Leaderboard
-
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்12Points15791Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்10Points14676Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20018Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/21/24 in Posts
-
குளியலறையில்
9 pointsகிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை நான் பாடுகிறேன்." "உனக்கு நல்ல குரல் பாடிப்பழகு 'பாட்டுக்கு பாட்டு' போட்டியில் பாடலாம் வீரசிங்கம் மண்டபத்தில் வைக்க போயினமாம் அடுத்த மாசம்" " சும்மா பகிடி விடாமல் போங்கோ எனக்கு கிணற்றடியில் பாட்டு பாடத்தான் முடியும் நாலு பேருக்கு முன்னால் பேசவே மாட்டேன்" ".."இந்த கதியாலில குமுதமும், ஆனந்த விகடனும் வைச்சிருக்கிறன் அக்காட்ட கொடுத்திட்டு வேறு புத்தகம் வாங்கி கொண்டு வைச்சுவிடு நான் குளிச்சிட்டு வந்து எடுக்கிறன்" கிணற்றுக்கட்டில் வைத்திருந்த துவாய்யை எடுத்தவனுக்கு கடந்த முறை முசுறு கடித்த ஞாபகம் வரவே இரண்டு மூன்று தடவை நன்றாக உதறிவிட்டு உடம்பை துடைத்தபின்பு தூவாயினால் உடம்பை சுற்றியபடியே சாரத்தை கழற்றி நன்றாக பிளிந்து கொடியில் காயப்போட்டுவிட்டு ,கதியாலில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்தான் . புத்தகத்தை புரட்டி பார்த்தபடியே சென்று அக்காவிடம் கொடுத்து விட்டு வேறு புத்தகம் இருந்தால் அண்ரி வாங்கி கொண்டு வரசொன்னவர் ,என்றான் .அந்த மேசையில் இரண்டு புத்தகம் இருக்கு கொண்டு போய் கொடு என்றாள் தமக்கை. புத்தகத்தை எடுத்து பார்த்துகொண்டு போனவனுக்கு அதிலிருந்த காட்சி அவனை அந்த கதையை வாசிக்க தூண்டிவிட்டது பெண் குளியலறையில் குளிப்பது போன்ற ஒர் ஒவியம், வழமையாக சிறு நகைச்சுவைகளை படிப்பவனுக்கு அன்று அந்த காட்சி கதையை முழுமையாக படிக்க தூண்டிவிட்டது என்று சொல்வதை விட காட்சி எப்படி விபரித்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாய் வாசிக்க தொடங்கினான் .இரண்டு பக்க சிறுகதையில் ஒரே ஒரு வரி மட்டும் அந்த காட்சி விபரித்திருந்தது ... விலகி இருப்பது போன்ற ...இன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... யாழ்கள புத்தனும் விதிவிலக்கல்ல9 points
-
நான் என் வேர்களை பதக்கம் போல அணிகின்றேன்.
பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.5 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அவர் எழுத்து / சொல் பிழைகள் விட்டுள்ளார். புலிகள் இயங்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் தன் குடும்பமும் நெருங்கிய உறவுகளும் குடும்பம் நடத்த முடியும் , கோடிகளில் புரள முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும். கோத்தாவை விட, மஹிந்தவை விட, கடும் சிங்கள இனவாதிகளை விட தலைவர் கொல்லப்பட்டதை, புலிகள் அழிக்கப்பட்டதை மனசார மகிழ்வுடன் வரவேற்பவர்களாக இவர்களே இருப்பர்.4 points
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
3 pointsஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே! விடிவு தேடும் உனது துன்பத்தை விட இது சிறியதென்பதால். நாங்கள்.. தாங்கியே வாழப் பழகினோம். வேறொரு மொழி, வேறொரு கலாச்சாரம், வேற்று மனிதர்கள் விபரம் தெரியாத நாம். அரசுகள் எங்களை ஏற்றுக்கொண்டபோதிலும் இங்கு சிலர் எங்களை வேற்ரு கிரக மனிதர்களாகவே பார்த்தார்கள். இப்படி இருந்தும் எங்களின் உழைப்பின் ஒருபகுதியை உனக்கு அனுப்பியே அங்குள்ளேரை வாழவைத்தாயென்பதை அவர்களுக்கு ஞாபகப் படுத்து தாயே! அனால் இன்றோ எங்களின் உழைப்பு பொய் களவில்லா எங்களின் வாழ்க்கை முறை மொழியின் தேர்ச்சி குழந்தைகளின் கல்வியின் உயற்சி பலதையும் பார்த்து மனிதநேயத்துடன் தங்களின் குழந்தைகளாக எங்களை பார்கிறார்கள். தாயா?தத்தெடுத்த தாயா? என்ற குளம்பம் எங்களை இப்போது வாட்டுகிறது. இருந்தாலும்- எம் உயிர் போகும் நிலை வந்தாலும் உன்னை மறக்கமுடியுமா? அம்மா.. எங்கள் பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு பூட்டப் பிள்லைகளுக்கு உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி பூட்டியென சொல்லி வளர்கிறோம் தாயே! ஒருகாலம் நாங்கள் வரும்போது-இது எனது பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் எனது பூட்டப் பிள்ளைகளென்று “அங்கிருப்போர்க்கு” சொல்லிவை தாயே அது போதும் எங்களுக்கு! அன்புடன் -பசுவூர்க்கோபி.3 points
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
3 pointsரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் பெயரிட்டது பொருத்தமான ஒன்றே ! இப்படம் பற்றிய விமர்சனங்கள் பல பத்திரிகைகளிலும் அவரவர் கோணத்தில் வெளிவந்த பிறகு என் பங்கிற்கு ஒரு முழுமையான விமர்சனம் அளிப்பது இந்த என் எழுத்தின் நோக்கமல்ல. பெரும்பாலான அவர்களிடமிருந்து நான் சற்று மாறுபடும் இடங்களையே சுட்ட எண்ணம். கிராமியச் சூழலில் ஒரு கட்டுப்பெட்டியான சமூகத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகி ஒரு முற்போக்குச் சிந்தனையாளராக அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தாக்கத்தினால் இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் பேசும் புதுமைப் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். அத்தனை விஷயங்களிலும் அவருக்கு உறுதுணையாய்த் தோளொடு தோள் நிற்கும் தோழனாய் விளங்குபவர் அவருடைய தாத்தா. படத்தின் 'ரகு தாத்தா' அவரே ! அறுபதுகளில் வளர்ந்த என் போன்றோருக்கு இவை வெகு இயல்பாகத் தோன்றுகின்றன. திராவிட இயக்கச் சிந்தனை பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதைக் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். இடதுசாரி சிந்தனையைப் போலவே அது ஒரு நல்ல அரசியலாக அமைந்தது. எனவே பொதுவாக இக்கால இளைய சமுதாயத்திடம் நல்ல கொள்கை அரசியலும், திரைப்படம் போன்ற கலைகளில் நல்ல ரசனையும் இல்லாமல் போனதே என்று புலம்பும் தலைமுறையும் நாங்களே ! தலைமுறை இடைவெளி என்பது நியூட்டனின் நான்காவது விதியாக அமையலாமோ ! நிற்க. நாம் கையில் எடுத்துள்ள இப்படத்தின் நாயகி வங்கியில் பணிக்குச் செல்கிறார்; சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல, எழுத்திலும் தம் முற்போக்கு சிந்தனைகளைப் பதிய வைக்கும் எழுத்தாளராய்த் திகழ்கிறார். பத்திரிகைகளில் தாம் எழுதும் சிறுகதைகளில் புதுமைப் பெண்களைப் படைக்கிறார். பெண் எழுதுவதைச் சமூகம் பெரிதும் வரவேற்காத காலகட்டத்தில், கயல்விழிப் பாண்டியன் எனும் தம் பெயரைக் க.பாண்டியன் எனும் ஆண் பெயரில் எழுத்துலகில் பதிவு செய்கிறார். அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் முற்போக்காளனாய் வேடமிட்ட ஒரு பிற்போக்குவாதியிடம் மனதளவில் ஏமாந்து பின் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை ஒரு நல்ல நகைச்சுவைச் சித்திரமாக்கி இருக்கிறது படக்குழு. "முற்போக்குக் கருத்துகளை நகைச்சுவை இழையோடும் கதையம்சத்தோடு வழங்கியதால், கருத்துகள் நீர்த்துப்போய் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; காமெடி படம் பண்ணலாமா அல்லது கருத்துப்படமாக ஆக்கலாமா என்ற குழப்பத்தில் விளைந்ததாகத் தெரிகிறது" என்ற விமர்சனம் சிலரால் வைக்கப்பட்டுள்ளது. இப்பார்வையில் முற்றிலும் முரண்படுகிறேன் நான். நகைச்சுவையுணர்வு என்பது சான்றாண்மைக்கான அறிகுறி என்பது சர். சார்லி சாப்ளின் போன்றோர் ஏற்கனவே உலகிற்கு எடுத்துக் காட்டிய ஒன்று. அவ்வகையில் இப்படம் தனது உயரிய நோக்கத்தை எந்த குழப்பமும் இன்றித் தெளிவாக வெளிக்கொணர்வதில் வெற்றி பெறுகிறது. கொள்கைகளை மட்டும் பேசினால் இது வெறுமனே ஒரு ஆவணப்படமாக முடிந்திருக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு கொள்கையும் தொடக்கத்தில் கசப்பு மருந்தாகவே பெரும்பான்மை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படும். எனவே அருமையான திட்டமிடல், படமாக்கல் மூலமாக மருந்தைத் தேனில் குழைத்துத் தந்துள்ளது இயக்குநரின் அபார சாதனை. நாயகியான கீர்த்தி சுரேஷ் முகபாவனையிலும் கண்ணசைவிலும் நவரச நாயகியாக மிளிர்கிறார். 'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரி அவர்களை நம் கண் முன் நிறுத்திய கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா' திரைப்படத்தில் தாமும் ஒரு நடிகையர் திலகம் என்பதை நிரூபிக்கிறார். கீர்த்தி சுரேஷ் அளவிற்கு நடிக்கும் வாய்ப்பை இப்படம் தராவிட்டாலும், தமக்கு அளிக்கப்பட்ட பங்கினில் அப்பேத்திக்குத் தாத்தாவாகத் திறம்பட ஈடு கொடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவர்கள் இருவர் தவிரவும் ஏனைய கதாபாத்திரங்களும் தத்தம் பொறுப்பினைச் செவ்வனே நிறைவேற்றுவது, குறித்து நோக்கத்தக்கது. தக்கோரைத் தேர்வு செய்து குறைந்த முதலீட்டில் படத்திற்கான கதை, உரையாடல் எழுதி இயக்கிய சுமன் குமார் பெரும் பாராட்டுக்குரியவர். பன்முகத்தன்மை படைத்த சுமன் குமாருக்குத் தமிழில் இந்த முதல் முயற்சியே சிறப்பாய் அமைந்துள்ளது. மற்றபடி காட்சி அமைப்பு, ஒளிப்பதிவு அனைத்தும் கிராமியச் சூழலிலும், ஆங்கமைந்த அலுவலகப் பின்னணியிலும் அறுபதுகளின் நெல்லை, தென்காசி, நாகர்கோவிலுக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்கின்றன. பின்னணி இசை பற்றி எழுத, அத்துறையில் அடியேன் ஒரு ஞான சூனியம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மேலும் படத்தில் லயித்துவிட்டால் பின்னணி இசை என்று ஒன்று இருப்பதே தெரியாத பாமரர்களில் ஒருவன் நான். அவ்வப்போது நாடகத் தன்மை, சினிமாத்தனம், காற்றோடு பறக்கும் லாஜிக் இவை இல்லாமல் இல்லை. இந்த அம்சங்கள் நிறைந்த முன்னணி நடிகர்களின் மசாலா படங்களுக்கு நூறு கோடிக்கு மேல் நாம் அள்ளித் தராமல் விடுவதில்லையே ! மேலும் பொய்யுரை, உயர்வு நவிற்சி, இல் பொருள் உவமை அனைத்தும் நிரம்பிய இலக்கிய மரபுகளுக்குச் சொந்தக்காரர்கள்தாமே நாம் ! எனவே சுவை கூட்டுவதாய் இக்குறைகளைப் புறந்தள்ளலாம். கொள்கைப் பரப்புரை எனும் மருந்தில் கலந்த தேனாய்க் கொள்ளலாம். இத்துணை எழுதியாயிற்று. திருவாளர் வெகுசனத்தை இப்படம் எவ்வளவு சென்றடைந்திருக்கும் என்று பார்ப்போமா ? வியாழனன்று (15-08-2024) வெளியான படத்தை நான் திங்கட்கிழமை பார்த்தேன். கூட்டம் சுமாருக்கும் குறைவுதான். சிறிய பட்ஜெட்டில் தயாரித்த படம் என்பதால் விளம்பரம் பெரிதாக இல்லை என்பது முதற் காரணமாக இருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவில் தமிழ்ப் படங்கள் வெளிவராத ஒரு இடைவெளிக் காலத்தை விட்டுவிட்டு தங்கலான், டிமான்டி காலனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுடன் சேர்த்து வெளியிட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம். இன்னும் ஓரிரு நாட்களில் பெரும் வெற்றியடையப் போகும், வெற்றியடைய வேண்டிய மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் திரையரங்குகளை நிறைக்கப் போகும் நேரம். இத்தகைய காலகட்டத்தில் வெளியிட 'ரகு தாத்தா' படக்குழுவினருக்கு என்ன கால நெருக்கடியோ ! ஆனாலும் பெரியாரையும் அண்ணாவையும் முன்னிறுத்திய ஒரு திரைப்படத்தைத் திராவிட இயக்கத்தினரே பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் போனதன் காரணமென்ன ? கொள்கைகளைக் காமெடியுடன் கலந்து விட்டதனாலா ? ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆவணப்படமாக வந்திருந்தால் இரண்டே நாட்களில் அரங்கத்தை விட்டே படம் ஓடி இருக்குமே ! அண்ணாவையும் பெரியாரையும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டு வணிகம் செய்கிறார்கள் என்ற கோபமா ? வணிகம் ஆகவே இருக்கட்டுமே ! அப்படியாவது நம் தலைவர்கள் மேலும் சிலரைச் சென்றடையட்டுமே ! அல்லது இயக்கத்திற்குத் தொடர்பே இல்லாதவர்கள் நம் கொள்கைகளைப் பேசுவதை நாம் வரவேற்பதில்லையா ? அண்ணாவும் பெரியாரும் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உரியவர்களா ? கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே உரியவரா, என்ன ? எது எப்படியோ இப்படத்தைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாமல் விட்டது திராவிட இயக்கத்தினரின் தவறே ! இனி OTT தளத்தில் வெளியாகி படம் பலரைச் சென்றடையும் என்று நம்புவோம். அண்ணாவையும் பெரியாரையும் வாசித்து, கேட்டு வளர்ந்த ஒருவன் அப்படித்தான் ஆசைப்பட முடியும். இது போன்ற படங்கள் தோல்வியுற்றால், சிறிது சிறிதாகத் தமிழ்ச் சமூகம் தோற்றுப் போகுமோ என்று இனம் புரியாத, 'இனம்' புரிந்த பயம் தொற்றிக் கொள்கிறது. https://www.facebook.com/share/p/t54RmctDGCko3Thm/?mibextid=oFDknk3 points
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எனது பார்வையில் பொது வேட்பாளரை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் தரப்புக்களின் அரசியலுமே (புலம்பெயர் அரசியல் செய்வோர் உட்பட) எந்த விதமான வினை திறனும் அற்ற தமிழரை பொறுதவரை பாதகமான திசையிலேயே முட்டாள்தனமாக செலுத்தி செல்லும் மண்குதிரையே எனலாம். விடுதலை புலிகளை பொறுத்தவரை அவர்கள் சுதந்திர தனிநாட்டுக்கான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சர்வதேச அரசியலில் அதன் சாத்திய தன்மை குறித்த சந்தேகங்கள் விவாதங்கள் இருந்த போதும் அதைத் தாண்டி அவர்களது அரசியல் தனி நாட்டை நோக்கியதாகவே இருந்தது. ஆயுத வழியில் தனிநாட்டை அடையலாம் என்ற ஒர்மத்துடன் அதை நோக்கிய பாதையில் போராடினார்கள். ஆகவே சர்வ தேசத்தை புறக்கணித்து தமிழரை மட்டும் மையமாக கொண்ட அவர்களது அரசியலில் நியாயம் இருந்தது. ஆனால் இன்றய நிலையில் தமிழரின் சார்பில் செயற்படும் எந்த தரப்பும் தனி நாட்டிற்காக போராடவில்லை. ஶ்ரீ லங்கா என்ற நாட்டிற்குள் அதன் அரசியலமைப்பை கூட்டாட்சி அரசியலமைப்பாக மாற்றவே போராடுகின்றார்கள். ஆகவே தமிழருக்குள் மட்டும் உசுப்பேற்றும் குண்டு சட்டி அரசியலின் மூலம் ஶ்ரீலங்காவில் அரசியலமைப்பை மாற்ற முடியுமா? அரசியலமைப்பை மாற்றுவதென்றால் நாட்டில் வாழும்அனைத்து இன மக்களிடமும் அரசியல் செய்யாமல் சாத்தியமா? உலகில் எந்த நாட்டிலாவது வரலாற்றில் அப்படி நடந்ததுண்டா? வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி என்றால் ஆக குறைந்தது அந்த இரு மாவட்டங்களிலும் வாழும் ஏனைய இன மக்களின் ஆதரவை பெறாவிட்டால் அதை பற்றி உலக நாடுகளிடம் வலியுறுத்த முடியுமா? தமிழ் மக்களிடம் அரசியல் செய்யும் அதே வேளை அதற்கு இணையாக சிங்கள மக்களிடமும் அரசியல் செய்து சமஸ்டிஅரசியலமைப்பின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கான் ஆதரவு தளத்தை ஏற்படுத்த வில்லை என்றால் இந்த தமிழ் தேசியவாதிகளது கோஷம் வெறும் வெற்றுக் கோஷமாகவே இருக்கும். அவர்களது பொழுது போக்கு மற்றும் பதவிகளை பெறும் சுயநல அரசியலாகவும. வெற்று வீரம் பேசும் புலம்பெயர் தேசியவாதிகளின் பண திருட்டு அரசியலாக மட்டும் அமைந்து அவர்களுக்கு மட்டும் பயன்தரும் அரசியலாக மட்டுமே அமையும் என்பது எனது கருத்து. தமிழ தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொண்டு செயற்படுவோர் மத்தியில் பல சட்டவாளர்கள், அரசியல் விற்பன்னர்கள், பத்தி எழுத்தாளர்கள், புலம் பெயர் இணையத்தள அரசியல் ஆய்வாளரகள், அதி தீவிர தேசியவாதிகள் என்று பலர் இருந்தும் இதை கணக்கில் எடுக்காதது ஏன்? நாம் இந்த உலகில் வாழும் வரை தமிழ் தேசியத்தை பொழுது போக்காக அல்லது வருமானத்தை பெருக்க, நிதி சேகரிக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை உபயோகிப்போம் என்ற அவர்களது எண்ணமே இதற்கு காரணம்.3 points
-
குளியலறையில்
3 points
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
எனக்கு இந்த நாட்டை வித்த மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வரக்குடாது.. இன்னும் ஒருக்கா நான் மணெண்ணைக்கும் பெற்றோலுக்கும் லைன்ல நிக்கேலாது.. ஒரு அப்பிள் ஒரு ஆரேஞ் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி பிள்ளைகளுக்கு கொடுக்கேலாது.. ஒரு றாத்தல் பாணுக்கு மத்தியானமே போய் லைன்ல நிக்கேலாது.. எனக்கு என் வாழ்வாதார பிரச்சினை.. விடிஞ்சா பிள்ளையள் சாப்பிட சாப்பாடு செய்ய சாமான் மலிவா கிடைக்கோணும்.. பாம்பு கீம்பு கடிச்சா இல்லா அவசர அத்தியாவசியத்துக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வாகனத்துக்கு பெற்றோல் இருக்கோணும்.. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஊர் அரசியல் ஃபண் எடுக்கிறதுக்கு கதைக்கிறது.. ஊரில் இருக்கிறவனுக்கு அது பிள்ளைகுட்டியளுக்கு சாப்பாடு போடுற வாழ்வாதார பிரச்சினை.. மீண்டும் நாட்டை வித்த மகிந்தா யுகம் வருவதை ஒரு சாமானிய ஏழையால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.. அந்த வலி ஊரில் பட்டவனுக்கு தெரியும்.. ஒரு மாத கொலிடேயில் ஊருக்கு வந்தவையே லைன்ல பெற்றோலுக்கு நிக்க ஏலாது எண்டு பேஸ்புக்கில பந்தி எழுதினவை.. அதுவே வாழ்வாய்போனவனுக்கு எப்படி இருந்திருக்கும்.. அந்த யுகம் மீண்டும் வர தூனைபோகும் இந்த பொதுவேட்பாளர்கூட்டத்தின் நயவஞ்சகத்தை ஒரு போதும் மன்னிக்க முடியாது.. தங்களையும் தங்கள் குடும்பங்களையும் வெளிநாட்டிலும் கொழும்பில் சிங்களவர்களுடன் சம்பந்தம்வைத்து வசதியாக செட்டில் ஆக்கிவிட்டு ஓய்வுகாலங்களை கழிக்க அரசியலில் ஈடுபட்டு எங்கள் வாழ்வை அழிக்கும் இந்த நயவஞ்சக கூட்டத்தை ஒரு போதும் மன்னிக்கமுடியாது.. இனத்துரோகிகள் இவர்கள்.. தமிழர்களின் வாக்கு ஒரு போதும் தமக்கு கிடையாது என தெரிந்துகொண்ட இன அழிப்பு செய்த மகிந்த கூட்டம் இவர்களுக்கு பெட்டி குடுக்க பெட்டி வாங்கிக்கொண்டு மற்றைய ஆட்சியை பிடிக்ககூடிய கட்சிகளுக்கு விழக்கூடிய வாக்குகளை விழவிடாமல் தடுக்க மீண்டு ஒரு இருண்ட யுகத்துள் இலங்கையை தள்ள சூழ்ச்சி செய்யும் சகுனிகள்தான் இந்த பொதுவேட்பாளர் கூட்டம்..2 points
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்குப் பிடித்த செய்தி இதுதான். 😂 இந்தப் படங்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது. 🤣 பொன்ஸ்சுக்கு.... இந்த இரண்டு கையையும் தூக்குற வியாதி, கனகாலமாக இருக்குது போலை. 😂 🤣2 points
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsசந்திரிகா கொண்டுவந்த தீர்வை 11 வாக்குகளே நிறைவேற்ற தேவையாக இருந்த போது ரணிலும் ஜேவிபியும் கடுமையாக எதிர்த்தார்கள். இதில் ரணில் ஒருபடி மேலே சென்று தீர்வு பொதியை பாராளுமன்றில் வைத்து கொழுத்தியதாக சொல்கிறார்கள்.2 points -
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இங்கே உருட்டிய ஒவ்வொரு உருட்டும் தனித்துவமானது... விலைமதிப்பற்றது 🔥🔥2 points
-
அநியாயம் செய்கிற, கொடூரமாக செயல்படுகின்ற, ஜனாஸாக்களை எரித்த, எதிர்ப்பதற்கு உத்தரவிட்ட கூட்டம் இன்று ரணிலுடன் கை கோர்த்துள்ளது ; ரிஷாட் பதியுதீன் !
போர்க்காலங்களிலும் பேரழிவு காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்களை எந்த சமூகமும் மதம் சார்ந்து அதனை பார்க்ககூடாது ஏனெனில் அது ஒரு அவசரகால நிலை, இந்தகால கட்டங்களில் எத்தனையோ சைவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன, எத்தனையோ கிறிஸ்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன ஆனால் நாம் அதனை தூக்கி பிடித்து சர்ச்சையாக மாற்றியதில்லை, முஸ்லீம்கள் மட்டும் எந்த நெருக்கடியான காலங்களில்லும் தமது மதத்தை மட்டும் தூக்கிபிடித்து கதறுவது எதிலும் மத வியாபாரம் செய்யும் எரிச்சலின் உச்சம். தமிழர் பகுதியில் நின்று எமது சமூகம் எமது சமூகம் என்று தனது சமூகம் நோக்கி வெறிதனமாக கத்துகிறார் மைத்திரியின் ஆட்சியின்போது கிழக்கே ஹிஸ்புல்லா என்பவர் தமிழர்களின் நிலம் அபகரிப்பு, இஸ்லாமிய பல்கலைகழகம், பாடசாலைகள் , பள்ளிவாசல்கள் , கிராமங்கள் ,ஆளுனரிலிருந்து முதல்வர்வரை முஸ்லீம்கள் என்று என்று அதிவேகமாக தமிழர் நில அபகரிப்பில் ஈடுபட வடக்கே ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை ஏறக்குறைய முழுமையாக அபகரித்து,வவுனியா பகுதிகளில் தமது சமூகத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்து, அடுத்தகட்டமாக முல்லைதீவில் காடுகளை அழித்து முஸ்லீம் பரவலாக்கலுக்கு எத்தனங்கள் செய்து அப்படியே முஸ்லிம்கள் பெருமளவில் இல்லாத கிளிநொச்சியில் ஏற்கனவே ஐந்து பள்ளிவாசல்களிருக்க புதிதாக பள்ளிவாசலை மறைமுகமாக இவரே பின்னணியின் நின்று நகர பகுதியில் நிறுவியும்,பிறவற்றை புனரமைத்தும் என்று படிப்படியாக யாழ்ப்பாணம் நோக்கி நகரும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போதுதான் ஈஸ்டர் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டு முஸ்லீம்களுக்கான ஆதரவு சிங்களவர்களிடையே முற்றாக சரிந்தது அவர்கள் கபளீகரமும் நின்று போனது. கெடுதல்களிலும் சில நன்மைகள் முளைக்கத்தான் செய்கின்றன.2 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
நான் ஐந்து சதமேனும் கொடுக்கவில்லை. மற்றவர்கள் போல் நான் கொடுத்து இருந்தாலும், புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதால் வழக்கு போட்டு நானும் உள்ளே போக தயாராக இருக்க மாட்டேன். இங்கு கொடுத்த பலருக்கு என் மைத்துனன் உட்பட, கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. சட்ட ரீதியிலான, செல்லுபடக் கூடிய ஆவணம் ஏதும் இல்லை. இயக்கத்தின் மீது, தலைவரின் மீது நம்பிக்கை வைத்து (கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கூட) கொடுத்தவர்கள் இவர்கள். இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே. ஏனெனில் இப்படி பதுக்கியவர்களை பாதுகாப்பது போன்று அவர்களுக்கு சார்பாக நியாயம் பிளப்பதால்.2 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம். எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!2 points
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.2 points
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
தற்போதுள்ள நிலையில் தேசத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல வேலை, இந்த திருடர்களை இனங்காட்டுவதுதான். பூனைக்கு மணி கட்டுவது யார்?2 points
-
கல்கத்தா பிசாசுகள்
1 pointhttps://timesofindia.indiatimes.com/videos/toi-original/kolkata-doctors-last-words-before-horrific-rape-murder-revealed-i-want-to-be-watch/videoshow/112552183.cms?fbclid=IwY2xjawEv0CZleHRuA2FlbQIxMAABHbKHKGXNSWu7n7YWPY1GNOELchx1Bs1iz558QA-bMuJm0VQbs4taiGEesw_aem_lcxvXznR72fMYKeYy-gYXw கிழித்தெறியப்படும் கவிதைகள் இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம் புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட நெறி தவறாமல் நாம் எம் கவிதைகள் படித்தோம் காலம் உருண்டோடி இச்சைக் கருவிக்குச் சண்டை போட்டபோது கசக்கி எறியப்பட்டன பல கவிதைத் தாள்கள் சாத்தான்களின் இவ்வுலகில் இங்கு யார்மீதும் புகார்களுக்கு இடமில்லை ஆதலால் எங்கள் கவிதைத் தாள்களை அடிக்கடி இங்கே பேய்கள் கூடிக் கிழித்தெறிகின்றன அந்தர வெளியில் மிதந்து காட்சிகள் மட்டுமே வாழ்வென நம்பும் தலைகீழ் பட்சிகளாய் எக்கணமும் அவிழ்க்கத் துடிக்கும் வன்மத்துடன் ஒவ்வொரு தெருவின் ஓரத்தையும் முகர்ந்து பார்த்தபடி நகரும் நிர்வாண நாய்கள் களியாட்டச் சுகம் தேடும் வேட்கையில் புணர்வதை மட்டுமே குறியாகக் கொண்டு குறிகள் நிமிர்த்தி நகக் குறிகள் பதித்து குரல்வளை நசுக்கும் கொடூர ஓநாய்கள் இரண்டகப் பிண்டங்கள் உலவும் பெருநகரில் கவிதைகள் பற்றிய தேடலில் பிசாசுகள் பேதங்கள் பார்ப்பதில்லை பிண்டம் ஒன்றே குறியெனக் கொண்டு எங்கள் கவிதைகளை அவை எப்போது வேண்டுமானாலும் நொடிப் பொழுதில் கிழித்தெறிகின்றன. தியா - காண்டீபன் #நீ_கொன்ற_எதிரி_நான்தான்_தோழா1 point
-
மனோரதங்கள் (Manorathangal) - ரம்மியான, மென்மையான உணர்வுகளின் குவியல்
மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள மண்ணின் அழகும் சேர்ந்து தரும் உணர்வுப் பகிர்தல் அருமை. ------ மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், பிஜு மேனன், நெடுமுடி வேணு போன்ற, முக்கிய நடிகர்கள் தம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகளில், எந்த கதாநாயக பிம்பங்கள் இல்லாமல் நடிப்பது எல்லாம் மலையாள சமூகத்தில் மாத்திரமே சாத்தியம் என நம்புகின்றேன். இவர்களுடன் கமலஹாசனும் இணைந்து பங்களித்துள்ளார். அனேகமான கதைகளை இயக்கி இருப்பவர் இயக்குனர் பிரியதர்ஷன் --- மிக யதார்த்தமான கதைகளையும், அனுபவங்களையும் விரும்புகின்றவர்கள் மாத்திரம் பார்க்கலாம். IPTV யில் தமிழ் web series பகுதியில் உள்ளது. Zee5 உள்ளவர்களாலும் பார்க்க முடியும்1 point
-
நாட்டுக்கோழியை விட 'கடக்நாத்' கோழியில் அதிக ஊட்டச்சத்து உள்ளதா? கருமை நிறம் எப்படி வந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடக்நாத் கோழி அல்லது கருங்கோழி என அறியப்படும் ஒரு வகை நாட்டுக்கோழி வகை பற்றிக் கடந்த சில ஆண்டுகளில் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது போன்ற கருத்துகளையும் சமூக ஊடகங்களில் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட இந்தக் கோழி இனம், இப்போது இந்தியா முழுக்கப் பரவலாக காணப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா என்ற பகுதியில் கிடைக்கும் கருங்கோழி இறைச்சிக்குக் கடந்த 2012ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது. கருங்கோழி என்ற பெயர் வருவதற்கு முக்கியக் காரணமே அதன் கருமை நிறம்தான். கருமை என்றால் அதன் இறகுகளோ, கொண்டையோ மட்டுமல்ல. கோழியின் மொத்த உடலுமே கருப்புதான் என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் ப.குமரவேல். முட்டைகளை அடைகாக்க முடியாத கருங்கோழிகள் கருங்கோழி என்று தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் கடக்நாத் கோழியின் “இறகுகள் மட்டுமின்றி, அதன் கொண்டை, கண்கள் முதல் அதன் மற்ற உறுப்புகள் வரை அனைத்துமே கருமை நிறத்தில்தான் இருக்கும். அவ்வளவு ஏன், அதன் ரத்தம் கூட கருஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். மற்ற நாட்டுக்கோழிகளின் எலும்பு மஞ்சள் நிறத்திலானது என்றால், இவற்றின் எலும்புகள் கருமஞ்சள் நிறத்தில் இருக்கும்,” என்று விவரிக்கிறார் முனைவர் குமரவேல். பெருவாரியான நாட்டுக்கோழி வகைகளைப் போல் இந்தக் கோழி இனத்தில் இருக்கும் கோழிகள் அனைத்துமே அடைகாக்கும் பழக்கம் கொண்டவை கிடையாது என்கிறார் முனைவர் குமரவேல். அவரது கூற்றுப்படி, நாட்டுக் கோழிகள் அனைத்துமே முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், “இந்தக் கோழிகளைப் பொருத்தவரை. மற்ற நாட்டுக் கோழிகளைப் போல் முட்டையிட்ட பிறகு எல்லா சூழ்நிலைகளிலும் முட்டை மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. அவற்றுக்காகவே அடைகாக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருங்கோழிகள் முட்டையிட்ட பிறகு அவற்றை அடைகாப்பதில் சில சிக்கல்களைச் சந்திக்கின்றன. கடந்த 23 ஆண்டுகளாகக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ்செல்வன் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறார். ஓர் ஆண்டுக்கு 180 முட்டைகள் வரை கருங்கோழிகள் இட்டாலும்கூட மற்ற கோழி வகைகளுடன் ஒப்பிடுகையில் அடை காப்பது என்பது சற்றுக் குறைவுதான் என்கிறார் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன். ஆகையால், “சில நேரங்களில் அவற்றின் முட்டைகளை அடைகாக்க மற்ற நாட்டுக் கோழிகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அல்லது அதற்காக இன்குபேட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர். இன்குபேட்டர் இயந்திரம், தாய்க்கோழி அடை காக்கும்போது இருக்கும் சூழலை முட்டைக்கு வழங்கி குஞ்சு பொறிக்க வைக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். இந்தச் செயல்முறையில் தாய்க்கோழி தொடர்ச்சியாக முட்டையை சுமார் 36% செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பது போலவே இயந்திரமும் முட்டையை வைத்திருந்து குஞ்சு பொறிக்க வைக்கும். கடக்நாத் கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா? பட மூலாதாரம்,TAMIL SELVAN படக்குறிப்பு, கடக்நாத் கோழிகளிடம் அடைகாக்கும் தன்மை குறைவு என்கிறார் தமிழ் செல்வன் “இந்தக் கோழி இந்திய நாட்டுக்கோழி இனங்களில் ஒன்று. இவற்றுக்கான வளர்ப்பு முறையைப் பொறுத்தவரை, பண்ணை முறையைவிட மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது அதிக நோய் எதிர்ப்புத் திறனுடன் வளர்கின்றன, நல்ல லாபம் கிடைக்கும். அதன்படி பார்த்தால், பொதுவாக 1000 கோழிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் கண்டிப்பாக வேண்டும். அதில் அவற்றை இயற்கையான மேய்ச்சலில் விட்டு வளர்க்கும் போதுதான் ஆரோக்கியமானவையாக வளரும்,” என்கிறார் விவசாயி தமிழ்செல்வன். கருக்கோழிகளைப் பொறுத்தவரை, “முட்டையிடும் பருவத்தை அடைய 23 முதல் 28 வாரங்கள் வரை ஆகும். அவற்றை ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்குக் கொண்டு செல்லலாம்,” என்கிறார் அவர். கடக்நாத் கோழி - பிராய்லர் இரண்டில் எதில் ஊட்டச்சத்து அதிகம்? கடக்நாத் இறைச்சியின் ஊட்டச்சத்து குறித்து தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு, அவற்றில் கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாகவும் இருப்பதாகக் கூறுகிறது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் தரவுகள்படி, கடக்நாத் எனப்படும் கருங்கோழியில் 1.94% முதல் 2.6% வரை கொழுப்பு இருக்கும். ஆனால், பிராய்லர் கோழியில் 13 முதல் 25 சதவீதம் வரை கொழுப்பு இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாட்டுக்கோழிகள் இயற்கையான சூழலில் வளர்வதால் அவை மருத்துவ குணம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. கடக்நாத் கோழிகளின் கருமை நிறத்திற்குக் காரணமாக முனைவர் குமரவேல் கூறுவது அவற்றில் இருக்கும் அதீத அளவிலான நிறமிகள்தான். பொதுவாக உடலில் கருமை நிறத்திற்குக் காரணமாக இருப்பது மெலனின்(Melanin) எனப்படும் நிறமி. "இந்த நிறமி கருங்கோழியின் உடலில் அதிகளவில் இருப்பதே அவற்றின் உடலின் மேல்புறத்தில் இருந்து ரத்தம் மற்றும் எலும்பு வரைக்கும் கருமையாக இருப்பதற்குக் காரணம்,” என்கிறார் அவர். ஆனால், அவற்றின் உடலில் மற்ற கோழிகளைவிட அதிக நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதற்கு அதீத மெலனின் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், அது இன்னும் ஆதாரப்பூர்வமாக முழுதாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார். அதேபோல், இந்தக் கோழிகளைச் சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்ற கூற்றுக்கும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்கிறார் அவர். ‘காலநிலை மாற்றங்களைச் சமாளிக்கும்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருங்கோழிகள் எந்தவித தட்பவெப்ப நிலையிலும் வாழக்கூடியவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் கோழிக்காக வழங்கப்பட்ட புவிசார் குறியீடு தொடர்பான தரவுகள் இவை எந்தவித தீவிர காலநிலைகளிலும் உயிர் வாழக் கூடியவை என்று கூறுகின்றன. அதில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த உயிரினம் தீவிர தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. அதீத வெப்பம், அதீத குளிர் போன்ற சூழ்நிலைகளிலும் அதிக அழுத்தங்களுக்கு உட்படாமல் இவை வாழப் பழகிக்கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, “சுற்றுப்புறம், சுகாதாரம், ஊட்டச்சத்துகளுக்கான கூடுதல் உணவுகள் போன்ற குறைந்தபட்ச நிர்வாகத் தேவைகள் இல்லாதபோதும்கூட இவை செழித்து வளர்வதாக” புவிசார் குறியீடு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், கருங்கோழிகள் மத்தியில் வளர்ச்சி வேகம் மெதுவாக இருப்பதோடு, இவற்றின் உடல் அளவு சிறிதாகவும் பாலியல் முதிர்ச்சி தாமதமாகவும் இருப்பதாக புவிசார் குறியீடு ஆவணம் கூறுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ-வின் கிளை அமைப்பான, டி.ஐ.ஹெச்.எ.ஆர் (DIHAR), கடந்த 2022ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில், கருங்கோழியில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்கள் அதிகம் என்று கூறுகிறது. 'தி கோட்' விஜய் போல படங்களில் நடிகர்களை டீ-ஏஜிங் மூலம் இளமையாக காட்டுவது எப்படி?20 ஆகஸ்ட் 2024 கோலார் தங்க வயலில் தங்கம் எடுத்த தொழிலாளர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு20 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடக்நாத் கோழி அல்லது கருங்கோழி எனப்படும் இவற்றின் இறகுகள், இறைச்சி ஆகியவை கருமை நிறத்தில் இருக்கும். மேலும், “இதை அதிக உயரத்திலுள்ள நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான மிகச் சிறந்த உணவு எனவும், அதன் இறைச்சியின் கடினத்தன்மை, நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து நன்மைகள், லடாக் போன்ற கடுமையான காலநிலைகளைக் கொண்ட நிலப்பகுதிகளில் வளர்ப்பதற்குக்கூட பரிந்துரைக்கப்படுகிறது” என்று அந்த ஆய்வு கூறுகிறது. லடாக் போன்ற மலைப்பாங்கான உயர்ந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் கருங்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம், கருங்கோழிகள் எந்தவித தட்பவெப்ப நிலையிலும் வாழக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கருங்கோழிகள் காட்டில் வாழ்ந்தவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக, இந்தக் கோழிகள் காட்டில் வாழ்ந்ததாகவும் அவை கடந்த நூற்றாண்டில்தான் வளர்ப்புக் கோழியாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நிரூபிக்கப்பட்ட கூற்று இல்லையென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, காட்டுக் கோழியாக இருந்த கருங்கோழிகள் முதலில் மத்திய பிரதேச பழங்குடி மக்களால் உணவுக்காகப் பிடிக்கப்பட்டதாகவும் பின்னர் இதன் நன்மைகளை உணர்ந்து, அது வளர்ப்புக் கோழியாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படும் கூற்று ஏற்புடையதாக இல்லை என்று காட்டுயிர் மற்றும் கால்நடை வல்லுநர்கள் சிலரிடம் பேசியபோது தெரிவித்தனர். கடைசியாக மனிதர்கள் மத்தியில் வளர்ப்பு உயிரினமாக மாற்றப்பட்டது பறவைகள்தான் என்றாலும், அதுவும் சுமார் 2,000-2,500 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். “இந்தியாவில் உள்ள நாட்டுக் கோழி இனங்கள் அனைத்துக்குமே மூலமாகக் கருதப்படுவது, தற்போது காடுகளில் காணப்படும் சிவப்புக் காட்டுக்கோழி (Red Jungle Fowl) என்ற காட்டுக்கோழி இனம்தான். இருப்பினும், அவற்றில் இருந்து தற்போது வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் பிரிந்து வந்து பல்லாண்டு காலம் ஆகிவிட்டது,” என்கிறார் முனைவர்.குமரவேல். அவரது கூற்றுப்படி, கடக்நாத் மட்டுமில்லை, மொட்டைக் கழுத்துக் கோழி, அசில் கோழி (சண்டைக் கோழி) என்று அனைத்து வகையான நாட்டுக் கோழிகளுமே இந்த சிவப்புக் காட்டுக் கோழியில் இருந்து பிரிந்து வந்தவைதான். https://www.bbc.com/tamil/articles/c62r824den8o1 point
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."1 point
-
குளியலறையில்
1 pointநன்றி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் Suvy..... கவர்ச்சியாக இருக்குதோ அதே...... ஜெ யின் ஒவியத்தை பார்த்து படித்த கதைகள் பல....ஒவியங்கள் இன்னும் நினைவில் உண்டு ஆனால் கதை மறந்து போய்விட்டது.....1 point
-
குளியலறையில்
1 pointபுத்தன் ஒரு அழியாத கோலம். புத்தன் செய்யாத லீலகள் இல்லை. புத்தன் அக்கா,ஆண்டி என்கிறார் புத்தன்புத்தக பரிமாற்றம் செய்திருக்கிறார் புத்தன் ஒரு பேய்காய். விடலைப்பருவம் பின்னியெடுக்குது.1 point
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
1 pointமிக்க நன்றி உங்களின் உள்ளபடியான விமர்சனத்திற்கு. இன்னும் பார்க்கவில்லை, இந்த வாரம் பார்த்து விடுவேன்......... பட வெளியீட்டின் பின் கீர்த்தி சுரேஷ் ஒரு விழாவில் பேசியிருந்ததைப் பார்த்தேன். இந்திக்கு எதிராக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து விட்டு, இந்தியிலும் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இது ஒரு முரண் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் என்று அவர் அந்த விழாவில் பேசியிருந்தார். இந்தித் திணிப்புக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு, இந்தி மொழிக்கு அல்ல என்று அதற்கொரு பதிலையும் அவரே சொல்லியிருந்தார்.1 point
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
1 pointவிமர்சனத்துக்கு நன்றி ஐயா. பார்க்கலாம் படம் எப்படி என்று. நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. மக்களே விளம்பரப்படுத்துவார்கள்.1 point
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தியதை முழுமையாக எதிர்க்கின்றேன். இதன் காரணங்கள், பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள் அதற்கு சொல்லும் காரணங்கள் அனைத்தும், மக்களை முழு முட்டாள்களாக நினைத்துச் சொல்லும் காரணங்கள் என்பதால். அதில் முக்கியமானவை "நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை" சொல்லப் போகின்றோம் என்பதும். "தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டப் போகின்றோம்" என்பதும் தான். நடைமுறையில் நகைப்புக்கிடமான, நடைமுறையில் பலனளிக்காத ஒன்றிற்காக வளங்களைப் பயன்படுத்தி மக்களை அணி திரட்டுவது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதால் இதனை எதிர்க்கின்றேன். ஆனால் நீங்கள் அவர்கள் மகிந்தவிடம் பெட்டி வாங்கிவிட்டு இதனைச் செய்கின்றனர் என்பதை முற்றாக ஏற்க மறுக்கின்றேன். இது எந்தவிதமான ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு இது. சுரேஸ் பிரேதசந்திரன், விக்கி போன்றோர் தம் இருப்பை அரசியலில் பேணுவதற்காக, சோதி மாஸ்ரர் , நிலாந்தன் போன்றவர்களின், மக்களின் மன நிலையை, தற்போதைய தேவைகளை அறிய விரும்பாத, அரசியல் சூனிய அறிவை நம்பி வகுத்த திட்டம் என்பதுக்கு அப்பால், இதில் பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாக நாம் நம்பத் தயாரில்லை. இது தொடர்பாக உங்களிடம் ஆதாரம் ஏதும் இருப்பின் எம்மிடம் பகிரலாம்.1 point
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அப்போ நீங்கள் ஊரை விட்டு ரொம்ப தூரமா அந்த காலத்தில் நிக்கிறீங்கள் என்று அர்த்தம்.. இதெல்லாம் தலைவர்கள் சொல்லமாட்டார்கள்.. ஏனெனில் அரசுடன் டீம் என்று துரோகிப்பட்டம் வந்திடும்.. ஊருக்குள் ஆள் சேர்க்க வரும் அல்லக்கைகள்தான் சொல்லுவார்கள்.. அவர்களை வச்சு சொல்லவைப்பார்கள்.. அண்மையில் என் ஒன்றுவிட்ட சகோதரம் சுமந்திரனின் வலதுகை ஒருவரைப்பிடித்து மக்கள் வங்கியில் வேலை கிடைச்சிட்டு.. இப்போ எல்லாம் தூய கதை எல்லாம் எடுபடாது ஊரில்.. அது முடிஞ்சு போச்சு.. அதையும் பேசி அத்துடன் வாழ்வாதாரத்துக்கும் ஏதும் செய்தால்தான் ஓட்டு.. அதை மட்டும் பேசிட்டு திரிஞ்சா வக்கில் எடுக்கா சைக்கிள் ஓடின கதையாப்போம் அரசியல் வாழ்க்கை.. 80களில் ஊரை விட்டு வரும்பொழுது உங்கள் நினைவுகளில் தங்கிவிட்ட ஊர் அல்ல இப்போ..1 point
-
குளியலறையில்
1 point
-
இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு!
இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு! தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி கெட்ட மனிதரெல்லாம் மற்றும் டக் டிக் டோஸ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த குழுவிடம் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க்கான நிதியினை மக்களிடமிருந்தே சேகரித்துள்ளனர். "குமரி கண்ட குமரன்" என்ற பாடல், தமிழரின் தொன்மையான நிலமையான குமரி கண்டம் நிலவிய காலத்திற்குத் திரும்பி, அவ்வழியிலே பயணிக்கச் செய்கிறது. சமுத்திரத்தில் மறைந்ததாகக் கூறப்படும் குமரி கண்டத்தின் கதை, மற்றும் அதில் வாழ்ந்த தமிழர்களின் போராட்டம், தைரியம் மற்றும் முருகன் எனும் தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை ஆகியவை பாடலில் புலப்படுகின்றன . இந்த பாடலின் வரிகள், குமரனின் கதையை, தமிழர் மக்களின் போராட்டம், தைரியம், மற்றும் அவர்களின் புனித ஆற்றலின் அடையாளமாக விளங்கும் முருகனைச் சித்தரிக்கின்றன. அவற்றை கமல் அபரன் மற்றும் சாந்தகுமார் எழுதியுள்ளனர். பூவன் மதீசனின் கருவில் அவரே இசையமைத்துள்ள இந்த பாடல், கோகுலன் சாந்தன் சத்தியன் உள்ளிட்ட பல்வேறு குரல் கலைஞர்கள் இணைந்து பாடியதன் மூலம், ஈழத்தின் இசை வடிவத்தை பிரதிபலிக்கின்றது. இசையின் மேலதிக நுட்பங்களையும் ஒளிச்சமபடுத்தல்களையும் இசை மேம்படுத்தல்களையும் சாயீதர்ஷன் மேற்கொண்டுள்ளார். ராஜ் சிவராஜ் இயக்கிய இந்த வீடியோ, தமிழர் கலாச்சாரத்தின் அழகும் ஆழமும் கொண்ட காட்சிப் பொழிவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏ கே கமல் அவர்களின் ஒளிப்பதிவு, அருணின் படத்தொகுப்பு மற்றும் குணரத்தினம் வாசிகரன், தாரு மற்றும் சத்யஜித் ஆகியோரின் ஒத்துழைப்புடன், குமரனின் கதையை உயிரோட்டமாக்குகின்றது. வி.எஸ். சிந்துவின் கலை இயக்கமும், முகமது நவீத் ஒழுங்கமைத்த நடனமும், தமிழர் மரபுகளையும், நம் மண்ணுக்கான காலமற்ற இணைப்பையும் பிரமிக்க வைக்கின்றன. முருகனாக வரும் தர்மலிங்கமும் தனது பங்கை செவ்வனே செய்திருக்கின்றார். "குமரி கண்ட குமரன்" தமிழர் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய காணொலி ஆகும். இது நம் எதிர்காலத்தையும் புத்துணர்வுடன் நினைவூட்டுகிறது, நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும், நம்பிக்கையையும், சமூக ஒற்றுமையையும், கலைகளையும் கொண்டாடும் பேராண்மையை மெய்ப்பிக்கிறது. மக்களுக்காக போராடிய தலைவர்கள் தெய்வமாக்கப்பட வேண்டியவர்கள் எனும் தொனிப்பொருளை இது விட்டுச்செல்வதாகவும் இருக்கிறது. (ப) #Eelam #srilanka #jaffna #uthayan #digital #newuthayan #sanjeevi #newupdet இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஈழத்து வெளியீடு! (newuthayan.com)1 point
-
குளியலறையில்
1 point
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
🤣........ ஐந்து பேர்கள் மட்டுமே அவரின் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தாலும், ஃபீல்ட் மார்ஷல் சரத் உறுதிமொழி கொடுத்திருக்கின்றார். இலங்கையின் முன்னேற்றதிற்கு ஊழலே பெரும் தடையாக இருப்பதாகவும், அதனை அவர் அழித்தொழிக்கப் போவதாகவும் வாக்குக் கொடுத்து வாக்கு கேட்டிருக்கின்றார்............1 point
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
தாவூத் இப்ராகிமே பாலிவுட் சினிமாவை கட்டுப்படுத்துகின்றார் என்ற செய்தி பல வருடங்களின் முன்னர் வந்திருந்தது. பல படங்களுக்கு அவரே அன்று மறைமுகமாக கடன் கொடுத்திருந்தார். முழு பாலிவுட்டும் அவரின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகச் சொன்னார்கள். தமிழிலும் அன்புச்செழியன் (கோபுரம் ஃபிலிம்ஸ்) படத் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கி, அதன் வழியே எப்படி கட்டுப்படுத்தினார் என்று ஒரு தற்கொலையின் பின்னர் பெரிதாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் அன்புச்செழியன் ஓடி ஒளிந்தார். ஆனாலும் அவர் திரும்பவும் வந்துவிட்டார். இது ஒரு சின்ன உதாரணமே, இவரைப் போன்று பலர் தமிழ் சினிமாத் துறையில் இருக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் ஐந்து குடும்பங்களே மொத்தத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒரு செய்தி வந்திருந்தது. கன்னட சினிமாவை சுத்தமாக கவனிக்காதபடியால், அவர்களின் செய்தி எதுவும் இல்லை. ஆனாலும் அங்கேயும் புதிதாக எதுவும் இருக்கப் போவதில்லை. ஒரு சிறு கூட்டம், அதன் ஆட்டம் என்றே எல்லா இடங்களிலும். ஹாலிவுட்டில் கூட...........1 point
-
குளியலறையில்
1 pointபுத்தன் ஏமாந்தது காணாது என்று… “குளியலறையில்” என்ற தலைப்பை போட்டு எங்களையும் ஏமாற்றி விட்டார். 😂 🤣1 point
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இறுதிக்கட்ட போரின்போது சேர்க்கப்பட்ட பணம் வன்னிக்கு போகவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போ, சேர்க்கப்பட்ட அவ்வளவு பணமும் சர்வதேச பொறுப்பாளருக்கு தெரியாமல் எங்கே போனது? கொடுத்தவர்களிடமாவது கேட்டீர்களா யாரிடம் கொடுத்தீர்கள் என்று?1 point
-
குளியலறையில்
1 pointஇன்று யூ டியுப் தலையங்கங்களும் தங்களது வருமானத்திற்காக தலையங்களை கவர்ச்சியாக போடுகின்றனர் ... அட்ரா சக்கை..இப்படியொரு வசனத்தைதான் தேடிக்கொண்டிருந்தனான்..1 point
-
ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா!
ம் வேறை. அரசியல் புலியாக இருக்குறீர்கள். அவர் நாட்டை கட்டி எழுப்பியது போல் யாரும் பங்களாதேசை கட்டி எழுப்பவில்லை.சிறிலங்காவுக்கு கடல் வழங்கியதாவது நினைவில் உள்ளதா?1 point
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
பீல்ட் மார்சலின் பீல்ட் வெட்டையாக உள்ளதே. மோட்டார் சைக்கிளில் செல்பவர் ஒரு மரியாதைக்குதானும் மேடைப்பக்கம் திரும்பி பார்க்க இல்லையோ. 😁1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபஞ்சாப்பிற்கான தீர்வினை ஜெயாருக்குப் பரிந்துரைத்த ரஜீவும், ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயாரும் புரட்டாதி 19 ஆம் திகதி தன்னைச் சந்தித்த போராளித் தலைவர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரொமேஷ் பண்டாரி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கும் மூன்று மாதகால யுத்த நிறுத்த நீட்டிப்புக் குறித்து போராளிகள் வரவேற்று செய்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த போராளிகள், இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினை ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை என்று கூறினர். இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களின் பட்டியலை பண்டாரியிடம் காட்டிய அவர்கள், யுத்த நிறுத்தத்தைக் கவசமாகப் பாவித்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களிலிருந்து அவர்களை இராணுவம் விரட்டி வருவதாகக் கூறினர். இந்தியாவையும், சர்வதேசத்தினையும் இருட்டில் வைத்திருக்கவே யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசு பாவிக்கின்றது என்று விளக்கிய போராளிகள் யுத்த நிறுத்தம் உண்மையிலேயே நீடிக்கப்பட வேண்டுமானால் அதனைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகளும் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினர். போராளிகளின் கோரிக்கையினை பண்டாரி உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். போராளிகளால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த கண்காணிப்புப் பொறிமுறை குறித்து பண்டாரி தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். இதுகுறித்து அவர் லலித் அதுலத் முதலியுடன் பேசும்போது, அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். "அது ஒரு நல்ல யோசனைதான். ஆனாலும், இதுகுறித்து நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து மீண்டும் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்" என்று அவர் பண்டாரியிடம் கூறினார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறித்த போராளிகளின் யோசனையினை ஜெயாருடன் கலந்தாலோசித்த லலித், தமது அரசாங்கம் கண்காணிப்புக் குழுவினை அமைக்க சம்மதிப்பதாகத் தெரிவித்தார். இக்குழு எப்படி இயங்கவேண்டும் என்பது குறித்த விடயங்களை புரட்டாதி 20 ஆம் திகதி போராளிகளுடனான தனது சந்திப்பில் பண்டாரி பகிர்ந்துகொண்டார். நடந்துவரும் விடயங்கள் ரஜீவ் காந்திக்குத் திருப்தியை அளித்திருந்தது. போராளிகளுடனான அவரது 90 நிமிட சந்திப்பில் ரஜீவ் இந்த ஏற்பாடுகள் குறித்து அழுத்தம் கொடுத்துப் பேசினார். 23 ஆம் திகதி நடந்த இந்தச் சந்திப்பில் பேசிய ரஜீவ், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு எனும் யோசனை பேச்சுக்களில் ஏற்பட்டிருக்கும் பெரிய முன்னேற்றகரமான நிகழ்வு என்று கூறினார். ஆனால், பிரபாகரன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறித்த தனது அச்சங்களை ரஜீவிடம் வெளிப்படையாகவே கூறினார். "யுத்த நிறுத்தக் குழுவை இலங்கையரசு நேர்மையாக அமைக்குமா என்பது கேள்விக்குறிதான்" என்று அவர் கூறினார். உடனடியாக இடைமறித்த ரஜீவ், "எப்போதும் பழைய அனுபவங்களையே மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்துங்கள்" என்று பிரபாகரனிடம் கூறினார். "நாம் இதனை சரியாகச் செய்யலாம்" என்று ரஜீவ் கூறவும், "பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று பிரபாகரன் பதிலளித்தார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை அமைப்பது தொடர்பான பேரம்பேசலில் பண்டாரி ஈடுபடத் தொடங்கினார். போராளிகளின் தலைவர்கள் இரு அடிப்படை கோரிக்கைகளை இதன்போது முன்வைத்தார்கள். முதலாவது, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சிறைச்சாலைகளையும், தடுப்பு முகாம்களையும் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி. இரண்டாவது, யுத்த நிறுத்த மீறல்களை விசாரிப்பதற்கும் அவற்றினை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குமான அதிகாரத்தை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கொண்டிருத்தல். போராளிகளின் இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள லலித் அதுலத் முதலி மறுத்தார். ஆனால் தமது கோரிக்கையில் போராளிகள் தீவிரமாக இருந்தனர். மேலும், அதிகாரம் இல்லாத யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக பண்டாரியிடம் அவர்கள் கூறிவிட்டனர். ஆணைக்குழுக்களையும், விசாரணைக் கமிஷன்களையும் மக்களை ஏமாற்ற சிங்கள அரசியல்வாதிகள் காலம் காலமாக பாவித்துவரும் ஒரு யுக்தி என்றும் அவர்கள் பண்டாரியிடம் கூறினர். சுமார் ஒருவார கால இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் இலங்கையரசாங்கமும், போராளிகளும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு இணங்கினர். அரச தரப்பைச் சேர்ந்த மூவரும், போராளிகளால் தெரிவுசெய்யப்பட்ட இருவருமாக ஐந்து உறுப்பினர்களை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு கொண்டிருந்தது. மேலும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் தேவையேற்படின் மேலதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளலாம் என்கிற சரத்தையும் லலித் அதுலத் முதலி சேர்த்துக்கொண்டார். இவ்வாறு மேலதிக உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்படுமிடத்து போராளிகளால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் இருந்தும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அச்சரத்துக் கூறியது. ஆனால் இச்சரத்து எதற்காக அவசர அவசரமாக லலித்தினால் சேர்க்கப்பட்டது என்பதற்கான உண்மைக் காரணத்தை போராளிகளாலோ அல்லது பண்டாரியாலோ அந்த நேரத்தில் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அரசு மூன்று உறுப்பினர்களை கண்காணிப்புக் குழுவிற்கு தன் சார்பில் நியமித்தது. அவர்களின் பிரபல நிர்வாகி பீலிக்ஸ் டயஸ் அபெயசிங்கவும் ஒருவர். இவரே ஆணைக்குழுவின் தலைவராகவும் அமர்த்தப்பட்டார். போராளிகள் தமது சார்பில் வடக்குக் கிழக்கு பிரஜைகள் குழுவின் இணைப்பதிகாரியும் தலைவருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கந்தரட்ணம் சிவபாலன் ஆகியோரை நியமித்தனர். பேராசிரியர் சிவத்தம்பி - 2004 பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜீவ் காந்தி, இலங்கையில் நடந்துவரும் பிரச்சினைக்கான தீர்வில் மிகமுக்கியமான செயற்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கத்தைக் குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப் பிரச்சினையில் தனது அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி ஜெயவர்த்தனவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் ரஜீவ் காந்தியின் அறிவுருத்தும் வகையிலான கருத்துக்களை ஜெயார் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இலங்கைப் பிரச்சினையினை சீக்கியப் பிரச்சினையுடன் ஒப்பிடுவதையும் அவர் விரும்பவில்லை. ஏனென்றால், இந்தியாவின் ஒரு பகுதியாகவிருந்தபோதிலும் பஞ்சாப் மாநிலம் பெரும்பாலான சுயாட்சி அதிகாரங்களை அனுபவித்தே வந்தது. மேலும் பஞ்சாப் மாநிலத்திற்கென்று தனியான சட்டசபையும் இயங்கிவந்தது. ஆரம்பத்தில் தமக்கென்று விசேட அதிகாரங்கள் வேண்டும் என்று கோரிவந்த சீக்கியர்கள் காலப்போக்கில் சிக்கியர்களுக்கான தனிநாடான காலிஸ்த்தானைக் கோரிப் போராடத் தொடங்கியிருந்தனர். சீக்கியர்களின் பிரதான கட்சியான அகாலி தள் உடன் பேச்சுக்களில் ரஜீவ் இறங்கியிருந்தபோது, சீக்கியர்கள் தமக்கென்று தனியான தலைநகர் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். சீக்கியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் தனியான தலைநகர் உட்பட பல கோரிக்கைகளை ரஜீவ் ஏற்றுக்கொண்டிருந்தார். கந்தரட்ணம் சிவபாலன் - 2003, இரண்டாமவர், இடமிருந்து வலமாக அகாலி தள் கட்சியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை சீக்கியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த ரஜீவ் உத்தரவிட்டார். ரஜீவ் காந்தியுடன் தமிழ்ப் போராளிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இரு நாட்களின் பின்னர் பஞ்சாப்பில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரஜீவின் கட்சியான காங்கிரஸும் போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற அகாலி தள், மாநிலத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்துக்கொண்டது. இத்தேர்தலில் அகாலி தள் அடைந்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென்று ரஜீவ் காந்தி பறைசாற்றியிருந்தார். அகாலி தள் தலைவர்களுடன் ரஜீவ் காந்தி ஆனால் இலங்கையிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த அரசுகள் தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 வரையான 20 வருட காலத்தில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் தமிழ் மக்களால் சுயாட்சி கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த அகிம்சை வழியிலான போராட்டங்களை சிங்கள பெளத்த அரசுகள் மிருகத்தனமாக அடக்கியிருந்தன. அரச ஆதரவுபெற்ற காடையர்கள் மற்றும் அரசின் நேரடிக் கருவிகளான முப்படையினரும், பொலீஸாரும் தமிழர் மீதான படுகொலைகளை பரந்துபட்ட அளவில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். அரசின் இவ்வாறான அடக்குமுறைகளே தமிழ் மக்கள் தமக்கென்று தனிநாடு ஒன்று தேவை எனும் கோரிக்கையினை முன்வைக்கவும், அதனை வென்றெடுக்க ஆயுதப் போராட்டம் ஒன்று அவசியம் எனும் நிலைப்பாட்டினை நோக்கியும் அவர்களை உந்தித் தள்ளியிருந்தது. ஆனால் தமிழ் மக்களின் உணர்வு வெளிப்படுத்தல்கள் கூட அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம்கொடுத்தன. ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் மீதான அரசு அடக்குமுறை முன்னெப்போதைக் காட்டிலும் மிகவும் கொடூரமானதாகக் காணப்பட்டது. 1977, 1981, 1983 ஆகிய வருடங்களில் தமிழ் மக்கள் மீது அரச திட்டமிடலுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்கள் தமிழர்களை பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அழித்துவிடும் ஒரே நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டிருந்தன. ஜெயவர்த்தன அரசினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் ஆயுதப் போராட்டத்தினைப் பலப்படுத்த ஆரம்பித்திருந்தன. ஆனால், தமிழர் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிரான தமிழர்களின் ஆயுத ரீதியிலான எதிர்நடவடிக்கைகளை ஜெயார் மேலும் மேலும் குரூரமான அடக்குமுறைகள் மூலம் எதிர்கொள்ள விரும்பினார். தமிழர் மீது தனது முப்படைகளை ஏவி கண்மூடித்தனமான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயவர்த்தன, சர்வதேசத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நிறுவுவதிலும் அயராது ஈடுபட்டு வந்தார். ஆகவேதான், சீக்கியர்களின் பிரச்சினையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை ரஜீவ் ஒப்பிட்டபோது அதனை ஜெயார் முற்றாக வெறுத்தார். தமிழர்கள் தமது பிரதேசங்களைத் தாமே ஆட்சிசெய்யும் தீர்விற்கான பேச்சுக்களில் இதயசுத்தியுடன் ஈடுபடுவதை ஜெயார் எக்காலத்திலும் விரும்பவில்லை. அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் தமிழர்களில் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டத்தை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி முற்றாக அழித்துவிடுவது மட்டும்தான். மஞ்சள் வர்ணத்தில் காணப்படுவது பஞ்சாப் மாநிலம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஐப்பசி 17 ஆம் நாள் ஆரம்பமாகவிருந்த நாளில் லலித் அதுலத் முதலி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 5 இலிருந்து 11 ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்திருப்பதாக திடீரென்று அறிவித்தார். போராளிகளுடனோ , இந்தியாவுடனோ கலந்தாலோசிக்காது சிங்கள அரசினால் இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களில் ஐந்து சிங்களவர்களும் ஒரு முஸ்லீமும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். பகமாஸ் நாட்டில் பொதுநலவாய நாடுகளில் அரசுத் தலைவர்களிடையே நடைபெறவிருக்கும் மாநாட்டு நடக்கும் நாளிலேயே அரசினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.1 point -
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும். விசுகு நான் இலங்கை யாழ்ப்பாணம் போய் கண்டிறிந்தது காசுபணம் செல்வாக்குடன் உங்களால் தனியாக வாழ்ந்திட முடியாது. கெளரவமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நீங்கள் சொன்ன மாதிரியோ வேறு அரசியல் சக்திகளின் செல்வாக்கு பொலிஸ் செல்வாக்கு இப்படி இல்லாதவிடத்து ஒரு அடிமையாகவே வாழ வேண்டிவரும். இதை ஜீரணிப்பது கஸ்டம் தான்.இருந்தாலும் உண்மை.1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஜனாதியாகவே வரமாட்டார். எப்படி இந்த உறுதி மொழிகளை அளித்திருக்க முடியும்??1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இது சாதாரணமாக அறிவித்தலில் போடப்படும் வாசகம். இது கூட தெரியாமலா பேனாவை கையில் எடுத்தீர்கள்?? நாசமாய் போச்சு. 😭1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
அதே. நாம் நமது குறைகளை நமது பலவீனங்களை களையாமல் மீட்சி இல்லை இல்லை இல்லை.1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
தமிழ் பொது வேட்பாளராக ஒரு பென் வேட்பாளர் போட்டியிட்டிருந்திருக்கலாம், 90 களில் சந்திரிக்கா கணவனை இழந்த குடும்பத்தலைவி என வாக்கு கேட்ட நேரம் வட கிழக்கில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயமாக எனது வாக்கு சந்திரிக்காக இருந்திருக்கும், தமிழ் வேட்பாளரை விட அந்த நேரம் அவர் மக்களிடம் அனுதாப அலையினைக்கொண்டிருந்தார், ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஏதோ சொல்வார்கள் அது போல் அவரும் மாறிவிடார், ஆனால் அவர் சொன்ன குழந்தைகளை இழந்த பெற்றோரின் வலி தனக்கு தெரியும் என்றது பொய்யில்லை என இப்பவும் நம்புகிறேன். இந்த பொது வேட்பாளர் விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டிருக்கலாம், ஆனால் எமது பிரச்சினையே அதுதான்.1 point- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
சிறந்த முயற்சி . இனவாதம் பிடித்த சிங்கள உதவாத அரசியல் தலைவர்களுக்கு பதிலாக இவருக்கு போட்டு எங்கள் சிங்கள எதிர்ப்பை காட்டவேண்டும் .1 point- தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
தாய்லாந்தில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட 37 வயது இளம் பெண் தாய்லாந்தின் (Thailand) புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளான 37 வயது பேடோங்டார்ன் ஃபியூ தாய் கட்சியின் தலைவர் ஆவர். இந்நிலையில், அவர் புதிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார் என்றும் அதனைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராகப் பதவி இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார். சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிரதமர் பதவி ஏற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் ஸ்ரெத்தா தமது பதவியை இழந்தார். இதை அடுத்து பேடோங்டார்ன் ஷினவத்ரா தாய்லாந்து அடுத்த பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார். பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அத்தையான யிங்லக் ஷினவத்ராவும் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர். https://ibctamil.com/article/paetongtarn-thailand-youngest-prime-minister-1723789541 ஏனண்ணை பயப்பிடுகிறீங்க?! பக்கத்தில வூட்டுக்காறம்மாவா?1 point- தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
யாரங்கே . ...... உடனே தாய்லாந்துக்கு ரெண்டு டிக்கட் போடுங்கள் கொழும்பானுக்கும் .........! 😂1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointகடந்த 15 ஆண்டுகளில் திரு. ரணில் விக்ரமசிங்க 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார். திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான்.... நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்ட பூர்வமாக்கப்பட்டது. வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம் (கலாபோகஸ்வெவ 1 & 2) நாமல்புர குடியேற்றங்கள் சட்டபூர்வ சிங்கள குடியேற்றங்களாக்கப்பட்டன. குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மாலனூர் (12ஆம் கட்டை) மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. திருகோணமலை சலப்பையாறு பகுதியில் 650 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றபட்டன. வவுனியாவில் மன்னார் மதவாச்சி வீதியை சூழ்ந்த பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. மன்னார் முசலிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. கொக்கடிவான் குளத்தின் சூழலிருந்த இருநூறு ஏக்கர் வயல் நிலம் 165 சிங்கள குடும்பங்களுக்கு பகிரப்பட்டது. ஒதியமலையை அண்டிய வவுனியாவின் எல்லைக் கிராமங்கள் பலவும் கஜபாகுபுர ஆக்கப்பட்டன. குறிப்பாக சிலோன் தியேட்டர்,டொலர்ஸ் பாம், தனிக்கல், நாவலர் பண்ணை போன்ற பகுதிகளிலும் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. முல்லைத்தீவின் எல்லையில் சிங்கபுர, 13 ஆம் கொலனி என பல சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கொக்குத்தொடுவாயில் மட்டும் 2,156 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால், வெள்ளக்கல்லடி,தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில் பகுதியில் 825 ஏக்கர் நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 20 ஏக்கர் நிலம் சிங்கள குடியிருப்புக்காக வழங்கப்பட்டது. நாயாறு கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதிகளில் சுமார் 794 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டது. ஆண்டான்குளம், திருக்கோணப்பட்டி, ஆத்தங்கடவை, மருதடிக்குளவெளி, ஆலடிக்குளம், சாமிப்பில கண்டல், ஈரக்கொழுந்தன் வெளி, படலைக்கல்லு, நித்தகைகுளம் போன்ற பகுதிகளில் சுமார் 647 ஏக்கர் நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காக வழங்கப்பட்டது. கொக்குத்தொடுவாய்,புலிபாய்ந்தகல், நாயாறு, கொக்கிளாய் - முகத்துவாரம், சாலை ஆகிய 5 பல இடங்களில் பகுதிகளில் பருவகாலங்களில் தொழில் செய்ய தென்னிலங்கை மீனவர்கள் குடியேற்றப்பட்டனர். சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு தமிழ் மக்களின் வயல் நிலங்கள் அபகரிகப்பட்டு வழங்கப்பட்டது மட்டக்களப்பு கெவிலியாமடு பகுதியில் சிங்கள மக்களுக்கான மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு 20-25 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளும் 60 .இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50 இற்கு மேற்பட்ட பொலநறுவை, அம்பாறையை சேர்ந்த பண வசதி படைத்த சிங்கள விவசாயிகள் பண்ணைகள் அமைக்க காணி வழங்கப்பட்டது. மேற்படி திட்டமிட்டட் குடியேற்றங்களுக்கு மேலாக, இக் காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம், தொல்லியல் திணைக்களம் , வன வள திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் பிக்குகளால் மிக பல ஆயிரக்கணக்கான நிலங்கள், விவசாய காணிகள், மேய்ச்சல் தரைகள், நீர் நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இப்போதும் சிலர் மீட்பராக சித்தரிக்கின்றார்கள். இனமொன்றின் குரல்1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஅரசியலமைப்பில் திருத்தம் செய்வது என்றால்... மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ரணில் வெற்றி பெற வேண்டும் என்பது, சுமந்திரனுக்கு தெரியாமல் இருப்பது, ஆச்சரியமாக உள்ளது. 😂 இல்லாவிடில்... தெரிந்து செய்யும் சுத்துமாத்தில் இதுவும் ஒன்றா... 🤣1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஜீவ் காந்தியைச் சந்திக்க முடிவெடுத்த தலைவர் பிரபாகரன் தான் தலைமறைவாக இருப்பதால் இலங்கையரசு அதனை தனது பிரச்சாரத்திற்குப் பாவிக்கின்றது என்பதை உணர்ந்த பிரபாகரன் 1985 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி வெளியே வந்தார். தான் தலைமறைவாக இருப்பதைப் பாவித்து இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கினை உருவாக்கி அதனை ஆளப்படுத்தவும், சர்வதேசத்தில் போராளிகள் அமைதியில் நாட்டமில்லாதவர்கள், வன்முறை விரும்பிகள் என்று பிரச்சாரப்படுத்தவும் ஜெயவர்த்தன முயன்று வருகிறார் என்பதைப் பிரபாகரன் அறிந்தே இருந்தார். போராளிகள் மீது ஜெயவர்த்தன சிறுகச் சிறுக சர்வதேசத்தில் சுமத்தி வந்த அவப்பெயரை துடைக்கவும், இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கொன்று உருவாகிவருவதாக அவர் செய்துவந்த பிரச்சாரத்தை முறியடிக்கவும் பிரபாகரன் நடவடிக்கைளில் இறங்கினார். புரட்டாதி 10 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் பேசும்போது திம்புப் பேச்சுக்களின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக நிலையெடுத்துவரும் இந்தியாவை தமது பக்கம் சாய்ப்பதற்கு போராளிகள் ரஜீவுடன் ஒரு சந்திப்பைக் கோரவேண்டும் என்று அவர் வாதிட்டார். புரட்டாதி 29 ஆம் திகதி வெளிவந்த சண்டே மகசீன் எனும் இந்திய பத்திரிக்கையில் அதன் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிற்கு வழங்கிய நேர்காணலில், பாலசிங்கம் நாடுகடத்தப்பட்ட போது தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தொடர்பாக தனது தளபதிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறவும், பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையினை நேரடியாக உணர்ந்துகொள்ளவுமே தான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் அங்கு தங்கியிருந்த வேளையில் தனது தளபதிகளுக்கும், மக்களுக்கும் தான் கூறிய ஒரே விடயம் தனித் தமிழீழத்தை உருவாக்குவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான விடுதலையினை அடைந்துகொள்ளமுடியும் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன் என்பதுதான் என்றும் அவர் கூறியிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் , ஜெயவர்த்தன தமக்கு தீர்வெதனையும் தரப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரனை செவ்வி காணும் அனீத்தா பிரதாப் "தலைமறைவாக இருக்கவேண்டும் என்று எனக்கு எண்ணம் இருக்கவில்லை. பாலசிங்கம் நாடுகடத்தப்பட்டவேளை நான் வெளியே வந்திருக்க முடியும். ஆனால் இந்தியா நடந்துகொண்ட விதத்திற்கெதிரான எனது எதிர்ப்பைக் காட்டவே அவ்வாறு வெளியில் வருவதைத் தவிர்த்தேன்" என்று அவர் அனீத்தா பிரத்தாப்பிடம் கூறினார். போராளிகளின் தலைவர்களை ரஜீவ் காந்தி சந்திக்க விரும்புவதாக செய்தியனுப்பியபோது, தான் அதுகுறித்து அதிக அக்கறை காட்டவில்லை என்றும், அதனேலேயே ஏனைய ஈழத்தேசிய முன்னணியின் தலைவர்களும் ரஜீவுடனான சந்திப்பிற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றும், அதனாலேயே இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே அசெளகரியமான சூழ்நிலை உருவாகியது என்றும் அவர் விளக்கினார். ஆனால், பாலசிங்கத்தை நாடுகடத்தியதற்கான தனது எதிர்ப்பைக் காட்டவே ரஜீவுடனான சந்திப்பை தான் தவிர்த்ததாக அவர் மேலும் கூறினார். "பாலசிங்கத்தை நாடுகடத்த ரஜீவ் எடுத்த முடிவு தேவையற்றது என்று தான் உறுதியாக நம்புகிறேன்" என்றும் அவர் வாதிட்டார். தான் வெளியே வந்ததற்கான மூன்று காரணங்களை அவர் முன்வைத்தார். கேள்வி : அப்படியானால் எதற்காக தற்போது வெளியே வந்தீர்கள்? பிரபாகரன் : இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், நான் தலைமறைவாக இருந்தபொழுது, எமது விடுதலைக்கு எதிரான சக்திகள் எம்மை பயங்கரவாதிகள் என்றும், சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தன. இரண்டாவது, தமிழ் மக்களின் விடுதலையினை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாகவே வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்ற எம்மைப்போன்றவர்களை ஓரங்கட்டிவிட்டு சலுகைகளுக்காக பேரம் பேசும் சூழிநிலையினை சிலர் உருவாக்க விரும்பியிருந்தனர். பத்திரிக்கைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் எம்மை மிகவும் கொடிய பயங்கரவாதிகள் என்று மலினப்படுத்தியும், எம்மைப்பற்றிய தவறான செய்திகளையும் சிலர் வேண்டுமென்றே பரப்பி வர ஆரம்பித்திருந்தனர். மூன்றாவதாக, இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது எமது இயக்கமே என்றும், அதனாலேயே நான் தலைமறைவாக இருக்கிறேன் என்றும் இலங்கையரசாங்கம் பிரச்சாரம் செய்துவந்திருந்தது. தான் வெளியே வந்தமைக்கான இன்னொரு காரணத்தை பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். ரஜீவ் காந்தியுடனான போராளிகளின் தொடர்பாடல் என்பது ரோ அதிகாரிகள் ஊடாகவோ அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஊடாகவோதான் நடந்து வந்தது. ஆகவே, இவ்வதிகாரிகள் தன்னுடனும் நேரடியாகத் தொடர்புகொள்ளவேண்டும் என்பதற்காகவும், பேச்சுவார்த்தைத் தோல்விக்குப் பின்னரான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தன்னிடம் நேரடியாக அவர்கள் தெரிவிக்க முடியும் என்பதற்காகவுமே தான் வெளியே வந்ததாகவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் தன்னைச் சந்திப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாக உணரும் ரஜீவ் காந்தி நிச்சயம் சினங்கொண்டிருப்பார் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். இந்தியாவின் சமாதான முன்னெடுப்புக்களை போராளிகளின் தாமதித்த சந்திப்பு பாதிக்கும் என்று பாலக்குமாரிடமும் பத்மநாபாவிடமும் ரோ அதிகாரிகள் பேசும்போது எச்சரித்திருந்தார்கள். போராளித் தலைவர்களின் தாமதத்தினாலேயே தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், யுத்த நிறுத்த மீறல்களும் இடம்பெற்றன என்று கூறிய அதிகாரிகள், வன்முறைகள் ஆரம்பித்தமைக்கான பொறுப்பினை போராளிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தனர். புரட்டாதி 10 ஆம் திகதி கூடிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ரஜீவ் காந்தியைச் சந்திப்பதற்கு முன்னர் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தனர். மூன்று நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 13 ஆம் திகதி எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இரு விடயங்கள் குறித்து போராளிகள் வலியுறுத்தினர். முதலாவது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பொன்றினை ஜெயார் மேற்கொண்டு வருவதை எம்.ஜி.ஆர் இடம் உறுதிப்படுத்திய அவர்கள், அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடாக நிரூபித்தனர். மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிராமங்களில் இருந்து இராணுவத்தினரும், கடற்படையினரையும் வன்முறையினைப் பயன்படுத்தி தமிழ் மக்களை நிரந்தரமாகவே விரட்டியடித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களில் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுவருவதையும் அவர்கள் சாட்சிகளூடு நிரூபித்தனர். அத்துடன், தமிழர்கள் வாழ்ந்துவந்த கிராமங்களில் குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டு, அவர்கள் அருகிலிருக்கும் ஏனைய தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த அரசாங்கம் ஊக்குவித்துவருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். தமிழர்கள் மீது அரசாங்கம் முடிக்கிவிட்டிருக்கும் இனக்கொலையின் காரணமாகவே பெருமளவான தமிழ் அகதிகள் தமிழ்நாடு நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரண்டாவதாக அவர்கள் தெரிவித்த விடயம், தம்மைப் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசாங்கம் சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்துவருவது விசமத்தனமானது என்பது. தமிழ் மக்கள் தகுந்த பாதுகாப்புடனும், ஒடுக்குமுறைகள் குறித்த அச்சமின்றியும் வாழ்வதே தமது தலையாய விருப்பு என்றும், அதனை அடைவதற்காக தாம் நடத்திவருவது விடுதலைப் போராட்டமேயன்றி பயங்கரவாதம் இல்லையென்றும் வாதிட்டனர்.தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலத்தில், தமது வாழ்க்கையினை எவரினதும் இடையூறின்றி மேற்கொண்டு, சுயகெளரவத்துடன் வாழ வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கத்தினால் இன்றுவரை முன்வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பதை எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.தமிழ் மக்களுக்கு அதிகாரத்தினைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, மாவட்ட சபைகள் எனும் தீர்வினை முன்வைத்து மத்திய அரசாங்கத்திற்கே இன்னும் இன்னும் அதிகாரங்களை வழங்கி, தமிழ் மக்களை மேலும் தனது அடக்குமுறைக்குள் கொண்டுவர அரசு முயல்கிறது என்றும் அவர்கள் விளக்கினர். ஆகவே இந்தியா, ஜெயவர்த்தனவின் கபடத்தனத்தை சரியாக கண்டுணர்ந்து, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான தீர்வை இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுத்தரவேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் கோரினர். தன்னைச் சந்தித்த போராளிகளின் தலைவர்களிடம் ரஜீவையும் சென்று சந்திக்குமாறு கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர், தமிழரின் பிரச்சினை தொடர்பான தனது எண்ணங்களை ரஜீவிடம் தான் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அன்றைய தினமே தனது கருத்துக்களை ரஜீவிற்கு எம்.ஜி.ஆர் அனுப்பினார். அவர் அனுப்பிய அறிக்கையில் போராளித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலை தொடர்பான தனது சொந்தக் கணிப்பையும் அவர் எழுதியிருந்தார். போராளித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர், தான் ரஜீவிற்கு அனுப்பிய அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தார். தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருகிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்படட் வேண்டும்" என்று அவர் கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையினைக் காட்டிலும் அகதிகள் பிரச்சினையினை அவர் மிகைப்படுத்திப் பேசினார். பின்னர், தமிழர்கள் கெளரவமாகவும், சுதந்திரமாகவும், தமது அலுவல்களைத் தாமே பார்த்துக்கொள்ளும் நிலையினை உருவாக்க இலங்கையரசாங்கம் திம்புவில் முன்வைத்த தீர்வு உதவாது என்று அவர் கூறினார். "தமிழர்கள் தமது விடயங்களைத் தாமே பார்த்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார். இலங்கை அகதிச் சிறுவர்கள் - தமிழ்நாடு 2003 இலங்கையரசாங்கத்திற்கும், போராளிகளுக்கும் இடையிலான மூன்று மாதகால யுத்த நிறுத்தம் நிறைவடையும் நாளான புரட்டாதி 18 ஆம் திகதி போராளித் தலைவர்கள் தில்லியை வந்தடைந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து தில்லி நோக்கிப் புறப்படுவதறுகுச் சற்று முன்னர் கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லலித் அதுலத் முதலி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். அதன்படி யுத்தநிறுத்தம் மார்கழி 18 வரை இலங்கையரசால் ஒருதலைப்பட்சமாக நீட்டிக்கப்பட்டது.1 point- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்” நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது. செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது” அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது” நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா” நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?” குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂 தோழர் பாலன்1 point - ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.