Jump to content

Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      25

    • Posts

      80012


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      20

    • Posts

      44733


  3. vasee

    vasee

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      2166


  4. uthayakumar

    uthayakumar

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      602


Popular Content

Showing content with the highest reputation on 11/06/24 in all areas

  1. தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ணி கவலை இல்லை இவர்களோடு கூட நின்று மேடை போட்டு முழங்கியது போலவே அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று நல்லாத் தான் நடிக்கிறார்கள் அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக ஆளுக்கு ஒரு சின்னத்தோட வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல சிலர் சமத்துவமே வந்தது போல் தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் நினைக்கவே கவலையாய் இருக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை ஏதோ ஒரு அலை எல்லோரையும் மயக்கத்தில தள்ளுது தமிழ் யூடியூப் தம்பிமாரே எல்லோரையும் சொல்லவில்லை நல்லோரும் உண்டு லைக்கை மட்டும் பார்க்காமல் கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள் அறிவாய் எதையும் அணுகுங்கள். பா.உதயன்✍️
    8 points
  2. வெளியில் எளிமையாக திரிகின்றார்கள். தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழ் வேட்பாளர்களை மக்கள் கணக்கெடுப்பதாக தெரியவில்லை. இதை எனக்கு சொன்னது வேட்பாளராக நிற்கும் என் உறவினர்.🙂 எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள்.
    4 points
  3. நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.). உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.
    3 points
  4. ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂. சீரியசாகப் பார்த்தால்: KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான். ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன். அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎. அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows! தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.
    3 points
  5. நாங்கள் வழிபடுவதே பாலியல் சின்னம்தானே. கோயில் கோபுரங்கள் முழுதும் பாலியல் சிலைகள்தானே. மதங்கள் மனிதர்களை நல் வழிப்படுத்தவே இருக்க வேண்டும். அர்த்தநாதீஸ்வரர் இருப்பது இந்து மதத்தில்தனே ஆனாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் ஆண்கள்தானே முடிவெடுக்கிறார்கள். விழாக்களில் கூட ஆண்கள் ‘சூட்’ அணிந்திருப்பார்கள். பெண்கள் சேலை அணிந்து வருவார்கள். அன்று கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறினாள். இன்று நிலமை அப்படி அல்ல. எந்த மதமானாலும் நல்லதை ஏற்க வேண்டும். அல்லதை களைய வேண்டும்
    3 points
  6. இரண்டு தினங்களுக்கு முதல் ஒர் வீடியோ பார்த்தேன் அறூஸ் என்ற அரசியல் ஆய்வாளர் சொல்லியிருந்த்தார் சுவிஸ்லாந்து போல ஓர் அரசியல் கட்டமைப்பு இருந்தால் "புலம்பெயர்ஸ்"முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என கூறியிருந்தார்...அதுதான் சும்மா நக்கலுக்கு அப்படி எழுதினேன்,,
    2 points
  7. அப்படியே இந்த தவகரனுக்கு மட்டும் தனியே ஒரு கவிதை எழுதுங்கோ அண்ணை, கிளிநொச்சி சந்தைக்குள்ள புகுந்து சனத்தட்ட அநுரவுக்குத்தான் வாக்கு போடுங்கோ என்பதை அவர்கள் வாய்க்குள்ளாலயே புடுங்கி எடுக்க என்னமா படாத பாடு படுகிறார். தேர்தல் முறைமைப்படி பொதுமக்களிடம் தனிப்பட்ட ரீதியில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கருத்து கணிப்புக்கள் நடத்துவதே தவறு என்று நினைக்கிறேன், இதெல்லாம் எப்படி அனுமதியோ தெரியல,
    2 points
  8. ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி அண்ணை. 😂
    2 points
  9. ஐந்து மொழியில் அரைகுறை வித்தகம் உடையவருக்கும், அவரின் சக body களுக்கும், 1. உக்ரேனுக்கான, செலன்ஸிக்கான ஆதரவில் மாற்றம் இல்லை. அது ஒரு சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசிய இனத்தவனாக அதே நிலையில் இருக்கும் இன்னொரு தேசிய இனத்துக்கான ஆதரவு. 2. உக்ரேன் பற்றிய அத்தனை திரிகளிலும் - டிரம் 2025 இல் வந்தால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை ஓவர் எண்டே எழுதியுள்ளேன். அப்போ எழுதியதை கிரகிக்க மூளையில் திசுக்கள் இல்லாதவருக்கு, இப்போ இதை நான் புதிதாக எழுதுவது போல் தெரியலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல. அடுத்த 4 வருசம் புட்டின் காட்டில் மழைதான். ஈயூவில் யூகே சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. புலத்திலும், நிலத்திலும் தன் இனத்தின் எதிர்காலத்தை சிந்திப்பவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. 2009 ஐ இட்டு மேற்கின் மீது உங்களுக்கு இல்லாத கோவம் இங்கே வேறு எவருக்கும் இல்லை. ஆனாலும் இது உங்கள் கண்ணை மறைக்கவில்லை. புலிகளை - இனத்துக்கா நேசித்தவர்களுக்கும், புலிகளை “ஸ்கோர்” கேட்டு இன்பம் அடை, நேசித்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இதுதான் வித்தியாசம்.
    2 points
  10. சாத்தான்.... இதில் குறை கூறும் பலர், புலிகளின் போராட்ட காலத்திலேயே... சிங்களத்துக்கும், ஓட்டுக்கு குழுக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆட்கள் என்பதால்.... இவர்களின் கருத்தை மினைக்கெட்டு வாசித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. "மூக்கு இருக்கும் மட்டும்... சளியும் இருக்கும் என்பது போல்", இவர்களை, சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣
    2 points
  11. கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை. அவர் ஒரு இனவாதி மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.
    2 points
  12. இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆர் ஆட்சியில் அமர்த்தினார்களே அவர்களே அடித்தும். ஓட ஓட. விரட்டியடிச்சிட்டார்கள். இப்போது புலிகள் இல்லை புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை இருப்பது எல்லாம் டுப்பிலிக்கேட். போலி புலிகள் மட்டுமே உண்மை புலிகள் 2009 இல். அழிக்கப்பட்டு விட்டார்கள் நீங்கள் திறமையான ஆட்சி வழங்கியிருந்தால் நாட்டை விட்டுட்டு ஒட வேண்டிய தேவை இருந்து இருக்காது 🙏
    2 points
  13. உக்ரைன் போரில்…. பைடன் அரசு காட்டிய அதீத ஆர்வமும், ஆயுதம் வழங்கலும்தான் கமலாவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.
    2 points
  14. பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும் இந்த உலகிற்கு வேண்டவே வேண்டாம்.
    2 points
  15. காணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.
    2 points
  16. முதலை உதவி கேட்டதைப் பார்த்திருக்கிறீர்களா?
    1 point
  17. நாங்கள் வெறுமனே டிரம்ப் என்பவர் மீது தனிமனித வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவரின் Right wing Ideology மீது பிடிப்பின்மை காரணமாகவோ இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடலாம், ஆனால் left wing அரசியல் பொதுவான மக்களிடம் மதிப்பிளந்து வருகின்றதை நாம் கவனிக்காமல் போய் விட முடியாது. Left wing அரசியலின் போலித்தனமும் அது குடும்ப அமைப்பு மீது செலுத்தும் அழுத்தமும் ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்தையும் பாதித்து உள்ளதை நேர்மையுடன் உணரத் தவறியதால் தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. கனடாவிலும் அதுவே நிலை Right here right nowஎன்ற ஒரு புத்தகம் முன்னால் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அவர்களால் சில வருடங்கள் முன்னம் வெளியிடப் பட்டது. அதில் இந்த populism வளரக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாதது. முடிந்தால் எல்லோரும் அதை வாங்கி வாசியுங்கள்.
    1 point
  18. சண்டையை விரும்பாதவர் என்றால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வை தரச் சொல்லுங்க பார்ப்போம். ரசியாவை பிடிக்கும் ஆனால் ஈரானை அடிக்க வேண்டும்??
    1 point
  19. இப்ப மட்டும் ஏதோ குறைவே? நாங்கள் எப்பவும் இணைபிரியா நண்பர்கள் தானே! 🙂 ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் நான் சொல்லுற ஆக்கள் சும்மா ரைம் பாஸ்க்காக லெக்ஸன் கேக்கிற ஆக்கள் எண்ட உண்மையை இப்பவே உடைச்சு விடுறன் கரவெட்டியில ஏற்கனவே பாஸ் பத்திரங்களோட ஒண்டு இருக்கு.... 😂
    1 point
  20. பொதுவா இந்தப் பஞ்சாயத்து சபையில் (இந்தியாவில் ) தலைவர் வெற்றிலை போட்டு குதப்பியபடி இருப்பார் . .......(அது ஒரு ட்ரேட்மார்க் மாதிரி , நாட்டாமை விஜயகுமாரை நினைத்துக் கொள்ளவும் ) ....... அப்போது அவருக்குப் பின்னால் எப்போதும் ஒருவர் ஒரு செம்புடன் காத்து நிப்பார் . ...... தலைவர் வெற்றிலைச்சாற்றை எந்தப் பக்கம் துப்புவதற்கு திரும்புகிறாரோ அந்தப் பக்கம் இவர் செம்புடன் போய் அந்த எச்சிலை ஏந்திப் பிடிப்பார் ........மற்றும்படி பஞ்சாயத்தில என்ன நடக்குது என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை . ......ஐயன் கொழ கொழ என்று வாயை கோணலாக்கி தலையை அண்ணாந்து தூக்கும் போது கண்ணும் கருத்துமாய் காத்திருந்து செம்போடு சென்று வாங்குவதுதான் அவரது வேலை . ...... தவறினால் அருகில் இருக்கும் அல்லக்கைகளின் ஆடைகள் நாறிடும் . .....அதனால் அவரையும், இன்றைய நாளில் அவர் போன்ற எடுபிடிகளையும் "செம்புதூக்கி " என்று செல்லமாய் அழைப்பார்கள் . ........! 😁
    1 point
  21. முடியாது இவர் ரம்ப். இங்கே இருந்து அனுப்பிய விதையில். முளைத்தவர். தான் .....முன்பும் நாலு வருடங்களாக கத்தி கொண்டு திரிந்தவர். தான் அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் ஒற்றுமையாக பல வருடங்களாக ஜேர்மனியை பங்கு போட்டு இருந்தும் ஜேர்மன் கம்பீராமாகத் தான் 28. நாடுகள் கொண்ட ஐரோப்பா கூட்டணிக்கு தலைமையும் ஆலோசனையும் வழங்கியுள்ளது வழங்கி வருகிறது இவரது ஆப்பை திருப்பி இவருக்கே கொடுக்க கூடியவர்கள் உக்கிரேன். ஒரு சின்ன நாடு ரஷ்யா ஆகக்கூடியது ஒரு கிழமையில். துவசம். செய்திருக்கும். ஆனால் முடியவில்லை காரணம் தொடர்ச்சியாக ஆயுத வழங்கல் வியட்னாம் போரை எடுங்கள் அமெரிக்கா வெல்ல முடியவில்லை காரணம் சீனாவின் தொடர்ச்சியான ஆயுத உதவிகள். இஸ்ரேலினை பல முஸ்லிம் நாடுகள் சேர்ந்தாலும். வெல்ல முடியாது காரணம் அமெரிக்கா தொடர்ந்து உதவும் ஆகவே எனது கருத்து எந்தவொரு சின்ன நாட்டையும் உதவிகள். தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் ரஷ்யா அமெரிக்கா இந்தியா சீனா, .போன்ற நாடுகளால். தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது வெல்ல முடியாது தமிழ் ஈழ விடுதலை புலிகளிற்கு தொடர்ந்து ஆயுதம் தங்கு தடையின்றி கிடைத்து இருக்குமாயின் தோல்வி அடைத்து இருப்பார்களா ?????????? கபித. 🙏
    1 point
  22. அருமையான பாடல் கோபி. தேனிசை செல்லப்பா ஐயாவின் குரல் அன்று போல் இன்றும் இருப்பது ஒரு அதிசயம்தான். அவர் மகனும் அதே டிரேட்மார்க் மெட்டில் இசையமைப்பதும் இனிமை. பொருத்தமான மாதத்தில் பொருத்தமான பாடல். உங்கள் அனுகமதியோடு, என் பங்குக்கு ஒரு சில வரிகள். எதிரிகள் எம்மை சாய்தாலும்…. காலிகள் எம்மை மாய்த்தாலும்… போலிகள் எம்மை ஏய்த்தாலும்…. உயிர்த் தமிழே நீ வாழ்வாய்.
    1 point
  23. அவை ஓமென்று ..சொல்லுகினமோ..இல்லையோ ..இவற்றை வாயைப்பார்த்தவுடன் .....திரும்பிவிடுவினம்..
    1 point
  24. தனியாக இருட்டு அறையில் முரட்டு குத்து ரேஞ்சில் இருக்கும் சந்திப்பு. கீழே ஒரு நேரடி ஒளிபரப்பு. வடிவேலு - டிரம்ப் ரெளடி - புட்டின். அல்ல கைகள் - Fox News, Elon Musk etc இது கள்ளன் களவு எடுத்தான். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. ஆகவே பொலிசையும், நாட்டையும் இயக்குவது கள்ளந்தான் எண்ட மாதிரியான தர்க்கம் அண்ணை. இது சரி. அடுத்த மிட்டேர்மில் காங்கிரசில், செனேட்டில் ஒன்றிலாவது ஆளுகையை இழந்தால் பவர் குறையும். இரெண்டிலும் இழந்தால் செத்த பாம்புதான். உள்ளூர் விடயங்களில். வெளிவிவகாரத்தில் யுத்தம் நடத்த முடியாவிட்டாலும், அமெரிக்காவுக்கு எதிரான போதிய நாசகார வேலைகளை செய்ய முடியும்.
    1 point
  25. சனங்கள் கள்ளனை கள்ளன் எண்டு எழுதாமல் வேற எப்பிடி எழுதுவினமாம் 🤣
    1 point
  26. போட்டியின் கடைசி நாள் எப்ப? இன்னும் ஆமான ஆள் கிடைக்கேல்ல எனக்கு கொப்பியடிக்க!😂
    1 point
  27. ட்ரம்பின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி! டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் ஜனாதிபதியின் அசாதாரண மறுபிரவேசமாக இது அமைந்துள்ளது. இரண்டு படுகொலை முயற்சிகள் மற்றும் 34 குற்றச் செயல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த வெற்றி வந்துள்ளது. விஸ்கான்சினில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி பதவிக்கு தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றார். அலாஸ்கா, விஸ்கான்சினின் அண்மைய மற்றும் முக்கியமான முடிவுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இப்போது 279 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார். ட்ரம்பின் வெற்றியானது அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் குடியேற்றத்தைச் சுற்றியுள்ள பொது மக்களின் விரக்திகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் (Grover Cleveland) பின்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் பதவி வகிக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆவார். க்ரோவர் க்ளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது ஜனாதிபதியாக 1885 முதல் 1889 வரையும் 24 ஆவது ஜனாதிபதியாக 1893 முதல் 1897 வரையும் இருந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் முறையாக 2016 முதல் 2020 க்கு இடையில் இருந்தார். எனினும், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெறத் தவறினார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் 78 வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் ட்ரம்ப் ஆவார். https://athavannews.com/2024/1407512
    1 point
  28. இனி இதுக்குள்ள மினக்கெட நேரமில்லை. இந்தியனைக் கலைச்சு விட்டாச்சு, அவேலுக்கு வைட்கவுஸ் கேக்குதாம்!😂
    1 point
  29. இந்திய தொழிலதிபரான அருண் குமாருக்கு இலங்கை மீது அவ்வளவு அக்கறையாம் 🤣
    1 point
  30. கமலா…. முன்னுக்கு வாற மாதிரி இருந்தால்… டக்கெண்டு ட்ரம்ப், சுமந்திரனிடம் ஆலோசனை கேட்டு… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடி, அவர் பின்கதவால் சுத்துமாத்து செய்து பாராளுமன்றம் போன மாதிரியான ரெக்னிக்கை கேட்க சொல்லுங்கோ. 😂 🤣
    1 point
  31. காணொளியில் உள்ள முக்கியமான விடயங்களை யாராவது சுருக்கமாக குறிப்பிட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும் (நானும் பார்க்கவில்லை). இது ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் என புரிகிறது, நீங்கள் கூறும் கள யதார்த்தம் சிறுபான்மையினரை பொறுத்தவரை தற்போது தற்காலிகமாக மாறிவிட்டது என்பது உண்மை. ஆனால் இனவாத பெரும்பான்மையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற யதார்த்தினை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இலங்கை அரசியல் அமைப்பு சட்டமாக இருந்தாலும் சரி இலங்கை சட்டவமைப்பாக இருந்தாலும் சரி இலங்கையினை ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது, புதிதாக சட்டவமைப்பிலோ அல்லது அரசியல் சட்டவமைப்பிலோ மாற்றம் ஏற்படுத்தாது ஒன்றிணைந்த இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ முடியாது என்பது வரலாறாக உள்ளது, அதற்கு சான்றாக இலங்கையில் நிகழ்ந்தேறிய இனக்கலவரங்கள் மனித உரிமைகள் இருக்கின்றது, தற்போது மக்கள் விரும்புவது அமைதியான பாதுகாப்பான வாழ்வு அதனை ஒற்றை ஆட்சிமுறைமைக்குள்ளே அதிகார பரவலாக்கமின்றி அரசியல் அமைப்பு சட்டமாற்றம், சட்டவாக்க மாற்றத்தினூடாக இலங்கை ஒற்றை ஆட்சிக்குள்ளாகவே நிறைவேற்றினால் மக்கள் இந்த காணி,நிதி ,நீதி, காவல்துறை அதிகாரங்கள் என தனித்து கோரமாட்டார்கள். ஆனால் புதிய அரசால் கூட அதனை ஏன் செய்ய முடியவில்லை? நான் நினைக்கிறேன் சட்டவைமைப்பு மற்றும் அரசியலைமப்பு மாற்றங்களினால் ஏற்படும் புதிய ஜனநாயக சூழ்நிலை இலங்கையில் நிலவிய மற்றும் நிலவுகின்ற இனவாத நடவடிக்கைகலை சட்ட ரீதியாக சவால்களை எதிர்கொள்ள அரசுகள் விரும்பாமை காரணமாகும். அதனால் பாதுகாப்புதுறை மட்டுமன்றி அரசியல் உயர் பீடங்கள் கூட பிரச்சினையினை எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இந்த புதிய அரசு இதுவரை ஆட்சி பீடமேறாத அரசு அதனால் இந்த சட்ட மாற்றம் ஏற்படுத்துவதால் கட்சி ரீதியாக பாதிப்புள்ளாக மாட்டார்கள், ஆனால் பாதுகாப்புதுறை மற்றும் பெரும்பான்மை இன ஆதரவினை இழக்கும் அரசியல் தற்கொலையினை செய்ய விரும்பவில்லை. மக்கள் இந்த அரசிற்கு அறுதிப்பெரும்பான்மை கொடுக்க வேண்டும், அதன் பின்னர் மக்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள் இலங்கை இன்னும் மாற்றத்திற்கு தயாராகவில்லை என்பதுதான். அடிப்படை பிரச்சினையே இனவாதத்தினை இலங்கையிலிருந்து நீக்க முடியாமைதான், இலங்கை மட்டுமன்றி இந்தியாவில் கூட இதே நிலைதான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு தேசமாக வளர்ச்சி அடைய முடியாது.
    1 point
  32. சுமந்திரனே.. ஒரு சுத்துமாத்துக்காரன். இவரின் வாயிலிருந்து வருவது... பொய்யும்,பிரட்டும், உருட்டும் தான். இந்த வீடியோவை... மினக்கெட்டு கேட்பது நேர விரயம். வருகின்ற தேர்தலுடன்... மக்களால் இவருக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி... கழுதை மேல் ஏற்றி, ஊரை விட்டு விரட்டியடிப்பது நிச்சயம்.
    1 point
  33. வர வர உங்களுக்கு குசும்பு அதிகமாகிறது😁, இதனை கூறியது இந்திய தொழிலதிபரான அருண் குமார், இலங்கையின் கேந்திர முக்க்கியத்தினால் இலங்கை தெற்கு ஆசியாவில் ஆபிரிக்க, கிழக்காசிய பொருளாதார மையங்களுக்கிடையேயான மையப்புள்ளியாக இலங்கை இந்தோ படுபிக் பிராந்தியத்தில் இரு பொருளாதார சக்திகளுக்கு இசைவான சுவிஸ் போல ஒரு அணிசேரா அமைப்பாக இர்ந்து தனது நிலையினை உறுதிப்படுத்தவேண்டும் என கூறியிருந்தார்.
    1 point
  34. வெற்றி பெற வாழ்த்துக்கள் தேசிகன். 🙏
    1 point
  35. அவரே தான்..மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர் ...ஜெ.வி.பி யில் 84 களில் இணைந்தவர் என நினைக்கிறேன்..இவர் ஒருத்தர் தான் நீண்ட கால தமிழ் உறுப்பினர்..ஆரம்ப காலத்தில் இவரது தமிழ் புரியவே மாட்டது..தற்பொழுது ஒர்ளவு தமிழ் பேசுகின்றார் .. சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்
    1 point
  36. ஐரோப்பிய நாடுகளின் ஆசையில் மண் அள்ளிப் போட்ட ட்ரம்ப் கெட்டிக்காரன்தான். 🙂
    1 point
  37. கமலாவுக்கு… கட்டுக்காசும் கிடைக்காது போலிருக்கு. 😂 🤣
    1 point
  38. விளங்க நினைப்பவன் , நான் எங்கே எழுதி இருக்கேன் சுமந்திரன் அமைச்சர் பதவியை பெறபோகிறார் என்று? நான் அர்த்தப்படுத்தியது பதவியென்று முன்னைய ஆட்சியிலிருந்ததுபோல் ஜனாதிபதி சட்டத்தரணி, அது,இது , மானே தேனே, பொன்மானே என்று எதாச்சும்... நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவியென்று நான் அர்த்தப்படுத்தியது டக்ளசை, அவரும் ஓடோடி போய் அநுரவ சந்திச்சார் இல்லையா அதனால. நானும் பாக்கிறன் விளங்க நினைப்பவனின் அலசல்கள் இப்போலாம் கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கு 😉
    1 point
  39. என்கூடவே வேலை செய்பவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் 🤣
    1 point
  40. வயதை உங்களுக்கு ஏன்??? அவர் ஒடி. அடி திரிந்தால். சரி தானே ! தோற்றார் என்றால் உங்களுடன் வந்து இருக்கட்டும் 😂
    1 point
  41. இவரின் கூற்றுக்கு... சில பின்னுட்டங்கள். ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்! Eelapriyan Balan இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா? Amuthan Singanayagam தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம். Sasi Sasikaran இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே. Sinniah Tiemann Loganathan வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு. Mano Jeganathan
    1 point
  42. பாலஸ்தீனம், லெபனான், இஸ்ரேல், உக்ரைன், மற்றும் அனைத்து மக்களும் போர் அற்ற அமைதியான சூழலில் வாழ வேண்டும். இதற்கு வெற்றி பெறும் புதிய அமெரிக்க சனாதிபதி உழைப்பார் என எதிர்பார்ப்போம்.
    1 point
  43. தலையங்கத்தை வாசித்துவிட்டு கருத்தெழுதாதீர்கள். உண்மையை அறிந்துக்ண்டு கருத்தெழுதுங்கள்.
    1 point
  44. இதுபற்றி நானுட்பட பலரும் பல தடவை கருத்து பகிர்ந்ததுதான், தமிழ்சிறி நீங்கள் Mention பண்ணியதால் சொல்கிறேன். சுமந்திரனை தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதியாக தமிழர்களும் ஏற்றுக்கொண்டதில்லை சிங்களவர்களும் ஏற்றுக்கொண்டதில்லை அப்படியிருக்கும்போது இவர்களின் தீர்மானங்கள் ஆலோசனைகள் எந்த வகையில் செல்லுபடியாகும்? இவர் பற்றி ஒருமணிநேரமாக இவர்கள் உரையாடுவது அநாவசியமற்ற ஒன்றாகவே பலருக்கு படும், அடுத்து எமது அரசியல் தேர்வுகளாக எது இருக்க வேண்டும் யார் இருக்க வேண்டும் தலைமை தாங்கவேண்டும் என்பதை கற்றறிந்த இவர்கள் கை நீட்டி காட்டினால் அல்லது அடையாள படுத்தினால் அதில் ஒரு பயன் இருக்கும். சுமந்திரன் முன்னைய ஆட்சிகள்போல் சிங்களவர்களுடன் ஒட்டிக்கொண்டு பதவிகளை பெற்று இந்த ஆட்சியிலும் வண்டியோட்டலாம் என்று நினைக்கிறார் போலும், ஆனால் நேற்று கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி , தமது கட்சியை சாராதர்களுக்கும் உங்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் எவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருக்கிறார், இந்த காணொலியில் 31:57 நிமிடத்திலிருந்து அவர் கருத்துக்கள் உள்ளன. ஒருவேளை தென்பகுதி கட்சிகள் மட்டுமல்ல ,கடந்தகால தமிழ்கட்சிகள் மற்றும் சுமந்திரன் வகையறாக்கள் பற்றி யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் மக்கள் மனநிலையை நாடி பிடித்து பார்த்தும் இந்த கருத்தை சொல்லியிருக்கலாம். தேர்தலின் பின்னரே சிங்களத்தின் முகங்கள் தெளிவாகும். தமிழர் தேசியத்தை உறுதியாக நகர்த்த வேண்டுமென்றால், புலத்திலும் நிலத்திலும் உள்ள தமிழர்கள் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக புலத்திலும் பல பிரிவு தாயகத்திலும் பல பிரிவு , சிங்களவனிடம் உரிமை கேட்கபோக அரசியல் பேரம் பேச ஓரணி, ஒரே குரல் ஒற்றுமை வேண்டும் அது எங்கே வாழ்கிறது? அதனால்தான் இதுவரை தமிழர் தேசியம் பெயரில் குப்பை கொட்டிய அனைத்து கட்சிகளும் இந்த பொது தேர்தலில் ஓரம் கட்டப்படவேண்டும், நேர்மையும் திறமையுமுள்ள புதியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாக வேண்டும், தாயகத்தில் அரசியலும், புலத்தில் பொருளாதாரம் ஆலோசனைகள் , சர்வதேச தொடர்புகள் என்றும் ஒன்று சேர்ந்து ஒரேகோட்டில் நகர வேண்டும் என்பதே அங்கலாய்ப்பு இதெல்லாம் எந்தளவில் சாத்தியமாகும் என்பது காலத்தின் முடிவு., இந்த பொது தேர்தலில் தமிழர் அரசியலில் பெரும் மாற்றம் வேண்டும் புதியவர்களின் கையில் மக்கள் ப்ரதிநிதித்துவம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதே அங்குள்ள பெரும்பாலான மக்களின் விருப்பாக இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி புதியவர்களின் கையில் பொறுப்புகள் போனாலும் இந்த தேர்தல் அவர்களை இனம் காண மட்டுமே உதவி செய்யும், அடுத்த தேர்தலில்தான் அவர்களின் ஒற்றுமையும் அர்ப்பணிபும் நேர்மையும் கொண்டு ஒரு உறுதியான தமிழர் தலைமையாக தேர்தலை தமிழர் பகுதியிலிருந்து தேர்தலை எதிர்கொள்ள பயன்படும். ஒரே தலைமைத்துவமாக சிங்களத்துடன் பேரம் பேச தகுதி பெறும். இது எல்லாம் நக்கவேண்டும் நடந்தால் நல்லாயிருக்கும் ,அதுவரை எங்கே செல்லும் இந்த பாதை கேஸ்தான்.
    1 point
  45. சிறியர், குருவி தலையில பணியாரம் வைக்கலாம் .. பனங்காய் வைக்கலாமா!! 😄 இந்த அரசியல் சாணக்கிய கேள்விகள் எல்லாம் 8ஆம் வகுப்பு பொடியனுக்கு A/L பேப்பர் தந்து, எக்ஸாம் எழுதச் சொன்னதை போல இருக்கு!!! சரி பார்ப்போம் ஒரு 5 கேள்வியாவது சரிவரும் தானே.
    1 point
  46. எத்தியோப்பியா வளம் நிறைந்த நாடுதான். இருந்தாலும் சிறிலங்கா எந்த விதத்தில் வளம் குறைந்த நாடு? தண்ணீர் வளம் இல்லையா? சூரிய வளம் இல்லையா? அல்லது மனித வளம் இல்லையா? சூரிய வளமும் தண்ணீர் வளமும் இருந்தாலே வளமுடன் வாழலாம். இதில் தண்ணீர் வளம் இல்லாமல் தான் பல மூன்றாம் உலகநாடுகள் சிக்கித்தவிக்கின்றது. ஆனால் சிங்களம் தண்ணீரை அரசியல் நோக்கத்துடன் கடலில் கலக்க விடுகின்றது.
    1 point
  47. விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை உள்ளது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.