Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3054Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31968Posts -
Kapithan
கருத்துக்கள உறவுகள்6Points9308Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/13/24 in all areas
-
குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
5 pointsபுதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். பந்து அவர்களின் வீட்டு யன்னலில் பட்டால் என்ன நடக்கும் என்று கேட்டார். யன்னல் உடைந்து போய்விடும் என்று சொன்னேன். போலீஸைக் கூப்பிடப் போகின்றேன் என்று போனார். ஆனால் போலீஸ் வரவில்லை. அவரின் மனைவி அவரை அன்று தடுத்திருக்கக்கூடும். ஆனாலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்தார். அவசரங்களுக்கு என்னை அழைப்பதை விட, அவருக்கு வேறு தெரிவுகளும் இருக்கவில்லை. வயதானால் பல அவசரங்கள் திடீர் திடீரென்று வந்து சேர்ந்தும் விடுகின்றன. இரண்டு பிள்ளைகள் என்றார். இந்த ஊரில் இருக்கும் மிகவும் நல்ல பாடசாலை ஒன்றில் படித்து, மிகவும் சிறந்த பல்கலைகளுக்கு போய், இப்பொழுது மிகப்பெரிய உத்தியோகங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் குடும்பங்களாக இருக்கின்றார்கள் என்றார். பல படங்களையும் காட்டினார். பிள்ளைகள் வாங்கிய விருதுகளையும் பார்க்கக் கொடுத்தார். என்னுடைய பிள்ளைகளையும் நான் அப்படியே ஆக்க வேண்டும் என்றும் சொன்னார். அவரின் வீட்டின் யன்னல் இன்னும் ஒரு தடவை கூட உடைக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. அவரின் வீட்டின் முன் கூட்டம் கூடிய நாளுக்கு முதல் நாள் எங்களிடம் சொல்லி விட்டே போயிருந்தார். சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு இடத்தில் ஒரு வாரம் தங்கப் போகின்றோம் என்று சொல்லியிருந்தார். தினமும் மருத்துவமனைக்கு போய் வருவதில் இருக்கும் சிரமங்களைச் சொன்னார். தாங்கள் திரும்பி வரும் வரை அவர்களின் வீட்டைக் கவனித்துக் கொள்ள சொல்லியிருந்தார். கூட்டத்தில் போய் என்னவென்று விசாரித்தேன். அந்த வீட்டை விற்கப் போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களை நான் அதன் பின்னர் காணவேயில்லை. மகன்களில் ஒருவர் அந்த வீட்டை விற்றார் என்றார்கள். தாயையும், தந்தையையும் மருத்துவமனையில் இருந்து தன்னுடனேயே கூட்டிச் சென்று விட்டதாகவும் சொன்னார்கள். வீட்டில் இருந்த பொருட்களை சிலர் வந்து தங்களிடையே பிரித்து எடுத்துக் கொண்டு போனார்கள். மூன்று நாட்களில் அந்த வீடு விற்கப்பட்டது என்றனர். பலத்த போட்டிகளுக்கு இடையில் ஒரு இளம் தம்பதிகள் வாங்கியிருந்தனர். என் பிள்ளைகள் இருவரும் பல்கலை, பின்னர் வேலை என்று வெளியில் போய்விட்டனர். நாங்கள் இருவர் ஆகினோம். புதிதாக வந்த முன் வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடகடவென்று வளர்ந்து, இரண்டு வயதிலேயே 'குட் மார்னிங்' என்று சொல்ல ஆரம்பித்தது அந்தக் குழந்தை. அப்படியே அந்த வருடமே ஒரு தம்பி பாப்பாவும் அங்கே புதிதாக வந்தார். ஒரு நாள் வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த இளம் தம்பதிகள் வந்தனர். இந்தப் பகுதியில் எந்த முன்பள்ளி நல்லது, என்னுடைய பிள்ளைகள் எந்த முன்பள்ளிக்கு போனார்கள் என்று விசாரித்தனர். அவ்வளவு தான் வாழ்க்கை.5 points
-
ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்க முயன்ற போது ஐன்ஸ்டீனின் 2 பக்க கடிதம் உலக வரலாற்றை மாற்றியது எப்படி?
4 pointsபட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி முண்டோ பதவி, பிபிசி நியூஸ் 12 ஆகஸ்ட் 2024 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது. பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது. அன்று, வரலாற்றின் போக்கை மாற்றியமைத்ததாக நம்பப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதத்தை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் விற்பனைக்கு வரும் இந்தக் கடிதத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை (4 முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று மதிப்பிடுகிறது கிறிஸ்டியின் ஏல நிறுவனம். இது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு சொந்தமான கலைப்பொருட்கள் ஏலத்தின் ஒரு பகுதியாகும். அவர் 2018-இல் 65 வயதில் இறந்தார். கணினி இயலில் அவரது ஆர்வத்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கும் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், இந்தக் கடிதம் அவற்றின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கையொப்பமிட்டவர் மிக முக்கியமானவராக இருந்த போதிலும், ரூஸ்வெல்ட் ஆரம்பத்தில் அதன்மீது அதிக கவனம் செலுத்தவில்லை. மற்ற விஷயங்கள் அவரது மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தச் சந்திப்பிற்கு 15 நாட்களுக்கு முன்பு, ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்திருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவு கொண்ட ஒரு போர் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்தது. லியோ சிலார்ட் என்ற அதிகம் அறியப்படாத ஹங்கேரிய புலம்பெயர்ந்த இயற்பியலாளர் எழுதிய கடிதத்தை ரூஸ்வெல்டுக்கு சாக்ஸ் படித்துக் காட்டினார். உண்மையைச் சொல்வதானால், அணுசக்தி, சங்கிலி விளைவுகள், மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றல் ஆகியவை அவர்கள் இருவருக்கும் மிகச் சிக்கலானதாக இருந்தன. அக்கடிதத்தில் இதுபோன்ற பத்திகள் இருந்தன: "கடந்த நான்கு மாதங்களில், யுரேனியத்தின் ஒரு பெரிய திரளில் இருந்து சங்கிலி விளைவை நிறுவுவது சாத்தியமாகியிருக்கிறது (...), இதன் மூலம் அதிக அளவு ஆற்றல் மற்றும் ரேடியம் போன்ற புதிய தனிமங்கள் பெரிய எண்ணிக்கையில் உருவாகும்." ஆனால் இதனை அதிபர் ரூஸ்வெல்ட் சட்டை செய்யவில்லை. அதிபர் தனது பழைய நண்பரை மறுநாள் காலை காபி சாப்பிட அழைத்தார். நிகழும் போது பெரிதாகத் தோன்றாத சில சம்பவங்கள் உலகையே மாற்றிவிடும். இதுவும் அதுபோன்ற ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்… அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகள் சில மாதங்களாக சிலார்ட்டை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. 1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாஜி ஜெர்மனியில், அவரது சக ஊழியர்களாக இருந்த விஞ்ஞானிகள் அணுவைப் பிரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர். இது அணுப்பிளவு என்று அழைக்கப்படுகிறது. சிலார்ட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதை முன்னறிவித்திருந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அணு யுத்தம் இனியும் ஒரு கற்பனை மட்டுமே அல்ல. நாஜிக்கள் மற்ற எல்லோரையும் விட அணு ஆராய்ச்சியில் மேலும் முன்னேறலாம் என்று அவர் அஞ்சினார். ஆனால் யாரும் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கு முன் சில ஆண்டுகளாக, அவர் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஆகியோர் தனது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி வந்தார். அணுப்பிளவு சாத்தியமா என்று அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் அவர் சொன்னது சரி என்று நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், அணுப்பிளவு பற்றிய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் அவரது நண்பரும் சக ஊழியருமான என்ரிகோ ஃபெர்மி இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய கவலைகளை நிராகரித்திருந்தார். குறைந்தது 25 ஆண்டுகளுக்கு, ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு வணிக அல்லது ராணுவ நோக்கங்களுக்காக யாரும் அணுப்பிளவுகளைப் பயன்படுத்த முடியாது, என்று அவர் கணித்திருந்தார். இது நம்ப முடியாத, அறிவியல் புனைகதை என்று கருதப்பட்டது. அணுப்பிளவில், ஓரு அணு பிளக்கப்படுகிறது. அது ஆற்றலை வெளியிடுகிறது, அவ்வளவுதான். இருப்பினும், ஒரு நிலையற்ற அணுவை பிளக்க முடிந்தால், அது அதிக எண்ணிக்கையிலான நியூட்ரான்களை வெளியிடும். அவை மற்ற நிலையற்ற அணுக்களைப் பிளவுபடுத்தி, மேலும் நியூட்ரான்களை வெளியிடும். இப்படி நடக்கும் ஒரு சங்கிலி எதிர்வினை ஒரு அசாதாரண அளவிலான ஆற்றலை வெளியிடும். இயற்பியலாளர் சிலார்ட்டுக்கு பதில்கள் தேவைப்பட்டன. அவற்றை அவர் 1939-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர் வால்டர் ஜின்னுடன் கண்டடைந்தார். அவர் புதிய மற்றும் சாத்தியமற்ற அறிவியல் சோதனைகளைச் செய்வதில் நிபுணர். சிலார்ட் சொன்னது சரிதான் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். "உலகம் வலிமையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது," என்று அவர் பின்னர் எழுதினார். அதிர்ஷ்டவசமாக, அணுப்பிளவு சங்கிலி எதிர்வினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு தடை இருந்தது. அணுப்பிளவு வெளியிடும் நியூட்ரான்கள் அதிவேகமாகப் பயணித்தன. மற்ற அணுக்களால் அவற்றை உறிஞ்சுவது கடினமான இருந்தது. ஆனால் அந்த விவரம் நாஜிகளை நிறுத்தப் போவதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நார்வேயில் கன நீர் தயாரிக்கப்பட்டு வந்த இடம். இதனை 1943-இல் நாஜிக்கள் தகர்த்தனர் ஜெர்மனி-பிரான்ஸ் இடையே நீருக்கான போட்டி நியூட்ரான்களை மெதுவாகச் செல்லவைப்பது எப்படி? இதற்கு தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் அது பல நியூட்ரான்களை உறிஞ்சி, அவற்றை ஒரு சங்கிலி எதிர்வினையில் பயனற்றதாக ஆக்கி விடுகிறது. இருப்பினும், H₂O இன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஒரு கூடுதல் நியூட்ரான் (D₂O) கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப் பயன்படுத்தப்பட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். இது ‘கன நீர்’ (heavy water) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதனை உற்பத்தி செய்வது கடினம். எனவே நாஜி அரசாங்கம் நார்வேயில் உள்ள வேமோர்க் என்ற நீர்மின் நிலையத்திற்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. அங்கு அவர்கள் தங்கள் தினசரி வேலையின் துணை விளைபொருளாக கனரக நீரை உற்பத்தி செய்தனர். ஜெர்மனியர்கள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கன நீரையும் மிக அதிக விலைகொடுத்து வாங்க முன்வந்தனர். அந்த ஆலையை மேலும் அதிகமாக கன நீர் உற்பத்தி செய்யவும் வலியுறுத்தினர். ஆனால் நார்வேஜியர்கள் இதனை நிராகரித்தனர். ஹிட்லரின் திட்டங்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிரெஞ்சு ரகசிய போலீஸ் குழு ஒன்று அதன் பின்னர் அந்த ஆலையை அணுகி, அவர்களது ரசாயன துணைத் தயாரிப்புகளின் சாத்தியமான ராணுவ நோக்கம் குறித்து நார்வேஜியர்களை எச்சரித்தது. நார்வேஜியர்கள் கன நீரை இலவசமாக பிரெஞ்சு அதிகாரிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ஜெர்மனியர்கள் இதனைக் கண்டுபிடித்தனர். இரவோடு இரவாக 26 கனரக நீர் கேன்கள் கடத்தப்பட்டன. இது ஒரு பதற்றமான நடவடிக்கை. நாஜி போர் விமானங்கள் தயாராகக் காத்திருந்தன. அவர்கள் பிரெஞ்சு அதிகாரிகள் ஏறிய விமானத்தைக் குறிவைத்து அதனைத் தரையிறக்கக் கட்டாயப்படுத்தினர். ஆனால், நாஜிக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. விமானத்தில் கன நீர் கேன்கள் இல்லை. அவை ரயில் மூலம் பாரிஸுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அங்கு ஒரு விஞ்ஞானிகள் குழு அவசரமாகப் பரிசோதனையைத் தொடங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபருக்கு அனுப்பப்பட்ட அசல் கடிதம் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஏலம் விடப்படும் இரண்டாவது பதிப்பு, கையொப்பமிடப்பட்ட சிறிய பதிப்பு ஐன்ஸ்டீனின் கையொப்பம் அணுஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்தது. ஒரு அணுகுண்டு இருக்குமோ என்று சிலார்ட் அஞ்சினாலும், அவர் நாஜி வெடிகுண்டு பற்றி அதிகம் பயந்தார். இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத இந்த ஆயுதம் உண்மையில் இருக்கிறது என அவர் நம்பினார். அதனால் நிகழப்போகும் அழிவுகள், அடக்குமுறைகளைக் கற்பனை செய்து பார்த்தார். அவர் ஒரு எளிய முடிவுக்கு வந்தார்: அமெரிக்கர்கள் அதை ஜெர்மனியர்களுக்கு முன்பாக உருவாக்க வேண்டும். அதைச் செய்ய அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் அவர்களுக்கு உச்ச அதிகாரத்தை வழங்க வேண்டியிருந்தது. அவருக்கு ஒரு கூட்டாளி மற்றும் சிந்தனை தேவை: உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர் கூட புறக்கணிக்காத விஞ்ஞானி யார்? ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் தெரியும். பெர்லினில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சிலார்ட் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. மேலும் 15 வருடங்களாக அவர்கள் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒன்றாக வீட்டிற்கு நடந்து செல்கையில், இயற்பியல், தத்துவம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இப்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறி, சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் வசித்து வந்தனர். ஆனால் 1939-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, உலகின் மிகவும் பிரபலமான விஞ்ஞானியான் ஐன்ஸ்டீன் அமெரிக்காவின் லாங் தீவில் ஒரு நண்பரின் அறையில் இருந்தார். அங்கு அவரைக் காண, சிலார்ட், தனது நண்பரும், சக ஊழியரும், சக ஹங்கேரியருமான யூஜின் விக்னருடன் சென்றார். ஐன்ஸ்டீனுக்கு அணுசக்திச் சங்கிலி எதிர்வினை பற்றி சிலார்ட் விளக்கி, அவரும் ஃபெர்மியும் சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியபோது, ஐன்ஸ்டீன் அதிர்ச்சியடைந்தார். "இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை," என்பதுதான் அவரது முதல் பதிலாக இருந்தது. இது சுவாரஸ்யமானது. ஐன்ஸ்டீனின் E=mc² சமன்பாடு செயல்பாட்டில் இருந்தது. ஆனால் நாஜி ஜெர்மனியில் இருந்து அகதியாக வந்து, உறுதியான சமாதானவாதியாகவும், அரசியல் உணர்வுள்ள நபராகவும் இருந்த ஐன்ஸ்டீன், ஜெர்மனியர்களின் கைகளில் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன ஆகும் என்ற ஆபத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார். ஜெர்மனி போருக்குத் தயாராக இருந்த நிலையில், நிலைமை அவசரமானது என்று ஐன்ஸ்டீன் ஒப்புக்கொண்டார். பின்னாட்களில், அவர் தனது வாழ்க்கையின் பெரும் தவறு என்று அழைத்த ஒரு செயலைச் செய்தார். ரூஸ்வெல்ட்டுக்கு அனுப்ப சிலார்ட் தயாரித்திருந்த கடிதத்தில் கையெழுத்திட அவர் ஒப்புக்கொண்டார். ஐன்ஸ்டீனின் கடிதத்துடன் சிலார்ட் நியூயார்க் திரும்பினார். கடிதத்தை அதிபருக்கு அனுப்புவது மட்டுமே மிச்சம். இது நம்மை மீண்டும் அலெக்சாண்டர் சாக்ஸிடம் கொண்டு செல்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லாங் ஐலேண்டில் அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கான கடிதத்துடன் ஐன்ஸ்டீன் மற்றும் சிலார்ட் அணுகுண்டுடன் காலை உணவு ரூஸ்வெல்ட்டுடனான சாக்ஸின் முதல் சந்திப்பில் அவரிடம் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் இருந்தபோதிலும், அச்சந்திப்பு சரியாகச் செல்லவில்லை. "மிக விரைவில் யுரேனியம் ஒரு முக்கியமான புதிய எரிசக்தி ஆதாரமாக மாறக்கூடும்," என்று அக்கடிதம் துவங்கியது. "சூழ்நிலை குறித்து வெளிவந்துள்ள சில அம்சங்கள் விழிப்புடன் இருக்கக் கோருகின்றன. தேவைப்பட்டால், அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று அக்கடிதம் எச்சரித்தது. அணுசக்தி சங்கிலி எதிர்வினை "வெடிகுண்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது சாத்தியமானது. உறுதியாக இல்லாவிட்டாலும், இந்த வழியில் மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை குண்டுகளை ஆயுதமாக்க முடியும்," ஐன்ஸ்டீன் எச்சரித்திருந்தார். நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்த செக்கோஸ்லோவாகிய சுரங்கங்களில் இருந்து யுரேனியம் தொடர்பான தகவல்களை அவர் குறிப்பிடுகிறார் என்றாலும், அதிகமான அறிவியல் தகவல்களால் அதிபர் குழம்பிவிட்டார் என்பதை சாக்ஸ் அறிந்திருந்தார். இருப்பினும், அடுத்த நாள் காலை உணவுக்கான அழைப்பு, உலகின் மிக சக்திவாய்ந்த மனிதனுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி புரிய வைப்பதற்கான இரண்டாவது வாய்ப்பாகும். சாக்ஸ் ஒரு திட்டத்தை வகுத்தார். அதிபரை விஞ்ஞானத்தால் வெல்ல வழி இல்லை என்றால், அவர் அவருக்கு ஒரு கதை சொல்ல முடிவெடுத்தார். போர்களுக்கு மத்தியில், ஒரு இளம் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பிரஞ்சு அரசர் நெப்போலியனுக்கு நீராவிக் கப்பல்களை உருவாக்கிக் கொடுக்க முன்வந்தார். அது காற்றைப் பொருட்படுத்தாமல் இங்கிலாந்தில் தரையிறங்க உதவும் என்று அவர் விளக்கினார். பாய்மரம் இல்லாத கப்பல்களைப் பற்றிய யோசனை நெப்போலியனுக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது. அவர் கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஃபுல்டனை வேலையிலிருந்து நீக்கினார். ராபர்ட் ஃபுல்டன் நீராவிப் படகை மட்டுமல்ல, முதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் முதல் நீர்மூழ்கி ஏவுகணைகளை உருவாக்கினார். ரூஸ்வெல்ட் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர், "அலெக்ஸ், நாஜிக்கள் நம்மைத் தாக்கித் தகர்க்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?" என்றார். "ஆம்," என்று சாக்ஸ் பதிலளித்தார். ஃபுல்டன் மற்றும் நெப்போலியன் கதை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் லியோ சிலார்ட் எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் அவரை அதை நம்ப வைத்தது. அக்கடிதத்தைப் பெற்ற அதே மாதம், ரூஸ்வெல்ட் யுரேனியம் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ‘மன்ஹாட்டன் திட்டத்தை’ துவங்கியது. இது 1945-இல் ஜப்பானுக்கு எதிராக முதல் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வழிவகுத்தது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கும் ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை வரைந்த வரலாற்றாசிரியர்கள் உள்ளனர். மற்றவர்கள் அத்தகைய நேரடி உறவு இருப்பதாக நம்பவில்லை. அக்கடிதம் இல்லாவிடினும் அமெரிக்கர்கள் எப்படியும் அணுகுண்டுகளைத் தயாரித்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். ஐன்ஸ்டீன், தனது பங்கிற்கு, பல சந்தர்ப்பங்களில் அக்கடிதத்தில் கையெழுத்திட்டதற்காகப் பெரிதும் வருந்தினார். 1947-ஆம் ஆண்டு ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவர்’ என்ற தலைப்பில் அவர் கூறியது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: "ஜெர்மானியர்களால் அணுகுண்டு தயாரிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒரு விரலைக் கூட உயர்த்தியிருக்க மாட்டேன்." https://www.bbc.com/tamil/articles/cr40r1e5zg5o4 points
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
சமஸ்டி முறையில் தீர்வு என்பது ரணிலால் முடியாத காரியம் என்பது தெரிந்தது. மீண்டும் ஏமாறாமல் அவர் கட்சியின் அனுமதியோடு எழுத்து மூலம் தான் ஜனாதிபதியானால் என்ன தீர்மானங்களை நிறைவேற்றுவார் என்று எழுதி வாங்கலாம். உதாரணமாக அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற சாத்தியமாகக் கூடியவற்றைக் கேட்கலாம். எழுத்த்து மூலம் தந்தால் அதைப் பார்த்து சிங்களவர்கள் ரணிலை எதிர்க்கலாம். ஆகவே ரணில் எழுத்து மூலம் தர மறுத்தால் ஆதரவு கிடையாது என்று பேரம் பேசலாம் அல்லவா ?3 points
-
ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்க முயன்ற போது ஐன்ஸ்டீனின் 2 பக்க கடிதம் உலக வரலாற்றை மாற்றியது எப்படி?
3 pointsசிலரை மட்டும் இயற்கை தேர்ந்தெடுத்து தனது ரகசியங்களில் சிலதை மனிதர்களுக்கு சொல்ல படைக்கிறது.. அதில் ஜன்ஸ்டீனும் ஒருவர்..3 points
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
நீங்கள் சொல்வது போல் எழுத்து மூலம் கிடைத்தால் ஓரளவுக்கேனும் கெளரவத்துடன் விலகலாம். இன்றிருக்கும் நிலையில் இவ்வாறு எழுத்து மூலம் கொடுத்தால் "ஐயோ தமிழர்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்க போகிறார்" என்று இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் எந்த முன்னணி வேட்பாளர்களும் இல்லை. இந்த தேர்தலில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் முன்னணி வேட்பாளர்கள் இல்லை என்பது தான். இதன் அர்த்தம் இவர்கள் இனவாதிகள் அல்ல என்பது அல்ல. இன்றைய வங்குரோத்து நிலையில் பொருளாதாரம், வாழ்க்கை செலவு என்பனதான் முக்கிய விடயங்களாக உள்ளன.2 points
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
👆 முன்னர் ரஸ்ய தரப்புச் செய்திகளை வதந்திகளாகவும் பொய்யான செய்திகளாகவும் வியாக்கியானம் க்செய்தவர்கள், தற்போது ""ரஸ்யா செய்திகள் ஆதாரத்துடன் வெளியிடும்"" என்று கூறும் நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் அல்லவா? 🤣 ரஸ்யப் பிராந்தியத்திற்குள் புகுந்தது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரஸ்ய படைகளின் கவனத்தை இங்கே திருப்பிவிட்டு இன்னொரு முனையில் Offensive operation ஒன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. உக்ரேனிய (மனித) வளத்தை அடியோடு அழிப்பதென்று முடிவெடுத்த பின்னர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அரசியல் என்பது அயோக்கியர்களின் கூடாரம் என்று சும்மாவா கூறினார்கள்? உக்ரேன் தனது இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.2 points
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உங்கள் "மனதில்" இருப்பதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு உங்களை அவமானம் செய்ய விரும்பவில்லை😎. ஆனால், இது போன்ற விடயங்களை பொது இடங்களில் எழுத முதல் லொஜிக்கை யோசியுங்கள்: ரஷ்ய நிலப்பரப்பினுள் நேட்டோவின் உறுப்பு நாடுகள் படைகளை அனுப்புவது எவ்வளவு சீரியசான விடயம்? நேட்டோ படைகளை ரஷ்ய நிலப்பரப்பினுள் அனுப்ப, அது ரஷ்யாவிற்கு தெரியாமல் இருக்கிறது. அல்லது தெரிந்தும் தொண்டையில் முள்ளு சிக்கி சொல்லாமல் தவிர்க்கிறது என்று நம்புகிறீர்களா? ஏற்கனவே "-நேட்டோ வருகிறது" என்று பூதம் காட்டித் தான் புரின் பதவியில் இருக்கிறார். இப்ப நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆட்கள் நுழைந்திருந்தால் ஆதாரத்தை எடுத்து உள்ளூர் செய்தியிலாவது கட்டி விட மாட்டார்களா ஐயா😂?2 points
-
ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்க முயன்ற போது ஐன்ஸ்டீனின் 2 பக்க கடிதம் உலக வரலாற்றை மாற்றியது எப்படி?
2 pointsஅதிர்ஷ்டம் அரைவாசித் தூரம், எங்களை நோக்கி, வரும்; நாங்கள் தான் மிகுதி அரைவாசித் தூரத்தை ஓடிப் போய் அதைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அமெரிக்காவிற்கு மீண்டும் மீண்டும் இதுவே நடந்து கொண்டிருக்கின்றது. அதிர்ஷ்டம் உள்ளவர்கள். முதலாவது தாக்குதலின் பின்னர் மிகவும் மனமுடைந்து போனார் என்று சொல்லப்படுகின்றது......... Paul Allen இன் சொத்தை நிர்வகிப்பவர்கள் இவற்றை ஏன் விற்க வேண்டும் என்று புரியவில்லை. அவர்களிடம் ஏற்கனவே இல்லாத பணமா..... இவரின் கூட்டாளிகளான Bill Gates அல்லது Steve Balmer இவற்றை வாங்கி, ஏதாவது அருங்காட்சியங்களுக்கு இவற்றைக் கொடுத்தால், பலருக்கும் பிரயோசனமாக இருக்கும்.2 points
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இதில் உக்கிரைன் படைகள் அல்ல என்றும் . மேற்கு, UK இல் பயிற்சி கொடுத்த, பலவேறு (nato) நாடுகளை சேர்ந்தவர்கள் கொண்ட (உக்கிரைன் பெயரில் உள்ள) படை. (உக்கிரைன் இடம் ருசியாவுக்குள் உல் நுழைந்து இடத்தை தக்க வைக்கும் அளவு படைகள் இல்லை என்பததையும் முதலில் எனது மனதில் வந்தது) # உக்கிரைன் படைகளும் ஒரு பங்குக்கு அல்லது பெயருக்கு இருக்கலாம். நேட்டோ, கிட்டத்தட்ட உக்கிரைன் பெயரில், ருசியாவுக்குள் புகுந்து உள்ளது2 points
-
குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
2 pointsஏறக்குறைய உங்கள் அனுபவம் போல் எனக்கும் கிடைத்திருக்கிறது. எனது அயல் வீட்டீல் தனியாக வசித்து வந்த பேராசிரியர் ஸ்ராபிள் இறந்து போக அடுத்த நாளே “வீடு என்ன விலைக்கு விற்கப் போகிறார்கள்?” என்ற கேள்வியுடன் பலர் வந்தார்கள். எனது மகனின் மனைவியின் தாயாருக்கு குடலில் கான்ஸர். இன்னும் சில மாதங்கள்தான் என காலத்தை குறித்துக் கொடுத்து விட்டார்கள். வீட்டில் வைத்து அவரைப் பராமரிப்பது என முடிவு செய்து கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்து அழைத்து வந்தால், ‘வீட்டை வாங்க நாங்கள் ரெடி’ என வாசலில் நாலைந்து பேர் நிற்கிறார்கள். ஆக பூமி விட்டுப் போகும் போது, நாம் இருந்த இடம் வேறு யாருக்கோ சொந்தமாகி விடுகிறது. உங்களுக்கென்ன, இப்பொழுதுதானே பிள்ளைகள் பலகலைக் கழகம் போகிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. நான் எல்லாவற்றையும் முடித்து விட்டு ‘விசா’வுக்காக காத்திருக்கிறேன். அறுபதுகளுக்குப் பிறகு, பொழுது விடிகிறது தெரிகிறது. வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து விட்டுப் பார்ததால் மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருக்கிறது. காலம் வேகமாகப் பறக்கிறது. இதற்குள் ரசோதரன் புளியைக் கரைத்து வயிற்றுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார்😄2 points
-
நள்ளிரவு வேளையில் துயிலுமில்லத்தில் கூடிய பல்லாயிரம் மக்கள், துயிலுமில்லப்பாடல் மாற்றப்பட்டது ஏன்?
2 points'துயிலும் இல்லப்பாடல்' என பொதுவாக அழைக்கப்படும் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஈழப்போராட்ட காலத்தே எழுந்த பாடல்களுள் நின்று நிலைக்கும் ஒரு பாடலாகும். எப்பாடலை தவிர்த்துப் போனாலும் இப்பாடலை தவிர்க்கமுடியாத அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றுவிட்டது. காரணம் ஆண்டுதோறும் நினைவுகொள்ளப்படும் மாவீரர் நாள் அப்பாடலை ஒலிக்கச் செய்கிறது அல்லது நினைக்க வைக்கிறது. ஈழப்போராட்ட காலத்தில் எழுந்த பாடல்களில் துயிலுமில்லப் பாடல் கொண்டுள்ள சில முக்கியத்துவ நோக்குகளை இவ்விடத்தே நோக்கலாம். துயிலும் இல்லப்பாடல் இரண்டு சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஒலிக்க விடப்பட்டது, ஒலிக்கவிடப்படுகிறது. ஒன்று போர்க்காலத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவரின் வித்துடலினை புதைகுழியில் இடுவதற்கு முன்பாக வித்துடற் பீடத்திலே இடம்பெறும் உறுதியுரையினைத் தொடர்ந்து, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் மூன்று ஒலித்த பின்னே இப்பாடல் ஒலிக்கும். அத்துடன் உடல் கிடைக்கப்பெறாத மாவீரர்களுக்கான நினைவுக்கல் திரைநீக்கத்தின் போதும் துயிலுமில்லத்தில் இப்பாடல் ஒலிக்கும். மலரிடுதல், மண் போடுதல் என்பனவற்றிற்கு வேறு பாடல்களை புலிகள் கொண்டிருந்தனர். இரண்டாவது மாவீரர் நாளின்போது சுடர்கள் ஏற்றப்பட்ட பின்னர் இப்பாடல் ஒலிக்கவிடப்படும். இவையிரண்டுமே பிரதானமானவை. ●துயிலும் இல்லப்பாடல் மாற்றத்துக்குள்ளாகி மீளவும் ஒலிப்பதிவாக்கப்பட்டது ஏன்? தமிழீழ விடுதலைப் புலிகளினால் அறிமுகம் செய்யப்பட்ட பாவனையிலுள்ள துயிலும் இல்லப் பாடலானது தொகையறா, பல்லவி, அனுபல்லவி, இரு சரணங்களைக் கொண்டது. 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை' எனத்தொடங்கும் தொகையறாவும், 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' எனத்தொடங்கும் பல்லவியும் உண்டு. 'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்' என்பது அனுபல்லவி. முதலாவது சரணம் ஆரம்பத்தில் இப்படி அமைந்திருந்தது. நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம். உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. (எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்) இப்படி அமையப்பெற்றதே சரணம். காரணம் 1989 முதலாக ஆரம்பத்தில் குறிப்பிட்டளவு ஆண்டுகள் மாவீரர் நாளானது நவம்பர் 27ஆம் திகதி நள்ளிரவு வேளையில்தான் அனுட்டிக்கப்பட்டது. பின்னைய நாட்களில் மாலைப்பொழுதில் இடம்பெற்ற அத்தனை அம்சங்களும் முன்பு நள்ளிரவில்தான் நடந்தேறின. நள்ளிரவிலேயே அன்றைய நாட்களில் மக்கள் துயிலும் இல்லத்தில் சேர்ந்தனர். மக்கள் விழித்திருந்தே சுடர் ஏற்றினர். புலிகளின் தலைமையின் உரையும் நள்ளிரவில்தான் ஒலிபரப்பானது. காரணம் முதல் மாவீரன் சங்கர் அவர்கள் 1982இல் நள்ளிரா வேளையில் மரணித்ததான ஒருபதிவே தென்பட்டமை ஆகும். ஆயினும் மிகச்சிறந்த ஆவணவாதியும், புலிகளின் கல்விக்கழகக் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் என்கிற பேபி அவர்கள் 1982இன் ஓர் ஆவணத்தை கண்டெடுத்துவிட்டார். அது புலிகளின் தலைமையின் பதிவு. மாவீரர் சங்கர் அவர்களுக்கானது. அதில் மாலை 06.05மணி என்பதே முதல் மாவீரரின் மரணிப்பு என்பதே பதிவாக காணப்பட்டது. உடனடியாகவே புலிகள் மாவீரர் நாளின் நேரத்தை மாற்றினர். நள்ளிரா தீபமேற்றல் மாலை 06.05 மணியானது. 1995இன் பின்னரே இம்மாற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. இது மட்டுமா? துயிலும் இல்லப் பாடலில் நள்ளிரா வேளை விளக்கேற்றுவதான வரிகள் உள்ளதே. அந்த நாட்களில் புலிகளால் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாவீரர் படங்களில் துயிலும் இல்லப்பாடலும் இடம்பெற்றிருக்கும். உடனடியாகவே பாடலின் சரணத்தினையும் புலிகள் மாற்றத்திற்குள்ளாக்கினர். கவிஞர் புதுவை இரத்தினதுரையே இப்பாடலை எழுதியவர். மேலே சொல்லிய முதற்சரணத்தில் உள்ள 'நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம்' எனும் வரியானது கீழ்வருமாறு மாறுதலானது. வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம். என்பதே அவ்வரி. இதுவே இப்போது பாவனையில் உள்ளது. ஏனைய வரிகள் மாற்றம் பெறவில்லை. இவ்விடத்தே துயிலும் இல்லப் பாடலில் உள்ள இன்னுமொரு விடயத்தைச் சொல்ல வேண்டும். துயிலும் இல்லப் பாடலில் எந்த இடத்திலும் புலிகளின் தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. 'தலைவன்' என பொதுமைப்பட ஈரிடங்களில் வந்துள்ளதே தவிர அவரது பெயர் பாடலில் இடம்பெறவில்லை. உலகில் உருவாகிய தமிழ்ப்பாடல்களில் உலகெலாம் ஒரே திகதியில் ஒரே நேரத்தில் ஆண்டில் ஒரே ஒரு தடவை ஒலிக்கும் பாடல் எனும் பதிவும் புலிகளின் துயிலும் இல்லப்பாடலுக்கு உண்டு. இப்பாடலினை கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுத, இசைவாணர் கண்ணன் அவர்களின் இசையில் மாவீரர் சிட்டு, மணிமொழி, அபிராமி, வர்ணராமேஷ்வரன் ஆகியோர் பாடியிருந்தனர். --> புரட்சி2 points
-
நள்ளிரவு வேளையில் துயிலுமில்லத்தில் கூடிய பல்லாயிரம் மக்கள், துயிலுமில்லப்பாடல் மாற்றப்பட்டது ஏன்?
2 pointsநானும் தான் கொஞ்சம் குழம்பிவிட்டேன்.2 points
-
நள்ளிரவு வேளையில் துயிலுமில்லத்தில் கூடிய பல்லாயிரம் மக்கள், துயிலுமில்லப்பாடல் மாற்றப்பட்டது ஏன்?
2 pointsதலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் குழம்பி விட்டேன்..காரணம் அண்மைய காலத்தில் புதுசு, புதுசா பாட்டுகள் வருகிறது தானே.... அவர்களில் யாரோ கொப்பி அடித்து விட்டார்கள் என்ற நினைப்பு..🤭2 points
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
காட்டுத்தீயை மறந்து விட்டீர்கள்............ ஆனாலும் பூமியில் வாழத்தகுந்த அருமையான ஒரு தேசங்களில் இதுவும் ஒன்று. உண்மையிலேயே சொல்லுகின்றேன். 🤣........... சில நாட்களாக ஊண் உறக்கம் குறைத்து வேலையில் பிசியாக இருக்கின்றேன், அண்ணை. பூமித்தாயே அதைப் பொறுக்காமல் ஒரு குலுங்கு குலுங்கிவிட்டார்..................😜.2 points
-
தொடருந்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி.
உதென்ன பிரமாதம்… வக்கல்லையில் புகையிரத நிலையத்தில்தான் புகையிரதம் நின்றது,.. கொய்யால,..நாங்கள் இந்தியாவில் மீன் வாங்குவதற்காக புகையிரதத்தை பயணத்தின் நடுவிலேயே இடைநிறுத்துவோம்ல,..........🤣2 points
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
போன வாரம் எழுதப்பட்ட இந்த எனது கருத்துக்கு இன்று இருவர் விருப்ப வாக்குகள் இட்டிருக்கிறார்கள். இது தான் நிலை. ஆனால் விதைப்பு தொடரும்.....2 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இன்று சூரிச் வின்ரர்தூரில் இரண்டாவது நாளாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பிற நாடுகளைப் போன்றே தாயகச் செயற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் வயதேறிக்கொண்டு போகின்றது. இளையோர் அரசியலைத் தவிர்த்து தமது விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். எனினும் தலைவர் இருக்கின்றார் என்று இப்போதும் நம்பும் அளவிற்கு உலக நடப்பு தெரியாத சிலரும் இருக்கின்றார்கள் என்பதை காதில் விழுந்த கதைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது! வந்தமா… விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா.. என்று வெளியே வந்துவிட்டேன்!2 points
-
நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது . இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/13954481 point
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
1 point
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் ஒரு தேர்த்திருவிழாவிற்கு போயிருந்தேன். அநேகமாக பெரிய கொண்டாட்டங்கள் கோவில்களில் நடந்தால் புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்களுக்கு போவதில்லை. காரணம் அங்கே ஆன்மீகம் இருக்காது. மாறாக ஒருவகை பந்தா கொண்டாட்டமாக இருப்பதால்.... இருந்தாலும் நீண்டகாலம் செல்லவில்லை என்றாலும் விடுமுறையில் இருக்கின்றேன் என்பதால் சென்றேன். அதே பல்லவிதான்.... நகையலங்காரம் உடையலங்காரம் கார் பந்தாங்கள் பழைய காய் என்ற பந்தாக்கள் பண பந்தாக்கள் உபயம் எனும் பேரில் தண்ணீர்பந்தல்களில் அட்டகாசம் அன்னதானம் பெயரில் சண்டித்தனங்கள் அன்னதானத்திற்கு வரிசையிலில் நின்றால் இடையில் புகுந்து விளையாடும் தர்மகர்த்தாக்கள் உபயகாரர்கள். கிட்டத்தட்ட கோவில்களை தங்கள் பந்தா காட்டும் இடமாக மாற்றி விட்டார்கள் புலன் பெயர்ந்த தமிழர்கள்.1 point- குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
1 point🤣.......... நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி நிழலி......... களத்தில் வரும் உங்களின் எழுத்துகளை, கருத்துகளை அநேகமாக தவறாமல் வாசித்துவிடுவேன். உங்களின் எழுத்துகளிலிருந்து உங்களின் வாசிப்பு மிக அகலமானது என்றே எனக்குத் தெரிகின்றது........👍 இந்த 'அரைப்பக்க அனுபவங்களை' சும்மா தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் களத்தில் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு மிக உற்சாகமாக அவற்றின் பின்னால் தங்களின் அனுபவங்களை எழுதுகின்றனர். மிக நன்றாக எழுதுகின்றனர். போகும் வரை போகட்டும் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்..........😃.1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
கால். வைக்கவில்லை என்றால். .. என்ன நடக்கும் ??? நீங்கள் எதிர்பார்க்கும் அமைதி கிடைக்காது நிச்சயமாக கிடையாது உலகில் ஈரான். நினைத்தது சட்டம் ஈராக் நினைத்தது சட்டம் பாகிஸ்தான் நினைத்தது சட்டம் ஆப்கானிஸ்தான் நினைத்தது சட்டம் சீனா நினைத்தது சட்டம் இந்தியா நினைத்தது சட்டம் வடகொரியா நினைத்தது சட்டம் ..... ...........இப்படியாகிடுச்சே அமெரிக்கா இருந்து இருக்கலாம் என்று யோசிக்க வேண்டி வரலாம்” நோட்டோ உருவாக்கியது உலகப்போர்களை. தடுக்க தான் அது ஒரளவு வெற்றி பெற்று உள்ளது நோட்டோ அழிக்க இன்னும் ஒன்று மோசமாக வரத் தான் செய்யும் 🙏🤣😂1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
1 point- குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
1 point@ரசோதரன் நீங்கள் எழுதிய இந்த கதையை / அனுபவத்தை வாசிக்க தொடங்கி, பின் வாசிக்க தேவையான கதைகள் யாழில் கனக்க இல்லை தானே ஆறுதலாக வாசிப்பம் என்று விட்டன். ஆனால் இப்ப நீங்கள் 30 ஆவது கதையில் - ஒன்றரை மாதங்களுக்குள் வந்து நிற்கின்றீர்கள்! ஆனாலும் பாஸ் நீங்கள் ரொம்ப fast. ஒவ்வொன்றாக வாசிக்க ஒரு வருடம் செல்லும் எனக்கு.1 point- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
எழுத்து மூல அரசியல் சாசனங்கள் இருக்கும் போது வாய்மொழி அரசியலை முன்னெடுத்தவர் அமரர் சம்பந்தன் மட்டுமே.அந்த பழக்கம் இன்றுவரை தொடர்கின்றது. கோட்டு சூட்டுடன் வெளிநாடுகளுக்கு வந்து செல்லும் அரசியல்வாத்திகள் எதை கற்றுக்கொண்டு போகின்றார்கள் என தெரியவில்லை. இது சம்பந்தமாக அதாவது அரசியல்வாக்குறுதிகள் சம்பந்தமான ஒப்பந்தங்களுக்கு இலங்கை அரசியலில் மூக்கை நுழைத்திருக்கும் அமெரிக்க,கிந்திய மற்றும் மேற்கத்திய நாட்டு அரச பிரமுகர்களை சாட்சி கையெழுத்து போட அழைக்கலாம்.1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
இது தான் உண்மை .. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும். உரியவர்கள் நோட்டோ அமைப்பு இல்லையா??? 🤣😂1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உக்ரேனின் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிச்சயம் நேட்டோ நாடுகளின் பயிற்சியும் பின்னணியும் உண்டு.😎 இவ்வளவு காலமும் முக்கிக்கொண்டிருந்த உக்ரேனுக்கு இப்பிடி திடீர் தைரியம் வர சான்ஸ் இல்லை. 😁1 point- குறுங்கதை 30 -- புதிதாக வந்தவர்கள்
எழுபதுக்கு மேலே இருந்தால் கலக்கம் தெரியும். உப்பு, புளி இல்லாவிட்டால் ‘சப்’ என்று இருக்கும். தாராளமாகக் கலந்து தாருங்கள். என்ன, சில நேரங்களில் யதார்த்தமானவை கசக்கத்தான் செய்யும். அதற்காக உங்களை குறை சொல்ல முடியாது. குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன.1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஒருவரையும் அறிவு, விஷயம் (வேறு எந்த விடயத்திலும்) போன்றவற்றில் எடை போடுவதில்லை . சொல்லப்படுவது எவ்வளவு யதார்த்தத்துக்கு (யதார்த்தம் சிலவேளையில் நம்பமுடியாமல் கூட இருக்கலாம் ) இடம் இருக்கிறது என்பதையே நான் சிந்திப்பது.1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உண்மை. இதோ இன்றைய ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கை. https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12525036@egNews இதன்படி ஊடுருவிய உக்ரெய்ன் படைகளின் இறுதிக் கணங்கள் எண்ணப்படுகின்றன. 2030 உக்ரெயின் படையினர் 35 தாங்கிகள் உட்பட 300க்கும் அதிகமான கவச வாகனங்கள், ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டுள்ளன. முதலில் 1000 படையினர் என்று குறிப்பிட்டாலும் பின்னர் இறந்த படையினரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது குறைந்தது 4000 படையினராவது ஊருருவி இருக்க வேண்டும். இத்தனை ஆயிரம் படையினர் ஆயுத உணவு மருத்துவ வழங்கல் மற்றும் நீண்டதொரு ஆயத்தப்படுத்தல் இல்லாமல் நுளைந்திருக்க முடியாது. ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கையின்படி குறைந்தது 50 தாங்கிகளும் 500 கவச வாகனங்களும் உள்ளே நுளைந்துள்ளன எனக் கணிக்கலாம். இத்தனை பாரிய படையணி ஒன்று தனது நாட்டுக்குள் நுளைவதை உலகின் இரண்டாவது இராணுவமும் சக்திவாய்ந்த அதன் உளவுத் துறையும் வேடிக்கை பார்த்தனவா என்று கேட்கக் கூடாது. தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம். 😎1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
நேட்டோ நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் போகலாம் - போகாதீர்கள் என்று உத்தியோகபூர்வமாக அரச அறிவித்தல் இருந்தாலும் கூட. ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் ஈரூடகப் படையில் இருந்தவர்களும் , பிரிட்டன் முன்னாள் படையினரும் போய் பிடிபட்டு ரஷ்ய ஊடகங்களில் வீடியோ காட்டினார்கள். அதை அந்த நாடுகளும் உறுதி செய்தன. இதற்கு நேட்டோ என்ன செய்ய முடியும்? உக்ரைனின் மொத்தப் படை 2 மில்லியன், இவர்களுள் ஒரு மில்லியனுக்கும் கீழே standing force. மிகுதி reserve. இதில் இருந்து ஆயிரக் கணக்கானோரை அனுப்ப இயலாமல் உக்ரைன் இருப்பதாக நம்பித் தான் உங்கள் ஊகத்திற்கு பலம் சேர்க்க வேண்டியிருக்கிறது😂. (இது முன்னர் பிரிகோஷினின் கூலிப்படை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ படை என்ற கவிண்ட லொஜிக்கின் தொடர்ச்சியாக இருக்கிறதென நினைக்கிறேன்😎!)1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
கவனம்! சொந்த ஊகங்களை சொன்னாலும் ஆதாரம் கேட்பார்கள் 🤣1 point- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
பலே.. பலே... இரண்டு நாளில்... மனம் மாறி, ஜனாதிபதியை சந்தித்து விட்டார்களா. ஏதாவது அறிக்கை விடும் போது நிச்சயமான, சாத்தியமான அறிக்கைகளை விட வேண்டும். மனுசர் இருக்கிற விசரிலை... நீங்கள் வேறை, காமெடி பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. பிறகு உங்களைத்த்தான்.... "லூசு" கூட்டம் என்று சனம் சொல்லும். 😂 🤣1 point- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஒரு தேசமாகத் தமிழினம் நின்ற காலமொன்றை நாம் இனிக்காணமுடியுமா? அதற்கான வலுவான கருத்தூட்டல் மற்றும் அரசியற் செயலாக்கம் போன்றவற்றைச் செய்யும் தகமையைக் களத்திலேயுள்ள எந்தத் தமிழ் அரசியற்கட்சியாவது கொண்டுள்ளதா? ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழினம் காலத்துக்குக் காலம் சிங்களத் தலைமைகளாற் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுவருவதே வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றுப்போக்கில் தமிழினம் தன்னைத் தனது பூர்வீக நிலத்தில் தக்கவைத்துக்கொள்ளப் பெரும் உயிரீகத்தை செய்து போராடியபோது, அதனைச் சிங்களம் பயங்கரவாதமென்றதும் இந்த உலகு அதனோடு ஒத்தோடி எமது ஆயுதப் போராட்ட வலுவை அழித்தொழித்து எம்மைக் கையறுநிலையில் விட்டுள்ளது. இந்தச் சூழலிற் தமிழினம் ஐநா முதல் அமெரிக்காவரை படியேறிக் கலந்துரையாடல்களைச் செய்தபோதும், எந்த நாடோ நியாயம் பேசும் அனைத்துலக நிறுவனங்களோ தமிழினம் சார்ந்தோ அல்லது இனஅழிப்புச் சார்ந்தோ ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? இலங்கையராக வாழுங்கள் என்ற உபதேசத்தைத் தவிர வேறெதை இவர்கள் முன்வைக்கிறார்கள். சமஸ்டியைக் கொடுத்துப் பிரச்சினையைத் தீருங்கள் என்று ஏன் இவர்களால் உரத்து கூறமுடியவில்லை. இவர்களுக்கும் தமது நலன்களை அடைய தமிழரது உயிர்கள் தேவைப்படுகிறது. – சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலமாக ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நசிந்துகொண்டிருந்த யூத மக்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் ஹிட்லரால் மேற்கொள்ளப்பட்ட, வரலாறு முன்னெப்போதும் கண்டிராத பாரிய இன அழிப்புக்குள்ளாகினர். அத்தைகைய இன அழிப்பை எதிர்கொண்டு புவிப்பரப்பில் தமக்கென ஒரு சுதந்திர அரசை அமைப்பதில் வெற்றி பெற்றனர். ஆனால் ஐ.நா. வின் பாகப்பிரிவினையை எல்லையை மீறிப் பாலஸ்தீன நிலப்பரப்பை ஆக்கிரமித்ததை ஒருபோதும் ஏற்கமுடியாது. இங்கு அவர்கள் இள அழிப்பை எதிர்கொண்டு அதன் பின் தம்மை விடுதலைக்கு உரியவர்களாக வடிவமைத்த விதத்தில் இருந்து வரலாற்றுப் பாடங்களைக் கற்க வேண்டியது அவசியம். 'இரண்டு யூதன் ஒன்று சேர்ந்தால் மூன்று கட்சி கட்டுவான்' என்று ஒரு யூதப் பழமொழி உண்டு. ஆனால் அப்படிப்பட்ட யூதர்கள் தமக்கு ஏற்பட்ட பாரிய இனப் படுகொலையின் சவாலின் முன்னிலையில் அதிகம் ஐக்கியப்பட்டு அதிகம் புத்திபூர்வமாகச் செயற்பட்டு தம்மிடம் காணப்பட்ட அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி ஒரு புதிய அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர். அவர்கள் தமக்கிடையே நிலவிய பொறாமைகளையும், காழ்ப்புணர்வுகளையும், சிறுமனப்புத்திகளையும் ஒதுக்கித்தள்ளி விடுதலையை இலட்சியமாக்கி வெற்றி பெற்றனர். குறிப்பு: மேலுள்ள இரு பந்திகளும் 'இலங்கை அரசியல் யாப்பு" என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்களின் முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
1983 பின்னர் இனக்கலவரங்கள் நடபெறவில்லை,....30 ஆண்டுகள் தமிழன் திருப்பி அடித்தான். 2009 இருந்து 2024 வரை 15 ஆண்டுகள் இனக்கலவரம். நடக்கவில்லை முக்கிய காரணங்களில் ஒன்று தமிழன் திருப்பி அடிப்பான். என்ற பயம் மலையகம் கூட ஓரளவு பலம்பெற்றுவிட்டார்கள். அவர்கள் கூட திருப்பி அடிக்கலாம்1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது இதைத் தான். இனி போர் ரசியாவுக்குள் தான்....1 point- இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டம்
பாடத்திட்டத்தில் கலந்துகொள்ளும் பிள்ளைகளை பார்த்தால் உதுகளுக்கு இலகுவாக மண்டையை கழுவலாம் போல தெரியவில்லையே. பாடத்திட்டத்தின் முடிவில் எத்தனைபேர் இந்திய புலனாய்வு அமைப்பினுள் உள்வாங்கப்படுவார்கள்?1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஒப்பந்தள் எழுதப்படுவது கிழிப்பதற்குத்தானே,.🤨1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
புடாபெஸ்ட் மெமோராண்டம். என்ற பெயரில் 5-12-94 இல் ரஷ்யா அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள் உக்கிரேனின் சுதந்திரம் மற்றும் இயையாண்மை மேலும் தற்போதுள்ள எல்லைகளுக்கு மதிப்பளிகிறோம் என்று இந்த குறிப்பானை. உத்தரவுவாதம் அளிக்கிறது இதில் உக்கிரேனுடன். சேரந்து. அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா கையெழுத்திட்டது ஆனால் மேற்படி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது ரஷ்யாவின். ஒரு பகுதி உக்கிரேன் எனில் உக்கிரேன். கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை மேலும் போரிஸ் பில் கிளிடன் பிரித்தானியா பிரதமர் ஜான் மேஐர் உக்கிரேனிய ஐனதிபதி லியோனிட் குச்மா ஆகியோர் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள் அது உக்கிரேனின் ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரம் மற்றும் அவர்கள்,..உக்கிரேனியர்கள் தற்பாதுகாப்குக்காக தவிர உக்கிரேனுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை எதனையும் பயன்படுத்தமாட்டார்கள்,......இந்த ஒப்பந்தம் கிரிமியா இணக்கும்போது ரஷ்யா மீறி விட்டது” 1877 இலும் ஒரு ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது எப்போதும் உக்கிரேன். தனிநாடாக எற்றுக்கொண்டு உள்ளார்கள் உக்கிரேன். ரஷ்யாவில் ஒரு பகுதி இல்லை என்பதற்கு ஆதாரம் ஆகும்1 point- அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
1 point- தொடருந்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி.
உண்மையென்ன! இலங்கையில் புகையிரதைத்தை நிறுத்தி உணவு வாங்கும் வீடியோ வைரலாக பகிரப்படுகிறது. உண்மையில் அவர் உணவு வாங்க புகையிரதத்தை பாதையில் நிறுத்தினாரா?. இல்லை. அந்த வீடியோ பதிவான இடம் கொழும்பு சிலாபம் வீதியில் இருக்கு வாய்க்கால் என்ற ஊரில். பக்கத்தில் வாய்க்கால் புகையிரத தரிப்பிடம் இருக்கிறது. அந்த station இல் நிறுத்தினால் முன் பகுதி இப்படி வாகன போக்குவரத்துப் பாதையில் நிற்கும். இப்படி பயணிகளுக்காக station இல் நிறுத்தப்பட்ட நேரத்தில் அவர் உணவு வாங்கியிருக்கிறார். மாறாக உணவு வாங்க நிறுத்தவில்லை.1 point- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped". அமெரிக்க powerball lottery ல் 100 மில்லியன் $ கிடைக்கும் என நம்பியிருந்த ஒருவருக்கு ஆறுதல் பரிசாக free ticket கிடைத்தபோன்ற ஆற்றுப்படுத்தல்தான் மேலேயுள்ள விடயம்,...🤣1 point- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தமிழ்ப்பொது வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் அப்படியே தலைகீழாகத் திரும்பிய சும் வட-கிழக்கு இணைந்த சமஸ்டியைத் தருவோருக்கே ஆதரவு என்று ஏன் கூறுகின்றார். இந்த அறிவிப்பு ஏதோவொரு தாக்கத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளிடையே செய்திருப்பதாலா?1 point- கருத்து படங்கள்
1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointமுதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 pointஊரில கோவம் வந்தா அப்பத்தா அடிக்கடி ஒரு பழமொழி சொல்லும்.. ஒம்பது புள்ளை பெத்தவளுக்கு ஒரு புள்ளை பெத்தவள் முக்கிக்காட்டினாளாம் எண்டு..😂1 point- நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
1 point1986ம் ஆண்டு கடுமையான குளிர் நேரம். நடுங்கிக் கொண்டு நின்றோம். குளிருக்கு சிகெரெட் இழுக்க இழுக்க இன்பமாக இருந்தது. உடலில் இருந்து வாய் வழியாக வந்த புகையும், சிகரெட் புகையும் சங்கமித்துக் கொண்டிருந்தன. நண்பன் ஒருவன் சேர்ட்டுடன் வந்து நின்றான். நாங்கள் மூடிக் கட்டிக் கொண்டிருந்தோம். ”உனக்கு குளிர இல்லையா?” என்று என்னுடன் கூட இருந்தவன் அவனைப் பார்த்துக் கேட்டான். ”நான் வந்து ஐஞ்சு வருசமாச்சு. குளிர் பழகிட்டுது” என்று பதில் நடுங்கிக் கொண்டு அவனிடம் இருந்து வந்தது ”அப்ப, ஐஞ்சு வருசத்திலையே இப்பிடி எண்டால் இஞ்சை பிறந்த யேர்மன்காரன் வெறும் மேலோடை எல்லோ குளிருக்குள்ளே திரிவான்” என்று இவன் கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointமுதலில் நம்பவில்லை! அதனால் தேடிப்பார்த்தேன் விடை கிடைத்தது. The Cheetah's Wild LifeThe gestation (pregnancy) period for the cheetah is 93 days, and litters range in size from one or two up to six cubs (the occasional litter of eight cubs has been recorded, but it is rare).1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?1 point - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.