Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    12
    Points
    15791
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    14676
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/21/24 in all areas

  1. கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்." "உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்" " சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்" ".."இந்த கதியாலில‌ குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்" கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் . புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை. புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற‌ ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல‌
  2. பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  3. அவர் எழுத்து / சொல் பிழைகள் விட்டுள்ளார். புலிகள் இயங்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் தன் குடும்பமும் நெருங்கிய உறவுகளும் குடும்பம் நடத்த முடியும் , கோடிகளில் புரள முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும். கோத்தாவை விட, மஹிந்தவை விட, கடும் சிங்கள இனவாதிகளை விட தலைவர் கொல்லப்பட்டதை, புலிகள் அழிக்கப்பட்டதை மனசார மகிழ்வுடன் வரவேற்பவர்களாக இவர்களே இருப்பர்.
  4. ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே! விடிவு தேடும் உனது துன்பத்தை விட இது சிறியதென்பதால். நாங்கள்.. தாங்கியே வாழப் பழகினோம். வேறொரு மொழி, வேறொரு கலாச்சாரம், வேற்று மனிதர்கள் விபரம் தெரியாத நாம். அரசுகள் எங்களை ஏற்றுக்கொண்டபோதிலும் இங்கு சிலர் எங்களை வேற்ரு கிரக மனிதர்களாகவே பார்த்தார்கள். இப்படி இருந்தும் எங்களின் உழைப்பின் ஒருபகுதியை உனக்கு அனுப்பியே அங்குள்ளேரை வாழவைத்தாயென்பதை அவர்களுக்கு ஞாபகப் படுத்து தாயே! அனால் இன்றோ எங்களின் உழைப்பு பொய் களவில்லா எங்களின் வாழ்க்கை முறை மொழியின் தேர்ச்சி குழந்தைகளின் கல்வியின் உயற்சி பலதையும் பார்த்து மனிதநேயத்துடன் தங்களின் குழந்தைகளாக எங்களை பார்கிறார்கள். தாயா?தத்தெடுத்த தாயா? என்ற குளம்பம் எங்களை இப்போது வாட்டுகிறது. இருந்தாலும்- எம் உயிர் போகும் நிலை வந்தாலும் உன்னை மறக்கமுடியுமா? அம்மா.. எங்கள் பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு பூட்டப் பிள்லைகளுக்கு உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி பூட்டியென சொல்லி வளர்கிறோம் தாயே! ஒருகாலம் நாங்கள் வரும்போது-இது எனது பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் எனது பூட்டப் பிள்ளைகளென்று “அங்கிருப்போர்க்கு” சொல்லிவை தாயே அது போதும் எங்களுக்கு! அன்புடன் -பசுவூர்க்கோபி.
  5. ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் பெயரிட்டது பொருத்தமான ஒன்றே ! இப்படம் பற்றிய விமர்சனங்கள் பல பத்திரிகைகளிலும் அவரவர் கோணத்தில் வெளிவந்த பிறகு என் பங்கிற்கு ஒரு முழுமையான விமர்சனம் அளிப்பது இந்த என் எழுத்தின் நோக்கமல்ல. பெரும்பாலான அவர்களிடமிருந்து நான் சற்று மாறுபடும் இடங்களையே சுட்ட எண்ணம். கிராமியச் சூழலில் ஒரு கட்டுப்பெட்டியான சமூகத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அத்தனை விஷயங்களிலும் அவருக்கு உறுதுணையாய்த் தோளொடு தோள் நிற்கும் தோழனாய் விளங்குபவர் அவருடைய தாத்தா. படத்தின் 'ரகு தாத்தா' அவரே ! அறுபதுகளில் வளர்ந்த என் போன்றோருக்கு இவை வெகு இயல்பாகத் தோன்றுகின்றன. திராவிட இயக்கச் சிந்தனை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். இடதுசாரி சிந்தனையைப் போலவே அது ஒரு நல்ல அரசியலாக அமைந்தது. எனவே பொதுவாக இக்கால இளைய சமுதாயத்திடம் நல்ல கொள்கை அரசியலும், திரைப்படம் போன்ற கலைகளில் நல்ல ரசனையும் இல்லாமல் போனதே என்று புலம்பும் தலைமுறையும் நாங்களே ! தலைமுறை இடைவெளி என்பது நியூட்டனின் நான்காவது விதியாக அமையலாமோ ! நிற்க. நாம் கையில் எடுத்துள்ள இப்படத்தின் நாயகி வங்கியில் பணிக்குச் செல்கிறார்; சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, எழுத்திலும் தம் முற்போக்கு சிந்தனைகளைப் பதிய வைக்கும் எழுத்தாளராய்த் திகழ்கிறார். பத்திரிகைகளில் தாம் எழுதும் சிறுகதைகளில் புதுமைப் பெண்களைப் படைக்கிறார். பெண் எழுதுவதைச் சமூகம் பெரிதும் வரவேற்காத காலகட்டத்தில், கயல்விழிப் பாண்டியன் எனும் தம் பெயரைக் க.பாண்டியன் எனும் ஆண் பெயரில் எழுத்துலகில் பதிவு செய்கிறார். அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் முற்போக்காளனாய் வேடமிட்ட ஒரு பிற்போக்குவாதியிடம் மனதளவில் ஏமாந்து பின் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை ஒரு நல்ல நகைச்சுவைச் சித்திரமாக்கி இருக்கிறது படக்குழு. "முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை இழையோடும் கதையம்சத்தோடு வழங்கியதால், கருத்துகள் நீர்த்துப்போய் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; காமெடி படம் பண்ணலாமா அல்லது கருத்துப்படமாக ஆக்கலாமா என்ற குழப்பத்தில் விளைந்ததாகத் தெரிகிறது" என்ற விமர்சனம் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இப்பார்வையில் முற்றிலும் முரண்படுகிறேன் நான். நகைச்சுவையுணர்வு என்பது சான்றாண்மைக்கான அறிகுறி என்பது சர். சார்லி சாப்ளின் போன்றோர் ஏற்கனவே உலகிற்கு எடுத்துக் காட்டிய ஒன்று. அவ்வகையில் இப்படம் தனது உயரிய நோக்கத்தை எந்த குழப்பமும் இன்றித் தெளிவாக வெளிக்கொணர்வதில் வெற்றி பெறுகிறது. கொள்கைகளை மட்டும் பேசினால் இது வெறுமனே ஒரு ஆவணப்படமாக முடிந்திருக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு கொள்கையும் தொடக்கத்தில் கசப்பு மருந்தாகவே பெரும்பான்மை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படும். எனவே அருமையான திட்டமிடல், படமாக்கல் மூலமாக மருந்தைத் தேனில் குழைத்துத் தந்துள்ளது இயக்குநரின் அபார சாதனை. நாயகியான கீர்த்தி சுரேஷ் முகபாவனையிலும் கண்ணசைவிலும் நவரச நாயகியாக மிளிர்கிறார். 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி அவர்களை நம் கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தாமும் ஒரு நடிகையர் திலகம் என்பதை நிரூபிக்கிறார். கீர்த்தி சுரேஷ் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பை இப்படம் தராவிட்டாலும், தமக்கு அளிக்கப்பட்ட பங்கினில் அப்பேத்திக்குத் தாத்தாவாகத் திறம்பட ஈடு கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்கள் இருவர் தவிரவும் ஏனைய கதாபாத்திரங்களும் தத்தம் பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றுவது, குறித்து நோக்கத்தக்கது. தக்கோரைத் தேர்வு செய்து குறைந்த முதலீட்டில் படத்திற்கான கதை, உரையாடல் எழுதி இயக்கிய சுமன் குமார் பெரும் பாராட்டுக்குரியவர். பன்முகத்தன்மை படைத்த சுமன் குமாருக்குத் தமிழில் இந்த முதல் முயற்சியே சிறப்பாய் அமைந்துள்ளது. மற்றபடி காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் கிராமியச் சூழலிலும், ஆங்கமைந்த அலுவலகப் பின்னணியிலும் அறுபதுகளின் நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசை பற்றி எழுத, அத்துறையில் அடியேன் ஒரு ஞான சூனியம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் படத்தில் லயித்துவிட்டால் பின்னணி இசை என்று ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களில் ஒருவன் நான். அவ்வப்போது நாடகத் தன்மை, சினிமாத்தனம், காற்றோடு பறக்கும் லாஜிக் இவை இல்லாமல் இல்லை. இந்த அம்சங்கள் நிறைந்த முன்னணி நடிகர்களின் மசாலா படங்களுக்கு நூறு கோடிக்கு மேல் நாம் அள்ளித் தராமல் விடுவதில்லையே ! மேலும் பொய்யுரை, உயர்வு நவிற்சி, இல் பொருள் உவமை அனைத்தும் நிரம்பிய இலக்கிய மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள்தாமே நாம் ! எனவே சுவை கூட்டுவதாய் இக்குறைகளைப் புறந்தள்ளலாம். கொள்கைப் பரப்புரை எனும் மருந்தில் கலந்த தேனாய்க் கொள்ளலாம். இத்துணை எழுதியாயிற்று. திருவாளர் வெகுசனத்தை இப்படம் எவ்வளவு சென்றடைந்திருக்கும் என்று பார்ப்போமா ? வியாழனன்று (15-08-2024) வெளியான படத்தை நான் திங்கட்கிழமை பார்த்தேன். கூட்டம் சுமாருக்கும் குறைவுதான். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் என்பதால் விளம்பரம் பெரிதாக இல்லை என்பது முதற் காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவில் தமிழ்ப் படங்கள் வெளிவராத ஒரு இடைவெளிக் காலத்தை விட்டுவிட்டு தங்கலான், டிமான்டி காலனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து வெளியிட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஓரிரு நாட்களில் பெரும் வெற்றியடையப் போகும், வெற்றியடைய வேண்டிய மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளை நிறைக்கப் போகும் நேரம். இத்தகைய காலகட்டத்தில் வெளியிட 'ரகு தாத்தா' படக்குழுவினருக்கு என்ன கால நெருக்கடியோ ! ஆனாலும் பெரியாரையும் அண்ணாவையும் முன்னிறுத்திய ஒரு திரைப்படத்தைத் திராவிட இயக்கத்தினரே பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போனதன் காரணமென்ன ? கொள்கைகளைக் காமெடியுடன் கலந்து விட்டதனாலா ? ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆவணப்படமாக வந்திருந்தால் இரண்டே நாட்களில் அரங்கத்தை விட்டே படம் ஓடி இருக்குமே ! அண்ணாவையும் பெரியாரையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு வணிகம் செய்கிறார்கள் என்ற கோபமா ? வணிகம் ஆகவே இருக்கட்டுமே ! அப்படியாவது நம் தலைவர்கள் மேலும் சிலரைச் சென்றடையட்டுமே ! அல்லது இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாதவர்கள் நம் கொள்கைகளைப் பேசுவதை நாம் வரவேற்பதில்லையா ? அண்ணாவும் பெரியாரும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியவர்களா ? கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே உரியவரா, என்ன ? எது எப்படியோ இப்படத்தைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது திராவிட இயக்கத்தினரின் தவறே ! இனி OTT தளத்தில் வெளியாகி படம் பலரைச் சென்றடையும் என்று நம்புவோம். அண்ணாவையும் பெரியாரையும் வாசித்து, கேட்டு வளர்ந்த ஒருவன் அப்படித்தான் ஆசைப்பட முடியும். இது போன்ற படங்கள் தோல்வியுற்றால், சிறிது சிறிதாகத் தமிழ்ச் சமூகம் தோற்றுப் போகுமோ என்று இனம் புரியாத, 'இனம்' புரிந்த பயம் தொற்றிக் கொள்கிறது. https://www.facebook.com/share/p/t54RmctDGCko3Thm/?mibextid=oFDknk
  6. எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட) எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே எனலாம். விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள் இருந்த போதும் அதைத் தாண்டி அவர்களது அரசியல் தனி நாட்டை நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள். ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள் அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே போராடுகின்றார்கள். ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா? அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா? உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா? வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம் வலியுறுத்த முடியுமா? தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக் கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம் பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே அமையும் என்பது எனது கருத்து. தமிழ தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள், அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள், புலம் பெயர் இணையத்தள அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள் என்று பலர் இருந்தும் இதை கணக்கில் எடுக்காதது ஏன்? நாம் இந்த உலகில் வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க, நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை உபயோகிப்போம் என்ற அவர்களது எண்ணமே இதற்கு காரணம்.
  7. பாட்டு எழுதினது கண்ணதாசன், இவர் ஏன் "வாலி"யை கிணற்றுக்குள் இறக்கினவர்?
  8. எனக்கு இந்த நாட்டை வித்த மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வரக்குடாது.. இன்னும் ஒருக்கா நான் மணெண்ணைக்கும் பெற்றோலுக்கும் லைன்ல நிக்கேலாது.. ஒரு அப்பிள் ஒரு ஆரேஞ் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கேலாது.. ஒரு றாத்தல் பாணுக்கு மத்தியானமே போய் லைன்ல நிக்கேலாது.. எனக்கு என் வாழ்வாதார பிரச்சினை.. விடிஞ்சா பிள்ளையள் சாப்பிட சாப்பாடு செய்ய சாமான் மலிவா கிடைக்கோணும்.. பாம்பு கீம்பு கடிச்சா இல்லா அவசர அத்தியாவசியத்துக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வாகனத்துக்கு பெற்றோல் இருக்கோணும்.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊர் அரசியல் ஃபண் எடுக்கிறதுக்கு கதைக்கிறது.. ஊரில் இருக்கிறவனுக்கு அது பிள்ளைகுட்டியளுக்கு சாப்பாடு போடுற வாழ்வாதார பிரச்சினை.. மீண்டும் நாட்டை வித்த மகிந்தா யுகம் வருவதை ஒரு சாமானிய ஏழையால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. அந்த வலி ஊரில் பட்டவனுக்கு தெரியும்.. ஒரு மாத கொலிடேயில் ஊருக்கு வந்தவையே லைன்ல பெற்றோலுக்கு நிக்க ஏலாது எண்டு பேஸ்புக்கில பந்தி எழுதினவை.. அதுவே வாழ்வாய்போனவனுக்கு எப்படி இருந்திருக்கும்.. அந்த யுகம் மீண்டும் வர தூனைபோகும் இந்த பொதுவேட்பாளர்கூட்டத்தின் நயவஞ்சகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது.. தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வெளிநாட்டிலும் கொழும்பில் சிங்களவர்களுடன் சம்பந்தம்வைத்து வசதியாக செட்டில் ஆக்கிவிட்டு ஓய்வுகாலங்களை கழிக்க அரசியலில் ஈடுபட்டு எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒரு போதும் மன்னிக்கமுடியாது.. இனத்துரோகிகள் இவர்கள்.. தமிழர்களின் வாக்கு ஒரு போதும் தமக்கு கிடையாது என தெரிந்துகொண்ட இன அழிப்பு செய்த மகிந்த கூட்டம் இவர்களுக்கு பெட்டி குடுக்க பெட்டி வாங்கிக்கொண்டு மற்றைய ஆட்சியை பிடிக்ககூடிய கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளை விழவிடாமல் தடுக்க மீண்டு ஒரு இருண்ட யுகத்துள் இலங்கையை தள்ள சூழ்ச்சி செய்யும் சகுனிகள்தான் இந்த பொதுவேட்பாளர் கூட்டம்..
  9. இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்குப் பிடித்த செய்தி இதுதான். 😂 இந்தப் படங்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது. 🤣 பொன்ஸ்சுக்கு.... இந்த இரண்டு கையையும் தூக்குற வியாதி, கனகாலமாக இருக்குது போலை. 😂 🤣
  10. சந்திரிகா கொண்டுவந்த தீர்வை 11 வாக்குகளே நிறைவேற்ற தேவையாக இருந்த போது ரணிலும் ஜேவிபியும் கடுமையாக எதிர்த்தார்கள். இதில் ரணில் ஒருபடி மேலே சென்று தீர்வு பொதியை பாராளுமன்றில் வைத்து கொழுத்தியதாக சொல்கிறார்கள்.
  11. போர்க்காலங்களிலும் பேரழிவு காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களை எந்த சமூகமும் மதம் சார்ந்து அதனை பார்க்ககூடாது ஏனெனில் அது ஒரு அவசரகால நிலை, இந்தகால கட்டங்களில் எத்தனையோ சைவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன, எத்தனையோ கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் நாம் அதனை தூக்கி பிடித்து சர்ச்சையாக மாற்றியதில்லை, முஸ்லீம்கள் மட்டும் எந்த நெருக்கடியான காலங்களில்லும் தமது மதத்தை மட்டும் தூக்கிபிடித்து கதறுவது எதிலும் மத வியாபாரம் செய்யும் எரிச்சலின் உச்சம். தமிழர் பகுதியில் நின்று எமது சமூகம் எமது சமூகம் என்று தனது சமூகம் நோக்கி வெறிதனமாக கத்துகிறார் மைத்திரியின் ஆட்சியின்போது கிழக்கே ஹிஸ்புல்லா என்பவர் தமிழர்களின் நிலம் அபகரிப்பு, இஸ்லாமிய பல்கலைகழகம், பாடசாலைகள் , பள்ளிவாசல்கள் , கிராமங்கள் ,ஆளுனரிலிருந்து முதல்வர்வரை முஸ்லீம்கள் என்று என்று அதிவேகமாக தமிழர் நில அபகரிப்பில் ஈடுபட வடக்கே ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை ஏறக்குறைய முழுமையாக அபகரித்து,வவுனியா பகுதிகளில் தமது சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்து, அடுத்தகட்டமாக முல்லைதீவில் காடுகளை அழித்து முஸ்லீம் பரவலாக்கலுக்கு எத்தனங்கள் செய்து அப்படியே முஸ்லிம்கள் பெருமளவில் இல்லாத கிளிநொச்சியில் ஏற்கனவே ஐந்து பள்ளிவாசல்களிருக்க புதிதாக பள்ளிவாசலை மறைமுகமாக இவரே பின்னணியின் நின்று நகர பகுதியில் நிறுவியும்,பிறவற்றை புனரமைத்தும் என்று படிப்படியாக யாழ்ப்பாணம் நோக்கி நகரும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போதுதான் ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டு முஸ்லீம்களுக்கான ஆதரவு சிங்களவர்களிடையே முற்றாக சரிந்தது அவர்கள் கபளீகரமும் நின்று போனது. கெடுதல்களிலும் சில நன்மைகள் முளைக்கத்தான் செய்கின்றன.
  12. நான் ஐந்து சதமேனும் கொடுக்கவில்லை. மற்றவர்கள் போல் நான் கொடுத்து இருந்தாலும், புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதால் வழக்கு போட்டு நானும் உள்ளே போக தயாராக இருக்க மாட்டேன். இங்கு கொடுத்த பலருக்கு என் மைத்துனன் உட்பட, கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. சட்ட ரீதியிலான, செல்லுபடக் கூடிய ஆவணம் ஏதும் இல்லை. இயக்கத்தின் மீது, தலைவரின் மீது நம்பிக்கை வைத்து (கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கூட) கொடுத்தவர்கள் இவர்கள். இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே. ஏனெனில் இப்படி பதுக்கியவர்களை பாதுகாப்பது போன்று அவர்களுக்கு சார்பாக நியாயம் பிளப்பதால்.
  13. பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம். எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!
  14. ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.
  15. தற்போதுள்ள நிலையில் தேசத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல வேலை, இந்த திருடர்களை இனங்காட்டுவதுதான். பூனைக்கு மணி கட்டுவது யார்?
  16. தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. பிரச்சார கூட்டம் மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது. பொன்சேகாவுக்கு ஏமாற்றம் இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார். அந்தத் தேர்தலில் 4,173,185 வாக்குகளை பொன்சேகா பெற்றார். அது மொத்த வாக்குகளில் 40.15 வீதமாகும். எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/sarath-fonseka-election-meeting-not-even-5-people-1724206210
  17. மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள மண்ணின் அழகும் சேர்ந்து தரும் உணர்வுப் பகிர்தல் அருமை. ------ மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், பிஜு மேனன், நெடுமுடி வேணு போன்ற, முக்கிய நடிகர்கள் தம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகளில், எந்த கதாநாயக பிம்பங்கள் இல்லாமல் நடிப்பது எல்லாம் மலையாள சமூகத்தில் மாத்திரமே சாத்தியம் என நம்புகின்றேன். இவர்களுடன் கமலஹாசனும் இணைந்து பங்களித்துள்ளார். அனேகமான கதைகளை இயக்கி இருப்பவர் இயக்குனர் பிரியதர்ஷன் --- மிக யதார்த்தமான கதைகளையும், அனுபவங்களையும் விரும்புகின்றவர்கள் மாத்திரம் பார்க்கலாம். IPTV யில் தமிழ் web series பகுதியில் உள்ளது. Zee5 உள்ளவர்களாலும் பார்க்க முடியும்
  18. "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."
  19. நன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Suvy..... கவர்ச்சியாக இருக்குதோ அதே...... ஜெ யின் ஒவியத்தை பார்த்து படித்த கதைகள் பல....ஒவியங்கள் இன்னும் நினைவில் உண்டு ஆனால் கதை மறந்து போய்விட்டது.....
  20. மிக்க நன்றி உங்களின் உள்ளபடியான விமர்சனத்திற்கு. இன்னும் பார்க்கவில்லை, இந்த வாரம் பார்த்து விடுவேன்......... பட வெளியீட்டின் பின் கீர்த்தி சுரேஷ் ஒரு விழாவில் பேசியிருந்ததைப் பார்த்தேன். இந்திக்கு எதிராக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து விட்டு, இந்தியிலும் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இது ஒரு முரண் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் என்று அவர் அந்த விழாவில் பேசியிருந்தார். இந்தித் திணிப்புக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு, இந்தி மொழிக்கு அல்ல என்று அதற்கொரு பதிலையும் அவரே சொல்லியிருந்தார்.
  21. தகவலுக்கு நன்றி அய்யா. வெளிநாட்டில் ஒரு ஈழதமிழன் கூட இத பற்றி வாய் திறக்கவில்லை ☹️
  22. பி.எஸ். எஸ். எம் சாள்ஸ் எல்லாத்தையும் அழித்து விட்டு இனி முதலில் இருந்தாம்.😁
  23. விமர்சனத்துக்கு நன்றி ஐயா. பார்க்கலாம் படம் எப்படி என்று. நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. மக்களே விளம்பரப்படுத்துவார்கள்.
  24. நான் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தியதை முழுமையாக எதிர்க்கின்றேன். இதன் காரணங்கள், பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள் அதற்கு சொல்லும் காரணங்கள் அனைத்தும், மக்களை முழு முட்டாள்களாக நினைத்துச் சொல்லும் காரணங்கள் என்பதால். அதில் முக்கியமானவை "நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை" சொல்லப் போகின்றோம் என்பதும். "தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டப் போகின்றோம்" என்பதும் தான். நடைமுறையில் நகைப்புக்கிடமான, நடைமுறையில் பலனளிக்காத ஒன்றிற்காக வளங்களைப் பயன்படுத்தி மக்களை அணி திரட்டுவது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதால் இதனை எதிர்க்கின்றேன். ஆனால் நீங்கள் அவர்கள் மகிந்தவிடம் பெட்டி வாங்கிவிட்டு இதனைச் செய்கின்றனர் என்பதை முற்றாக ஏற்க மறுக்கின்றேன். இது எந்தவிதமான ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு இது. சுரேஸ் பிரேதசந்திரன், விக்கி போன்றோர் தம் இருப்பை அரசியலில் பேணுவதற்காக, சோதி மாஸ்ரர் , நிலாந்தன் போன்றவர்களின், மக்களின் மன நிலையை, தற்போதைய தேவைகளை அறிய விரும்பாத, அரசியல் சூனிய அறிவை நம்பி வகுத்த திட்டம் என்பதுக்கு அப்பால், இதில் பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாக நாம் நம்பத் தயாரில்லை. இது தொடர்பாக உங்களிடம் ஆதாரம் ஏதும் இருப்பின் எம்மிடம் பகிரலாம்.
  25. அதுக்கு அவர் தமனாவை அல்லவா கூட்டிக் கொண்டு போக வேண்டும் 😁
  26. புத்தன் ஏமாந்தது காணாது என்று… “குளியலறையில்” என்ற தலைப்பை போட்டு எங்களையும் ஏமாற்றி விட்டார். 😂 🤣
  27. என்ன புத்தா விடிய காலமை தலைப்பைப் பார்த்துட்டு ஆகா புத்தன் கிளுகிளுப்பான தலைப்புடன் வந்திருக்கிறாரே என்று வேலைவெட்டியை விட்டுட்டு கதையை வாசித்தால் யூடியூப் காரர் பரவாயில்லைப் போல இருக்கே.
  28. இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... அட்ரா சக்கை..இப்படியொரு வசனத்தைதான் தேடிக்கொண்டிருந்தனான்..
  29. இந்த இடைநீக்கம் (interdiction) என்பது கண் துடைப்பு. மீண்டும் வேலைக்கு அழைக்கும் போது, நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சம்பளத்தை (அப்படி சம்பளத்தை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றதா எனத் தெரியவும் இல்லை) சேர்த்துக் கொடுப்பர்.
  30. Published By: DIGITAL DESK 3 12 AUG, 2024 | 02:18 PM மியா லு ரூக்ஸ் என்ற செவித்திறன் குறைபாடுடைய பெண்ணொருவர் முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அழகு ராணி பட்டத்தை சூடியுள்ளார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் என்னைப் போலவே வெறித்தனமான கனவுகளை அடைய தனது வெற்றி உதவும் என்று நம்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ விரும்புகிறேன் என மியா லு ரூக்ஸ் தெரிவித்துள்ளார். 28 வயதுடைய மியா லு ரூக்ஸ்க்கு ஒரு வயதில் ஆழ்ந்த செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்பு அவரது காதில் கோக்லியர் மின்னணு சாதனம் பொறுத்தப்பட்டது. அத்துடன், முதல் வார்த்தையை பேசுவதற்கு இரண்டு வருடங்கள் பேச்சு திறன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மியா லு ரூக்ஸ் தற்போது அவர் மொடல் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளராகவுள்ளார். "நான் ஒரு தென்னாப்பிரிக்க செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன், ஒதுக்கப்படுவதால் ஏற்படும் வலி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் எல்லைகளை உடைப்பதற்காக இந்த கிரகத்தில் படைக்கப்பட்டுள்ளேன் என்பதை தற்போது அறிகிறேன். நான் அதை இன்றிரவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/190889
  31. பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை. வாக்களிகாமல் விட ஆதரவில்லை. சுமந்கிரன் மேற் கூறிய சிலருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இதில் யாருக்காவது ( ரனில் தான்) வாக்களிக்க சொல்வீர்கள். ஏன் என மக்களுக்கு கூறுங்கள். 39 பேர் பிரிக்காத வாக்குகளையா தமிழ் ஜனாதிபதி உறுப்பினர் பிரிக்க போகிறார். மலையக க்திலும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழர் போட்டியிடுகிறார். அவர் தமிழரின் வாக்குகளை பிரிக்க மாட்டாரா? அவரை பற்றி ஒரு கருத்தும் சாணக்கியன் வைக்கவில்லை. சுரேஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் சரி. மாவையரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். எப்படி கட்சிக்குள் இப்போதும் உள்ளார்? நேற்று சக்தி தொலைக்காட்சியில் இவருக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது பற்றி சந்தேகம் எழுப்பி இருந்தார். இன்று அவரின் சொத்துக்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ( கோவிந்தன் கருணாகரன்)
  32. ஆமா....ஆமா உண்மையான ஒற்றுமை யாதெனில் நீதிமன்று படியேற்றி கட்சியை இரண்டாக உடைத்து விட்டு, மூடிய அறைக்குள் ஒவ்வொரு பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து டீல் பேசி பெட்டியை வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதே ஆகச்சிறந்த உண்மையான ஒற்றுமையாகும்.
  33. நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும். விசுகு நான் இலங்கை யாழ்ப்பாணம் போய் கண்டிறிந்தது காசுபணம் செல்வாக்குடன் உங்களால் தனியாக வாழ்ந்திட முடியாது. கெளரவமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நீங்கள் சொன்ன மாதிரியோ வேறு அரசியல் சக்திகளின் செல்வாக்கு பொலிஸ் செல்வாக்கு இப்படி இல்லாதவிடத்து ஒரு அடிமையாகவே வாழ வேண்டிவரும். இதை ஜீரணிப்பது கஸ்டம் தான்.இருந்தாலும் உண்மை.
  34. இந்த ஆட்டு மந்தை செயற்பாடு ஆபத்தானது, ஆனால் இந்த பொது வேட்பாளர் கருத்தினை முதலில் முன் வைத்தது எந்த தமிழ் அரசியல்வாதிகளும் அல்ல, யாழ்கலத்தில் ரஞ்சித் இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தார், அதன் பின்னரே இது தமிழ் அரசியல்வாதிகளிடையே பேசு பொருளாகி இருந்ததாக உணர்கிறேன். எனக்கும் இந்த தேசியம் பேசி மக்களை கொள்ளை அடிக்கும் இந்த அரசியல்வாதிகளை பிடிப்பதில்லை, ஆனால் அவர்களால் முன் மொழியப்பட்ட இந்த பொது வேட்பாளரால் என்ன நன்மை வரும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்; ஆனால் தொடர்ந்து இணக்க அரசியல் என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அரசியலால் எந்த மாற்றமும் இல்லாததால் (இது பற்றி விரிவாக ரஞ்சித் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்) ஒரு மாற்று முயற்சியினை எதற்காக அந்த அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை (Bias) என்பதற்காக ஸ்ரியோ ரைப்பாக எதிர்க்க வேன்டும்? இதுதான் எனது புரிதல் உங்களுக்கு மேலதிகமாக இதில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு அதனை எதிர்த்தால் எனக்கு புரியும்!
  35. ஜனாதியாகவே வரமாட்டார். எப்படி இந்த உறுதி மொழிகளை அளித்திருக்க முடியும்??
  36. இது சாதாரணமாக அறிவித்தலில் போடப்படும் வாசகம். இது கூட தெரியாமலா பேனாவை கையில் எடுத்தீர்கள்?? நாசமாய் போச்சு. 😭
  37. தமிழ் பொது வேட்பாளராக ஒரு பென் வேட்பாளர் போட்டியிட்டிருந்திருக்கலாம், 90 களில் சந்திரிக்கா கணவனை இழந்த குடும்பத்தலைவி என வாக்கு கேட்ட நேரம் வட கிழக்கில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயமாக எனது வாக்கு சந்திரிக்காக இருந்திருக்கும், தமிழ் வேட்பாளரை விட அந்த நேரம் அவர் மக்களிடம் அனுதாப அலையினைக்கொண்டிருந்தார், ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஏதோ சொல்வார்கள் அது போல் அவரும் மாறிவிடார், ஆனால் அவர் சொன்ன குழந்தைகளை இழந்த பெற்றோரின் வலி தனக்கு தெரியும் என்றது பொய்யில்லை என இப்பவும் நம்புகிறேன். இந்த பொது வேட்பாளர் விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டிருக்கலாம், ஆனால் எமது பிரச்சினையே அதுதான்.
  38. கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
  39. சிறந்த முயற்சி . இனவாதம் பிடித்த சிங்கள உதவாத அரசியல் தலைவர்களுக்கு பதிலாக இவருக்கு போட்டு எங்கள் சிங்கள எதிர்ப்பை காட்டவேண்டும் .
  40. கந்தையா, பணத்தை பாதுகாக்கும் கட்டமைப்பு தேவையல்லை. பொறிமுறையும் தேவையில்லை. பணத்தை இவர்கள் பாதுகாக்கவும தேவையில்லை. பணத்தை யாரிடம் இருந்து பெற்றார்கள், யாருடைய பெயரில் பெருந்தொகை பணத்தை எடுத்து அதை அபகரித்து அவர்களை வாழ்நாள் கடனாளியாக்கி னர்களோ அவர்களின் பெயர், முகவரி விபரம் எல்லாம் நீங்கள் கூறிய செயற்பாட்டாளர்களிடம் உண்டு. பணத்தை மனம் இருந்தால் திருடிய இடத்தில் காதும் காதும் வைத்த மாதிரி திருப்பி கொடுத்திருக்கலாம். அதற்கு எந்த தடையும் சட்ட சிக்கலும் இல்லை. பணத்தை இழந்தவர்கள் இப்போதும் உள்ளார்கள். அவர்கள் இவர்களை காட்டிக் கொடுக்கப்போவதில்லை. தமது பணம் திரும்பி வந்ததையிட்டு மகிழ்சசியடையவே செய்வர். பணத்தை பெறும் போதும் இல்லாத சட்ட சிக்கல் உரியவரிடம் திருப்பி ஒப்படைக்கும் போது வரப் போவதில்லை. பணத்தை தாம் அனுபவிப்பதற்தை நியாயப்படுத்த இவ்வறான ஆயிரம் காரணங்களை அவர்கள் கூறலாம். அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆயிரம் முட்டு கொடுப்புகளைச் செய்யலாம். அவை எதுவும் நியாயமானதல்ல.
  41. @Kapithan அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள் பயன்படுத்திய உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில் தமிழரின் அரசியல் பலம் உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்காக இருந்தது. மக்களின் வீடுகளுக்கு சென ற இவர்களுக்கு அந்த வீட்டுகாரர் பணம் வழங்கக்கூடிய நிதி நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தும் கடன்வாங்கி தருமாறு வற்புறுத்துவார்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்தால் கடன் வாங்கி அந்த பிரச்சனையை தீர்ப்பதில்லையா, அது போல் இப்போது உங்கள் நாட்டிற்கு கஷ்ரம் வந்துள்ளது என்றெல்லாம் சென்றிமென்ற் கதையளந்து அவரின் மனத்தை இளகப்பண்ணி அந்த பலவீனமான நேரத்தில் கடன் பத்திரத்தில் கையொப்பமிடப்பண்ணி அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுவிடுவார்கள். அதைவிட இன்னொரு தந்திரம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும் அன்பான வற்புறுத்தலை செய்து கொண்டிருக்கும் போது அந்த விவாதம்தே நடைபெறும் போது அந்த தேசிய செயற்பாட்டாளருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவர் தொலை பேசியை ஸபீக்கரை ஓன் செய்து பேசுவார். மறுமுனையில் ஒருவர் மிகுந்த கோபத்துடன், என்ன அவசரகால நிதி சேகரிக்கின்றீர்களாம் ஏன் என்னிடம் வரவில்லை என்று சத்தமிடுவார். உடனே இவர் பம்மிக்கொண்டு இல்லை அண்ணை நீங்கள் இப்ப முன்று மாதத்துக்கு முதல் தானே பத்தாயிரம் தந்தனீங்கள் அது தான் உங்களிடம் வரவில்லை என்று கூற மறு முனையில் இருப்பவர் இன்னும் கோபத்துடன் அதை விடுங்கோ. இப்ப நாடு இருக்கிற நிலைக்கு அந்த பத்தாயிரம் எந்த மூலைக்கு காணும் இந்த நேரம் நான் உதவி செய்யாமல் விட்டால் நான் தமிழனாய் இருக்க என்ன தகுதி இருக்கு, எனது காரை நேற்றே விற்று பணத்தை வீட்டில் வைத்துள்ளேன் வாங்கோ வந்து பெற்றுகொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு கார் இல்லாமல் இருந்தால் நான் குறைஞ்சா போயிடுவன் இண்டைக்கு எமது இறுதி யுத்தத்திற்கு நிதி தராமல் விட்டால் இன்று என்னால் இரவு நித்திரை கொள்ளமுடியாது உடனே வாங்கோ என்று கூறுவார். இந்த உரையாடல் அந்த செயற்பாட்டாளரால் ஏற்கனவே திட்டமிட்ட நாடக உரையாடல் என்பதை அறியாத அந்த வீட்டுகாரர் குற்ற உணர்சியில் பலவீனமாகி தனது பொருளாதார நிலைக்கு பன்மடங்கு மேல் வங்கியின் தனது பெயரில் கடன் பெற கையொப்பமிடுவார். இவ்வாறாக பல சம்பவங்கள் 2009 இன் கடைசி ஆறு மாத காலத்தில் நடந்தன. இவ்வாறான படு மோசமான செயற்பாடுகளே இன று மக்களின் நம்பிக்கையை இழக்கவைத்தது. இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து அது தொடர்கிறது. மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது.
  42. தாய்லாந்தில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 37 வயது இளம் பெண் தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளான 37 வயது பேடோங்டார்ன் ஃபியூ தாய் கட்சியின் தலைவர் ஆவர். இந்நிலையில், அவர் புதிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார் என்றும் அதனைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார். சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பதவி ஏற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் ஸ்‌ரெத்தா தமது பதவியை இழந்தார். இதை அடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்து அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார். பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அத்தையான யிங்லக் ஷினவத்ராவும் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர். https://ibctamil.com/article/paetongtarn-thailand-youngest-prime-minister-1723789541 ஏனண்ணை பயப்பிடுகிறீங்க?! பக்கத்தில வூட்டுக்காறம்மாவா?
  43. ரஜீவ் காந்தியைச் சந்திக்க முடிவெடுத்த தலைவர் பிரபாகரன் தான் தலைமறைவாக இருப்பதால் இலங்கையரசு அதனை தனது பிரச்சாரத்திற்குப் பாவிக்கின்றது என்பதை உணர்ந்த பிரபாகரன் 1985 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி வெளியே வந்தார். தான் தலைமறைவாக இருப்பதைப் பாவித்து இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கினை உருவாக்கி அதனை ஆளப்படுத்தவும், சர்வதேசத்தில் போராளிகள் அமைதியில் நாட்டமில்லாதவர்கள், வன்முறை விரும்பிகள் என்று பிரச்சாரப்படுத்தவும் ஜெயவர்த்தன முயன்று வருகிறார் என்பதைப் பிரபாகரன் அறிந்தே இருந்தார். போராளிகள் மீது ஜெயவர்த்தன சிறுகச் சிறுக சர்வதேசத்தில் சுமத்தி வந்த அவப்பெயரை துடைக்கவும், இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கொன்று உருவாகிவருவதாக அவர் செய்துவந்த பிரச்சாரத்தை முறியடிக்கவும் பிரபாகரன் நடவடிக்கைளில் இறங்கினார். புரட்டாதி 10 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் பேசும்போது திம்புப் பேச்சுக்களின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக‌ நிலையெடுத்துவரும் இந்தியாவை தமது பக்கம் சாய்ப்பதற்கு போராளிகள் ரஜீவுடன் ஒரு சந்திப்பைக் கோரவேண்டும் என்று அவர் வாதிட்டார். புரட்டாதி 29 ஆம் திகதி வெளிவந்த ச‌ண்டே மகசீன் எனும் இந்திய பத்திரிக்கையில் அதன் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிற்கு வழங்கிய நேர்காணலில், பாலசிங்கம் நாடுகடத்தப்பட்ட போது தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தொடர்பாக தனது தளபதிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறவும், பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையினை நேரடியாக உணர்ந்துகொள்ளவுமே தான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் அங்கு தங்கியிருந்த வேளையில் தனது தளபதிகளுக்கும், மக்களுக்கும் தான் கூறிய ஒரே விடயம் தனித் தமிழீழத்தை உருவாக்குவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான விடுதலையினை அடைந்துகொள்ளமுடியும் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன் என்பதுதான் என்றும் அவர் கூறியிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் , ஜெயவர்த்தன தமக்கு தீர்வெதனையும் தரப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரனை செவ்வி காணும் அனீத்தா பிரதாப் "தலைமறைவாக இருக்கவேண்டும் என்று எனக்கு எண்ணம் இருக்கவில்லை. பாலசிங்கம் நாடுகடத்தப்பட்டவேளை நான் வெளியே வந்திருக்க முடியும். ஆனால் இந்தியா நடந்துகொண்ட விதத்திற்கெதிரான எனது எதிர்ப்பைக் காட்டவே அவ்வாறு வெளியில் வருவதைத் தவிர்த்தேன்" என்று அவர் அனீத்தா பிரத்தாப்பிடம் கூறினார். போராளிகளின் தலைவர்களை ரஜீவ் காந்தி சந்திக்க விரும்புவதாக செய்தியனுப்பியபோது, தான் அதுகுறித்து அதிக அக்கறை காட்டவில்லை என்றும், அதனேலேயே ஏனைய ஈழத்தேசிய முன்னணியின் தலைவர்களும் ரஜீவுடனான சந்திப்பிற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றும், அதனாலேயே இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே அசெளகரியமான சூழ்நிலை உருவாகியது என்றும் அவர் விளக்கினார். ஆனால், பாலசிங்கத்தை நாடுகடத்தியதற்கான தனது எதிர்ப்பைக் காட்டவே ரஜீவுடனான சந்திப்பை தான் தவிர்த்ததாக அவர் மேலும் கூறினார். "பாலசிங்கத்தை நாடுகடத்த ரஜீவ் எடுத்த முடிவு தேவையற்றது என்று தான் உறுதியாக நம்புகிறேன்" என்றும் அவர் வாதிட்டார். தான் வெளியே வந்ததற்கான மூன்று காரணங்களை அவர் முன்வைத்தார். கேள்வி : அப்படியானால் எதற்காக தற்போது வெளியே வந்தீர்கள்? பிரபாகரன் : இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், நான் தலைமறைவாக இருந்தபொழுது, எமது விடுதலைக்கு எதிரான சக்திகள் எம்மை பயங்கரவாதிகள் என்றும், சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தன. இரண்டாவது, தமிழ் மக்களின் விடுதலையினை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாகவே வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்ற எம்மைப்போன்றவர்களை ஓரங்கட்டிவிட்டு சலுகைகளுக்காக பேரம் பேசும் சூழிநிலையினை சிலர் உருவாக்க விரும்பியிருந்தனர். பத்திரிக்கைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் எம்மை மிகவும் கொடிய பயங்கரவாதிகள் என்று மலினப்படுத்தியும், எம்மைப்பற்றிய தவறான செய்திகளையும் சிலர் வேண்டுமென்றே பரப்பி வர ஆரம்பித்திருந்தனர். மூன்றாவதாக, இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது எமது இயக்கமே என்றும், அதனாலேயே நான் தலைமறைவாக இருக்கிறேன் என்றும் இலங்கையரசாங்கம் பிரச்சாரம் செய்துவந்திருந்தது. தான் வெளியே வந்தமைக்கான இன்னொரு காரணத்தை பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். ரஜீவ் காந்தியுடனான போராளிகளின் தொடர்பாடல் என்பது ரோ அதிகாரிகள் ஊடாகவோ அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஊடாகவோதான் நடந்து வந்தது. ஆகவே, இவ்வதிகாரிகள் தன்னுடனும் நேரடியாகத் தொடர்புகொள்ளவேண்டும் என்பதற்காகவும், பேச்சுவார்த்தைத் தோல்விக்குப் பின்னரான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தன்னிடம் நேரடியாக அவர்கள் தெரிவிக்க முடியும் என்பதற்காகவுமே தான் வெளியே வந்ததாகவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் தன்னைச் சந்திப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாக உணரும் ரஜீவ் காந்தி நிச்சயம் சினங்கொண்டிருப்பார் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். இந்தியாவின் சமாதான முன்னெடுப்புக்களை போராளிகளின் தாமதித்த சந்திப்பு பாதிக்கும் என்று பாலக்குமாரிடமும் பத்மநாபாவிடமும் ரோ அதிகாரிகள் பேசும்போது எச்சரித்திருந்தார்கள். போராளித் தலைவர்களின் தாமதத்தினாலேயே தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், யுத்த நிறுத்த மீறல்களும் இடம்பெற்றன என்று கூறிய அதிகாரிகள், வன்முறைகள் ஆரம்பித்தமைக்கான பொறுப்பினை போராளிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தனர். புரட்டாதி 10 ஆம் திகதி கூடிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ரஜீவ் காந்தியைச் சந்திப்பதற்கு முன்னர் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தனர். மூன்று நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 13 ஆம் திகதி எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இரு விடயங்கள் குறித்து போராளிகள் வலியுறுத்தினர். முதலாவது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பொன்றினை ஜெயார் மேற்கொண்டு வருவதை எம்.ஜி.ஆர் இடம் உறுதிப்படுத்திய அவர்கள், அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடாக நிரூபித்தனர். மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிராமங்களில் இருந்து இராணுவத்தினரும், கடற்படையினரையும் வன்முறையினைப் பயன்படுத்தி தமிழ் மக்களை நிரந்தரமாகவே விரட்டியடித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களில் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுவருவதையும் அவர்கள் சாட்சிகளூடு நிரூபித்தனர். அத்துடன், தமிழர்கள் வாழ்ந்துவந்த கிராமங்களில் குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டு, அவர்கள் அருகிலிருக்கும் ஏனைய தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த அரசாங்கம் ஊக்குவித்துவருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். தமிழர்கள் மீது அரசாங்கம் முடிக்கிவிட்டிருக்கும் இனக்கொலையின் காரணமாகவே பெருமளவான தமிழ் அகதிகள் தமிழ்நாடு நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரண்டாவதாக அவர்கள் தெரிவித்த விடயம், தம்மைப் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசாங்கம் சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்துவருவது விசமத்தனமானது என்பது. தமிழ் மக்கள் தகுந்த பாதுகாப்புடனும், ஒடுக்குமுறைகள் குறித்த அச்சமின்றியும் வாழ்வதே தமது தலையாய விருப்பு என்றும், அதனை அடைவதற்காக தாம் நடத்திவருவது விடுதலைப் போராட்டமேயன்றி பயங்கரவாதம் இல்லையென்றும் வாதிட்டனர்.தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலத்தில், தமது வாழ்க்கையினை எவரினதும் இடையூறின்றி மேற்கொண்டு, சுயகெளரவத்துடன் வாழ‌ வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கத்தினால் இன்றுவரை முன்வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பதை எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.தமிழ் மக்களுக்கு அதிகாரத்தினைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, மாவட்ட சபைகள் எனும் தீர்வினை முன்வைத்து மத்திய அரசாங்கத்திற்கே இன்னும் இன்னும் அதிகாரங்களை வழங்கி, தமிழ் மக்களை மேலும் தனது அடக்குமுறைக்குள் கொண்டுவர‌ அரசு முயல்கிறது என்றும் அவர்கள் விளக்கினர். ஆகவே இந்தியா, ஜெயவர்த்தனவின் கபடத்தனத்தை சரியாக கண்டுணர்ந்து, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான தீர்வை இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுத்தரவேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் கோரினர். தன்னைச் சந்தித்த போராளிகளின் தலைவர்களிடம் ரஜீவையும் சென்று சந்திக்குமாறு கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர், தமிழரின் பிரச்சினை தொடர்பான தனது எண்ணங்களை ரஜீவிடம் தான் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அன்றைய தினமே தனது கருத்துக்களை ரஜீவிற்கு எம்.ஜி.ஆர் அனுப்பினார். அவர் அனுப்பிய அறிக்கையில் போராளித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலை தொடர்பான தனது சொந்தக் கணிப்பையும் அவர் எழுதியிருந்தார். போராளித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர், தான் ரஜீவிற்கு அனுப்பிய அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தார். தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருகிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்படட் வேண்டும்" என்று அவர் கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையினைக் காட்டிலும் அகதிகள் பிரச்சினையினை அவர் மிகைப்படுத்திப் பேசினார். பின்னர், தமிழர்கள் கெளர‌வமாகவும், சுதந்திர‌மாகவும், தமது அலுவல்களைத் தாமே பார்த்துக்கொள்ளும் நிலையினை உருவாக்க இலங்கையரசாங்கம் திம்புவில் முன்வைத்த தீர்வு உதவாது என்று அவர் கூறினார். "தமிழர்கள் தமது விடயங்களைத் தாமே பார்த்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார். இலங்கை அகதிச் சிறுவர்கள் ‍- தமிழ்நாடு 2003 இலங்கையரசாங்கத்திற்கும், போராளிகளுக்கும் இடையிலான மூன்று மாதகால யுத்த நிறுத்தம் நிறைவடையும் நாளான புரட்டாதி 18 ஆம் திகதி போராளித் தலைவர்கள் தில்லியை வந்தடைந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து தில்லி நோக்கிப் புறப்படுவதறுகுச் சற்று முன்னர் கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லலித் அதுலத் முதலி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். அதன்படி யுத்தநிறுத்தம் மார்கழி 18 வரை இலங்கையரசால் ஒருதலைப்பட்சமாக நீட்டிக்கப்பட்டது.
  44. முதலில் சிரிப்பு பட்டனை அமத்தவா எண்டு யோசிச்சன், ஆனால் குமாரசாமியண்ணை எழுதியது வெளிநாட்டுக்கு அகதியாய் வந்தவர்கள் அனைவரும் எதிர்கொள்ளூம் ஒன்று என்பதால் யாதர்த்தத்தைபதிவு செய்கிறார் அதனால் இது சிரிப்பல்ல சீரியஸ் ம் சீரியசுக்கு எப்படி சிரிப்பது என்றாச்சு. மேலே உள்ள வரிகளை சுட்டி காட்டியதன் நோக்கம் வெளிநாட்டுக்கு அகதியா வருபவர்களில் எம்மவர்தான் நீண்டகாலம் ஒரு நாட்டிலிருந்தும் ஒரு மொழியை 60% வீதமாவது கற்றுக்கொள்ளாமல் இன்றும் ஒரு அலுவலுக்கு அடுத்தவர் உதவியை நாடுவதும் , வெள்ளைக்காரனுடன் பேசும்போது தகிட தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்று பக்கத்தில நிக்கும் வேற்று நாட்டுக்காரன் எம்மை பார்த்து பரிதாபபடும் நிலையில் உள்ளவர்கள் , எனது அலுவல்களுக்கு மொழி விஷயத்தில் அடுத்தவர் உதவியை பெரிதாக நாடாவிடிலும் நானும் பூரண மொழி ஆற்றலில் மேற்குறிப்பிட்டவர்களின் அதே ரகம்தான். எமக்கு முதல் நிலையில் உள்ளவர்கள் சீனர்கள். எம்மவர்கள் பிற இனங்களுடன் ஒப்பிடும்போது மொழி ஆற்றலில் பின் தங்கியதற்கு இரண்டு காரணங்கள் ,,,வந்த காசு கட்டவேணுமென்று வந்து அடுத்தவாரமே ஓயாமல் வேலை வேலை என்று காலம் முழுக்க ஓடுவது இரண்டு தாயகத்தில் தாய் மொழியை தவிர பிறமொழியை அறியும் ஆற்றல் இல்லாதது, தாயகத்தில் சுத்த தமிழ் பேசுவதற்கு மொழி பற்று முதலாவது காரணமில்லை, இங்கிலீசு தெரியாததும் ஒரு காரணம், உண்மைய சொல்வதானால் தமிழக தமிழ் பேட்டிகள் , டிவி நிகழ்ச்சிகள், உரையாடல்களை நம்மவர்கள் முழுதா புரிவதென்றாலே ஓரளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது தாயகத்திலும் , கைஸ், வாவ், வேற லெவல், அதைவிட பல ஆங்கில கலப்பு சொற்கள் யாழ்ப்பாண தமிழில் கலந்துவிட்டன. குமாரசாமியண்ணை கருத்தை பதிவிடுகிறேன் என்று கண்ணாடியை பதிவேற்றிவிட்டார் ஒவ்வொரு அகதியின் முகமும் அதில் தெரியுது.
  45. ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்” நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது. செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது” அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது” நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா” நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?” குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂 தோழர் பாலன்
  46. பிரமிடுகள் இயற்னையாவே உருவானவை – மனிதர்களால் கட்டப்படவில்லை. பிரமிடுகள் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது எகிப்துதான். இங்குள்ள பழமையான பிரமிடுகள் கி.மு 2,630ல் மன்னர் ஜோசர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது. இதனிடையே இந்தோனேசிய அறிவியல் கழகத்தை சேர்ந்த டேனி ஹில்மன் நடவிட்ஜாஜா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அண்மையில் தொல்பொருள் ஆய்வு குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, இந்தேனேசியாவின் குனாங்க் படாங் பகுதியில் இருக்கும் பிரமிடின் மையப்பகுதி சிக்கலான் மிகப்பெரிய எரிமலையால் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இயற்கையான எரிமலை குன்றாக இருந்த பகுதியை பிரமிடின் மையப் பகுதியாக வைத்து, சிற்பம் மற்றும் கட்டிடக் கலையின் மூலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் முந்தைய காலகட்டத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களை விளக்குவதாக கூறியுள்ள ஆராய்ச்சிக் குழு, சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தின் தொடக்கத்தில்தான் மனித நாகரிகம் வளரத் தொடங்கியதாகவும், கட்டுமானத் திறன்களை மனித இனம் பெற்றது என்ற கருத்துகளையும் கேள்விக்குறியாக்கிள்ளது. எனவே, துருக்கியில் இருக்கும் சான்றுகளை விட, விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே மேம்பட்ட கட்டுமான நடைமுறைகள் இருந்ததாக கூறுவது ஆராய்ச்சியாளர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதனிடையே, பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபிளிண்ட் டிபிள் அளித்துள்ள பேட்டியில், புதைக்கப்பட்ட அடுக்குகளில் மனித கட்டுமானத்தை குறிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மனித தலையீடு இல்லாம மலையில் இருந்து உருளும் பொருட்கள் இயற்கையாகவே தங்களை திசை திருப்பி முனைந்திருக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சதர்ன் கனெக்டிகட் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பில் பார்லி, குனாங்க் படாங்கில் இருந்து 27,000 ஆண்டுகள் பழமையான மண் மாதிரிகள், எலும்பு துண்டுகள் எடுக்கப்படவில்லை என்றும், இது வழக்கமான மனித செயல்பாடு குறியீடுகளை கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395214

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.