப்பிடி ‘மேக்கப்’ போடுறா எண்டு உன்னிப்பா கவனிக்கிற ஆள், லேசுப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை
  7. அதுசரி ஆளுநர் என்ன செய்கின்றார் ? டாக்கி போனாலே விளங்காதே .... ஆமை புகுந்த வீடு மாதிரி . 25 வைத்தியர்களும் கூட்டு காளவாணிகளா ? அது சரி ஏன் மக்கள் இவ்வளவு காலமும் எந்த விதமான எதிர்ப்புக்களை தெரிவிக்கவில்லை . உண்மையில் என்ன நடக்கின்றது .....
  8. ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .
  9. சம்பந்தர் : “பேசுவம்” - நிலாந்தன். சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது. அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நகரம் ஏன் துக்கிக்கவில்லை? சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது. அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது. நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்; மீம்ஸ்களின் காலத்தில், அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம். அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன 2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை. இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது. ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார். அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர். இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர். மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர். அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல. அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். சம்பந்தரின் வழி எது? ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச் சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார். ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார். அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார். 2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார். அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால், தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார். அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில், ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது, இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன். ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின. அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை. ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார். விளைவு என்ன? யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது. அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம், ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின. அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை. தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது. எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்… முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார். அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை. இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார். ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி. அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம். இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும். இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார். ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார். தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார். அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள். ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச் செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார். சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய தாய்க் கட்சியைச் சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்? எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம். https://www.nillanthan.com/6813/
  10. புலிகளது சமாதான காலத்தில் அப்போதைய கூட்டமைப்பினது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனேகமாணோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள். அந்தக் காலத்தில் சம்பந்தன் ஐயா அவர்கள் பின்லாந்துக்குச் சக உறுப்பினர்களுடன் வந்திருந்தார். அசாத்திய நினைவாற்றல் உதாரணமாக எந்தவிதக் குறிப்புகள் இல்லாமல் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் சொல்லுவார். நாங்கள்தான் அவர்கூறும் தொலைபேசி இலக்கங்களை அழுத்திக்கொடுப்பது. அந்தவேளை சுமந்திரன் அவருடன் தாயகத்தில் பணியாற்றியிருந்தார் என நினைக்கிறேன். அதாவது சட்டத்தரணியாக. சம்பந்தன் ஐயா அடிக்கடி சுமந்திரனுடன் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைப்பார் அந்த வேளையில் இலகுவான வாட் அப்போ வைபரோ இருப்பதில்லை நேரடி அழைப்புத்தான் அனைத்தையும் புலிகளது கிளைதான் ஏற்பாடு செய்திருந்தது. அவர் பலமுறை சுமந்திரனுடன் பேசும்போது உடனிருந்திருக்கிறேன் மரியாதை கருதி அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால் அவர் சுமந்திரனை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லி அழைப்பதில்லை சமன் சுமன் என ஒரு குழந்தைப்பிள்ளையை கூப்பிடும் பாசத்துடன் அழைப்பார். ஏதோ கடிதங்கள் மற்றும் வழக்குகள் சம்பந்தமாகக் கதைக்கிறர் என நான் நினைப்பதுண்டு. பிற்காலத்தில் அந்தாளது புகழுக்குக் கொள்ளிவைக்கும் ஒரு ஆளாகக் கட்சிக்குள் சுமந்திரன் என்பவர் நுளைவார் என்பதை யார் கண்டது. சம்பந்தன் ஐயாவது பிற்காலத்தில் அவரது அனைத்துச் செயல்களுக்கும் பின்னாடி நின்றது சுமந்திரந்தான் அறிக்கை விடுவதிலிருந்து அரசியல் முடிவுகள் எடுப்பதுவரை தன்ர எண்ணத்துக்கு அவரது பெயரைச்சொல்லி அந்தாளை நாசமாக்கிப்போட்டார். சம்பந்தன் ஐயா ஒரு அரசியல்வாதியாக இருந்து தமிழர்கள் விடுதலைக்காக இறுதிவரை நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் அவரது பூதவுடலை பொகழுடலாகத் தமிழினம் தாங்கியிருக்கும். தந்தை செல்வா எனும் ஒரு நேர்மையாளனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் நேற்றுவரை உயிருடன் இருந்த மூத்த தலைவர் எனும் மிகப்பெரிய பெருமை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கு, ஆனால் அதை எல்லாம் அவர் பெருமைப்படும்விதத்தில் தமிழர் மனங்களில் விதைக்காது வெறுப்பினை விதைத்துவிட்டார். ஆனால் இனிவரும் காலங்களில் மூன்று சந்ததிகள் கண்ட ஒரு அரசியல்வாதியைக் காண்பது அரிது. சுமந்திரனுக்கும் சாவு வரும் அது இதைவிடக்கேவலமானதாக இருக்கும் என்பதை இன்று அவர் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் திருந்தமாட்டார். சம்பந்தன் ஐயா யாழ் களத்தின் உறுப்பினர்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பதிவிடுவது வேதனையின் வெளிப்பாடே ஒரு அங்கலாய்ப்பே. இனிமேலாவது உங்களைப்போன்ற தலைவர்கள் தமிழர் உரிமை, தமிழர் விடுதலை, தமிழர்களது கண்ணியம் இவைக்காகப் பாடுபடவேண்டும் எனும் போரவாவினாலேயே, அதை விடுத்து எங்களுக்கு உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் இல்லை. நாம் ஒரு நேர்மை மிக்க தலைவனை எமது வாழும் காலத்தில் கண்டுள்ளோம் சரி பிழைகளைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் தனை தவறுகளையும் ஏற்றுத்தான் அத்தலைவன் தனக்குத் தானே தீர்ப்பை எழுதிக்கொண்டான். அதில் ஒருவிகித உண்மையாவது எம்முடன் அரசியல் செய்வோரிடம் நாம் எகிர்பார்ப்பது தவறில்லையே. சம்பந்தன் ஐயா உங்களுக்கு எங்கள் "இறுதி வணக்கங்கள்"
  11. துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து A 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது exit எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு் , வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் காரை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். முதலாவது roundabout இலயே exit எடுக்கத் தெரியாமல் சுத்துசுத்தெண்டு சுத்தீட்டு வழி கேக்க வழி ஒண்டுமில்லாமல் தட்டுத் தடுமாறித் திரும்ப , சந்தேகத்தில மறிச்ச பொலிஸ்காரனுக்கு விளக்கம் குடுத்திட்டு அவன்டையும் வழி கேட்டாப் பாவம் அவனுக்கும் சொல்லத் தெரியேல்லை, Map ஐப் பாத்துக்கொண்டு போகச் சொன்னான். திருப்பி வீட்டை வந்து காரை விட்டிட்டு tube எடுத்து harrowக்குப் போனன். அப்ப தான் ஊரின்டை அருமை விளங்கிச்சுது ஒரு நாளும் போகாத ஊருக்கு கூட “அண்ணை அராலிக்கு எப்பிடிப் போறதெண்டு” town ல கேட்டால் சந்திக்குச் சந்தி ஒருத்தன் எங்களுக்கெண்டே நிப்பான் வழி சொல்ல. “சத்திரத்துச் சந்தியால நேர போய் அப்பிடியே மனோகராச் சந்தியால திரும்பிப் போனா வாற ஐஞ்சு சந்தியால வலது பக்கம் திரும்பி ஓட்டுமடச்சந்தியால இடது பக்கம் திரும்பி நேர போங்கோ” எண்டு easyயாய் சொல்லுவாங்கள். இல்லாட்டியும் இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தி வழியவும் சாரத்தோட பேப்பர் வாசிச்சுக்கொண்டு ஆராவது இருப்பினம், வழி கேட்டுக் கேட்டுப் போக. அதோட ஊருக்க போய் ஆரின்டையும் பேரைச் சொல்லிக் கேட்டால் வீட்டடீல கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்காரரை கூப்பிட்டும் விடுவினம். ஊருக்க போய் வீட்டைக் கண்டு பிடிச்சு வாசலில நிண்டு பேரைக் கூப்பிடவும் முறை இருக்கு. பொதுவா ஆச்சி, அப்பு, ஐயா எண்டு கூப்பிடிறது, இல்லாட்டிச் சொந்தம் எண்டா முறையைச் சொல்லிக் கூப்பிடலாம். மனிசிமார் புருசன்டை பேரைச் சொல்லாத மாதிரித தான் வீடு வழிய போய் பேரை நேர சொல்லிக் கூப்பிடீறதோ இல்லாட்டி சபை சந்தீல கதைக்கேக்கயோ பேரைச் சொல்லுறதோ குறைவு. வீட்டுக்கும் , ரோட்டுக்கு ஒரு அடையாளம் மாதிரி ஊருக்க இருக்கிற ஆக்களுக்கும் பேரோட ஒரு அடைமொழி அடையாளமாய் இருக்கும். அப்ப பேருக்குப் பஞ்சம் எண்டதாலயோ இல்லாட்டி Numerology தெரியாததாலயோ ஊர் வழிய ஓரே பேரில கன பேர் இருப்பினம். அதோட வயசுக்கு மூத்த ஆக்களுக்குப் பேரைச்சொல்லிக் கூப்பிடிறது சரியில்லை எண்டு ஒரு மரியாதைக்கும் தான் இப்படி அடைமொழியோட கூப்பிடுறது எண்டு நெக்கிறன். அடைமொழிக்கு வைக்கிற பேர் அநேமா அவரின்டை வேலை சார்ந்ததா இருக்கும் . புரோக்கர் பொன்னம்பலம் , பரியாரி பரமசிவம் , கிளாக்கர் கனகசபை, CTB சிவலிங்கண்ணை எண்டு தொழிலோட பேர் இருக்கும். பிசினஸ் செய்யிற எல்லாருக்கும் ஒரே வேலை எண்டதால வேலைக்குப் பதிலா அவை வேலை செய்யிற இடங்களைச் சேத்துச் சொல்லிறதும் இருந்தது . இது அநேமா சிங்கள ஊரா இருக்கும் . காரைநகர் பக்கம் தான் சிங்கள ஊர் அடைமொழி கனக்கப்பேருக்கு இருந்தது. வெலிகம பொன்னம்பலம், தங்கொட்டுவ தணிகாசலம் , களுத்துறை கனகலிங்கம் எண்டு ஒரு கேள்விப்படாத ஊரில போய் வியாபரம் தொடங்கி ,establish பண்ணி அந்த ஊர் பேரை ஒட்டிக் கொண்டு வந்து பேரையும் பிறந்த ஊரையும் பெருமைப்படுத்தின கன பேர் இருந்தவை. என்டை மச்சான் ஒருத்தனை்பள்ளிக்கூடத்தில அப்பப்பான்டை பேர் என்ன எண்டு கேக்க PM எண்டு சொல்லி இருக்கிறான் , குழம்பிப்போன ரீச்சர் திருப்பி விசாரிக்க , “ ஓம் வீட்டை வாறவை எல்லாம் PM நிக்கிறாரோ எண்டு தான் கேக்கிறவை” எண்டு சொல்லத்தான் ரீச்சருக்கு விளங்கிச்சுது postmaster தான் PM ஆனவர் எண்டு. ஓவசியர், Chairman, SM ( station master ) எண்டு தொழிலே பேராகி பேர் மறக்கப்பட்ட ஆக்களும் இருந்தவை. பெருமைக்கு ஊரைச்சேக்கிற ஆக்களும், ஊருக்கு பெருமை சேக்கிற ஆக்களும் எண்டு ரெண்டு பேரும் பேரோட ஊரைச் சேப்பினம். ஊரில தன்னைத் தானே பெருமையா நினைக்கிறது St John’s கொலிஜ் காரருக்கு மட்டும் இல்லை முழு யாழ்ப்பணத்தானுக்கும் இருந்தது. “ பருத்தித்துறை ஊராம் பவளக்ககொடி பேராம்” எண்டு பாடின கல்லடி வேலுப்பிள்ளையார், ஆடிப்பிறப்பிக்கு பாடின நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எண்டு , கவிஞனும் சரி கவிதையும் சரி ஊர்ப் பேரோட தான் இருந்தது. ரோடுகளுக்கு ஆக்களின்டே பேர் இருந்தாலும் ஊர் வழிய சந்திக்கு ஆக்களின்டை பேர் வைக்கிறேல்லை. பெரிய சந்திகள் ஊரின்டை பேரிலேம் மற்றச் சின்னன்களுக்கு மரத்தின்டை பேரோட புளியடி, இலுப்பையடி இல்லாட்டி ஒரு கட்டிடம் இருந்தா அந்தப் பேரோட மடத்தடி, கச்சேரியடி, மனோகராத் தியட்டரடி எண்டோ இல்லாட்டி குளத்தையோ , கோயிலையோஅதில இருக்கிற வைரவரையோ , பிள்ளையாரையோ, மாதா கோவிலையோ சேத்துத் தான் பேர் வைக்கிறது. எங்கடை ஒரு ஊரில ஒரு சந்தி இல்லை ஒராயிரம் சந்தி. ஐஞ்சு சந்தி, நாச்சந்தி , முச்சந்தி, கெற்றப்போல் சந்தி எண்டு ஒவ்வொரு சந்திக்கெண்டு ஒரு காரணப் பேரும், இடுகுறிப் பேரும் அதுக்கெண்டு ஒரு சிறப்பும் இருக்கும். அதோட எங்கேயும் சண்டை நடக்கேக்கயும் சொல்லுவாங்கள் இது ஆரியகுளம் சந்தி குறூப் , கொட்டடிச் சந்தி குறூப் , கொய்யாத்தோட்ட குறூப், ஐயனார் கோவிலடி குறூப், இது பிரவுண் ரோட் குறூப் எண்டு. பஸ்ஸில போகேக்க பெரும்பாலும் சந்தீன்டை பேரைச் சொல்லித் தான் இறங்கிறது. ஊருக்குள்ள நிறையச் சந்தி இருந்தாலும் main bus route இல ஊரின்டை பேரோட ஒரு சந்தி இருக்கும். கொக்குவில் , கோண்டாவில் , இணுவில், உடுவில் எண்டு வாறது townஇல இருந்து போகேக்க ஊர் தொடங்கிற சந்தியா இருக்கும். Town க்கு போற பஸ் எல்லாம் KKS ரோட்டாலேம் , பருத்தித்துறை ரோட்டாலேம் A 9 ஆல வந்து ஆஸ்பத்திரீ ரோட்டாலேம் வர ஒரு பஸ் மட்டும் இந்த சந்தியால போறது , அது காரை நகரில இருந்து வாற 782 பஸ் . ஸ்ரான்லி றோட்டால வந்து வெலிங்டன் சந்தீல திரும்பி town க்கு போகும். அதே போல மணிக்கூட்டுக் கோபுரத்தில இருந்து வாற றோட் தான் மணிக்கூட்டு கோபுர வீதி. அது முந்தி ஆசுபத்திரிக்கு குறுக்கால வந்து , ஸ்ரான்லி ரோட் , நாவலர் ரோட் எல்லாம் தாண்டி பிறவுண் ரோட் வரைக்கும் வந்ததாம் . முந்தி இருந்த GA Lionel Fernando தான் குறுக்கால ஆசுபத்திரி கட்ட விட்டவர் அதின்டை எச்சம் தான் இப்ப இருக்கிற மணிக்கூட்டு ஒழுங்கை. அதே போல சந்திக்கும் பழைய பேர் ஏதும் இருந்திச்சுதோ தெரியாது இப்ப அதுக்குப் பேர் வெலிங்டன் சந்தி. Town மாதிரி பழைய வெலிங்டன் சந்தீன்டை நாலு மூலையிலும் கட்டடங்கள். வெலிங்டன் தியட்டர் ஒரு மூலை , முனீஸ்வரா கபேயும் கடைச்சல் பட்டறையும் மற்ற மூலை , லிங்கம் கிறீம் கவுஸ் தெற்கை பாத்த வாசலோட , பிளவுஸில மட்டும் விட்ட அம்பை பெடியளின்டை காச்சட்டை பொக்கற்றிலும் விட்ட விக்ரம் டெயிலேர்ஸ் அதுக்குப் பக்கத்தில, எதிர கண்ணாடி விக்கிற S.M. Fernando , அதையும் தாண்டிப் போக Tower கூல் பார் எண்டு இருந்தது. 85 /86 கோட்டையில இருந்து செல்லுகளும் பொம்பரும் நியூ மாக்கட்டையே இல்லாமல் பண்ண , செல்லுக்கெட்டிய தூரம் தாண்டி சனங்கள் பிழங்கத்தொடங்கேக்க தான் இந்த மாற்றம் வந்தது. வருசம் பதினாறு குஸ்புவைப் பாக்க கள்ளமா ஒதுங்கின அதே வெலிங்டன் தியட்டர்ச் சந்தி . தொண்ணூறில CCA , science hall , science academy , new- master எண்டு கல்விச் சந்தியாகி மாறினதும் இதே சந்தி தான். மனிசிக்குப் பின்னால திரியேக்க வெலிங்டன் சந்தீல “ அவள் வருவாளா” எண்டு பாத்து கொண்டிருந்தது லிங்கம் கடை மூலையில . தொண்ணூறுகளில யாழ்ப்பாணத்தின் tuition கொட்டில் எல்லாம் இருந்தது இந்த சந்தி தான். இதைப் போல ஒவ்வொரு சந்திக்கும் ஓராயிரம் கதை இருக்கும். அது ரோட் சந்திக்கிறதால மட்டுமில்லை ஆக்களும் சந்திக்கிறதால தான் சந்தி எண்டு எழுவாயும் பயனிலையும் சேந்ததா இருக்கு. இப்ப இருக்கிற ஊருக்கும் இருக்காத ரோடுக்கும் board எல்லாம் போட்டிருந்தாலும் எங்கயாவது போறதெண்டால் ஒரு சந்தீல நிப்பாட்டிக் “வட்டுக்கோட்டைக்கு வழி என்ன” எண்டு கேக்கிறாக்களுக்கு விடை “ துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” எண்டு வழி சொல்லிறாக்களும் இருக்கினம் ஊரில. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  12. அட ராமா என்னத்த சொல்ல கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ். ‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர். போனான். ‘சிட் டவுன்’ உட்கார்ந்தான். அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது. ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள். அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார். வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார். ‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார். ‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ். ‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’ ‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’ நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது. ‘அந்தம்மா பேர் என்ன சார்?’ மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். ‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான். ‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான். ‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’ உட்கார்ந்தான். ‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’ ‘கேளுங்க சார்’ ‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’ ‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது. மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர். ‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’ ‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’ ‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!! இந்த கதையின் நீதி என்ன??
  13. 'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. அப்படி எப்படி சொல்லுவீங்க...வேணுமென்றே ஸ்கூல் ,மகளிர் பஸ்சை விட்டடுட்டு..காங்கேசந்துறை ,யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறி இந்த வி.வி டி பொடியால் சேய்யிற ஆட்டகாசம் கொஞ்ச நஞ்சமே....இதுக்கு நேரடிச்சாட்சியம் ...நம்ம ஆளுங்கோ...சொல்லவோ..?
  14. கூர்ப்பியலில் இருக்கும், மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கும் பல புதிர்களில் பறவைகளின் பேச்சுக் கற்கும் திறனும் (vocal learning) ஒன்று. பேச்சைக் கற்றுக் கொள்ளும் இன்னொரு குடும்பமான மனிதக் குடும்பத்திற்கும், பறவைக் குடும்பத்திற்கும் 150 மில்லியன் ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், பல பறவையினங்களில் பேச்சுக்குக் காரணமான ஜீன்கள் மனிதக் குடும்பத்திலும் இருக்கின்றன. பேசக் கற்றுக் கொள்ளாத நாய், பூனை போன்றவற்றில் இந்த ஜீன்கள் இருந்தாலும் வேலை செய்யாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், கிளி மட்டுமல்லாமல், பாடும் இயலுமை உடைய பல பறவை இனங்களிலும், மைனா (Starlings), கிளிக் குடும்பங்களிலும் பேச்சு அந்த மாதிரி வரும். கிளிகளின் புத்திக் கூர்மையும் சேர்ந்து கொண்டால், அவையிட பேச்சு அந்த மாதிரி இருக்கும்😂! இதைப் பற்றிய மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகளை செய்த எரிக் ஜார்விசின் ஒரு ஆய்வுக் கட்டுரை இணைப்பு: https://www.jneurosci.org/content/24/13/3164.long
  15. என்ன மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்க.
  16. ஒருவர் தன் தந்தைக்கு உணவு கொடுக்கும் சட்டியை அவரின் மகன் பாதுகாப்பாக எடுத்து வைக்கும் ஒரு நிகழ்வு ஒரு பிரபல சிறுகதையில் இருக்கின்றது. அதன் இன்னொரு வடிவம் இது. சொல்லிச் சொல்லி தீராது மனித வாழ்வில் அறம்.........
  17. 🤣........... 'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. ஊரில் எத்தனையோ பேர்கள் நூல்கள் விட்டார்கள் தான். நமக்கு துணிவும் இருக்கவில்லை, சோலியும் கூட... இப்ப சுற்றும் முற்றும் பார்த்தால், நூல் விடப்பட்ட பலர் நூலே விடாதவர்களை கட்டியும், நூல் விட்டவர்கள் வீட்டில் சொன்னவர்களைக் கட்டியும் என்று எல்லோரின் கதையும் முடிந்து விட்டது..........
  18. காக்கா காக்கா மை கொண்டா..........! 😍
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி..........! 💐
  20. நானும் இவர் பெயரை கேள்விபட்டுள்ளேன் படித்தது இல்லை படிக்க வேண்டும். இந்தியாவில் உருவாக்கபட்டு ஈழதமிழர்களிடமும் பரவி இருக்கின்ற இந்த கொடூரமான சாதி முறை அவர்களிடம் கரைபுரண்டு ஓடும் மதத்தின் பங்கே முக்கியமாக இருக்க வேண்டும்.
  21. இல்லை நீங்கள் கூறியயது எவருமே தமிழர்களுக்கு நன்மைகள் செய்யவில்லை என்ற உண்மையை. நான் இங்கே எழுதியது சம்பந்தன் அய்யாவின் உடலை தூக்குவதற்கு ஆட்கள் தமிழர்கள் இல்லை என்று கற்பனை செய்து குதூகலிப்பவர்களுக்கு.
  22. இப்படியான நம்பிக்கையினை, கோட்பாட்டினைக் கொண்டவரா உங்களின் பெருந்தலைவர்?
  23. இந்த கட்டுரையினை இணைகும் போது ஒரு ஆரோக்கியமான வாதப்பிரதிவாதத்தினை எதிர்பார்த்தேன், ஆனால் கள உறவுகள் கண்டும் காணாதது போல கடந்து சென்றவிடயத்தில் நீங்கள் மட்டும் ஆர்வம் காட்டியிருக்கிறீர்கள், இதற்கு உங்களை பாராட்டுகிறேன். சாதி அமைப்பு முறையினை பயன்படுத்தி தமது நலனை பெறுவதில் பிராமணர்கள் பயன்படுத்திய அதே உத்தியினை பிராமணர்களிலினால் சூத்திரர்கள் என வர்ணிக்கப்பட்டவர்கள் 200 வருடத்திற்கு முன்னர் சமயத்தின் உதவினூடு தம்மை இலங்கை தமிழர்களில் முதன்மையானவர்களாக்க முடிந்துள்ளது (சாதி அமைப்பில்), இந்த புதிய சாதிய முறைமை வெறும் 200 வருட வரலாறு கொண்டதாக உள்ளது, ஒரு வகையில் நகைசுவையாக இருந்தாலும் அதனை மிக இறுக்கமாக எமது சமூகம் உள்வாங்கிய விதம் மற்றும் மதங்கள் பல அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன குறிப்பாக பெளத்தத்தினை குற்ப்பிடலாம் ஆனால் இந்து சமயம் மட்டுமே வணிக ரீதியில் தனி நபர்களால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்ற நிலை காணப்படுகின்றன (சாமியார்கள் உள்ளடங்கலாக), இதற்கு காரணம் என்னவென்று கருதிகிறீர்கள்?
  24. ❤️..... இவைகளும் கதைக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.... அவைகளின் சைஸிற்கு ஒரு கதை வேற....🤣
  25. பிணவாடை தாங்காமல் நீல சேர்ட் மூக்கை பொத்துறார்போல அதுதான் ஒருவரும் கிட்ட வரேல்லை. அட நம்ம சும்மும் ஒருகை போடவில்லை என்றால் பாருங்கோவன் இடம் கொள்ள ஏலாமலுக்கு தமிழ் தலைமகனை வழியனுப்ப சனம் நிரம்பி வழியுதுகள். பார்க்கவே ஆனந்தம் ஆனால் உட்கார்ந்திருக்கும் அனைத்துசனத்தையும் எனக்கும் தெரியும் என்பதுதான் மெடிக்கல் மிராக்கிள்
  26. அடுத்த கட்ட தேர்தலில் இடதுசாரி கூட்டணி முன்னிலையில். லே பேன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாராம். தேர்தல் மொத்த முடிவுகள் நாளை காலை தெரியும் என செய்திகள் கூறுகின்றன.
  27. பையா, என்னால் கூறப்பட்டவைக்கும் தங்களால் கூறப்படுபவைக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? 🥺
  28. நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  29. முதலை கண்ணீர் விடும் சுயநல முதலை இறந்து விட்டது என்று அடுத்த முதலை அழுவுதாம்.
  30. நன்றி நன்னி உங்கள் நேரத்துக்கும் இணைப்புக்கும் உங்கள் பதிவுகளை இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பினேன் அநேகர் இலங்கை தமிழ் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக கருத்து வைப்பது போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வைத்தனர் . இவங்களில் ஒரே ஒரு மனிதர் மட்டும் எப்படி தப்பி பிழைத்தார் என்று கூடவே வேறு கேட்கிறார்கள் அந்த மாமனிதன் அப்துல் கமீத் வானொலி அறிவிப்பாளர் .
  31. நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  32. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நில்மினி. 🎂 என்றும் நலமுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துகின்றோம். 🙂 @nilmini
  33. யாழில்... சம்பந்தனுக்கு கிடைத்த இறுதி மரியாதையை பார்த்து, சுமந்திரன் தான் செத்தால்... தனது பிரேதத்தை, யாழ்ப்பாணம் கொண்டு போகக் கூடாது என்று நினைத்திருப்பார்.
  34. 1 பிர‌பாக‌ர‌ன் ஜாதியை ஒழித்தார் 2 த‌மிழ‌ர்க‌ளை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார் 3 கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்ற‌வ‌ர் 4 ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு வேணும் என்று போராடி த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌வ‌ர் 5 இந்த‌ நூற்றாண்டில் த‌மிழ் இன‌ம் என்ர‌ ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர் 6 வாழ்வா சாவா என்ர‌ போராட்ட‌த்தில் 2009க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து போர் செய்த‌வ‌ர் 7 காசுக்கு ஆசைப் ப‌டாம‌ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் ப‌டாம‌ எளிமையாய் வாழ்ந்த‌ த‌லைவ‌ர் 8 க‌ருப்பு யூலை க‌ல‌வ‌ர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடின‌வ‌ர் 9 த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ மீட்ப்புக்காக‌ ப‌சித்த‌ போது அவியாத‌ மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவ‌ர் 10 சொல்லுக்கு முன் செய‌ல் இருக்க‌னும் என்று சொன்ன‌வ‌ர் . அதை செயலிலும் செய்து காட்டினவர் 11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம‌ நாடு பெரிது என்று வாழ‌னும் என்று உர‌க்க‌ சொன்ன‌வ‌ர் /க‌போதி ச‌ம்ப‌ந்த‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ வேத‌னையை நீங்க‌ள் எழுதுங்கோ நான் வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்😉.......................
  35. நில்மினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
  36. @nilmini அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வாழ்க வளத்துடன்.
  37. இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு அநிஞாயங்கள் செய்து கொண்டே இருக்கும். தமிழர்கள் தான் மறப்போம் மன்னிப்போம் என்னும் சிந்தனையில் இருக்கிறார்கள்.
  38. சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும். அரசியல் போராட்டங்கள் தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை. போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது. தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார். தலைமை பொறுப்பு 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல. இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது. இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார். இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை. ஆனந்தசங்கரி இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது. அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது. இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு. சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார். சுதந்திர தினம் அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார். சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மைத்திரிக்கு ஆதரவு தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான். பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார். நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது. மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார். சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார். ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது. அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார். நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல். இணக்க அரசியல் புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது. எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார். உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம். தென்னிலங்கை அரசியல் சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான அரசியல் செயற்பாடாக வரித்துக் கொண்டார். இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம். சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார். கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார். மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம். மோடியின் அழைப்பு இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன. மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார். இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார். 13ஆவது திருத்தம் தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது. பரஸ்பர முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் வேண்டி நிற்பது. இங்குதான் சம்பந்தனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தென்னிலங்கை தரப்பு அவரது முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. அது தொடர்பான ஆத்மார்த்தமான அரசியல் விருப்பம் தென்னிலங்கையிடம் இருக்கவில்லை. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பு கூட அதனிடம் இருக்கவில்லை. மறுபக்கத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. தனது சொந்த மாவட்டத்திலேயே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த சம்பந்தனால் முடியவில்லை. கன்னியா வெந்நீரூற்றில் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை தவிர வேறு எவற்றையும் செய்ய அவரால் முடியவில்லை. இறுதியில் விளைவுகள் அகமட்டத்தில் பாரதூரமாக இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது கண்ணுக்கு முன்னாலேயே சிதைவடைந்தது. இந்த சோகம் காய்வதற்கு முன்னர் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியும் சிதைவுற்றது. பெருந்தலைவராக இருந்தும் சொந்த கட்சி நீதிமன்ற படி ஏறுவதை இவரால் தடுக்க முடியவில்லை. அவர் பல தடவை மன்றாடிக் கேட்ட போதும் அவரால் வளர்க்கப்பட்ட சுமந்திரன் அவரது மார்பிலேயே குத்தினார். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை. தனது சொந்த கட்சி நீதிமன்றப் படி ஏறியபோதே இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம்” என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/yodhilingam-spoke-about-sampanthan-1720254684?itm_source=article
  39. நான் பெரியவன் கொம்பு முளைத்தவன் அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவன் என்று ஒரே போதும் என்னை நானே வகைப்படுத்தி பிரிந்து நிற்பதில்லை. தமிழர்கள் என்றால் அதில் நானும் ஒருவன். புலம்பெயர் தமிழர்கள் என்றால் அதிலும் நானும் ஒருவன். எனவே இவர்கள் பற்றி எவர் தப்பாக எழுதினாலும் அது என்னையும் காயப்படுத்தும் அவமானப்படுத்தும்
  40. பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??
  41. ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால் ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....
  42. புலிகளை வன்னித் தலைமை என்பவர்களுடன் பேசுவதில்லை. ஆகக்குறைந்த தமிழர் வரலாறு தெரியாதவர்கள் என்பது என் முடிவு. நன்றி. வணக்கம்.
  43. என் கேள்விக்கென்ன பதில்........! 😍
  44. சம்பந்தனின் அஞ்சலிக்கு... இலவச பேரூந்தில், இலவச உணவு கொடுத்து.. அழைத்து செல்ல இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். அப்படி இருந்தும்... ஒரு சனமும் ஆர்வம் காட்டவில்லை. நல்ல தலைவனுக்கு இலவச விளம்பரம் தேவையில்லை. மக்கள் தாமாகவே... முண்டியடித்து அஞ்சலி செலுத்துவதுதான் தலைவனுக்கு அழகு. இறந்த பின் ஒருவனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிந்து விடலாம்.
  45. ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின் கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள் எங்கிருந்து கோரிக்கை வைத்தார்களோ அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர் சந்தித்து ஆறுதல் சொன்னாரா? சொல்லுங்க சார்! யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின் கீழ் மக்களுக்காக அரசியல் செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல் யாசகர்கள் ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.