டக்ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்!
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣
வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு…
2020- தேர்தல்
அங்கஜன்(SLFP)- 49,373
டக்ளஸ்(EPDP)- 45,797
மொத்தம்=95,170
2024- தேர்தல்
அங்கஜன் கட்சி- 12,427
டக்ளஸ் கட்சி- 17,730
மொத்தம்=30,157
அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157
மொத்தம் =65,013
2024-JVP 80,830 -65013
=15,817
15817-853(JVP-2020)
= 14,964
இந்த 14,964 வாக்குகளும்
ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது.
ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை.
மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன.
(2020)132,329- 127,354(2024)= 4,975
இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில்
சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன்,
அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை.
ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன்
2015-58,043
2020-27,834
2024-15,039
தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும்.
இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம்
இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க..
என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள்.
(கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)