Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46783
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31968
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/08/24 in Posts

  1. குருக்கள்... முகம் நிலத்தில் பட, மிகப் பலமாக விழுந்துள்ளார். விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன். 🙏 மேலே... உள்ள காணொளியில், குருக்கள் விழுந்தது கடினமான கான்கிரீட் தரை போலுள்ளது. சில வருடங்களுக்கு முன், இங்கு ஒரு கோவில்... தேர்த் திருவிழாவில், தூக்குக் காவடி எடுத்த போது... அளவுக்கு மீறிய ஆட்டத்தால், தூக்குக் காவடி முறிந்து... விபத்துக்குள்ளானது. அதன் பின்... தூக்குக் காவடிக்கு, காவல்துறையினர் தடை விதித்து விட்டார்கள். நம்மவர்கள்.... ஆர்வக் கோளாறில் எல்லா இடமும், எல்லாம் செய்ய வெளிக்கிடுவார்கள். ஆனால்... பாதுகாப்பைப் பற்றி அறவே சித்திக்காமல், சொதப்பி விடுவார்கள். யாராவது புத்தி சொல்லப் போனாலும், காது கொடுத்து கேட்கும் குணம் அறவே இல்லை. எல்லாம்... தமக்குத் தெரியும் என்ற மாதிரி நடந்து கொள்ளும் கூடாத பழக்கம் பலரிடம் உள்ளது.
  2. சாணக்கியன் யாழ்களம் வந்துபோறவர் எண்டு நினைக்கிறன் 🤣
  3. ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம் அவன் தமிழகத்தில் விதைப்பது ஈழத்தில் எங்கள் தலைவன் விதைத்தது.. தமிழ் தேசியம்.. அந்த தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெற்ற விஜய் போன்றவர்கள்கூட உச்சரிக்கவைத்த முன்னத்தி ஏர் சீமானுக்கு… இனிய அகவை தின வாழ்த்துக்கள்.. சீமான் பாடியதில் எனக்கு மிகப்பிடித்தது👇 விதைத்துக்கொண்டிருங்கள்.. இன்று விஜைபோல் இன்னும் பல விருட்சங்கள் தமிழ்தேசியத்தை பேசட்டும்..🙏
  4. அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ, அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ, ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்கிறது...... ஆமாம் பல நூறு ஆண்டுகளாக நாம் அடிமையானவர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்து வரும் தமிழர் இன கூட்டத்தை சாட்டையால் அடித்து, நீ பெருமைமிகு தமிழ் இனத்தின் மகன் என்றும்.... உன் தாய்மொழி உலகில் ஆக சிறந்தது என்றும்........ நீ நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவன் என்றும்..... உன் முன்னோர்கள் அறத்திலும் வீரத்திலும் மாண்பிலும் ஆகப் பெரும் தலைவர்கள் என்று உணர்த்தி இருக்கிறாய்... அந்த நன்றி கடனோடு உன்னை வாழ்த்துவதில் மகிழ்வே... தமிழர் வரலாற்றில் நீயும் பேசப்படுவாய்... வாழ்த்துக்கள் சீமான் அண்ணா💐💐💐 குகன் அருமைநாட்டார்
  5. இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
  6. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஸ்ட சட்டத்தரணி கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர், திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும் TNPF Manifesto-2024 Parliamentary Election https://thinakkural.lk/article/311858
  7. பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள். இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள் போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர். இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார். https://www.virakesari.lk/article/198152
  8. ஆண்கள் ஏன் மேலாடை அணியக் கூடாதென்ற வழக்கத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. அவை எதுவுமே இன்றைய உலகத்திற்கு பொருந்துபவை அல்ல மற்றும் அறிவியல் காரணம் என்று கூறப்பட்டுள்ள ஒன்று மிகத் தவறான ஒரு வகை விஞ்ஞான விளக்கம். ஆனால், ஒருவர் இன்னொருவர் மீதோ அல்லது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினர் மீதோ சேறடிப்பதற்காகவே இந்த விளக்கங்கள் பயன்படும் என்றால் அந்தக் காரணங்களை இங்கு எழுதாமல் விடுதலே நலம் என்று நினைக்கின்றேன். இதே போல உலகம் முழுவதும் நடைமுறைகள் உண்டு. மொத்த மனித குலமுமே ஆராய்ந்து, அறிந்து கைவிட வேண்டிய வழக்கங்கள் இன்னும் நிறையவே எங்கும் உண்டு. இவை காலப்போக்கில் கைவிடப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
  9. "வெளியுறவுக் கொள்ளை"? என் கண்பார்வை பிரச்சினையா அல்லது இந்த இடிவிழுவார் இவ்வளவு முக்கியமான ஆவணத்தில் கூட தமிழைச் சரிபார்க்கவில்லையா?
  10. தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ணி கவலை இல்லை இவர்களோடு கூட நின்று மேடை போட்டு முழங்கியது போலவே அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று நல்லாத் தான் நடிக்கிறார்கள் அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக ஆளுக்கு ஒரு சின்னத்தோட வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல சிலர் சமத்துவமே வந்தது போல் தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் நினைக்கவே கவலையாய் இருக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை ஏதோ ஒரு அலை எல்லோரையும் மயக்கத்தில தள்ளுது தமிழ் யூடியூப் தம்பிமாரே எல்லோரையும் சொல்லவில்லை நல்லோரும் உண்டு லைக்கை மட்டும் பார்க்காமல் கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள் அறிவாய் எதையும் அணுகுங்கள். பா.உதயன்✍️
  11. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து எறிந்து மற்றவர்களின் வீடுகளை உடைத்து பெருமைப்பட்டு இப்போ இருக்க வீடேயில்லாமல் ஐயா புலம்பிக் கொண்டே திரிகிறார். தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
  12. சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், மகாகவி பாரதியார் எல்லாரும் தலைப்பாகை கட்டிய படியால்... பஞ்சாப் சீக்கியர்களாக இருப்பார்களோ.... 😂 இருக்கும், இருக்கும். 🤣
  13. யாரு @அக்னியஷ்த்ரா வா? பிரதேசவாதம் தலைகேறி, டீ ஆர் ஓ பெண்ணை வெலிகந்தையில் வைத்து வன்புணர்ந்து, டம்ப் பண்ணியவருக்கு ஆதரவாக வாக்கு போட என 2020 இல் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு டிக்கெட் எடுத்து போனேன், என்னை சூழ உள்ளவரையும் அவருக்கே வாக்கு போடுமாறு கேட்கிறேன் என யாழில் எழுதிய அண்ணல் அவர். அதே போல் புலம்பெயர் தமிழருக்கும், வெள்ளையினதவருக்கும் பிறந்த பிள்ளைகளை “செம்படைகள்” என யாழில் எழுதியவரும் இவரே. சாதிய எண்ணம், பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் எல்லாம் அண்ணன் தம்பிகள்தான். கன்னங்கர கொடுத்த இலவச கல்வி, தகமைகளை கொடுக்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்பை, செல்வத்தை கொடுக்கும், மனத்தின் அழுக்கை நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். உண்மைக்கு நன்றி.
  14. பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர். எழுதியவர், சைமன் டுலெட் பதவி, பிபிசி செய்தியாளர் "எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு அதன் முதல் நாள் உற்சாகமும், அச்சமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஷிவான் மற்றும் ஆடமுக்கு முதல் நாளே மோசமாக இருந்தது. இருவரும்` Foundem’ என்னும் இணையதளத்தை தொடங்கியபோது, அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கு பெரிய பிரச்னை வரப்போகிறது என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கூகுள் ஸ்பேம் ஃபில்டர்கள் ஏற்படுத்திய பாதிப்பு? கூகுள் தேடுபொறியின் தானியங்கி ஸ்பேம் ஃபில்டர்களில் ஒன்றின் காரணமாக `ஃபவுண்டெம்’ இணையதளம் மீது கூகுள் சர்ச் பெனால்டி (`Google search penalty’) விதிக்கப்பட்டது. இது அவர்களின் இணையதளத்தின் வணிகத்தை பாதித்தது. விலை ஒப்பீடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ராஃப் தம்பதியினரின் `ஃபவுண்டெம்’ இணையதளம், ஷாப்பிங் செய்பவர்கள் வெவ்வேறு விற்பனையகங்களில் விலை ஒப்பீட்டை தெரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி பயனர்கள் விலை ஒப்பீடு தொடர்பான தகவல்களை பெற `ஃபவுண்டெம்’ லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் பட்டியலிட்டிருக்கும் பொருட்களை கிளிக் செய்யும் போது ராஃப் தம்பதிக்கு வருவாய் வரும். ஆனால், கூகுள் விதித்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டது. இணையதளத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும், விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் தொடர்பான கூகுள் தேடல் முடிவுகளின் பட்டியலில் `ஃபவுண்டெம்’ மிகவும் பின்தங்கியது. "எங்கள் இணையதளத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தோம். கூகுள் தேடலில் அவை எவ்வாறு தரவரிசை செய்யப்படுகின்றன என்பதை பார்த்தபோது, அவை அனைத்தும் உடனடியாக வீழ்ச்சியடைந்ததைக் கவனித்தோம்" என்று ஆடம் கூறுகிறார். கூகுளுக்கு எதிரான நீடித்த சட்டப் போராட்டம் ஃபவுண்டெம் தளத்தின் முதல் நாள் திட்டமிட்டபடி போகவில்லை. இது 15 ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. தம்பதியினரின் சட்டப்போராட்டத்தின் இறுதியில் கூகுளுக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் (ஏறக்குறைய 26 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நம்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் உலகளாவிய ஒழுங்குமுறையில் இந்த வழக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்பட்டது. ஜூன் 2017இல் வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் ஏழு ஆண்டுகள் போராடியது. இந்த ஆண்டு செப்டம்பரில், ஐரோப்பாவின் உயர் நீதிமன்றமான `ஐரோப்பிய நீதிமன்றம்’ கூகுளின் மேல்முறையீடுகளை நிராகரித்தது. அந்த இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு, ரேடியோ 4 இன் தி பாட்டம் லைனிடம் ஷிவான் மற்றும் அடாம் கொடுத்த முதல் நேர்காணலில், தங்கள் இணையத்தளத்திற்கு ஏற்பட்ட தடங்கலை ஆரம்பத்தில் சிறிய பிரச்னை தான் என்று நினைத்ததாக விளக்கினர். 55 வயதான ஷிவான் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்கள் இணையதளத்தை கூகுள் ஸ்பேம் என்று தவறாக கருதியிருக்கலாம் என்று நினைத்தோம். சரியான இடத்தில் புகார் அளித்தால், இந்த தவறு சரி செய்யப்படும் என நினைத்தோம்.” என்றார். ஆடம் (58) பேசுகையில், "இணையதளத்துக்கு பயனர்கள் வரவில்லை எனில், டிராஃபிக் ஏற்படாது (Website Traffic). எனவே வருவாயும் வராது” என்றார். அந்தத் தம்பதியினர் இணையதளத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கூகுளுக்குப் பல கோரிக்கைகளை அனுப்பினர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், எதுவும் மாறவில்லை என்றும், தங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையில், அவர்களின் இணையதளம் மற்ற தேடுபொறிகளில் (search engine) எந்த பிரச்னையும் இன்றி தரவரிசையில் இருந்தது. ``ஆனால் மக்கள் பெரும்பாலும் கூகுள் தேடுபொறியை தான் பயன்படுத்துகிறார்கள்" என்பது ஷிவானின் கருத்து. அதன் பின்னர், கூகுளால் தங்கள் வலைதளம் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை தம்பதியினர் அறிந்து கொண்டனர். 2017 ஆம் ஆண்டில் கூகுள் தவறிழைத்தது உண்மை எனக் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, கெல்கு (Kelkoo), டிரிவாகோ (Trivago) மற்றும் யெல்ப் (Yelp) உள்ளிட்ட 20 நிறுவனங்கள் கூகுள் மீது குற்றம்சாட்டி இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னதாக, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆடம், ஒரு நாள், தனது அலுவலகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஃபவுண்டெம் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார். விலை ஒப்பீட்டு இணையதளங்கள் ஆரம்ப நிலையில் இருந்த காலம் அது. அந்த நேரத்தில், ஒவ்வொரு இணையதளமும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது. ஆனால், ஃபவுண்டெம் இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஆடைகள் முதல் விமானங்கள் வரை பல வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷிவான் பல உலகளாவிய பிராண்டுகளுக்கு மென்பொருள் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். "எங்கள் இணையதளம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார். ஐரோப்பிய ஆணையத்தின் தீர்ப்பு ஐரோப்பிய ஆணையம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பில், கூகுள் தனது சொந்த ஒப்பீட்டு ஷாப்பிங் சேவையை தேடல் (google search) முடிவுகளில் சட்டவிரோதமாக ஊக்குவித்ததும், இதனால் இதுதொடர்பான இணையதளங்களை பின்னுக்குத் தள்ளியதும் கண்டறியப்பட்டது. ``பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஃபவுண்டெம் நிறுவப்பட்ட காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, கூகுள் வேண்டுமென்றே இவ்வாறு செய்யும் என்பதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் இதுபோன்ற இணையதளங்கள் மிகவும் குறைவு” என்று ஆடம் கூறுகிறார். அத்தம்பதியினர் 2008 ஆம் ஆண்டின் இறுதியில், ஏதோ தவறு இருப்பதாக சந்தேகிக்கத் தொடங்கினர். கிறிஸ்துமஸுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு அவர்களின் இணையதளம் திடீரென மெதுவாகிவிட்டதாக எச்சரிக்கை செய்தி வந்தது. இதுபற்றி ஆடம் சிரித்துக்கொண்டே கூறுகையில், “முதலில் சைபர் தாக்குதல் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் அனைவரும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். டிராஃபிக் அதிகமானதால், தளம் மெதுவாகிவிட்டது” என்றார். பட மூலாதாரம்,FOUNDEM சேனல் 5 இன் தி கேட்ஜெட் ஷோவில் பிரிட்டனின் சிறந்த விலை ஒப்பீட்டு இணையதளமாக ஃபவுண்டெம் தளத்தைப் பெயரிட்டது. ஷிவான் கூறுகையில், "அந்த எச்சரிக்கை செய்தி மிகவும் முக்கியமானது. அதற்குப் பிறகு நாங்கள் கூகுளைத் தொடர்புகொண்டு, 'கூகுள் பயனர்களுக்கு எங்கள் இணையதளம் தெரியவில்லை. கூகுள் தேடலில் எங்கள் இணையதளம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை' என்று கூறினோம்” என்று விவரித்தார். "அப்போதும் கூகுள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நீதியை பெற போராட வேண்டும் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் ஆடம். ராஃப் தம்பதியர் பத்திரிகையாளர்களிடம் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், அதில் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, ஆடம் இதுதொடர்பாக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஒழுங்கமைப்புகளிடம் வழக்கை முன்வைத்தார். இதற்குப் பிறகு, இந்த விவகாரம் ஐரோப்பிய ஆணையத்திடம் சென்றது. 2010-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. தம்பதியினர் பின்னர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு அறையில் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தங்கள் முதல் சந்திப்பை நடத்தினர். அந்த நேரத்தை நினைவு கூர்ந்த ஷிவான், "ஒழுங்குமுறை அதிகாரி என்னிடம் கேட்ட ஒரு விஷயம் என்னவென்றால், இது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்னை. ஆனால் இவ்வாறு புகார் வருவது இது தான் முதல்முறை. இப்படி நடந்ததாக இதுவரை யாருமே வரவில்லையே” என்றார். ஷிவான் மேலும் பேசுகையில் "எங்களும் மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறது என 100% உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் இணையத்தில் உள்ள அனைத்து வணிகங்களும் கூகுளில் இருந்து அவர்கள் பெறும் டிராஃபிக்கை சார்ந்துள்ளது." என்றார். "காயப்படுத்துபவர்களை நாங்கள் விரும்பவில்லை" ஒழுங்குமுறை ஆணையம் இருந்த கட்டடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள ஹோட்டல் அறையில் தம்பதியினர் தங்கியிருந்தனர். ஷிவான் மற்றும் ஆடம் தங்களது தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்கள் மட்டுமின்றி மற்ற ஷாப்பிங் இணையதளங்களும் காத்திருந்தன. ஒழுங்குமுறை ஆணையர் மார்கிரேத் வெஸ்டேஜர் இறுதியாக முடிவை அறிவித்தார். முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் உடனடியாக அவர்கள் கொண்டாடவில்லை. காரணம் இந்த முடிவை ஐரோப்பிய ஆணையம் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரின் கவனமும் குவிந்தது. " கூகுள் எங்களுக்கு இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது அவர்களுக்கு துரதிருஷ்டவசமாகிவிட்டது" என்கிறார் ஷிவான். "நாங்கள் இருவரும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதமற்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையில் காயப்படுத்துபவர்களை (bullies) விரும்புவதில்லை," என்று அவர் கூறினார். கடந்த மாதம் இந்த வழக்கில் கூகுள் தோல்வியடைந்த போதிலும், ராஃப் தம்பதியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES கூகுளின் அணுகுமுறை இன்னும் மாறவில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஆணையம் அதன் புதிய டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் கீழ் கூகுளின் முதன்மை நிறுவனமான `ஆல்பாபெட்’ (Alphabet) மீது விசாரணையைத் தொடங்கியது. கூகுள் தேடல் முடிவுகளில் கூகுள் இன்னும் அதன் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கமாக இருந்தது. கூகுள் தரப்பு விளக்கம் கூகுள் செய்தித் தொடர்பாளர், "ஐரோப்பிய நீதிமன்றத்தின் முடிவு 2008 மற்றும் 2017க்கு இடையில் தயாரிப்பு முடிவுகளை நாங்கள் எவ்வாறு காட்டினோம் என்பது பற்றியது தான்." என்றார். அவர் மேலும் கூறுகையில் : "ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு இணங்க 2017 இல் நாங்கள் செய்த மாற்றங்கள் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டன. 800க்கும் மேற்பட்ட ஒப்பீட்டு ஷாப்பிங் சேவை இணையதளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகள் பதிவானது." "எனவே , ஃபவுண்டெம் நிறுவனர்களை கூற்றுக்களை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம், மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்கும் போதும் அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார். ராஃப் தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர், இது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விசாரிக்கப்பட உள்ளது. ஆனால், ராஃப் தம்பதி இறுதியில் வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், அது அவர்களுக்கு அதிக பலனைத் தராது. ஏனெனில், 2016 இல் ஃபவுண்டெம் இணையத்தளத்தை மூட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. கூகுளுக்கு எதிரான இந்த நீண்ட போராட்டம் தம்பதியருக்கும் கடினமாக இருந்தது என்கின்றனர். ஆடம் கூறுகையில், "இந்த போராட்டம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்திருக்க மாட்டோம்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp3nl3dneelo
  15. இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁
  16. நான் இருக்கிற இடத்தில என்னை பாக்கிஸ்தானியன்,இந்தியன்,பங்களாதேஷ் எண்டு ஆளுக்காள் தங்கட இஷ்டத்துக்கு கணிச்சு வைச்சிருக்கிறாங்கள். நான் சிலோன் ஆள் எண்டு சொல்லியும் நம்புறாங்கள் இல்லை.இப்ப நான் ஜேர்மன் சிற்றிசன் வேற.....நான் கொண்டு வந்த சிலோன் கறுப்பு பாஸ்போர்ட்டும் ஆதாரமாய் காட்ட கைவசம் இல்லை. இருந்தாலும் நான் இப்ப அடையாளம் மாறீட்டன். எனவே ஜேர்மன்காரனுக்கு எப்ப அந்த மூண்டு நாட்டுக்காரங்களில கோபம் வருதோ அப்பெல்லாம் குமாரசாமிக்கு அடி நிச்சயம்.
  17. நாலு வரியிலை சொல்லும் விடயத்தை நீட்டி முழக்கி பார்க்கிறவனின் நேரத்தை விரயமாக்குகிறார்கள் .
  18. "மர்ம காடு" 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' பற்றி அலசி ஆராய, அதன் மூலப்பிரதியான மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலின், ஆங்கில பிரதியை [1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படட] வாசிக்கத் தொடங்கினேன். ஆறாம், ஏழாம் அத்தியாயத்தில், இலங்கைக்கு விஜயனின் வருகை மற்றும் அவனின் ஆட்சி மிக சுவாரசியமாக பல பொய்களையும் நம்ப முடியாத நிகழ்வுகளையும் கொண்டு இருந்தன. விஜயனும் தோழர்களும் இலங்கைத் தீவில் கரை ஒதுங்கி இலங்கைக்கு வந்தேறு குடிகளாக நின்ற போது 'அங்கு பெண் நாய் உருவில் குவேனியின் பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு யக்ஷினி (Yakshini) தோன்றினாள் என்றும், குவேனி 'பதினாறு வயதுப் பருவ மங்கையின் எழிலுருவை எடுத்துக் கொண்டு நாநாவிதமான அணிகலன் பூண்டவளாக ஆகி விஜயனுடன் இருக்கும் வேளை ' என ஒரு மர்ம தீவாக இலங்கையை வர்ணிக்கத் தொடங்கியது. நேரம் இரவு பன்னிரண்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது. என்னை அறியாமல் உறக்கம் என்னைக் கவ்விக் கொண்டது. கடல் அலைகள் கட்டுப்பாடு இழந்து, கரையை நோக்கி அசுர வேகத்தில் ஏறி இறங்கி முட்டி மோதின. நான் பயணம் செய்த படகும் அதில் அகப்பட்டு, உடைந்து சிதறி, நல்லவேளை, நான் ஒரு உடைந்த பலகைத் துண்டு ஒன்றைப் பிடித்து எதோ ஒரு கரை சேர்ந்தேன். அங்கே ஒரே அமைதி, சற்று தூரத்தில் பெரும் காடு, என்றாலும் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் பேரிரைச்சல் மட்டும் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு அந்த இரைச்சல் எரிச்சலை ஊட்டியது. அதில் இருந்து தப்ப காட்டை நோக்கி திரும்பி பார்க்காமல் ஓடினேன். அது ஒரு ஒரு பரந்த மற்றும் பழமையான காடு போல் இருந்தது. மகாவம்ச கதையில் வாசித்த நிகழ்வுகளின் ஆர்வத்தால் உந்தப்பட்ட நான், என் முதல் அடியை அந்த மங்கிய இருண்ட காட்டுக்குள் வைத்தேன். மர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பலவற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் அவ்வப் போது விஞ்ஞானத்தால் தீர்க்கப் படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். எனவே அது ஒரு மர்ம காடு போல் இருந்தாலும், நான் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்த காட்டின் புதிரான கவர்ச்சி என்னை உள்ளே வா வா என்று அழைத்தது. நான் தனி மனிதனாக, விசித்திரமான அதிசயங்களைப் மகாவம்சத்தில் வாசித்து இருந்ததால், மற்றும் அவற்றை வெறும் மூடநம்பிக்கை அல்லது புரளி என்று நம்பியவன் என்பதால், எந்த பயமும் தயக்கமும் இன்றி, சூரியன் வானத்தை தங்க நிறத்தில் வரைந்த போது, அதன் வெளிச்சம் சிறு சிறு கீறல்களாக காட்டுக்குள் எனக்கு வழிகாட்டிட உள்ளே , அதன் இதயமான, மையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். என் வருகையை அங்கீகரிப்பது போல், சலசலக்கும் இலைகள் மற்றும் சலசலப்பான கிசுகிசுக்களுடன் காடு என்னை வரவேற்றது. படிப்படியாக, நான் ஆழமாகச் காட்டிற்குள் சென்றேன், என்னைச் சுற்றியுள்ள உலகம் ஒரு கனவுக் காட்சியாக எனக்கு தெரிந்தது. ஒளிரும் பூஞ்சைகள் (Fungii) பாதையை ஒளிரச் செய்தன, மற்றும் விசித்திரமான தாவரங்கள் மென்மையான காற்றுடன் நடனமாடின. காடு இப்ப உண்மையில் ஒரு மர்மமாகவே எனக்குத் தெரிந்தது. நான் எனது பயணத்தை மேலும் தொடர்ந்தபோது, நிலவு ஒளிரும் குளத்தின் மென்மையான பளபளப்பில் கவர்ந்த நான், அதன் அழகில் மயங்கி, ஒரு வெட்டவெளியில், நீரின் ஓரத்தில் அமர்ந்தேன். அப்போது தான் அவளைக் கண்டேன் - என்னை அப்படியே மயக்கும் கருணையின் தரிசனம் அது!பிரபஞ்சத்தின் ஆழத்தை பிரதிபலிக்கும் கண்கள் மற்றும் குளிர்ந்த ஆத்மாவின் இதயத்தை உருக்கும் புன்னகையுடன் ஒரு அழகிய நேர்த்தியான பெண் அவள். அவளை எப்படி நான் வர்ணிப்பேன் என்று எனக்குப் புரியவில்லை. அத்தனை அழகு அவள். ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தெய்வ தாசிகளைப் பழிக்கத்தக்க அற்புதமான அழகு. அழகிய அகன்ற விழிகளைக் கொண்ட ஊர்வசி இவளிடம் தோற்று விடுவாள். கட்டழகியான இந்த மங்கை எங்கே? என் மனம் என்னிடம் இப்ப இல்லை. என் கண்கள் இமை வெட்டவில்லை. ''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே." நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள், இப்படி அவள் அழகு தேவதையாக இருந்தாள். நான் தெரிந்தும் தெரியாமலும் காட்டுக்குள் நுழைந்தாலும், - ரம்பை, ஊர்வசியை விட மிக சிறந்த மற்றொரு அழகியை பிரம்மா படைத்தார். அது தான் திலோத்துமை. அவளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் - ஈடிணையற்ற இந்த அழகியைப் பார்த்ததும், விடிகாலையில் பறவைகளின் ஒலி; வானிலே தெளிந்த ஒளி.. நிலவு- உரோகிணி என்னும் மீனுடன் கூடிய ஓரை (Constellation) நல்ல நாள் - அந்த நாளில் மணவீட்டினை அலங்கரித்து நடை பெற்ற திருமணம் போல் இருவரும் கூடும் இந்த நாள் நல்ல நாளாகட்டும் என்று எனக்குள் நான் முணுமுணுத்தேன். "புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்," நானும் அவளும் பல மணிநேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அவள் ஏற்கனவே என்ன அறிந்தவள் போல் சிரமமின்றி சிரித்து சிரித்து கதைத்தாள். எனது இதயம் தானாகவே மந்திரவாதியின் மந்திரத்தால் பிணைக்கப்பட்டது போல அவளுடன் இணைந்தது. நான் மீண்டும் மீண்டும் தீக்குளிக்கும் அந்துப்பூச்சி [விட்டில் பூச்சி] போல அவள் பக்கம் இழுக்கப்பட்டேன். வெறும் மனிதனின் மோகத்தை விட அது மேலானதாக இருந்தது. ஒரு மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்தில் மறைந்து, வானத்தை துடிப்பான வண்ணங்களால் வரைந்தபொழுது, அவள் என்னை காட்டின் இதயத்தில் மறைந்திருந்த ஒரு புனித தோப்புக்கு அழைத்துச் சென்றாள். அங்கு, அவள் அந்த காட்டின் மர்மத்தை, அதன் உண்மையை வெளிப்படுத்தினாள். கண்ணீர் ததும்ப அவளின் அந்த வாக்குமூலம் இருந்தது. தான் சாதாரண பெண் அல்ல என்றும் ஆனால் ஒரு பழங்கால ஆவி, பல நூற்றாண்டுகளாக காட்டில் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினாள். எது எப்படி என்றாலும் என் உணர்ச்சிகளை என்னால் அடக்க முடியவில்லை. என் காதல் கதை, ஒரு மரண மனிதனுக்கும் அழியாத ஆவிக்கும் இடையே ஒரு நித்திய பிணைப்பு போல் இருந்தாலும், விஜயனும் [மனிதனும்] குவேனியும் [ராட்சத குலமும்] தம்மபாணி என்ற நகரத்தை ஏற்படுத்தி தம்பதிகளாக சில ஆண்டுகள் வாழ்ந்தது போல, ஏன் நான் அவளுடன் வாழக்கூடாது என என் மனம் என்னைக் கேட்டது. ஆனால் அவள் திடீரென வெள்ளைத் துணியால் போர்க்கப்பட்ட, அந்தரத்தில் உலாவும் ஒரு உருவாக, என்ன விட்டு விலகத் தொடங்கினாள். காட்டின் இருட்டில் அந்த வெள்ளை உருவம் பளபளத்தது. நான் ஓடிப் போய் அவளை தடுக்க முற்பட்டு, தழுவ முயன்றேன். ஆனால் அது உடலற்ற ஒரு உருவம் என்பது அப்ப தான் எனக்கு தெரிந்தது. அங்கு அவளும் இல்லை, அந்த அழகிய உடலும் இல்லை. குட்டிச் சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான சொற்கள் உள்ளன. ஆனால் அவள் இதில் ஒன்றிலும் இல்லை. அப்படி என்றால் அவள் யார்? காட்டின் மர்மம் என்ன ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடுக்கிட்டு கண் விழித்தேன், மகாவம்ச நூல் அப்படியே விரித்தபடி ஏழாம் அத்தியாயத்தில் இருந்தது. கவினி என்ற 'பேரழகு படைத்தவள்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிபான குவேனியின் படம் அதில் வெள்ளை உடையில் வரையப்பட்டு இருந்தது. நான் கடைசியாக மர்மக்காட்டில் பார்த்த அதே உருவம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. பல கோமாளித்தனமான விடயங்கள் அதற்கு பிறகும் செய்திருக்கிறேன், அண்மையில் எனது மகனிற்கு அவரது ஆசிரியை உப்புத்தண்ணீரில் ஓடும் விளையாட்டுக்காரினை பரிசளித்திருந்தார், அதனை பார்த்த போது உப்புத்தண்ணீரில் பழைய அலுமிய சட்டி மற்றும் பழைய உலர்கலத்தில் உள்ள காபன் கோலை பயன்படுத்தி திரவ மின் கலம் செய்தமை நினைவில் வந்தது ஆனால் ஏதோ காரணத்தால் அது வேலை செய்யவில்லை, தரவடிப்படையில் அது வேலை செய்யவேண்டும் ஆனால் வேலை செய்யவில்லை சில வேளை எலக்ரோரொட்டாக பயன்படுத்திய அலுமினியமும் காபன் கோலும் சுத்தமற்று இருக்கலாம் என அதனை ஈடுகட்டு முயற்சியின் பின்னரும் அது வேலை செய்யவில்லை. எனது பெற்றோர் என்னை ஜோசப் த ட்ரீமர் என நக்கலாக அழைப்பார்கள் (எனது பெயர் ஜோசப் இல்லை😁 அது சிறுவர் ஆங்கில கதையில் வரும் ஒரு கதாபாத்திரம்)😁.
  20. உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....
  21. ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை.
  22. சூப்பர்... அதே போல் பாவாடை நாடா, மாதாவிடாய் ரத்தம் போன்ற, 3 ம் தர வசவு கேப்பமாரிகளுக்கு நாம கொடுப்பது கேவின் ரிச்சட்சனின் ஸ்விட்ச் ஹிட். லெப்டை காட்டி ரைட்டில் டீல் பண்ணுவது. இலங்கையில் வாக்குரிமை வைத்திருக்கும் நமக்கு Elite லுக் எல்லாம் சரிப்பட்டு வராது பாருங்கோ. நமக்கு என்ன யுனைட்டட் கிண்டம் சர் பட்டம் இல்லாட்டில் நைட் பட்டமா தரப்போகுது அடக்கி வாசிக்க. ஐயோ அண்ணை சத்தியமாக நீங்க லிஸ்ட்டிலேயே இல்லை. கல்லிலும் கலை வண்ணம் கண்டான் என்பது போல் தெருப்பொறுக்கியிலும் சீமானை அடையாளம் கண் பதால் இப்படி ஆயிற்று. அதிலும் சீமான் தமிழ்நாட்டுக்காரர் இது தமிழ்நாட்டுக்காரர் பிரச்சினை என்று பார்த்தால் சீமானை விட படு கேவலாமான மொள்ளமாரிகளை தமது தலைவர்களாக வைத்துக் கொண்டு நமது தேசிக்காய்ஸ் சீமானை நோண்டுவதால் வந்த தார்மீகமான கடுப்பேயன்றி வேறில்லை
  23. பழைய ஜனாதிபதிகள் மந்திரிகள் அனுபவிக்கும் சலுகைகளை குறைத்தாலே இதேமாதிரி நிவாரணங்கள் பல வழங்கலாம்.
  24. நல்ல செயல் . ........ பொதுவாக கல்வி , மருத்துவம் , போக்குவரத்து போன்றவை அரசின் வசமே இருக்கவேண்டும் . ........!🙏
  25. மேலாடையுடன் பல்லக்கு தூக்க விட மாட்டார்கள். அது ஒரு சமய சம்பிரதாயம். அதற்கான காரணத்தை எனக்கு சொல்லத் தெரியவில்லை. களத்தில் வேறு யாருக்காவது தெரிந்திருக்கலாம். ஆனால்.... ஒரு சிலரின் சமயச் சடங்கு நிகழ்வை.. அரை நிர்வாணம் என்று கொச்சைப் படுத்துவது ஏற்புடையது அல்ல. அப்புறம்... நானும், உங்களுடைய பாதிரியார்.. ஏன் பாவாடையுடன் நின்று பூசை செய்கிறார் என்றும், இயேசுநாதர் ஏன்... முக்கால் நிர்வாணமாய் சிலுவையில் தொங்குகிறார் என்றும் கேட்க வேண்டி வரும். 😂 "கண்ணாடி வீட்டில் இருந்து, கல்லு எறியக் கூடாது" கபிதன். 🤣
  26. ரஜனிகாந்த் எண்ட பெயரில ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வெளிக்கிட்டவர். அப்ப ஒரு சனமும் ஒரு கதையும் இல்லை. 😁
  27. தப்பு தப்பு! யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல. பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன். என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம் வ உ சி வரை இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர் தனது சொந்த பாட்டன் யக்கோப்பு பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂
  28. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ☘️
  29. அந்தத் தம்பதியினர் துணிவாக இறுதிவரை போராடியிருக்கின்றனர் . ........ பாராட்டுக்கள் . .....! 👍
  30. கந்தையா அண்ணை…. ஊகங்களாக வரும் செய்திகளுக்கு எல்லாம், பதில் சொல்லி மினைக்கெடுவது சரியாக இராது. ஆனால்… இந்தியர்கள் மட்டுமல்ல பொதுவாக ஆசியர்கள் போகின்ற நாடுகளில் எல்லாம் அங்குள்ள மக்களுக்கு தமது கலாச்சாரத்தை காட்டுகின்றோம் என்ற போர்வையில்… எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. ஆபிரிக்கர்கள் கூட இந்த அளவுக்கு மோசமாக நடப்பது இல்லை.
  31. இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣.
  32. இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை, ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
  33. மலிவான இன்பம் என்பது அந்த நாட்டிற்கு அபகீர்த்தியை தான் தரும். இந்த மலிவான இன்பம் அனுபவிப்பவர்கள் அடுத்த மலிவு வரை தான் இங்கே குலாவுவார்கள். இதுவரை கியூபா, பாங்கொக், தாய்லாந்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் ...
  34. முன்னுக்கு நீங்கள் எத்தனை 0. உம். போடலாம் தடையில்லை பெறுமதியும். மாறப்போவதில்லை ஆனால் பின்னுக்கு. போட முடியாது போடவும் கூடாது 0. அதிகூடிய பெறுமதியுள்ள. இலக்கம் 🤣
  35. ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
  36. வன்னியருக்கு ஒரு பெண்பிள்ளைதான் சசி அவருக்குத் திருமணமாகி குடும்பப் பெண்ணும் ஆகிவிட்டார். அழவேண்டாம்.😩😢
  37. ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும் எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும் எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள். உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான் நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
  38. வெளுக்கும் போது பேர்த்சேர்டிபிக்கேட், பாஸ்போர்ட் எல்லாம் பார்க்க டைம் இராது அண்ணை. அதுவும் நாம் சிறிலங்கன் எண்டு சொல்ல கொள்கை இடம் கொடாது. தமிழ்…தமிழ்…எண்டு சொல்ல…குருவியளுக்கு, தமிழா, தெலுங்கா எண்டு யோசனை ஓடாதுதானே🤣. துவையல் கன்பர்ம்ட்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.