Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. valavan

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    1567
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19102
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87986
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    20007
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/20/24 in all areas

  1. ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
  2. முன்னரே குறிப்பிட்டது போன்று இன்றிரவுடன் பழைய இணைய வழங்கிக்கு உரிய காலம் முடிவடைவதால் ஒரு வாரத்திற்கு முன்னரே சில ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றி விட முடியும் என்று நம்பிக்கையுடன் இணைய வழங்கி மாற்றத்தைத் தொடங்கிய பின், தொடர் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைவந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கும் / தடங்கலுக்கும் வருத்தத்தினை யாழ் இணையம் தெரிவித்துக் கொள்கின்றது.
  3. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  4. நல்ல செய்தி. இதை வரவேற்கும் அதே வேளை, அவர்களே அடாத்தாக தனியார் காணியை பிடித்து விட்டு இப்போ வெளியேறுகிறார்கள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. கள்ளன் களவெடுத்ததை மீட்க நாம் போராடியும் முடியவில்லை. இப்போ கள்ளனாக திருப்பி தருவதால் கள்ளன் காலில் விழுந்து நன்றி சொல்ல தேவையில்லை. மீண்டும் இன்னொரு அரசாங்கம் வந்து எமது காணியை மீளப்பறிக்கலாம் - அப்படி பறிக்க முடியாத நிரந்தரத்தீர்வே எமது அபிலாசை.
  5. மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.
  6. இவ‌ரின் இசைய‌ கேட்டு தான் வ‌ள‌ந்தேன் தாத்தா இவ‌ர் மிக‌வும் நேர்மையான‌ ம‌னித‌ர்.................திற‌மையான‌ இசைய‌மைப்பாள‌ர்....................இவ‌ரின் இசையில் சிறுவ‌ய‌தில் நான் கேட்ட‌ முத‌ல் பாட்டு (முக்காலா முக்க‌பில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளையும் த‌ன் இசை மூல‌ம் திரும்பி பார்க்க‌ வைத்த‌வ‌ர்......................ஈழ‌த்தின் மேல் அதிக‌ ப‌ற்று அத‌ற்க்கு அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ஓன்றே சாட்ச்சி அந்த‌ பாட்டை ஜ‌ரோப்பாவிலும் பாடின‌வ‌ர்................... அந்த‌ பாட்டு இதே கேட்டால் க‌ண் க‌ல‌ங்கும்
  7. இதன் பின்னால் இருப்பது பெளத்த சிங்கள மேலாண்மைவாதம் என்றே நான் நினைக்கிறேன். தமிழர்களை அடக்கி ஆகி விட்டது. ஆனால் யுத்தத்தை பாவித்து முஸ்லிம்கள் தம் இருப்பை அதிகரித்ததுடன் மிகவும் உயர் பதவிகளிலும், குறிப்பாக வியாபாரம், வங்கி துறைகளை கையில் வைத்துள்ளார்கள் என்பதும், தமிழரை தட்டி வைத்தது போல இனி இவர்களையும் தட்டி வைக்க வேண்டும் என்பது பேரினவாதத்தின் அடுத்த இலக்கு. 1. முதலில் அவர்கள் பகுதியில் அவர்களின் வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருந்த மலையக தமிழரை நாடு கடத்தி அவர்கள் வாக்குப்பலத்தை பாதிக்கும் கீழாக்கினர். 2. பின்னர் நம் மீது இனவழிப்பு போர் 3. இப்போ முஸ்லிம்களின் முறை. இவர்கள் மீதும் வன்முறையை திணித்தார்கள் ஆனால் அதை அவர்கள் வடிவாக கையாண்டபடியால் - இப்போ மறைமுக ஒதுக்கலில் இறங்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறை ஒரு சிறுபான்மையை அடக்கும் போதும் - ஏனைய சிறுபான்மைகள் அதை வரவேற்கும் அல்லது காணாமல் இருக்கும்படி செட்டப் செய்வார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை - அறகலவுக்கு ஆக்கி கொடுத்த பிரியாணி எல்லாம் வீணாப்போய்டே என்ற நிலைதான். அமைச்சு செயலாளர்களில் ஒரு தமிழ் பெயர் தென்படுகிறது. மருந்துக்கும் ஒரு முஸ்லிம்மும் இல்லை.
  8. மக்கள் என்னை விரும்புவதாலும் மக்கள் உண்ணும் விரதம் இருப்பதாலும் எனது முடிவை மாற்றி தேசியல் பட்டியல் ஊடாக வருகின்றேன்... எனது முடிவை நாளை காலை ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன்....😅
  9. முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html
  10. இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃
  11. இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.
  12. கங்குவா பார்த்துவிட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள். 1:03 அதிலும் ஒரு சிறுமியை அவரோட அப்பாவோ தாத்தாவோ பாப்பா படம்பத்தி பேட்டியா கொடுக்குற, வாம்மா வீட்டுக்கு ஓடிரலாம்னு இழுத்து போவது கங்குவா கொடூரத்தின் உச்சம், நாம தியேட்டர்லாம் போய் படம் பார்த்து பல வருஷமாச்சு, கடைசியா ரஜனியின் குறை மாசத்துல பொறந்தமாதிரி கதை உள்ள படம் பார்த்தேன் அதுக்கப்புறம் தியேட்டர் பக்கமே போறதில்ல.
  13. தமிழினம் மொழி சார்ந்த இனம்.மத சார்பு இனமல்ல. முஸ்லீம்கள் மொழி சார்ந்த இனமல்ல. அவர்கள் மதத்தை வைத்து மட்டுமே உலக அரசியல் செய்பவர்கள் .உலக வாழ் முஸ்லீம்களுக்கு மதத்தை தவிர மொழி சார்பு எதுவுமில்லை.கிட்டத்தட்ட பார்ப்பனியர்களைப்போல்.....முஸ்லீம்களுக்கு மொழியும் தேவையில்லை.அந்தந்த நாட்டு வரைமுறைகளும் தேவையில்லை. போற வாற இடமெல்லாம் அல்லஃகு அக்பர். அதுவே அவர்கள் தாரக மந்திரம். நான் மனித அழிவுகளையும் மனித/இன அடக்கு முறைகளையும் விரும்புபவனல்ல. ஆனால் இஸ்ரேல் மத்திய கிழக்கில் செய்யும் பொதுமக்கள் அழிவுகளை பார்த்து கண் கலங்கினாலும் முஸ்லீம்களின் வரட்டுக்கர்வம் அழிய வேண்டும் என விரும்புகின்றேன்.
  14. அமைச்சரவையில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றோ, அல்லது இலங்கைத் தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என்றோ ஜேவிபியினர் உளமார நினைக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் 'தோழர்களை' மட்டுமே அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவார்கள். இது எந்த இடதுசாரிப் போக்கு உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக, அனுதாபிகளாக மட்டுமே இருக்கலாம். ஆனாலும் ஒரு ஜனநாயக ஆட்சியில் பலரின் பிரதிநிதித்துவமும் வேண்டும் என்ற ஒரு அரசியல் சரிநிலைக்காக சில பிரதி அமைச்சர் பொறுப்புகள் இந்த இரண்டு சமூகங்களுக்கும் வழங்கப்படும் என்றே நான் நினைக்கின்றேன். 'அக்பர் ஹால்' என்னும் ஒரு இடம் பற்றி இங்கு சிலருக்கு தெரிந்திருக்கும். கோஷானும் சமீபத்தில் வேறொரு திரியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். இது பேராதனை பொறியியல் பீட மாணவர்கள் தங்கும், வசிக்கும் இடம். இந்த ஹாலையும் இதைச் சுற்றி இப்போது புதிதாக கட்டப்பட்டவற்றையும் ஜேவிபியினர் 'நிஸ்மி ஹால்' என்றே அழைக்கின்றனர். நிஸ்மி என்பவர் 80ம் ஆண்டுகளில் அவர்களின் மாணவர் தலைவராக இருந்து அன்றைய அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர். அன்று அவர் அநுரவிற்கு பல படிகள் மேலே. நிஸ்மி ஒரு சிங்களவர் இல்லை, அவர் ஒரு இஸ்லாமியர். தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சுத் திறமை கொண்டவர் என்கின்றனர். ஒரு மிகப் பெரிய ஆளுமை என்றும் சொன்னார்கள். அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன்.
  15. இலங்கையில் எவரும் தமிழ் பேசும் சமூகம் என உணர்வதில்லை. இது வெறும் வார்த்தை மட்டுமே. அவர்கள் சோனர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் - தனி இனப்பிரிவு என்கிறது அரசியலமைப்பு சட்டம். அவர்களும் அவ்வாறே உணர்கிறனர். அதே போல் இந்திய வம்சாவழி தமிழர், இலங்கை தமிழர் என இரு பிரிவுகள் இருப்பதையும் இலங்கை குடிசன மதிப்பீடுகள் ஏற்கிறன. இதில் நீங்கள் சொன்ன இரு தமிழ் அமைச்சர்களும் இந்திய வம்சாவழியினரே. இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர். இதில் சரஜோ அக்கா - அசித்த எனும் சிங்கள வைத்தியரை மணம் முடித்து மாத்தறையில் வாழ்பவர். இவர்கள் இருவரையும் காட்டி - இலங்கை தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கபட நாடகம்.
  16. புன்னகையும் மெளனமும் மிகப்பெரிய ஆயுதங்கள்... புன்னகை பல பிரச்சினைகளைத் தீர்க்கும்... மெளனம் பல பிரச்சினைகளை வர விடாமல் தடுக்கும்...
  17. இல்லை வேறு விமான நிறுவனத்துடன் சேர்ந்து செய்கிறார்கள். லண்டன்வரை வேறு விமானம் பின்னர் எயர்லங்கா.
  18. ஒரு சிறுபான்மை இனமாக இருந்து அதனால் ஏற்பட்ட அடக்குமுறைகளால் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்திய பின்னர் புலிகள் தமிழ் மக்கள் நலன் சார் நிலையில் விட்டுக்கொடுப்பினை என்ற நிலையில் உறுதியாக நின்றார்கள், ஆனாலிஸ்லாமியர் ஆரம்பத்திலிருந்து தனித்துவமான போக்கினை கடைப்பிடிக்கின்றனர், புலிகளின் பின்னர் வந்த அரசியல்வாதிகள் தமது சொந்த நலனில் எந்தவித விட்டுக்கொடுப்பினையும் செய்யாமல் மறுவளமாக தமது இனத்தினை காட்டி வியாபாரம் செய்கிறவர்களாக இருப்பதால் சிங்கள பேரினவாதத்திற்கு இஸ்லாமியர்களும் அவர்களது அரசியல்வாதிகளும் அச்சத்தினை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது. இப்போது அவர்கள் இலக்கு இன்னொரு சிறுபான்மையினரான இஸ்லாமியார்களாக உள்ளார்கள், தமிழ் மக்களின் மீட்கு சிங்கள பெரும்பான்மை தாக்கும் போது அதனை தடுக்க எத்தனிக்காமல் அதனை விட மோசமான நடவடிக்கையாக தாமும் அதில் இணைந்து தவறு செய்தார்கள். தற்போது இஸ்லாமியருக்கு எதிராக திரும்பும் இந்த பெரும்பான்மைக்கு தமிழ் மக்கள் ஆதரவ்ளித்து தவறிழைக்க கூடாது, பாதிப்பிற்குள்ளாகும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கே எமது ஆதரவு இருக்கவேண்டும்.
  19. இல்லை பொறகு தமிழ் தேசியம் அருச்சுனா கையில் கொடுத்த கெளசல்யா போல் ஆகி விடும்🤣. உங்களை தேசியபட்டியல் மூலம் உள்ளீர்க்க வேண்டும் என நான் சாகும் வரை உண்ணும் விரதம் இருக்கப்போகிறேன்🤣.
  20. வினா 56) தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) இம்முறை ஓரிடமும் பிடிக்கவில்லை என 11 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாலி - 48 புள்ளிகள் 2)பிரபா- 47 புள்ளிகள் 3)வாதவூரான் - 46புள்ளிகள் 4) நிலாமதி - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6)அல்வாயான் - 41 புள்ளிகள் 7)goshan_che - 41 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 40 புள்ளிகள் 9)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள் 10)வில்லவன் - 40 புள்ளிகள் 11)நிழலி - 40 புள்ளிகள் 12)நூணாவிலான் - 39 புள்ளிகள் 13)ரசோதரன் - 39 புள்ளிகள் 14)சுவைபிரியன் - 38 புள்ளிகள் 15) கிருபன் - 38 புள்ளிகள் 16) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 34 புள்ளிகள் 19)வாத்தியார் - 33 புள்ளிகள் 20) புலவர் - 31 புள்ளிகள் 21)அகத்தியன் - 31 புள்ளிகள் 22)குமாரசாமி - 31 புள்ளிகள் 23)புத்தன் - 30 புள்ளிகள் 24) சுவி - 29 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 77)
  21. டக்‌ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣 வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு… 2020- தேர்தல் அங்கஜன்(SLFP)- 49,373 டக்ளஸ்(EPDP)- 45,797 மொத்தம்=95,170 2024- தேர்தல் அங்கஜன் கட்சி- 12,427 டக்ளஸ் கட்சி- 17,730 மொத்தம்=30,157 அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157 மொத்தம் =65,013 2024-JVP 80,830 -65013 =15,817 15817-853(JVP-2020) = 14,964 இந்த 14,964 வாக்குகளும் ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன. (2020)132,329- 127,354(2024)= 4,975 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில் சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன், அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 2015-58,043 2020-27,834 2024-15,039 தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம் இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க.. என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள். (கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)
  22. உக்ரைன் கோமாளி அண்மையில் ரஷ்சியாவை சிதைப்பது குறித்த ரீ சேட் அணிந்திருந்தார். உக்ரைன் யூதக் கோமாளி... ஐரோப்பாவின் அமெரிக்காவின் நெத்தானியாகு. உக்ரைன் அழிவது பற்றி அதுக்கு அக்கறை இல்லை. நேட்டோவுக்காக அமெரிக்காவின் மேற்குலகின் தேவைக்காக ரஷ்சியாவை சிதைப்பதே நோக்கம். அந்த வகையில் புட்டின் உக்ரைன் மீது எடுத்த விசேட நடவடிக்கை சரி என்பதாகவே பைடன் லூசின் செயற்பாடு அமைகிறது. பதவியின் கடைசிக் காலத்தில்.. மொத்த உலகிற்கும் கேடிழைக்கக் கூடிய தீர்மானத்தை பைடன் என்ற பைத்தியம் எடுக்கிறது. அதற்கு சில ஐரோப்பிய ரஷ்சிய எதிர்ப்பு பைத்தியங்கள் ஆமாப் போடுதுகள். பிரிட்டன்.. பிரான்ஸ்.. போலந்து போன்றவை.. உட்பட.
  23. தன்னறம் இலக்கிய விருது – 2024 jeyamohanNovember 10, 2024 ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள் ஜெ எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அகதி வாழ்வு, நீங்காத அலைச்சல், அடையாளத் துயர், கதை, மொழி, அரசியல் ஆகிய உயிர்நிலைகளில் ஷோபா சக்தியின் செயல்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அது நிலங்களைத் தாண்டி தன் அலைக்கழிப்பை இலக்கியத்தின் மூலம் முற்றளித்து, யுத்தத்தின் ரத்த சாட்சியாக தன்னை முன்னிறுத்தும் கலை நேர்மையின் பாங்கு உடையது. சமகால அரசியலும் இலக்கிய அழகியலிலும் காலத்தின் உண்மையுணர்வை அலைச்சலின் மொழியால் நிழல் படிமமாக புனைவில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதனால், சின்னஞ்சிறிய தீவுகளில் இருந்து உலகளாவிய அடையாளம் கொண்ட சுய வாழ்வின் மீதுள்ள நெருக்கடியை எந்த ஒப்பனைகளும் இன்றி புனைவுகளில் நம்மால் சந்திக்க முடிகிறது. சமூகத்தின் கூட்டுப் உணர்வான மௌனத்தின் அவல ஆழங்களை அனுபவப் பகிர்வாக முன்வைக்கும் ஷோபா சக்தி அவர்களின் புனைவுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறோம். கொரில்லா, பாக்ஸ் கதைகள், இச்சா, ம், ஸலாம் அலைக் ஆகிய புதினங்களையும் தமிழின் மிக முக்கியச் சிறுகதைகள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதித் தந்திருக்கிறார். பதிப்பாசிரியராக சில அவசியமான படைப்புகளை வெளியீட்டும் வருகிறார். தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), கவிஞர் பாலைநிலவன்(2023) ஆகிய ஆளுமைகளுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. விருதுடன் இணைந்து விருது பெரும் ஆசிரியரின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் அச்சிடப்பட்டு ஆயிரம் இளம் வாசிப்பு மனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் படைப்பு நேர்மையுடன் வாழ்வின் பரிணாமங்களை எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களுக்கு சென்றடைவதில் அகநிறைவு கொள்கிறோம். ~ நன்றியுடன், தன்னறம் நூல்வெளி https://www.jeyamohan.in/208120/
  24. ப்பா…பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சிதான் நீங்க 👍
  25. ரோஹண விஜேவீரவின் மறைவுக்கு பின் தப்பியோடி பின் - 1991 இல் சோமவன்ச அமரசிங்க பிரேமதாசாவுடன் டீல் போட்டு, இலண்டனில் இருந்து திரும்பி வந்து, வீரவன்ச, கலப்பதி, டில்வின், லால் காந்த, ஹேரத்தை சேர்த்து ஜேவிபியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தார். இது வெளியுலகுக்கு சொல்லப்படும் கதை. இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம். இவரின் அண்ணா ரஞ்சித்தும் மத்திய குழுதான் ஆனால் 87 இல் கொல்லப்பட்டார் ஆகவே இவர்கள் தமது ஆள் என்றால் வேற்று இன, மதத்தினரையும் ஏற்பார்கள் என்பது சரியே. ஆனால்…. இவர்கள் ஆள்….என ஆவதற்கு…. இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும். அதாவது யாழ் எம்பிகள் செய்ததை போல சொல்லாமலே பிக்குகள் காலில் போய் விழ வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் flavor வேறுபடும். அதில் ஜேவிபியின் சுவை, KFC secret recipe மாதிரி தனிச்சுவை. ஆனால் அதுவும் பேரினவாதம்தான். இது…. இதுதான் முஸ்லிம்ள் பற்றி மிக பெரும்பான்மையான சிங்களவர் மனநிலை.
  26. இது பொடியள் நேசரிக்கு போறமாதிரி...அவைக்கு தாங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது...காலி விழுவென்றால் காலில் விழுவதுதுதான்..அவைக்கு தெரியும்..அது சரி அவ்விடத்திலை பள்ளிவாசல் இருக்கே..அங்கு மவுலவியின் காலில் விழவில்லையா...அய்யா நான் கொலிடேக்கு ஊருக்கு போய் வந்துவிட்டென்..
  27. இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
  28. நானும் பயில்வான் தான் என்று வந்து சொல்லைக் கொடுத்து வாங்கிக் கட்டுவது என்பது இதனைத்தானா??
  29. குருநாதா இலங்கை தேர்த‌ல் திரியில் நானும் நீங்க‌ளும் ஜாலியா எழுதிட்டு இருந்தோம்.........அது தொட‌ர்ந்து இருக்கும்.............. இடையில் யாழ்க‌ள‌ம் இய‌ங்காம‌ விட்ட‌தால் அப்ப‌டியே விட்டாச்சு😁 இந்த‌ இர‌ண்டு நாளில் உங்க‌ளையும் நினைச்சேன்....................தெரியாத‌தை கேட்டேல் உட‌ன‌ விள‌ங்க‌ப் ப‌டுத்துவீங்க‌ள் குருநாதா.......................ப‌ல‌ திற‌மை உங்க‌ளிட‌ம் இருக்கு..............வ‌ந்தா காட்டாம‌ எழுதும் உங்க‌ட‌ எழுத்தை வாசிக்க‌ என‌க்கு மிக‌வும் பிடிக்கும்🙏🥰.....................
  30. மோகனின் புண்ணியத்தில் யாழ் இணையக்காரர் எல்லோரும் யூரியூப்பை நோண்டி தோண்டி பார்த்ததால் நேற்றையதினம் எதிர்பாராத பணம் யூரியூப்காரருக்கு கிடைத்திருக்கும்.
  31. மிக மிக நன்றி மோகன் ..........பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......! 💐
  32. ஒரு வேளை எங்கேயும் வாசிக்காமல், எதையும் பார்க்காமல் - இருந்த இடத்தில் இருந்து ஞான திருஸ்டியில் தகவல் அறியும் வல்லமை அவர்களுக்கு இருக்குமோ🤣. கஸ்தூரி நடிகை மட்டும் அல்ல, ஆங்கிலத்தில் socialite என்பார்களே அப்படி தமிழில் ஒரு சமூக-பிரபலம். அவரை பற்றி அறிந்திருப்பது அதிசயமல்ல, அறியாமல் இருப்பதுதான் வழமைக்கு மாறானது. அப்பெல்லாம் நாங்கள் ஷாட்ஸ் போட்டு ஸ்கூல் போற டைம். மிகவும் மெல்லிதாக, எடுப்பான முக இலட்சணத்தோடு, டஸ்கி கலரில் பாலுமகேந்திரா ஹீரோயின் வெட்டில், மிஸ்மெட்டிராஸ் எண்டு கஸ்தூரியை குமுதம், விகடன் எமக்கு அறிமுகம் செய்தது.
  33. நானும் அடிக்கடி எட்டிப்பார்த்தேன்.😃 வேலை செய்கிறதா என . எதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு . சிரமங்களுக்குமத்தியில் இணைய வழங்கியை சீராக்கியதற்கு மோகனுக்கும் உதவியவர்களுக்கும் நன்றி .
  34. மோகன் அண்ணை Views காட்டுதில்லை! குறிப்பாக ஊர்ப்புதினத்தை அவதானித்த வகையில், கொஞ்சம் கவனியுங்க.
  35. தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒரு மெழுகுதிரியாகவே இருக்கிறார். அவரும் குடும்பமும் நீடூழி வாழணும்.
  36. ல‌ஸ்பீக்க‌ர் வைச்சு சொல்லுவோமா யாழ்க‌ள‌ம் மீண்டும் இய‌ங்குது எல்லாரும் வாங்கோ சேர்ந்து கும்மி அடிப்போம் என‌ ஹா ஹா😁..................
  37. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பாளாம் என்பதை காலம் மறுபடியும் நிரூபித்துள்ளது.😂
  38. நானும் இருட்டுக்குள் இருந்து ரொம்பவும் மன உழைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். இதற்கான நஸ்டஈட்டை கோரலாமா என்று வழக்கறிஞருடன் பேசியவண்ணம் உள்ளேன்.
  39. கங்குவா : விமர்சனம் Nov 14, 2024 15:07PM IST ஷேர் செய்ய : இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் ரிலீஸாகும் சூர்யா படம், ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் சூர்யா செய்த பான் இந்தியா புரொமோஷன்ஸ், ரிலீஸ் தேதி மாற்றத்தால் ரசிகர்களிடத்து ஏற்பட்ட அதிருப்தி, நீதிமன்ற வழக்கு முதல் தொடர்ந்த பல்வேறு தடங்கல்கள் ஆகியவைகளைக் கடந்து தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்திற்கான ஏகப்பட்ட ஹைப், அதீத நம்பிக்கையுடன் படக்குழு இருப்பது போலான ஒரு தோற்றத்தையே அனைவருக்கும் அளித்தது. குறிப்பாக, படத்தின் ஆடியோ லாஞ்சிலேயே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் வெற்றி விழாக்கான பாஸை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்தது கொஞ்சம் அதீதமாகவே தெரிந்தது. ஆக, இவ்வளவு ஹைப்களைக் கொடுத்த ’கங்குவா’ திரைப்படம் நமது பார்வையில்! ஒன்லைன்: 2024யில் தொடங்குகிறது திரைப்படம். சூர்யா ஒரு பவுண்டி ஹண்டர். அதாவது, காவல்துறைக்கு உதவும் ஒரு ’ஷாடோ காப்’ எனச் சொல்லலாம். அவர் இறங்கும் ஒரு மிஷனில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவனைப் பார்க்கும் போது அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்குக் காரணம் என்ன? இங்கு நடக்கும் இந்த கதைக்கும் 1070ஆம் ஆண்டில் நடந்த ஒரு கதைக்கும் என்ன சம்பந்தம்? போன்ற விஷயங்களைக் கூறுவதே ‘கங்குவா’. அனுபவப் பகிர்தல்: தமிழ் சினிமாவில் இத்தகைய மேக்கிங் உள்ள திரைப்படங்களை சமீப காலங்களில் நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஃப்ரேம்ஸ் நம் கண்களுக்கு நல்ல விருந்து. கதைக்களத்திற்குள் நம்மை ஓரளவு ஒட்டவைப்பதும் அதுவே. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு 3டி படம். ஒரு 3டி திரைப்படத்திற்கான தேவை அந்தப் படத்தின் கதையில் இருக்க வேண்டும். அதை விட்டு பொருட்காட்சியில் காண்பிக்கும் 3டி படம் போல் அந்த தொழில்நுட்பத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட கண்ணுக்குள் பாம்பு வருவது, ஜெம்ஸ் மிட்டாய் பறப்பது போன்ற காட்சிகள் சலிப்பே. ஆனால், இந்த அனுபவத்தை தொழில்நுட்பக்குழு நேர்த்தியாகக் கடத்தவே முயற்சி செய்துள்ளதால் அது நமக்கு ஓரளவு நல்ல அனுபவமாகவே இருந்தது. குறிப்பாக சில காட்சிகளில் ஃப்ரேமின் ஒவ்வொரு லேயரையும் நம் கண்கள் முன்னே காண முடிந்தது நன்று. சூர்யாவின் இத்தனை கால உழைப்பை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. ஒரு பெரிய ஸ்டார் நடிகர் ஒரு படத்திற்காக இத்தகைய உழைப்பை போடுவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம். கூடவே கொஞ்சம் ஸ்கிரிப்டடை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க ஏகப்பட்ட சப்தங்களும், ரத்தங்களும் இந்தப் படமெங்கும் இருந்தது. அதில் சப்தங்கள் வெறும் இரைச்சல்களாகவும், இரத்தங்கள் அனைத்தும் சினிமா இரத்தங்கள் என்றே கடந்து போகும் படி அமைந்தது. பார்ப்போருக்கு எந்த ஒரு பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸில் வரும் ஃபிளாஸ்பேக் மற்றும் நிகழ்காலத்திற்கான நான் லீனியர் கனெக்‌ஷன் காட்சிகள் அற்புதமான யுக்தி. ஆனால், அதில் நிகழும் சில அபத்தமான சண்டை காட்சிகள் அதோடு நம்மை ஒட்டவிடாமல் செய்கிறது. படத்தின் முதல் பாதியில் வரும் சில காமெடி காட்சிகள் ஒரே வார்த்தையில் ‘கிரிஞ்ச் மேக்ஸ்’ ! விரிவான விமர்சனம்: ஒரு அரசனின் அறம், அவன் சத்தியத்தின் வலிமை, போர், வன்முறை, போன்ற விஷயங்களைத் தொட்டு நகரும் இந்தத் திரைப்படத்தில் முன் ஜென்மம், சூப்பர் பவர் போன்ற ஃபேண்டசி படத்திற்கான கூறுகளும் உள்ளன. இதில், மேல் சொன்ன எதையும் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக கடத்தாத இந்த ’கங்குவா’, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு சராசரி கமர்சியல் திரைப்படமாகவே உள்ளது. படத்தின் பெரிய பலங்கள் சூர்யா, தொழில்நுட்பக் குழு. இந்தப் படத்திற்காக மேக்கப், உடல் தோற்றம், உடல் மொழி என அனைத்திலும் தன் உழைப்பை அர்ப்பணித்துள்ளார் சூர்யா. ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக வடிவமைக்காததால் அது ஒரு சாதாரண கமர்சியல் ஹீரோவாக மட்டுமே சுருங்கி விடுகிறது. யார் இந்த ’கங்குவா’? அவன் ஏன் இத்தகைய சத்தியத்தை காக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளும், காரணங்களும் வைத்திருக்கலாம். அது இல்லாததால் அந்தக் கதாபாத்திரத்தோடு நம்மால் சரியாக ஒட்டமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்களும் நாம் ஏற்கனவே கண்ட பல பீரியட் பட கதாபாத்திரங்களையே நியாபகப்படுத்துகிறது. அவர் ஏன் இவ்வளவு பலசாலியாக இருக்கிறார் என்றால் அவர் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்கிற அளவில் தான் அந்தக் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் இந்தப் படத்தை தாங்கிப் பிடிப்பதில் சூர்யாவின் நடிப்பிற்கு முக்கிய பங்குண்டு. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை முதலில் குறிப்பிட வேண்டியது ஒளிப்பதிவாளர் வெற்றியின் காட்சியமைப்புகள். அத்தனையும் அற்புதம். குறிப்பாக, இயற்கையான ஒளிகளை வைத்து அவர் காட்சியமைத்திருந்த பீரியட் காட்சிகள் அற்புதம். படத்தொகுப்பாளர் நிசாத் யூசப் கிளைமாக்ஸ் காட்சிகளில் செய்திருக்கும் நான் லீனியர் கட்ஸ் அற்புதம். ஆனால், படத்தின் முதல் பாதியில் வரும் அந்த காமெடி கிரிஞ்ச் காட்சிகளை நிச்சயம் பாரபட்சமின்றி வெட்டியிருக்கலாம். மறைந்த கலை இயக்குநர் மிலனின் சிறப்பான செட் வடிவமைப்புகள் மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவை. குறிப்பாக ஒவ்வொரு குடிகளுக்கான ஊர், வீடுகள், இடங்கள் எப்படி இருக்கும், அந்த காலத்து ஆடை வடிவமைப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றை சரியாக வடிவமைத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆங்காங்கே காட்சியை மெருகேத்தியது. ஆனால், சில இடங்களில் இரைச்சலாகவும் தோன்றியது. பாடல்களில் ’தலைவனே’ பாடல் இடம்பெறும் காட்சி நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு பாடல் அவரின் பழைய தெலுங்கு பாடல்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் பெரிய பலவீனம், இயக்குநர் சிவாவின் எழுத்து. குறிப்பாக படத்தின் முதல்பாதியில் இடம்பெறும் தற்காலத்தில் நடக்கும் அந்த 30 நிமிட காட்சிகள் மொத்தமும் அபத்தமே. ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் பழங்குடி கதாபாத்திரங்கள் சாதாரணமாகவே சப்தமாக பேசும் கதாபாத்திரங்களாக வடிவமைத்தது பெரிய சலிப்பை ஏற்படுத்தியது. திரைக்கதையில் எந்த வித திருப்பங்களோ, ஆழத் தன்மையோ இன்றி நகர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. காரணம், இதுபோன்ற ஒரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு பீரியட் படத்தில் நேர்த்தியான எழுத்து இருக்க வேண்டாவா…? கற்பனை மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், அந்த கற்பனை மட்டுமே சுவாரஸ்யமான கதையாகி விடாது தானே? இதுவே ’கங்குவா’ சறுக்கும் முக்கிய இடம். விமர்சிக்க வேண்டிய இடமும் கூட. ‘கங்குவா’ கதாபாத்திரத்தின் அறிமுக காட்சி, பழங்குடி பெண்கள் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸில் நடந்தேறும் ஒரு நான்லீனியர் சண்டை காட்சி ஆகிய காட்சிகள் மட்டுமே நமக்கு சுவாரஸ்யமாக இருந்தது. கதாபாத்திர வடிவமைப்பில், திரைக்கதை நேர்த்தியில் கவனம் செலுத்தாததால் இது வழக்கமான கமர்சியல் படமாக மட்டுமே நிற்கிறது. அடுத்தது, இரண்டாம் பாகத்திற்கான லீடை இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வைத்து முடித்துள்ள யுக்தி. இது வெற்றிகரமான ஃபார்முலா என சமீக கால படங்கள் பெரும்பாதியில் பயனபடுத்துகின்றனர். ஆனால், அதற்கான தேவையைப் பொறுத்தே அது சுவாரஸ்யமாக அமையும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ‘கங்குவா’. மேலும், வில்லன் கதாபாத்திரமான பாபி டியோலே சரியாக வடிவமைக்கப்படாததால் அவரது மகன் என கிளைமாக்ஸில் அறிமுகமாகும் அந்த ’தம்பி’ நடிகரின் கதாபாத்திரம் மட்டும் எப்படி பார்ப்போருக்கு அழுத்தம் தரும்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் பழங்குடி அரசன் என்றால் அவனது வசனங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும், அழுத்தமாகவும், இடம்பெற்றிருக்க வேண்டும்? இதில் எல்லாம் சரியாக கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ தமிழில் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு அடுத்தகட்ட முயற்சி, மற்றும் ஒரு அழுத்தமில்லா முயற்சி! https://minnambalam.com/cinema/kanguva-movie-review/
  40. உண்மையில் மிக மகிழ்ச்சியான செய்தி. 👍🏽 நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣
  41. கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!
  42. தமிழரசு கட்சிக்கு சுமந்திரன் மாதிரி, அவங்க கட்சிக்கு… ரணில். இரண்டையும்…. குழி தோண்டி புதைக்காமல் போக மாட்டார்கள் போலுள்ளது. 🤣
  43. @வீரப் பையன்26 உங்களாலை, புத்தன் அரசியலை விட்டே ஒதுங்கப் போகின்றாராம். அவரை…. ஒதுங்க வேண்டாம் என்று சொல்லி விடுங்கோ. 😂 🤣
  44. பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி ! குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்.. பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது. புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள். அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று , "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே.. உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான். "எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது. மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான். " ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான். 'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான். "என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . அவ்வளவுதான் வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார். போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை ஆட்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான். பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது. பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால்.. உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில் மிருகபலத்தோடு இருப்போம்... பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம் பலவீனப்பட வேண்டாம் !!!
  45. வினா 45) 4 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் முதல் இடம் பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள் 1)வாலி - 46 புள்ளிகள் 2)பிரபா- 45 புள்ளிகள் 3)வாதவூரான் - 44 புள்ளிகள் 4) நிலாமதி - 42 புள்ளிகள் 5) வீரப்பையன் - 41 புள்ளிகள் 6)அல்வாயான் - 40 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 39 புள்ளிகள் 8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 39 புள்ளிகள் 9)goshan_che - 39 புள்ளிகள் 10)வில்லவன் - 38 புள்ளிகள் 11)நிழலி - 38 புள்ளிகள் 12)கிருபன் - 37 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 14)நூணாவிலான் - 37 புள்ளிகள் 15)ரசோதரன் - 37 புள்ளிகள் 16)சுவைபிரியன் - 36 புள்ளிகள் 17)கந்தையா 57 - 35புள்ளிகள் 18)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 19)வாத்தியார் - 31 புள்ளிகள் 20)புலவர் - 30 புள்ளிகள் 21) அகத்தியன் - 30 புள்ளிகள் 22)குமாரசாமி - 30 புள்ளிகள் 23)புத்தன் - 29 புள்ளிகள் 24) சுவி - 28 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 75)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.