Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88812
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46969
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3125
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    35001
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/25/24 in all areas

  1. அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர். கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான். அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள்.
  2. நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??
  3. இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது. ஆனால் 1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. 1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும்.
  4. சுமந்திரன் எதிர் பட்டாசு ரெஜிமென்ற்றின் "தோசை, இட்லி, குண்டு தோசை" என்று, ஒரே சரக்கை நேரத்திற்கேற்ப மாற்றிப் போடும் நிலையில்லா மூளைக்கு, இந்த செய்திக்கு அவர்கள் இட்டிருக்கும் பதில்கள் நல்ல உதாரணம்😂. இதே சுத்த இனவாதியான கம்மன்பில, 2016 இல் இருந்து புலிகள் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் சொல்லியிருப்பவை பொய் என்பார்கள், ஆனால் சுமந்திரன் பற்றி அவர் இப்பொது சொல்வது உண்மை என்கிறார்கள்! இந்த பட்டாசு படையணியை தாயக மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு 10 ஆண்டுகள் ஆகி விட்டன! புலத்தில் மட்டும் தான் இந்த சத்தம்!
  5. ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி நீலன் துரோகி ரட்ன ஜீவன் கூல் துரோகி சம்பந்தன் துரோகி கருணாநிதி துரோகி ப சிதம்பரம் துரோகி இப்போது சுமந்திரனும் துரோகி ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி.
  6. குருவே இந்திய வீர‌ர்க‌ளின் அன்மைக் கால‌ விளையாட்டு ச‌ரி இல்லை இல‌ங்கையிட‌ம் ஒரு நாள் தொட‌ரில் தோல்வி இப்போது சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் இர‌ண்டாவ‌து தோல்வியும் உறுதியாகி விட்ட‌து ப‌ல‌ம் இல்லா வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்றார்க‌ள் , இல‌ங்கையிட‌ம் தோல்வி அடைந்த‌ நியுசிலாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல சிர‌ம‌ ப‌டுகின‌ம்😁 கோலி ரோகித் ச‌ர்மா இவ‌ர்க‌ள் அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு முத‌லே ஓய்வை அறிவித்தால் இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தை த‌ன்னும் காப்பாற்றி கொள்ள‌லாம் நியுசிலாந் 301 ர‌ன்ஸ் முன்நிலையில் நிக்குது இன்னும் கூடுத‌லா 100ரன்ஸ் அடிச்சால் இந்தியாவை வென்று விடுவினம்.................சிரிக்க கூடாது சில‌து விளையாட்டு நாளையோட‌ கூட‌ முடிந்து விடும் 😁 இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் விளையாட்டு 3 அல்ல‌து 4 நாட்க‌ளில் முடிந்து விடுது 18 வ‌ருட‌த்த‌ முன்னேக்கி பார்த்தால் ப‌ல‌ விளையாட்டு 5 நாள் ஆகியும் வெற்றி தோல்வி இன்றி ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கு 20ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு பொறுமை அற‌வே இல்லை குருநாதா😁.........................
  7. 🤣........... குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது.............
  8. 🤣............. முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அரசியலைத் துறந்து சினிமா எடுக்க போய்விட்டார். உதய கம்மன்பில பந்துல எடுக்கப் போகும் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதலாம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு கதை, சமஷ்டி கதை என்று ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்புகின்றார் கம்மன்பில............ சமஷ்டியா.............. ஒரு சட்டி கூட எங்களுக்கென்று தனியாக கொடுக்க மாட்டார்கள் எந்த பெரும்பான்மை கட்சிகளும், அரசியல்வாதிகளும்...........
  9. அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு. சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியையம் தனக்கே வேணும் என்று அழுது அடம் பிடித்து எடுத்திருப்பார். இப்போ.... சுமன் காட்டில் அடை மழை பெய்யப் போகுது.
  10. குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே ஜனாதிபதி தெளிவுபடுத்தட்டும் என்கிறார். தானே இனப்பிரச்சினையை கிழப்பாமல், யோசனை கொடுக்கிறாராம். இறுதியில் சிறைக்குத்தான் போகப்போகிறார். ஆளான ஆளெல்லாம் வாய் மூடி இருக்கினம், இவர் துள்ளுவதைப்பார்த்தால்; நிறைய ஊழலில் சிக்கப்போகிறார் போலுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டுக்காரர் ஒருவரின் காணியை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்த வழக்கு உள்ளது இவர்மேல். சுமந்திரன் இதை செய்ய நினைத்திருக்க மாட்டார், ஒருவேளை கம்மன் பில செய்யும் காமெடியில் நடந்தாலும் நடக்கலாமே தவிர சுமந்திரனுக்கு உந்த உணர்வு தவறியும் வராது. இப்போ நாட்டில் ஒரு குழப்பம் வெடிக்க வேணும், அதில் கம்மன் பில வாக்கு அள்ள வேண்டும்! பரவணிக்குணம்.
  11. அறுகம் பே (குடா) வில் யூதர்களின் வணக்கம் ஸ்தலம் இருக்காம்....‍ஹொட்டல் நடுத்தினமாம், காணிகளை சொந்தமா வாங்கி வைச்சிருக்கினமாம் .... இதில நம்ம ஆளுக்கு இலங்கையர் என்ற உணர்வுடன் நகர வேணுமாம்... கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் ..மற்றவர் கொழும்பு ....ஈராக்கில் பணி புரிந்தவர்...இனி பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும்...தேசத்தின் நல்ன் கருதி... செகுவார 1969 ஆம் ஆண்டு வந்தவர் அவர் வ்ந்து போன பின்பு 71 ஆம் ஆணடு புரட்சி ....இவ்ரின் தலைவர் செய்தார்.. சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்... கியூபா ஜனாதிபதி வருகின்றார் .. பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ... பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல
  12. எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வாங்கிய பின் அவர்கள் கல்யாணத்தை கட்டிய பின் சத்திய சோதனை சங்கடம் இல்லை உங்களுக்கு இதைவிட உலகில் உங்களைத் தவிர எவருக்குமே தெரியாத உங்களின் ரகசியங்களும் பலவும் உண்டு சிலருக்கு அவர்களின் எல்லாமே ரகசியங்கள் 'பொத்தர்' என்று பெயர் வைக்கலாம் அவர்களுக்கு வெகு சிலருக்கு அவர்களின் எதுவுமே ரகசியம் இல்லை திறந்த புத்தகம் என்பார்கள் சிலரிடம் நாலைந்து புத்தகங்கள் உண்டு ஒன்றை அப்படியே திறந்து வைத்து விட்டு மூன்றை முழுக்க மூடி வைத்திருப்பார்கள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மரண வீடுகளுக்கு போக வேண்டியிருக்கின்றது அங்கே கடைசியில் புகையாக கூண்டினூடு வெளியேற எத்தனை ரகசியங்கள் எவருக்குமே தெரியாமல் எரிந்து போகின்றதோ என்று தோன்றுகின்றது.
  13. அது திருகோணமலையில்?? யாழ்ப்பாணத்தில் கொழும்பில் அனுராதபுரத்தில் மாத்தறையில் பார்க்கலாம்....,?
  14. சொந்த இட்ம் மானிப்பாய் ஆதரம் வேணுமென்றால் டி.என்.ஏ பரிசோதனை செய்ய தயார்😅
  15. இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது, எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது கனடா மட்டுமே, அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் , ஆனால் இன்றுவரை வாழ்க்கையை 15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத கொடூரம்தான்.
  16. இந்த பகுதியில் நீங்களே எடுத்த படங்களை இணைத்து ஓரிரு வரிகள் எழுதி மகிழ்ச்சி அடையவும்.......! ? நினைத்தேன் வந்தாய் நூறு வயது.....!
  17. புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை! பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம். தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம் என கூறியுள்ளார். -(3) http://www.samakalam.com/புதிய-அரசாங்கத்தின்-சுமந/
  18. கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார். இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன. 1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள். என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல. அக்கினிக் கரங்கள் நாவண்ணன் இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு. ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன். ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது. அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும். என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம். அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன். ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன. காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன. நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின. மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன். உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. வ. வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன். அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு. பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின. இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர். இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது. அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே! அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை. சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு. நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன். கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......! இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன். அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி! பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு! திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!
  19. அரசியலுக்கு வருவதே… பணம் சம்பாதிக்கத்தானே. மூன்று நாட்களுக்கு முன் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவர், வாக்காளர்களுக்கு 5’000 ரூபா கொடுத்ததாக செய்தி இங்கு பதியப் பட்டு இருந்தது. அவர் தேர்தலுக்கு செலவழித்த காசை… சிங்களத்துக்கு தனது இனத்தை விற்று, காட்டிக் கொடுத்துத்தானே மீண்டும் எடுக்க முடியும். முன்னைய காலங்களில்…. தூய்மையான அரசியலை செய்தார்கள். இப்போ இருப்பவர்கள் கள்வர் கூட்டம். எங்கு தட்டிச் சுற்றலாம் என்று அலைந்து கொண்டு திரிகிறார்கள்.
  20. பொது தேர்தலின் பின்னர் என்னாகபோகுதோ எம் வாழ்வு என்று அனைவருக்கும் மனசு படபடப்பது புரியுது, அந்த வரிசையில் கீழே உள்ள ஐயா அநுரவை இன்று சந்தித்திருக்கிறார், சுமந்திரன் ஏற்கனவே சந்தித்திருப்பதாக தகவல் , எல்லோரும் அடிச்சு பிடிச்சு அநுரவை சந்திப்பது தமிழ்மக்களின் அபிலாஷைகள் பற்றி பேசவாம், நம்பித்தானே ஆகணும் 'புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும்' ஏதாவது புதுமையா தமிழ் விசுவாசத்தை காண்பிக்கவேண்டுமென்று பார்க்கிறார் ஆனால் சரிப்பட்டு வரவில்லை, ஆங்கிலத்தை முதல் இடத்தில் வைத்தால் ஆட்டோமெட்டிக்கா தமிழ் மூன்றாம் இடத்துக்குதானே போகும் அதிலென்ன ஆச்சரியம்? அப்படி என்றால் முதலில் குழம்பவேண்டியது சிங்களவர் ஏனென்றால் அடிக்கடி அவர்கள் சொல்லிக்கொள்ளூம் ஒரு பெளத்த சிங்கள நாட்டில் சிங்களம் இரண்டாமிடத்துக்கு போய்விட்டதே.
  21. பாவம் அரியர். அவரைப் பப்பாவில் ஏற்றுகிறார்கள் என்று கூறியவுடன் பதறியடித்த ஒருவரையும் இந்தப்பக்கம் காணோமே,..😁
  22. பாவம் அரியம்! பப்பாவிலை ஏத்திவிட்ட எவரும் இப்ப துணைக்கு இல்லை. பப்பாவிலை ஏறேக்கை நல்ல குசியா ஆத்தலா இருந்திருக்கும். இப்ப ஏறிப்போட்டு கீழபாத்தா நிலாந்தன் மாஸ்டர், யதீந்திரா, பட்டாசு அன்ட் கோ எவரையும் காணோம்!😂
  23. அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது. வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் பல வருடங்களாக அயராது விடை தேடி வரும் இந்த தாய்மார்கள், ஹரீஸ் இலகுவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 5, 2024 செவ்வாய் அன்று கமலா ஹரிசுக்கு ஆதரவாக வாக்களிக்க, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை, தாய்மார்களாகிய நாங்கள், எமது காணாமலாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரால் வேண்டி கொள்கிறோம். நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாற்றுப் பின்னணியில், நாம் கமலா ஹரிஸிற்கான ஆதரவு தெரிவிக்கிறோம். இங்கே வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாறு: முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி: தமிழ் இளைஞர்கள் இறையாண்மையுள்ள தமிழ் தேசத்தை அடைவதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார் மற்றும் முக்கிய உதவிகளையும் செய்தார். செயலாளர் ஹிலாரி கிளிண்டன்: சுதந்திரம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர் ஆயுதப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர் ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: இறையாண்மை மீதான தமிழர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார், இலங்கை ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார். ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்த மிசெல் பாச்சிலெ, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தார். லூயிஸ் ஆர்பர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற முறையில், தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோரி, போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றொரு ஐ.நா மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை, போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானங்களை முன்வைத்தார். தமிழ் மக்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸிடம் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலிமை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழர்களின் படுகொலைகள் தொடர அனுமதித்த உலகளாவிய செயலற்ற தன்மை குறித்து அவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர். https://thinakkural.lk/article/311114
  24. ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) உலக கிரிக்கெட் தலைவராகும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இப்படித் தவ்வுகின்றது............... இந்திய சுழல் பந்துவீச்சில் நியூசிலாந்து சுருண்டு போகும் என்று பார்த்தால், இந்திய அணி இப்படி கவிழ்ந்து கிடக்குதே............🫢.
  25. அனுர ஜனாதிபதியாக வந்திருக்காவிடில், இன்னும் 10 வருசத்துக்கு இருந்திருப்பார்கள்.
  26. தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு உலகத்துக்கு சொல்ல சுமந்திரனை விட்டால் வேற ஆக்கள் இல்லை கண்டியளோ? சுமந்திரனும் பக்காவா அந்த வேலையை செய்யக்கூடிய ஆள். பொய் சொல்லுறது அவருக்கு கை வந்த கலை....😎
  27. கம்மன்பில கூறுவது உண்மையான தகவல் என்றால் 1) சமஸ்டி அரசமைப்புப் பணியும் 2) UN தீர்மானம் 30/1 நடைமுறைப் படுத்துதல் என இரண்டு முக்கிய விடயங்கள் நடைமுறைக்கு வருவது நன்மையான விடயங்களே. கமன்பிலவை வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி சார்பாகப் பிரச்சாரத்திற்கு அழைக்கலாம் 🤣
  28. Paanch, நாலு எலிகளைத்தான் உடனடியாகப் பிடிக்க முடிந்தது
  29. இன்று பிள்ளைகள் சொன்னாலும் கேட்காதுகள் . .......பெற்றோர்களும் பிள்ளைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமல் ஏதோ விளையாடுகின்றார்கள் என்று பேசாமல் இருக்கிறார்கள் ........என்ன சொல்வதென்றே தெரியவில்லை . .........அதுதான் பெருங்கொடுமை .......!
  30. சுமந்திரனுக்கு ஆதரவாக கம்மன் பில பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டாரா?
  31. ஒற்றுமை, தமிழ் அகராதியில் மட்டுமே உள்ள சொல்லாகிப் பல காலம். ஆனால், படைப்பாளர்களால் அடிக்கடி பதவிடப்படுகிறது. இன்றை தேவையை வலியோடு வலியுறுத்தும் படைப்பு. பாராட்டுகள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  32. தில்லைவினாயகலிஙகமவர்களே, மிகவும் சிறந்த ஒரு காலக்கண்ணாடியான படைப்பு. ஒருமுறை இதனை அரசியல் தலைமைகள் படித்துப்பார்த்தால்.... நிகழ வாய்ப்பில்லை. ஆனால், நிலா தேயலாம் ஓய்வதில்லை. நிலா போன்றவர்கள் வருவார்கள் என்பது தமிழினத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. தமிழரை, தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் ஆழ்மன ஏக்கத்தை பதிவாக்கியமைக்குப் பாராட்டுகள் ஐயா. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  33. கஜே - குதிரை கஜே கும்பல் தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை. ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது தேர்தல் போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே!
  34. பகிர்வுக்கு நன்றி ஏராளன் .........! 👍
  35. தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் சிங்களப்படைகளின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் இடையூறுகளைக் கடந்து ஒரேகொள்கையோடு உறுதியாக நிற்பதென்பது சிங்களத்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இடையூறாக உள்ளது. அதன்விளைவேயாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  36. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் கழுதை மற்றும் யானை ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதை உள்ளது. இது 1828இல் தொடங்கியதாக கருதப்படுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ ஜாக்ஸனை கழுதை என பொருள்படும் விதமாக ‘ஜாக் ஆஸ்’ என குடியரசுக் கட்சியினர் அழைத்தனர். இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அவர், கழுதையை பிரசாரங்களில் சின்னமாகப் பயன்படுத்திக்கொண்டார். கழுதை பிடிவாதம் நிறைந்தது, முட்டாள்தனமானது என விமர்சகர்கள் பார்த்தனர். ஆனால், அது அடக்கமானது மற்றும் புத்திசாலிதனமானது என ஜனநாயகவாதிகள் சிலர் கூறினர். இப்போது குடியரசு கட்சியினரின் யானையைப் பற்றி பார்க்கலாம். 1860களில் ஆப்ரஹாம் லிங்கனின் தேர்தல் பிரசாரங்களின்போது, செய்தித்தாள்களில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என சிலர் கூறுகின்றனர். ஒருவேளை வலிமையின் சின்னமாக இருக்கலாம். எனினும், கார்டூனிஸ்டும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான தாமஸ் நஸ்ட் 1874இல் இதை பத்திரிகையில் வரைந்த பின்னரே அது பிரபலமடையத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் யானையை முட்டாள்தனமானது, விகாரமானது எனக் கூறலாம். ஆனால், குடியரசுக் கட்சியினர் இதை வலிமை மற்றும் புத்திசாலிதனத்தின் சின்னம் என்று கூறினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த இரு சின்னங்களும் அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62j4yv844do
  37. நடந்ததை நேர்மையாக சொல்வதும் பகிர்வதும் வீழ்ந்து விட்டார் வகையில் வராது என நினைக்கிறேன்
  38. நோ நோ நோ அவரும் கட்டாயம் சொல்லிப் போடாதேங்கோ என்று சொல்லியிருப்பார்.
  39. யாழ்ப்பாணத்திலிருந்த தமிழீழக் காவல்துறையின் காவல்நிலையம் ஒன்றில் முறைப்பாடுகள் பதிவிடப்படுகின்றன 20/01/1995
  40. கோர்ட்டில். ஒரு. குற்ற. வழக்கில். சாட்ச்சிகளிடம். குறுக்கு. விசாரணை. நடைபெற்று கொண்டிருந்தது அப்போது அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வக்கீல் : "பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." பாட்டி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். பாட்டி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் : "கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
  41. பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்🙏
  42. இது இந்திய அளவிலான செம்மொழி தகுதிதான். இப்படியே ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளுக்கு செம்மொழி தகுதி கொடுக்குமட்டும் காவிக் கூட்டம் ஓயாது. இதைக் கேட்கும் போது கலைஞர் கருணாநிதி என்ற மேன்மகன் தான் நினைவில் வந்தார். காமராசரை பெருந்தலைவர் என்று அழைப்பதைப் பொறுக்கமுடியாமல் உள்ளூராட்சி ஒன்றியங்களின் தலைவர்களை பெருந்தலைவர் என்று அழைக்கும் நடைமுறையினைக் கொண்டுவந்தார். உண்மையான செம்மொழிகளுடன் சில்லறைகளைச் சேர்ப்பதன் மூலம் அந்த தகுதியை நீர்த்துப்போகச்செய்தல் தான் மூலகாரணம். காவிக் கும்பல் இந்தியா என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கட்டும். ஆனால் உலகளாவிய செம்மொழி தகுதி தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம், இலத்தீன், அரபு ஆகிய 7 மொழிகளுக்கு மட்டுமே உண்டு.
  43. நாங்கள் தேனீக்களாக இருந்தால் அவர்கள் புகையுடன் (குண்டுகளுடன் ) வருகின்றார்கள் என்ன செய்வது . ...........! 😁 நல்ல கவிதை நன்றி கோபி ..........!
  44. பல பெண்களுடன் தொடர்புடைய ஒருவனுடன் இன்னொரு பெண்ணையும் பழக அனுமதிப்பவர்களுக்கு மனம் ஆகாயத்தை விட பெரியது. பெரிய மனதிற்கு வாழ்த்துகள்.
  45. காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.....! ? (பார்சிலோனா கடற்கரை).
  46. பொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினவு....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.