Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3055Posts -
வாதவூரான்
கருத்துக்கள உறவுகள்7Points2507Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்5Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/29/24 in all areas
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள் தான் ஒற்றுமையில்லாதவர்கள் என்றனர் தமிழகத்து மக்கள். இந்திய ஐடி துறை தமிழர்களாலும், தெலுங்கு மக்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த ஒப்பீடும், பேச்சுக்களும் அங்கே எப்போதும் இருக்கும். பின்னர், தெலுங்கு பேசும் மக்கள் இரு தேசங்களாகவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, என்று பிரிந்தார்கள். தெலுங்கு மக்களின் அபிப்பிராயமே வேறு மாதிரி இருக்கின்றது. அவர்களின் கூற்றுப்படி தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள், ஆனால் தெலுங்கு மக்கள் ஒற்றுமை அற்றவர்கள் அல்லது குறைந்தவர்கள். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது போல. இது கிட்டத்தட்ட எல்லா மக்கள் தொகுதிகளுக்கும் பொருந்துகின்றது. ஆனாலும், பலரும் உலகெங்கும் ஒரே குரலில் என்றும் சொன்னது ஈழத்தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள் என்று. ஒரு படி மேலே போய், அதற்கான காரணத்தையும் சிலர் சொன்னார்கள். ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மக்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதே அவர்கள் சொன்ன காரணம். கிட்டத்தட்ட ஒரு ஒற்றைத் தலைமையின் கீழ் நாங்கள் இருந்ததும் எங்களின் அன்றைய ஒற்றுமைக்கு இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். வேறு சிலர் சிறு தலைமைகளாக இருந்தாலும், அவர்களும் கூட பொதுவெளியில் இருந்தோரே. 'யார் இவர்...?' என்று எங்களை நினைக்க வைத்த ஒரு அமைப்போ அல்லது தனிநபரோ அன்று இருக்கவில்லை. இன்று எங்களில் பலர் ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மனநிலையில் இல்லை. பலர் அங்கங்கே நிரந்தரம் ஆகிவிட்டார்கள். தலைமை என்பது அறவே இல்லை. எல்லோரும் தலைவர்கள். புதுமைப்பித்தன் ஒரு தடவை சொல்லியிருந்தார்: மூன்று நேரத்திற்கும் வழி (சாப்பாடு) இருந்தால், அடுத்ததாக ஆச்சாரமும், கலாச்சாரமும் அந்த வீடுகளில் புகும் என்று. ஆச்சாரமும் கலாச்சாரமும் மட்டும் இல்லை, அதிகாரமும் அந்த மனங்களில் புகும் என்று அதை திருத்தி எழுதவேண்டும். சுதந்திரம் அல்ல, சின்னச் சின்ன அதிகாரங்கள் வேண்டி அலைக்கழிய ஆரம்பித்துள்ளோம். எந்த நிலையிலும், ஒரு தனிமனிதனின் மதிப்போ அல்லது ஒரு சமூகத்தின் மதிப்போ அந்த மனிதனின், அதன் நடவடிக்கைகளாலேயே மற்றவர்களால் தீர்மானிக்கப்படும். செயல்களைப் போன்றே வார்த்தைகளும் முக்கியமானவை (இங்கு களத்திலும் எழுத்தில் வார்த்தைகள் முக்கியமானவையே.....😜). நாங்கள் இவற்றை இலகுவில் மறந்து விடக்கூடும், கடந்து விடக்கூடும், ஆனால் இவை மட்டுமே மற்றவர்களுக்கு நினைவில் தங்கியிருக்கும்.6 points
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
இது என்னெண்டால் உங்கள் வீட்டிற்குள் அத்துமீறி 10பேர் குடியிருந்துகொண்டு உங்களுக்கு சுதந்திரம் வேணுமோ என்று பொது வாக்கெடுப்புநடத்தச்சொல்லி கேட்கிறமாதிரி இருக்கு3 points
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
சுனாமி நேரம் வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட உதவிப்பணத்தை தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் (புலிகளுக்கு கிடைத்து விடுமாம்) வழக்கு போட்டவர்களும் இவர்கள் தானே. அப்போ விமல் வீரவன்ச இவர்களுடன் இருந்தார். வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உடந்தையாக இருந்தவர்களும் இவர்களே.3 points
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இனவாத செயல்களை கட்சி பேதமின்றி சகலரும் செய்வார்கள் ...83 இனக்கலவரத்கின் பொழுது முக்கியமாக தமிழர்களின்,மற்றும் இந்திய நிறுவனங்களை திட்டமிட்டு அழித்தவர்கள் ஜெ.வி.பியினர் ..அவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களின் மீது தான் இறுதியில் முடிவடைவது வழமை..2 points
-
இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
2 points
-
பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
2 pointsபரா ஒலிம்பிக் விளையாட்டுக்களை பார்ப்பதற்காக, வருகின்ற கிழமை எனது மகளும் பாரிஸ் செல்ல இருக்கின்றார்.2 points
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
பொது மக்கள் கலந்து கொள்ளும் ஒரு இனிய பொழுதான நிகழ்வில் தமிழ் குண்டர்கள் செய்த காவாலித்தனங்களை நியாயப்படுத்துவது கேவலம். சீடீசி உடன் பிரச்சனை என்றால் அவர்கள் அலுவலம் முன் சென்று போராட்டம் செய்யலாமே. பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் தங்கள் ஊத்தைவாலித்தனங்களை காட்டவேண்டியதில்லை.2 points
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
நீங்கள், அடிமடியிலை... கை வைக்கிறீர்கள். 😂 🤣 அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம். சஜித், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை... பின்கதவால் சந்திக்கலாம். அதை எல்லாம்.... நீங்கள் கண்டாலும், காணாத மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள். இந்தப் பிரச்சினை தோன்றியதன் முக்கிய மூல காரணமே, கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்கள் செய்த செயல் என்பதை இவர்கள் தெரிந்தும்... தெரியாத மாதிரி கதை அளந்து கொண்டு இருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. 😡 அவர்கள்... இல்லாத முள்ளமாரித்தனம் எல்லாம் செய்தவனை கண்டிக்க வக்கில்லாமல், மற்றவனுக்கு... "வகுப்பு" எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 😂2 points
-
எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன?
இந்த இங்கிலாந்துக்காரன் உலகத்தை பிடிக்க வெளிகிடாமல் இருந்திருந்தால் பிரச்சினை எங்களுக்கு வந்திருக்காது😁.2 points
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
83 ஆம் ஆண்டு இனக்கலவரம் செய்தது ஜெவிபியா ? ஜே ஆரின் யு என் பியா? எனக்கு ஒரே கொன்பியூசன் நுணா, அவர்கள் வழக்குப்போட அரச தரப்பிலிருந்து எந்த எதிர் வாதமும் வைக்கப்படவில்லை என்பதும் (மகிந்த தான் செய்யாமல் விமல் வீரவன்ச , சோமவன்ச அமரசிங்க போன்றவர்களின் இனவாதத்தைப்பயன்படுத்தி மறைமுகமாக செய்விச்சது) குறிப்பிடத்தக்கது.2 points
-
எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன?
மிகவும் நியாயமான சிறப்பான வாழ்க்கை முறை . ......... என்ன ஒன்று அவர்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் ........ இனி இவர்கள் அவர்களை ஒரு வழி பண்ணாமல் ஓய மாட்டார்கள் . .......! 😁 நன்றி ஏராளன் ........!2 points
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
கந்தையா அண்ணை... பாடகர் சிறிநிவாஸ் அந்த மேடையில், இரண்டு பாடல்களை மட்டும் பாடியதாக அறிய முடிகின்றது. அவர் பாடும் படங்கள் மேலே இணைக்கப் பட்டுள்ளதுடன்... அவரை மேடையில் இருந்து காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காணொளி காட்சிகளும் பதிவாகி உள்ளது. இதில் உள்ள எந்தப் படத்திலும்... அவர் மீது முட்டை வீசியதற்கான அறிகுறிகள் அறவே இல்லை. அப்படி இருக்க... முட்டை கதையை கட்டி விடுபவர்கள் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லவா. இல்லாத ஒன்றை சொல்லும் போது... அவரின் அபிமானிகளான தென் இந்திய தமிழர்களின் மனதிலும் ஒரு காயத்தை ஏற்படுத்தி இரண்டு நாட்டு தமிழர்களிடமும் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் உணராமல் எழுதுவது ஆபத்தானது.2 points
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
என்னுடைய தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் இராசலிங்கம் அவர்கள் பெரும் வெற்றி ஒன்றை 1977 இல் பெற்றிருந்தார். நான் அப்போது சிறுவன். அவரை தோளில் வைத்து தூக்கிக் கொண்டு எங்கள் சந்தியால் போனார்கள். உங்களின் தரவுகளைப் பார்த்த பின், உடுப்பிட்டி தொகுதி முடிவுகளை போய்ப் பார்த்தேன். அவருக்கு 63.44% மட்டுமே கிடைத்திருக்கின்றது. நான் இன்னும் மிக அதிகமாகவே அவருக்கு கிடைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீதியான, சுதந்திரமான ஒரு ஜனநாயகத் தேர்தலில் ஒரு வேட்பாளர் 60% அல்லது மேலே எடுப்பது என்பது மிக அரிதான ஒரு நிகழ்வே. இராசலிங்கம் அவர்களுக்கு வாக்கு போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்ட தர்மரத்தினத்திற்கும் (சுயேட்சை), மோதிலால் நேருவிற்கும் (தமிழ் காங்கிரஸ்) எந்த அடிப்படையில் வாக்களித்தவர்கள் வாக்களித்தார்கள் என்பது அன்று எங்களுக்கு தெரியும். ஊரில் பலரும் இதைப் பற்றி கதைத்தார்கள்.2 points
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
அரச கட்டடங்களில் மாத்திரம் தமிழிலும் பெயர்ப்பலகை வைப்பதை;தானே சொல்கிறார். அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . சிங்களப்கபகுதிகளுக்கூடாப ப் பயணம் செய்யும் பொழுத அரச கட்டங்களின் பெயர்ப்பலகையைப் பார்த்த்துத்தான் அந்த இடங்களை அறிய முடிகிறது. சுமத்திரனின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பகிர்வு அரசியலமைப்புக்கு ஆதரவு என்பதன் மூலம் சுமத்திரனதும் அவரது சொம்புகளினதும் வாக்குமட்டும்தான் கிடைக்கும். சுமத்திரனுக்கு நல்ல பெட்டி ஒன்நறு கிடைக்கும்.1 point
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
👍....... அவர் எதிர்பார்க்கப்பட்டதிற்கு மேலாகவே நின்றுபிடித்தார். அவரின் 'மண்ணின் மைந்தன்' என்ற ஒரு பிம்பமும், ஆதரவும் அதற்கான பிரதான காரணங்கள் ஆகும். இவரே கொழும்பில் பிறந்து வளர்ந்து, ரஷ்யாவில் படித்து விட்டு வந்திருந்தால், பேராதனை இடமாற்றத்துடன் நம்மவர்கள் இவரை மறந்திருப்பார்கள்.1 point
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்... ] பெரிதாகப் படித்து, ஆங்கிலமும் தெரிந்து இருந்தால், அது இன்னமும் நம்பிக்கையைக் கூட்டும்.] 🤣 டாக்குத்தர் அர்சுனாவை மக்கள் தூக்கி வைத்து மூன்று பாட்டுக்கள் அவருக்கு என்று பாடிவிட அவர் அடிக்கின்ற கூத்துக்கள் தெரியும் தானே1 point
-
வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
👍......... பெரிதாகப் படித்து, ஆங்கிலமும் தெரிந்து இருந்தால், அது இன்னமும் நம்பிக்கையைக் கூட்டும். சுரேன் ஒரு ஒரு கலாநிதி (Ph.D. in Political Science and International Relations from University of Kent, England ). இவரின் முழுக் கல்வியும் ஆங்கில வழியிலேயே போலுள்ளது. ஆனாலும் இன்றைய கல்வி என்பது பெரும்பாலும் ஒரு தொழிற் பயிற்சி மட்டுமே. அது எந்த அளவில் - பாடசாலை, இளநிலை, முதுநிலை, கலாநிதி - இருந்தாலும். மேற்படிப்பு ஆராய்ச்சிகள் என்பது இன்னும் இன்னும் ஒரு மனிதனை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தள்ளும். வாழ்க்கை அனுபவங்களும், பல்வேறுபட்ட சக மனிதர்களும், பரந்த திறந்த வாசிப்பும், முரண்பட்ட சுய சிந்தனைகளுமே ஒரு மனிதனின் பார்வையை அகலப்படுத்தும். எங்களின் நிலத்தை எந்த விதத்திலும், அங்கு வாழ்ந்தோ அல்லது அதை வாசித்தோ, அறியாதவர்கள் தான் எங்களின் பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொள்ளும் ஒரு காலகட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்பது ஒரு ஆறுதல்.1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
- பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
1 pointஎங்கள் அழகிய பாரிஸ் மாநகர் உங்களை அன்புடன் வரவேற்கின்றது . .........தங்களின் வரவு நல்வரவாகுக ......! 😂1 point- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
வாதவூரான், இது மிகவும் தவறான அபிப்பிராயம். வடக்கு கிழக்கு என்பது அங்கு வாழும் முஸ்லிம்களினதும் தாயகம் என்பதனை நாம் மறுப்பது என்பது சிங்களவர்கள் வடக்கு கிழக்கை எம் பூர்வீக பிரதேசம் மற்றும் தாயகம் என்று நாம் உரிமை கோருவதை மறுப்பதற்கு சமம். புலிகளின் தலைமை ஒரு காலத்திலும் இவ்வாறு வடக்கு கிழக்கு என்பது தமிழ் மக்களினது தாயகம் மட்டுமே என்று ஒரு போதும் கோரியதும் இல்லை (வடக்கில் முஸ்லிம்களை வெளியேற்றிய பின்பும் கூட) போர்க்காலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட வன்னியில் வாழ்ந்து வரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு வடக்கு கிழக்கு தாயகம் அல்ல. 77 களில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்ட்ட மலையக தமிழர்களில் பலர் அங்கு இடம்பெயர்ந்து அந்த மண்ணையே தம் தாயகமாக வரித்துக் கொண்டவர்கள் மற்றும் காந்தீய அமைப்பின் செயலாளர் மருத்துவர் இராஜசுந்தரம் அவர்களின் முயற்சியாலும் மலையக தமிழர்கள் பலர் குடியேறினார்கள். புளொட் இயக்கத்தில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன் மலையக / இந்திய வம்சாளிகளில் ஒருவர். இதனை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால், வடக்கு கிழக்கு என்பது வெறுமனே ஈழத் தமிழர்களின் தாயகம் அல்ல என்பதற்காக. அப்படி நாம் சொல்வோமாயின், எமக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆனால் சிங்கள குடியேற்றங்கள் என்பது முற்றிலும் வேறு. அது திட்டமிடப்பட்ட தமிழ் இனவழிப்பின் ஒரு கூர்மையான அம்சம். அலுவல்கள் மற்றும் வணிக ரீதியான காரணங்களுக்காக வடக்கு கிழக்கிற்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்த சிங்கள மக்களை தவிர மிச்ச எல்லோரும் தமிழ் இன அழிப்பிற்காக கொண்டு வந்து குடியேற்றிய குற்றவாளிகளே இவர்களின் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை ஒப்பிடுவது தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக அங்கீகாரம் கொடுப்பதாகவே அமையும்.1 point- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
சிங்களத்தின் விரிவாக்கத்திற்காக உழைக்கும் ஐலண்டிடம், சிங்களக் முடியேற்றங்கள் நடப்பதே இனப்பரம்பலை மாற்றியமைக்கத்தான் என்று நீங்கள் கூறுவது கல்லில் நாருரிப்பதற்குச் சமனானது. ஏனென்றால் குடியேற்றத்தை நியாயப்படுத்துவதென்பது அவரது இலக்குகளில் ஒன்று!1 point- தமிழ்நாட்டில் 40% மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லையா? - தரவுகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
மலையாளிகள் படிப்பில் இப்ப நல்ல முன்னேற்றம்1 point- தமிழ்நாட்டில் 40% மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லையா? - தரவுகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
இது காட்டுவதில்ல தில் ஒன்று - போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாதது - அரச துறையில் வேலைகளை இயலு மானவரை நிரப்பாதது. கிந்தியா சீன போல வளரமுடியாது என்பதற்கு ஒரு சிறு அமைப்பு அடிப்படையிலான அடிப்படை ஆதாரம். (இப்போதும் ஒளவையார் சரி - ஞானமும், கல்வியும் நயத்தல் (சிறத்தல்) அரிது. இப்போதும் ஒளவையார் சரி - ஞானமும், கல்வியும்நயத்தல் (சிறத்தல்) அரிது - இரண்டு வழிகளில், ஒன்று வசதி கிடைப்பது, வசதி கிடைத்தாலும் அதை உள்வாங்க கூடிய தன்மை இருப்பது. ) ஏதோ ஓர் தவறு இருப்பதாக நெருடியது. தவறு (சிறத்தல்) திருத்தப்பட்டு உள்ளது.1 point- அறுவை சிகிச்சை, போர், கால்நடை வளர்ப்பு - மனிதர்களை ஒத்த எறும்புகளின் 'நாகரிகம்'
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 ஆகஸ்ட் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் எறும்புகளின் வாழ்வியல், அவற்றின் சமூகக் கட்டமைப்பு மனிதர்களுக்கு நிகரானவை என்பதை ஆய்வாளர்கள் பல தருணங்களில் உறுதி செய்துள்ளனர். அவைதம் சகோதரிகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாசப் பிணைப்பு ஆகியவை பல தருணங்களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது. ஈரப்பதம் மிக்க கட்டைகளில் கூடமைத்து வாழும் கட்டெறும்பு வகையைச் சேர்ந்த எறும்பு வகை ஒன்றில், ஃப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் அதிசயமான பழக்கத்தைக் கண்டறிந்தனர். அவை சக எறும்பின் உயிரைக் காப்பாற்ற அதன் கால் பகுதியை வெட்டியெடுப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பூச்சி நடத்தையியல் ஆய்வாளரான எரிக் பிராங்க், “விலங்குகள் மத்தியில், ஓர் உயிரைக் காப்பாற்ற பிற சகாக்கள் ஓர் உறுப்பை உடலில் இருந்து பிரித்தெடுப்பது பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை,” என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சக உயிரினத்திற்கு அறுவை சிகிச்சைக்கு நிகரான சிகிச்சையை அளிக்கும் அணுகுமுறை விலங்கு உலகில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை. இருப்பினும், எறும்புகள் மத்தியில் தமது சகாக்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது, போரின்போது தம் உயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பது போன்ற நடத்தைகள் ஆய்வாளர்களால் பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தகைய நடத்தைகளை நானும் பல தருணங்களில் அவதானித்துள்ளேன். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சில நாட்களுக்கு முன்பும் கிடைத்தது. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த எறும்புக் கூட்டங்களுக்கு இடையே நடந்த போரில், பின்னங்கால்கள் உடைந்து தனியாக சிக்கிக்கொண்ட ஓர் எறும்பை இரண்டு 'எதிரிகள்' மூர்க்கமாகத் தாக்கின வீட்டு வாசலில் நடந்த உக்கிரமான போர் அன்றைய தினம் மாலை வேளையில் வானம் மோடம் போட்டிருந்தது. பருவநிலை இதமாக இருந்ததால் தேநீர் அருந்தலாம் என்று கடைக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியேறினேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, தேநீரை மறந்து அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு என்னை வாசலிலேயே இருக்கச் செய்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு கட்டெறும்பின் தலை மீதிருந்த உணர்கொம்புகளில் ஒன்றில் வேறொரு எறும்பின் தலை செருகப்பட்டிருந்தது. அதே எறும்பு தனது காலில் மற்றுமோர் எறும்பின் உயிரற்ற சடலத்தை இழுத்துக்கொண்டே நடந்து சென்றது. போருக்கு நடுவே அந்த எறும்பு வெற்றிக் களிப்பில் தனது எதிரிகளை மகுடமாகச் சூடிச் செல்வதைப் போல் அந்தக் காட்சி இருந்தது. ஆவலைத் தூண்டிய அந்தக் காட்சியின் விளைவாக, அங்கு என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனிக்கலானேன். அங்கு ஒரு போர் நடந்துகொண்டிருந்தது புரிந்தது. இருவேறு எறும்புப் புற்றுகளுக்கு இடையில் ஒரு மூர்க்கமான போர். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, போருக்கு நடுவே தான் வீழ்த்திய ஓர் எறும்பின் தலையை உணர்கொம்பில் சுமந்தவாறு, மற்றோர் எறும்பின் சடலத்தை இழுத்துக்கொண்டு செல்லும் காவல்கார கட்டெறும்பு இந்தப் போர் குறித்து அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்மராஜனிடம் பேசியபோது, எறும்புகளுக்கு இடையிலான போர் பெரும்பாலும் இரு தருணங்களில் நிகழும் என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, ஒரே வகையைச் சேர்ந்த எறும்பாக இருந்தாலும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவையாக இருப்பின் அவற்றுக்குள் உணவு மற்றும் வாழ்விடத்துக்கான மோதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மேலே நான் குறிப்பிட்ட போருக்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். அதேபோல் மற்றுமொரு தருணத்தில் கூன்முதுகு எறும்புகளுக்கு (Hunchback ants) இடையிலான போரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவை அருகருகே இருக்கும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவை. அவற்றுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருந்த அந்தப் போர் உணவுக்கான போராக இருக்கக்கூடும். இதுவன்றி, எறும்புகளுக்கு இடையே போர் மூள மற்றொரு காரணமும் உண்டு. எறும்புகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல குழுக்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு சில எறும்பு வகைகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியான நடத்தைகளை அடிப்படையாக வைத்து அவையனைத்தும் உயிரியல்ரீதியாக ஒரு குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, போருக்கு நடுவே காயமடைந்து, உயிரிழக்கும் நிலையில் இருந்த காவல்கார எறும்பை இழுத்துச் செல்லும் வேலைக்கார எறும்பு அடிமைப்படுத்தும் எறும்புகள் எடுத்துக்காட்டாக, “சில எறும்பு வகைகள் இலை, குச்சி ஆகியவற்றைச் சேகரித்துச் சென்று புற்றுக்கு உள்ளேயே பூஞ்சைகளை வளர்த்து உணவாக்கிக் கொள்கின்றன. சிலவகை எறும்புகள், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சிகளுக்கு புற்றுக்கு உள்ளேயே அடைக்கலம் கொடுத்து, வளர்த்து, அவற்றில் இருந்து மில்க் டியூ (milk dew) எனப்படும் சர்க்கரைப்பாகு போன்ற ஒரு திரவத்தைக் கறந்து ஊட்டச்சத்து மிக்க உணவாக உட்கொள்கின்றன," என்கிறார் பிரியதர்ஷன். இந்தப் பூஞ்சை விவசாயமும் அஃபிட்ஸ் வளர்ப்பும், மனிதர்களின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒத்த பழக்கங்களாக இருப்பதாக பூச்சியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைப் போலவே, எறும்பு இனங்களில் அடிமைப்படுத்தும் எறும்பு (Slave-making ants) என்ற ஒரு வகை உண்டு. இவை மற்ற எறும்பு இனங்களின் புற்றுகளைச் சூறையாடி அவற்றின் இளம் லார்வாக்களை (புழுப் பருவத்தில் இருக்கும் முதிர்ச்சியடையாத எறும்புகள்) திருடி வந்து, வளர்த்து அடிமைகளாகப் பயன்படுத்துகின்றன. பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, சண்டையிட்டுக் கொள்ளும் இரு கட்டெறும்புகள் “இவை திருடி வரும் எறும்புகளுக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அது முற்றிலும் தமது புற்றின் பணிகளைச் செய்துகொள்வதற்காக அவை மேற்கொள்ளும் ஓர் அடிமைப்படுத்தல் செயல்முறையே,” என்று விளக்குகிறார் எறும்புகளை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் முனைவர்.ப்ரொனோய் பைத்யா. இந்த இரண்டு வகையான போர்களிலுமே எதிரி எறும்புகளின் காலனியை, அதாவது புற்றைச் சூறையாடுவது, அதிலிருக்கும் உணவுகளையோ சந்ததிகளையோ அபகரிப்பதே நோக்கமாக இருக்கும். “இந்தப் போர்களின்போது, படையெடுப்புக்கு உள்ளாகும் எறும்புப் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள் புற்றைத் தற்காத்து மூர்க்கமாகப் போரிடும். ஆனால், அந்தப் போரில் ஒருவேளை எதிர்த்தரப்பு முன்னேறிச் சென்று ராணியைக் கைப்பற்றிவிட்டால், படையெடுப்புக்கு உள்ளாகும் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள், வேலைக்கார எறும்புகள் அனைத்துமே போரிடுவதை நிறுத்திவிடும்,” என்கிறார் அசோகா அறக்கட்டளையின் ஆய்வு மாணவியான பெங்களூருவை சேர்ந்த சஹானாஸ்ரீ. படக்குறிப்பு, எறும்புப் புற்றில் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. அதற்குள் ராணி முட்டையிடுவதற்கு, உணவு, கழிவுகளுக்கு என்று பல்வேறு தனி அறைகள் பிரிக்கப்பட்டிருக்கும் எறும்புகளின் சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டது? ராணி கைப்பற்றப்பட்டால் போர் முடிவுறுவது ஏன்? ஒரு புற்றின் ராணிக்கும் மற்ற எறும்புகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன? இதுவரையிலான அறிவியல் ஆதாரங்களின்படி, ராணி எறும்புதான் ஒரு புற்று, அதாவது ஓர் எறும்பு சமூகத்தை உருவாக்குகிறது. அந்த ராணியை இழந்துவிட்டால், அந்தப் புற்றே அழிந்துவிடும். அதன் காரணமாகவே, ஒரு புற்றுமீது படையெடுப்பு நிகழும்போது அதிலுள்ள பிற எறும்புகள் தம் உயிரைப் பணயம் வைத்தேனும் ராணியைக் காப்பாற்றப் போராடுவதாக விளக்குகிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா. பொதுவாக, ஒரு புற்றிலுள்ள அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஆனால், அவற்றில் மிகச் சில மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. அவையே ராணி எறும்புகள் என்றழைக்கப்படுகின்றன. அதுபோக, அவற்றோடு இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் எறும்புகளும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் பிறக்கின்றன. இந்த ராணி எறும்புகளும் அவற்றோடு இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்புகளும், பருவகாலத்திற்கு முன்னதாகத் தங்களது புற்றைவிட்டு வெளியேறி அவற்றைப் போன்ற பிற எறும்புகளோடு ஓர் இடத்தில் கூடும். அப்போது நடக்கும் இனப்பெருக்க செயல்முறையில், ராணி எறும்பு வேறு புற்றைச் சேர்ந்த ஓர் ஆண் எறும்பைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் காற்றில் பறந்தபடி இணைசேரும். பிறகு அந்த ராணி தனக்கேற்ற ஓரிடத்தைத் தேடி, அங்கு நிலத்தடியில் சிறிய அளவில் புற்று அமைத்து, அங்கு தனது இறகுகளை உதிர்த்துவிட்டு, முட்டையிடத் தொடங்கும். அடுத்த சில வாரங்களில் அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் எறும்புகளின் மூலம் தனது புற்றை, அதாவது தனது சமூகத்தை விரிவுபடுத்தும். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த இரண்டு எறும்புகள் மூர்க்கமாகப் போரிட்டுக் கொள்ளும் காட்சி. எறும்புகளின் படிநிலை இப்படியாகப் பிறக்கும் எறும்புகளில் இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்பைத் தவிர மற்ற அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஒரு புற்றிலுள்ள எறும்புகளில் பல படிநிலைகள் இருக்கின்றன. அவை, ராணி எறும்புகள்: இனப்பெருக்கம் செய்ய வல்லவை, முட்டையிடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் மட்டுமே இவற்றின் பணி. அதிலும் முதல் தலைமுறை வேலைக்கார எறும்புகள் பிறந்தவுடன், சந்ததிகளைப் பராமரிக்கும் பணி அவற்றுக்குச் சென்றுவிடும். ராணியின் பணி தொடர்ந்து முட்டைகளை இட்டுக்கொண்டே இருப்பது மட்டுமே. ஆண் எறும்பு: இதன் பணி, ராணியின் இனப்பெருக்கத்திற்கு உதவுவது மட்டுமே. வேலைக்கார எறும்புகள்: புற்று அமைப்பது, பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டைகள் மற்றும் லார்வாக்களை பராமரிப்பது ஆகியவை இவற்றின் தலையாய பணியாக இருக்கும். காவல்கார எறும்புகள்: இவற்றின் பணி, புற்றைப் பாதுகாப்பது, தாக்குதலின்போது தற்காப்பது, வேறு புற்றுகள்மீது படையெடுத்து அபகரிப்பது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக, ஒரு ராணியில் தொடங்கும் ஒரு சமூகம் (புற்று), சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரைகூடப் பெருகும் என்று விளக்குகிறார் பூச்சியியலாளர் பிரியதர்ஷன். இதில், ராணி எறும்பைத் தவிர மற்ற பெண் எறும்புகள் அனைத்துமே இனப்பெருக்கம் செய்யும் திறனற்றவை. ஆகவே அவை தமது சமூகம் பெருகுவதற்கு ராணியையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கின்றன. இந்நிலையில், அந்த ராணியை இழந்துவிட்டால் எதிர்காலத்தையே அவை இழந்துவிடுகின்றன. ஆகையால்தான், ஒரு போரின்போது அந்த ராணியையும் அடுத்த சந்ததிகளையும் பாதுகாக்க, ஓர் எறும்புப் புற்றில் இருக்கும் வேலைக்கார, காவல்கார எறும்புகள் என அனைத்தும் தம் உயிரையே தியாகம் செய்து மிக மூர்க்கமாகப் போரிடுகின்றன. எறும்புகளின் உயிர்த் தியாகம் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC படக்குறிப்பு, கூண்முதுகு எறும்புகளுக்கு இடையே நடந்த போரின்போது தனியாகச் சிக்கிய எறும்பைச் சுற்றி வளைத்துத் தாக்கும் 'எதிரி' எறும்புகள் அத்தகைய மற்றுமொரு போரை ஹரியாணாவில் சூரியன் அஸ்தமித்த நேரத்தில் கவனிக்க நேர்ந்தது. அதிலும் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. அநேகமாக அப்போதுதான் போர் தொடங்கியிருக்க வேண்டும். அது தோட்டங்களில், புல்தரைகளில் அதிகம் காணப்படும் ஒரு வகைக் கட்டெறும்பு. புற்றின் வாசலில் நிகழ்ந்த தாக்குதல்களில் காவல்கார எறும்புகள், எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தன. அதில் பல மடிந்தும் கொண்டிருந்தன. அதேவேளையில், உணவு தேடி வெளியே சென்றிருந்த வேலைக்கார எறும்புகள் மீண்டும் வேகவேகமாகத் தமது புற்றுக்குள் சாரிசாரியாக வரிசை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், எங்கோ உணவு தேடிச் சென்றிருந்த எறும்புகளுக்குத் தமது புற்றில் நிகழும் படையெடுப்பு எப்படித் தெரிய வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்குக் காரணமாக எறும்புகளின் அபாரமான தொடர்பு உத்திகளைச் சொல்கிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா. “எறும்புகளின் தொடர்பு உத்திகள் பல வழிகளில் செயலாற்றுகின்றன. இந்தத் தொடர்பு உத்திகள் மட்டுமின்றி அவை தம் உயிரைத் துச்சமெனக் கருதி புற்றைக் காக்கப் போராடுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது அவற்றின் சமூகநலப் பண்புதான்,” என்கிறார். படக்குறிப்பு, இந்த விளக்கப்படத்தில் இருப்பது போல, எறும்புகள் உடலில் இருந்து வெளிப்படும் வேதிமத்தைப் பயன்படுத்தி தாம் பார்க்கும் உணவுப் பொருளின் மீது வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்துகின்றன அதாவது, தன்னைவிடத் தமது சமூகத்திற்கே முன்னுரிமை அளித்து உழைக்கும் குணம் கொண்டவை எறும்புகள். பொதுவாக, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கி, தமது மரபணுவை அழியவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே அனைத்து உயிரினங்களின் தலையாய பணி. இனப்பெருக்கச் செயல்முறை அத்தகையதே. இதையே டார்வின் 'வலியன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் மூலம் உணர்த்தினார். அதாவது, வலிய மரபணு பிழைக்கும். இங்கு எறும்புகளைப் பொறுத்தவரை, “ஒரு புற்றிலுள்ள அனைத்து எறும்புகளுமே சகோதரிகள். அவையனைத்தும் 75% மரபணுரீதியாக ஒத்துப் போகின்றன. அவையனைத்தின் இனப்பெருக்க மூலமாகச் செயல்படுவது ராணி மட்டும்தான். ஆக, ராணியும் அது இடும் முட்டைகளுமே அந்தப் புற்றிலுள்ள எறும்புகளின் அடுத்த சந்ததிக்கு அடிப்படை,” என்கிறார் ப்ரொனோய். “இதன் காரணமாகவே ராணிக்கும் லார்வாக்கள் மற்றும் வளர்ந்து வரும் எறும்புகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உணவூட்டுவது, பாதுகாப்பது ஆகியவை வேலைக்கார, காவல்கார எறும்புகளின் தலையாய பணியாகிவிடுகிறது,” என்கிறார் ப்ரொனோய். இதுவே படையெடுப்பு நிகழும்போது எறும்புகள், புற்றைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வது, உயிர்த் தியாகம் செய்வது அவற்றின் அடிப்படைப் பண்பாகிவிடுகிறது. படக்குறிப்பு, உணவுப் பொருளை அவை வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்திய பிறகு, அவைதம் புற்றுக்குத் திரும்பிச் செல்லும்போது வழிநெடுக பாதையில் வேதிமக் குறியிட்டுக்கொண்டே செல்லும் எறும்புகள் பேசும் மொழி என்ன தெரியுமா? சரி, எறும்புகளின் தொடர்பு மொழிக்கு வருவோம். எறும்புகளுக்கு எதற்கு ஆன்டனா? எறும்புகளின் உடலமைப்பில் ஆன்டனா எனப்படும் உணர்கொம்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் தலைப் பகுதியில் கண்களுக்கு மேலே, இரண்டு மெல்லிய குச்சி போன்ற அமைப்பு நீண்டிருக்கும். அவையே உணர்கொம்புகள் எனப்படுகின்றன. இந்த உணர்கொம்புகள் இல்லையெனில், எறும்புகள் பிழைத்திருப்பதே சவாலான காரியம் என்கிறார் முனைவர் ப்ரொனோய். படக்குறிப்பு, அப்படி வழிநெடுக இருக்கும் வேதிமக் குறியீடுகளை மற்ற எறும்புகள் தங்கள் உணர்கொம்புகளின் மூலம் உணர்ந்து பாதையைக் கண்டறிந்து உணவு இருக்கும் இடத்தை அடைகின்றன. “எறும்புகளின் தொடர்பு மொழி என்பது வேதிம அடிப்படையிலானது. அவைதம் உடலில் இருந்து ஃபெரோமோன்ஸ் (Feromones) எனப்படும் ஒரு வகை வேதிமத்தை வெளியிடுகின்றன. அந்த வேதிமத்தை உணர்வதன் மூலமே எறும்புகள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்கின்றன, தமது புற்றைச் சேர்ந்த சகாக்களை அடையாளம் காண்கின்றன,” என்கிறார் அவர். உதாரணமாக, உணவு தேடிச் செல்லும்போது ஓர் எறும்பு அதனால் தன்னந்தனியாக முற்றிலும் எடுத்துவர முடியாத அளவுக்கு ஓர் உணவுக் குவியலைக் காண்கிறது. அப்போது, அந்த இடத்தைத் தனது வேதிமத்தால் குறியிட்டுக் கொண்டே, அதாவது, அங்கிருந்து தனது புற்றுவரை ஃபெரொமோன்களை கசியவிட்டுக்கொண்டே வருகிறது. பிறகு, புற்றில் இருக்கும் மற்ற எறும்புகளுக்குத் தகவல் கொடுத்து, தனது வேதிமப் பாதையை ஒரு ஜி.பி.எஸ் போலப் பயன்படுத்தி அவற்றை அந்த உணவுக் குவியலை நோக்கி அழைத்துச் செல்கிறது. படக்குறிப்பு, ஒரு ஜி.பி.எஸ் போல எறும்புகள் இந்த வேதிமக் குறியீடுகளை உணர்கொம்புகளைப் பயன்படுத்தி உணர்ந்து மற்ற எறும்புகள் சென்ற பாதையைக் கண்டறிகின்றன இத்தகைய தொடர்பு உத்தியை எறும்புகள் பயன்படுத்தியே ஹரியாணாவில் நான் கண்ட போரின்போது, வேலைக்கார எறும்புகளிடம் போர் குறித்து எச்சரித்து, புற்றுக்குத் திரும்ப வைத்திருக்கலாம் என்று விளக்கினார் முனைவர் பிரியதர்ஷன். எறும்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்கும், தங்களது சுற்றத்தை, அதிலுள்ள ஆபத்துகளை உணரவும் அவற்றுக்கு உணர்கொம்புகள் மிகவும் அவசியம். அந்த உணர்கொம்புகளை வைத்தே எறும்புகள் வேதிமங்களையும் அவற்றின் மூலம் பகிரப்படும் செய்திகளையும் உணர்கின்றன. முனைவர் ப்ரொனோயின் கூற்றுப்படி, உணர்கொம்புகளை இழந்துவிட்டால், எறும்புகள் திசை மற்றும் பாதைகளை அறிவது, தங்களது சகாக்களுடன் தொடர்புகொள்வது, ஆபத்துகளை உணர்வது என அனைத்துத் திறன்களையுமே இழந்துவிடும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், ஓர் எறும்பு உயிர் பிழைத்திருப்பதற்கே இந்த உணர்கொம்புகள் மிக அடிப்படையான தேவை. இதுபோக, புற்றைப் பராமரிக்க, காவல் காக்க அதிக எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் தேவை என்பதால், இனப்பெருக்கத் திறனற்ற எறும்புகளை அதிகளவில் இனப்பெருக்கம் செய்யுமாறு மற்றவை கட்டாயப்படுத்துவது, புதிதாகப் பிறந்த எறும்புகளுக்குத் தமது பணிகள், நடத்தைகளைக் கற்றுத் தருவது என இன்னும் பற்பல வியப்பூட்டும் வாழ்வியல் முறைகளை எறும்புகள் கொண்டுள்ளன. https://www.bbc.com/tamil/articles/c19kpp43yn1o1 point- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். இங்கே விவாதிக்கப்படுவது தமிழர் திருவிழாவில் படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற, காடையர் கூட்டத்த்ன் செயல்கள் பற்றித்தான். CTC யில் அரசியல் பற்றி அல்ல. இந்தத் திருவிழா கனேடியத் தமிழர்களுக்கானது. அதைக் குழப்புவதற்கும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கும் வெட்கப்பட வேண்டும். திருவிழாவிற்கு வந்திருந்தது இவை தொடர்பாக ஏதும் அறியாத சாதாரண மக்களே. இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். நாளை இந்தப் பிள்ளைகள் திரும்ப இப்படி ஒரு தமிழர் விழாக்களிற்கு வருவார்களா? பாடகர் சிறீநிவாஸ் அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டதற்கு தென்னிந்திய திரையுகம் எப்படி எதிர்வினையாற்றும்? இப்படி ஒரு விழாவிற்கு திரும்பவும் City of Toronto அனுமதி தருமா? Toronto Police ன் எதிர்வினை எப்படி இருக்கும்? இதைப்பற்ரியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா? 😏1 point- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
அப்படி யாரும் சொல்லவில்லை. தமிழர் நலன் சார்ந்து இருக்கின்ற கனடிய தமிழர் பேரவை... தனியே ஸ்ரீலங்கா போய்... "இமாலய பிரகடனம்" என்ற ஒப்பந்தத்தை செய்த பின் தான்.... தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்களும்.. இமாலய பிரகடனம் என்றால்.. என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். தாயக மக்களுக்கே... தெரியாமல் புத்த பிக்குகளையும், பல்லாயிரம் மக்களை கொன்று போரை நடத்தியவர்களை சந்தித்ததைத்தான்.... தவறு என்றும், இவ்வளவு பிரச்சினை ஆரம்பமாக உள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றோம். உங்களுக்கு நடந்த பல விடயங்கள் தெரியும். ஆனால்... தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள் அல்லது அதனை ஒத்துக் கொள்ள உங்கள் சுயமரியாதை இடம் தரவில்லை என்றே கருத வேண்டி உள்ளது. ஆரம்பமான முக்கிய பிரச்சினையை வசதியாக மறைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லிக் கொண்டு இருப்பது உங்களுக்கே அலுப்பு அடிக்கவில்லையா. நன்றி, வணக்கம்.1 point- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது எல்லாம் கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்களுக்கு இல்லையா??1 point- எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன?
பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா கட்டுரை தகவல் எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 27 ஆகஸ்ட் 2024 பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது. அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட்டுகளில் ஒரு வாழை மரத்தை சாய்த்துவிட்டார். தன் முதுகில் ஒரு பெரிய வாழைத் தாரைச் சுமந்துகொண்டு, தனது தோட்டத்திலிருந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்குகிறார். இந்த தோட்டத்தில்தான் மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை மற்றும் அரிசி ஆகியவற்றை அவர் பயிரிடுகிறார். பொலிவியாவின் தலைநகரான லா பாஸுக்கு வடக்கே 600 கிமீ தொலைவில் உள்ள அமேசான் மழைக்காடுகளின் உள் பகுதிகளில் வாழும், Tsimanes (‘சீ-மே-நே’ என்று உச்சரிக்கப்படுகிறது) எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா. இந்த பழங்குடி சமூகத்தில் 16,000 பேர் வாழ்கின்றனர். மார்டினாவின் வலிமை என்பது அவரது வயதையொத்த ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு அசாதாரணமானது ஒன்றும் அல்ல. இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் இவர்களுக்குதான் ஆரோக்கியமான தமனிகள் (Arteries) உள்ளன என்று விஞ்ஞானிகள் குழு கூறுகிறது. இவர்களின் மூளை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் உள்ளவர்களை விட மெதுவாகவே மூப்படைகிறது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சீமேநே மிகவும் அரிதான ஒரு பழங்குடிக் குழு. வேட்டையாடுதல், உணவு தேடுதல் மற்றும் விவசாயம் என முழுமையான ஒரு வாழ்க்கை முறையை வாழும், உலகின் சில குறிப்பிட்ட சமூகங்களில் சீமேநேவும் ஒன்று. இந்த சமூகம், ஒரு கணிசமான அறிவியல் மாதிரியை வழங்கும் அளவுக்கு பெரியது. நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஹில்லார்ட் கப்லான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இருபது ஆண்டுகளாக இச்சமூகத்தை ஆய்வு செய்துள்ளனர். படக்குறிப்பு, தனக்கு வயது 78 என்று சொல்கிறார் ஜுவான் ‘சீமேநே’ பழங்குடிகளின் வாழ்க்கை முறை விலங்குகளை வேட்டையாடுதல், பயிர் செய்தல் மற்றும் கூரைகளை வேய்தல் என ‘சீமேநே’ பழங்குடிகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்கள். பகல் நேரத்தில் 10%க்கும் குறைவான நேரத்தையே அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் சீமேநே பழங்குடிகள் செலவிடுகிறார்கள். அதே சமயம் தொழில்துறையில் உள்ள மக்கள், 54% நேரத்தை அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளில் செலவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு சராசரி வேட்டை நிகழ்வு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் 18 கிமீ (11 மைல்) தூரம் வரை செல்ல வேண்டியிருக்கும். அவர்கள் மானிக்கி நதியில் வாழ்கின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் போன்ற பொருட்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. அவர்கள் உண்ணும் கலோரிகளில் 14% மட்டுமே கொழுப்பிலிருந்து கிடைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது அமெரிக்காவில் 34% ஆகும். அவர்களின் உணவுகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் 72% கலோரிகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து வருகின்றது. ஆனால் இது அமெரிக்காவில் 52% ஆகும். அவர்கள் வேட்டையாடும் பறவைகள், குரங்குகள் மற்றும் மீன்கள் போன்ற விலங்குகளிலிருந்து புரதங்கள் கிடைக்கின்றன. அவர்களது பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை. பட மூலாதாரம்,MICHAEL GUVERN படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகளின் பாரம்பரிய சமையல் முறைப்படி உணவைப் பொரிப்பது இல்லை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கப்லான் மற்றும் அவரது சக பணியாளரான மைக்கேல் குர்வெனின் ஆரம்பக்கால பணி மானுடவியல் சார்ந்ததாக இருந்தது. சீமேநே சமூகத்தின் முதியோர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது இதயப் பிரச்னைகள் போன்ற முதுமையின் பொதுவான நோய்களின் அறிகுறிகள் தென்படவில்லை என்பதை அவர்கள் கவனித்தனர். பின்னர் 2013இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு பேராசிரியர் கப்லானின் ஆராய்ச்சி குழுவின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ராண்டால் சி தாம்சன் தலைமையிலான குழு, பண்டைய எகிப்து, இன்கா மற்றும் உனங்கன் நாகரிகங்களிலிருந்து 137 மம்மிகளை ஆய்வு செய்ய சிடி (CT) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தியது. மனிதர்களுக்கு வயதாகும்போது, கொழுப்புச் சத்து, ரத்தக் கொழுப்பு மற்றும் இதர பொருட்களின் உருவாக்கம் தமனிகளை கெட்டியாக்குகிறது அல்லது கடினப்படுத்துகிறது. இதனால் அத்தரோஸ்கிலரோசிஸ் (atherosclerosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. 47 மம்மிகளில் இதற்கான அறிகுறிகளை அவர்கள் கண்டறிந்தனர். நவீன வாழ்க்கை முறைகளால்தான் இதுபோல ஏற்படுகிறது என்ற அனுமானங்கள் மீதான சந்தேகத்தை இது எழுப்பியது. இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 சீமேநே பழங்குடிகள் மீது சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர். அடைபட்ட இரத்த நாளங்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தின் அடையாளமாக இருக்கும் கரோனரி ஆர்டரி கால்சியத்தைக் (சிஏசி) கண்டறிவதே இதன் நோக்கம். ‘தி லான்செட்’ இதழில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், 75 வயதுக்கு மேற்பட்ட 65% சீமேநே பழங்குடிகளுக்கு சிஏசி இல்லை என்பதைக் காட்டுகிறது. அந்த வயதுடைய பெரும்பாலான அமெரிக்கர்கள் (80%) அதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். படக்குறிப்பு, சீமேநே பழங்குடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 16,000 முதல் 17,000 அடிகள் வரை நடக்கிறார்கள் ‘யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை’ கப்லான் கூற்றுப்படி, "75 வயதான சீமேநே பழங்குடிகளின் தமனிகள் 50 வயதான அமெரிக்கரின் தமனிகளைப் போன்று உள்ளது." இரண்டாம் கட்டமாக, 2023இல் ‘ப்ரோசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகளில் உள்ள மக்களுடன் ஒப்பிடும்போது, சீமேநே பழங்குடிகள் 70% குறைவான பெருமூளைச் சிதைவை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறியது. "சீமேநே பழங்குடி மக்கள்தொகையில், யாருக்கும் அல்சைமர் நோய் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது மிகப்பெரிய சாதனை" என்று ஆராய்ச்சியாளர்களின் மருத்துவ ஒருங்கிணைப்பாளரான பொலிவியன் மருத்துவர் டேனியல் ஈத் ரோட்ரிக்ஸ் கூறுகிறார். படக்குறிப்பு, ஹில்டா தனது இரண்டாவது கணவர் பாப்லோவுடன் வசித்து வருகிறார் ‘முதுமையை உணர்கிறோம்’ அவர்களின் பதிவுகளின்படி, ஹில்டாவுக்கு வயது 81. ஆனால் சமீபத்தில் தனது குடும்பம் ‘தனது 100வது பிறந்தநாளைக்’ கொண்டாடுவதற்காக ஒரு பன்றியை வெட்டி விருந்து வைத்ததாக ஹில்டா கூறுகிறார். தனக்கு வயது 78 என்று சொல்லும் ஜுவான் எங்களை வேட்டையாட அழைத்துச் செல்கிறார். அவரது தலைமுடி கருமையாகவும், கண்கள் உற்சாகத்துடனும், கைகள் உறுதியாகவும் உள்ளன. தனக்கு வயதாவதை உணர்வதாகவும் அவர் ஒப்புக்கொள்கிறார், "இப்போது எனக்கு மிகவும் கடினமான விஷயம் என் உடல்தான். நான் இனி அதிக தூரம் நடப்பதில்லை” என்கிறார் அவர். மார்டினாவும் தனது முதுமையின் சிரமத்தை ஒப்புக்கொள்கிறார். காடுகளின் உள்பகுதிகளில் வளரும் தாவரமான ஜடாட்டாவிலிருந்து மேற்கூரைகளை வேய்வதில் சீமேநே பெண்கள் புகழ்பெற்றவர்கள். இந்தத் தாவரத்தைக் கண்டுபிடிக்க, மார்டினா மூன்று மணி நேரம் காட்டுக்குள்ளும், பிறகு மூன்று மணி நேரம் வீட்டிற்கும், ஜடாட்டா கிளைகளை முதுகில் சுமந்து நடக்க வேண்டும். "நான் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இதைச் செய்கிறேன், இப்போது அது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். படக்குறிப்பு, தனக்கு வயதாவதை உணர்வதாக ஜுவான் ஒப்புக்கொள்கிறார் இருப்பினும், பல சீமேநே மக்கள் முதுமையை அடைவதில்லை. இந்த ஆய்வு தொடங்கியபோது, அவர்களின் சராசரி ஆயுட்காலம் 45 ஆண்டுகளாக இருந்தது. இப்போது அது 50ஆக உயர்ந்துள்ளது. "80 வயதை எட்டும் இந்த மக்களில் சிலர், நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் நிறைந்த குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள்" என்கிறார் டாக்டர் ஈத். அனைத்து சீமேநே மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்களால் ஒருவித தொற்றுநோய்க்கு ஆளானதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் சீமேநே பழங்குடிகள் உடலில் அதிக அளவு நோய்க்கிருமிகள் மற்றும் வீக்கத்தைக் கண்டறிந்தனர். சீமேநே பழங்குடிகள் தொடர்ந்து தொற்றுநோய்களுடன் போராடுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உணவு பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியோடு சேர்த்து, வயதான சீமேநே மக்களின் ஆரோக்கியத்திற்கு பின்னால், இந்த ஆரம்பகால நோய்த்தொற்றுகள் மற்றொரு காரணியாக இருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுவதற்கு இது வழிவகுத்தது. படக்குறிப்பு, இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களும் இணைந்து, 40 வயதிற்கு மேற்பட்ட 705 ‘சீமேநே’ பழங்குடிகளுக்கு சிடி ஸ்கேன்களை மேற்கொண்டனர் ‘மாறிவரும் வாழ்க்கை முறை’ இருப்பினும், இந்த சமூகத்தின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. சில மாதங்களாக போதுமான அளவு பெரிய விலங்கை வேட்டையாட முடியவில்லை என்று ஜுவான் கூறுகிறார். 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட தொடர் காட்டுத் தீ, கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஹெக்டேர் காடுகளை அழித்தது. "நெருப்பு விலங்குகளை இங்கிருந்து வெளியேறச் செய்தது," என்று அவர் கூறுகிறார். அவர் இப்போது கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார். மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார். இதன் மூலம் சீமேநே பழங்குடிகள் வணிகச் சந்தைகளை எளிதாக அடைய முடிகிறது. சர்க்கரை, மாவு மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை அவர்களால் எளிதில் அணுக முடிகிறது. படக்குறிப்பு, மோட்டார் படகுகளின் பயன்பாடும் மாற்றத்தைக் கொண்டுவருவதாக டாக்டர் ஈத் கூறுகிறார் மோட்டார் படகுகள் காரணமாக அவர்கள் முன்பை விட குறைவான துடுப்பு படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்று டாக்டர் ஈத் சுட்டிக்காட்டுகிறார். "மிகவும் உடலுழைப்பு தேவைப்படும் செயல்பாடுகளில் துடுப்பு படகு ஓட்டுவதும் ஒன்று" என்கிறார் அவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நீரிழிவு நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது. இப்போது இம்மக்களிடையே அவை தோன்றத் தொடங்கியுள்ளன. மேலும் இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். "அவர்களின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றம் இந்த சுகாதாரக் குறியீடுகளை பாதிக்கிறது" என்று டாக்டர் ஈத் கூறுகிறார். இந்த ஆராய்ச்சியாளர்களின் 20 ஆண்டுகால ஈடுபாடு சீமேநே பழங்குடிச் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்புரை அறுவை சிகிச்சை முதல் எலும்பு முறிவுகள் மற்றும் பாம்பு கடிகளுக்கான சிகிச்சை வரை சீமேநே மக்களுக்கான சிறந்த மருத்துவ வசதிகளை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் ஹில்டாவைப் பொறுத்தவரை, முதுமை என்பது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. "நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் என்னை பூமியில்தான் அடக்கம் செய்யப் போகிறார்கள், நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன்…மிகவும் அமைதியாக" என்று அவர் புன்னகையுடன் எங்களிடம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cly3z2dz2e2o1 point- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு தான் போடவேணும். ஆனால் ரணில் வந்தாலும் ஒன்று தான். ரணிலால் ஊழலை ஒழிக்க முடியாது. ரணிலும் இனவாதி தான் (இப்பநடக்கிற புத்தர் சிலை வைக்கிறது தொடக்கம் காணி பிடிக்கிறது வரை ரணில் தான் பின்புலம் அதை விட 83 ஆம் ஆண்டுக்கலவரத்தின் போது ரணில் தான் உள்ளூராட்சி அமைச்சர் என்றுநினைக்கிறன். உள்ளூராட்சி அமைச்சு தான் காவல்த்துறைக்கு பொறுப்பு).1 point- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
பேசாமல் அனுரவுக்கு வோட் போட்டுட்டு... 10,000 சிலிண்டர் வாங்கி, கடை ஒன்று போடலாம் என்று இருக்கின்றேன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
பாடகர் ஶ்ரீநிவாஸ் மீது முட்டை வீசியதை விடுங்கள். அதை விட மோசமாக அவரை மிகவும் மோசமான வசை சொற்கால் ஏசி உள்ளது வீடியோக்களில் பதிவாகி உள்ளது. போடா துரோகி, வடக்கத்தையன் இது விட தூஷண வார்ததைகளை அவருக்கு கூறி உள்ளார்கள். மேடையில் இருந்து அந்த ஆர்பாட்டம் செய்த கொடிகளை கையில் வைத்திருந்த காடையர்களை நோக்கி மிகவும் பண்பான முறையில் அவர் உரையாடினார். கனிவாக பேசினார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத அந்த காடையர்கள் அதை மீறி வடக்கத்தையான் போடா என்று பல தூஷண வார்ததைகளை வார்ததைகளை உபயோகித்தார்கள். இது நிச்சயம் தமிழக மக்களை சென்றடையும்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இந்த புண்ணியவான்களுக்கு திட்டமிட்டு கட்சி கூட்டம் அமைக்க தெரியும் திட்டமிட்டு இனக்கலவரம் செய்ய தெரியும் திட்டமிட்டு ஆட்சிகவிழ்ப்பு செய்ய தெரியும் ஆனால் திட்டமிட்டு ஆட்சி அமைக்க தெரியாது அப்படி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவர்களின் சித்தாந்ததின் ஊடாக ஆட்சியை தக்க வைக்க முடியாது ....என்பதும் யாழ்கள உறவுகள் அறிந்த விடயமே... இரண்டு ஆயுத கிளர்ச்சி,பல ஜனநாயக தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள்1 point- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ கொள்கையை முன்வைத்து வட கிழக்கில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழர் விடுதலை கூட்டணி போட்டியிட்ட 23 தொகுதிகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 806299 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5174 செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 801125 தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 421594 (இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் காசிஆனந்தனுக்கும் கிடைத்த வாக்குகள் உள்ளடங்கலாக) 100/801125* 421594 = 52.62 வாக்களிப்பு புள்ளி விபர ஆதாரம் தேர்தல் திணைக்களம், ஶ்ரீலங்கா. உங்களுக்கு எப்படி 72 வீதம் வந்தது? ஒருதலை பட்சமாக வரலாறு என்ற பெயரில் எதைக் கூறினாலும் லைக் போட்டு வரவேற்பார்கள் என்ற உங்கள் அனுபவத்தின் மூலம் வந்த துணிச்சல் தான் இவ்வாறு பொய்யான தகவலை கொடுக்க உங்களை தூண்டியதோ?1 point- வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
சுரேன் ஆளுனராக இருந்த போது யாழ் நகரில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார். மிகவும் நன்றாக இருந்தது என்று இதில் பரிச்சயம் மிக்க நண்பர்கள் சொல்லியிருந்தனர். ஈழத்து எழுத்து, எங்களின் பதிப்பகம் என்று இந்த துறையில் எங்கள் மீது இருக்கும் தமிழ்நாட்டின் அளவு மீறிய செல்வாக்கை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு ஆரம்பமாகவும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது....... (ஆனால் அப்படி நடக்கவில்லை...) பின்னர் கனடாவில் ஒரு கூட்டத்தில் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவே இல்லை என்று சுரேன் சொன்னார். தொடர்ந்து இதே போன்ற இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு லக்ஷமன் கதிர்காமர் ஆவதே இவரின் இலட்சியம் போலுள்ளது. அதற்கான கல்வித் தகுதி ஏற்கனவே உள்ளது, பிற தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.......... University of Kent மற்றும் University of Ottawa இல் தான் படித்திருக்கின்றார். ஆதலால் ஒக்ஸ்ஃபோர்ட் புலமைப் பரிசில் தகவல் சரியானதாகத் தெரியவில்லை. அதே போன்றதே இவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்பதும். மதம் எதுவும் இல்லை (Other) என்றே இவரின் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் விபரத்தில் இருக்கின்றது. கனடாவில் அகதியாகப் பதிவது, பின்னர் கனடா குடியுரிமை பெறுவது, அரச உதவிகள் பெறுவது, இவை எல்லாம் ஒரு விடயங்களே அல்ல. இது எல்லோரும் செய்யும் மற்றும் சட்டத்திற்கு எதிரான விடயங்களும் இல்லை. வில்லங்கமான விசயம் என்னவென்றால், எந்தக் கட்சி, தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஒரு அமைச்சராகவே இருப்பார். இருந்து கொண்டே இப்படியான கருத்துகளையும் தெரிவிப்பார். இப்படியானவர்களும் என்றும் வந்து கொண்டே இருப்பார்கள். அந்த நாளில் குமாரசூரியர் என்று ஒருவர் இருந்தாரே...............1 point- வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
உண்மைதான்.. மற்ற இனத்தில் காணக் கிடைக்காத பழக்கம் எம் இனத்தில் அதிகமாக உள்ளது. பணத்திற்காக எதனையும் செய்யத் தயாராக உள்ள மனச் சாட்சி இல்லாத மனிதர்கள்.1 point- இருளில் மூழ்கியது உக்ரைன்: இரு நாடுகள் இடையே மீண்டும் போர் தீவிரம்
ரஷ்யா - யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது? புகைப்படங்கள் உணர்த்தும் உண்மைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பொக்ரோவ்ஸ்க் நகரை ரஷ்யப் படைகள் நெருங்குவதால் அந்நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தாயும், அவரது 2 வயது மகனும். எதிர்காலத்தை எண்ணி கலங்குகிறார் அந்த தாய். (ஆக.27) 5 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு சுமார் இரண்டரை ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நீடிக்கிறது. கிழக்கு யுக்ரேனில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும், போர் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. ரஷ்யாவின் தாக்குதலை ஆக்கிரமிப்பு என்று கூறி அதன் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், யுக்ரேன் இழந்த பகுதிகளை மீட்க உதவியும் புரிகின்றன. இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களும் அடங்கும். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி ரஷ்யாவுக்குள் யுக்ரேன் துருப்புகள் நுழைந்த பிறகு இந்த போர் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரம் ச.கி.மீ.ககும் அதிகமான நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக யுக்ரேன் கூறுகிறது. இதன் பிறகு யுக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்களும், டிரோன்களும் யுக்ரேனின் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பின்னணியில் ரஷ்யாவிலும், யுக்ரேனிலும் என்ன நடக்கிறது? என்பதை இந்த புகைப்படத் தொகுப்பு விவரிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் படையினரின் ஆயுத தளவாடங்கள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திய காட்சி. (ஆக.8ம் தேதி, ரஷ்ய பாதுகாப்பு படை வெளியிட்ட புகைப்படம்) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் டொனட்ஸ்க் பிராந்தியத்தில் கிராமாடோர்ஸ்க் நகரில் சஃபயர் ஹோட்டல் அருகே ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் ஏவுகணை தாக்கியதால் இடிந்து விழுந்த கட்டடத்தில் அவசர கால மீட்புக் குழுவினர். (ஆக.25) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனின் ஜபோரிஷியா பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் வீட்டை இழந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார். (ஆக.27) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு தேடி மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் (ஆக.27) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவுக்குள் யுக்ரேன் படைகள் புகுந்துவிட்ட பிறகு, எல்லையோர சமி பிராந்தியத்தில் சோவியத் தயாரிப்பான டி-72 டாங்குகளுடன் யுக்ரேன் துருப்புகள். (ஆக.12) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர்க் களத்தில் ரஷ்யாவுக்கு தலைவலி தரும் யுக்ரேனிய டிரோன்களை இயக்கத் தயாராகும் அந்நாட்டின் 22-வது படைப் பிரிவினர். இந்த புகைப்படம் யுக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் எடுக்கப்பட்டது. (ஆக.09) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் கைப்பற்றிய சுட்ஸா நகரில் சேதடைந்த லெனின் சிலைக்கு முன்னே யுக்ரேன் ராணுவ வீரர். (ஆக.16) பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, யுக்ரேன் துருப்புகளின் திடீர் எல்லை தாண்டிய தாக்குதலால் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் வசித்த அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த காட்சி. பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY HANDOUT/EPA-EFE படக்குறிப்பு, கர்ஸ்க் பிராந்தியத்திற்குள் புகுந்த யுக்ரேன் படையினருக்கு எதிராக போரிட ரஷ்யா அனுப்பிய கூடுதல் துருப்புகள் அணிவகுத்துச் செல்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க தயாரிப்பான எஃப்-16 போர் விமானங்களை அதன் நட்பு நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன. அவ்வாறு பெற்றுக் கொண்ட எஃப்-16 விமானங்களின் முன்பாக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி. இந்த விமானங்கள் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனக்கு சாதகமான திருப்புமுனையை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்று யுக்ரேன் எதிர்பார்க்கிறது. https://www.bbc.com/tamil/articles/ce9zydr0xk3o1 point- தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்!
நாய் நடுக்கடல் போனாலும் நக்கித்தான் குடிப்பதை மாற்ற முடியாது. அதுபோலவே மகிந்த குடும்பத்தினராலும் இனவாதம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது. நாயைவிட மகிந்த குடும்பத்துக்குக் கிடைத்த பெறுபேறு, மகிந்தர் சேர்த்து வைத்திருக்கும் மில்லியன்கள். இது பணநாயக உலகம், அவர்கள் பின்னால் நாக்கைத் தொங்கப்போட்டுத்திரியவும் நாய்கள் பல உள்ளன.🐕🦮1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- சாம்பல் மேட்டு அரசியல்!
1 pointஎதை வைச்சு 2005 ஆம் ஆண்டு ரணில் வந்திருந்தால் முள்ளிவாய்க்கால்நடந்திருக்காது என்று சொல்லுகினம் எனக்கு விளங்கவே இல்லை. ஏனென்றால் மற்ற ஆய்வுகளில் உலக அரசியல் புலிகளுக்கு தெரியாததாலை தான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கு. ஆகவே யார் வந்தாலும் முள்ளிவாய்க்கால்நிகழ்ந்திருக்கும் தான் (இந்தியா என்ன விலை குடுத்தும் அழிக்கத்தான்நினைத்தது என்று எல்லாருக்கும் தெரியும்)1 point- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
எப்பூடி....? ஆயுதப்போராட்டத்திற்கு பின் சுடச்சுட பொன்சிக்கு குத்தி புளங்காகிதமடைந்து சொன்ன செய்தி போலவா ....? அப்பூடியா...? பேரம்பேசும் பலத்தை வைத்து என்ன புடுங்கினார் முக்கியமாக உங்க ஆள் ...? ஏக்கிய ராஜ்ய அதனுடைய மீனிங் எனக்குமட்டுமே தெரியும் என்னிடம் மட்டும் ரணில் சொல்லியிருக்கிறார் போன்ற உதார்களையும், கிழக்கு மாகாணத்தை முற்றாக விட்டுக்கொடுத்துவிட்டு நஸீரின் மாட்டு புரியாணியை கிண்டியதையும், கல்முனை பிரதேசபை பிரிப்பு போராட்டத்திற்கு வந்து செருப்பு விளக்குமாறு கதிரையால் வெழுவை வாங்கியதை தவிர ...?1 point- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ஏதாவது ஒரு சம்பவத்துக்கு எதிர்ப்புக்காட்ட வன்முறைகளில் இறங்குவது அறவே தவிர்க்கப்படவேண்டும். நீங்கள் வீரபோராட்டம் நடத்திவிட்டு வீட்டுக்குபோய் சமைச்சு சாப்பிட்டு அடுத்த வாரமே எல்லாமே மறந்து போவீர்கள், ஆனால் அரசாங்கங்கள் இது சம்பந்தமான அமைப்புக்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கணனியில் போட்டு வைக்கும் அது உங்கள் சந்ததிகள் மாறியபின்னரும் அரசின் கண்காணிப்பில் இருக்கும். எங்கள் அமைப்புக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அனுதாபத்துடன் நோக்க பல ஆயிரம் தடவை பல வருடங்கள் மீள மீள சரி பார்க்கும் தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியது கேவலத்தின் உச்சம், நிகழ்வு ஏற்பாடு செய்தது யாரோ, இவர்கள் காசு வாங்கிட்டு பாட வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் தகராறு தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் ஸ்ரீனிவாஸ் எந்த நிகழ்விலும் புலம்பெயர் தமிழர்கள் பற்றி உயர்வாகவே பேசுவார். வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தி அனுப்புவதுபோல் இருக்கிறது இவர்கள் செயற்பாடு. சுவிசில் ஏற்கனவே ஒரு புடுங்குபாடு நடந்து முடிய இப்போது கனடாவில், இந்த லட்சணத்தில் புலிகளின் தடையை சர்வதேசத்தில் நீக்கவேண்டுமென்று நம்மவர்கள் கூப்பாடு. இறுதி நிமிடம்வரை ஒரே தலைவன் கீழ் ஒரே லட்சியத்துக்காக ஒரே மக்களின் விசுவாசமிக்க இயக்கமாக வாழ்ந்து மறைந்த இயக்கம் , தடை மட்டும் எடுக்கப்படும் நிலை வந்தால் பல புலிகள் இயக்கமாக பல தலைவர்களாக பல கொள்கைகளாக பிளவுபட்டு புலிகள் இயக்கத்தின் புனிதத்தையே சாக்கடையாக்கும் நிலமையே நிலையே தோன்றும். முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர் புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும். அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள். புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.1 point- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...1 point- கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அறிவித்து விட்டு, பின் இலங்கை சென்று, யுத்த குற்றங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் புத்த பிக்குகளை மாத்திரம் அல்ல, ரணில் அரசுடன் மட்டுமல்ல, மகிந்தவுடனும் கைகுலுக்கி U turn அடித்தது. இப்படி புலம்பெயர் அமைப்புகள் செய்வது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அப்படி செய்யாமல் விட்டால் தான் ஆச்சரியம். இந்த தமிழர் தி(தெ)ருவிழாவை CTC தான் நடாத்துவதால், சில தமிழ் அமைப்புகள் இதனை புறக்கணிக்க சொல்லிக் கேட்டு இருந்தன. முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார் (இவரது கட்சியான கொன்சர்வேட்டி தான் புலிகளை கனடாவில் தடை செய்தது என்பது வேறு விடயம்). வழக்கமாக இப்படியான தெருவிழாவுக்கு செல்லும் பல தமிழர்கள் இந்த நிகழ்வை இம்முறை புறக்கணித்தும் இருந்தனர். நான் இவ்வாறான கூத்துகளுக்கு செல்வதில்லை என்பதால் இதற்கு இம்முறையும் செல்லும் எண்ணத்தில் இருக்கவில்லை. நிற்க, தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது? ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)1 point- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
சிறிமாவின்ர திட்ட கொப்பி போல கிடக்கு....1 point- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
ஒன்றும் தரமுடியாது என்பதை சொல்லாமல் சொல்வது.1 point- Telegram app founder Pavel Durov arrested at airport in France
Free speech க்கு என்னவாயிற்று ? 🤣 ""Why do you think they just arrested the owner of Telegram, Pavel Durov? This is a test run. They are setting a precedent. Their ultimate target is Elon Musk"" Naomi Seibt, a German conservative political activist, மேற்கின் பேச்சுச் சுதந்திரம் சந்தி சிரிக்கிறது. 🤪1 point- சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்
1 pointசங்கும் சிலிண்டரும் - நிலாந்தன் இலங்கைத் தீவின் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா? முதலாவது சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி. அவர் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி சுயேட்சைச் சின்னத்தில் போட்டியிடுவது இதுதான் முதல் தடவை. உண்மையில் அவர் சுயேச்சை அல்ல. தாமரை மொட்டு கட்சியின் பெரும்பாலான பகுதி அவருக்கு பின் நிற்கின்றது. அப்படிப் பார்த்தால், அவர் தாமரை மொட்டுக்களின் மறைமுக வேட்பாளர்களில் ஒருவர். தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிக்கு பின் எழுச்சி பெற்றது. ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை குடும்பமயப்படுத்தி நிறுவனமயப்படுத்தி கட்டியெழுப்பியதே பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுக் கட்சியாகும். ஆனால் ரணில் இப்பொழுது அதில் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டார். இலங்கைத் தீவின் கட்சி வரலாற்றில் இறுதியாகத் தோன்றிய பெரிய கட்சியும் சிதையும் ஒரு நிலை. அதன் விளைவாகத்தான் ரணில் சுயேட்சையாக நிற்கிறார். ரணில் சுயேட்சையாக நிற்கிறார் என்பதற்குள் ஓர் அரசியல் செய்தியுண்டு. அது என்னவென்றால் இலங்கைத்தீவின் பிரதான கட்சிகள் யாவும் சிதைந்து போகின்றன என்பதுதான். இலங்கைத் தீவின் மூத்த கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு அவர். ஆனால் அந்தக் கட்சி சிதைந்து சஜித் பிரேமதாசாவின் தலைமையில் வேறொரு கட்சி ஆகிவிட்டது. அதுபோல இலங்கைத் தீவின் மற்றொரு பெரிய பாரம்பரிய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதைந்து அதிலிருந்துதான் தாமரை மொட்டுக் கட்சி தோன்றியது. இப்பொழுது தாமரை மொட்டுக் கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. இக்கட்சிகள் ஏன் சிதைக்கின்றன? ஏனென்றால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் சிதைந்து விட்டது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எங்கே சிதையத் தொடங்கியது? இலங்கை தீவின் பல்லினத்தன்மையை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஏற்றுக்கொள்ளத் தவறியபோதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் இலங்கைத் தீவின் பாரம்பரிய கட்சிகள் சிதைவதற்குக் காரணம். ஈழப் போரின் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரிய கட்சிகள் இரண்டுமே சிதைந்து விட்டன. அந்த சிதைவிலிருந்து தோன்றிய மற்றொரு பெரிய கட்சியும் சிதையத் தொடங்கிவிட்டது. அந்தச் சிதைவின் வெளிப்பாடுதான் ரணில் சுயேட்சையாக நிற்பது. அதாவது இனப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறினால் இலங்கைத் தீவின் ஜனநாயகம் மேலும் சிதையும் என்பதன் குறியீடு அது. அவருடைய சின்னம் சிலிண்டர். அதுவும் ஒரு குறியீடு எந்த ஒரு சிலிண்டருக்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் காத்து நின்றார்களோ அதே சிலிண்டர்தான். அது நாட்டை பொருளாதார ரீதியாக அவர் மீட்டெடுத்ததன் அடையாளமாகக் காட்டப்படக்கூடும். எனினும் ஒரு நாட்டின் ஜனாதிபதி சுயேட்சையாகப் போட்டியிடும் அளவுக்கு நாட்டின் கட்சி நிலவரம் உள்ளது என்பதை அது காட்டுகிறது. அதாவது ரணில் ஒரு வெற்றியின் சின்னமாக இங்கு தேர்தலில் நிற்கவில்லை. சிதைவின் சின்னமாகத்தான் தேர்தலில் நிற்கின்றார். மற்றொரு சுயேச்சை, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரன். அவருடைய சின்னம் சங்கு. அது மகாவிஷ்ணுவின் கையில் இருப்பது. போர்க்களத்தில் வெற்றியை அறிவிப்பது. சுடச்சுட பண்பு கெடாது வெண்ணிறமாவது. தமிழ்ப் பண்பாட்டில் பிறப்பிலிருந்து இறப்புவரை வருவது. பிறந்த குழந்தைக்கு முதலில் சங்கில் பாலூட்டுவார்கள். திருமணத்தில் முதலில் பாலூட்டுவது சங்கில்தான். இறப்பிலும் சங்கு ஊதப்படும். அரியநேத்திரன் ஒரு குறியீடு. அவருடைய சின்னமும் ஒரு குறியீடு. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பொது நிலைப்பாடு என்பது பிரயோகத்தில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிக்கும் ஒருவர் சுயேட்சையாக நிற்பதன் பொருள் என்ன? அவர் கட்சி கடந்து நிற்கிறார் என்றும் வியாக்கியானம் செய்யலாம். அவர் ஒரு கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்தான். ஆனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக அவர் இங்கு நிற்கவில்லை. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளின் பிரதிநிதியாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவர் ஒரு பொது நிலைப்பாட்டின் பிரதிநிதியாக நிற்கிறார். அதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. இது ஒரு புதிய பண்பாடு.கட்சிக்காக வாக்குக் கேட்காமல்,ஒரு தனி நபருக்காக வாக்கு கேட்காமல்,ஒரு பொது நிலைப்பாட்டுக்காக வாக்கு கேட்பதற்கு ஒருவரை பொதுவாக நிறுத்தியிருப்பது என்பது. அரியநேத்திரன் தமிழரசுக் கட்சிப் பாரம்பரியத்தில் வந்தவர். ஆனால் அவருடைய கட்சி பொது வேட்பாளர் தொடர்பாக இன்றுவரை முடிவு எடுக்கவில்லை. கடைசியாக அந்த கட்சியின் மத்திய குழு கடந்த வார இறுதியில் கூடியபொழுதும் முடிவு எடுக்கப்படவில்லை. கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தங்களுடையது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சி, அதிலும் குறிப்பாக இனஅழிப்புக்கு நீதி கோரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதாகக் கருதும் ஒரு கட்சியானது, எவ்வாறு தலைமை தாங்க வேண்டும்? அது எதிர்த் தரப்பின் அல்லது வெளித் தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு பதில் வினையாற்றும் அரசியலை முன்னெடுக்க வேண்டுமா? அல்லது செயல்முனைப்போடு நீதியைக் கோரும் போராட்டமாக அந்த அரசியலை வடிவமைக்க வேண்டுமா? கட்சியின் மூத்த தலைவர் சிவஞானம் கூறுகிறார், மக்கள் முடிவெடுப்பார்கள் என்று. தலைமை தாங்குவது என்பது மக்களை முடிவெடுக்க விட்டுவிட்டு மக்களின் முடிவைக்ககட்சி பின்பற்றுவது அல்ல. கட்சி முடிவெடுத்து மக்களுக்கு வழிநடத்த வேண்டும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு வழிநடத்துவதற்குப் பெயர்தான் தலைமைத்துவம். ஆனால் தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தருவார்கள் என்று அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையும் காத்திருப்பது என்பது ஒரு போராடும் இனத்துக்கு அழகில்லை; மிடுக்கில்லை; அதற்கு பெயர் தலைமைத்துவமும் இல்லை. பொது வேட்பாளர் விடையத்தில் தமிழரசுக்ககட்சி இரண்டாக நிற்கிறது என்பதே உண்மை நிலை. ஒருமித்த முடிவு எடுக்க முடியாமலிருப்பதற்கு அதுதான் காரணம். அதாவது தலைமைத்துவம் பலமாக இல்லை என்று பொருள். தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது தலைமைத்துவப் பலவீனம்தான். கிடைக்கும் தகவல்களின்படி எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் 13ஆவது திருத்தத்திற்கு மேல் எந்த ஒரு தீர்வையும் தரப்போவதில்லை. தமிழரசுக் கட்சி முன்வைக்கும் சமஸ்டித் தீர்வுக்கு எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை. ஆயின், யாருடைய தேர்தல் அறிக்கைக்காக தமிழரசுக் கட்சி காத்திருக்கின்றது ? அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப்போகப் போகிறோம் என்பதையா? அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா? பகிஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத்தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று காத்திருக்கிறார்களா? அதற்குச் சிறீதரன் அணி தயாரா? கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது அங்குள்ள விவசாய அமைப்புகள் அப்பொதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்திப் பேசினார். கடந்த மாதம் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும், மாவையிடம் கையளித்த ஆவணம் ஒன்றைப்பற்றியும் அதிலவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதைப் பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். போலீஸ் அதிகாரத்தை இப்போதைகுத்த் தர முடியாது என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதை தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியுள்ளார். அதை பதிமூன்று மைனஸ் என்று சிறீதரன் வர்ணிதார். ஆயின், தமிழரசுக் கட்சி 13 மைனசை ஒரு பேசுபொருளாக ஏற்றுக்கொள்ளத் தயாரா? இல்லையென்றால், யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்ரிக் கட்சி காத்திருக்கின்றது? சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத்தட்டில் வைத்துத்தருவார் என்று இப்பொழுதும் சமஷ்ரிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டந்தான் என்பதனை சமஸ்ரிக்கட்சி ஏற்றுக் கொள்கிறதா? அக்கட்சி முடிவெடுக்காமல் தடுமாறுவதும் ஒரு விதத்தில் பொது வேட்பாளர் அணிக்குச் சாதகமானது. உள்ளதில் பெரிய கட்சி முடிவெடுக்காமல் இரண்டாக நிற்பது பொது வேட்பாளருக்கு நல்லது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்காளர்களும் உட்பட தமிழ்மக்கள் தங்களுக்குத் தெளிவான இலக்குகளை முன்வைத்து தங்களை வழிநடத்த தயாரானவர்களின் பின் திரள்வார்கள். ஏற்கனவே ஈரோஸ் இயக்கத்தின் சுயேச்சைக் குழு பெற்ற வெற்றி ஒரு மகத்தான முன்னுதாரணமாகும். அது இலங்கைத்தீவின் தேர்தல் வரலாற்றில், தமிழரசியலில் ஒரு நூதனமான வெற்றி. அந்தத் தேர்தலில் அமிர்தலிங்கம், சம்பந்தர், யோகேஸ்வரன், ஆனந்தசங்கரி உட்பட பல மூத்த தலைவர்கள் தோல்வியடைந்தார்கள். அதைவிட முக்கியமாக திருகோணமலையில் இரண்டு ஆசனங்கள் கிடைத்தன. அன்றைக்கு அந்த சுயேட்சைக் குழுவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்க் கூட்டுணர்வுக்குக் கிடைத்த வெற்றி. இன்றைக்கும் தமிழ்க் கூட்டுணர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுப்பார்களாக இருந்தால், அது தமிழ்த் தேசிய அரசியலின் போக்கை மட்டுமல்ல, இலங்கை தீவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கைகையும் தீர்மானிக்கும் வாக்களிப்பாக அது அமையும். https://www.nillanthan.com/6860/1 point- தமிழ்நாட்டில் 40% மாணவர்கள் கல்லூரியில் சேரவில்லையா? - தரவுகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் "தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவர் பிளஸ் 2 முடித்த பின்னர், எந்தக் கல்லூரியில் சேர்ந்தார் என்பதை எவ்வாறு கண்டறிவது?" என்று கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், "யுமிஸ்" (UMIS) எனப் பதில் வரும். அதென்ன யுமிஸ்? பள்ளிக்கல்வியில் சேரும்போது ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் (EMIS - Educational Management Information System) என்ற எண் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவர் உயர்கல்வியில் சேரும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், அரசின் யுமிஸ் (University Managment Information System) செயலியில் அதைப் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவான தரவுகளின்படி, தற்போது வரை சென்னையில் 40% மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போதுவரை, சென்னையில் ஐந்து மாணவர்களில் இரண்டு பேர் உயர்கல்வியில் சேராமல் இருப்பதாக, கல்வித்துறையின் தகவல் மைய அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இதில், பிளஸ் 2 முடித்த 16,061 பேரில் 6,584 பேர் எந்தவிதமான உயர்கல்வி படிப்பிலும் சேரவில்லை. இந்த 6,584 பேரில் 958 பேர் மட்டும் தற்போது உயர் கல்விக்காக விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. "இது தற்போது வரையிலான தரவுகள்தான். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பின்னர் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்," எனக் குறிப்பிடுகிறார் கல்வித்துறையின் தகவல் மைய அதிகாரி ஒருவர். இதோடு, கடந்த ஆண்டு உயர்கல்வியில் இணைந்த மாணவர்களின் விவரங்களை துறையின் உயர் அதிகாரி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். படக்குறிப்பு, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கல்லூரியில் சேராத 1.50 லட்சம் பேர்? அதன்படி, 2022-2023-ஆம் கல்வியாண்டின் தரவுகளைப் பார்த்தாலும், தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 40% மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேரவில்லை எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் 2022-23 கல்வி ஆண்டில் 3,97,809 மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2,39,270 பேர் மட்டும் உயர் கல்வியில் இணைந்துள்ளனர். அரசின் எமிஸ் மற்றும் யுமிஸ் செயலி வாயிலாக இது தெரிய வந்துள்ளது. இதில், “1,13,099 மாணவர்கள் உயர் கல்விக்காக விண்ணப்பிக்காமல் இருக்க வேண்டும் அல்லது அதுகுறித்த போதிய தரவுகளோ தங்களிடம் இல்லை,” என தகவல் மைய அதிகாரி குறிப்பிட்டார். "முன்பெல்லாம் பிளஸ் 2 முடித்தால் எதாவது ஒரு வகையில் பட்டம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2017-க்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது," என்கிறார், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. "கடந்த 2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வும் பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வும் வந்தன. தற்போது மத்திய பல்கலைக் கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்கும்போது இவை பரவலாக்கப்படும். இதுபோன்ற தேர்வுகள் கல்வியின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க வைக்கின்றன,” என்கிறார் அவர். பள்ளியில் மாணவர் பெறும் மதிப்பெண்ணை, உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளாமல் வேறொரு தேர்வு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது நெருக்கடியைக் கொடுப்பதாகக் கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. மேலும், “நுழைவுத் தேர்வுகளை மையப்படுத்தியே அனைத்தும் இருப்பதால் பிளஸ் 2 வகுப்பில் பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர். அதுதான், இதுபோன்ற பிரச்னைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது," என்கிறார் அவர். சென்னையின் சூழல் குறித்து விவரித்தவர், "காசிமேடு, நொச்சிக்குப்பம், என அனைத்தும் சேர்ந்ததுதான் சென்னை. அங்குள்ள சூழல்களைக் கவனித்தால் மாணவர்களின் நிலையை உணர முடியும். சமூகத்தில் ஒடுக்குமுறை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, நுழைவுத் தேர்வுகள், அரசுக் கல்லூரி, அரசுப் பல்கலைக்கழகங்களில் சுயநிதிப் பாடப் பிரிவுகள் என அனைத்தும் வணிகமயமாகிவிட்டன. இதனால் உயர்கல்வியை நோக்கி ஏழை மாணவர்கள் நகர முடியாத சூழல் ஏற்படுகிறது. குடும்பச் சூழல்களைச் சமாளிக்க வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்," என்கிறார் அவர். 400 பேருக்கு ஓர் ஆசிரியரா? ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தில் பற்றாக்குறை நிலவுவதை முக்கியக் காரணமாகக் கூறும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "பிளஸ் 2 வகுப்பில் 400 மாணவர்களுக்கு ஒரு தமிழ் ஆசிரியர் என்ற நிலை உள்ளது. 240 பேருக்கு ஒரு இயற்பியல் ஆசிரியர் இருக்கிறார். ஆய்வகங்களையும் அவரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. "இதனால், 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சியைக் கொடுக்க முடிவதில்லை. மாணவர்களும் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர். இந்த மதிப்பெண்ணுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சீட் கிடைப்பதில்லை," என்று விவரித்தார். அதேநேரம், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர இயலாத மாணவர்களின் பின்னணியைக் கண்டறியும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை ஆர்வம் செலுத்தியது. இதில், குடும்பச் சூழல், உயர்கல்வியில் ஆர்வமின்மை, பெற்றோர் படிக்க அனுமதிக்காதது, வேலைக்குச் செல்வது, விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை கிடைக்காதது உள்படப் பல காரணங்களை மாணவர்கள் தரப்பில் முன்வைத்துள்ளனர். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்கல்வியில் இணையாத மாணவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான குழுவில், மாவட்ட ஆட்சியர், திறன் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். இக்குழுவினர் வாயிலாகப் பல மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். படக்குறிப்பு, கல்வியாளர் நெடுஞ்செழியன் ‘அதிகரித்த உயர்கல்விச் செலவு’ உதாரணமாக, விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் 17,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 17,198 பேர் (98.6%) உயர்கல்விக்குச் செல்ல உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதில், மீதம் உள்ள 308 மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், உயர்கல்விக்கான செலவு அதிகரித்துவிட்டதே மாணவர்கள் சேர்க்கை குறையக் காரணம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். "பிளஸ் 2 முடித்த பிறகு உயர்கல்வி சேரும்போது விண்ணப்பப் படிவத்தின் விலையே ஏழை மாணவர்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கச் சொல்கின்றனர். கிராமங்களில் பலரின் வீடுகளில் இணையதள வசதிகள் இல்லை. உயர்கல்வி பயில வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்தையும் அரசு இலவசமாகக் கொடுக்க வேண்டும்," என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். "நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை ஓ.பி.சி பிரிவினர் 1,400 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டும். பொறியியல் கலந்தாய்வுக்கு 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வாங்குகின்றனர். மத்திய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கலாம் என்பதே தமிழக மாணவர்களுக்குத் தெரிவதில்லை. கல்வியை அதிக செலவீனம் உள்ளதாக மாற்றியதுதான், உயர்கல்வியில் சேர்க்கை குறையக் காரணம்," என்கிறார் அவர். "மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறினால், அதை எங்களின் சொந்தப் பிரச்னையாகப் பார்க்கின்றனர். அடிப்படைப் பிரச்னைகளை ஆராயாமல் முழுமையான தீர்வைத் தருவது கடினம்," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு. பட மூலாதாரம்,GETTY IMAGES பள்ளிக்கல்வித்துறை செயலர் சொல்வது என்ன? இதுகுறித்துப் பேசிய பள்ளிக்கல்வித் துறைச்செயலர் மதுமதி, "தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களைக் கண்காணிக்கிறோம். அவர்களுக்குப் படிப்பதில் ஆர்வம் இருக்கிறதா அல்லது திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஆர்வம் உள்ளதா என்பதை அறிந்து வேலைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்," என்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அவர்களது மதிப்பெண் குறைவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் மறுதேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் கல்லூரிகள் அல்லது தொழிற்கல்வியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். "பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை செப்டம்பர், அக்டோபரில் இருந்தே தலைமை ஆசிரியர்கள் கவனிக்கத் தொடங்குகின்றனர். மாணவர் எத்தனை நாள் பள்ளிக்கு வருகிறார், எந்தப் பாடத்தில் ஆர்வம் குறைவு என்பதை முன்கூட்டியே கணிக்கின்றனர்," என்கிறார். சென்னையில் உயர்கல்வி சேர்க்கை குறைவு குறித்துப் பேசிய மதுமதி ஐ.ஏ.எஸ், "யுமிஸ் செயலி கடந்த ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கை முடியும்போது, முழு விவரங்களும் தெரிய வரும்," எனக் குறிப்பிட்டடார். மேலும், "சூழல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால், அதை மட்டுமே காரணமாகக் கூற முடியாது. முதல் தலைமுறை பட்டதாரிகளாக எத்தனையோ பேர் வருகின்றனர். உயர்கல்வியில் இணைய முடியாமல் போவதற்கான காரணங்களைச் சரிசெய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார். "இந்தியாவில் உயர்கல்வி விகிதாரச்சாரம் என்பது 28.3 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதம் என்பதில் இருந்து குறைந்து வருகிறது. மாணவர்களுக்குப் பல்வேறு நிலைகளில் அரசின் தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது. அது கிடைக்கும் போதுதான் உயர்கல்வியை நோக்கி அவர்களை ஈர்க்க முடியும்," என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். https://www.bbc.com/tamil/articles/clyn1v5e7xro0 points - பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.