Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88820
    Posts
  2. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2219
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46977
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/02/24 in all areas

  1. இப்படியான ஒரு வாய்ப்பிற்காக இஸ்ரேல் எத்தனை வருடங்கள் தவமிருந்தது. ஈரானின் அணு உலைகள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள், மின்னிலையங்கள் போன்றவற்றை இஸ்ரேல் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தை நாசமாக்கும் வாய்ப்பை ஈரானே இஸ்ரேலுக்கு கொடுத்து விட்டது. முல்லாக்களின் அட்டகாசம் கன நாட்களுக்கு தொடரப் போவதில்லை. அமெரிக்க தேர்தலில் தீவிர வலதுசாரியான ட்றம்ப் வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும் ஈரானுக்கு. தன் முதலாவது ஆட்சியிலேயே ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து அவர்களின் அணு விஞ்ஞானியை கொன்று இருந்தார்.
  2. ஆம் ஐயா. ஆடி ஆடி வானத்தில் மிதந்து வந்த ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் கல்லெடுத்து கட்டபோலில் வைத்து அடித்து கையால் விழுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பேசி பெருமைப்படுகின்றார்கள்.
  3. அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை வளர்ககும் அற்ப மனிதர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
  4. பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம். ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர். முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற தவறுகளின் விளைவே தற்போதைய சுயநல அரசியல். தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள் திட்டும் அரசியலே தொடரும். 75 வருட அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது தான் எம்மவரின் தற்கொலை அரசியல். இரண்டுமே எம்மை அழித்தது.
  5. விரும்பியோ விரும்பாமலோ சிங்களவருடனே இலங்கையில் சேர்ந்து வாழ்கின்றோம், சேர்ந்து வாழ்வோம். தமிழர் எனும் ஒரே காரணத்திற்காக அயோக்கியர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேசமயம் சிங்கள அரசியல்வாதிகள் யோக்கியர்கள் என்றும் இல்லை. நீங்கள் இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் வாழவேண்டும். அப்போது பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம்.
  6. தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன‌ - மகாகல்கடவெல புண்ணியசார தேரர் 21 ஐப்பசி, 2001 அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது" என்று தமிழ்மாறன் கூறினார். மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்". "ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்..
  7. தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!
  8. "காதல் என்பது மாய வலையோ..?", "சிறுவர்களே" & "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "காதல் என்பது மாய வலையோ..?" "காதல் என்பது மாய வலையோ காமம் சேரும் அன்பு பொறியோ காலம் போக்கும் களி ஆட்டமோ கானல் நீரின் ஒரு வடிவமோ காரணம் புரியா நட்பின் பிணைப்போ?" "கண்ணும் கண்ணும் சேர்ந்த பின் மண்ணும் மழையும் கலந்தது போல எண்ணமும் கனவும் பின்னிப் பிணைந்து உண்மை ஆசைகள் நெஞ்சில் சுமந்து பெண் பேசும் கண்ணீர் கதையோ?" "சிறுவர்களே" "கைபேசியில் விளையாடி மகிழும் சிறுவர்களே! கைகால் ஓய்ந்து உடலெடையை ஏற்றதே! உலகம் சுருங்கி கையில் இருக்குது உண்மையைத் தேடி உயரப் பாரு!" "இளமை உன்னை சுண்டி இழுக்கும் இதயத்தை என்றும் நீ இழக்காதே! நல்லதை இணையத்தில் நன்கு தேடி நன்மை பெற்றிடு நலமாய் வாழ்ந்திடு!" "ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" "மடியில்சாய்ந்து மனதை பறிக்கும் மங்கையே கூடிக்குலாவி கொஞ்சி சிணுங்கும் மரகதமே ஆடிப்பாடி அழகு கொட்டும் மயிலே தேடியென்னை வந்து அணைத்தது எனோ? நொடிப்பொழுதில் என்னை கவர்ந்தது எதற்கோ?" "மீசைதொட்டு கண்கள் இரண்டாலும் காதல்சொல்லி ஓசையில்லாமல் செவ்விதழால் முத்தம் பதித்து இசையும்தோற்கும் இனிய குரலால் அழைத்து அசையாநெஞ்சை உருக வைத்த பெண்ணே! ஆசைவார்த்தை பேசிப்பேசி அயித்தானை மசக்குறியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. சுமந்திரம் புகழ் சுமந்திரன் உந்த விசயத்திலை பேய் காய்.
  10. எப்ப மரவள்ளி கிழங்கு சாப்பிட வெளிக்கிடினமோ அன்று வெளிநாட்டுக்கு வருவதற்கு வரிசையில் நிற்பினம் இந்த யூ டியூப்பினர்,பாணுக்கு சீனிக்கு வரிசையில் நிற்பதை விட பாஸ்போர்ட் எடுக்க நிற்க்கும் வரிசை பெரிதாக இருக்கும்....
  11. என் தாய் மொழியில் எனக்கு எந்த குழப்பமும் வராது. ஒரு சிறுபான்மை இனம் பல துறைகளில் கோலோச்சினர். பெரும்பான்மையினர், இதனால் எரிச்சல் கொண்டனர். இது சரியானது.
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது. இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. "திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என அவர் சிகிச்சைபெற்றுவந்த தனியார் மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட பிரச்னை என்ன? இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான ரத்தக் குழாயான aorta-வில் சில சமயங்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வயிற்றுப் பகுதியிலோ நெஞ்சுப் பகுதியிலோதான் ஏற்படும். வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டால் அது Abdominal Aortic Aneurysm என்றும் நெஞ்சகப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது Thoracic Aortic Aneurysm என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த வீக்கத்தை அப்படியே விட்டுவிட்டால், ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால், முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பெரிய பிரச்னையின்றி வாழ்வைத் தொடர முடியும். உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது, புகைபிடிக்கும் பழக்கம் என இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. படக்குறிப்பு, ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ரஜினிகாந்த்தின் உடல் நல பிரச்னைகள் 2011-ஆம் ஆண்டிலிருந்தே ரஜினிகாந்த்தின் உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கும் 'ராணா' என்ற படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்த போது ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் சென்னையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் பிறகு, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், இரு வாரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால், அவருடைய உடல் நலத்தில் என்ன பிரச்னை, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2016-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டதாகவே அப்போது தகவல்கள் வெளியாயின. அங்கிருந்து திரும்பியவுடன் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தின் படப்பிடிப்பில் நடித்தார். அந்தத் தருணத்தில் என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் தான் புதிய அரசியல் கட்சி துவங்கவிருப்பதாக 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அதற்குப் பிறகு அக்டோபர் 2-ஆம் தேதி புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகுமெனவும் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் அந்த ஆண்டு இறுதியில், சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்பட்டு, ஒரு அறிக்கை வெளியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது அதில் அவரது உடல் நலம் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, "2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரஜினி வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், அவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. "கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை தான் வெளியிடவில்லையெனக் கூறிய ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் உண்மைதான் எனத் தெரிவித்தார். இதற்குப் பிறகு, உடல் நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி எதையும் துவங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் நடித்து, த.ச. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdjez28ww4eo
  13. லாரா என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ விளையாட்டு வீர‌ர்......................
  14. பந்தி பந்தியாய் விளக்கம் கொடுப்பதை வட நாலு வரியில் நச்சென்று நன்றி விசுகர் அண்ணா .
  15. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் நிறைய சொத்துப்பத்தென்று இருக்கு. அதையும் பாதுகாக்கணுமே? தமிழர்களா சொத்தா?
  16. இந்தியாவினுடைய முகவர்கள் இந்தியாவை அனுசரிக்காது எப்படி இலங்கையில் அரசியல் செய்வது. சுகபோகமாக வாழ்வது.முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் குருதி வழிந்தோடியவேளை இந்தியாவில் இருந்து மௌனம்காத்தவர்களை இன்னுமா நம்புகிறீங்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இவர்கள் எங்கே ஒன்றாக, ஒரே கட்சியாக நின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிப் பின்னர் காயந்த இலைகளாக உதிர்ந்து துகள்காளகப் போயுள்ளனவே. த.தே.கூட்டமைப்பின் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனத் தொடங்கி தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பாகி நிற்கிறது. தனித் தனி மனிதர்களே கட்சிகளாக நிற்கின்ற நிலை . எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்ற ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புகள் அருகியே வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி திருத்தம்
  17. 28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்) வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194970
  18. தங்களின் விருப்ப ஊடகங்களை யாழ் கள உறவுகளுக்கு தெரிவிக்கலாமே?
  19. கல்வியறிவு என்றால் என்ன என்பது தொடர்பாக திரு செல்வின் அவர்கள் தெரிவித்த கருத்தை இங்கே இணைத்திருக்கிறேன். தலைப்பிற்கும் இதற்கும் தொடர்பில்லாவிடினும் உபயோகமான காணொளி. https://www.facebook.com/JaffnaJet/videos/1189968685601502/?mibextid=ngobeXctTp5pD3Zm
  20. இதில் ஒரு சிறிய திருத்தம்: இலங்கையில் சட்டக் கல்லூரியில் முடிக்கும் சட்டக் கல்வியின் பட்டம் LLB- இளமாணிப் பட்டம். இது இருந்தால் இலங்கையில் சட்டத் தொழில் செய்யலாம். மேலே தரப்பட்டிருக்கும் LLM என்பது சட்ட முதுமாணிப் பட்டம் - இதனை அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலையில் பெற்றார். இன்னொரு தகுதியைக் குறிப்பிட மறந்திருக்கிறீர்கள். "ஜனாதிபதி சட்டத்தரணி-President's Counsel" என்ற கௌரவம் சும்மா "பள்ளிக் கூடம் ஒதுங்காத"😎 ஆட்களுக்குத் துக்கிக் கொடுக்கும் நிலை இன்னும் இலங்கையில் ஏற்படவில்லை. சுமந்திரன், கனக ஈஸ்வரன் , சிவா பசுபதி, கமலசபேசன் , எங்கள் விக்கி ஐயா ஆகிய சில தமிழ் சட்டத்தரணிகள் இந்த கௌரவம் பெற்றிருக்கிறார்கள். பி.கு: கல்வித் தகுதிகளில் ஆர்வம் மிகுந்த விசயகாரரான பெருமாள் transcripts கேட்பார்! றெடியாக வைச்சிருக்கிறீங்களா😂?
  21. என்ன தம்பி எல்லாத்தையும் பக்காவா கிண்டி மறைச்சிட்டியள் போலை கிடக்கு. குரல் உயருது
  22. அன்னம்... பாலையும் ,தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக்காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா? என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன். ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் உண்டே. *இதை* நாம் *சிந்திக்கவில்லையே* என்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன *ஆச்சரியம்..!!* *பால்* முழுவதையும் *சாதம்* உறிஞ்சிக் கொண்டிருந்தது. *தெளிந்த நீர்* மட்டும் *சாதத்தைச்* சுற்றியிருந்த *இடத்தில்* வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன். *இதுதான்* அன்னம் *பாலையும்* தண்ணீரையும் *பிரிக்கும்* கதை. நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் *உங்கள்* வீட்டிலேயே *செய்து* பார்க்கலாம். மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, *அன்னம்* என்று தான் *சொன்னார்களே* தவிர, *அன்னப்பறவை* என்று ஒரு இடத்திலும் *சொல்லவில்லை.* அது *நாமாக* செய்து *கொண்ட* *கற்பனைதான்* என்று புலனாயிற்று. அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் *என* தெரிந்து கொண்டேன். *படித்ததில் உணர்ந்தது.... Jino Sivaji
  23. ஆபிரகாம் சுமந்திரன் என்பது அவரின் முழுப்பெயர் அல்ல. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் என்பதுதான் அவரது முழுப்பெயர். 😁
  24. என்ன சார் நெத்தன்யாகுவை எல்லாம் எக்ஸ் தளத்தில் பின் தொடர்கின்றீர்கள். நீங்கள் ரொம்ப பயங்கரமான ஆள்தான் போல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கபெற்ற உத்தமர் இவர்தானே?
  25. மாஜ வலைக்குள் விழும் மான்கள். தில்லை நீங்க கதைகளோ கவிதைகளோ எழுதும்போது எதற்கேற்ப படங்களையும் சுட்டு இணைத்துவிடுகிறீர்கள். பிரமாதம்.
  26. ம்..... உந்த கூத்தாடியின்ர குணம் தெரிந்து. கூட்டுக்கட்சிகள் தாங்கள் தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இனிமேல் இவரின் பருப்பு வேகாது. சுமந்திரனின் பேச்சுக்கு தலையாட்டிய மாவையர், எல்லோரின் வேண்டுகோள், சேர்ந்து போட்டியிடுவதே என கதை விட்டுப்பார்க்கிறார். இவர்களை தள்ளிவைப்பதோடு, கூட்டுக்கட்சிகளும் மக்களுக்காய் தங்களை மா ற்றாவிடில் இவர்களும் தள்ளிவைக்கப்படுவர். மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியும் வந்துவிட்டது. இனிமேல் யார் புதுசாய் வருகிறார்களோ அவர்கள் பின்னால் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களை நம்பி தமிழுணர்வும் வலிமையிழந்து, நிலங்களும் பறிபோய், உறவுகளும் இழந்து அநாதரவாக நிற்பதால், இனி தம்மைத்தாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்களால் தள்ளப்பட்டுள்ளனர். இனி எதை, யாரை வைத்து வியாபாரம் நடத்தப்போகிறார்கள்? சிங்களமும் திரும்பிப்பாராது இவர்களை, மக்கள் இல்லையென்றால் வாக்குகளும் இல்லை. தனித்து விடப்பட்ட இவர்களை எதற்கு? அப்போ புரியும் மக்களின், இனத்தின், தேசியத்தின் வீரியம், ஒற்றுமையின் பலம் என்ன என்பது. எல்லா சிங்கள அரசியல்வாதிகளும், நேற்று அரசியலுக்கு வந்த நாமலும் கூறுகிறார்கள், தமிழ்கட்சிகள் தம் மக்களின் பிரச்சனைகளுக்காக எந்த விதமான அழுத்தத்தையும் கொடுப்பதில்லை, அப்படி அவர்கள் செய்திருந்தால்; எப்பவோ அவர்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்களென்று. ஆனால் அதற்கு, நம்மவர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படி செய்தால் தாம் பெற்ற சலுகைகள் வெளிவந்துவிடும் என்கிற பயமோ தெரியவில்லை. சலுகை அளித்து அவர்களை விலைக்கு வாங்கியவர்கள், தங்களை இந்த கனவான்கள் எதிர்க்க மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்தே காட்டிக்கொடுக்கிறார்கள். காலம் எவ்வளவு வலிமையானது பாருங்கள். தேர்தல் வரபோகுதென்று போன ஆண்டு கதை எழுந்தபோது, கூட்டுக கட்சிகளை விரட்டியடித்த சுமந்திரனை, யாரும் தங்களோடு இணைத்துக்கொள்ள தயாரில்லை. வேண்டுமானால் டக்கிளசுக்கு தூது விட்டுப்பார்க்கலாம், குணங்கள் ஒரே மாதிரி, இனத்தை விற்று, எதிரிக்கு வாலாட்டுவது. அநுர இவர்களை கணக்கிலெடுக்கவும் மாட்டார். ஏதோ முயற்சித்துப் பார்க்கட்டும். வடக்கின் வசந்தம் சொல்லிப்போட்டார், இந்த தேர்தலோடு தான் அரசியலில் இருந்து விடைபெறப்போவதாக. அவர் என்ன. யாரிடம் இருந்து விடைபெறுவது? எல்லோருமே வீணர்களை வீட்டுக்கு அனுப்புவதாக முடிவெடுத்து விட்டனர்.
  27. Bar license பிரச்சனையை மறைக்கிறதுக்கு பயபுள்ள எப்பிடி ஓடுது பார் (இதிலும் "பார் " தானா 😁) விரைவில் இந்திய அரசியல் வியாதிகள் எங்கள் அரசியல் வியாதிகளிடம் பாடம் எடுக்க வேண்டி வரலாம்,..🤨
  28. சாத்தான்.... நான் சொல்வதை நினைவில் வைத்திருங்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு மீண்டும் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடப் போகுது என்று சொல்லி, போனவர்களை மீண்டும் வெளியே அனுப்பி விடுவார். இது நிச்சயம் நடக்கும். மனது சுத்தம் இல்லாத மனிதன். வாயை திறந்தால்.... பொய்யும், பிரட்டும்தான் வெளியே வரும்.
  29. வாழ்த்துக்கள் வினோ.... 👍 மாவை சேனாதிராசா, ஆபிரகாம் சுமந்திரன்.. ஆகியோரின் அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். 😁 அவை இரண்டு பேரும் போனவுடன் தமிழரசு கட்சிக்கு... மஞ்சள் தண்ணி தெளித்து புனிதமாக்க வேண்டும். 😂 அதுக்குப் பிறகு தமிழரசு கட்சிக்கு ஏறுமுகம் தான். 📈 ⬆️ ✔️ இல்லையேல்... ஆறடி குழி தோண்டி, புதைத்து விட வேண்டியதுதான். 🤣
  30. இந்தியாவை இன்றும் பலமாக நம்புகிறார்கள் ...அப்படி அவர்களிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை....தங்கள் மக்களை விட இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர்....இந்தியா இவர்களிடம் ஒற்ருமையாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புவார்கள் ...இவர்கள் திரும்பி இர்ண்டு கட்சியாக பிரிவார்கள் ...
  31. கொசிறுத் தகவல்: சட்டவாளர்களின் கல்வி தராதர குறியீடுகளில் சட்டம் (Law) என்பதை ஒருமையில் L என்றும் சட்டங்கள் (Laws) என்று பன்மையில் LL என்றும் குறியிடப்படும். உதாரணமாக LLB (அல்லது LL.B) படிப்பை Bachelor of laws என்றும் LLM (அல்லது LL.M) படிப்பை Masters of laws என்றும் வழங்கப்படும். அதேவேளை Bachelor of Civil Law என்று ஒருமையில் குறிக்கப்படும்போது BCL (அல்லது B.C.L) என்றழைப்பது வழமை.
  32. 🤣.... உண்மையான தமிழர்கள் இதை எல்லா இடங்களிலும் பகிர்வார்கள், இளைஞனின் விபரத்துடன்......🤣.
  33. கொஞ்சக் காலத்துக்கு வெளிநாடுகளுக்கு போக அனுமதியில்லை எண்டு சொல்லிப்போட்டு தோட்டம்,துரவு,வயல் கொத்த விட வேணும்.
  34. திருமண நல் வாழ்த்துகள் தலைவா.❤️
  35. எனக்கு அவரை தெரியும். நல்ல பழக்கம். ஒண்டாய் திரிஞ்சனாங்கள்.ஒரே பள்ளிக்கூடத்தில படிச்சனாங்கள். நான் இவருக்கு தேத்தண்ணி வாங்கி குடுத்தனான்.இவற்றை சொந்தங்களுக்கு நானெண்டால் நல்ல பிரியம்......😁 இன்னும் வரலாம்.....😋 பட்டுவேட்டி கள்ளரெண்டு சும்மாவே சொன்னவையள். 😎
  36. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்களை அரசியல் மயப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் செய்யாது வெறும் வாக்கரசியல் செய்ததன் விளைவே இந்தநிலை. எந்தக்கட்சியிடமாவது தெளிந்த ஒரு அரசியற் திட்டம் உள்ளதா? ஒன்று தோற்றால் அடுத்து என்ன என்ற தெளிவு இருக்கிறதா? மக்களை வெறும் புள்ளடியிடும் ஒரு கருவியாகப் பார்த்தார்களேயன்றி வேறென்ன செய்தார்கள். தேர்தல்வரும்போது தொகுதிக்குப் போவது. மற்றும் வேளைகளில் வெளிநாட்டுப் பயணமும் நாடாளுமன்றத் தேனீர்க் கடையுமாய் இருந்தவர்களால் வந்தவினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  37. தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  38. "சந்தனத்தில்" (சந்தனக் கட்டை இருப்பதால்) தயாரித்த சோப்பாக இருக்கும்! அல்லது புகழ்பெற்ற ஈழத்தயாரிப்பான "மில்க்வைற்" ஆகவும் இருக்கலாம்😂!
  39. நிலாந்தன் மாஸ்டர் நல்ல வடிவா எழுதியிருக்கிறார்😂 போத்தில் சின்னம் கிடைத்தால் வெல்லலாம்!😂
  40. இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டால் Switzerland போலவா வடக்கு கிழக்கு வரும்? காக்கா கறி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னிகிருஸ்ணன் குரலா வரும்,....🤨
  41. மற்றவர்கள் குறை சொல்லாத அளவிற்கு(மேற்குலகம்) இந்த முறை தமிழ் அமைப்புகள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்து காட்ட வேண்டும் என்பது என் அவா!
  42. Hon. M. A. Sumanthiran, M.P. Party Illankai Tamil Arasu Kadchi (ITAK) Electoral District / National List Jaffna Date of Birth : 09-02-1964 Civil Status : Married Religion : Christianity Profession / Occupation : Attorney-at-Law Contact Details On Non-Sitting Days 0112559352 On Sitting Days 0112366314 sumanthiran_m@parliament.lk Political Career Academic Qualifications B Sc (Physics), LLM (Internet and Electronic Law); O./L A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣 👍
  43. இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.