Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3054
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  4. வைரவன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    345
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/25/24 in all areas

  1. மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு அமைச்சர் சந்திரசேகரனை மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத்தை எழுதியிருப்பார்கள். அவர்கள் சொல்ல வந்ததை விரிவாக சொல்லாததால் அர்த்தம் மாறு பட்டிருக்கலாம். அவர்கள் சொல்லாத ஒன்றை... கற்பனை பண்ணி, அல்லது மிகைப் படுத்தி எழுதுவது ஏற்புடையது அல்ல. இது களத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். தவறான புரிதலால்.... @colomban னுக்கு ஏற்பட்ட மனவருத்தத்துக்கு... உண்மையிலே மிகவும் மனம் வருந்துகின்றேன். 🙏
  2. 😌................... ஒரு பக்கம் இந்தா, இப்பவே ஏவுகணையை ஏவுகின்றோம், அணுகுண்டை அமுக்குகின்றோம் என்பது. மற்றம் பக்கம் இப்படி அப்பாவி அந்நியர்களை பிடித்து போர்க்களத்திற்கு அனுப்புவது............. ரஷ்ய தலைவரை 'செத்த கிளி' என்று சொல்வது சரிதான்.................... அந்த நாட்களில் எங்கள் ஊரில் வலுக்கட்டாயமாக ஆட்களைப் பிடித்து மொட்டை அடித்து பயிற்சி கொடுத்தது போல.............. நேட்டோவை பிளக்கின்றோம், லண்டனை தொலைத்துக் கட்டுகின்றோம் என்று கங்குவா படத்திற்கு வந்த விளம்பரங்கள் போல இதுக்கு மேலயும் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.............🫣.
  3. 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடத்தை பிடிக்கும் என 4 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) பிரபா - 64 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 53 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிழலி - 51 புள்ளிகள் 11) நிலாமதி - 51 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16) ரசோதரன் - 46 புள்ளிகள் 17)கிருபன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) அகத்தியன் - 40 புள்ளிகள் 21) குமாரசாமி - 40 புள்ளிகள் 22) புலவர் - 39 புள்ளிகள் 23)புத்தன் - 39 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 100) வெற்றி பெற்ற பிரபாவுக்கு வாழ்த்துகள். 2, 3 இடத்தை பிடித்த வாதவூரன், வாலிக்கும் , குறிப்பாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழன்பன் முதல் 26 கேள்விகள் மட்டுமே பதில் அளித்திருக்கிறார். அதில் 23 சரி மிச்ச கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால் ??
  4. 'உன் இஷ்டத்திற்கு எழுது தம்பி.................' என்று நீங்கள் ஆரம்பத்திலிருந்து கொடுத்த உற்சாகம் தான் இங்கே வரை கொண்டுவந்து விட்டிருக்கின்றது...................... என்ன கிடைக்குதோ அதில் அரைவாசி உங்களுக்கு.................🤣.
  5. இதிலென்ன ஆச்சரியம்? ஒரு அவதாரில் வந்து வைக்கும் அவியலுக்கு யாரும் ஆதாரம் கேட்டால், மாற்று அவதாரில் வந்து ஆதாரம் கேட்டவரைத் திட்டி விட்டு, மீண்டும் ஒரிஜினல் அவதாரில் வந்து திட்டலுக்குப் பச்சை குத்துவது..இப்படி பல "மானஸ்தன்கள்" உலா வந்த/வரும் இடம் இது😎!
  6. 60 கேள்விகளுடன்... போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவிற்கும், பல சிக்கலான, கணிக்க சிரமமான.. கேள்விகளாக இருந்தும், துணிவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அந்த 26 உறவுகளுக்கும், மனமார்ந்த நன்றிகள். 🙏 எனக்கு... @goshan_cheஐ @வீரப் பையன்26 வென்ற அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கின்றேன். 😜 🤣
  7. நீங்கள் பேசக்கூடாத பக்கத்தை புரட்டிவிட்டீர்கள். இனி உங்களுக்கு இருக்கு கச்சேரி!😂
  8. அவ்வாறு நான் செய்தது தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்று வந்திருக்க வேண்டும். அவர் தழமிழ்த் தேசியவாதி தான் தமிழ்த் தேசத்தில் வாழும் மக்களுக்கான அரசியல் செய்பவரைத் தேசியவாதி என்று தானே அழைக்க வேண்டும் . அதை விட செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கோருவது என்பது எல்லோராலும் முடியாது இங்கேயும் DR, அர்ச்சுனா தன்னை வேறுபடுத்தியே நிற்கின்றார்
  9. இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகளை கூடுதலாகத் தவிர்ப்பேன்..மீண்டும் நன்றி
  10. 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் வெற்றி பெற மாட்டார் என 7 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 62 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 6) வில்லவன் - 52 புள்ளிகள் 7) ஆல்வாயான் - 51 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிழலி - 50 புள்ளிகள் 11) நிலாமதி - 50 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் இதுவரை 1 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 98)
  11. பச்சை யாழ்ப்பாண மையவாதம். உதுவே சிங்கள அமைச்சர் அல்லது வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால் அப்டியே புல்லரித்து இருக்கும். மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி இங்கு கொட்டுதுகள் வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.
  12. நல்லிணக்கம் - சுப.சோமசுந்தரம் சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்பட்டிருக்கும். எனினும் முன் எப்போதும் இல்லாத அளவு சிறிது காலமாகச் சில சமூக விரோத அமைப்புகள் தங்கள் சிறுமதியினால் தமிழ் மண்ணில் கூட சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்து தோற்கின்றனர். அவர்களை எப்போதும் தோற்கடிக்க ஆசிரியர் பெருமக்களான நமது பங்களிப்பு இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது. சமய நல்லிணக்கத்தைப் பெருமையுடன் பறைசாற்றும் நாம் வெட்கித் தலைகுனியும் இடமும் உண்டென்றால், அது சாதியம். சாதிய அடையாளம் நமக்கான அவமானம் என்பதை மாணாக்கர் மனதில் இளமையிலேயே பசுமரத்தாணி போல் பதிய வைப்பது நம் முன் இருக்கும் தலையாய கடமை. எங்கள் இளமைக் காலத்திலும் சாதி இல்லாமல் இல்லை. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தம் சீரிய பணியால் சாதியம் சிறிது சிறிதாக மழுங்கி வந்த காலம் அது. எப்படியோ சாதி வெறி மீண்டும் தலை தூக்குவது இன்றைய சமூக அவலம். எங்களுடன் படித்த நண்பர்கள் இன்ன சாதியர் என்று பெரும்பாலும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ மாணவர்கள் தங்களுக்குள் மட்டுமல்லாமல், தங்கள் ஆசிரியர்களும் இன்னின்ன சாதியினர் என்று ஆவலுற்று அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆசிரியர்களாகிய நாம் தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. மீண்டும் பழைய வெற்றியை நிலை நாட்டுவது நம் பொறுப்பாகிறது. சாதி எனும் தளத்தில் அவர்கள் கொண்டாடும் வேற்றுமை சிறிது சிறிதாக மதம் எனும் தளத்திலும் பரவும் அபாயம் உண்டு. பெரியார் சமயத்தைப் புறந்தள்ளியது கூட, அது சாதியத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாலேயே ! எனவே சாதி ஒழிப்புடன் சமய நல்லிணக்கம் பேசுவதும் தவிர்க்க முடியாததே ! ஒன்று, உற்ற பிணிக்கு மருந்து; மற்றொன்று, வருமுன் காப்பது. எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் சொல்வது உண்டு - "மாணாக்கர்க்கு உங்கள் பாடங்களைச் சொல்லித் தருவதுடன் சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் நாம் நல்லொழுக்க வகுப்பு என்று தனியாக நடத்துவதில்லை" என்று. எனவே மாணவர் சமூகத்திற்கு சொல்லித் தருவோம் : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திரத்தை ; அதே பொருளில், "அவரே ஏக இறைவன்" என அறிவிக்கும் அவ்வல் கலிமாவை ; கலிமா என்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் தலையாயது என்பதை. இஸ்லாமியரின் மற்றொரு கடமையான (ரமலான்) நோன்பில், நோன்பு திறக்கும் போது மார்க்க பேதமின்றி, ஏழை-செல்வந்தர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் இஸ்லாத்தை எடுத்துரைப்போம். அதே சமநிலைக் கண்ணோட்டத்தில், "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்" எனப் போதிக்கும் திருமூலரைக் காட்டுவோம். ரோமன் கத்தோலிக்கரின் மானிட சமத்துவத்திற்கு அவர்கள் உருவாக்கிய என்னைப் போன்ற மாணவர்களே சான்று. அங்கு பயிலும் காலத்தில், "நான் இந்து; அவன் கிறித்தவன்" என்று ஒருபோதும் நாங்கள் உணர்ந்ததில்லை. புரொட்டஸ்டன்ட் கிறித்துவரின் சமய ஒற்றுமை உணர்விற்கு அந்த நூற்றாண்டு மண்டபத்தின் எதிரே அமைந்த கல்லறையில் உறங்கும் இரேனியஸ் அடிகளே சாட்சி. தாம் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதமின்றி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணாக்கரும் ஓரிடத்தில் அமர்ந்து பயில வேண்டும், உண்ண வேண்டும் என்பதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உறுதியாக நின்று சமத்துவப் புரட்சி செய்தவர் இரேனியஸ் அடிகள். சமூக நல்லிணக்கத்தை அவரவர் சமயங்களே வலியுறுத்துகின்றன என்பதை ஆசிரியராகிய நாம் மாணவர் சமுதாயம் விளங்கச் செய்வோம். மீண்டும் வெல்வோம். ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும். பின்வரும் முகநூல் இணைப்பில் இக்கட்டுரையோடு நான் பேசிய ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/1AXBekspxj/
  13. 🤣................ உங்களுக்கும், கோஷானுக்கும் எதிராக சீமான் தரப்பில் இருந்து ஆஜராகி பதில்தரவே இந்த ராஜன் அம்மான் வந்திருக்கின்றார் என்று நினைத்தேன்................... ஆனால் வந்தவர் அப்படியே காணாமல் போய் விட்டார்........ இங்கு களத்திற்கு ஒரே ஆள் பல பெயர்களுடன், அடையாளங்களுடன் வருகின்றார்கள் என்று இப்பொழுது கேள்விப்படுகின்றேன். இது பெரிய ஆச்சரியமாக இருக்கின்றது............. அப்படி இங்கே என்ன தான் நடக்குது...........😜. நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். சீமான் காலையில் ஒன்று சொல்கின்றார், மாலையில் இன்னொன்று சொல்கின்றார், அடுத்தநாள் வேறொன்று சொல்கின்றார், அவருக்கே அவர் என்ன சொல்கின்றார் என்று தெரியவில்லை.............. என்று முத்தரசன் கூட்டத்தில் சொல்லியிருந்தார். இன்றோ நாளையோ முத்தரசனுக்கு இருக்குது..............🤣.
  14. பிரபா, வாதவூரான் ,வாலி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கந்தப்பு அண்ணைக்கு பாராட்டுக்கள். தமிழ் சிறி அண்ணைக்கும் நன்றி. ஊர் அரசியலே நக்கிகிட்டு போய்ட்டாம்…இதுல ஐபில் வேற🤣 இதில மிகவும் கஸ்டமான விசயம் என்னெவெண்டால்…. மார்ச் மாதமே ஊருக்கு போய்ட்டு வந்து யாழ்பாணத்தில் என் பி பி க்கு ஆதரவு பெருகுவதை எழுதினேன். ஜனாதிபதி தேர்தலில் கணிசமாக என் பி பிக்கு போடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அதில் மக்கள் வாக்களித்த முறை என்னை மாற்றி யோசிக்க வைத்து விட்டது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடந்திருந்தால் கொஞ்சம் புள்ளிகள் கூடி இருக்கும். சனம் இப்படி ரைட் சிக்னல் போட்டு, லெப்ட் கட் பண்ணும் எண்டு யார் கண்டது 🤣.
  15. இதைப் புற்று நோய்கள் போலப் பாருங்கள். எல்லா வகைப் புற்று நோய்களையும் வெட்டி, கதிர்வீசி அழிக்க முடியாது. ஆனால், அனேகமாக எல்லா வகைப் புற்று நோய்களையும் கண்டறிந்து "இது இருக்கிறது" என்று கண்டு, தண்டோரா போட்டு அறிவிக்கலாம். அப்படி அறிவிப்பதே இந்த "கேன்சர்" வியாதி இருப்போர் கருத்துரைக்காமல், ஒளிந்து மறைந்திருக்கச் செய்தால், அதுவும் வெற்றி தான். அவர்களை மாற்றுவது நோக்கமல்ல, ஆனால் சமூகத்தில் இத்தகைய குரல்கள் ஒலிக்கவோ, பெருப்பிக்கப் படவோ, செவிமடுக்கப் படவோ கூடாது என்பது தான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். இந்த முயற்சிக்குக் கூட தடையாக இருப்பது "சக பக்தியாளன்" 😎என்பதால் கேன்சர்களுக்கு வெள்ளையடிக்கும் யாழ் கள உறுப்பினர்கள். புகைக் குண்டெறியும் றௌடிகள் முதல் போலித் துவாரகாவை முன்னிறுத்தி பிசினஸ் செய்பவன் வரை "அவிங்க நல்லவங்க" என்று ஊக்குவிக்கும் போக்கு, எங்களுக்கு இரட்டை ஆப்புச் செருகும்: ஆப்பு 1, கேன்சர்கள் துணிந்து வளரும். ஆப்பு 2, "இது தான் உங்கட தமிழ் தேசியமா?" என்று மக்கள் NPP போன்ற கட்சிகளை நாடுவர். பிறகு இதே ஆட்கள் வந்து "ஐயோ தமிழ் தேசியம் தாயகத்தில் இல்லையே" என்று ஒப்பாரியும் வைப்பர்😂.
  16. பாராளுமன்றம்போய் வாக்களித்த மக்களுக்கு ஒரு வேலைகூட ஒழுங்கா பார்க்கல அதுக்குள்ள வீதியில் நடமாட முடியாத நிலை வந்துட்டுதாம். விவேகத்துக்கும் விளம்பர பிரியர்களுக்கும் நூலிழை வித்யாசம்தான், விளம்பரபிரியர்கள் தம்மை சுற்றி ஊடகங்களை வைத்திருப்பார்கள், விவேகமானவர்களை ஊடகங்களே தேடிவரும் ஐயா முதலாவது ரகம். ஐயாவின் மனசில் இருப்பதெல்லாம் பரபரப்பை கிளப்பினா யாழ்பாணத்துக்கே இவர்தான் ஹீரோ என்று மக்கள் நினைப்பார்கள் என்பதே. வெகுவிரைவில் இவருக்கு வாக்களித்த மக்கள் இவருக்கு போட்ட வாக்கை அநுரவுக்கே போட்டிருக்கலாம் என்ற நிலமை வரும் சபாநாயகர் இவரின் பேஸ்புக் பதிவுகள் ,நடத்தைகள் பற்றி விசாரணகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். எதை வைச்சு அநுரவிற்கு எதிராகவும் புலிகள் என்று பூச்சாண்டி காட்டி தமிழர் தாயக ராணுவ கட்டுப்பாட்டை நியாயபடுத்தவும் முடியாமல் தவித்த இனவெறி சிங்களவர்களுக்கு ஐயா இரும்பு கம்பியை கையில் கொடுத்திருக்கிறார். சுயேட்சையா ஒரு கட்சி ஆரம்பிச்சு அதிவேகமாக பாராளுமன்றம் சென்றவர் என்ற பெருமையை பெற்ற ஐயா அதேவேகத்தில் வாக்களித்த மக்களூக்கு எதும் பண்ணாம வீட்டுக்கு போனவர் என்ற சாதனையையும் படைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. ஊடகங்கள் இன்னும் ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம் ஐயா நீங்க உண்மையா படிச்சு டாக்டர் ஆனவரா இல்லை குதிரை ஓடி மருத்துவரானவரா எண்டு. கோமாளி! பொறுப்பான பதவிகளில் பொறுப்பற்ற மனிதர்கள்!
  17. அதெண்டால் உண்மைதான்.... யாழ்களத்துக்குள்ள வந்து சும்மா அலட்டுற எனக்கே அந்தநேரம் தனிமை தேவைப்படுது எண்டால் உவ்வளவு மியூசிக்க அடிச்சு தள்ளுற ரகுமானுக்கு....? 😂 🤣
  18. ஒரு வீடியோவில், அருச்சுனா எங்கோ ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியே வருவார்…வரும் போது கூட வந்த கெளசல்யாவை காணவில்லை என்றவுடன், அருகே நிற்கும், வீடியோ எடுக்கும் ஆட்களிடம், எங்கடா தங்கத்தை காணோம் என கேட்டு தேடுவார். பின்னர் தங்கம் வந்து சேர, இருவரும் ஏதோ புதிசா கட்டிகிட்ட ஜோடி போல தங்கம் என அழைத்ததை இட்டு சிரித்தபடி போவார்கள். நாடாளுமன்றில் இருந்து போட்ட வீடியோவிலும், தங்கத்தை கலரியில் விட்டு விட்டு வந்தேன் ஆளை காணவில்லை என தேடுவார்.
  19. ஐயா, உங்களை போன்றவர்கள் தாம் எம் இனத்தில் அதிகம். ஊரிலும் அதிகம் தமிழனை சாதி ரீதியாக பிரதேச ரீதியாக மத ரீதியாக பிரித்து பார்ப்பதில்லை. ஆனால் அல்வாவாயன் மீரா போன்றோரின் குரல்களை எதிர்ப்பதும் இல்லை. எதிர்க்கப்படாத குற்றம் என்பது ஆதரிக்கப்படும் குற்றம். எனக் கொள்ளப்படும் இனியாவது இப்படியான பின்னூட்டம் எனும் விடம் பரவும் போது எதிர்த்து குரல் கொடுங்கள்.
  20. எனக்கு பிடித்திருப்பத் உரு உமக்கு பிடித்திருப்பது பச்சை இனவாதம். தமிழனுக்குள்ளும் இன வேறுபாட்டை கண்டு பிடிக்கும் நச்சு இனவாதம். உம்மைப் போன்றவர்கள் எம் இனத்தின் பெரும் சாபம். இந்த மாவீர வாரத்தில் நீர் மற்றும் வியாபாரி மீரா கக்கியது பச்சை யாழ் மையவாதம். திருந்துங்கள் இனியாவது
  21. எவ்வளவு வன்மம் எவ்வளவு வெறுப்பு எவ்வளவு பொறாமை உவ்வளவும் யார் மீது? சக தமிழன் மீது காரணம்? அவன் மலையக தமிழன் என்பதால். இப்படியே வெள்ளை காரனுக்கு குண்டி கழுவிக் கொண்டு வெறுப்பை கொட்டி சாகுங்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் உங்களை போன்ற அற்பர்களை கை கழுவி நாளாச்சு
  22. பணம்,புகழ்,செல்வாக்கு இந்த மூன்றும் சாதாரண மனித வாழ்க்கைக்கு உதவாதவை.அந்த மூன்றும் குடும்ப வாழ்வை நிம்மதியாக வைத்திருக்காது. கடுமையான நோய்களை தீர்க்காது. கஞ்சியை குடித்தாலும் நிம்மதியான வாழ்க்கை பொன்னானது. தம்பி வளவன்! நான் எழுதிய எழுத்துக்கள் உங்களுக்கானது அல்ல. பொதுவாக எழுதினேன்.🙏
  23. தங்கம்ஸ் பாராளுமன்றம் போற அளவுக்கு சனத்தை வெறுப்பேத்தினது ஆர் ஆக்கள்? கொஞ்ச நஞ்சமே எழுபது வருசம். 🙃 சும்மா பாராளுமன்றம் போய் திண்டுட்டு குடிச்சுப்போட்டு கிடந்திருக்கிறானுகள்...😡 அதில மாவை குஞ்சுக்கு இப்பவும் ஒரு சீட் வேணுமாம்....அடிங்....😂
  24. தோற்று முடியும் அந்தக் கடைசிக் கணம் மட்டும் நாங்கள் வென்று கொண்டேயிருக்கின்றோம் என்று சொல்வது போரில் ஒரு விதி போல, வசீ. பொதுவாக இந்த அணுகுமுறையை விளையாட்டுகளில் பார்க்கலாம்.................. It is not over until it is over என்று திரும்ப திரும்ப சொல்லுவோம். நான் பல வருடங்கள் இங்கு சிறுவர்களுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கின்றேன். எத்தனையோ போட்டிகள் எங்களால் வெல்ல முடியாதவை என்று இடையிலேயே தெரிந்துவிடும், ஆனாலும் பிள்ளைகளை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருப்போம். இதே அணுகுமுறை போர்களில் எதிர்மறையாக பயன்படுத்தப்படுகின்றது. ஆமாம், இதைச் செய்பவர்கள் அதனால் இலாபம் அடைபவர்களே. பெரும்பாலும் இந்த இலாபம் அடைபவர்கள் போர்களில் நேரடியாக ஈடுபடுவதும் இல்லை, எதுவும் இழப்பதும் இல்லை............😌.
  25. சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது. சீன் போடாமல் செயலாற்றினார்களென்றால் அடுத்த தேர்தலிலும் யாழ்பகுதி தமிழ்கட்சிகள் பொழைப்பு சறுக்கிக்கிட்டு போவும்.
  26. அரசியல் பிரிவு போரிற்கு ஆட் திரட்டலில் ஈடுபடுவர், வீதியால் செல்பவர்கலை பிடித்து வைத்து பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள், அதே போல் உக்கிரேனில் TRC என்பவர்கள் வீதியால் போற வாறவர்களையெல்லாம் பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள், தற்போது அந்த TRC சேர்ந்த 36000 பேரையும் (அவர்கள் ஆட் திரட்டலில் திறமையாக செயற்படவில்லை) இராணுவத்தில் சேர்ப்பதுடன், இராணுவத்தில் இருப்பவர்களே நேரடியாக ஆட் திரட்டலில் ஈடுபட உக்கிரேன் இராணுவத்தளபதி திட்டமிட்டுள்ளாராம். இது வரை காலமும் மற்றவர்களை பிடித்து போருக்கு அனுப்பி கொண்டிருந்தவர்களையே அந்த பாவம் பிடித்து அவர்களையும் போருக்கு அனுப்ப போகிறது. இரு தரப்பு போரில் ஈடுபட்டு அழிகிறது அதில் எரிகிற வீட்டில் கிடைப்பது இலாபம் என நினைத்து போரை ஊக்குவித்த 3 ஆம் தரப்புகள் ஒரு காலத்தில் இந்த போரினால் பாதிப்படையும் நிலை வரவுள்ளது, இதனைதான் கர்ம வினை என்பார்கள். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உக்கிரேன் போரிற்கு ஆட் திரட்ட உள்ளதாக கூறுகிறார்கள் உண்மையா?
  27. இது ஒரு கருத்துக்களம்...இதில் அவரவர் கருத்துகளை யாராலும் பகிரமுடியும்...முட்டையில் மயிர் புடுங்கிறவர்களல் புடுங்க முடியும் ... அதிமேதாவித்தனம் காட்டுபவர்..காட்டலாம் அதுஅவர்களின் விருப்பம் ....அது போலவே விதண்டாவாத கருத்தையும் விதைக்கலாம்..அது அவரவர் வழி...அதுக்குப்போய் மேட்டுக்குடி..மட்டக்குழி என்பதெல்லாம் ரொம்ப ஓவர்
  28. உங்களைப் பொறுத்த வரையில் சினேகபூர்வமான ஒருவர் தவறிழைக்கும் போது வெள்ளைப் பெயின்ற் அடிப்பது ஒற்றுமையைக் கூட்டும் என்கிறீர்கள்? 😂 அப்படியானால் பல வருடங்களாக பெண் வெறுப்பு, சாதி சமய வெறுப்பு, பிரதேசவாதம், இனத்தூய்மை வாதம் -இப்படியான வாதங்களை இங்கே கருத்துக்களாக எழுதி வரும் உங்கள் "சினேக பூர்வமான" உறவுகளுக்கு நீங்கள் "கவர்" கொடுத்ததால் தமிழர் ஒற்றுமை கூடியிருக்கிறது என்கிறீர்களா? என்ன ஆதாரம் இருக்கிறது இந்த ஒற்றுமை பலமானதாக நீங்கள் கருதியமைக்கு? இங்கே சில உண்மைகளை சீனி தடவாமல் எழுதும் ஐலண்டையும், கபிதானையும் நீங்கள் போட்டுத் தாக்குகிற தீவிரத்தில், ஒரு வீதத்தையாவது இந்தப் பிற்போக்கு வாத சினேகிதர்களை நோக்கி நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? இதைச் செய்யாமல் "எல்லாரும் குறையுடயோர் தான் " என்று நீங்கள் பேசும் சுடலைத் தத்துவத்தை ஏன் கொல்லப் பட்ட, தற்போதும் அச்சுறுத்தப் படும் சில தமிழ் அரசியல் வாதிகள் விடயத்தில் உங்களால் பிரயோகிக்க முடியவில்லை? இவையெல்லாம் பதில் தேடும் கேள்விகள் அல்ல. தமிழர் ஒற்றுமையில் உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டும் கேள்விகள். எனவே ஒற்றுமையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உங்கள் பணியைக் கவனியுங்கள்!
  29. நேரடியாக விடயத்தினை கூறாமல் விகோப் தத்துவார்த்தத்தினை முன்னிலைப்படுத்தியமைக்கு மன்னிக்கவும் கோசான், யாழ்களத்தில் உங்களைபோல மிக சிறந்த சிந்தனையாளர்கள் உள்ளார்கள், இந்த திரியில் அந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினால் அதனால் நன்மை அடைவேன் எனும் சுயநலமே உங்களுக்கு மறைமுகமாக இந்த முறைமையினை பரிச்சயமாக்க அவ்வாறு கருத்திட்டிருந்தேன். உறுதியாக தெரியும் உங்களை போன்ற சிந்தனையாளர்களின் பங்களிப்பு இந்த திரியில் இருந்தால் மிக பெரிய அனுகூலம் யாழ்கள வாசகர்களாகிய எமக்கு கிடைக்கும். XRP hourly charts மேலே உள்ள இரண்டு படங்களும் இன் தற்போதய நிலவரம் அடுத்து குறைந்தது ஒரு மணி நேரத்தில் விலையில் என்ன மாற்றம் நிகழும்? ஆரம்ப காலத்தில் பங்கின் விலையும் அதன் அளவும் இவ்வாறு குறிப்பிடப்படும், இதனை Tape reading என்பார்கள். இதில் இரண்டு விடயங்கள் மட்டுமே உள்ளது 1. விலை 2. எண்ணிக்கை (அளவு) 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சீனியிற்கு பெருமளவு டிமான்ட் இருந்த காலப்பகுதியில் கேவ் மையர் என்பார் சீனி வர்த்தகத்தில் முக்கிய புள்ளியாக இருந்தார். அந்த சம காலப்பகுதியில் டீகன் வைட் என்ற பங்கு வர்த்தகர் பிரபலமாக இருந்தார் ஒரு நாள் டீகன் வைடின் காரியாலயத்திற்கு அவரது நண்பர் ஒருவர் வந்து உபயோகமான தகவல் கொடுத்தால் அதற்கு பரிசளிப்பீர்கள் என கூறியிருந்தீர்களல்லவா என கூறி கேவ் மையர் சீனி பங்குகளை வாங்கி குவிக்கிறார் என கூறினார் (அந்த காலத்தில் ஏகப்பட்ட Tariff இருந்தாக கூறப்படுகிறது) அதற்கு டீகன் வைட் அதனை உடனடியாக நம்பாமல் அவரிடம் பல கேள்விகளை கேட்டு விட்டு தனது உதவியாளாரை கூப்பிட்டு 10000 சீனி பங்குகளை சந்தையில் விற்க கூறினார், வந்த அவரது நண்பர் எதிர்பார்த்தது சீனி பங்குகளை டீகன் வைட் வாங்குவார் என ஆனால் இவர் விற்பதனை பார்த்து அவர் குழம்பி விட்டார், விற்பனை உறுதிப்படுத்தல் வந்த பின் Ticker tape இனை பார்த்துக்கொண்டிருந்த டீகன் வைட் தனது உதவியாளரிடம் கூறினார் மீண்டும் 10000 சீனி பங்குகளை விற்குமாறு. டீகன் வைட் நண்பர் பொறுமை இழந்து எனது தகவலை உபயோகப்படுத்தாவிட்டால் பரவாயில்லை நான் வேறு எங்காவது கொண்டு செல்கிறேன் என கூறினார். அதற்கு டீகன் வைட் எதுவும் கூறாமல் Ticker tape இனை பார்த்த வண்ணம் இருந்தவர் தனது உதவியாளரை அழைத்து 30000 சீனி பங்குகளை வாங்குமாறு கூறினார், பின்னர் தனது நண்பரை பார்த்து கூறினார். நண்பரே நான் உங்களை நம்புகிறேன் ஆனால் நான் ஒரு பங்கு வர்த்தகராக இந்த தகவலுக்கு ஒரு ஆதாரம் வேண்டும் அதனாலேயே முதலில் 10000 பங்குகளை விற்க கூறினேன், சந்தையில் விலை குறையாமல் அந்த பங்குகளை உடனே எடுக்கப்பட்டு விட்டது, அந்த தகவலை மேலும் உறுதிப்படுத்த இரண்டாவது 10000 பங்குகளை விற்க கூறினேன் அந்த பங்குகளும் விலை மாற்றம் இல்லாமல் எடுக்கப்பட்டுவிட்டது, அதன் மூலம் நண்பரே நீங்கள் கூறிய தகவல் ஆதார பூர்வமானது என உணர்ந்து கொண்டதால் 30000 பங்குகளை சந்தை விலையில் வாங்கினேன் என்றார். சந்தையில் பொருளகள் அதிகமாக இருந்தால் விலை குறைவடையும் மறுவளமாக பொருள்கள் குறைவாக இருந்தால் விலை அதிகரிக்கும் ஆனால் இந்த பொது விதியில் மாற்றம் நிகழும் போது அங்கே சிறந்த பெரிய நிறுவனங்களின் செயற்பாடு மறைந்திருக்கும். அவர்களுக்கு அரச மட்ட தொடர்புகள் மற்றும் மிக முக்கிய தொடர்புகளினூடாக சாமானியர்கள் அறியாத விபரங்கள் தெரியும் ஆனாலும் அவர்கள் சும்மா போய் பங்குகளை வாங்க மாட்டார்கள் மற்றவர்களாகவே அவர்களுக்கு விற்குமாறு திட்டங்களை உருவாக்குவார்கள். அதாவது அதிகமாக வாங்கும் போது ஏற்படும் விலை ஏற்றத்தினை ஏற்படுத்தாமல் முடிந்தளவு குறைந்தளவு விலையில் வாங்குவார்கள். விலையும் அந்த விலையில் விற்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையிடையேயான தொடர்பியலினடைப்படையே விகோப்பின் முறைமை. XRP விலை அதிகரிக்கிறது, இந்த நிலை தொடருமா? அப்படி தொடருமாயின் அதற்கான ஆதாரம், மற்றும் இது ஒரு தற்காலிகமானதாயின் அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதே விகோப்பின் முறைமையூடாக கூறியுள்ளேன்,
  30. வெலி ஓய சிங்களக் குடியேற்றத்தைப் பாதுகாக்க தனியான படைப்பிரிவொன்றினை உருவாக்கிய ஜெயவர்த்தன‌ கென்ட், டொளர் பண்ணைகள் மற்றும் கொக்கிளாய், நாயாறு மீனவக் குடியேற்றங்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தன. வட மாகாணத்தின் எல்லைகளில் இஸ்ரேலிய பாணியில் பாரிய இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் ஜெயவர்த்தனவின் எண்ணத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுருத்தலாய் மாறியிருந்தன. கடுமையான தாக்குதல் ஒன்றின் மூலம் ஜெயவர்த்தனவின் திட்டத்தின் அடித்தளத்தையே புலிகள் புரட்டிப் போட்டிருந்தனர். புலிகளின் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட சிங்கள அகதிகள் எனும் புதிய பிரச்சினையினையடுத்து தனது குடியேற்றத்திட்டத்தினை ஜெயவர்த்தன அப்போதைக்குக் கிடப்பில் போட்டார். பதவிய பகுதியில் குடியேறி வாழ்ந்துவந்த சிங்கள விவசாயிகளும், திருகோணமலை - முல்லைத்தீவு கரையோரங்களில் குடியேறியிருந்த சிங்கள மீனவர்களும் தமது சொந்த ஊர்களுக்கே திரும்பத் தொடங்கியிருந்தனர். தமது கைகளில் எடுத்துக்கொண்ட பொருட்களையும், குடும்பங்களையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ரவி ஜெயவர்த்தன பதவிய பகுதிக்கு விரைந்துசென்ற ரவி ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் சிங்கள மக்கள் அப்பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறிச் செல்வதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றனர். வெளியேறிக்கொண்டிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்களுடன் பேசிய ரவி ஜெயவர்த்தன, அவர்களின் குடியேற்றப் பண்ணைகளுக்குத் தம்மால் பாதுகாப்பு வழங்கமுடியும் என்றும், அவற்றைக் கைவிட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்கத் தொடங்கினார். சிங்கள தேசியத்தைக் காப்பதற்காகவாவது அவர்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி வாழவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், தமது குடும்பங்களின் பாதுகாப்புத் தொடர்பான தமது கரிசணையினை சிங்களக் குடியேற்றக்காரர்கள் ரவி ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தனர். "புலிகள் எங்களைத் தாக்குகிறார்கள், ஆகவே இங்கே தொடர்ந்து வாழ்வது பாதுகாப்பானது அல்ல" என்பதே அவர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அவர்களுக்குப் பதிலளித்த ரவி ஜயவர்த்தன, "இராணுவத்தினர் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்" என்று கூறவும், "புலிகள் வந்தபோது இராணுவத்தினரே முதலில் ஓடித்தப்பினார்கள்" என்று சிங்களக் குடியேற்றக்கார‌ர்கள் அவரிடம் தெரிவித்தனர். பின்னர் கொழும்பில் ரவி ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் கூட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்தனர். கென்ட் மற்றும் டொளர் பண்ணைகள் மீதான தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கம் பற்றி அவர்கள் ஆராய்ந்தனர். இப்பகுதிகளில் இருந்து சிங்களக் குடியேற்றக்காரர்களின் வெளியேற்றமானது தமது குடியேற்றத் திட்டங்களுக்கு ஏற்ப‌ட்ட பின்னடைவு என்று அவர்கள் முடிவுசெய்தனர். தமிழ் ஆயுதக் கிளர்ச்சியை வட மாகாணத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்திவிட உலக வங்கியின் ஆதரவில் தாம் மேற்கொண்டுவந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் புலிகளின் தாக்குதலினால் தடைப்பட்டு விட்டதை அவர்கள் உணர்ந்துகொண்டனர். இத்தாக்குதலின் மூலம் இந்தியாவின் முன்னாலும், சர்வதேசத்தின் முன்னாலும் தமது திட்டம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதையும் அவர்கள் உணரத் தலைப்பட்டனர். எஸ்.எல்.குணசேகர தேசிய பாதுகாப்புச் சபையும் புலிகளின் தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தாக்கம் குறித்து விரிவாக ஆரய்ந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் தமிழர் தாயகத்தில் தீவிரமான சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்து முன்னெடுப்பது என்று அது முடிவெடுத்தது. புலிகளின் தாக்குதலால் காயப்பட்டுப் போயிருந்த சிங்களத் தேசியத்தின் மனக்கிடக்கையினை மீளவும் கட்டியெழுப்ப அது முடிவெடுத்தது. சிங்களக் குடியேற்றக்காரர்களின் மனோதிடத்தை மீளவும் உசுப்பேற்றி, அவர்களைத் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் குடியேற்றவென்று பேர்பெற்ற சிங்கள இனவாதிகளான எஸ்.எல்.குணசேகர மற்றும் தவிந்த சேனநாயக்க ஆகியோரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை தமது அடிப்படை ஆவணமாகக் கொண்டு செயற்படுத்த தேசிய பாதுகாப்புச் சபை முடிவெடுத்தது. ஜானக பெரேரா குணசேகரவின் அறிக்கை இரு விடயங்கள் குறித்துப் பேசியிருந்தது. இவற்றுள் முதலாவது சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு இராணுவப் பயிற்சியினை வழங்கி ஆயுதமயப்படுத்துவது. இரண்டாவது மணலாறு (வலி ஓய) பிராந்தியத்தில் இராணுவப் படைப்பிரிவொன்றினை நிரந்தரமாகவே நிலைநிறுத்துவதுடன், சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாக்கவென சிறிய இராணுவ முகாம்களை சங்கிலிபோல அப்பகுதியில் நிறுவுவது. இந்த ஆலோசனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை, மணலாற்றில் படைப்பிரிவின் தலைமையகத்தை நிறுவியதுடன், அப்பகுதியைச் சுற்றி சிறிய இராணுவ நிலைகளையும் கென்ட் பண்ணையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சங்கிலி போன்ற அமைப்பில் உருவாக்கியது. இராணுவத்தின் முன்னாள் பிரதானியான ஜானக பெரேரா இப்புதிய படைத் தலைமையகத்திற்கு கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரில் ஜனகபுர எனும் புதிய சிங்களக் குடியேற்றக் கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. அவரது மனைவியான கல்யாணியின் பெயரில் கென்ட் பண்ணை "கல்யாணிபுர" என்று அழைக்கப்பட‌, அவரது மகனான சம்பத்தின் பெயரில் இன்னொரு புதிய சிங்களக் குடியேற்றமான "சம்பத்நுவர" உருவாக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றக்காரர்களை பயிற்சியளித்து, ஆயுதமயமாக்கும் வேலைகள் 1985 ஆம் ஆண்டு, தை மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. ரவி ஜெயவர்த்தனவும் அவரால் உருவாக்கப்பட்ட சத் செவன எனும் அமைப்பும் இந்த நடவடிக்கையில் இறங்கினர். இதற்கான நிதியினை அரசாங்கமே வழங்கியது. சத் செவன அமைப்பினரால் பதவிய பகுதியில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் கொமரன்கடவல பகுதிவரையான சிங்களக் குடியேற்றங்கள் ஆயுதமயப்படுத்தப்பட்டன. சித்திரை மாதத்தின் இறுதிப்பகுதியில் மண்லாற்றின் அனைத்துச் சிங்களக் குடியேற்றங்களும் முற்றாக ஆயுதமயமாக்கப்பட்டுவிட்டன. 1985 ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் இப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த அனைத்துச் சிங்களக் குடியேற்றங்களும் பூரண இராணுவமயப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், கிராமங்களை முற்றாக இராணுவமயப்படுத்தியபோதும் அப்பகுதிகளின் வாழ்ந்துவந்த சிங்கள குடியேற்ற விவசாயிகளுக்கு அது நம்பிக்கையினை வழங்கவில்லை. மாறாக சிங்கள தமிழ் இனங்களுக்கிடையேயான பகைமையினையே அது வளர்க்க உதவியிருந்தது. பூரண ஆயுத மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் இப்பகுதிகளில் தமிழ்ப் போராளிகளின் செயற்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் இலங்கை இராணுவத்தின் ஒரு முற்றான படைப்பிரிவே இப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பினை எடுத்துத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
  31. எனக்கு முதலிடம் பிடிக்க சந்தர்ப்பம் இருந்தது (என்பிபி யாழ் மாவட்டத்தில் 3 இடங்களைப் பெறும் என்பதும் இலங்கை முழுவதும் 150கு மேல் பிடிக்கும் என்பதும் முதலே தெரியும் ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாததால் குறைத்து எழுதினேன்). முதலிடம் பிடித்த பிரபாவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த வாலிக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியைத்திறம்படநடத்திய கந்தப்புவுக்கு நன்றிகள். நன்றி
  32. +கிரிப்டோ தொடர்பான எனது Fundamental அறிவு பூச்சியமாகும் இது வெறும் technical analysis. இதனை விகோப்பின் (Wyckoff) தொழில்னுட்ப ரீதியான ஆய்வடிப்படையில் பார்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வார வரைபடம் Wycoff 3 laws 1. Demand & Supply 2. Cause & Effect 3. Effort & Result இந்த 3 அடிப்படை விதிகளினடிப்படையில் விலை மாற்றத்தினை தீர்மானிப்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஆகும், அது முதலாவது விதி (Demand & Supply) சில குறிப்பிட்ட விலைகளில் விற்பனையாளர்கள் பெருமளவில் விற்க முற்படும் போது அதனை Supply zone ஆக வரையறுக்கப்படும் (0.57, 0.80, 1.02, 1.60, 2.73 Supply zones), அதே போல் Demand zone. இது வரைகாலமும் இருந்த 0.57 இனை விலை முறியடித்து உயர்ந்துள்ளது அதனால் இது வரை காலமும் நிலவியிருந்த நிலையில் இருந்து ஒரு சாதகமான மாற்றமாக இது உள்ளது. இரண்டாவது விதியாக உள்ள Cause & Effect காரனமாக (Cause) பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட அளவும் அதன் விளைவால் (Effect) விலையில் ஏற்பட்ட மாற்றமும். அதிகளவான பங்குகள் பரிமாற்றம் செய்யப்படும் போது அதற்கேற்ற வகையில் விலையில் மாற்றம் ஏற்படும், பொதுவாக அதிக பங்குகள் வாங்கப்படும் போது விலை அதிகரிக்கும் அதற்கு எதிர்மாறாக அதிகளவான பங்குகள் விற்கப்படும் போது விலை குறைவடையும். நியூட்டனின் 3 ஆவது விதி கூறும் எந்த விளைவிற்கும் அதற்கு சமனும் எதிருமான விளைவு இருக்க வேண்டும் அதனை Effort & Result என இதில் பார்க்கப்படுகிறது. 2022 மார்ச் மாதம் தொடங்கி 2023 மே மற்றும் யூலை வரையான மாதத்தில் பெருமளவில் பங்குகள் இரகசியமாக வாங்கப்பட்டுள்ளன (விலையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை ஆனால் விற்பனை அளவுகள் அதிகமாக உள்லது அதனை சிவப்பு வட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது) 2023 யூலை மாதமளவில் விலை அதிகரிப்பு ஏற்படும் அளவிற்கு பங்குகளின் அளவு இல்லை (அம்புக்குறியால் சுட்டி காட்டப்பட்டுள்ளது) இதனை Effort & Result இல் பார்த்தால் அது ஒரு உண்மையான உயர்வல்ல ஏனெனில் அதற்கு முந்தய காலப்பகுதியில் பெரியளவான பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட போதும் விலை மாற்றம் ஒப்பீட்டளவில் இதனை விட மிக குறைவாகவே இருந்துள்ளது. அந்த 2023 யூலை மாத பங்கு அளவுடன் ஒப்பிடும் போது தற்போதய பங்கு அளவு குறைவாகவும் விலை அபரிதமாகவும் உள்ளது, கடந்த இரண்டு வாரத்தில் முதல் வாரத்தில் விலையில் (candlestick) மேலே வெறும் கோடாக உள்ள பகுதி supply zone ஆக இருந்தது கடந்த வாரம் அதனை கடந்து விலை ஏறியமையானது இது ஒரு உண்மையான விலை அதிகரிப்பாக தோன்றினாலும் பங்குகளின் அளவு மேலும் குறைந்துள்ளது அத்துடன் அது 1.60 Supply zone இல் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் 1. Smart money Mark up இதுவரை காலமும் பங்குகலை வாங்கியிருந்த பெரிய நிறுவனங்கள் அதனை விற்பதற்கு சந்தையினை உருவாக்குதல் (இது நல்ல செய்தி அல்ல). 2. அல்லது உண்மையாக சந்தையில் விற்பதற்கு எவரும் தயாராக இல்லாமல் இருப்பதாகும் ( இது உண்மையாக இருந்தால் ஒரு மிக நல்ல செய்தியாகும்) இதனை எவ்வாறு அடையாளம் காண்பது? தற்போது 1.60 இல் விலை விற்பனை ஏற்படுவதால் விலை மீண்டும் ஒரு தடவை 1.60 செல்ல முய்ற்சிக்கும் அப்போது விலை 1.60 இனை கடந்தால் அடுத்த இலக்கு 2.73. மறு வளமாக விலை 1.20 கீழிறங்கி அங்கு மேலும் விலை கீழிறங்க முடியாவிட்டால் மேலெழுந்து 1.60 எதிர் கொள்ளும், அதன் போது விலை மீண்டும் அந்த விலையில் விற்பனையாளர்கள் வந்தால் விலை 1.20 கீழிறங்கும், அங்கு விலை தக்கவைக்கப்படாவிட்டால் 1.02 வரலாம். ஆகவும் நிலமை மோசமானால் 0.80 போகலாம், தற்போது பெருமளவில் 0.57 விலை செல்லாது என கருதுகிறேன் (உறுதியாக கூறமுடியாது) இந்த வாரம் ஒரு முக்கிய வாரமாகும், விலை 1.60 கடக்கிறதா என பார்ப்போம், ஏனெனில் விற்பதற்கு ஒருவரும் இல்லை என்றால் இந்த வாரம் விலை 1.60 கடந்தாக வேண்டும் இல்லாவிட்டால் இது ஒரு பலவீனமான நிலையாகும் ஆனாலும் விலை 1.20 மேல் இருக்கும் வரை சாதகமானதுதான். பங்குகளின் விலை மாற்றத்தில் Fundamental analysis முக்கியம், Fundamental analysis பொறுத்தவரை உங்களுக்கு அது தொடர்பான நல்ல தெளிவு உள்ளதனால் அதனடிப்படையில் இந்த ஆய்வினை வெறும் உசாத்துணையாக பாவிக்கலாம்.
  33. இதுதான் உங்கள் பக்க நியாயம் எனும் போது அதை என்னை, சிறி அண்ணையை போலவே கொழும்பானும், வைரவனும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன். இணந்திருங்கள். இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி.
  34. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் கந்தப்புவை சேரும்.
  35. 51) வடக்கு கிழக்கில் ஐக்கிய மக்கள் சக்தி 2 இடங்களை பிடிக்கும் என 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) பிரபா - 63 புள்ளிகள் 2) வாதவூரான் - 60 புள்ளிகள் 3) வாலி - 58 புள்ளிகள் 4) தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5) அல்வாயான் - 52 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள் 7) வில்லவன் - 52 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 51 புள்ளிகள் 9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 10) நிலாமதி - 51 புள்ளிகள் 11) நிழலி - 50 புள்ளிகள் 12) goshan_che = 49 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள் 14) நூணாவிலான் - 47 புள்ளிகள் 15) கந்தையா 57 - 46 புள்ளிகள் 16)கிருபன் - 45 புள்ளிகள் 17) ரசோதரன் - 45 புள்ளிகள் 18) வாத்தியார் - 43 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 20) அகத்தியன் - 40 புள்ளிகள் 21) குமாரசாமி - 40 புள்ளிகள் 22) புலவர் - 39 புள்ளிகள் 23)புத்தன் - 39 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 23 புள்ளிகள் இதுவரை 1 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 99)
  36. இந்த களேபரத்தில் ஒன்றை எல்லாரும் கவனிக்க மறந்து விட்டோம். இதில் வன்மையாக கண்டிக்கபட வேண்டியவர் அமைசர் சந்திரசேகரன் அல்ல, எதும் செய்யாமல் அப்செண்ட் ஆகி இருக்கும் யாழின் ஒரே தமிழரசு எம்பி சாராயக்கடை சிறி. ஆனால் அவரை பற்றி எழுதாமல் - பதவியில் இல்லாத சுமந்திரனை பற்றி எழுதப்படுகிறது. ஏனையோரும் அதன் பின்னால் ஓடுகிறனர். இதுதான் யாழில் சில வருடங்களாகவே சாராயக்கடை சிறியின் அடிப்பொடிகள் மிக திறமையாக கைக்கொள்ளும் மடைமாற்றும் உத்தி.
  37. எனக்கு விருப்பமான இந்தியாக்காரனின் டெஸ்ட் மச் பார்த்துக்கொண்டு...வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்
  38. அது தான் பெயரை மாற்றியுள்ளார்கள். இலங்கை பாராளுமன்றில் பிரதமருக்கு அதிகாரமிருக்கும் போதா ஜனாதிபதிக்கு அதிகாரமிருக்கும் போதா தமிழருக்கு எதிராக அதிகளவான சட்டங்கள் வந்தன.
  39. கிட்டத்தட்ட நிலைமை அதுதான். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலைதான்.
  40. ரஹ்மான் விஷயம் அவர்களாலேயே சமூக ஊடகங்களுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளான ஒரு செய்தியென்பதால் நாமும் ஒரு கருத்து சொல்லலாம் தப்பில்லை. சிகிச்சைக்காக மும்பை போகும் அவர் மனைவி எதுக்கு ட்விட்டரில் நான் ரஹ்மானை பிரிகிறேன் என்று பதிவு போடணும்? அதுக்கு அவர் எதுக்கு 30 வருடத்தை எட்டி தொடுவோம் என்று எதிர்பார்த்தோம் முடியவில்லை என்று பதிவு போடணும்? உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கணவன் குழந்தைகள் அனைவரையும் விட்டு சென்னையில் ஆஸ்பத்திரிகள் எதுவும் இல்லையென்று தனியே மும்பை ஓடுவார்களா சமூக ஊடகங்களில் இந்த ஐஞ்சுபத்து ரூபாய்க்கு விமர்சனம் பண்ணும் ஆய்வாளர்களால் ரஹ்மான் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார். உங்களின் பிரிவுக்கு நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த தனிமையின் மன அழுத்தமே காரணம் என்று பல ஊடகங்கள் இப்போது பேச தொடங்கிவிட்டன, நான் நினைக்கிறேன் ரஹ்மான் மிக மோசமாக அசிங்கப்படுத்தப்படுவதை பார்த்து அவர் குழந்தைகள் தமது தாயிடம் வைத்த கோரிக்கையினால் இந்த ஒலிப்பதிவை அவர் ஊடகங்களூக்கு அனுப்பியிருக்கலாம். அதனால் ரஹ்மான் மனைவிக்கு இப்போது தேவைப்படுவது உடல்நல சிகிச்சையல்ல மனநல சிகிச்சை. எனக்கு தெரிந்து இத்தனை உலக புகழ் உச்சியில் மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலிருந்தும், எனக்குத்தான் இசை தெரியுமென்றோ அல்லது இசைபற்றி உனக்கு என்ன தெரியுமென்று பிறரை பார்த்து கேக்கும் அநாகரிக பழக்கம் கொண்டோ துளிகூட கர்வம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத ஒரேயொரு மனிதன் ரஹ்மானாகதான் இருக்க முடியும். பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல, ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி ஒரு மனிதன் பற்றி எதுவேணும் என்றாலும் சொல்லலாம் எனும் பாணியில் இப்போது சுமத்தப்படும் குற்றங்கள் மிகவும் கண்ணியக்குறைவானது. இவர்கள் செய்தி உலகறிஞ்ச விஷயமானாலும் இதுக்குமேல இதுபத்தி மேலதிகமாக ஒருவார்த்தை பேசுவது ரொம்ப மலினதனமானது , அதனால எஸ்கேப்.
  41. இப்போதும் எனது கேள்வி எந்த காரணத்துக்காக கடன் எடுக்கிறார்கள்? இதை ஏதாவது, பணம் ஈட்டும் தொழில் முயதர்சி (உ.ம். உங்கள் மகன் செய்ட்து போல) அல்லது அதை போன்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தினால் பொதுவாக நன்மை வரும். எதிர்பார்க்கப்படாத, நட்டம் அல்லது இழப்புகளும் இருக்கும். இது தான் (முன்பே கணித்து) எடுக்ப்படும் risk, இழந்தாலும் ஈடுகட்ட முடியும் நிலையில் இருப்போம் என்று. முற்றாக சரி வந்தால், அதிமிகை ஆதாயம். (பொதுவாக நுகர்வுக்கான கடனை இப்படியான தொழில் முயற்சிக்கு வழங்கப்படாது. ஆயினும் எடுத்து விட்டு எப்படி பாவிப்பது என்பட்டு அவரவரின் முடிவு) மறுவளமாக, நுகர்வுக்கு எடுத்தால், கட்டமுடியும் என்ற வருமான ஆதாரத்தை காட்டித் தானே எடுக்கிறார்கள். நீங்கள் சொல்லும் கடன்கள், காப்பிலாத (unsecured loans) கடன்கள், இவை பொதுவாக நுகர்வுக்கே (அடு எதுவாகவும் இருக்கலாம், விடுமுறை, கொண்டாட்டம், வீட்டை மீள்புதுப்பித்தல் .. என்று நுகர்வு, எந்த தொழில் அல்லது முதலீடு அல்ல). எனவே, சுருக்கமாக, கடன் எடுக்கும் வசதிகளை உருவாகும் கொள்கைகளை அரசாங்கம் உருவாக்குகிறது. அனால், எடுக்குமாறு வற்றபுறுத்தவில்லை. கடன் எடுப்பது, அதன் நோக்கம், அவரவின் தனிப்பட்ட தெரிவும், முடிவும். குறிப்பாக, தனிப்பட்டவரின் நிதி ஒழுக்க நடத்தையே அதை தீர்மானிக்கும்.
  42. சாவகச்சேரி பிரதேசத்தில் இருக்கும் எனது உறவினர் ஒருவரின் காணியின் வாசலில் ஒரு பிரசித்திபெற்ற சைவக் கோவில் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் நான் அங்கு செல்லும்போது எனது உறவினர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். நான் நின்றபடியே வணங்கி, எனது நெற்றியில் சந்தணமிட்டு வருவேன். 'இதில் யாருக்கு என்ன பிரச்சனை?
  43. இவர் நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதி அல்ல, ஆரிய குளத்தடி நாக விகாரையின் தலைமை பிக்கு ஆகும். எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..
  44. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன. உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂
  45. நல்ல விடயம். இதே போன்று முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராகத் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டு செய்யப்பட்ட காட்டிகொடுப்புக்கள், துரோகங்கள், அநீதிகள், படுகொலைகள் என்பனவும் கதைவடிவில் இந்த இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுக்கப்படல் வேண்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.