Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    2951
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20012
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/10/24 in all areas

  1. மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என முன்னாள் சிரிலங்கா தேசிய இடதுசாரிகள் (தமிழ் மொழி பேசும்) தமிழனே சொல்லுகின்றான்... முப்படைகளில் பல ஜெ.வி.பி யினர் இருக்கின்றனர் ஆகவே அனுரா எந்த வித விசாரணையும் செய்ய போவதில்லை ...இவரது கட்சியின் தலீவர் ரோகணா,மற்றும் ஏனைய உறுப்பினர்களின் மீது நடந்த மனித உரிமைகளையே இவர் விசாரிக்க முன்வர மாட்டார் ...பிறகு எப்படி இன்னுமோர் தேசியத்தின் மீது நடை பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய முன்வருவார்.... முப்படையினரில் ஜெ.வி.பி இருக்கின்றனர் ...பொது தேர்தலின் பின் சில மக்கள் எழுச்சி சில சமயம் உருவாகினால் அதை தடுத்து நிறுத்த இந்த படையினர் அவருக்கு தேவை....ர்ணில் பதவி ஏற்றவுடன் எப்படி அரகலைய போராட்டத்தை படையின்ரின் உதவியுடன் தடுத்து நிறுத்தினாரோ அதைவிட சில சமயம் மோசமாக செய்யக்கூடும்
  2. கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு.
  3. தமிழ்சிறி, கருத்தாடல்களுக்கு எந்த வடிவத்திலும் பதில் தரலாம். ஆனால் அவை கருத்துக்கான பதில்களாக இருக்க வேண்டும். ஓடி ஓடி எல்லா இடத்திலும் நீங்கள் பதில் அளிப்பதால் உங்களுக்கு நேரம் போதாது என நினைக்கிறேன். நீங்கள் நின்று நிதானமாகப் பதில் தருவதுதான் உங்களுக்கு அழகு. பாரதிதாசனின் பாடல் ஒன்றின் சில வரிகள், பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச்சொல்க உன் கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால் எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்சவேண்டும் புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் சரி விடயத்துக்கு வருவோம், “அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள்” என்று சொல்லி இருந்தீர்கள். நாங்கள் ஒன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை. இப்பொழுது யேர்மனியை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இனவெறிதான் ஊட்டப்படுகிறது. 2009க்குப் பிறகு தாயகத்தில் இருந்து வந்தவர்கள், அந்தப் பாடப் புத்தகங்களில் தமிழர்களது வரலாறு தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லி புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கி புதுப் புத்தகங்கள் அச்சடித்து தனியாகப் பாடசாலை நடாத்துகிறார்கள். இது உங்களுக்குத் தெரியாதது அல்ல. இன்றைய நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வதுதான் நல்லது. இரண்டாம் வகுப்பில் தமிழ்ப் பாடப் புத்தகத்தைப் படிக்கும் போதே, மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே பிரதானம் எனத் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகே மற்றவைகள் எல்லாம். இன்றுள்ள நிலையில் தாயகத்தில் உள்ளவர்களைக் கேட்டால், உரிமை,தீர்வு, நாடு, எல்லாமே நான் குறிப்பிட்ட அந்த மூன்றுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கும். ஒரு வலுவான சமுதாயம் தாயகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறதா? இல்லையே! இன்னும் அடுத்தவர்களில் தங்கிக் கொண்டு, யாரேனும் ஏதாவது தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டுதானே அங்கு பலர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதாயின், ஏராளனின் ‘புலர் தொண்டு நிறுவனம்’. “யாரையும் எதிர்பார்த்திராது தாங்களே உழைத்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” இதைச் சொன்னது வேறு யாரும் இல்லை. பிரபாகரன்தான். அவர் மேலும் சொன்னார், “ஆயுதம் எங்கள் கையில் திணிக்கப்பட்டது” என்று. அவர் எதிர்பார்த்த அந்தச் சமுதாயமும் இன்று இல்லை. ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமும் இப்பொழுது நாட்டில் இல்லை. வாள் வீச்சுகளும் தேசிய வாய் வீச்சுகளும் போதைப் பொருளின் உச்சங்களும் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்து தப்பி வர வேண்டிய தேவையும் இப்பொழுது சேர்ந்திருக்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோமா? இனப் பிரச்சினையைக் கிண்டிக் கிளறி இனங்களுக்குள் பிரிவுகளை வளர்ப்போமா? எது இப்பொழுது முக்கியம் என்பதைச் சிந்திப்பதுதான் அவசியம். நம்பி வந்த மக்களை ‘அம்போ’ எனக் கைவிட்டு விட்டு தலைவர்கள் சிலர் மாவீரர்களாகி விட்டார்கள். தப்பிய போராளிகளில் சிலர், வழிகாட்டல் வாழ்வாதாரம் இன்றி அலைந்து திரிந்து வாழ்வு தேடி பொது வாழ்க்கையில் தங்களை மெது மெதுவாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் வசதியும் ஆதரவும் இருந்ததால் ‘போதுமடா சாமி’ என்று வெளிநாடுகளுக்கு ஓடி வந்து விட்டார்கள். இதிலும் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று இருக்கின்றது. ஓடி வந்தவர்களில் இயக்கத்தில் முக்கிய இடத்தில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இலகுவாகக் கிடைத்தது. சாதாரண போராளிகள் நாதியற்றுப் போனார்கள். இரண்டு பக்ககமும் போரில் களைத்து விட்டன. பொருளாதாரத்தில் நாடு பாதாளத்தில் விழுந்து விட்டது. இப்பொழுது அங்கே நீங்கள் குறிப்பிட்ட ‘உரிமை,தீர்வு, நாடு’ என்ற குரல்கள் எல்லாம் இரண்டு தரப்பிலும் இல்லை. அப்படி இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், அது ‘தேசியம்’ பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளினதும், எழுத்தார்களுடையதும்தான். ஆனால் புலத்தில் அதுவும் குறிப்பாக நான் வாழும் யேர்மனியில், தேசியம் பேசும் வேசதாரிகளை மிக மிக நன்றாகவே நான் அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மேலும் மேலும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இடைஞ்சல் தராமல் இருக்க வேண்டும். மக்களைச் சிரமப் படுத்தாதீர்கள். உங்கள் தேசிய சிந்தனைகளை அவர்களுக்குள் திணிக்காதீர்கள். உங்களால் முடிந்தால் யாரிலேனும் தங்காது சுயமாக உழைத்து வாழும் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். அப்படி உருவானால் அந்தச் சமுதாயம் தங்களுக்கு உரிமை,தீர்வு, நாடு தேவையா என்பதைப் பின்னர் தீர்மானித்துக் கொள்ளும். இதற்கு மேல் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்காக நேரத்தைச் செலவழிக்கவும் விரும்பவில்லை.
  4. நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறுவதை விட எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக் தான். இந்த பூசாரிகள் கடவுள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் வகையறாக்கள். பூசாரி எங்களிடம் மாவீரர் தமிழ் தேசியம் என்று பூச்சாண்டிகாட்டி தேசிக்காய்கள் ஆக்கிவிட்டு கடவுளிடம் அவர்களுக்கு மட்டுமே வரம் வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதில் வல்லவர்கள். நான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தலையே செய்ய முடியாத கையறு நிலையில் எமது தமிழர்கள் இருப்பது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. இப்போது அனுரவின் அரசில் முஸ்லிம்களும் பற்கள் பிடுங்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு சிறிய வெளிச்சம் தெரிகிறது. அரசாங்கத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு தாபிக்கப்பட்ட ஒரு நிர்வாக அலகை நடைமுறைப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது இந்த நிமிடம் வரை முஸ்லிம்களின் அரசியல் பலம் மட்டுமே. இம்முறை அனுரவின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஒரு தமிழ் பல்கலை மாணவன் இந்த தரமுயர்த்தலை நடத்திக்காட்டுவதாக சூளுரைத்துள்ளார். ஆனால் பூசாரிகளுக்கு குத்தோ குத்து என்று குத்திவிட்டு அநுரவிடம் போய் நாக்கை தொங்கப்போட முடியாது பாருங்கோ. எமது மக்களை நம்ப முடியாது என்பதால் பூசாரிகளின் அட்டகாசம் தொடர்கிறது. ஆனால் இம்முறை முழுதாக களம் இறங்கியுள்ளோம். பூசாரிகளை இம்முறை எப்படியும் தேசிக்காய்கள் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டியுள்ளோம்.
  5. 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிநபரின் அடாவடித்தனம் தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையான போக்கு கட்சிகளில் காணப்படுகின்றது. சுமந்திரனின் எதேட்சையதிகார தனித்துவ சிந்தனையால்தான் இன்று தமிரசுக் கட்சியானது படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, தனிநபரின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தாத தலைமை இருந்து என்ன பயன் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை அத்தோடு சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் சாணக்கியனின் கட்சிகள் மீதான ஆதிக்கம், பாதிக்கப்படும் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழரசுக் கட்சியில் எதிர்காலம் மாற்றம் என்பவை தொடர்பில் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு, https://ibctamil.com/article/the-allegation-leveled-against-sumanthiran-1728471832
  6. டக்ளஸ் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளின் சாவுக்கு காரணமானவன்.. எப்படி கிட்லர் யூதர்களை அழித்தானோ அந்த அளவுக்கு பல தமிழ் இளைஞர்களை தேடி தேடிக்கொன்றதற்கு காரணமானவன் டக்ளஸ்.. இந்த கட்சி இன்றுவரை அரசியலில் இருக்க காரணம் தமிழ்தேசிய கட்சிகள் விட்ட மற்றும் விட்டுக்கொண்டிருக்கும் தவறுகள்.. ஈபிடிபி அரசியலில் இணைந்து கஸ்ரப்படும் தமிழ் மக்களுக்கு செய்தவற்றை எல்லாம் தமிழ் தேசியக்கட்சிகள் செய்திருக்கவேண்டியவை.. அவை அவற்றை தவறவிட்டதால்தான் இன்றுவரை அந்த கட்சி அரசியலில் ஒரு ஆசனமாவது பெற்று நிலைத்திருக்கிறது.. அரசியல் பிரச்சினைகளுடன் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் ஆட்சியில் வரும் சிங்கள அரசுகளுடன் பேரம்பேசி கவனிக்கும் அளவுக்கு ஒரு தமிழ் தேசிய கட்சி வரும் வரைக்கும் ஈபிடிபியின் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.. நான் நினைப்பது சரியோ தெரியவில்லை.. இப்போதைக்கு அதை சுமந்திரன் செய்யவிளைவது போல் தெரிகிறது.. முயல்கிறார் ஆனால் எந்த உஅதவியும் இன்னமும் மக்களுக்கு செய்ததாக தெரியவில்லை.. அப்படி செய்தால் இன்னும் பலவருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தியாக சுமந்திரன் வளர்வது நிச்சயம் அல்லது அதை செய்யும் ஏதாவது ஒரு தமிழ் தேசியக்கட்சி வருவது நிச்சயம்.. அதேபோல் புலமபெயர் சில தமிதேசிய அதிதீவிர முட்டாள்களைப்போல் எதிர்கால இனம்பற்றிய தமிழ் நிலம் பற்றிய சிந்தனை இல்லாமல் வெற்று உசுப்பேத்தல் மட்டும் செய்யும் அதிதீவிர தமிழ்தேசிய போலிக்கட்சிகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறாவிட்டால் இன்னமும் தேயப்போவது நிச்சயம்..
  7. “நான் எழுதுவது கடிதம் அல்ல உள்ளம் அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம் எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் ஏற்கனவே சொன்னதெல்லாம் கொஞ்சம்…” ஐயா தேர்தல் பிரச்சாரத்தை இந்த வழியில் ஆரம்பிச்சிட்டார்
  8. இன்னும் கனக்க வரும். எதிர் பாருங்கள். கனக்க நாளைக்கு கொண்டையை மறைக்க முடியாது அல்லவா???
  9. சிந்தனை சிற்பி, அறிவுஜீவி சொல்லுறார் எல்லோரும் கேட்டு நடவுங்கோ! எம்மினத்தின் சாபக்கேடுகள்!!
  10. ஒருவகையில் இந்த மூளைச் சலவை என்பது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் கூட புலிகள், போராட்டம்… போன்றவற்றில் இருந்து இன்னமும் மீளவில்லை. கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள். தமிழரை இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள். “உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் - அதை ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் கதறி என்ன குழறி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா…”
  11. இலங்கையில் எந்த ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் இந்த முடிவை தான் எடுப்பார். இதே நிலைப்பாட்டில் தான் அவரால் இருக்க முடியும். தலைவர் பிரபாகரன் அநுர குமாரவின் இடத்தில் இருந்திருந்தாலும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார். தனது போராளிகளை அனைத்துலக நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டார். ராஜீவ் கொலை தொடர்பாக இன்ரபோல் உங்களை தேடுகிறதே, அது தொடர்பாக உங்கள் நிலை என்ன என்று ஒரு நிருபர் கேட்ட போது, “நடக்கிற காரியங்களை கதைப்போம்” என்று கொடுப்புக்குள் சிரித்தவறே கூறிக் கடந்து சென்றவர் அவர். தர்ம நியாயங்களுக்கு அப்பால், இது தான் உலக நியதி. உலக நாடுகளும் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க தமக்கான துரும்பு சீட்டாக மட்டுமே இதை பயன்படுத்துமேயொழிய எந்த விசாரணையையும் நடத்த போவதில்லை. ஆகவே தலைவர் பிரபாகரன் கூறியபடி, நடக்கிற காரியங்களை கதைத்து தமிழரின் இருப்பை வட கிழக்கில் பாதுகாப்பதே உடனடித்தேவை.
  12. நான் நினைக்கவில்லை, யாழ் மக்கள் இவருக்கு இந்த முறை வாக்களிப்பர் என. தேசியப் பட்டியல் மூலம் தான் ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கும் இம் முறை. எப்படிக் கிடைப்பினும், அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.
  13. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு) 4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்) 5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன். 6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன். 7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா. (சின்னம்: வீணை) # தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ் சிறிபவானந்தராஜா, இளங்குமரன், மோகன், வெண்ணிலா) (சின்னம்: திசைகாட்டி) # மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும். # அங்கஜன் இராமநாதன் எந்தக் கட்சியில் நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை. # அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன். # சிறீரெலோ என்னும் கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. # சில முஸ்லீம் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.
  14. குறைந்தது வடக்கு கிழக்கில் ஊழல் அற்ற சுகாதார சேவைகள் ஆவது இடம்பெற இப்படியான ஒரு சில ஆளுமை உள்ளவர்கள் தேவை.
  15. வணக்கம்… வாருங்கள் போட்டி இடுங்கள். வெல்லுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
  16. நோ..அப்படி சொல்லக் கூடாது.பாவம்..அவர் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்பதற்காக ஒரு மனிதரை நாங்கள் ஓரேயடியாக மட்டம் தட்டி ஒதுக்க கூடாது.முடிந்தால் மக்கள் ஒரு சந்தர்ப்பம் குடுத்துத் தான் பார்க்கட்டுமே.
  17. இந்த முறை இடம் வழங்கும் போது தேர்தலில் போன தடவை வென்றவர்களும், புதியவர்களானால் இளையோரும் போட்டி போட வாய்ப்புக் கொடுப்பதாக அறிவித்திருந்தார்கள். இந்த இரு வகைக்குள்ளும் தவராசா அவர்கள் வரவில்லை! ஆனால், இன்னொரு வகைக்குள் மிக இலகுவாக வருகிறார்😎, அதனாலும் அவரை வெட்டி விட்டிருப்பர். இது காரணமென்றால், நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறார்கள் என்பேன்!
  18. சென்ற பாரளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் அடிப்படையில்.... திருகோணமலை மாவட்டம்: (4 இடங்கள்.) 2 முஸ்லீம், 1 தமிழ். (குகதாசன்.), 1 சிங்களம். மட்டக்களப்பு மாவட்டம்: (5 இடங்கள்.) 4 தமிழ், ( சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வியாளேந்திரன், பிள்ளையான்) 1 முஸ்லீம். யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்) (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன். வன்னி மாவட்டம் : (6 இடங்கள்) 2 முஸ்லீம், 4 தமிழ்.(அடைக்கலநாதன், திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம்.) தேசியப் பட்டியல்: சுரேன் ராகவன், செல்வராசா கஜேந்திரன், தவராஜா கலை அரசன். திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில்... (7 இடங்கள்) 4 முஸ்லீம், 3 சிங்களம். அங்கு தமிழர்கள் இரண்டு பேர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும்.... ஒற்றுமை இன்றி பிரிந்து நின்று பல தமிழ் கட்சிகளில் போட்டியிடுவதால், அங்குள்ள தமிழர்களின் வாக்குப் பிரிந்து ஒரு தமிழரும் வெல்ல முடியவில்லை என்பது சோகம். சென்ற பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் 16 பேர். தேசியப் பட்டியல் 3 பேர். மொத்தம் 19 பேர். மலையகத்தையும் சேர்த்தால்.... 25 தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம் என நினைக்கின்றேன். அவர்கள் தமிழ் என்று நாம் பெருமைப்படலாமே தவிர... ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கொள்கை உடையவர்கள்.
  19. வாழ்த்துக்கள்... வந்து மக்களுக்கு நல்லது செய்தால் மகிழ்ச்சியே..
  20. ஒம். எப்பவாது சந்தித்தால் பிடுங்கிய. மயிரை உங்களிடம் தந்து விடுகிறேன் 🤣🤣
  21. எனக்கு இரண்டரை லட்சம் பேரின் ஆதரவுண்டு. அது நூறால் பெருக்கும் அளவு பலமானது. அவர்களுக்காக நான் தொடர்ந்து தேசியம் பேசுவேன். எழுதுவேன். புலிகளையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் கிண்டல் செய்பவர்களை தட்டி குட்டிக்கேட்பேன். உங்களுக்கான மரியாதை என்பது கூட உங்களிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஆனது மட்டுமே. உங்கள் எழுத்துக்கள் மிக மிக மட்டமானவை. தரங்குறைந்தவை. இதில் இன்னொருவரை நீங்கள் கூடாதவர் என்று பரிந்தூரைப்பது கேலிக்கூத்து மட்டுமே.
  22. நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்" "அப்ப நீங்கள் சோறு சாப்பிடுவதில்லையே " "ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்" "என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல" "வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்" "அட கடவுளே பிறகு " "பிறகு மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை" "வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்" "இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை" "சன் இன் லோவும் 'டை' பூசுறவறே" "ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் " "புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ" "புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்" "அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி" அவரும் சிரித்தபடி எழுந்தார் , "இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி" "உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு" " சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி" "எந்த டாக்குத்தர்" "யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்" "வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் " இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது "டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே " “அவையளுக்கும் நடேசருக்கும் அட்டாஜ் கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்" "ஏன்டா?," "நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்" " குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ? எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்" "போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும் வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்" அப்படியே நடந்து வந்தவர் மூலஸ்தான பின் சுவரை பார்த்து "இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்," "விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு" "இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்" "வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ" "நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்" "இறைசக்தியோ" "அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...." "என்ன அண்ணே சொல்லுறீயல்" "நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்" "அது நடக்குது தானே" "அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு" " இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு" "உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் " "அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு" "இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது “ என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர். "என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?" "உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள் அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்" "யார் நியுசிலாந்துக்காரன்களே" "உந்த நக்கல் தானே கூடாது" "ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்" "ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் .... நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும் நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்" "இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்" "ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்" "சரி சரி வாங்கோ" "உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌" "யார் அந்த இலைட் குறூப் அண்ண" "அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள் இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...
  23. என்ரை கூப்பன் மட்டை எப்ப உங்கடை கைக்கு கிடச்சது கந்தையர்? 😂
  24. "திருந்தாத மனிதர்கள்" அது ஒரு காடை ஒட்டிய குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில், வயல் வெளிகளுக்கு இடையில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு சிறு கடையும், ஒரு சிறுவர் பாடசாலையும் ஒரு சிறு ஆலயமும் இருந்தன. உயர் வகுப்புக்கு கொஞ்சம் தள்ளித் தான் போகவேண்டும். அந்த ஆலயத்திற்கு பக்கத்திலும், வயலுக்கு, குளத்தில் இருந்து போகும் வாய்க்காலை ஒட்டியும், அந்த கிராமத்தில் கொஞ்சம் வசதியான ஒரு கல் வீடு இருந்தது. அங்கு மூன்று மகனுடனும், மூன்று மகளுடனும், ஒரு தலைமை குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவருக்கு, அந்த கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்கு, ஓரளவு படித்தவரும், ஓரளவு செல்வந்தவரும் ஆவார். அவரின் குடும்பத்தில் முதலாவது பிள்ளை ஆண், அதன் பிறகு ஒரு பெண், அடுத்து இரு ஆணும் இரு பெண்ணும் இருந்தனர். அவரின் பிள்ளைகளுக்குள் மூத்த மகள் கொஞ்சம் எல்லோருடனும் கலகலப்பாக பேசக்கூடியவர் , படிப்பிலும் கொஞ்சம் திறமை சாலி, அத்துடன், அந்த கிராமத்தில், விறல் விட்டு எண்ணக்கூடிய அழகிகளில், அவரும் ஒருவர். மற்றும் துடிதுடிப்பானவர் என்பதால், பாடசாலை விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வார். அத்துடன், கிராமத்து ஆலயத்தில், தேவாரம் படிப்பதில் இருந்து, ஆலய தொண்டு வேலைகளில், மிகவும் அக்கறையாக செயல் படுபவர். ஒரு கதாநாயகி இல்லாமல் ஒரு கதையே இல்லை என்பார்கள். இந்த கிராமத்து கதாநாயகி யார் என்று எவரையும், குறிப்பாக இளம் ஆண், பெண், இரு பாலாரிடம் கேட்டால், எல்லோர் கையும் சுட்டிக்காட்டுவது இவளைத்தான்! இவளுக்கு இப்ப பதினாறு முடிந்து, பதினேழு நடக்கிறது. உயர்வகுப்பிற்காக இரண்டு மூன்று மைல் தள்ளி இருக்கும் சிறு நகரத்தின் மையத்தில் இருக்கும் பாடசாலைக்குத் போகவேண்டும். எல்லாம் இன்று வெளிவரும் சாதாரண வகுப்பு பெறுபேரில் தங்கி இருக்கிறது. அவள் வீட்டில் எல்லோரும் ஆளை ஆளை பார்த்துக்கொண்டும், எதோ முணுமுணுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இன்று அவளின் அப்பா தலைமைக் குமாஸ்தா வேலைக்கு போகவில்லை. மணி எட்டு ஆகிற்று. பத்து மணிக்கு முதல், பாடசாலைக்கு போகவேண்டும். ஒரே பரபரப்பு. தலைமைக் குமாஸ்தா, வாயில் சுருட்டுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருக்கிறார். அவளின் தாய், தன்னை கொஞ்சம் அலங்கரிப்பதில் ஒரு கண்ணாக இருக்கிறார். மூத்தவன் படிப்பை கோட்டை விட்டுவிட்டான் என்று தாய்க்கு ஒரே கவலை, ஆனால் இன்று அந்த வடு நீங்கும் என்ற ஒரே பூரிப்பு அவளுக்கு ஆனால் அங்கு எங்கள் கதாநாயகியை காணவே இல்லை. அவள் அந்த ஆலயத்தில் அமைதியாக எதோ தேவாரம் படித்து, தன் தோட்டத்தில் பறித்து வந்த மல்லிகை, ரோசா, மற்றும் பல விதமான மலர்களை கடவுள் சிலைக்கு முன் படைத்து, எதோ பூசை ஒன்று தானே செய்து கொண்டு இருக்கிறாள். அது இப்போதைக்கு முடிந்த பாடு இல்லை, நாலு ஐந்து விதமான எண்ணெய்கள் விட்ட சிறு தீப விளக்குகள் கொண்டு எண்ணற்ற பூசைகள். தங்கை வந்து அக்கா காணும் என்று சொல்லும் மட்டும் அது முடிந்த பாடில்லை. ஒருவாறு முடித்துக் கொண்டு கதாநாயகி, போலீஸ் திணைக்கள தலைமைக் குமாஸ்தா அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா தங்கையுடன், குறுக்கு வழியான, வயல் வரம்பால் பாடசாலை சென்றாள். நான் இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இந்த கிராமத்துக்கு நல்லிணக்க கிராமம் என்ற விசித்திரமான பெயரும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் திருத்த முடியாததாகக் கருதப்பட்ட மக்கள் ஒரு சிலரும் அங்கு வாழ்ந்தாலும், அந்த ஒவ்வொருவரும் எதோ ஒன்றில் கட்டுப்படுத்த முடியாத நாட்டம் கொண்டு இருந்தாலும், அவர்களையும் அணைத்து அந்த கிராமம் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, அவர்களை ஒதுக்கிவிடாமல் வாழ்ந்து கொண்டு இருந்தது தான் அதற்கு காரணம். அப்படியானவர்களில் முதன்மையாக இருந்தவன், அந்த கிராமத்து தலைவனின் மகன். இவன் பொய் சொல்வதில் மட்டும் அல்ல, நன்றாக நடிக்கவும் தெரிந்தவன். அழகிய பெண்களிடம் எப்படியும் நண்பனாகி, நம்பவைத்து, உறுதிவழங்கி, தன் வலையில் வீழ்த்தி, தன் காம பசியை தீர்ப்பதில் வல்லவன். இவனால் தன் பதவிக்கும், தனக்கும் அவமானம் என்று, உயர் வகுப்பில் மூன்று தரமும் பரீட்சையில் கோட்டை விட்டதும், மத்திய கிழக்கில் வேலைக்கு அனுப்பி விட்டார். என்றாலும் மத்திய கிழக்கின் கட்டுப்பாடு அவனுக்கு ஒத்துவராததால், எதோ பல பொய்கள் சொல்லி, மீண்டும் கிராமத்துக்கு நேற்று வந்துவிட்டான். அவனுக்கு இன்று வெளிவரும் சாதாரண வகுப்பு பெறுபேறு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. தலைவனின் மகன், பழைய மாணவன் இரண்டும் காணும், அங்கு தானும் போய், நல்ல பெறுபேறு பெற்றவர்களை வாழ்த்தவும், மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், மற்றும் அதை சாட்டாக வைத்து, தன் கைவந்த கலையை நாசுக்காக மீண்டும் தொடங்கவும் ஏதுவாக இருந்தது. அவன் கண் இம்முறை எங்கள் கதாநாயகி மேலேயே! அவளின் பெயர் 'திலோத்தமை' கூட கவர்ச்சியானதே. திலம் என்றால் எள் . எள் அளவும் குறையாத அழகை பெற்றவள் என்பதால் இப்பெயர் வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால் அவனின் பெயர் ஆண்ட்ரூஸ். நேரம் ஒன்பது அரை. இன்னும் அரை மணித்தியாலம் இருக்கு. ஆண்ட்ரூஸ் ஒரு ஓரத்தில் நின்று, ஒரு நல்ல பையனாக பெற்றோர்களை வரவேற்று வரவேற்று எதோ எதோ கதைத்துக்கொண்டு இருக்கிறான். ஆனால் அவன் கண் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறது. அப்பொழுதுதான் திலோத்தமை தன் பெற்றோர், தங்கையுடன் பாடசாலை வாசலுக்கு வந்தாள். ஆண்ட்ரூஸ் கண்கள் மட்டும் அல்ல, மற்றவர்களின் கண்களும் வாசலை நோக்கின! ஒயிலாக முல்லைக் கொடிபோல் திலோத்தமை வாசலில் நின்றாள். இரு குறுவாள்கள் கொண்ட கண்களையும் , நேர் பாதியில் நேர்த்தியாய் வகுந்த இரு மாங்கனித் துண்டுகளை இரு கன்னங்களாகவும். நெற்றியில் கற்றையாய் விழுந்து புரளும் கரும்கூந்தலையும் கொண்ட அவள் முகம் யாரையும் அங்கு பார்க்கும் நிலையில் இல்லை. அவள் கண் மேடையில் இருந்த மணிக்கூட்டை மட்டுமே பார்த்தது. மனதில் இன்னும் முடியாத பூசையின் வசனங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. அவள் அழகு, வாய் மூட மறந்து நிற்கும் பலரின் நரம்புகளையும் மீட்டிக் கொண்டிருந்தது. அதை அவள் பொருட்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவள் அழகை முழுமையாய் பார்த்தவர் ஒருவர் கூட இல்லை என்றே சொல்லலாம். நெற்றியைப் பார்த்தவர் அங்கேயே நிற்கிறார். நீண்ட கைவிரல் நகத்தைப் பார்த்தவர் அதையே பார்க்கிறார். இதைவிட மேலான ஒன்றைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே இல்லை. என்றாலும் ஆண்ட்ரூஸ் கண்கள் மாறுபட்டவையாக இருந்தன. வீதியில் நடந்து செல்லும் கணிகையின் கண்களைப் போல் அலைகிற காற்று திலோத்தமையின் மேனியை தழுவிக் கிடந்த தாவணியை கொஞ்சம் கலைக்கிறது. ஆண்ட்ரூஸ்க்கு இந்த வகையில் கொஞ்சம் அதிர்ஷ்டம்தான். நெஞ்சில் காமத்தீயுடன், வெளியே முகத்தில் அப்பாவியாக இருக்கும் அவனுக்கு அந்தப் பொழுதே ஆசை தீர தழுவிக் கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றினாலும், அவன் அதை வெளியே காட்டாமல் சமாளித்தபடி அங்கே நின்றான். என்றாலும் அவன் வாய் முணுமுணுக்க தவறவில்லை. "ஆடை மறைவில் ஆசைகள் பிறக்க மேடை மார்பில் கண்கள் மேயுதே! கயல் விழியில் இமைகள் ஆட கைகள் இரண்டும் அணைக்க துடிக்குதே!" "நீல வானம் முகிலில் புதைய கரும் கூந்தலில் நானும் புதைக்கிறேனே! காதல் ஊடல்கள் தனிமை தேட கனவு கூடல்கள் இடையை தேடுதே!" திலோத்தமை அந்த பாடசாலையிலேயே அதிகூடிய திறமை சித்தியை பெற்றாள். அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அவளுக்கும் அவளின் பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சந்தர்ப்பத்தை நாசுக்காக பாவித்து ஆண்ட்ரூஸும் அங்கு போய் அவளுக்கு வாழ்த்து கூறியதுடன், தனது சிறப்பு பரிசாக பூச்செண்டும் கொடுத்தான். ஆனால் அவள் அதை வாங்க தயங்கினாள். என்றாலும் பெற்றோர் வாங்கு பிள்ளை என்று கூற அவள் அதை அவனிடம் இருந்து வாங்கினாள். அந்த சாட்டில் அவன் கை, அவளின் கையை, தெரிந்தும் தெரியாமலோ கொஞ்சம் வருடியது. ' என் தந்தையார் கண்ணகி. சீதை.... இப்படியான சரித்திர கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார் அவற்றை வாசித்து, நானும் என்னை அவர்களைப் போல் எண்ணிய பட்டிக்காடு' என்று அடிக்கடி தன் தோழிகளிடம் கூறும் அவள், அவனுடைய வலிமை பொருந்திய திருக்கரங்களால் வருடி, பட்டும் படாமலும் தொட்ட தொடுகை , அவளின் இதயம் களிப்பின் எல்லையை இழந்து உரைக்க இயலா கவிதையாகி விட்டது! அவள் பிரேமை சிறகை விரித்து கடல் மேல் பறக்கும் பறவையானது! சமாத்தியமான அவன் தன் வலையில் மான் விழுகிறது என்பதை எளிதாக உணர்ந்துகொண்டான். சிலநாட்கள் கழித்து, திலோத்தமை ஒரு வார இறுதியில் வயல் வெளியால் நடந்து போகும் பொழுது, இதற்கென்றே காத்து இருந்த ஆண்ட்ரூஸ், தற்செயலாக சந்தித்தது போல ஹலோ என்றான். அவனைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாத அவளும் தன் புன்சிரிப்பால் அவனை வரவேற்றாள். அது போதும் அவனுக்கு. அங்கு அந்த நேரம் யாரும் இல்லை. குளத்துக்கு அருகில் இருந்த மரநிழலை காட்டி, அதன் அருகில் சிறு பொழுது அமர்ந்து கதைக்கலாமே என்றான். அங்கு காணப்பட்ட சிறிய மலரை, தாமதமின்றி பறித்து, அவளுக்கு கொடுத்து, அதை முடியில் சூட சொன்னான். இல்லையேல், அது வளைந்து, புழுதியில் விழுந்து வீணாகிவிடும் என்று தமாஷாக கதைத்தான். அது அவளுக்கும் பிடித்தது. தேனிகள் தங்கள் குழுவின் இசையை அங்கே ஒலிபரப்பிக்கொண்டு இருந்தன. அந்த சூழலை பயன்படுத்தி, மெல்லிய குரலில் ' உன் வதனம் காணா விட்டால், என் இதயத்துக்கு ஓய்வோ நிம்மதியோ இல்லை' என கொஞ்சம் நெருக்கமாக கதையை தொடங்கினான். அதை அவள் சம்மதித்து போல, தன் கால் விரலால் நிலத்தில் எதோ சித்திரம் வரைந்தாள். அவளின் அலங்கார ஆடையும் கழுத்து சுற்றி வைடூரிய சங்கிலியும், அவளின் கால் விறல் கீறலுடன் சேர்ந்து ஆடின. அவள் தன்னை அறியாமலே நாளை தங்கையுடன் விறகு பொறுக்க போகிறேன் என பட்டும் படாமலும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினாள். அவள் அவன் முகத்தை, அதன் வதனத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை; அவன் குரலை செவி மடுக்கவில்லை; குளத்தின் முன்னால் உள்ள சாலையில் அவனின் மென்மையான காலடிகள் மட்டும் அவள் செவியில் விழுந்து, அவனும் போகிறான் என்று உணர்த்தியது. அடுத்தநாள் விறகு பொறுக்க தங்கையுடன் போன அவள், தங்கையை வேறுபக்கமாகவும் தான் வேறுபக்கமாகவும் என தன்னை தனிமை படுத்துக்கொண்டாள். அவளின் எண்ணம் எல்லாம் ஆண்ட்ரூஸ் வருவான் என்ற எண்ணம் தான். முறுக்கிய மீசையும், திமிறிய தோள்களும் அவனின் கூரிய கண்களும் தான் இப்ப அவள் நினைவில். அவள் விறகு பொறுக்காமல், பக்கத்தில் இருந்த பத்தைகளில் பல்வகை மலர்களும் பூத்துக் கிடப்பதை காண்கிறாள். அதன் வாசனை திலோத்தமையை கவர்ந்திழுக்க, அந்தப் பூக்கள் ‘என்னைக் கிள்ளி உன் கூந்தலில் சூடிக்கொள்ளேன்' என்று சொல்லுவது போல ஒரு சத்தம் அவளுக்கு கேட்டது. அவள் தன்னையறியாமல் கண்ணை மூடினாள். அந்த பூக்கள் தன் கூந்தலில் வந்து இணைவதை உணர்ந்து, திடுக்கிட்டு கண்ணை திறந்தாள். ஆண்ட்ரூஸ் அவள் கூந்தலில் அலங்காரம் செய்துகொண்டு இருந்தான், ஆடவன் ஒருவன் தன் கையை தீண்டிவிட்டான் என்று விருப்பமோ, விருப்பம் இல்லையோ இவன் என் கணவன் என்று பட்டிக்காடாய் முடிவு எடுத்த அவளுக்கு, இப்ப அவன் அருகில் நெருங்கி நிற்பது, இன்னும் நம்பிக்கையை கொடுத்தது. அவள் தன்னையறியாமலே அவன் மார்பில் சாய்ந்தாள். கை படாத ரோசாவாக இருந்த அவள், ஒவ்வொரு இதழாக அவன் முழுமையாக சரியாய் நுகர்ந்து அனுபவிப்பதை அவள் பொறுப்படுத்தவில்லை. அவன் தனக்கே சொந்தம் என்று, அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் விட்டுக்கொடுத்தாள். அவளும் ஆரத்தழுவி ஆனந்தமாய் மகிழ்ந்தாள். தங்கையின் 'அக்கா, எங்கே?'' என்ற குரல் கேட்க, அவள் தன்னை சரிபடுத்திக்கொண்டு, எதோ அங்கும் இங்கும் விழுந்து இருந்த சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டு தங்கையுடன், வேண்டா வெறுப்பாக புறப்பட்டாள். ஆனால் அதன் பின் ஆண்ட்ரூஸ், திலோத்தமையை சந்திக்கவில்லை. அவன் மலர் தாவும் வண்டுதானே. தேனை குடித்தபின் வேறு மலர் தேடி எங்கேயோ போய்விட்டான். ஆனால் திலோத்தமைபாடு திரிசங்கு நிலை ஆகிவிட்டது. அவனை நம்பி, தன்னை இழந்து, கன்னி பெண்ணாகவும் இல்லாமல் மனைவி என்ற நிலையும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலையானாள். காதலித்துப்பார் உன்னைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்பார்கள். ஆனால் அவள் உண்மையில் உணர்வுபூர்வமாக காதலித்தாள், ஆனால் தோன்றியது இருள் வட்டம் தான்! அது அவளின் காதலின் தவறா அல்லது அவள் மீது கொண்ட காதலின் தவறா? இப்ப அவள் தனிமையை உணர்கிறாள், அந்த வஞ்சித்த ஞாபகம் மனதில் வருவதால். செடிகளின் அசைவின் ஒலியில் கலவரமடைகிறாள், தன் வயிற்றை தடவி பார்க்கிறாள். நீல வானம். ஓடும் முகிலை தேடிப்பிடித்து முகத்தை மூடுவது போல, அவனை எப்படியும் தேடிப்பிடித்து, தன் வயிறு, தன்னை காட்டிக்கொடுக்கும் முன், அவனுடன் சேரவேண்டும் என்று துடித்தாள். "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" என்ற பாடல் அடிகள் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. 'என்னை உன் இன்பத்தால் அந்தம் இல்லாமல் ஆக்கி விட்டாய். நிறைவேற்றி அதை முழுமையாக, உலகம் தெரிய முடிக்கமுன்பு வெறுமை தந்து ஓடி மறைந்துவிட்டாய். இதயத்தை புத்துயிரால் புனர் ஜென்மம் தந்த நீ, அதன் எதிரொளியாய் உன் வாரிசு வளருவதை நீ அறியாயோ' அவள் வாய் வெளியே கதறி சொல்லமுடியாமல் தவித்தது. நாட்கள் போக, அவளின் போக்கை / நிலையை உணர்ந்த பெற்றோர், அவளை விசாரித்து, பின் ஆண்ட்ரூஸ் பற்றி முழுமையாக அறிந்து, அவன் சரி இல்லாதவன் என எடுத்துக்கூறி, அவளை கருக்கலைப்பு செய்ய தூண்டினார்கள். அவர்களுக்கு அதை மூடிமறைக்க வேறுவழி தெரியவில்லை. ஆனால் இவள் எனோ அதை மறுத்துவிட்டாள். இவன் இனி என் கணவன் என பட்டிக்காட்டாய் முடிவெடுத்தாள். இவனை, இவன் உள்ளத்தை தன்னால், தன் உண்மையான அன்பால், தன் இளமை அழகால், கவர்ச்சியால், திருத்த முடியுமென வாதாடினாள். செய்வதறியாத தந்தை இவளையும் கூட்டிக்கொண்டு, ஆண்ட்ரூஷின் பெற்றோரிடம் சென்றார். ஆண்ட்ரூஷின் பெற்றோர்கள் நவீன சோபா ஒன்றில் அமர்ந்து இருந்தனர். சிவத்த பொட்டுடன், சால்வை தோளில் இருக்க மஞ்சள் மேல் சட்டையுடனும், பருத்தி வேட்டியுடனும் , திலோத்தமையுடன் சென்ற திலோத்தமையின் தந்தை, நடந்தவற்றை எடுத்துக் கூறினார். அவர்கள் இருந்து கதைக்கும் படி கூறியும், அவர் இருக்கவில்லை. அவரின் கோபம், ஏக்கம் முகத்தில் பிரதிபலித்தது. ஆண்ட்ரூஷின் பெற்றோர்கள் தங்களுக்குள் கதைத்தபின், ஆண்ட்ரூஷின் குழப்படிகளை மூடி மறைக்காமல், இப்ப யயந்தி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று சொல்லி, தாங்கள் எப்படியும் இருவரையும் ஒன்றாக சேர்ப்பதாகவும், திலோத்தமையை ஏற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினர். அதன் பின் ஆண்ட்ரூஷின் பெற்றோர்களின் ஆலேசனையும் வற்புறுத்தலும், அவளின் அழுகையும் வேண்டுகோளும் சேர, கடுமையான சட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகளை ஆண்ட்ரூஸ் திலோத்தமைக்கு ஏற்படுத்தி, அதற்கு அவள் சம்மதித்ததும் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் நடந்தது. மேலும் இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் ஆண்ட்ரூஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வைப் பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் அவர்களின் கிராமத்திற்கு வெளியே இருந்ததால், அது, அந்த செய்திகள் அவர்களின் கிராம சமூகத்துக்குள் பரவவும் இல்லை. அதுமட்டும் இல்லை, திருமணத்திற்கு முன்பு அவன் போட்ட கட்டுப்பாடும் மற்றும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் அவள் இருந்ததும் ஓரளவு பிரச்சனைகள் இல்லாமல் குடும்பம் நகர உதவியது. மற்றும் படி அவன் இன்னும் திருந்தாத மனிதனாகவே இருந்தான்! ஆனால், ஆண்ட்ரூஸ், திலோத்தமை குடும்பம் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்ததும், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினான் . இது அவனுக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு இலகுவாக வழிவகுத்தது. அதுமட்டும் அல்ல வெளிநாட்டில் காணப்படும் தாராளமான சுதந்திரமும், திருமணம் செய்யாமலே ஒன்றாக இணைந்து வாழக்கூடிய சூழ்நிலையும், அவன் அந்த நாட்டு மொழியை விரைவாக கற்று தேர்ச்சி பெற்றதும், அவனின் பேச்சு திறனும், அழகான பொய்களும் அவனுக்கு சாதகமாகப் அமைந்தது. அவன் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், திலோத்தமை விடாமல் அவனை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக இன்றும் தொடர்கிறது. "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  25. இல்லை இரண்டும் சமன் இல்லை சாதி வெறி ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது அதாவது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு கீழே சாதி இருக்க வேண்டும் என்று விரும்பும் அதேவேளை தங்களுக்கு மேலே சாதி இருக்ககூடாது என விரும்புகிறார்கள் எனது பாடசாலை நண்பன் ஒருவனை என்னை விட குறைந்த சாதியைச் சேர்ந்தவனை கேட்டேன் அவனுக்கு எனது சாதி பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் நான் சொன்னேன் அவள் உன்னையும் விட சாதி கூட என்றும் அவன் இந்த சாதி அளிக்கப்பட வேண்டும் என்றான் நான் கூறினேன் அது சரி தான் உன்னால் உனக்கு குறைந்த சாதியில் திருமணம் செய்ய முடியுமா?? அவன் உடனே மறுத்து விட்டான். மட்டுமல்ல தனக்கு சாதிக்கு குறைத்த சாதிகள் இருக்கலாம் அதில் பிரச்சனை இல்லை என்றான் எப்படி சாதியை அழிக்கலாம் ?? சாதிகள் பல உண்டு” அவை படிப்படியாக அழிகின்றன. ஆனால் சிலர் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லி வளர்க்கிறார்கள் எமக்கு மேலே சாதி இருக்க படாது கீழே இருக்கலாம் என்ற சிந்தனையாலும். சாதி உடனும் அழிக்க முடியவில்லை இருந்தாலும் இது முற்றாக அழியும் இதை விவாதங்களில் உள்நுழைந்து விவாதங்களை திசை திருப்புகிறார்கள். தேவையா??
  26. நூற்றுக்கு நூறு வீதம் எம்மிடத்தில் பிழைகளை வைத்துக்கொண்டு சிங்கள அரசியல் தலைவர்களை திட்டுவதில்/வசைபாடுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
  27. சித்தார்த்துடன் சுற்றித் திரிந்த பெண்ணும், சித்தார்த்தனும் தமிழரிடையே இருக்கும் சாதித் தடிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட தகவல்கள் உண்மை தானே? அவர்களது அணுகுமுறைக்கு நான் ஆதரவில்லை, ஆனால் சாதிவாதம் பற்றிய தகவல்கள் சரியானவை. சாதிவாதம் இன்னும் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக விளங்குபவர் தான் இந்த இளம்பிறையன். ஒரு தீவகப் பாடசாலையில் அதிபராக வேறு சாதிக்காரர் வரக் கூடாது என்று குத்தி முறிந்த தரப்பின் தலையாரி அவர், யாழிலேயே இதைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறோம். பட்டாசு ரீமின் குணம், எந்தச் சமூகக் கிருமியையும் சுமந்திரன், சாணக்கியனைத் திட்டி, புலிகளை தலையில் தூக்கி வைத்தால் உடனே நிபந்தனையின்றி ஆதரவு! இந்தக் குணத்தாலேயே மக்கள் முன்னாட்களில் தொழுநோயாளிகளைக் கண்டு ஓடியது போல விலகி ஓடுகிறார்கள், பட்டாசு ரீமிடமிருந்து😂!
  28. தெற்கில் வந்த மாற்றம் போல வடகிழக்கிலும் வரும் என எண்ணுகிறேன். அடுத்த 14 வரை பொறுத்திருப்போம்.
  29. கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு இங்கே கேவலத்திலும் கேவலமானது சித்தார்துடன் சுற்றித் திரிந்து தமிழ்தேசியத்தையும் புலிகளையும் மேடைபோட்டு பேசிவந்த பெண்ணை தேர்தலில் களமிறக்கியிருப்பது.
  30. உண்மை. ஆனால்,மாற்றம் என்பது சிங்களத்துககான மடைமாற்றமாக இருக்குமாயின் தமிழினத்தின் படைபலப் பேரழிவு2009இல், அரசியல் பேரழிவு 2024இல் என்று வரலாற்றுப் பதிவாகும். அதுதான் சிங்களத்தின் அரசியல், மதவியல்,மெய்யியல், சட்டவியல், கல்வியியல் மற்றும் பொருளியல் .....அனைத்து தரப்பினரதும் ஒருங்கிணைந்த சிந்தனை. அதனைப் புரிந்துகொண்டு செயற்படாத தமிழர் செய்யும் தமிழர் விரோத அரசியல் மற்றுமொரு சாபக்கேடு.
  31. விசுகு... சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது. தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம் கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது. இப்போ... காட்டிக் கொடுத்த ஓட்டுக் குழுக்களும், ஒப்புக்கு சப்பாணிகளாக இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் செயலை நினைத்து வெட்கப் படுவது கூட இல்லை. இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது வயிறை எப்படி வளர்க்கலாம் என்று திரிகின்றார்கள்.
  32. "ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ]
  33. இனித்தான் யார்காலை யார்வாருகிறார்கள் என்பது நடக்கும்.எல்லோரும் வீட்டை விட்டுப் போய் விட்டார்கள். தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியில் ஒருமுறையாவது இருக்க வேண்டும் என்று சிறியர் மட்டும் தனியாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.ஆனால் அவர்களின் உடல்மொழி அவர்களின் ஒற்றுமையைக் காட்டிக் கொடுக்கின்றது. வேட்பாளர் தெரிவில் சிறிதரன் தோற்று விட்டார்.
  34. உங்களால் இளம்பிறையன். சொன்னது பிழை என்ற வாதங்களை முன் வைக்க முடியவில்லையென்றாலும் கவலையில்லை ஆனால் இளம்பிறையன். பற்றி ய கருத்துகள் கவலையளிக்கிறது தேவையற்றது அவர் எப்படி இருந்தால் தான் என்ன ?? தமிழ் மக்களுக்கு எந்த கவலையுமில்லை ஆனால் 70 ஆண்டுகளாக வாக்கு போட்டு உரமேற்றி வளர்த்து எடுத்த தமிழ் மக்களின் கட்சியை தமிழரசுகட்சியை நேற்று பிழைக்க / உழைக்க வந்தவர்கள் அழிப்பது சகிக்க முடியாது
  35. சுமந்திரனுக்கு…. வெள்ளை அடிக்க வேணும் என்றால், அவரைப் பற்றி கருத்து சொல்பவர்கள் மேல்… சாதி, சமய வெறியர் என்று சொல்லி திருப்திப்பட வேண்டியது தான். 😂 சுமந்திரன் “பத்தரை மாற்று தங்கம் என்று நிறுவ”… எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 🤣
  36. யாழ்ப்பாத் தமிழர்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் புழுக்கள் ஆடுகள் மாடுகள் கோழிகளை தான் விளங்கிக் கொள்ள வேண்டும்
  37. அரகல போராட்டத்தின் போது முப்படைக்கும் பொறுப்பானவர் கோத்தாவை காப்பாற்றவில்லை இவரை விசாரிக்க வேண்டும் என்று கத்திக் குளறியவர் இப்போது கை குலுக்குகிறாரே.
  38. நல்லூர்க் கோவிலை உடைத்து மலசல கூடம் கட்ட வேண்டுமென்ற சித்தார்த் என்றவருடன் சேரந்து இயங்கிய ஒரு பெண்ணுக்கு தேர்தலில் தமிழரசின் சார்பில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொல்கிறாரே. முழு காணொளியையும் கேட்க விருப்பமில்லையென்றால் 8 1/2 நிமிடத்திலிருந்து கேட்கலாம். இணைப்புக்கு நன்றி ஏராளன். தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடுபவர்களின் அபிப்பிராயங்கள் ஏதாவது தெரியுமா ஏராளன்?
  39. தனக்கு எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்பதால் ஒரு பத்திரிகையிடம் முழு விடயத்தையும் ஒப்புவித்ததாக சொல்கிறார். லசந்த விக்கிரம துங்கவை விட்டு வைக்காதவர்கள் இப்பவே அந்த பத்திரிகைக்காரரை தேடி குறி வைப்பார்கள். இவரும் அந்த பயங்கர கூட்டத்தில் இயங்கியவர். உண்மையை கண்டறிந்து தண்டிக்கிறவராக இருந்தால் இவருக்கு பாதுகாப்பளிப்பது அனுரவின் கடமை. தட்டிக்கழிப்பாரா, அல்லது செய்து நிரூபிப்பாரா தான் சொன்னதை?
  40. சாதி, சமய வெறியரான, பிரதேசவாதியான இளம்பிறை எல்லாம் ஒரு ஆளென்று அவருக்கு ஒரு பேட்டி,..😏
  41. மாநில மொழிக்கான சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் 1 க்கு விருது கிடைத்தது. இதனால்தான் அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனும் இயக்குனர் மணிரத்தினமும் விருதினை வாங்கினார்கள். சிறந்த தயாரிப்பாளருக்காக விருதுகள் வழங்கப்படவில்லை. இது தவறான செய்தி.
  42. தமிழ் வலைதளங்களில் கூட்டமைப்புக்கோ தமிழரசு கட்சிக்கோ தமிழர்கள் 💪 💪 ❤️ ❤️ இந்த அடையாளங்கள் இடுவது இல்லை அநுரகுமார திசாநாயகவின் கட்சிக்கு மட்டும் தான்
  43. தாயகத்தில் தமிழ் தேசியம் தொடர்ந்து நிலைத்து நிற்க குரல் கொடுக்க வாழ்த்துக்கள்
  44. தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣 தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂
  45. சும்மா ஒரு கதைக்கு எழுதினால் நம்பிவிடுவியளாக்கும்?
  46. இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.