Jump to content

Leaderboard

  1. colomban

    colomban

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      10

    • Posts

      3322


  2. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      8707


  3. Justin

    Justin

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      6119


  4. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      1601


Popular Content

Showing content with the highest reputation on 10/03/24 in all areas

  1. The Sun/Son shines - சுப.சோமசுந்தரம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல. திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே ! திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' (Unity is noble, Uniformity is fascist) என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது (அம்மையார் சுயநலம் அற்றவர் என்று சொல்ல வரவில்லை; தம்மையும் நம்மையும் அடகு வைக்க அவரது தன்மானம் இடம் கொடுப்பதில்லை). இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது - தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு. திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது. எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும். இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?
    6 points
  2. பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன். மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள். ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு. "எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை.
    4 points
  3. நான் இந்தத் தொடரை எழுதுவதன் காரணத்தைத் தெளிவாகக் கூறிய பின்னரும் இதனை நிறுத்துவதை ஒரே நோக்கமாகக் கொண்டு சிலர் எனது பதிவுகளைச் சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாகப் பிந்தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இங்கே நான் பதியும் விடயங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக சரித்திரத்தில் பதியப்பட்டவை, எம் கண்முன்னாலேயே நடந்தவை. ஆகவே நீங்கள் தடுக்க நினைப்பது ரஞ்சித் எனும் தனி மனிதனின் சொந்தக் கருத்துக்களையல்ல, மாறாக எமது இனத்தின் மீது குறிப்பிட்ட ஒரு இனத்தால், அதனை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சியால், அக்கட்சியில் முக்கிய உறுப்பினராக விளங்கும் ஒருவரால் கடந்த காலங்களில் புரியப்பட்ட விடயங்களைத்தான். நான் எழுதுபவை உண்மையானவை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனால்த்தான் அப்பதிவுகளைப் பற்றி கேள்வி எழுப்பாமல் என்னைப்பற்றியும், எனது நோக்கங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கீழ்த்தரமாக உங்களால் எழுதவேண்டி ஏற்படுகிறது. ஏதாவதொரு சிங்களத் தலைவர் அவ்வப்போது புதிதாக ஆட்சிக்கு வரும்போது அவர் பேசும் விடயங்களை அப்படியே வேத வாக்கென்று நம்பி, அவரது கட்சியும், அவரும் கடந்த காலங்களில் செய்த எம்மீதான செயற்பாடுகளை, எம்மினத்தின் இருப்பு மீதான திருப்பமுடியாத சேதங்களை இலகுவாக மறந்து அவர் பின்னால் ஓடுவதென்பது ஈழத்தமிழருக்குப் புதியது அல்ல. 1994 இல் சந்திரிக்கா, 2002 இல் ரணில், 2010 இல் சரத் பொன்சேக்கா, 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சஜித் பிரேமதாச என்று ஒவ்வொரு தலைவரும் வரும்போது நாம் அவர்களைத் தூக்கிக் கொண்டாடினோம். ஆனால் தேர்தல்கள் முடிந்தபின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறான முகங்களை எமக்குக் காட்டினார்கள் என்பது எம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அந்த வரிசையில்த்தான் அநுரவும் இப்போது வருகிறார். அவர் புதியவர் (எம்மில்ப் பலரைப் பொறுத்தவரை), அவர் பேசும் பேச்சு வசீகரமாக இருக்கிறது, மக்களுடன் மக்களாக மிகவும் எளிமையாக அவர் வலம் வருகிறார், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் அவர் பேசவும், செயற்படவும் போகிறார் என்று நாம் நம்புகிறோம். கடந்த 50 வருடகால தமிழ் அரசியலை அவதானிப்பவர்களுக்கு நடந்தவை பற்றிய பூரண அறிவு இருக்கிறது. பலருக்கு அவை இருந்தும் அதுபற்றிப் பேச விருப்பமிருப்பதில்லை. சிலருக்கு அவை குறித்துப் பேசுவதே வெறுப்பாக இருக்கிறது. அவ்வாறு பேசுவதால் தாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தரத் துடிக்கும் அநுரவுக்கான தளம் பலவீனமாகிப் போய்விடும் என்கிற நியாயமான கவலை அவர்களுக்கு. எந்தவினமும் தனது சரித்திரத்தை, குறிப்பாக தன்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்களை பதிவுசெய்து வைக்கத் தவறுவதில்லை, ஈழத் தமிழினத்தைத் தவிர. எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமங்களை நாம் எங்கும் பதிந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் எம்மிடையேதான் இருக்கிறார்கள். 2009 இற்குப் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் வேண்டுமென்றே தேசிய நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றியவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள். ஆரம்பத்தில் புலிநீக்கம் என்று ஆரம்பித்து, இப்போது தமிழ்த் தேசிய நீக்கம் என்று உருமாறி, இனிவரும் காலத்தில் சிங்களப் பெருந்தேசியத்திற்குள் உள்வாங்கப்படும் விருப்பினை பலரின் நோக்கம் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் தாயகத்தில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எமது போராட்டத்தின் அவசியம் குறித்தோ, எம்மீது நடத்தப்பட்ட இனவழிப்புக் குறித்தோ, இந்த இனவழிப்பில் பங்குகொண்ட பல்வேறுபட்ட சிங்களத் தேசியவாதக் கட்சிகள் குறித்தோ எந்த அறிவும் ஊடப்படவில்லை. இது வேண்டுமென்றே தமிழரை 2009 இல் இருந்து பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டவை. அதனாலேயே அநுரவின் வசீகரமான பேச்சினைக் கேட்கும்போது தமிழ் இளைஞர்கள் அதன் பால் கவரப்பட்டு பின்னால் ஓடுகிறார்கள், இதற்கு தமிழ் யுடியூப் வியாபாரிகளும் விதிவிலக்கல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் இளைஞர்கள் அநுர எனும் சிங்கள அரசியல்வாதி மீது வைத்திருக்கும் கண்மூடித்தனாமான விசுவாசத்திற்கு இவர்களும் பெரும் காரணமாகி இருக்கிறார்கள். ஆகவேதான் அநுர எனும் மனிதர் தனிப்பட்ட ரீதியிலும், மக்கள் விடுதலை முன்னணி எனும் கட்சியின் உறுப்பினராக இதுவரை செய்துவந்த விடயங்களை இங்கே பதிகிறேன். தேவையானவர்கள் இவற்றைப் படித்துப் பார்ப்பதன் ஊடாக சரித்திரத்தை அறிந்து சரியானதைச் செய்யலாம், அல்லது கடந்து போகலாம். தமிழ்த் தேசியத்தை மட்டுமே முன்னிறுத்துவோம் என்று ஆரம்பித்த யாழ் இணையம் இன்று தேசிய நீக்கம் செய்யும் நபர்களுக்கு தாராளமாகக் களம் அமைத்துக் கொடுக்கிறது. இதில் புலிநீக்கம் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களும் தாராளமாகக் கடை விரித்து வருகிறார்கள். ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்திற்கும், விவாதத்திற்கும் இந்த எதிர்மறையான கருத்துக்கள் பகிரப்படுவது அவசியம் என்று காரணம் சொல்லப்படுகிறது. நல்லது. நான் எழுதுவதை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும், இதனைப் படிப்போரின் எண்ணங்களைச் சிதறடிக்க வேண்டும் என்று எண்ணி தொடர்ச்சியாக எழுதி வருவோருக்கு சிறிய வேண்டுகோள். நீங்கள் உண்மையாகவே எனது பதிவு அநுர எனும் மகத்தான மனிதரின் வெற்றி வாய்ப்பைப் பாதித்துவிடும் என்று நம்பினால், புதிதாக ஒரு திரியைத் திறந்து (யாழ்க்களத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசியத்திற்கெதிரான, தேசிய நீக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்கும் இடமளித்தல் எனும் கோட்பாட்டிற்கு அமைய), அத்திரியில் அநுர எனும் மனிதருள் மாணிக்கத்தின், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணி எனும் மாபெரும் இயக்கத்தின் செயற்பாடுகளை, அவர்கள் தமிழ் மக்களுக்காகச் செய்த தியாகங்களை பட்டியலிட்டு தனியே ஒரு நாட்குறிப்பாக எழுதினால் நான் எழுதுபவை குறித்து நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அநுரவின் வெற்றிக்காக யாழ் களத்தின் அனுமதியுடன் இங்கேயே ஒரு பிரச்சாரத் திரியைத் திறக்கலாம். எனது எழுத்துக்களால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்று நீங்கள் கருதுபவற்றை உங்களின் பிரச்சாரத் திரியினால் நீங்கள் சரிசெய்து கொள்ளலாம். அதுதான் படித்த மக்களுக்கு அழகு. அதைவிடுத்து அற்பத்தனமாக என்னைத் தொடர்ந்துவந்து தனிமனித தாக்குதல் நடத்தத் தேவையில்லை. உங்களின் அருவருக்கத்தக்க எழுத்துக்களால் நான் இத்தொடரை நிறுத்தப்போவதில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதுவேன். உங்களின் பொன்னான நேரத்தை இங்கே வீணடிக்காமல், அநுரவுக்கென்று தனியே திரி திறந்து அங்கே உங்களின் பிரச்சாரங்களை முன்வைய்யுங்கள். இன்றைய இளைய தலைமுறைக்கு அது பெரும் உதவியாக இருக்கும். நன்றி.
    4 points
  4. எல்லா முன்னேற்றங்களாலும் அழிவுகள் இருந்தன, இருக்கப் போகின்றனதானே, நொச்சி. பலநாடுகள் தங்கள் பலங்களால், நுட்ப வளர்ச்சிகளால் அழிவுகளை உலகெங்கும் நடத்திக் கொண்டும் இருக்கிறதுதானே. போன வருடம் அக்டோபர் 7ம் திகதி ஆரம்பித்த சண்டையே இன்றுவரை தொடர்கின்றது. இப்போது வேறு சில களமுனைகளுக்கும் இது பரவியுள்ளது. அது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை இல்லை. ஹமாஸ் புதிய ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கை அது. அன்றும் பலர் இஸ்ரேல் முடிந்தது என்றனர், இஸ்ரேல் வாங்கிக் கட்டுகின்றது என்றனர், ஹமாஸின் பலம் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்பினர். ஆனால் அந்த ஒரு நிகழ்வே அமெரிக்காவிற்கு போதுமானதாக இருந்தது. எல்லா நாடுகளுமே தங்கள் சுய ஆதாயத்தைத் தான் உலகெங்கும் தேடுகின்றனர். பலம் இருக்கும் நாடுகள் பாய்ந்து பாய்ந்து தேடுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் பதுங்கி பதுங்கித் தேடுகின்றன. உள்ளே வந்த ஊர்ப்பிடாரி வெளியே இலேசில் போகமாட்டார். அவரை உள்ளே வர விடாமல் பார்ப்பதே உத்தமம். ஈரான் எதற்காக ஹிஸ்புல்லாவையும், ஹமாஸையும் மற்றும் மேற்குக் கரையில் இன்னும் பல சின்ன குழுக்களையும் கட்டி வளர்க்கின்றது........... உலகில் சமாதானம் வர வேண்டும் என்பதற்காகவா....... இல்லை தானே, தங்களை அந்தப் பிரதேசத்தில் ஒரு வல்லரசு என்று காட்டுவதற்காகவே இந்த துணைப்படைகள். ஈரானும் அயலவர்களுக்கு அடிக்கும், அவர்களைக் கொல்லும், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சொந்த மக்களையே கொன்றொழிக்க உதவும். இலங்கை அரசுக்கு இஸ்ரேல் மட்டுமா ஆலோசனைகளும், ஆயுதங்களும், சேவைகளும் வழங்கியது....... அமெரிக்கா வழங்கியது, இந்தியா வழங்கியது, ரஷ்யா வழங்கியது, உக்ரேன் வழங்கியது, பாகிஸ்தான் வழங்கியது.......... இது இன்றைய உலகில் ஒரு மிக இலாபகரமான விற்பனை. இதில் தர்மம், நெறி எல்லாம் எவரும் பார்ப்பது கிடையாது. மேலே சொன்ன எதுவுமே எந்த ஒரு நாட்டையும், அதன் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு அல்ல. பலமானவர்கள் செய்வது ஒரு சாராருக்கு மிக அநியாயமாகவே முடிந்து கொண்டிருக்கின்றது என்ற நிஜத்தை தான் நான் சொல்ல முயன்றிருக்கின்றேன்.
    3 points
  5. நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள். சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா? இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை வந்திருக்கிறது. யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக் கோபம் வருகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.
    3 points
  6. இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁
    3 points
  7. இது ஒரளவு உண்மை. சிங்களவர்களுக்கு racism vs patriotisms வித்தியாசம் தெரியாது. சிறுவயதில் இருந்தே இவர்களுக்கு பொளத்த சிங்கள மேலான்மைதனம் விதைக்கப்டுகின்றது. பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலேயே இது இவர்களுக்கு போதிக்கப்ப்டுகின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் குடிமக்க‌ள், இவர்களே பூமி புத்திரர். புத்தர் இந்த நாட்டை சிங்கள பொளத்தர்களுக்கே கையளித்துள்ளார். இவர்களே இந்த நாட்டை அரசாள வேண்டும் என்று பாடசாலை நாட்களெலேயே போதிக்கப்படும். என் பாடசாலை நண்பன் சிங்கள பெண்ணை திருமணம் செய்து கண்டியில் வாழ்கின்றான். இவன் இப்பொழுது சிங்களவன் போல பெயரை மாற்றியுள்ளான். ஒரு மகன் ஆமதுரு, எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். இப்பொழுது பன்சலையில் செயலாலராக இருக்கின்றான். ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, பெண்கள் படாசாலைகளான பொளத்த மகளிர் கல்லூரி, தேவி பாலிக, விசாக போன்ற எல்லாவற்றிலும் இப்படித்தான். படிக்கும் காலத்திலேயே இந்த இனவாதம் விதைக்கப்பாடும். அனனகரிக தர்மபால காலத்திலிருந்தே இது இப்படித்தான். மனிதனுக்கு இயல்பாக இருக்கும் "தான் எலலாவற்றிலும் சிறந்தவன்" என்ற‌ இயல்புதான் பின்பு இனவாதமாக தோற்றமெடுக்கின்றது. முஸ்லீமகளள் மதவாதிகள் இவர்கள் சாதரணா கிறிக்கட் விளையாட்டிலும் கூட பாக்கிஸ்தானையே ஆதரிப்பார்கள்
    3 points
  8. இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!
    3 points
  9. அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை வளர்ககும் அற்ப மனிதர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
    3 points
  10. 👍............. ஈரான் விழுந்த அந்த பழைய ஹெலிகாப்டருக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என்றும் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தானா இவர்கள் என்று நினைக்க வைத்தனர் அன்று. பின்னர் இரவில் இருட்டில் தேட முடியாது என்றனர். உலகில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் ஈரானியர்கள் என்றும் சொல்லியிருந்தனர், ஆனால் விழுந்ததை கண்டுபிடித்தது துருக்கியின் ட்ரோன்களே, ஈரானின் ட்ரோன்கள் அல்ல. எவரும் அயன் டோமை சில தடவைகள் தர்க்கமுடியும். ஹமாஸ் கூட தற்போதைய சண்டையின் முதலாவது நாளில் - அக்டோபர் 07, 2023 அன்று - அயன் டோமை மீறி இஸ்ரேலிற்குள் ஏவுகணைகளை விழுத்தியது. அயன் டோமியின் சக்தியை மீறி அதிக ஏவுகணைகளை மிகக் குறுகிய நேரத்திற்குள் செலுத்தினால், அயன் டோமால் வரும் எல்லா ஏவுகணைகளையும் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு ஏவுகணைகளை தொடராகச் செலுத்துவதற்கு எவரினதும், எந்த நாட்டினதும் பொருளாதாரமும் வளங்களும் இடம் கொடுக்காது. அத்துடன் அயன் டோமின் வலுவையும் இஸ்ரேலும் அதிகரிக்கும், எதிர் ஏவுகணைகளின் எண்ணிக்கையக் கூட்டுவதன் மூலம். அமெரிக்கா தான் அதிக எதிர் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியே இரண்டு பக்கமும் 'போதும்..... கணக்கு சரி.....' என்று ஒதுங்குவது தான் உலகிற்கும் அவர்களுக்கும் நல்லது.
    2 points
  11. அநுரவின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத்தின் பின்னணி பல ஈழத்தமிழர்களின் இன்றைய கதாநாயகனாக பவணி வரும் இலங்கையின் ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்கவின் வலது கரமும் நெருங்கிய சகாவுமான விஜித்த ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழர் மீதான இனக்கொலை அரச மயப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றிய எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான், அதுதான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சர்வதேசத்தில் சித்தரித்து, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்துவது. ஹமீது, ரஞ்சன் விஜேரத்ன, ஹரல்ட் ஹேரத், டிரோன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் கதிர்காமர், அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ரோகித போகொல்லாகம, ஜி எல் பீரிஸ், ரவி கருணநாயக்க, திலக் மாறப்பன என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை இருந்த எல்லோருமே செய்த அதே பணியினை ஆற்ற தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தும் வந்திருக்கிறார். அவர் வெளிவிவகார அமைச்சராக ஆற்றிய முதலாவது பணி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் ஈடுபட்ட இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான சர்வதேச விசாரணைப்பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருவதற்காக சவுதி அரேபியாவிற்கு வாழ்த்துக் கூறியமை என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய ஜனாதிபதியை, அவரது அமைச்சரவையினை தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்று வழிபட ஆரம்பித்திருக்கும் தமிழ் அபிமானிகளுக்கு அநுரவின் சகாவான விஜித்த ஹேரத்தின் பின்னணி பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். விஜித்த ஹேரத், ஒரு தீவிர சிங்கள தேசியவாதியும் ஜனதா விமுக்தி பெரமுன எனும் தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியின் மிக மூத்த உறுப்பினருமாவார். இவர் அநுர குமாரவினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சமய விவகாரங்களுக்கான அமைச்சர், தொழிநுட்ப ஊடகத்துறை, சுற்றுப்புறச் சூழல், நீர் வழங்கல், தோட்டத்துறை, சமூகவியல், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாம் இவரது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கலாம். மக்கள் விடுதலை முன்னணிக்கு அவர் காட்டிவரும் அசைக்கமுடியாத விசுவாசமே அவரை அநுரகுமாரவின் நெருங்கிய சகாவெனும் நிலைமைக்கு உயர்த்தியது. விஜித்த ஹேரத் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினர். மாணவராக இருந்த காலத்தில் 1986 ஆம் ஆண்டு அவர் அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பில் இணைந்த சில மாதங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசிற்கெதிரான இரத்தக்களறி மிகுந்த ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல்களிலேயே அவர் முதன்முதலாக தேர்தலில் இறங்கினார். அத்தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 605 வாக்குகளையே அவர் பெற்றார். 2000 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 8,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற அவர் அதன் பின்னர் அத்தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறார். பாராளுமன்ற கோப்புக்களைப் பார்க்கின்றபோது விஜித ஹேரத் எப்போதுமே பொது நிதித்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் விவசாயம் சார்ந்த பாராளுமன்றக் கமிஷன்களில் அங்கம் வகித்திருப்பது தெரிகிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களின்போது ஹேரத் சார்பாக வாக்களித்த போதிலும், அவரால் இதுவரை எச்சட்டமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஆட்சியமைத்தபொழுது விஜித்த ஹேரத் அந்த அரசாங்கத்தின் கலாசார அமைச்சராகவும், தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிகம் பிரபலமாகாத ஒரு உறுப்பினராக ஹேரத் இருந்த போதிலும் அநுரவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக அவர் வலம் வந்தார். விஜித்த ஹேரத்தின் போரிற்கான ஆதரவும், நீதிவழங்கலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும் 2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பு ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத் அரச அடக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டக் காலம் முழுவதும் மக்கள் விடுதலை மார்க்ஸிஸச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையினை நியாயப்படுத்தியே வந்தது. ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைப் போலவே விஜித்த ஹேரத்தும் தமிழர்களுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மிகக் கடும் எதிர்ப்பினைத் தொடர்ச்சியாக காட்டி வந்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, புலிகளுடனான பேச்சுக்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டி வந்தது. மேலும், 2004 சுனாமிப் பேரிடரின் பின்னரான இணைந்த சுனாமி நிவாரணக் கட்டமைப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தோற்கடித்ததுடன், பேச்சுக்களை இரத்துச் செய்தால் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தது. 2006 ஆம் ஆண்டி ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே இராணுவத் தீர்விற்கான தனது ஆணையினை அப்போதிருந்த மகிந்த அரசிற்கு வழங்கியதுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கும் உறுதுணை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணியினர், கூடவே விஜித்த ஹேரத் இறுதி யுத்த காலத்தின்போது இலங்கை இராணுவத்தினர் பரந்தளவில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் அறிவித்து வந்த நிலையில் விஜித்த ஹேரத் தனது அமைப்புடன் இணைந்து இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்பாகவும் ஐ நா அமைப்பின் அலுவலகம் முன்பாகவும் அன்றைய மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் லுயிஸ் ஆர்பருக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னர் சர்வதேசத்தில் உருவாகி வந்த சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரல்களை விஜித்த ஹேரத் தொடர்ந்தும் எதிர்த்து வந்தார். "போரில் நடந்ததாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்களை விசாரிப்பது அவசியம் என்றால், அது உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே விசாரிக்கப்பட முடியும். இலங்கையினை விமர்சிக்கின்ற மேற்குநாடுகள் இன் கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகளை நாம் நடத்தப் போவதில்லை" என்று 2015 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் கூறியிருந்தார். இதுபற்றி மேலும் வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். https://www.tamilguardian.com/content/sri-lankan-ministers-reject-un-investigation-mass-atrocities புதிய வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்தின் முதலாவது பணி ஐ நா மனிதவுரிமை சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேசப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு நன்றி கூறியதே. கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சில மணித்துளிகளுக்குப் பின்னர் சவுதி அரேபிய நாள் நிகழ்வில் உரையாற்றிய ஹேரத் ஐ நா மனிதவுரிமைச் சபையில் இலங்கை ராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணியினருடனான ஹேரத்தின் ஆரம்ப காலம் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிங்க‌ளத் தேசியவாதியான விஜித்த ஹேரத் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வென்பதே கிடையாதென்று தொடர்ந்து வாதாடி வந்தார். விஜித்த ஹேரத் போன்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர்களிடம் மேலோங்கி நின்ற சிந்தனையான தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடாதெனும் நிலைப்பாட்டினால் அவ்வமைப்பு தெற்கின் கிராமப்புறச் சிங்கள இளைஞர்களிடையே பிரபல்யம் அடையத் தொடங்கியது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்த்தாபகரான ரோகண விஜேவீர "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையென்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின்பேரில் உருவாக்கப்பட்டது" என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ரோகண விஜேவீரவின் இந்த பிரச்சாரமே தமிழ் மக்களுக்கெதிரான இவ்வமைப்பின் நீண்டநாள் காழ்ப்புணர்விற்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. இலங்கை அரசாங்கங்களுக்கெதிராக இரு முறை ஆயுதப் போராட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தபோதிலும் கூட, அதே காலப்பகுதியில் உரிமைக்காகப் போராடி வந்த ஈழத்தமிழர் சார்பாக கிஞ்சித்தும் அவ்வமைப்பு இரக்கமோ அக்கறையோ காட்டவில்லை. மாறாக இக்கட்சியிலிருந்தே இலங்கை சந்தித்த அதிதீவிர சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வெளிக்கொணரப்பட்டார்கள் . மக்கள் விடுதலை முன்னணியினுடனான தனது ஆரம்ப காலம் குறித்தும் 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி குறித்தும்விஜித்த ஹேரத் பின்வருமாறு நினைவுகூர்ந்தார். "அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சிவில் யுத்தம் ஒன்று நடந்து வந்தது. நாம் இந்திய இராணுவத்திற்கெதிராகப் போராடினோம். அக்காலத்தில்தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது" . "அவ்வொப்பந்தம் இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒப்பந்தத்தின் ஊடாக எமது திருகோணமலையில் அமைந்திருந்த எண்ணெய்க் குதங்களை இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நிறுவனம் ஒன்றிற்கும் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறே எமது நாட்டின் உளவீட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை நுழைக்கத் தொடங்கியது. இந்தத் தலையீட்டினை எதிர்த்தே நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது". "நான் அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினராக இருந்தேன். நாம் பல்வேறான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினோம். இந்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான ஜனநாயகவழி ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம்". தமிழருடனான அதிகாரப் பகிர்விற்கெதிரான உறுதியான விஜித்த ஹேரத்தின் நிலைப்பாடு பொலீஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ மாகாணசபைகளுக்குக் கொடுக்க அனுமதிக்கப்போவதில்லை தேர்தலுக்கு 72 மணிநேரமே இருக்க மீண்டும் உறுதிப்படுத்திய‌ மக்கள் விடுதலை முன்னணி 2021 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் வழங்கிய செவ்வியொன்றில், "எமது நாட்டில் நாம் பிரிவினையினை முற்றாக எதிர்க்கிறோம். ஏனென்றால் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இனப்பிரச்சினைக்கு பிரிவினை ஒரு தீர்வாக அமையாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது, "மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், "பிரிவினை எப்படி இலங்கையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய மாட்டாது, அவ்வாறே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார். "இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமெனில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இன, மத, அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அல்லாமல் ஒரேவகையான உரிமைகளை வழங்குவதனூடாக மட்டும்தான்" என்று அவர் கூறினார். "நாம் புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போராடினோம். ஏனென்றால் அது எமது மக்களைப் பிரிக்க முயன்றது. அவ்வியக்கத்திற்கெதிராக இன்னும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். இறுதியில் எமக்குத் தேவையான வெற்றியை நாம் அடைந்துகொண்டோம். நாம் புலிகள் இயக்கத்தை தத்துவாந்த ரீதியில் மட்டுமல்லாமல் எல்லாவழிகளிலும் தோற்கடித்து அழித்தோம்". 13 ஆவது திருத்தத்தினூடாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனையும் கடுமையாக எதிர்த்து வந்தார் விஜித்த ஹேரத். 2005 இல் அவர் பேசும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார். 2015 இல் சிங்கள இனவாதிகளின் ஆங்கில நாளேடான தி ஐலணட்டில் பேட்டியளித்த ஜேரத் "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முற்றாக எதிர்க்கிறது" என்று கூறினார்." தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அக்கறை காட்டினாலும் கூட சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்" என்று கூறினார். மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பதை அவர் தீவிரமாக எதிர்த்தார். "இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத்தினூடாக பிரித்துப்போட்டது எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே. இந்த மாகாணங்கள் இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இயங்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 1987 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 இல் மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வடக்குக் கிழக்கு இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்படுவதாகவும், இம்மாகாணங்கள் இணைந்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. மக்கள் விடுதலை முன்னணியும், தீவிர இனவாத அமைப்பான ஜாதிக ஹெல‌ உறுமயவும் வடக்குக் கிழக்கு மாகாண்ங்களின் இணைப்பிற்கெதிராகத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் நீதிமன்றத்திற்கு அதனை இழுத்துச் சென்று, மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது வீதிகளில் கொண்டாடி ஆர்ப்பரித்தனர். 2019 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் பேசிய விஜித்த ஹேரத், "வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து வைத்திருப்பதனூடாக சர்வதேசத்திற்கு இந்த இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்று காண்பித்து, ஆகவே இம்மாகாணங்களுக்கு தனியான அதிகாரம் தேவையென்று கோருவதே தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும்" என்று விஜித்த ஹேரத் கூறினார். "இதே கோரிக்கையினைத்தான் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் இந்தக் கோரிக்கையினை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார். இவ்வருடம் மாசி மாதத்தில் அநுர குமாரவுடன் தில்லிக்குப் பயணமாகிய விஜித்த ஹேரத், இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும், பூகோள ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசியலில் ஈடுபடும் என்று உறுதிப்படுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் தமது அமைப்பு நடத்திய ஆயுதக் கிளர்ச்சி குறித்துப் பேசும்போது, " நாம் மிகவும் தீவிரமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தோம். எமது செயற்பாடுகளை இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்கப் பாவிக்கிறோம். அதற்காகப் பல உயிர்த்தியாகங்களை நாம் புரிந்திருக்கிறோம்" என்று கூறினார். "இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றுமே மாறப்போவதில்லை" என்றும் அவர் மேலும் கூறினார். 2024 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியில், தேர்தலுக்குச் சற்று முன்னரான நாட்களில் பேசிய விஜித்த ஹேரத், "மகாணசபை அமைப்பு முறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், ஒற்றையாட்சியையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க நாம் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். நேற்றும், இன்றும், நாளையும் இதுதொடர்பான எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டினை எவ்விலை கொடுத்தாவது பாதுகாப்பது எமது கட்சியின் தலையாய கடமையாகும்" என்று அவர் பிரகடணம் செய்தார். அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் மாநாடு ஒன்றில் பேசிய விஜித்த ஹேரத், "பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினைக் கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் உறுதியாக நிற்கும்" என்று கூறினார். "நாம் அன்றே இதுகுறித்து உறுதிப்படுத்திவிட்டோம். அதையே நாம் இப்போதும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அமைப்பு முறை தீர்வாகாது. எமது அரசியலமிப்பின் 9 ஆவது அத்தியாயம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அத்தியாயம் என்பது பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமையும், உயர்ந்த இடமும் வழங்குகிறது. ஆகவே பெளத்த மத்தத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும். ஏனைய மதங்களுக்கான இடம் அத்தியாயம் 10 மற்றும் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "முன்னைய அரசாங்கங்கள் பெளத்த மதத்திற்கு வழங்கிய அதே முன்னுரிமையினையும், உயர்ஸ்த்தானத்தையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசும் வழங்கும்" என்று விஜித்த ஹேரத் அங்கு உறுதி வழங்கினார். https://www.tamilguardian.com/content/who-sri-lankas-foreign-minister-vijitha-herath
    2 points
  12. ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று புலிகளை மட்டுமே சுயபரிசோதனை செய்ய விரும்புகிறார்கள். புகப்புத்தகத்திலும் அப்பப்ப புலிகளால் கொல்லப்பட்டவரின் நினைவுதினம் என்று சிலபடங்களுடன் போடுவார்கள். மற்றைய இயக்கங்களும் சரிக்குசரி செய்தது தானே அவர்களின் தலைவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் தானே போய் விசாரிக்கலாமே. பழைய ஜேவிபியைப் பற்றி பலருக்கும் தெரியாது.ரஞ்சித் எழுதுவதால் அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்தும் எழுதுங்கள் ரஞ்சித்.
    2 points
  13. இதைப் பார்க்கையில் உங்களுக்கு யாழ் விதிகள், நடைமுறைகள் தெரியவில்லையா அல்லது உலக நடைமுறையே தெரியவில்லையா என்ற யோசனை வருகிறது. கருத்துக் களத்தில் எழுதுகிறீர்கள், ஆனால் ஏனையோர் "சாமரம் வீசும்" கருத்துக்களை மட்டுமே வைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள். இதே முறைப்பாட்டை, உங்கள் ஏனைய தேசிய நாட்காட்டிகளிலும் கேட்ட நினைவு. "அனுரவை தமிழ் மக்கள் நல்ல ஒளியில் பார்த்து விடக் கூடாது" என்கிற நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் - எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் மூலங்கள் தமிழ்நெற்றும், சங்கம் தளமும் - இவை இரண்டினதும் வடிகட்டியெடுத்து செய்தி/ஆய்வுகள் போடும் "நடுநிலை" 😎எல்லோரும் அறிந்ததே! நான் நினைக்கிறேன், தமிழ் வேட்பாளர் தோல்வியின் பலனாக ஒரு துன்ப grieving அனுபவத்தில் இருக்கிறீர்களென. முதலில் denial. பின்னர் கோபம். இப்போது "தோல்வியின் காரணம் வேறு யாரோ" எனும் blaming. "சும், சம், மாவை தான் இன்று ஒரு சிங்களவர் பக்கம் தமிழ் இளையோர் சாயக் காரணம்" என்ற உங்கள் கருத்தில் இந்த blaming தான் தெரிகிறது. உங்கள் போன்றோரின் தீவிர தேசிய நிலைப்பாடுகளும், சகிப்புத் தன்மையின்மையும் இறுதி வரை உங்களுக்கு ஒரு மறைக்காரணியாகத் தெரியப் போவதேயில்லை! நான் பல இடங்களில் சுட்டிக் காட்டியிருப்பது போல தீவிர தமிழ் தேசிய நிலைப்பாடும், ஒரு அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும், மேலுல் தமிழர்களை உங்களிடமிருந்து அன்னியப் படுத்தும்.
    2 points
  14. உன் இனத்தின் சார்பாக போனவன் பதவியை இழந்த பின்பும், விதியை மீறி, எதிரி சலுகை கொடுக்கின்றான் என்றால்… உன் இனத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அர்த்தம். தமிழரசு கட்சியில் உள்ளதுகள், அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். டக்ளஸ் வெளிப்படையாக செய்வதை… இவர்கள், பின் கதவால் செய்கிறார்கள்.
    2 points
  15. ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று.
    2 points
  16. ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்…. கேரள கஞ்சா, ஆப்கானிஸ்தான் அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣 முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள். மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐 தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣 கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁
    2 points
  17. கடந்த காலங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. அப்படி பார்த்தால் எந்த ஒரு இயக்கமும் தூய்மையானதல்ல. புலிகள் கூட ஆரம்ப காலத்தில் வங்கியை கொள்ளயடித்தார்கள் தானே? அப்பாவிகளை மத்திய வங்கி குண்டு வெடிப்பின் மூலம் கொன்றார்கள். ஒரு சிறிய நிலபரப்பிற்குள் 20க்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி அடிபட்டு சின்னபின்னபட்டு எல்லாம் இழந்து போய் இருக்கும் எம்மை சிறிது எங்களை ஆசுவாசப்ப்டுத்தி கொள்ள விடுங்களேன். எத்தியோப்பியனது நிறத்தை மாற்ற முடியுமா? சிங்களவனது இன துவேசத்தை மாற்ற முடியுமா? ஒரு 6 மாதம் பொறுத்திருந்துதான் பார்ப்போம்.
    2 points
  18. சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல். அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள். கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார். ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும். அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை. அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!! இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர். இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன? புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை! ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர... ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்! JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!! ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்! அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம். நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு! நன்றி மதுசுதன் 23.09.2024 WhatsApp பகிர்வு
    1 point
  19. சிலவேளைகளில் பிரெஞ்சு செய்திகளுக்கு பிரெஞ்சில் ஒன்றைச் சொல்லிவிட்டு தினக்குரலுக்கு சொல்லும்போது வேறொன்றைத் தமிழிற் சொல்லி டவுள் கேம் ஆடுகிறார் போலுள்ளது!😂
    1 point
  20. கம்பஸ் பிள்ளை கனடா மாமாவை விரும்பியிட்டுது. மாமாவுடன் குடும்பம் நடாத்துது. குட்டி பபாவும் அவைக்கு கிடைக்கப்போகுது. இங்க கருத்து எழுதின ஆட்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா குழந்தைக்கு துடக்கு கழிக்கும்போது மொய் எழுதிபோட்டுவிடுங்கோ.
    1 point
  21. 🤣.............. உங்களுக்கு மட்டும் இல்லை, இதை வாசித்து முடித்தவுடன் எனக்கும் தோழரும் திமுக அபிமானியோ என்றே தோன்றியது.............🤣 திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், முன்னே எடுத்துச் சென்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எனக்கும் கிடையாது. பெரியார் எங்கள் எல்லோருக்கும் பெரியாரே. உதயநிதிதான் அடுத்து வரப் போகின்றார் என்பது முன்னரே தெரிந்ததே. இன்னும் சில வருடங்கள் பொறுத்து இருந்திருக்கலாம் என்பதே என்னுடையதும், பலரினதும் அபிப்பிராயம் என்றே நினைக்கின்றேன். உதயநிதி முன்னருக்கு இப்பொழுது பேச்சில் முதிர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றார். ஆனாலும், இதை விட நாகரீகமான அரசியலை இவரால் கொண்டு வரமுடியும், கொண்டு வரவேண்டும் என்பது ஒரு அவா......
    1 point
  22. இதைப் போன்ற நியமனப் பதவிகளுக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்காமல், ஈபிஎஃப் மற்றும் பிற சலுகைகளை பதவிக் காலத்தில் மட்டும் வழங்குவது நல்ல ஒரு முடிவு. முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் காப்ரல் இந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர் என்று சொல்லப்பட்டது. அவர் ஒரு கணக்காளரே அன்றி, பொருளாதார நிபுணர் அல்ல என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அவரது நடவடிக்கைகள் கூட பலத்த விமர்சனத்திற்கு ஆளாகியது. இப்பொழுது இருக்கும் நந்தலால் பற்றி அவ்வாறான குற்றச்சாட்டுகள் இல்லை, ஆனால் எதிர்த்தரப்பு என்ற வகையில் விமர்சிப்போரும், விமர்சனங்களும் இருக்கின்றது. இவை எப்போதும் இருக்கும். மிகவும் தகுதியும், திறமையும் உள்ளோரை இதைப் போன்ற பதவிகளுக்கு உள்ளெடுப்பதற்கு அரசு முயல்வேண்டும். ஓய்வூதியம் கொடுக்கா விட்டால், அவர்கள் பதவியில் இருக்கும் காலங்களில் நல்ல கொடுப்பனவையும், சலுகைகளையும் அவர்களுக்கு கொடுக்கவேண்டும். மலிவாக பலரும் வரமாட்டார்கள். இப்படியே பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல நியமன பதவிகளின் நீண்டகால கொடுப்பனவுகளையும் மீளாய்வு செய்து கொள்ளவேண்டும்.
    1 point
  23. உங்கள் விருப்பங்களை உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தை உங்களை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
    1 point
  24. இங்கே நாங்கள் பேசுவது தனி நபர் பற்றியது அல்ல. அவர்களது சொந்த ஊர் பெயர் மற்றும் விபரங்களை இங்கே யாரும் பேசவில்லை கோரவில்லை. ஒரு பாடசாலை நட்பை கொச்சைப்படுத்திதை புலம்பெயர் தேசங்களில் இருந்து சென்று நலிந்த மக்களை இவ்வாறு சீரழிப்பதை மட்டுமே பேசுகிறோம்.
    1 point
  25. ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட. வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி.
    1 point
  26. இப்பவும் நான் வீட்டில், மற்றவர்களுடன் கதைக்கும் போது, சில சிங்களச் சொற்கள் தானாகவே/ இயல்பாகவே என் வாயிலிருந்து வந்துவிடும். அந்தளவுக்கு நான் சிங்களவர்களுடன் பல வருடங்களாக பழகியிருக்கின்றேன். இன்றும் சிங்கள சினிமாவையும். பாடல்களையும் ரசிக்கின்றேன். பல சிங்கள நண்பர்கள் முக நூலிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி இன்றும் தொடர்பில் உள்ளனர். கனடாவுக்கு வந்து சில நாட்கள் எம்முடன் தங்கிச் செல்லும் ஒரு சிங்களவர் கூட இருக்கின்றார். நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு தான் அவர்கள் நடந்து கொள்வர். பழகும் போது, உயிரையே கொடுக்கின்றவர்கள் போல பழகுவார்கள். தமிழர் தாயகம், சக உரிமை என்று கதைக்க வெளிக்கிட்டால், உயிரையே எடுக்கும் அளவுக்கு கோபப்படுவார்கள். சிங்கள இனவாதம் ஒரு போதும் மாறாது, நிறங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும்.
    1 point
  27. நலிந்த ஒரு இனத்தின் பலவீனங்களை அதே இனத்தின் சுயநலக்கூட்டங்கள் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு ஆசை காட்டி மோசம் செய்வது உங்களுக்கு குடும்ப வரலாறா???
    1 point
  28. இப்படிப்பட்டவர்கள் எமது சமுதாயத்தை சீரழிக்கும் போது, உங்களின் கருத்து புல்லரிக்கின்றது அடக்கி வாசியுங்களென்று; இப்படி இன்னும் பல புலம் பெயர் பண கெழுப்பெடுத்த கிழடுகள் வருவார்கள், அவர்கள் இளவயதில் இருக்கும் பெண்களை பணத்தையும் காட்டி என்னவும் செய்யலாம் ஊடகங்களே அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா, முக்கியமான செய்திகளும் ஊர்புதினத்தில் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரியமென நினைக்கின்றேன்
    1 point
  29. தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும். ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை. அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,
    1 point
  30. ******************************************************************************************************************************************ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவளித்து, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கெதிராக வாக்களித்தமைக்காக சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கையின் புதிய வெளிநாட்டமைச்சர் விஜித்த ஹேரத் ******************************************************************************************************************** 26, பபுரட்டாதி 2024 https://www.tamilguardian.com/content/new-sri-lankan-foreign-ministers-first-remarks-thank-saudi-arabia-combatting-un-resolutions இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவளித்து, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருகின்றமைக்காக சவுதி அரேபியாவிற்கு தனது அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்ததன் ஊடாக‌ வெளிவிவகார அமைச்சராக தனது முதலாவது கடைமையினை ஆற்றியிருக்கிறார். மக்கள் விடுதலை முன்னணியின் மிக முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் விஜித்த ஹேரத், தான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற‌ சற்று நேரத்தின் பின்னர், கொழும்பில் இடம்பெற்ற சவுதி அரேபியாவின் தேசிய நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். "ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சவுதி அரேபியாவிற்கு நன்றி கூற இத்தருணத்தை நான் பாவிக்க விரும்புகின்றேன்" என்று அவர் கூறினார். தற்போதைய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அங்கு இலங்கைக்கெதிரான புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவிருப்பதாக அறியவருகின்றது. இதுவரை இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட மனிதவுரிமைச் சபைத் தீர்மானங்களில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக்கொண்டு, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக போர்க்குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், கடந்தகால அரசாங்கங்கள் இவற்றில் எதுவித அக்கறையும் கொள்ளாது நிராகரித்தே வந்திருக்கின்றன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னள் இராணுவத் தளபதியும், இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தவரும், இதனாலேயே அமெரிக்காவிற்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருப்பவருமான சவேந்திர சில்வா என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்கா இவரது பயணத்தடை குறித்து அறிவிக்கும்போது, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகள் மற்றும் பாரிய மனிதவுரிமை மீறல்களில் கட்டளைத் தளபதி என்கிற ரீதியில் சவேந்திர சில்வா நேரடியாகப் பங்கெடுத்திருக்கிறார் என்பதை நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஊடாக உறுதிப்படுத்தியிருப்பதால் இவரை எமது நாட்டிற்குள் வர நாம் தடை விதிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. தமிழ் மக்கள் மீதான மிகக்கொடூரமான இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்தத்தின்போது படுகொலைகளுக்குப் பெயர்பெற்ற 58 ஆவது படைப்பிரிவிற்கு சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். 2009 ஆம் ஆண்டின் தமிழ் இனக்கொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளில் இவரது படைப்பிரிவும் நேரடியான பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. இவரும் இவரைப்போன்ற ஏனைய சிங்கள இராணுவத் தளபதிகளும் வைத்தியசாலைகள் மீதான இலக்குவைத்த தாக்குதல்கள், பரந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள், சரணடைந்தவர்களை சகட்டுமேனிக்குச் சுட்டுப் படுகொலை செய்தல் போன்ற பாரிய மனிதவுரிமை மீறல்களுக்கு தலைமை தாங்கியிருந்தனர் என்பது குறிப்பிட‌த்தக்கது. சிறு குறிப்பு : நாட்காட்டி, திகதியின் பிரகாரம் பதிவிடப்படுகின்றபோதிலும் அவ்வப்போது தற்போது நடந்துவரும் விடயங்களை ஆங்காங்கே இணைப்பதனால் வாசகர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
    1 point
  31. உங்கள் பார்வை நூறு வருடங்களுக்கு முன்னரானது. அதை தமிழர்கள் செய்து ஏமாற்றப்பட்டு அடக்கப்பட்டு இனி இரு இனமும் ஒட்டாது என்ற வருத்தமான முடிவுக்கு வந்தாச்சு. இதற்கு தமிழர்கள் காரணம் இல்லை. மேலும் மேலும் தமிழர்களே காலில் விழுவதும் விழச்சொல்வதும் அநியாயம். அக்கிரமத்துக்கு துணை போகுதலே.
    1 point
  32. கோழியையும் அதன் கருவாக உள்ள முட்டையையும் சேர்தது உணவாக்கும் போது இந்த விலங்கு அபிமானம் தெரிவதில்லை. மீன்களை பிடித்து உணவாக்கும் போது அதில் எத்தனை மீன்கள் கருவுற்றிருக்கின்றன என்பதை எவரும் சிந்திப்பதில்லை. 😂
    1 point
  33. இதுபோல் சில வாரங்களுக்கு முன் சுவிசை சேர்ந்த 52 வயது ஒரு நபர் ஒருவர் பணம் இழந்ததாக செய்தி வந்ததே. இது சிரிக்க கூடிய ஒரு விடயமல்ல. சிந்திக்க வேண்டியது. நான் இதை பஸ்ஸிலும், இரயிலிலும் பயணிக்கும் போது இவ்வாறான நிறைய ஜோடிகளை நிறைய காண்கிறேன். இது தமிழர் மத்தியில் குறைவென்றாலும் சிங்களவர் மத்தியில் அதிகம். இது வீட்டில் துணையிடம் கிடைக்காத "ஏதோ" ஒன்று இந்த உறவுவின் மூலம் இவர்களுக்கு கிடைக்கின்றது. இதை பற்றி நான் இணயத்தில் தேடியபோது (The Psychology Behind Why Younger Women Prefer Older Men) சுவரஸ்யமான விடையங்களை அறிந்து கொண்டேன். முக்கியாமாக 50, 52 அஜித் வய‌தில் இருக்கும் ஆண்களிடம் இருக்கும் நிதானமும், பொறுமையும், முதிர்ச்சியும், நிதி நிர்வாகத்தில் இவர்கள் சுதந்திரமாக இருப்பதுமே இவ்வாறு இருக்கும் ஆண்களை நோக்கி இந்த இளம் பெண்கள் ஈர்க்கப்பட காரணம். ஆனாலும் ஒரு பெண்குழந்தையின் தகப்பனாக எனக்கு இதை ஏற்ற்றுக்கொள்ள முடிவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
    1 point
  34. தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மலையளவு, ஆனால் நான் இதனைச் சொல்வதால் மக்கள் விடுதலை முன்னணியும், சிகல உறுமயவினரும் என்னைக் கொன்றுவிடப்போகின்றன‌ - மகாகல்கடவெல புண்ணியசார தேரர் 21 ஐப்பசி, 2001 அரச ஆதரவு துணை இராணுவக் குழுவினால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் நிமலராஜனின் நினைவுப் பேருரை மட்டக்களப்பில் நடைபெற்றது. கிழக்கிலங்கைப் பத்திரிக்கையாளர் அமைப்பினால் இந்த நினவுப் பேருரை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் வி டி தமிழ்மாறன் மற்றும் குருநாகலை மகாகல்கடவெல புண்ணியசார தேரர் ஆகியோர் உரையாற்றினர். "சுதந்திரத்திற்காகப் போரிடும் ஒரு இனம், அப்போரில் அடக்குமுறையாளனிடம் தோற்கும்போது, சர்வதேச சமூகம் அவ்வினத்திற்கான சுயநிர்ணய உரிமையினை மறுத்துவிடுகிறது. இது உண்மையிலேயே மிகவும் கவலைதரும் விடயமாகும். நைஜீரியாவிலிருந்து பிரிந்துசென்று தனியான நாடு கோரிப் போரிட்ட BAFTA மக்கள் போரில் தோற்றதன் பின்னர் அவர்களுக்கான சுய நிர்ணய உரிமையினை சர்வதேச சமூகம் நிராகரித்தது" என்று தமிழ்மாறன் கூறினார். மகாகல்கடவெல புண்ணியசார தேரர் பேசும்போது, "இலங்கையில் இருப்பது தமிழ்ப்பிரச்சினையல்ல, ஆனால் பயங்கரவாதப் பிரச்சினையே என்று கூறிவரும் சில பெளத்த பிக்குகளை என்னுடன் நேரடியான விவாதத்திற்கு வருமாறு அறைகூவல் விடுக்கிறேன். என்னிடம் யாராவது தமிழருக்கென்று ஒரு பிரச்சினை இருக்கிறதா என்று வினவினால், ஒரு பிரச்சினையல்ல, மலையளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நான் கூறுவேன். நான் இப்படிக் கூறுவதால் மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சிகல உறுமயவினரோ என்னைக் கொன்று போடலாம். அந்தச் சிங்கள இனவாதிகளைப் பொறுத்தவரையில் இங்கிருப்பது ஒற்றைச் சிங்கள தேசம்தான், ஒற்றைச் சிங்கள பெளத்த நாடுதான்". "ஆனால் சிங்களவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இலங்கையை ஆண்ட முன்னாள் அரசர்களில் பலர் தமிழர்களே. பல அரசர்கள் தென்னிந்தியத் தமிழப் பெண்களையே மணம் முடித்தனர். புராதன காலத்து இலங்கையின் போர்வீரர்களும் தளபதிகளும் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. அதுமட்டுமல்லாமல் சிங்கள அரசர்களின் பெருமைமிகு மெய்ப்பாதுகாவலர்கள் கூடத் தென்னிந்தியத் தமிழர்களே. இவர்கள் எவருமே தென்னிந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இங்கேயே மணம் முடித்து, இலங்கையின் பல பாகங்களிலும் அவர்கள் குடியேறினார்கள். ஆகவே இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது சகோதரகள், எமது உறவினர்கள். நாங்கள் எலோரும் ஒரே வம்சாவளியில் இருந்தே வந்தவர்கள். இங்கே தனிச் சிங்களவர்கள் என்று ஒரு இனம் இல்லை" என்று அவர் மேலும் கூறினார். "சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இரு அதிகாரம் மிக்க சிங்களக் குடும்பங்கள் இலங்கையை ஆண்டன. கொழும்பில் இருந்து ஆண்டுகொண்டு முழு இலங்கைக்கும் அவர்கள் தீமூட்டினர். அவர்கள் தமிழர்களின் பிரச்சினையினை ஒருபோதுமே தீர்க்கப்போவதில்லை" என்று அவர் முடித்தார்..
    1 point
  35. பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம். ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர். முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற தவறுகளின் விளைவே தற்போதைய சுயநல அரசியல். தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள் திட்டும் அரசியலே தொடரும். 75 வருட அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது தான் எம்மவரின் தற்கொலை அரசியல். இரண்டுமே எம்மை அழித்தது.
    1 point
  36. இம்முறை மாவைக்கும் பார் சிறீதரனுக்கும் தமிழரசுக் கட்சி சார்பில் சீட்டு கிடைக்காது. மத்திய குழு கட்சி முடிவை மீறி சங்கூதியவர்களை இடைநிறுத்தப் போவதாகவும் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட்டு தோல்வியுற்றவர்களுக்கும் இடம்கிடைக்காது என உறுதியாக நம்பலாம். அது தான் பார் சிறீதரன் டக்கெண்டு அநுரவை பார்க்க ஓடினவர். அநுர கொடுப்புக்குள்ள சிரித்திருப்பார்!😂
    1 point
  37. சனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களை இலகுவாக விடுதலை செய்ய முடியும். அல்லது பொது மன்னிப்பினூடாகவும் விடுதலை செய்ய முடியும், பார்ப்பம், பாராளுமன்றத் தேர்தலிற்கு முன்பாக இவர்களை அனுர விடுதலை செய்கின்றாரா என. தமிழ் கட்சிகள் மனசுக்குள் இவர்களை விடுவிக்க கூடாது என்று மன்றாடும் என நினைக்கின்றேண். அப்படி விடுதலை செய்து விட்டால், அவர்களை வைத்து இனி அரசியல் செய்ய முடியாத நிலை அவர்களுக்கு வரும்.
    1 point
  38. நான்… யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது என் உரிமை. அதில் பிறர் மூக்கை நுழைப்பதை விரும்புவதில்லை. அத்துடன்… விமல் வீரவன்ச, பட்டாசு போன்ற உங்களின் கற்பனை கதைகளுக்கு எல்லாம் பதில் சொல்லி…. உக்களுடன் லாவணி பாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதற்கு வேறு ஆட்களை பார்க்கவும்.
    1 point
  39. எனக்கென்னவோ நாங்கள் தேவையில்லாமல் விளம்பரப்படுத்துக்கிறோமோ என்ற எண்ணமே வருகிறது. Dr அர்ச்சுனாவின் போதும் இப்படித்தான் இளையோர்கள் எல்லோரும் அவருக்குப் பின்னால் போனார்கள். பிறகு அடங்கிவிட்டது. இப்பொழுதும் இப்படித்தான். அநுரவின் திட்டங்கள் எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா? என்று சிந்திக்கவிடாமல் இருப்பதற்குத்தான் இந்தளவு வீடியோக்களும். அவருடைய வீட்டுக்கு கூட போகுமளவுக்கு வைத்துள்ளது. எங்களுடைய இளையோருக்கு கடந்த கால வரலாறுகளையும் நாங்கள் ஒழுங்காகத் தரவில்லை. பாடப்புத்தகங்களில் தவறான தகவல்களை கொடுத்தாலும் கூட அதனை திருப்பிக் கேட்காமல் அதனைத்தான் படிப்பிக்கிறோம். ஆகையால் இனிவரும் இளைய சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
    1 point
  40. என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள். எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன. எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம், கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை. எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம். எல்லோருக்கும் நன்றி. இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.
    1 point
  41. அக்னி அவர்களுக்கு இதுவரை 3.5 இலட்சம் தான் சேர்ந்திருக்கு, நான் ஒரு லட்சம் அனுப்பியிருந்தேன், மீண்டும் ஒரு லட்சம் அனுப்பிவிடுகின்றேன், அவர்களுக்கு 2 கோடி தேவை, அந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏
    1 point
  42. 1. அவரத்தில் நீங்கள் தலைப்பு திருத்தப்பட்டதை கவனிக்கவில்லை 2. அதிகார பரவலாக்கத்துக்கு முழு எதிர்ப்பை காட்டும் ஒரு கட்சி, அதன் சனாதிபதி இனவாதமற்ற ஆட்சியை தருவார் என கனவு காண்பதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.
    1 point
  43. இத் திரியை பார்த்து ஏன் பதட்டபட வேண்டும்? வரலாற்றில் நடந்தவற்றை மீள நினைவூட்டுவதில் தவறில்லை என்பதுடன் தேவையும் கூட. சிங்களம் ஒரு போதும் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. நிறம் மட்டும் மாறலாம். திரிக்கு நன்றி ரஞ்சித்.
    1 point
  44. இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றால் அது பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களால் ஆதரிக்கப் படும் ஒரு ஜனாதிபதியாலேயே/ கட்சியாலேயே முடியும்
    1 point
  45. "இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான். அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா? அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும். இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை. இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில் IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது. அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது. இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை.
    1 point
  46. இவரால் எந்த மாற்ற்த்தினையும் இலங்கையில் ஏற்படுத்த முடியாது, இதுவும் ஒரு இனவாத சிங்களத்தின் தம்மை தக்கவைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி, கோட்டபாய அரசினை ஆட்சிக்கு கொண்ட வந்த போது அவர்களுக்கு இஸ்லாமியர்களால் அவர்களது இருப்பிற்கு பாதிப்பு இருப்பதாக எண்ணினார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு அதிகாரம் வழங்குவது தமக்கான இருப்பினை கேள்விக்குறியாக்கும் எனும் பிற்போக்குத்தனமான சிந்தனையின் அடிப்படையிலே இருந்தார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கொண்டு வந்த கோட்டபாய இலங்கையினை இன்னமும் ஒரு படி கீழிறக்கி விட்டுள்ளார். தற்போது இவர், இவருக்கு பொருளாதார, அரசியல், சமூக, வெளிவிவகாரம் என பல முனைகளில் பிரச்சினை உள்ளது, இவரும் ரணில் போல ஒரு ஆட்சியினையே வழங்க முடியும் அதிக பட்சமாக அதற்கு மேல் இவரால் எதுவும் செய்ய முடியாது குறிப்பாக ஊழலை ஒழிக்க முடியாது, நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பூகோள அரசியல் ரீதியாகவும் இலங்கை ஒரு இருண்ட கால கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த தீவிர இடது சாரி பிரச்சாரங்களை மேடை பேச்சோடு வைத்தால் ஓரளவிற்கு சிறிது காலம் தாக்கு பிடிக்கக்கூடும். இதுவும் ஒரு மண்குதிர்தான்.
    1 point
  47. 'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது குழந்தையைச் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாகக் கூறுகிறார் கனிமொழி. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் “பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.” “நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.” இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல். தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், அதற்குத் தன்னையே நொந்துகொள்ளும் அவர், இதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறுகிறார். குழந்தையின் பொருட்டு தன்னைத் தானே குறை சொல்லி, ‘குற்ற உணர்வு’க்குள் மூழ்குவதற்கு அவரிடம் பல காரணங்கள் உள்ளன. குழந்தையைச் சரியான நேரத்திற்குள் குளிக்க வைக்க முடியாதது முதல் குழந்தைக்கு வரும் காய்ச்சல் வரை அவரது குற்ற உணர்வுக்கான பட்டியல் நீள்கிறது. சுயாதீன (ஃப்ரீலான்ஸ்) கிராஃபிக்ஸ் டிசைனரான கனிமொழி, தனது குழந்தையைக் கவனித்துக்கொண்டே வீடு மற்றும் அலுவல்ரீதியான பணிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்சமயம், அவர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார். “என் வேலையைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏதேனும் ஒரு பணியை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் குழந்தை அழும்போது உடனே பால் கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். குழந்தை அழுத களைப்பிலேயே உறங்கிவிடும். இதனால் குழந்தையின் வயிறு ஒட்டிப் போயிருக்கும். அப்போது, என்னால்தானே குழந்தைக்கு இந்த நிலை என்று எனக்குத் தோன்றும்” என்கிறார் கனிமொழி. கனிமொழி காதல் திருமணம் செய்துகொண்டதால், இரு வீட்டாரின் துணையுமின்றி குழந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒருசமயம், நள்ளிரவு 12 மணியையும் கடந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில், அசதியில் அவர் தூங்கிவிட்டதால், குழந்தைக்கு ஒரு மணிக்குக் கொடுக்க வேண்டிய மருந்தைக் கொடுக்க முடியாமல் போயுள்ளது. அதனால், குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. “கொஞ்சம் விழித்திருந்து நான் மருந்தைக் கொடுத்திருக்க வேண்டும். என்னால்தானே குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இரவு நேரத்தில் முழுமையாக நான்தான் குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்பதால், இதற்கு என் கனவரும் என்னைக் கடிந்துகொண்டார்” எனக் கூறும் கனிமொழி, ஏழு ஆண்டு காத்திருப்பிற்குப் பின் பிறந்த குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுத்துகிறோமோ என்ற “குற்ற உணர்வில்” சிக்கி உழல்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய சமூகத்தில் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருக்கிறது. (சித்தரிப்புப் படம்) குழந்தைக்கு ஒழுங்காக தாய்ப்பால் கொடுக்கவில்லை, சரிவர குளிப்பாட்டாத காரணத்தால் குழந்தைக்கு மூக்கு, தலை போன்றவற்றின் வடிவம் சரியாக இல்லை என்று பெரியவர்கள் கூறும் ‘குறைகளும்’ அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. “என்னால் ஒழுங்காகப் பார்த்துக்கொள்ள முடியாததால், குழந்தை என்னிடம் நெருக்கமாக இல்லையோ என்றுகூட எனக்குத் தோன்றும். என் கணவரை கண்டால் குழந்தை ‘குஷி’யாகிவிடும். என்னிடம் ஒட்டாது.” 'வேலையை விட்டுவிடலாமா?' இந்தக் குற்ற உணர்வு கனிமொழிக்கு மட்டுமல்ல; குழந்தையைச் சரியாகக் கவனிக்கவில்லையோ என்ற வருத்தத்தில் வேலையைக்கூட விட்டுவிடலாமா என்ற எண்ணம் தனக்கு அடிக்கடி தோன்றுவதாகக் கூறுகிறார், சென்னையில் ரெப்கோ வங்கியில் பணிபுரியும் கார்த்திகா. வங்கிப் பணி என்பதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் சௌகரியம் தனக்கு இல்லை எனக் கூறும் அவரது குழந்தைக்கு நான்கரை வயதாகிறது. “இப்போதுகூட எனது மகனுக்கு ஐந்து நாட்களாக உடல்நிலை சரியில்லை. இந்த நேரத்தில் அவனுடன் இல்லாதபோது, ‘நாம் எதற்காக வேலை செய்யவேண்டும்’, ‘வேலையை விட்டுவிடலாமா’ என்றுகூடத் தோன்றும். ஆனால், பொருளாதாரச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்” என்கிறார் கார்த்திகா. “நான் இருந்தால்தான் சாப்பிடுவேன், மருந்து குடிப்பேன் என்று என் மகன் அடம்பிடிப்பான். அதனாலேயே அவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அவனுக்குப் பள்ளி விடுமுறை என்றால், எனக்கும் விடுமுறை என நினைத்து ஏமாந்து போவான்.” இது தனிப்பட்ட கார்த்திகா, கனிமொழியின் கதைகள் மட்டுமல்ல. தம் குழந்தைகளுக்கு நேரும் எல்லா பிரச்னைகளுக்கும் தாங்கள்தான் காரணம், வேலைக்குச் செல்வதுதான் காரணம் என நினைக்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். பணிச் சந்தையிலிருந்து வெளியேறும் பெண்கள் தாய்மார்களுக்கு ஏற்படும் இத்தகைய ‘குற்ற உணர்வு’ உலகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, இந்திய சமூகத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடத்திலேயே உள்ளது. இதனால், குழந்தை வளர்ப்பு - வேலை என்ற இரண்டு விஷயங்களுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொள்கின்றனர். இது இந்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட 2022-23ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பிலும் (Periodic Labour Force Survey) பிரதிபலித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வீட்டிலிருந்து வேலை அல்லது அலுவலகத்திற்குச் சென்று வேலை என்றாலும் இத்தகைய குற்ற உணர்வு இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது. (சித்தரிப்புப் படம்) குழந்தை வளர்ப்பு பொறுப்பு காரணமாகப் பணிச் சந்தையில் பங்குகொள்ள முடியவில்லை என 43.4% இந்திய பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்பத்தில் தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக, பணிச் சந்தையில் இருந்து வெளியேறியதாகச் சுமார் 90% பெண்கள் தெரிவித்துள்ளனர். திரைப் பிரபலங்கள்கூட தாங்கள் இத்தகைய குற்ற உணர்வில் சிக்கியதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். நடிகைகள் காஜல் அகர்வால், சோனம் கபூர், நேஹா தூபியா எனப் பலரும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர். பட மூலாதாரம்,KAJALAGGARWALOFFICIAL/INSTAGRAM படக்குறிப்பு, குழந்தை பிறந்த ஆரம்பக் காலத்தில் தன்னை 'குற்ற உணர்வு' ஆட்கொண்டதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார். இக்கட்டுரைக்காக சில இளம் தாய்மார்களிடம் நான் பேசியபோது, சில பதின்பருவ பிள்ளைகளின் அம்மாக்களும் இத்தகைய ‘குற்ற உணர்வில்’ சிக்கியிருப்பதை அறிய முடிந்தது. குழந்தைகளின் வயது வித்தியாசமின்றி இத்தகைய குற்ற உணர்வு பெரும்பாலான தாய்மார்களைத் தாக்கும் என்பதை அவர்கள் பேசியதிலிருந்து உணர முடிந்தது. முன்னணி ஆங்கில ஊடகமொன்றில் பணிபுரியும் 40 வயதைத் தாண்டிய பத்திரிகையாளர் ஒருவர், “எனது மகனுக்கு 18 வயதாகிறது. அவன் பள்ளியில் படிக்கும்போது பொதுத் தேர்வில் அவன் கல்வி முன்னேற்றத்திற்காக நேரம் செலவழிக்க முடியாதது, என்னை இன்னும் குற்ற உணர்வில் ஆழ்த்துகிறது. இளம் தாய்மார்களோ அல்லது வளர்ந்த பிள்ளைகளின் அம்மாக்களோ இந்தக் குற்ற உணர்வு எப்போதும் மறையாது” என்று அவர் தெரிவித்தார். குழந்தைகளின் உடல்நிலை, கல்வி, நடத்தை எனப் பலவற்றுக்கும் அம்மாக்கள் மீதே பெரும்பான்மையான நேரங்களில் குற்றம் சாட்டப்படுகிறது. அம்மாக்களும் தங்கள் மீதே குற்றம் சாட்டிக் கொள்கின்றனர் என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிகிறது. குற்ற உணர்வின் தீவிரம் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் ரம்யா - வெங்கடேஷ் என்ற தம்பதியின் ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராதவிதமாக நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிவேகமாக வைரலானது. அதற்கு அடுத்த மாதமே, அக்குழந்தையின் தாய் ரம்யா தற்கொலை செய்துகொண்டார். குழந்தை விழுந்ததற்கு அதன் “தாயைக் குற்றம் சாட்டி வெறுப்புக் கருத்துகள் பரப்பப்பட்டதே அவருடைய தற்கொலைக்குக் காரணம்” எனக் கூறப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறிய அந்த நேரத்தில் பிபிசி தமிழ் முயன்றது. அப்போது, ரம்யா மகப்பேறுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழித் தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மனச்சோர்வு (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. ‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல் இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,” என்று ரம்யாவின் தந்தையே கூறியிருந்தார். ஏன் பெண்களுக்கு மட்டும்? குழந்தைகளுடைய நலனின்பால் தாய்க்கு மட்டும் அதீத குற்ற உணர்வு ஏற்படுவது ஏன்? “குழந்தைகளை வளர்ப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தத்துவமோ அல்லது யோசனையோ (thumb rule) இல்லை. குறிப்பாக, இந்திய சமூகத்தில் காலம் காலமாக ஒரு பெண் தன் குழந்தையுடன் அவரது அம்மா வீட்டில்தான் முதல் முக்கியமான சில மாதங்களைக் கழிக்கிறார். தன் அம்மா எப்படி வளர்க்கிறார் என்பதைப் பார்த்துதான் குழந்தையை வளர்க்கிறார். தாய்ப்பால் ஊட்டுதல் உள்ளிட்ட இயற்கை காரணங்களுக்காக குழந்தை வளர்ப்பின் பெரும்பாலான பொறுப்புகள் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன” என்கிறார், மனநல ஆலோசகர் சில்வினா மேரி. அதிலும், முந்தைய தலைமுறையினர் குழந்தை வளர்ப்பில் தந்தை பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்ளாததை ஒரு ‘கலாசாரமாகவே’ பின்பற்றி வருகின்றனர், அதனால் பெரும் அழுத்தம் இளம் தாய்மார்களுக்கு ஏற்படுகிறது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"இளம்தாய்மார்கள் தங்களுக்கெனச் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்" என்கிறார் மனநல ஆலோசகர் மேரி. “குழந்தை வளர்ப்பு என்பது தாய்-தந்தை இருவரின் பொறுப்பும்தான். ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு தாயைக் குறை சொல்வது கூடாது. பரிச்சார்த்த முயற்சியில்தான் குழந்தை வளர்ப்பு என்பது சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பிக்கும்” என்கிறார் மேரி. குழந்தை வளர்ப்பில் ஆண்கள் பங்கெடுப்பதைப் பொறுத்தவரை, இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு சிறிய மாற்றம் தென்படத் தொடங்கியிருப்பதாக மேரி குறிப்பிடுகிறார். “குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, இந்தப் பெரும் பொறுப்புகள் நம்மை விட்டு விலகும் வரைகூட இந்தக் குற்ற உணர்வு சிலருக்கு நீடிக்கலாம்” என்கிறார் அவர். தங்கள் பிள்ளைகள் சொந்தமாக வாழ்வது அல்லது உயர்கல்வி பெறுவது என, வீட்டைவிட்டு வெளியேறும்போதுகூட ‘தனிமையின் உணர்வை’ அதிகமாக அம்மாக்கள் உணர்வார்கள் என்கிறார் மேரி. இதை மருத்துவ மொழியில் “எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ என்கின்றனர். என்ன செய்ய வேண்டும்? இத்தகைய குற்ற உணர்விலிருந்து வெளியே வருவதற்கான சில ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். இளம் தாய்மார்கள் தங்களுக்காக 15-20 நிமிடங்களை நிச்சயம் ஒதுக்க வேண்டும். உடல்நலனில் அக்கறை செலுத்தி, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக நேரம் ஒதுக்கி சிலவற்றை மேற்கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரமாவது வெளியே சென்றுவர வேண்டும். எங்காவது அவர் வெளியே சென்றால், வீட்டில் இருப்பவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும். குழந்தை அழுதால் எல்லா நேரத்திலும் அம்மாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. குழந்தை அழுதால் அம்மாவை குறை சொல்லக்கூடாது, தான் சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை அழுவதாக அம்மாக்களும் நினைக்கக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் கற்றுக்கொள்கின்றனர் என்பதை உடன் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற குழந்தைகளின் குணநலன்களுடன் ஒப்பிட்டுத் தன்மீது குறை சுமத்திக் கொள்ளக்கூடாது. எப்போது மனநல ஆலோசகரை அணுக வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES “இதனால் மிகவும் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்போது குடும்பத்தினரின் உதவியை முதலில் நாடுங்கள்" என்றும், அப்போது, "எல்லோருக்கும் இது சகஜம்தான்” என குடும்பத்தினர் புறம்தள்ளக் கூடாது என்றும் மேரி வலியுறுத்துகிறார். அடுத்தகட்டமாக இது சரியாகவில்லை என்றால் அவர்கள் ஏற்கெனவே ஆலோசித்து வரும் மகளிரியல் மருத்துவர் அல்லது குழந்தைநல மருத்துவரிடம் பேசலாம். அவர்கள் "சில எதார்த்தமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அப்போதும் இதில் முன்னேற்றம் ஏற்படாமல், தூக்கம், பசி ஆகியவை பாதிக்கும்போது மனநல ஆலோசகரை நிச்சயம் அணுக வேண்டும்,” என்றார் மனநல ஆலோசகர் மேரி. முக்கியக் குறிப்பு மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன) மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820 தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000 https://www.bbc.com/tamil/articles/cpd93rlzmp7o
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.