Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 10/23/24 in all areas
-
கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார். இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன. 1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள். என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல. அக்கினிக் கரங்கள் நாவண்ணன் இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு. ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன். ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது. அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும். என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம். அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன். ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன. காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன. நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின. மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன். உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. வ. வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன். அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு. பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின. இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர். இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது. அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே! அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை. சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு. நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன். கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......! இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன். அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி! பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு! திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!5 points
-
இந்த பிபிசி செய்தி வலிந்து வட கொரிய படையினர் இரஸ்சியாவிற்காக யுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கருத்துருவாக்கம் செய்ய முயல்கிறது எந்த வித உறுதியான ஆதாரமில்லாமல். கீழே உள்ள பதிவு வேறோர் கிரியில் இணைத்த பதிவு உண்மை, ஊடகவியலின் அடிப்படை தெரியாத யூடியூப்பர்களை கேள்விக்குள்ளாக்கும் மக்கள் பிரதான ஊடகங்கள் செய்யும் அதே வகையான பிரச்சார நோக்கிலான செய்திகளை கேள்விக்குள்ளாக்குவதில்லை, பெரும்பாலும் அதற்குக்காரணம் அவை மேற்கு ஊடகம் என்பதால் அவற்றினையே ஊடக தர்மத்திற்கு ஒரு பென்ச் மார்க்காக எடுக்கின்ற நிலை காணப்படுகிறது. இந்த செய்மதிப்படம் தெ கொரியாவினால் 12000 வட கொரிய துருப்புக்கள் இரஸ்சியாவிற்காக போரிடுவதற்காக உக்கிரேனுக்கு போவதாக கூறி வெளியிட்ட படமாகும். Synthetic Aperture Radar (SAR) வகையான படம் இதில் குறிப்பிட்டுக்காட்டப்பட்ட பகுதி நீரில் ஒரு கலம் (கப்பலாக இருக்கலாம்) உள்ளதை காட்டுகிறது. இந்த தகவலின் அடிப்படையில் உலக செய்தி நிறுவனங்கள், நாடுகள் (குறிப்பாக மேற்கு நாடுகள்) எந்த பின் புலமுமில்லாமல் பிரச்சார ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள், இதன் நோக்கம் ஒரு தேவையற்ற உலக போராக இருக்கலாம். முறையான ஊடகத்துறையில் இருந்தவாறே இவ்வாறான ஆதாரங்களை ஆதாரமாக காட்டி செய்தி வெளியிடும் மேற்கு ஊடகங்கள் கூட தற்போதய யூரியூப் ஊடக நிலைக்கு வந்து விட்டன மேலே வெறொரு திரியில் இணைத்த பதிவினடிப்படையில் மேற்கினால் எந்த உறுதியான ஆதாரமற்ற ( அந்த செய்மதிப்படத்தினை பார்க்கும் சாமானியர்கள் 12000 துருப்பினர்கள் தான் அந்த மேற்கோள் காட்டப்பட்ட பகுதியில் காணப்படுகிறார்கள் என நினைப்பார்கள் அது ஒரு கப்பலை குறிப்பிடுவதாக உள்ளது) ஒரு பிரச்சார செய்தியாக இது உள்ளது இதன் அடிப்படை என்னவென்றால் தற்போதய உக்கிரேன் இரஸ்சிய போரில் உக்கிரேனுக்கு ஆயுதம் ஒரு பிரச்சினை அல்ல ஆளணி பிரச்சினை இதனை சாட்டாக வைத்து நேட்டோ நேரடியாக தனது துருப்பினை உக்கிரேனுக்கு அனுப்ப திட்டமிடுகிறதோ என தோன்றுகிறது.4 points
-
இதே போல் புலம்பெயர் தமிழர்களும் சிந்தித்திருக்க வேண்டும். இதே சம்பவங்கள் பெரு மதிப்பிற்குரிய உக்ரேனாருக்கு நடந்திருந்தால் மேற்குலகு இரத்தக்கண்ணீர் வடித்திருக்கும்.3 points
-
எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.2 points
-
என்னப்பா ஆட்சி மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போடுறாங்களோ?..அது சரி யார் தாக்குதல் நடத்துவார்கள்...இந்தியா ரோ,சகரான் குழு.புதிய புலிகள் ,பழைய புலிகள்,ஈரான்,இஸ்ரேல்.சீனா... சொல்லுங்கோ....ஒரு யூடியுப் போடப் போறன்2 points
-
ஐ நா இஸ்ரேலின் இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் கூறினாலும் எதுவும் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது, இதே நிலைதான் எம்மண்ணிலும் நிகழ்ந்ததால் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது, நீங்கள் மேற்கு நாட்டில் வாழ்ந்தாலும் சாதாரண மனித நேயம் கொண்ட நல்ல மனிதர் என கருதுகிறேன் அதனாலேயே உங்கள் கடந்த கால கசப்புணர்வுகளை கடந்து ஒரு இயல்பான மனிதனாக உங்களால் இருக்க முடிகிறது.2 points
-
இந்த காணொளியில் சுமந்திரனை ஒரு கட்சி விரோதியாக கூறப்பட்டுள்ளது, அதற்காக கூறப்படுகின்ற காரணமாக கட்சியின் அடிப்படை கொளகையான தேசிய கொள்கையிலிருந்து வேறுபட்டுள்ளமையால் அந்த கொள்கை சார்ந்த (தமிழ் தேசிய ) அரசியல்வாதிகளை அகற்றுவதனால் கட்சி பலவீனமாகிறது என்பதாக பொருள்படுகிறது ( காணொளியினை சரியாக புரிந்து கொண்டேனா என தெரியவில்லை). இந்த தமிழ் தேசிய நீக்க அரசியல் என்பதன் மூலம் சுயாட்சி ( இரு அரச நிர்வாக மட்டத்தில் மத்திய அரசு மற்றும் பிராந்திய அரச மட்டத்தில் அதாவது மாகாணசபை ஊடாக) அதிக அதிகாரங்கள் கொண்ட காணி, காவல், நிதி மற்றும் சட்டத்தினை மத்திய மானில அரசுகள் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார்) இனை பெற முடியும் என கூற முற்படுகிறார் என நினைக்கிறேன் (சுமந்திரன்). இது எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என தெரியவில்லை. அதற்கு விலையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்க வேண்டிய நியாத்தினை விட்டுக்கொடுப்பது, காணாமல் போன தமது உறவுகள் தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலவரம் மற்றும் இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட இனக்கொலையினை வெளிகொணராமல் இருப்பது என்பதனை விலையாக செலுத்துவதுடன், இதற்கு மேலே சென்று உரிமைக்காக போராடிய போராளிகளை பயங்கரவாதிகளாக்குவதன் மூலம் அதனால் இலங்கை அரசின் இனவழிப்பினை நியாப்படுத்த விழைகின்றாரா என கேள்வி எழுகிறது. ஆனால் திரு சுமந்திரன் கூறுவது போல அதிகாரங்களை பெறுவதற்காக இவற்றினை செய்வது என்பது மேலும் அதிகாரத்திற்கான சமரச முயற்சியில் ஒரு பலவீனமான நிலையினையே ஏற்படுத்தும் என கருதுகிறேன். உங்களது இறுதி பேரம் பேசும் விடயங்களாக உள்ளவற்றை கைவிடுவது, மற்றும் இனப்பிரச்சினை இல்லை என்பதான உருவமைப்பு எவ்வாறு தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கும்? உரிமையினை பெறுவதற்காக சுமந்திரன் பயன்படுத்தும் உத்தியாக தமிழ் தேசிய நீக்கம் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என இணக்க அரசியலை பயன்படுத்துகிறார்.2 points
-
அவ்வாறான ஒரு விடயத்திற்கு முன்னர் அரசு அனுமதி அளிக்கவில்லை என (முன்னாள் முதலமைச்சரின்) நினைவில் உள்ளது, தற்போதய அரசு அனுமதி அளிப்பது நல்ல விடயம்தான்.2 points
-
நாம் இங்கு பேசியது உங்கள் கற்பனைகள், சீமான் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்கள் பற்றியதல்ல. மனோன்மணியம் சுந்தரனார் தமிழர் திருநாடு என்று எழுதியதாக நீங்கள் உண்மைக்கு புறம்பாக இங்கு கூறிய கூற்று தொடர்பானது மட்டுமே. மற்றப்படி இது தொடர்பான உண்மை வரலாறு தெளிவாக தமிழ் நாடு அரச குறிப்புகளில் உத்தியோகபூர்வமாக உள்ளது. சமஸ்கிரதத்தில் இருந்து தமிழ் தோன்றியதாக பொய்யான வரலாற்றை தமிழருக்குள் வட இந்தியாவில் இருந்து திணித்ததை தனது துல்லியமான ஆய்வுகள் மூலம் முறியடித்து இந்திய வடபிரதேசங்களின் இந்தோ ஆரிய குடும்ப மொழிக்கும் தென்னிந்திய திராவிட மொழிக்குடும்பத்திற்கும் இடையிலான வேறுபாட்டை ஆதாரங்களுடன் நிறுவி திராவிட மொழிக்குடும்ப மொழிகளின் தனித்துவம் குறித்தும் அவை பிறந்தது தமிழ் மொழியில் இருந்து தான் என்பது பற்றியும் தமிழ் சமஸ்கிரத்தில் இருந்து பிறந்த மொழி அல்ல என்பதையும் நிறுவிய கார்டுவேல் மீதான கோபத்தில் ஆர் எஸ் எஸ் சங்கிகளும் அவர்களின் கைக்கூலிகளும் மேற்கொள்ளும் பொய்பிரச்சாரங்களை நாமறிவோம்.2 points
-
2 points
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது? இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை? இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும். மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர். கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென” என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன? எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே" குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது. "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்." தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும். திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!! ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது. "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;" இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார். மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை] இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்1 point
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன. ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாகக் கூறப்படுகிறது. இரான் வழங்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஃபாத்-360 என்பது 150 கிலோ வெடிபொருட்களை சுமந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஒரு ஏவுகணை. குறுகிய தூரம் தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சுமார் 200 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரஷ்யாவுக்கு வழங்க இரான் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ரஷ்யாவின் ஆயுதப்படையைச் சேர்ந்த பல வீரர்கள் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த இரானில் பயிற்சி எடுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது. மேலும், எதிர்காலத்தில் இந்த ஏவுகணைகள் மூலம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP படக்குறிப்பு, ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக முன்பு எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார் ரஷ்யா ஃபாத்-360 ஏவுகணைகளைப் பயன்படுத்தி யுக்ரேனின் பல்வேறு நகரங்கள் மற்றும் அந்நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற இடங்களைத் தாக்கலாம். இதனால் யுக்ரேனின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டும் அதன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும். "ஃபாத்-360 ஏவுகணை ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள யுக்ரேனிய இலக்குகளைத் தாக்குவதற்கு உதவும். ரஷ்யாவிடம் இதுபோன்ற ஏவுகணை இல்லை," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையைச் சேர்ந்த முனைவர் மெரினா மிரோன் கூறுகிறார். ரஷ்யா இரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் உள்பட ராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதற்காக இரான் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரானை சேர்ந்தவர்களின் மீது, பயணத் தடைகள், சொத்து முடக்கம் ஆகியவற்றுடன் சேர்த்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்குள் நுழைய இரானின் விமானங்கள் மீது கட்டுப்பாடுகள் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிற்கு ஃபாத்-360 போன்ற சுயமாக இலக்கை நோக்கிச் செல்லும் ஆயுதங்களை வழங்குவதை இரான் பலமுறை மறுத்துள்ளது. படக்குறிப்பு, ஷாஹேத்-136 ட்ரோன், நகரங்கள், உள்கட்டமைப்புகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டை சுமந்து செல்ல முடியும். கடந்த 2022ஆம் ஆண்டில் யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து ஷாஹேத்-136 ட்ரோன்களை இரான் ரஷ்யாவிற்கு வழங்கி வருவதாக யுக்ரேன் அரசாங்கம் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளும் கூறுகின்றன. ஷாஹேத் ட்ரோன் அதன் முனையில் வெடிபொருட்களைக் கொண்டுள்ளது. அதோடு, தாக்குவதற்கான உத்தரவு வழங்கப்படும் வரை அது இலக்கைச் சுற்றியே வட்டமடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிக்க முயற்சி செய்ய இந்த ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் ரஷ்ய படைகள் பயன்படுத்துகின்றன. இந்த ட்ரோன்கள், அதிக வெடிபொருட்களைக் கொண்டு அதிக சேதங்களை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பது, யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிப்பது ஆகியவற்றுக்காகப் பயன்படுகின்றன. யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பு 'சிறிய எண்ணிக்கையில்' மட்டுமேரோன்களை வழங்கியதாக இரான் அரசு கூறுகிறது. இருப்பினும், இரான் ரஷ்யாவுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கி வருவதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டின. ஐரோப்பிய ஒன்றியம் இதில் தொடர்புடைய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. வட கொரியா வழங்கும் ஷெல் குண்டுகள், ஏவுகணைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ரஷ்யாவிற்கு மூன்று மில்லியன் ஷெல் குண்டுகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு (DIA) 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ரஷ்யா - யுக்ரேன் போரில் முன்வரிசையில் இரு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் பீரங்கி. இது எதிரி நாட்டின் காலாட்படை முன்னேறித் தாக்குதல் நடத்துவதில் இருந்தும், அவர்களின் ஆயுதங்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. சமீபத்திய மாதங்களில், யுக்ரேனைவிட ரஷ்யாவிடம் 5 மடங்கு அதிகமான ஷெல் குண்டுகளின் இருப்பு காணப்படுவதாக ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனம் எனப்படும் பிரிட்டனை சேர்ந்த ஒரு திட்டக் குழு கூறியுள்ளது. கடந்த 2023அம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில் அதிக பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அந்தத் திட்டக்குழு கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனில் உள்ள கார்கிவ் பகுதியில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வகையான குறுகிய தூர இலக்குகளைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவைக் கண்டுபிடித்ததாகவும், அவை வட கொரியாவால் தயாரிக்கப்பட்டவை என்றும் யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்தனர். அதில் ஒன்று KN-23/ஹ்வாசாங்-11 ஏவுகணை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இது 400 கிலோமீட்டர் முதல் 690 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய குறுகிய தூரம் தாக்கும் ஒரு ஏவுகணை. இதனால் 500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களையும் சுமந்து செல்ல முடியும். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வட கொரியாவுடன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான வர்த்தகத்திற்கு ரஷ்யாவுக்கு ஐ.நா அனுமதி அளித்துள்ளது. வடகொரியா ரஷ்யாவிற்கு 50 ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக யுக்ரேன் உளவுத்துறை கூறுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், யுக்ரேன் மீது நடத்தப்பட்ட குறைந்தது 9 வான் தாக்குதல்களில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ரஷ்ய படையில் வட கொரிய வீரர்களா? கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுத விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்ததாகவும், 2023ஆம் ஆண்டு வட கொரியா ரஷ்யாவிற்கு சோதனைக்காக ஆயுதங்களை அனுப்பியதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு கூறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி யுக்ரேன் மீது ரஷ்யா தாக்கத் தொடங்கியதாகவும் அது கூறுகிறது. "இஸ்கண்டர் போன்ற குறுகிய தூரம் தாக்கும் ஏவுகணைகளைவிட ஹ்வாசாங்-11 ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு மலிவானவை. செலவுகளைக் கணக்கிட்டு ரஷ்யா இதைச் செய்துள்ளது" என்கிறார் முனைவர் மெரினா மிரோன். மேலும், இரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்வது மூலம் ரஷ்யா தனக்கு நட்பு நாடுகள் இருப்பதையும், அது தனிமைப்படுத்தப்படவில்லை என்பதையும் மேற்குலகுக்கு காட்டுகிறது. ஹ்வாசாங்-11 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் அவற்றின் இலக்கை நோக்கி மிக அதிக வேகத்தில் செல்வதால் அதை இடைமறிப்பது கடினம். ஆனால் வட கொரியாவில் இருந்து பெறப்பட்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு யுக்ரேன் இலக்குகளைத் தாக்க ரஷ்யா தவறிவிட்டது. ஏனெனில் அவை மின்னணு பிழைகள் காரணமாகத் திட்டமிடப்பட்ட பாதைகளில் செல்லவில்லை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பவில்லை என்று வடகொரியா கூறுகிறது, வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் எதையும் பெறவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. ரஷ்ய படைகளுடன் வடகொரிய வீரர்கள் இருப்பதைக் கண்டதாக யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சித் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வட கொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் யுக்ரேன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று யுக்ரேனின் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன. யுக்ரேனில், ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார். சீனாவில் ரஷ்யாவின் டிரோன் தொழிற்சாலையா? பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவுக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கி, அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா உதவி வருவதாக, நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் பயன்பாடுகளைக் கொண்ட, அதேவேளையில் ஆயுதங்களை உருவாக்கவும் பயன்படுத்தவல்ல, கணினி சிப்கள் போன்ற ‘இரட்டைப் பயன்பாடுள்ள’ பொருட்களை சீனா வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுகணைகள், டிரோன்கள், ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் ‘உயர் முன்னுரிமை’ கொண்ட இரட்டை பயன்பாட்டுத் தயாரிப்புகளை ஒவ்வொரு மாதமும் சீனா ரஷ்யாவிற்கு அனுப்பி வருவதாக அமெரிக்காவில் இருந்து இயங்கும் சர்வதேச அமைதிக்கான கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது. தனது மொத்த இயந்திரக் கருவிகளில் 70% (ஆயுத உறைகள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்), மைக்ரோ மின்னணு தயாரிப்புகளான சிப்கள், செமி கண்டக்டர்களில் 90% ஆகியவற்றை ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதாக கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அந்த அமைப்பு 2023இல், ரஷ்யா அதன் அனைத்து உயர் முன்னுரிமை வாய்ந்த இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களில் 89 சதவிகிதத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாகக் கூறுகிறது. போருக்கு முன்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அவற்றில் பெரும்பாலானவற்றை வழங்கி வந்ததாகவும் கார்னெகி அமைப்பு குறிப்பிடுகிறது. யுக்ரேன் போர் விவகாரத்தில் தாம் நடுநிலை வகித்ததாகக் கூறி, ஆயுதங்களை உருவாக்க ரஷ்யாவுக்கு உதவுவதை சீனா மறுத்துள்ளது. சீனா ரஷ்யாவிற்கு ஆபத்தான உபகரணங்களை வழங்கவில்லை எனவும், தான் விற்கும் உதிரிபாகங்களில் கவனமாக இருந்ததாகவும் சீனா கூறியுள்ளது. இதற்கிடையே, கார்பியா-3 என்ற புதிய வகை நீண்ட ஆளில்லா விமானத்தைத் தயாரிப்பதற்காக ரஷ்யா சீனாவில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அப்படி எந்தவொரு திட்டத்தைப் பற்றியும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் டிரோன் ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளைத் தனது அரசு கொண்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj9jx0dzm2ro1 point
-
இங்க பயங்கரப் பிரச்சினை என்று. எல்.ரீ.ரீ.ஈ ஆஸ்பத் திரிக்குள்ள நின்று இந்தியன் ஆமியைத் தாக்கினதால, ஆமி உள்ள புகுந்து அவங்களைத் தாக்கினதிலை டொக்ரர்களும் நேர்ஸ்மாரும் கொல்லப் பட்டிட்டாங்களாம்." என்று அவன் சொன்னான். " மண்ணாங்கட்டி, இருபத்திநாலு மணித்தியாலமும் நானும் ஆஸ்பத்திரிக்குள்ள தான் இருந்தன். அப்படி ஒரு வரும் ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து தாக்கேல்ல ..... ஆனால், அவங்களுக்கு நாங்கள் போராளிகளை, இங்கே வைத்து வைத்தியம் செய்யிறோம் என்று சந்தேகம் .....! அது தான் இப்படிச் செய்திருக்கிறாங்கள். வாற வழியில உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. இந்தியன் ஆமியைச் சந்திக்க வில்லையே?" பக்கத்தில் நின்ற இன்னுமொருவரைச் சுட்டிக் காட்டிய படி 'நானும் இவரும்தான் கே.கே.எஸ்.இல் இருந்து வந்தனாங்கள். இவரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தங்கட சொந்தக்காரரின்பாடு என்னவோ என்று பார்க்க வந்தவர். நாங்கள் றோட்டால வர இல்லை ஆமிக்காரன் வந்த மாதிரி ஒழுங்கைக்குள்ளாலையும், வளவுகள், தோட்டங்களுக்குள்ளாலையும் தான் வந்தனாங்கள். எல்லா இடமும் ஒரே பிண நாத்தம். நல்ல காலம் நாங்கள் ஒரு இடத்தில தப்பினதே அருந்தப்பு......!" ..ஏன் ஆமி சுண்டிட்டானா..?" “இல்லை. ஒரு வீட்டுக் கோடிக்குள்ள ஒரு வயசு போன கிழவரின் பிணத்தைச் சுத்தி நாலைஞ்சு நாய்கள் திண்டு கொண்டு நிண்டுதுகள் .... அந்தப் பக்கம் ஆட்கள் யாருமே இல்லை! அதுகளுக்கெல்லாம் நல்ல பசி போல... நாய்கள் எங்களைக் கண்டிட்டு அந்த மனிசன்ர பிணத் தைத் தின்ற ருசியில எங்களுக்கு மேல பாயத் தொடங்கிற்றுதுகள். நல்ல காலம்! வேலிக் கம்பை முறிச்சு அந்த நாய்களை அடிச்சி விரட்ட நாங்கள் பட்ட பாடு?…”என்று சொல்லிக் கொண்டு போனவன் தன் பேச்சை நிறுத்தி, “அக்கா! உனக்கு விஷயம் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினான். " என்னடா .....?" “அக்கா! அந்த உடுவில் அன்ரி மிஸிஸ் சிவபாதம் அவங்கள் எல்லாரும் குடும்பத்தோட சரி ..." “ஏனடா?" "காரணம் ஒண்டும் தெரியாது முத்தத்தில இருந்து அரிசி கழுவிக் கொண்டிருந்த அவவை, றோட்டில நின்ற ஆமிக்காரன் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். மனுசி போகவே, பின்னால பிள்ளைகள் மூன்று பேரும் போயிருக்குதுகள். அதுகளுக்குப் பின்னால அன்ரியிட தாய்க் கிழவியும் போயிருக்கிறா. அவ நல்ல படிச்சவ தானே......! இங்கிலிஷ் எல்லாம் நல்லாய் பேசுவாதானே. அப்படியிருந்தும் ஒன்றும் விசாரிக்க இல்லையாம்... மதிற் சுவரோட ஐந்து பேரையும் வரிசையா நிற்க வைச்சு அப்படியே ஓட்டோவில விட்டு மெஷின் கண்ணால சுட்டிருக்கிறாங்க. கிழவியும் மூத்த பெடியனும் அந்த இடத்திலேயே சரி ...... அவங்களுக்கு உதவி செய்ய யாருமே போக இல்லை. ஆமிக்காரன் போன பிறகு தான்.... மற்ற மூண்டுபேரும் தவண்டு தவண்டு ஒழுங்கைக்குள்ள போயிருக்குதுகள் ... இளைய மகனும் பிள்ளைகளும் பின்னால் தவழ்ந்து வருகுதுகள் தானே .......! என்ற நினைப்பில் அந்த அன்ரி முன்னுக்கே போயிற்றா. ஆனால், அந்தப் பிள்ளைகள் அவளைத் தொடர்ந்து போக முடியாமல் நடுவழியிலேயே இரத்தம் வெளியில் போய் செத்துட்டுதுகளாம். இவவுக்கும் ஒழுங்கைக்குள்ள வந்த உடனேயே அறிவு மயங்கிற்றுதாம் ...... அதனால். பிள்ளைகள் பற்றின தகவலை இவவைக் காப்பற்றின சனங்களுக்கு சொல்ல முடியாமல்ப் போயிற்றுது. அவ, சீரியசா இருந்து இப்ப ஆபத்து இல்லை என்று சொல்லினம். சங்கானை ஆஸ்பத்திரியில இருக்கிறாவாம்......" அந்த அன்ரியையும் பிள்ளைகளையும் நினைத்துக் கொண்டேன். இந்தியாவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தையும், 'உணவுப் பொட்டலம்' போட்ட அன்று அவவும் அந்தப் பிள்ளைகளும் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்த காட்சியையும், இந்தியப் படையினர் அவர்கள் வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்லாம், அவர்கள் கைகாட்டி மகிழ்ந்து செய்த ஆரவாரங்களையும் நினைத்தேன். எல்லாம் போயிற்று. அண்டைக்குத் தீபாவளி நாளில் எங்கள நரகாசுரன்களாகவும் தங்கள கண்ண பிரான்களாகவும் நினைத்து இப்படிச் சங்காரஞ் செய்தாங்களே....... ! பெருமூச்சு ஒன்று தான் விட முடிந்தது. "தம்பி நீ கெதியில கவனமாய் வீட்டை போய் சேரு. அங்க பாட்டியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருப்பினம். இன்னும் ஒரு கிழமையால வா..! அதுக்குள்ள நான் லீவு கேட்டு ஆயத்தமாய் இருக்கிறன். நீ வந்த பிறகு உடனே லீவு போட்டிட்டு வாறன் அதுகளை கவலைப் படாமல் இருக்கச் சொல்லு. இப்ப எல்லாம் நோமலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கு. இனிப் பிரச்சினையில்ல. நீ போறது தான் கவனம். வந்தபோது நாய்களிட்ட மாட்டுப் பட்ட மாதிரி ஏதும் ஆபத்தில மாட்டப் போறாய்." "அது தான் அக்கா யோசனையாய் இருக்கு. வந்த வழியால போகவும் பயமாய் இருக்கு. வேற எந்த வழியால போறது ? என்று தீர்மானிக்கவும், முடியாமல் இருக்கு. ஏனென்றால் கம்பெஸ் பக்கமெல்லாம் சரியான பிரச்சினையாம். அங்க பிரம்படி ஒழுங்கையில் பொதுமக்களைச் சுட்டிட்டு, டாங்கிகளை ஆக்களுக்கு மேலால எல்லாம் ஏத்திக் கொண்டு போயிருக்கிறாங்கள். அந்தச் சில்லுகளுக்குக் கீழ நசுங்கி அப்பிடியே சனங்கள் சப்பளிஞ்சு போயிற்றாங்களாம்." எனக்கு கேட்கக் கேட்கத் தலையை என்னவோ செய்தது ! " சரிசரி...... நீ கவனமாய் போயிற்று வா!!" என்று சொல்லி அனுப்பி விட்டு கடமைக்காகத் திரும்புகின்றேன். என் கண்களுக்குச் சடலங்களை எரித்த சாம்பர்த் தடங்கள் வரிசையாகத் தெரிகின்றன. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஏன் .....? கேணல் ப்றார், டொக்ரர் சிவபாதசுந்தரத்தைச் சுட்டதற்கான காரணத்தைச் சொன்னாரே !" " ஒரு டொக்ரர். வயதாளி. டொக்ரருக்கான சீருடையுடன் - கையில் 'ஸ்தெதஸ்கோப்புடன்' நின்றவரை அடையாளம் தெரியாமலா உங்கள் சிப்பாய் சுட்டான்? " என்று எங்கள் டொக்ரர்கள் கேட்டதற்கு ... கேணல் ப்றார் சொன்ன பதில்! “யுத்தத்தில் எதுவும் நடக்கலாம்." யுத்தமா......? இவர்கள் யாருக்கு எதிராக யுத்தம் செய்ய வந்தவர்கள்...... ! தமிழரைப் பாதுகாக்கத்தான் வந்தவர்கள் என்றார்களே! அப்படிச் சொல்லித்தான் உணவுப் பொட்டலமும் போட்டார்களே? திலீபனைக் காப்பாற்றினார்களா......? அவர்களது பொறுப்பில் இருந்த பதின்மூன்று போராளிகளைக் காப்பாற்றினார்களா ......? எங்களைக் காப்பாற்ற வந்தவர்கள், எங்கள் எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எம் மக்களை அல்லவா கொன்று குவித்து விட்டார்கள். அன்று முதல் நாம் இந்தியாவில் வைத்திருந்த விசுவாசத்தையும் கொன்றுவிட்டார்கள் ! அந்தச் சர்மா சொன்னானே 'Belive Indian' என்ற அந்த நம்பிக்கைக்கு இவர்கள் செய்த கைமாறு இதுதானா? இவர்கள் செய்யும் யுத்தம். தமிழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கும் போராளிகளை தமிழ் மக்க ளிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக இடம் பெறும் யுத்தம்......! மக்கள் அஞ்சி நடக்க வேண்டும்; போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பதனாற்தானே நாம் இத்தனை கொடுமைகளுக்கும் உள்ளாகிறோம் என்று உணர்ந்து விட்டு ஒதுங்க வேண்டும்! அவர்களை தமது துன்பங்களுக்குக் காரணமான போராளிகளைப் பொதுமக்கள் தாமாகவே காட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்காக இராணுவம் இத்தகைய ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டத்தைச் செய்வது தான் இராணுவத் தர்மமாம்! இராணுவம் கொலை செய்யலாம் கொள்ளையடிக்கலாம் கற்பழிக்கலாம் எதுவும் செய்யலாம். இதனையெல்லாம் இராணுவ தர்மம் அனுமதிக்குமாம். தர்மத்திற்குப் பேர் போன இந்தியா. ஜே. ஆரின் தார்மீக அரசின் ஆதரவோடு அந்தத் தார்மீகச் செயல்களையே செய்து கொண்டிருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் இவர்களது எதிர்பார்ப்புக்கு முழுமையும் எதிராகவே திரும்பி உள்ளன என்பதை இவர்கள் அறியும் காலம் விரைவில் வரும்! ஒரு காலத்தில், " இந்தியாவே! நீ எப்பொழுது வரப் போகிறாய்?" என்று காங்கேசன்துறைக் கடற்கரையில் நின்று கூவி அழைக்க நினைத்த என் வாயால் இந்தியனே! நீ எங்கள் நாட்டைப் பிடித்த பீடை. எப்பொழுது எம்மை விட்டுத் தொலையப் போகிறாய்......? என்று உரத்துக்கூவ வேண்டும் போல் இருந்தது. 'வெள்ளையனே வேளியேறு! " என்று கோஷமிட்டுச் சுதந்திரப் போர் நடத்திய இந்தியனை இந்தியனே வெளியேறு!" என்று ஈழத் தமிழர் கோஷமிட்டுக் கலைக்க வேண்டிய காலமிது என்பதை என் மனம் உறுதியாக நம்பியது. சிறுவயதில் நான் கற்பனை செய்த எம் ஜி. ஆர். அண்ணாத்துரை, காந்தீயம்; இந்திய சுதந்திரப் போராட்டம்..... மிராஜ் விமானம். உணவுப் பொட்டலம் சர்மா...... எல்லாரும் என் மனதில் வந்து போகின்றார்கள். நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுத்து வேள்விகள் செய்வார்கள். இவர்கள் எமது தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு அமைதியை பெற்றுத் தரவந்தவர்கள். அதற்காகத் தான் இவர்கள் எங்களையே பலிப் பொருளாக்கி அமைதி வேள்வி செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவின் கரங்களை, அணைக்கும் கரங்களாக நினைத்திருந்தேன்......! ஆனால், அக்கினிக் கரங்களாக அவை எம்மைச் சுட்டுக் கருக்கிவிட்டன ! நான் நடந்து கொண்டிருக்கின்றேன் .. எனது ஒவ்வொரு அடியும் வெறுப்போடு தரையில் பதிகின்றது...! எனது நம்பிக்கைகள் அவற்றுள் மிதிபட்டு நசிகின்றன.1 point
-
கோப்பை வென்ற நியுசிலாந் மகளிர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் ஒவ்வொரு காணொளிகளையும் பார்க்கும் போது நியுசிலாந் மகளிரின் சந்தேஷத்தை பார்க்க முடியுது..............................1 point
-
கே.கே. எஸ் இல் இனி இருக்கமுடியாது என்ற நிலைமை ஆகியிட்டது. துறைமுகத்தில் இருந்து தங்களது அரண்களை இராணுவம் விஸ்தரித்துக் கொண்டே வந்தது. அல்லாமலும் பலாலியில் இருந்து கே. கே. எஸ் வரையும் இராணுவம் ரோந்து போகும் வேளையிலே வீதிக்கரையில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் புறப்பட்டு வெகு தூரம் ஓடுவதும் அவர்கள் போன பின்னர் மீண்டும் வந்து வீடுகளில் இருப்பதுவும் நாளாந்த நிகழ்வாகி விட்டது. அவர்கள் வரும் வீதிகளில் போராளிகளின் கண்ணி வெடித் தாக்குதல் ஒன்றிரண்டு இடம்பெற்றால் இராணு வம் தனது ரோந்து அணியை மூன்றாகப் பிரித்து ஒரு பிரிவு வீதியால் வரவும், மற்றைய இரண்டு பிரிவுகளும் வீதிக்கரையின் இரண்டு பக்கங்களில் உள்ள வளவுகளின் ஊடாக வேலியை வெட்டியும், மதில்களை உடைத்தும் வரத்தொடங்குவர். சில வேளைகளில் குறிப்பிட்ட இடங்களைச் சுற்றி வளைத்துக் காவல் நிற்கவும் தொடங்குவர். சில சமயம், இராணுவம் வருகிறது என்று நாம் அறிந்து வீடுகளைப் விட்டுப் புறப்படும் முன்னரே அவர்கள் அண்மித்து விடுவதால், வெளியேறப் பயந்து கதவுகளை அடித்துப் பூட்டிவிட்டுச் சாவித்துவாரங்களூடாகவும் - சன்னல் இடைவெளிகளூடாகவும் இதயம் படபடக்கப் பார்த்துக் கொண்டிருப்பதும் உண்டு. அப்படியான ஒருநாளில் எங்கள் வீட்டைச் சுற்றிக் கொண்டு இராணுவம் நிற்கின்ற பொழுது எனது பாட் டிக்கு அடக்க முடியாத தும்மல் தொடங்கவே நாங்கள் பட்டபாடு இருக்கிறதே...! பாட்டியின் முகத்தைத் தலையணைக்குள்ளே அழுத்தி தும்மச் செய்து ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டோம். இன்னுமொருமுறை இராணுவம் அண்மித்து வந்து விட்டது என்பதை அறிந்ததும் எப்படியோ ஓடிவிட்டோம். அவர்கள் சென்றதன் பின்னர், மீண்டும் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதையும் றேடியோ', 'ரீ.வி' முதலான பொருட்கள் அடித்து நொருக்கப்பட்டிருப்பதையும் கண்டோம். இந்த நிலையில் பிள்ளைகளையும் பாட்டியையும் வீட்டிலே விட்டு, நான் யாழ்ப்பாணம் வேலைக்கு வருவதும்... தங்குவதும் அந்த நாட்களில் அமைதியிழந்து ..... என் கட மையில் ஈடுபட முடியாமல் அந்தரிப்பதும் வழக்கமாகி விட்டது. "இந்தப் பிரச்சினைகள் எதற்கு......? ஓரளவு அமைதி ஏற்படும் வரையாவது என்னோடு கொழும்புக்கு வந்து இரு, பிள்ளைகளின் படிப்பும் கெடாது!" என்று எனது கணவர் எழுதும் கடிதங்களில் எல்லாம் வற்புறுத்தி கொண்டே வருகின்றார். அனைத்து விடயங்களிலும் என் கணவரோடு ஒத்துப்போகும் என்னால் இந்த விடயத்தில் மட்டும் ஒத்துப்போக முடியவில்லை. இருபத்திரண்டு வருட சேவைக் காலத்தில் பதினைந்து வருடங்கள் யாழ்ப்பாணம் தவிர்ந்த மலையகம், சிங்கள மாவட்டங்களிலும் வேலை செய்த அனுபவம் எனக்கிருந்ததால் அங்கு போய் வாழ்வதில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை.ஆனால், இப்பொழுது இந்த மண்ணி நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கால கட்டமிருக்கிறதே...! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த மண்ணைவிட்டு வெளியேறுவது என்பது என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலைதான், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை மாணவர்கள் செயன்முறைப் பயிற்சி பெறும் போதனா வைத்திய சாலை. நான் இங்கு கடமை செய்யத் தொடங்கி இந்த ஏழு வருடங்களுக்குள்ளும் எத்தனை வைத்திய மாணவர்கள் டொக்ரராகப் பட்டம் பெற்று வெளியேறிவிட்டார்கள்! அப்படி வெளியேறியவர்கள் எல்லாம் இன்று எங்கே..? இரத்த ஆறு பெருகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் எம் மக்களையும் போராளிகளையும் காப்பாற்ற வேண்டியவர்கள் எங்கே ..? பட்டம் பெற்று முடித்ததும்.. இங்கு பணிபுரியப் பயந்து. இங்கு பெற்ற பட்டத்தைக் கொண்டு வெளிநாடு களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று சிலர் வெளிநாடுகளுக்கே தப்பிப் பறந்து போய்விட்ட சம்பவங்களை கேள்விப்படும்போது வெட்கமாக இருக்கின்றது ! வேறு சிவர் இங்கு எம்.பி.பி. எஸ். பட்டம் பெற்றுவிட்டு வெளிநாடுகளில் சென்று தமது கல்விக்கும் தகைமைக்கும் பொருத்தாத கூலிகளாக வேலை செய்வதாகக் கேள்விப்படும் போது எத்துணை வேதனையாக இருக்கின்றது! "இந்த மண்ணிலே வாழ்வோம். இந்த மண்ணின் மக்களுக்கே பணிபுரிவோம்." என்ற வைராக்கியத்துடன் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் வைத்தியர்களுடன் பணிபுரிவதில் கிடைக்கும் நிறைவு இருக்கிறதே......! அதற்கு ஈடாக எதையுமே கூறிவிட முடியாது. எனது சேவை வாழ்வின் ஆரம்ப காலங்களின் பெரும்பகுதியைப் பிற இடங்களில் கழித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்தக் காலத்தில் இங்கு பணியாற்றக் கிடைத்த பேறு சாதாரணமானதா.....? இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள், இந்த ஆபத்தான வேளைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியர்கள்- தாதியர்-சிற்றூழியர்களைத் தெய்வத்திற்கு அடுத்தபடியாக நன்றியுடன் நோக்கும் பார்வை இருக்கின்றதே...... ! அது ஒன்றே போதும் ....! நாம் வாழ்நாள் முழுதும் செய்த பாவங்களைக் கழுவிக் கொள்வதற்கு. இத்தகைய ஒரு சூழலில், இக்கட்டான நிலையில் ஏனையவர்களைப் போல உயிருக்கு அஞ்சி ஓடுவதை என் மனம் ஒப்பவில்லை. இது எனக்கு எப்படி ஏற்பட்டது......? நிச்சயமாக நான் படித்த புத்தகங்கள் கற்பித்த பாடங்கள் இது என்று தான் நினைக்கின்றேன். "நிற்க அதற்குத் தக!'' என்ற வள்ளுவம் எனக்கு வழிகாட்டி வற்புறுத்திக் கொண்டிருக்கின்றது, எனவே தான்,எனது கணவரது கோரிக்கையை என்னால் நிறைவு செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால், அவர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொழும்பிலிருந்து வந்து போய் கொண்டிருக்கின்றார். ஆனால், ஒரு விடயத்திற்கு நான் பயந்தே ஆகவேண்டியிருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் இருவரும் வளர்ந்து விட்டார்கள்! திருமணம் ஆகாமலே என்னுடன் வீட்டில் தங்கியிருக்கும் இருபத்தியெட்டு வயதான தம்பி. இவர்களையும் வைத்துக்கொண்டு கே.கே.எஸ்.இல் தொடர்ந்து எப்படி இருப்பது ...... ? என்றைக்காவது ஒரு நாள் அவர்களது சுற்றிவளைப்புக்குள் இவர்கள் அகப்பட்டுக்கொண்டால் நிலைமை என்ன ஆவது......? ….. இப்படியெல்லாம் நான் பயந்து கொண்டிருந்த போது தான் ஒருநாள், அந்தப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. அன்று நாம் எதிர்பாராத வேளையில், இராணுவம் ரோந்து வந்தது. ' அமெரிக்கன் மிஷன்' பாடசாலைக்கு அண்மையில் கண்ணிவெடி ஒன்றின் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகளின் பிளிறல்கள்.....! நாம் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினோம். இதற்கிடையில் பலாலி இராணுவ முகாமுக்குச் செய்தி கிடைத்து, ஹெலிக்கொப்ரர் ஒன்று வேட்டுகளைக் கக்கிய வண்ணம் எமக்கு மேலே பறக்கத் தொடங்கியது. எங்களோடு இன்னுமொரு இளம் கர்ப்பிணிப் பெண் ஒரு கையிலே இரண்டு வயது குழந்தை வேறு மறு கையிலே ஒரு சிறிய துணிப்பை. வயிற்றுச் சுமையோடு கைச்சுமையையும் சுமந்து, ஓடி வர முடியாமல் அவள் ஒரு இடத்தில் இடறி விழுந்து விட்டாள். எங்களோடு ஓடி வர முடியாமல் பாட்டி வீட்டிலேயே தங்கி விட்டார். வயதான அவரை, இராணுவம் ஒன்றும் செய்யாது என்ற அசட்டுத் துணிவில் விட்டு வந்துவிட்டோம். கீழே விழுந்த அவளையும் பிள்ளையையும் தூக்கி அழைத்துச் செல்வதற்குள் பெரும் பாடாகி மேலே சுட்டபடி பறந்து கொண்டிருக்கும் ஹெலி…. கீழே நாங்கள். என்னையும் அவளையும் விட்டு ஓடமுடியாத பிள்ளைகள். என் தம்பி கூட அன்றைய தினம் எங்களோடு இல்லை. எங்கேயோ போயிருந்தான். சுமார் ஒரு மணி நேரம் நாம் பட்டபாடும் பெற்ற அனுபவமும் போதும் என்றாகிவிட்டது. எனவேதான், இனியும் அங்கு தொடர்ந்து இருப்பது மடமை. அங்கிருந்து புறப்படுவது என்று முடிவெடுத்தோம்! நல்ல காலமாக உடுவிலில். எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். அங்கே எல்லாம் இராணுவம் வரும் என்ற அச்சம் எதுவுமில்லை. மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் மகளுக்கும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் மகனுக்கும் படிக்க இடங்கள் கிடைத்து விட்டன. கே. கே. எஸ். இல் இருந்து யாழ்ப்பாணம் வேலைக்குப் போவதிலும் இப்பொழுது உடுவிலில் இருந்து வேலைக்குப் போவது.... எட்டு மைல்கள் குறைவாக இருந்தது. இன்னும் இலகுவாயிருந்தது ! நீண்ட காலமாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிசயம் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நிகழ்ந்தது. "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்குகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகத்தை நாங்கள் நேரடியாகவே செய்யப் போகின்றோம்" என்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தியா, இலங்கைக் கடல் எல்லை வரை வந்து திரும்பிய சம்பவம் நடைபெற்றது. இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. கடல்வழியை இலங்கைக் கடற்படை மறித்து, "இந்தியாவில் உள்ளவர்களுக்கே கொண்டு சென்று விநியோகியுங்கள்!" என்று திருப்பி அனுப்பிய செயலும், பொறுமையோடு இந்தியப் படகுகள் திரும்பிச் சென்றதும் எனக்கு வியப்பைக் கொடுத்தன. இந்தியா எத்துணை பெரிய நாடு! பெரும் வல்லரசான சீனாவையே விரட்டி அடித்த வலிமையுள்ள நாடு. கேவலம்! சிறீலங்கா சுண்டெலி அளவில் இருந்து கொண்டு அவர்களோடு வீராப்புப் பேசியிருக்கிறதே...! இந்தச் சுண்டெலிக்கு அஞ்சியது போல் இந்தியாவும் பேசாது, திரும்பிப் போயிருக்கிறதே! இதில் சிறீலங்கா தன் பலமறியாது நடந்து கொண்ட அறியாமையை நினைத்துச் சிரிப்பதா......? அல்லது மௌனமாகச் சென்ற இந்தியாவின் பெருந்தன்மையை எண்ணி வியப்பதா? என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், ‘பெருக்கத்தில் வேண்டும் பணிவு’ என்பதற்கு உதாரணமாக இந்தியா நடந்து கொண்டிருக்கிறது. "இந்தியா, இது விடயத்தில் இனியும் மௌனமாக இராது. பதில் நடவடிக்கை எடுத்தே தீரும்!" என்று நிச்சயமாக நான் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை! அன்று பகல் ஓய்வு நாள் என்பதால் வேலைக்கும் போகவில்லை. சமையல் எல்லாம் முடிந்த பின்னர், சற்றுத் தொலைவில் மருதனாமடம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இடம் பெயர்ந்து வந்திருக்கும் கே. கே. எஸ் ஐச் சேர்ந்த குடும்பம் ஒன்றைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்த மிஸிஸ் சிவபாதம், ஒரு கிறீஸ்தவப் பெண், படித்த பெண். அவளுக்கு இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும். பெண் உடுவில் மகளிர் கல்லூரியில் ஜீ. சீ. ஈ. படித்துக் கொண்டிருந்தாள். மூத்த பையனும், கடைசிப் பையனும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் மட்டக்களப்பில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் வேலை. வீட்டுக்கார அன்ரியின் தாயாரும் அவர்களுடனேயே இருந்தார். படித்த பண்பான குடும்பம். பழகுவதற்கு இனியவர்கள். கே. கே. எஸ் நண்பர்களை சந்திக்கப்போன நாங்கள் அந்தக் குடும்பத்தினருடனும் நட்பை வளர்த்துக் கொண்டோம். அன்றும் கூட அந்த அன்ரியுடன்தான், சிறீலங்கா கடற்படை இந்தியாவுடன் வாலாட்டியதைச் சொல்லி வியந்து கொண்டிருந்தேன் என்னை விட மிஸிஸ் சிவபாதம் இந்தியாவின் மீது அபார நம்பிக்கை கொண்டிருந்தபடியால் இதைப்பற்றிப் பேசுவதே சுவையாக இருந்தது. திடீரென்று என் தம்பி அங்கு விரைந்து வருவதைக் கண்டேன். வந்தவன் உற்சாகத்துடன் கூறினான். " அக்கா இப்ப லேற்ரஸ்ற் நியூஸ் என்ன தெரியுமா? இந்தியா - யுத்த விமானங்களின் காவலுடன் உணவுச் சாமான் ஏற்றிய விமானங்களையும் யாழ்ப்பாணத்துக்கு விநியோகம் செய்ய அனுப்பி வைச்சிருக்காம். தம்பி அந்தச் செய்தியைச் சொல்லி வாயை மூட வில்லை. எங்கள் ஆச்சரியத்தை நாம் வெளிப்படுத்தக் கூடவில்லை. அதற்குள் வானமே இடிந்து விழுவது போன்ற பேரொலி. சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்த்தோம். அங்கே ..! அந்தக் காட்சியை எப்படி வர்ணிப்பேன் வானத்தில் நான்கு விமானங்கள் சேர்க்கஸ் விளையாட்டுக் காட்டிக் கொண்டு இந்தியாவின் யுத்த விமானங்கள் தாம் அவை என்பதைப் பின்னர் அறிந்தோம். செங்குத்தாக மேலே எழுவதும் அதே பாணியில் கீழே குத்தென வருவதும் பக்கமாகப் புரள்வதுமாக அவை வான வேடிக்கை நிகழ்த்தி நகர்ந்து கொண்டிருக்க அமைதியாக மூன்று விமானங்கள், சீரான வேகத்தில் எங்கள் தலைகள் மீது மிதந்து சென்றன! எம்மைத் தாண்டிச் சற்றுத் தொலைவில் சென்றதும். வான தூதர் செட்டைகள் விரித்து இறங்குவதுபோல் அந்தக் கப்பல்களிலிருந்து பரசூட்களில் பொதிகள் பூமியை நோக்கி மிதந்தபடி வந்தன. பைபிளிலே 'கானான் நாட்டில் இஸ்ரவேல் மக்களுக்கு இறைவன் 'மன்னா" எனும் அப்பத்தை வானில் நின்று பொழிந்ததாகச் சொல்லப்படுகின்றதே! அந்தக் காட்சி கூட இப்படித் தான் நிகழ்திருக்குமோ…? எங்களுக்கு இருந்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. "இந்தா..இந்தியா வந்திற்றான். இனிக்கவலை இல்லை என்று மிஸிஸ் சிவபாதம் சந்தோஷத்தால் கத்தினார். எனக்கு வார்த்தைகளே பிறக்கவில்லை கண்கள் ஆனந்தக் கண்ணீரை வடித்தன. மிஸிஸ் சிவபாதத்தின் பிள்ளைகள் ஆர்ப்பரித்துக் கைதட்டித் துள்ளிக் குதித்தனர். "இந்தச் சத்தமொன்றே போதும், பலாலி முகாமில் இருக்கிற ஆமிக்காரனுக்கு வயிற்றைக் கலக்கி காற்சட்டையோடு போயிருக்கும்.'' என்றான் அவரது மூத்த பையன். அதைக் கேட்டு நாமெல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தோம் அவை இந்திய விமானங்கள் என்பதை அறியாத பலர், சிறீலங்காவின் குண்டு வீச்சு விமானங்கள் என்று அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் ஓடியவர்களும், நிலத்திலே குப்புற விழுந்து படுத்துக் கொண்டவர்களுமாக அல்லோல கல்லோலப் பட்டனர். அனைவருக்கும் உண்மை தெரிந்ததன் பின்னர் ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கின்றதே ... அப்பப்பா ! அதை விபரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ..!1 point
-
உக்கிரேன் அதிபர் உக்கிரேனுக்கு நேட்டோவில் அனுமதி அல்லது அணுவாயுதம் வழங்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார், அதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என நம்புகிறார், கடந்த காலத்தில் இரஸ்சிய உக்கிரேன் சமாதான உடன்பாட்டிலிருந்து உக்கிரேன் அதிபர் விலகுவதற்கு மேற்கினால் வழங்கப்பட்ட உறுதி மொழிதான் காரணம் என கூறப்படுகிறது, ஆனால் அதில் கூறப்பட்ட பகிரங்கமாக கூற முடியாத ஏதேனும் உறுதி மொழிகள் உக்கிரேன் அதிபரிடம் துருப்பு சீட்டாக இருக்கலாம் அதனாலேயே உக்கிரேன் அதிபர் மேற்கிற்கு ஆணையிடும் நிலை காணப்படுகிறது (அல்லது வேறு ஏதாவது இருக்கலாம்). மேற்குடன் நட்புறவாக உள்ள தென் கொரியா தற்போது பலிக்கடாவாக போகிறது போல இருக்கிறது. இங்கு ஒரு தரப்பு மாத்திரம் இப்படி பொறுப்பில்லாமல் செயற்படவில்லை மறுதரப்பும் இரஸ்சியா இல்லாமல் உலகம் இல்லை என கூறுகிறது. அமெரிக்க தேர்தலில் தற்பொதுள்ள நிலவரப்படி ட்ரம்ப் ஆட்சிக்கு வருவார் என கூறுகிறார்கள், ட்ரம்ப் மூலம் மீண்டும் போர் பதற்றங்கள் தணிந்த உலகம் வரவேண்டும் என விரும்புகிறேன் (ட்ரம்பின் ஆதரவாளன் அல்ல) இரு வல்லாதிக்கங்களின் அதிகாரப்போட்டியினால் உலகம் அழிவின் விழிம்பில் உள்ளது.1 point
-
ஜனாதிபதியின் செயலாளர் இந்திய, சீன உயர்ஸ்தானியர்களை ஒரே நாளில் சந்தித்துள்ளார், இதனை இலங்கைதான் ஏற்பாடு செய்திருக்கலாம் என கருதுகிறேன், இதன் மூலம் இந்தியாவிற்கு இலங்கை ஒரு தெளிவான செய்தியினை சொல்ல முயல்கிறது போல இருக்கிறது, அது இந்தியா மற்றும் சீனாவுடன் இணைந்து பயணிப்பது என்பது போல ஒரு தோற்றத்தினை உருவாக்குவதாகும், ஆனால் இந்த புதிய அரசு இந்தியாவினை விட சீன அரசிற்கு நெருக்கமான அரசாக உள்ளது. இந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியாது என்பதான செய்தியாகவும் இருக்கலாம். இனிவரும் காலங்களில் இந்திய தூதுவர்கள், தமிழ் அரசியல்வாதிகளின் சந்திப்பு தற்செயலாக நிகழ வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்😁.1 point
-
இதை நீங்கள் துரை @வாலி இடம் அல்லவா வினவ வேண்டும்?1 point
-
1 point
-
இவர் தீவகத்தை பிறப்பிடமாக கொண்டவர் என எண்ணுகிறேன். தொழிலுக்காக கொழும்பு யாழ் என திரிகிறார்.துணைவியாருடன் கொழும்பிலே வசித்தவராயிருக்கும்.1 point
-
1 point
-
ஓம் அண்ணா. நானும் இதைத் தான் நினைத்தேன். மிகவும் கவலையான விடயம். சோழியன் அண்ணாவின் பிள்ளைகள் இந்த துயரங்களை கடந்து நன்றாக வாழ வேண்டும்.1 point
-
நேரம் பொன்னானது. யாழில் உள்ள மிக மட்டமான கருத்தாளருடன் என் நேரத்தை செலவழிப்பதை விட செய்வதற்கும் வாசிப்பதற்கும் வேறு நல்ல விடயங்கள் உள்ளன. டொட்.1 point
-
இதை ஆங்கிலத்தில் fonication என்று சொல்வார்கள். அதாவது வேசித்தனம்! எப்பிடியும் வாழலாம் என்று வந்தாப்பிறகு முழங்கால் நனைஞ்சால் என்ன முக்காடு நனைஞ்சால் என்ன! எமகென்று சில values இருக்கின்றது! விரும்பினால் பின்பற்றலாம். விரும்பாது போனால் நாண்டுகொண்டு நிற்கலம்!1 point
-
சும்முக்கு... மனித நேயமாவது, மண்ணாங்கட்டியாவது. 😎 சிங்களத்தின் அதிரடிப்படையுடன் ஊருக்குள் 32 பல்லையும் காட்டிக் கொண்டு வலம் வந்து பந்தா காட்டுவதற்காக, தன்னை கொல்ல சதி என்று.. ஊனமுற்ற முன்னாள் போராளிகளை மீண்டும் சிறையில் அடைக்க எந்த மனிதனாவது யோசிப்பானா? பெரும்பாலான கள்வர்கள்... சாகும் மட்டும் கள்ளக் குணத்துடனேயே இருப்பார்கள். 😂 அதுகள்... திருந்துறது எண்டால், கல்லில் நார் உரிக்கிறதுக்கு சமன். 🤣1 point
-
சும்முக்குள் மனித உணர்வு இருந்தால் இப்போதாவது ஒதுங்கித் தன்னைச் சுயவிமர்சனம் செய்தகொண்டு நேர்மையாளனாக மாறலாம் அல்லவா? மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான நோக்கம் இருந்தால், தமிழ்தேசிய நீக்கம்தான் உண்மையான நோக்கமென்றால் மாறவாய்ப்பில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
யூற்ரூப்பர்களுக்கு வேலை வந்துவிட்டது. இனியென்ன.. ஒரே அலப்பறைதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
அதென்ன பழக விடுவீர்களா?நடவடிக்கையில் இறங்குவீர்களா எனும் கேள்விகள்? 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைத்து அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கை செலுத்தும் அளவுக்கு மூடன் கிடையாது நான். மிகச் சிறந்த கல்வியும், அறிவும், சமூக பிரக்ஞையுடனும், பிரச்சனைகளை நேராக எதிர்கொள்ளும் துணிவுடனும் என் பிள்ளைகள் வளர்கின்றன. சில விடயங்களில் அவர்களின் கருத்தையும் ஆலோசனைகளையும் நான் கேட்கும் நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே அவர்களின் தெரிவுகளில் என் செல்வாக்கு அவசியம் இல்லை.1 point
-
தன்னை அழிக்கும் இனத்திற்கு தானே வாக்களித்து.....வாக்களிப்பட்டவனாலேயே அழியும்/ அழிந்த இனமென்றால் அது தமிழினம் மட்டுமே.1 point
-
டம்மியாக ஒருத்தரை இறக்கியிருப்பினும், தேர்தலை பகிஸ்கரித்து இருப்பினும் மகிந்தவின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்து இருந்திருக்கும். மகிந்தவுக்கு அடுத்ததாக இருந்தது சரத் தான். நான் நினைக்கிறேன் 40 வீத வாக்குகள் கிடைத்தன என. எனவே வெல்லக்கூடிய ஒருவர் என அவரை நினைத்தனர். இம் முறையைத் தவிர,எப்போதுமே இரு முனைப் போட்டியாக இருந்து வந்த தேர்தல் என்பதால், மகிந்தவை வர விடாமல் செய்ய இரண்டாம் நிலையில் இருந்தவரை ஆதரித்தனர். ஒரு பேயை விரட்ட இன்னொரு பிசாசை ஆதரித்தனர்.1 point
-
கண்டிப்பாக! நீதிமன்றம் மரண தீர்ப்பளித்த ஒரு குற்றவாளிக்கு, அந்த தீர்ப்பை சவாலுக்கு உட்ப்படுத்தும் வகையில் கோத்தா அந்த குற்றவாளிக்கு விடுதலை அளித்து பதவி கொடுக்கலாம், சாதாரண மக்கள் கேள்வி எழுப்பக்கூடாதோ? அது என்ன நீதி? அரசியல்வாதிகள் நீதி அமைச்சில் தலையிடாதவரை, நீதி அமைச்சில் எல்லோருக்கும் ஒரே சட்டம் எனும் நிலை வராத போது, இப்படியான நிகழ்வுகள் நடந்தே தீரும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நீதியை தேடி அடைய உரிமை இருக்கிறது, அதை யாரும் கேள்விக்குட்ப்படுத்த முடியாது. லலித் குகன் யாழ்ப்பாணத்தில் வைத்தே அன்றைய இராணுவ புலனாய்வாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாட்டில் எந்தப்பக்கமும் யார் வேண்டுமானாலும் போய்வரக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தோம் என்றவர்கள், இப்போ தாம் வரப்பயப்படுவதேன்? ஒருவேளை தான் செய்தது தனக்கே திரும்பி வந்துவிடுமென பயப்படுகிறாரோ? மஹிந்தா தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்தார் பயமில்லாமல், இப்போ அவருக்குரிய பாதுகாப்பு குறைப்பு என்கிற பேச்சு வந்தவுடன் தனக்கு பயங்கரவாதிகளால் ஆபத்தாம். மற்றவரை வகைதொகையின்றி கொன்று குவித்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள். இப்போ தனக்கு என்றவுடன் பயப்படுகிறார்கள்.1 point
-
இப்போதைக்கு இப்படியான திருட்டு வேலைகளில் தப்புவது என்றால் Defender Signal Blocker கிரெடிட் கார்ட் பேஸ் கார் துறப்பு போன்ற வற்றுக்கு அதே அமேசனிலே விற்கிறார்கள் வாங்கி வைக்கவேண்டி உள்ள கட்டாயம் அதே அமேசனே செய்கிறது எல்லாம் வியபார உலகு .1 point
-
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் விமோசனமும் , பாதுகாப்பும் உண்டு. எல்லா மாநிலத்தவர்களும் கும்மாளமடிக்கும் / கொள்ளையடிக்கும் சினிமா உலகை விரும்பினால் திராவிட சங்கம் என அழைக்கலாம்.😁 ஆனால் அந்த மண்ணையும் மக்களையும் ஆளும் அருகதை தமிழருக்கே உரியது. 😎 வாழ்க தமிழ். 💪1 point
-
இப்போது வரும் அட்டைகளில் தொடுகை மூலம் பரிமாற்றம் செய்யும் RFID இருப்பதால் இது முடிகிறது. shimming என்பார்கள். இதைத் தடுக்க சில வழிகள் இருக்கின்றன. கடனட்டைகளை வேறு அட்டைகளோடு அடுக்கி அதை பேர்சினுள் வைத்திருக்க வேண்டுமாம். இப்படி வைத்திருந்தால் இலகுவாக தொடர்பை ஏற்படுத்த முடியாது என்கிறார்கள். எங்காவது புதிய இடத்திற்குப் போய் கடனட்டை பாவிக்கும் போது ஒரு குறிப்பிட்ட கடனட்டையை மட்டும் பயன்படுத்தினால் அதில் ஏதாவது சந்தேகம் தரும் செயல்கள் நடந்திருக்கின்றனவா என்று இலகுவாகக் கண்காணிக்க முடியும். அனேகமாக எல்லாக் கடனட்டைகளும் தற்போது zero liability கொண்டவையாக இருக்கின்றன. இதன் அர்த்தம் நீங்கள் செலவழிக்காத ஒரு தொகையை நீங்கள் கண்டு பிடித்து கம்பனியிடம் "இது என்னுடையது அல்ல" என்று முறையிட்டால், அந்தத் தொகையை உங்கள் கணக்கில் இருந்து அகற்றி விடுவர்.1 point
-
1891 இல் தென்னிந்தியாவைத் "திராவிட நல்நாடு" என்று தான் அழைத்திருப்பர், தமிழர் நல் நாடு என்று சொல்லக் கூடிய நிலை இப்போது இருந்தாலும்,அப்போது திராவிட மொழிகளின் நிலம் தான்.1 point
-
நினைவேந்தல் நிகழ்வு சம்பந்தமான திரியில் சிலவற்றை தவிர்த்து வேண்டுமானால் வேறு ஒரு திரி திறந்து இவை பற்றி விவாதிக்கலாமே..1 point
-
1 point
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.1 point
-
சரியாச் சொன்னீர்கள். மொத்தத்தில் எல்லோரும் சுயநலவாதத்தின் வெவ்வேறு படிநிலைகளில் நின்று விளையாடுபவர்கள்... 😄1 point
-
உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒன்றியம் வாசிக்கவில்லை என்றவுடன் இப்படி எல்லாம் எழுத வேண்டி உள்ளது. அடுத்தவர் சிரிப்பு குறி இட்டவர். “ மாணவி உடலுறவு கொள்வதற்கு முன்னரே காப்பாற்றப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். “ இது ரெம்ப முக்கியம்.. ஒரு மானஸ்தன் இப்படியும் எழுதி உள்ளார்1 point
-
கண்டிப்பாக இது ஒரு செய்திதான். ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் தம் சுயவிருப்பிற்கிணங்க உடலுறவு கொள்வதை மூர்க்கத்தனமாக தடுக்கின்ற, அதை எதிர்க்கின்ற ஒரு சமூகமாகவே இன்னும் யாழ் / தாயக சமூகம் உள்ளது என்பதை இந்த செய்தி மீண்டும் தெளிவாக காட்டுகின்றது. இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்.1 point
-
எனக்கு புரியாதது இதுதான் 👉 இந்த விடயமெல்லாம் எப்படி ஒரு செய்தி என்கிற நிலைக்குள் வருகிறது? அந்த மாணவன் பிள்ளைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறான் என்றால் அவனை உள்ளே தள்ளுவதற்கு வழி பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு ""கட்டிலுக்கடியில் நிர்வாணமாக பிடிபட்ட"" என்று எழுதும் அளவிற்கு எமது இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததா? இந்தச் செய்தியை அந்தப் பிள்ளையின் காதுகளுக்கு எட்டினால் அந்தப் பிள்ளை வாழ்நாள் முழுதும் கூனிக் குறுகாதா? சிங்களம் இறந்த பெண் போராளிகளை புணர்ந்ததற்கும் இந்த விடயத்தை செய்தியாக்கிய உதயனின் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. 😡1 point
-
யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா களமிறங்குகிறதா? - உண்மை என்ன? பட மூலாதாரம்,ED JONES/AFP படக்குறிப்பு, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியப் படைகள் போருக்குத் தயாராகி வருவதாக வெளியான கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் மற்றும் ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடகொரியர்களை உள்ளடக்கிய சுமார் 3,000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை ரஷ்ய ராணுவம் உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரேன் ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் இந்தத் தகவலை பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் ராணுவத்தின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள், ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான ராணுவக் கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு பகுதியில், இவ்வளவு பெரிய படைப் பிரிவு உருவாகி வருகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இன்னும் பிபிசிக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா- யுக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுவது குறித்து வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். பெஸ்கோவின் கூற்றுபடி, "பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பு மட்டுமல்ல, அமெரிக்க உளவு நிறுவனமும் இதுபோன்ற செய்தி அறிக்கைகளை வெளியிடுகிறது. இது போன்ற தகவல்களை வழங்குவதே இந்த அமைப்புகளின் வேலை. ஆனால் இதுகுறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைப்பதில்லை," என்றார். இருப்பினும், சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. பட மூலாதாரம்,VLADIMIR SMIRNOV/POOL/AFP படக்குறிப்பு, ஜூன் 19, 2024 அன்று ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான நட்பைக் கொண்டாடும் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ரஷ்யா - வட கொரியா இடையே அதிகரிக்கும் ஒத்துழைப்பு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு, அவரை 'நெருங்கிய தோழர்' என்றும் குறிப்பிட்டார். ரஷ்யா-யுக்ரேன் போரில் வடகொரியா தலையிடுவது குறித்து யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் இந்த மாதம், யுக்ரேனில் வடகொரிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதறகான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார். ஆனால், இந்தப் படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் இருந்து ஒரு ராணுவ தொடர்பான பிரமுகர் பிபிசி-யின் ரஷ்ய சேவையிடம், "பல வடகொரிய வீரர்கள் விளாடிவோஸ்டாக் (Vladivostok) நகரத்திற்கு வடக்கே உசுரிஸ்க் அருகே உள்ள ராணுவத் தளங்களுக்கு வந்துள்ளனர்," என்று கூறினார். ஆனால் உண்மையில் எத்தனை வீரர்கள் உள்ளனர் என்பதை நமக்கு தகவல் கொடுத்த நபர் கூறவில்லை. "இந்த எண்ணிக்கை நிச்சயமாக 3,000 ஆக இருக்காது," என்று அவர் கூறினார். ஒரு ராணுவ ஆய்வாளர், ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களைத் தங்கள் ராணுவத்திற்குள் வெற்றிகரமாகப் பணியமர்த்த வைக்க முடியுமா என்று சந்தேகிப்பதாகக் கூறினார். பட மூலாதாரம்,KCNA/REUTERS வட கொரிய வீரர்களை ரஷ்யா எப்படி கையாளும்? ரஷ்யாவில் உள்ள ஆய்வாளர் ஒருவர், (பெயர் கூற விரும்பாமல்) பிபிசி-யிடம் பேசுகையில், "ஆரம்பத்தில், நூற்றுக்கணக்கான ரஷ்யக் கைதிகளை ராணுவத்தில் சேர்ப்பதே ரஷ்ய ராணுவத்திற்குக் கடினமாக இருந்தது. இத்தனைக்கும் அந்த கைதிகள் அனைவரும் ரஷ்ய மொழி பேசுபவர்கள்," என்றார். அதாவது, வடகொரியப் படைகளை நிர்வகிக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல. ஒருவேளை அவர்கள் 3,000 வடகொரிய வீரர்களைச் சேர்த்திருந்தாலும் கூட, அது போர்க்களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் யுக்ரேனைப் போலவே அமெரிக்காவும் இதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "ரஷ்யா, வடகொரிய வீரர்களைச் சேர்த்திருப்பது ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையேயான உறவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது," என்றார். இருப்பினும், மில்லரின் பார்வையில், இந்தச் செயல்பாடு, ரஷ்யா போர்க்களத்தில் இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்-உடன் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. யுக்ரேனின் பொல்டாவா பிராந்தியத்தில் அண்மையில் மீட்கப்பட்ட ஏவுகணை மூலம் நிரூபிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வட கொரியாவிடமிருந்து ரஷ்யா வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் வெளியே கசிந்தது. இந்தத் தகவல்கள் ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் ஊழியர்களிடையே நடந்த டெலிகிராம் சேட் மூலமாகக் கசிந்தது. தரமற்ற வடகொரிய ஆயுதங்கள் யுக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள் இந்த ஆயுதங்களின் தரம் குறித்து அடிக்கடி புகார் கூறினர். இந்த ஆயுதங்களால் தங்களது ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். குர்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதற்கு முன்னதாக, மங்கோலிய எல்லைக்கு அருகில் உள்ள உலன்-உடே பகுதியில் வடகொரியப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைன் சந்தேகித்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் யுக்ரேன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. யுக்ரேனிய ஊடகமான 'டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸின்’ ஆசிரியர் வலேரி ரெபெக் கூறுகையில், "இந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யா-யுக்ரேன் எல்லையின் சில பகுதியைப் பாதுகாக்க அனுப்பப்படலாம். வட கொரிய வீரர்கள் இவ்வளவு சீக்கிரமாக முன் வரிசையில் நிறுத்தப்பட மாட்டார்கள்,” என்றார். ரெபெக்கை போன்று பல வல்லுனர்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். மொழி தெரியாத வீரர்களால் என்ன பயன்? வடகொரியாவில் 12.8 லட்சம் வீரர்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவைப் போன்று வடகொரிய ராணுவத்திற்குச் சமீபத்திய போர் நடவடிக்கைகளில் அனுபவம் இல்லை. வடகொரியா தனது ஆயுதப் படைகளில் பழைய சோவியத் மாதிரியைப் பின்பற்றி வருகிறது, ஆனால் அதன் முக்கியப் படையான காலாட்படை பிரிவுகள் யுக்ரேன் உடனான போருக்கு எவ்வாறு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்யா-வடகொரியா படைகள் இடையே மொழித் தடையும் இருக்கும். வட கொரிய வீரர்களும் ரஷ்ய அமைப்பைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இது தற்போதைய போரில் ரஷ்யாவிற்கு சிக்கல்களையே உருவாக்கும். ஆனால் இந்த விஷயங்கள் ரஷ்யா-யுக்ரேன் போரில் வட கொரிய வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்க வாய்ப்பில்லை. அதே சமயம், வடகொரியர்கள் பொறியியல் மற்றும் கட்டுமான திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் போரில் திறன் பெற்றவர்கள் அல்ல என்பது தான் பிரச்னை. வடகொரியாவுக்கு பணமும் தொழில்நுட்பமும் தேவை. ரஷ்யாவிற்கு ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் தேவை. வடகொரியாவுக்கு என்ன ஆதாயம்? கொரியா ரிஸ்க் குழுமத்தின் இயக்குநர் ஆண்ட்ரே லாங்கோவ், "வட கொரியா ரஷ்யாவிடமிருந்து நல்ல வருவாய் பெறலாம், ஒருவேளை அவர்கள் ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்திற்கான அணுகலையும் பெறலாம். வடகொரியாவிடம் ராணுவ உதவிகளைப் பெறவில்லை எனில், ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை வழங்கத் தயங்கும்,” என்றார். "இது வடகொரியாவுக்கு உண்மையான போர் அனுபவத்தைத் தரும். அதே சமயம் வடகொரியாவை விட வளமான மேற்கத்திய நாடுகளில் வாழ்வதன் நன்மையை அவர்களது வீரர்கள் பெறுவார்கள்," என்றார். அதேசமயம், கடந்த இரண்டரை ஆண்டுகாலப் போரில் ரஷ்யா இழந்தவைகளுக்கு விரைவில் ஈடு செய்ய வேண்டும் என்று புதின் விரும்புகிறார். பிரிட்டனைத் தளமாகக் கொண்ட 'Conflict Studies’ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வலேரி அகிமென்கோ, வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்படுவது புதினுக்கு உதவும், என்கிறார். "இதற்கு முன்னர் அவர் முன்னெடுத்தக் கட்டாய ராணுவ அணி சேர்க்கை தோல்வியில் முடிந்தது. எனவே இம்முறை அவரது முயற்சிகளுக்கு வடகொரிய வீரர்க உதவுவார்கள்,” என்று நம்புகிறார். "யுக்ரேன் ராணுவ வீரர்களுடன் ஒப்பிடும்போது ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள் என்று புதின் நினைக்கிறார். எனவே, வடகொரிய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது சிறந்த வழியாக கருதுகிறார்,” என்றார். ஆனால், யுக்ரேன் அதிபர் இரு நாட்டின் கூட்டணி பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் களத்தில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் களமிறங்கவில்லை. ரஷ்யாவுக்காக நூற்றுக்கணக்கான வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டதற்கான சான்றுகள் வெளிப்படும் நிலையில், போர்க்களத்தில் நுழையும் வெளிநாட்டு (மேற்கத்திய) வீரர்கள் பற்றி புதின் அதிகமாகக் கவலைப்பட வாய்ப்பில்லை. (கூடுதல் செய்தி அறிக்கை : பால் கிர்பி, கெல்லி என்ஜி மற்றும் நிக் மார்ஷ்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn03j7x8d5eo1 point
-
🤣............ இதே போலவே நடிகர் கமலும் அவர் கண்டுபிடித்த ஊழல்கள் பற்றி முன்னர் சொல்லியிருந்தார், பின்னர் இப்பொழுது காணாமல் போயும் விட்டார்................ இவர்களைப் போன்றோரின் பேச்சு நாங்கள் நாலு பேர்கள் திண்ணையில் இருந்து உலக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வதைப் போல....... வெறும் வாயை மென்று, திண்ணைகளில் நல்ல பெயர் எடுக்க மட்டும் உதவும்............🫣.1 point
-
யாழ் களத்தில் சோழியன் என கருத்துக்கள் எழுதி இயற்கை எய்திய இராஜன் அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா இராஜன் அவர்கள் 22.10.2024 அன்று காலமாகியுள்ளார் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம்0 points
-
இலங்கையில் வாழும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த இனத்திராக இருருந்தாலும் இவை மகிழ்ச்சியான செய்தி அல்ல. ஏற்கனவே இவ்வாறான யுத்தத்தினதும் தாக்குதல்களதும் விளைவுகளை அனுபவிப்பர்கள் அவர்கள். புலம் பெயர் தேசிக்காய்களுக்கு இது மனமகிழ்வூட்டும் நகைச்சுவை செய்தியாக இருப்பதில் வியப்பு இல்லை.0 points