Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    19134
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8133
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/07/24 in Posts

  1. எங்கள் யாழ்கள உறவுகளில் ஒருவரான இராசவன்னியரின் மகனுக்கு இன்று பெற்றோரால் ஏற்பாட்டு செய்த திருமணம். அவரது மகனான செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) அவர்களும். செல்வி அருந்ததி B.E., அவர்களும் திருமண வாழ்வில் இணைந்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீடூழிகாலம் வாழ்கவென வாழ்த்துகிறோம்.!!🙌
  2. GIGN இது எல்லைப்படையாக உருவாக்கப்பட்டது. போர் காலத்தில் மீள கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பு செய்யும் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. போர் முடிந்த பின்னரும் இவர்கள் கலைக்கப்படாமல் அதிரடி தேவைகளுக்கு பாவிப்பதனால் நாங்க அவர்களை அதிரடிப்படை என்போம். வந்தார்கள் என்றால் ஏதோ பெரிதாக நடக்கிறது என்று அர்த்தம். கூட்டிக் கழிவி விட்டுத்தான் செல்வார்கள்.😪 இதுவரை தமிழர்களின் ஊர்வலங்கள் மற்றும் மண்டப நிகழ்வுகளுக்கு இவர்கள் வந்ததில்லை. அந்த அளவுக்கு தமிழர்கள் போவதில்லை. ஆரம்பத்தில் தயார் நிலையில் இருந்து இருப்பார்கள். பின்னர் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் தமிழர்களின் வரம்பு மீறாத ஒழுக்கம். பொது வாழ்விலும் சரி என் தனிப்பட்ட வாழ்விலும் சரி இவர்களுடன் மட்டுமல்ல காவல்துறை மற்றும் நீதித்துறையுடன் கூட முட்டுப்பட்டதில்லை கண்காணிப்பில் இருந்த போதும் கூட @valavan தூய்மையான ஃபைல் என்னுடையது. அதைத்தான் நம்மவர்கள் அதிகம் பாவித்தார்கள் என்னிடமிருந்து.
  3. என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார். இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும் நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால் ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳
  4. கட்டற்ற இமிக்கிறேசன் விடயத்தில் அவுஸ்த்திரேலியாவிடமும் சுவுஸிடமும் உலகநாடுகள் கற்றுக்கொள்ளவேணும்..
  5. பகுதியளவில் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், யார் தீவிர இடதுசாரிகள் அமெரிக்காவில் பதவியில் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தால் Bernie, AOC இனைத் தவிர வேறு யாரும் எனக்குத் தெரிய இல்லை. பேர்னியெல்லாம் நாட்டின் தலைமைக்கு வரமுடியாது என்று மக்கள் தீர்ப்பளித்த பின் மிதவாதிகளான பைடன், கமலா ஆட்சியில் தீவிரமாக இடது சார்பு இருக்கவில்லை. ஆனால், இனவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் (நான் கிறிஸ்தவ தலிபான்கள் என்பேன்), வெள்ளையினத் தேசியவாதம் இவையெல்லாம் இணைந்த தீவிர வலதுசாரி அமைப்புகள், அமெரிக்காவைப் பொறுத்த வரை இடதுசாரிகளுக்கான பின்விளைவாக உருவாகவில்லை. "குடும்பங்களில் விளைவுகள்" என்பதன் மூலம் நீங்கள் ஒரு பால் திருமணம், இடைப்பாலினர் போன்ற விடயங்களைத் தொடுகிறீர்களென ஊகிக்கிறேன். பழைய காலத்தில் ஒதுக்கல் சட்ட பூர்வமாக இருந்த நிலை மாறி, சாதாரணமான ஏற்றுக் கொள்ளல், அத்தோடு தீவிர வலதுசாரிகளிடமிருந்து பாதுகாக்க சட்டப் பாதுகாப்பு என்பன உருவானது இயற்கையாகவே நிகழவேண்டிய ஒரு சமூக மாற்றம் என்று தான் நான் நினைக்கிறேன்.
  6. இரெண்டாம் தலைமுறை கட்சி second generation party என்பது தனிக்கட்சி. உவிந்து இதில் கேட்கிறார். https://mawratanews.lk/news/uvindu-wijeweera-announces-candidacy-for-upcoming-parliamentary-election-with-second-generation-party/ மிகச்சரியான கருத்து. 2/3 வைத்து என்ன செவ்வாய் கிரகத்துக்கா போக போறார்கள். 118 உடன் நாட்டை ஆளமுடியும். 2/3 கிடைத்த ஜே ஆரும், மகிந்தவும் ஆடியதை பார்த்தபின்னும் இந்த கருத்தை ஏற்காமல் இருப்பவர்களை என்னத்த சொல்ல.
  7. கண்ணில் கனவாக நீ...!! கலையாத நீ....!! மறையாமலே நீ ... நிற்பாயா..💕
  8. இப்ப ஜேர்மனியில இருக்கிற 90 வீதமான பிரச்சனையளுக்கு உக்ரேன் சண்டைதான் எண்டு நான் சொன்னால் நம்பவே போறியள்.😂 வாற வருசம் ஜனவரி தேர்தல் வரும். 🙂 இஸ்ரேலில் உந்த பெரிய கட்சிகள் கூட்டுவாணி சித்து விளையாட்டுகள் இருக்கு கந்தையர் 😀
  9. குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
  10. ஈழம் பற்றி ஈழத்தில் பிறந்த எங்களுக்கே தெரியாத பல விடயங்களை அவர் தெரிந்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளேன். மகனுக்கு திலீபன் என்று பெயர் வைத்ததில் ஆச்சரியமில்லை.😌
  11. உங்கள் கருத்துக்கு நன்றி ஜஸ்ரின். பதவியைக் கூட விட மனமில்லாமல் இருந்தார். சமாதானப் புறாவாக வந்த சந்திரிகா என்ன செய்தார்? வடக்கில் புதைகுழி கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவரே அவரே தான். பாடசாலைக்குப் போன மாணவி கிருசாந்தி எப்படியெல்லாம் கொல்லப்பட்டார். எல்லாம் நினைவிருக்குத் தானே?
  12. நீங்கள் ஏன் விடமாட்டீர்கள்? உங்களுக்கு பணம்கொடுத்து உசுப்பிவிட மருத்துவ தீயசக்தி பில் கேட்ஸ் போன்ற பணமுதலைகள் இருக்கேக்கை நீங்கள் ஏன் கைவிடப் போறீங்கள்! ஆனால் ஒன்று என்னதான் நாடகம் போட்டாலும் இந்தியன் (வம்சாவளி) ஒருவன் அமெரிக்காவின் அதிபராக முடியாது!
  13. வாழைச்சேனை காகித ஆலையா? எனது பெரியப்பாவும் இதே போன்ற காரணங்கள் ஓய்வு பெறும் வயது வர முதலே வேலையை விட்டிட்டார். மண்வாசம் புலம்பெயர்ந்து அங்கு பிறந்தாலும் ஈர்க்கிறதோ!
  14. பழைய அரசியல்வாதிகளை தொடர்ந்தும் மக்கள் ஆட்சிசெய்ய அனுமதித்தால் 1 யூரோ பெறுமதி 500 ரூபாவுக்கும் மேலே செல்ல வைத்து, வைர விருதே வாங்கும் நிலைக்கு கொண்டுவந்திருப்பார்கள், ஐயமில்லை.🤪
  15. மிக்க மகிழ்ச்சி! தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.
  16. முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன. நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198120
  17. யாழ்கள உறவு இராசவன்னியன் அண்ணாவின் மகன் செல்வன் திலீபன் B.E.,M.S.(Singapore) மருமகள் செல்வி அருந்ததி B.E., இருவருக்கும் திருமண வாழ்த்துகள்.
  18. வாவ் வாழ்துக்கள் தோழர். நாங்கள் உங்கள் ஊர் தேர்தலில் ஆர்வம் காட்டுவது நடப்பதுதான். ஆனால் அங்கே இருந்து போட்டியில் குதிக்கும் அளவுக்கு ஈழ அரசியலில் ஆர்வம் இருப்பது புதுசு கண்ணா, புதுசு.. மெச்சத்தக்கது👍. ஒரு இடமும் வெல்லாது போனால் இன்னும் நல்லா இருக்கும். ஆனால் எனக்கு புள்ளி போயிடும். ஆகவே ஒன்றோடு பிழைச்சு போகட்டும்🤣
  19. இது இவர்களின் பிறவி குணம் தேர்தல் நெருங்கும். நேரம் இப்படி அடிபட்டு பழையபடி தனத்தனி கட்சிகளாக. பிரிந்து தேர்தலில் போட்டு போடுவார்கள் ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து இருந்தால் எப்படி தேர்தலை சந்திக்க முடியும்?? ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால் இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும் உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை 🙏 தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்
  20. ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
  21. தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை. இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
  22. சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
  23. இன்று திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும்... ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏
  24. கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்... இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். ஜேர்மனியில் வருடப் பிறப்பை அண்மித்த மூன்று நாட்கள் மட்டுமே வெடி கொழுத்த அனுமதி. நத்தார் பண்டிகைக்கும் வெடி கொழுத்துவதில்லை. மற்றைய நாட்களில் கடைகளில் கூட விற்க முடியாது. அப்படி யாரும்... தமது இருப்பில் உள்ள வெடிகளை கொழுத்தினால் காவல் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆசியர்கள்.... தமக்கு வாழ்வு தந்த மற்றைய நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
  25. சில வருடங்களின் முன்னர் அவுஸ்திரேலியாவில் இதே வேலையை பார்த்து வட இந்தியர்கள் இரவு பகல் எந்த நேரத்திலும் நடமாட முடியாதபடி அந்நாட்டு இளைஞர்கள் தாக்கினார்கள், பின்பு இன நல்லிணக்கத்திற்காக அந்த அரசு ஏஆர் ரஹ்மானை கூப்பிட்டு இசை நிகழ்ச்சி எல்லாம் நடத்திச்சிது, இசை நிகழ்ச்சிமுடிய நிகழ்ச்சியில் தமிழ்பாட்டு அதிகம் பாடினதுக்காக வடக்கனுக குழம்பினாங்களாம். அதாவது கலவரத்தை அடக்க நடந்த இசை நிகழ்ச்சியில் கலவரம்.
  26. குறிப்பாக அடிமை வரலாறு, காலனித்துவம் போன்றவற்றை மீள கிளறுவது. மன்னிப்புகேள், நட்டைஈடு கொடு என்பது. எதுவரைக்கும் இது நீளும்? எகிப்தியர்? கலிபாக்கள்? தைமூர்? சோழர்? ஜிஞிஸ்கான்?
  27. இந்த ஆய்வை வேறு எந்த அமரிக்க ஜனாதிபதிக்கு என்றால் நானும் ஏற்பேன். ஆனால் டிரம்ப் வேறு வகை. உண்மையில் அவர் ஒரு சூழ்நிலைக்கைதி. மிகவும் தெளிவான அவதானிப்பு, விளக்கம். பெனிபிட்டில் இருந்து ஆட்கள் செய்யும் களவுகளை பார்க்க முற்போக்கான சிந்தனை உள்ளவர்க்கே மண்டை வேர்க்கும் போது, சராசரி குடிமகன் வலது பக்கம் சாய்வதில் வியப்பேதும் இல்லை.
  28. அமெரிக்கவை பற்றி தெரியவில்லை. ஆனால் பொதுவாகவே மேற்கில் இடது மிதவாதிகள் கூட கொஞ்சம் ஓவராக போய்விட்டார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளது. பொருளாதார அணுகுமுறை அல்ல, பண்பாட்டு யுத்தங்களை (cultural wars) சொல்கிறேன். 2000ம்களில் பெண்ணியம், எதிர்பாலின ஈர்ப்பு உள்ளோர் போன்ற விடயங்களில் வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீராம் - பெரும்பான்மை மக்களுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் - தொடர்ந்து ஒரு பாலின உறவை civil partnership என திருமண நிகர் உறவாக்கி, இப்போ இரு பாலினத்தவர் திருமணமே செய்யலாம் எனும் நிலை உருவாகியுள்ளது. இது மட்டும் அல்ல, பல நகரங்களில் குடியேற்றம் அதன் இனப்பரம்பலை முழுவதுமாக மாற்றி சில இடங்களில் வெள்ளையினத்தவரே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதே போல் ஆணுக்குரிய அத்தனை அம்சங்களை வைத்துக்கொண்டு, நான் பெண்ணாக உணர்கிறேன் என்பவரும் தமக்கு பென்னுரிமை வேணும் என்கிறார்கள். இவற்றில் பல உங்களுக்கு, எனக்கு, நம் போன்றோருக்கு, dare I say முற்போக்கு சிந்தனை உள்ளோருக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் மேற்கில் பலருக்கு இது திகட்டி விட்டது. இதை அதி வலதுசாரிகள் நன்றாக பயன்படுத்துகிறார்கள். டிரம்ப் வெல்ல பிரதான காரணம் பொருளாதாரம்தான். இரெண்டாவது கமலா பெண் என்பது. ஆனால் இந்த பண்பாட்டு யுத்த கூறுகளும் பங்காற்றின. குறிப்பாக குடிவரவு. குடிவரவை கட்டுப்படுத்தாத எந்த அரசும் இனிமேல் மேற்கில் தூக்கி எறியப்படும். இதுதான் யதார்த்தம். மேற்கின் இடதுசாரிகள் கட்டிலாம் எழும்பி கோப்பியை மணக்க வேண்டிய தருணம் இது. இல்லை…வாசிப்பதாயும் இல்லை. கொஞ்சம் காசு கொடுத்தால் கோஷான் தான் அடுத்த உலக ஜனாதிபதி என எழுதக்கூடிய ஆள். குருமூர்த்தி ஆள் கறார் பேர்வழி, ஜோன்சனை துரத்தியது சரியே.
  29. மதிலும் இல்லை... பல இடங்களில், படங்கு துணி. (தார்ப்பா) 😂 அங்காலை ட்ரம்ப், இங்காலை குடிசை. 🤣
  30. இதை போலவே எனது சிந்திப்பும். இப்பொது ஓர் பூரண யுத்தமாக (total war) மாறிவிட்டது - அதாவது பொருளாதாரம், அரசியல், பலம், வளம் , பூகோள செல்வாக்கு, இலட்சிய கோட்பாடுகள் (சனநாயகம், தாராளவாதம், அனல் அவை வெளிப்போர்வையாக போர்வையாக பாவிக்கப்படுகிறது) போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய யுத்தமாக. டிரம்ப் விட விரும்பினாலும், deep state, trump ஐ விடாது (என்றே சிந்திக்கிறேன்) நேட்டோ, உக்கிரைன், தைவான் போன்ற விடயங்களில், வெளிநாட்டு விடயங்களில், யுத்தத்தை தவிர, அமெரிக்கா அதிபருக்கு ஏறத்தாழ ஏகபோக அதிகாரம் இருந்தாலும். ஏனெனில் விட்டால், இதன் பாதிப்பு அமெரிக்கா மேலாண்மையை ஆகக்குறைந்தது தோற்றத்தையாவது பகுதியாக துடைத்து எறியும். அனால் அதை தக்க வைப்பதே அமெரிக்காவின் கேந்திர இலக்கு. மற்றது, பெரும்பாலும் அமெரிக்கா hedge funds உக்கிரனுக்குள் கொட்டி இருக்கும் பணம். ருஷ்யா பிடித்த பகுதியே உக்கிரைன் இன் ஏறத்தாழ முழு இயற்கை வளம் உள்ள பகுதி. மற்றது, ருசியா சொல்லும் நிபந்தனைகள். கூட்டி கழித்து பார்க்கும் போது, trump இதில் கட்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.
  31. உடன்படுகின்றேன். டிரம்ப் வெற்றி அடைய நான் அவதானித்த சில விடயங்கள் இவை இந்த முறை டிரம்ப்க்கு வாக்களித்த பலரில் லத்தீன் அமெரிக்கர்களும் கருப்பின மக்களும் அடங்கும். அதுவும் இதுவரைக்கும் ஜனநாயக கட்சியின் வாக்காளறாக இருந்தவர்கள் கூட டிரம்ப் க்கு வாக்களித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆண்கள் என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெண்களும் உள்ளார்கள் Black life matter என்ற ஒரு சுலோகத்தோடு போன முறை நடைபெற்ற புரட்சி(?) உண்மையில் கருப்பின மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர்ததை விட பாதிக்கப்படும் கறுப்பின மக்களின் பிரச்சனையின் வீரியத்தை குறைக்கவே பயன் பட்டது. பல கறுப்பின கனவான்கள் அதை அப்பொழுதே உணரத் தலைப்பட்டனர். இங்கே வந்து minimum salary க்கு வேலை செய்து கடினமாக உழைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறும் புலம் பெயர் மக்களில் பெரும்பான்மையானோர் குடியரசுக் கட்சி பக்கம் சாய்கின்றனர். வேலைக்குப் போகாமல் அரசு கொடுக்கும் வீட்டில் இருந்துகொண்டு வேலை இல்லை என்பதற்கு காரண காரியங்களை சொல்லிக்கொண்டு சோம்பேறி ஆகி போதைக்கு அடிமைப்பட்டு பின்னர் homeless நிலைக்கு ஆளாகும் மக்களின் அவல நிலைக்கு புறக்காரணிகள் மட்டுமே காரணம் என்றும் பாதிக்கபடுபவர்கள் வெறும் victims என்றும் அவர்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றளவுக்கு liberalism செயல்படுகின்றது.எந்த பெரிய நகரத்தின் Downtown பக்கமும் இப்பொழுது நிம்மதியாக போக முடிவதில்லை.இதனை உழைக்கும் மக்கள் ரசிப்பதில்லை. இதுவரைக்கும் சரி என்று நம்பிக்கொண்டு இருந்த விழுமியங்கள் left wing ideology பேசுவோரால் அசுர பலம் கொண்டு தாக்கப்படும் பொழுது கேள்விக்கு உடப்படுத்தப் படும் பொழுது எதிர்ப்பு வருவதை நிறுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் நேரம் கொடுக்கப்பட வேண்டும். முக்கியமாக நாம் சரி என்று நம்பும் விஷயங்கள் பிழையோ அல்லது இதை வேறு பரிமாணத்தில் பார்க்கலாமோ என்று எண்ண பக்குவப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. இதற்க்கு திணிக்கப்படும் இடது சாரி அரசியல் உதவப் போவதில்லை. இதைத் தவிர கட்டுப்பாடு அற்ற illegal immigrants, மத்திய கிழக்கு மற்றும் ukraine போருக்கு அளிக்கப்படும் அபரிமிதமான நிதிஉதவி ஆகியவை நிஜமாகவே மத்திய தர குடும்பங்களை பாதித்து உள்ளது.
  32. இது சரி, நாயரும் (நம்பூதிரி) பிராமணரின் ஒரு கிளை. இந்த நாயர் கேரளத்தில் இருந்த நாகர்களில் இருந்து இவர்களின் தோற்றம் என்பது ஒரு கதை. அனால், நம்பூதிரிகளின் முதல் மகனுக்கு உள்ள சந்ததி நம்பூதிரிகள் என்றும், மற்ற மகன்களின் சந்ததிகள் நாயர் என்றும் பிரிந்ததாக, அப்படியான ஒரு முறை இருந்து இருக்கிறது. ஏனெனில், நம்பூதிரிகளிடம் ஒரு தாம்பதிய முறை இருந்தது - முதல் மகனின் மனைவி நம்பூதிரியாக இருக்க வேண்டும் முதல் மகன் உடன் மட்டுமே தாம்பத்திய உறவு. மற்ற மகன்களின் மனைவிகள் நாயராக அல்லது நம்போதிரிகளாக இருக்கலாம், அவர்களின் கணவனை தவிர கணவனின் மற்ற ஆண் சகோதரத்துடன் தாம்பத்திய உறவு வைக்க வேண்டும் என்று. இதில் (மற்ற மகன்களுக்கு) வந்த சந்ததிகள் தான் நாயர் என்றும், மனைவிகள் நம்பூதிரிககள் என்றாலும். இதில் தெரிவது, (வட) பிராமண வருகை (ஏனெனில் நம்பூதிரிகளின் தோற்றம் நர்மதா ஆற்றங்கரையில் என்ற நம்பிக்கை), பின் உள்ளூர் மக்களுடன் (சாதிகளுடன்) கலப்பு.
  33. நீங்கள் போர் இயல் ஆய்வாளர் அருஸ் வீடியோவை பார்த்திருக்கின்றீர்கள் 🤣 அவர் அரசியல் கட்டமைப்பு , முதலீடுகளிலும் ஆய்வாளர் போல இருக்கின்றது. தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி இவர்கள் தொல்லைகள் வேறு
  34. சரி விளங்கபடுத்துகிறேன். 1. புட்டின் எதிர்பார்த்தபடி முழு உக்ரேனையும் குறைந்த நாட்களில் பிடிக்க முடியாமல் போனது அவரின் தோல்வியே. இந்த தோல்விக்கு இரு பெரும் காரணங்கள். அ. உக்ரேனிய படைகளின் + மக்களின் ஓர்மம், செலன்ஸ்கியின் தலைமை ஆ. நேட்டோவின் உதவி. இந்த இரெண்டில் ஒன்று இல்லாவிடினும், புட்டினின் உக்ரேனை முழுமையாக பிடிக்கும் என்ணம் வெற்றியாகி இருக்கும். இதே போலவே போலந்தும். உக்ரேனை அடுத்து, மோல்டோவா, அடுத்து லத்வியா, லித்துவேனியா, போலண்ட் தான் அவரின் குறி. அப்படி இந்த நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டால் 1. இவர்கள் ஓர்மமாக ரஸ்யாவை எதிர்பார்கள். ஆனால் தனியே இது மட்டும் போதாது. 2. இவை நேட்டோ உறுப்பு நாடுகள் ஆக இருக்கும் பட்சத்தில் - நேட்டோ நாடுகள் முழுவதும் இறங்கி ரஸ்யாவை சாத்தும். ஆனால் நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகினால்? நேட்டோவே கிடுகிடுத்து விடும். ஜேர்மனி - பொருளாதாரம் இருக்கும் அளவுக்கு பலம் இல்லை. மிஞ்சுவது பிரான்ஸும், யூகேயுமே. இவர்களால் ரஸ்யாவை ஒரு அளவுக்கு மேல் ஈடு கட்ட முடியாது. ஆகவே சேர்ம்பளின் ஹிட்லரோடு செய்த உடன்படிக்கை போல் விட்டு கொடுப்பார்கள். முன்பை போல போலந்தை தியாகம் செய்வார்கள். அல்லது சண்டைக்கு போவர்கள். விட்டு கொடுப்போ, சண்டையோ இரெண்டுமே நம் எல்லாருக்கும் ஆப்புத்தான். இதுதான் நேட்டோவில் இருந்து அமரிக்கா விலகினால் மேற்கு ஐரோப்பாவின் கெதி. இதனால்தான் ஒவ்வொரு திரியிலும் நேட்டோ ஐரோப்பாவின் பாதுகாப்பு வேலி என எழுதினேன். டிரம்ப் விலக நினைத்தால் அமெரிக்காவின் ஆழ-அரசு அதை தடுக்கும் என்கிறார்கள். பார்ப்போம் நேட்டோவில் இருந்து அமெரிக்காவை விலக்குவாரா இல்லையா என. விலக்கினால், டக்கெண்டு ஆர்ஜெண்டினா, கியூபா, பொலிவியா எண்டு போய்விட வேண்டும்🤣.
  35. நான் கூறியதுதான் நடந்தது நடக்கவில்லை என்பதனை பற்றி கவலைப்படுகின்ற ஆள் கிடையாது ( பாடசாலை முறைமைகளினூடாக எப்போதும் சரியாக இருத்தல்), தவறாக சொல்வதால் எந்த இழப்பும் தனிப்பட ஏற்படுவதில்லை, ஆனால் தவறை நியாயப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என புரிந்ததனால் தவறாக இருந்தால் அதற்காக இலகுவாக ஒரு மன்னிப்புடன் முன்னேற முடியும் அந்த தவறுகளை நியாயப்படுத்தி அதே இடத்தில் தேங்கி விட விருப்பம் இல்லை, அதனால் தவறை நியாயப்படுத்தும் ஆளும் கிடையாது. 😁
  36. இதுவும் ஒரு காரணமே. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் இருந்து சமூக மத சுதந்திரம் வேண்டி அமெரிக்கா போனார்கள். போனவர்கள் தாம் போனபோது கடைபிடித்த அன்றைய நிலையிலேயே தங்கி விட, ஐரோப்பா முற்போக்காகி எங்கோ போய்விட்டது. கமலா பெண் என்பதும் கணிசமான பத்தாம்பசலிகள் டிரம்புக்கு போட காரணம்.
  37. ஜேர்மனியில் இதே போல் பல கொம்பனிகள் மூடப்பட்டுக்கொண்டு வருகின்றது. ஆனால் ஊடகங்கள் இதை சொல்லாமல் உக்ரேன் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஏனையவற்றை இருட்டடிப்பு செய்கின்றார்கள். இதன் பலன் இன்றைய அரசு கவுழும் தறுவாயில் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் காரணம் உக்ரேனுக்கு ஆதரவளிக்கின்றோம் என சொல்லிக்கொண்டு ரஷ்யாவின் வியாபார தொடர்புகளை துண்டித்தது. கடந்த ஒரு வருடமாக உக்ரேனுக்கான அமெரிக்காவின் போர் செலவினை ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும் தான் தாங்கிக்கொண்டு நிற்கின்றன என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
  38. காத்துப்போன யு டியூப் புளுகுணிக் காரருக்கு பலமாகவே தலையில் ஒரு குட்டு . .......... எதோ அவர்களும் பிழைக்கட்டும் . ........ நல்ல கவிதை . ......! 👍
  39. எமது அரசியல் தலைவர்கள் காட்டிய பாதை. நாங்களும் சேர்க்கிறோம் நீங்களும் எப்படி வேணுமானாலும் சேருங்கள்.
  40. ஓம்...நானும் பாத்தன்....பாத்தன். உவையளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய் மண்வெட்டிய குடுத்து தோட்டம் கொத்த விடவேணும். 🤣
  41. ஓமோம்...இந்தக் காச்சல் இப்ப கனடாவிலையும் கூடிவிட்டது...விசிட்டர்கள் அனைவரும் போனும் கதையும்தான்..கனடிய சட்ட திட்டங்கள் காற்றில் பறக்குது...கனடாக்க்காரரின் யூடியூப் பார்க்க ஆயிரக்கணக்கில் சனம் ..ஏனென்றாள் இவை அவைக்கு கனடாவுக்கு வாறதுக்கு வழிகாட்டியாம்...அம்மம்மாரே இங்கு நிறய நடிகைகள்... இது எங்குபோய் முடியுமோ..
  42. உந்த தமிழ் யூடியூப்காரர்ர சேட்டையளைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.உங்கள் கவிதை ஒரு செருப்படி. ஆனால் எல்லா தமிழ் யூடியுப்காரரும் மோசமானவர்கள் இல்லை. ஒரு சில நியாயபூர்வமானவர்களும் இருக்கிறார்கள்.
  43. வெளியில் எளிமையாக திரிகின்றார்கள். தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழ் வேட்பாளர்களை மக்கள் கணக்கெடுப்பதாக தெரியவில்லை. இதை எனக்கு சொன்னது வேட்பாளராக நிற்கும் என் உறவினர்.🙂 எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள்.
  44. தேடிப் பார்த்ததில், அப்பா ஒரு நாயர் என்றும், அம்மா ஒரு பிராமணர் என்றும் இருக்கின்றது, கோஷான். அப்புறம் நாயருக்கும், நாடாருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குதா என்று தேடியதில்........ அப்படி ஒன்றும் இல்லை என்பதுடன், நாயர்கள் நாடார்களை விட அடுக்கில் சில படிகள் மேலே என்ற அற்புதமான தகவல்களும் அங்கங்கே கொட்டிக் கிடக்கின்றது. பூமி முழுவதும் அடிவரை எரிந்து, மீண்டும் உயிர்கள் தோன்றினாலும், இந்திய நிலத்தில் இது எங்கேயாவது அழியாமல் ஒட்டியே இருக்கும் போல..............
  45. @goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன் ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.
  46. இந்தப் பழமொழி அரசியல் நிர்ப்பந்தத்தினாலோ தொழில் வளம் இல்லாமையாலோ புலம் பெயர்வோர்க்கு/ புலம் பெயர வைக்கப்பட்டோர்க்குப் பொருந்தாது என்பது என் எண்ணம். உங்கள் பேரன் பிறந்து வளர்ந்த மண்ணே ஜெர்மனி என்பதால், புலம் பெயர்ந்த வலி அவருக்கு ஓரளவு ஏற்படும். உதாரணமாக, அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவப் பருவக் கவிஞர்களை வைத்து வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அன்று அந்நிகழ்ச்சியில் அமெரிக்கர்களைக் கவர்ந்த பதினேழு வயது மாணவி மாயா ஈஸ்வரன், தனது பாலக்காட்டு வேர்களை அமெரிக்காவில் தொலைத்த புலம் பெயர்ந்த தமிழச்சி. தன் கவிதையை உணர்வு பொங்க வாசித்தாள். அதில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அனைவரையும் கவர்ந்த வரிகள், “எனது அடையாளம் உதிர ஆரம்பித்தது - முடி உதிர்வதைப் போல. கூந்தலை முழுவதும் இழந்து போகும் பீதி என் மனதில்.” கவிதையைக் கேட்டு மிச்சேல் ஒபாமாவே உணர்ச்சி வசப்பட்டார். அக்குழந்தையை அருகில் அழைத்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டார். தாமும் அந்த ரகம் தான் என நினைத்திருப்பாரோ? எது எப்படியாயினும் பேரன் சற்றுப் பெரியவனாகும்போது உலகின் நிதர்சனங்களை எடுத்துச் சொல்லுங்கள். அதுவரை ஏதாவது பொய் சொல்லியாவது சமாளியுங்கள். உயிருக்கு உயிரான என் தாத்தா இறந்தபோது என்னிடம் சொல்லப்பட்ட பொய், "தாத்தா சாமி அழைத்ததால் போயிருக்கிறார். சிறிது காலம் கழித்து உன்னிடம் வந்து விடுவார்" என்பது. எனக்குப் பேத்தி பிறந்த பிறகும் என் தாத்தா இன்னும் வரவில்லை; காத்திருக்கிறேன். உங்கள் பேரனின் கேள்வியைத் தாண்டி, உங்கள் கேள்வியில் உங்கள் மனவலி வெளிப்படுவதாக உணர்கிறேன். அது எனது கற்பனையாகவும் இருக்கலாம். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த ஒருவர் தொழில் நிமித்தமாக சென்னையில் வாழ்வதன் வலியைப் பதிவு செய்ததை முகநூலில் கண்டேன். அப்பதிவின் இணைப்பைக் கீழே தந்துள்ளேன். அந்தத் துன்பத்தையே தாளாத நான் நாடு விட்டு நாடு சென்றோரில் சிலருக்கு/பலருக்கு ஏற்படும் வலியை என்னவென்பேன் ? இது தொடர்பில் "பரந்து கெடுக இவ்வுலகியற்றியான்" என்பதுவே என் கையறு நிலை. https://www.facebook.com/share/p/18hDk3PFjy/
  47. எல்லோரும் நிறைய எழுதி விட்டார்கள் அவர்கள் எழுதாமல் விட்டவற்றை எழுதுகிறேன் 1, வேலைவாய்ப்பு இல்லை 2, எப்படி எத்தனை. வருடங்களாக பத்தாவது வகுப்பு படித்தாலும் சித்தி அடைய முடியவில்லை 🤣 3,..எனவே பகல் 7 மணிக்கு வாசிகசாலை மதிலில். ஏறி இருந்து பாடசாலைகளுக்கு போகும் பெண் பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருப்பதுடன் கிண்டலும் பண்ணுவதுண்டு மதியம் வீட்டில் அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு கொஞ்சம் நித்திரை கொண்ட பின்னர் சரியாக பிற்பகல் 4 மணிக்கு அதே மதிலில். ஏறி இருந்து விடுவேன் [ இப்படி கடும் முயற்சிகள் செய்தமையால். தான் பாட்டி மாட்டிக்கொண்டார் ] 4,.....எங்களுக்கு நிறைய தோட்டங்கள் இருந்தது ஆனால் செய்ய விரும்பவில்லை ஏனெனில் அது ஒரு கூடாதா தொழில் ஜேர்மனியில் பல வருடங்களாக தோட்டத்தில் வேலை செய்தேன் பணம் பணம்,.......ஜேர்மன் பணத்தை எட்டால். பெருக்க தொடங்கிய நாங்கள் இன்று 360 ஆல். பெருக்கிக்கொள்கிறோம். 5,....இந்த நாட்டு கடவுச்சீட்டில் உலகத்தை சுற்றி வரலாம். 6. பல்கலைக்கழகம் வரை படிக்கலாம் 7,.வேலைவாய்ப்பு நேரடியாக விண்ணப்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் முடியும் டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகள் பின்னால் வருடக் கணக்கா அலைய வேண்டியதில்லை 8,..கூலி வேலை. செய்பவனுக்கும். ஒய்வு ஊதியம் உண்டு வயோதிப காலத்தில் பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை ஏதாகினும் பிழையாக. எழுதி இருந்தால் மன்னியுங்கள் பாஞ்ச் அண்ணை 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.