Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19134
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    31986
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/21/24 in Posts

  1. முன்னரே குறிப்பிட்டது போன்று இன்றிரவுடன் பழைய இணைய வழங்கிக்கு உரிய காலம் முடிவடைவதால் ஒரு வாரத்திற்கு முன்னரே சில ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றி விட முடியும் என்று நம்பிக்கையுடன் இணைய வழங்கி மாற்றத்தைத் தொடங்கிய பின், தொடர் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைவந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கும் / தடங்கலுக்கும் வருத்தத்தினை யாழ் இணையம் தெரிவித்துக் கொள்கின்றது.
  2. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  3. ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕
  4. என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!
  5. முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html
  6. தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஹிந்தியனுக்கும் விடுதலைப்புலிகள் வியாபாரப்பொருள்.
  7. இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி... யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி விலாசம் காட்ட வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன்.
  8. அவர்கள் செய்தியை பூரணமாக வாசிக்கவில்லை பாராளுமன்றத்தில் முதலாவது நாள் விரும்பி இடத்தில் அமரலாம். என் அறிவித்தல் இருந்தது ஆனால் பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலிருக்கூடாது என்று எழுதவில்லை இது எதிர்கட்சிதலைவர். ஆசனமென்றும். எழுதவில்லை அதை அர்ச்சுனா கேட்கிறார் பணியாளர்களிடம். எங்கே எழுதப்பட்டுளளது என்று ஆகவே அவர் விரும்பிய இடத்தில் முதல் நாள் இருந்தது சரியாகும் அடுத்த முறை தனக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் இருப்பார் 🤣 மகிந்த ராஜபக்ஷ 2015 ஆண்டில் எதிர்கட்சியில். பலமுடனிருக்க. பலமில்லாத. சம்பந்தன் அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்து கொண்டு எதிர்கட்சி தலைவராகவும். இருந்தார் உண்மையில் மகிந்த ராஜபக்ஷ தான் எதிர்கட்சி தலைவராக இருந்து இருக்க வேண்டும் சம்பந்தன். சுமத்திரன் குறுப். அரசாங்கத்துக்குள் இருந்து இருக்க வேண்டும் அமைச்சர்கள் ஆகி அபிவிருத்தி செய்திருக்கலாம்
  9. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.
  10. நீங்கள், சொல்லுறதை பார்த்தால்... உப சபாநாயகர் என்பது, 99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே.
  11. பாராட்டுக்கள் @நிலாமதி அக்கா! எல்லாம் குருட்டுவாக்கில வெல்வதுதானே!😂 நம்ம தங்கத்தின் பனி பைத்தியர் பாராளுமன்றம் போனதும், தேசிய மக்கள் சக்தி யாழில் முதலாவதாக வந்ததுமான அதிசயங்கள் நடக்கும்போது நாம கீழே இருப்பதுதான் சிறப்பு😜
  12. 75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?!
  13. இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
  14. கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.
  15. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  16. இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆
  17. நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது?
  18. அப்ப ஸ்ரீதர் தியேட்டரில கொஞ்ச நாளையால தமிழ்படங்கள் ஓடும் எண்டுறியள்....😁
  19. சரியான கருத்து. இடதுசாரி என்பதே ஒரு சுத்துமாத்து
  20. ஆமா நானும் பார்த்தேன் குருட்டு லக் எவ்வாறு வேலை செய்கிறது என்று 😄😄
  21. கன பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது. 😂 🤣
  22. அப்படி இல்லை அண்ணை இப்ப காத்தான் குடி கல்லடி வரைக்கும் போய் விட்டது மட்டக்களப்பு மக்களுக்கு இத்தேர்தலுடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன் காரணம் பிள்ளையான் இருக்கும் வரைக்கும் அவர்கள் காணி வாங்கி உள்வரவில்லை ( விடவில்லை) இப்ப கிஸ்புல்லா மீண்டும் தெரிவாகி உள்ளார் இனி கல்லடியும் காத்தான் குடிதான் காத்தான் குடியில் இல்லாத பொலிஸ் நிலையமே காத்தான் குடியில் இருக்கு என்று சொல்கிறார்கள் (மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையல் இருப்பது) தற்போது கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு அருகாமையில் குடிவந்துள்ளார்கள் முஸ்லீம்கள் அப்ப மட்டக்களப்பானுக்கு வாழ்த்து சொல்லத்தானே வேண்டும் சிலமாதங்களுக்கு முன்னர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் காணியை பிடிக்க அடித்து நொருக்கி ஓடவிட்டார்கள் இனிமேல் அதற்கு ஆள் இல்லை சாணாக்கியனும் , சிறிநேசனும் , பிரவும் புட்டும் தேங்காய் பூ கதையும் சொல்வார்கள்
  23. இதுவரை சாதரண/உயரதரம் கற்ற பெண்பிள்ளைகள் தான் முன்பள்ளி ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவிப்பணமாக 6000ரூபா வழங்குகிறது. பெற்றோரிடம் இருந்து ஒரு பிள்ளைகளுக்கு 1000ரூபா பெறுகிறார்கள்! அரசு முன்பள்ளிகளை உள்வாங்கினால் பட்டதாரிகளுக்கு(உலக அளவில் முன்பள்ளிக் கல்வி கற்பிக்க சிறப்பு பட்டதாரிகளையே அனுமதிக்கிறார்கள்) வேலைவாய்ப்பும் ஏற்கனவே இருந்தவர்களுக்கு உதவி ஆசிரியர் பணியும் கொடுக்கலாம் என எண்ணுகிறேன் அண்ணை.
  24. வெள்ளை வேட்டியுடன் முகத்தை எல்லாவற்றையும் நாம் இழந்து விட்டோம் என்ற தோரணயில் இறுக்கமாக வைத்துக் கொண்டு தேசியம் தமிழினம் என்று உரக்க அனல்பறக்க பாராளுமன்றத்தில் உரையாற்றி விட்டுப் பின்கதவால் சிங்கள அமைச்சர்களுடன் இது தான் எங்கள் அரசியல் எனக் கைலாகு கொடுக்கும் தேசிய வியாபாரிகளைவிட இந்தக் கோமாளி DR. அர்ச்சுனா எவ்வளவோ மேல் என நான் நினைக்கின்றேன் காமெடிக் பீசுகள் எங்குதான் இல்லை காமெடிக் பீசுகளுக்குத் தான் இப்போது வாக்குகள் அதிகமாக கிடைக்கின்றன
  25. வரப்பு என்றால் சாதாரணமா, அது ஒரு நாட்டு எல்லை மாதிரி . .........! 💪
  26. வாக்குப்போட்ட மக்களை நகைச்சுவையாளராக்க கூடாது. அவர்களை மெச்சும்வண்ணம் இவரது நடவடிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை காப்பாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு கோமாளிக்கூத்து ஆடி தன்னையும் வாக்குப்போட்ட மக்களையும் அவமானப்படுத்தக்கூடாது.
  27. 20 புள்ளிக்கு மேல் இருக்குமெண்டால் நான் முதலாவதாய் வர வாய்ப்பு உண்டு . .........! 😎
  28. சீனாக்காரன் பருத்திதுறையில் வந்து தமிழ் மக்களை(ஒன்னிக்கு இருக்க சொன்ன சிங்களவ்னுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வட மாகாணம் என பிரித்து பேசுகிறான்...எமக்கு கிடைத்த வெற்றி)பற்றி கருத்து சொல்லுகிறான் ...இது தான் சிறிலங்காவின் இறையாண்மையா? ... கிழக்கு மாகணத்தில் தொண்டமானை ஆளுனராக்கி அழகு பார்த்த இந்தியாவுக்கு அடுத்த ஆப்பு வைத்த சீனா... நாம் அமைதியாக இருந்து வட்மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாக்க வேணும் மிகுதியை இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவும் பார்த்து கொள்வார்கள் ....எம்மவர்கள் இந்த மூன்று சாத்தன்களின் பின்பும் போகாமல் சுளிச்சு வெட்டி ஓட வேணும்
  29. நியாயமான கருத்தே. இப்போதைக்கு தேவை முகிழ்திருத்தல் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நாம் எமது அடையாளத்தைப்பேணாமல் இதை செய்யமுடியாது. மொழியை, பாரம்பரிய வாழிடத்தை, சுயநிர்ணயத்துக்கான அபிலாசையை நம்மில் இருந்து நீக்கிவிட்டு பாத்தால் - நாம் இந்துச்-சிங்களவரே. 200 வருடத்தில் நீர்கொழும்பு, புத்தள, சிலாபத்தின் முன்னாள்-தமிழர் போல் நாமும் ஆகிவிட்டால் - பின்னர் நாம் தமிழர் என்ற ப்ரக்ஞையே நம்மிடம் இராது. அது இல்லாத போது நாம் எப்படி ஒரு தேசிய இனமாக மீள் எழ முடியும்? இந்தானால்தான் அங்கயன், டக்கிளஸ், பிள்ளையானை விட என் பி பி எம்பிகளும் அவர்களின் காலில் விழும் அரசியலும் நம் இன இருப்புக்கு ஆபத்தானது.
  30. நீங்கள் அவாவை அனுரகுமார திசநாயக்கவின் கட:சில் இறக்க ஓடிஓடித்திரிவீர்கள் என்று நன்றாகவே தெரியும். நிலா அக்கா உண்மையான தமிழிச்சி சிங்கல கட்சியில் போட்டியிட மாட்டார். 💯 ✅ நானும் ஆரம்பத்தில் இவரை பெரிதாக தான் நினைத்தேன்
  31. நானும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் இவாவை அடுத்த தேர்தலில் அனுர கட்சியில். யாழ்ப்பாணத்தில். களமிறங்கினால் வெற்றி நிச்சயம் 🙏 குறப்பு,.....பார்த்து எழுதவில்லை தானே ......ஆனால் வாலி. சொன்னாவர். யாரையோ பாரத்து வைத்துள்ளதாக. யார் என்று தெரியவில்லை
  32. யாழ் களத்திலுள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களை பின்தள்ளி 😂 46 புள்ளிகள் எடுத்து, நான்காவது இடத்தில் இருக்கும் @நிலாமதி அக்காவிற்குப் பாராட்டுக்கள். 👍
  33. ஹிருணிகா பிரேமசந்திர மீது இருக்கும் பல்வேறு பட்ட விமர்சனங்களுக்கு அப்பால்... இவரின் துணிந்த கருத்துக்கள், இடம், பொருள், ஏவல் பார்க்காமல்.... உடனடியாக களத்தில் நின்று போராடும் தன்மை பாராட்டப் பட வேண்டியது. "அரகலய" போராட்டத்தின் போது... கோத்தா இருந்த ஜனாதிபதி மாளிகைக்குள், நான்கு அடுக்கு கடுமையான பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்ற துணிச்சலான பெண்மணி. மகிந்த, ரணில் ஆட்சியில் இருந்த போது கூட.. மக்களை திரட்டி... அவர்களின் வீட்டு வாசலில் நின்று போராடியவர். இந்த அரசாங்கம் அசுர பலத்துடன்... பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில்.. இவர் போன்ற துணிச்சலான ஒருவர், பாராளுமன்றத்துக்குள் இருப்பது காலத்தின் கட்டாயம்.
  34. 36) 6 போட்டியாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து 1 இடத்தை பிடித்தது என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் ( தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது). 1)வாலி - 50 புள்ளிகள் 2)வாதவூரான் - 48 புள்ளிகள் 3)பிரபா- 48 புள்ளிகள் 4) நிலாமதி - 45 புள்ளிகள் 5)அல்வாயான் - 43 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 42 புள்ளிகள் 7)வீரப்பையன்- 42 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 42 புள்ளிகள் 9)goshan_che - 42 புள்ளிகள் 10)வில்லவன் - 41 புள்ளிகள் 11)நிழலி - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 40 புள்ளிகள் 13)கந்தையா 57 - 39 புள்ளிகள் 14)சுவைபிரியன் - 39 புள்ளிகள் 15)நூணாவிலான் - 39 புள்ளிகள் 16)ரசோதரன் - 39 புள்ளிகள் 17)கிருபன் - 38 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 37 புள்ளிகள் 19)வாத்தியார் - 36 புள்ளிகள் 20)அகத்தியன் - 33 புள்ளிகள் 21)குமாரசாமி - 33 புள்ளிகள் 22) சுவி - 32 புள்ளிகள் 23)புலவர் - 32 புள்ளிகள் 24)புத்தன் - 32 புள்ளிகள் 25) வசி - 23 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 14, 16 - 20, 22, 24 - 34, 36 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 83)
  35. ஓம்…அது பெளத்தர்கள் போனால்… ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை. 1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா? இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா? இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள். நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்? @குமாரசாமி @zuma நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா? எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள். நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா? அடுத்து என்ன… தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே???? உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?
  36. ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.
  37. தமிழர்கள் மீது பல அடக்குமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தமிழர்கள் தமக்கும் சரிநிகர் உரிமை வேண்டும் என கோரினார்கள் (பெரும்பான்மையின் அடக்குமுறைதான் ஆரம்ப புள்ளி), தமிழ் இளையோர் அதில் கொள்கை பிடிப்புடன் இருந்தமையால் அவர்களை அழித்து தமிழ் மக்களை மீண்டும் ஆரம்ப புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் அடிப்படையில் தமிழர்கள் போல் இல்லை, அவர்கள் தமக்கென தனித்துவமான கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள், அதில் சாதாரண மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரைஅவர்களை தமிழர்கள் மாதிரி கையாள முடியாது அத்துடன் அவர்கள் எக்காலத்திலும் தமது தனித்துவத்துவத்தினை இழக்கமாட்டார்கள். பெரும்பான்மை இனவாதத்திற்கு மக்கள் தத்தமது நம்பிக்கைகள், உரிமைகளை பேணுவதென்பது ஒரு ஒவ்வாமைக்குரிய விடயமாக உள்ளது, இவர்கள் தமிழர்களிடம் பெற்ற அனுபவம் மாதிரி இஸ்லாமியர்கள் இலகுவில் கையாள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளும் போது அது மிக தாமதமாகியிருக்கும்.
  38. ரோஹண விஜேவீரவின் மறைவுக்கு பின் தப்பியோடி பின் - 1991 இல் சோமவன்ச அமரசிங்க பிரேமதாசாவுடன் டீல் போட்டு, இலண்டனில் இருந்து திரும்பி வந்து, வீரவன்ச, கலப்பதி, டில்வின், லால் காந்த, ஹேரத்தை சேர்த்து ஜேவிபியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தார். இது வெளியுலகுக்கு சொல்லப்படும் கதை. இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம். இவரின் அண்ணா ரஞ்சித்தும் மத்திய குழுதான் ஆனால் 87 இல் கொல்லப்பட்டார் ஆகவே இவர்கள் தமது ஆள் என்றால் வேற்று இன, மதத்தினரையும் ஏற்பார்கள் என்பது சரியே. ஆனால்…. இவர்கள் ஆள்….என ஆவதற்கு…. இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும். அதாவது யாழ் எம்பிகள் செய்ததை போல சொல்லாமலே பிக்குகள் காலில் போய் விழ வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் flavor வேறுபடும். அதில் ஜேவிபியின் சுவை, KFC secret recipe மாதிரி தனிச்சுவை. ஆனால் அதுவும் பேரினவாதம்தான். இது…. இதுதான் முஸ்லிம்ள் பற்றி மிக பெரும்பான்மையான சிங்களவர் மனநிலை.
  39. அவர்கள் தொப்பி பிரட்டிகள் என்பதை யாழ்களம் ஏற்காது. ஆனால் நான் வாழ்ந்த சமூகம் ஏற்கும்.
  40. இவ‌ரின் இசைய‌ கேட்டு தான் வ‌ள‌ந்தேன் தாத்தா இவ‌ர் மிக‌வும் நேர்மையான‌ ம‌னித‌ர்.................திற‌மையான‌ இசைய‌மைப்பாள‌ர்....................இவ‌ரின் இசையில் சிறுவ‌ய‌தில் நான் கேட்ட‌ முத‌ல் பாட்டு (முக்காலா முக்க‌பில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளையும் த‌ன் இசை மூல‌ம் திரும்பி பார்க்க‌ வைத்த‌வ‌ர்......................ஈழ‌த்தின் மேல் அதிக‌ ப‌ற்று அத‌ற்க்கு அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ஓன்றே சாட்ச்சி அந்த‌ பாட்டை ஜ‌ரோப்பாவிலும் பாடின‌வ‌ர்................... அந்த‌ பாட்டு இதே கேட்டால் க‌ண் க‌ல‌ங்கும்
  41. கங்குவாவிற்கு காட்டும் எதிர்ப்பை ஒரு கவுன்சிலருக்கு காட்டுவதில்லையே என்று சொல்வது அவ்வளவு சரியான ஒரு உவமையாக, ஒப்பீடாகத் தெரியவில்லை. ஒரு நாயகனின் நாலு படங்கள் ஓடினாலே புரட்சி, செம்மல், தளபதி என்று வகைவகையாக பட்டங்களும் கொடுத்து, அடுத்த முதலமைச்சர் என்று கொண்டாடுவதும் இதே மக்களே. அவர்கள் ஒரு நல்ல கவுன்சிலருக்கு இந்தப் பட்டங்களும் கொடுப்பதில்லை, கவுன்சிலரை அடுத்த முதலமைச்சர் என்று சொல்வதும் இல்லை. கொடுக்கும் போது அளவுக்கதிகமாகவே கொடுக்கின்றனர், பின்னர் எடுக்கும் போதும் பறித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த தொழிலில் இருக்கும் அபாயம் இது. தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் இதே அளவு அபாயம் இருக்கின்றது. நன்றாக விளையாடினால் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லாவிட்டால் 'வீட்டுக்கு போ..................' என்று கல்லெறிவார்கள். ஒரு கடையில் அரிசி நன்றாக இல்லை என்றால், மக்கள் அங்கே அரிசி நன்றாக இல்லை, அங்கே போகாதே என்று தான் சொல்லுவார்கள். அது போலவே இந்த வியாபார நோக்கில் எடுக்கப்பட்டு சந்தைக்கு வரும் சினிமாக்களுக்கும் நடக்கின்றது.
  42. தமிழ்பேசும் மக்களுக்கு அனுரகுமார திசநாயக்க அரசு இரண்டு அமைச்சர்களை தந்துள்ளது.தமிழர்களை பிரித்து அவர் இந்து மதமா கிஸ்துவ மதமா முஸ்லிம் மதமா என்று வேறுபாடுகள் எல்லாம் பார்க்கவில்லை.அரசின் மதம் சாராத இந்த முடிவு வரவேற்கபட வேண்டியது.
  43. அனுர அரசு… முஸ்லீம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விடும் போதே, முஸ்லீம்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பு வரும் என்று அறிந்தே இருப்பார்கள். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. நன்கு தெரிந்தே செய்யப் பட்டது. இவ்வளவிற்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் தமக்கும் ஒரு மாற்றம் வேண்டி, அனுர கட்சிக்கு பிரச்சாரம் செய்து இருக்கும் போது… முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவையை நியமித்து, அவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரிகின்றது. அது என்னவாக இருக்கும்… ? எனது சந்தேகம், சில வேளை…. 1) இவர்கள் தமது மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பது. 2) சொந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், முஸ்லீம் நாடுகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது. 3) பௌத்தத்தை விட தமது மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. 4) எவருடன் ஒன்றாகச் சேர்ந்து இயங்கினாலும்… நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது. 5) பௌத்த ஶ்ரீலங்காவிற்கு ஒவ்வாத இவர்களின் கலாச்சார உடைகளான தொப்பி, பர்தா போன்றவைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன். இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.
  44. 👆 சுப்ரமணிய பிரபா என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். (வலது பக்கம் இருப்பவர் சுமந்திரன்) இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார். இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர் மேல் கூறிக் கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்) போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின் உள்ளூர் அரசியல்வாதிதான். முகநூலில் இவரை... @நிழலி, @விசுகு, @ஈழப்பிரியன், @குமாரசாமி, @பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன் ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.