Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    20018
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    18
    Points
    46788
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/09/24 in Posts

  1. நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆர் வீட்டை போகேக்கையும் ரெலிபோன் அடிக்காமல் நேர போய் நிப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஒழுங்காய் இன்னும் டொச் தெரியாது நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஏதும் பேப்பர் நிரப்போணும் எண்டால் கதை கந்தல் நான் கறுப்பு ஜேர்மன்காரன் டாக்குத்தரிட்ட போறதெண்டால் டொல்மேச்சர் வேணும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் கார் லைசன்ஸ் தமிழிலதான் செய்தனான் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சோறு வெரி இம்போட்டன்ற் நான் கறுப்பு ஜேர்மன்காரன் செவ்வாய் வெள்ளி நோ மச்சம் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுவாசல்ல தேசிக்காய் செத்தல் மிளகாய் கட்டி தொங்க விட்டிருப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் தூர இடம் கார்ல போறதெண்டால் பக்திப்பாட்டுதான் கேட்டுக்கொண்டு போவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எப்பவும் ராசிபலன் பாத்துதான் நடப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் எங்கட கொண்ட்டாட்டங்களுக்கு போய் வீட்டுக்குள்ள வாறதெண்டால் மூண்டுதரம் துப்பிப்போட்டுதான் வீட்டுங்குள்ள வருவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் வீட்டுக்குள்ள 24மணி நேரமும் தமிழ் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும் நான் கறுப்பு ஜேர்மன்காரன் ஆனால் ஜேர்மன்காரன் நம்பவே மாட்டான் ஜேர்மன் பாசையில பிச்சு வாங்குவன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் 40,50வருசம் இஞ்ச இருக்கிறத பெருமையாய் நினைப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் இன்னும் சாதி பாப்பன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் சிலோன்காரரை கண்டால் கொப்பர் என்ன தொழில் எண்டு கேட்பன் இப்படிக்கு கறுவல் குமாரசாமி
  2. கவாய் சில நுhற்றாண்டுகளுக்கு முன்பாகவே கண்டுபிடித்தார்கள்.ஜப்பான் பிடித்துவிடும் என்று அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து 1959 இல் அமெரிக்க மாநிலமாக பிரகடனப்படுத்தினார்கள். அவர்களுக்கென்று ஒரு மொழி வைத்திருக்கிறார்கள்.ஆங்கிலமும் பேசுகிறார்கள். கூடுதலான ஆட்களைப் பார்த்தால் ஏறத்தாள பிலிப்பைன்ஸ்காரர் மாதியே இருக்கிறார்கள்.ஆதிகாலத்திலேயே பிலிப்பைன்ஸ் ஜப்பானிஸ் என்று பலரும் குடியேறியிருக்கிறார்கள். நிறையவே பழங்கள் உள்ளன.சிறிய பப்பாப்பழம் ஒரு டாலருக்கு விவசாயிகள் சந்தையில் விற்கிறார்கள்.பழம் தேன் தான்.கலிபோர்ணியாவிலும் கவாயன் பப்பாபழம் பிரபல்யம். அடுத்து அன்னாசி.அதுவும் தேன் மாதிரியே இருக்கும்.மாம்பழங்கள் தேடுவாரற்று வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றன.சந்தைக்குப் போனால் எல்லாமே பணம் தான்.ஏறத்தாள எமது நாட்டு காலநிலை என்றபடியால் ஊரில் சாப்பிடும் பழங்கள் அங்கேயும் இருக்கின்றன. காலநிலை பல மாதிரியாக இருப்பதாலோ என்னவோ எந்தநாளும் வானவில்லைக் காணலாம். தென்னமெரிக்கா போல மலிவு என்று எதிர்பார்க்க முடியாது.நியூயோர்க்கோடு ஒப்பிடும் போது கவாயில் விலைகள் அதிகமே.சாப்பிடப் போனாலே கூடுதலான பணம் செலவு செய்ய வேண்டும். கோட்டல் எடுத்து தங்கினால் சாப்பாட்டுக்கும் தனியாக செலவு செய்ய வேண்டும். வீடுகள் எடுத்திருந்தால் ஒரு சோறு கறி என்று சமைத்து சமாளிக்கலாம். வாடகை வாகனம் இல்லாமல் பிரயாணங்கள் செய்ய முடியாது. முக்கியமாக பல நாடுகள் கடலில் மூழ்கிக் கொண்டு போகின்றன.ஆனால் கவாய் ஒவ்வொரு ஆண்டும் எரிமலை வெடிப்பினால் கரைந்து ஓடி கடற்கரைகளை சேர்கின்றன. எரிந்து ஓடியவைகளை லாவா என்கிறார்கள்.தீவின் அரைவாசிக்கு இந்த லாவாவே இரும்புக்கட்டி போல படர்ந்துள்ளது. https://imgur.com/DeBvtUo https://imgur.com/a/JhkrE50 https://imgur.com/a/JhkrE50 முற்றும்.
  3. நாவூறு கூடிப்போச்சு என்று சகதர்மினியிடம் சொன்னேன், செத்தல் மிளகாய் தட்டுப்பாடு நெருப்பு விலை என்று சொன்னார். அப்பப்பாவுக்கு ஏன் தூ தூ செய்யவில்லை என்று பேரன் அப்பம்மாவோடு சண்டை.😩😂
  4. மிக நீண்ட நாட்களாகவே கவாய் போக வேண்டும் எரிமலைகள் எப்படி எரிகின்றன என்று நேரடியாகவே பார்க்க வேண்டும் என ஒரு எண்ணம் இருந்தது.இருந்தாலும் நியூயோர்க்கில் இருந்து போவதானால் 10-11 மணிநேரம் எடுக்கும்.அதே ஒரு பெரிய தண்டனை மாதிரி.கலிபோர்ணியாவில் இருந்து போவதானால் 5-5 1/2 மணிநேரமெடுக்கும். பிள்ளைகள் 3-4 தடவை போய் வந்துவிட்டார்கள்.பல தீவுகள் இருப்பதனால் ஒவ்வொரு தீவாக போய்வருவார்கள்.இந்த தடவை எரிமலை எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் பெரிய தீவுக்கு போகபோவதா சொன்னார்கள். விபரங்களைக் கேட்டு நாங்களும் போய்வர கவாய் விமான சேவையில் ரிக்கட் வாங்கினோம்.இது தான் முதல்தடவையாக கவாய் விமான நிறுவனத்தில் பிரயாணம் செய்தோம்.நானும் இங்குள்ள எனேக விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன்.எல்லாவற்றையும் விட கவாய் விமான நிறுவனமே எல்லாவற்றிலும் மேலாக தெரிந்தது. நாங்கள் ஓக்லண்ட் கலிபோர்ணியாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9;30 போல இறங்கினோம்.அங்கு போய் இறங்கியதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. விமான நிலையத்துக்கு அருகிலேயே விமானம் போய் நின்றது.படிகளில் இறங்கி போனால் ஏதோ சந்தைக்குள் போவது போல இருந்தது.ஒரு இடம் தனும் பெரிய கட்டடங்களாக இல்லை.குளிரூட்டப்பட்ட அறைகளோ தங்குமிடமோ இல்லை.எல்லாமே திறந்த கட்டடங்கள்.ஒருமாதிரியாக வெளியே போனால் பொதிகள் எடுக்குமிடம் வீதிக் கரையில் இருக்கிறது.இதுவே கலிபோர்ணியா அல்லது நியூயோர்க்காக இருந்தால் பெரிய வாகனத்தைக் கொண்டுவந்து அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். விமான நிலையத்தில் பொதிகள் எடுக்கும் இடம். எரிமலை வெடித்து ஒரு மைல் நீளத்திற்கு குகையாக இருக்கிறது. இந்த குகையைப் பார்க்க போக மேலே சொல்லப்பட்டவைகளைப் பின் பற்ற வேண்டும்.கட்டாயம் என்றில்லை எமது பாதுகாப்புக்காக போட்டிருக்கிறார்கள்.கீழே இறங்கி 5 யார் உள்ளே போனால் எதுவுமே தெரியாது.கும்மிருட்டாக இருக்கும். அதே மாதிரி சாதாரண சப்பாத்துடன் போனால் அடிக்கடி சறுக்கி விழலாம்.வெளிச்சம் தெரியத்தக்க ஏதாவது கொண்டு போக வேண்டும்.குகைக்குள் சில இடங்கள் உயரமாகவும் சில இடங்கள் குனிந்து போக வேண்டியும் வரும்.எகன்கொரு தடவை மண்டையில் பலமான அடி.துணியிலானான தொப்பி போட்டிருந்ததால் தப்பினேன்.அப்பவும் கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.என்னப்பா என்ன என்று எல்லோர் சத்தமும்.இப்போ வாயைத் திறந்தால் மண்டையில் வாங்கியதை விட பலமாக வாங்க வேண்டுமென்று பல்லைக் கடித்துக் கொண்டு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை.சும்மா மேலால தட்டினது என்று போய்விட்டேன். குகைக்குள் நெருப்பு தணலாக இருந்தபோதும் ஒரு கரையால் உள்ளே போய் சீமெந்து போட்ட இடத்தில் எப்படி அதில் பெயரெழுதுவார்களோ அதே மாதிரி நிறைய பேர் பெயர்களை எழுதுயுள்ளார்கள். குகைக்கு போகும் பாதை. தொடரும்.
  5. இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம். ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.
  6. சூடாக இருக்கும் போதே பெயர்களை எழுதியுள்ளார்கள். விமான நிலையமும் பொதிகள் எடுக்குமிடமும் https://imgur.com/a/ZqXWL9q விமானநிலையத்திலிருந்து போகும்போதே வெளியே சகல இடங்களும் ரைக்ரரால் டிஸ் போட்டு பிரட்டி எறிந்த மாதிரி இருந்தது. ஆங்காங்கே தீப்பிழம்பாக வந்து காய்ந்து போய் இருப்பதாக சொன்னார்கள். தீப்பிழம்பாக வந்து காய்ந்து போயிருப்பது இரும்பு காய்ச்சி ஊற்றியது போல இருக்கிறது. இதை லாவா என்று சொல்கிறார்கள்.சில இடங்களில் இந்த லாவா தொடர்ந்து பல மைல்களுக்கு உள்ளன. சாதாரண மழை தண்ணிக்கே ஐயோ குய்யோ என்று கத்திக் குழறும் நாங்கள் இந்த மாதிரி ஒரு அழிவை நாளாந்தம் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களை எண்ண மிகவும் கஸ்டமாக இருந்தது. தொடரும்.
  7. ஆண் பேய்க்கு கால் இல்லை பெண்பேய்க்கு இருக்கும் போல என்று பேய்க்காட்டுவார்கள். 😄😄
  8. மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கும் செய்யும் துரோகம்..தமிழ்த்தேசியத்தை விட்டு மக்களை சலிப்படையச்செய்து ஒதுங்கப்பண்ண செய்யப்படும் செயல்ப்பாடுகள்தான் இவை... மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல மக்களை சலிப்படையச்செய்யும் வேலை.. நான் எல்லாம் ஒருகாலத்தில் இவர்களுக்காக கட்டிப்புடிச்சு உருண்டு சண்டைபோட்ட ஆள்.. இவர்கள் பேய்க்காட்டுவதை பார்த்து பாத்து சலித்து வெறுத்து ஒதுங்கிய பலரும் நானும் ஓராளாகிறேன்.. தொழில்நுட்பத்துடன் நாங்கள் அப்டேற் ஆகாவிட்டால் எப்படி நாங்கள் கணணித்துறையில் நிலைக்க முடியாதோ அதே பழைய ரெக்னிக்குகளை பேசிக்கொண்டு இவர்களாலும் நிலைக்க முடியாது.. வேணுமானால் எழுபது எண்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டி பேசி பொழுதுபோக்க இவர்கள் செய்வது உதவும்.. ஆனால் 2கே கிட்ஸ் பெரும்பான்மையாகப்போகும் அடுத்த தலைமுறை அரசியலில் இது எடுபடப்போவதில்லை.. இவர்களை காலமே காலாவதியானவர்கள் என்று புறங்கையால் தட்டி ஒதுக்கிவிடும்..
  9. உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,....... இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம் .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம். பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம். சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் சுயாட்சி கோருகிறோம். ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை
  10. காலநிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் வயதிற்கு அவர் மனத்தைரியம் உள்ளவராகவே எனக்கு தெரிந்தார். 30 வயது வாலிபர் போல் கார் ஓட்டினார். 😄
  11. மாவைக்கு, என்ன விசரே..... காலம் முழுக்க சுமந்திரன் என்பவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி தனித்தவில் வாசித்துக் கொண்டு இருக்கிறார். அவர் மீது, மாவை... என்ன நடவடிக்கை எடுத்தவர் எண்டு ஒருக்கால் சொல்லட்டும் பாப்பம். 😂
  12. தமிழ் தேசியவாதிகள் எறும்பு தமிழர்கள் கல்லு தமிழ்தேசியவாதிகள் செயல்களால் தமிழர்கள் தேய்ந்து தேய்ந்து போகிறார்கள்😟
  13. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீர்மானித்துள்ளார்.
  14. Hawaii Vocanoses National Park க்கு இருதடவைகள் போயிருந்தோம்.எனக்கு Lifetime membership என்றபடியால் வாகனத்தில் எத்தனை பேர் இருந்தாலும் எல்லோரையும் இலவசமாக போகவிடுவார்கள். பெரியதேசம்.ஒரே நாளில் சுற்றிப் பார்க்க முடியாது.இயன்றளவு பார்த்தோம்.இந்த இடங்களில் பெரிதாக எரிமலை இல்லை என்றாலும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான் அதன் சீற்றம் குறைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது கூட அரைமைல் தூரத்திலிருந்தும் தாங்க முடியாத வெக்கையடித்தது. படங்களை இணைக்கிறேன். காணொளிகளைப் பார்க்க விரும்பினால் இணைக்கும் சுட்டிகளை அழுத்தி பார்க்கலாம். வழமையில் பெரிதாக எரிந்து மலைகளில் இருந்து தீப்பிழம்பு ஆறாக ஓடும்.நாங்கள் போனநேரம் எரிமலை தணிந்திருந்தது.ஆனாலும் எந்தநேரமும் வெடிக்கலாம் என்றே சொன்னார்கள். இந்த இடத்தில் யாரோ ஒருவர் காலை வைத்து பார்த்து கால் எரிந்துவிட்டதாக எழுதிப் போட்டுள்ளார்கள். https://imgur.com/a/noz6feo மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் காணொணி பார்க்கலாம்.
  15. எந்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை விட ஜேவிபி இன் அனுரவுக்கு வாக்களிக்காமல் விட்டால் நல்லது என்பது என் நிலைப்பாடு. ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்டு கொண்டிருக்கும் கடும் இனவாத கட்சி மட்டுமல்லாமல் சீனாவின் பக்கம் மீண்டும் இலங்கை யை சாய வைக்க கூடிய கட்சி. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழர்களின் வாழ்வும் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. அனைத்தும் இழந்து போயிருக்கும் எம் சமூகத்துக்கு சிறுக சிறுக பொருளாதார ரீதியாக முன்னேற கால அவகாசத்தை வழங்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதே நல்லது. இல்லாவிடின், மேலும் மேலும் புலம்பெயர்ந்து, தாயகம் மேலும் சிறுத்துப் போய்விடும்.
  16. ம‌க‌ளிர் கூடை ப‌ந்தில் பின‌லில் அமெரிக்கா எதிர் பிரான்ஸ்............... ஆண்க‌ள் அணியும் அமெரிக்கா எதிர் பிரான்ஸ் பின‌லில் ஹா ஹா.................... இர‌ண்டு பிரான்ஸ் அணியும் தோல்வி அடைவ‌து உறுதி பிரான்ஸ் ஆண்க‌ள் அணி சில‌து அமெரிக்காவுக்கு சிர‌ம‌ம் கொடுப்பின‌ம் பிரான்ஸ் ம‌க‌ளிர் அணிய‌ அமெரிக்கா ம‌க‌ளிர் அணி சிம்பிலா வெல்வின‌ம்.......................... இர‌ண்டு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அமெரிக்காவுக்காக‌ காத்து இருக்கு🙏🥰............................
  17. என்ன இப்பிடி கேட்டுப்போட்டியள்? அவர்ர ஊசாருக்கு ஏரோப்பிளேனே ஓட்டுவார் போல கிடக்கு....😂
  18. மகிழுந்து இன்னும் ஓட்டுவதுண்டா?😌 திரி சுவாரசியமாக போவுது..👍
  19. எப்பிடியும் லண்டன்,பாரீஸ்காரர் சிலோன் கள்ளு போத்திலை டச் பண்ணியிருப்பார்கள் எண்டு நினைக்கிறன் 😄 வின்ரருக்கு பியர் அடிச்சாலும் சளி பிடிக்கும் எண்டுறாங்கள். நாங்கள் என்ன விரதமா இருக்கிறம்...? 😂
  20. எனக்கு ஊரிலிருந்தே ஹவாய்த்தீவை சுற்றிக்காட்டியதற்கு நான் தான் நன்றி சொல்லவேணும்! நன்றி அண்ணை.
  21. இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 30 38 35 103 2 China 31 25 20 76 3 France 14 19 22 55 4 Great Britain 14 17 21 52 5 Australia 18 15 14 47 6 Japan 13 8 13 34 7 Italy 10 11 9 30 8 Republic of Korea 13 8 7 28 9 Netherlands 11 6 8 25 10 Germany 10 9 6 25 11 Canada 6 5 11 22 12 Brazil 2 6 8 16 13 New Zealand 6 6 2 14 14 Hungary 4 5 5 14 15 Spain 2 3 8 13 16 Ukraine 3 4 4 11 17 Sweden 3 3 3 9 18 Romania 3 4 1 8 19 Ireland 4 0 3 7 20 Kazakhstan 1 3 3 7 21 Switzerland 1 2 4 7 22 Greece 1 1 5 7 23 Iran 2 2 2 6 24 Croatia 2 1 3 6 24 Cuba 2 1 3 6 26 Belgium 2 0 4 6 27 Israel 1 4 1 6 28 Jamaica 1 3 2 6 28 Thailand 1 3 2 6 30 Poland 1 1 4 6 31 Chinese Taipei 1 0 5 6 32 DPR Korea 0 2 4 6 33 Uzbekistan 3 0 2 5 34 Kenya 1 1 3 5 35 Turkey 0 2 3 5 36 India 0 1 4 5 37 Azerbaijan 2 1 1 4 38 Austria 2 0 2 4 38 Hong Kong 2 0 2 4 38 Philippines 2 0 2 4 41 Denmark 1 2 1 4 41 Georgia 1 2 1 4 43 South Africa 1 1 2 4 44 Bulgaria 1 0 3 4 45 Mexico 0 2 2 4 46 Kyrgyzstan 0 1 3 4 47 Czech Republic 2 0 1 3 47 Indonesia 2 0 1 3 49 Ecuador 1 2 0 3 50 Argentina 1 1 1 3 51 Armenia 0 2 1 3 52 Lithuania 0 1 2 3 53 Moldova 0 0 3 3 53 Tajikistan 0 0 3 3 55 Serbia 2 0 0 2 56 Chile 1 1 0 2 56 Slovenia 1 1 0 2 56 Saint Lucia 1 1 0 2 56 Uganda 1 1 0 2 60 Guatemala 1 0 1 2 60 Morocco 1 0 1 2 60 Norway 1 0 1 2 63 Ethiopia 0 2 0 2 64 Kosovo 0 1 1 2 64 Portugal 0 1 1 2 64 Tunisia 0 1 1 2 67 Dominican Republic 0 0 2 2 67 Grenada 0 0 2 2 67 Malaysia 0 0 2 2 70 Algeria 1 0 0 1 70 Bahrain 1 0 0 1 70 Botswana 1 0 0 1 70 Dominica 1 0 0 1 70 Pakistan 1 0 0 1 75 Colombia 0 1 0 1 75 Cyprus 0 1 0 1 75 Fiji 0 1 0 1 75 Jordan 0 1 0 1 75 Mongolia 0 1 0 1 80 Cape Verde 0 0 1 1 80 Egypt 0 0 1 1 80 Peru 0 0 1 1 80 Singapore 0 0 1 1 80 Slovakia 0 0 1 1 80 Zambia 0 0 1 1
  22. மகிழ்ச்சி! இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது! அட இந்தியனுகளா பாவம்டா நீங்கள்!❤️
  23. தாங்கள் புகுந்த நாடுகளில் இல்லாத பொல்லாத நாச வேலைகளை செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் கதைக்க வெளிக்கிட்டால் தங்களை ஏதோ புனிதர்கள் போல் காட்டிக்கொள்வார்கள்.
  24. சுமந்திரன் மீது நடவடிக்கைகள் எடுக்க... மாவைக்கு "தில்" இல்லை என்றால், அரியநேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மாவை... 🤫 மூடிக் கொண்டு இருக்க வேணும். 😂
  25. அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது. வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள் தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?
  26. நல்லூர் கொடியேற்றத்துக்கு பொருத்தமான பக்திப் பாடல் சுவியர். ஊரில் உள்ள தண்ணீர் பந்தல்களில் இந்தப் பாடலும் ஒலி பரப்பப்படும்.
  27. Kanthan. 35 min · Jaffna, Province du Nord, Sri Lanka · கொடி ஏறினான் #நல்லூர் வேலவன் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் 1734 - 2023 வரை ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார், தமது பதவி காரணமாகவும், அந்தப் பதவி மூலம் கிடைத்த செல்வாக்குக் காரணமாகவும், இடிந்த நல்லூர்க் கோயிலைக் கட்டுவதற்கான உத்தரவை அரசிடம் இருந்து பெற்றார். கந்தபுராண கலாசாரத்தை ஏட்டு வடிவில் பின்பற்றிய யாழ்ப்பாணத்துக் குடும்பங்களில் மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு முதன்மையான இடம் உள்ளது. கந்தபுராண ஏட்டுடன், வேல் ஒன்றையும் வீட்டில் வைத்து வழிபடும் மரபை தொன் யுவான் மாப்பாண முதலியார் என அழைக்கப்பட்ட முதலாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆரம்பித்தார். அவ்வாறு வைத்து வழிபடப்பட்ட வேலும், கந்த புராண ஏடும் இன்றும் இருப்பதுடன், அவற்றை மாப்பாண முதலியார் குடும்பத்தினர் பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள். போர்த்துக்கேயர்களால் இடித்து அழிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீளவும் குருக்கள் வளவில் கட்டுவதற்கான அனுமதியை ஒல்லாந்தர் அவருக்கு கி.பி 1734 இல் வழங்கியதுடன், தற்போதைய ஆலயமானது, புராதன நல்லூர் ஆலயம் அமைந்திருந்த குருக்கள் வளவிலேயே அமைந்துள்ளது. முதலாவது ஆலயம் 1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்டது. கோயிலில் உள்ள உறுதிகளின் பிரகாரம் சகல சொத்துக்களுக்கான உரிமை முருகனுக்கும் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்திற்கும் உள்ளது. வழி வழியாக கோயில் அதிகாரியாக பொறுப்பேற்பவர்கள் தமக்கும் பின்னர் யாருக்கு நிர்வாக உரிமை செல்ல வேண்டும் என்பது தொடர்பாக தெளிவாக உறுதி எழுதும் வழக்கம் உண்டு. அதன் பிரகாரமே அடுத்த கோயில் அதிகாரியாக வருபவர்கள் முருகனுக்கு தனது சேவைகளை வழங்குகிறார்கள். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் சிறாப்பராக கடமையாற்றிய தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியாருக்கு அரச உத்தியோகம் மன்னாருக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு அவர் மன்னாருக்குச் செல்லும்போது, அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரிடம் கோயில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டதாக கோயில் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகிறது. தொன் யுவான் (முதலாம்) இரகுநாத மாப்பாண முதலியார் கி.பி 1734 தொடக்கம் கி.பி 1750 வரை முருகனுக்கு தொண்டாற்றினார். முதலாம் இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக முத்துக்குமரனுக்கு தொண்டாற்றினார். 1734 ஆம் ஆண்டு களி மண்ணாலும், ஓலையாலும் அமைக்கப்பட்ட கோயில், 1749 இல் கல்லினாலும் செங்கற்களாலும் கட்டப்பெற்று, ஓட்டினால் வேயப்பட்டது. அக்காலத்தில் கர்ப்பக்கிரகம் கல்லாலும் சில இடங்கள் செங்கட்டிகளாலும் கட்டப்பெற்று, பீலி ஓடுகளால் வேயப்பட்டு, நிலம் சாணியால் மெழுகப் பெற்றதாகவும் அறிகிறோம். அவர் 1750 தொடக்கம் 1800 வரை முருகனுக்கு தொண்டாற்றினார். இரண்டாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் அதிகாரியாக இருந்த முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் கிடைத்த கல்வி வளர்ச்சி காரணமாக கோயில் நடைமுறைகள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்கள் உண்டு. ஆனாலும் அவரது காலத்தில் வேல் சாத்துப்படி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக எவ்விதமான பதிவுகளோ அல்லது ஆவணங்களோ இல்லை என்பதால், அவ்வேல் சாத்துப்படியானது முதலாவது ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்துக்கு முற்பட்டது என்பதுடன், மிகப் பழைமையான மரபு என்ற முடிவுக்கு கோயில் அதிகாரிகள் வருகிறார்கள். மூன்றாவது கோயில் அதிகாரியான முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் காலத்தில் பிள்ளையார் மற்றும் வைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1800 தொடக்கம் 1839 வரை முருகனுக்கு சேவையாற்றினார். முதலாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் முருகனுக்கு தனது சேவைகளை ஆரம்பித்தார். அவரது காலத்தில் கோயிலைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டதுடன், கோயில் மகோற்சவம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. அத்துடன் அவரது காலத்தில் ஆலயத்திற்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டதுடன், அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மகோற்சவத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட கொடிமரமானது, தற்போது உள் வீதியில் உள்ள சண்முகருக்கு முன்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் 1839 தொடக்கம் 1860 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார். மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியார் ஆண் சந்ததி அற்று இறந்த காரணத்தால், அவரது முதல் மகளான சோமவல்லியின் கணவரான டாக்டர் கந்தையா, தனது மனைவியின் குடும்பப் பெயரையும் இணைத்து கந்தையா மாப்பாண முதலியாராக கோயில் கடமைகளைப் பொறுப்பேற்றார். அதேவேளை முதல் மனைவியான சோமவல்லியின் இறப்பின் பின்னர், மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் இரண்டாவது மகளான அமிர்தவல்லியை திருமணம் புரிந்தார். அதனால் தொடர்ந்தும் அவரே கோயில் அதிகாரியாகத் தொண்டாற்றினார். அவரது நண்பரே ஆறுமுக நாவலர் ஆவார். சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் ஆன்மீகத்தை மேன்மை கொள்ளச் செய்யும் பொருட்டும் கந்தையா மாப்பாண முதலியாரின் அழைப்பின் பேரில் நாவலர் நல்லூர் ஆலயத்தில் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் கந்தையா மாப்பாண முதலியாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் சில விடயங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. கந்தையா மாப்பாண முதலியார் 1860 தொடக்கம் 1890 வரை முருகனுக்கு தொண்டாற்றினார். கந்தையா மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் மூன்றாவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மூன்றாவது மகளான பொன்னுப்பிள்ளை வசம் கோயில் திறப்பு சேர்ந்தது. அவரது கணவர் சங்கரப்பிள்ளை தனது மனைவியின் குடும்பப் பெயரை தனது பெயருடன் இணைத்து, சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாராக கோயில் அனுட்டானங்களில் மாத்திரம் பங்கெடுத்துக் கொண்டார். ஆயினும் இரண்டு மூத்த சகோதரிகளின் காலத்தில் இடம்பெற்ற சில கசப்பான அனுபவங்களாலோ என்னவோ, கோயிலின் நிர்வாகத்தை பொன்னுப்பிள்ளை தம் வசம் வைத்திருந்தார். சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியார் 1890 தொடக்கம் 1915 வரை முருகனுக்கு தொண்டாற்றினார். சங்கரப்பிள்ளை மாப்பாண முதலியாரின் மறைவின் பின்னர் அவரது மூத்த மகன் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாக பொறுப்பேற்றார். தந்தையை இழந்த அவருக்கு, அவரது அன்னையான பொன்னுப்பிள்ளையின் வழிகாட்டல் கிடைத்தது. தற்போதைய நல்லூர்க் கோயில் எழுச்சியின் ஆரம்ப பொற்காலமாக பொன்னுப்பிள்ளையின் காலத்தைக் குறிப்பிடலாம். இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் ஒரு கப்பலோட்டிய தமிழர். ரங்கூன் வணிகத்தில் பணம் ஈட்டி பெரும் செல்வந்தரானார். தான் உழைத்த செல்வம் முழுவதையும் சந்ததி அற்ற காரணத்தினால் கோயிலுக்கு வழங்கினார். அவர் தனது காலத்தில் நல்லூர்க் கந்தனுக்கு கருங்கல்லால் மூலஸ்தானத் தரை வேய்ந்து திருப்பணியை செய்து, கல்வெட்டு ஒன்றையும் அதில் பொறித்தார். இவரது காலத்தில் கோயிலை சுற்றி சுற்று மதில் அமைக்கப்பட்டு, உள்வீதி உருவானது. நல்லூர்க் கோயில் உள்வீதிக் கொட்டகை அமைத்தார். அத்துடன் கோயிலுக்கு முதன்முதலாக மணியுடன் கூடிய மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றை ஸ்தாபித்து, அதில் கல்வெட்டு ஒன்றையும் பொறித்தார். இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் அழகன் முருகனுக்கான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றைச் செய்து அழகன் முருகனை அழகு பார்த்தார். இவரது காலத்தில் சண்முகர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கத் தொடங்கினார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலை முழுமையாகக் கருங்கற்களால் கட்ட விரும்பி, கருங்கற்களைக் கொண்டு வந்து இறக்கினார். ஆயினும் அவரது கனவு தவிர்க்க முடியாத காரணத்தினால் நிஜமாகவில்லை. இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் 1915 தொடக்கம் 1921 வரை கோயில் அதிகாரியாக முருகனுக்குத் தொண்டாற்றினார். இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவரது காலத்தில் முதன் முதலாக கோயில் அர்ச்சனையின் பொருட்டு, அர்ச்சனைச் சீட்டை அறிமுகப்படுத்தியதுடன், அர்ச்சனைச் சீட்டுக்களை வழங்கும் பொருட்டு தேக்கு மரத்தினால் ஒரு அறையை உருவாக்கினார். அத்துடன் அவர் நேரம் தவறாத பூசை முறையை அறிமுகப்படுத்தினார். அத்துடன் பூசை நடைமுறைகளுக்காக பிராமணர்களை சம்பளத்திற்கு அமர்த்தும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். இவருடைய காலத்தில் முத்துக்குமாரர் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அவருக்கான தங்க ஆபரணங்களை செய்வித்தார். அத்துடன் தாயான பொன்னுப் பிள்ளையின் ஆணைப்படி பருத்தித்துறை வீதிக்கு அப்பால் இருந்த காணியில் முருகனுக்கு திருக்குளம் அமைத்து, திருப்பணி நிறைவேற்றினார். அத்துடன் தாயின் விருப்பத்தின் பேரில் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக பழனி ஆண்டவர் சந்நிதியை ஸ்தாபித்தார். அதுமாத்திரமல்லாமல் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றை வெள்ளைக்கல் கொண்டு திருப்பணி ஆரம்பித்தார். ஆயினும் அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கும் மாத்திரமே திருப்பணி செய்யப்பட்டது. நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் 1921 தொடக்கம் 1945 வரை கோயில் அதிகாரியாக தொண்டாற்றினார். நான்காவது இரகுநாத மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் அவரது மூத்த மகனான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார், தனது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியாரை துணைக்கு வைத்துக் கொண்டு கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அழகு முருகனை அலங்காரக் கந்தனாக்கி, அவனது திருவிழாக்களை வண்ணமயமாக்கினார். தனது கற்பனைக்கு ஏற்ற வகையில் ஆலயத்திற்கு வாகனங்களை செய்வித்தார். தனது தந்தையார் கட்டிய கேணித் திருக்குளக் கொட்டகையைப் பெருப்பித்தார். அதன் காரணத்தால் கேணித் திருக்குளத்தைச் சுற்றிய இடம் இன்னுமொரு கோயில் கட்டட வளாகமாக பரிணமித்தது. அத்துடன் கேணித் திருக்குளத்திற்கு முன்பாக தண்டாயூதபாணியின் அருட்சந்நிதியையும் ஸ்தாபித்தார். மேலும் தனது தந்தையார் ஆரம்பித்த வெள்ளைக்கல் கோபுரத் திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை பூர்த்தி செய்தார். அத்துடன் வள்ளி – தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியை நிறைவு செய்தார். நல்லூரில் வள்ளிகாந்தர் மூர்த்தியை ஸ்தாபித்து, வள்ளிகாந்தருக்கு பள்ளியறை விமானம் ஒன்றை திருப்பணி செய்த பெருமை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியாரையே சாரும். நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் இருந்த காரணத்தினால், அதன் அபாயத்தை உணர்ந்த அவர், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு திருப்பணி நிறைவேற்றி, தானும் வடம் பிடித்து இழுத்து இரதோற்சவத்தை இன்னும் அழகாக்கினார். ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாக்களுக்கு பெருமை சேர்த்ததுடன், புது வடிவத்தினாலான வாகனங்களை தன் கற்பனைக்கு ஏற்ற வகையில் உருவாக்கினார். இவர் தனது காலத்தில் பெரிய கைலாச வாகனம் அடங்கலாக அதிகளவான வாகனங்களைப் பெருக்கியதுடன், சொற்பொழிவுகள் மற்றும் வானொலி அஞ்சல் முதலியவற்றின் மூலம் முருகனிடம் பக்தர்களை மேலும் நெருக்கமாக்கினார். அதன் காரணத்தினால் உலகின் இந்துக் கோயில் ஒன்றில் இருந்து முதலாவது நேரடி அஞ்சல் என்ற பெருமை நல்லூருக்குக் கிடைத்தது. ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் 1945 தொடக்கம் 1964 வரை முருகனுக்கு தொண்டாற்றினார். ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியாரான குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கோயிலின் 10 ஆவது கோயில் அதிகாரியாக, மிக இள வயதில் பொறுப்பேற்றார். நல்லூர் பக்தர்களைப் பொறுத்த வரையில் அழகன் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரியாக குமாரதாஸ் மாப்பாண முதலியார் கருதப்படுகிறார். தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக இவர் முருகனுக்குத் தொண்டாற்றி வந்தார். இவர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற 1965 ஆம் ஆண்டு தொடக்கம் நல்லூர் வருடாந்த மகோற்சவத்திற்கு முன்னர் வருடா வருடம் கோயிலுக்கான திருப்பணியை நிறைவேற்றி வந்தார். யுத்த காலப் பகுதியிலும் குறித்த நடைமுறையை குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவேற்றிமைக்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை நிறைவேற்றினார். இவரது அயராத முயற்சியின் பயனாக மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அனுமதியுடன் அரச காணிக்குப் பதிலாக கேணித் திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாற்றினார். அவரது 50 வருடங்களுக்கு மேலான கடின உழைப்பும் முருகன் மேல் கொண்ட பக்தியும் இன்றைய நல்லூர் பெருங்கோயிலின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது. நல்லூரின் நேரம் தவறாது பூசைகளையும் அழகன் முருகனையும் பக்தி பூர்வமாக வணங்குவதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக 1 ரூபா அர்ச்சனையை இன்றும் நடைமுறைப்படுத்தியவர். குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட வருடாந்த திருப்பணி மரபை, தனது முதுமையையும் பொருட்படுத்தாமல், தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணியை நிறைவேற்றினார். சண்முகருக்கான ‘ஸ்வர்ண சபை’ திருப்பணி மூலம் வரலாற்றில் இலங்கையில் உள்ள இந்துக் கோயில்களில் தங்கக் கூரை கொண்டு வேயப்பட்ட முதலாவது கோயில் என்ற பெருமை நல்லூருக்கு கிடைத்தது. அவரின் மறைவிற்கு பின்னர் (2021இல்) அவரது மகன் சயன் மாப்பாண முதலியார் தற்போதைய நல்லூர் கோவில் நிர்வாக அதிகரியாக இருந்து திருப்பணிகளை தொடர்கிறார். பதிவு - உமாச்சந்திரா பிரகாஸ்..........! அறுபடை வீடு கொண்ட திருமுருகா .........! 🙏 09/08/2024 இன்று நல்லூர் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழா ஆரம்பமாகியது . .........! 🦚
  28. சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே. முரட்டுக்காளை..இதுபோதும்...
  29. இந்தக் காணொளியை ஆறாவது நிமிடத்திலிருந்து பாருங்கள். ஒரு தலைவனுக்காக எமது மக்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள்? விருப்பு வெறுப்பை விடுத்து மக்களின் துணிச்சலையும் ஆர்வத்தையும் பாருங்கள்.
  30. காத்தான்குடி பள்ளிவாசலில் உயிர்களை கபாலிகாரம் செய்தவர்கள் திரும்பி பத்திரமாய் போய் சேர்ந்த இடமும் பக்கத்தில் இருந்த சிங்களராணுவ முகாம் என்றும் பதிவுகள் உள்ளன. தவிர புலிகள் இல்லாத காலத்தில் அதுவும் 2019 இல் ஈஸ்டர் தாக்குதலை எப்படியெல்லாம் கட்டமைத்து அரசியல் ஆதாயம் தேடிய கூட்டம் என்பதையும் மறக்கலாகாது.
  31. சிங்களவர் போட்டி இட்டால் பிரச்சனை இல்லை எத்தனை சிங்களவரும் போட்டி இடமுடியும் ஒரு தமிழன் போட்டியிட்டால். தமிழனே எதிர்க்கிறன். ......இவ்வளவு எதிர்ப்பு வெளிநாடுகளில் பிறமொழி பேசுவோர் அதிகம் வாழும். பகுதிகளில் ஒரு தமிழன் போட்டி இடும்போது கூட கிடைக்கவில்லை
  32. 👍.......... பிரான்ஸ் இந்த ஒலிம்பிக்ஸில் தூள் கிளப்புகின்றது. அவர்களின் நாட்டில் இது நடக்கின்றது என்ற உத்வேகம், அத்துடன் மிக நன்றாக அவர்களின் வீரர்களும், அவர்களின் அணிகளும் தயாராக்கப்பட்டிருக்கின்றன. வாலிபாலில் கூட பலமான இத்தாலி அணியை 3 - 0 என்று வென்றுவிட்டார்கள். இறுதிப் போட்டியில் போலந்து நாட்டிற்கு எதிராக விளையாடப் போகின்றார்கள்.
  33. பெருசு, ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல் போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣 உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது. ✋
  34. என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்: 1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட), அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்? 2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி, இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா? 3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?
  35. இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃
  36. 1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்? 2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??
  37. ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால் ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்???
  38. சில ஆண்டுகள் முன்பு பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரத்தின் பாடசாலைகளில் பாலியல் தொடர்பான கல்வித்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பெற்றோர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்தனர். Good touch-bad touch இல் இருந்து குழந்தை உருவாகும் முறை, ஒரு பாலுறவு (homosexuality) என்ன என்பது போன்ற விடயங்களை உள்ளடக்கிய அந்தப் பாடத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென போராட்டம் செய்த பெரும்பான்மையான பெற்றோர் குடியேறிகளாக வந்து செற்றிலான முஸ்லிம் குடும்பத்தினர்😂. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஒட்டு மொத்த நன்மை தரக் கூடிய முன்னேற்றகரமான கொள்கைகளை மேற்கத்தைய நாடுகள் அமல்படுத்த, வந்து குடியேறிய பிற்போக்கு வாதிகள் அனுமதிக்காமல் போராடும் வினோத நிலை பல மேற்கு நாடுகளில் உருவாகி வருகிறது. சில நடைமுறைகள் பிடிக்கவில்லையானால், தமக்குப் பிடித்தமான நடைமுறைகள் இருக்கும் நாடுகளுக்கு வெளியேறிச் செல்வதை விடுத்து, தாராளவாத நாடுகளின் நல்ல கொள்கைகளை தடுத்த படி அங்கேயே "டோரா போட்டு" அந்த நாடுகளையும் குட்டிச் சுவராக மாற்றி விடும் வேலைகள் நடக்கின்றன. இப்படியான குடியேறிகளுக்கு கொஞ்சம் அவர்களுடைய இன /மத வெறுப்பு மருந்தின் சுவை என்ன என்று இந்த பிரிட்டன் கலவரம் காட்டியிருக்கும். ஆனால், அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருப்பது சோகம்.
  39. இது தான் தமிழரின் சாபம். எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???
  40. அரச பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி விட்டு அனுதாபத்தையும் தேட முயற்சிக்கிறார்கள்.
  41. சிறிய பொதுவான(காலநிலை,போக்குவரத்துகள்) உரையாடல்களுடன் போய்க்கொண்டிருக்க ஏதாவது குடிக்கின்றீர்களா என கேட்டேன்.தேநீர் என்றார்கள். தேடினேன் கிடைக்கவில்லை. கோப்பிதான் கிடைக்கும் என்றேன். ஆம் என்றார்கள் .....கிச்சின் பக்கம் சென்று நானே கோப்பியும் பலகார தட்டும் கொண்டு வந்து மேசையில் வைத்தேன். ஒரு நிமிட இடைவெளி வர யாழ்களத்தை பற்றி கதைக்க வெளிக்கிட்டோம். சகல உறவுகளைப்பற்றியும் கதைத்தோம். முக்கியமாக கதைகள்,கட்டுரைகள் எழுதுபவர்களை பற்றியே. அவர்களின் எழுத்து வல்லமை.வாதாடும் வல்லமை பற்றி கதைத்தோம். இத்தனைக்கும் மத்தியில் பாஞ்ச் ஐயாவை நோக்கி மண்டபத்திலிருந்த அநேகமானோர் வரத்தொடங்கி விட்டனர்.தமிழ் பாடசாலைகளை சேர்ந்தவர்கள்,தமிழ்விளையாட்டு கழகங்களை சேர்ந்தவர்கள்,பழைய நண்பர்கள் என எல்லோரும் ஆள் மாறி ஆளாக வந்து பாஞ்ச் ஐயாவை சுகம் விசாரித்து சென்றனர். அப்போதுதான் பாஞ்ச் ஐயா எவ்வளவு பிரபல்யமானவர் என்றும் அவர் சேவை பற்றியும் தெரிந்து கொண்டேன்.🌱
  42. நீங்கள் இப்படி வருவீங்கள். என்பது எனக்கு நன்கு தெரியும் உங்கள் விளங்கும். கொள்வனவு பற்றியும் தெரியும் சுமத்திரன். பற்றி ஏன் கதைத்தேன். என்றால்,.....அவர் மட்டுமே சொன்னார் தேர்தலில் பின்னர் ரணில் காணி பொலிஸ்,..இந்தியா ஒப்பந்தம் 13. .........இப்படி பல விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வழங்குவார். என்று [நல்ல காலம் தமிழ் ஈழம் தருவார் என்று சொல்லவில்லை ]😂😂😂😂😂😂 ...... ஆகையால் தமிழ் மக்களே உங்கள் விலை மதிப்பற்ற வாக்குகளை கொட்டுங்கள். ரணிலுக்கு,..........மற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை ...மூச்சும். விடவில்லை எனவேதான் அவர்களை பற்றி கதைக்கவில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.