Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2951
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/13/24 in all areas

  1. ஸ்ரெபான் ராப் ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக யேர்மனியில் அறியப்பட்டவர். பாடல்கள் இயற்றுவது இசை அல்பங்களைத் தயாரித்து வெளியிடுவது, பாடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் செய்வது என மேலும் பல விடயங்களில் தன்னை வெளிக்காட்டியவர். பெண்களுக்கான குத்துச் சண்டையில் யேர்மனியில் முன்னணியில் இருந்த ரெஜினா ஹால்மிஸ்ஸை இவர் நகைச்சுவையாக விமர்சிக்கப் போய், அது இருவரையும் குத்துச் சண்டை வளையத்துக்குள் கொண்டு வந்து விட்டு விட்டது. ரெஜினா ஹால்மிஸ், தனது வாழ்நாளில் சந்தித்த 56 குத்துச் சண்டைப் போட்டிகளில் 54 தடவைகள் வெற்றியையும் ஒரே ஒரு தடவை தோல்வியையும் ஒரு தடவை சமநிலையையும் தழுவிக் கொண்டவர். “பெண்ணோடு மோதுவது என்ன பெரிய வேலையா?” என்று நினைத்து ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் 2001ஆம் ஆண்டு குத்துச் சண்டைக்குப் போன ஸ்ரெபான் ராப், தோற்றுப் போனார். மூக்குடைபட்டு இரத்தம் வழிய அவர் இருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்த நாள் ஊடகங்களில் வெளிவந்ததில் அவர் பெருத்த அவமானங்களுக்கு ஆளானார். ‘ஒரு பெண்ணிடம் தோற்பது எவ்வளவு அவமானம்? அவளை வென்றே தீருவேன்’ என்ற அவரது வீராப்பு மீண்டும் ரெஜினா ஹால்மிஸ்ஸை 2007இல் மோத அழைத்தது. இம்முறை நடந்த குத்துச் சண்டையில் ஸ்ரெபான் ராப்புக்கு மூக்கு உடைபடவில்லை ஆனாலும் தோற்றுப் போனார். ஸ்ரெபான் ராப் ஊடகங்களுடான தனது தொழிலை 2015 இல் நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் பொது வெளியில் வந்ததில்லை. திடீரென இப்பொழுது ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். “நான் ரெஜினா ஹால்மிஸ்ஸுடன் மோதத் தயார்” என அறிவித்திருக்கிறார். ஸ்ரெபான் ராப்புக்கு இப்பொழுது வயது 57. ரெஜினா ஹால்மிஸ்ஸுக்கு 47 வயது. ரெஜினா ஹால்மிஸ்ஸும் குத்துச் சண்டைப் போட்டியில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று விட்டவர். ஆனாலும் ஸ்ரெபான் ராப்பின் சவாலை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இருவரும் நாளை இரவு (14.09.2024) டுசுல்டோர்ப் நகரத்தில் மோதப் போகிறார்கள். ரெஜினா ஹால்மிஸின் எடை 50கிலோ, ஸ்ரெபான் ராப்பின் எடை 80கிலோ. ரெஜினா ஹால்மிஸ் எடையில் மட்டுமல்ல உயரத்திலும் ஸ்ரெபான் ராப்பைவிடக் குறைவானவர். “ஒரு பெண்ணிடம் பொது வெளியில் தோற்றுப் போன ஸ்ரெபான் ராப்பின் மனதில் உள்ள வலி அவரை சும்மா இருக்கவிடவில்லைப் போலும். கடந்த ஒன்பது வருடங்களாக நல்ல பயிற்சிகள் எடுத்துவிட்டு இப்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். குத்துச் சண்டைகளில் 25 வருட அனுபவங்கள் எனக்கிருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்” என ரெஜினா ஹால்மிஸ் தெரிவித்திருக்கிறார். இந்தப் போட்டி நாளை யேர்மன் தொலைக்காட்சி( RTL)இல் 20.15க்கு நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது. பார்க்கலாம்.
  2. பாராட்டுக்கள் .......... உங்களுக்கென்று தனியாக அதுவும் மிகவும் பிரயோசனமான கருத்துக் படங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்ரீர்கள் . ........பத்து செய்திகளை வாசிப்பதைவிட ஒரு படம் போதும் அன்றன்றைய அரசியலை அவதானிக்க ..........மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும் . ........அதில் அணில்போல் நானும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கின்றேன் என நினைத்து மகிழ்கின்றேன் .......யாழுக்கும் நன்றி . ..........! 💐
  3. இல்லை கொலை இவருக்கு விடுதலை. வைச்சு செய்ய வேண்டும். 😡 ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே.
  4. நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி கவி…! ஒரு மான்குட்டியை ஒரு சிங்கமோ அல்லது புலியோ பிடித்து வைத்து விளையாடுவதைக் கண்டிருக்கிறீர்களா? கடலின் வெளியே துடித்துக் கொண்டிருக்கும் மீனை,ஒரு கொக்கு ஒன்று தூக்கித் தண்ணீரில் போடுவதைக் கண்டுள்ளீர்களா? வலையில் பிடி படும் குஞ்சு மீன்கள் மற்றும் பாம்பு, பேத்தை போன்றவற்றைத் திரும்பவும் கடலில் விடுவதற்கான காரணம் என்ன? இந்திய மீனவர் விதி விலக்கு. இயற்கையில் ஒரு விதி இருக்கின்றது. அது எம்மை அறியாமலே உயிர்களை இயக்குகின்றது. அவ்வாறான ஒரு நிகழ்வே இந்த இளைஞனின் கதை. பிரம்மஹத்தி என்று சைவம் கூறிவது இதைத் தான். எம்மை இயக்கும் இயற்கையின் சூத்திரங்களில் இதுவும் ஒன்றே ….!
  5. பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்னம்பிக்கையை கொடுங்கள் விரும்பிய படிப்பை படிக்க வையுங்கள் இசை பயில நடனம் பயில தற்காப்பு கலைகள் பழக ஆர்வமாயிருந்தால் அதற்கான வழிகளை செய்து கொடுங்கள் இன்னொரு வீடு இல்லத்தரசியாய் வாழப் போறவள் என்று சமையல் பழக்குவதை விடவும் சட்டி பானை கழுவப் பழக்குவதை விடவும் தையல் பழக்குவதை விடவும் பிரச்சனைகளின் போது எப்படி மீள வேண்டும் பிரிவுகளின் போது தனித்து எப்படி வாழ வேண்டுமென்று தையிரியத்தை சொல்லிக் கொடுங்கள் அதட்ட வேண்டிய நேரம் அதட்டி வளருங்கள் தட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் தட்டிக் கொடுங்கள் பெண்ணுக்கு அறிவை விடவும் தங்கமோ நிலமோ பெரியதில்லை படிப்பிருந்தால் தங்கமும் நிலமும் பணமும் தானாய் வந்து கதவு தட்டும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு உலகம் கைகள் தட்டும் சிறப்புடன் வாழ சிரிப்புடன் வாழ வைப்போம் படித்ததில் பிடித்தது .
  6. எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.
  7. தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம், தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில் பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்! செய்வீர்களா? ( முகநூலில் வாசித்தது)
  8. உடனுக்குடன் அன்றைய அரசியல் கண்ணோடட கருத்துப்படங்களை தரும் சிறீ ...பாராடட படத்தக்கவர் . நானும் சில சமயங்களில் தென்பட்டால் புள்ளடி ( விருப்பு குறி )போடுவதுண்டு .உண்மைதான் ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை விட படங்கள் உடனே மனதில் பதிந்து விடும். மேலும் தொடர வாழ்த்துக்கள்.
  9. ஒரே ஒருவருக்கு எனில் புள்ளடியும் விருப்பு வாக்கு எனில் 1 2 3 என விருப்பமானவர்களுக்கு போடலாம். 1 போட்டு 2 3 போடாதுவிடின் எண்ணுமிடத்தில் அரசியல் கட்சி சார்ந்தோர் குழுவாகப் பணி செய்தால் 2ஆவது 3ஆவது வாக்கை தமது விருப்புக்கு போடலாம்!
  10. அவனுக்கு வயது 44. ஜனவரி 26 மாலை 6:15 மணியளவில் Ulm நகரத்தில் Muensterplatz இல் உள்ள ஸ்டார்பக்ஸ் கோப்பிக் (Starbucks Coffee) கடைக்குள் நுளைந்த போது அவனிடம் துப்பாக்கி ( HK416) ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு கத்திகளும் இருந்தன. கோப்பியை ருசித்தவனுக்கு இப்பொழுது சிகரெட் தேவைப்பட்டது. கோப்பிக் கடைக்குள் புகைக்க அனுமதி இல்லை. கடைக்கு வெளியே போனால்தான் சிகரெட் பிடிக்க முடியும். எழுந்து கொண்டான். தனது மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு தம்பதியிடம், “நான் புகைக்க விரும்புகிறேன். எனது பையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கனிவுடன் கேட்டுக் கொண்டான். வாயில் இருந்து புகை தானாகவே வரும் அளவுக்கு வெளியே குளிர் இருந்தது. சிகரெட் புகையையும் அதனுடன் கலந்து விட்டான். கோப்பியில் கிடைத்த கொபைன் தந்த உற்சாகம், புகைபிடித்ததால் கிடைத்த நிக்கோட்டின் தந்த இன்பம் இரண்டும் கலந்த நிலையில் கடைக்குள் திரும்பி வந்தான். தனது பையைப் பாதுகாத்த தம்பதிகளுக்கு நன்றி சொன்னான். கூடவே ஒரு காகிதத் துண்டை அவர்களிடம் கொடுத்தான். “வெளியே போய் விடுங்கள். பொலிஸைக் கூப்பிடுங்கள். மிக்க நன்றி” காகிதத்தில் இருந்த வாசகத்தைப் பார்த்ததும், தம்பதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. “நாங்கள் எதற்காகப் போக வேண்டும்?” அவர்கள் தங்கள் ஆட்சேபணையை வெளிப்படுத்தினார்கள். அவன் தன்னிடம் இருந்த 185 யூரோக்களை எடுத்து அவர்களிடம் நீட்டினான். “பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். காகிதத்தில் எழுதி இருப்பதைச் செய்யுங்கள்” என்றான். மீண்டும் தம்பதிகள் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. “நாங்கள், எங்கள் பணத்தில் ஆறுதலாக இருந்து கோப்பி குடிக்கவே இங்கே வந்திருக்கிறோம். இவன் யார் எங்கள் இனிய மாலைப் பொழுதைக் கலைக்க?” தம்பதிகளின் பார்வைகளிலேயே அவர்கள் நினைப்பதை அவன் விளங்கிக் கொண்டான். பதட்டமே இல்லாமல் தனது ஜாக்கெட்டைத் திறந்து துப்பாக்கியைக் காண்பித்தான். இப்பொழுது தம்பதிகள் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள். இருக்கையில் இருந்து எழுந்து வேகமாகக் கோப்பிக் கடையை விட்டு வெளியேறினார்கள். இப்படித்தான் 26.01.2024 அன்று பணயக் கைதிகள் விவகாரம் Ulm நகரத்தில் ஆரம்பமானது. நீதிபதிக்கு முன்னால் நின்ற சிறிய உருவம் கொண்ட அவனுக்கு இடது முன்கையில் பச்சை குத்தி இருந்தது. முகத்தின் வலது பக்கத்தில், கீழ்த் தாடையில் ஒரு பகுதி இல்லை. வாய் திறந்திருந்தது. வாயில் இருந்து வழியும் உமிழ்நீரை அடிக்கடி துடைத்துக் கொள்ள அவன் கையில் ஒரு துணி இருந்தது. “நான் இறந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க வேண்டியவன். ஆனால் உங்கள் முன்னால் நிற்கிறேன்” நீதிபதியைப் பார்த்து அவன் சொன்னான்.அவனது தாடையில் ஏற்பட்டிருந்த காயங்களால் அவனது உரையாடலைப் புரிந்து கொள்வது நீதிபதிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. “நான் Iserlohn என்ற நகரத்தில் பிறந்தேன். எலக்ட்ரிக்கல் மெக்கானிக் படிப்பை முடித்து ஒரு வருடம் வேலை செய்தேன். பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டேன். எனது 12 வருட இராணுவச் சேவையில், இரண்டு தடவைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பணிபுரிந்திருக்கிறேன். ஆப்கானிஸ்தானில் இருந்த சூழ்நிலைகள் எனக்கு மிகுந்த அழுத்தங்களைத் தந்தன. இடைவிடாத ரொக்கெட் தாக்குதல்கள், என் கண்களுக்கு முன்னால் தலையில் சுடப்பட்ட ஒரு ஆப்கானிஸ்தானியரின் மரணம், காயமடைந்தவர்கள், இறந்தவர்கள்... என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது, இரவில் தூக்கம் இல்லாது போனது. மனதில் எப்போதும் ஏதோ ஒன்று அழுத்துவது போன்றிருந்தது. உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் எங்கிருந்து தொடங்குவது என்ன செய்வது என்று எதுவுமே எனக்குத் தெரியாதிருந்தது. 2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து எங்கள் படைகள் முற்றாக வெளியேறிய போது நானும் இங்கே வந்து விட்டேன். எங்கேயாவது பலமான சத்தங்கள் கேட்டால் எனது உடல் நடுங்க ஆரம்பிக்கும். ஆப்பானிஸ்தானில் இருந்து இங்கே வந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத பயம் என்னை ஆட்கொள்ளும். எனது மனநிலைக் குழப்பத்துக்காக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிகிச்சை எனது நிலைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் தகுதியையும் நான் இழந்தேன். இராணுவத் துறையால் எனக்குத் தரப்படும் சிறு உதவித் தொகையும் எனது வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இவைகளிலிருந்து எனது கவனத்தை வேறெங்காவது திசை திருப்ப எண்ணிய போது, சூதாட்டமும், போதை மருந்துகளும், மதுவும் இலகுவாக என்னைப் பற்றிக் கொண்டன. எனது மனைவி 2020இல் கர்ப்பமான பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மது, போதை, சூதாட்டம் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, ஒரு இனிமையான வாழ்வைத் தொடங்க முடிவு செய்தேன். ஆனால் இன்று, நாளை அல்லது மறுநாள் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்ற எண்ணத்துடன் நாட்கள் தள்ளிப் போனதே தவிர, எனது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இன்னும் இன்னும் அவற்றுக்கு நான் அடிமையாகப் போய்க் கொண்டிருந்தேன். மகனும் பிறந்து விட்டான். அவன் அழும் போதெல்லாம் என்னால் அமைதியாக இருக்க முடியாதிருந்தது. எனது காதுகளுக்குள் இருந்து யாரோ அலறும் சத்தமாக அவனின் அழுகை எனக்கு இருந்தது. ஏதோ ஒன்று எனது ஆழ் மனதில் இருந்து என்னைக் குழப்பிக் கொண்டேயிருந்தது. இதை எவ்வளவு காலங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியாதிருந்தது. செப்ரெம்பர் 2023 என் மனைவியுடனான திருமண ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். மனைவி, மகன் உறவும் போய்விட்டது. டிசம்பரில் எனது பிறந்தநாள். வாழ்த்த யாரும் வரவில்லை. கிறிஸ்மஸ் வந்தது. அதை என்னுடன் கொண்டாட எவரும் இல்லை. என்னை விட்டு எல்லோரும் போய்விட்டார்கள். என்னை ஒதுக்கி விட்டார்கள். இனி வாழ்ந்துதான் என்ன? செத்துவிடலாமா? எனது நகரத்தில்(Iserlohn) இருந்து தெற்கு நோக்கி நெடுஞ்சாலையில் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். Ulm நகரத்துக்குத் திரும்புவதற்கான அறிவித்தல் தெரிந்தது. அந்த நகரத்துக்கு நான் இதுவரை சென்றதில்லை. Ulm இல் இராணுவ மருத்துவமனை ஒன்று இருப்பதை முன்னரே அறிந்திருந்தேன். அங்கே எனக்கு மருத்துவ உதவி கிடைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. காரை Ulm நகரத்துக்கான பாதையில் திருப்பினேன். வழியில் கோப்பி குடிப்பதற்காக ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடைக்கு வந்தேன். அங்கே மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைப் பார்த்த போது, எனது மனைவியுடன் மகிழ்வாக இருந்த நாட்கள் மனதுக்குள் ஓடின. அப்பொழுதுதான் முடிவெடுத்தேன். ‘இன்று இல்லாவிட்டால் இனி இல்லை’ என்ற முடிவுதான் அது” அவன் சொல்ல வேண்டியதை அவனிடம் இருந்து உள்வாங்கி ஒரு மனநல மருத்துவர் நீதிபதிக்குச் சொல்லி முடித்தார். அனைத்தையும் கேட்ட நீதிபதி, ஒக்ரோபர் 10ம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாகச் சொல்லி எழுந்து கொண்டார். அவன் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் 14 வயதுச் சிறுமியும் சிறுவனும் இருந்தார்கள். அங்கிருந்த சூழ்நிலை, அவர்களைப் பயத்தின் உச்சத்துக்கு கொண்டு போயிருந்தது. இருவரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவன் அந்தச் சிறுவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர்கள் இரண்டுபேரையும் முதலில் வெளியே போக அனுமதித்தான். சிறுவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி தான் பிடித்து வைத்திருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் பயத்தில் இருந்தார்கள். என்ன நினைத்தானோ, கடையின் சொந்தக்காரியைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அனுமதித்தான். ஆக அவன் பிடித்து வைத்திருந்த 12 பணயக் கைதிகளும் ஆபத்தின்றி வெளியேறி விட்டார்கள். கடைக்கு வெளியே சிறப்புப் பயிற்சி பெற்ற பொலிஸார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். உள்ளே கடை உரிமையாளருடன் இவன் நின்றான். பணயக் கைதிகள் விவகாரம் எதற்காக என்பது யாருக்கும் தெரியவில்லை. அவன் அறிவிக்கவுமில்லை. “இப்பொழுது நாங்கள் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகப் போகிறோம். உன் கழுத்தில் என் துப்பாக்கி இருக்கும். வெளியில் இருந்து பொலிஸார் சுட்டால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவற்றைச் செய்துகொள்” என்று சில வழிமுறைகளைக் கடை உரிமையாளருக்குச் சொல்லிக் கொடுத்தான். அவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதில் குழப்பமாக இருந்தது. இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? இவனுக்கு என்னதான் தேவைப்படுகிறது? என்ற கேள்விகள் மனதுக்குள் எழுந்தாலும், அதையும் தாண்டி கழுத்தில் அவனது கைத்துப்பாக்கி அழுத்தி நின்ற பயம் மேலோங்கி நின்றது. கடையின் வாசலில் உரிமையாளரின் கழுத்தில் கைத்துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு அவன் நின்றான். பத்து மீற்றர் தூரத்தில் சுவருக்குப் பின்னால் நின்ற ஒரு பொலிஸின் இலக்கில் தான் நிற்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான். இரண்டு துப்பாக்கிச் சூடுகள். ஒன்று அவனது கையிலும் மற்றையது அவனது தாடையிலும் பாய்ந்தன. நிலத்தில் இரத்தத்தில் தோய்ந்திருந்தான். இராணுவத்தில் அவன் பங்காற்றிய சண்டைகள், அதனால் வந்த விளைவுகள் எல்லாமே அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. அதற்கான தண்டனையாக தான் துப்பாக்கிக் குண்டுகளால் இறக்க வேண்டும் என்று நினைத்தவனைக் காப்பாற்ற, அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவனது துப்பாக்கிகளை ஆரய்ந்த சிறப்பு பொலீஸ் அதிகாரி, “இது என்ன? அவனது கைத்துப்பாக்கி விளையாட்டுத் துப்பாக்கியாக இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டார். ஒக்ரோபர் 10ம் திகதி, நீதிபதி என்ன தீர்ப்பைச் சொல்லிவிடப் போகிறார்? அவனைப் பார்கக விரும்பினால் https://www.swp.de/lokales/ulm/geiselnahme-im-ulmer-starbucks-22-jaehrige-geisel-ich-habe-die-augen-geschlossen-und-gebetet-77514017.html
  11. தமிழ் வேட்பாளர் முதல்தெரிவு. அனுர இரண்டாவது தெரிவு என்பதன் ஊடாக சிங்களத்தலைமையை ஏற்கின்ற வேளையில் முதல் தெரிவான பொதுவேட்பாளர் என்ற சிந்தனை வீழ்த்தப்படவே வாய்ப்புள்ளது. தமிழருக்கு எந்த உரிமையையும் தரமாட்டேன், கோத்தா கேட்டதுபோல் சிங்கள வாக்குகளில் வெல்வேன் என்று கூறி வென்றதுபோல் நாமல் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ள அதேவேளை ஏனைய ரணில், அனுர, சஜித் போன்றோர் எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் தெரிவிக்காது கடந்து செல்கின்றனர். தமிழரது உரிமைகள் தொடர்பாக உறுதியளிக்கப்போய் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். அனுர, சஜித், ரணில் மற்றும் நாமல் ஆகியோரில் எவருமே ஒருவரை ஒருவர் மிஞ்சியவர்கள் இல்லையென்பதே தெளிவாகத் தெரிகிறது. அனுர வட- கிழக்கைப் பிரித்த ம.வி.முன்னணியின் பாசறையில் வளர்ந்தவர். சஜித்தின் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகத்திலே மேற்கொள்ளப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலைகள் உட்பட்ட படுகொலைகள் குறித்து மன்னிப்புக் கோரக்கூடியவரா? ரணில் தமிழரை தந்திரமாக ஏமாற்றிப் புன்னகைத்தவாறு அழித்துவரும் யே.ஆரால் வளர்க்கப்பட்ட பழுத்த இனவாதி நாமல் கூறிவிட்டார் தனது நிலையை... தமிழர் தேசமானது காலத்துக்கேற்ப மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தபோதும் சிங்களத் தலைமைகளிடம் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? எனவே மாறாத சிங்களத் தலைமைகளை வாக்களிப்பின் ஊடாகவும் அல்லது வாக்களிக்காமலும் நிராகரித்துவிடுவதன் ஊடாகத் தமிழர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதே அவதானிப்பிற்குரியதாகும். 2ஆம், 3ஆம் வாக்கை யாராவது சிங்களத் தலைமைக்கு என்ற கருத்தானது மீண்டும் தம்தலையில் தாமே மண்ணள்ளிப் போடுவதற்கு ஒப்பானது. கடந்த பல ஆண்டுகளாக 13 அமுல்படுத்துங்கள்... ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழருக்குச் சுயாட்சியைத் தாருங்கள்... என்று கோரியபோதும் எதையுமே சிங்களம் வழங்கத் தயாரில்லை. நாமல் போன்றோரின் அறிக்கையானது சிங்கள இளம் தலைவர்களையும் நம்பத் தேவையில்லை என்பதை பறைசாற்றி நிற்கிறது. சனநாயகம் என்ற போர்வையுள் தமிழருக்கு எதிரான சட்டங்களை இயற்றி நிறைவேற்றிவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அதிபரும் தமிழருக்குத் தீர்வைத் தரமாட்டார்கள் என்பது நிதர்சமானபோது தமிழர் வாக்களித்துத்தான் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டுமா? வாக்களிக்காமலும் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கலாம் என்ற சிந்தனை சரியாகவே தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. X என்று புள்ளடி போட்டால் அவர்தான் முதலாவது தெரிவு! குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும். இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும்.
  13. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து. தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச், இலங்கையில் உள்ள பல மாகாணங்களை ஒப்பிடும் போது,கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது. ஆளுநர் Air- Ship சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு இருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்தனர். எங்களுடைய ஆய்வு அறிக்கை படி இவ்வேலைதிட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து air ship வேலைத்த்திட்டத்திட்காக முழு முதலீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1399191
  14. வாழ்வதற்கு உடல் நலம் மட்டுமல்ல உள நலமும் தேவை.
  15. நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...
  16. 57 வயசிலயும் அதெல்லாம் ஒத்துக்க முடியாது கோட்ட அழிங்கே மொதல்ல இருந்து ஆடுவம் எண்டு மனுசன் ஒத்தைக்காலில நிக்குரத பாத்தா பரோட்டா சூரி காமெடிதான் ஞாபகம் வருது..
  17. இந்த மனுஷன் ஏன் இப்படி திரும்பித் திரும்பி போய் அடி வாங்குது......... இதுக்கு பேசாமல் அவரையே காதலித்து, கல்யாணமும் கட்டி, தினமும் வீட்டிலேயே குத்து வாங்கலாமே........ உள்வீட்டு விவகாரம் என்று உலகமும் இதைக் கவனிக்காமல் இருந்து கொள்ளும்..........🤣.
  18. ஒரு நாளைக்கு.. ஏழு முறை சாப்பிடுகின்றார். அத்துடன் 2.5 கிலோ இறைச்சியும், 108 சுஷியும் சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் என்ன செய்யும்.😂 கொஞ்சம் வாயை கட்டியிருந்தால்... நீண்ட நாள் வாழ்ந்திருக்கலாம்.
  19. அமெரிக்காவும், நேட்டோவும் வழங்கும் வளங்களை வைத்து தான் உக்ரேனால் இவ்வளவு காலமும் தாக்குப் பிடிக்க முடிகின்றது, விசுகு ஐயா. ஆனால் ரஷ்ய ஆதரவு/எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து கொண்டு, அதன் வழியே கருத்துகள் சொல்லும் ஊடகங்களும், தனிமனிதர்களும் அவர்களுக்கேற்றவாறு நிலைமையை திரித்து விடுகின்றார்கள். ரஷ்யா ஏன் இன்னமும் உக்ரேனை அடித்து முடிக்கவில்லை என்பது ஒரு பக்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை. அதை நியாயப்படுத்த காரணங்களை, பலது இல்லவே இல்லாத காரணங்கள், கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால், காலனியாதிக்கம் முடிந்த பின், உலகில் எத்தனை நாடுகள் எத்தனை நாடுகளை அடித்து முடித்திருக்கின்றது....... அப்படியே ஒரு போரில் வென்றாலும், அவர்களால் அந்த நாட்டையோ அல்லது பிரதேசத்தையோ நீண்ட காலத்திற்கு தக்க வைக்கக் கூடியதாக இருந்ததா.......... இல்லைத் தானே. இது தான் இன்றைய ரஷ்யாவின் நிலை. அமெரிக்காவும் சில நாடுகளுக்குள் போய் இறங்கி விட்டு, பின்னர் போதுமடா என்று சில நாடுகளில் இருந்து திரும்பி வந்திருக்கின்றது தானே.
  20. உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா? குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?
  21. தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா - புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் 150,000-க்கும் சற்று குறைவான `வெஸ்டர்ன் லோ லேண்ட்’ கொரில்லாக்கள் காடுகளில் வாழ்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கொரில்லா இனங்களிடம் காணப்படும் சுய மருத்துவம் செய்துகொள்ளும் போக்கு, எதிர்கால மருந்துவக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கபோன் (Gabon) நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், காட்டு கொரில்லா இனம் உட்கொள்ளும் வெப்பமண்டல தாவரங்களை ஆய்வு செய்தனர். இந்தத் தாவரங்கள் உள்ளூர் மூலிகை மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு முடிவில், அவற்றில் நான்கு தாவரங்களில் மருத்துவ குணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தாவரங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதாக ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு தாவரம், சூப்பர்பக்ஸை (உடல்நல பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா. ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த முடியாது) எதிர்த்துப் போராடும் திறன் பெற்றிருந்தது. பெரிய குரங்கு இனங்கள், குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சுய மருத்துவம் செய்துக்கொள்கின்றன. சமீபத்தில், காயம்பட்ட ஒராங்குட்டான் குரங்கு ஒன்று தன் காயத்தை குணப்படுத்த, தாவரத்தை பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன. மூங்கில் தண்டுகள், தளிர்கள் மற்றும் பழங்களை உண்கின்றன. சமீபத்திய ஆய்வில், கபோன் நாட்டில் உள்ள முகாலாபா டூடூ (Moukalaba-Doudou) தேசியப் பூங்காவில் 'வெஸ்டர்ன் லோலேண்ட்' (western lowland) கொரில்லாக்கள் உட்கொள்ளும் தாவரங்களை தாவரவியலாளர்கள் ஆய்வு செய்தனர். உள்ளூர் மூலிகை மருத்துவர்கள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில் மருத்துவ குணமுள்ள நான்கு தாவரங்களை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். கபோக் மரம் (Kapok tree), ராட்சத மஞ்சள் மல்பெரி (giant yellow mulberry), ஆப்ரிக்கத் தேக்கு, மற்றும் அத்தி மரங்கள் ஆகியவை அந்தத் தாரவங்களாகும். பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்றுப் பிரச்னைகள் முதல் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகள் வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் இந்த தாவரங்களின் மரப்பட்டையில், பீனால்கள் முதல் ஃபிளாவனாய்டுகள் வரையிலான ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை. ஆய்வு செய்யப்பட்ட நான்கு தாவரங்களும் ஒரு வகை 'ஈ. கோலி' பாக்டீரியாவுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கபோக் மரம் உள்ளூர் மூலிகை மருத்துவர்களால் மனிதர்களின் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது "இந்த ஆய்வு மத்திய ஆப்பிரிக்க மழைக்காடுகள் பற்றிய நமது அறிவில் உள்ள மிகப்பெரிய இடைவெளிகளை அம்பலப்படுத்துகிறது. மேலும் கொரில்லாக்கள் தங்களுக்கு நன்மை செய்யும் தாவரங்களை உண்ணும் வகையில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது" என்று கபோன் விஞ்ஞானிகளுடன் இந்த ஆய்வில் பங்கேற்ற பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் அறிஞர் ஜோனா செட்செல் கூறினார். கபோன் மிகப்பெரிய, ஆராயப்படாத காடுகளை கொண்டுள்ளது. இது வன யானைகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் மற்றும் அறிவியலுக்கு புலப்படாத பல தாவரங்களின் தாயகமாகும். வேட்டையாடுதல் மற்றும் நோய் தொற்றுகளால் அதிக எண்ணிக்கையிலான வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் காடுகளில் இருந்து காணாமல் போயுள்ளன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் (IUCN Red List) கொரில்லா இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி 'PLOS ONE’ என்னும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/czxlxnd0jqdo
  22. மிக மோசமான ஒரு வல்லுறவுச் செய்தியில் கூட, சிரிப்புக் குறி போட்டு பதில் வழங்கும் உங்கள் மனநிலையை எண்ணிப் பார்க்கின்றேன். தனக்கு எந்த தீமை வரினும், தன் அப்பாதான் முதன் முதலில் முன்னுக்கு வந்து தன்னை பாதுகாப்பார் என நம்பிக்கையில் தான் பெண் பிள்ளைகள் இருப்பர். அந்த தந்தையே அந்த மகளுக்கு மோசமான பாதிப்பை. வல்லுறவை புரியும் போது, அதை ஒரு மனுசராக கண்டிப்பதை விட்டுவிட்டு, அதனையும் பகிடியாக்கின்றீர்கள்.
  23. Annapoorna: "அதிகாரம் பணிய வைக்கிறது" - அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் கோவையில் நேற்று முன்தினம், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் பேசிய பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்குப் பின்னர், வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. இதனால், கேள்விகேட்டதற்காக அதிகாரத்திலிருந்து கொண்டு மன்னிப்புக் கேட்க வைப்பதா எனப் பல தரப்பிலிருந்தும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகக் கண்டனங்கள் வந்தன. இருப்பினும், தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக சீனிவாசன் விளக்கமளித்தார். மறுபக்கம், அந்த வீடியோவை பகிர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்நிலையில், அன்னப்பூர்ணா சீனிவாசனின் கேள்வியில் உண்மை இருப்பதாகவும், அதிகாரம் அதைப் பணியவைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார். சீமான் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த சீமான், "அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரின் கேள்வியிலிருந்த உண்மை அனைவருக்கும் தெரியும். ஜி.எஸ்.டி வரியால் வர்த்தகர்களும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்திலும் வரி. ஒருவன் வீடு கட்ட போனாலும், அவரால் வரிதான் கட்ட முடியும். வாழவே முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவரின் கேள்வி நியாயமானது என்று இப்போது நாடெங்கிலும் பரவிடுச்சு. அதை அதிகாரம் பணியவைக்கிறது. அவர் எவ்வளவு வருத்தம் தெரிவித்தாலும், அவர் கேட்ட கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது" என்று கூறினார். Seeman: "அதிகாரம் பணிய வைக்கிறது" - அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் | NTK Chief Seeman slams BJP in kovai Annapoorna hotel CEO issue - Vikatan
  24. அப்படியானால் இவ்வளவு நாளும் நேட்டோ தான் போரை இயக்குகிறது என்று சொன்னதெல்லாம் பகிடிக்கா கோபாலு???
  25. இருக்கவே இருக்கிறது பாதுகாப்புப் படைகள். அவர்கள் பாதுகாப்பில் எதுவும் செய்யலாம். ஏற்கெனவே எங்கள் தமிழரசுக் கட்சிக்குள் புகுந்த சனி பகவான் செய்தும் காட்டியுள்ளார். பழையபடி வேதாளங்கள் எல்லாம் அரசு(ச)மரத்தில் ஏறி அமரும்.🤔
  26. அட... கமலா, டிரம்ப்புக்கே... தண்ணி காட்டிப் போட்டார். 😂 பைடன் இருந்திருந்தால்.... இளகின இரும்பை கண்டா மாதிரி... தூக்கி, தூக்கி அடித்திருப்பார். 🤣 கமோன் கமலா... உரும்பிராய் மண் என்றால்... சும்மாவா. 😛 😜
  27. எம்.எல்.எம்.மன்சூர் சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் ‘தீர­ணாத்­மக’ என்­பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்’ என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது. முன்னர் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்ட ஓர் இயல்பை கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தல்­களில் இது­வ­ரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்­டி­யாக மாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது முத­லா­வது விசேஷம். பலர் நாமல் ராஜ­பக்­சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்­முனைப் போட்டி’ என்று சொல்லி வந்­தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்­பி­டத்­தக்க போட்­டி­யா­ள­ராக இருந்து வரு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை. தேர்­தல்­களில் இது­வ­ரையில் 5% க்கு குறை­வான வாக்­கு­களை மட்­டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்­டி­யா­ள­ராக எழுச்­சி­ய­டைந்­தி­ருப்­பது இரண்­டா­வது சிறப்­பம்சம். 1990கள் தொடக்கம் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சா­ரங்­களின் போது சிங்­கள சமூ­கத்தின் கொடிய எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த தமிழ் பிரி­வி­னை­வாதம், டயஸ்­போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்­வைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் போன்ற கோஷங்கள் பிரச்­சார மேடை­க­ளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருப்­பது. அடுத்த விசேஷம். அதா­வது, கடந்த 20 ஆண்­டு­களில் வெளிப்­ப­டை­யாக இன­வாதம் பேசப்­ப­டாமல் நடத்­தப்­படும் முத­லா­வது தேர்தல் இது. சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் (Sinhala Heartland) தெளி­வா­கவே ஒரு ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு அலை நிலவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக வெவ்­வேறு தரப்­புக்­களால் பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்­புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கின்­றன. அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அணி மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் கூட ‘ஆம் அவர்­க­ளுக்கு ஒரு ஆத­ரவு அலை இருந்து வரு­கி­றது; அதை மறுக்க முடி­யாது’ என்ற பீடி­கை­யு­ட­னேயே தமது கருத்­துக்­களை முன்­வைக்­கி­றார்கள். அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்­வைத்­தி­ருக்கும் பிரச்­சார சுலோ­கங்கள் பெரி­தாக வாக்­கா­ளர்­களை கவ­ரக்­கூ­டி­ய­வை­யாக இருந்து வர­வில்லை. சார்­பு­ரீ­தியில், ஜேவிபி / என்­பிபி அணிக்குக் கிடைத்­தி­ருக்கும் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அனு­கூலம் – ‘எதிரி யார்’ என்­பதை தெளி­வாக அடை­யாளம் காட்டக் கூடிய ஆற்றல். சஜித் அணியை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்­பது அவர்­க­ளுக்கே தெளி­வில்­லாமல் இருப்­பது முக்­கி­ய­மான ஒரு பல­வீனம். ராஜ­பக்­ச­களின் அர­வ­ணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்­ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திரு­டர்­களை களை எடுப்போம்’ போன்ற ஜன­ரஞ்­சக சுலோ­கங்­களை முன்­வைக்கும் தார்­மீக உரி­மையை இழந்­தி­ருக்­கிறார் சஜித். அவ­ரு­டைய மற்­றொரு பல­வீனம் இன்­றைய இலங்­கையின் பொரு­ளா­தார யதார்த்­தங்­க­ளுக்கு துளியும் சம்­பந்­த­மில்­லாத விதத்தில் கோமா­ளித்­த­ன­மான வாக்­கு­று­தி­களை வழங்­கு­வது. சொல்­லப்­போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­கி­ர­ம­ரத்ன போன்ற நாட்டு நடப்­புக்­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் SJB முக்­கி­யஸ்­தர்­களை பெரும் சங்­க­டத்தில் நெளிய வைக்கும் வாக்­கு­று­திகள் அவை. ‘அநுர குமா­ரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்­வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்­க­ளுக்கும் கொடுத்துப் பார்ப்­போமே’ என்­பது. அதா­வது, ‘இவ்­வ­ளவு காலமும் எத்­த­னையோ பேருக்கு வாக்­க­ளித்து ஏமாந்­தி­ருக்­கிறோம். கடை­சியில் இன்­றைய வங்­கு­ரோத்து நிலைதான் எமக்கு எஞ்­சி­யி­ருக்­கின்­றது’ என்ற ஆதங்­கமே இந்தப் பேச்­சுக்­களில் தொனிக்­கி­றது. அத­னையே அதா­வது – ‘ இந்தத் தடவை திசை­காட்­டிக்கு’ என்று மக்கள் சொல்­வ­தையே – ஜேவிபி/ என்­பிபி அணி தனது பிரச்­சார சுலோ­க­மாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது. குறிப்­பாக, 2022 அற­க­லய மக்கள் எழுச்­சிக்குப் பின்னர் நாட்டில் உரு­வாக்­கி­யி­ருக்கும் ஜேவிபி/ என்­பிபி ஆத­ரவு அலையின் குடி­ச­ன­வியல் பண்­புகள் (Demographic Features) எவை, புதி­தாக ஜேவிபி ஆத­ர­வா­ளர்­க­ளாக சேர்ந்­தி­ருக்கும் பல இலட்சக் கணக்­கா­ன­வர்கள் எங்­கி­ருந்து வந்­தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்­களைத் தள்­ளிய சமூக, உள­வியல் கார­ணிகள் எவை போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்­நோக்கிச் செல்ல வேண்டும். 2004 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜாதிக ஹெல உரு­மய (JHU) கட்சி சார்பில் மேல் மாகா­ணத்தில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் 9 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­னார்கள். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் புத்த பிக்­குகள். விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போரை சந்­தி­ரிகா – மங்­கள அர­சாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்­கள -பௌத்த உணர்­வா­ளர்­களின் ஒரு பிரி­வி­னரே இவ்­விதம் திடீர் JHU ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறி­யி­ருந்­தார்கள். அவர்­களை அவ்­விதம் அணி திரட்­டு­வதில் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க முதன்­மை­யான ஒரு பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்தார். கங்­கொ­ட­வில சோம தேரர் உரு­வாக்­கிய பௌத்த எழுச்சி அலை­யினால் தூண்­டப்­பட்­டி­ருந்த ஒரு பிரி­வி­னரின் இன உணர்­வு­களை அச்­சந்­தர்ப்­பத்தில் ரண­வக்க மிகவும் சாதுர்­ய­மாக தனக்கு சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார். இந்தச் சமூகப் பிரி­வினர் மேல் மாகா­ணத்தில் – குறிப்­பாக கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் – செறிந்து வாழ்ந்து வரு­கி­றார்கள். 1980 களில் உரு­வா­கிய தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்று, வெளி மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வந்து கொழும்பு புற நகர் பகு­தி­களில் குடி­யே­றி­ய­வர்கள். ஜே.ஆர். அறி­முகம் செய்து வைத்த திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் மூலம் பய­ன­டைந்த முதல் தலை­மு­றை­யினர் கிட்­டத்­தட்ட இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும் கெஸ்­பாவ, கடு­வெல, கோட்டே, மக­ர­கம, ஹோமா­கம போன்ற கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகு­தி­களில் இந்த வகுப்­பி­னரின் பிர­சன்னம் அதிகம். சிங்­கள மத்­திய தர வரக்­கத்தின் ஒரு புதிய பிரி­வி­னரின் எழுச்­சி­யாக (Sociological Phenomenon) அப்­பொ­ழுது அது பார்க்­கப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்தில் கெஸ்­பாவ மற்றும் மக­ர­கம போன்ற தொகு­தி­களில் வாக்­கு­களின் அடிப்­ப­டையில் யூஎன்­பியை மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளி­விட்டு, JHU இரண்­டா­வது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அள­வுக்கு அப்­போ­தைய சிங்­கள பௌத்த அலை வலு­வா­ன­தாக இருந்து வந்­தது. இதே­போல கம்­பஹா மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் JHU கணி­ச­மான அள­வி­லான வாக்­கு­களை பெற்றுக் கொண்­டி­ருந்­தது. அதன் பின்னர் இந்தப் பிரி­வினர் 21 ஆம் நூற்­றாண்டு சிங்­கள பெருந் தேசி­ய­வா­தத்தின் ‘Trendsetter’ களாக உரு­வா­கி­ய­துடன், அவர்கள் தூண்­டி­விட்ட அந்த உணர்வு சிங்­கள சமூகம் நெடு­கிலும் மிக வேக­மாக பர­வி­யது. 2010, 2019 ஜனா­தி­பதி தேர்­தல்­களில் முறையே மஹிந்­த­வுக்கும், கோட்­டா­ப­ய­வுக்கும் இப்­பி­ரி­வி­னரே அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள். 2022 பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பா­டுகள் போன்ற பிரச்­சி­னைகள் அவர்கள் இது­வ­ரையில் அனு­ப­வித்து வந்த ‘Comfort Zone’ இலி­ருந்து அவர்­களை வெளியில் எடுத்து வந்­தன. அந்த நிலையில், ராஜ­பக்­ச­களை ஆத­ரித்த அதே அளவு தீவி­ரத்­துடன் அவர்­களை எதிர்க்­கவும் தொடங்­கி­னார்கள். சுருக்­க­மாகச் சொன்னால் 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கிய படித்த சிங்­கள நடுத்­தர வர்க்­கத்தை சேர்ந்­த­வர்கள் பல இலட்­சக்­க­ணக்கில் இப்­பொ­ழுது திசை­காட்­டியின் பக்கம் வந்­தி­ருக்­கி­றார்கள். இந்த அலை ‘கம்­யூனிஸ்ட் / சோஷ­லிச ஆத­ரவு அலை அல்ல’. என்­பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமா­ரவும், அந்த அணியின் ஏனைய தலை­வர்­களும் (குறிப்­பாக லால் காந்த போன்­ற­வர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். ஜேவிபி / என்­பிபி மேடையில் கழுத்­துப்­பட்டி அணிந்த கன­வான்கள் ஏராளம் பேர் உட்­கார்ந்­தி­ருக்கும் காட்சி மற்­றொரு சுவா­ரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்­திர கட்சி போன்ற பாரம்­ப­ரிய கட்­சி­களின் பிரச்­சார மேடை­களில் கூட முன்னர் அந்த மாதி­ரி­யான காட்­சிகள் தென்­ப­ட­வில்லை. கட்­சிக்கு ஒரு கண்­ணி­ய­மான, மத்­திய தர வர்க்க முகத்­தோற்­றத்தை முன்­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தின் குறி­யீடு அது. ஒரு பெரும்­போக்கு அர­சியல் கட்­சி­யாக (Mainstream Political Party) மாற்­ற­ம­டை­வ­தற்கு ஜேவிபி செலுத்­தி­யி­ருக்கும் விலையே என்­பிபி அணியின் இணைப்பு. 1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்­சி­களின் போது நில­விய இலங்கை சமூகம் – குறிப்­பாக சிங்­கள சமூகம் – இப்­பொ­ழுது பெரும் மாற்­றங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது. நகர்ப்­பு­றங்­க­ளிலும், கிராமப் புறங்­க­ளிலும் புதிய மத்­திய தர வர்க்­கத்­தினர் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். இன்­றைய இலங்­கையின் நுகர்வு கலா­சா­ரத்தின் பிர­மாண்­மான வளர்ச்­சியின் பின்­ன­ணியில் இருந்து வரு­ப­வர்கள் அவர்கள். முன்­னைய தலை­மு­றை­க­ளிலும் பார்க்க முற்­றிலும் வேறு­பட்ட அபி­லா­ஷை­களை கொண்­டி­ருப்­ப­வர்கள். இலங்கை பொது சமூ­கத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உட­ன­டி­யாக எமக்­கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்­தி­ய­டிப்போம்’ போன்ற கோஷங்­களை இச்­ச­மூகப் பிரி­வி­னரே கையில் எடுத்­தி­ருக்­கி­றார்கள். காலி­மு­கத்­திடல் அற­க­லய பூமியில் குமார் குண­ரத்­னத்தின் ‘பெரட்­டு­காமி’ கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட சுலோ­கங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்­யூ­னிஸ்­டுகள் காண விழையும் சமூக மாற்­றத்தை வலி­யு­றுத்­து­பவை. ஆனால், இன்­றைய இலங்­கையில் அச்­சு­லோ­கங்கள் அதே அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை இங்கு முக்­கி­ய­மாக சுட்டிக் காட்ட வேண்டும். இந்தக் கோஷங்­களை முன்­வைத்து வரு­ப­வர்கள் எதிர்­பார்க்கும் உண்­மை­யான ‘System Change’ எது? இன்­றைய ஊழல் அர­சி­யல்­வா­தி­களை பிர­தி­யீடு செய்யும் பொருட்டு எந்த வகை­யான மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்? அவர்­க­ளு­டைய ஆதர்ச புர்­ஷர்கள் யார்? தனது முறை வரும் வரையில் பொறு­மை­யுடன் கியூ வரி­சையில் காத்­தி­ருக்கும் ஒரு ஜனா­தி­பதி. போக்­கு­வ­ரத்து விதி மீற­லொன்றை இழைத்து விட்டு அதற்கு அப­ராதம் செலுத்தும் ஒரு பிர­தம மந்­திரி. தனது பிள்­ளையை பொறுப்­புடன் பள்­ளிக்கு அழைத்துச் செல்லும் தந்­தை­யான ஒரு அரச தலைவர் போன்­ற­வர்­களை காட்டும் காணொ­ளி­களை புதிய தலை­மு­றை­யினர் பிர­மிப்­புடன் பார்க்­கி­றார்கள். தமது ஆதர்­சங்­க­ளாக அவர்­களை கொண்­டாடி வரு­கி­றார்கள். ஆனால், மேற்­படி உதா­ர­ணங்கள் அனைத்தும் லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டவை என்­பது தான் இங்­குள்ள சுவா­ரஸ்யம். ஊழல், முறை­கே­டுகள் இல்­லாத எவ­ருக்கும் பார­பட்சம் காட்­டாத அரச நிர்­வாக கட்­ட­மைப்­புக்­க­ளுக்­கான ஆதர்­சங்­க­ளா­கவும் இந்த மேலைய லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளையே இவர்கள் சுட்டிக் காட்­டு­கி­றார்கள். “நான் சுதந்­தி­ரத்­திற்கு முன்னர் பிறந்­தவன். வாழ்நாள் முழு­வதும் ஒரு தேசா­பி­மா­னி­யா­கவே இருந்­தி­ருக்­கிறேன். எனது வாழ்க்­கையின் முதல் 75 ஆண்­டு­களை இந்த மண்­ணி­லேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடி­யாத நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளைகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்கள். அவர்­க­ளு­டைய வற்­பு­றுத்­தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடு­க­ளையும் ஒப்­பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அள­வுக்கு சீர­ழிந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது” என்­கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்­சியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஒரு முன்­னணி சிங்­கள நாடகக் கலைஞர். மேற்­படி கூற்று இன்று ஜேவிபி / என்­பிபி அணியின் பின்னால் திரண்­டி­ருக்கும் சிங்­கள மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் மதிப்­பீ­டுகள் மற்றும் எதிர்­பார்ப்­புக்கள் என்­ப­வற்றின் துல்­லி­ய­மான ஒரு பிர­தி­ப­லிப்பு எனச் சொல்லலாம். சரி­யாகச் சொன்னால் இலங்­கையின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை. இவர்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் நவ லிபரல் பொரு­ளா­தா­ரத்தின் ஆத­ர­வா­ளர்கள். ஆகவே, இந்தப் பின்­ன­ணியில், அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வைக்கும் விட­யத்­திலும், அவர்­களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விட­யத்­திலும் ஒரு எதிர்­கால ஜேவிபி / என்­பிபி அர­சாங்கம் கடும் சவால்­களை எதிர்­நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. (வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/17705
  28. முஸ்லீமுக்கு வந்தால் இரத்தம், தமிழனுக்கு வந்தால்... தக்காளி சட்னி. 😂
  29. இப்படி வாக்கு அளிக்கும் போது,..... கள்ள வாக்களிக்க வாய்ப்புகள் உண்டு” அதாவது இரண்டாவது மூன்றாவது தெரிவு 🙏
  30. Santhosh Balaji Rajagopal 2 j · ஏண்டா GOAT படத்துல விஜய்க்கி dual ரோல் அப்ப தாங்க ஹீரோ திறமை உலகத்துக்கு தெரியும் எதுக்குடா திருஷா டான்ஸ் ஆதி காலத்து ஃபேன்ஸ்சையும் பாக்கணும்ல எதுக்குடா சிவகார்த்திகேயன் இப்ப எல்லாம் கேமியோ ரோல் தான் ட்ரெண்ட் , வேணும்ல எதுக்குடா மோகன் பழய ஆள் ரீஎன்ட்ரி கொடுத்தா மார்க்கெட்க்கு உதவும்ல எதுக்குடா விஜயகாந்து ஏத்தி விட்ட ஏணிக்கு ஒரு நன்றி சொல்லணும்ல எதுக்குடா ஸ்னேகா? குடும்பபாங்கான நபர்னு ஹீரோவை நம்பணும்னா, இது ஒரு ஆப்சன் தான் எதுக்குடா இன்ட்ரோல ட்ரைன் பைட்? ரொம்பநாளா ட்ரைன் பைட் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு, என்னோட கனவையும் பார்க்கணும்ல எதுக்குடா குட்டி விஜயை கொன்னாரு தப்பு செய்யிறது மகனா இருந்தாலும் கொன்னிடுவார், அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் மனுநீதி சோழன்னு சொன்னா தானே, அரசியலுக்கும் உதவும் எதுக்குடா கயிறு கட்டி ஏறிட்டு இருக்கும் போது, மளிகை சாமானம் வாங்குற சீன் காமெடினு ஒண்ணு திருஷ்டிக்கு வேணும்ல எதுக்குடா பிரசாந்து சக ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர்னு ஊருக்கு தெரியணும்ல எதுக்குடா பிரபுதேவாவை வில்லன் ஆக்குனிங்க படத்துல துரோகி வேணும், கூடவே இருகிறவன் திடீர்னு கெட்டவன் ஆனா தான் , மக்களுக்கு ஒரு டிவிஸ்ட் , இப்படி பேசிட்டு இருந்தோம், மும்பைல எனக்கு சல்மான்கான்க்கு டான்ஸ் சொல்லி ஆட வெச்சு சூட் பண்ணனும், நீங்க வேணா எண்ணெயை துரோகி ஆக்கி, கொன்னுட்டா, நான் நாளைக்கே மும்பை போய்டுவேன்னு , voluntary யா கேட்டாருங்க, இதுகூட நல்லா இருக்கேனு நாங்க வெச்சுட்டோம் எதுக்குடா ஹீரோயினை கொன்னீங்க சும்மாவே சுத்திகிட்டு இருந்துச்சு, கொன்னா சிம்பத்தி வருதானு பார்த்தோம் , ஆனா வரல எதுக்கு டி ஏஜிங்? என்னோட பிரெண்ட்ஸ் vfx பழகிட்டு சும்மா தான் இருக்கேன், வாய்பு கொடுனு சொன்னான், சரி பழகட்டும் புது டெக்னு செஞ்சோம் எதுக்கு குட்டி விஜயை கொஞ்ச நேரம் நல்லவனா காட்டுனீங்க ரெண்டு விஜய்யும் சேர்ந்து, எதிரியை பொளந்து கட்ட போராங்னு ஆடியனுசுக்கு டிவிஸ்ட் எதுக்கு படத்துக்கு GOAT னு டைட்டில் இது ஒரு இண்டெர்நெஷலல் பிலிம் மாறி வரும்னு விஜய்யை நம்ம வெச்சா தான் வாய்பு கிடைக்கும்னு வெச்சது பாம் வெக்கிறதுனு முடிவு செஞ்சிங்க ஓகே, அது எதுக்கு csk மேட்ச் நடக்கிற கிரவுண்டுல வைக்கிறது ஊருல டோனி fans நிரய இருக்காங்க, நீங்க வந்தா மட்டும் போதும்னு ஒரு பெரும் கூட்டம் அலையுது, ஈசியா ஏமாறுறது அந்த மஞ்ச மாக்காணுங்க தான், டோனி வேற உள்ள இருக்கார், வில்லன் வேற பாம் வெச்சுட்டான், டோனிக்கு என்ன ஆகுமோனு பதட்டம் அவங்களுக்கு உருவாகி , கடைசில பாம்மை விஜய் டிப்யூஸ் செஞ்சா, படமும் ஹிட் ஆகும், மாக்கான்ஸ் மனசுல விஜய்க்கு ஒரு இடம் கிடைக்கும்னு வெச்சோம்......! Voir la traduction
  31. நிறைய களப்புக்கள், குடாக்கள், முனைகள் எல்லாம் ஒருங்கமைந்த கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த நல்லதொரு திட்டம் போல் தோன்றுகின்றது. நல்ல பறப்பிற்கும், பயண அனுபவத்திற்கும் காலநிலையும் இடம்கொடுக்க வேண்டும். கட்டண விபரத்தை அறிய ஆவல். வெளிநாட்டு சுற்று பயணிகள் முக்கியமாக எங்கள் வெளிநாட்டவர் நிச்சயம் இந்த சேவையை பெற்றுக்கொள்வார்கள். சாமத்தியவீட்டு, கலியாணவீட்டு சூட்டிங்க் பார்ட்டிகளுக்கு விலைக்கழிவு கொடுக்கலாம். 😁
  32. இன்று 1003´வது கருத்துப் படத்தை இணைத்துள்ளேன். 🙂
  33. போரில் நேரடியாக ஈடுபட்டாலோ அல்லது ஒரு கடுமையான போர்ச் சூழலில் வாழ்ந்தாலோ, உளச்சிதைவு, மன அழுத்தம், அதிகப்படியான அதிர்ச்சி என்பன ஒருவரைத் தாக்கும் சாத்தியம் மிக அதிகம் என்று சொல்வார்கள். இங்கு ஒரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், இவை பற்றி பலரும் பல ஊடகங்களில் உரையாடுவார்கள். ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று. இப்படியான முடிவு எடுப்பவர்கள் தனியே தற்கொலை செய்து கொள்ளாமல், அந்தக் கணத்தில் ஏதுமறியாத இன்னும் சிலரையும் எதற்காகக் கொல்கின்றனர் என்றும் யோசித்ததுண்டு. நல்ல காலம், இந்தச் சம்பவத்தில் அவர் எவரையும் கொல்ல நினைக்கவில்லை, ஆனாலும் தனியே தன் கைகளால் சாகவும் விரும்பவில்லை. போன வருடம் என்று நினைக்கின்றேன். கேரளாவில் ஒரு பேராசிரியர், அவர் ஒரு சமூகப் போராளியும் கூட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேந்தவர், தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக இந்தச் சமூகத்தில் இருக்கும் வெறுப்பு என்றே காரணம் எழுதியிருந்தார். அதே வாரம் இங்கு லாஸ் வேகாஸில் அதே வயதுடைய ஒரு பேராசிரியர் இங்குள்ள பல்கலையில் சில மாணவர்களை சுட்டுக் கொன்று விட்டு தானும் இறந்து போனார்.
  34. இன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம் பகிர்விற்கு நன்றிகள்
  35. என்னுடைய பெற்றோர் பொதுவேட்பாளருக்கு போடுவதாக இருக்கிறார்கள். ஏனைய நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன் அண்ணை.
  36. ரீவீக்கு…. துவாயை போர்த்து, கமலாவின் முகத்தை மறைத்த ட்ரம்பின் தீவிர ரசிகர். 😂
  37. 🤣.......... அப்படி இல்லை, அண்ணா. நூறு சண்டைகள் உலகத்தில் இப்ப நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஒரு சண்டையில் தானே இரு வல்லரசுகள் கிட்டத்தட்ட நேருக்கு நேரே மோதிக் கொண்டிருக்கின்றன. ஆயுதப் பாவனைகளில் ஒவ்வொரு படியாக இருவரும் மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவின் அதி தூர ஏவுகணைகளை பாவிப்பதற்கு அமெரிக்கா உக்ரேனுக்கு அனுமதி கொடுப்பது அடுத்த கட்டம். அப்படி நடந்தால், அழியப் போகின்றார்கள். மேலும் ரஷ்யாவிடமிருந்தும், உக்ரேனிடமிருந்தும் உலகத்திற்கு தேவையானவை அதிகம் - தானியங்கள், எரிபொருள் உட்பட. இவை உலகச் சந்தையில் கட்டுப்படியாகும் விலைக்கு கிடைக்கா விட்டால், இன்னும் எத்தனை நாடுகளில் 'அரகலிய' ஆரம்பித்து அமைதி கெடுமோ............
  38. சார்! உலகம் முழுக்க புட்டின் தான் சண்டை போட்டுக்கொண்டு திரியுறாரோ? 😄
  39. விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறினார்கள், அதற்கு அவர் பால் எப்படி இருக்கும் என வினவினார் ( இது ஒரு கதைக்காக மட்டும்), அதற்கு உறவினர்கள் கொக்கு போல் வெள்ளையாக இருக்கும் என்றார்கள், அதற்கு அவர் கொக்கு எப்படி இருக்கும் என்றார், இவர்கள் தமது கையினை வளைத்து கொக்கு போல் செய்து காட்டினார்கள் அதனை தடவி பார்த்துவிட்டு இப்படிப்பட்ட முரட்டுப்பாலை குடித்தால்குழந்தை எப்படி இறக்காது என கேட்டார். இலங்கையர்களின் பிரச்சினை இனவாதம், மதவாதம், சாதியம் என பல பிடிவாதங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கு மேல் குற்றம் சாட்டி தமது தவறுகளை தொடர்தல், தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது. இதனாலேயே போர் முடிந்த பின்னரும் மொத்த நாடே வங்குரோத்தானது, இது ஒரு தொடர்கதை ஆக தொடரும், இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றவர்கள் தற்போது அதே சுதந்திரத்தினை இந்தியாவிடம் அடகு வைத்துள்ளார்கள். இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு இது கடைசி வரை புரியப்போவதில்லை, இலங்கையில் உள்ள பிரச்சினைக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை புரியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்? இலங்கை, வல்லரசுகளின் போட்டிக்கு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட முட்டாள் ஆடு.
  40. "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.